கருத்துக்கள உறுப்பினர்கள் sathiri 1,087 பதியப்பட்டது October 30, 2016 கருத்துக்கள உறுப்பினர்கள் Share பதியப்பட்டது October 30, 2016 க..பூ..க..போ . (சிறுகதை) க..பூ..க..போ . இம்மாத அம்ருதாவில் . சாத்திரி .. இந்தத் தடவை தமிழ்நாட்டுப் பயணம் என்பது ஒரு திட்டமிடல் இல்லாமல் குறுக்கும் நெடுக்குமாக அமைந்து விட்டது .அதனாலேயே நான் சந்திக்க திட்டமிட்டிருந்த பலரையும் சந்திக்க முடியாமலும் போனதில் வருத்தம் .முதலில் ஓசூரில் இருந்து சேலம் வழியாக தஞ்சை ..கும்பகோணம் செல்வதே எனது திட்டம் ஆனால் திடீரென கும்பகோணம் செல்லும் திட்டம் கைவிட வேண்டி வந்ததால் சேலத்திலிருந்து கிருஸ்னகிரி வழியாக சென்னை செல்ல வேண்டியதாகி விட்டது .சென்னை செல்வதற்காக அரசு விரைவுப் பேருந்தில் ஏறி அமர்ந்து விட்டு நேரத்தைப் பார்த்தேன் மாலை ஆறு மணியாகி விட்டிருந்தது .சென்னைக்கு போய் சேர எப்படியும் இரவு பத்து மணிக்கு மேலாகி விடும் அதற்குப் பிறகு அங்கு தங்குவதற்கு அறை தேடிக்கொண்டிருக்க முடியாது எனவே நண்பன் ஒருவனுக்கு போனடித்து ஹோட்டல் அறை ஒன்று புக் பண்ணி விடுமாறு சொல்லி விட்டிருந்தேன் .நான் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இறங்குவேன் என்பதால் நண்பனும் அதற்கு அருகில் வடபழனியில் ஹோட்டல் ஒன்றில் அறையை புக் செய்துவிட்டு அதன் விலாசத்தை எனக்கு எஸ். எம். எஸ் அனுப்பியிருந்தான் . கோயம்பேட்டில் இறங்கி ஆட்டோவை பிடித்து அறைக்குச் சென்று பயணப் பையை வைத்து விட்டு.அன்றைய பயணத்தின்போது வீதி முழுதும் வாரி வாங்கி வந்த தூசியை உடலை விட்டு போக்க ஒரு குளியல் போட எண்ணி குளியலறையை திறந்து லைற்றை போட்டதும் சுவரின் மூலையில் கூட்டம் போட்டு தமிழ் நாட்டின் அரசியல் பற்றி தீவிரமா விவாதித்துக்கொண்டிருந்த பல கரப்பான்பூச்சிகள் விர் ..என்று சுவர் இடுக்குகளுக்குள்ளும் தண்ணீர் போகும் குழாயினுள்ளும் ஓடி மறைய ஒரேயொரு பூச்சி திசை தவறி என்னை நோக்கிவர. கிண்ணத்தில் தண்ணீரை பிடித்து அதன்மீது ஓங்கியடித்து தண்ணீர் குழாயுள் தள்ளிவிட்டு சுற்றி வர பார்த்தேன்.எல்லாம் ஓடி மறைத்து விட்டிருந்தது .நீண்ட காலத்துக்குப் பிறகு கரப்பான்பூச்சியை கண்டதும் எனது கலியாணமும் முதலிரவும் மீண்டும் நினைவுக்கு வரவே ஷவரை திறந்துவிட்டு சில்லென்ற தண்ணீரில் நனையத் தொடங்கினேன் ..எல்லாம் சரி என் கலியானதுக்கும் கரப்பான்பூச்சிக்கும் என்ன சம்பந்தம்? ..எல்லோருக்கும் அறிய ஆவலாயிருக்கும் எனவே இங்கே கட் பண்ணி அங்கே ஒப்பின் பண்ணுகிறேன் . 0000000000000000000000000000000000000 கல்யாணம் செய்துபார் வீட்டை கட்டிப்பார் என்றொரு பழமொழி .இப்போவெல்லாம் கலியாணம் செய்வது சுலபம் வீடு கட்டுவதுதான் சிரமம் .இன்றைய காலத்தில் வீடு கட்டுறதென்ன ஒரு வீடு வாடைக்கு எடுக்கிறதே சிரமமாகிவிட்ட காலம்.கலியாணம் என்னமோ ஒரு பிரச்னையும் இல்லாமல் காதலிச்சு சிம்பிளா பதிவுத் திருமணமா முடிச்சிட்டேன் .அதுவரைக்கும் பச்சிலரா ஒரு அறையில் ஆறு நண்பர்களோடு இருந்த எனக்கு குடும்பஸ்த்தன் என்கிற பிரமோசன் கிடைத்து விட்டிருந்தது .முதலிரவுக்கு நண்பர்கள் எல்லாம் சேர்ந்து அவர்களது கல்யாணப் பரிசாக நட்சத்திர விடுதியில் அறை ஒன்றை பதிவு செய்துவிட்டிருந்தர்கள்.திருமணம் முடிந்து ஒரு ரெஸ்ராரண்டில் அனைவருக்கும் விருந்து.அது முடிந்ததும் எல்லோரும் பரிசுப் பொருட்களை தரத் தொடங்கினார்கள்.எனக்கு இப்போதைக்கு வீடு இல்லாதாதால் அதை வைக்க இடமும் இல்லாததால் நண்பர்கள் தரவிரும்பும் பரிசை பணமாகவே தரும்படி அழைப்பிதழிலேயே அச்சடித்து விட்டிருந்தேன். அதனால் அனைவரும் கொடுத்த என்வலப்புகளை வாங்கி பாக்கெட்டில் செருகிவிட்டு கடைசியாய் மனைவியிடம் "போகலாமா" ..என்றதும் எங்கே .. ஹோட்டலுக்கு தான் . என்னது ஹோட்டலா .. ம் ...ஸ்டார் ஹோட்டேல் ..கண்ணை சிமிட்டினேன் . நானெல்லாம் அந்த மாதிரி பொம்பிளை இல்லை .. ஐயையோ ..நீ தப்பா நினைக்காதை இது பிரெண்ட்ஸ் ஏற்பாடு .. நினைச்சேன் ..உங்களை கெடுக்கிறதே அவங்கள்தான் .. சரி இப்ப என்னதான் சொல்லுறாய் .. முதல்லை ஒரு வீடு தேடிப் பிடியுங்கோ .பிறகுதான் எல்லாம் ...பாய் .சொல்லிவிட்டு அவளது நண்பிகளோடு போய் விட்டாள் . என்னை மாதிரி மத்திய தர குடும்பம் ஒன்றுக்கு கொழும்பு, சென்னை மாதிரி நகரங்களிலேயே எங்களுக்கு பிடித்தமாதிரி வீடு வாடகைக்கு கிடைப்பதென்பது குதிரைக் கொம்பு மாதிரி என்றால் பிரான்சில் ஒரு பெரு நகரத்தில் வீடு கிடைப்பது குதிரைக்கு கொம்பு முளைத்து அதில் குஞ்சம் கட்டி அழகு பார்த்த மாதிரி. எங்களுக்கு பிடிக்கிற பிகரை விட கிடைச்ச பிகரோடை சந்தோசமா வாழவேண்டும் என்கிற மாதிரி .. பிடிக்கிற வீட்டை விட வடைகைக்கு கிடைச்ச வீட்டிலை சந்தோசமா வாழப்பழக வேணும். நானும்அவசரமா நாலு வீட்டு ஏஜென்சில பதிவு செய்து ஏஜென்சிக்கு என்னுடையதும் மனைவியுடையதும் சம்பள விபரம் எல்லாம் குடுத்து . இருபது வீடு ஏறி இறங்கி எங்கள் இருவரது வேலையிடதுக்கும் கிட்டவாக ஒரு வாரத்திலேயே ஒரு அப்பாட்மென்டில் முதல் மாடியில் வீட்டு ஏஜென்சிக் காரனுக்கு பிடித்தமான ஒரு வீடு பார்த்து சரி சொல்லி இரண்டு மாத வாடகை அட்வான்ஸ் கொடுத்து கையெழுத்தும் வைத்தாச்சு . முதல் வாங்கியது கட்டில் .பால்காய்ச்சி வீடு குடி புகுந்தாச்சு.கலியாணமாகி ஒரு வாரம் கழித்து முதலிரவு. அண்ணாந்துபார்த்த படியே கட்டிலில் படுத்திருந்தேன். வெள்ளைச் சுவற்றில் ஒரு கறுப்புப் புள்ளி.."முன்னர் குடியிருந்தவன் எதாவது ஆணி யடித்திருப்பனோ".. என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது மனைவியும் உள்ளே வர அந்த கறுப்புப் புள்ளி அசையத் தொடங்கியது.அதைக் கண்டதுமே ஆ ...., என்று கத்தியபடி கட்டிலில் ஓடியந்து ஏறியவள். கரப்பான்பூச்சி ....கரப்பான்பூச்சி ..என்று கண்ணை மூடிக் கத்தினாள் .. ச்சே ..எதுக்கு கரடியை கண்ட மாதிரி கத்துறாய் ..கரப்பான்பூச்சி தானே ..அதுவும் குட்டிப் பூச்சி . "முதல்லை அதை அடியுங்கோ" திரும்பவும் கத்தினாள் . பல்கனியை திறந்து தும்புத்தடியை எடுத்துவந்து பூச்சியை தட்டியதும் அது கீழே மல்லாந்து விழுந்தது கிர் ...என்று பம்பரம் போல சுத்திக் கொண்டிருக்கவே அப்படியே நசித்துவிட காலை உயர்த்தவும் .கட்டிலில் இருந்து பாய்ந்து இறங்கியவள் உயர்த்திய காலைக் கட்டிப் பிடித்தபடி . "வேண்டாம்.. அத்தான் வேண்டாம்..அதனை காலால் நசித்து விடாதீர்கள் . "இவளுக்கு கரப்பான்பூச்சியில் பயமா ? பாசமா" ??.. எதுக்கடி நசிக்கக் கூடாது .. "கரப்பான்பூச்சியை காலால் நசிக்கும் போது அதில் இருக்கும் முட்டைகள் காலில் ஒட்டிவிடும்.பிறகு நீங்கள் நடக்குமிடமெல்லாம் அதன் முட்டைகள் பரவி அதன் இனம் பெருகி விடும்" .... இங்கை ஒருத்தன் முதலிரவே நடக்காமல் கடுப்பில இருக்கும்போது கரப்பான்பூச்சி இனப்பெருக்கம் பற்றி வகுப்பெடுத்துக் கொண்டிருந்தாள் .."சரி இப்போ என்னதான் செய்ய" ? .. அதை அப்பிடியே பிடிச்சு வெளியாலை எறிஞ்சு விடுங்கோ .. சுற்றிக்கொண்டிருந்த பூச்சியை ஒரு கடதாசியில் போட்டு பொட்டலம் செய்து யன்னலால் வெளியே எறிந்துவிட்டு வந்து "அப்பாடா " என்றபடி லைட்டை நிப்பாட்டவும்.. "எதுக்கு லைட்டை நிப்பாட்டுரீங்கள்" ?..பதட்டத்தோடு கேட்டாள் . முதலிரவன்று இதெல்லாம் ஒரு கேள்வியா ?....அப்போ ..................... "எனக்கு சின்ன வயசிலை இருந்தே கரப்பான்பூச்சி க்கு சரியான பயம்.முதல்ல பூச்சியை இல்லாமல் பண்ணுங்கோ .இல்லாட்டி வேறை வீடுட்டுக்கு மாறுவம்.இப்ப லைட்டை போடுங்கோ.".. எனக்கு லைட்டை போட்டால் எதுவுமே வராது ..ச்சே ..நித்திரை வராது ... எனக்கு பூச்சியை பார்த்தால் நித்திரை வராது . என்றவள் போர்வையால் இழுத்து போர்த்துக்கொண்டு படுத்து விட்டாள் . லைட்டை போட்டு விட்டு குளியலறைக்குள் புகுந்து ஷவரை திறந்து சில்லென்ற தண்ணீரை தலையில் சிதற விட்டுக் கொண்டிருக்கும்போது காலடியில் ஒரு கரப்பான்பூச்சி .அது என்னைப் பார்த்தே சிரிப்பது போல இருந்ததது.காலால் நச்சென்று நசித்து குழாயில் தள்ளி விட்டேன் . .......................................................................... அந்தவார இறுதி லீவு நாட்களான சனி,ஞாயிறு கரப்பான்பூச்சி ஒழிப்பு நாட்களாக பிரகடனம் செய்து .எப்படியும் மருந்தடித்து பூச்சியை ஒழித்து விடுவேன் என்று மனைவியின் காலைப் பிடித்து செய்த சத்தியத்தின் பின்னரே மறுநாள் அதிகாலை முதலிரவாய் விடிந்திருந்தது .அடுத்தடுத்த நாட்கள் கரப்பான்பூச்சியை கண்டு அவளின் அலறலோடும் . இரவு முழுதும் லைட்டை எரிய விட்டு அரைகுறை நித்திரையோடும் கழிந்தது. வெள்ளிக்கிழமை வேலை முடிந்ததும் நான் செய்த சத்தியத்தை நிறைவேற்ற மருந்துக் கடை ஒன்றில் புகுந்தேன் . "வாங்க... எலியா ,எறும்பா ,புளுவா ,பூச்சியா எதனால் பிரச்னை".. என்றபடியே வரவேற்றவளின் சிரிப்பு.. மருந்தடிக்காமலேயே என்னை கொன்றுவிடும் போல இருந்தது .என் பார்வையை மேலிருந்து கீழ் இறக்கிய படியே .. "பூச்சி ...பூச்சி ..கரப்பான் பூச்சி க்கு மருந்து "என்று தட்டித் தடுமாற .. ஓ ..கரப்பான்பூச்சியா ? ஒரே நாளில் ஒழித்துவிடும். என்றபடி ஒரு ஸ்பிரேயை எடுத்து வைத்தவள். இது அபாயமான மருந்து. எனவே கைகளுக்கு கிளவுசும் முகத்துக்கு மாஸ்க்கும் அணிந்து அவதானமாக பாவிக்கவும். என்றபடி நான் கேட்காமலேயே அவற்றையும் எடுத்து வைத்து பில்லை நீட்டினாள் . சனிக்கிழமை காலை கைகளுக்கு கிளவுஸ் ,மாஸ்க் எல்லாம் அணிந்து ஒப்பிரேசன் கரப்பான்பூச்சி ஆரம்பமானது. மூலை முடுக்கு எல்லாம் ஸ்பிரே அடித்து முடித்து ஒரு பூச்சி கூட வெளியே தப்பிப் போய் விடாதபடி ஜன்னல்கள் கதவு எல்லாம் சாத்தி விட்டு நாங்கள் வெளியேறி விட்டோம்.பகல் வெளியே சாப்பிட்ட பின்னர் நகரை சுற்றி விட்டு மாலை வீடு வந்து கதவை திறந்ததும் இறந்து கிடந்த பூச்சி களைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் "சக்சஸ்" என்று கத்தியபடி மனைவியை கட்டிப் பிடிக்க. "ச்சே ..கையை எடுங்கோ முதல்லை வீட்டை கிளீன் பண்ணுங்கோ" என்றாள் .வேகமாய் வீட்டை கூட்டி சுத்தம் செய்து இறந்து போன பூச்சிகளில் இருந்து ஒரு முட்டை கூட தவறி குஞ்சு பொரித்து மீண்டும் அதன் வம்சம் உருவாகி விடக்கூடாது என்கிற குரூரத்தோடு அனைத்தையும் ஒரு டப்பாவில் போட்டு கொளுத்தி சாம்பலை கொண்டுபோய் கடலில் கொட்டி திவசம் கொடுத்து விட்டு வீடு வந்து குளித்து முடித்து கட்டிலில் போய் விழுந்தேன். ............................................................................ எந்தப் பூச்சியும் இல்லாமல் எங்கள் வாழ்க்கை சில வாரங்கள் மகிழ்ச்சியாகவே போய்க்கொண்டிருந்ததொரு நாளில் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த மனைவி நிலத்தை துடைப்பதற்காக பிரிஜ்சை கொஞ்சம் தள்ளியவள் ..ஆ ........ஐயோ .. அவசரமாய் ஓடிப்போய் .."என்னடி" ? பூச்சி .பிரிஜ்சுக்கு பின்னலை பூச்சி ..முதல்லை வீட்டை மாத்துங்கோ .. பொறடி.. எதுக்கெடுத்தாலும் உடனே வீட்டை மாத்துங்கோ எண்டு கத்தாதை..மாஸ்க் ,கிளவுசோடை சேர்த்து வாங்கின ஸ்பிரேயும் வேலை செய்யேல்லை . ஊருக்கு போனடிச்சு அம்மாவிட்டை கேட்டுப் பார்ப்பம் எதாவது ஐடியா சொல்லுவா .. "பூச்சியை கொல்ல வைரசிட்டை ஐடியா கேக்கப் போறாராம்" ...புறு புறுத்தாள் .. என்னடி நக்கலா ?.. ஒண்டும் இல்லை.. தாராளமாய் உங்கட அம்மாவிட்டை ஐடியா கேளுங்கோ .தம்பி கொஞ்சம் காசு அனுப்பு எண்டு கேட்பா ..அதையும் ரெடி பண்ணுங்கோ ..என்று விட்டு போய் விட்டாள் . அம்மா விற்கு போனடித்து பிரச்சனையை சொன்னதும் " மகனே இது சின்னப் பிரச்னை வீட்டிலை எல்லா இடமும் மஞ்சள் தண்ணியை தெளிச்சுட்டு ஒவ்வொரு மூலையிளையும் வேப்பமிலையை கட்டிவிடு " என்றார் .. மஞ்சள் இங்கை கிடைக்கும்.கருவப்பிலையையே கஞ்சா கடத்துற மாதிரி கஷ்டப்பட்டு கடத்தி தான் கொண்டு வாறாங்கள்.இதுக்கை வேப்பமிலைக்கு எங்கை போறது ?. அதுக்கான தீர்வையும் அம்மாவே சொன்னார் ." கவலைப் படாதை மகனே .வேப்பமிலை நானே பார்சல் பண்ணி விடுறேன் .ஒரு ஐம்பத்தாயிரம் ரூபா அனுப்பி விடு ".. வேப்பமிலைக்கு ஐம்பத்தாயிரமா?.. பின்னை மரத்திலை ஏற ஆள் பிடிக்க வேணும், நல்ல இலையா பார்த்து பிடுங்க வேணும் ,பார்செல் பண்ண வேணும்,போஸ்ட் ஆபிஸ் கொண்டு போக வேணும்,எல்லாம் சும்மாவா ?. சரி, சரி என்று விட்டு போனை வைத்து விட்டு மனைவியை பார்த்தேன்..நல்ல வேளையாக அவள் பால்கனியில் நின்றபடி வெளியே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் . ..................................................................................... ஊரிலிருந்து பார்சலில் வந்த வேப்பமிலையை எல்லா மூலையிலும் கட்டித் தொங்க விட்டு உள்ளூர் ஆசியன் கடையில் வாங்கிய மஞ்சளும் தெளிச்சு களைத்துப் போயிருந்தேன்.கட்டித் தொங்க விட்டிருந்த வேப்பமிலை காய்ந்து சருகாகிப் போயிருந்ததே தவிர பிறிச்சுக்கு பின்னாலும்,குளியலறையும் கரப்பான்பூச்சியின் பிரதான ரியல் எஸ்டேட் குடியிருப்பாக மாறிவிட்டிருந்தது.மனைவியின் ஆ ....ஐயோ ..சத்தமும் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தது . அடுப்படிக்குள் போகவே மனிசி பயந்ததாலை கரப்பான்பூச்சிகளின் அடுக்கு மாடி குடியிருப்பான பிரிஜ்சை மாற்றி விடுவதென முடிவெடுத்தேன்.அதை முதலாவது மாடி வரை தூக்கி வரவேண்டும்.உதவிக்கு கூடவே வேலை செய்யும் மமாடுவை அழைத்திருந்தேன்.மமாடு ஆபிரிக்க செனெகல் நாட்டை சேர்ந்தவன்.பிறிச்சை தனியாகவே தூக்கும் உடல்வாகும் பலமும் கொண்டவன் .அவனின் உதவியோடு புதிய பிரிஜ்சை கொண்டு வந்து வைத்தாகி விட்டது. மறுநாள் வேலைக்கு போனதும் மமாடுவை பார்த்து வணக்கம் சொன்னதும் அவனும் வணக்கம் சொன்னான்.. வாய் அசைந்ததே தவிர சத்தம் வரவில்லை. "என்னாச்சு".. நேற்று பிரிஜ்சை தூக்கியதாலை ஏதும் ஆகியிருக்குமோ ? என்று நினைத்தபடி "என்ன ஆச்சு"... என்றதும் .. கோபமாக தன் சட்டைப்பையில் கையை விட்டு காய்ந்துபோன சில இலைகளை எடுத்து மேசையில் எறிந்தவன் "இது என்ன "..என்றான் .. உற்றுப்பார்த்தேன் .."அடடே இது வீட்டிலை கட்டித் தொங்க விட்டிருந்த வேப்பமிலை ..இது எப்பிடி இவனிட்டை"? .. அவனே சைகையில் சொல்லத் தொடங்கினான் .."நேற்று உன் வீட்டுக்கு வந்தனா" ... ஆமா ... டாய்லேட் போனனா .... ஆமா ...... அங்கை ஒரு மூலையிலை இது தொங்கிட்டு இருந்திச்சா .... ஆமா ..... "அதை உருவிக்கொண்டு போய் கசக்கி பத்தினன் ..சவுண்டு போயிட்டுது"..என்றான் .. "ஏன்டா டேய்" ..ஒரு ஆசியா காரன் வீட்டிலை காய்ந்துபோன எந்த இலை கிடந்தாலும் உடனையே அது கஞ்சா தான் எண்டு எப்பிடிடா முடிவு பண்ணுறீங்கள் ..சரி ஒண்டும் ஆகாது உடம்புக்கு நல்லது. மிகுதியையும் கசக்கி பத்து.. என்று அவனை தேற்றினேன் .. ........................................................................................ எப்பிடியோ கரப்பான் பூச்சிகள் . புது பிறிச்சுக்கு பின்னாலும் பால் காச்சி குடி கொண்டு விட்டிருந்தன. வீட்டை மாத்துங்கோ என்கிற மனைவியின் நச்சரிப்பு.வாழ்க்கை வெறுத்துப்போய் அந்த சோகத்தில் இரண்டு பியரை வாங்கி ஒன்றை மமாடுவிடம் கொடுத்து சியர்ஸ் சொல்லி உறுஞ்சிய படியே அவனிடம் சோகத்தை பகிந்து கொண்ட போது ..கை தட்டி விழுந்து புரண்டு சிரித்தான் .. எதுக்கடா சிரிக்கிறாய் .... இதெல்லாம் ஒரு பிரச்சனையா ??... அடேய் ..இது தாண்டா பிரச்சனையே ... இதை முதல்லையே என்னிடம் கேட்டிருக்கலாமே .சூப்பர் ஐடியா சொல்லியிருப்பேன் .. சரி இப்போ சொல்லு .. கண்ணீர் புகை அடி. எல்லாம் ஒரே நாளிலை முடிஞ்சிடும் .. கலகத்தை அடக்கத் தானே கண்ணீர் புகை அடிப்பாங்கள் ..கரப்பான்பூச்சியை அடக்கவுமா ??.. அடிச்சு பார்த்திட்டு அப்புறமா சொல்லு .. சரி கண்ணீர்ப்புகை சின்ன அளவு ஸ்பிரே தானே வாங்கலாம்.ஒவ்வொரு கரப்பான்பூச்சியா பிடிச்சி கண்ணிலையா அடிக்க முடியும் . கவலையை விடு.செக்கியூரிட்டி சேர்விசிலை எனக்கு தெரிஞ்ச ஒருத்தன் இருக்கிறான் அவனிட்டை சொன்னால் ஆயுதம் விக்கிற கடையிலை கண்ணீர்ப்புகை குண்டு வாங்கி கொடுப்பான் .ஒரேயொரு குண்டு.. "புஸ்ஸ்" ...எல்லாம் குளோஸ் .. " என்னது குண்டா"... இது சட்டப்படி குற்றமில்லையா? ஏதும் பிரச்னை வராதே ??.. கரப்பான்பூச்சி போலிஸ் ஸ்டேசனிலை போய் வழக்கு போடாத வரைக்கும் உனக்கு பிரச்சனையில்லை ..பயப்பிடாதை . மமாடு கண்ணீர்ப்புகை குண்டு வாங்கி கொடுத்து எப்படி இயக்குவது என்றும் சொல்லிக் கொடுத்து விட்டிருந்தான்.பயங்கர ஆயுதம் கடத்துவது போலவே.. பயந்தபடி கார் சீட்டுக்கு கீழே ஒளித்துவைத்து கொண்டு வந்து சேர்த்தாச்சு ..அடுத்த சனிக்கிழமை தாக்குதலுக்கான நாளும் குறித்து விட்டிருந்ததோடு மட்டுமல்லாமல் அது பற்றிய விபரம் மனைவிக்கும் தெரியாமல் இரகசியம் காக்கப் பட்டது .. ...................................................... சனிக்கிழமை காலை அந்த திக் ..திக் ..நிமிடங்கள்.காலை சாப்பாடு முடிந்ததும் மனைவியிடம் கரப்பான்பூச்சிகள் மீதான எனது தாக்குதல் திட்டத்தை விளக்கிவிட்டு கட்டிலுக்கடியில் ஒழித்து வைத்திருந்த கண்ணீர்ப்புகை குண்டை எடுத்து டக்கென்று மேசையில் வைத்தேன் .ஆச்சரியத்தாலும் பயத்தாலும் அகல விரித்த கண்களால் என்னைப் பார்த்து .. "ஒண்டும் பிரச்சனை வராதா".. இல்லையடி மமாடு இதை அடிச்சுத்தான் பூச்சியை ஒழிச்சவன் .. ஓ எல்லாம் அந்த கறுப்பன் கொடுத்த ஐடியாவா ?.. கருப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்டி .. காய்ஞ்ச வேப்பமிலையை மட்டும் களவெடுப்பானாக்கும் .. சரி" கெதியா வெளிக்கிடு இண்டைக்கு இரவு ஹொட்டேல்லை தான் தங்கவேணும் அதுக்கான உடுப்பு எல்லாம் ரெடி பண்ணு ..என்று சொல்லிவிட்டு வேகமாக சாப்பிட்டு முடித்து மிகுதி எல்லாவற்றையும்பிரிஜ்ச்சில் அடைந்து விட்டு சிறிய பையில் துணியோடு தயாராய் நின்றிருந்தவளை "நீ ஓடிப்போய் காரிலை இரு.. நான் குண்டை எறிஞ்சிட்டு ஓடி வாறன் "..என்றதும் "சரி கவனமா வாங்கோ" ...என்று விட்டு போய் விட்டாள் . வீட்டின் ஜன்னல் கதவு எல்லாம் சரியாக சாதப்பட்டிருக்கிறதா என்று சரி பார்த்து விட்டு வெளியே வந்து போத்தல் வடிவில் இருந்த கண்ணீர்ப்புகை குண்டை எடுத்து " அப்பனே முருகா ,பிள்ளையாரே, அல்லாவே, அந்தோனியாரே ,பெரியாரே" ..என்று எல்லா மத கடவுளையும் .மனதில் வேண்டியபடி அதன் பாதுகாப்பு கிளிப்பை இழுத்து வீட்டுக்குள் எறிந்துவிட்டு வேகமாக கதவை அடித்து சாத்தி பூட்டிவிட்டு படிகளில் வேகமா இறங்கிக்கொண்டிருக்கும் போது எதிர் வீட்டில் தனியாக வசிக்கும் பிரெஞ்சுக் கிழவி மேலே ஏறிக்கொண்டிருந்தார் . போகிற வேகத்தில் அவருக்கு ஒரு வணக்கம் சொன்னேன் .பதில் வணக்கம் சொல்லாமல் என்னை முறைத்து விட்டு போய்க்கொண்டிருந்தார் ."ஆரம்பத்தில நல்லா சிரித்து கதைச்ச கிழவி இப்பவெல்லாம் முறைக்குது.என்னவாயிருக்கும்".. என்று நினைத்தபடி போய் விட்டேன் . அன்றைய பகல் பொழுதும் தெருத் தெருவாக அலைந்தே கழிந்து போய் மாலையானதும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக மலிவான ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தோம் .நம்ம ஹோட்டலுக்கும் யாரோ வந்திருக்கிறார்கள் என்கிற மகிழ்ச்சியில் எழுந்து நின்று விழுந்து விழுந்து ஒருத்தன் வரவேற்றான் . அவனிடம் .."றூம் இருக்கா" ?... இருக்கே ..லக்ஸ்சறி ? ஸ்டாண்டர்ட் ..எது வேணும் .. ஸ்டாண்டர்ட் போதும் .. எத்தினி நாளைக்கு ?.. நாங்கள் இந்த ஊர் காரங்கள் தான். ஒரே இரவுக்கு மட்டும் போதும் .. மனிசியை பார்த்து லேசாய் கொடுப்புக்குள் சிரித்தபடி "ஓ ...ஒரே ஒரு இரவுக்கு மட்டுமா"..என்றான் . "டேய் ..டேய் ..அது என்னோடை பெண்டாட்டி"" எண்டு சொல்லி அவனுக்கு அறைய வேண்டும் போல் இருந்தது . எதுக்கு வம்பு என்று உள்ளுக்குள்ளே உறுமிக்கொண்டிருந்த சிங்கத்தை சாந்தப்படுத்தி விட்டு.பெயர் விபரத்தை கொடுத்து அவன் காட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டதும் ."என்ஜோய்" என்று கண்ணடித்த படியே அறை சாவியை எடுத்து நீட்டினான் .சிங்கம் மீண்டும் ஒரு முறை சிலிர்த்துக் கொள்ள.. அடக்குவதை தவிர வேறு வழியில்லை . அவன் கையிலிருந்த சாவியை வெடுக்கென்று பிடிங்கிக்கொண்டு அறையை தேடிப்பிடித்து நுழைத்ததும் கட்டிலில் விழுந்தபடி.. "அவனின்டை மூஞ்சியும், முகரகட்டையும்.பரதேசி" . யாரை திட்டுறீங்க? .. ரிசெப்சனில் நின்டவனை ...அவனின்டை பார்வை ,பேச்சு சரியில்லை .. அப்பிடி எதுவும் வித்தியாசமா எனக்கு தெரியலையே .. "இல்லடி உனக்கு புரியாது"..என்று அவளுக்கு விளக்கம் கொடுக்கலாமா என்று யோசித்தேன். ஆனால் "ஓ..கோ அப்பிடியான பெண்ணுகளை கூட்டிக் கொண்டு வந்திருக்கிறிங்களா"? ..என்று அடுத்த கேள்வி வந்து விழும் .சனியனை பிடித்து எதுக்கு பனியனுக்குள்ள விடவேணும்.என்று நினைத்தபடி பேசாமல் படுத்து விட்டேன் . மறுநாள் மதியமளவில் வீட்டுக்கு போய் பார்த்தேன் சில பூச்சிகள் மயங்கி கிடந்தன .கண் எரிச்சலாக இருக்க யன்னல் கதவு எல்லாம் திறந்து விட்ட பின்னர் வழக்கம்போல் வீட்டை கூட்டி பூச்சிகளை கொளுத்தி டாய்லெட்டில் போட்டு தண்ணீரை இழுத்து விட்ட பொழுது சமையலறையில் இருந்து "ஆ ..ஐயோ "..ஓடிப்போய் பார்த்தேன் .கதிரைக்கு மேல் ஏறி நின்றபடி "ஓவனுக்குபின்னலை ..பின்னலை" .. கத்தினாள் . ஓவனை நகர்த்திப்பார்த்தேன் .சிறிய சந்தில் இருந்தபடி தினாவெட்டா என்னைப் பார்த்து மீசையை ஆட்டிக்கொண்டிருந்தது.கொலைவெறியோடு மீசையில் பிடித்து இழுக்க அதை அறுத்துவிட்டு ஒட்டிவிட்டது.அறுந்த பாதி மீசையோடு மனைவியை திரும்பிப்பார்த்தேன் .. "நீங்களும் உங்கடை கண்ணீர்ப்புகை ஐடியாவும் .ஊகும் .. சமைக்கிற வேலையை பாருங்கோ". சமைக்கிறதா ? பேசாமல் பீட்சா ஒடர் பண்ணவா ? என்னது பீட்சாவா ? அதோடை முதல் எழுத்தே சரியில்லை எனக்கு வேணாம்.. எழுத்தை எதுக்கடி பாக்கிறாய் பேசாமல் தின்ன வேண்டியதுதானே .. அதை நீங்களே தின்னுங்க எனக்கு சமைச்சு வையுங்க .நான் குளிச்சிட்டு வாறன்" ..என்றபடி குளியலறைக்கு போய் விட்டாள் . ச்சே ..கறுப்பன் தந்த ஐடியாவும் பெயிலியர் .என்கிற கோபத்தில் பிரீசரில் இருந்த கோழியை எடுத்து மைக்குரோனில் வைத்து சூடாக்கி இளகவைத்து கத்தியால் ஓங்கி ஒரு வெட்டு வெட்டிய போதே அழைப்பு மணியை யாரோ அடிக்கும் சத்தம் கேட்டது . "யாராயிருக்கும்"?..என்று நினைத்தபடியே கதவின் துவாரத்தால் பார்த்தேன்.வெளியே ஒரு ஆண் ஒரு பெண் என இரண்டு போலீஸ்காரர்கள் நின்றிருந்தார்கள் . "ஐயை.. யோ .. கரப்பான்பூச்சிக்கு கண்ணீர்ப்புகை அடிச்சது தெரிய வந்திருக்குமோ"..என்று லேசாய் உதறல் எடுக்கவே பயத்தை காட்டாமல் முகத்தை சிரித்த மாதிரி வைத்துக்கொண்டு கதவைத் திறந்ததும்.சட்டென்று இருவரும் துப்பாக்கியை உருவியபடி "கத்தியை கீழே போடு கையை உயர்த்து ".. என்று கோரஸில் கத்தினார்கள் .. கத்தியை கீழே போட்டு விட்டு கையை உயர்த்தவும் போலீஸ்காரன் என்னை சுவரோடு தள்ளி துப்பாக்கியை தலையில் அழுத்தியபடி என் கால்களை அகல வைக்கச்சொல்லி உத்தரவிட்டவன். உடலை மேலிருந்து கீழாக ஒரு தடவை தடவி முடித்து விட்டு போலீஸ்காரியிடம் "வேறு ஆயுதங்கள் எதுவும் இல்லை".. என்றான் .நல்ல வேளை நான் உள்ளே ஜட்டி போட்டிருந்ததால் தப்பித்தேன் . அதே நேரம் சத்தம் கேட்டு குளியலறையில் இருந்து வெளியே வந்த மனைவி பதறிப்போய் "என்ன பிரச்னை" என்றவும் ..அவளை ஓடிப்போய் கட்டிப்பிடித்த போலீஸ்காரி "மேடம்.. பயப்பட வேண்டாம் உங்களை கொலை முயற்சியில் காப்பாற்றி விட்டோம் .இனி உங்கள் கணவரால் உங்களுக்கு எந்த பிரச்னையும் வராது "..என்றவளின் கையை உதறியவள் "கொலை முயற்சியா யார் சொன்னது"? .. "உங்களை கணவர் போட்டு அடிப்பதாகவும் அதனால் உங்கள் அலறல் சத்தம் அடிக்கடி கேட்பதாக எங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.இப்பொழுதும் உங்களை கொலை செய்ய முயற்சித்ததால் தானே குளியலறையில் போய் ஒழிந்துகொண்டீர்கள் .நல்ல வேளையாக நாங்கள் வந்து காப்பாற்றி விட்டோம்" .. "கடவுளே நான் அலறுவது உண்மைதான் ..கணவன் அடிப்பதால் அல்ல ..கரப்பான்பூச்சியால் .இப்பவும் அவர் என்னை கொல்ல வரவில்லை ..ஏற்கனவே கொலை செய்து ஆறு மாதமாய் பிரிஜ்ச்சில் அடக்கம் செய்யப் பட்டிருந்த கோழியைத்தான் வெட்டிக் கொண்டிருந்தார்.அந்த நேரமா பார்த்து நீங்கள் வந்து பெல்லை அடிச்சிட்டீன்கள்" ..என்று சொல்லி முடித்த பின்னர்தான் என் தலையில் அழுத்தியிருந்த துப்பாக்கியை எடுத்தான் . ஆனாலும் போலீஸ்காரி விடுவதாய் இல்லை.. "மேடம் கணவருக்கு பயந்து பொய் சொல்ல வேண்டாம் உன்மையிலேய அவர் உங்களை அடித்தால் உடனேயே எங்களுக்கு போன் பண்ணுங்கள் .டைவோஸ் எடுக்கிறதுக்கான சட்ட ஆலோசனை,லாயர் ,எல்லாம் இலவசமாகவே கொடுப்போம்".. என்று சொல்லியவள் என்னை லேசாய் முறைத்து விட்டு அங்கிருந்து வெளியேறினார்கள் . "பார்ரா ..ஒரு குடும்பத்தை பிரிக்கிறதுக்கு என்னமா பாடு படுறாங்கள் ..போனடித்து போட்டுக் குடுத்து யாரா இருக்கும்"?.. என்று நினைத்தபடி வெளியே எட்டிப் பார்த்தபோது ..எதிர் வீடுக் கிழவி ஆமை தலையை இழுத்தது போல கதவுக்கு உள்ளே தலையை இழுத்தாள்.என்னைப் பார்த்து முறைததுக்கான அர்த்தம் அப்போ தான் எனக்கு புரிந்தது .. .......................................................................................... இந்த சனியனை ஒழிக்க என்னதான் வழி என்று கூகிளில் "கரப்பான்பூச்சியை ஒழிப்பது எப்படி".. என்று அடித்துப் பார்த்தேன் .ஒரு கட்டுரை வந்து விழுந்தது ..கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றிய மூத்த உயிரினம் என்று தொடங்கியது .. "அடாடா நம்மள மாதிரியே கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றியிருக்கு நமக்கு நெருங்கிய உறவு.அதுதான் சுத்திச் சுத்தி வருது"..என்று நினைத்தபடி அரை மணித்தியால கட்டுரையை பொறுமையாய் படித்தேன்.. இந்த பூமிப் பந்து சுற்றிக்கொண்டிருக்கும் வரை அதனை அழிக்க முடியாது என்று முடிந்திருந்தது ..""அடங்""..... பூமி சுத்திறதை நிப்பாட்ட முடியாது.எனவே பூச்சி இல்லாத புது வீடு பார்கிறதாய் முடிவெடுத்து வீட்டு ஏஜென்சியில் போய் பதிவு செய்ததும்.. "உங்களுக்கு என்னென்ன வசதிகளோடை வேணும்" என்றான் .. "தண்ணி, கரண்டு, இல்லாவிட்டலும் பரவாயில்லை கரப்பான்பூச்சி இல்லாமல் இருக்க வேணும்". என்ற என்னை ஏற இறங்க பார்த்தவன் .. புது பில்டிங்,புது பெயிண்ட் ,நாலாவது மாடி ஒரு வீடு இருக்கு பார்க்கிறின்களா?.என்றதும் தலையாட்டி விட்டு அவன் பின்னலையே போய் பார்த்தேன் .வீடு பிடித்திருந்தது.பூச்சி இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை .. "என்ன வீடு பிடிச்சிருக்கா". என்றவனிடம் .. பிடிச்சிருக்கு ஆனால் இரவிலும் ஒருக்கா பாக்க முடியுமா ? இரவிலையா எதுக்கு ?.. "ஒரு வேளை பகலிலை பூச்சி எங்கையாவது ஒழிச்சிருக்கும் .இரவிலை வெளியை வரும்.அதாலை இரவும் ஒருக்கா பார்த்திட்டேன் எண்டால் மனதுக்கு திருப்தியா இருக்கும். நாளைக்கே அட்வான்ஸ் குடுத்திடுவேன் " ....என்று இழுத்தேன். "உனக்காக நான் நைட் டியூட்டி எல்லாம் பாக்க முடியாது.இந்தா சாவி .விடிய விடிய இங்கயே இருந்து பாத்திட்டு காத்தாலை சாவியை கொண்டுவந்து கொடுத்திட்டு போ" ..என்று தந்துவிட்டு போய்விட்டான் . அன்றிரவு நீளக்கருப்பு கோட்டு,தொப்பி,கறுப்புக்கண்ணாடி,கையில் டார்ச் லைட் என்று பழைய படங்களில் வரும் ஜேம்ஸ்பாண்ட் போலவே வெளிக்கிட்டு கொண்டிருக்கும்போது .."என்னங்க இது கோலம் .இரவிலை கறுப்புக் கண்ணாடி வேறை".. அப்போ தாண்டி கரப்பான்பூச்சிக்கு என்னை அடையாளம் தெரியாது .. நானும் கூடவே வரவா ?.. வேண்டாம். நீ சத்தம்போட்டு ஊரையே கூட்டிடுவாய்.பூச்சி ஓட்டிடும் ..என்று விட்டு கிளம்பி விட்டிருந்தேன் .அப்பார்ட்மெண்ட் கதவை மெதுவாக திறந்து பூனையைப்போல அடிமேல் அடிவைத்து உள்ளே போய் டார்ச் லைட்டை திடீர் திடீரென எல்லாப் பக்கமும் அடித்துப் பார்த்தேன் . ""அப்படா எந்தப் பக்கமும் பூச்சி இல்லை"" . மறு நாளே அட்வான்ஸ் கொடுத்து .வீட்டு ஏஜென்சிக் காரன் காட்டிய இடத்தில எல்லாம் கையெழுத்துப் போட்டு திறப்பும் வாங்கியாச்சு.அடுத்த நாளே கொஞ்சம் கொஞ்சமாக சாமான்கள் எல்லாம் பெட்டிகளில் பொதி செய்யத் தொடக்கி விட்டிருந்தோம்.புது வீட்டுக்கு லிப்ட் வசதி இருந்தது ஆனால் வீடு மாறுபவர்கள் பொருட்களை லிப்டில் ஏற்றக் கூடாது என்று எழுதி ஒட்டியிருந்தார்கள் பாவிகள் .கண்ணீர்ப்புகை புகழ் மமாடுவும் உதவிக்கு வந்திருந்தான்.வார இறுதி இரண்டு நாளும் பொருட்களை புது வீட்டுக்கு கொண்டு போய் சேர்த்தாகி விட்டது.நாலாம் மாடிக்கு பொருட்களோடு ஏறி இறங்கி நாக்கு தள்ளிவிட்டது. மறுநாள் காலை அலாரம் சிணுங்கியது.வேலைக்கு கிளம்ப வேண்டும். உடம்பு அடித்துப் போட்டது போல அலுப்பாக இருந்தது. "என்னங்க நீங்கள் பாத்ரூம் போறிங்களா இல்லை நான் போகட்டா "?... "நீயே .. போ..நான் இன்னும் ஒரு பத்து நிமிசம் படுக்கிறேன்".. என்று விட்டு போர்வையால் இழுத்து மூடிக் கொண்டேன் . இன்னமும் ஒழுங்கு படுத்தப் படாமல் வீடெங்கும் பரவிக் கிடந்த பொருட்களை தாண்டியபடி குளியலறைக்குள் சென்று கதவைச் சாத்திய சத்தம் கேட்டது .ஒரு நிமிடம் சென்றிருக்கும் ....... என்னங்க ..ஐயோ ..ஆ ஆ ஆ....................................................... க .பூ ..க ..போ ..கரப்பான்பூச்சியும் கடந்து போகும் Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் சுவைப்பிரியன் 850 Posted October 30, 2016 கருத்துக்கள உறவுகள் Share Posted October 30, 2016 க .பூ நல்லாத்தான் சாதிச்சிருக்கு.நினைக்கவே பாவமாய் இருக்கு.மற்றப்படி பழைய சாத்திரியை கண்டதில் மகிழ்ச்சி. Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் கிருபன் 4,235 Posted October 30, 2016 கருத்துக்கள உறவுகள் Share Posted October 30, 2016 கரப்பான் பூச்சி கதை நகைச்சுவையாக இருந்தாலும், பூச்சிகளின் தொல்லைகளிலிருந்து இலகுவாக தப்பமுடியாது என்ற கருத்து உண்மைதான். புதிய வீட்டுக்கு போகும்போது பழையவீட்டுச் சாமான்களை எடுத்துச் சென்றதுதான் கரப்பான் பூச்சிக் கடத்தலுக்குக் காரணம் என்று நினைக்கின்றேன். Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் தனிக்காட்டு ராஜா 2,175 Posted October 30, 2016 கருத்துக்கள உறவுகள் Share Posted October 30, 2016 சாத்து அடிக்கடி நகைச்சுவையாக எழுதுவதால் என்னவோ சாத்துவின் கதை எனக்கு பிடிக்கிறது சூப்பர் கதை ஆனால் சாமிக்க பெரியாரும் வந்து போய்விட்டாரே Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி 9,624 Posted October 30, 2016 கருத்துக்கள உறவுகள் Share Posted October 30, 2016 க...பூ...க....போ Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் sathiri 1,087 Posted October 31, 2016 Author கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted October 31, 2016 10 hours ago, சுவைப்பிரியன் said: க .பூ நல்லாத்தான் சாதிச்சிருக்கு.நினைக்கவே பாவமாய் இருக்கு.மற்றப்படி பழைய சாத்திரியை கண்டதில் மகிழ்ச்சி. மிக்க நன்றி 9 hours ago, கிருபன் said: கரப்பான் பூச்சி கதை நகைச்சுவையாக இருந்தாலும், பூச்சிகளின் தொல்லைகளிலிருந்து இலகுவாக தப்பமுடியாது என்ற கருத்து உண்மைதான். புதிய வீட்டுக்கு போகும்போது பழையவீட்டுச் சாமான்களை எடுத்துச் சென்றதுதான் கரப்பான் பூச்சிக் கடத்தலுக்குக் காரணம் என்று நினைக்கின்றேன். உண்மையும் அதுதான் .. Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் suvy 8,034 Posted October 31, 2016 கருத்துக்கள உறவுகள் Share Posted October 31, 2016 ஆக மொத்தத்தில் அவன்ர புது வீட்டிலையும் உங்களின் கட்டுப் பெட்டிகளுடன் கரப்பானையும் கொண்டு போய்க் கொட்டிட்டிங்கள்.... சுத்தம்....! நல்லாயிருக்கு நகைச்சுவையாய் இருக்கு சாத்திரியார் ....! Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் putthan 2,162 Posted November 1, 2016 கருத்துக்கள உறவுகள் Share Posted November 1, 2016 கதை நகைசுவையுடன் நன்றாக இருக்கின்றது.....அது சரி இந்த பொம்பிளைகள் க.பூச்சியை கண்டால் ஏன் கத்திறவையள்.... Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் sathiri 1,087 Posted November 1, 2016 Author கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted November 1, 2016 On 30/10/2016 at 5:18 PM, முனிவர் ஜீ said: சாத்து அடிக்கடி நகைச்சுவையாக எழுதுவதால் என்னவோ சாத்துவின் கதை எனக்கு பிடிக்கிறது சூப்பர் கதை ஆனால் சாமிக்க பெரியாரும் வந்து போய்விட்டாரே தமிழ்நாடில் சிலர் பெரியாரையும் கடவுள் பட்டியலில் இணைத்து விட்டார்கள் Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் தனிக்காட்டு ராஜா 2,175 Posted November 1, 2016 கருத்துக்கள உறவுகள் Share Posted November 1, 2016 20 minutes ago, sathiri said: தமிழ்நாடில் சிலர் பெரியாரையும் கடவுள் பட்டியலில் இணைத்து விட்டார்கள் சேர்த்துட்டாங்களா நல்லது தானே Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் ரதி 3,270 Posted November 1, 2016 கருத்துக்கள உறவுகள் Share Posted November 1, 2016 உந்த கரப்பான் பூச்சி கதை எழுதுகிறத்திற்க்கா இந்தியா போயிட்டு வாறதை எல்லாம் பீலா விடோனுமா? ......................................... புத்தா பொம்பிளையல் கரப்பான் பூச்சியைக் கண்டு கத்தக் காரணம் அருவெருப்பே தவிர பயமில்லை Link to post Share on other sites
ஜீவன் சிவா 1,817 Posted November 1, 2016 Share Posted November 1, 2016 சாத்திரி நல்ல எழுத்துநடை - ஒரு புன்சிரிப்புடன் வாசித்தேன். வாழ்த்துக்கள். பூச்சிகளை ஒழிக்க ஒரே வழி வீட்டை சுத்தமாக வைத்திருப்பதுதான் - வேறு எதுவும் வேலைக்கு ஆவாது. Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் putthan 2,162 Posted November 2, 2016 கருத்துக்கள உறவுகள் Share Posted November 2, 2016 10 hours ago, ரதி said: புத்தா பொம்பிளையல் கரப்பான் பூச்சியைக் கண்டு கத்தக் காரணம் அருவெருப்பே தவிர பயமில்லை அதென்ன... நண்டு,கணவாய் எல்லாம் சமைக்கினம் ,சாப்பிடுயினம் உதுக்கு மட்டும் அருவருப்போ Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் sathiri 1,087 Posted November 2, 2016 Author கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted November 2, 2016 On 31/10/2016 at 7:43 PM, suvy said: ஆக மொத்தத்தில் அவன்ர புது வீட்டிலையும் உங்களின் கட்டுப் பெட்டிகளுடன் கரப்பானையும் கொண்டு போய்க் கொட்டிட்டிங்கள்.... சுத்தம்....! நல்லாயிருக்கு நகைச்சுவையாய் இருக்கு சாத்திரியார் ....! நன்றியண்ணா On 01/11/2016 at 10:59 AM, putthan said: கதை நகைசுவையுடன் நன்றாக இருக்கின்றது.....அது சரி இந்த பொம்பிளைகள் க.பூச்சியை கண்டால் ஏன் கத்திறவையள்.... பெரிய மீசை இருக்கிறது காரணமாக இருக்கலாம் Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் sathiri 1,087 Posted November 9, 2016 Author கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted November 9, 2016 On 01/11/2016 at 8:36 PM, ஜீவன் சிவா said: சாத்திரி நல்ல எழுத்துநடை - ஒரு புன்சிரிப்புடன் வாசித்தேன். வாழ்த்துக்கள். பூச்சிகளை ஒழிக்க ஒரே வழி வீட்டை சுத்தமாக வைத்திருப்பதுதான் - வேறு எதுவும் வேலைக்கு ஆவாது. நன்றி Link to post Share on other sites
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.