Jump to content

நலம் நல்லது!


Recommended Posts

முதுகு வலி ஏன்..?

 

 
 

அலுவலகத்தில் பணியாற்றுபவர்களில் பெரும்பாலானவர்களுக்கு முதுகு வலி ஏற்படும். இது ஏன் உருவாகிறது? இதற்கான நிவாரணம் என்ன? இந்த வலியை வருமுன் தடுக்க இயலுமா? என கேட்டால் முடியும் என்கிறார்கள் வைத்தியர்கள்

தகவல் தொழில் துறையாகட்டும் அல்லது அரசு மற்றும் தனியார் துறையாகட்டும் அங்கு பணியாற்றும் ஆண்களும், பெண்களும் குறைந்த பட்சம் மூன்று மணித்தியாலத்திற்காவது அசையாமல் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுபவர்கள் இப்படி ஒரேயிடத்தில் அசையாமல் வேலை செய்யும் போது, முதுகில் உள்ள தசைகள் தங்களின் இயல்பான இயக்கத்திற்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. அதனால் முதுகு பகுதியில் உள்ள தசைகள் செயலிழந்து இறுக்கமற்றதாக மாறிவிடுகிறது. இதனால் முதுகு தண்டு பகுதியில் பாதிப்பு ஏற்படத் தொடங்குகிறது.

health_news.jpg

ஒரு சிலருக்கு இந்த பாதிப்பு தீவிரமடைந்து முதுகு தண்டு தன்னுடைய இயல்பான அமைப்பிலிருந்து விலகி, வளையத் தொடங்குகிறது. இதன் தொடர்ச்சியாக நரம்புகள் சேதமடைந்து மூட்டு வலி, முதுகு வலி, தொடைப்பகுதி வலி, கால் கெண்டைச் சதை வலி போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. அத்துடன் இதன் காரணமாகவே சிறுநீர் பைக்கு செல்லவேண்டிய சிறுநீரக செயல்பாட்டிலும் மாற்றம் உண்டாகிறது. இதனால் சிறுநீரகக் கல் கூட உருவாகும் வாய்ப்பிருக்கிறது. பெண்களுக்கு இதன் காரணமாக இயல்பான அளவில் சுரக்கும் எண்டார்கார்பின் என்ற ஹோர்மோன் சுரப்பியின் சுரப்பிலும் மாற்றம் உருவாகி, கருப்பைத் தொடர்பான சிக்கல்களை தோற்றுவிக்கிறது.

இதற்கு என்ன செய்யலாம்? என்றால் ஒரு நாளைக்கு இரண்டு லீற்றர் அளவிற்கு சிறுநீர் கழிக்கவேண்டும். அதற்கு ஏற்ற வகையில் தண்ணீர், பழச்சாறு, தேநீர், கோப்பி ஆகிய பானங்களை அருந்தலாம். அத்துடன் காலையில் எழுந்தவுடன் ஸ்கிப்பிங் எனப்படும் ஒரேயிடத்தில் குதிக்கும் பயிற்சியை மேற்கொள்ளவேண்டும்.

இதன் மூலம் வயிற்றில் ஆங்காங்கே தேங்கியிருக்கும் கழிவுகள் வெளியேறும். வலது மற்றும் இடது மணிக்கட்டை ஒரே சமயத்திலோ அல்லது இரண்டு வெவ்வேறு தருணங்களிலோ ஒன்பது முறை வலது இடதாக சுற்றவேண்டும். இதனால் எம்முடைய உடலில் சுரக்கும் எண்டார்பின் என்ற ஹோர்மோன் சுரப்பியின் செயல்பாட்டை சமநிலைப்படுத்தலாம்.

இதற்கு பின்னரும் முதுகு வலி நீடித்தால் வைத்தியர்களை சந்தித்து ஆலோசனைப் பெற்று, அவர்களின் வழிகாட்டலின் படி இயன்முறை மருத்துவ பயிற்சியை மேற்கொண்டால் முழுமையான நிவாரணம் கிடைக்கும்.

வைத்தியர் ராஜ்கண்ணா.

http://www.virakesari.lk/article/36006

 

 

Eosinophilic Esophagitis என்ற பாதிப்பிற்கான சிகிச்சை

 

 

குழந்தைகளுக்கு மூச்சு விடுதலிலோ அல்லது உணவு வகைகளிலோ அல்லது தோலிலோ ஏதேனும் ஒவ்வாமை இருந்தால் அதனை உடனடியாக கண்டறிந்து சிகிச்சை பெற்று கொள்ளவேண்டும். 

இல்லையில் Eosinophilic Esophagitis என்ற பாதிப்பிற்கு ஆளாக நேரிடும். இதன் காரணமாக வாயிற்கும் வயிற்றிற்கும் இடையே உள்ள உணவுக்குழாயில் வீக்கமோ அல்லது கட்டியோ ஏற்படும். 

இதனை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சைப் பெற்றால் குணமடையலாம். ஆனால் முற்றிய நிலையிலிருந்தால் இதனை கட்டுப்படுத்தி நிவாரணம் மட்டுமே பெற இயலும். ஒவ்வாமை இருக்கும் குழந்தைகளுக்கு ஒவ்வாமையின் காரணமாகவே Eosinophilic Esophagitis என்ற பாதிப்பு ஏற்படும்.

callout-eosinophilic-esophagitis.jpg

Eosinophilic Esophagitis என்ற பாதிப்பிற்கு ஆளாகும் குழந்தைக்கு சிகிச்சையளிக்காமல் இருந்தால், அவர்கள்  உணவு உட்கொள்ளும் போதும், சுவாசிக்கும் போது ஈஸினோஃபில்ஸ் என்ற ஒரு வகையினதான இரத்த வெள்ளை அணுக்கள் உணவுக்குழாயில் சேரத் தொடங்கும்.

 இதனால் அடிவயிற்றில் வலி உண்டாகும். வாந்தி மற்றும் உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்படும். இதனால் ஓஸ்துமா, கோலியாக் நோய் போன்ற பாதிப்புகளும் ஏற்படும். ஒரு சில குழந்தைகளுக்கு தொண்டை அடைத்துக்கொள்ளும் நிலை கூட உருவாகும்.

இதனை எண்டாஸ்கோப்பி மற்றும் பயாப்சி மூலமாகத்தான் கண்டறிந்து அதன் வீரியத்தை அறிந்து கொள்ள இயலும். அதன் பிறகு மேலும் பாதிப்பு தொடராமல் இருப்பதற்கான சிகிச்சை வழங்கப்படுகிறது. 

அத்துடன் இந்த பாதிப்பு மேலும் பரவாமல் இருப்பதற்கான தடுப்பு சிகிச்சையும் அளித்து இதனை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இயலும்.

http://www.virakesari.lk/article/35765

 

 

 

Chronic Obstructive Pulmonary Disease ( C O P D) என்ற நோயிற்கான சிகிச்சை

 

 
 

இளந்தலைமுறையினர் பெசனுக்காகவும், மற்றவர்களை கவர்ந்திழுக்கவும் புகைபிடிக்கிறார்கள். அதே போல் பணியிடங்களில் விரைவாக பணி செய்து முடிக்கவேண்டும் என்ற நிபந்தனைக்கு ஆளாகி மன அழுத்தத்தையும் எதிர்கொள்கிறார்கள்.

 ஒரு சிலர் இந்த மன அழுத்தத்திலிருந்து விடுபட நிவாரணமாக மருந்துகளையும் மாத்திரைகளையும் வைத்தியர்களின் ஆலோசனையுடனும், ஆலோசனையில்லாமலும் எடுக்கிறார்கள்.

வேறு சிலர் உறக்கமின்மை காரணமாகவும், பயணத்தின் போதும், பயணம் அல்லாத போதும் ஏற்படும் வாந்தி காரணமாகவும் மருந்து மாத்திரைகளை உட்கொள்கிறார்கள். ஆனால் இவற்றிற்கான கால எல்லையை வைத்தியர்களின் ஆலோசனையின்றி தொடர்வதால் Chronic Obstructive Pulmonary Disease எனப்படும் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயிற்கு ஆளாகிறார்கள். அதாவது இவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் எம்முடைய உடலில் உள்ள நோயெதிர்ப்பு செல்களின் வளர்ச்சியையும், வலிமையையும் சிதைத்துவிடுவதால் இத்தகைய பாதிப்பு உண்டாகிறது.

health.jpg

தெற்காசியா முழுமைக்கும் இந்த பாதிப்பால் மரணமடைவர்களின் எண்ணிக்கை 20 சதவீதமாக உயர்ந்திருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த நோயிற்கு ஆளானவர்கள் நுரையீரல் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். அத்துடன் உணவு குழாய் அழற்சி மற்றும் சுவாச கோளாறுகளுக்கும் ஆளாகிறார்கள்.

புகைபிடிப்பது, மரபியல் காரணம் போன்றவற்றாலும் இந்த நோய் ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு ஆல்பா =1அன்ட்டிரிப்சின் என்ற புரத சத்து குறைபாட்டின் காரணமாகவும் இவை ஏற்படலாம். இதனால் கல்லீரலும், நுரையீரலும் பாதிக்கப்படுகிறது. இந்த பாதிப்பு நான்கு நிலைகளாக வரையறைக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலானவர்கள் மூன்றாவது மற்றும் நான்காவது நிலையில் தான் சிகிச்சைப் பெற வைத்தியர்களை நாடுகிறார்கள். இந்த நோய் தொற்று நோய் அல்ல என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

தொடர் இருமல், சளியுடன் கூடிய இருமல், மூச்சு திணறல், பெருமூச்சு அடிக்கடி விடுதல், நெஞ்சு இறுக்கமாக இருப்பது போன்ற உணர்வு ஆகியவை இதன் அறிகுறிகளாக எடுத்துக் கொள்ளலாம். இத்தகைய அறிகுறிகள் தெரிந்தவுடன் வைத்தியர்களை சந்தித்து ஆலோசனைப் பெற்றால் அவர்கள் பரிசோதனை செய்து சிகிச்சையளிப்பார்கள். இதற்கு பிரிவென்டிவ் தெரபி என்ற சிகிச்சை அளித்து குணப்படுத்துவார்கள். ஒரு சிலருக்கு சத்திர சிகிச்சை செய்யவேண்டியதிருக்கும்.

புகைபிடிப்பதை முற்றாக கைவிடவேண்டும். போஷாக்கான உணவை உட்கொள்ளவேண்டும். மனதை இயல்பாக வைத்திருக்கவேண்டும். இதற்காக யோகா பயிற்சியோ அல்லது தியானமோ அல்லது மூச்சு பயிற்சியோ செய்வதும் சிறந்தது.

http://www.virakesari.lk/article/35709

Link to comment
Share on other sites

  • Replies 475
  • Created
  • Last Reply

அதிகரித்து வரும் Multiple Sclerosis பாதிப்பு

 

 
 

எம்முடைய இல்லங்களுக்கு ஆண்டுகொரு முறையாவது வண்ணம் பூசுவோம். அதன் போது பயன்படுத்தப்படும் வரணப்பூச்சி மற்றும் சில கரைப்பான்களை சுவாசிப்பதால் அல்லது சுவாசிக்க நேர்வதால் Multiple Sclerosis என்ற பாதிப்பு ஏற்படுவது ஐம்பது சதவீதம் அதிகரிப்பதாக அண்மையில் மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கிறது.

hjftnghfgh.jpg

Multiple Sclerosis என்பது மூளை மற்றும் முதுகு தண்டுவடத்தில் உள்ள நரம்பு செல்கள் உறைந்துவிடும் நிலை. பொதுவாக சிகரெட் புகைப்பவர்களை விட அவருக்கு அருகில் நின்று அவர்கள் வெளியிடும் புகையை சுவாசிப்பவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு 30 சதவீதம் அதிகரிப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வடக்கு ஐரோப்பியே நாடுகள் மற்றும் அமெரிக்காவில் மட்டும் இத்தகைய பாதிப்பு அதிகமாக காணப்பட்ட நிலையில் தற்போது தெற்காசியாவிலும் இத்தகைய பாதிப்பிற்கு ஆளானவர்கள் இருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூளை மற்றும் முதுகு தண்டுவடம் முழுமையாக முடக்கப்பட்டுவிடும். இதற்கான சிகிச்சைக்கு அதிக கட்டணம் செலவாகிறது என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்.

உடலிலுள்ள மூட்டுகள் ஒன்றோ அல்லது அதைவிட அதிகமான மூட்டுகளிலோ உணர்வு குறையும். பார்வைத்திறன் பகுதியளவு அல்லது முழுமையாக பாதிக்கப்படும். ஒரு சிலருக்கு பார்ப்பது இரட்டையாகத் தோன்றக்கூடும். 

கூச்ச உணர்வு அல்லது மயிர் கூச்செறியும் சம்பவங்கள் அடிக்கடி நிகழலாம். நா குழறல், சோர்வு, லேசான மயக்கம், குடல் மற்றும் சிறுநீர் பையின் செயல்பாட்டில் மாற்றம் என ஏதேனும் அறிகுறிகளின் மூலம் இதனை கண்டறியலாம்.

இதனை குணப்படுத்துவதற்கான சிகிச்சை இருக்கிறதே தவிர இதனை தடுப்பதற்கான சிகிச்சை இன்றும் ஆய்வு நிலையிலேயே உள்ளது.

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வதே இதற்கான சிறந்த மாற்று. சத்தான உணவுகள், உடற்பயிற்சி, நடைபயிற்சி, மனதை இயல்பாக வைத்திருப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தினால் இதனை தவிர்க்கலாம்.

டொக்டர் சைமன்

தொகுப்பு அனுஷா.

 

 

கர்ப்ப காலத்தில் மூச்சு முட்டுவது போல் உணர்வது ஏன்?

 

கர்ப்ப காலத்தில் அடிக்கடி மூச்சு நின்று போவதுபோல சிலர் உணர்வார்கள். இது இயல்பானதுதான். கருப்பையிலுள்ள குழந்தையானது கார்பன் டை ஒக்சைடை உருவாக்கி, பனிக்குடம் வழியாக அதை இரத்த ஓட்டத்துக்குள் கடத்துகிறது.

அதை வெளியேற்றுவதற்காக கர்ப்பிணியின் உடல் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும், கர்ப்ப காலத்தின் கடைசி நாட்களில், கருப்பையானது உதர விதானத்தை மேல் நோக்கித் தள்ளுவதால், நுரையீரல் விரிவடைவதற்குப் போதுமான இடமில்லாமல் போய்விடும். இதனால் குறிப்பிட்ட அளவு காற்றை சுவாசிக்க இயலாத நிலை ஏற்படுவதாலும் சுவாசத் தடை ஏற்படுகிறது.

இருமல், மார்பில் வலி அல்லது தொடர்ச்சியான களைப்பு போன்றவற்றுடன் மூச்சு நின்றுபோகிற உணர்வும் ஏற்படுமானால் கர்ப்பிணிகள் வைத்தியருடன் கலந்தாலோசிக்க வேண்டியது அவசியம். அஸ்மா இருந்தால், அது நன்றாகக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியதும் அவசியம்.

கர்ப்ப காலம் முழுவதும் வைத்தியரின் ஆலோசனையுடன் இன்ஹேலர்களைப் பயன்படுத்தலாம். அஸ்மா பாதிப்பு தீவிரமடைந்தால் அது குழந்தைக்குத் தேவையான ஒக்சிஜன் அளவைக் குறைத்து விடுவதோடு, ஆபத்தாகவும் முடியும். எனவே, இந்த விடயங்களில் கர்ப்பிணிகள்தான் கவனமாக இருக்க வேண்டும்.

http://www.virakesari.lk/article/36163

Link to comment
Share on other sites

மூட்டுவலி, முதுகுவலி, கணுக்கால்வலி... செருப்பும் காரணமாகலாம், கவனம்! #FootCare

 

உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்குப் பாதத்தின் ஒரு பகுதி உள்பக்கமாக ஒடுங்கியிருக்கும். புவியீர்ப்பு விசையால் உடல் எடை முதுகு, மூட்டுப் பகுதிகளின் உள்பக்கம் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த அழுத்தம், கணுக்கால், முட்டிவரை நீடிக்கும்.

மூட்டுவலி, முதுகுவலி, கணுக்கால்வலி... செருப்பும் காரணமாகலாம், கவனம்! #FootCare
 

ம்மில் பெரும்பாலானோர் முக அழகுக்குக் கொடுக்கிற அக்கறையில் பாதியைகூடக் காலுக்குக் கொடுப்பதில்லை. டூவீலர் பயணத்தில் தலையைக் காக்க ஹெல்மெட் எவ்வளவு அவசியமோ, அதேபோல நடக்கும்போது கால்கள் பாதுகாப்புக்கு செருப்புகள் அவசியம். அதிலும், ஒவ்வொருவரும் அவரவர் பாதங்களுக்கு ஏற்ற, பொருத்தமான செருப்புகளைத்தான் அணிய வேண்டும். செருப்பு பொருத்தமானதாக இல்லாவிட்டால்,  முதுகுவலி, கணுக்கால்வலி போன்றவை ஏற்படலாம்.   

கால்வலி

``சரியான செருப்புகளை அணியவில்லையென்றால் என்னென்ன பிரச்னைகளை ஏற்படும், அவற்றைத் தவிர்ப்பது எப்படி?’’ பிசியோதெரபிஸ்ட் கோதண்டனிடம் கேட்டோம்.பிசியோதெரபிஸ்ட் கோதண்டன்

 

 

``குதிகால்வலி ஏற்பட  முக்கியக் காரணம், தரமற்ற செருப்புகளை அணிவதுதான்.  தரமற்றச் செருப்புகளைத் தொடர்ந்து பயன்படுத்தினால் கணுக்காலுக்கு மேல் எலும்பும் சதையும் இணையும் இடத்தில் அழுத்தம் ஏற்பட்டு, அந்த இடமே இறுகிப்போய்விடும். இதை ‘கால்கேனியல் பர்சிட்டிஸ்' (Calcaneal bursitis) என்று மருத்துவத்தில் குறிப்பிடுவோம். குதிகால்வலி ஏற்படாமல் தவிர்க்க, எம்.சி.ஆர் (Microcellular rubber), எம்.சி.பி ( Microcellular polymer) செருப்புகளை அணிய வேண்டும். 

 

 

குதிகால் எலும்பு வளர்வதை ‘கால்கேனியல் ஸ்பர்’ (Calcaneal spur) என்போம். நம் உடலில் இருக்கும் கால்சியம் சத்து, சில நேரங்களில் குதிகால் எலும்பில் போய் சேர்ந்துவிடும். இது ஓர் ஊசி மாதிரி மாறி, கால்களைக் குத்திக்கொண்டே இருக்கும். இதனாலும் வலி ஏற்படலாம். இதைத் தவிர்க்க சற்று உயரமான எம்.சி.ஆர்  செருப்புகளைப்  பயன்படுத்த வேண்டும். 

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு, நாளடைவில் பாதம் தட்டையாகிவிடும். இதை ‘ஃபிளாட் ஃபுட்’ (Flat foot) என்போம். இந்த வகைப் பாதம் உள்ளவர்களுக்குக் காலில் வலி ஏற்படும். இதைச் சரிசெய்வதற்கு ‘ஃபுட்வேர் மாடிஃபிகேஷன்’ என்ற முறை இருக்கிறது. இவர்கள் ‘மீடியல் ஆர்ச் சப்போர்ட்’ (Medial arch support) ஷூ, மீடியல் ஆர்ச் சப்போர்ட் இன்சோல் ஜெல்லி (Medial arch support insole jelly) செருப்புகளைப் பயன்படுத்த வேண்டும். 

மூட்டுவலி

உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்குப் பாதத்தின் ஒரு பகுதி உள்பக்கமாக ஒடுங்கியிருக்கும். புவியீர்ப்பு விசையால் உடல் எடை முதுகு, மூட்டுப் பகுதிகளின் உள்பக்கம் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த அழுத்தம், கணுக்கால், முட்டிவரை நீடிக்கும். இதன் காரணமாக மூட்டுவலி, முதுகு வலி, கணுக்கால்வலி உண்டாகலாம். கால்களுக்கு ஏற்ற, சரியான செருப்புகளை தேர்ந்தெடுத்து உபயோகித்தால் வலி குறையும். `சாண்டல் மாடல் எம்.சி.ஆர் வித் ஆர்ச்’ (Sandal model MCR with arch) செருப்புகளை அணியலாம்; கட் ஷூ, ஆர்ச் வைத்த ஜெல்லி ஃபுட் செருப்புகளைப் பயன்படுத்தலாம். 

 

 

‘ஹை ஹீல் செப்பல்ஸ்’ (High heel chappals) பயன்படுத்துபவர்களுக்கு முதுகுவலி ஏற்படும். இவர்கள், ஹை ஹீல்ஸுக்குப் பதிலாக, எம்.சி.ஆர் செருப்புகளைப் பயன்படுத்தினால் முதுகுவலி குறையும். 

ஹை ஹீல் செப்பல்ஸ்

சில சர்க்கரை நோயாளிகளுக்குப் பாதம் மரத்துப் போகும். அவர்களுடைய பாதத்தில் சுரணை இருக்காது. இதை ‘பெரிபெரல் நியூரோபதி’ (Peripheral neuropathy) என்று மருத்துவத்தில் சொல்வார்கள். இவர்களுக்கு அடிபடும்போது வலி தெரியாது. கால் புண்ணாகிவிடும். இதனால், சர்க்கரைநோய்ப் புண் ஏற்படும். இவர்கள் ‘எம்.சி.ஆர்’, ‘எம்.சி.பி’ (MCR / MCP Diabetic Orthopaedic Gel Footwear) செருப்புகளைப் பயன்படுத்த வேண்டும். இந்தச் செருப்புகளை அணிந்தால், கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்; புண் ஏற்படாது. பாதத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் முடியும். 

சர்க்கரை நோயாளிகள்

பொருத்தமான, நல்ல செருப்புகளை அணிந்தால், பாதவெடிப்பு ஏற்படாது. பாதவெடிப்பைச் சரிசெய்ய, வட்ட வடிவ பெரிய பிளாஸ்டிக் டப்-பில் வெதுவெதுப்பான தண்ணீரை நிரப்பி, அதில் கொஞ்சம் மஞ்சளைக் கரைத்துவிட வேண்டும். 20 நிமிடங்களிலிருந்து 30 நிமிடங்கள் வரை கால்களை அந்த நீரில் வைத்திருக்க வேண்டும். பிறகு, கைகளால் பாதத்தைத் தேய்த்தால், அதிலிருந்து மாவு போன்ற ஒரு பொருள் உதிரும். தொடர்ந்து இரண்டு வேளை என்ற கணக்கில், இதை ஒரு வாரம் செய்தால், பாதவெடிப்பு குணமாகும்; ரத்த ஓட்டம் சீராகும். 

சில சர்க்கரை நோயாளிகளுக்குக் காலில் அடிப்பட்டால், அதில் புண்ணாகிவிடும்; எளிதில் புண் ஆறாது. சில நேரங்களில் காலையே எடுக்கவேண்டிய சூழ்நிலைகூட ஏற்படும். இந்த அறுவை சிகிச்சையை ‘ஃபுட் ஆம்ப்யுடேஷன் ’ (Foot amputation) என்போம். எம்.சி.ஆர்., எம்.சி.பி செருப்புகளைப் பயன்படுத்தினால், இந்த அறுவை சிகிச்சையைத் தவிர்க்கலாம். சர்க்கரை நோயாளிகள் இதயத்தைப் பாதுகாப்பதுபோல, கால்களையும் பாதுகாக்க வேண்டும். 

பாதத்துக்கும் இதயத்துக்கும் தொடர்பு இருக்கிறது. பாதத்துக்கு அழுத்தம் கொடுக்கும் சில இடங்கள் (புள்ளிகள் - Foot Pressure points) இருக்கின்றன. இவை சரியாக இருந்தாலே போதும்... இதயம் சீராக இயங்கும். 

ஆணிக்கால் உள்ளவர்கள், எம்.சி.ஆர் செருப்புகளைத்தான் பயன்படுத்த வேண்டும். 

சிலருக்கு விபத்தின்போது எலும்பு முறிவு ஏற்பட்டு, அது சரியாகாமல் கால் குட்டையாக மாறிவிடும். இவர்கள், தங்களுக்கு ஏற்ற எம்.சி.ஆர் செருப்புகளை அணிந்தால், நடையைச் சரி செய்துகொள்ளலாம்" என்றார்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

பச்சிளங்குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பிற்குரிய சிகிச்சை முறைகள்

 

 
 

தெற்காசிய நாடுகளில் நிர்ணயிக்கப்பட்ட திகதிகளுக்கு முன் பிறக்கும் அல்லது குறைமாத பிரசவங்களில் பிறக்கும் குழந்தைகளில் Neonatal Sepsis என்ற பாதிப்பு ஏற்பட்டு மரணத்தை சந்திக்கும் குழந்தைகள் 40 சதவீதமாக அதிகரித்துள்ளது என அண்மைய ஆய்வு தெரிவிக்கிறது.

baby.jpg

குறைமாதங்களில் அதிலும் 28 நாட்களுக்கு முன்பாக பிறக்கும் குழந்தைகளை பச்சிளங்குழந்தைகளுக்கான விசேட தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சையளிக்கப்படும். இதன் போது அந்த பச்சிளங்குழந்தைகளின் நோயெதிர்ப்பு ஆற்றல் முழுமையாக வளர்ச்சியடையாத காரணங்களால் நோயுற்று மரணத்தை எதிர்கொள்கிறது. 

இதற்கு Escherichia Coli, Listeria மற்றும் Streptococcus போன்ற பாக்றீரியாக்களின் தாக்கங்களே காரணம் என அறியப்படுகிறது.  அதே வேளை இத்தகைய பாதிப்புகள் ஒவ்வொரு குழந்தையும் தாயின் வயிற்றில் கருவுற்றிருக்கும் போது ஏற்படுகிறது.

இதன் காரணமாகவே பெண்கள் கருவுற்றிருக்கும் போது தவறாமல் வைத்திய ஆலோசனையைப் பெறவேண்டும் என்று வைத்தியர்கள் வலியுறுத்துகிறார்கள். 

இது போன்ற பாதிப்பிற்கு ஆளாகும் என அவதானிக்கப்படுகின்ற குழந்தைகளுக்கு கருவில் இருக்கும் போதே, தாய்மார்களுக்கு உரிய சிகிச்சையையும் சத்தான உணவின் அவசியத்தையும் உணர்ந்து கொள்ளவேண்டும். இதற்குரிய சிகிச்சையை பெறாவிட்டால் அந்த குழந்தைக்கு ஆயுள் முழுவதும் ஏதேனும் ஆரோக்கிய பாதிப்புகள் தொடரும்.

பச்சிளங்குழந்தைகளின் உடல் சீதோஷ்ண நிலையில் மாற்றம் உண்டாகுதல், மூச்சு திணறல் அல்லது சுவாசிப்பதில் சிரமப்படுதல், வயிற்று போக்கு , இரத்த சர்க்கரையின் அளவு குறைதல், உடலியக்கம் குறைதல், வாந்தி, கண்களின் நிறம் மாறுபடுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். இதற்கான சிகிச்சையின் போது ஒரு சில குழந்தைகளுக்கு Septic Shock எனப்படும் இரத்த அழுத்தம் குறைந்துவிடக்கூடிய அபாயமும் உண்டு. 

இதனை தடுக்கவேண்டும் என்றால் பெண்கள், கருவுற்றிருக்கும் காலங்களில் வைத்திய நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட சத்தான சரிசமவிகித உணவை உட்கொள்ள வேண்டும். இத்தகைய சிக்கல் வரக்கூடாது என்பதற்காக வைத்தியர்கள் அறிவுறுத்தும் சில மருந்துகளையும் உட்கொள்வதோடு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவேண்டும்.

டொக்டர்  ராஜேஷ்

தொகுப்பு அனுஷா.

http://www.virakesari.lk/article/36346

 

 

அதிகரித்து வரும் குடல் அழற்சி நோய்

 

 
 

இன்றைய நிலையில் தெற்காசிய நாடுகளில்  குடல் அழற்சி நோய் மற்றும் அஜீரன நோய்கள் அதிகளவில் ஏற்பட்டுள்ளன.

kudal.jpg

சந்தையில் தற்போதுவிற்பனையில் இருக்கும் பக்கற்றுகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களையோ அல்லது பிளாஸ்ரிக் போத்தல்கள் மற்றும் பிளாஸ்ரிக் டப்பாக்களில் அடைக்கப்பட்டு விற்பனையாகும் உணவுகளையும், குளிர்பானங்களையும் நாம் சாப்பிடுவதாலும், அருந்துவதாலும் எம்மில் பெரும்பாலானவர்களுக்கு குடல் அழற்சி நோய் ஏற்படுகிறது. 

தெற்காசிய நாடுகளில் இத்தகைய பாதிப்பிற்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை சாப்பிடுவதால் அஜீரணக் கோளாறுகளுக்கு ஆளாகி குடல் அடைப்பு நோய் மற்றும் குடல் பாதிப்பிற்கு ஆளாகிறோம்.

இத்தகைய உணவுப்பொருள்களில் எமக்கும் அறியாமலேயே  பிஸ்பெனோல் ஏ  எனப்படும் வேதியல் பொருள்கள் இடம்பெற்றிருக்கிறது. இவை எண்டோகிரைன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடுகளில் தடையை ஏற்படுத்துகின்றன.

இதனை உரிய நேரத்தில் பரிசோதித்து கொள்ள தவறிவிட்டால் அவர்களுக்கு பெருங்குடல் புண் மற்றும் கிரோன் நோய் எனப்படும் நோய் உண்டாகும். குறிப்பாக தெற்காசிய நாடுகளில் குரோன் நோயை விட பெருங்குடல் புண் பாதிப்பிற்கு ஆளாகுபவர்கள் அதிகம் என்று அண்மைய ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனை உரிய நேரத்தில் கண்டறியாவிட்டால் மலக்குடல் மற்றும் பெருங்குடல் ஆகிய பகுதிகளில் ஃபிஸ்டுலா குடல் அடைப்பு, குடல் பாதிப்பு, பெருங்குடல் புற்றுநோய் போன்ற நோய்கள் உருவாகும்.

 அடிவயிற்றில் வலி, கடுமையான வயிற்று போக்கு, காய்ச்சல், உடல் எடையிழப்பு, பசியின்மை, சோர்வு, முறையற்ற மாதவிடாய் சுழற்சி ஆகியவை அறிகுறிகளாகும். குடல் அழற்சி நோய்களின் தொடக்க நிலைகளை குணப்படுத்த தற்போது மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன. இருப்பினும் ஒரு சிலருக்கு சத்திர சிகிச்சை அவசியப்படலாம்.

பால்மா பொருட்களை மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்தவேண்டும். பீன்ஸ், முட்டை கோஸ், காலிப்ளவர் போன்ற வாயு உருவாக்கும் காய்கறிகளை சாப்பிடுவதை வதை்தியர்களின் கண்காணிப்பில் மேறகொள்ளவேண்டும். 

ஓமேகா =3 சத்துள்ள உணவுகளை அதிகமாக சாப்பிடவேண்டும். ஜீரணத்திற்கேற்ற அளவே சாப்பிடவேண்டும். அஜீரண கோளாறு ஏற்படாமல் சாப்பிடும் அளவையும், நேரத்தையும் மாற்றியமைத்துக் கொள்ளவேண்டும். மது, கோப்பி, செயற்கையாக தயாரிக்கப்படும் குளிர்பானங்கள் ஆகியவற்றை முற்றாக தவிர்க்கவேண்டும்.

டொக்டர் சந்திரசேகர்

தொகுப்பு அனுஷா.

http://www.virakesari.lk/article/36283

Link to comment
Share on other sites

பெண்களுக்கு பித்தப்பையில் கற்கள் உண்டாவதற்கான காரணங்கள்

 
அ-அ+

இளம்பெண்களுக்குப் பித்தப்பையில் கற்கள் உண்டாவதன் காரணமே பட்டினி ஃபேஷன்தான். இதற்கான தீர்வு என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.

 
 
 
 
பெண்களுக்கு பித்தப்பையில் கற்கள் உண்டாவதற்கான காரணங்கள்
 
இன்றைய தலைமுறையில் குறிப்பாக பெண்கள் பலர், பித்தப் பையிலே கல் இருக்கு, டாக்டர் ஆபரேஷன் பண்ணணும்னு சொல்றாரு என்று என்னவோ சர்வ சாதாரணமாக சொல்ல கேட்டிருப்போம். என்னவோ வயிற்றுக்குள் 'வைர கல்' வைத்துள்ளதை போல் அசால்ட்டாக சொல்லுவார்கள். இந்த பித்தகற்கள் யாருக்கெல்லாம் ஏற்படுகிறது? எதனால் ஏற்படுகிறது என்பதனை பார்ப்போம்...   

பித்தக் கற்கள் யாருக்கு, ஏன் ஏற்படுகின்றன?

* உடல் பருமன் உள்ளவர்களுக்கு
* கருத்தடை மாத்திரைகளை அதிகமாகச் சாப்பிடும் பெண்களுக்கு
* செக்ஸ் ஹார்மோன் மாற்றங்களால்
* இரத்த சோகை நோய் உள்ளவர்களுக்கு
* பரம்பரை காரணமாக
* சிறுகுடல் பாதையில் ஏற்படும் வியாதிகள் காரணமாக
* விரதம் இருப்பதால்

வேளாவேளைக்குப் போதுமான உணவு கிடைக்காத போது, பித்தநீர் அளவுக்கு அதிகமாகச் சுரந்து கற்களாக உறைந்துவிடும் அபாயமிருக்கிறது. தீவிர டயட் செய்யும் இளம்பெண்களுக்குப் பித்தப்பையில் கற்கள் உண்டாவதன் காரணமே பட்டினி ஃபேஷன்தான்!

பித்தக் கற்களின் அறிகுறி என்ன?

விதவிதமான வலிகள் ஏற்படும். மாரடைப்பு வலியோ என்று கூட பயம் ஏற்படும். மார்பு எலும்புக்கும் தொப்புளுக்கும் இடையே வலிக்கும் முதுகிலும் தோள் பட்டையிலும் கடுப்பெடுக்கும் வாந்தியும் குமட்டலும் அவஸ்தை தரும். ஒரு சிலருக்கு சிறிது கூட வலி இருக்காது. ஆனால் பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

தீர்வு தான் என்ன?

பித்தப்பை கற்களைக் கரைப்பதற்கென்றே மருந்துகள் உள்ளன. இவை, பித்தநீர் பைக்குள் அதிர்வலைகளைப் பாய்ச்சி, கற்களைப் பொடியாக்கி, மலத்துடன் வெளியேற்றி விடும். இம்முறை கணையத்தில் வீக்கம், பித்தப்பையில் அழற்சி உள்ளவர்களுக்கும் கருவுற்ற பெண்களுக்கும் ஏற்றதல்ல!
லேப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சை முறையில் பித்தக் கற்களை, வலியின்றி மிகச் சுலபமாக நீக்கிவிடலாம். சில சமயம், குடல் ஒட்டுதல், அதிகம் இருந்தாலோ, பொது பித்த நாளத்தில் கட்டிகள் இருந்தாலோ, ஓப்பன் சர்ஜரி தேவைப்படலாம். பித்தப் பையைக் கற்களுடன் நீக்காவிட்டால், மஞ்சள்காமாலை நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

பித்தக் கற்கள் வராமலிருக்க என்ன செய்யணும்?

ரொம்ப ஸிம்பிள்! கொழுப்புக் கூடுதலாக உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும். பட்டினி, விரதம் என வயிற்றைக் காயப் போடாமல், வேளா வேளைக்கு மிதமான நார்ச்சத்துள்ள உணவைச் சாப்பிட்டு, மிதமான உடற்பயிற்சி செய்து வந்தாலே கற்களுக்கு கல்தா கொடுக்கலாம்!
 
 
Link to comment
Share on other sites

மைக்ரேன் தலைவலிக்கான காரணமும் - தீர்வும்

 
அ-அ+

இப்போதைய மைக்ரேன் தலைவலியினால் அவதிப்படுபவர்கள் எண்ணிக்கையும் கூடியுள்ளது. சில தகவல்களையும் அறிந்தால் மைக்ரேன் தலைவலியினை முடிந்தவரை தவிர்த்து விடலாம்.

 
 
 
 
மைக்ரேன் தலைவலிக்கான காரணமும் - தீர்வும்
 
இப்போதைய மைக்ரேன் தலைவலியினால் அவதிப்படுபவர்கள் எண்ணிக்கையும் கூடியுள்ளது. பொதுவில் அதிக பளீர் வெளிச்சம், தூக்கமின்மை, காபி, கேபின், சாக்லெட் இவையெல்லாம் மைக்ரேன் தலைவலியினை தூண்டிவிடும் என்பது பலரின் அனுபவம்.

ஆயினும் மேலும் சில தகவல்களையும் அறிந்தால் மைக்ரேன் தலைவலியினை முடிந்தவரை தவிர்த்து விடலாம். தூக்கமின்மை மைக்ரேன் தலைவலியினைத் தூண்டும் குறைந்தது அன்றாடம் 8 மணிநேர தூக்கம் என்பது அவசியம். முறையான குறிப்பிட்ட நேரத்திற்கு தூங்க சென்று குறைவான குறிப்பிட்ட நேரத்திற்கு எழுவதும் மைக்ரேன் தலைவலியினைத் தவிர்க்க மிக அவசியம். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் பகலில் தூங்குவது, இரவில் வெகுநேரம் விழித்து காலையில் வெகுநேரம் சென்று எழுவது போன்றவற்றினைச் சொல்வார்கள். மைக்ரேன் பாதிப்பு ஏற்கனவே உடையவர்கள் மேற்கூறியவாறு செய்யும் பொழுது மைக்ரேன் பாதிப்பு உடனடி அதிகமாக ஏற்படுகிறது.

* பலரும் ஸ்மார்ட் போன், லேப்டாப், டேப்ளெட் போன்றவை இல்லாது வாழ்வே இல்லை என்று நினைக்கின்றார்கள் தூங்கச் செல்வதற்கு முன்கூட அல்லது படுத்துக் கொண்டே தூங்கும் வரை நீல ஒளி உபயோகிப்பவருக்கு மைக்ரேன் பாதிப்பினை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.

* சிலருக்கு சில வகை சோபாக்கள், உடைகள், போர்வைகள் அதிலுள்ள டிசைன்கள், வரிகள், வட்டங்கள் போன்றவை மூளையிலுள்ள கார்டெக்ஸ் பகுதியினைக் தூண்டி மைக்ரேன் வலியினை உருவாக்குகின்றன என ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எனவே எளிமையான டிசைன் கொண்ட உடைகள், சோபாக்கள், படுக்கை விரிப்புகளை உபயோகிப்பது நல்லது.

* திடீரென தட்பவெட்ப நிலையில் ஏற்படும் மாற்றம் மைக்ரேன் பாதிப்பினை ஏற்படுத்தும். ஆக மேற்கூறிய குறிப்புகளை அறிந்து மைக்ரேன் தலைவலி தாக்குதலை தவிர்ப்போம்.

அதிக வியர்வை: வெய்யில் கொளுத்தும் நேரத்தில் மிக அதிக வியர்வை என்பது சாதாரணமாக ஏற்படும் நிகழ்வுதான். அடிக்கடி சிறிதளவு தண்ணீர் குடித்துக் கொண்டே இருங்கள். என்பதுதான் அறிவுரையாக இருக்கும். இதனால் உடலின் நீர்சத்து சீராய் இருக்கும். பல பாதிப்புகள் இதனால் தவிர்க்கலாம்.

வியர்வை இயற்கையான ஒன்று. தேவையான ஒன்று. உங்கள் உடலை குளுமை செல்கிறது. உடலில் அதிக உஷ்ணம் ஏற்படும் பொழுது நரம்பு மண்டலம் வியர்வை சுரப்பிகளை தூண்டி வியர்வை மூலம் உடல் உஷ்ணத்தினை வெளியேற்றுகிறது. 99 சதவீதம் வியர்வை நீர் தான் சிரிதளவு உப்பும். தாது உப்புகளும் வெளியேறுகின்றன. அதிக நச்சு (அ) கழிவுகள் கல்லீரல், நுரையீரல், சிறு நீரகம் மூலமாகவே வெளியேறுகின்றன.

201807130838038003_1_migraine-headache._L_styvpf.jpg

இது சாதாரண சூழ்நிலையில் நிகழும் ஒன்று. ஆனால் மிக அதிக அளவில் வியர்வை வெளியேறும் பொழுது உடலில் உள்ள சத்து குறைந்து தாது உப்புகள், உள்ள இவற்றிலும் குறைபாடு ஏற்படுகிறது.

உஷ்ணம், கோடை, ஸ்ட்ரெஸ் போன்ற நேரங்களில் அதிக வியர்வை ஏற்படும். கை மடிப்பு, கால்கள், கைகள், முகம் இந்த இடங்களில் வியர்வை அதிகம் ஏற்படும்.

* பரம்பரை
* உடல் அளவு
* தொடர் உடற்பயிற்சி இவையும் அதிக வியர்வைக்கு காரணம் ஆகின்றன.
* காபி, ஆல்கஹால் இவை உடலின் உஷ்ணத்தினை உயர்த்தி வியர்வையினை உருவாக்கும்.
* காரசாரமான உணவுகளில் வியர்வை கொட்டும் ஆயினும் அதிக வியர்வை கொட்டுவதனை நீங்கள் உணர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெறவும்.
* சிறிது நேரம் ஷவரில் இருப்பது.

* டீ, காபி, மது இவற்றினைத் தவிர்ப்பது.
* கார, சார மசாலா உணவுகளைத் தவிர்ப்பது ஆகியவை சங்கடமான அதிக வியர்வையினைத் தவிர்க்கும்.
* அதிக எடையினைக் குறைத்தல் நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையினை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.
* கொழுப்பு உணவுகளைத் தவிர்த்தல்.
* மருத்துவ உதவியோடு மட்டுமே மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல் போன்றவை பல விதங்களில் உடல் நலனை பாதுகாக்கும்.

https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/07/13083803/1176165/reason-for-migraine-headache-solution.vpf

Link to comment
Share on other sites

பச்சிளம் பருவத்திலேயே நீரழிவு நோயைத் தடுக்க பிரிட்டனில் மருத்துவர்கள் புது ஆய்வு

முதல் வகை நீரழிவு நோய் வர அதிக வாய்ப்புள்ள குழந்தைகளுக்கு அதை வராமல் தடுக்க வழி இருக்கலாம் என நிபுணர்கள் நம்புகிறார்கள்.

diabetes from birthபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

பச்சிளம் பருவத்திலிருந்தே இன்சுலின் பவுடரை அளிப்பது மூலம் அவர்களின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரித்து ஆயுள் கால பாதுகாப்பை அளிப்பதே நிபுணர்களின் இலக்காக உள்ளது.

ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஹார்மோனே இன்சுலின் எனப்படுகிறது. சர்க்கரை அளவு நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு கட்டுக்கடங்காமல் பெருகக் கூடியது

பெர்க்‌ஷயர், பக்கிங்ஹாம்ஷயர், மில்டன் கெயின்ஸ், ஆக்ஸ்ஃபோர்டு ஷயர் ஆகிய இடங்களில் உள்ள மகப்பேறு மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்பிணிகள் சர்க்கரை நோய் தடுப்புக்கான பரிசோதனை முயற்சியில் பங்குகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்ப பட்டார்கள்.

குழந்தைக்கு ஆறாவது மாதம் ஆகும்போதிருந்து மூன்று வயது ஆகும் வரை தினமும் இன்சுலின் பவுடர் தருமாறு அந்த கர்ப்பிணிகளிடம் முன்கூட்டியே அறிவுறுத்தப்படுகிறது.

அக்குழந்தைகளின் ஆரோக்கியத்தை ஆராய்ச்சியாளர் குழு அவ்வப்போது சென்று பார்த்துவரும். இந்த சோதனையில் பங்குபெறும் சரிபாதி குழந்தைகளுக்கு உண்மையான இன்சுலின் தரப்பட்டது. மறுபாதி குழந்தைகளுக்கு எந்த மருந்தும் இல்லாத சாதாரண பவுடர் வழங்கப்பட்டது.

சோதனை முடியும் வரை யாருக்கு எது தரப்பட்டது என யாருக்குமே தெரியாமல் வைக்கப்பட்டது. சோதனையின் முடிவுகள் பாதிக்கப்படாமல் இருக்க இவ்வாறு செய்யப்பட்டது.

நீரிழிவுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

முதல் வகை சர்க்கரை நோய் ஒவ்வொரு நூறு குழந்தைக்கும் ஒரு குழந்தையிடம் முதல் வகை சர்க்கரை நோயை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ள மரபணுக்கள் இருப்பதாக நம்பப்பட்டது.

பிறந்த குழந்தைகளின் மரபணுவில் வேறு எதாவது கோளாறுகள் இருக்கிறதா என கண்டறிய ரத்தப்பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 30 ஆயிரம் குழந்தைகளிடம் இது போன்ற சோதனை நடத்தி தகுதி வாய்ந்த ஒருவரை தேர்வு செய்ய விரும்பினர்.

இன்சுலின் பவுடர் அளிப்பதால் முதல் வகை சர்க்கரை நோய் ஏற்படுவதை தடுக்க முடியும் என நம்பப்பட்டது. தற்போதைய நிலையில் முதல் வகை நீரழிவு நோயை தடுக்க எந்த வழியும் இல்லை.

மெட்ஃபார்மின் என்ற மருந்தை குழந்தைப் பருவத்தில் அளிப்பதால் நீரழிவு நோயை தடுக்க முடியும் என்ற யூகத்தில் இன்னொரு சாரார் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

நீரிழிவுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

முதல் வகை நீரழிவு நோய் என்பது ஒரு முறை வந்தால் ஆயுளுக்கும் தொடரக்கூடிய ஒரு குறைபாடாகும். இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு கணையம் இன்சுலினை சுரக்காத நிலை இருக்கும். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கடுமையாக அதிகரிக்கும். இதன் விளைவாக கண் பார்வை இழப்பு, இதய நோய்கள், பக்கவாதம் என பல பிரச்னைகள் நீண்டகால அளவில் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

குழந்தைகளையும் அவர் குடும்பத்தையும் நீரழிவு நோய் ஏற்படாமல் தடுத்து அதனால் பார்வை இழப்பு, சிறுநீரக நோய், இதய நோய் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அற்புதமான ஒன்று என கூறுகிறார் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகத்தில் இது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும் குழுவின் தலைவர் டாக்டர் மேத்யூ ஸ்நேப்.

 

 

இந்த ஆய்வுகளுக்கு தேவையான நிதியை சுகாதார ஆராய்ச்சிக்கான தேசிய மையம் வழங்குகிறது. இது தவிர JDRF தொண்டு நிறுவனம், Diabetes UK என்ற அமைப்பு, வெல்கம் டிரஸ்ட், லியோனா எம் மற்றும் ஹாரி பி ஹெல்ம்ஸ்லி தொண்டு நிறுவனம் ஆகியவையும் ஆய்விகளுக்கு தேவையான நிதியை வழங்குகின்றன.

"இந்த ஆய்வுகள் ஒரு மிக நீண்ட நெடிய பயணம்" என வர்ணிக்கிறார் Diapetes UK ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் எலிசபெத் ராபர்ட்சன்.

எனவேதான் தென்கிழக்கு பகுதியில் வசிக்கும் பெண்களை இதில் ஈடுபட ஊக்குவிக்கிறோம் என்கிறார் டாக்டர் எலிசபெத் ராபர்ட்சன். இது போன்ற பெண்கள் இல்லாமல் சர்க்கரை நோய்க்கான ஆய்வுகள் சாத்தியமே இல்லை என்கிறார் டாக்டர் எலிசபெத் ராபர்ட்சன்.

https://www.bbc.com/tamil/science-44834236

Link to comment
Share on other sites

இயர் போனை எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம்? 

 

இன்றைய நிலையில் இளம் பெண்கள், இளம் வாலிபர்கள், பணிக்கு செல்பவர்கள் அல்லது இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் என அனைவரும் அவர்களின் காதுகளில் இயர் போன் நிச்சயமாக இருக்கும். இருக்கிறது. 

1MORE-Piston-Fit-Earphone-With-Mic-Gray-

இன்று யாரும் பயணத்தின் போது செல்போனை பேசக்கூடாது என்றால் கேட்பதில்லை. அதற்கு தான் நாங்கள் இயர் போனை மாட்டிக்கொண்டு தானே பேசுகிறோம் என்பார்கள். அதே போல் கொழும்பிற்கு புறநகரிலிருந்து புகையிரதம் அல்லது பஸ் மூலமாக வருபவர்கள் ,பயணத்தைத் தொடங்கியவுடன் காதில் இயர் போனை மாட்டிக் கொண்டு தனக்கு விருப்பமானவர்களுடன் பேசத் தொடங்குகிறார்கள் அல்லது பாடல்களை கேட்கத் தொடங்கிவிடுகிறார்கள். 

ஆனால் இதன் பின்விளைவு குறித்து யோசிப்பதில்லை. எடுத்துக் கூறினால் அலட்சியப்படுத்துவார்கள்.

ஆனால் இவர்களுக்கு எவ்வளவு நேரம் இயர் போனை கேட்கலாம். தொடர்ந்து கேட்பதால் ஏற்படும் மருத்துவரீதியிலான பாதிப்புகள் என்ன என்பது குறித்து தொடர்ந்து வலியுறுத்தவேண்டும்.

இயர் போனை மாட்டிக் கொண்டு இருபது முதல் முப்பது நிமிடங்கள் வரை தான் அதிகப்பட்சமாக பேசலாம். பாடல்களை கேட்கலாம். இந்த எல்லையைக் கடந்தால் காதுகளில் இருக்கும் கார்டிலெஜ் எனப்படும் மென்மையான எலும்பை இந்த இயர் போனின் முனை அழுத்தத் தொடங்கும்.

 அத்துடன் தொடர்ந்து ஒலி அலைவரிசை வெவ்வேறு ஒலியளவில் காதுகளை அடைவதால் காதில் ட்ரம் எனப்படும் சவ்வு கிழிவதற்கோ அல்லது தளர்வடைவதற்கோ காரணமாகிவிடும். 

அத்துடன் அங்குள்ள மென்மையான பகுதிகளில் வீக்கங்கள், கொப்புளங்கள் போன்றவையும் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. அதனால் குறைவான நேரத்திற்கு இயர் போனை பயன்படுத்துங்கள். உங்கள் காதுகளை ஆரோக்கியமாக ஆயுள் முழுவதும் பயன்படும் வகையில் திட்டமிடுங்கள்.

டொக்டர் வேணுகோபால்

தொகுப்பு அனுஷா.

http://www.virakesari.lk/article/36542

 

சிறுநீரகக் கற்களை அகற்றும் நவீன சத்திர சிகிச்சை

 

சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதைக் கண்டறிந்த பின் அதனை அகற்ற மூன்று வகையினதான சத்திர சிகிச்சைகள் இருக்கிறது.

அவற்றில் ஒன்று தான் RIRS எனப்படும் லேசர் சத்திர சிகிச்சை. இத்தகைய சத்திர சிகிச்சையை மேற்கொள்ளும் முன் சிறுநீரக கற்கள் சிறுநீரகத்தில் எந்த பகுதியில் இருக்கிறது என்பதையும், அதன் கெட்டித்தன்மை மற்றும் அதன் எண்ணிக்கை ஆகியவற்றைத் தெரிந்துகொண்டு சத்திர சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும். 

ஒரு சிலருக்கு இத்தகைய சிக்கலின் போது வேறு வகையினதான சத்திர சிகிச்சையினை மேற்கொண்டிருப்பார்கள்.  அதன் போது சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை உடைக்கப்பட்டுவிடும். ஆனால் அவை வெளியேற முடியாமல் சிறுநீர் பாதையிலோ அல்லது வேறு பகுதியிலோ தேங்கி நிற்கக்கூடும். அத்தகைய பாதிப்புகள் ஏதும் ஏற்படாவண்ணம். இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

இத்தகைய சத்திர சிகிச்சையின் போது சிறுநீர் வெளியேறும் பாதை வழியாகவே கருவிகள் உள்ளே செலுத்தப்பட்டு, சிறுநீரகத்தை பார்வையிட்டு, அங்குள்ள சிறுநீரக கற்களை லேசர் மூலம் உடைத்து அதனை பாதுகாப்பாக அந்த உறிஞ்சி எடுத்து வெளியேற்றிவிடுவார்கள்.

ஆனால் ஒரு சிலர் சிறுநீரகக் கற்களுக்காக சத்திர சிகிச்சை மேற்கொண்ட பின்னரும் மீண்டும் கற்கள் ஏற்படுவதாக கூறி சிகிச்சைக்கு வருவார்கள்.

ஆனால் அவர்களுக்கு சத்திர சிகிச்சையின் காரணமாகத்தான் சிறுநீரக கற்கள் வந்திருப்பதாக எண்ணுவர். ஆனால் அது உண்மையல்ல.

சத்திர சிகிச்சையின் காரணமாக சிறுநீரகத்தில் மீண்டும் கற்கள் உருவாகாது. ஆனால் சத்திர சிகிச்சைக்கு பின்னரான காலகட்டத்தில் வைத்தியர்கள் அறிவுறுத்தும் பல விடயங்களை தொடர்ச்சியாக பின்பற்றாததால் தான் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக தண்ணீரை எவ்வளவு எப்போது அருந்த வேண்டும்? எம்மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும்? எம்மாதிரியான உணவுப்பொருட்களை தவிர்க்கவேண்டும்? என்பதில் நோயாளிகள் உறுதியாக இருந்தால் சிறுநீரக கற்கள் மீண்டும் வராது.

 

 

 

http://www.virakesari.lk/article/36575

 

 

தெற்காசியர்களிடையே அதிகரித்து வரும் தைரொய்ட் கோளாறுகள்

 

தெற்காசியர்களில் நான்கில் ஒருவர் தைரொய்ட் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள் என்றும், இதில் ஆண்களை விட பெண்கள் அதிகம் எனவும் அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

health_news_image_16_7_18.jpg

ஒவ்வொரு ஆணைக் காட்டிலும் பெண்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் எட்டு முதல் பத்து முறை தைரொய்ட் பாதிப்பிற்கு ஆளாகுவதும் அதிகரித்திருப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தைரொய்ட் சுரப்பின் கோளாறு காரணமாக ஒரு சிலருக்கு ஹைப்போ தைரொய்ட் பாதிப்பும், ஒரு சிலருக்கு ஹைப்பர் தைரொய்ட் பாதிப்பும் ஏற்படுகிறது. இதன் காரணமாக உடல் எடையில் மாற்றம். ஹோர்மோன் சுரப்பியின் சுரத்தலில் மாற்றம். ஹோர்மோன் சுரப்பியின் செயல்பாட்டில் மாற்றம் போன்றவை ஏற்படுகிறது. இதனால் நோயெதிர்ப்பு ஆற்றல் பாதிப்பிற்குள்ளாகிறது.

ஒவ்வொருவரின் உடலுறுப்புகள் சீராக இயங்கவேண்டும் என்றால் தைரொய்ட் சுரப்பிகளின் செயல்பாடு அவசியமாகிறது. இது பல காரணங்களால் சமச்சீரற்றத்தன்மையுடையதாக மாற்றம் பெறும் போது அவரவர்களின் உடல் நிலையைப் பொறுத்து ஹைப்போ தைரொய்ட் அல்லது ஹைப்பர் தைரொய்ட் பாதிப்பு உருவாகிறது.

ஹைப்பர் தைரொய்ட் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உடல் எடை குறைவு, தூக்கமின்மை, அதிக தாகம், அதிகமான வியர்வை, கை மற்றும் கைவிரல்களில் நடுக்கம், பலவீனம், வேகமான இதயத்துடிப்பு, பதற்றம் ஆகிய அறிகுறிகள் உண்டாகும். 

அதே போல் ஹைப்போ தைரொட் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உடல் எடை அதிகரிப்பு குறிப்பாக முகம் வீக்கமடைதல், சோர்வு, மந்தமான மனநிலை, இயல்பை விட குறைவான இதயத்துடிப்பு, உலர் சருமம், மாதவிடாய் சுழற்சியில் ஒழுங்கற்ற நிலை ஆகியவை அறிகுறிகளாகும்.

சிடி ஸ்கேன் பரிசோதனை மூலம் எம்முடைய தைரொய்ட் சுரப்பிகளின் தன்மை மற்றும் செயல்பாட்டை கண்டறியவேண்டும். அதற்கு பின் வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வைத்திய நடைமுறை மற்றும் வாழ்க்கை நடைமுறையை உறுதியாக பின்பற்றவேண்டும். இதனை அலட்சியப்படுத்தினால் கோமா நிலைக்குக் கூட சென்றுவிடலாம்.

டொக்டர்ஸ்ரீதேவி

தொகுப்பு அனுஷா.

http://www.virakesari.lk/article/36678

Link to comment
Share on other sites

மரபணு சோதனை மற்றும் ஆலோசனை பெறுவது ஏன்?

 

 பெற்றோர்களும் அல்லது திருமணமான தம்பதிகள் அனைவரும் அவர்களின் மரபணுவை சோதனை செய்து கொள்ளவேண்டும். அத்துடன் அது சார்ந்த ஆலோசனையையும் பெறவேண்டும் என்று வைத்திய  நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள். மேலும் இது குறித்து விழிப்புணர்வும் மேம்படவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

ஐந்து வயதிற்குட்பட்ட பிள்ளைகளின் இறப்பு ஆண்டுதோறும் 1.3 மில்லியன் என்ற கணக்கில் இருப்பதாக தெற்காசியாவிற்கான யுனிசெஃப் நிறுவனம் தன்னுடைய ஆய்வில் தெரிவித்திருக்கிறது. இதில் பத்து சதவீதத்தினர் மரபணு கோளாறுகளால் மரணத்தை எதிர்கொள்கின்றனர். முறையான மரபணு சோதனை மற்றும் ஆலோசனையைப் பெற்றிருந்தால் இவர்களின் மரணத்தை தடுத்திருக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தெற்காசிய நாடுகளுக்கு மரபணு கோளாறு என்பது மிகப்பெரிய வைத்திய  சவாலாகவே இருக்கிறது. தற்போது ஆரோக்கிய சவாலுள்ள பிள்ளைகள் பிறப்பதும், ஐந்து வயதிற்குள் இருக்கின்ற பிள்ளைகள் மரணிப்பதும் தடுக்கப்படவேண்டும்.

Parents.jpg

திருமணத்திற்கு பிறகு தம்பதிகள் மகப்பேற்றிற்காக உளவியல் ஆலோசனையைப் பெறுவது போல் மரபணு சோதனையையும், மரபணு சார்ந்த ஆலோசனையையும் கட்டாயம் பெறவேண்டும். இதன் மூலம் மூன்று வகையான பாதிப்புகளுடன் குழந்தை பிறப்பதை தவிர்க்கலாம் மற்றும் தடுக்கலாம். Down Syndrome.Patau Syndrome & Edward Syndrome ஆகிய மூன்று நோய்குறிகளை இத்தகைய சோதனைகள் மற்றும் ஆலோசனைகளின் மூலம் தடுக்கலாம்.

மரபணுக்களில் கோளாறுகளோ அல்லது அசாதாரண நிகழ்வுகளோ ஏற்படாமல் இருப்பதற்கு சில வழிமுறைகளையும் நாம் உறுதியாக பின்பற்றவேண்டும்.

ஆரோக்கியமான உறக்கம்,  போஷாக்கான சரிசமவிகித உணவு, நாளாந்தம் உடற்பயிற்சி, நடைபயிற்சி மற்றும் யோகா ஆகியவற்றை முறையாக பின்பற்றவேண்டும். மன அழுத்தத்தால் உற்பத்தியாக கார்டிசோல் என்ற இரசாயனத்தின் அளவை நல்ல உறக்கம் குறைக்கிறது. அதே போல் மது அருந்துவதையும், புகைப்பிடிப்பதையும் தவிர்க்கவேண்டும்

http://www.virakesari.lk/article/36775

Link to comment
Share on other sites

குழந்தைகளுக்கான Atrial Septal Defect பாதிப்பிற்குரிய சிகிச்சை

 

 

குழந்தைகளுக்கான Atrial Septal Defect பாதிப்பிற்குரிய சிகிச்சை முறைகள் பற்றி விளக்கம் தருகிறார் வைத்தியர் முத்துக்குமரன்.  

சில குழந்தைகள் பிறக்கும் போதே Atrial Septal Defect என்ற பாதிப்புடன் பிறக்கும்.  அதாவது இதயப்பகுதியில் ஓட்டை என்று குறிப்பிடுகிறோமல்லவா அது போன்ற பாதிப்புடன் பிறந்துவிடும். இதில் ஒரு சில பிள்ளைகள் வளர வளர குறித்த பாதிப்பு தானாகவே மறைந்துவிடும். ஒரு சில குழந்தைகளுக்குத்தான் இத்தகைய பாதிப்பு மறையாமல் அப்படியே இருக்கும். 

இவர்களுக்கு இதயத்தின் மூலம் நடைபெறும் இரத்தவோட்டம் குறைவான எல்லையில் மட்டுமே நிகழும். அதாவது ஓக்ஸிஜன் நிரம்பிய குருதி அல்லது ஓக்ஜிஜன் குறைவான குருதி என இரண்டில் ஒன்று இதயம் மற்றும் நுரையீரலுக்குள்ளேயே சுற்றி வரத் தொடங்கும். 

health.jpg

இதன் காரணமாக அந்த குழந்தையின் வளர்ச்சி மிக குறைவாகவே இருக்கும். ஒல்லியாகவே இருப்பார்கள். தன் வயதையொத்த பிள்ளைகளுடன் ஓடியாடி விளையாட இயலாது. எளிதில் சோர்வடைந்துவிடுவார்கள். மாடிப்படி ஏற முடியாது. சிறிது தூரம் நடந்தால் மூச்சிரைப்பு ஏற்படும். மார்பகத்தின் வடிவமே கூம்பு வடிவமானதாக இருக்கும். உறங்கும் போது கூட மூச்சிரைப்பு ஏற்படக்கூடும். 

இத்தகைய பாதிப்புள்ள பிள்ளைகளுக்கு முதலில் வைத்தியர்கள் 2 டி எக்கோ என்ற பரிசோதனையை மேற்கொள்வார்கள். இதன் மூலம் இதயத்தின் எந்த பகுதியில் ஓட்டை ஏற்பட்டிருக்கிறது என்பதை துல்லியமாக கண்டறியலாம். 

ஓட்டையை அளவைப் பொறுத்து சத்திர சிகிச்சை செய்து கொள்ளவேண்டும். ஒரு சில பிள்ளைகளுக்கு சத்திர சிகிச்சை இல்லாமல் அந்த ஓட்டையை அடைத்துவிட இயலும். 

health_news_image_18_7_18.jpg

அதே போல் இத்தகைய பாதிப்பின் அளவு அதிகமாக இருந்தால், அந்த பிள்ளைக்கு மூன்று முதல் ஐந்து வயதிற்குள்ளாகவே இத்தகைய சத்திர சிகிச்சையை மேற்கொண்டால், அதன் பிறகு அவர்களின் வளர்ச்சி இயல்பானதாகயிருக்கும். 

ஒரு சில குழந்தைகளுக்கு P D A மற்றும் V H D போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இவர்களுக்கும் சத்திர சிகிச்சை மூலம் தீர்வு காண்பது சரியானது

http://www.virakesari.lk/article/36845

 

 

முதுகெலும்பு தசைநார் பாதிப்பிற்கான ( Spinal Muscular Atrophy)  சிகிச்சை

 

 
 

மூளையையும் தண்டுவடத்தையும் இணைக்கும் பாலமாக செயற்படும் மோட்டார் நியூரான்கள் எனப்படும் செல்கள் பாரம்பரிய மரப கோளாறுகளால் பாதிக்கப்படும் போது முதுகெலும்பு தசைநார் பாதிப்பு ஏற்படுகிறது. 

இந்த பாதிப்புகளால் விழுங்குவதற்கும், சுவாசிப்பதிற்கும் தடை, இடையூறு, கோளாறு, சிரமம் போன்றவை ஏற்படலாம். இத்தகைய பாதிப்பு ஆறாயிரம் முதல் பத்தாயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு ஏற்படலாம். இதனை தொடக்கத்திலேயே கண்டறிந்தால் ஆறு மாத காலத்திற்கு தொடர் சிகிச்சையளிக்கப்பெற்றால் அவர்களை இந்த பாதிப்பிலிருந்து குணமடையலாம்.

வயதைப் பொறுத்தும், பரம்பரை, தசை பலவீனம், நோய் பரவும் வேகம் ஆகியவற்றைப் பொறுத்தும் இத்தகைய பாதிப்புகளை நான்கு வகைகளாக பிரிக்கலாம். 

இத்தகைய பாதிப்பிற்குள்ளான குழந்தைகள் நடக்க இயலாது அல்லது நடப்பதற்கு மிகவும் சிரமப்படுவார்கள்.

இவர்களின் மூட்டு, கை, தண்டுவடம், நுரையீரல் ஆகியவற்றின் வளர்ச்சியிலும் போதிய அளவிற்கு முன்னேற்றம் இருக்காது. இதற்காக தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய வைத்திய சிகிச்சைகளால் தொடக்க நிலையில் கண்டறியப்பட்டால் குணப்படுத்த இயலும்.

http://www.virakesari.lk/article/36884

Link to comment
Share on other sites

வியர்வை கொண்டு மன அழுத்தத்தை அறியலாம்

 

 
 

மனிதர்களின் வியர்வையை கொண்டே மன அழுத்தத்தை கண்டறியும் புதிய வாட்டர் ப்ரூஃப் பட்டையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

நம் உடலின் வியர்வையை கொண்டே மன அழுத்தத்தை நொடிகளில் கண்டறியும் வாட்டர் ப்ரூஃப் பட்டையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தோளில் அணியக்கூடிய சிறிய பட்டை நம் தோலில் ஒட்டிக் கொண்டதும் வியர்வையை உறிந்து கொண்டு கார்டிசல் அதவாது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹோர்மோனை நொடிகளில் கண்டறிந்து விடும்.

mental_stress.jpg

நாள் முழுக்க உடலில் கார்டிசல் அளவு இயற்கையாகவே ஏறி, இறங்கும், அந்த வகையில் வழக்கமான காஜ் மனிதர்களின் உடல் சோர்வு மற்றும் மன சோர்வை கண்டறிந்து, அவர்களது அட்ரினல் சுரப்பி சீராக வேலை செய்கிறதா என வைத்தியர்கள் சோதனை செய்ய முடியும்.

தற்சமயம் பயன்படுத்தப்படும் வழிமுறைகளில் ஆய்வகங்களில் இருந்து கிடைக்கும் முடிவுகளை தெரிந்து கொள்ள பலநாள் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. அந்த வகையில் பயனர் தனது உடலின் வியர்வையில் பட்டையை வைத்து, இதனை சாதனத்துடன் இணைத்தால் சில நொடிகளில் கொண்டு சில நொடிகளில் மன அழுத்தம் சார்ந்த விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

தற்சமயம் ப்ரோடோடைப் முறையில் சோதனை செய்யப்படும் குறித்த வழிமுறை வெற்றிபெறும் பட்சத்தில் மன அழுத்த அளவு சீராக இல்லாத நிலையில், பயனர்கள் வீட்டில் இருந்தபடியே முடிவுகளை அறிந்து கொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/37147

Link to comment
Share on other sites

எலும்பு திசுக்கள் அழிவு நோயின் அறிகுறிகளும், சிகிச்சை முறைகளும்

 

 

அ-அ+

ஆஸ்டியோ நெக்ரோஸிஸ் அவேஸ்குலர் நெக்ரோஸிஸ் ரத்த ஓட்டக் குறைபாடு காரணமாக எலும்புத்திசுக்கள் அழிவதே இந்நோய். இந்த நோய்கான சிகிச்சை முறையை பார்க்கலாம்.

 
 
 
 
எலும்பு திசுக்கள் அழிவு நோயின் அறிகுறிகளும், சிகிச்சை முறைகளும்
 
ஆஸ்டியோ நெக்ரோஸிஸ் அவேஸ்குலர் நெக்ரோஸிஸ் ரத்த ஓட்டக் குறைபாடு காரணமாக எலும்புத்திசுக்கள் அழிவதே இந்நோய், உடனே தடுக்கப்படாவிட்டால், எலும்புகள் சிறுசிறு துண்டுகளாக உடைந்து நொறுங்கும் அபாயம் ஏற்படும்.

பொதுவாக, இந்நோய் இடுப்பில் ஏற்படும். தவிர, தோள், மணிக்கட்டு, முழங்கால் ஆகிய இடங்களிலும் வரலாம். முழு ஆரோக்கியம் உடையவர்களுக்கு இந்நோய் வராது; ஆரோக்கிக் குறைபாடு உடையவர்களுக்கும், விபத்து காரணமாக காயம் அடைந்தவர்களுக்கும் வாய்ப்பு அதிகம்.

தொடை எலும்பு உடைவதால் எலும்புக்கு வரும் ரத்தத்தின் அளவு குறைந்து, இந்நோய் வரலாம். இடுப்பு, எலும்பு இடம் பெயரும் நபர்களில் 20 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு இந்நோய் வருகிறது.

நீண்ட நாட்கள் ஸ்டிராய்டு மருந்து எடுத்துக் கொள்பவர்களுக்கு இந்நோய் வரலாம். இம்மருந்துகளால், ரத்தக் குழாய்களில் படியும் கொழுப்புச்சத்தைக் கரைக்கும் ஆற்றலை உடல் இழக்கிறது. அதனால் கொழுப்புச் சத்து படிவதால், ரத்தக் குழாய்கள் சுருங்கி, ரத்த ஓட்டம் தடைபடுகிறது. நாளடைவில் எலும்புகள் சிதைகின்றன.

அதிகம் மது அருந்துபவர்களுக்கும், ரத்தக் குழாய்களில் கொழுப்புச் சத்து படிவது நேர்கிறது; அவர்களுக்கும் இந்நோய் வரும் வாய்ப்பு அதிகம். ரத்தம் உறைவது, வீக்கம், ரத்தக் குழாய்களில் வீக்கம் ஆகியன காரணமாகவும், எலும்புக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறையும்.

சில வியாதிகள் காரணமாகவும் இந்நிலை வரலாம். அவை:-

பரம்பரை காரணமாக வரும் வளர்ச்சிதை மாற்றக் குறைபாடு காரணமாகவும் உறுப்புக்களில், கொழுப்பு சத்துக் கள் படியலாம்.
ரத்த சோகை காரணமாக வர லாம்.
கணையத்தில் ஏற்படும் வீக்கம் காரணமாக வரலாம்.
எச்.ஐ.வி. தொற்று காரண மாக வரலாம்.
கதிர்வீச்சு சிகிச்சையால் வரலாம்.

ஆட்டோ இம்யூன் நோய் எனப்படும் உடலின் நோய் எதிர்ப்புத்திறனே உடலுக்கு எதிராக மாறும்போது உண்டாகும் நோய் களில் வரலாம்.உடற்பகுதிகள், திடீரென அழுத்தப் படும்போது, இயல்புநிலை மாறி அழுத்தப்படும் நோய் வருகிறது; அப்போது ரத் தத்தில் வாயுக் குமிழ்கள் உருவாகும்.மேற்கூறிய நோய்கள் காரண மாக, இவ்வியாதி உருவாகலாம். நோய்வரக் காரணமான நோயைக் கண்டறிந்து, அதற்கு முதலில் சிகிச்சை தர வேண்டும்.

அறிகுறிகள்:

ஆரம்ப கட்டத்தில், அறிகுறிகள் ஏதும் தென்படா விட்டாலும், நாட்கள் கழியும்போது, பாதிக்கப்பட்ட எலும்பு அதிக அழுத்தம் பெறும்போது வலியுண்டாகும்; வலி நிரந்தரமாகும்; எலும்பும், அதன் பக்கத்திலிருக்கும் மூட்டுக்களும் பாதிக்கப்படும் போது, அவற்றை அசைப்பது கடினமாகி விடும்; ஆரம்ப கட்டத்திலிருந்து, தீவிர நிலை அடைய, பல மாதங்கள்ஆகலாம்.

சிகிச்சை:

பாதிக்கப்பட்ட இடங்களின் செயல்பாட்டை உண்டாக்குவது
எலும்புகள் மேலும் சேதமடையாமல் காப்பாற்றுவது
வலியைக் குறைப்பது
ஆகியன சிகிச்சையின் நோக்கம் ஆகும்.

சிகிச்சை எவ்வளவு தூரம் பலன் தரும் என்பது:

அவரவர் வயது, நோயின் தீவிரம், பாதிக்கப்பட்ட இடத்தைப் பொறுத்து, பாதிப்பின் அளவைப் பொறுத்து, பாதிப்பிற்கான காரணத்தைப் பொறுத்து அமையும்.
பாதிப்பிற்கான காரணம் அறியப்பட்டபின் பாதிப்பை நீக்குவதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்படும். எடுத்துக்காட்டாக, ரத்தம் உறைந்து கட்டியாவதன் காரணமாக இந்நோய் உண்டாகி இருந்தால், ரத்தக் கட்டிகளைக் கரைப்பதற்கான மருந்துகள் தரப்படும்.

ரத்தக்குழாய்களில் வீக்கம் நோய்க்கு காரணமாக இருந்தால், வீக்கத்தை குறைக்கும் மருந்துகள் தரப்படும். ஆரம்ப கட்டத்தில் இந்நோய் இருப்பது அறியப்பட்டால், வலியைக் குறைப்பதற்கும் மருந்துகள் தரப்படும். பாதிக்கப்பட்ட மூட்டுக்களை அசைப்பதற்கு, பயிற்சிகள் சொல்லிக் கொடுக்கப்படும். தகுந்த உபகரணங்களை உபயோகித்து, பாதிக்கப்பட்ட இடம் அதிகம் அழுத்தப்படாமல் செயல்பட வைப்பர்.(எ.காட்டு ஊன்றுகோல்,) அறுவை சிகிச்சையின்றி வேறு முறைகளால் இந்நோய் தீவிரமாவது தடுக்கப்பட்டாலும், பெரும்பாலானவர்களுக்கு, அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.

அறுவை சிகிச்சை வகைகள்:

ஆரோக்கியமான எலும்பை ஓரிடத்தி லிருந்து எடுத்து, பாதிக்கப்பட்ட எலும்புக்கு மாற்றாக வைப்பர்.
பாதிக்கப்பட்ட மூட்டினை வெளியேற்றிவிட்டு செயற்கையாக முட்டியை பொறுத்துவது.
எலும்பின் உட்பகுதியின் ஒரு பகுதியை வெளியே எடுத்து விட்டு, உள்ளே புது ரத்தக் குழாய்கள் உருவாக இடம் தருவது.
இடுப்பிலிருக்கும் ரத்த ஓட்டம் குறைந்து எலும்பை நீக்கி விட்டு, அதற்குப் பதிலாக ரத்த ஓட்டம் அதிகம் உள்ள எலும்பை மாற்றி அமைப்பது.

ஆயுர்வேத சிகிச்சை:

3 தோஷங்களின் பங்கு:

ஆயுர்வேத சித்தாந்தப்படி, வாத தோஷ நிலைப்பாடு உடலின் எந்த இடத்தில் மாறுபடுகிறதோ, அதிகமாகிறதோ, அங்கு திசுக்களின் அழிவு நேருகிறது; அதனால் நெக்ரோஸிஸ் வியாதி உண்டாகிறது.

வாத தோஷம் நிலைப்பாடு மாறுபடுவது, இந்நோய்க்கு அடிப்படைக் காரணமானாலும், சில சமயங்களில் பித்த தோஷம் இவ்வியாதியைத் தூண்டக் காரணமாகின்றது.

ரத்தக் குழாய்களில் கொழுப்புச் சத்து படிந்து, ரத்த ஓட்டம் தடைபட கபதோஷம் காரணமாகின்றது. ஆகவே, வாத தோஷ நிலைப்பாட்டை சமனப்படுத்தி, திசுக்கள் மேலும் அழியாமல் காக்க வேண்டும்.

பித்த தோஷம், வியாதியை, தூண்டாமல் காக்க வேண்டும். கபதோ ஷத்தைச் சமனம் செய்து, மீண்டும் ரத்தக் குழாய்களில் படிந்த கொழுப்பு படிமத்தைக் கரைக்க வேண்டும். எலும்புத் திசுக்களுக்கான ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய வேண்டும். அழிந்த திசுக்களைப் புதுப்பிக்க வேண்டும். பிற காரணங்கள் ஏதும் இருந்தால் அதற்கான சிகிச்சை முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

201807310759158978_1_Bone-tissue-d1._L_styvpf.jpg

நோய்க்கு அடிப்படையான காரணங்களை அறிந்து சிகிச்சை தருவது:

எலும்பு முறிவு ஏற்பட்டு அதனால் எலும்புத் திசுக்களுக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப் படுகிறதா? என்பதை அறிந்து, எலும்பு முறிவை முதலில் சரி செய்ய வேண்டும். மூட்டுக்கள் ஏதாவது இடம் பெயர்ந்திருந்தால், அதைச் சரி செய்ய வேண்டும். நோயாளி ஸ்டீராய்டு மருந்து எடுத்துக் கொண்டிருந்தால், அதை மெதுவாக் குறைத்து, பின் முழுதும் நிறுத்தி, ஸ்டீராய்டு மருந்துக்கு பதிலாக ஆயுர்வேத மருந்து கொடுத்து எந்த வியாதிக்காக ஸ்டீராய்டு மருந்து கொடுக்கப்பட்டதோ, அவ்வியாதியைக் குணமாக்க வேண்டும்.

நோயாளி அதிகமாக மது அருந்திக் கொண்டிருந்தால், அதை நிறுத்த வேண்டும். இவை தவிர வேறு காரணங்கள் இருந்தால், அதற்கு தகுந்து சிகிச்சை தரப்பட வேண்டும். நோய் ஆரம்ப கட்டத்தில் இருப்பின், ஆயுர்வேத சிகிச்சை நல்ல பலன் தரும்; நோய் முற்றிய நிலையில், நோய் காரணமாக, ரத்தக் குழாய்களும், எலும்பும் மேலும் சேதம் அடையாமல் மட்டும் தடுக்கலாம். சிலசூழலில் அறுவை சிகிச்சையும் அவசியமாகலாம். இவையெல்லாவற்றையும் கருத்தில் கொண்டே ஆயுர்வேத சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும்.

ஆயுர்வேத மருந்துகள்:

குக்குறுதிக்தகம் கஷாயம், யோகராஜ குக்குறுரதிக்தகம் கஷாயம், கந்த தைலம், ராசனாபஞ்சகம் கஷாயம், தன்வந்த்ரம் (101) தசமூல கஷாயம்.

வெளியே தடவ:

முறிவெண்ணை, தன்வந்த்ரம் தைலம், பலா அஷ்வகந்தாதி தைலம், தசமூல சூரணத்தை பாலில் அரைத்து பத்து போடலாம். பாதிக்கப்பட்ட இடத்தில் மேற் சொன்ன முறிவெண்ணை, தன்வந்த்ரம் தைலம் ஆகியவற்றை(பிச்சு) துணியில் நனைத்துப் போடலாம். வாயு அதிகம் உண்டாகிய பொருட்களை உண்ணக்கூடாது.

சையாட்டிக் நோய்க்கான சிகிச்சை முறை

சையாட்டிக் நோயை குணப்படுத்தும் ஆயுர்வேத சிகிச்சை முறையை பற்றி காண்போம். பஞ்சகர்மா சிகிச்சை முறை மூலமும், உள்ளே சாப்பிடக் கொடுக்கும் மருந்துகள் மூலமும் சையாட்டிகா நோய்க்கு, ஆயுர்வேதம் நல்ல தீர்வு காண்கின்றது.(கிரித்ரசி) ஆயுர்வேதம் சையாட்டிகாவை கிரித்ரசி என்று கூறுகிறது. இதற்கு கழுகு என்று பொருள். பாதிக்கப்பட்ட நோயாளியின் நடை கழுகின் நடைபோன்று இருக்கும்; மேலும் பாதிக்கப்பட்ட நரம்பு கழுகின் அலகினைப் போன்று இருக்கும்.

ஆயுர்வேதம், சையாட்டிகா நோய், வாத தோஷம் நிலை மாறுபடுவதால் வருவதாக கொள்கிறது. உடலின் அசைவுகளுக்கும், செயல்பாடுகளுக்கும் காரணமானது வாத தோஷம்; கபதோஷம் உடலின் பகுதிகளின் உராய்வுக்கும், உடலில் உள்ள திரவங்களுக்கும் காரணமானது. வாத தோஷ மாறுதலோடு, சில சமயம் கபதோஷ மாறுபாடு காரணமாகவும் சையாட்டிகா நோய் வரும்.

ஆயுர்வேதம், நிலைமாறுபாடு ஏற்பட்டுள்ள வாத தோஷம் அல்லது வாத கப தோஷங்களை நிலைப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதன்மூலம் ஆரோக்கியத்தை மீட்கிறது.ஆயுர்வேத சிகிச்சை, மூன்று நிலைகளைக் கொண்டது. முதலில் சோதனம் என்னும் கழிவு நீக்கம் மேற்கொள்ளப்படும். செரிமானக் கோளாறு, வளர்ச்சிதை மாற்றக் கோளாறு மற்றும் நோயின் காரணமாக உண்டாகும் கழிவுகளை வெளியேற்றுவது முதன்மையானது.சமனம் என்னும் மாறுபட்ட செயல்பாடுகளுக்கான காரணிகளை சரிபடுத்துதல்.

ரசாயனம் என்னும் புத்துணர்வு சிகிச்சை. நோய்வாய்ப்பட்ட திசுக்களை மேம்படுத்தி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்.

சிகிச்சைகள்:

இலைக்கிழி, நவரக்கிழி, பிழிச்சல், தாரா வஸ்தி ஆகிய சிகிச்சை முறைகள், நோயாளி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும்போது தரப்படும்.

மூலிகைகள்:

துத்தி(சாரணை) நொச்சி, ஆமணக்கு, முருங்கை, சித்தரத்தை, நாவல் உளுந்து ஆகியவை பலன் தருவன.

மருந்துகள்:

யோகராஜ குக்குறு, கோக்ஷீர குக்குறு, பிரசாரின்யாதி கஷாயம், சஹஸ்ராதி கஷாயம், ராசன ஏலண்டாதி கஷாயம், புனர்னவாதி கஷாயம், ராசன ஷபீதக கஷாயம் ஆகியன பலன் தரும்.

எடுத்துக் கொள்ளக் கூடிய உணவுகள்:

உளுந்து, கொள்ளு, கோதுமை, சிவப்பரிசி, நெல்லிக்காய், திராட்சை, முரு-ங்கை, மாதுளை, புடலை, பால், நெய்.

மேலே தடவ:

* தில தைலம், ஏரண்ட தைலம் ஆகியவற்றை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவலாம். * மாமிச சூப் கொண்டு தாரா செய்யலாம். * தன ஆம்லா தைலம் கொண்டு தாரா செய்யலாம். * தவிர்க்க வேண்டிய பொருட்கள்: * நிலக்கடலை, கடலைப்பருப்பு, ராஜ்மா ஆகியவை.

தவிர்க்க வேண்டியவை:

* அதிகமான உடற்பயிற்சி * இயற்கை உபாதைகளை அடக்குதல் * பகல் தூக்கம் * இரவில் விழித்திருத்தல் * வாகனங்களில் அதிகம் பயணித்தல் (குதிரை, பைக்) ஆகியவை கண்டிப்பாக தவிர்க்கபட வேண்டும்.

https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/07/31075916/1180495/Bone-tissue-disease-symptoms-and-treatment.vpf

Link to comment
Share on other sites

தாய்ப்பாலை புகட்டுவதை தவிர்க்காதீர்கள்.

 

இன்று ஒகஸ்ட் முதலாம்  திகதி முதல் 7 ஆம் திகதி வரை உலக தாய்ப்பால் வாரம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் எவ்வளவு முக்கியம் என்பதை உலக சுகாதார நிறுவனம் பல ஆச்சரியமான தகவல்களை வெளியிட்டிருக்கிறது.

அதன்படி உலகில் பொருளாதார அளவில் பின்தங்கிய மற்றும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் பிறக்கும் சுமார் எட்டு கோடி குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பதில் பல சவால்கள் இருக்கிறது. இவர்களுக்கு முறையாக தாய்ப்பால் கிடைப்பதில்லை. அதே போல் தெற்காசிய நாடுகளில் மூன்று கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பதில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

குழந்தை பிறந்தவுடன் தாயாரின் மார்பகத்தில் சுரக்கும் சீம்பாலின் வைத்திய பலனைப் பற்றி முழுமையாக பெண்கள் அறிந்திருக்கவில்லை. இந்த சீம்பால் ஒவ்வொரு குழந்தைக்கும் முக்கியமானது.

health_news__image_1_8_18.jpg

அதன் வளர்ச்சிக்கும், அந்த குழந்தையின் நோயெதிர்ப்பு சக்திக்கும் இந்த சீம்பாலில் போதிய அளவிற்கு ஊட்டச்சத்து நிறைந்திருக்கிறது. அதே போல் இந்த சீம்பாலை புகட்டுவதன் மூலம் பிறந்து முதல் மாதத்திலேயே மரணத்தைச் சந்திக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 22 சதவீதம் வரை தடுக்கப்படுகிறது. அதே போல் குழந்தைகள் பிறந்து முதல் ஆறு மாதம் வரை தாய்ப்பாலை மட்டுமே புகட்டுவது ஆரோக்கியமானது.

அதே போல் ஒரு சில பெண்களுக்கு தாய்ப்பால் போதிய அளவிற்கு சுரக்கவில்லை என்றால் அவர்கள் உடனடியாக வைத்தியர்களை சந்தித்து ஆலோசனையையும், அவர்கள் காட்டும் வழிமுறையையும் பின்பற்றவேண்டும். அப்போது தான் எதிர்கால சமுதாயம் ஆரோக்கியமாக இருக்கும். தாய்ப்பாலை தயக்கமின்றி புகட்டுவோம். பிள்ளைகளின் வருங்கால ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவோம்.

 

 

பெண்கள் அதிகமாக நீரிழிவால் பாதிக்கப்படுவதேன்?

 

உலகில் 400 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், இதில் சரிபாதி பெண்கள் என்றும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. 

இது குறித்து வைத்திய நிபுணர் நல்லபெருமாள் தெரிவித்ததாவது,

முதலில் நீரிழிவு பரம்பரை நோய் என்று நினைத்தோம். ஆனால் உண்மையில் அப்படி எதுவும் இல்லை. நாம் எவ்வாறான உணவுகளை உட்கொள்கிறோம்? எவ்வளவு நேரம் உடற்பயிற்சிகாக ஒதுக்குகிறோம்? எவ்வாறான மன அழுத்தத்தில் இருக்கிறோம்? உறக்க மின்மையால் எவ்வளவு பாதிக்கப்படுகிறோம்? எவ்வளவு நேரம் ஒரேயிடத்தில் அமர்ந்து பணியாற்றுகிறோம்? என்பதையெல்லாம் பொறுத்து தான் ஒருவருக்கு நீரிழிவு நோய் வருகிறது அல்லது வராமல் தடுக்கப்படுகிறது.

health_news_image_30_7_18.jpg

சென்ற தலைமுறையில் பெண்கள் அரைப்பது, இடிப்பது, புடைப்பது, துடைப்பது, பெருக்குவது என இல்லப்பணிகளை அயராது செய்து வந்தனர். அதே போல் வெளியில் எங்கேனும் செல்வதாக இருந்தால் நடந்தே சென்றார்கள். ஆனால் இன்று எம்முடைய வாழ்க்கை நடைமுறை மாறிவிட்டது. விளிம்பு நிலை மக்களிடம் கூட மிக்ஸி, கிரைண்டர் போன்ற மின் சாதனங்கள் இருக்கின்றன. இதனால் அவர்களின் சமையலறை பணிநேரம் குறைந்தது. ஆனால் நீரிழிவு நோய் ஆட்கொண்டுவிட்டது.

அதே சமயத்தில் இயற்கையாக பெண்களுக்கு பூப்பெய்தல், மாதவிடாய், கர்ப்பம் தரித்தல், பேறுகாலம், பிரவசம், மாதவிலக்கு நிற்பது என எல்லாம் பெண்களுக்கே இருக்கிறது. இதன் காரணமாகத்தான் உலகளவில் அதிகளவிலான பெண்களுக்கு இதய பாதிப்பும், பக்கவாதமும் ஏற்படுகிறது. மன அழுத்தமும், நீரிழிவும் உருவாகிறது. 

அத்துடன் பெண்கள் தங்களின் வருவாயை பெருக்கிக் கொள்ள பணி செய்கிறார்கள். இதனால் வீடு அலுவலகம், மீண்டும் வீடு என பல இடங்களிலும் உள்ள பல்வேறு உளவியல் காரணிகளால் பாதிக்கப்பட்டு, மன அழுத்தத்திற்கும் ஆளாகிறார்கள். அத்துடன் வருவாய் குறைவாக இருக்கும் பெண்களில் பெரும்பாலானவர்கள் சுய வைத்தியம் செய்து கொள்வதில் தான ஆர்வம் காட்டுகிறார்கள். 

பெண்கள் நீரிழிவு வராமல் தற்காத்துக் கொள்ளவேண்டும் என்றால் பதினான்கு வயது முதலே துரித உணவு வகைகளை முற்றாக தவிர்த்துவிடவேண்டும். காய்கறிகள், பழங்கள் மற்றும் போஷாக்கான உணவுகளை  உட்கொள்ளவேண்டும். உடற்பயிற்சிகளையும் தவறாமல் செய்து வரவேண்டும். முன்பெல்லாம் சமையலில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றை சேர்த்துக் கொண்டார்கள். 

ஆனால் தற்போது ஒரு சில எண்ணெய்களை மட்டுமே தொடர்ந்து பயன்படுத்துகிறோம். இதன் காரணமாகவும் இதய பாதிப்பு வரக்கூடும். பேறு காலத்தில் நீரிழிவு நோய் வராமல் இருக்கவேண்டும் என்றால், திருமணத்திற்கு ஆறு மாதம் முன்பிருந்தே உணவு வகைகளையும், உடற்பயிற்சிகளையும் திட்டமிட்டு சரியான நேரத்தில் செய்து வரவேண்டும். இப்படி செய்து வந்தால் பேறு கால நீரிழிவு நோயை வராமல் தடுக்கலாம்.’ என்றார்.

http://www.virakesari.lk/article/37552

Link to comment
Share on other sites

Hiatal Hernia என்ற பாதிப்பிற்குரிய சிகிச்சை

 

நெஞ்சிற்கும், வயிற்றிற்கும் இடையே உள்ள உதரவிதானம் என்ற பகுதியின் வழியாக எம்முடைய உடலில் இருக்கும் உணவுக்குழாய் செல்கிறது. நாம் உட்கொள்ளும் உணவு, இந்த உணவுக்குழாய் வழியாக பயணித்த பிறகு தான் இரைப்பைக்கு சென்றடைகிறது. 

health_imkage_3_8_18.jpg

இந்த பகுதியில் உணவுகுழாயைச் சுற்றி நெகிழும் தன்மையுடைய சவ்வு படலம் ஒன்று இருக்கிறது. இதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் பாதிப்பு ஏற்படுகிறது. முதுமையின் காரணமாகவும், வேறு சில காரணங்களுக்காகவும் இந்த அமைப்பில் துளை போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதன் போது இந்த துளையின் வழியாக இரைப்பையின் மேற்பகுதி நெஞ்சிற்குள் நுழைந்துவிடும். இதைத்தான் ஹயாட்டல் ஹெர்னியா என்று மருத்துவத்துறை குறிப்பிடுகிறது.

உணவு உட்கொண்ட பின் நெஞ்செரிச்சல் ஏற்படும். ஏப்பம், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளும் ஏற்படும். ஒரு சிலருக்கு மாரடைப்பு ஏற்பட்டதைப் போல் நெஞ்சு வலிக்கும். இதற்கு கேஸ்ட்ரோ எண்டாஸ்கோப்பி என்ற பரிசோதைனையை செய்தால் பாதிப்பின் வீரியம், தன்மை போன்றவை துல்லியமாக தெரியவரும். ஒரு சிலருக்கு இதன் பாதிப்பு தீவிரமாக இருந்தால் லேப்ராஸ்கோப்பி என்ற சத்திர சிகிச்சை அவசியமாகும்.

இதனை தடுக்கவேண்டும் என்றால், தேவைக்கு ஏற்ற வகையில் பசியாறவேண்டும். சூடாக எதையும் உணவுஉட்கொள்ளவோ பருகவோ கூடாது. உணவுஉட்கொண்ட உடன் குனிந்து பணியாற்றக்கூடாது.

http://www.virakesari.lk/article/37805

Link to comment
Share on other sites

குழந்தைகளின் இடக்கை பழக்கம் ஒரு குறைபாடா?

 
அ-அ+

தங்கள் குழந்தை இடது கை பயன்படுத்துபவர் என்று அறிந்தவுடன் அதிர்ச்சியடையும் சில பெற்றோர் வலது கையை பயன்படுத்தும்படி கட்டாயப்படுத்துவார்கள்.

 
 
 
 
குழந்தைகளின் இடக்கை பழக்கம் ஒரு குறைபாடா?
 
உலகில் 85 சதவீதம் பேர் வலது கை பழக்கம் உடையவர்கள். மீதம் இருப்பவர்கள் இடக்கை பழக்கம் கொண்டவர்கள்.

நமது மூளை வலது, இடது என இரு பகுதிகளைக் கொண்டது. நமது உடலின் வலது பாகம், உதாரணமாக வலது கை, வலது கால் போன்றவைகளின் இயக்கம் மூளையின் இடது பகுதியிலிருந்து இயக்கப்படுகிறது. அதே போல நமது உடலின் இடது பாகம் மூளையின் வலது பகுதியிலிருந்து இயக்கப்படுகிறது.

ஆனால், முன்பு குறிப்பிட்டபடி சுமார் பதினைந்து சதவீதத்தினருக்கு இது மாறுபட்டிருக்கும்.

இப்படி மூளையில் வலம், இடம் மாறுபாட்டிற்கு முக்கியக் காரணம் நமது மரபணுக்களில் உள்ள மாற்றமே. பெற்றோரில் ஒருவருக்கு இடதுகை பழக்கம் இருந்தால் குழந்தைகளில் அந்த மரபணு ஒருவேளை கடத்தப்பட்டால், அவர்களும் இடது கை பழக்கமுடையவர்களாக வருவார்கள்.

இது எந்த வகையிலும் குறைபாடு ஆகாது. மிக இயல்பானது.

நமது மூளையின் இடது பகுதியில் தர்க்க ரீதியான முடிவுகள், கணிதம், அறிவியல் போன்றவைகள் இயங்கும் வகையில் அமைந்துள்ளன. வலது பகுதியில் கலை, படைப்பு, கற்பனை, இசை, உள்ளுணர்வு இவைகள் உருவாகின்றன.

பெரும்பான்மையான 85 சதவீதத்தினருக்கு மொழியாற்றல், பேச்சு இவை மூளையின் இடது பகுதியிலிருந்து கட்டுப்படுத்தப்படுகின்றது. அதுமட்டுமின்றி நமது வலது கையின் செயல்பாடுகளை மூளையின் இடது பகுதி இயக்குகிறது. நாம் அறிந்த மொழியையும், சொல் வளங்களும், எழுத்துகளும் இப்பகுதியில் தான் பதிந்து உள்ளது.

நமது வலது கையின் செயல்பாடுகளுக்கான பகுதியும் இங்கு உள்ளதால், வலது கையில் எழுதுவது இயல்பாகவும் இலகுவாகவும் உண்டாகிறது. இடதுகை பழக்கம் உடையவர்களுக்கு இது மூளையில் அப்படியே நேர் எதிராக வலது பக்கமிருக்கும். ஆகவே அவர்கள் இடது கையை பயன்படுத்துவதுதான் சரியாக இருக்கும்.

தங்கள் குழந்தை இடது கை பயன்படுத்துபவர் என்று அறிந்தவுடன் அதிர்ச்சியடையும் சில பெற்றோர் வலது கையை பயன்படுத்தும்படி கட்டாயப்படுத்துவார்கள். ஏதாவது பொருளை எடுக்க வேண்டும் என்றால், குழந்தையின் இடது கைதான் முதலில் வரும். அதைப் பார்த்தவுடன் பதறி, வலது கையை பயன்படுத்த சொல்லிக் கொடுப்பார்கள்.

முதன் முதலாக எழுத கற்றுக் கொள்ளும்போது, குழந்தையை வலது கையால் எழுதுகோலை பயன்படுத்த வைப்பார்கள். இயற்கையாக இடது கையால் இலகுவாக செய்ய வேண்டிய ஒன்றை கடினத்துடன், குழப்பத்துடனும் பழக வேண்டி இருக்கும். சிரமப்பட்டாலும், கொஞ்ச நாளில் குழந்தை வலது கைக்கு பழகிவிடும். பெற்றோர் மகிழ்ச்சி அடைவர்.

நாம் இங்கு புரிந்துக் கொள்ளவேண்டியது, இதற்கு அந்த குழந்தை கொடுக்க வேண்டிய விலை அதிகம்.

201808140822523071_1_children-left-hand-Habit._L_styvpf.jpg

அதாவது, இடது கையாளர்களை வலது கைக்கு மாற்றும்போது இன்னொரு சிக்கலும் உருவாகிறது. அவர்களின் இடது பகுதி மூளைக்கு அதிக அளவில் பாரம் ஏற்படுகிறது. மேலும், அவர்களது வலது பக்கத்து மூளையின் வேலை பளு கணிசமாக குறைகிறது. இதனால் மூளையின் வலது, இடது பகுதிகளின் செயல்பாடுகளில் சமநிலை பாதிக்கப்படுகிறது.

வலது பகுதி குறைவாக வேலைசெய்து பழகிக் கொள்வதால், அப்பகுதியிலுள்ள படைப்பு, கற்பனை போன்றவற்றுக்கு ஊற்றாக விளங்க வேண்டியவைகளும் மட்டுப்பட வாய்ப்பு உள்ளது.

பல ஆய்வுகள் கூறுவதுயாதெனில், இடது கை பழக்கம் உள்ளவர்கள், அதிக அளவில் வலது பக்க மூளையை பயன்படுத்துவதால், அவர்களிடம் படைப்பாற்றல் அதிகமாக காணப்படும் என்று கூறுகின்றனர். உலக புகழ்ப்பெற்ற அறிஞர்கள், அறிவியலாளர்கள், விளையாட்டு வீரர்கள், தலைவர்கள் என பல்லாயிரக் கணக்கானோர் இடதுகை பழக்கம் கொண்டவர்களுக்கு உதாரணமாக உள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதிகள் ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், பராக் ஒபாமா தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில், நமது நாட்டில் உலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், அன்னை தெரசா, அமிதாப் பச்சன் போன்றவர்கள் இடது கை பழக்கமுடையவர்களே.

அதே நேரத்தில், இவ்வுலகில் மனிதனின் கண்டுபிடிப்புகள், உருவாக்கப்படும் பொருட்கள் எல்லாம் பெரும்பான்மை மக்களான வலது கை பழக்கமுள்ளவர்களுக்கு மட்டுமே உள்ளன. இடக்கையாளர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதே இல்லை.

அன்றாடம் பயன்படுத்தும் பாட்டில், பெட்டி, கதவு கைப்பிடி, கத்தரிக்கோல் என வலது கைப்பழக்கம் உடையவர்களுக்கு வசதியாக உருவாக்கப்படுகிறது. இவற்றை இடது கைப்பழக்கம் உடையவர்கள் சிரமப்பட்டு பயன்படுத்த வேண்டியுள்ளது. அல்லது பயன்படுத்த முடியாமலே போய்விடுகிறது.

அதுமட்டுமின்றி நமது சமூகத்தில் உலவி வரும் எண்ணற்ற மூட நம்பிக்கைகளில் ஒன்று, ஒரு பொருளை இடது கையால் அளிப்பது தவறானது மற்றும் மரியாதை குறைவானது என்று கருதுவது. இடது கையாளர்களை இது எந்தெந்த வகையில் பாதிக்கும் என்று உணர வேண்டும்.

பல வீடுகளில் குழந்தை வளரும்போது இடது கையை பயன்படுத்தும்போது, தப்பு என்று சொல்லி வலது கைக்கு பழக்குவர். சில மேதாவிகள் இதனை மூளை குறைபாடு என்று கருதி அதை சரி செய்ய முயற்சிப்பது மோசமான ஒன்று.

ஏற்கனவே சொன்னது போல், இடது கைப் பழக்கம் என்பது குறைபாடு அல்ல. மனிதர்கள் எப்படி தோற்றம், அமைப்பு, நிறத்தில் வெவ்வேறு வகையினர் உள்ளனரோ அதுபோன்று இவர்களும் இன்னொரு வகையினர். அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் சிறந்த பண்பாக இருக்க முடியும்.

மாறாக எங்களைப் போன்று நீயும் வலதுகைக்கு மாறவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சமூக நீதிக்கு எதிரானது. மேலும் அது பெரும்பான்மையினரின் ஆதிக்க மனப்பான்மைக்கு வழிவகுப்பது போல் ஆகிவிடும்.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 13-ந்தேதி உலக இடக்கை பழக்கமுடையவர்கள் நாளாக நினைவு கூறப்படுகிறது. அதை வாய்ப்பாக கருதி, மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்கவும், அவர்களும் நம்மை போன்றவர்கள் என்கிற மனப்பான்மையை வளர்க்கவும், இவ்வுலகத்தில் உருவாக்கப்படும் பொருட்களை அவர்களும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கவும் வழிக்கோலுவோம்.

https://www.maalaimalar.com/Health/ChildCare/2018/08/14082252/1183747/children-left-hand-Habit.vpf

Link to comment
Share on other sites

பல் துலக்கியபிறகும் நீடிக்கும் வாய்நாற்றம் நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்! #Alert #Video

 
பல் துலக்கியபிறகும் நீடிக்கும் வாய்நாற்றம் நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்! #Alert #Video
 

ருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, அவர் ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி சற்று விலகிச் செல்கிறார் என்றால், உங்கள் வாயிலிருந்து நாற்றம் வருவதும் ஒரு காரணமாக இருக்கலாம்! குடும்பத்தில் இருப்பவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் சுட்டிக்காட்டும்போதுதான் ஒருவருக்கு வாய் நாற்றம் ஏற்படுவது  தெரியவரும். எனவே, தினமும் ஒரு முறையாவது, வாய் நாற்றம் ஏற்படுகிறதா என்று சோதித்துப் பார்ப்பது நமக்கும் நல்லது, நமக்கு அருகிலிருப்பவர்களுக்கும் நல்லது. முக்கியமாக உடலில் இருக்கும் நோய்களை அறிவிப்பதற்கான குறிகுணமாகக்கூட வாய் நாற்றம் ஏற்படலாம். 

வாய் நாற்றம்

பெரும்பாலான மருந்தகங்களில் கண்களைக் கவரும் வகையில் பளிச்சென தென்படுவது, வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் ‘மவுத் வாஷ்களும்’, ’மவுத் ஃப்ரெஷ்னர்களும்’ தான். இவை வாய்ப் பகுதியில் உண்டாகும் நாற்றத்தை தற்காலிமாகத் தடுக்கவே பயன்படுகின்றன. வாய் நாற்றத்துக்கான காரணத்தைக் கண்டறியாமல், வாழ்க்கை முழுவதும் மவுத் வாஷ்களையே நம்பிக்கொண்டிருப்பதுதான் தவறு. 

 

 

வாய் நாற்றம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன, வராமல் தடுப்பதற்கு என்ன செய்யலாம்?

வாய் சுகாதாரம்

காலையில் எழுந்ததும் இருக்கும் வாய் நாற்றம், பல் துலக்கியதும் மறைந்துவிடும். ஆனால், பல் துலக்கிய பிறகும், நாள் முழுவதும் நாற்றம் நீடிக்கிறது என்றால், முதலில் கவனிக்க வேண்டியது, வாய்ப் பகுதியைத்தான். வாயில் நாற்றம் ஏற்படுவதற்கு ஈறுகளில் வீக்கம், ரத்தம் கசிதல், பற்சொத்தை, பல் இடுக்குகளில் சீழ் பிடிப்பது, நாக்கைச் சரியாகச் சுத்தம் செய்யாமல் இருப்பது போன்றவை முக்கியக் காரணிகளாகும். 

 

 

பற்கள்

சாப்பிட்டு முடித்தவுடன் பல் இடுக்குகளில் தங்கும் உணவுத் துகள்கள், வாய்ப் பகுதியிலிருக்கும் பாக்டீரியாக்களுடன் கூட்டு சேர்ந்து நாற்றத்தை உருவாக்கும். குறிப்பாக இடைவெளி அதிகமுள்ள பற்கள் கொண்டவர்கள், பற்களுக்கிடையே உணவுப் பொருள்கள் தங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். நாவறட்சி அதிகமிருந்தாலும், வாயில் நாற்றம் உண்டாகும். நாவறட்சி ஏற்படாமல் இருக்க, தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் அவசியம். 

மற்ற காரணங்கள்

பீனிச நோய்கள் (Sinusitis), மூக்கில் சதை வளர்ச்சி, தொண்டை அழற்சி, நுரையீரல் பாதை தொற்றுகள், வயிற்றுப் புண், செரியாமை, அடிக்கடி உணவு எதுக்களித்தல் போன்ற காரணங்களால் வாயில் நாற்றம் ஏற்படலாம்.  பூண்டு, வெங்காயம் சேர்ந்த உணவுகளைச் சாப்பிடுவதாலும், சில வகையான மருந்துகளை நீண்ட நாள்கள் எடுத்துக்கொள்வதாலும்கூட வாயில் நாற்றம் உண்டாகலாம். புகை மற்றும் மதுப்பழக்கம் உடையவர்களுக்கு, பிரத்தியேக நாற்றம் உண்டாவதைத் தவிர்க்க முடியாது. 

இன்சுலின் சரியாகச் சுரக்காத சர்க்கரை நோயாளர்களின் உடல் குளூக்கோஸை ஆற்றலாகப் பயன்படுத்தாது. உடலில் இருக்கும் கொழுப்பை உடைத்து ஆற்றலாக மாற்ற முயற்சிக்கும். அப்போது உருவாகும் `கீடோன்கள்’ வாயில் நாற்றத்தை உண்டாக்கும். சர்க்கரை நோயாளிகளுக்குத் தொடர்ந்து வாயில் நாற்றம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை நாடுவது அவசியம். சர்க்கரை  நோயாளிகளுக்கு அதிக அளவில் தாகம் இருக்கும்போது, நாவறட்சி ஏற்பட்டு வாய் நாற்றம் உருவாகலாம். முதியவர்களுக்கு எச்சில் சுரப்பு குறைவதால், நாவறட்சி ஏற்படும்.

 

 

இவைத் தவிர்த்து, கல்லீரல், சிறுநீரகங்கள் பாதிக்கப்படும் போதும், புற்றுநோய் அல்லது காசநோய் இருக்கும்போதும் வாயில் நாற்றம் ஏற்படலாம். அதற்காக வாய் நாற்றம் ஏற்பட்டவுடன் `நமக்குக் கல்லீரல் அல்லது சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்குமோ…’ என்று பதற்றப்பட வேண்டாம். அடிப்படை காரணம், வாய் சுகாதாரம் சார்ந்ததாகவே இருக்கும். வாய்ப்பகுதியைச் சுத்தமாகப் பராமரித்தும் வாயில் நாற்றம் தொடர்ந்தால், மருத்துவரின் ஆலோசனை அவசியமாகிறது.

வாய் நாற்றம்

தீர்வு என்ன?

காலை,மாலை என இருமுறை பல்துலக்க வேண்டும். நாக்கின் அடியில் கிருமிகள் சேர்ந்து நாற்றம் உண்டாக்கும் என்பதால், நாக்கையும் முறையாகச் சுத்தப்படுத்துவது முக்கியம். சாப்பிட்டவுடன் வாய்க்கொப்பளிக்கும் பழக்கம் வாய் துர்நாற்றம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். சிறுவயது முதலே குழந்தைகளுக்கு வாய்க் கொப்பளிக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுக்கலாம். டீ, காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏலம், சீரகம், லவங்கப்பட்டை, புதினா, கொத்தமல்லி போன்றவை பன்னெடுங்காலமாக நம்மிடையே இருக்கும் இயற்கை `மவுத் ப்ரெஷ்னர்கள்’. 

கிராம்பு, ஏலம், சாதிபத்திரி, காசுக்கட்டி சேர்ந்த தாம்பூலம் தரிக்கும் முறை, வாயில் ஏற்படும் நாற்றத்தைப் போக்குவதுடன் செரிமானத்தைத் தூண்டும். எச்சில் சுரப்பை அதிகரித்து நாவறட்சி ஏற்படாமல் பாதுகாக்கும். எச்சில் சுரப்பு குறைந்து நாவறட்சி இருப்பின் அக்கரகாரம், மிளகு, திப்பிலி போன்ற மூலிகைகளை வாயிலிட்டு சுவைத்தால் எச்சில் சுரப்பு அதிகரிக்கும். வாய்ப் பகுதியில் மையமிட்டிருக்கும் கிருமிகளை அழிக்க எச்சில் சுரப்பைவிட சிறந்த பொருள் எதுவுமில்லை. 

நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயைக் கொண்டு வாய் கொப்பளிக்கலாம் (ஆயில் புல்லிங்). திரிபலா சூரணத்தை வெந்நீரில் சேர்த்து வாய்க் கொப்பளிப்பதும் சிறந்த பலனளிக்கும். செரிமானத் தொந்தரவுகள் இருந்தால், நிவர்த்தி செய்வது முக்கியம். நீண்ட நாள்களாக புகை, மது அருந்துபவர்கள் நேரடியாக வாயில் நாற்றம் ஏற்படுகிறதா அல்லது கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதால் வாய் நாற்றம் ஏற்படுகிறதா என்பதைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். 

 

https://www.vikatan.com/news/health/134131-effective-home-remedies-for-bad-breath.html

Link to comment
Share on other sites

“கான்டாக்ட் டெர்மடைட்டிஸ்”

 

தோல் பாதிப்புக்குறிய சிறந்த சிகிச்சை முறை  “கான்டாக்ட் டெர்மடைட்டிஸ்“  என வைத்தியர்கள் கூறுகின்றனர்.

வீதியில் செல்வோர், அலுவலகத்தில் பணியாற்றுவோர், வீட்டில் ஓய்வில் இருப்பவர்கள் என யாராக இருந்தாலும் தங்களின் உடலில் பல பகுதிகளில் சொறிந்து கொள்வதைப் பார்க்க முடியும். தோலில் ஏற்பட்ட பாதிப்பால், அவர்கள் அதிலிருந்து நிவாரணம் பெற அல்லது அதிலிருந்து தப்பிக்க சொறிய தொடங்குகிறார்கள்.

குறித்த நிலையில் தோல் பாதிக்கப்படுவதற்கு என்ன காரணங்கள் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். தோல் பாதிக்கப்படுவதற்கு புறகாரணிகளும் உண்டு. அகக்காரணிகளும் உண்டு.

health_news_image_15_8_18.jpg


சவக்காரம், குங்குமம், நகப்பூச்சு, முகப்பவுடர், ஃபேர்னஸ் கிறீம், தலைக்கு பூசும் சாயம் போன்ற அழகு சாதனப் பொருட்களாலும், சில வகையினதான ஆடைகளாலும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு தோல் பாதிக்கப்படுகிறது.

அதே போல் வேறு சிலருக்கு அவர்கள் அணியும் காலணி, கால் உறை, வண்ணப்பூச்சு, இரசாயனப் பொருட்கள், தங்க நகை, கவரிங் நகை போன்றவற்றாலும் ஒவ்வாமை ஏற்பட்டு தோல் பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில் எம்முடைய இல்லத்தரசிகள் துணிகளை துவைப்பதற்காக பயன்படுத்தப்படும் சவக்காரத்தூள் அல்லது சவக்கார கட்டியை பயன்படுத்துவதால் ஒவ்வாமை ஏற்பட்டு அவர்களின் கை பகுதிகளில் தோல் பாதிக்கப்படுகிறது.

இதைத்தான் கான்டாக்ட் டெர்மடைடிஸ் என்று வைத்தியர்கள் குறிப்பிடுகிறார்கள். இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவுடன் முதலில் அங்கு சிவக்கும், பிறகு சொறிந்து சொறிந்து புண்ணாக்கி, தோல் தடிமனாகிவிடும்.

பிறகு சொரசொரப்பாகி கறுப்பாகவும் மாறிவிடும். பிறகு அந்த இடங்களையும் நாம் சொறியத் தொடங்கினார், அங்கு நீர்க்கொப்புளங்கள் ஏற்பட்டு தோல் உரியத் தொடங்குகிறது.

பொதுவாக ஒவ்வாமை என்பது புறக்காரணிகளால் மட்டும் வருவதில்லை. குளிர் காலம், கோடை காலம் போன்ற கால நிலை மாறும் போதும், மனதில் இனம் புரியா சோகம் சூழ்ந்தாலும் ஒவ்வாமை ஏற்படும்.

இந்நிலையில் இதற்கு உடனடியாக வைத்தியர்களிடம் சென்றால் உங்களுக்கு ஒவ்வாமை தரும் விடயங்களையோ அல்லது பொருள்களையே துல்லியமாக இனம் கண்டறிந்து சொல்வார். அதன் பின்னர் அதனை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். கட்டாயம் பயன்படுத்திதான் ஆகவேண்டும் என்றால் அதற்குரிய முன்னேற்பாடுடன் அதனை பயன்படுத்தவேண்டும். அதே சமயத்தில் வைத்தியர்கள் சொன்ன மருந்துகளையும் எடுக்கவேண்டும்.

http://www.virakesari.lk/article/38521

 

மூக்கடைப்பிற்குரிய சிகிச்சை முறை

 

பொதுவாக எம்மில் பலரும் தற்போது அலுலவகங்களில் ஏசி குளிரூட்டி வசதிப் பொருத்தப்பட்ட இடங்களில் தான் பணியாற்றுகிறார்கள். இதனால் அவர்கள் ஒவ்வாமைக்கும் ஆளாகிறார்கள். 

இதனைத் தொடர்ந்து மூக்கடைப்பிற்கும் ஆளாகிறார்கள். மூக்கடைப்பால் பாதிக்கப்பட்ட பலர் நிவாரணத்திற்காக மேற்கொள்ளும் முயற்சியைப் பார்த்தால் எமக்கு ஆச்சரியம் ஏற்படும். 

ஆனால் மூக்கடைப்பிற்கு காரணம் ஒவ்வாமை தான் என்றாலும், இதனை உறுதிப்படுத்திக்கொள்ள வைத்தியர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும். ஏனெனில் மூக்கடைப்பு மூக்கின் வளரும் பொலிப்புகளாலும் ஏற்படலாம். 

unnamed.jpg

அதே சமயத்தில் பொலிப்ஸால் தான் மூக்கடைப்பு ஏற்பட்டது என்பது உறுதியானவுடன் வைத்தியர்கள் அதனை சத்திர சிகிச்சை செய்து அகற்றவேண்டும் என்று வலியுறுத்துவர். அதே போல் சிலருக்கு பொலிப்ஸை சத்திர சிகிச்சை செய்து அகற்றிய பின்னரும் பொலிப்ஸ் உருவாகும். இந்த தருணங்களில் வைத்திய நிபுணர்கள் சத்திர சிகிச்சைக்கு பிறகும் பொலிப்ஸ் ஏன் ஏற்படுகின்றன என்பது குறித்து ஆராய்வார்கள். 

அவருக்கு ரஹினோ ஸ்போரிடோரிஸிஸ் (Rhinosporidiosis) என்ற பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்பதை சில பிரத்யேக பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்வர். 

ஏனெனில் இத்தகைய பாதிப்பு கால்நடைகளான நாய், மாடு, ஆடு, பூனை போன்றவற்றின் சிறுநீர், மலக்கழிவு, எச்சில் போன்றவற்றின் காரணமாகவும் ஏற்படக்கூடும். 

இதன் காரணமாகத்தான் பொலிப்ஸ் உருவாகியிருக்கிறது என்றால், மீண்டும் ஒரு முறை சத்திர சிகிச்சை செய்து அதனை அகற்றுவர். பிறகு அந்த பொலிப்ஸ் மீண்டும் வளராமல் இருப்பதற்காக அப்பகுதியை மின்சாரத்தின் துணைக் கொண்டு ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்குவார்கள். 

அதாவது இத்தகைய பொலிப்ஸ் உருவாகும் வேரை தகுந்த கருவிகளின் மூலம் மின்சாரம் பாய்ச்சி அழித்துவிடுவர். அதன் பிறகு இத்தகைய பாதிப்பு ஏற்படாது. 

ஆனால், இந்த கட்டிகள் பார்ப்பதற்கு புற்றுநோய் கட்டிகள் போல் தோன்றும் என்பதால், இதற்கான பரிசோதனையை அவசியம் செய்து அந்த கட்டி எவ்வகையினதான கட்டி என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். 

http://www.virakesari.lk/article/38582

Link to comment
Share on other sites

சிறுநீரக கல் பிரச்சினைக்குரிய தீர்வு

 

 
 

பொதுவாக எம்மில் பலரும் வயிறு வலி வந்தால் அது குறித்து தீவிர கவனம் கொள்ளாமல் ‘அதுவா வரும் அதுவா சரியாகும்’ என்று எண்ணிவிடுகிறார்கள்.

 வயிற்று வலியை ஒருபோதும் அலட்சியம் செய்யாதீர்கள் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

சிலர் இது சாதாரண வயிற்று வலி என்று எண்ணி மருந்து கடைகளில் மருந்து அல்லது மாத்திரைகளை வாங்கி எடுத்துவிட்டு உடனடி நிவாரணம் தேடிக் கொள்கிறார்கள். 

ஆனால் வைத்தியர்கள் வயிற்று வலி என்றால், அது எந்த பகுதியில் வருகிறது என்பதையும், எப்போதெல்லாம் வருகிறது? எம்மாதிரியான வலியுடன் வருகிறது ? என்பதை பொறுத்து தான் வைத்தியர்கள் பரிசோதனை செய்து, எவ்வகையினதான பாதிப்பு என்பதை உறுதி செய்துக் கொண்டு அதனை குணமாக்க மருந்துகளையும், மாத்திரைகளையும் வழங்குவார்கள். 

thumb_large_kidney-stones.jpg

அத்துடன் சிலருக்கு அடிவயிற்றின் வலது பக்க பகுதியில் வலி எடுத்தால் அது சாதாரண வயிற்று வலி அல்ல என்றும், அது குடல்வால் அழற்சி அல்லது சிறுநீர் குழாயில் கல் இருப்பதற்கான அறிகுறி என்றும் தெரிந்துகொள்ளவேண்டும்.

 உடனே எம்மில் பலர் சிறுநீர் குழாய் கல்லைப் பற்றி சொன்னால், எமக்கு சிறுநீரக கல் பிரச்சினை இல்லை என்று மறுப்பார்கள். ஆனால் அவர்களுக்கு இரைப்பை எண்டாஸ்கோப்பி, இசிஜி, அல்ட்ரா சவுண்ட், கொலேனோஸ்கோப்பி, சிடி ஸ்கேன், சிறுநீர், இரத்தம், மலம் ஆகியவற்றை பரிசோதனை செய்தால் இவற்றில் எவ்வகையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

சிறுநீரக கல் என்பதற்கும், சிறுநீரக குழாய் கல் என்பதற்கு என்ன வேறுபாடு என்றால், சிறுநீரகத்தில் உருவாகும் கல் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைப் பொருத்து அதன் பெயர் மாறுபடும். சிறுநீரகத்தில் இருந்தால் அது சிறுநீரக கல் என்றும், சிறுநீர் பிரியும் பாதையில் உள்ள குழாயில் கல் இருந்தால் அதற்கு சிறுநீர் குழாய் கல் என்றும் குறிப்பிடுகிறார்கள். 

இவ்விரண்டு கற்கள் இருந்தாலும் பாதிப்பு வயிற்றுவலியில் தான் தொடங்குகிறது. அதனால் வயிற்று வலி வந்தால் அதனை புறகணிக்காமல் வைத்தியர்களிடம் சென்று உரிய பரிசோதனைகளைச் செய்துக் கொண்டு பாதிப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். 

அதனைத் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று குணமடையலாம். இதற்கான நவீன சத்திர சிகிச்சையும், சத்திர சிகிச்சையற்ற புதிய சிகிச்சை முறையும் அறிமுகமாகியிருக்கிறது.  இதற்காகவே சிலர் ஆண்டுதோறும் அல்லது சீரான இடைவெளியில் முழு உடற் பரிசோதனையை செய்து கொண்டு முன் எச்சரிக்கையாகவும், தற்காப்புடனும் ஆரோக்கியமாக வலம் வருகிறார்கள்.

http://www.virakesari.lk/article/38691

 

 

இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் உணவு முறைகள்

 

இன்றைய திகதியில் யாரேனும் இருவர் எதிர்பாராத விதமாக சந்தித்துக் கொண்டால் அவர்களின் பேச்சில் நீங்கள் என்ன வகையினதான உணவு முறையை கடைபிடிக்கிறீர்கள்? என்பது இடம்பெறுவது தவிர்க்கமுடியாததாகிவிட்டது. 

news_image_health_20818.jpg

இணையதளத்தின் வழியாக இன்று இருபதிற்கும் மேற்பட்ட உணவு முறைகளை மக்கள் பின்பற்றுகிறார்கள். இதில் சிலர் மட்டுமே உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணரின் பரிந்துரையின் அடிப்படையில் தங்களுக்கு ஏற்ற உணவு முறையை கடைபிடிக்கிறார்கள். 

ஏனையோர் எல்லாம் தாங்களாகவே தங்களுக்கு பிடித்த உணவு முறையை பின்பற்றுகின்றனர். இது தவறு என்று ஊட்டச்சத்து நிபுணர்களும், வைத்தியர்களும் எச்சரிக்கிறார்கள்.

அதே சமயத்தில் ஒருவரின் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரோல், நீரிழிவு போன்ற பாதிப்புகளை குறைக்கவேண்டும் என்று விரும்பினால் வைத்திய நிபுணர்களின் வழிகாட்டலுடன் மேக்ரோபயாட்டீக் உணவு முறையை பின்பற்றுமாறு பரிந்துரைக்கிறார்கள். 

அதிலும் இரத்த அழுத்தம் சீரடையவேண்டும் என்றால் அல்லது இரத்த அழுத்தம் அதிகரிக்காமல் இருக்கவேண்டும் என்றால் அல்லது இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கவேண்டும் என்றால் அல்லது இரத்த அழுத்தம் முழுமையாக குணமடையவேண்டும் என்றால் இந்த உணவு முறையை கடைபிடிக்கலாம். 

இதில் கொழுப்பு சத்து குறைந்த, கலோரிகள் குறைந்த பச்சை காய்கறிகள் அடங்கிய உணவை அதிகமாக எடுத்துக் கொள்வார்கள். இயற்கையான உரங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கீரைகள், பழங்கள், காய்கள் ஆகியவற்றையும், பழுப்பு அரிசி, ஓட்ஸ், பார்லி ஆகியவற்றையும் இத்தகைய உணவு முறையை கடைபிடிப்பவர்கள் சாப்பிடுகிறார்கள். 

இதன் மூலம் அவர்களுக்கு கொழுப்பு சத்து குறைக்கப்பட்டு, அதனூடாக இரத்த அழுத்தமும் குறைகிறது. அத்துடன் இரத்த சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கிறது.

டொக்டர் ஸ்ரீதேவி

தொகுப்பு அனுஷா.

http://www.virakesari.lk/article/38838

Link to comment
Share on other sites

உள்ளரங்க காற்று மாசு  குறித்து விழிப்புணர்வு

 

உள்ளரங்க காற்று மாசு பற்றி விளக்கம் தருகிறார் வைத்தியர் கிருஷ்ணகுமார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

நாம் திறந்த வெளியில் பயணிப்பதை விட உள்ளரங்க சூழலில் இருக்கும் நேரம் அதிகம். இந்நிலையில் உள்ளரங்க சூழலில் இருக்கும் காற்று மாசு அல்லது மாசடைந்த காற்றால் எம்முடைய ஆரோக்கியத்திற்கு நாமே வேட்டு வைத்துக் கொள்கிறோம். அதாவது நாம் இருக்கும் இடத்திலுள்ள காற்றை மாசாக்குகிறோம் அல்லது மாசடைந்த காற்றை சுவாசிக்கிறோம் அல்லது சுத்திகரிக்கப்படாத உள்ளரங்க காற்று மாசால் பாதிக்கப்படுகிறோம்.

உடனே எம்மில் பலர் இது தவிர்க்கமுடியாது என்பர். ஆனால் சுத்திகரிக்கப்படாத அல்லது மாசடைந்த உள்ளரங்க காற்றால் சுவாசப்பாதை அழற்சி மற்றும் நுரையீரல் தொடர்பான இனம் கண்டறிய இயலாத பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

தெற்காசியாவில் சுவாசப்பாதை அழற்சி, ஆஸ்மா பாதிப்பால் மரணமடைவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் மில்லியன் கணக்கில் இருந்து வருகிறது. இதனை குறைப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது. 

news_image_health_24818.jpg

நாம் பயன்படுத்தும் உள்ளரங்கத்தை அல்லது உள்ளரங்கத்திலுள்ள காற்றை மாசில்லாமல் பாதுகாப்போம். அதற்குரிய அனைத்து வழிவகைகளையும் காண்போம். முதலில் இது குறித்து விழிப்புணர்வு பெறுவோம்.

(Hypersensitivity Pneumonitis Allergic Asthma) போன்ற பாதிப்பிலிருந்து அடுத்த தலைமுறையினரை காக்கவேண்டும் என்றால் திறந்தவெளியில் உள்ள காற்று மாசை கட்டுப்படுத்துவதைப் போல் அல்லது திறந்த வெளியிலான காற்று மாசு படாமல் இருப்பதற்கான நடவடிக்கையை எடுப்பது போல் உள்ளரங்க காற்று மாசினையும் கட்டுப்படுத்தவேண்டும். 

இதற்காக அறிமுகமாகியிருக்கும் மருத்துவ உபகரணங்களையும் பயன்படுத்தலாம். அத்துடன் எமக்கு தெரிந்த வகையிலான தற்காப்பு வலையினையும் பயன்படுத்தலாம். இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கும் வழிமுறைகளையும் கடைபிடிக்கலாம்.

http://www.virakesari.lk/article/39082

 

 

“கால் ஆணி” எனும் பாதிப்பு

 

எம்மில் சிலருக்கு அவர்களுடைய பாதங்களில் சிறிய புண் போன்றோ அல்லது சிறிய கட்டி போன்றோ ஒரு பாதிப்பு உருவாகிவிடும். 

healtha.jpg

இதற்கு கால் ஆணி என்று குறிப்பிடுவதுண்டு.

பொதுவாக கால் ஆணி பாதிப்பை கால் ஆணி, காய்ப்பு, மரு என்று மூன்று வகையாக பிரித்து உணரவேண்டும். இந்த மூன்றும் ஒரே அறிகுறியுடன் இருந்தாலும் இந்த மூன்றிற்கும் வெவ்வேறான சிகிச்சைகள் வழங்கப்பட்டு குணப்படுத்தப்படுகின்றன.

நாம் தற்போது வணிக வளாகங்களிலும், பூங்கா அல்லது கடற்கரை போன்ற மிகக்குறைவான இடங்களில் மட்டுமே நடக்கிறோம். இதன்போது எதிர்பாராதவிதமாக பாதங்களில் கடினமான பொருள்கள் குத்திவிட்டால், அங்கே சிறிய அளவிலான துளை ஏற்படுகிறது. 

உடனடியாக எம்முள் இருக்கும் நோயெதிர்ப்பு சக்தியானது அங்கு தோலை வளரச் செய்யும். இது எதிர்பாராதவிதமாக உள்நோக்கி வளரத் தொடங்கினால் அதைத்தான் கால்ஆணி என்று குறிப்பிடுகிறோம். 

சிலர் இத்தகைய தருணங்களில் தங்களின் பாதத்தை தவறாகவோ அல்லது இயல்பிற்கு மீறிய நிலையிலோ பயன்படுத்தினால் இவை வலியுடன் கூடிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.

சிலர் இதனை குணப்படுத்திக்கொள்கிறேன் என்று கூறி சுய மருத்துவம் செய்து கொண்டு, வலியை அதிகரித்துக் கொள்வர். அத்துடன் தொடர்ந்து நடக்கக்கூட இயலாமல் முடங்கிவிடுவர். இத்தகைய தருணத்தில் அதனை மின்கதிர் சிகிச்சை மூலம் குணமாக்கலாம். ஆனால் அதன் பிறகு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் பிரத்யேக காலணிகளை அவர் அறிவுறுத்தும் காலகட்டம் வரைக்கும் அணிந்திருக்கவேண்டும்.

டொக்டர் பார்த்திபன்

தொகுப்பு அனுஷா.

http://www.virakesari.lk/article/38976

 

 

தூங்குவதில் கவனம் தேவை

 

ஒருவர் அவருடைய உடல் நலத்திற்கு தேவையான உறக்கத்தை விட அதிக நேரம் தூங்கினால் அதைத்தான் ‘ஹைப்பர்சோம்னியா ’ என்று குறிப்பிடுகிறனர்.

sleep.jpg

 மூளைப்பகுதியில் உள்ள ஹைப்போதாலமஸ் என்ற பகுதிதான் தூக்கத்தையும், பசியையும் கட்டுப்படுத்துகிறது. 

இப்பகுதியில் வேறு சில காரணங்களால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதிகப் பசியும், அதிக தூக்கமும் உண்டாகும். சிலருக்கு உரிய பரிசோதனைக்கு பிறகு அவருக்கு ஏற்பட்டிருப்பது கிளைன் லெவின் சிண்ட்ரோம் பாதிப்பா? அல்லது ஹைப்பர்சோம்னியாவா? என்பதை உறுதிப்படுத்துவர்.

இதற்குரிய சிகிச்சை எம்முடைய உறக்கத்தை ஒரு ஒழுங்குமுறைக்குள் கொண்டுவருவது தான். தொடக்கத்தில் சிரமமாக இருந்தாலும், தொடர் பயிற்சி, உடல் எடையை சீராக பராமரித்தல், உறக்கத்தை தரும் உணவுகளையும், உடற்பயிற்சிகளையும் வைத்தியர்களின் ஆலோசனையின் பேரில் செய்வது போன்றவற்றை பின்பற்றினால் இதனை கட்டுப்படுத்தலாம். 

இதனை அலட்சியப்படுத்தினால் இந்த பாதிப்பு தீவிரமாகி எப்போதும் வேண்டுமானாலும் பெருந்தூக்கம் ஏற்பட்டு, அதனால் மோசமான விளைவுகளும் ஏற்படக்கூடும்.

அதனால் சரியான தூக்கத்தை மேற்கொள்ளவேண்டும். அதனை இரவில் தான் மேற்கொள்ளவேண்டும். அதிகபட்சமாக எட்டு மணி நேரமும், குறைந்த பட்சமாக ஆறு மணி நேரமும் தூங்கவேண்டும்.

டொக்டர் ராமகிருஷ்ணன்.

 

தொகுப்பு அனுஷா.

http://www.virakesari.lk/article/38901

Link to comment
Share on other sites

இரண்டில் ஒரு பெண்ணைப் பாதிக்கும் அனீமியா... தப்பிப்பது எப்படி? #Anemia

 
இரண்டில் ஒரு பெண்ணைப் பாதிக்கும் அனீமியா...  தப்பிப்பது எப்படி? #Anemia
 

`ஏண்டி எப்பப் பார்த்தாலும் ரூமுக்குள்ளயே கிடக்குற, வா... ஜாலியா வெளியில் போயிட்டு வரலாம் ` என்னும் தோழியின் அழைப்புக்கு, `இல்லடி எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு நீங்க போயிட்டு வாங்க' என்று பதில் சொல்லும் பெண்கள் எல்லா கேங்கிலும் இருப்பார்கள். உடலுக்குத் தேவையான ஓய்வு இல்லாதபோது உடல் சோர்வு இயல்பானதுதான். ஆனால் எவ்வளவு ஓய்வெடுத்தாலும் சோர்வு தொடர்ந்தால் அது `அனீமியா' பாதிப்பாக இருக்கலாம். 

அனீமியா

 `சாரி சார், நீங்க மட்டும் ரத்ததானம் பண்ண முடியாது, உங்களுக்கு ரத்தச்சோகை இருக்கு' - நண்பர்களுடன்  ரத்ததானம் கொடுக்கச் சென்று, உங்களுக்கு இப்படி ஒரு பதில் கிடைத்தால் எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும். உடலில் சில பாதிப்புகள் இருப்பது ஏதாவது ஒரு பரிசோதனையில்தான் தெரியவரும். அப்படி, ரத்தப்பரிசோதனை செய்யும்போது பெரும்பாலானோர் தெரிந்துகொள்ளும் ஒரு பாதிப்பு ரத்தசோகை என்று சொல்லக்கூடிய அனீமியா. 

 

 

ரத்தச்சோகை சாதாரணமாகக் கடந்து விடக்கூடிய ஒரு பாதிப்பல்ல. சரியான நேரத்தில் கண்டறிந்து அதைச் சரிசெய்துவிடவேண்டும். காலம் கடந்தால் உயிரையே பறித்துவிடும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். ஒட்டு மொத்த இந்திய மக்கள்தொகையில் 32.7 சதவிகிதம் பேருக்கு ரத்தச்சோகை பாதிப்பு இருப்பது, இந்தியச் சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் சமீபத்தில் நடத்திய ஓர் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. கருவுற்ற பெண்களில் 34.6 சதவிகிதம் பேருக்கும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 48.5 சதவிகிதம் பேருக்கும் அனீமியா பாதிப்பு இருக்கிறது.

 

 

அதென்ன அனீமியா?

நாம் உயிர்வாழ ஆக்சிஜன் மிக அவசியமென்பது அனைவருக்கும் தெரியும். நம் உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்புக்கும் ஆக்சிஜன் தேவை. சரி, உடலில் உள்ள உறுப்புகளுக்கு எப்படிச் செல்கிறது ஆக்சிஜன்?

ரத்த சிகப்பணுக்கள்

நம் உடலில் ஓடும் ரத்தத்தின் வழியாகத்தான். ரத்தத்தில், சிகப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டணுக்கள் என மூன்று வகை இருக்கின்றன. இவற்றில், ரத்த சிகப்பணுக்கள்தாம் ஒவ்வோர் உறுப்புக்கும் ஆக்சிஜனைக் கொண்டு செல்கின்றன. இதைத்தான் `ஹீமோகுளோபின்' என்று சொல்கிறோம். `ஹீமோகுளோபின்' எண்ணிக்கை, சராசரி அளவைவிடக் குறைந்தால் அதை, அனீமியா என்கிறோம். `ஹீமோகுளோபின்' எண்ணிக்கை குறையும்போது உறுப்புகளுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காது. அதனால் பல உடல் நலப்பாதிப்புகள் உண்டாகும்.

 

 

ஆண்களுக்கு, ஒரு டெசி லிட்டர் ரத்தத்தில் 13.5 கிராம் முதல் 17.5 கிராம் வரை, பெண்களுக்கு 12 கிராம் முதல் 16 கிராம் வரை  ஹீமோகுளோபின் இருக்கவேண்டும். இதுவே சராசரி அளவு. ஆண்களுக்கு 13.5 கிராமுக்குக் கீழும், பெண்களுக்கு 12 கிராமுக்குக் கீழும் ஹீமோகுளோபின் எண்ணிக்கை இருந்தால் ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். 

 ``  ரத்த சிவப்பணுக்கள் நம் உடலில் உள்ள எலும்பு மஜ்ஜையில் உருவாகும். பின்னர், ரத்தத்தில் கலந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு மண்ணீரலில் கரையும். ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி சராசரியான அளவை விடக் குறைவாக உற்பத்தியாகும் போது ரத்தச்சோகை பாதிப்பு ஏற்படும். அதுதவிர, உற்பத்தியான சிவப்பணுக்கள் மூன்று மாதங்களுக்கு முன்பாக அழிந்துவிட்டாலும், உடலில் ஏதேனும் ரத்தக் கசிவு பாதிப்பு இருந்தாலும் ரத்தசோகை பாதிப்பு ஏற்படும். சிவப்பணுக்கள் உற்பத்தியாகின்ற எலும்பு மஜ்ஜையில் ஏதேனும் பாதிப்பிருந்தாலும் ரத்தசோகை வரலாம்.

நம் நாட்டைப் பொறுத்தவரை வைட்டமின் பி 12, இரும்புச்சத்து குறைபாட்டின் காரணமாக, ரத்த சிகப்பணுக்கள் குறைவாக உற்பத்தியாவதால் ரத்தச்சோகை பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. 

ரத்தசோகை

சோர்வு, பசியின்மை, சுவையின்மை, நகங்கள் உடைதல், முகம் மற்றும் நாக்கு வெளுத்துப் போதல், படபடப்பு, மூச்சுத் திணறல், முடி உதிர்தல் ஆகியவை அனீமியாவின் பொதுவான அறிகுறிகள். ஆண்களைவிட பெண்களையேஅனீமியா அதிகமாகப் பாதிக்கிறது`` என்கிறார் ரத்தவியல் நிபுணர் பிரபு. 

ஆம், இந்தியாவில் ரத்த சோகையால் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பது பெண்கள்தாம். 2016 -ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு நடத்திய ஓர் ஆய்வில், இரண்டில் ஒரு பெண்ணுக்கு ரத்தச்சோகை பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. 2,18,200 மாதிரித் தரவுகளை வைத்து ஆய்வுசெய்ததில் இது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்திலும் ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. `2005-06 -ல் இதன் தாக்கம் 53.2 சதவிகிதமாக இருந்தது. 2015-16 ஆண்டில் 55 சதவிகிதமாக உயர்ந்துள்ளது` எனத் தேசிய குடும்ப சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.

`` மாதவிடாய் , கர்ப்பகாலத்தில் உண்டாகும் உதிரப் போக்கு, ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகிய மூன்றும் தான் பெண்களுக்கு ரத்தச்சோகை உண்டாவதற்கான முக்கியக் காரணங்கள். மாதவிலக்கின் போதே ஒவ்வொரு பெண்ணின் உடம்பிலிருந்தும் சராசரியாக 35 மி.லி முதல் 80 மிலிட்டர் ரத்தம் வெளியேறுகிறது. அதில் 35 கிராம் ஹீமோகுளோபின் இருக்கிறது`` என்கிறார் ரத்தவியல் நிபுணர் ரேவதி ராஜ். 

மாதவிடாய்

``பெரும்பாலான பெண்கள் இரும்புச் சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதே இல்லை. அப்படியே சாப்பிட்டாலும் அடிக்கடி டீ குடிக்கும்ரேவதி ராஜ் பழக்கம் இருந்தால், உடலுக்கு  இரும்புச் சத்தை உட்கிரகிக்கும் தன்மை குறைந்துவிடும். இரும்புச் சத்தை உடல் முழுமையாக உட்கிரகிக்க இரும்புச் சத்துள்ள உணவுகளோடு, வைட்டமின் `சி' சத்துள்ள உணவுகளையும் சேர்த்துச் சாப்பிடவேண்டும். உதாரணமாக, சாப்பாட்டில் கீரை எடுத்துக்கொண்டால், சாப்பிட்டு முடித்ததும் பழங்கள் சாப்பிடவேண்டும். பழங்களில் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. சப்பாத்தி, வெல்லம் போன்றவற்றை அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

வைட்டமின் பி 12 குறைபாடும் அனீமியா வருவதற்கு முக்கியக் காரணியாக இருக்கிறது. இது ரத்தச்சோகை பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல். நரம்பு தொடர்பான பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. பி 12 குறைபாட்டைத் தவிர்ப்பதற்கு முளைக்கட்டிய பயறு, முட்டை ஆகியவற்றைக் கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும், புதிதாகப் பிறக்கும் பத்தாயிரம் குழந்தைகளுக்குத் தாயிடமிருந்து அனீமியா பாதிப்பு ஒட்டிக்கொள்கிறது. பெரும்பாலும் மலைப் பகுதிகளையொட்டி வாழும் மக்களுக்கும், சைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மக்களுக்கும் அதிகமாக இந்தப் பாதிப்பு உண்டாகிறது.
அல்சர், குடற்புழு, மூலநோய். சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு போன்ற பிரச்னைகள் இருந்தாலும் அனீமியா உண்டாகும். பாதிப்புகளைக் கண்டறிந்து அதற்கான முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் அனீமியாவிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். `` என்கிறார் மருத்துவர் ரேவதிராஜ்.

ரத்தத்தில் ஹீமோகுளோபினின் எண்ணிக்கை 10 கிராம் முதல் 11 கிராம் இருந்தால் லகுவானது என்றும், 7 கிராமிலிருந்து 10 கிராம் இருந்தால் மிதமானது என்றும், 4 கிராமிலிருந்து 7 கிராம் இருந்தால் தீவிரமானது என்றும், 4 கிராமுக்கும் குறைவாக இருந்தால் மிகத்தீவிரமானது என்றும் ரத்தச்சோகை பாதிப்பை வகைப்படுத்தி வைத்திருக்கிறது இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம். 
 `` அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வரும் பெரும்பாலான பெண்களுக்கு `ஹீமோகுளோபின்' எண்ணிக்கை 8 கிராமுக்கும் குறைவாகத்தான் இருக்கிறது. அதற்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஒரு காரணம். சுகாதாரக் குறைபாட்டின் காரணமாக  குடற்புழு உண்டாகி அதன் காரணமாகவும் ரத்தச்சோகை ஏற்படுகிறது`` என்கிறார் மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர் அனுரத்னா.

குடற்புழு

 `` மண்ணில் நின்று வேலை செய்பவர்களுக்குக் குடற்புழு பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புண்டு. அதுதவிர, திறந்தவெளியிலோ மருத்துவர் அனுரத்னாபொதுக் கழிப்பிடத்திலோ மலம் கழிப்பதாலும் குடற்புழு பாதிப்பு ஏற்படும். குடற்புழுக்கள் கூட்டமாகத்தான் வசிக்கும். ஒரு நாளைக்கு ஒரு புழு சராசரியாக 0.05 மி.லி ரத்தத்தை உறிஞ்சி விடும். குடற்புழுக்களைச் சரியான நேரத்தில் கண்டறிந்து அழிக்காவிட்டால் அதிகளவில் ரத்தத்தை உறிஞ்சிவிடும். 

ஹீமோகுளோபின் அளவு 4 கிராமுக்கும் குறைவாகப் போனால் உடல் கட்டுப்பாட்டில் இருக்காது. கை, கால், முகம் எல்லாம் வீங்கிவிடும். உறுப்புகளுக்குச் செல்லக்கூடிய ஆக்சிஜன் குறைந்து ஒவ்வொரு உறுப்பாகச் செயலிழக்கத் தொடங்கிவிடும். நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்துவிடும். எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள். இதயம் பலகீனமாகி மரணம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.  

ரத்தச்சோகை அதிகரித்தால் படிப்பில் மந்தம் ,விளையாட்டில் ஆர்வமின்மை, கருத்தரிப்பதில் சிக்கல், கருக்கலைவு, குறைப்பிரசவத்தில் குழந்தை பிறத்தல் போன்ற பல பாதிப்புகள் ஏற்படும். அனீமியா பாதிப்புள்ள பெண்களுக்குப் பிரசவ நேரத்தில் கர்ப்பப்பை சுருங்கி விரியாமல் அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டு மரணம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. 

குடற்புழுக்கள் ஏற்படாமல் தவிர்க்க கை, கால்களை அடிக்கடி கழுவவேண்டும். மலம் கழித்த பின்னர் கண்டிப்பாகக் கைகளை நன்றாகக் கழுவவேண்டும். நகம் வளர்க்கக் கூடாது. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை குடற்புழு மாத்திரைகள் எடுத்துக்கொள்ளவேண்டும்.`` என்கிறார் மருத்துவர் அனுரத்னா.

ரத்தசோகை

ஒவ்வொரு பள்ளிகளிலும் வியாழக்கிழமை தோறும் இலவசமாக இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கும் திட்டம் இருக்கிறது. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அங்கன்வாடி பணியாளர்களின் மூலமாகவும், கிராம சுகாதாரப் பணியாளர்களின் மூலமாகவும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் திட்டமும் இருக்கிறது. ஆனால், இந்தத் திட்டங்கள் யாவும் முறையாகச் செயல்படுத்தப்படுவதில்லை என்பதுதான் சோகம்!

https://www.vikatan.com/news/health/135348-anemia-causes-types-symptoms-diet-and-treatment.html

Link to comment
Share on other sites

ப்ராஸ்டேட் புற்றுநோயை தடுக்க முடியுமா...?

 

இன்று ஐம்பது வயதைக் கடந்த ஆண்களில் பலர் ப்ராஸ்டேட் புற்றுநோயால் திக்கப்பட்டிருக்கிறார்கள்

health.jpg

இவர்களில் முழு உடற் பரிசோதனையையும், தொடர் கண்காணிப்பில் உள்ளவர்களும் இதற்கான ஆரம்ப கட்ட அறிகுறிகளின் போது பரிசோதனை செய்து கொண்டு, அத்தகைய பாதிப்பை உறுதிப்படுத்திக் கொண்டு நவீன சிகிச்சையின் மூலம் குணமடைந்திருக்கிறார்கள். 

அறிகுறிகளை அலட்சியப்படுத்தியவர்கள் இவ்வகையினதான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மரணத்தையும் சந்தித்திருக்கிறார்கள்.

முதலில் இதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். பதினைந்து வயது முதல் பத்தொன்பது வயது வரையில் உள்ள இளம் ஆண்களுக்கு இத்தகைய தருணங்களில் பாலியல் சுரப்பியான புராஸ்டேட் சுரப்பியின் செயற்பாடு சீராகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். 

இதன் போது மது அருந்தும் பழக்கத்திற்கு ஆளானால் அதன் காரணமாக புராஸ்டேட் சுரப்பியின் செயற்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு, புற்றுநோய் செல்கள் அங்கு வந்து தங்கி பல்கி பெருகுவதற்கு வழி வகுக்கின்றன. இதனை அண்மைய ஆய்வுகள் மூலம் உறுதி செய்திருக்கிறார்கள். 

அதனால் புராஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்கவேண்டும் என்றால் பதின்ம வயது என்ப்படும் பதிமூன்று வயது முதல் பத்தொன்பது வயது வரையிலான காலகட்டத்தில் மதுவை தொடவேக்கூடாது. அதையும் கடந்து தொட்டால் அவர்களுக்கு எதிர்காலத்தில் புராஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு மூன்று இரண்டு பங்கு அதிகம் என்று உறுதியாக சொல்கிறார்கள் 

ஆய்வாளர்கள். அத்துடன் புராஸ்டேட் சுரப்பில் இருக்கும் புற்றுநோயிற்கான செல்கள் முற்றிய நிலையில் ஏனைய எலும்புகளிலும் ஊடுருவிச் செல்லக்கூடியது என்றும், வேறு உறுப்புகளுக்கு பரவும் தன்மையைக் கொண்டது என்றும் வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

முதல் நிலையில் எந்த அறிகுறியையும் தோற்றுவிக்காது. நான்காம் நிலையில் முற்றும் போது தான் அறிகுறிகள் தோன்றும். உடனடியாக சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வு, சிறுநீர் கழிக்கும் போது அசௌகரியமான உணர்வு, விந்து மற்றும் சிறுநீர் வெளியேறும் போது அதனுடன் சிறிதளவில் இரத்தமும் வெளியேறுவது, முதுகின் கீழ் பகுதி, தொடையில் மேல் பகுதி, இடுப்பு ஆகிய பகுதிகளில் தாங்க முடியாத வலி அல்லது விட்டுவிட்டு வலி ஏற்படும். 

இத்தகைய அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று ஏற்பட்டாலும் உடனடியாக வைத்தியர்களை சந்திக்க வேண்டும். அவர்கள் பரிந்துரைக்கும் எம் ஆர் ஐ ஸ்கேன், சி டி ஸ்கேன் மற்றும் எலும்பிற்கான ஸ்கேன் ஆகிய பரிசோதனைகளை செய்து பாதிப்பு உள்ளதா? என்பதை பரிசோதிக்கவேண்டும்.

இதனை வராமல் தடுக்கவேண்டும் என்றால் முதலில் மதுவை முற்றாக தவிர்க்கவேண்டும். உடல் எடையை சீராக பராமரிக்கவேண்டும். கலோரி அதிகமாக இருக்கும் உணவுகளையும், பானங்களையும் தவிர்க்கவேண்டும். தினமும் காய்கறிகளை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். பதப்படுத்தப்பட்ட இறைச்சியை தவிர்க்கவேண்டும். கல்சிய சத்து அதிகமுள்ள உணவையும், பால்மா பொருள்களினால் செய்யப்பட்ட உணவு மற்றும் பானத்தை மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி மட்டுமே சாப்பிடவேண்டும்.

டொக்டர் கோவிந்தராசன்

தொகுப்பு அனுஷா.

http://www.virakesari.lk/article/39264

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஓர் உணவுக் கவளத்தை எத்தனை முறை சுவைக்க வேண்டும்? - மருத்துவ உண்மை!

 

பற்களோடும் எச்சில் சுரப்புகளோடும் நாம் சாப்பிடும் உணவுப் பொருள்கள் உறவாடுவது எவ்வளவு அவசியம் தெரியுமா?

ஓர் உணவுக் கவளத்தை எத்தனை முறை சுவைக்க வேண்டும்? - மருத்துவ உண்மை!
 

‘நொறுங்கத் தின்றால் நூறு வயது ’ என்றொரு பழமொழி உண்டு. உணவை  நன்றாக மென்று சாப்பிட்டால், நோயின்றி வாழலாம் என்பதுதான்  பழமொழி உணர்த்தும் உண்மை. செரிமானம் என்னும் அடித்தளம் பலமாக அமைந்துவிட்டால், நோய்கள் நம்மை நெருங்காது.  

உணவு

`வேலைகளை விரைந்து முடித்துவிட்டு, பொறுமையாக உணவைச் சாப்பிடலாம்’ என்றிருந்த காலம் மாறி, `உணவை விரைவாகச் சாப்பிட்டுவிட்டு, மற்ற அலுவல்களுக்கு நிறைய நேரம் ஒதுக்கலாம்’ என்ற சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பற்களோடும் எச்சில் சுரப்புகளோடும் தொடர்புகொள்ளாமலே, உணவுப் பொருள்களை நேரடியாக உணவுக்குழாய்க்குள் (Oesophagus) தள்ள முயல்கிறோம். உணவை நொறுக்குவதற்கு அத்தியாவசியமான டெரிகாய்ட் (Pterygoid), மேஸட்டார் (Masseter), டெம்பொராலிஸ் (Temporalis) போன்ற தசைகளுக்கு வேலைகொடுக்காமல் ஓய்வளிக்கிறோம். 

 

 

பற்களோடும் எச்சில் சுரப்புகளோடும் நாம் சாப்பிடும் உணவுப் பொருள்கள் உறவாடுவது எவ்வளவு அவசியம் தெரியுமா? குடிக்கும் நீரைக்கூட மென்று பருகுங்கள் என்று சொல்வார்கள். அப்படி இருக்கும்போது, உணவுகளை நன்றாக மென்ற பிறகு உட்செலுத்துவதுதானே சரியாக இருக்கும். பலர் நினைப்பதைப்போல, செரிமானம் வயிற்றில் தொடங்குவதில்லை. வாய்ப் பகுதியிலேயே தொடங்கிவிடுகிறது. பற்கள், தாடைத் தசைகள், நாக்கு, எச்சில் ஆகியவற்றின் உதவியுடன் உணவை நொறுக்குவதுதான் செரிமானத்தின் முதல் படி. இந்த அடிப்படையைப் புரிந்துகொண்டால், உணவை நொறுக்குவதற்கான அவசியம் புரிந்துவிடும். 

 

 

இறைச்சி

உணவுகளை நொறுக்கி, சிறுசிறு அளவாக மாற்றும்போது, உணவுகளிலிருந்து சாரங்களைப் பிரித்தெடுக்க செரிமானக் கருவிகளுக்கு எளிதாக இருக்கும். இல்லையென்றால், வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் உணவை உடைக்க, செரிமானக் கருவிகள் அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும். நன்றாக மென்று சாப்பிடும்போது, எச்சில் சுரப்பின் அளவு அதிகரிக்கும். நொறுக்கப்பட்ட உணவுடன் எச்சில் கலந்து, பிசுபிசுப்புடன் இரைப்பை நோக்கிப் பயணிக்கவைக்கும். நாம் சாப்பிடும் மாவுப்பொருள்களை உடைக்கும் செயல், எச்சில் சுரப்புகளில் உள்ள `அமைலேஸ்’ (Salivary amylase) நொதியால் வாய்ப்பகுதியிலேயே தொடங்கிவிடுகிறது. எச்சில் சுரப்பில் இருக்கும் `லைஸோசைம்’ (Lysozyme) என்னும் நொதிக்குக் கிருமிகளை அழிக்கும் தன்மையும் இருக்கிறது. கொழுப்புப் பொருள்களின் செரிமானமும் எச்சில் சுரப்புகளால் வாயிலேயே தொடங்கிவைக்கப்படுகிறது. ஆனால், முழுமைபெறுவதற்கு அவை வயிற்றுக்குள் செல்வது அவசியம். 

நாம் உணவுகளை நன்றாக மென்று சாப்பிடும்போது, விரைவில் உணவு உண்ட திருப்தி கிடைக்கும். மென்று சாப்பிடாவிட்டால், திருப்தி இல்லாமல் அதிக அளவில் உணவுகளை எடுத்துக்கொள்ள நேரிடும். உணவை அதிக நேரம் சவைக்கும்போது, உணவுகளில் உள்ள சுவையை முழுமையாக அனுபவிக்க முடியும். வாயில் மென்று சாப்பிடத் தொடங்கும்போதே, வயிற்றுப் பகுதியில் செரிமானத்துக்குத் தேவையான செயல்பாடுகள் எல்லாம் தொடங்கிவிடும். `வாயில் உணவு நுழைந்துவிட்டது… நம்மிடம் வரும் உணவை செரிப்பதற்குத் தயாராவோம்’ என வயிற்றுத் தசைகள், கணையம், கல்லீரல் என உள்ளுறுப்புகள் காத்துக்கிடப்பது இயங்கியல். 

 

 

சாப்பிடுவது

ஓர் உணவுக் கவளத்தை எத்தனை முறை சவைக்க வேண்டும் என்றால், அது உணவைப் பொறுத்தது. சில காய் மற்றும் பழ வகைகளை ஐந்து முதல் பத்துமுறை சவைத்தால் போதுமானது. அதுவே, சற்று கடினமான உணவையோ இறைச்சித் துண்டுகளையோ இருபது முதல் முப்பது முறை சவைக்கவேண்டியிருக்கும். உணவு நூல்களும் சுமார் முப்பதுமுறை வரை மென்று சாப்பிட வேண்டும் என்றே கூறுகின்றன. 

ஆனால், நாம் எத்தனை முறை மென்று சாப்பிடுகிறோம் என்று யோசித்துப்பாருங்கள். அடுத்த வேளை உணவு சாப்பிடும்போது கவனித்தால், நாம் அவ்வளவாக உணவை சவைப்பதில்லை என்பது தெளிவாகத் தெரியும். ’முப்பது முறை சவைக்கிறேன்’ என்று எண்ணிக்கொண்டே சாப்பிட வேண்டிய அவசியமில்லை. உணவு, வாயில் நன்றாக கூழ்ம நிலைக்கு வந்தவுடன் விழுங்கினால் போதும். விழுங்குவதற்கு முன், சிறு உணவுத் துணுக்குகள் வாய்ப்பகுதியில் சுழன்றுகொண்டிருந்தால், நீங்கள் உணவை தேவையான அளவுக்கு சவைக்கவில்லை என்று அர்த்தம்.

உணவை மென்று சாப்பிடுவதால் பற்களுக்கு பலம் உண்டாகும். மெல்லும்போது சுரக்கும் அதிக அளவிலான எச்சில் சுரப்பு, பற்களில் கிருமிகளின் தாக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்ளும். `உணவு சாப்பிடும்நேரத்தில் முழுக் கவனத்தையும் உணவில் மட்டுமே செலுத்த வேண்டும்’ என்று சொல்வதற்கான காரணங்கள் பல. செல்போன் பேசிக்கொண்டும், வேறு செயல்களைச் செய்துகொண்டும் சாப்பிடும்போது, உணவின்மேல் கவனம் இல்லாமல், மென்று சாப்பிடுவதற்கு வாய்ப்பே இல்லாமல்போகும்.

முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும், மென்று சாப்பிடமுடியாத சூழலில், செரிப்பதற்குக் கடினமான உணவுகளைக் கொடுத்து, செரிமானக் கருவிகளுக்கு கூடுதல் சுமை கொடுக்கக் கூடாது. செரிமானத்துக்கு எளிமையான மற்றும் கூழ்ம வகை உணவுகளைக் கொடுப்பது நல்லது. பற்களின் செயல்பாடு தொடங்கியதும், குழந்தைப் பருவம் முதல் மென்று சாப்பிடுவதன் அவசியத்தை அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது முக்கியம். 

சாப்பிடுவது

சில தாய்ப் பறவைகள், உணவை நன்றாக நொறுக்கித் தங்களது இளம் குஞ்சுகளுக்கு ஊட்டிவிடுவதும் செரிமானத்தைத் தூண்டும் அறிவியல்தான். சில விலங்குகளின் வயிற்றுக்குள் சென்ற பாதி செரிமானமான உணவுப் பொருள்கள், வாய்ப்பகுதியில் நொறுக்கப்படுவதற்காக மீண்டும் எதுக்களிக்கப்படுவதும் இயற்கை உணர்த்தும் அறிவியலே.

தொடர்ந்து, உணவை மென்று சாப்பிடாமல் விழுங்கிக்கொண்டிருந்தால், வயிற்று உப்புசம், உணவு எதுக்களித்தல், வாய்வுப்பெருக்கம் போன்ற குறிகுணங்கள் தோன்றும். அனைவரது வீட்டிலும் ஒரு கண்காணிப்பு கேமரா இருந்தால், கீழ்க்கண்ட நிகழ்வுகளைக் காணமுடியும். காலையில் பள்ளி செல்லும் குழந்தைகள் புத்தகங்களை பரபரப்பாகத் தேட, குடும்பத் தலைவர் அலுவலகம் செல்லும் அவசரத்தில் வேறு வேலை செய்துகொண்டே காலை உணவை வேகவேகமாக உட்செலுத்த, குடும்பத் தலைவியோ, இட்லித் துண்டுகளைக் குழந்தைகளின் வாயில் திணிக்க, மீதமிருக்கும் இட்லியை வேகமாக விழுங்கிவிட்டு, அவரும் அலுவலகம் செல்லும் அவசர யுகத்தில் உணவை மெதுவாக மென்று சாப்பிட முடியுமா? மென்று சாப்பிடுவதன் அறிவியலைப் புரிந்துகொண்டால்...

உணவை நொறுக்குவதற்கு வாய்ப்பகுதியில் மட்டுமே பற்கள் இருக்கின்றன. வாய்ப்பகுதியைத் தாண்டிவிட்டால், தசைகளின் இயக்கங்கள் மற்றும் ரசாயனங்களின் சூட்சுமங்களின் மூலமே உணவுகளைக் கசக்கிப் பிழிந்து சாரத்தை உறிஞ்ச முடியும். செரிமானத்தை எளிமையாக்க பற்கள், தசைகள், ரசாயனங்கள் போன்றவற்றின் கூட்டுச் செயல்பாடு மிகவும் அவசியம். செரிமானத்தின்போது தசைகளும் ரசாயனங்களும் நாம் சொல்வதைக் கேட்காது. ஆனால், `உணவை நன்றாக நொறுக்கு’ என்று பற்களுக்கு ஆணையிடலாம் அல்லவா... பற்களைப் பயன்படுத்தி நொறுங்கத் தின்போம்!... 

https://www.vikatan.com/news/health/136848-tips-for-healthy-eating.html

Link to comment
Share on other sites

சர்க்கரை நோய்க்கு மரபணுவே காரணம்

 

இன்று 2 ஆம் வகை சர்க்கரை நோய் வருவதற்கு பாரம்பரிய மரபணு, மன அழுத்தம், வாழ்க்கை நடைமுறை மாற்றம், உணவு முறை மாற்றம் என பல காரணங்களைச் குறிப்பிடலாம்.

news_image_health_6_9_18.jpg

தற்போது வைத்தியத்துறையில் உள்ளவர்களே தங்களுக்கு தொழுநோய், காசநோய் போன்ற நோய்கள் கூட வரலாம். ஆனால் சர்க்கரை வியாதி மட்டும் வரவேக்கூடாது என்கிறார்கள். 

ஏனெனில் சர்க்கரை நோய் வந்துவிட்டால் தலைமுதல் உள்ளங்கால் வரை எந்த பகுதி வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பாதிப்பு வரலாம். இதற்காக அவர்கள் வருமுன் காக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். நோயாளிகளுக்கு முன்னூதரணமாக இருக்கிறார்கள்.

உணவு மற்றும் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மூன்று மாதத்திற்கு ஒரு முறை முறையான பரிசோதனை இந்த திட்டத்தை உறுதியாக கடைபிடித்தால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கலாம். 

சிலருக்கு இதனுடன் மருந்து மாத்திரைகளும் தேவைப்படலாம். அதையும் எடுத்துக் கொள்ளலாம். இரவு பதினோரு மணி முதல் காலை ஐந்து மணி வரை கட்டாயம் உறங்கவேண்டும்.

சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதை பூரணமாக குணப்படுத்த இயலாது. இதய பாதிப்பு, இரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற நோய்களுடன் எப்படி வாழ்க்கையை மருந்து, மாத்திரை, கட்டுப்பாடு என கழிக்கிறோமோ அதே போல் சர்க்கரையின் அளவையும் ஆயுள் முழுவதும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டே வாழ்க்கை கடக்கவேண்டும். 

ஆனால் இதையெல்லாம் எமக்கு வராது என்று மனக்கட்டுப்பாடுடன் இருந்தால், அவர்களுக்கு கண் பாதிப்பு, கால் பாதிப்பு, இதயப் பாதிப்பு, இரத்த குழாய் பாதிப்பு, இரத்த நாள பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு என எல்லா பாதிப்புகளும் உறுதியாக வரக்கூடும் என எச்சரிக்கிறார்கள் வைத்தியர்கள்.

டொக்டர் எஸ் கண்ணன்

தொகுப்பு அனுஷா.

http://www.virakesari.lk/article/39905

 

இரைப்பை பாதிப்புக்கான அறிகுறிகள்

சிலருக்கு அதிகமாகப் பசிக்கும். நிறைய உட்கொள்ள மீண்டும் பசிக்கும். மீண்டும் உட்கொள்ள விரும்புவர். இது குறித்து வைத்தியரிடம் சென்று விசாரித்தால் இரைப்பை பாதிக்கப்பட்டிருக்கிறது என்பார்கள் அல்லது இரைப்பையில் புண் ஏற்பட்டிருக்கிறது என்பார்கள்.

அசுத்தமான குடிநீர், சுகாதாரமற்ற குடிநீர் ஆகியவற்றில் helocobacter pylori என்ற பாக்டீரியா தொற்று இருக்கும். இது குடிநீரின் வழியாக உடலுக்குள் சென்று இரைப்பையில் புண்ணை ஏற்படுத்தும். மது அருந்துவது, புகைப் பிடிப்பது, காரம் நிறைந்த உணவையும், புளிப்பு சுவையுள்ள உணவையும் அதிகமாக உட்கொள்வது, குளிர்பானங்கள், கோப்பி, தேத்தண்ணீர் போன்றவற்றை அதிகளவில் அருந்துவது, அதிகளவில் தொடர்ச்சியாக வலிநிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொள்வது போன்ற பல காரணங்களால் இரைப்பையில் புண் ஏற்படக்கூடும்.

health_news_image_15918.jpg

அமிலச்சுரப்பு அதிகமாக இருப்பதாலேயே இத்தகைய பாதிப்பு ஏற்படுவதாக அண்மையில் கண்டறியப்பட்டிருக்கிறது. இத்தகைய பாதிப்பு வந்தவுடன் கேஸ்ட்ரோ எண்டாஸ்கோப்பி என்ற பரிசோதனையை மேற்கொள்வார்கள்.

இதன் மூலம் இரைப்பையில் புண்ணை ஏற்படுத்திய helocobacter pylori என்ற கிருமிகளை எதிர்த்து போராடும் கிருமி நாசினிகளின் எண்ணிக்கையும் கண்டறிவார்கள். பிறகு அதற்கேற்ற வகையில் சிகிச்சையளித்து இதனை குணப்படுத்துவார்கள்.

பிறகு மருத்துவர் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறையை உறுதியாக பின்பற்றவேண்டும். அப்போது தான் இதனை மீண்டும் வராமல் தற்காத்துக் கொள்ள இயலும்.

 

http://www.virakesari.lk/article/40479

Link to comment
Share on other sites

இதயநோய்களைத் தடுக்க சர்க்கரை நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்?

 

சர்க்கரை நோயாளிகள், இதய நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

இதயநோய்களைத் தடுக்க சர்க்கரை நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்?
 

தயம்... உள்ளங்கை அளவுடையது என்றாலும் மனித உடலின் செயல்பாட்டுக்கு இதன் பங்கும் செயலும் அளவிடற்கரியது. நம் உடலில் மிகவும் உறுதியான தசையான இதயத் தசைதான் நம் பிறப்பு முதல் இறப்பு வரை ஓய்வில்லாமல் துடித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் துடிப்புதான், நாம் உயிருடன் இருப்பதற்கான சாட்சியும் ஆதாரமும் என்றால், அது மிகையாகாது.

இதயம்

ஒவ்வொரு துடிப்பின்போதும் இதயமானது அதன் சுழற்சிக்காக பிராணவாயு மற்றும் சத்துகள் நிறைந்த ரத்தத்தை, ரத்தக்குழாய்கள் மூலம் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் கொண்டு சேர்க்கிறது. அப்படி இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்துக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறைந்தாலோ, கடுமையாகத் தடைப்பட்டாலோ இதயத் துடிப்பும் அதன் செயல்பாடும் மாறுபடும். இதன் விளைவாக, மாரடைப்பு (இதயச் செயலிழப்பு) ஏற்படக் கூடும்.

 

 

ஹரிஹரன்அதுபற்றி விரிவாகப் பேசுகிறார் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் ஆர்.எஸ்.ஹரிஹரன்.

 ``மனிதன் ஆரோக்கியமான உணவை உண்டபோதும் நல்ல உணர்வுகளைக் கொண்டிருந்தபோதும் ஆரோக்கியமான காற்றைச் சுவாசித்தபோதும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கொண்டிருந்தபோதும் உடலுழைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டபோதும் இதயமும் 100 வயதைத் தாண்டி துடித்ததற்கான ஆதாரங்கள் ஏராளம் உண்டு. ஆனால், இன்றைய சூழலில் ஆரோக்கியமான காற்றும் உணவும் கிடைக்கவில்லை. குறிப்பாகப் பெண்கள் தங்கள் உடலைக் கவனித்துக்கொள்ள ஒதுக்கும் நேரம் மிக மிகக் குறைவு. இதன் விளைவாக பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டுக் கிடக்கிறோம். இதுபற்றி ஆராய்ந்தால் எத்தனையோ காரணங்கள் நம் கண்முன் விரிகின்றன. குறிப்பாக, இதயநோய் ஏற்படுவதற்கான முதன்மையான காரணிகளுள் சர்க்கரைநோய் முக்கிய பங்கு வகிக்கிறது.

 

 

 
 

 

1990-ம் ஆண்டுக்குமுன் சர்க்கரை நோயும் இதயம் சார்ந்த நோய்களும் இவ்வளவு நெருக்கமாக இருந்ததில்லை. ஆனால், இதய நோய்க்குச் சர்க்கரை நோய் முக்கியக் காரணமாக இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இதய நோய்களுக்கான காரணிகளை ஆராய்ந்தால், அவற்றை இரண்டாகப் பிரிக்கலாம்.

சர்க்கரை நோயாளி

1) மாறுதலுக்கு உட்பட்ட காரணங்களாக உடல் பருமன், மது அருந்துதல், புகைப்பிடித்தல், உடல் உழைப்பின்மை, உயர் ரத்த அழுத்தம், கட்டுக்குள் இல்லாத கொழுப்புச் சத்து, கட்டுக்குள் இல்லாத சர்க்கரை அளவு, அதிக டிரைகிளிசரைடு அளவு, கல்லீரல் சார்ந்த பிரச்னைகளைச் சொல்லலாம்.

2) மாறுதலுக்கு உட்படுத்த இயலாத காரணங்களாக வயது, பாலினம், மரபணு, உடல் முதலியவை சொல்லப்படுகிறது.

இதயம் சார்ந்த நோய்களின் வகைகள்

மாரடைப்பு 

நம் இதயம் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான பிராணவாயு மற்றும் சத்துப் பொருள்களைக் கொண்டு சேர்ப்பதே `கரோனரி ஆர்ட்டரி' (Coronary Artery) எனப்படும் ரத்தக்குழாய். இந்த ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்துக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் சத்துகள் கிடைக்கவில்லை என்றால் சில நொடிகளிலேயே இதயத்துக்கு  நிரந்தர பாதிப்பு ஏற்படக்கூடும். இந்த அடைப்பு அதிவேகமாக ஒரு நொடியில் நிகழ்ந்தால் மாரடைப்பு (Heart attack) எனப்படும். 

ரத்தக்குழாயில்  ஏற்படும் இந்த அடைப்பு ரத்த ஓட்டத்தை முழுமையாகத் தடை செய்யாமல், இதயத்துக்குச் செல்லும் ரத்தத்தின் அளவைக் குறைத்தால் நெஞ்சுவலி ஏற்படக்கூடும். இதுவே ஆஞ்சினா (Angina) எனப்படும். ரத்தக்குழாயில் கொழுப்பு சேர்ந்து ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும் நிலையை அதிரோஸ்கிளிரோசிஸ் (Atherosclerosis) எனப்படும்.

இதயம்

இதயச் செயலிழப்பு (Heart Failure)

நம் முழு உடம்புக்கும் ரத்தத்தை `பம்ப்' செய்து அனுப்புவது இதயத்தின் இடது கீழறை (Left Ventricle) ஆகும். இந்த அறையின்‌ தசைகள்  நீண்டநாள் சர்க்கரை நோய் காரணமாகவும் `கரோனரி ஹார்ட் டிசீஸ்' (Coronary heart disease)‌ காரணமாகவும் பாதிப்படையக்கூடும். இதனால், முழு உடலுக்கும் ரத்தத்தைச் சரியாக `பம்ப்' செய்ய இயலாது. இதைத்தான் `இதயச் செயலிழப்பு' என்பார்கள்.  இதயச் செயலிழப்பின் முக்கிய அறிகுறி மூச்சுத்திணறல் என்பது குறிப்பிடத்தக்கது.

இதய அடைப்பு (Heart block)

நமது இதயத்தில், மின் பரிமாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். இந்த மின் பரிமாற்றத்தின்போது ஏதேனும் கோளாறோ அல்லது மாற்றமோ நிகழ்ந்தால் `பல்ஸ் ரேட்' குறையும். இந்த நிலைதான் இதய அடைப்பு எனப்படுகிறது.

கரோனரி ஆர்ட்டரி டிசீஸ் - சர்க்கரை நோய்

கரோனரி ஆர்ட்டரி டிசீஸ், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகத் தீவிரமாகக் காணப்படும். இந்நோய் மற்றவர்களைக் காட்டிலும் சர்க்கரை நோயாளிகளை நான்கு மடங்கு அதிகமாகப் பாதிக்கிறது. 

மாரடைப்பைப் பொறுத்தவரை, சர்க்கரை நோய் இல்லாதவர்களைக் காட்டிலும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதமே அதிகமாக உள்ளது.

தமனியின் வயது (Arterial age)

தமனிக்கு எத்தனை வயதோ அதுதான் நமக்கும் வயது. சர்க்கரை நோயாளியை எடுத்துக்கொண்டால், அவரது தமனியின் வயது = அவருடைய வயது + அவருக்குச் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட கால அளவு. எடுத்துக்காட்டாக, ஒருவரின் வயது 50 என வைத்துக் கொள்வோம். அவர் தன்னுடைய 40-வது வயதிலிருந்து சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டால் அவரது வயது 50. ஆனால் அவரது தமனியின் வயது 50+10 =60. இப்படியாகச் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தமனி விரைந்து முதுமையடைகிறது. சர்க்கரை நோய் தமனி முதுமை அடைவதை வேகப்படுத்துகிறது.

 

 

பெண்கள் மற்றும் மெனோபாஸ் (Women and menopause)

ப்ரீ மெனோபாஸ் (Pre-menopause) எனப்படும் முன் மாதவிடாய்க் காலத்தில், ஒரு பெண் தன் சமவயது ஆணைவிட‌ 10 ஆண்டுகள் இளையவராகக் கருதப்படுகிறார். இது பெண்களின் ஹார்மோன் செயல்பாட்டின் விளைவு. எனவே இந்தக் காலகட்டத்தில், ஆண்களைவிடப் பெண்களுக்கு இதயம் சார்ந்த நோய்கள் வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால், சர்க்கரை நோய் பாதித்தால் இந்த நல்ல வாய்ப்பு முற்றிலும் அகன்றுவிடும். சர்க்கரை நோய் உள்ள பெண்களுக்கு ஆண்களைப்போலவே இதயம் சார்ந்த நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மாதவிடாய்

மாதவிடாய்க்குப் பின்னர் (Post menopause) பொதுவாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் இதய பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்பு சரிசமம் தான். ஆனால், சர்க்கரை நோய் உள்ள பெண்களுக்கு இதயம் சார்ந்த நோய்கள் வருவதற்கான வாய்ப்பு ஆண்களைவிட அதிகம். எனவே கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களைக் காட்டிலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்த சுழற்சி மற்றும் ரத்தக் குழாய் சார்ந்த நோய்களான மாரடைப்பு,  மூளை முடக்குவாதம் (Brain Stroke), பெரிபெரல் வஸ்குலர் டிசீஸ் (Peripheral Vascular disease) போன்றவை 10 ஆண்டுகள் முன்னதாகவே ஏற்படக்கூடும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பின் அறிகுறிகள்!

நெஞ்சுவலி மற்றும் வியர்வை, மிகக் குறைந்த அளவு வலி, இடது மார்பைச் சுற்றிய பகுதிகளில் விநோதமான வலி, சில நேரங்களில் உடல் முழுவதும் வியர்ப்பது போன்றவை மாரடைப்பின் அறிகுறியாக இருக்கக்கூடும். இதனை வலியற்ற மாரடைப்பு (Painless heart attack) என்கின்றனர். இதயத்துடிப்பில் மாற்றம், அதீத படபடப்பு, திடீர் மூச்சுத்திணறல், அதீத சோர்வு போன்றவை மட்டுமல்லாமல் திடீர் மரணமும் மாரடைப்பின் அறிகுறியாகவே கருதப்படுகிறது. ஏனென்றால் பல நேரங்களில் மின்சாரத் தூண்டல் மூலம் மீண்டும் இதயம் துடிக்கக்கூடும்.

வாழ்வியல் மாற்றங்களே அடிப்படை

இத்தகைய இதயம் சார்ந்த நோய்களில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள அல்லது நோய்  அணுகுவதிலிருந்து தள்ளிப்போட நம் வாழ்வியல் முறையில் மாற்றத்தைக் கொண்டுவருவதே முதற்படியாக இருக்கவேண்டும். இத்தகைய மாற்றத்தை முதலில் உணவு முறைகளிலிருந்தே தொடங்க வேண்டும்.

அதிக கலோரிகள் உள்ள உணவுகளைத் தவிர்த்தல் வேண்டும். கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. எண்ணெய், நெய் ஆகியவற்றில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஆவியில் வேக வைத்த உணவுகளை உண்பது மிகவும் நல்லது. அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்வதைத் தவிர்க்கவேண்டும். இது உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவும். உடலுழைப்பு அவசியம். தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது உடலுக்கும்,  உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் நீச்சல் பயிற்சி  மிகவும் ஆரோக்கியமானது.

மீன்

அசைவ உணவைப் பொறுத்தவரையில், ஆடு மற்றும் மாட்டு இறைச்சியைவிட கோழியின் இறைச்சி உகந்தது. கோழி இறைச்சியைவிட மீன் உகந்தது. மீன்களிலும் பெரிய மீன்களைவிடச் சிறிய மீன்கள் சிறந்தவை.  தாவரங்களிலிருந்து பெறப்படும் எண்ணெய்களைப் பயன்படுத்துவதே சிறந்தது. தேங்காய் எண்ணெய், பனை எண்ணெய், டால்டா ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது. ரத்தத்தில் டிரைகிளிசரைடு அளவு அதிகமாக உள்ளவர்கள் மது பான வகைகளை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். புகை மற்றும் மதுப்பழக்கம்  உள்ளவர்கள், அதைச் சிறிது சிறிதாக நிறுத்த முயற்சி செய்ய வேண்டும். உடல் பருமனைக் குறைக்க, தேவையான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

ஐ.டி துறையில் பணியாற்றுபவர்கள், இரவுவேளை பார்ப்பவர்கள், ஒரே இடத்தில் அசையாமல் அமர்ந்து வேலை செய்பவர்கள் (வங்கிப் பணி, கால் சென்டர்), அதிக மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்துக்கு ஆளாவோர் தங்கள் வாழ்க்கைமுறையை மாற்றியமைக்க முடிவெடுத்துச் செயல்பட வேண்டும். உதாரணமாக யோகா, கார்டனிங், புத்தகம் வாசித்தல், இசை கேட்டல், சிறு பயணம் போன்றவற்றில் ஈடுபடுவது இதய நோய், சர்க்கரை நோய் வரும் வாய்ப்பைத் தடுக்கும் என்பதே மருத்துவர்கள் தரும் அறிவுரை.

https://www.vikatan.com/news/health/137774-preventing-cardiovascular-disease-in-diabetic-patients.html

Link to comment
Share on other sites

ஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டால்

 

ஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டால் அவர்கள் தங்களின் ஆயுளில் ஒன்பதரை ஆண்டுகளை இழக்கிறார்கள் என்று அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

health_news_image_21918.jpg

தற்போது எம்மில் பலரும் வாழ்க்கை நடைமுறைமாற்றத்தை விரும்பியோ அல்லது விரும்பாமலோ ஏற்றுக்கொண்டிருக்கிறோம். 

நேரத்திற்கு சாப்பிடாதது, சத்துள்ளவற்றை போதிய அளவிற்கு சாப்பிடாதது. உடற்பயிற்சியோ அல்லது நடைபயிற்சியையோ நாளாந்தம் மேற்கொள்வது கிடையாது. அத்துடன் அதிக கலோரிகளைக் கொண்ட உணவுகளை விரும்பி சாப்பிடுகிறோம். அளவிற்குமேல் சாப்பிடுகிறோம். இதனால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகி, இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் கொழுப்பு தங்கி, இரத்தம் செல்ல வழியில்லாமல் மாரடைப்பு ஏற்படுகிறது.

மாரடைப்பை குணப்படுத்த பல்வேறு நவீன சிகிச்சை இருக்கிறது. ஆனால் மக்கள் மாரடைப்பிற்கு சிகிச்சைப் பெற்ற பின்னரும், அதாவது வைத்தியர்களாலும், வைத்திய தொழில்நுட்பத்தாலும் குணமடைந்த பின்னரும், வைத்தியர்கள் சொல்லும் வழிகாட்டலை பின்பற்றாமல் அலட்சியப்படுத்துகின்றனர். 

இதனால் அவர்களுக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்படுகிறது. பல தருணங்களில் அவர்கள் அபாயத்தையும் எதிர்கொள்கிறார்கள். ஒரு முறை மாரடைப்பு வந்துவிட்டாலே அவர்கள் தங்களின் ஆயுளில் ஒன்பதரை ஆண்டுகளை இழந்துவிடுகிறார்கள். 

இதனை உணர்ந்து மாரடைப்பு வராமல் தற்காத்துக் கொள்ளவேண்டும். குறைந்த பட்சம் வந்த பிறகாவது வைத்தியர்கள் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றி வாழ்க்கை நடைமுறையை மாற்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

டொக்டர் ராஜேஷ்

தொகுப்பு அனுஷா.

http://www.virakesari.lk/article/40932

 

 

 

 

 

 

இதயநோய் வருவதற்கான காரணமும்.... தீர்க்கும் வழிமுறையும்..

 
அ-அ+

இதய நோய் ஏற்படுவதற்கு வாழ்க்கைமுறையும், உணவு பழக்கவழக்கங்களும் முக்கிய காரணமாக இருக்கின்றன. இளம் பருவத்தினர் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு செய்ய வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்.

 
 
 
 
இதயநோய் வருவதற்கான காரணமும்.... தீர்க்கும் வழிமுறையும்..
 
இந்தியாவில் ஆண்டுதோறும் இதய நோய்களால் 30 லட்சம் பேர் இறக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளம் வயதினரும் மாரடைப்புக்கு ஆளாவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைமுறையும், உணவு பழக்கவழக்கங்களும் அதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. இளம் பருவத்தினர் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

ஆரோக்கியமான உடல் எடையை தீர்மானிப்பதில் கொழுப்பு, குளுக்கோஸ், ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு முக்கிய பங்கு இருக்கின்றன. அவை சீராக இருப்பதற்கு சத்தான தானிய உணவு வகைகளை தினமும் சாப்பிட வேண்டும்.

இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுவதற்கு வாரத்தில் 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியோ அல்லது 75 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சியோ செய்து வருவது அவசியமானது. ஜிம்மிற்கு சென்றுதான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றில்லை. நடைப்பயிற்சியும், ஓட்டப்பயிற்சியும் மேற்கொள்வது ரத்த அழுத்தம், கொழுப்பு, நீரிழிவு போன்ற பாதிப்புகளிலிருந்து உடலை பாதுகாக்கும். இதயத்திற்கும் நலம் சேர்க்கும்.

புகைப்பழக்கம் இதய நோய் பாதிப்பை மூன்று மடங்கு அதிகப்படுத்திவிடும்.

மாரடைப்பு ஏற்படுவதற்கு மரபணு ரீதியிலும் தொடர்பு இருக்கிறது. தந்தையோ அல்லது சகோதரரோ 55 வயதுக்குள் மாரடைப்பு பாதிப்புக்கு ஆளாகி இருந்தால், அது முதல் தலைமுறையை சேர்ந்த ஆணுக்கு 50 சதவீதம் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.

மன அழுத்தத்திற்கும், மாரடைப்புக்கும் நேரடி தொடர்பு இல்லை. எனினும் திடீரென்று மன அழுத்தம் அதிகரிக்கும்போது இதய நோய் சம்பந்தப்பட்ட பாதிப்பு ஏற்பட வழிவகுக்கும்.

ரத்த அழுத்தத்தையும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் அடிக்கடி சரிபார்த்து வர வேண்டும். அவ்வாறு சரிபார்த்து அவைகளை சீராக வைத்துக்கொள்வது இதய நோய் பாதிப்பிலிருந்து விடுவிக்க வழிவகை செய்யும்.

https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/09/26083237/1193801/heart-problem-solving-method.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.