Jump to content

பாஸ்வேர்டு


Recommended Posts

பாஸ்வேர்டு

சிறுகதை: தமிழ்மகன், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு

 

ட்டநடு சாலையின் மஞ்சள் கோட்டில் அவனும் அவளும் நின்றிருந்தனர். அவர்களுக்கு முன்னும் பின்னும் கொக்கியில் மாட்டிய ரயில்பெட்டிகளைப்போல வாகனங்கள் தொடர்ச்சியாகப் போய்க்கொண்டிருந்தன. சாலையைக் கடக்க வழி கிடைக்காமல், ஐந்து நிமிடங்களுக்கு மேலாக நின்றிருந்தனர். அது சாலையைக் கடப்பதற்கான தடம் அல்ல. வாகனங்களுக்கு இடையே அரிதாக இடைவெளி விழும்போது, தற்கொலை முயற்சிபோல பாய்ந்து சென்று சாலையைக் கடந்துவிட வேண்டும். ஆனால், இடையில் வெளியே இல்லாத வாகனச் சுவர்.

சற்று தூரத்தில் சிக்னல் இயந்திரம் இருந்தது. ஆனால், அது வேலைசெய்யவில்லை. போக்கு வரத்து போலீஸாரும் இல்லை. இரண்டு பேருக்காகப் பரிதாபப்பட்டு வாகனங்கள் நிற்பதாகவும் இல்லை. ஒருவரையொருவர் வழித்துணைபோல பார்த்துக் கொண்ட அந்தத் தருணத்தில்தான் அவர்களுக்குள் பார்வை அறிமுகம் நிகழ்ந்தது.

``சிட்டி பேங்க், நாலு மணி வரைக்கும்தானே?’’ என அவள் கேட்டபோதுதான் அவனும் ஒரு புன்னகையோடு தயார் ஆனான். அவளும் புன்னகைத்தாள்.

அவன் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, ``இன்னும் அஞ்சு நிமிஷம்தான் இருக்கு. இன்னைக்கு லாஸ்ட் நாள் வேற...’’ என்றான்.

அந்த வாகனத் திரளில் மனிதர்கள் இருவர் பேசுவதற்கான சூழ்நிலை இயல்பாகவே உருவாகியது.

அவள் உடனடியாக ஒரு காரியம் செய்தாள். அவளுடைய கைப்பையில் இருந்து செல்போனை எடுத்தாள். சில பட்டன்களை வேகமாக அழுத்தினாள். பொறுமையின்றி காத்திருந்தாள். அவள் முகத்தில் புன்னகை மலர்ந்தது. ``ஆன்லைன்லயே கட்டிட்டேன்’’ - செல்போன் குறுஞ்செய்தியைப் பார்த்தபடி, பொதுவாகச் சொன்னாள். ஆனால், அதைக் கேட்பதற்கு அங்கு அவன் ஒருவன் மட்டும்தான் இருந்தான்.

அவள் முடிவெடுத்த வேகம், தொழில்நுட்பத்தை சட்டெனப் பிரயோகித்த திறமை, விழிகளைச் சுழற்றியபடி சொன்ன பாணி... எதனாலோ அவனுக்கு அவளைப் பிடித்துப்போனது. அவள் மஞ்சள் நிறப் புடவை கட்டியிருந்தாள். அதே நிறத்தின் சகோதர வேறுபாடுதான் அவளுடைய நிறம். அவ்வளவு மலர்ச்சியான விழிகள். கேமரா படம் எடுப்பதுபோல் அதன் இமைகள் மெள்ள மூடித் திறந்தன.
சுருள்சுருளான கறுப்பான தலைமுடிகள், வாகன ஓட்டத்துக்கு ஏற்ப காற்றில் அலைபாய்ந்தன. மஞ்சள் நகப்பூச்சு. நீளமான விரல்கள். பத்து விநாடிகளில் மிக அதிகமாகவே அவனால் கவனிக்க முடிந்தது.

``நீங்க எவ்வளவு கட்டணும்?’’

``பன்னிரண்டாயிரம்.’’

``இப்ப கட்டப்போறீங்களா?’’

``செல்போன்ல (‘கட்டத் தெரியாதே’ என்பது பாவனையில்)... இன்னைக்குத்தான் கடைசித் தேதி...’’ என்றபடி பாக்கெட்டைத் தொட்டான்.

``கடைசித் தேதியா... கடைசி நிமிஷம்! சரி, உங்க கிரெடிட் கார்டை எடுங்க’’ - மேஜிக் செய்பவர், திடீரென எதிர்வரிசையில் ஒருவரை அழைத்து `உங்ககிட்ட பத்து ரூபாய் நோட்டு இருந்தா கொடுங்க’ என்பாரே அப்படி... ஆச்சர்யம் நடக்கக் காத்திருக்கும் சந்தர்ப்பம்போல கட்டுப்பட்டு, கிரெடிட் கார்டை எடுத்து நம்பரைக் காட்டினான். சில விநாடிகளில் அவனுடைய தொகையையும் கட்டிவிட்டு, அவளுக்கு வந்த குறுஞ்செய்தியைக் காட்டினாள்.

p90a.jpg

``ஆக்டிவேட்டட்.’’

``பன்னிரண்டாயிரத்தை எடுங்க.’’

எல்லாம் கனவுபோல இருந்தது. அவன் பணத்தை எடுத்துக் கொடுத்தான்.

``இனிமே நாம ரோட்டை கிராஸ் பண்ணவேண்டியது இல்லை’’ - அவளுடைய பேச்சில் சிநேகமும் உரிமையும் இருந்தன.

``திரும்பிப் போகணுமே... கிராஸ் பண்ணித்தான் ஆகணும்’’ - என்னமா மடக்கிட்டோம் என ஓர் அசட்டுப் பூரிப்பு அவனிடம்.

``யா... அஃப்கோர்ஸ். இந்தப் பக்கம் அவ்வளவு டிராஃபிக் இல்லை. நீங்க எங்கே போகணும்?’’ உரிமையாகக் கேட்டாள்.

``இங்கே ஒரு மல்ட்டிமீடியா இன்ஸ்டிட்யூட் நடத்துறேன். ஆனந்த் தியேட்டர் பக்கத்துல.’’

அவர்கள் சாலையைக் கடந்து, ஸ்பென்சர் பக்கத்தில் வந்து நின்றனர்.

``ஆனந்த்னு ஒரு தியேட்டரா... நான் கேள்விப்பட்டதே இல்லையே.’’

``அந்த தியேட்டரை இடிச்சுட்டு காம்ப்ளெக்ஸ் கட்டிட்டாங்க... நீங்க மெட்ராஸுக்குப் புதுசா?’’

``ஆமா... ரெண்டு வருஷம்தான் ஆச்சு. ஸ்பென்சர்ல பொட்டிக் வெச்சிருக்கேன்.’’

விசிட்டிங் கார்டை எடுத்துக் கொடுத்தாள். தன் கார்டைக் கொடுக்கும் சந்தர்ப்பத்துக்காக ராகவேந்திரருக்கு நன்றி சொல்லிக்கொண்டான். அவனுக்கு ரஜினியின் மூலமாக ராகவேந்திரர் அறிமுகம். அதே நேரத்தில் அவளுடைய செல்போன் மெல்லிய ‘டிங்’ ஒலியை எழுப்பியது. எடுத்துப் பார்த்துவிட்டு, ``உங்க அமௌன்ட் டிரான்ஸ்ஃபர் ஆகிருச்சு’’ என்றாள்.

``ஓ... தேங்க்ஸ்.’’

புன்னகையைக் காட்டிவிட்டு, பதில் வழியலை ஏற்றுக்கொண்டு ஸ்பென்சர் கட்டடத்துக்குள் நுழைந்து, கண்ணில் இருந்து மறைந்தாள்; மனதில் இருந்து மறையவில்லை.

அவளுக்கு 30 வயது இருக்கலாம். அவனுக்கு 42. அவனுக்குத் திருமணம் ஆகி ஒரு பையன். மாமனார் கண்காணிப்பில் ஹாஸ்டலில் ப்ளஸ் டூ. அவளுக்கும் கல்யாணம் ஆகியிருக்கக்கூடும். மகனோ, மகளோ இருக்கலாம். இது சரியில்லை. `இந்த வயதில் மனதைப் பறிகொடுப்பது பொருத்தமாகவே இல்லை. வீண் பிரச்னைகளும் மன உளைச்சலும் தான் ஏற்படும்' எனத் தேற்றிக்கொண்டு, அரும்பிய காதலை அப்படியே கிள்ளி எறிய நினைத்தபோது அவளிடம் இருந்து போன் வந்தது.

``நூறு ரூபாய் அதிகமா இருக்கு. ஓ மை காட். உடனே, எனக்கு நீங்க இந்த நம்பருக்கு கால் பண்ணுங்களேன்’’ என அவசர அவசரமாக போனை கட் செய்து விட்டாள். `இப்படி கணக்கு பார்க்கிறாளே!' என்ற சிறிய எரிச்சலுடன்தான் அவளுக்கு போன் செய்தான். என்ன ஆச்சர்யம்... அவளுடைய ரிங் டோனும் `டோன்ட் வொர்ரி பி ஹேப்பி’ என பாப் மார்லேவின் குரல்.

``ஆச்சர்யமா இருக்குல? அதுக்காகத்தான் போன் பண்ணச் சொன்னேன்.''

அவளோடு பழகவும் அவளைப் பிடித்துப்போகவும் காரணங்கள் கூடின. அவர்களுக்குள் வேறு என்னென்ன ஆச்சர்யங்கள் இருக்கக்கூடும்? இருவருக்கும் அண்ணா சாலையிலேயே ஆபீஸ். அப்புறம்... இருவரின் அலைபேசி எண்களும் 88 என முடிந்திருந்தன. எடுத்துச் சொன்னபோது, ``ஓ... சர்ப்ரைஸ்!’’ என்றாள்.

ஏதேதோ காரணங்கள் சொல்லி அவளுடைய ‘துலிப் பொட்டிக்’குக்கு இரண்டு முறை போனான். ஸ்பென்சரில் முதல் முறை ஒரு சட்டை எடுக்க வந்ததாகச் சொன்னான்.
``ஓ... இங்கேதான் உங்க ஷாப்பா?’’ என செயற்கையாகச் சொல்லவேண்டியிருந்தது.

இரண்டாவது முறை டி ஷர்ட். அதன் பிறகு நிறைய முறை சென்றான். காரணங்கள் தேவைப்படவில்லை. அவள், அறிவாலயத்துக்கு எதிரே பெரிய அப்பார்ட்மென்ட் ஒன்றில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தாள். வைத்தது வைத்த இடத்தில் இருக்கும் அழகான வீடு. அவளுக்கு யாருமே இல்லை. சொந்த ஊர் பெங்களூரு. பெயர் ரஞ்சனி. அவளுடைய பெற்றோருக்கு ஒரே மகள். பெற்றோர் ஷீரடிக்கு காரில் பயணம் சென்றபோது விபத்தில் இறந்துபோனதால், பெற்றோரையும் கடவுள் நம்பிக்கையையும் ஒரே நாளில் இழந்துவிட்டதாகச் சொன்னாள். அவளுக்கு அப்போது 12 வயது. மாமாவும் மாமியும் உடன் இருந்தனர். 20-வது வயதில் திருமணம் நடந்தது. 21-வது வயதில் டிவோர்ஸ் மனு கொடுத்து, 24-வது வயதில் விடுதலை. மாமா, மாமிக்கு கொஞ்சம் பணத்தைக் கொடுத்து ஊருக்கு அனுப்பிவைத்தாள். வீட்டை விற்றுவிட்டு மும்பையில் செட்டில் ஆனாள். அங்கே நான்கு வருடங்கள். கார்மென்ட்ஸ் வைத்திருந்தாள். சென்னைக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. இதுதான் அவள் சொன்ன சுருக்கமான வரலாறு. அவளுடைய வாழ்க்கை ஆங்காங்கே நிரப்பப்படாத ரகசியங்களால் மூழ்கியதாக இருந்தது. ஆங்காங்கே சில `ஏன்?'கள் இருந்தன.

அவன் பெயர் குமார். அவன் வாழ்க்கையில் இத்தனை அட்வெஞ்சர்கள் இல்லை. பிறந்தது, படித்தது, வளர்ந்தது, தொழில் தொடங்கியது, நான்கே ஆண்டுகளில் பிரெஸ்ட் கேன்சரில் மனைவியைப் பறிகொடுத்தது எல்லாமே சென்னையில்தான். தன் வாழ்வில் வேறு ஒரு பெண்ணுக்கு இடம் இல்லை என முடிவெடுத்து பத்து ஆண்டுகள் ஓடிவிட்டன. ரஞ்சனி அந்த முடிவை மாற்றி விட்டாள். இருவருக்குமான இழப்புகளே அவர்களின் சிறப்புச் சலுகை ஆகிவிட்டது. குமார் அவ்வப்போது அவளுடைய வீட்டிலேயே தங்கிச் செல்லும் அளவுக்குப் போதுமானதாக அந்தச் சலுகை இருந்தது.
அவள் எல்லாவற்றையும் நீட்டி முழக்கிச் சொல்பவளாக இருக்கிறாள் என குமார் நினைக்கவில்லை. எதையும் கருத்தாகப் பேசுபவளாக அவனுக்குத் தெரிந்தாள்.

`என் ப்ரீபெய்டு கார்டை போஸ்ட் பெய்டா மாத்திட்டேன். கடைக்காரன், `ரேஷன் கார்டு இருக்கா?'னு கேட்டான். `நான் இல்லை'னு சொல்லிட்டேன். `ஆதார் அட்டை இருக்கா?'னு கேட்டான். `அதுவும் இல்லை'னு சொன்னேன். `ஓட்டர் ஐடி இருக்கா?'னு கேட்டான். `அதுவும் இல்லை'னு சொன்னேன். `அப்ப உங்களுக்கு எப்படிக் குடுக்கிறது?'னு கேட்டான். நல்ல வேளையா என்கிட்ட பாஸ்போர்ட் இருந்தது. அது அப்பா, அம்மா இருக்கும்போது வாங்கிவெச்சது. நடுவுல நல்ல பொண்ணா ரெனியூவல் பண்ணியிருந்தேன். ஒருவழியா பாஸ்போர்ட்டை வெச்சு போஸ்ட்பெய்டா மாத்த முடிஞ்சது’ என்பாள். இது ஓர் உதாரணம்.

p90b.jpg

இன்னோர் உதாரணம்... `காலையில் ஹோட்டலுக்குப் போனேன். `தோசை இருக்கா?'னு கேட்டேன். `பொங்கல்தான் இருக்கு'னு சொன்னான். எனக்கு நல்ல பசி. தோசைக்காக ஹோட்டல் ஹோட்டலா அலைய முடியுமா? சரி சாப்புடுவோம்னு முடிவுபண்ணேன். `பொங்கலுக்கு, வடைகறி கிடைக்குமா?'னு கேட்டேன். `சாம்பார், சட்னி'னு சொன்னான். எனக்கு என்னவோ அந்த காம்பினேஷனே பிடிக்காது. `வேண்டாம்'னு சொல்லிட்டு சப்பாத்தி சாப்பிட்டேன்.’

இவள் தரப்பை அவளுடைய வழக்கமான குரலிலும் அவளுடன் உரையாடிய மாற்று ஆட்களின் குரல்களுக்கு சற்றே பேஸ் வாய்ஸிலும் பேசி, அதை நடித்துக்காட்டாத குறையாக விவரிப்பது கொஞ்சம் அதிகம்தான். சுமதி அப்படி பேச மாட்டாள். பல சம்பாஷணை களுக்கு ஒரே எழுத்தில் `ம்’ என முடித்துவிடுவாள்.

ரஞ்சனியிடம் பேச்சுக்கு செவிசாய்க்கும் சுவாரஸ்யம். காலையில் அவள் சப்பாத்தி சாப்பிட்டதைத் தெரிந்துகொள்வதே குமாருக்கு மேலதிகத் தகவல்தான். ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு ஆனது என்ற ஒரு வரித் தகவல்கூட அவனுக்குக் கொஞ்சமும் அவசியம் இல்லாததாக இருந்தது. ஆனாலும் ரசிக்க முடிந்தது. அவள் பேசப் பேச அவளுடைய தனிமைதான் அத்தகைய நீளமான உரையாடல்களுக்குக் காரணமாக இருக்க வேண்டும் என அவன் வருத்தப்பட்டான். குழந்தையின் விவரிப்புகள்போல அதை அவன் ரசித்தான். யாரும் இல்லாத அவள் இத்தனை நாட்களாக யாரிடம் இவ்வளவு நேரம் விவரித்திருப்பாள் என பரிதாபமும் பாசமும் அதிகரித்தன. அவள் நிறையப் பேசினாளே ஒழிய, அவளுடைய சில பகுதிகளைப் பகிர்ந்துகொள்வதில் மிகுந்த கவனமாக இருந்தாள்.

ஆனால், இன்னோர் ஆபத்து மெள்ள வளர்ந்தது. அவளும் அவனிடமும் அதே போன்ற விரிவான பேச்சை எதிர்பார்த்தாள்.

``ஏன் சொன்ன நேரத்துக்கு வரலை?'’ எனக் கோபப்பட்டாள்.

``வழியில் ஒரு ஆக்சிடென்ட்.'’

``அடிபட்ருச்சா?’' - பதறிப்போய் கேட்டாள்.

``ஆக்சிடென்ட் எனக்கு இல்லை. வழியில் வேற ஒருத்தருக்கு.’

``சரியா சொன்னாத்தானே... காரா?'’

``இல்லை, பைக் - ஆட்டோ.’'

``அடிபட்ருச்சா?'’

``அடிபடலைன்னு சொன்னேனே?'’

``உங்களுக்கு இல்லை. பைக்ல வந்தவருக்கு.'’

``எதுக்கு அவ்ளோ டீடெய்ல்... நீ போய் மருந்து போடப்போறியா?’'

``ப்ச்...’'
``ஸாரி... ஸாரி. சின்ன சிராய்ப்புதான். பெரிய காயம் எதுவும் இல்லை.'’

``அதுக்கும் லேட்டா வந்ததுக்கும் என்ன சம்பந்தம்?'’

``ரெண்டு பேரும் வண்டியைக் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்திட்டு சண்டை போட்டுக்கிட்டானுங்க. அதனால் டிராஃபிக் ஜாம்.'’

அவனுக்கு, பதில் சொல்லும் சுவாரஸ்யம் இல்லை. ஆனால், சுவாரஸ்யமாகக் கேள்வி கேட்டபடி இருந்தாள். `கிளம்பிப்போய் அவங்களோட பிரச்னையைத் தீர்த்துட்டு வரப்போறியா?’ எனக் கேட்க நினைத்தான். கேட்கவில்லை. மனம், வாயைக் கட்டுப்படுத்தி விட்டது.

மனிதர்களுக்குள் நெருக்கம் ஏற்படுவது என்பது, அவர்களின் உரிமைகளில் நாம் எத்தனை சதவிகிதம் தலையிடுகிறோம் என்பதைப் பொறுத்துதானே?

``எதுக்கு வீண்பேச்சு?’’ என ஒரு தரம் சொன்னான்.

``எதுவும் பேசக் கூடாதா நான்? என்னைப் பற்றி ஒரு அக்கறையும் இல்லை’’ இது அவள், அவன் மீது தொடுத்த உரிமைமீறல்.

குமார் `தனிக்கட்டை' எனச் சொல்லிக்கொள்வது ஒரு சம்பிரதாயம்தான். தூரத்தில் இருக்கும் சொந்தபந்தங்களால் அந்தக் கட்டை, புதர் சூழப்பட்டிருந்தது. மாமனார் கண்காணிப்பில் பையன் படித்துக்கொண்டிருந்தான். ஆனால், குமாரும் மாமனாரின் கண்காணிப்பில்தான் இருந்தான். கொஞ்ச நாட்களாக குமார் சரியாக அவர்களுடன் தொடர்பில் இல்லை என்ற சின்ன வித்தியாசமே அவர்களை விபரீதமாகச் சிந்திக்கவைத்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் நல்லபடியாக, அவர்களாகவே மாப்பிள்ளைக்கு என்ன துக்கமோ என வருந்தினர். பிறகு, மாப்பிள்ளை இப்போதுதான் சந்தோஷமாக இருக்கிறார் என்பதை அறிந்ததும் மேலும் வருந்த ஆரம்பித்தனர். அவன் மட்டுமே இருக்கும் அவனுடைய வீட்டுக்கு அவன் சரியாக வருவது இல்லை எனத் தெரிய ஆரம்பித்தது.

`வீட்டுக்கு வருவது இல்லையாமே?' என ஜாடைமாடையாக விசாரிப்பார்கள். `இன்ஸ்டிட்யூட்டில் கொஞ்சம் வேலை' எனக் காரணம் சொல்வது, அவனுக்கே ஓவராக இருந்தது. அவர்கள் தரப்பு சந்தேகங்கள் நாகரிகமாக ஆரம்பித்து, எதற்கு உடம்பைக் கெடுத்துக்கொள்ள வேண்டும்? இன்ஸ்டிட்யூட்டே வேண்டாம். வீட்டில் சும்மா இருந்தால் போதும் என்பதாக மாறியது. வேறு என்ன, மாப்பிள்ளை தவறான பாதையில் போகிறார் என்ற வருத்தம்தான்.

எல்லா ரகசியங்களும் அதை ஆராய்வதற்கு ஆட்கள் இல்லாத வரைதான். நிறுவனத்தில் வேலைசெய்பவன், நண்பன், உறவினர்... எல்லா தரப்பினருக்கும் சந்தேகம் வந்தது. யாரோ சிலர் ரஞ்சனியை `பூக்காரி' எனச் சொல்லிவிட்டனர். மாமனாரும் மாமியாரும் ஊரில் இருந்து கிளம்பிவந்தனர்.

``வேணும்னா ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ணிக்கங்க மாப்பிள்ளை’’ - அவருக்குத் தெரிந்த பாஷையில் நேரடியாகச் சொன்னார் மாமனார்.

``அவங்களுக்கு கல்யாணம் மேலே எல்லாம் நம்பிக்கை இல்லை.'’

`‘பூ யாவாரம் செய்றதா சொன்னாங்களே?’'

`‘இல்லை. பொட்டிக் ஷாப்.'’

`‘ஏதோ ஒண்ணு. பையனை வேணும்னா நானே பார்த்துக் குறேன். நீங்க சந்தோஷமா இருந்தா போதும்.'’

இந்த விவாதமே தலைவலியாக இருந்தது. பெண்ணோடு பழகுவது என்றாலே `வெச்சிருக்கான்’, `கீப்பு’, `எவளோ வளைச்சுப் போட்டுட்டா'... இப்படித்தான் பேசுகிறார்கள். ரஞ்சனி பெருமைக்குரியவள்; மரியாதைக் குரியவள்; பண்பானவள்... எப்படிச் சொன்னாலும் சமூகத்தின் வாய் தவறாகத்தான் பேசும்; கண் தவறாகத்தான் பார்க்கும்.

அவளை கல்யாணத்துக்குச் சம்மதிக்கவைப்பதுதான் பேச்சையும் பார்வையையும் சீராக்கும். அதற்கான பேச்சு வார்த்தைக்கான சூழலை அவளே உருவாக்கியிருந்தாள். அன்று மாலை அவன் அவள் வீட்டின் காலிங் பெல்லை அழுத்த எத்தனிக்கும் முன்னர் கதவில் அந்தப் பலகையைப் பார்த்தான். பீங்கான் எழுத்தில் `ரஞ்சனி குமார்’ என போர்டு மாட்டி யிருந்தது. தகுந்த காரணத்தைச் சொன்னாள்.

``பேப்பர் பையன், கூரியர் பையன், சிலிண்டர் கொண்டு வருபவன், எலெக்ட்ரீஷியன் என ஒரு நாளைக்கு ஒருத்தன் வர்றான். இந்தப் பெயர்தான் பாதுகாப்பு. குமார்னா நீங்கதான்னு யாருக்குத் தெரியப்போகுது?’'

``நான்தான் குமார் எனத் தெரிந்தால் எனக்கு ஓ.கே-தான்’’. சிறிய இடைவெளிவிட்டு, ``ஒய் டோன்ட் வி மேரி?’’ என விண்ணப்பித்தான். ஏற்கெனவே சாதாரணமாக இந்தப் பேச்சு வந்தபோதும் அவள் அதைத் தவிர்ப்பது தெரிந்தது.

``நான் கல்யாணத்துக்கு எல்லாம் சரியான ஆள் இல்லை. என் சுதந்திரம் முக்கியம்னு நினைப்பேன். என்னோட மாமா, மாமி, என் கணவன், டெல்லியில என் தோழி... எல்லோருமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல பிடிக்காமப் போயிட்டாங்க. எனக்கு டயம் கொடுங்க.’’

அவளுக்கு மிகுந்த யோசனையாக இருந்தது. அவன் உள்ளே வந்ததும் கதவை மெள்ளச் சாத்தினாள். அவள் எதுவுமே சொல்லவில்லை. இரண்டு நாட்கள் கழித்து, ``அது மட்டும் வேண்டாம்’’ என்றாள்.
அடுத்த மாதமே இன்னொரு வளையம்.

அவனும் அவளும் எடுத்துக்கொண்ட செல்ஃபி ஒன்றை வீட்டு ஹாலில் போட்டோ ஸ்டாண்டில் வைத்திருந்தாள். அவள், அவன் தோளில் சாய்ந்திருக்க, அவன் அவளுடைய கன்னத்தைக் கைகளால் தாங்கியிருப்பது மாதிரியான படம். அவள் கறுப்பு சுடிதாரில். அவன் மஞ்சள் நிற டி-ஷர்ட்டில்.

‘‘கல்யாணம் மட்டும் வேணாம். அப்ப, இதை எதற்கு ஹாலில் மாட்டணும்?’’

அந்தப் படத்தைப் பார்த்து அவன் மகிழ்வான் என எதிர்ப்பார்த்திருந்தாள் என்பது புரிந்திருந்தும் அப்படிக் கேட்டான்.

``கல்யாணம் பண்ணாம இருக்கிறது ரெண்டு பேருக்கும் நல்லதுதானே?’’

``சிம்பிளா கேட்கிறேன். ஏன் கல்யாணம் வேண்டாங்கிறே?’’

‘‘சொன்னேனே... அது பெரிய கமிட்மென்ட். அதுக்கு நான் தயார் ஆகிட்டேனானு தெரியலை.’’

‘‘இன்னும் என்ன தயார் ஆகணும்?’’ அந்தக் கேள்வியில் பொதிந்து இருந்த கொச்சைத்தன்மை, அவளை முகம் வாடவைத்தது. எழுந்து அந்த போட்டோ ஸ்டாண்டை எடுத்து, பீரோவில் வைத்துவிட்டாள்.

p90d.jpgகுமாருக்குப் பிடித்த நண்டு பொரியல் செய்துகொண்டிருந்தாள். ரஞ்சனியின் லேப்டாப், கட்டில் மேல் கிடந்தது. ஃபேஸ்புக்கில் விஜயகாந்த் மீம்ஸ், மோடி மீண்டும் இந்தியாவுக்கு வருகை புரிந்திருப்பது, `நீயில் இருக்கிறேன் நான்’ எனக் காதல் புலம்பல்... இப்படியாகப் படித்துவிட்டு, அதே மூடில் ரஞ்சனிக்கு ஒரு கவிதை எழுதி மெசேஜ் பாக்ஸில் போட்டான்.

அதற்கு அவள் எப்படி ரியாக்ட் செய்வாள் என்பது அவனுக்குத் தெரியும். ‘`வாவ்... ஃபென்டாஸ்டிக்... எப்படிப்பா எழுதறே?’’

`அவளுடைய பாஸ்வேர்டு தெரிந்தால் அதையும் நாமே பதிலாகவும் போடலாமே' என நினைத்தான். அவளுடைய பாஸ்வேர்டு என்னவாக இருக்கும்? மூன்று ஆப்ஷன்களில் கண்டுபிடிக்க வேண்டும்.
சவாலான விஷயமாக இருக்கவே, சிறிய பேப்பரில் வெவ்வேறு காம்பினேஷனில் பல வார்த்தைகளை எழுதிப் பார்த்தான்.

ரஞ்சனி சமையல் அறையில் இருந்து, ``என்ன யோசனை?’' என்றாள்.

‘‘சர்ப்ரைஸ்’’ என்றான்.

1. பெங்களூரு 2. ஷீரடி 3. துலிப்

கடைசியாக இந்த மூன்றைத் தேர்ந்தெடுத்தான். முதல் ஆப்ஷன்... ம்ஹூம். இரண்டாவது? இன்னும் ஒரு வாய்ப்புதான் இருக்கிறது என்றது எஃப்.பி.

மூன்றாவது ஆப்ஷனில் அவளுடைய ஃபேஸ்புக் திறந்துகொண்டது. மண்டு இத்தனை லகுவாகவா பாஸ்வேர்டு வைப்பாள்?

``ஹாய்... கம் ஹியர்... ஒரு சர்ப்ரைஸ்.’’

அவள் ஆர்வமாக வந்து அமர்ந்தாள்.

p90c.jpg

``என்ன கே?’’

``நான் ஒரு காதல் கவிதை எழுதினேன். உனக்கு.’’

``சூப்பர்!’’

``இரு... அந்தக் கவிதையைப் படிச்சிட்டு நீ எப்படி ரியாக்ட் பண்ணுவேன்னு நானே கற்பனையா ஒரு ரிப்ளை போட்டிருக்கேன்.’’

அவள் கவனம் ஊன்றிப் படித்தாள்.

``இது என் எஃப்.பி அக்கவுன்ட் ஆச்சே?’’

``ஆமா... உன் பாஸ்வேர்டைக் கண்டுபிடிக்கிறது பெரிய விஷயமா?’’

கையில் பீங்கான் தட்டில் வைத்திருந்த நண்டு பொரியலை அப்படியே கீழே போட்டாள்.

``கெட் அவுட் ஐ ஸே... ப்ளீஸ் கெட் அவுட். நான் மிருகமா மாறுறதுக்குள்ள வெளியே போயிடு. திஸ் இஸ் த லிமிட்.’’

``ஏய் என்ன ஆச்சு?’’

``என்னுடைய பெர்சனல்னு ஒண்ணு இருக்கு. அங்கே தலையிட்டீங்கன்னா, அது எனக்குப் பிடிக்காது.’’

``நமக்குள்ள என்ன பெர்சனல்? படுக்கையை ஷேர் பண்ணும்போது, பாஸ்வேர்டை ஷேர் பண்ணக் கூடாதா?’’

``மூணு எண்றதுக்குள்ள வெளியே போயிடு. யு ஹேவ் கிராஸ்டு தட் லிமிட்.’’

‘`நீயும்தான்.’’

குமார் கார் சாவியை எடுத்துக்கொண்டு விருட்டென வெளியேறினான். அவனுக்கு அவமானமாக இருந்தது. பாஸ்வேர்டு அத்தனை பெரிய விஷயமா என்ற அதிர்ச்சியில் இருந்து அவன் மீளவே இல்லை. கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகிவிடும்... ஆறட்டும் எனக் காத்திருந்தான். அவளுடைய பிறந்த நாள். வாழ்த்துச் செய்தி அனுப்பினான். நாட் ரிஸீவ்டு. போன் செய்து பார்த்தான், அந்த எண் உபயோகத்தில் இல்லை. கடைக்குச் சென்று பார்த்தான், அங்கே வேறு ஒரு மொபைல் கடை இருந்தது. வீட்டுக்குச் சென்று பார்த்தான், அங்கே ஒரு மார்வாடி குடும்பம் இருந்தது.

உச்சிப்பொழுதில் பனிநீர்போல அவள் மறைந்து விட்டாள். புதிய பாஸ்வேர்டுடன் அவளுக்கான பிரத்யேக ரகசியங்களுடன் ரஞ்சனி எங்கோ இருக்கிறாள்!

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • எனது பதிலும் மனிதன் தான். ஆனால், விளக்கம் நாளாந்த வாழ்க்கையோடு. இதில், நடக்கும் என்பதற்கு நடை மட்டும் என கருது எடுக்காது, நடக்கும் (இயங்கும்) விலங்கு. காலை பொழுது : 4 கால் , உறங்கம், உறக்கத்தில் இருந்து எழுவது. மதியம் : நடை  அந்தி மயங்கி,  இயங்க விரும்புவது ... ஆணும், பெண்ணும் 3 'கால்களில்'  இயங்குவது. 
    • மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவு 19 ஏப்ரல் 2024, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதியம் 3:00 மணிவரை மொத்தம் சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்கு சாவடியில் அண்ணாமலை வாக்களித்தார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.க தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர். தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தனர்.   தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு தமிழகத்தில் மதியம் 3:00 மணியின் வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆனையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 51.41% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதைத்தொடர்ந்து இரண்டாமிடத்தில் 57.67% வாக்குகளுடன் நாமக்கல்லும், 57.34% வாக்குகளுடன் கள்ளக்குறிச்சியும் இருக்கின்றன. மாநிலத்திலேயே ஆகக்குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. முன்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வெயில் அதிகமாக இருப்பதும் சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என்றார். அதற்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு,வெறிச்சோடிக் காணப்பட்ட பரந்தூர் வாக்குச்சாவடி தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள் பரந்தூர் கிராமம், காஞ்சிபுரம்: சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர். மொத்தம் 1,375 வாக்குகள் உள்ள இந்தக் கிராமத்தின் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் அம்மக்கள் பிபிசி தமிழிடம் கூறினர். திருமங்கலம் தொகுதியில் 5 கிராமங்கள்: விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 5 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கோழிக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, சோளம்பட்டி, பேக்குளம், உன்னிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு முன்னிட்டு புறக்கணித்து வருகின்றனர். படக்குறிப்பு,தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது ஜோதிஅள்ளி கிராமம், தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இக்கிராமத்தில் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை. பொட்டலூரணி, தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. படக்குறிப்பு,தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுள்ள வேங்கைவயல் கிராம மக்கள் வேங்கைவயல், புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்க வராமல் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை ஒருவருக்கு கூட ஒத்து போகாததால் சிபிசி விசாரணை பின்னடைவை சந்தித்துள்ளது. குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,UGC சென்னையில் வாக்களித்த திரைப்பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழ் திரைப்படப் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல் நடிகர் தனுஷ்-உம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வக்கைச் செலுத்தின்னார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது பேசிய அவர், “புல்லட்டை விட வலிமையானது வாக்கு, வாக்களித்தால் தான் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்,” என்றார். அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வரிசையில் நின்று காலையிலேயே தனது வாக்கைச் செலுத்தினார். சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்," என்றார். பட மூலாதாரம்,UGC உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்? இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி? உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய அதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இணையதளத்திற்கு ( https://electoralsearch.eci.gov.in/ ) சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு தேடிப் பார்க்கலாம். அதே தளத்தில் உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்தோ அல்லது ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்) பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக வாக்குச் சாவடிகள் உங்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக உங்கள் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி? தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களது சின்னங்கள் ஒட்டப்பட்டிருக்கும். வாக்குச்சாவடிக்கு என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது தொகுதியின் அடிப்படையில் அவர்களது பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தான் வாக்கு செலுத்த முடியும். அப்படி வாக்கு செலுத்த போகும்போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகள் என்னென்ன? வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை பான் அட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை ஓட்டுநர் உரிமம் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான அட்டை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். வாக்குச் சாவடியில் என்ன நடக்கும்? வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்த்து, சத்தமாக அதனை அறிவிப்பார். அதற்குப் பிறகு மற்றொரு தேர்தல் அலுவலர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைத்து, ஒரு ஸ்லிப்பை அளிப்பார். பின்னர் படிவம் 17 இல் கையெழுத்திட வேண்டும். இதற்கு அடுத்த அதிகாரியிடம் நம்மிடம் உள்ள ஸ்லிப்பை கொடுத்தால், அவர் நம்மை வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார். வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம். அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும். பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, தேர்தல் அலுவலரை அணுக வேண்டும். உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்தி விட்டால் என்ன செய்வது? உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக நீங்கள் கண்டறிந்தால் நீங்கள் பதற்ற படவோ, திரும்பி வந்து விடவோ வேண்டாம். அங்கேயே உங்களது வாக்கை நீங்களே பதிவு செய்ய முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.   பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு,தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் என்ன? தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள வாக்குபதிவில், 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,50000த்திற்கு அதிகமான பணம் எடுத்து செல்ல வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் உண்டு. பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000த்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் இன்று வாக்குப் பதிவு நிறைவடையும் வரை அதே விதி நீடிக்கும். ஆனால், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஒட்டுமொத்த தேர்தல்களுக்கான முடிவுகள் ஜூன் 4 2024 அன்று வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/articles/cd13q41gzl7o
    • பொருளாதார ரீதியாகவும், கடந்தகால பட்டறிவில்  இருந்தும், பெருமெடுப்பிலான யுத்தத்தை யாருமே தற்போதைக்கு  விருப்பவில்லை. இப்படியான நொட்டல்கள் ( tit for tat) தொடர்ந்து நடைபெறும். 
    • சகோதரி சிகண்டி அக்கா, 22ம் திகதி, விஷு புண்ணிய காலத்தில், R. விஜி மற்றும் மிர்சேல் ஒபாமா வை ஏவும் படி நெதென்யாகுவிற்கு நேரம் குறித்து கொடுத்தவ. ஆள் அவசரப்பட்டுட்டார்.  
    • அப்படி சொல்ல முடியாது….. இந்த மிசைல்தான் எமது கண்ணுக்கோ, ரேடாருக்கோ புலப்படாதே? ஆகவே அதை ஈரான் பாவிக்கவில்லை என எப்படி கூற முடியும்?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.