Jump to content

இந்தியா எதிர் இங்கிலாந்து டெஸ்ட் போட்டி தொடர் செய்திகள்


Recommended Posts

  • Replies 157
  • Created
  • Last Reply

இந்தியா போராடி தோல்வியை தவிர்த்தது: இங்கிலாந்துக்கு தார்மீக வெற்றி

 

 
நிம்மதிப் பெருமூச்சுடன் பெவிலியன் செல்லும் கோலி, ஜடேஜா, வெற்றிக்காக போராடிய மகிழ்ச்சியுடன் இங்கிலாந்து. | படம்: பிடிஐ.
நிம்மதிப் பெருமூச்சுடன் பெவிலியன் செல்லும் கோலி, ஜடேஜா, வெற்றிக்காக போராடிய மகிழ்ச்சியுடன் இங்கிலாந்து. | படம்: பிடிஐ.

ராஜ்கோட் டெஸ்ட் போட்டி இந்தியாவின் போராட்ட 2-வது இன்னிங்ஸிற்குப் பிறகு டிராவில் முடிந்தது. கடைசியில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்த போது ஆட்டம் டிரா ஆனது.

49 ஓவர்களில் 310 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து போராடி டிரா செய்தது. கேப்டன் விராட் கோலி 49 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகவும், ஜடேஜா 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமலும் டிராவுக்கு உதவினர்.

82 டெஸ்ட் போட்டிகளில் இந்திய ஸ்பின் பவுலர்கள் தங்களிடையே 385 விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொண்டுள்ள ஆதிக்க நிலையில், இங்கிலாந்து ஸ்பின்னர்கள் 41 டெஸ்ட் போட்டிகளில் 117 விக்கெட்டுகளை மட்டுமே தங்களிடையே பகிர்ந்து கொண்டுள்ளனர், ஆனால் இந்திய அணியை ஆதிக்கம் செலுத்தியது இங்கிலாந்து, இந்திய ஸ்பின்னர்கள் இங்கிலாந்தை 797 ரன்களை இந்த டெஸ்ட்டில் அடிக்க விட்டனர்.

49 ஓவர்கள்தான் என்றாலும் இங்கிலாந்து விரைவில் தங்கள் ஓவர்களை வீசியதால் 52.3 ஒவர்கள் வரை வீசி இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்தது.

முன்னதாக அலிஸ்டர் குக்கின் 30வது டெஸ்ட் சதத்துடன், அறிமுக வீரர் ஹமீதின் அபாரமான 82 ரன்களுடனும் இங்கிலாந்து 260/3 என்று டிக்ளேர் செய்தது.

இந்திய அணி களமிறங்கிய போது கடும் நெருக்கடியில் ஆடிய கவுதம் கம்பீர் 6 பந்துகள் தடுமாறி ரன் எதுவும் எடுக்காமல் கிறிஸ் வோக்ஸ் ஒரு பந்தை ஆஃப் ஸ்டம்ப் லைனில் சற்றே எழுப்ப கம்பீர் வழக்கம் போல் எட்ஜ் செய்து ரூட்டிடம் எளிதான கேட்ச் கொடுத்து வெளியேறினார். முதல் இன்னிங்ஸிலும் இவர் தனக்கு கொடுத்த வாய்ப்புக்கான பொறுப்புறுதியுடன் ஆடவில்லை. முரளி விஜய்க்கு கடினமான கேட்சை ஸஃபர் அன்சாரி பிடித்திருந்தால் அல்லது புஜாராவுக்கு பிராட் எளிதான கேட்சை விட்டிருக்காவிட்டால் இந்தியா தோல்விக்கு அருகில் இன்னும் கொஞ்சம் சென்றிருக்கும் இன்னும் கூட நெருக்கடிக்குள்ளாகி தோற்றிருக்கும்.

அதே போல் அஸ்வினுக்கு ஒரு அவுட் ரிவியூ செய்து கொடுக்கப்படவில்லை, கால்காப்பில் பட்ட பந்து ஸ்டம்பைத் தாக்கினாலும், களநடுவர் அவுட் கொடுக்கவில்லை, 3-ம் நடுவர் அஸ்வின் பந்தை ஆட முயற்சி செய்தாரா என்று கேட்டார், நடுவர் ஆம் என்றதால் தப்பித்தார், ஆனால் இங்கிலாந்து வீரர்கள் அஸ்வின் பந்தை மட்டையில் ஆட முயற்சி செய்யவில்லை, மட்டையை அவர் பேடிற்கு பின்னால் ஒளித்தே ஆடினார் என்று திருப்திகரமாக வாதாடியும் பலிக்கவில்லை. அப்போது அஸ்வின் 7 ரன்கள், அதன் பிறகு அவர் 32 ரன்களை எடுத்தே ஆட்டமிழந்தார், ஒரு 14 ஓவர்கள் காலாவதியாயின.

அதன் பிறகு இங்கிலாந்து களவியூகத்தில் நெருக்குதலையும், பந்து வீச்சில் ஆக்ரோஷத்தையும் கூட்டியது. புஜாரா 18 ரன்களை எடுத்து ஆடி வந்த போது அடில் ரஷித்தின் சாதாரண பந்தை, முன்னால் வந்த் ஆடியிருக்க வேண்டிய பந்தை, பின்னால் சென்று ஆடினார், பந்து லேசாக திரும்பி கால்காப்பில் தாக்கியது அவுட் என்றார் நடுவர், இதனை ரிவியூ செய்திருக்கலாம் ஏனெனில் பந்து பிட்ச் ஆனது லெக் ஸ்டம்புக்கு வெளியே, நாட் அவுட்டாகவும் வாய்ப்பிருந்தது. ஆனால் புஜாரா ரிவியூ செய்யவில்லை.

முரளி விஜய் நன்றாக ஆடி 31 ரன்களை எடுத்த நிலையில் தேநீர் இடைவேளைக்குப் பிறகு அடில் ரஷீத்த்தின் லெக் பிரேக் ஒன்று திரும்பி விஜய் மட்டையின் உள்விளிம்பில் பட்டு அவரது நெஞ்சில் பட்டு அருகில் கேட்ச் ஆனது. அஜிங்கிய ரஹானேவுக்கு மோசமான டெஸ்ட் ஆக அமைந்தது. முதல் இன்னிங்சில் 13 ரன்களில் அன்சாரியிடன் பவுல்டு, இந்த இன்னிங்ஸில் மொயின் அலியின் ஆஃப் ஸ்பின்னை தவறாக கணித்து கட் செய்ய முயன்று தோல்வியடைய பேடில் பட்டு பவுல்டு ஆனார், இவ்வளவு திரும்பும் என்று 5-ம் நாளில் ஒரு பேட்ஸ்மென் எதிர்பார்க்காதது தவறு. ரஹானே 1 அவுட்.

71/4 என்று ஆனது, இதன் பிறகுதான் அஸ்வின் 7 ரன்களில் நடுவரால் பிழைத்தார், அஸ்வினும் கோலியும் இணைந்து 14 ஓவர்கள் ஆடி ஸ்கோரை 118 ரன்களுக்கு உயர்த்தினர் அஸ்வின் அப்போது 6 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்த நிலையில் அன்சாரி பந்தில் ரூட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதற்கு முன்னால் அன்சாரியை 3 பவுண்டரிகள் அடித்தார். முன்னதாக மூன்று முறை அவர் பந்தை ஆடாமல் விட்ட போது பேடைத் தாக்கிய போதும் நடுவர் நாட் அவுட் என்றார், நடுவில் வாங்கியதைத்தான் இங்கிலாந்து ரிவியூ செய்து விரயம் செய்தது. அதாவது பேட்ஸ்மென் பந்தை விளையாட முயன்றாரா இல்லை பாவ்லா செய்தாரா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் 3-ம் நடுவருக்கு இல்லை. இதனால் அஸ்வின் பிழைத்தார்.

சஹா இறங்கி வந்து ஆடினார் ஸ்பின்னர்களை, ஒரு முறை லாங் ஆனில் தூக்கி ஒரு பவுண்டரி அடித்த போது கோலி அவரைப் பாராட்டினார், ஆனால் 9 ரன்களில் அவர் அதே முறையில் ரஷீத்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஆனால் கோலி ஒருமுனையில் அவ்வளவு திருப்திகரமாக சரளமாக ஆடாவிட்டாலும் டிராவை உறுதி செய்தார். அதாவது ஸ்பின்னர்களை அடித்து ஆடி நெருக்கமான களவியூகத்தை தவிர்ப்பதுதான் ஆக்ரோஷம் பேசும் வீரர்களுக்கு அழகு, ஆனால் மேன்மேலும் லொட்டு வைத்ததால் அலஸ்டைர் குக் (இவர் எதிர்மறை அணுகுமுறை பெயர்பெற்றவர்) ஒன்று, இரண்டு, மூன்று என்று பீல்டர்களை அருகில் நெருக்கி கடைசியில் குடை போல் சுற்றி பீல்டர்களைக் கொண்டு வந்து கோலியையும் ஜடேஜாவையும் நெருக்கினார். ஆனால் ஜடேஜா அடித்து ஆடி 33 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 32 ரன்களையும் விராட் கோலி 98 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் டிரா செய்தனர்.

வெற்றிதான் எனது உயிர் மூச்சு என்று கூறிய விராட் கோலிக்கு இந்த டெஸ்ட் ஒரு சிறந்த ஆத்ம பரிசோதனைக்கான வாய்ப்பை அளித்துள்ளது. அஸ்வின் இந்த டெஸ்ட் போட்டியில் 230 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இது அவருக்கு ஒரு மறக்க வேண்டிய டெஸ்ட் போட்டி பவுலிங்கைப் பொறுத்தவரை. பேட்டிங்கில் 70 முக்கிய ரன்களை எடுத்தார். ரஹனே ஒவ்வொரு தொடரின் முதல் டெஸ்ட் போட்டியிலும் மோசமாக சொதப்புவது வழக்கமாகி வருகிறது. குழி பிட்ச்களில் காட்டும் ஆக்ரோஷம் இந்திய அணியினிடத்தில் நல்ல பிட்ச்களில் வரவில்லை. ஆட்ட நாயகனாக மொயின் அலி தேர்வு செய்யப்பட்டார்.

இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷீத் இந்த டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், ஆனால் நம் லெக்ஸ்பின்னர் அமித் மிஸ்ரா 158 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார்.

இங்கிலாந்து அணியினர் 270 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் தைரியமாக டிக்ளேர் செய்து பார்த்திருந்தால் ஒரு அரிதான ஒரு 5-ம் நாள் வெற்றியைக் கண்டிருக்க முடியும். எனினும் தார்மீக வெற்றி இங்கிலாந்துக்குத்தான்.

http://tamil.thehindu.com/sports/இந்தியா-போராடி-தோல்வியை-தவிர்த்தது-இங்கிலாந்துக்கு-தார்மீக-வெற்றி/article9340945.ece?homepage=true

Link to comment
Share on other sites

போட்டியை ‘டிரா’ செய்வது எப்படி என்றும் எங்களுக்குத் தெரியும்: கோலி

 

போட்டியை ‘டிரா’ செய்து எப்படி என்றும் எங்களுக்குத் தெரியும் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

 
 
 
 
போட்டியை ‘டிரா’ செய்வது எப்படி என்றும் எங்களுக்குத் தெரியும்: கோலி
 
ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. இந்திய அணி கேப்டன் நிலைத்து நின்று விளையாடி 49 ரன்கள் எடுத்து அணியின் டிராவிற்கு உதவினார்.

விராட் கோலி டெஸ்ட் அணியின் கேப்டனாக பதவி ஏற்றபோது, நான் எந்தவொரு சூழ்நிலையிலும் டிராவிற்காக விளையாடமாட்டேன். வெற்றியை குறிவைத்துதான் செல்வோம். முடியாத பட்சத்தில்தான் டிராவை பற்றி சிந்திப்போம் என்றார்.

அதேபோல்தான் இலங்கை தொடரில் இருந்து இந்தியாவிற்கு முடிவுகள் வந்துள்ளது. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரை இந்தியா 3-0 எனக் கைப்பற்றியது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. பெங்களூரில் நான்கு நாட்கள் மழை பெய்ததால் அந்த போட்டி டிராவில் முடிந்தது. அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்தது. இந்த இரண்டு போட்டிகளி்லும் மழை குறுக்கீட்டது.

இதனால் இந்தியா ஆட்டம் எந்தவொரு சூழ்நிலையிலும் ‘டிரா’வை நோக்கி நகர்ந்தது கிடையாது. முதன்முறையாக இந்தியா டிராவிற்காக விளையாடியுள்ளது.

இதனால் எங்களுக்கு போட்டியை ‘டிரா’ செய்வது எப்படி என்பதும் தெரியும் என்று விராட் கோலி கூறியுள்ளார். இன்றைய போட்டிக்குப்பின் ‘டிரா’ குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘இந்த போட்டியின் மூலம் ஆட்டத்தை ‘டிரா’ செய்வது எப்படி என்பதும் எங்களுக்கு தெரிந்துள்ளது சிறந்த விஷயம்.

நாங்கள் போட்டியில் வெற்றி பெற்றுள்ளோம் அல்லது தோல்வியடைந்து உள்ளோம். ஆகவே, இந்திய அணி எப்படி ஒரு போட்டியை ‘டிரா’ செய்து கொள்ளும் என்பது பற்றி ரசிகர்களுக்கு பெரிய சந்தேகம் இருந்திருக்கும்.

ரவீந்திர ஜடேஜா களம் இறங்கும்போது அவரிடம் சென்று, இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்னொரு விஷயத்தை பற்றி தெரிந்து கொண்டு அதில் முன்னேற்றம் காண நாமிருவருக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பு என்று கூறினேன்.

ஒருவேளை வருங்கால டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுபோன்ற சூழ்நிலை ஏற்படலாம். அப்போது நமது நோக்கம் என்ன, எவ்வாறு செயல்பட வேண்டும், இருவரும் எப்படி ரன்கள் சேர்க்க வேண்டும் என்பதை தானாகவே செயல்படுத்த வேண்டும்.

ஒன்றிரண்டு ரன்கள் எங்கே அடிக்கலாம், பவுண்டரிகள் எங்கே அடிக்கலாம் என்பதை தெரிந்து கொண்டு சராசரியாக கிரிக்கெட்டை ஆட வேண்டும். அதே சமயத்தில் பாதுகாப்பான ஆட்டத்தையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றைய ஆட்டம் சவாலான சூழ்நிலை. ஆனாலும் நாம் திறமையாக அதை சமாளித்தோம்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/11/13215027/1050616/We-know-how-to-draw-Tests-says-Kohli.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து இந்த மட்சியில் வென்று இருக்க வேண்டியது அநியாய்மாக மட்ச் டிரோவில் முடிந்திட்டுது

Link to comment
Share on other sites

2-வது டெஸ்ட்: இந்திய அணியில் கே.எல்.ராகுல்; கம்பீர் இடம் கேள்விக்குறி

 

 
கே.எல்.ராகுல். | கோப்புப் படம்.
கே.எல்.ராகுல். | கோப்புப் படம்.

ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தனது ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ள நிலையில் அடுத்ததாக வைசாகில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக கே.எல்.ராகுல் தொடக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காயத்திலிருந்து மீண்ட ராகுல் அணியில் சேர்க்கப்பட்டதையடுத்து புதிய ‘ஸ்டான்ஸ்’ கைகொடுக்காமல் சொதப்பி வரும் கம்பீரின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது.

நாளை மறுநாள் (நவ.17) விசாகப்பட்டனத்தில் 2-வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

காயத்திலிருந்து மீண்ட ராகுல் தனது உடற்தகுதியை நிரூபிக்கும் விதமாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் ஆடி 85 பந்துகளில் 76 ரன்களையும் 132 பந்துகளில் 106 ரன்களையும் எடுத்துள்ளார்.

கவுதம் கம்பீரின் புதிய ‘டபுள் ஐ’ ஸ்டான்ஸை இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் கேள்விக்குட்படுத்தினார், இந்த ஸ்டான்சில் உள்ளே வரும் பந்துகளை ஆடுவது சிரமம் அதன் மூலம் முதல் இன்னிங்ஸில் எல்.பி. செய்தார் பிராட், 2-வது இன்னிங்சில் கிறிஸ் வோக்ஸின் ஷார்ட் பிட்ச் பந்தில் எட்ஜ் செய்து 0-வில் வெளியேறினார். இதனால் கம்பீர் மறு டெஸ்ட் வாழ்வு முடிவுக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது.

http://tamil.thehindu.com/sports/2வது-டெஸ்ட்-இந்திய-அணியில்-கேஎல்ராகுல்-கம்பீர்-இடம்-கேள்விக்குறி/article9348800.ece

Link to comment
Share on other sites


இங்கிலாந்தை மடக்குமா இந்தியா?
 
 

article_1479306489-InInd-vs-Eng_16112016

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டி, நாளை ஆரம்பிக்கவுள்ளது. இப்போட்டி, விசாகப்பட்டினத்தில் இடம்பெறவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டியில், எதிர்பாராத விதமாகச் சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி, வெற்றி - தோல்வியற்ற முடிவைப் பெற்றுக் கொண்டிருந்தது. அத்தோடு, போட்டியில் வெற்றிபெறும் நிலையிலும், அவ்வணி காணப்பட்டிருந்தது. அவ்வாறான சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திய தன்னம்பிக்கையுடன், இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.

மறுபக்கமாக, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள், இந்தியச் சுழற்பந்து வீச்சாளர்களை ஓரளவு இலகுவாகக் கையாண்டிருந்த நிலையில், தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துடன், உலகின் முதல்நிலைப் பந்துவீச்சாளரான இரவிச்சந்திரன் அஷ்வின் உள்ளிட்ட இந்தியச் சுழற்பந்து வீச்சாளர்கள் களமிறங்குகின்றனர்.

காயம் காரணமாக முதலாவது போட்டியில் பங்குபற்றியிருக்காத லோகேஷ் ராகுல், தனது உடற்றகுதியை நிரூபித்துள்ளதால், கௌதம் கம்பீருக்குப் பதிலாகக் களமிறங்கவுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முதலாவது போட்டியின் ஆடுகளத்தில், எதிர்பார்த்ததை விட அதிகமான புல் காணப்பட்டது (அதனால், இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள், பந்தை அதிகம் திருப்ப முடிந்திருக்கவில்லை) என, இந்திய அணித்தலைவர் விராத் கோலி, தனது அதிருப்தியை வெளியிட்டிருந்த நிலையில், இப்போட்டியின் ஆடுகளம், எவ்வாறு அமையுமென்பது கேள்வியாகவே அமைந்துள்ளது. ஆனால், "நடுநிலையான" ஆடுகளமொன்று வழங்கப்படும் என, ஆடுகளப் பராமரிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

முதலாவது போட்டியில், அனுபவம் குறைந்த இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்துவதற்கு அனுமதித்த இந்திய அணி, இரண்டாவது போட்டியிலும் அதை அனுமதிக்குமா என்பதே கேள்வியாக உள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/186202#sthash.My6XLWPO.dpuf
Link to comment
Share on other sites

இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி பேட்டிங்

 

400_09214.jpg

விசாகப்பட்டினத்தில் இங்கிலாந்து எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்துள்ளார். கம்பீருக்கு பதிலாக லோகேஷ் ராகுல், அமித் மிஸ்ராவுக்கு பதிலாக ஜெயந்த் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. 

http://www.vikatan.com/news/sports/72632-india-wins-toss-and-chooses-to-bat-against-england-in-vizag-test.art

Link to comment
Share on other sites

2-வது டெஸ்டில் இந்தியா பேட்டிங்: 22 ரன்களுக்குள் 2 விக்கெட் அவுட்

விசாகப்பட்டினத்தில் தொடங்கி உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து ஆடிவருகிறது.

 
2-வது டெஸ்டில் இந்தியா பேட்டிங்: 22 ரன்களுக்குள் 2 விக்கெட் அவுட்
 
விசாகப்பட்டினம்:

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்ட் ‘டிரா’வில் முடிந்தது. இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். இதையொட்டி இரு அணியினரும் தங்களை தீவிரமாக தயார்படுத்தியுள்ளனர். கோலிக்கு இது 50-வது டெஸ்ட் போட்டி. இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது அமித் மிஸ்ராவுக்குப் பதில் ஜெய்ந்த் யாதவ் அறிமுகமாகியிருக்கிறார். கவுதம் காம்பீர் நீக்கப்பட்டு ஆடும் லெவனில் லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆனால், துவக்க வீரராக களமிறங்கிய லோகேஷ் ராகுல் 5 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். மற்றொரு துவக்க வீரர் முரளி விஜய் 4 பவுண்டரி உள்பட 20 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார். இதனால், இந்திய அணி 22 ரன்களுக்குள் துவக்க ஜோடியை இழந்தது. அதன்பின்னர் புஜாரா-கோலி இணைந்தனர்.

இவர்கள் இருவரும் நிலைத்து நின்று சரியான அடித்தளம் அமைக்காவிட்டால் போட்டி இங்கிலாந்து அணிக்கு சாதகமாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2016/11/17101337/1051272/India-won-the-toss-and-elected-to-bat-in-second-test.vpf

Link to comment
Share on other sites

முதல்நாள் ஆட்ட நேர முடிவு இந்தியா 317/4

 

229093_17279.jpg

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறது. இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கோலி 151, அஸ்வின் 1 ரன்களுடன் களத்தில் உள்ளனர். சிறப்பாக விளையாடிய புஜாரா 119 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த அணியில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

http://www.vikatan.com/news/sports/72706-india-3174-stumps-at-day-one-vs-england.art

Link to comment
Share on other sites

50-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அபார சதம்: வலுவான நிலையில் இந்தியா

 

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே இன்று விசாகப்பட்டினத்தில் தொடங்கிய இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், இந்திய அணித் தலைவர் விராட் கோலி மற்றும் புஜாரா ஆகியோர் சதமடித்தனர்.

 

புஜாரா, விராட் கோலி

 புஜாரா மற்றும் விராட் கோலி

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ராஜ்காட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது.

இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனத்தில் தொடங்கியது. இது இந்திய அணித் தலைவரான விராட் கோலியின் 50-வது டெஸ்ட் போட்டியாகும்.

ஆரம்பத்தில் தடுமாறிய இந்திய அணி

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். சென்ற போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்ற கவுதம் கம்பீருக்கு பதிலாக கே. எல். ராகுல் அணியில் சேர்க்கப்பட்டார்.

ஆட்டம் தொங்கிய இரண்டாவது ஓவரிலியே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ராகுல் ஆட்டமிழந்தார்.

சற்று நேரத்திலேயே மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான முரளி விஜய் இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

22 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறிக் கொண்டிருக்கும் போது, புஜாராவுடன் இந்திய அணித் தலைவர் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.

 

விராட் கோலி

 50-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அபார சதம்:

சிக்ஸர் அடித்து சதத்தை அடைந்த புஜாரா

ஆரம்பத்தில் பொறுமையாக விளையாடிய இந்த இணை பின்னர் நன்கு அடித்தாடினர். 99 ரன்கள் எடுத்த நிலையில் சிக்ஸர் அடித்து, தனது 10-வது டெஸ்ட் சதத்தை புஜாரா எடுத்தார்.

119 ரன்கள் எடுத்த நிலையில் புஜாரா ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரஹானே, ஆட்டம் முடியும் தறுவாயில் ஆட்டமிழந்தார்.

 

ஜேம்ஸ் ஆண்டர்சன்

 ஜேம்ஸ் ஆண்டர்சன்

150 ரன்களை எடுத்த விராட் கோலி

241 பந்துகளில் 151 ரன்கள் எடுத்துள்ள விராட் கோலி ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். ஆட்ட நேர முடிவில் நான்கு விக்கெட்டுக்கள் இழப்புக்கு இந்தியா 317 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மூன்று விக்கெட்டுக்களை எடுத்துள்ளார்.

இன்றைய ஆட்டத்தில் தனது 14-வது டெஸ்ட் சதத்தை விராட் கோலி பதிவு செய்தார்.

http://www.bbc.com/tamil/sport-38009527

Link to comment
Share on other sites

விராட் கோலி 151 நாட் அவுட்; புஜாரா சதம்: இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 317 ரன்கள்

  • லெக் திசையில் ஷாட் ஆடும் விராட் கோலி. | படம்: ராய்ட்டர்ஸ்.
    லெக் திசையில் ஷாட் ஆடும் விராட் கோலி. | படம்: ராய்ட்டர்ஸ்.
  • விராட் கோலி, புஜாரா. | ஏ.எஃப்.பி.
    விராட் கோலி, புஜாரா. | ஏ.எஃப்.பி.
 

விசாகப்பட்டணத்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 317 ரன்கள் எடுத்துள்ளது.

ஆட்ட முடிவில் 241 பந்துகளை இதுவரை சந்தித்துள்ள கேப்டன் விராட் கோலி 15 பவுண்டரிகள் உட்பட 151 ரன்களுடனும், ரவிச்சந்திரன் அஸ்வின் 1 ரன்னுடனும் களத்தில் இருக்கின்றனர்.

ரஹானேயின் மோசமான ரன் எண்ணிக்கை தொடர்ந்தது. இன்று 23 ரன்கள் எடுத்த அவர் ஆட்டத்தின் 89-வது ஓவரில் குக் புதிய பந்தை எடுத்து ஆண்டர்சனிடம் அளிக்க விளையாட வேண்டிய தேவையே இல்லாத, வெளியே சென்ற பந்தை ஆட முயன்று எட்ஜ் செய்தார், பேர்ஸ்டோ கேட்சிற்குத் தயாராகவே இருந்தார்.

ஒரு பந்து சென்று புதிய பேட்ஸ்மென் அஸ்வினும் பதற்றமாக ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே சென்ற பந்தை தள்ளினார் நல்ல வேளையாக கல்லி இல்லை இருந்திருந்தால் அஸ்வினும் நடையைக் கட்டியிருக்க வேண்டியதுதான். ஆனால் அதிர்ஷ்டம் அவர் பக்கம் இருந்தது, குக் கணிக்கத் தவறிய கள வியூகத்தினால் இன்னொரு விக்கெட் வாய்ப்பை இழந்தார்.

இந்திய அணியில் அமித் மிஸ்ராவுக்குப் பதிலாக அறிமுக போட்டியில் ஜெயந்த் யாதவ் களமிறக்கப்பட்டுள்ளார். எனவே இரண்டு ஆஃப் ஸ்பின்னர்கள்.

காயத்திலிருந்து மீண்டு வந்த கே.எல்.ராகுல், ரஞ்சி சதத்தை தொடர்வது போல் பிராடின் பந்தை பேக் அண்ட் அக்ராஸ் சென்று விட்டு விடாமல் முன்னால் வந்து ஸ்விங்கின் திசைக்கேற்ப ஆட எட்ஜ் ஆகி ஸ்டோக்சிடம் ஸ்லிப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார். ரன் இல்லை.

முரளி விஜய், ஃபுல் லெந்த்தில் வீசிய பந்துகளை அருமையாக டிரைவ் ஆடி 4 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்து தன்னம்பிக்கையுடன் ஆடி வந்த நிலையில் காயத்திலிருந்து மீண்டும் ஆட வந்துள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் அருமையான, துல்லியமான பவுன்சர் ஒன்றை விஜய் முகத்தை குறிவைத்து வீச விஜய் தடுத்தாடும் நோக்கத்துடன் தவறாக மட்டையை உயர்த்த பந்து கிளவ்வில் பட்டு கேட்ச் ஆனது.

கோலி, புஜாரா இரட்டை சதக் கூட்டணி:

தொடக்கத்தில் விராட் கோலி, புஜாரா இடையே ரன் ஓடுவதில் சரியான புரிதல் இல்லை. இதனால் புஜாரா ஒரு முறை ரன் அவுட் வாய்ப்பில் பிழைத்தார், இன்னொரு முறை மட்டை கையில் இருந்து தவறியது, இந்த வாய்ப்பையும் இங்கிலாந்து பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் இருவரும் செட்டில் ஆயினர். அப்போது புஜாரா காலியாகியிருந்தால் நெருக்கடியில் கோலியையும் அவர்கள் வீழ்த்தியிருக்கலாம், இதுவும் அதிர்ஷ்டம்தான்!

விராட் கோலி நன்றாக ஆடினாலும் சில சமயங்களில் பிராடின் லெக் கட்டரை ஆட முற்பட்டு பீட்டன் ஆனார். ஆனாலும் 87 பந்துகளில் 7 பவுண்டரியுடன் அவர் அரைசதம் எடுத்தார், முன்னதாக புஜாராவுக்கு அடில் ரஷித் பந்து ஒன்று கால்காப்பைத் தாக்க பலத்த முறையீடு எழுந்தது, நடுவர் நாட் அவுட் என்றார் ஆனால் ரீப்ளேயில் அது அவுட் என்றே காட்டியது, ரிவியூ செய்திருந்தாலும் கள நடுவர் தீர்ப்பைத்தான் உறுதி செய்திருப்பார்கள். இதனால் ரிவியூ செய்யவில்லை. கொஞ்சம் மெதுவாக ஆடிய புஜாரா 113 பந்துகளில்தான் அரைசதம் கடந்தார்.

மேலும் கோலி 56 ரன்களில் இருந்த போது ஸ்டோக்ஸ் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை கோலி ஹூக் செய்ய அடில் ரஷீத் கேட்ச் வாய்ப்பை நழுவ விட்டார், மேலும் சதம் அடித்தப் பிறகு ரிவர்ஸ் ஷாட் ஆட முயன்று கால்காப்பில் வாங்கினார், அது நெருக்கமான ஒரு எல்.பி.தான். ஆனால் நடுவர் கொடுக்கவில்லை. அதன் பலன் விராட் கோலி 151 நாட் அவுட்.

முன்னதாக 22/2 என்ற நிலையில் விராட் கோலி, புஜாரா சில அருமையான பந்து வீச்சை நிதானத்துடன் எதிர்கொண்டு உணவு இடைவேளை வரை விக்கெட் இல்லாமல் ஸ்கோரை 92 ரன்களுக்கு உயர்த்தினர். ஸ்பின் பந்து வீச்சை மிக எளிதாக ஆடினர். உணவு இடைவேளை முடிந்து தேநீர் இடைவேளை வரை மேலும் விக்கெட் விழாமல் ஆடிய கோலி, புஜாரா 210/2 என்று பெவிலியன் செல்லும் போது இருவரும் 90களில் இருந்தனர், அதாவது புஜாரா 97 ரன்களிலும் கோலி 91 ரன்களிலும் இருந்தனர்.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு புஜாரா பொறுத்தது போது பொங்கி எழு புஜாரா என்று அடில் ரஷீத் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை மிட்விக்கெட்டில் புல் ஷாட்டில் சிக்ஸ் அடித்து தொடரில் தனது 2-வது சதத்தையும், தொடர்ச்சியாக 3-வது சதத்தையும் அடித்தார். சிறிது நேரம் கழித்து விராட் கோலி ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தை ஆஃப் திசையில் 2 ரன்களுக்குத் தட்டி விட்டு தனது சதத்தை நிறைவு செய்தார்.

இருவரும் சேர்ந்து 3-வது விக்கெட்டுக்காக 226 ரன்களைச் சேர்த்தனர்.

204 பந்துகளில் 12 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 119 ரன்கள் எடுத்த புஜாரா ஆண்டர்சன் பந்தை தேவையில்லாமல் ஆடி பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடர்ச்சியாக 3-வது சதம் எடுத்துள்ளார் புஜாரா.

விராட் கோலி சதம் எடுத்த பிறகும் நிதானத்துடன் ஆடினார், அவர் குறிக்கோளில் தெளிவாக இருக்கிறார், 2-வது இன்னிங்ஸ் ஆட முடியாத ஒரு ஸ்கோரை எட்டி விட வேண்டும் என்பதே அது. ஆனால் அவரது இந்தக் குறிக்கோளுக்கு பின்னடைவு ஏற்படுத்துமாறு அஜிங்கிய ரஹானே தேவையில்லாமல் ஆண்டர்சன் பந்தை ஆடி அவுட் ஆனார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் இன்றைய தினத்தின் சிறந்த வீச்சாளர் அவர் 16 ஓவர்களில் 3 மெய்டன்களுடன் 44 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 3 ஸ்பின்னர்களும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, ஸ்டோக்ஸ் கோலியை காலி செய்திருக்க வேண்டும் ரஷீத் கேட்ச் விட்டார்.

பிட்ச் நாளை உணவு இடைவேளைக்குப் பிறகு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்தப் பிட்ச் ராஜ்கோட் பிட்சை விடவும் மெதுவாகவே உள்ளது, எனவே ஸ்பின்னர்களுக்குப் பந்து திரும்பினாலும் மெதுவாகவே திரும்பலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

http://tamil.thehindu.com/sports/விராட்-கோலி-151-நாட்-அவுட்-புஜாரா-சதம்-இந்தியா-4-விக்கெட்டுகள்-இழப்புக்கு-317-ரன்கள்/article9357042.ece?homepage=true

Link to comment
Share on other sites

2-வது டெஸ்ட்: 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 415-7

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் இந்தியா 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 7 விக்கெட் இழப்பிற்கு 415 ரன்கள் எடுத்துள்ளது.

 
 
2-வது டெஸ்ட்: 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 415-7
 
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா, முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 317 ரனகள் குவித்தது. புஜாரா 119 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

விராட் கோலி 151 ரன்களுடனும், அஸ்வின் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய விராட் கோலி 167 ரன்கள் எடுத்த நிலையில் மொயீன் அலி பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 351 ரன்னாக இருந்தது.

அடுத்து வந்த சகா 3 ரன்னிலும், ஜடேஜா ரன்ஏதும் எடுக்காமலும் மொயீன் அலி பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார்கள். இதனால் இந்தியா 363 ரன்களுக்குள் 7 விக்கெட்டுக்களை இழந்தது.

8-வது விக்கெட்டுக்கு அஸ்வின் உடன் புதுமுக வீரர் ஜயந்த் யாதவ் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். இதனால் 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இந்தியா மதிய உணவு இடைவேளை வரை 7 விக்கெட் இழப்பிற்கு 415 ரன்கள் குவித்துள்ளது.

அஸ்வின் 47 ரன்களுடனும், ஜயந்த் ஜாதவ் 26 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/11/18113431/1051521/INDvENG-2nd-day-Lunch-India-415-for-7.vpf

Link to comment
Share on other sites

2-வது டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 455 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது

 

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 455 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

 
2-வது டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 455 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது
 
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா, முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 317 ரனகள் குவித்தது. புஜாரா 119 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

விராட் கோலி 151 ரன்களுடனும், அஸ்வின் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய விராட் கோலி 167 ரன்கள் எடுத்த நிலையில் மொயீன் அலி பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 351 ரன்னாக இருந்தது.

அடுத்து வந்த சகா 3 ரன்னிலும், ஜடேஜா ரன்ஏதும் எடுக்காமலும் மொயீன் அலி பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார்கள். இதனால் இந்தியா 363 ரன்களுக்குள் 7 விக்கெட்டுக்களை இழந்தது.

8-வது விக்கெட்டுக்கு அஸ்வின் உடன் புதுமுக வீரர் ஜயந்த் யாதவ் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். இதனால் 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இந்தியா மதிய உணவு இடைவேளை வரை 7 விக்கெட் இழப்பிற்கு 415 ரன்கள் குவித்திருந்தது. அஸ்வின் 47 ரன்களுடனும், ஜயந்த் ஜாதவ் 26 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மதிய உணவு இடைவேளை முடிந்த பின் ஆட்டம் தொடங்கியது. மொயீன் அலி வீசிய 121-வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து அஸ்வின் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 58 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். ஜயந்த் யாதவ் 35 ரன்னில் அவுட் ஆக இந்தியா 455 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

கடைசி விக்கெட்டாக உமேஷ் யாதவ் 13 ரன்கள் எடுத்து அவுட்டாக, ஷமி 7 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன், மொயீன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களும், ரஷித் 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

இந்தியா 2-வது நாளான இன்று 6 விக்கெட்டுக்களை இழந்து 138 ரன்கள் எடுத்துள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2016/11/18130517/1051557/INDvENG-India-runs-all-out-in-1st-innings.vpf

Link to comment
Share on other sites

‘ரிவியூ’ வாய்ப்பை சரியாக பயன்படுத்தாத ஜடேஜா டக் அவுட் ஆனார்

விசாகப்பட்டின டெஸ்டில் ‘ரிவியூ’ வாய்ப்பை சரியாக பயன்படுத்தாத ஜடேஜா டக்அவுட் ஆகி வெளியேறினார்.

 
‘ரிவியூ’ வாய்ப்பை சரியாக பயன்படுத்தாத ஜடேஜா டக் அவுட் ஆனார்
 
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மொயீன் அலியின் சிறப்பான பந்து வீச்சால் இந்தியாவின் விக்கெட் மளமளவென சரிந்தது. விராட் கோலி 167 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த சகா, மொயீன் அலி வீசிய 105-வது ஓவரின் 2-வது பந்தில் 3 ரன்கள் எடுத்த நிலையில் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட் ஆனார். மைதான நடுவர் தர்மசேனா சகாவிற்கு அவுட் கொடுக்க, சகா ‘ரிவியூ’ வாய்ப்பை பயன்படுத்தினார்.

ஆனால் பந்து ஸ்டம்பை தாக்கியதால் 3-வது நடுவர் அவுட் என அறிவித்தார். அடுத்த 2-வது பந்தில், அதாவது 105-வது ஓவரின் 4-வது பந்தில் ஜடேஜா மொயீன் அலி பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆகி அவுட் ஆனார். ஆஃப் ஸ்டம்பிற்கு நேராக பிட்ச் ஆகிய பந்து இடது புறமாக திரும்பி ஜடேஜாவின் பேடை தாக்கியது.

தர்மசேனா அவுட் கொடுத்து விட்டார். எதிர்முனையில் நின்ற அஸ்வினுடன் ஆலோசனை செய்த ஜடேஜா ‘ரிவியூ’ கேட்க விருப்பம் இல்லாமல் சென்றுவிட்டார். பின்னர் ஹாக்-ஐ மூலம் ரீபிளே செய்யப்படும்போது பந்து ஸ்டம்பை தாக்காமல் இடது புறமாக செல்வது தெளிவாக தெரிய வந்தது.

இதனால் ‘ரிவியூ’ வாய்ப்பை பயன்படுத்தாமல் டக்அவுட் ஆகி வெளியேறினார்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/11/18111420/1051512/jadeja-do-not-use-review-option-so-he-got-duck-out.vpf

2-வது டெஸ்ட்: 5 விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து திணறல்

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்து வருகிறது.

 
2-வது டெஸ்ட்: 5 விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து திணறல்
 
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி 455 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக விராட் கோலி 167 ரன்கள் அடித்தார். புஜாரா 119 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து அணி சார்பில் மொயீன் அலி, ஆண்டர்சன் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆட்டத்தின் 3-வது ஓவரை ஷமி வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் இங்கிலாந்து அணியின் கேப்டன் குக் க்ளீன் போல்டானார். அடுத்து ஹமீத் உடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. அணியின் ஸ்கோர் 51 ரன்னாக இருக்கும்போது ஹமீத் ரன்அவுட் ஆனார். அதன்பின் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுக்கள் சரிய ஆரம்பித்தது. டக்வெட் (5), மொயீன் அலி (1) மற்றும் ஜோ ரூட் (53) ரன்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதனால் இங்கிலாந்து அணி 80 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்தது. 6-வது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் உடன் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடித்து விளையாடியது. ஸ்கோரை உயர்த்தவில்லை என்றாலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

இதனால் இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்ட முடிவில் 49 ஓவர்கள் விளையாடி 103 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்து வருகிறது. பென் ஸ்டோக்ஸ் 12 ரன்னுடனும், பேர்ஸ்டோவ் 12 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நாளைய ஆட்டம் தொடங்கியதும் இந்த விக்கெட்டை விரைவில் பிரித்து விட்டால் இங்கிலாந்து அணியை 200 ரன்களுக்குள் சுருட்டி விடலாம்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/11/18164041/1051631/2nd-Test-cricket-england-losses-5-wickets.vpf

Link to comment
Share on other sites

விக்கட்டை பதம் பார்த்த சமியின் பந்துவீச்சு (காணளி இணைப்பு)

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் மொஹமட் சமி இங்கிலாந்து அணித்தலைவர் அலஸ்டியா குக்கிற்கு வீசிய பந்து விக்கட்டை பதம் பார்த்தது.

 

 குறித்த பந்து விக்கட்டை பதம் பார்த்ததுடன், விக்கட் இரண்டாக உடைந்து வீசப்பட்டு வீழ்ந்தது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான  இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 455 ஒட்டங்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள இங்கிலாந்து அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 103 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை இழந்து தடுமாறி வருகின்றது.

 
 

http://www.virakesari.lk/article/13628

முகமது ஷமி பந்தில் ஸ்டம்புகள் தெறிக்க அவுட்டான குக்! - வீடியோ

 

ஷமி

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியில் இன்று முகமது  ஷமி வீசிய  பந்தில் ஸ்டம்புகள் உடைந்தன. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்க்ஸை இன்று 317/4 என்ற நிலையில் இருந்து தொடங்கியது. விராட் கோஹ்லி  151 ரன்னுடனும், அஷ்வின் ஒரு ரன்னுடனும் ஆட்டத்தை தொடங்கினர். மிகுந்த மன உறுதியோடு ஆண்டர்சன் மற்றும் பிராட் பந்துகளை எதிர்கொண்டார் விராட் கோஹ்லி. பிட்ச் நன்றாக காய்ந்து, உடைய ஆரம்பித்திருந்தால், இன்று காலை எட்டாவது ஓவரையே மொயின் அலியை அழைத்து வீசச் சொன்னார் இங்கிலாந்து அணியின் கேப்டன் குக்.

ஷமி

மொயி அலி வந்தவுடனேயே கோஹ்லியை பெவிலியன் அனுப்பினார்.  இரட்டைச் சதம் எடுக்க முடியாத விரக்தியும், நீண்ட நேரம் களத்தில் நிற்க முடியவில்லையே என்ற வருத்தத்தோடும் 167 ரன்களில் வெளியேறினார் கோஹ்லி. இரண்டு ஓவர்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் மெயின் அலி பந்துவீச்சில் இந்தியா இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. நானூறு ரன்களை கூட எடுக்க முடியாமல் போய்விடுமோ என்ற ரசிகர்கள் பதற்றமாக, பதற்றமே இன்றி அருமையாக விளையாடினார் அஷ்வின். அறிமுக வீரர் ஜெயந்த் யாதவ் பொறுமையாக விளையாடி அஷ்வினுக்கு கை கொடுக்க, சீரான இடைவெளிகளில் பவுண்டரிகள் விளாசினார் அஷ்வின். 86 வது பந்தில் அரை சதம் கடந்தார் அஷ்வின். இது அவருக்கு எட்டாவது அரை சதம் ஆகும். 58 ரன்னில் அஷ்வின் அவுட்டாக, அறிமுக போட்டியிலேயே 84 பந்தில் 35 ரன்கள் எடுத்தார்  பந்துவீச்சாளர் ஜெயந்த்  யாதவ். உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் கடைசி நேரத்தில் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை விளாசிவிட்டு அவுட்டாக, இந்திய அணியின் இன்னிங்ஸ் 455  ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. முதல்  ஓவரை மெய்டனாக வீசினார் ஷமி. மூன்றாவது ஓவரில் மூன்றாவது பந்தை அருமையான லைனில் வீசினார் ஷமி. குக்கின் பேட்டுக்கும், பேடுக்கும்  இடைப்பட்ட இடைவெளியில் புகுந்து பந்து ஸ்டாம்புகளை தாக்கியது.

முகமது ஷமியின் இந்த அபார பந்தில் ஆஃப் ஸ்டம்பு  உடைந்துச் சிதற அவுட்டாகி வெளியேறினார் குக். இதையடுத்தது இந்த ஜிஃப் இணையத்தில்  வைரலானது .

Shami18nov16.gif

குக்கு பிறகு வந்த இங்கிலாந்து வீரர்கள் எல்லாரும் வரிசையாக பெவிலியன் திரும்ப, ரூட் மட்டும் அசராமல் அரை சதம் எடுத்து அஷ்வின் பந்தில் அவுட்டானார். பிட்ச் உடைந்திருப்பதை பயன்படுத்திக் கொண்ட அஷ்வினும், ஜெயந்த் யாதவும் அருமையாக பந்து வீசினார்கள். இராண்டாவது நாள் முடிவில் 103/5  என்ற நிலையில் இருக்கிறது இங்கிலாந்து. அஷ்வின் இரண்டு விக்கெட் வீழ்த்த, ஜெயந்த் யாதவ், ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியிருக்கின்றனர். இங்கிலாந்து இதுவரை 352 ரன்கள் பின் தங்கியிருக்கிறது, நாளைய தினம்  இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஒரு அசாதாரணமான இன்னிங்ஸ் விளையாடா விட்டால் இன்னிங்ஸ் தோல்வியை ஆட்டம் நகர வாய்ப்பு இருக்கிறது. இரண்டாவது நாளிலேயே பிட்ச் நான்காவது நாள் போன்று காட்சியளிக்கிறது, இதனால் நாளைய தினம் அஷ்வின், ஜெயந்த் யாதவ் இணை விக்கெட்டுகளை அள்ளும் என எதிர்பார்க்கலாம்.

http://www.vikatan.com/news/sports/72818-mohammed-shami-takes-the-wicket-of-cook-in-a-terrifc-way.art

Link to comment
Share on other sites

2-வது டெஸ்ட்: டோனி ஸ்டைலில் ரன் அவுட் செய்து அசத்திய சகா

 

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் டெஸ்டில் இந்திய விக்கெட் கீப்பர் சகா டோனி ஸ்டைலில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஹமீத்தை ரன் அவுட்டாக்கி அசத்தினார்.

 
 
2-வது டெஸ்ட்: டோனி ஸ்டைலில் ரன் அவுட் செய்து அசத்திய சகா
 
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனும், இந்தியாவின் நட்சத்திர கேப்டனும் ஆன டோனி விக்கெட் கீப்பராக செயல்படுவதில் வல்லவர். ஸ்டம்பிங் மற்றும் ரன்அவுட் ஆகியவற்றை கண்ணிமைக்கும் நொடியில் செய்து முடிப்பவர்.

பொதுவாக டோனி பீல்டரிடம் இருந்து வரும் பந்தை ஸ்டம்பிற்கு பின்னால் இருந்து பிடிப்பதில்லை. ஸ்டம்பிற்கு முன்னால் சென்றுதான் பந்தை பிடிப்பார். சில நேரங்களில் ஸ்டம்பிற்கு முன் நின்று பந்தை பிடித்து அப்படியே பின்னோக்கி சரியாக ஸ்டம்பை நோக்கி எறிவார்.

இதில் பெரும்பாலான பந்துகள் ஸ்டம்பை தாக்குவது வழக்கம். இப்படி பல எதிரணி பேட்ஸ்மேன்களை ரன்அவுட் ஆக்கி டோனி அசத்தியுள்ளார். அதேபோல்தான் இன்று இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சகா அபாரமான வகையில் ஹமீத்தை ரன்அவுட் செய்துள்ளார்.

சகாவின் ரன்அவுட்டை டோனியுடன் ஒப்பிட்டு வருகின்றனர். ஆட்டத்தின் 21-வது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை டீப் மிட்விக்கெட் திசையில் ஜோ ரூட் அடித்தார். அப்போது ஒரு ரன் எடுத்த பின்னர் ஜோ ரூட் இரண்டு ரன்கள் எடுப்பதற்கு முயற்சி செய்தார். ஜோ ரூட் இரண்டு ரன்கள் எடுப்பதற்கு விரும்பியதால் ஹமீத் வேகமாக ஓட முயன்றார்.

அப்போது ஜயந்த் யாதவ் பந்தை பிடித்து வேகமாக வீசினார். பந்து விக்கெட் கீப்பர் சகாவை நோக்கி வந்தது. ஆனால், பந்தை ஸ்டம்பிற்கு சற்று முன் விழுவதுபோல் வந்தது. உடனே சகா ஸ்டம்பிற்கு முன்னால் சென்று பந்தை பிடித்தார். பந்தை பிடித்த வேகத்தில் பின்நோக்கி ஸ்டம்பை நோக்கி எறிந்தார்.

பந்து சரியாக ஸ்டம்பை தாக்கியதால் ஹமீத் ரன்அவுட் ஆனார். டோனியைபோல் அபாரமான வகையில் ரன்அவுட் ஆக்கி ஜோ ரூட் - ஹமீத் ஜோடியை சகா பிரித்தார்.
 
 

http://www.maalaimalar.com/News/Sports/2016/11/18154001/1051605/Haseeb-hameed-Saha--back-flips-it-Dhoni-style.vpf

Link to comment
Share on other sites

ஸ்டம்பிங் வாய்ப்பை நழுவ விட்ட சஹா: ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ அரைசதம்

 

பேர்ஸ்டோவை பவுல்டு செய்த உமேஷ் யாதவ்.| படம்: ராய்ட்டர்ஸ்.
பேர்ஸ்டோவை பவுல்டு செய்த உமேஷ் யாதவ்.| படம்: ராய்ட்டர்ஸ்.
 

விசாகப்பட்டணத்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்துள்ளது.

அதிர்ஷ்டக்கார பென் ஸ்டோக்ஸ் 55 ரன்களுடனும், அடில் ரஷீத் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். உணவு இடைவேளைக்கு சற்று முன்னர் அருமையாக ஆடி அரைசதம் எடுத்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ உமேஷ் யாதவ் பந்தை லெக் திசையில் ஆட முனைந்து தோல்வி அடைந்தார், பந்து பேடில் பட்டு ஸ்டம்பைத் தாக்கியது.

ஸ்டோக்ஸும், பேர்ஸ்டோவும் இணைந்து மிக முக்கியமாக 6-வது விக்கெட்டுக்காக 110 ரன்களைச் சேர்த்தனர்.

பென் ஸ்டோக்ஸ் இன்று 21 ரன்களில் இருந்த போது அஸ்வினின் அபாரமான பந்தில் பீட்டன் ஆனார் ஸ்டோக்ஸ் அவரது பின்கால் கிரீசிற்குள் இல்லை, பந்தை சேகரிப்பதில் தடுமாறிய சஹா ஸ்டம்பிங் வாய்ப்பை கோட்டை விட்டார். கடந்த டெஸ்ட் போட்டியில் அடுத்தடுத்து 2 கேட்ச்களை ஸ்டோக்ஸிற்கு கேட்ச் விட்டு அவர் சதம் எடுத்தது நினைவு கூரத்தக்கது.

இன்று காலை முதல் பந்தே அஸ்வின், பேர்ஸ்டோவுக்கு ரிவியூ செய்தார் ஆனால் அது விரயமானதோடு இந்தியாவின் ரிவியூ வாய்ப்பையும் காலி செய்தது.

பேர்ஸ்டோ ஸ்வீப் செய்ய முயன்றார். பந்து அவரது கிளவ்வில் பட்டதை கவனிக்காத அஸ்வின் நடுவர் நாட் அவுட்டுக்கு எதிராக ரிவியூ செய்து தோல்வியடைந்தார். இந்திய அணியின் ரிவியூ தீர்ந்த நிலையில் இங்கிலாந்து இன்னமும் 264 ரன்கள் பின் தங்கியுள்ளது. பாலோ ஆனைத் தவிர்க்க இங்கிலாந்து இன்னும் 65 ரன்கள் எடுக்க வேண்டும், அதற்குள் சுருட்ட வாய்ப்பு உள்ளது, பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்தினால் அந்த வாய்ப்பு கிடைக்கலாம்.

http://tamil.thehindu.com/sports/ஸ்டம்பிங்-வாய்ப்பை-நழுவ-விட்ட-சஹா-ஸ்டோக்ஸ்-பேர்ஸ்டோ-அரைசதம்/article9364968.ece?homepage=true

Link to comment
Share on other sites

இங்கிலாந்தின் அதிர்ஷ்டமும்.... இந்தியாவின் துரதிர்ஷ்டமும்...

 

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் இங்கிலாந்தின் அதிர்ஷ்டத்தையும், இந்தியாவின் துரதிர்ஷ்டத்தையும் பார்க்கலாம்.

 
 
 
இங்கிலாந்தின் அதிர்ஷ்டமும்.... இந்தியாவின் துரதிர்ஷ்டமும்...
ஜடேஜா வெளியேறுவதையும், ரீப்ளேயில் பந்து ஸ்டம்பை விட்டு விலகி செல்வதையும் படத்தில் காணலாம்.
இந்திய விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவுக்கு (3 ரன்), சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி வீசிய பந்து காலுறையில் (பேடு) பட்டதும் சில வினாடி யோசனைக்கு பிறகு நடுவர் தர்மசேனா விரலை உயர்த்தினார். இதையடுத்து டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின்படி சஹா முறையிட்டார். ரீப்ளேவுக்கு பிறகு அது கச்சிதமான எல்.பி.டபிள்யூ. என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அடுத்த 2-வது பந்தில் ரவீந்திர ஜடேஜாவுக்கும் இதே போன்று பந்து காலுறையில் தாக்கியதும் நடுவர் எல்.பி.டபிள்யூ. வழங்கினார். உடனே ஜடேஜா, அப்பீல் செய்யலாமா என்று எதிர்முனையில் நின்ற அஸ்வினிடம் கேட்டார். அதற்கு அஸ்வின், சரியான எல்.பி.டபிள்யூ. போன்று தெரிவதாக கூறியதால் ஜடேஜா அத்துடன் வெளியேறினார். ஆனால் ரீப்ளேயில் பந்து லெக்-ஸ்டம்பை விட்டு விலகுவது தெளிவாக கண்டறியப்பட்டது. அப்போது இந்தியாவுக்கு ஒரு டி.ஆர்.எஸ். வாய்ப்பும் பாக்கி இருந்தது. அப்பீல் செய்திருந்தால் ஜடேஜா, ‘நாட்-அவுட்’ ஆகியிருப்பார்.

இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து ஊசலாடிக்கொண்டிருந்த சமயத்தில், பென் ஸ்டோக்சும் வந்த வேகத்தில் நடையை கட்டி இருக்க வேண்டியது. அவர் 3 ரன்னில் ஆடிக்கொண்டிருந்த போது சுழற்பந்து வீச்சாளர் ஜெயந்த் யாதவ் வீசிய பந்து ஆப்-ஸ்டம்பு மீது இருந்த பெய்ல்ஸ் மீது பட்டது. ஆனால் பெய்ல்ஸ் கீழே விழவில்லை. இந்த அதிர்ஷ்டத்தால் தொடர்ந்து பேட் செய்யும் வாய்ப்பை பெற்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/11/19081137/1051708/England-team-luck--indian-team-bad-luck.vpf

Link to comment
Share on other sites

255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து! 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார் அஸ்வின்!

 

 
ashwin_eng111xx

 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 102.5 ஓவர்களில் 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் புஜாரா, விராட் கோலி ஆகியோர் சதமடித்தனர். இதனால் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 129.4 ஓவர்களில் 455 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், மொயீன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 49 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. பென் ஸ்டோக்ஸ் 12, ஜானி பேர்ஸ்டோவ் 12 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு இங்கிலாந்து இன்னும் 352 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. அதேநேரத்தில் பாலோ-ஆனைத் தவிர்க்க 153 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் கைவசம் 5 விக்கெட்டுகள் மட்டுமே இருந்தன. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறிவிட்டதால் இங்கிலாந்து அணி பாலோ-ஆன் ஆவதற்கு அதிக வாய்ப்புள்ள நிலையில் 3-ம் நாள் ஆட்டம் தொடர்ந்தது.

ஸ்டோக்ஸும் பேர்ஸ்டோவும் இந்திய பந்துவீச்சை மிகவும் கவனமாகக் கையாண்டர்கள். இடையே சில வாய்ப்புகளை இந்திய அணி தவறவிட்டது. தேவையான நேரத்தில் பவுண்டரிகள் அடிக்கவும் இங்கிலாந்து வீரர்கள் தவறவில்லை. உணவு இடைவேளை நெருங்கும் சமயத்தில் பேர்ஸ்டோவை 53 ரன்களில் கிளீன் போல்ட் செய்தார் உமேஷ் யாதவ்.

உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி, 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. ஸ்டோக்ஸ் 55, ரஷித் 1 ரன்னுடன் களத்தில் இருந்தார்கள். 

இதன்பிறகு ஆடுகளத்தின் தன்மை மாற, இந்திய பந்துவீச்சு ஆதிக்கம் செலுத்தியது. உணவு இடைவேளைக்குப் பிறகு 70 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட்டப் பறிகொடுத்தார் ஸ்டோக்ஸ். நீண்டநேரம் பந்துவீசி விக்கெட்டுகள் எடுக்காமல் இருந்த ஜடேஜா, அன்சாரியின் விக்கெட்டை வீழ்த்தினார். அன்சாரி 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதன்பிறகு 103-வது ஓவரில் பிராட் (13 ரன்கள்) மற்றும் ஆண்டர்சன் (டக் அவுட்) ஆகியோரின் விக்கெட்டுகளை எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்தினார் அஸ்வின். இதன்மூலம் இந்த இன்னிங்ஸில் அவருக்கு 5 விக்கெட்டுகள் கிடைத்தன. 

இங்கிலாந்து போலோ ஆன் ஆகியும் 5-ம் நாளில் விக்கெட் பந்துவீச்சுக்கு மேலும் சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வலுவான நிலையில் இந்தியா

 

இந்தியா –இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. இதில் இந்திய அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 98 ரன்கள் சேர்த்துள்ளது. இங்கிலாந்து அணியை விட 298 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

 
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வலுவான நிலையில் இந்தியா
 
விசாகப்பட்டினம்

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி தொடக்க நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 2–வது நாளான நேற்று இந்திய வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். இந்திய அணி முதல் இன்னிங்சில் 455 ரன்களில்  ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி  2–வது நாள் ஆட்ட நேர இறுதியில்  49 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்து இருந்தது.

இன்றைய நாள் ஆட்டம் துவங்கியதும் ஸ்டோக்ஸ் மற்றும் பெர்ஸ்டோவ் ஆகியோர் அரை சதம் அடித்தனர். இதனால், இங்கிலாந்து அணி பாலோ ஆன் ஆகாமல் தப்பித்தது. அஸ்வின் சுழலில் தொடர்ந்து தடுமாறிய இங்கிலாந்து அணி 255 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதையடுத்து 200 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இந்திய அணியில் முரளி விஜய் ஏமாற்றினார். ராகுல் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். புஜாரா ஒரு ரன்னில் வெளியேற 40 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

மறுமுனையில் கேப்டன் விராட் கோலி சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 3 -ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு  98 ரன்கள் சேர்த்துள்ளது. விராட் கோலி 56 ரன்களிலும் ரஹானே 22 ரன்களிலும் களத்தில் உள்ளனர். இந்திய அணி இங்கிலாந்தை விட 298 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதனால், இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையை நோக்கி செல்கிறது.

http://www.maalaimalar.com/News/TopNews

Link to comment
Share on other sites

#INDvsENG - இங்கிலாந்துக்கு 405 ரன்கள் டார்கெட்

 

400_12469.jpg

விசாகப்பட்டினத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 204 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியுள்ளது. காயத்துடன் விளையாடினாலும் ஸ்டூயர்ட் ப்ராட் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். ரஷீத்தும் நான்கு விக்கெட்டுகள் எடுத்தார். 

அடுத்த ஒன்றரை நாட்களில் இங்கிலாந்து அணி 405 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும். முதல் டெஸ்ட் டிரா ஆனது குறிப்பிடத்தக்கது. 

http://www.vikatan.com/news/sports/72941-indvseng---england-needs-405-runs-to-win-the-second-test-in-vizag.art

Link to comment
Share on other sites

நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 87/2

 

23135d_17542.jpg

இந்தியா-இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 204 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு 405 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்துள்ளது. குக் 54, ஹமீது 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.  ரூட் 5 ரன்னுடன் களத்தில் உள்ளார். ஜடேஜா, அஸ்வின் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர். நாளை ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில்  இங்கிலாந்து அணி வெற்றி பெற 318 ரன்கள் எடுக்க வேண்டும். 

http://www.vikatan.com/news/sports/72958-england-872-stumps-on-day-4-vs-india.art

Link to comment
Share on other sites

204 ரன்களில் ஆட்டமிழந்தது இந்தியா: இங்கிலாந்துக்கு 405 ரன்கள் இலக்கு

 

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்திய அணி 204 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், 405 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து விளையாடி வருகிறது.

 
 
204 ரன்களில் ஆட்டமிழந்தது இந்தியா: இங்கிலாந்துக்கு 405 ரன்கள் இலக்கு
 
விசாகப்பட்டினம்:

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தியா முதல் இன்னிங்சில் 455 ரன் குவித்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 255 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. பென்ஸ்டோக்ஸ் 70 ரன்னும், ஜோரூட், பேர்ஸ் டோவ் தலா 53 ரன்னும் எடுத்தனர். அஸ்வின் 67 ரன் கொடுத்து 5 விக்கெட்டை கைப்பற்றினார்.

200 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 98 ரன் எடுத்து இருந்தது. வீராட் கோலி 56 ரன்னிலும், ரகானே 22 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 298 ரன்கள் முன்னிலை, கைவசம் 7 விக்கெட் என்ற நிலையில் இந்திய அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடியது.

இந்திய அணி 34.2 ஓவர்களில் 100 ரன்னை தொட்டது. சிறிது நேரத்தில் இந்த ஜோடி பிரிந்தது. ரகானே மேலும் 4 ரன் எடுத்த நிலையில் பிராட் பந்தில் ஆட்டம் இழந்தார். அவர் 26 ரன்கள் எடுத்தார். அப்போது ஸ்கோர் 117 ரன்னாக இருந்தது. 4-வது விக்கெட் ஜோடி 77 ரன் எடுத்தது.

அடுத்து அஸ்வின் களம் வந்தார். அவர் 7 ரன்கள் எடுத்த நிலையில் பிராட் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 127 ஆக இருந்தது. அடுத்து சிறிது நேரத்தில் விர்த்திமான் சகாவும் ஆட்டம் இழந்தார். அவர் 2 ரன்களே எடுத்தார். அவரது விக்கெட்டை ஆதில் ரசீத் கைப்பற்றினார்.

ஒருமுனையில் விக்கெட் சரிந்தாலும், மறுமுனையில் இருந்த கேப்டன் வீராட் கோலி தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார். சதத்தை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 89 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்னாக இருந்தது.

பின்னர் இந்திய அணி 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜெயந்த் யாதவ் ஆட்டமிழக்காமல் 27 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

இதனால் இங்கிலாந்து அணிக்கு 405 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இங்கிலாந்து அணியின் ஹசீப் ஹமீது, அல்ஸ்டார் குக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டனர். 37.1 ஓவரில் இங்கிலாந்து அணி 50 ரன்கள் எடுத்தது.

50.2 ஓவரில் அஸ்வின் பந்தில் ஹமீது எல்.பி.டபிஸ்யூ முறையில் அவுட் ஆனார். நிதானமாக விளையாடி அரைசதம் அடித்த குக் 59.2 ஓவரில் ஜடேஜா பந்துவீச்சில் அவுட் ஆனார். அத்துடன் நான்காவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இங்கிலாந்து அணி 2 விக்கெட் 87 ரன்கள் எடுத்து இருந்தது. இன்னும் 8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில், இங்கிலாந்து அணி வெற்றி பெற 318 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2016/11/20170106/1051914/India-set-imposing-target-of-405-for-england.vpf

Link to comment
Share on other sites

இந்தியாவிடம் தோல்வியை தவிர்க்க இங்கிலாந்து அணி போராட்டம்

 

 
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அலாஸ்டர் குக்கின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரவீந்திர ஜடேஜாவும், விராட் கோலியும். படம்: கே.ஆர்.தீபக்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அலாஸ்டர் குக்கின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரவீந்திர ஜடேஜாவும், விராட் கோலியும். படம்: கே.ஆர்.தீபக்
 

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி நிதானமாக ஆடி தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது. வெற்றிபெற 405 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன்களை எடுத்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டிணத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 455 ரன்களையும், இங்கிலாந்து அணி 255 ரன்களையும் எடுத்தது. இதைத்தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 3-ம் நாள் ஆட்டத்தின் இறுதியில் 3 விக்கெட் இழப்புக்கு 98 ரன்களை எடுத்திருந்தது. விராட் கோலி 56 ரன்களுடனும், ரஹானே 22 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர்.

நேற்று காலையில் ஆட்டத்தைத் தொடர்ந்த இந்த ஜோடி விரைவாக ரன்களைச் சேர்த்து இங்கிலாந்துக்கு கடினமான இலக்கை நிர்ணயிக்கும் எண்ணத்துடன் பேட்டிங்கை தொடங்கியது. ஆனால் அவர்களை விரைவாக ரன் எடுக்க விடாமல் கட்டுப்படுத்திய இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் வேகமாக விக்கெட் களையும் எடுக்கத் தொடங்கினர். ரஹானே (26 ரன்கள்), அஸ்வின் (7 ரன்கள்), சாஹா (2 ரன்கள்), விராட் கோலி (81 ரன்கள்) ஜடேஜா (14 ரன்கள்), உமேஷ் யாதவ் (0) ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழக்க இந்திய அணி 162 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்தது.

முன்னணி பேட்ஸ்மேன்கள் அவுட் ஆன நிலையில் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெயந்த் யாதவும், முகமது ஷமியும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு போக்குக் காட்டினர். அதிலும் முகமது ஷமி 2 சிக்சர்களை பறக்கவிட்டு இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். கடைசி விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை மொயின் அலி பிரித்தார். 19 ரன்களை எடுத்த முகமது ஷமி, மொயின் அலியின் பந்துவீச்சில் பேர்ஸ்டாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 204 ரன்களுக்கு 2-வது இன்னிங்சை இழந்தது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராடு, அடில் ரஷித் ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர்.

நிதான ஆட்டம்

வெற்றிபெற 405 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் ஆடவந்த இங்கிலாந்து அணி கவனமாகவும், நிதானமாகவும் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அலாஸ்டர் குக்கும், ஹமீதும் பசை போட்டு ஒட்டியதைப் போல கிரீசில் நின்று பந்துகளைத் தடுத்து ஆடினர். வெகு அபூர்வமாக ரன்களைச் சேர்த்த அவர்கள் விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொள்வ திலேயே முழு கவனத்தையும் செலுத்தினர்.

நத்தை வேகத்தில் ஆடி 50 ஓவர்களில் 75 ரன்களைச் சேர்த்த இந்த ஜோடி 51-வது ஓவரில் பிரிந்தது. அஸ்வின் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஹமீத் அவுட் ஆனார். 144 பந்துகளை எதிர்கொண்ட ஹமீத் 25 ரன்களை மட்டுமே சேர்த்தபோதிலும், இங்கிலாந்தின் வீழ்ச்சியைத் தடுப்பதில் நேற்று அவரது பங்கு சிறப்பாக இருந்தது.

ஹமீத் அவுட் ஆனதை அடுத்து ரூட்டுடன் சேர்ந்து கேப்டன் குக் தடுப்பு ஆட்டத்தைத் தொடர்ந்தார். மிகப் பொறுமையாக ஆடி 188 பந்துகளில் 54 ரன்களைச் சேர்த்த குக், நேற்றைய கடைசி ஓவரில் ஜடேஜாவின் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி ஆட்டம் இழந்தார். 4-ம் நாள் ஆட்டத்தின் இறுதியில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணி வெற்றிபெற இன்னும் 318 ரன்களை எடுக்கவேண்டும். ஆனால் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெறுவதை விட தோல்வியைத் தவிர்ப்பதிலேயே அதிக கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றி பெற முயற்சிப்போம்

நேற்றைய ஆட்டம் குறித்து நிருபர்களிடம் கூறிய இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராடு, “எங்கள் தொடக்க ஆட்டக்காரர்கள் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப் படுத்தினர். தங்கள் முழுத் திறமையையும் பயன்படுத்தி இந்திய பந்துவீச்சாளர்களை விக்கெட் எடுப்பதில் இருந்து தடுத்து நிறுத்தினர். நாங்கள் இன்னும் இந்த டெஸ்ட் போட்டியை இழக்கவில்லை. இதில் வெற்றிபெற முயற்சிப்போம்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/இந்தியாவிடம்-தோல்வியை-தவிர்க்க-இங்கிலாந்து-அணி-போராட்டம்/article9369858.ece?homepage=true

Link to comment
Share on other sites

இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 246 ஓட்டங்களால் வெற்றி
2016-11-21 12:47:33

இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 246 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.


விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 455 ஓட்டங்களையும் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில்  255 ஓட்டங்களையும் பெற்றது.

20780india-england.jpg

 


போட்டியின் 3 ஆவது நாளான நேற்றுமுன்தினம் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 98 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.


 நான்காம் நாளான நேற்று ரஹானே 26, கோஹ்லி 81 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.    இவர்கள் இருவரும் 4வது விக்கெட்டுக்கு 77 ஓட்டங்களை குவித்தனர். பின்வரிசை வீரர் ஜெயந்த் யாதவ் 27 ஓட்டங்களைப் பெற்றார்.  

 

இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில்ஸ்டூவர்ட் பிராட், அதில் ரஷீத் ஆகியோர் தலா 4 விக்கெட்களையும், ஜேம்ஸ் ஆண்டர்சன், மொயீன் அலி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.


இப்போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கு  மேலும் 405 ஓட்டங்கள் தேவையான நிலையில் அவ்வணி நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. நேற்றைய ஆட்டமுடிவின்போது அவ்வணி  2 விக்கெட் இழப்புக்கு 87 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

 

இப்போட்டியின் இறுதி இன்று இங்கிலாந்து அணி 158 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.

 

ஜயந்த் யாதவ் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும்  அஸ்வின் 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்ககளையும் வீழ்த்தினர். 

 

இப்போட்டியின் ஆட்டநாயகனாக விராத் கோஹ்லி தெரிவானார்.  5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்திய அணி 2-0 விகிதத்தில் முன்னிலையில் உள்ளது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=20781#sthash.4LdFwNue.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.