Jump to content

Recommended Posts

தைராய்டு... தவிர்ப்போம்! நலம் நல்லது-25 #DailyHealthDose

 

Nalam_logo_new_15000.jpg

தைராய்டு

தைராய்டு என்பது, முன் கழுத்தில் மூச்சுக்குழல் பகுதியில் அமைந்திருக்கும் பட்டாம்பூச்சி வடிவக் கோளம். அந்த வடிவம் `தைராய்டு’ என்ற பழங்காலப் போர் ஆயுதம்போல இருந்ததாக உணர்ந்த தாமஸ் வார்ட்டன் என்கிற விஞ்ஞானி, அதற்கு `தைராய்டு’ எனப் பெயர் சூட்டினார். இந்தக் கோளம் சுரக்கும் சுரப்பு குறைந்தால் `ஹைப்போதைராய்டு’, அளவு அதிகமானால், `ஹைப்பர்தைராய்டு’, முன் கழுத்து வீங்கியிருந்தால் `காய்ட்டர்’ என நோய்களாக அறியப்படுகின்றன. இந்த நோயை இன்றளவிலும் முழுமையாகக் குணப்படுத்தும் மருந்து ஆதாரபூர்வமாகக் கண்டறியப்படவில்லை. இப்போதெல்லாம் காலை எழுந்து பல் துலக்கியதும், முதல் வேலையாக `தைராக்சின்’ மருந்தை எடுத்துக்கொள்வோர்தான் அனேகம் பேர். 

தைராய்டு தொடர்பான நோய்கள், பெண்களைத்தான் அதிகம் தாக்குகின்றன. ஆனாலும், அது பெண்களுக்கான பிரத்யேக நோய் அல்ல. ஆண்களுக்கு `அந்த’ விஷயத்தில் நாட்டம் குறைவது, ஆண்மை குறைவது, முதியவர்களின் மறதி... போன்ற குறைபாடுகளுக்கு தைராய்டு சுரப்பு குறைவதும் ஒரு காரணம். பெண்களுக்கு மாதவிடாய் சீர்கேடு, `பாலிசிஸ்டிக் ஓவரி’ எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி உருவாவது, கருத்தரிப்பு தாமதம் ஆவது போன்றவற்றுக்கும் தைராய்டு சுரப்பு குறைவது ஒரு காரணம். பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் தொடங்கி, 14 அல்லது 15-வது நாளில் கருமுட்டை வெடிப்பு கட்டாயம் நிகழ வேண்டும். அதை நிகழ்த்த ஹார்மோனைத் தூண்டுவது தைராய்டு சுரப்பிதான். பெண்களுக்கு மாதவிடாய் 30 நாட்களுக்கு ஒரு முறை நிகழ்வதில் பிரச்னை ஏற்பட்டாலோ, கருத்தரிப்பு தாமதம் ஆனாலோ தைராக்சின் சுரப்பு சரியாக இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். இதற்கு மட்டும் அல்ல... உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக் குறைபாடு, எடை அதிகரிப்பு, அறிவாற்றல் குறைவு, முடி உதிர்தல், சருமம் உலர்ந்து போவது... எனப் பல நோய்களுக்கான ஆரம்பப்புள்ளி தைராய்டு சுரப்பு குறைவதுதான். 

உப்பு

சில ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவின் கடல் ஓரத்தைவிட்டு விலகியுள்ள சுமார் 226 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் அயோடின் சேர்க்கையையும், தைராக்சின் சுரப்பு அளவையும் இந்திய மருத்துவக்கழகம் ஆய்வு செய்தது. அதன் முடிவு ஏராளமானோர் அயோடின் குறைவுடன் இருப்பதை உறுதிசெய்தது. இப்படியேவிட்டால், பெரும்பாலானவர்கள், ஹைப்போதைராய்டு நோயால் பீடிக்கப்படுவார்கள்; அவர்களுக்கு உடல் சோர்வில் தொடங்கி, உடல் வளர்ச்சிக் குறைவு, மூளை செயல்திறன் குறைவு வரை பல பிரச்னைகள் ஏற்படக்கூடும் என கண்டறியப்பட்டது. எனவே, இந்தியர்கள் அனைவருக்கும் அயோடினை உணவில் அன்றாடம் சேர்க்க முடிவுசெய்தது அரசு. உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி, நாம் அன்றாடம் சாப்பிடும் உப்பில் அயோடினைச் செறிவூட்டிக் கொடுப்பதைக் கட்டாயம் ஆக்கினார்கள். அதன் விளைவாக, பல கடல்சார் கனிமங்களின் தாவர நுண்கூறு கலவையுடைய உப்பளத்தில் கிடைக்கும் உப்பைத் தவிர்த்துவிட்டு, செறிவூட்டப்பட்ட சோடியம் குளோரைடை சாதத்தில் கலந்து சாப்பிட ஆரம்பித்திருக்கிறோம். இந்த செயற்கை உப்பு நமக்கு நன்மை அளிக்காது. 

தவிர்க்கவேண்டியவை...

* தைராய்டு கோளத்தில் பாதிப்புகளை உண்டாக்கும் சில உணவுகள் (Goitrogenic) உள்ளன. அவற்றில் நம் ஊர் கடுகும் முட்டைக்கோஸும் இடம்பிடித்திருக்கின்றன. லேசாக முன் கழுத்து வீக்கமோ, ஹைபோதைராய்டு நோயோ இருந்தால், கடுகு, முட்டைக்கோஸை உணவில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். 

252177_15555.jpg

234957_15185.jpg

* சந்தையில் விற்கப்படும் ஊட்டச்சத்து பானங்களில் அதிகமாகச் சேர்க்கப்படுவது சோயா புரதம். இந்தப் புரதம், சில நேரங்களில் தைராய்டு கோள வீக்கத்துக்குக் காரணமாகிவிடும். இதைத் தவிர்ப்பது நல்லது. 

உஷார்..! 

* பல புற்றுநோய்கள் பெருகிவரும் இன்றையச் சூழலில் தைராய்டு கோளப் புற்றும் அதிகமாகிவருகிறது. Pappillary, Follicular, Medullary, Anaplastic... என நான்கு வகைகளில் இந்தப் புற்று வரலாம். இவற்றில் வெகு சாதாரணமாக வரக்கூடியது Pappillary. தைராய்டு கோளத்தில் வீக்கம் ஏற்பட்டால், அதை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல், எளிய அல்ட்ரா சவுண்டு மற்றும் FNAC பரிசோதனைகள் மூலம் ஆரம்பத்திலேயே தெரிந்துகொண்டு, அந்த வீக்கத்தின் இயல்பைத் தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை புற்றுநோயாக இருந்தால், Anaplastic-ஐ தவிர, மற்றவற்றை அறுவைசிகிச்சை போன்ற சரியான ஒருங்கிணைந்த சிகிச்சைகள் மூலம் முழுமையாக குணப்படுத்திவிடலாம். புற்றாக இல்லாதபட்சத்தில், வெறும் வீக்கத்தைக் கண்டு கலவரப்படத் தேவை இல்லை. 

உணவில் சேர்க்கவேண்டியவை, பின்பற்றவேண்டியவை..

* அயோடினும் புரதமும் நிறைந்த கடல் மீன்கள், தைராய்டு குறைவு நோய்க்கான சிறப்பு உணவுகள். கூடுதல் புரதமும் வைட்டமின் - டி சத்தும் இவற்றின் ஸ்பெஷல். குறிப்பாக, வஞ்சிர மீன் குழம்பு அதிகப் புரதம்கொண்டது. இதை குடம்புளிக் கரைசலில் செய்தால், உடல் எடையையும் குறைக்கும். 

336097_15016.jpg

* சுறா புட்டு, பாலூட்டும் பெண்ணுக்கு தைராய்டு குறைவைச் சரியாக்குவதுடன், பால் சுரப்பையும் அதிகமாக்கும். 

* பொரித்த சீலா மீனில், புரதச்சத்தும் அயோடினும் மிக அதிகம். 

* `அகர் அகர்’ எனப்படும் கடற்பாசியில் வட இந்தியர்கள் செய்யும் இனிப்பு, குழந்தைகளுக்கு நலம் தரும் உணவு. பால், வெல்லம், அகர் அகர், ஏலக்காய் தூள் சேர்த்து இந்த இனிப்பைச் செய்து சாப்பிடலாம். 

* `ஸ்பைரூலினா’ என்ற சுருள்பாசி மாத்திரைகள், ஊட்ட உணவு வகைகளில் மிகப் பிரபலம். மீன் சாப்பிடாதவர்கள் இதைச் சாப்பிடலாம். 

* யோகாசனமும் மூச்சுப் பயிற்சியும் தைராய்டு கோளம் சரியாக இயங்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. `சூரிய வணக்கம், கபாலபாதி பிராணாயாம மூச்சுப் பயிற்சி, விபரீதகரணி யோகப் பயிற்சி ஆகியவை உடல் இயக்க ஆற்றலை வலுப்படுத்தும்’ என்கின்றன ஆராய்ச்சிகள். 

158441_15312.jpg

தைராய்டு சுரப்பு குறைவு நோயாளிகள், வெறும் மாத்திரையை மட்டும் எடுத்துக்கொள்ளாமல், சரியான உணவு முறை, யோகாசனங்கள், மூச்சுப் பயிற்சி ஆகியவற்றைக் கடைப்பிடித்தால் மெள்ள மெள்ள இந்த நோயின் பிடியில் இருந்து வெளியே வரலாம். 

http://www.vikatan.com/news/health/74506-how-to-avoid-thyroid-problems.art

 • Like 1
Link to post
Share on other sites
 • Replies 475
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

முதுகுத்தண்டை வலுவாக்கும் முதுகுவலி போக்கும் எளிய யோகா பயிற்சிகள்! #YogaForBackPain     இன்றைக்குப் பெரும்பாலானவர்களுக்கு இருசக்கரவாகன பயன்பாடு அத்தியாவசியமாகிவிட்டது. அடு

யார் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம் ? #MustKnow     நமது உடல் 70 சதவிகிதம் நீரால் ஆனது. மனிதன் சாப்பிடாமல் சில வாரங்கள்கூட உயிர் வாழ முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் மூன்று நா

புற்றுநோய் ஏன், எப்படி..? தவிர்க்கும் வழிமுறைகள்!     செல்களின் கூட்டமைப்பில் உருவானதே மனித உடல். நவரசங்களையும் எண் சுவைகளையும், ஆயற் கலைகளையும் அனுமதிப்பது செல்கள். இந்தக

நரம்புகள் வலுப்பெற உதவும் உணவுகள்! நலம் நல்லது-26 #DailyHealthDose

Nalam_logo_new_17038.jpg

shutterstock_153067424_17293.jpg

ட்டச்சத்துக் குறைவான உணவுகளைச் சாப்பிடுவது அல்லது அதிகமாகச் சாப்பிடுவது இரண்டுமே நரம்புகளுக்கு நல்லதல்ல. ஊட்ட உணவு சரிவர உடலுக்குக் கிடைக்கவில்லை என்றால், `பெர்னீஷியஸ் அனீமியா’ (Pernicious Anemia) எனும் ரத்தத்தையும் நரம்பையும் பாதிக்கும் நோய் நிச்சயம் வரும். வைட்டமின் பி 12 குறைவால் ஏற்படும் இந்த நோய் புற நரம்புகளில் வலுவைக் குறைய வைத்து, ஆரம்பத்தில் பாதம், கை, கால் எரிச்சல் எனத் தொடங்கி, தள்ளாட்டம், வலுக்குறைவு எனக் கொடுத்துவிடும்.

உணவு, பசிக்காக மட்டுமல்ல; ருசிக்காக மட்டுமல்ல. விருந்தாகவோ, மருந்தாகவோகூட அல்ல. அதையும் தாண்டி அர்த்தமுள்ளது. உடலுக்குத் திறனை உருவாக்க உதவும். கூடியவரை நோயில்லா நல்வாழ்வு பெற்றிட உதவும் அமுது இது. ஆறிய கஞ்சியோ, லோப்ஸ்டர் மீன் துண்டோ எதுவாக இருந்தாலும், உணவும் நம் மனித வாழ்வின் அடித்தளம். எல்லாம் வணிகமயமாகிவிட்ட சூழலில் இன்றைக்கு உணவு ஒரு மிகப் பெரிய ஆயுதமாகிவிட்டது. கொஞ்சம் கவனமாக நம் பாரம்பர்ய உணவு விஷயங்களை, நவீன அறிவியலின் துணைகொண்டு மீட்டெடுக்கத் தவறும் பட்சத்தில், தலைவாழை இலையில், பச்சை கலர் மாத்திரைகள் பதினைந்தைப் போட்டு, வைட்டமின் சிரப் ஊற்றிப் பிசைந்து, வேண்டுமானால் தொட்டுக்கொள்ள லேகியம், தாகத்துக்கு கஷாயம் என உணவு வாழ்க்கை, தலைகீழாக மாறிவிடும். எனவே, காய், கனி, கீரைகளைக் காதலிப்போம். தினை, ராகி, குதிரைவாலி முதலிய சிறுதானியங்கள் மீது அலாதிப் பிரியம் வைப்போம். நம் தாத்தா-பாட்டி செய்து தந்த உணவு வகைகளை, புதுப்பொலிவுடன் அலங்காரமாகச் செய்து ஆரவாரமாகப் பரிமாறிடுவோம். 

நரம்பு

நரம்பு வலுப்பெறவும் நரம்பியல் நோய்கள் தீரவும் என்னென்ன சாப்பிடலாம்... பார்க்கலாமா? 

* கோழியின் ஈரல் உள்ளிட்ட அசைவ உணவுகளில்தான் வைட்டமின் பி 12 அதிகம் இருக்கிறது. பால், முட்டையில் குறைவாக இருக்கிறது. பிற காய்கறிகளில் பி 12 இல்லை. இதனால்தான், தீவிர மரக்கறியாளருக்கு (வெஜிட்டேரியன்) பெர்னீஷியஸ் அனீமியா நோய் வர வாய்ப்பு அதிகம். அதற்கான அறிகுறிகள், கை, கால் எரிச்சல். இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, இவர்கள் பால் பொருட்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம்.

264126_17473.jpg

* நரம்பு மண்டலம் வலுப்பெற்றிருக்க பழங்கள் மிக அவசியம். தற்போது உலகமெங்கும் அதிகமாகிவரும் முதுமையில் வரக்கூடிய ‘அல்சீமர் நோய்’ எனும் மறதி, வலுக்குறைவு, தடுமாற்றம் நமக்கு வரமல் இருக்க வேண்டுமா? 40 வயதில் இருந்து தினமும் ஒரு முறை ஏதேனும் பழங்களை அவசியம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

266066_17159.jpg

* பொன்னாங்கண்ணிக்கீரை, மணத்தக்காளிக்கீரையை பகல் உணவில் சேர்த்துக்கொள்வது நரம்புகளுக்கு நல்லது. 

* இரவில் ஒரு சிட்டிகை சாதிக்காய் தூள் சாப்பிடுவது நரம்பு வலுப்பெற உதவும். 

* தேநீரில் லவங்கப்பட்டை போட்டுக் குடிப்பது, நரம்புகளுக்கு நலம் தரும். 

188228_17387.jpg

* நரம்பு பாதுகாப்புக்கு, எல்லா உணவிலும் மஞ்சள் தூள், வெந்தயத்தை மறக்காமல் சிறிதளவாவது சேர்க்க வேண்டும்.

* வயோதிகத்தில் நரம்பு வலுப்பெற அமுக்கிராங்கிழங்குப் பொடியை 1/2 தேக்கரண்டி அளவு பாலில் கலந்து இரவில் 45 நாட்கள் சாப்பிடவும்.

* ஓரிதழ் தாமரைப் பொடி, பூனைக்காலிப் பொடி நரம்பை வலுப்படுத்தும் மூலிகை உணவுகள். மருத்துவர் ஆலோசனையுடன் சாப்பிடுவது பார்கின்சன் நோய் உள்ளிட்ட பல நரம்பு நோய்களை ஆரம்பநிலையிலேயே களைந்துவிடும்.

http://www.vikatan.com/news/health/74762-foods-to-strengthen-your-nervous-system.art

 • Like 1
Link to post
Share on other sites

குறட்டைக்கு குட்பை சொல்ல முடியுமா? நலம் நல்லது-27 #DailyHealthDose

Nalam_logo_new_12478.jpg

குறட்டை

த்தமான குறட்டைச் சத்தம், ஆரோக்கியக் குறியீடு அல்ல. உடல் எடை அதிகமாக இருந்து, தொப்பையுடன் வலம்வருபவர் வாயில் இருந்து வரும் இந்த ஒலி, பல வேளைகளில் அபாயச் சங்கு ஒலி.

சில விநாடிகள் இடையிடையே மூச்சு நின்று, தடங்கலுடன் நடைபெறும் சுவாசத்தின்போதும், அனிச்சையாக வாயால் கொஞ்சம் காற்றை ஆற்றலுடன் உள்ளிழுக்கும்போதும் எழுவதுதான் இந்த விபரீதக் குறட்டைச் சத்தம். இப்படி ஒவ்வொரு முறையும் சில விநாடிகள் மூச்சுத் தடங்கல் நிகழும்போதும் தடாலடியாக ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையும். பின் சத்தமான உள்ளிழுப்பில் அந்த இழப்பு ஈடுகட்டப்படும். இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு காரணமாக, ஆழ்ந்த உறக்கம் இல்லாமல், மேலெழுந்தவாரியான உறக்கமே நிகழும். இப்படி ஆழ்ந்த உறக்கம் இல்லாமல், குறட்டையுடன் அவதிப்படும் நோயை `Sleep Apnea’ என்கிறார்கள். 

குறட்டைவிடுபவர்களுக்கு இதயத் துடிப்பில் தள்ளாட்டம், இதயத் தசைகள் வலுக்குறைவது, மாரடைப்பு… எனப் பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கொஞ்சம் எச்சரிக்கையாக இல்லையென்றால், உயிருக்கேகூட உலைவைத்துவிடும் குறட்டை. 

272745_12025.jpg

பெரும் தொப்பைக்காரர்களுக்கு அதிகக் குறட்டை இருக்கும். ஆஸ்துமா நோயாளிகள், சைனஸ் பிரச்னை இருப்பவர்களுக்கும் குறட்டை வரும். குறட்டைக்கும் மதுவுக்கும் மிக நெருங்கியத் தொடர்பு உண்டு. குடிப் பழக்கம் உள்ளவருக்கு வரும் குறட்டை, காலன் கொடுக்கும் அபாய அலாரம். இரவில் மது அருந்தி, நடு இரவில் அதிகக் கொழுப்பு, காரம் உள்ள உணவைச் சாப்பிட்டு உறங்கும் பலருக்கும் கண்டிப்பாகக் குறட்டை இருக்கும். அது ஆழ்நிலைத் தூக்கத்தைப் பாதிப்பதால், பகலில் மனம் ஒட்டாத அலுவலகக் கூட்டத்தில் சில மணித் துளிகள் அமர்ந்திருந்தாலே தூக்கம் கண்களைச் சுழற்றும். சில நிமிடங்களாவது பகல் உறக்கம் கிடைக்காவிட்டால், மாலைப் பணியில் எரிச்சல் எட்டிப் பார்க்கும். 

குறட்டையைப் போக்க சில வழிகள்… 

*குறட்டையில் இருந்து விடுபட, குடியில் இருந்து விடுபட வேண்டும். உடல் எடையைக் (குறிப்பாக தொப்பையை) குறைத்தே ஆக வேண்டும். 

241218_12381.jpg

* சித்த மருத்துவம், குறட்டைப் பழத் தைலத்தை மூக்கடைப்பு நோய்களுக்குப் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறது. சைனஸ் மூக்கடைப்பு உள்ளவர்கள், சுக்குத் தைலம் அல்லது குறட்டைப் பழத் தைலத்தால் வாரம் ஒருமுறையாவது எண்ணெய்க் குளியல், மற்றவர்கள் நல்லெண்ணெய்க் குளியல் போடுவது படிப்படியாக ஆழ்ந்த தூக்கத்தைத் தரும். 

* தினமும் `கபாலபாதி’ எனும் நாடி சுத்தி மூச்சுப் பயிற்சியும், பிற பிராணாயாமப் பயிற்சிகளையும் செய்வதுதான் குறட்டையை அடியோடு நீக்கச் சிறந்த வழிகள். 

* உறக்கத்துக்கு எனத் தனி மூச்சுப் பயிற்சியை வடிவமைத்துள்ளனர். `Rapid eye movement sleep’ எனும் மேலோட்டமான தூக்கம் எப்படிக் கட்டுப்பட்டு, ஆழ்ந்த உறக்கம் வரவழைக்கப்படுகிறது என்பதை, `Electro Encephalogram’ சோதனை மூலம் நிரூபிக்கவும் செய்திருக்கிறார்கள். 

* காலையில் 45 நிமிட வேக நடைப்பயிற்சி, மாலையில் மூச்சுப் பயிற்சி, உடல் எடையைக் குறைக்கும் உணவுப் பழக்கம், மதுவை ஒழித்தல் இவை மட்டுமே இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு தருபவை. 

shutterstock_459839599_12070.jpg

* குழந்தைகளுக்கு அடினாய்டு, டான்சிலைடிஸ் பிரச்னைகள் இருந்தால், அதனால் ஏற்படும் தொண்டைச் சதையின் மூச்சு இறுக்கத்தாலும், நெஞ்சில் சளி கட்டுவதால் ஏற்படும் அவதியாலும்கூட குறட்டை உண்டாகும். அவர்களுக்கு டான்சிலைடிஸ் பிரச்னை இருக்கிறதா என்பதைக் குடும்ப மருத்துவரிடம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். கற்பூரவல்லி இலைச் சாறில் தேனைச் சேர்த்துக் குழைத்துக் கொடுத்தால், மெள்ள மெள்ள டான்சில் வீக்கம் குறையும். அதேபோல், மிளகை தேனில் குழைத்துத் தந்தால், சைனஸ், டான்சிலைடிஸ், நெஞ்சுச் சளி, இருமல் ஆகியவற்றை நீக்க உதவும். பூண்டுத் தேனைப் பக்குவமாக குழந்தையின் தொண்டைப் பகுதியில் உள்ள டான்சிலின் மீது தடவினாலோ, நாக்கின் பின்புறம் தடவி கொஞ்சம் கொஞ்சமாகச் சுவைக்கச் சொன்னாலோ, மெதுவாக வீக்கம் குறையும். 

குறட்டைப் பழத் தைலம் எப்படிச் செய்வது? 
நாட்டு-சித்த மருத்துவக் கடைகளில் `குறட்டைப் பழம்’ கிடைக்கும். குறட்டைப் பழச் சாறு 1 லிட்டர், அதோடு சம பங்கு நல்லெண்ணெய் எடுத்துக்கொண்டு, அதோடு 20 கிராம் இடித்த மிளகு சேர்த்துக் காய்ச்ச வேண்டும். சாறு வற்றி, எண்ணெய் பிரியும் பதத்தில் இறக்கி, ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளவும். வாரம் ஒருமுறை இதைத் தேய்த்து எண்ணெய்க் குளியல் போடலாம். 

ஆழ்ந்த உறக்கம் ஆரோக்கியமான ஆயுளுக்கு ரீசார்ஜ்! எனவே, குறட்டையை விரட்டுவோம்!

http://www.vikatan.com/news/health/74859-say-goodbye-to-snoring.art

 • Like 1
Link to post
Share on other sites

காலை உணவு… தவிர்ப்பது சரியா? நலம் நல்லது-28 DailyHealthDose

Nalam_logo_new_14220.jpg

idly_10017.jpg

தி அவசரங்களில் மூழ்கிய நம் காலைப் பொழுதுக்கு நாம் காவு கொடுத்தது… காலை உணவு! இன்றைக்கு பொறியியல் மாணவன், கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்மணி, கணவன்–குழந்தைகளை அதிகாலையில் எழுந்து கிளப்பிவிடும் இல்லத்தரசி… இவர்கள் எல்லோருமே தொலைத்தது காலை உணவை! 

இரவில் எட்டு மணி நேரம் அமில ஊறலில் இருக்கும் இரைப்பை, காலை உணவைத் தவிர்த்தால் அமிலத்தால் சிதையத் தொடங்கும். காலை உணவைச் சாப்பிட்டு, இரைப்பையை நிரப்பாவிட்டால், முதல் நாள் இரவில் இயல்பாக ஏறிய பித்தம் மெதுவாகத் தலைக்கு ஏறும். அது வயிற்றுப் புண், வயிற்று உப்புசம், தீவிரமான வயிற்றுவலி, வாந்தி, பசியின்மை, அதிக உயர் ரத்த அழுத்தம், மனஅழுத்தம் வரை பல நோய்களைக் கொண்டு வந்து சேர்க்கும். காலை 9 மணிக்குள் சாப்பிடாமல், 11 மணிக்குச் சாப்பிட்டால் ட்ரான்ஸ்பேட் கொழுப்பும் கலோரியும் எக்குத்தப்பாக எகிறும்; அடிவயிற்றில் படிந்து பெருகும். ஆக, எப்படியாவது காலை உணவைக் கண்டிப்பாகச் சாப்பிட்டுவிட வேண்டும் என்பதுதான் நியதி.

எப்படிச் சாப்பிடலாம்… என்னென்ன சாப்பிடலாம்… பார்ப்போம்! 

336538_14141.jpg

* காலை உணவு சிறப்பான உணவாக இருப்பது நல்லது. வளரும் குழந்தைகள் உள்ள வீட்டில் தினையரிசிப் பொங்கல் செய்வது நல்லது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு, வரகரிசி உப்புமா சிறந்த மினி டிபன். இவையெல்லாம் சாதாரணமாக பொங்கல், உப்புமா செய்யத் தெரிந்தவர்கள் எளிதாகச் செய்யக்கூடிய சிற்றுண்டிகள். அரிசிக்குப் பதில் தினை. ரவைக்குப் பதில் வரகரிசி… அவ்வளவுதான். 

333675_14086.jpg

* விடிந்தும் விடியாமல், அதிகாலையிலேயே எழுந்து பணிக்குக் கிளம்புகிறவர்களா? அவர்களுக்காகவே ஒரு ரெசிப்பி உண்டு… அது, மாப்பிள்ளைச் சம்பா அவல் பிரட்டல். அடுப்படிக்குப் போகாமலேயே இதைச் செய்துவிடலாம். 

* காலையில் சுறுசுறுவென மூளை வேலை செய்ய வேண்டுமா… நோய் எதிர்ப்பாற்றல் நிறைந்திருக்க வேண்டுமா? அப்படியானால், காலை உணவில் பப்பாளிப் பழத்துண்டுகள், மாதுளை முத்துகள், மலை வாழைப்பழம், நிலக்கடலை, காய்ந்த திராட்சை… என இவற்றில் ஏதேனும் ஒன்றாவது இருக்க வேண்டும். 

* கேழ்வரகு இட்லி, பல தானியத் தோசை இவையெல்லாம் காலை உணவுக்கு மிக மிக நல்லவை. 

336523_14184.jpg

* சர்க்கரைநோய் இருப்பவர்கள், கஞ்சியாக காலை உணவைச் சாப்பிட வேண்டாம். அது, ஹைகிளைசெமிக் தன்மைகொண்டது. சிறு தானியமாக இருந்தாலும், அடை, தோசை, உப்புமா என பிற காய்கறிகளுடன் சேர்த்துச் சாப்பிடுவதுதான் சர்க்கரை ரத்தத்தில் சேர்வதை மெதுவாக்கும். 

295252_14456.jpg

* பல கீரைகளில், `ஆல்ஃபா அமைலோஸ் இன்ஹிபிட்டர்’ எனும் தாவரச்சத்து இருக்கிறது. இது, ரத்தத்தில் வேகமாகச் சர்க்கரை சேர்வதைத் தடுக்கும் தன்மை உள்ளது. கீரையுடன் சேர்த்து, எந்தத் தானிய உணவைச் சாப்பிட்டாலும், இந்தப் பயனைப் பெறலாம். 

* சர்க்கரை நோயாளிகள், எந்தக் காரணமாக இருந்தாலும், காலை உணவைத் தவிர்க்கவே கூடாது. 

266695_14293.jpg

* சத்து மாவுக்கஞ்சி தமிழர்களுக்கேயான பிரத்யேக ஊட்டச்சத்து உணவு. கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், கைக்குழந்தை, வளரும் குழந்தை அனைவருக்கும் ஏற்ற முதல் காலை உணவு இந்தக் கஞ்சிதான். 

சத்துமாவு செய்வது எப்படி? 

சிவப்புச் சம்பா அரிசி (மாப்பிள்ளை சம்பா கிடைத்தால் நல்லது), முளைகட்டி உலரவைத்த பாசிப் பயறு, சிவப்புக் கொண்டைக்கடலை, நன்கு வறுத்த தொலியோடு கூடிய உளுந்து, நிலக்கடலை, பொட்டுக்கடலை, பார்லி அரிசி, சம்பா கோதுமை, தினை அரிசி, கேழ்வரகு, வரகரிசி, குதிரைவாலி அரிசி… இவற்றையெல்லாம் வகைக்கு 250 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றோடு, முந்திரிப் பருப்பு 100 கிராம், தோல் சீவிய சுக்கு 50 கிராம் சேர்த்து, வறுத்து, பொடியாக்க வேண்டும். இதுதான் சத்துமாவு. தேவைப்படும்போது, இதிலிருந்து 3 – 4 டீஸ்பூன் எடுத்து, கஞ்சியாகக் காய்ச்சி, விருப்பப்பட்டால் பாலும் வெல்லமும் கலந்து சாப்பிடலாம். இதே மாவை காரம் சேர்த்து, காரக் கொழுக்கட்டையாகவும், வெல்லம் சேர்த்து மாலாடு உருண்டையாகவும் பிடிக்கலாம். கால்சியம், புரதம், நுண் கனிமங்கள் கொண்டது. சுருக்கமாக, நம் அத்தனை காலைகளையும் உற்சாகமாக்கும் வல்லமைகொண்டது. 

http://www.vikatan.com/news/health/74940-dont-avoid-morning-food.art

 • Like 1
Link to post
Share on other sites

அசைவம் நல்லதா... கெட்டதா? நலம் நல்லது-29 #DailyHealthDose

Nalam_logo_new_18161.jpg

239231_18493.jpg

 

சைவம் சாப்பிடுவது பற்றி இருவேறு கருத்துகள் இருக்கின்றன. ஒன்று, அசைவம் சாப்பிட்டால் உடல் வளர்ச்சிபெறும்; மூளை வளராது; சைவமே சிறந்தது என்பது. இரண்டாவது, அசைவம் சாப்பிடுபவர்களுக்கு காய், கனிகள் ஒரு பொருட்டே அல்ல என்பது. இவை இரண்டில் எது சரி? உண்மை, இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது என்பதே சரி.

அசைவம் சாப்பிட்டால், மூளை வளராது என்பது உழைக்கும் வர்க்கத்தை இழிவுபடுத்தும் ஒரு கருத்து. நோபல் பரிசு வாங்கியவர்களில் 90 சதவிகிதத்துக்கு மேற்பட்டவர்களும் உலகையே திரும்பிப் பார்க்கவைத்த `மைக்ரோசாஃப்ட்’, `ஆப்பிள்’ நிறுவனங்களை உருவாக்கியவர்களும் அசைவப் பிரியர்கள்தான். புலாலில் உள்ள புரதமும் சில நுண்சத்துக்களும் காய், கனிகளில் குறைவு. உதாரணமாக, 100 கிராம் ஈரலில், 6,000 மைக்ரோ கிராம் இரும்புச்சத்து உண்டு. 100 கிராம் கேரட்டில், இரும்புச்சத்து 300 மைக்ரோகிராம்தான் இருக்கிறது. எனவே, அசைவத்தின் ஆற்றலைக் கேள்விக்குறியாக்கவேண்டியது இல்லை. ஆனால், நம் உடலுக்கு அசைவம் மட்டும் போதுமா, அதை எப்படிச் சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று தெரிந்துவைத்திருப்பது நல்லது. 

333778_18297.jpg

அசைவ உணவுகளை எப்படி, எவ்வளவு சாப்பிடலாம்? 

* போருக்குச் செல்லும் வீரன்போல, காரில் போகும் சுகவாசி சாப்பிடுவது சரிப்படாது. கட்டுமரத்தில் நிமிர்ந்து நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட அளவு, நோஞ்சானாக இருப்பவர் கேண்டில் லைட் டின்னரில் `ஃபிஷ் ஃப்ரை’ ஆர்டர் செய்வது சரி வராது. உழைக்கும் அளவுக்கும் வாழும் நிலத்துக்கும் நாம் உண்ணும் அளவைத் தீர்மானிப்பதில் எப்போதுமே முக்கியமான பங்கு உண்டு. அசைவம் சாப்பிடலாம். ஆனால், அளவாகச் சாப்பிட வேண்டும். 

* ஐந்து பேர்கொண்ட ஒரு குடும்பம் வாரத்துக்கு ஒரு நாள் அரை கிலோ ஆட்டு இறைச்சியோ, ஒரு கிலோ கோழிக்கறியோ, ஒரு கிலோ மீனோ சாப்பிட்டால் போதுமானது. அதையும்கூட இரண்டு நாட்களாகப் பிரித்துச் சாப்பிடுவது இன்னும் சிறப்பானது. 

* மற்ற நாட்களில் காய், கனிகளுக்கு இடம் கொடுங்கள். 

* வாரத்தில் ஒரு நாள் - குறைந்தது ஒரு வேளையாவது வயிற்றுக்கு ஓய்வு கொடுத்து விரதம் இருங்கள். 

* கறி விருந்து சாப்பிட்டால், மறுநாளே கொள்ளு ரசம், சோறு, இஞ்சித் துவையலுடன் எளிமையாக அன்றையச் சாப்பாட்டை முடித்துக்கொள்ளும் வழக்கம் நம் முன்னோர்களிடம் உண்டு. ஆட்டிறைச்சி உடலுக்குத் தேவையான வலுவைத் தரும் என்றால், கொள்ளும் இஞ்சியும் கொழுப்பைக் கரைக்கும் என்பதை அறிந்துவைத்திருந்தார்கள் அவர்கள். 

* `மாமிசம் சாப்பிடும்போது, கண்டிப்பாக இஞ்சி, பூண்டு, சீரகம், மல்லி, பட்டை, கிராம்பு ஆகியவை இருக்க வேண்டும்’ என்கிறது தமிழ் மருத்துவம். எந்தத் தமிழர் வீட்டு அடுப்பங்கறையிலும், இந்தக் கறி மசாலா இல்லாமல், கிடாக்கறி சமைக்கப்பட்டது கிடையாது. ஆனால், இன்றைக்கு மூலைக்கு மூலை விரிந்திருக்கும் பன்னாட்டு கறிக்கடைகளில், அவித்தும் பொரித்தும் தரப்படும் கறி வகைகளில் கறி மசாலாவைப் பார்க்கவே முடியாது. அதேபோல், நம்முடைய சமையல் அறைகளை ஆக்கிரமித்துள்ள மசாலாப் பொடி பாக்கெட்களும் எந்த அளவுக்கு நல்லது என்று சொல்ல முடியாது. எனவே, வீட்டில் தயாரிக்கப்பட்ட கறி மசாலாவில், அந்த மணத்தோடு செய்த கறி வகைகளைச் சாப்பிடுவதே நல்லது. 

அசைவம்

* ரெஸ்டாரன்ட்டுகளில், ஹோட்டல்களில் கிடைக்கும் கறிவகைகளைத் தவிர்ப்பது சிறந்தது. காரணம், அவற்றில் நூற்றுக்கணக்கான ரசாயனப் பொருட்கள் கலந்திருக்கின்றன; ரசாயன உப்புகளும் கலக்கப்படுகின்றன. குறிப்பாக, புற்றுநோயை வரவேற்கும் சோடியம் நைட்ரேட், மோனோ சோடியம் குளூட்டமேட் ஆகியவை உண்டு. 

148277_18547.jpg

* கோழி நல்ல உணவு. ஆனால், அது தானாக இரைதேடி வளர்ந்த கோழியாக இருக்க வேண்டும். ஊசி போட்டு வளர்த்த கோழியாக இருக்கக் கூடாது. ஆரோக்கியமான முறையில் வளர்ந்த கோழியாக இருப்பின், `உடல் சூட்டைத் தந்து, சாதாரண சளி, இருமல், மந்தம் ஆகியவற்றைப் போக்கும். உடல் தாதுவை வலுப்படுத்தி, ஆண்மையைப் பெருக்கக்கூடியது’ என்கிறது சித்த மருத்துவம். இதில், வைட்டமின் பி 12 சத்து அதிகம். அதனால் உடல் எடை அதிகரிக்காது. நம் ஊரில் `கருங்கோழி’ எனப்படும் நாட்டு இனக் கோழி இன்றும் இருக்கிறது. தசை சூம்பி, வலுவிழந்து இருக்கும் பக்கவாத நோயாளிகளுக்கும், பிற தசை நோயாளிகளுக்கும் இந்தக் கோழியைத்தான் உணவாக, மருந்தாகப் பன்னெடுங்காலமாகச் சொல்லி வருகிறது தமிழ் மருத்துவம். பிராய்லர் கோழி இறைச்சி நல்லதல்ல. பிராய்லர் கோழிகளையும் லேயர் கோழிகள் இடும் முட்டைகளையும் தொடர்ந்து உட்கொள்ளும் சிறுமிகளுக்கு குழந்தைப் பருவத்திலேயே பூப்படையும் பிரச்னை வரவும் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படவும் வாய்ப்புகள் இருப்பதாகப் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

333717_18211.jpg

* மீன்கள் வெறும் உணவு அல்ல; ஊட்ட உணவு. அதிலும், கொழுப்பு அதிகம் இல்லாத புரதம் மிகுந்த உணவு. ஆனால், அந்தப் புரதத்தையும் இதயத்துக்கு நல்லது சேர்க்கும் சத்துக்களையும் முழுமையாகப் பெற வேண்டுமானால், மீனை பொரிக்கவோ, வறுக்கவோ கூடாது. வேக வைத்த மீனே சிறந்தது. `இ.பி.ஏ.’, (Eicosapentaenoic Acid), `டி.ஹெச்.ஏ.’ (Dacosahexaenoc Acid) எனும் இரண்டு `ஒமேகா 3’ அமிலங்கள் மீன்களில் உண்டு. இந்த இரண்டையும் நம் உடம்பு உற்பத்தி செய்யாது. சில வகை எண்ணெய் வித்துக்களைத் தவிர்த்து, தாவரங்களிலும் இது பெரிதாகக் கிடையாது. மூளைத் திறனைத் தூண்ட, புற்றுநோயைத் தடுக்க, மாரடைப்பைத் தடுக்க உதவும். இந்த இரண்டு `ஒமேகா 3’ அமிலங்களும் கடல் மீன்களிடம் கிடைக்கும். 

* ஆடோ, மீனோ, கோழியோ... அசைவ உணவுகள் விரைவில் கெட்டுப்போகும் இயல்புடையவை. இறைச்சிக்காக ஒரு விலங்கைக் கொல்லும்போது அதன் தோலும் குடலும் முழுமையாக நீக்கப்பட்டவுடன், விரைவாக அடுப்படிக்குப் போய்ச் சேர்ந்துவிட வேண்டும். அதில் ஏற்படும் தாமதம், இறைச்சியில் நுண்ணுயிரிகளைப் பெருக்கம் செய்யக் காரணமாகிவிடும். ஆனால், இன்றைக்கு பன்னாட்டு கோழி, ஆட்டுக்கறி உணவகங்களில் இந்தக் கறித்துண்டுகள் கடந்துவரும் பாதை ரொம்ப தூரம் என்பதை மனதில்கொள்ளவும். 

எனவே, இறைச்சியை ஃப்ரெஷ்ஷாக வாங்கி, மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்த பிறகு சமைத்துச் சாப்பிடுங்கள்... அதையும் அளவாகச் சாப்பிடுங்கள்! 

http://www.vikatan.com/news/health/75062-which-is-good-food-for-our-health-vegetarian-or-non-vegetarian.art

 • Like 1
Link to post
Share on other sites

சிரிப்பு... சிறந்த மருந்து! நலம் நல்லது-30 #DailyHealthDose

Nalam_logo_new_17541.jpg

shutterstock_83776693_17385.jpg

 

மொழிக்கு முன்னதாக மனிதன் கண்டுபிடித்த முதல் தொடர்பு ஊடகம் சிரிப்பு! அகில உலகத்துக்கும் பொதுவான மொழி அது. பார்வையற்ற, கேட்கும்திறன் இல்லாத குழந்தைகூட பிறந்த சில நாட்களில் சிரிக்கும் என்பது சிரிப்பின் தனிச் சிறப்பு. கைக்குழந்தையாக இருந்தபோது ஒரு நாளைக்கு 200-300 முறை சிரித்துக்கொண்டிருந்த நாம், வளர்ந்ததும் ஒரு நாளைக்கு 15-20 முறைதான் சிரிக்கிறோம். மகிழ்ச்சியை மட்டும் அல்ல, ஆரோக்கியத்தையும் இலவச இணைப்பாகத் தருவது சிரிப்பு... திருக்குறள் முதல் வாட்ஸ்அப் ஸ்மைலி வரை அனைத்தும் அழுத்தமாகச் சொல்வது இதைத்தான். இதில் பலருக்கும் பிரச்னை என்னவென்றால், பிரிஸ்கிரிப்ஷனில் எழுதித்தர முடியாத இந்த மருந்தை எங்கே சென்று வாங்குவது என்பதுதான். 

shutterstock_409650142_17503.jpg

ஏன் சிரிக்க வேண்டும்?

* மனிதன் மகிழ்ச்சிக்காக ஏன் மெனக்கெட வேண்டியிருக்கிறது? ஏனென்றால், உயிர் வாழப் பணம் தேவைப்படும் ஒரே உயிரினம் மனிதன் மட்டும்தானே! `வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்பது வழக்குமொழி மட்டும் அல்ல... விஞ்ஞான உண்மையும்கூட. எபிநெஃப்ரின் (Epinephrine), நார்-எபிநெஃப்ரின் (Norepinephrine), கார்டிசால் (Cortisol) ஆகியவை மனஅழுத்தம் உண்டாக்கும் ஹார்மோன்கள். ஆனால், மனம்விட்டுச் சிரிப்பது அந்த ஹார்மோன்களின் சுரப்பைக் குறைக்கிறதாம். அதனாலேயே, இயல்பாகவே மனஅழுத்தம் குறைகிறதாம். இயல்பிலேயே சிரிப்பை அடக்கிவைத்து, அதன் காரணமாகவே நம் ஊர்ப் பெண்களுக்கு ஏற்படுபவைதான் மனஅழுத்தம், மாரடைப்பு, புற்றுநோய் ஆகியவை. 

* சிரிப்பு, மூளையில் எண்டார்ஃபின்களைச் சுரக்கச் செய்து, நம் மனநிலையை உற்சாகமாக வைத்திருக்கும். ரத்தக்குழாயின் உட்சுவரான எண்டோதீலியத்தின் சுருக்கமும், அதில் கொழுப்புப் படிதலும்தான் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு எனப் பல பிரச்னைகளுக்குக் காரணங்கள். மனம்விட்டுச் சிரிப்பது, அந்த எண்டோதீலியத்தை விரிவடையச் செய்யும். 

* பெண்களுக்கு மாதவிடாய் முடிவை ஒட்டி பயமுறுத்தும் புற்றுநோய்களுக்கும், அடிக்கடி சளி, இருமல், தும்மல் வரும் நோய் எதிர்ப்பாற்றல் குறைவுக்கும் வாய்விட்டுச் சிரிக்காததும் ஒரு காரணமே. 

* உயர் ரத்த அழுத்தம் தரும் மாரடைப்பைக் காட்டிலும், மகிழ்ச்சிக் குறைவால் வரும் மாரடைப்புகளே அதிகம் எனப் பல ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. மாரடைப்பைத் தள்ளிபோடும் விலையில்லா மருந்து, வயிறு குலுங்கவைக்கும் சிரிப்பு! 

* சிரிப்பு, நோய் எதிர்ப்பாற்றலை உயர்த்தும்; ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்; இதயத்தையும் நுரையீரலையும் நல்வழியில் தூண்டும்; பிராண வாயு ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்; தசைகளைத் தளர்வாக்கும்; வலி நீக்கும்; உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். ஞாபக சக்தி, படைப்பாற்றல், துடிப்பாக இருத்தல்... போன்ற மூளையின் செயல்திறனைக் கூர்மையாக்கும்.

* `தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்’ என்பதுபோல, `தினமும் 25 தடவை சிரித்தே ஆக வேண்டும்’ என்பதும் நலவாழ்வுக்குக் கட்டாயம். 

சிரிப்பு

சிரிப்புக்கு நேர் எதிரானது கோபம். `கொஞ்சமே கொஞ்சம் சரியான கோபம் தவறு அல்ல. ஆனால், எங்கே, எப்படி, எந்த அளவில், யாரிடம், எப்போது, எங்ஙனம்... என அலகுகள் தெரியாமல் காட்டப்படும் கோபம், கோபப்படுபவனைத்தான் அழிக்கும்’ எனச் சொன்னவர் அரிஸ்டாட்டில். அதீத கோபம் வந்தால், பி.பி எகிறி வாயைக் கோணவைக்கும் பக்கவாதம், வாழ்வையே கோணலாக்கும் மாரடைப்பு போன்றவை வர வழிவகுக்கும். 

கோபத்தை திசை திருப்புவது எப்படி? 

* `கோபப்படுகிறோம்’ எனத் தெரிந்த அந்த விநாடியிலேயே, சொல்லவந்த வார்த்தையை, முகக்கோணலை, செயலை அப்படியே தடலாடியாக நிறுத்திவிட வேண்டும். சில நிமிட இடைவெளிக்குப் பிறகு, `அது அவசியமா?’ என யோசிக்க வேண்டும். பல சமயங்களில், `அது அநாவசியம்’ எனத் தெரியும். 

* கோபம் உண்டாகும் தருணங்களில் மூச்சை நன்கு உள்ளிழுத்துவிடவும்; கோபத்தை வளர்க்கும் அட்ரினலின் ஹார்மோன் கட்டுப்படும். 

* நெருக்கமானவர் நம் மீது தொடர்ந்து கோபப்பட்டுக்கொண்டே இருந்தால், ஃப்ளாஷ்பேக்கில் போய் எத்தனை கொஞ்சல், கரிசனம், காதல் தந்தவர் அவர் என்பதைச் சில விநாடிகள் ஓட்டிப் பார்த்து, சிந்தியுங்கள். கூலாகிவிடுவோம். 

* அடிக்கடி தேவையற்றதற்கெல்லாம் வரும் கோபத்துக்குப் பின்னணியாக மனஅழுத்தம் காரணமாக இருக்கலாம். மனநல மருத்துவர் உதவியும்கூட தேவைப்படலாம். கோபப்படாமல், அவர் உதவியை நாடவும். 

* கோபத்தைத் தொலைக்க வேண்டுமே தவிர, மறைக்கக் கூடாது. மறைக்கப்படும் கோபம், கால ஓட்டத்தில் மறந்துபோகாமல், ஓரத்தில் உட்கார்ந்து விஸ்வரூபம் எடுத்து, நயவஞ்சகம், பொறாமை... எனப் பல வடிவங்களை எடுக்கும். 

77104_17067.jpg

சிரிக்கச் சில வழிகள்... 

* `ஓ போடு’வில் தொடங்கி, கைகுலுக்கல், அரவணைப்பு, சின்ன முத்தம், முதுகு தட்டல், கைதட்டல்... இவையெல்லாம் சிரிப்புக்கு சினேகிதர்கள். சிரிப்பைக் கொண்டுவர, இவற்றில் ஏதாவது ஒன்றை முயற்சிக்கலாம். 

* `வாட்ஸ்அப்’பில் வலம்வரும் ஜோக்குகள், ஹீரோ பன்ச்களை உட்டாலக்கடி காமெடி ஆக்குவது, வசனம் இல்லாத சாப்ளின் படத்தில் அவரின் சேட்டைகளைப் பார்ப்பது... என  தினமும் ஏதாவது ஒன்றைப் பார்த்து, ரசித்து, அனுபவித்துச் சிரித்தால்தான் தொற்றாநோய்களை தள்ளிப்போடலாம்... தவிர்க்கலாம்

* வீட்டுச் செல்லக் குழந்தைகளைச் சிரிக்கவைக்க முயற்சி செய்யுங்கள். யானை அம்பாரி ஏறவைத்து விளையாடுவது தொடங்கி, முகத்தில் சேட்டை ரியாக்‌ஷன்களைக் கொடுத்து அவர்களைச் சிரிக்கவைப்பது வரை எதை வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம். அவை குழந்தைகளை உங்களுடன் நெருக்கமாக்கும். அவர்களின் மனங்களும் மலரும். 

* சிரிப்பை வரவைக்கும் படங்கள், வீடியோக்கள், குட்டிக் கதைகள் போன்றவை இணையத்தில் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் தரமான வலைதளங்களை புக்மார்க் செய்து வைத்துக்கொண்டு, தினமும் சில நிமிடங்களுக்காவது அவற்றைப் பார்த்து ரசிக்கலாம். 

சிரித்துப் பாருங்கள்... அலுவலகமோ, வீடோ எதுவாக இருந்தாலும் அது உங்களுக்கு சொர்க்கமாகவே தெரியும். 

http://www.vikatan.com/news/health/75281-laughter-is-the-best-medicine.art

Link to post
Share on other sites

அழகு பராமரிப்புக்கு அருமையான உணவுகள்! நலம் நல்லது-31 #DailyHealthDose

Nalam_logo_new_18319.jpg

அழகு

`அழகு, ஆண்டவன் அளித்த சிபாரிசுக் கடிதம்’ என்று ஒரு கவிதை உண்டு. `பளிச்’ என, அழகாக இருக்க வேண்டும் என்பது இன்று எல்லோருக்குமான ஆசை. ஆனால், பலரும் `சிவப்புதான் அழகு; பகட்டுதான் பளிச்’ நினைக்கிறார்கள். மோர்க்குழம்பு நிறமும், மோனலிசா முகமும் தங்களுக்கு வாய்க்கவில்லையே என தாழ்வு மனப்பான்மையை தங்களுக்குள் வளர்ப்பது தவறு. கறுப்பு நிறத்திலும் களையாக, பளிச்சென உங்களை வைத்துக்கொள்ள உதவும் உணவும் மருந்தும் நம்மிடம் ஏராளம். நிறம் கறுப்பாக இருப்பதில் இன்னொரு மிகப்பெரிய பயனும் உள்ளது... ஆம், சிவப்பைக் காட்டிலும் கறுப்பு நிறத்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகம்! 

ஆணோ பெண்ணோ, இளம் வயதில் வசீகரத்துக்காக அக்கறைப்படும் அளவுக்கு வயதான பின்னர் அதைப் பற்றி யோசிக்காமல் இருப்பதும் அழகைத் தொலைப்பதற்கு ஒரு காரணம். செல்லத் தொப்பை/சிசேரியன் தொப்பை என தன்னை அறியாமல் வளரும் தவறைத் திருத்திக்கொள்ளவில்லை என்றால், அழகு அடுத்த வீட்டில்தான் தெரியும். `அதுதான் 40 வயசு ஆகிடுச்சே... இனி எதுக்கு சீவி சிங்காரிக்கணும்?’ என்ற அக்கறையின்மை உடல் வனப்பின் மேல் வேண்டவே வேண்டாம். ஓய்வின்றி ஓடிக்கொண்டே இருக்கும் மனஅழுத்தம் மிக்க நடுத்தர வயதில்தான், துணையும் ஈர்ப்பும் அரவணைப்பும் மிகவும் தேவைப்படும். மண வாழ்க்கையில் எந்த வயதிலும் தம்பதியரிடம் அன்பு நிலைத்திருக்க, இந்தப் `பளிச்’ விஷயம் அவசியம். மேலும், தனக்குள் தன்னம்பிக்கையை வளர்க்கவும், தளர்ச்சியையோ, தள்ளாமையையோ தலைகாட்டவிடாமல் இருக்கவும், கண்ணாடியில் நம் உடலும் முகமும் அழகாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும். 

அழகாக இருக்க என்ன செய்யலாம்? 

அழகு என்பது இன்ஸ்டன்ட் இடியாப்பம்போல வருவதல்ல. பளிச்சென மிளிர்வதற்காக கண்ட கண்ட அழகு க்ரீம்களால் முகத்தைப் பாடாகப் படுத்துவதும் அல்ல. முதல் நாள் இரவு சாப்பிட்ட சமோசாவுக்கும் இன்றைய உங்கள் முகச் சோர்வுக்கும் நிறையவே தொடர்பு உண்டு. முதலில் உணவுத் தேர்வில்தான் தொடங்குகிறது அழகு. 

முகத்தின் அழகுக்கு... 

* அகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும். `அகம்’ என்றால், மனம் மட்டுமல்ல; வயிறும்தான். எண்ணெய்ப் பிசுக்கான முகம்கொண்டவர்கள் தினசரி சீரகத் தண்ணீர் அருந்த வேண்டும். பால் வகைகளை ஒதுக்கிவிட்டு, பழ ஆகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குறிப்பாக, பாலிஃபினால் நிறைந்த பப்பாளியை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கேரட், தக்காளி சேர்த்த ஜூஸ் அதனுடைய ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மையால், முகத்தில் சுருக்கங்கள் வராமல் பாதுகாக்கும்.  

65923_18073.jpg

235925_18342.jpg

299411_18508.jpg

* நிறையப் பருக்கள் (Pimples), சிறு குருக்கள் (Acnes) உள்ள முகமா? வெள்ளைப் பூசணிக்காய் (தடியங்காய்), பாசிப் பயறு சேர்த்துக் கூட்டாகச் சமைத்து, அடிக்கடி சாப்பிட்டால் போதும். கூடவே, ஆவாரம்பூ, ரோஜா இதழ்களை சமபங்கு எடுத்து, இருமடங்கு முல்தானிமட்டி மணலில் கலந்து நன்கு மாவாக பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையைப் பன்னீரில் குழைத்து முகத்தில் பூசி, நான்கு மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். இப்படி, வாரத்துக்கு மூன்று நாட்கள் செய்தால், பத்தே தினங்களில் பளிச் முகம் கிடைக்கும். 

* தினமும் உடல் இயக்கத்தின்போது, ஒவ்வொரு செல்லிலும் சேரும் தனி ஆக்சிஜன் அணுக்கள், செல் அழிவை ஏற்படுத்துவதுதான் வயோதிகத்துக்குக் காரணம். தோல் சுருக்கம், நரை, திரை, மூப்பு எல்லாம் இதன் அடிப்படையில்தான் ஆரம்பிக்கின்றன. ஆன்டிஆக்சிடன்ட் சத்துள்ள உணவுகளும் மூலிகைகளும்தான் இந்தச் செல் அழிவைக் கூடியவரை தள்ளிப்போட்டு, அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் வித்திடுபவை. இந்தச் சத்துக்கள் அதிகம் இருப்பது வண்ணமிகு காய், கனிகளில்தான். 

207712_18252.jpg

வசீகரமான தோலுக்கு... 

இன்றைக்கு பலருக்கும் வைட்டமின் மாத்திரைகளை, `சத்து மாத்திரை’ என வாங்கிச் சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. தேவையில்லாமல் வைட்டமின் சாப்பிடுவது உடலுக்குக் கெடுதல்; அதோடு, உணவில் இருந்து உடல் உயிர்ச்சத்தை (வைட்டமின்) பிரித்தெடுக்கும் திறனையும் அது குறைத்துவிடும். அழகுக்கு சில வைட்டமின்கள் ரொம்ப அவசியம். அவற்றில் முக்கியமானவை வைட்டமின் ஏ, சி, இ, பயோடின். வைட்டமின் ஏ என்றால் பலருக்கும் நினைவுக்கு வருவது கேரட். ஆனால், முருங்கைக்கீரை, முள்ளங்கி, வெந்தயம், பப்பாளி, ஆரஞ்சு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இவற்றிலும் பீட்டா கரோட்டின்கள் உண்டு. தோல் வறண்டு போகாமல், வனப்புடன் வசீகரமாக இருக்க, இவையெல்லாம் தினமும் உணவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். மஞ்சள் நிறத்தில் இருந்தாலும், அன்னாசியில் இந்த வைட்டமின் ஏ சத்து அதிகம் கிடையாது. ஆனால், பழுத்த இனிப்பு மாம்பழத்தில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. 

252183_18107.jpg

71458_18367.jpg

242016_18061.jpg

271680_18278.jpg

வனப்பான, மென்மையான தோலுக்கு... 

* வைட்டமின் சி-யும், ஏ-வும் தோல் வனப்புக்கு மிகவும் அவசியமான வைட்டமின்கள். இவற்றில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை தோலை வனப்புடன் வைத்திருக்கிறது; இளமையையும் பாதுகாக்கிறது. ஔவைப் பாட்டிக்கு அதியமான் கொடுத்த நெல்லிக்கனிதான் இன்றைய இந்திய மருத்துவ மூலிகைகளின் சூப்பர் ஸ்டார். இதில் நிறைந்துள்ள வைட்டமின் சி சத்து, முதுமையைப் போக்கும் மாமருந்து; நோய் எதிர்ப்பாற்றலை வழங்கிடும் அமுது. தினசரி நெல்லிக்கனியை உணவாகவோ, மருந்தாகவோ சாப்பிட்டால், நீடித்த ஆரோக்கியத்துடன் இளமை நிலைத்திருக்கும். நெல்லிக்கனி தவிர, முட்டைக்கோஸ், முருங்கைக்கீரை, கொத்தமல்லிக்கீரையிலும் வைட்டமின் சி சத்து உண்டு.  

142065_18064.jpg

* Rice Bran Oil (அரிசி-தவிட்டு எண்ணெய்), பருத்திவிதை எண்ணெய், நல்லெண்ணெய் ஆகிய தாவர எண்ணெய்களில் வைட்டமின் இ சத்து அதிகம். தவிர, பசுங்கீரைகள், சோளம் ஆகியவற்றிலும் வைட்டமின் இ உண்டு. ஆண்மைக்குறைவு தீரவும், குழந்தையின்மை பிரச்னை நீங்கவும் வைட்டமின் இ அவசியம் என்பது அழகையும் தாண்டிய இன்னொரு செய்தி. 

அழகைத் தரும் காயகல்பம் 

`காயகல்பம்’ என்பது உடலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்திருக்க, அந்தக் காலத்தில் தமிழ்ச் சித்தர்கள் காட்டிய உணவுப்பழக்கம், ஒழுக்க முறை, யோகப் பயிற்சிகள்தானே தவிர, எந்த ஸ்பெஷல் சிட்டுக்குருவி லேகியமும் அல்ல. அழகான உடலை அன்றைய சாதுக்கள் பெற்றிருந்ததற்கு இந்தக் காயகல்ப பயிற்சி ஒரு காரணம். அழகு நிலைத்திருக்க, ஒவ்வொருவரும் அவரவர் உடலுக்கேற்ற உணவை, குறிப்பிட்ட மூலிகையை மருத்துவர் ஆலோசனைப்படி தேர்ந்தெடுத்து தினமும் சாப்பிடுவதும், பிராணாயாமப் பயிற்சிகளை தினமும் மேற்கொள்வதும் அவசியம்.

http://www.vikatan.com/news/health/75386-superfoods-boost-your-beauty.art

Link to post
Share on other sites

அலுப்பு, சோர்வு... நீக்கும் உணவுகள்! நலம் நல்லது-32 DailyHealthDose

Nalam_logo_new_12426.jpg

அலுப்பு சோர்வு

 

ன்றைய அவசர உலகில், பெரும்பாலானோர் மனம் பிடிப்பில்லாமல், இறுக்கத்தோடு இயங்குவது அலுப்பு, சோர்வு ஆகியவற்றுக்கு முக்கியக் காரணங்கள். `என்னமோ தெரியலை... காலையில எந்திரிக்கும்போதே சோர்வா இருக்குது; தசை எல்லாம் வலிக்குது; எலும்புக்குள்ளே குடையுது...’ என மருத்துவரிடம் வருத்தப்படும் பெண்களும் இருக்கிறார்கள். அலுவலகம் விட்டு வரும் கணவனிடம் கடைக்குப் போகச் சொன்னால், ‘முடியாது... நானே நொந்து நூடுல்ஸாகி வந்திருக்கேன். மனுஷனை வீட்லகூட நிம்மதியா இருக்கவிட மாட்டியா?’ என அலுத்துக்கொள்ளும் கணவர்களும் இருக்கிறார்கள். ஏன் இந்த அலுப்பும் சோர்வும்? இது என்ன நோய்? உடல் உளைச்சலா... மன உளைச்சலா? 

உற்சாகமான உடலும், குதூகலமான மனமும் வாழ்க்கையைப் பிடிப்புடனும் நம்பிக்கையுடனும் ஆரோக்கியத்துடனும் நகர்த்திட மிக மிக அத்தியாவசியம். இவற்றைச் சிதைக்கும் அலுப்பு, சோர்வு ஆகியவை உடல் மற்றும் மனதின் நோய்களாகவும் இருக்கக்கூடும். 

225029_13277.jpg

எந்த இடையூறும் இல்லாத 7 - 8 மணி நேர இரவுத் தூக்கம் இருந்தால், காலை அலுப்பில்லாமல் உற்சாகமாக விடியும். அஜீரணக் கோளாறு, கால்சியம் மற்றும் உயிர்ச்சத்துக் குறைவால் இரவில் கெண்டைக்காலில் வரும் தசை வலி, உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் காலை நேரத் தலைவலி, சர்க்கரைநோயால் இரவில் தூக்கத்தைக் கெடுத்து இரண்டு, மூன்று முறை பிரியும் சிறுநீர்... இவை காலை நேர அலுப்பைத் தருவதில் முக்கிய நோய்கள். 

shutterstock_195265517_13398.jpg

இவை தவிர, ரத்தசோகை இருந்தாலோ, தைராய்டு சுரப்பு அளவுக்குக் குறைவாக இருந்தாலோ காலை நேரம் உற்சாகமாக இல்லாமல் அலுப்பு, சோர்வு ஏற்படுத்துவதாக அமைந்துவிடும். மலச்சிக்கல் உடலையும் மனதையும் மந்தப்படுத்தும் முக்கியக் காரணி. அதோடு, சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்களுக்காக சிகிச்சை எடுக்கும்போது, மருத்துவர் பரிந்துரைத்திருக்கும் உயிர்ச்சத்து, ஆன்டிஆக்சிடன்ட் மாத்திரைகளைச் சரிவரச் சாப்பிடாமல் இருப்பதும் உடல் சோர்வைத் தரும். சில மருந்துகள் ஜீரணத்தில் இடையூறு ஏற்படுத்துபவை. காய், கனிகளில் இருந்து சத்துக்களை உடல் பிரித்தெடுக்கும் தன்மையைத் தடுக்கக்கூடியவை. இதன் காரணமாக, நோய் கட்டுப்பாட்டில் இருந்தாலும், உடல் சோர்வு அலுப்பு இரண்டும் இருந்துகொண்டே இருக்கும். 

பெண்களுக்கு மாதவிடாய் முடியும் சமயத்தில் ஹார்மோன்கள் குறைவதால் ஒருவித எரிச்சல், படபடப்பு, பய உணர்வு, திடீரென்று வியர்த்துப் போதல் ஆகியவை நடப்பதும் அலுப்பு, சோர்வு ஆகியவற்றுக்கு முக்கியக் காரணங்கள். 

அலுப்பு, சோர்வுக்கு உடல் நோய்க்கு இணையான உளவியல் காரணமும் உண்டு. சவால்கள் இல்லாத ஒரே வேலையைப் பல ஆண்டுகளாகச் செய்து வருவதில் ஏற்படும் சலிப்பு, செய்கிற வேலைக்குச் சின்னதாக ஒரு பாராட்டுதல்கூட கிடைக்காததால் ஏற்படும் அலுப்பு, ஈ.எம்.ஐ கட்டுவதற்காகவே பிடிக்காத பணியை போலிப் புன்னகையுடன் செய்வதால் ஏற்படும் சோர்வு... என பல உளவியல் காரணங்கள் அலுப்பு, சோர்வு ஆகியவற்றுக்கு உண்டு.

கணவனுக்கு முத்தம் தருவதில் ஏற்படும் ஈகோ பிரச்னை, வளர்ந்த குழந்தைகளுடன் இருக்கும்போது தவிர்க்கப்படும். உடல் உறவுகள் என காதலும் காமமும் கட்டிப்போடப்படுவதாலும் வாழ்வில் அலுப்பும் சோர்வும் பெருகுகின்றன. 

எந்த உணவு உற்சாகம் தரும்... அலுப்பு, சோர்வு இரண்டையும் அடித்து விரட்டும்? 

* அலுப்பு, சோர்வு தரும் நோய் ஏதாவது இருந்தால், குடும்ப மருத்துவரை அணுகி முதலில் அதற்கு முறையான சிகிச்சை பெறவேண்டியது அவசியம். அடுத்ததாக, இரவில் நன்கு ஜீரணிக்கக்கூடிய, நல்ல உறக்கத்தைத் தரக்கூடிய உணவைத் தேர்ந்தெடுத்து உண்ணவேண்டியது அவசியம். அதிலும், கனி வகைகள் உங்கள் முதல் தேர்வாக இருக்கட்டும். பழங்கள், இறைவன் நமக்களித்த கசக்காத வைட்டமின் மாத்திரைகள். குறிப்பாக, ஒரு நெல்லிக்கனி, காய்ந்த திராட்சை, உலர்ந்த அத்தி ஆகியவற்றை தினசரி காலை வேளையில் சாப்பிடுவது அன்றைய தினம் முழுவதையும் உற்சாகமாக வைத்திருக்க உதவும். ஒரு வேளை உணவு (காலை அல்லது இரவு) முழுமையாகப் பழ உணவாக இருப்பது சிறப்பு. 

* பழங்களில், பாலீஷ் செய்யப்பட்ட வெளிநாட்டு ஆப்பிளும் ஆரஞ்சும்தான் சத்தானது என நினைப்பது தவறு. அவற்றைக் காட்டிலும் பப்பாளி, வாழை, மாதுளை, சீதாப்பழம், அன்னாசி ஆகியவை சிறப்பானவை. 

65922_13359.jpg

327785_13583.jpg

281479_13169.jpg

269310_13334.jpg

* பித்த உடல்வாகு கொண்டவர்கள், தினமும் காலையில் இஞ்சி, இரவில் கடுக்காய் சாப்பிடுவது அன்றைய தினம் முழுவதற்கும் உற்சாகம் தரும். 

234968_13043.jpg

41080_13213.jpg

* உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், முருங்கைக்கீரை சூப், சர்க்கரை நோயாளிகள் ஆன்டிஆக்ஸிடன்ன்ட் நிறைந்த பால் கலக்காத கிரீன் டீ (Green Tea) என காலை பானமாக அருந்தலாம். 

193796_13565.jpg

* தினமும் 2 - 2 1/2 லிட்டர் தண்ணீர் அருந்தவேண்டியது அவசியம். 

* அதிகம் புளி உள்ள, ஜீரணத்துக்குச் சிரமம் கொடுக்கும் எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். 

இவையெல்லாம் இருந்தாலும்கூட தெளிந்த மனமும், அக்கறை, அன்பு, பாசம், காதல் என உறவின் வெளிப்பாடுகளும்தான் அலுப்பு, சோர்வை நீக்கும் முக்கிய மருந்துகள். 

http://www.vikatan.com/news/health/75491-the-best-foods-to-fight-fatigue.art

Link to post
Share on other sites

சளி, இருமலைப் போக்கும் உணவுகள்! நலம் நல்லது-33 #DailyHealthDose

 

Nalam_logo_new_14570.jpg

சளி இருமல்

 

ல்லோருமே சளி, இருமலால் அடிக்கடி அவதிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். சளி, இருமல் அந்த அளவுக்கு சர்வ சாதாரணமாகிவிட்டது. இவற்றுக்குத் தீர்வு, நம் வீட்டு அஞ்சறைப்பெட்டியிலேயே இருக்கிறது. சரி... சளி, இருமல் இதற்கு மூல காரணம் என்ன, அவற்றைப் போக்க என்ன செய்வது என்று பார்ப்பதற்கு முன்னர் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது. 

இளம் மற்றும் நடுத்தர வயதினரிடையே `Functional foods’ என்ற வார்த்தை மிகப் பிரபலமாகிவிட்டது. விதவிதமாக கூட்டு, பொரியல் செய்து சாப்பிடுவதெல்லாம் இன்றைக்குப் போய்விட்டது. `பி.எம்.ஐ, பி.எம்.ஆர் குறைய என்ன செய்யலாம்?’, `பி.பி கூடாமல் இருப்பதற்கு வழி என்ன?’ என்பதையெல்லாம் கூகுளில் தேடுவது அதிகமாகிவிட்டது. அறிவியலின் நீட்சியும், இணையத்தின் வீச்சும் இதற்கு முக்கியக் காரணங்கள். இதில் எதிர்பாராத ஒரு பக்கவிளைவு, பழைய சமையல் பழக்கம் எல்லாம் சத்தில்லாதது என்கிற பொய் ஜோடனை உருவானதுதான். நம் பாரம்பர்ய உணவுகள் எல்லாமே ஃபங்ஷனல் ஃபுட்ஸ் என்பதுதான் உண்மை. ரொட்டி, கேக், பழத் துண்டுகள் மற்றும் இறைச்சி வகைகளைத் தவிர, பெரிதாக ஏதும் அறியாதது மேற்கத்தியம். தினமும் வைக்கும் நம் குழம்பு, கூட்டு, பொரியலில் இன்றைய அறிவியல் சொல்லும் உணவுக் கூறுகள், இன்னும் முழுமையாகச் சொல்லப்படாத மருத்துவ உண்மைகள் பொதிந்து இருப்பது பலருக்கும் தெரியாது. 

எப்போதாவது வரும் சளி இருமல் குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பாற்றலே அதைக் கவனித்துக்கொள்ளும். ஆனால், அடிக்கடி தும்மல், மூக்கடைப்பு, காலை எழுந்ததும் அடுக்குத் தும்மல், நெஞ்சில் சளி, அடிக்கடி தொண்டை கட்டிக்கொண்டால் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது எனப் புரிந்துகொள்ளலாம். 

shutterstock_256971376_14103.jpg

சளி இருமல் போக்க என்ன செய்யலாம்? 

* உணவில் நீர்ச்சத்துள்ள காய்கறிகளை சில நாட்களுக்குத் தவிர்க்க வேண்டும். சுரைக்காய், தடியங்காய் (வெள்ளைப் பூசணி), மஞ்சள் பூசணி, பீர்க்கங்காய் போன்றவற்றை சில வாரங்களுக்குத் தவிர்ப்பது நல்லது. கண்டிப்பாக இவற்றைச் சாப்பிடவேண்டிய சூழல் ஏற்பட்டால், மிளகுத்தூள் தூவிச் சாப்பிடலாம். இதன் மூலமாக சளி, இருமல் தவிர்க்கலாம். 

* பால், தயிர், இனிப்பு மூன்றும் நுரையீரலில் கபத்தை (சளி) சேர்க்கக்கூடியவை. இவற்றையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். சாக்லேட், ஐஸ்க்ரீம் வேண்டவே வேண்டாம். பழங்களில் எலுமிச்சை, கமலா ஆரஞ்சு, திராட்சை தவிர மற்றவற்றைச் சாப்பிடலாம். 

234963_14299.jpg

* மிளகு ஓர் அற்புதமான மருத்துவ உணவுப்பொருள். மிளகின் Immuno Modulating Effect காரணமாக, தும்மல், அலர்ஜியால் வரும் சளி (Sinusitis), ஆஸ்துமாவில் தங்கும் சளிக்கு உடனடியாகவும் நாட்பட்ட பலனையும் அளிக்கும். சளி, இருமல் தொந்தரவு உள்ளவர்கள் ஒவ்வோர் உணவிலும் மிளகு சேர்ப்பது அவசியம். 

* குழந்தைக்கு இரவில் மட்டும் இருமல் ஏற்படுகிறதா? நான்கு மிளகை எடுத்து தூளாக்கி, ஒரு டீஸ்பூன் தேனில் கலந்து, இளஞ்சூடாக்கி, கால் டம்ளர் தண்ணீரில் உறங்குவதற்கு முன்னர் பருகக் கொடுக்கலாம். இருமல் நீங்கி, இதமான தூக்கம் கிடைக்கும். குழந்தை, வெண்பொங்கலில் இருக்கும் மிளகை பொறுக்கி எடுத்துப் போட்டால் செல்லமாக மிரட்டி சாப்பிட வைக்கலாம். 

shutterstock_256541866_14566.jpg

* பாசிப் பயறு கொஞ்சம் குளிர்ச்சியானது. குளிர்காலத்தில் இரவில் தவிர்க்கவும். ஆஸ்துமா தொந்தரவு உள்ளவர்கள், இரவில் வெண்பொங்கல் சாப்பிடுவதைத் தவிர்த்தால், சளி, இருமல் தவிர்க்கலாம். 

266109_%281%29_14199.jpg

* மதிய உணவில் தூதுவளை ரசம், மிளகு ரசம் சேர்ப்பது அவசியம். மதியம் சாப்பிடும்போது, மணத்தக்காளி வற்றலை வறுத்துப்போட்டு, முதல் கவளத்தை சாப்பிட்டுவிட்டு, பிறகு குழம்பு, காய் சேர்த்து சாப்பிடுவது நல்லது. 

299450_14559.jpg

* மோர் சளி தராது. எனவே, அதை தாராளமாகச் சாப்பிடலாம். தயிர்தான் நல்லதல்ல. தயிர் செரிமானத்தை மந்தப்படுத்தும். மோர் சீர்ப்படுத்தும். தயிர் கபத்தை வளர்க்கும். மோர், பித்தம் நீக்கி, கபத்தைக் குறைக்க உதவும். 

337035_14170.jpg

* திப்பிலியை இள வறுப்பாக வறுத்து, பொடி செய்து தேனில் உணவுக்கு முன்னர் 3 சிட்டிகை அளவில் கலந்து சாப்பிட்டால் சளி குறையும். 

* காலை காபிக்கு பதில் முசுமுசுக்கை மற்றும் கரிசாலை உலர்ந்த இலைகளைக் கஷாயமாக்கி, பனங்கருப்பட்டி சேர்த்துப் பருகிவந்தால், காலை வேளையில் ஏற்படும் இளைப்பு உடனடியாகக் குறையும். 

* பிரைமரி காம்ப்ளெக்ஸ் நுரையீரல் காசநோய் (Primary Complex - Pulmonary Tuberculosis) இருக்கும் குழந்தைகளுக்கு சத்துமாவு மிக அவசியம். புழுங்கல் அரிசி, பார்லி அரிசி, உளுந்து, கேழ்வரகு, நிலக்கடலை, மக்காச்சோளம், முளைகட்டிக் காயவைத்த கொண்டைக்கடலை, பாசிப்பயறு, முந்திரி, பாதாம் பருப்பு, ஏலக்காய் இவற்றை வறுத்து, மாவாகத் திரித்து சத்துமாவைச் செய்துகொள்ளலாம். கஞ்சி காய்ச்சிய பின் இனிப்புக்கு பனங்கருப்பட்டி அல்லது கற்கண்டு, சிறிது சுக்குத்தூள் சேர்த்து சூடாக அருந்தக் கொடுக்கவும். அசைவப் பிரியம் உள்ள குழந்தைக்கு, பால் நண்டு சமைத்துக் கொடுக்கலாம். 

உணவு, மருந்துக்கு மாற்றல்ல. மருந்தை விரைவாகப் பணிபுரிய வைக்கவும், நோய் அணுகாமல் தடுத்து வைக்கவும், வந்த நோயை விரைவாக நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டு விரட்டவும் உணவால் மட்டுமே முடியும். இதை மனதில்கொள்வது நல்லது. 

http://www.vikatan.com/news/health/75577-suggest-good-food-when-having-cough-and-cold.art

Link to post
Share on other sites

உடல்பருமன் குறைக்கும் உணவுகள்! நலம் நல்லது-34 DailyHealthDose

 

Nalam_logo_new_14403.jpg

 

உடல்பருமன்

டல் உழைப்புக் குறைந்துவிட்ட இந்தக் காலக்கட்டத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது உடல்பருமன். குட்டித் தொந்தியும் தொப்பையுமாக இருந்தால்தான் குழந்தை சமத்து. `போஷாக்கா இருக்கானே குழந்தை!’ என்று கொஞ்சிய காலம் போய், `டாக்டர்! பையனோட பி.எம்.ஐ கூடியிருக்குமோ’ என விசாரிக்கும் பெற்றோர்களே அதிகமாகி உள்ளனர். தெருவுக்கு மூன்று ஜிம்கள் முளைக்கவும் உடல்பருமன் முக்கியக் காரணம். 

அழகும் ஆரோக்கியமும் ஒன்றையொன்று சார்ந்திருப்பவை. ஆரோக்கியம் இல்லாத அழகு, அஸ்திவாரம் இல்லாத அரண்மனை மாதிரி. அழகு, ஆரோக்கியம் இரண்டும் சம்பந்தப்பட்ட முக்கியப் பிரச்னை உடல்பருமன்; பல நாள்பட்ட நோய்களை அழைத்து வரும் ஒன்று. சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், மூட்டுவலி, நரம்புத்தளர்ச்சி எனத் தொடரும் இந்தப் பட்டியலால்தான் வீட்டுச் செலவும் பன்மடங்கு அதிகரிக்கிறது. 

shutterstock_348926726_14099.jpg

உடல்பருமன் தடாலடியாகத் தோன்றுவது அல்ல. கொழுப்பு என்பது உடலுக்கு ஆற்றல் தேவைப்படும்போது எடுத்துக்கொள்ள வைத்திருக்கும் தேக்கம். பெண்ணுக்கு 20 - 25 சதவிகிதமும், ஆணுக்கு 12 - 15 சதவிகிதமும் உடல் கொழுப்பு இருக்கும். பெண்களுக்கு அவர்களது மகப்பேறு பணிக்குத் துணையாக மார்பகம், கூபகம், தொடைப் பகுதியில் 12 சதவிகிதம் கூடுதலாக அத்தியாவசியக் கொழுப்பு (Essential Fat) உள்ளது. ஆண்களுக்கு இது 3 சதவிகிதம்தான். உடல் எடை அதிகரிப்பது, தேக்கி வைத்துள்ள கொழுப்பு அதிகரிப்பதால் மட்டுமே உருவாகிறது. உடல் மற்றும் தோலுக்கு அடியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் இந்தக் கொழுப்புதான் கூடுதல் தீனி, குறைந்த உடல் உழைப்பு, சில நேரங்களில் பாரம்பர்யம் மற்றும் ஹார்மோன் குறைவு, அதிகம் போன்ற காரணங்களால் அதிகமாகி உடல்பருமன் நோயை உருவாக்குகிறது. மருத்துவ அறிவியல், உடல் முழுவதும் ஒட்டுமொத்தமாகப் பருத்து இருப்பதை ஒவாய்டு (Ovoid) அமைப்பு என்றும், பருத்த தொப்பையுடன் இருப்பதை ஆப்பிள் அமைப்பு என்றும், தொடை, அடிவயிறு, பிட்டம் மட்டும் பருத்து இருப்பதை கைனாய்டு (Gynoid) அமைப்பு என்றும் வகைப்படுத்தி இருக்கிறது. இதன் அடிப்படையில் ஒவ்வொருவரும் எந்தப் பிரிவு என்பதைப் பொறுத்து அவரவர்களுக்கான சிகிச்சையும், உணவுக் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் மாறுபடும். 

உடல்பருமன் குறைக்க உதவும் உணவுகள்...

* உடல்பருமனை குறைக்க பட்டினி வழியல்ல. முதலில் அளவான சாப்பாடு எடுத்துக்கொள்ள வேண்டும். குறைந்த கலோரியில் நிறைந்த நார்ச்சத்துகொண்ட உணவை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். 

* விருந்து, பஃபே எல்லாம் உடல்பருமனைக் குறைக்க விரும்புபவர்கள், கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டியவை. வீட்டிலும் சாம்பார், ரசம், மோர் சாப்பிட்டுவிட்டு மீண்டும் ரிவர்ஸ் கியர் போட்டு கொஞ்சமாக புளிக்குழம்பு ஊற்றி ஒரு வாய் சாப்பிடுவதை எல்லாம் நிறுத்த வேண்டும். 

* ஒரு கப் சாதத்தை மூன்று பங்காகப் பிரித்து, கீரை, காய்களுடன் பிசைந்து ஒரு பங்காகச் சாப்பிட வேண்டும். (இப்படிச் செய்வதால், அரிசியில் உள்ள கார்போஹைட்ரேட், மெதுவாக குளூக்கோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் மெதுவாகச் சேரும்). அடுத்த பங்கு ரசம். கடைசிக் கவளம் மோர் எனப் பிரித்துச் சாப்பிடுவது நல்லது. இதில் மிக முக்கியமான விஷயம், ஒரு கப் என்பது 150 கிராம்தான் இருக்க வேண்டும். 

337202_14535.jpg

336666_15102.jpg

299407_%281%29_15432.jpg

* உடல் எடைக் குறைப்புக்கு உதவும் பூண்டு, வெந்தயம், லவங்கப் பட்டை, நாருள்ள கீரை, லோ கிளைசெமிக் உணவுகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

* சர்க்கரை, எண்ணெயில் பொரித்த உணவுகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். 

* அரிசிக்கு பதிலாக வாரம் நான்கு நாட்கள் கம்பு, தினை, சிறுசோளம் என சிறுதானியங்களை சேர்த்துக்கொள்ளலாம். 

* `கார்சீனியா’ எனப்படும் குடம் புளி, உடல் எடையைக் குறைக்க உதவுவதை பல அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. `கோக்கம் புளி’ எனப்படும் இந்த மலபார் புளியில் சமைக்கலாம். 

* `இளைத்தவனுக்கு எள்ளு கொடு; கொழுத்தவனுக்கு கொள்ளு கொடு’ என்பது பழமொழி. உடல் எடை கூடியவர்கள் கொள்ளுரசம், கொள்ளு சுண்டல் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிடலாம். 

331251_15089.jpg

* சமீபமாக பேலியோ டயட், ஜி.எம். டயட் முதலிய உணவு வழிமுறைகள் உடல் எடைக் குறைப்பில் பிரசித்துபெற்று வருகின்றன. ஆனால், அவற்றைப் பின்பற்றும் முன்னர் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது நல்லது. 

* உடல் எடை போதுமான அளவு குறைந்த பின்னர், நமது மரபு உணவுகளை, தானியங்களை, புலால்களை சரிவிகித சம அளவில் எடுத்துக்கொள்வது நல்லது.

 

அக்கறையுடன்கூடிய தொடர் உடற்பயிற்சி மற்றும் யோகா, ஆரோக்கியமான உணவு என நெறிப்படுத்தி வாழ்ந்தால் உடல்பருமன் ஓடியே போகும்.
    

http://www.vikatan.com/news/health/75680-weight-loss-tips-to-reduce-obesity.art

Link to post
Share on other sites

நலம் நல்லது-36 அரிசி சாப்பிடலாமா... கூடாதா?  #DailyHealthDose   

 

rise1227_vc1_08275.jpg

 

அரிசி சாப்பிடலாமா

 

புறநானூறு, தொல்காப்பியம் இவற்றில் எல்லாம் பாடிச் சிறப்புப் பெற்ற அரிசி, இன்று பலருக்கும் `ஆகாத’ உணவு. `அரிசியா? ஐ டோண்ட் டேக் இட்...பா’ என இளமைப் பட்டாளம் இளக்காரம் செய்யும் பொருளாகவும் ஆகிவிட்டது. அரிசி உடல் எடையைக் கூட்டிவிடும் என்றால், இந்த 10,000 ஆண்டுகளில் வரலாறு எத்தனை குண்டர்களைச் சந்தித்திருக்க வேண்டும்? சித்தன்ன வாசல் குகை ஓவியங்களிலோ, மற்ற கோயில்களில் இருக்கும் சிற்பங்களிலோ உழைக்கும் கூட்டம் செல்லத் தொப்பையுடன் இருப்பதைப் பார்த்திருக்கிறோமா? சர்க்கரைநோய் குறித்த செய்திகள் இலக்கியத்தில் ஏராளமாக இடம்பெற்றிருக்கிறதா? பின் எப்போது வந்தது தொப்பை? 

`சில்க்கி பாலீஷ்’ போட்ட வெளுத்த அரிசியை அளவில்லாமல் சாப்பிட்டு, சதா டி.வி., கம்ப்யூட்டர் முன் அமர்ந்துகொண்டு, கனவில் மட்டுமே கடும் உடற்பயிற்சி செய்யும் கனவான்கள் தொப்பைக்குக் கண்டறிந்த காரணம் அரிசி. பிரச்னை நம் வாழ்வியலிலும் பரபரப்பிலும்தான் இருக்கிறது. அரிசியில் இல்லை. 

p48a_22452.jpg 

 

ஒரே பருவத்தில் விளைந்த நெல்லை தேவைக்கு ஏற்றபடி, தேவைப்படும் நபருக்கு ஏற்றபடி தயாரித்தது நம் பாரம்பரியம். அதாவது, மழலைப் பேத்திக்குக் கஞ்சி; வளரும் பிள்ளைக்குப் பச்சரிசி; வீட்டில் உள்ள பெரியோருக்குக் கைக்குத்தல் புழுங்கல்; பாட்டிக்கு அவல்; மாலைச் சிற்றுண்டிக்கு பொரி; இரவில் அரிசிக் கஞ்சி! பழம்பெரும் விஞ்ஞானி ரிச்சாரியா, ஏறத்தாழ நான்கு லட்சம் அரிசி ரகங்கள் இந்தியாவில் இருந்ததாகக் கூறுகிறார். இடைக்காலத்தில் அதிக மகசூல், வீர்ய ஒட்டு ரகம் என்ற ஓட்டத்தில் பன்னாட்டு வணிகப் பிடியில் சிக்கிக்கொண்டோம். பாரம்பரியமான `காடைகழுத்தான்’, `குள்ளக்கார்’, `குழியடிச்சான்’, `மணிச்சம்பா’ போன்ற அருமையான அரிசி ரகங்களைத் தொலைத்துவிட்டோம். இன்று, இனிஷியல் அரிசியில் ஏமாந்து நிற்கிறோம். கைக்குத்தலின் மகிமை புரியாமல், பளபள என அரிசிக்கும் பாலீஷ் போட்டு, வெளுக்கடித்துவிட்டோம். நல்லன தரும் தவிட்டை குப்பை என எறிந்துவிட்டோம். 

 

p17_23330.jpg 

 

அரிசி... சில தகவல்கள்!

* புழுங்கல் கைக்குத்தல் அரிசி, குறைந்த கிளைசெமிக் தன்மை கொண்டது. ஓரிஜைனால் (Oryzinal) எனும் ஆன்டிஆக்ஸிடன்ட் பொருளைக் கொண்டது. வைட்டமின் பி சத்து நிறைந்தது. கைக்குத்தல் புழுங்கல் அரிசியில் குறைந்த கிளைசெமிக் தன்மை இருப்பதால், அது ரத்தத்தில் சர்க்கரை அளவை மெதுவாக ஏற்றி சர்க்கரை நோயாளிக்கு திடீர் சர்க்கரை உயர்வைத் (Hyper Glycemia) தடுக்கும். p48aa_22148.jpg 

* கோதுமைக்கும் அரிசிக்கும் கலோரி கணக்கில் பெரிய வேறுபாடு இல்லை. அரிசி குளிர்ச்சி. தமிழர்களுக்கு, தமிழ் மண்ணில் வாழ்பவர்களுக்கு ஏற்றது. பிரச்னை, அளவுதானே ஒழிய, அரிசி இல்லை. அளவைக் குறைத்துப் புழுங்கல் அரிசி சாப்பிட்டாலே சர்க்கரைநோயைக் கட்டுப்பாடாக வைத்திருக்க முடியும். அரிசியை நாம் அப்படியே சாப்பிடுவது இல்லை. ஊற்றும் குழம்பு, கீரையின் மூலம் அதன் சர்க்கரை ஜீரணிக்கும் வேகத்தையும் பெருமளவுக்குக் குறைக்க முடியும். 

* பாலுக்குப் பின் கைக்குழந்தையின் முதல் உணவு அரிசிக் கஞ்சிதான். அரிசியுடன் பருப்பு (சிறு பருப்பு) சேர்த்து, பசுநெய் அல்லது தேங்காய் எண்ணெய்த் துளியுடன் தருவது குழந்தையின் எடை சீராக உயரப் பெரிதும் உதவும். 

* மெல்லிய உடல்வாகு வேண்டும் என்பதற்காக, பெண்கள் அரிசியைத் தவிர்ப்பது தவறு. அரிசியைத் தவிர்த்துவிட்டு, வெறும் கோதுமை உணவை உண்பது கர்ப்பப்பை சூட்டை அதிகரிக்கும். வெள்ளைப்படுதல் மற்றும் மாதவிடாய்த் தொந்தரவுகளை அதிகரிக்கச் செய்யும். பெண்கள், தினமும் சரியான புழுங்கல் அரிசியைக் கீரை மற்றும் காய்கறிகளுடன் சாப்பிட வேண்டியது அவசியம். இன்றைக்குப் பெருகிவரும் பாலி சிஸ்டிக் ஓவரீஸ் பிரச்னையைக் கீரை சாதத்தின் லோ கிளைசெமிக் தன்மை தவிர்த்துவிடும். 

* சிவப்பரிசி அவல் ஒரு சிறப்பான உணவு. உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் காலைச் சிற்றுண்டிக்கு அவலை அழைக்கலாம். அவல், உடல் உறுதிக்கும் ஈடில்லாதது. 

* அரிசி என்பது நெல்லரிசி மட்டும் இல்லை; வாரத்தில் மூன்று நாட்களுக்கு தினை அரிசி, கம்பரிசிச் சோறு சாப்பிடுவது சிறந்தது. சிறு தானியமான தினை, கண்ணுக்கு வலிமை தரும் பீட்டாகரோட்டின் நிறைந்தது. அதிகப் புரதம் கொண்டது. கம்பரிசி இரும்புச்சத்து நிறைந்தது. இவை, நலம் பயக்கும் செயல்படு உணவுகள்.

நம் வீட்டுச் சமையலறையும் மெள்ள மெள்ள உலகமயமாகிவருகிறது. கைக்குத்தல் அரிசி, தினை அரிசி, வரகரிசி என உணவில் அளவாகச் சேர்த்துக்கொண்டால் பன்னாட்டு உணவு வகைகளைத் தவிர்க்கலாம்; நம் பாரம்பர்யத்தைக் காக்கலாம்; நம் ஆரோக்கியத்தையும் பேணலாம். 

http://www.vikatan.com/news/health/76002-is-white-rice-healthy.art

 • Like 1
Link to post
Share on other sites

அலர்ஜி... விரட்ட அருமையான வழிகள்! நலம் நல்லது-37 #DailyHealthDose

 

Nalam_logo_new_16428.jpg

அலர்ஜி

 

த்திரிக்காய் அலர்ஜி, கருவாடு அலர்ஜி, வேர்க்கடலை அலர்ஜி... என ஆரம்பித்து மாடிக் காற்று அலர்ஜி, என ஒவ்வாமைப் பிரச்னைக்குக் காரணங்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. உலக அளவில் ஒவ்வாமை பிரச்னை குழந்தைகளைத்தான் அதிகம் பாதிக்கிறது. சாதாரண மூக்கடைப்பு, தும்மல், கண்ணிமையைக் கசக்குவது எனத் தொடங்கி சில நேரங்களில் உதடு, முகம் வீங்குவது, சிறுநீர்த் தடைபடுவது, மூச்சிரைப்பு... என ஒவ்வொருவருடைய நோய் எதிர்ப்பாற்றலைப் பொறுத்தும், அவரவர் சாப்பிட்ட உணவைப் பொறுத்தும் ஏற்படும் அலர்ஜி, சில நேரங்களில் அனப்பைலாக்டிக் ஷாக் (Anaphylactic shock) எனும் மரணத்தைக்கூட ஏற்படுத்திவிடும் அபாயம் உடையது. ஒவ்வாமையால், பின்னாளில் ஆஸ்துமா, சைனசைடிஸ், எக்ஸிமா போன்ற நோய்களை உண்டாக்கக்கூடிய வாய்ப்பும் உள்ளது. அடாபிக் டெர்மிடிட்டிஸ் (Atopic Dermatitis), வெளிநாட்டில் வசிக்கும் இந்தியக் குழந்தைகளை வாட்டும் மிக முக்கியமான தோல் அலர்ஜி தொந்தரவு. இப்படி, அலர்ஜியால் ஏற்படும் இன்னல்களை, நோய்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

shutterstock_354993476_16415.jpg

சரி... அலர்ஜி பிடியில் இருந்து தப்பிக்க என்ன வழி? 

* இயற்கை விவசாயத்தில் விளையும் பயிர்களால் பசியாறுவது சிறந்த வழி.

265164_16555.jpg

தொலைக்காட்சியில் விளம்பரம் வந்தது என்பதற்காக, லேபிளில் ஒட்டியிருக்கும் பெயர் தெரியாத ரசாயனப் பெயர்களைப் படித்துவிட்டு புதிய கலவை உணவை வாங்கிச் சாப்பிடாதீர்கள். ரசாயனம் செறிந்த உணவுகளும், வேதிப்பூச்சுத் தெளிக்கப்பட்ட காய்-கனிகளும் குடலுக்குள் குடியிருக்கும் நுண்ணுயிர்க் கூட்டத்தை அழித்துவிடும். அதுவரை, உணவின் பாதுகாவலனாக இருந்த அவை, குழம்பித் தெறித்து ஓடுவதால், ரத்தத்தின் வெள்ளை அணுக்களில் சில திடீரெனப் பல்கிப் பெருகும். அவை, முக எலும்புப் பதிவுகளில் சைனசைடிஸ், மூச்சுக்குழல் பாதையில் ஆஸ்துமா, தோலுக்கு அடியில் எக்சிமா என ஏற்படக் காரணமாகிவிடும். 

shutterstock_362376899_16052.jpg

* எந்த அலர்ஜியாக இருந்தாலும், நம் முதல் தேடல் மிளகாகத்தான் இருக்க வேண்டும். `மிளகு மெள்ள மெள்ள நோய் எதிர்ப்பு சக்தியைச் சீராக்கும்’ என்கிறார்கள் விஞ்ஞானிகள். 

36361_16295.jpg

* சீந்தில் கொடி, வரப்பு ஓரத்திலும் வேலியிலும் மிகச் சாதாரணமாக வளரும் கொடி. இது, அசாதாரண அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை சீராக்கி, அலர்ஜி, சைனசிடிஸைத் துரத்தக்கூடியது. 

* அறுகம்புல் நச்சு நீக்கி; அலர்ஜியை நீக்கக்கூடியது. இது `கரப்பான்’ எனப்படும் எக்ஸிமா நோய்க்கான சித்த மருத்துவத்தின் முதல் தேர்வு. செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் இந்தப் புல்லின் சாற்றையும் சில மூலிகைகளையும் சேர்த்துக் காய்ச்சி எடுக்கப்படும் `அருகன் தைலம்’ இந்திய மருத்துவ மருந்துகளில் மிகப் பிரபலமானது. அடாபிக் டெர்மடிட்டிஸ் (Atopic Dermatittis) எனும் அலர்ஜியால் சருமத்தின் நிறம் கறுத்து, அதீத அரிப்பைத் தரும் தோல் நோய்க்கு அருகன் தைலம் இதம் அளிக்கும் இனிய மருந்து. 

* அலர்ஜி, அரிப்பு, தோல் நோய் உள்ளவர்கள் புளிப்பான உணவைக் குறைக்க வேண்டும். வத்தக்குழம்பு, வஞ்சிர மீன் குழம்பு, கருவாடு, நண்டு, இறால் இவை எல்லாம் ஆகாதவை. 

* பழங்கள் அலர்ஜிக்கு நல்லது. ஆனால், புளிப்பான ஆரஞ்சு, திராட்சையைத் தும்மல் உள்ளவர்கள், கரப்பான் உள்ளவர்கள் தவிர்க்கவும். 

* சோயா, காளான்கூட சில குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்திவிடும்... கவனம். அதேபோல, சோப்பை மாற்றி மாற்றிப் பயன்படுத்துவதும் அலர்ஜி தரும்... அதிலும் கவனமாக இருக்கவும். 

shutterstock_3258490_16000.jpg

சிறுதானியங்கள் அலர்ஜியை உண்டாக்குமா? 

* கரப்பான் ஒவ்வாமை இருந்தால், சோளம், கம்பு, தினை ஆக்கியவற்றை நோய் நீங்கும் வரை தவிர்க்கலாம். சோளம், கம்பு, வரகு தானியங்களை கரப்பான் நோய் உடையவர்களும் அரிப்பைத் தரும் பிற தோல் நோய்க்காரர்களும் தவிர்ப்பது நலம் என்கிறன சித்த மருத்துவ நூல்கள். 

* குளூட்டன் சத்து உள்ள கோதுமையையும், கோதுமை சேர்த்த பேக்கரி உணவுகளையும் தோல் நோய் உள்ளவர்கள் குறைத்துக்கொள்ள வேண்டும். 

அலர்ஜியைப் போக்க... 

* சோப்புத் தேய்த்துக் குளிக்காமல், `நலுங்கு மாவு’ தேய்த்துக் குளிப்பது நல்லது. 

* வேப்பங்கொழுந்து - 1 டீஸ்பூன், ஓமம் - 1/4 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், கருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். எல்லாவற்றையும் சேர்த்து நீர்விட்டு அரைத்து, சுண்டைக்காய் அளவுக்கு உருட்டி, மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, வாரத்துக்கு ஒருநாள் என மூன்று முறை கொடுத்தால், வயிற்றுப் பூச்சி நீங்கி, அரிப்பு குறையும். 

* கைப்பிடி அறுகம்புல்லை ஒன்றிரண்டாக வெட்டி, 10 மிளகைப் பொடித்து, நான்கு வெற்றிலைகளைக் காம்பு நீக்கிக் கிழித்து வைத்துக்கொள்ளவும். இந்த மூன்றையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு, இரண்டு குவளை நீர்விட்டுக் கொதிக்கவைக்கவும். அரை டம்ளராக வற்றியதும், வடிகட்டி அந்தக் கஷாயத்தை இளஞ்சூட்டில் காலை, மாலை என 15 தினங்கள் பருகினால், `அர்ட்டிகேரியா’ எனும் உடல் முழுக்க வரும் அரிப்பு நோயைக் கட்டுப்படுத்தலாம். 

தேவையற்றதைத் தவிர்ப்போம்... ஒவ்வாமையை ஓரங்கட்டுவோம்! 

http://www.vikatan.com/news/health/76100-natural-ways-to-beat-allergies.art

 • Like 1
Link to post
Share on other sites

பால்... ஆரோக்கியமானதுதானா? நலம் நல்லது-38 DailyHealthDose

 

Nalam_logo_new_17269.jpg

பால்

 

தாய்ப்பால் நம் முதல் உணவு. அன்பைச் சொரிந்து அளிக்கப்படும் இந்த உணவு, ஓர் அமுது மட்டுமல்ல; இந்த இயற்கை ஊட்ட உணவு, தன்னுள் வைத்திருக்கும் சங்கதிகள் ஏராளம். ஒரு தாய் நோயுற்ற நிலையிலும்கூட தன் குழந்தைக்கு பால் தர முடியும். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட அன்னைகூட, தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியும் என்கிறது நவீன விஞ்ஞானம். நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் இம்யூனோகுளோபின்கள் (Immunoglobins) தாய்ப்பாலில்தான் அதிகம் உள்ளது. 

ஃபார்முலா புட்டிப்பாலில் இல்லாத புரதம், ஒமேகா அமிலம், மூளையை உத்வேகப்படுத்தும் டி.ஹெச்.ஏ., நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும் வெள்ளை அணுக்கள் என எத்தனையோ சிறப்புகள் தாய்ப்பாலில் உண்டு. இது, எளிதில் ஜீரணிக்கும் `வே’ (Whey) புரதத்தைக் கொண்டது. ஆனால், பாக்கெட் பாலிலோ எளிதில் செரிமானம் ஆகாத 'கேசின்’ (Casein) எனும் புரதம்தான் அதிகம். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு, செரியாக்கழிச்சல், நோய்த்தொற்று பாதிப்புகள் மிகக் குறைவு. `தாய்ப்பாலை அருந்தும் குழந்தைகளைவிடவும், புட்டிப்பால் அருந்தும் குழந்தைகள் 14 மடங்கு அதிக நோய்த் தாக்கத்துக்கு ஆளாகிறார்கள்’ என உலக சுகாதார நிறுவனக் குறிப்பு கூறுகிறது. தாய்ப்பாலைத் தவிர்த்துவிட்டு, பிற பாலுக்குப் போகும்போதுதான் பிரச்னைகள் தொடங்குகின்றன. எந்த விலங்கும் தன் தாயின் பால் தவிர பிற விலங்கின் பாலைக் குடிப்பது இல்லை. மனிதன் மட்டும் விதிவிலக்கு.

shutterstock_146078012_17388.jpg

சரி... தாய்ப்பால் தவிர்த்து மற்ற பால் நமக்கு ஏற்படுத்தும் பக்க விளைவுகளையும், தரும் பிரச்னைகளையும் பற்றித் தெரிந்துகொள்வோமா? 

* பசும்பால் அமுதுதான். அதை மருந்தாக, விருந்தாகப் பயன்படுத்தலாம்; உணவாக அல்ல. அப்படியானால், `A cup of milk a day... keeps the doctor away' என்று சில ஆங்கில வாசகங்கள் சொன்னது? அது, அன்றைய அறிவியல் முலாம் பூசிய உலகப் பால் வணிகத்தின் அவசரப் பொய்களாக இருக்கக்கூடும். 

162523_17157.jpg

* 40 வயதுகளில் பெருகும் டிரைகிளசரைட்ஸ் (Tryglycerides) மற்றும் லோ டென்சிடி லிப்போ புரோட்டினுக்கு (Low Density Lipo protein) இதுவும் ஒரு காரணம். 

* அதிகம் புட்டிப்பால் குடிக்கும் பெண் குழந்தைகள் சீக்கிரமே பூப்பெய்திவிடுகின்றனராம். 

* நாம் காபி / டீ குடிக்கவே பெரும்பாலும் பால் சேர்க்கிறோம். தேநீரில் சேர்ப்பதால், தேயிலையின் பெருவாரியான மருத்துவக் குணங்களை தரும் பாலிபீனால்கள் அழிகின்றன. 

shutterstock_413656138_17247.jpg

* பால் சேர்க்காத தேநீர், சர்க்கரைநோய் மற்றும் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும். 

* `மசாய்’ எனும் பழங்குடியினர் மரபில், தாய்ப்பாலுக்குப் பின்னர் `நோ’ பாலாம். அந்த மசாய் மக்கள் ஒருவருக்கும் மாரடைப்பு, இதய நாடியில் கொழுப்பு ஏற்பட்டதில்லையாம். இன்றைய மருத்துவர்களுக்கு இருக்கும் பெரும் சவாலே `மாரடைப்பு’ போன்ற நாட்பட்ட தொற்றா வாழ்வியல் நோய்கள் (Non-Communicable Diseases-NCD)தான். இதனை வெல்ல வேண்டும் என்றால், முதல் கவனம் பாலில்தான் இருக்க வேண்டும். 

*  இது, வணிகம் சார்ந்த விஷயமாகிவிட்டது. அதன் உச்சம்தான் எருமைப்பால். 6,000 ஆண்டுகளுக்கு முன்னர், ஆசியாவின் முக்கிய வனவிலங்காக இருந்தவை இந்த வன எருமைகள். இன்று விவசாயத் தோழனாகவும், பால் உறிஞ்ச உதவும் வீட்டுப் பிராணிகளாகவும் ஆக்கப்பட்டுவிட்டன. 

* உங்கள் குடும்ப மருத்துவர், நீங்கள் நோய்வாய்ப்பட்டு இருக்கும் காலத்தில் அல்லது நோயில் இருந்து விடுபட்டு இருக்கும் காலத்தில் பரிந்துரைத்தால் ஒழிய, பாலில் இருந்து கொஞ்சம் விலகி இருப்பது நல்லது. எப்போதாவது பால்கோவா சாப்பிடலாம். எலும்பு முறிவு ஏற்பட்டாலோ, தேய்மானம் அடைந்தாலோ சில காலம் மட்டும் பசும்பால் அருந்தலாம். (பசும்பாலில் பீட்டா கரோட்டின்கள் உள்ளனவாம். எருமைப்பாலில் இல்லை). 

எனவே, பாலில் கவனமாக இருப்பது நல்லது. `நான் வளர்கிறேனே...’ என பாலுடன் பழகுவது வருங்காலத்தில் நோயை ஏற்படுத்திவிடும். 

http://www.vikatan.com/news/health/76207-is-milk-good-for-health.art

 • Like 1
Link to post
Share on other sites

மறதி... ஜாக்கிரதை! நலம் நல்லது-39 #DailyHealthDose

 

Nalam_logo_new_17196.jpg

மறதி

 

புத்திசாலியாக இருப்பதற்கும் ஞாபக சக்திக்கும் தொடர்பு இல்லை. இதற்கு வால்ட் டிஸ்னி, வின்ஸ்டன் சர்ச்சில், அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்... எனப் பலரை உதாரணமாகச் சொல்லலாம். ஆனாலும்,`நேத்துப் படிச்சது இன்னைக்கு மறந்து போச்சே...’ என்கிற கவலை நம்மில் பலருக்கும் உண்டு. மறதி பிரச்னை தீவிரமாகும்போது அதை `அல்சைமர்’ என்கிறது மருத்துவ மொழி. 

`கார் சாவியை எங்கே வெச்சேன்னு தெரியலியே?’, `காதலிகிட்ட புரொபோஸ் பண்ணின தேதியை மறந்துட்டேனே..’, என்பவை எல்லாம் ஆரம்பகட்ட மறதிக் குறைபாடு என்கிறது நவீன மருத்துவம். இப்படி கொஞ்சமாக மறக்கத் தொடங்கி, கடைசியாக எங்கு இருக்கிறோம், என்ன செய்ய வந்தோம்... என்பதை எல்லாம் மறக்க ஆரம்பிப்பதுதான் அல்சைமர் நோயின் உச்சகட்ட அபாயம்.

வயதானவர்களுக்குத்தான் அதிகம் வருகிறது அல்சைமர் என்கிற இந்த நோய். `2020-ம் ஆண்டு, உலக மக்கள்தொகையில் 14.2 சதவிகித வயோதிகர்கள் இந்தியாவில்தான் இருப்பார்கள்’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். அதேபோல், ஓய்வுக்காலம் வந்த பிறகுதான் இது வரும் என்பது கிடையாது. செல்லத் தொப்பையோடு, தலைக்கு டை அடித்துக்கொள்ளும் வயதிலும் மறதி நோய் வர வாய்ப்பு இருக்கிறது. 

shutterstock_107466191_17410.jpg

`அவ்வளவா பிரச்னை இல்லை’ என்று நம்மை எப்போதோ யோசிக்கவைத்த மறதி... 
`அடடா... மறந்துட்டேனே’ என நாம் சுதாரிக்கும் மறதி... 
மற்றவர், `அதுக்குள்ள மறந்துட்டீங்களா?’ என அங்கலாய்த்துக்கொள்ளூம் மறதி... 
`சார்... அவர் மறதி கேஸ். எழுதிக் கொடுத்துடுங்க’ என அடுத்தவர் எச்சரிக்கும் மறதி...
`எதுக்குக் கிளம்பி வந்தோம்?’ என யோசித்து நடுவழியில் திணறும் மறதி... 
`நான் யார், என்ன செய்ய வேண்டும்?’ என்பதே தெரியாமல் போகும் மறதி... 
ஒட்டுமொத்தமாகச் செயல் இழந்து முடங்கும் மறதி... 
என அல்சைமர் மறதி நோயை ஏழு படிநிலைகளாகப் பார்க்கிறது நவீன மருத்துவம். இவற்றில் இரண்டு, மூன்றை நம்மில் பலர் அனுபவித்திருப்போம். 

சாதாரண வயோதிக்கத்துக்கும், இந்த மறதி நோய்க்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளன. மூளையில் புதிதாக முளைக்கும் அமைலாய்டு பீட்டாவை இதற்கு முக்கியமான தடயமாகப் பார்க்கிறார்கள். சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் போன்ற தொற்றா வாழ்வியல் நோய்கள்தான், இந்த மறதி நோயை அதிகரிப்பவை என எச்சரிக்கிறது, உலக சுகாதார நிறுவனம். ஓர் ஆச்சர்யமான விஷயம், மெடிடேரேனியன் டயட் (Mediterranean diet) சாப்பிட்டால் மறதி நோய் வருவது குறையும் என்பது. மத்தியத் தரைக்கடலைச் சுற்றியுள்ள நாடுகளின் பாரம்பர்ய உணவுகளை `மெடிடேரேனியன் டயட்’ என்கிறார்கள். இந்த வகை உணவுகள், அதிக ஆன்டிஆக்ஸிடென்ட்டுகளையும், அழற்சியைக் குறைக்கும் (Anti-Inflammatory) தன்மையையும் கொண்டவை என, அமெரிக்கா, இக்கிலாந்து விஞ்ஞானிகளால் ஆராயப்பட்டு, நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த மத்தியத் தரைக்கடல் உணவுகளுக்கு, நம் ஊர் மிளகு, சீரகம், வெந்தயம், பூண்டு, பெரிய நெல்லிக்காய், முருங்கை, மணத்தக்காளிக் கீரை, கம்பு, கேழ்வரகு முதலான சிறுதானியங்களும், பாரம்பர்ய இந்திய உணவுகளும் கொஞ்சமும் சளைத்தவை அல்ல. கூடுதலாக, மருத்துவக்குணம்கொண்ட பல தாவர நுண்சத்துக்களையும் கொண்டவை. 

shutterstock_264060908_%281%29_17166.jpg

ஞாபகசக்தி அதிகரிக்க சில வழிமுறைகள்... 

* வல்லாரைக் கீரையை சட்னியாக அரைத்துச் சாப்பிடலாம். வல்லாரையில் உள்ள ஆசியாடிகோசைட்ஸ் (Asiaticosides), மூளைக்குச் சோர்வு தராமல், அறிவைத் துலங்க வைக்கும். வல்லாரை தோசை, வல்லாரை சூப் இன்றைக்கு பாரம்பர்ய உணவகங்களில் பிரபலமான உணவுகள். 

* 'பிரம்மி’, பாரம்பர்ய மருத்துவத்தின் பிரபலமான ஞாபகசக்தி மருந்து. மறதியை நீக்கவும், ஞாபகசக்தியை அதிகரிக்கவும் இதில் உள்ள `பேக்கோசைட்ஸ்’ (Baccosides) பயன் அளிப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பிரம்மி வாங்கி சாப்பிடலாம். 

* தினசரி 20 முதல் 40 நிமிடங்களுக்கு யோகாசனப் பயிற்சிகள் மற்றும் பிராணாயாமப் பயிற்சிகள் செய்யலாம். இவை மறதியைப் போக்கும்; ஞாபகசக்தியைப் பெருக்கும். 

120326_17579.jpg

எதிர்கால மறதி சிக்கலில் இருந்து தப்பிக்க, நிகழ்காலத் தேவை, அந்தக் காலத்தில் இருந்த அக்கறை மட்டுமே. நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, அன்றாடம் ஆரோக்கியமான உணவு என வாழ்க்கையைத் திட்டமிடத் தவறினால், மறதி நோய் கொண்ட வயோதிகம் வரும் சாத்தியம் மிக அதிகம் என்பதை ஞாபகத்தில் கொள்வோம்.

http://www.vikatan.com/news/health/76287-how-to-prevent-alzheimers-disease.art

Link to post
Share on other sites

தூக்கம் தொலைத்தவர்கள் கவனத்துக்கு! நலம் நல்லது - 40 #DailyHealthDose

Nalam_logo_new_18178.jpg

தூக்கம்

 

லகின் மிக உன்னதமான இயந்திரம் மூளை! அதன் தங்கு தடையில்லா செயல்பாட்டுக்கு ஆழ்ந்த தூக்கம் அவசியத் தேவை. உற்சாகமாகச் சிந்திக்க, நினைவாற்றல் மிளிர, நோய் இல்லாமல் வாழ, உடல் இயக்கத்துக்கு அவசியமான சுரப்புகளையெல்லாம் தேவையான அளவில் சுரப்பதற்குத் தூண்ட... மேலும் பல செயல்பாடுகளுக்கு தினசரி 6 முதல் 7 மணி நேரத் தூக்கம் அவசியம், கட்டாயம். அதிலும் கும்மிருட்டில் தூங்க வேண்டும். 

அது என்ன கும்மிருட்டு உறக்கம்? நள்ளிரவு வரை படுக்கையறை டி.வி-யில் கிரிக்கெட் மேட்சோ,  படமோ பார்த்துக்கொண்டே அசந்து தூங்குவதற்குப் பெயர் தூக்கம் அல்ல. `விடி விளக்கு வெளிச்சம்கூட இல்லாத இருட்டில் நடைபெறும் தூக்கத்தில்தான் உடல் இயக்கங்களுக்கு நல்லது செய்யும் மெலடோனின் சுரக்கும். சின்ன வெளிச்சத்திலும் அந்தச் சுரப்பு குறைந்துவிடும்’ என்கிறது நவீன விஞ்ஞானம். இந்த மெலடோனின் சுரப்புதான் நம் உடல் இயந்திரத்தை இரவில் சர்வீஸ் செய்து, மறுநாள் ஓட்டத்துக்குத் தயார்நிலையில் வைக்கிறது; புற்றுநோய் போன்ற பல நோய்கள் வராமல் தடுக்கிறது. பகல் வெளிச்சத்தில் 10 மணி நேரம் தூங்கினால்கூட மெலடோனின் சுரக்காது. அதனால்தான் அந்தக் காலத்திலேயே சித்தர் தேரையர், `பகலுறக்கஞ் செய்யோம்’ எனப் பாடியிருக்கிறார். 

225238_18145.jpg

ஏன் தூங்க வேண்டும்? 

ஒருவர், தினமும் நைட் ஷிஃப்ட் வேலை பார்ப்பவராக இருப்பார்; இன்னொருவர், நள்ளிரவில்தான் வீட்டுக்கு வருபவராக இருப்பார்; மற்றவர், சரியான நேரத்தில் வீட்டுக்கு வருபவராக இருந்தாலும், தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பவராக இருப்பார். இந்த மூவருக்குமே மெலடோனின் சுரப்பில் பிரச்னை இருக்கும் வாய்ப்புகள் அதிகம். 

தூக்கமின்மை, முதலில் வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும். பிறகு, உயர் ரத்த அழுத்தத்தை உண்டாக்கும். அதனைத் தொடர்ந்து நரம்புத் தளர்ச்சி வரும். இறுதியாக, மன உளைச்சலை ஏற்படுத்தி, மன நோயில் கொண்டுபோய் தள்ளிவிடும். சட்டையைக் கிழித்துக்கொண்டு, கல்லெடுத்து அடிப்பவர்கள், மனநல காப்பகங்களில் இருப்பவர்கள் மட்டும் அல்ல... நம்மில் ஐந்தில் ஒருவர் மனநோயாளியாகத்தான் இருக்கிறோம். உறக்கம் இல்லாமல், மன மகிழ்ச்சி இல்லாமல், எது மகிழ்ச்சி என அறியாமல், எதற்கும் சிரிக்காமல், எதிலும் நிறைவுகொள்ளாமல் பலரும் மன நோயாளியாகத்தான் இருக்கிறோம். இதற்கு, சரியான உறக்கம் இன்மையே முக்கியக் காரணம். 

225275_18555.jpg

வரும்போது தூங்கிக்கொள்ளலாம் என்பதும் உடலுக்கு நல்லதல்ல. தூக்கம் இல்லாத மூளையின் ரத்த நாளங்கள் வலுவிழக்கும். உறக்கத்துக்கென மெனக்கெட வேண்டும். இரவு உணவை பரோட்டாவில் ஆரம்பித்து, ஃபலூடாவில் முடிக்கும் பழக்கம் உறக்கத்துக்கு எதிரி. நன்றாக வீசிப்புரட்ட, ஜவ்வாக இழுத்த இழுப்புக்கெல்லாம் வர, அதிக அளவில் மாவில் குளூட்டன் சேர்க்கப்படுகிறது. இந்த குளூட்டன் சிலருக்கு அஜீரணத்தையும், சிலருக்கு குடல் புற்றுநோயையும் ஏற்படுத்திவிடும். குளூட்டன் ஜீரணத்தைத் தாமதப்படுத்துவதால், கண்டிப்பாக உறக்கம் கெடும். எனவே, இரவில் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளையே சாப்பிட வேண்டும். 

225399_18579.jpg

நல்ல தூக்கம் வேண்டுமா? 

* இரவுகளில் கொஞ்சம் பழத்துண்டுகள், கம்பங்குருணை அரிசியில் வெங்காயம், மோர் சேர்த்துப் பிசைந்த சாதம் சாப்பிடலாம். கடைசி உருண்டையைச் சாப்பிடும்போதே, உறக்கம் கண்ணைச் சுழற்றிக்கொண்டு வரும். 

* பணி இடங்களில் இருந்து தாமதமாக வீடு திரும்புவோர், இரவு உணவை வேலை பார்க்கும் இடத்திலேயே 8 மணிக்குள் சாப்பிட்டுவிடுவது நல்லது. தூங்குவதற்கு முன் பழம் மட்டும் சாப்பிட்டுவிட்டுப் படுக்கலாம். தூக்கத்துக்கும் உடல்நலத்துக்கும் இது மிகவும் நல்லது. 

* ஆழ்ந்த தூக்கம் கிடைப்பதற்கு, தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம். `மொட்டை மாடியில் நடக்கிறேன்... வீட்டு வேலை செய்கிறேன்’ என்றெல்லாம் காரணங்கள் சொல்லாமல், தினமும் 45 நிமிடங்களுக்கு மித வேக நடை நடப்பது, தூக்கத்தைச் சீர்ப்படுத்தும்; மனதை ஒருநிலைப்படுத்தி தூங்கவைக்கும்.  

* கசகசா பால், சாதிக்காய்த் தூள் போட்ட பால், அமுக்கராக்கிழங்குப் பொடி, மாதுளம்பழம் இவையெல்லாம் தூக்கம் வரவழைக்கும் இயற்கை உணவுகள் அல்ல... மருந்துகள்! 

வீட்டில், வாழ்க்கைத்துணை, குழந்தைகளிடம் நீடித்து நிலைத்திருக்கும் அன்பு, செல்ல அரவணைப்பு எல்லாமே மன அமைதியைத் தரும்; நல்ல தூக்கத்தையும் தரும். இதை மனதில் கொள்வோம். நல்ல தூக்கத்தால் மட்டுமே உண்மையிலேயே இரவை `குட்நைட்’ ஆக்க முடியும்! 

http://www.vikatan.com/news/health/76573-note-to-insomniac-patients.art

Link to post
Share on other sites

மணம் தரும்... நோயை விரட்டும் சீரகம்! நலம் நல்லது-41 #DailyHealthDose

Nalam_logo_new_17329.jpg

நாம் உணவுக்கு மணமூட்டியாகப் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று, சீரகம். இது வெறும் மணமூட்டி மட்டும் அல்ல. பார்க்க அவ்வளவாக வசீகரம் இல்லாமல், கொஞ்சம் அழுக்காக, அப்படியே சாப்பிட்டால் லேசான கசப்பாக, உலர்வாக இருக்கும் சீரகம் ஒரு மிகச் சிறந்த மருந்து. அதாவது, நோயை விரட்டும் சீரகம். நம் அகத்தைச் சீர்ப்படுத்துவதால், இதற்குச் சீரகம் (சீர்+அகம்) எனப் பெயர் வந்தது. 

நோயை விரட்டும் சீரகம்

`போசனகுடோரியைப் புசிக்கில் நோயெல்லா மருங்காசமிராதக் காரத்திலுண்டிட’ என, சித்த மருத்துவ இலக்கியமான, `தேரன் வெண்பா’வில், ஜீரண நோயெல்லாம் வராமல் காக்கும் `போசனகுடோரி’ எனப் போற்றப்பட்டது. பித்த நோய்களுக்கு எல்லாம் முதல் மருந்தாகப் போற்றப்பட்ட சீரகம், அஜீரணம், கண் எரிச்சல், சைனசிட்டிஸ், வாந்தி, விக்கல், கல்லடைப்பு எனப் பல நோய்களுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

சிறந்த மருந்து சீரகம்

உலகின் மூத்த மணமூட்டியான சீரகம், கிரேக்கத்திலிருந்து உலகெங்கும் பரவியது. சீரகத்தின் பிரத்யேக மணத்தின் காரணமாக, கிரேக்கத்தில் `வரிக்குப் பதிலாக, சீரகம் செலுத்தலாம்’ எனும் அரசாணையே அந்தக் காலத்தில் இருந்ததாம். இன்று, சீரகம் உலகை ஆளும் ஒரு மருத்துவ உணவு (Functional Food). இன்று நம் ஊர் ரசம் தொடங்கி, மெக்ஸிகோவின் பிரிட்டோஸ், மொராக்கோவின் ரஸ்-எல்-ஹேனோ என உலகின் அத்தனை கண்டங்களின் சிறப்பு உணவுகளிலும் சீரகம் மணமும் தந்து, நோயை ஓட்டும் மருந்தாகவும் இருக்கிறது. 

சீரகம் தரும் நன்மைகள்! 

* `எட்டுத் திப்பில் ஈரைந்து சீரகம் கட்டுத் தேனில் கலந்துண்ண விக்கலும் விட்டுப்போகும்’ என்கிறது சித்த மருத்துவம். அதாவது, விடாமல் இருக்கும் விக்கலுக்கு, 8 திப்பிலியையும் 10 சீரகத்தையும் பொடித்து, தேனில் கலந்து சாப்பிட்டால் போதும், விக்கல் நின்றுவிடும். 

* உணவு செரிமானம் ஆகாமல் எதிர்த்துக்கொண்டு வரும்போது (GERD), சாதாரண தண்ணீருக்குப் பதில், உணவருந்தும்போது, இளஞ்சூடான சீரகத் தண்ணீர் அருந்தலாம். 

* `சாப்பிட்ட கொஞ்ச நேரத்துக்கெல்லாம் வயிறு உப்பிடுது’ என வருத்தப்படுபவர்களுக்கு இது ஓர் அருமருந்து. சீரகத்தையும் ஏலக்காயையும் சம அளவில் எடுத்து, நன்கு இள வறுப்பாக வறுத்து, பொடி செய்து, உணவுக்குப் பின் கால் டீஸ்பூன் அளவு சாப்பிட, இந்தப் பிரச்னை தீரும். 

* சீரகத்தூளை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டுவர, எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் தீரும். 

சீரகம்

* சீரகத்தை தனித்தனியே கரும்புச் சாறு, எலுமிச்சைச் சாறு, இஞ்சிச் சாறு, முசுமுசுக்கைச் சாறு ஆகியவற்றில் மூன்று நாட்களுக்கு ஊறவைத்து, வெயிலில் காயவைக்க வேண்டும். நன்கு ஊறிய சீரகத்தை மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த சீரகச் சூரணம், பித்தத் தலைவலி எனும் மைக்ரேன் தலைவலிக்கும், பித்தத்தால் அதிகரிக்கும் உயர் ரத்த அழுத்தத்துக்கும் சிறந்த துணை மருந்து. வீட்டில் செய்ய முடியாதவர்கள், சித்த மருந்துக் கடைகளில் `சீரகச் சூரணம்’ என்று கேட்டு வாங்கிப் பயன்படுத்தலாம். 

* இஞ்சியை தோல் சீவி, சில மணித் துளிகள் ஈரம் போகும் வரை உலரவைத்து, அதே அளவுக்கு சீரகத்தை எடுத்து, இரண்டையும் பொன் வறுவலாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். இரண்டின் கூட்டு அளவுக்குச் சமமாக நாட்டுச்சர்க்கரையைக் கலக்கவும். இந்தக் கலவையை அரை டீஸ்பூன் அளவுக்கு காலை வேளையில் சாப்பிட, மைக்ரேன் தலைவலி படிப்படியாகக் குறையும். 

* சீரகத்தையும் வில்வவேர்க் கஷாயத்தையும் சேர்த்து, சித்த மருத்துவர்கள் செய்யும் `சீரக வில்வாதி லேகியம்’, பித்த நோய்கள் பலவற்றையும் போக்கும் மிக முக்கிய மருந்து. சீரகம், பித்தத்தைச் சீர்ப்படுத்தும் மருந்து. எனவே, உளவியல் நோய்க்கும்கூட இதை ஒரு துணை மருந்தாகப் பயன்படுத்த முடியும். 

* சீரகத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஏ, குடல் புற்றுநோய் வருவதைத் தடுக்கும் ஆற்றல்கொண்டது. 

பஞ்ச தீபாக்னி சூரணம் 

குழந்தைகள் சாப்பிட அடம்பிடிக்கிறார்களா? சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய் இவற்றைச் சம பங்கு எடுத்து, நன்கு மையாகப் பொடி செய்து, அத்துடன் சம அளவு நாட்டுச்சர்க்கரை கலந்து பாட்டிலில் வைத்துக்கொள்ளுங்கள். சாப்பிடுவதற்கு முன்னர், இதிலிருந்து இரண்டு முதல் நான்கு சிட்டிகையை எடுத்து தேனில் குழைத்துக் குழந்தைக்குக் கொடுங்கள். இது நேரத்துக்கு பசியைத் தூண்டும்; ஆரோக்கியத்தையும் பராமரிக்கும். 

பொங்கலோ, பொரியலோ சீரகம் சேர்க்கத் தவறாதீர்கள்! 

http://www.vikatan.com/news/health/76646-health-benefits-of-cumin-seeds.art

Link to post
Share on other sites

உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்! நலம் நல்லது-42 #DailyHealthDose

Nalam_logo_new_18058.jpg

 

 

குண்டு உடல்வாகோடு, உடல் எடை அதிகமாகி உடல்பருமனுக்கு ஆளாவது எவ்வளவு தீவிரமான பிரச்னையோ, அதேபோல தீவிரம்கொண்டது எடை குறைந்து, உடல் மெலிந்திருப்பது!  அப்படி மெலிந்திருப்பவர்கள், உடல் எடையை அதிகரிக்க வேண்டியதும் அவசியமே! 

உடல் எடை அதிகரிக்க

வயதுக்கும் உயரத்துக்கும் ஏற்ற உடல் எடை ஒவ்வொருவருக்குமே மிக மிக அவசியம். சிக்ஸ்பேக் வரவழைக்கிறேன் பேர்வழி என ஆண்களும், மெல்லிடை வேண்டும் எனப் பெண்களும் எடை குறைத்து, உடல் மெலிந்து வருவது இன்று அதிகமாகிவருகிறது. `எனக்குள் என்ன நடக்கிறது?’ என்ற அறிவும் அக்கறையும் ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய அடிப்படையான விஷயம். 

உடல் எடையைத் தேற்றுவது என்பது குழந்தைப் பருவம் முதலே இருக்கவேண்டிய அக்கறை. சிறு குழந்தையின் உடல் எடை அதிகரிக்கவில்லை என்றால், `இளங்காசம்’ எனும் பிரைமரி காம்ப்ளெக்ஸ் காரணமாக இருக்கக்கூடும். இந்தியாவில், குழந்தைகளின் எடை குறைவுக்கு மிக முக்கியக் காரணம் பிரைமரி காம்ப்ளெக்ஸ்தான். சிறு குழந்தையாக இருக்கும்போதே இதைச் சரியாகக் கவனிக்கத் தவறும்போது பின்னாளில் எப்போதும் மெலிந்த தேகம் நிலை பெற்றுவிட வாய்ப்பு உண்டு. 

`டபுள் மீல்ஸ்’ டோக்கன் வாங்கி, என்னதான் கண்டதையும் சாப்பிட்டாலும் உடல் தேற மாட்டேங்குது’ என்கிறவர்களும் இருக்கிறார்கள். உடல் எடை அதிகரிக்க சில உணவுகளும் வழிமுறைகளும் உண்டு. அவை இங்கே... 

* ‘கஞ்சி அன்னத்திற்கு காயம் பருத்திடும்’ என்கிறது சித்த மருத்துவம். காலை வேளையில் சிறு குழந்தையாக இருந்தால் சத்து மாவுக் கஞ்சியும், இளைஞர்களாக இருந்தால் அரிசி தேங்காய்ப்பாலும் சாப்பிடுவது உடல் எடை ஏற ஒத்தாச்சை செய்யும். `கஞ்சி’என்பதற்கு காய்ச்சி அருந்துவது என்று பொருள். உடைத்த புழுங்கல் அரிசி, அதில் கால் பங்கு பாசிப் பயறு எடுத்து, வறுத்து திரித்து வைத்துக்கொண்டு நீர்விட்டுக் காய்ச்சி, அதில் சூடான பால், சர்க்கரை, சிறிது பசு நெய் சேர்த்துக் குழந்தைக்கு வாரத்துக்கு இரண்டு, மூன்று தடவை கொடுக்கலாம். 

shutterstock_384218113_18142.jpg

* `இளைத்தவனுக்கு எள்ளு’ என்பது முதுமொழி மட்டுமல்ல, மருத்துவ மொழியும்கூட. இளைத்த உடல் உடையவர்கள், இட்லி, தோசைக்கு எள்ளுப்பொடி, எள்ளுச் சட்னி, நொறுக்குத்தீனியாக எள்ளுருண்டை என எள்ளை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும். 

* பெண் குழந்தைகளுக்கு உளுந்து சேர்த்த உணவுகள் மிக நல்லது. இளம் பெண்களில், மிகவும் மெலிந்த உடலோடு இருக்கும் பெண்கள், சற்று வாளிப்பான உடல்வாகு பெறுவதற்கு எள்ளும் உளுந்தும் மிகவும் பயன்தரும்.

* வயிற்றில் அல்சர் எனும் வயிற்றுப்புண், குடல்புண் இருந்தாலும் சிலருக்கு உடல் எடை ஏறாது. இப்படியான நோய்களுக்கு ஆளானவர்கள், தினசரி காலையில் நீராகாரம் (உடைத்த புழுங்கல் அரிசி கஞ்சியில் வெந்தயம், சீரகம் சேர்த்துச் செய்து வடித்தது), மதியம் மோர், மாலையில் வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். இந்த உணவுப்பழக்கம், குடல்புண்ணையும் ஆற்றும்; உடை எடை உயர்ந்திடவும் உதவும். 

shutterstock_166322195_18425.jpg

* வாரத்துக்கு இரண்டு முறையாவது தேங்காய்ப்பாலை உணவில் சேர்ப்பது நல்லது. 

* இரிட்டபுள் பவுல் சிண்ட்ரோம் (Irritable Bowel Syndrome) எனும் கழிச்சல் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை ஏறுவது இல்லை. இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு சாப்பிட்ட உடனேயே மலம் கழிக்கத் தூண்டும். எங்காவது வெளியில் கிளம்ப ஆயத்தமாகும்போதும், சூடான, காரமான உணவைச் சாப்பிட்டவுடனும் மலம் கழிக்கத் தூண்டும் இந்த கழிச்சல் நோயில், மெலிந்த தேகம் நிரந்தரமாகிவிடும். இந்த நோய் இருப்பவர்கள், மருத்துவ சிகிச்சையுடன் சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாதுளை ஆகிய உணவுகளை தினசரி சேர்ப்பது நோயை நீக்கி, உடல் எடையை அதிகரிக்க உதவும். 

shutterstock_409474195_18292.jpg

* எடை அதிகரிக்க அதிகம் உதவுவது, வாழை. அதிலும், நேந்திரம் பழத் துண்டுகளை தேனுடன் சேர்த்து, மாலை வேளைகளில் நொறுக்குத்தீனியாக குழந்தைகளுக்குக் கொடுப்பது எடையை உயர்த்துவதுடன், நோய் எதிர்ப்பாற்றலையும் கூட்டும். 

* பசும்பால், பசு வெண்ணெய் இரண்டும் உடல் எடையைக் கூட்ட உதவும். 

மெலிந்து இருப்பது ஃபேஷனாகி வரும் இந்தக் காலத்தில் உள்ளே மறைந்திருக்கும் நோயை மறந்து அல்லது அலட்சியமாகக் கண்டுகொள்ளாமல் இருந்துவிடக் கூடாது. வயதுக்கு ஏற்ற சரியான எடை இல்லையென்றால், அது சாதாரண ஊட்டச்சத்துக் குறைபாடு முதல் புற்றுநோய் வரை எதுவாகவும் இருக்கலாம். குடும்ப மருத்துவரை அணுகி, உடல் இளைத்தல், எடை குறைதலுக்கான காரணங்களை அறிந்துகொண்டு, உடனே தீர்க்க வேண்டியது அவசியம்.

http://www.vikatan.com/news/health/76756-best-foods-to-eat-to-gain-weight.art

Link to post
Share on other sites

குரல் முக்கியமா... குரல்வளை ரொம்ப முக்கியம்! நலம் நல்லது-43 #DailyHealthDose

Nalam_logo_new_17238.jpg

பிறந்த கணத்தில் அழுகையில் ஆரம்பித்து, `அம்மா’ என்ற வார்த்தையில் தொடங்கி, இறுதிமூச்சின் முனகல் வரை எழுப்பும் குரல்வளை, மனித உடலின் ஒரு மகத்துவ அமைப்பு. நுரையீரலில் இருந்து மூச்சுக் காற்றை எழுப்பி, குரல் நாண்கள் ஒன்றோடு ஒன்று இணைவதால் ஏற்படும் அதிர்வுதான் குரல். நுரையீரலில் இருந்து வெளிப்படும் காற்று, கழுத்தில் நிலைகொண்டு பல், உதடு, நாக்கு, மூக்கு, அன்னம் போன்றவற்றில் மூளையின் திட்டமிட்ட உத்தரவின்படி சீரான அசைவைப் பெறும்போது, அது பாடலாக உற்சாகமாக வெளிப்படுகிறது. 

குரல்வளை

12-13 வயது வரைக்கும் மட்டுமே ஆணுக்கும் பெண்ணுக்கும் குரல் கிட்டத்தட்ட ஒரேமாதிரி இருக்கும். 13 வயதைத் தாண்டும்போது, ஆண்களுக்கு ஆண் ஹார்மோன் ஆதிக்கம் தொடங்கி, குட்டி மீசை துளிர்க்கும்போது, குரல் உடையத் தொடங்கி வலுப்பெறும். அப்போதுதான் ஆணின் குரல் நாண்கள் நீளம் அடைந்து, விரிவடைந்து, `ஆடம்ஸ் ஆப்பிள்’ தொண்டையில் தெரியும். பெண்களுக்கு, இந்தக் குரல் நாண்கள் வளரவும் விரியவும் முயற்சிப்பது இல்லை. அதனால்தான் 30 வருடங்கள் கழிந்தும் `காற்றில் எந்தன் கீதம்...’ என எஸ்.ஜானகி பாடினால், முந்தைய சிலாகிப்பு அப்படியே தொற்றிக்கொள்கிறது. 

ஆண், 17-18 வயதை எட்டிய பிறகும் கொஞ்சம் பெண்மை கலந்த குரலில் பேசினால், அது `ப்யூபர்போனியா' (Puberphonia) என்னும் கோளாறு என்கிறது நவீன மருத்துவம். குரல் நாண்களை இழுக்கும் அறுவைசிகிச்சையுடன், தொடர்ந்து மூன்று மாதங்கள் ஸ்பீச் தெரப்பியும் எடுத்துக்கொண்டால் ஆண் குரல் வந்துவிடும். 

shutterstock_545340319_17193.jpg

குரல், குரல்வளை பாதுகாக்க வழிமுறைகள்...

* குரல்வளை, வெளிக்காற்றுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதால், தொற்றும் நோய்க்கூட்டம் எளிதாகக் குரலைச் சிதைத்துவிடுகிறது. அதோடு, தொண்டைத்தொற்றுகள் குரல்வளையைப் பாதித்து, அதன் உட்சதையை வீங்கவைத்துவிடும். உணவை விழுங்கும்போது, வலி உண்டாகும். சத்தமாகப் பேசும்போது வலி கூடும். வெந்நீரில் உப்புப்போட்டு, காலை, மாலை வாய் கொப்பளித்து அல்லது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்த திரிபலா பொடி போட்ட வெந்நீரில் வாய் கொப்பளித்தால் இதற்குப் பரிகாரம் கிடைக்கும். கூடவே பாலில் மஞ்சள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு கலந்து சூடாகக் குடித்தால், குரல்வளை அழற்சி மறையும். 

* சிறுவயதிலேயே தொண்டையில் குடியேறும் கிருமி ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (Streptococcus). நம் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறையும்போது, அந்தக் கிருமிக்கூட்டம் மெதுவாக டான்சில் வீக்கம் (Tonsillitis), அடினாய்டு வீக்கம் (Adenoiditis) என உண்டாக்கி, பின்னர் மூட்டுவலியை உண்டாக்கி, மெள்ள மெள்ள ரத்தத்தில் கலந்து, இதயத்தின் வால்வுகளில் குடியேறி அதன் செயல்திறனை அழிப்பது எனப் பல பிரச்னைகளுக்குக் காரணம் ஆகின்றன. மொத்தத்தில் இந்த நோய் தொடங்குவது குரல்வளையில்தான்.

shutterstock_398146000_17322.jpg

நள்ளிரவில் ஐஸ்க்ரீம், தொண்டை, கன்னக் கதுப்புகளில் ஒட்டிக்கொள்ளூம் சாக்லேட் போன்றவற்றை மென்று திரியும் குழந்தைகளுக்குத்தான் இந்தப் பிரச்னை பெரிதும் வருகின்றன. ஆரம்பத்திலேயே இந்தக் கிருமியின் தாக்கத்தைக் குறைக்க, கற்பூரவல்லிச் சாறும் தேனும் கலந்து சுரசம் செய்து கொடுக்கலாம். மிளகைப் பொடித்து, தேனில் குழைத்து, மிதமான வெந்நீரில் கலந்து கொடுக்கலாம். சித்த மருத்துவத்தில் இதற்குத் தீர்வாக கடற்சங்கை பஸ்பம் ஆக்கி, மருந்தாகக் கொடுப்பார்கள். இந்த மருந்தை 3-4 சிட்டிகை நெய்யில் கலந்து கொடுக்க, ஆரம்பகட்ட டான்சில் வீக்கத்தை அடியோடு விரட்டலாம். குழந்தைக்குக் கூடுதல் தேவையான கால்சியம் சத்தையும் சேர்த்துத் தந்து, டான்சில் வீக்கத்தையும் வீழ்த்தும் இந்தச் சங்கு பஸ்பம், சிறந்த குரல்வளை காப்பான். 

* டான்சில் வீக்கமா? வெள்ளைப் பூண்டை அரைத்து, ஒரு துணியில் தடவி, லேசாகச் சூடுபடுத்தி, அந்தச் சூட்டுடன் துணியைப் பிழிந்து, பூண்டுச்சாறு எடுக்க வேண்டும். இதோடு, சுத்தமான தேனை பூண்டுச் சாற்றுடன் சம அளவு கலந்து வைத்துக்கொள்ளவும். சுத்தமான பஞ்சில் இந்தப் பூண்டுத் தேனைத் தொட்டு டான்சில் வீக்கத்தில் மென்மையாகத் தடவிவர, வீக்கம் மெள்ள மெள்ளக் கரையும். குழந்தைகளுக்கு விஷயத்தைப் புரியவைத்து மெதுவாகத் தடவ வேண்டும். இல்லையென்றால், அந்தச் சாற்றை மூன்று சொட்டுகள் விழுங்கச் செய்தால்கூடப் போதும். 

shutterstock_409126717_17572.jpg

* தொடர் அஜீரணம், இரைப்பையின் அமிலத்தை எதுக்களித்து மேலே அனுப்பும் நிலையிலோ அல்லது உணவுக்குழாயும் இரைப்பையும் சந்திக்கும் இடத்தின் வால்வு சீராக இல்லாமல் போய் அதனால் அமிலத் தாக்குதல் உண்டாவதாலோ, குரல் கெட்டுப்போகும் வாய்ப்புகள் அதிகம். இந்த இரண்டுக்கும் எளிய மருந்து அதிமதுரம். இது, வயிற்றுப்புண்ணை ஆற்றும் ஆற்றல்கொண்டது. வயிற்றில் அதிகப்படியான அமிலச் சுரப்பையும் குறைக்கக்கூடியது. அந்த அமிலம் உண்டாக்கும் வறட்டு இருமலுக்கும், அதிமதுரம் மிகச் சிறந்த கை மருந்து. அரை டீஸ்பூன் அளவு அதிமதுரத்தை தேனில் குழைத்துச் சாப்பிடலாம் அல்லது அரை டம்ளர் பாலில் கலந்து காய்ச்சியும் குடிக்கலாம். 

* குரலை முறையற்றுப் பயன்படுத்தினாலும், அளவுக்கு அதிகமாகச் சத்தம் போட்டாலும் குரல் நாண்களுக்கு ஆபத்து. இப்படிச் செய்வது, குரல் நாண்களில் சிறு சிறு கட்டிகளை உண்டாக்கிவிடும். உரத்தக் குரலில் பேசும் ஆசிரியர்கள், பாடகர், பேச்சாளர்களுக்கு அந்தக் கட்டிகள் வர வாய்ப்புகள் அதிகம். இவர்களுக்கு முதல் மருந்து மௌனம். மாதத்தில் இரண்டு நாட்கள் மௌன விரதம் இருந்தாலே அந்தக் கட்டிகள் காணாமல் போய்விடும். சரியாகாதபட்சத்தில், ஆடாதொடை இலையும் இரண்டு மிளகும் சேர்த்து கஷாயம் செய்து மூன்று நாட்கள், இரண்டு வேளை சாப்பிட்டால், குரல் நாண்களில் வீக்கம் குறையும். 

* 95 சதவிகிதக் குரல்வளைப் புற்று, புகைப் பழக்கத்தால் மட்டுமே வருகிறது. எனவே, இந்தப் பழக்கத்தைக் கைவிடுவது நல்லது. 

* குரல் வளத்தைப் பாதுகாக்க: எப்போதும் தொண்டையை ஈரமாக வைத்திருங்கள்; ஐஸ்க்ரீமைத் தவிர்ப்பது நலம்; பிராணாயாமப் பயிற்சி மிக அவசியம்; அதிகமாக இனிப்பு, காரம் எடுத்துக்கொள்ள வேண்டாம்; பனங்கற்கண்டு, மிளகு, பால் கூட்டணி... குளிர்காலத்திலும் குரலைப் பாதுகாக்கும். 

இயற்கை நமக்கு அளித்த மிக அற்புதமான குரலை, சேதாரம் இல்லாமல் பாதுகாக்க வேண்டியது நம் கடமைதானே! 

http://www.vikatan.com/news/health/76871-how-to-sing-better-with-larynx-control.art

Link to post
Share on other sites

வாதம், பித்தம், கபம்... மந்திரக் கூட்டணி! நலம் நல்லது-44 #DailyHealthDose

Nalam_logo_new_19285.jpg

`எதைத் தின்றால் `பித்தம்’ தெளியும்?’, `ஒருவேளை `வாத’க் குடைசலாய் இருக்குமோ’, `நெஞ்சில் `கபம்’ கட்டியிருக்கு...’ என்கிற உரையாடல்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து வருகின்றன. ஆனால், நம் மூத்த தலைமுறையில் இந்த மூன்றும் மிக முக்கியமானவை. `வாதம், பித்தம், கபம்’ அல்லது `வளி, அழல், ஐயம்’ எனும் மூன்று விஷயங்களும் நம் பாரம்பரிய மருத்துவத்தின் அடித்தளங்கள். உடலின் ஒவ்வொர் அசைவையும் நகர்த்தும் உயிர்த் தாதுக்கள் அவை. இவற்றைக் குறித்த அடிப்படை அறிவு நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். 

வாதம் பித்தம் கபம்

`முத்தாது’ என்று தமிழ்ச் சித்த மருத்துவத்திலும், `த்ரீதோஷா’ என்று ஆயுர்வேதத்திலும் பேசப்படும் இந்த மூன்று விஷயங்களைத்தான் 

`மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று’
 

- என்று நம் திருவள்ளுவர் நோயின் அடிப்படையைச் சொல்லியிருக்கிறார். 

வாதம், பித்தம், கபம் 

வாதம், நம் உடலின் இயக்கத்தை, தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை, சரியாக மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக்கொள்ளும். 

பித்தம், தன் வெப்பத்தால் உடலைக் காப்பது, ரத்த ஓட்டம், மன ஓட்டம், செரிமான சுரப்பிகள், நாளமில்லாச் சுரப்பிகள் போன்ற அனைத்தையும் இயக்கும் வேலையைப் பார்க்கும். 

கபம், உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து, எல்லாப் பணிகளையும் தடையின்றிச் செய்ய உதவியாக இருக்கும்.

கீரை

தவிர்க்கவேண்டிய, சாப்பிடவேண்டிய உணவுகள்!

* வாதம், பித்தம், கபம் மூன்றும் சரியான கூட்டணியாகப் பணிபுரிந்தால்தான், உடல் இயக்கம் சீராக நடக்கும். அதற்கு உணவு மிகவும் முக்கியம். ஒருவருக்கு மூட்டுவலி உள்ளது, கழுத்து வலி எனும் ஸ்பாண்டிலைசிஸ் உள்ளது என்றால், வாதம் சீர்கெட்டிருக்கிறது என்று அர்த்தம். அவர், வாதத்தைக் குறைக்கும் உணவைச் சாப்பிட வேண்டும். 

* புளி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி, குளிர்பானங்கள், செரிமானத்துக்கு சிரமம் தரும் மாவுப் பண்டங்கனைத் தவிர்க்க வேண்டும். இவை, வாயுவைத் தரும்; வாதத்தைக் கூட்டும். மூட்டுவலி, மலக்கட்டு உள்ளோர், ஆஸ்துமா நோயாளிகள் இந்த உணவுகளைக் கூடிய வரை தவிர்க்க வேண்டும். வாயுவை வெளியேற்றும் லவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு, சீரகம், முடக்கறுத்தான் கீரை, வாய்விடங்கம் ஆகியவற்றை உணவில் சேர்ப்பது வாதத்தைக் குறைக்க உதவும். 

மிளகு

* பித்தம் அதிகரித்தால், அஜீரணம் முதல் டிப்ரஷன் வரை பல பிரச்னைகள் வரக்கூடும். அல்சர், உயர் ரத்த அழுத்தம் என பித்த நோய்ப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இன்றைய வாழ்வியல் சூழலில் பல நோய்கள் பெருகுவதற்கு பித்தம் மிக முக்கியக் காரணம். பித்தத்தைக் குறைக்க உணவில் காரத்தை, எண்ணெயைக் குறைக்க வேண்டும். கோழிக்கறி கூடவே கூடாது. 

* அதிகமாக கோதுமையைச் சேர்ப்பதுகூட பித்தத்தைக் கூட்டும். அரிசி நல்லது... ஆனால் கைக்குத்தல் அரிசியாகப் பார்த்துச் சாப்பிடுவது நல்லது. கரிசலாங்கண்ணிக்கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி... இவையெல்லாம் பித்தம் தணிக்கும். மனத்தையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது அவசியம். 

எலுமிச்சை

* சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பு... என கபத்தால் வரும் நோய்கள் பல. பால், இனிப்பு, தர்பூசணி, மஞ்சள் பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளரி, குளிர்பானங்கள், மில்க் ஸ்வீட், சாக்லேட் இவையெல்லாம் கபம் வளர்க்கும் காரணிகள். இவற்றை மழைக்காலத்திலும், கோடைகாலத்தில் அதிகாலை மற்றும் இரவு வேளையிலும் தவிர்க்கலாம். மிளகு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை இவையெல்லாம் கபம் போக்க உதவும். அலுவலகத்திலிருந்து தும்மல் போட்டுக்கொண்டே வரும் வாழ்க்கைத்துணைக்கு கற்பூரவல்லி பஜ்ஜியும் சுக்கு காபியும் கொடுத்துப் பாருங்கள். தும்மல், அன்றிரவு தூக்கத்தைக் கெடுக்காது. 

வாதம், பித்தம், கபம் - இந்த மூன்று வார்த்தை மந்திரக் கூட்டணியைக் காப்பதில், சமையல்கூடத்துக்கு பங்கு உண்டு. நம் பாரம்பரிய அறிவைப் பாதுகாப்போம். அது, நம்மையும் நம் தலைமுறையையும் பாதுகாக்கும். 

http://www.vikatan.com/news/health/76993-rheumatism-bile-and-phelgm-magical-alliance-dailyhealthdose.art

Link to post
Share on other sites

சிறுநீரகக் கல்... ஏன், எதற்கு, எப்படி? நலம் நல்லது-45 #DailyHealthDose

Nalam_logo_new_19087.jpg

‘சிறுநீரகக் கல்’, `கல்லடைப்பு’ என்பது இன்று சர்வ சாதாரணமாக பலருக்கும் வரும் பிரச்னை ஆகிவிட்டது. `நீரின்றி அமையாது உலகு.’ நம் உடலும் அப்படித்தான். உடலின் ஒவ்வொரு சிறு செயல்பாட்டுக்கும் அத்தியாவசியமான பொருள் நீர். அந்த நீரைத் தேவையான அளவு பருக மறந்த அறியாமையில் இருந்திருக்கிறது உழைக்கும் கூட்டம். இது இன்றைக்கு மட்டுமல்ல, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரும் இருந்திருக்கிறது என்பதற்கு சிறுநீரகக் கல் குறித்த வரலாற்றுச் செய்திகளே சான்று! 

சிறுநீரகக் கல்

`கலங்கியதோர் தண்ணீர்தான் குடித்த பேர்க்கும் 
வாட்டமாய் வரம்பு தப்பித் திரிந்த பேர்க்கும் 
வந்து சேரும் கல்லடைப்பு’
 

- என்று பாடினார் யூகி முனிவர். `நான் சிறுநீரகக் கல்லுக்கு அறுவைசிகிச்சை செய்ய மாட்டேன்; மருத்துவம் செய்யவே பரிந்துரைப்பேன்’ என்றார் ஹிப்போக்ரட்டஸ். ஆக, நீண்டகாலமாக சிறுநீரகக் கல் என்ற பெருங்கல்லை மனிதன் சுமந்துகொண்டு வந்திருக்கிறான் என்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. 

மாசில்லாத, சுடவைத்து ஆறவைத்த தண்ணீரைக் குடித்தபோது அதிகம் வராத சிறுநீரகக் கல்லடைப்பு பிரச்னை, இப்போது பிளாஸ்டிக் குடுவையில், ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் செய்து, பல தர நிர்ணயக் கட்டுப்பாட்டுடன் தருவிக்கப்படுவதாகச் சொல்லப்படும் தண்ணீரை அருந்தும் காலத்தில் அதிகரித்துவருகிறது. பதப்படுத்தப்பட்ட அனைத்து உணவுகளிலும், துரித உணவிலும், புதுப்புது பன்னாட்டு உணவிலும், பாட்டியின் ஊறுகாய் உணவிலும் எக்கச்சக்கமாகச் சேர்க்கப்படும் உப்புதான் சிறுநீரகக் கல் உருவாகப் பிரதான காரணம். 

சிறுநீரக கல்

இது போதாதென்று, காலையில் வீட்டில் ஒரு டி.டி.எஸ் அளவுள்ள தண்ணீர், மதியம் அலுவலகத்தில் வேறு ஒரு கம்பெனியின் வேறு டி.டி.எஸ் அளவுள்ள தண்ணீர்... இப்படி ஒரே தண்ணீரே பல அவதாரங்களில் நம் உடம்புக்குள் செல்ல, அதற்குப் பரிச்சயம் இல்லாமல் விழிக்கின்றன நம் உடலின் மரபணுக்கள். 

`சுத்தமான தண்ணீர், குடிமக்களின் அடிப்படை உரிமை’ என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். ஆனால், அது பாட்டிலில் அடைக்கப்பட்டு விலைக்குக் கிடைத்தால் மட்டும் போதாது; குறைந்தபட்சம் அடி பம்ப்பிலோ, தெருமுனைக் குழாயிலோ வர வேண்டும். `குளோபல் வார்மிங்’ எனும் புவி வெப்பமடைதல் பிரச்னை, சுட்டெரிக்கும் கோடை, பனிப் பாறை இளகல், எதிர்பாராத அளவில், எதிர்பாராத இடத்தில் மழை... போன்ற பிரச்னைகளை மட்டும் ஏற்படுத்துவது இல்லை. மறைமுகமாக இந்தச் சூழல் இடப்பாடுகள் மனிதனின் சிறுநீரை அதிகரித்தோ அல்லது வற்றவைத்தோ கல் பிரச்னையில் கொண்டு வந்து நிறுத்துகிறது. 

நாகரிகம் எனக் கருதியும், அவசரத்துக்கு `ஒதுங்க’ வழியில்லாத வாழ்விடச் சூழலில் சிறுநீரை அடக்கும் பழக்கம் இப்போது அதிகமாகிவிட்டது. `சிறுநீர், அடக்கக் கூடாத 14 வேகங்களுள் ஒன்று’ என்கிறது சித்த மருத்துவம். சிறுநீரகக் கல் உருவாவதற்கு, சிறுநீரை அடக்கும் பழக்கமே மிக முக்கியக் காரணம். 

பாதிப்புக்கு ஆளான பெண்

‘கல்லடைப்பு’ என்று மருத்துவர் சொன்னதும் பதறவேண்டியது இல்லை. ‘10 மி.மீ வரையுள்ள கல்லைப் பார்த்து மிரளத் தேவை இல்லை’ என்கிறது இப்போதைய விஞ்ஞானம். வலியைச் சமாளித்து, கல்லைக் கரைக்கும் மருந்தே இதற்குப் போதுமானது. அதே நேரத்தில், `அட... இருந்துட்டுப் போகட்டும்’ என்ற அலட்சியமும் கூடாது. கல்லடைப்பு சில நேரங்களில் சிறுநீரகச் செயலிழப்பு வரை கொண்டு சேர்த்துவிடும். 

கல்லைக் கரைக்கும் உணவுகள்...

* இவற்றில் வாழைத்தண்டுக்கே முதல் இடம். 

வாழைத்தண்டு

* சுரைக்காயும் வெள்ளைப் பூசணியும் கற்கள் வராமல் தடுப்பதில் கில்லாடிகள். 

* வெள்ளரி, வாழைத்தண்டு போட்ட பச்சடியும், பார்லி கஞ்சியும் கற்காலத்தின் பொற்கால உணவுகள். 

* பொங்கல் போன்ற விசேஷ நாட்களில், வீட்டு வாசலில் நாம் கட்டும் கண்ணுப்பீளைச் செடி, காலைக் குத்தும் நெருஞ்சி முள் போட்டு, தேநீர் அருந்தினால் கற்கள் கரைந்து வெளியேறும். 

* சிறுநீரகக் கல் இருக்கிறது என்பதற்காக, கால்சியம் தவிர்க்க, பால், மோர்... என சுண்ணாம்பு படிந்த சுவர்ப் பக்கமே போகாமல் இருப்பவர்களுக்கு ஒரு செய்தி... மிகக் குறைவான கால்சியம்கூட கண்டிப்பாகக் கல்லை வரவழைக்கும். அதிகபட்ச கால்சியம்தான் கூடாதே தவிர, அளவான கால்சியம் கல் நோய் தீர அவசியம். 

சிறுநீரகக் கல் போன்ற நோயில் இருந்து விடுபட மருந்து, மாத்திரைகள் மட்டும் போதாது. அன்பு. அரவணைப்பு, இயற்கையின் மீதான அக்கறை அத்தனையும் தேவை.

http://www.vikatan.com/news/health/77227-you-can-prevent-kidney-stones-with-lifestyle-changes.art

Link to post
Share on other sites

முருங்கைக்காய் மகிமை! நலம் நல்லது- 46 #DailyHealthDose

நலம் நல்லது

ஒருமுறை மலேஷியாவுக்குச் சென்றிருந்தபோது அது நடந்தது. கோலாலம்பூரில் பூச்சோங் பகுதியில், பக்கத்து வீட்டு மரத்தில் காய்ந்து, உலர்ந்திருந்த முருங்கைக்காய் ஒன்றை, சீனர் ஒருவர் பறித்துக் கொண்டிருந்தார்.

 

"காய்ஞ்சுபோனதை எதுக்கு சார் பறிக்கிறீங்க?’’ என்று கேட்டேன்.

முருங்கைக்காய்

"உயர் ரத்த அழுத்தம் வராமல் இருக்க, முருங்கைக்காய் உள்ளே இருக்கும் உலர்ந்த விதைக்குள் இருக்கும் பருப்பை நாங்கள் சாப்பிடுகிறோம்" என்றார் அவர். இப்படி பாரம்பர்யமான உணவுகளை, கீரைகளை பல நாடுகளில் உள்ளவர்கள் மருந்தாகவே நினைக்கிறார்கள். குட்டியூண்டு தேசமான குவாந்தமாலா மாதிரியான நாடுகளில் இருந்து, ஜெர்மனி முதலான ஐரோப்பிய நாடுகள் வரை, தம் பாரம்பர்ய அறிவுகளையும் உணவு கலாசாரத்தையும் உற்றுப் பார்த்து, அதன் மாண்பை மீட்டிஎடுக்க முழு வீச்சில் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவர்களோடு ஒப்புநோக்குகையில், பாரம்பர்ய அறிவை எக்குத்தப்பாக ஸ்டாக் வைத்திருக்கும் நம் பயணத்தின் வேகம் மிக மிகக் குறைவு.

 

`காப்புரிமைச் சிக்கல் வருமோ?’ என்ற கார்ப்பரேட் சிந்தனையாலும், 'பழசு காசு தராது’ எனும் அறிவியல் குருமார்களின் தீர்க்கதரிசனங்களினாலும், இந்தியப் பாரம்பர்ய உணவும் மருந்தும் மெள்ள மெள்ள மறதியில் மூழ்கிவருகின்றன.

 

'செறிமந்தம் வெப்பந் தெறிக்குந் தலைநோய்

வெரிமூர்ச்சை கண்ணோய் விலகும்’

- என முருங்கை பற்றி, சித்த மருத்துவம் பாடியபோது, சித்தர்களுக்கு முருங்கை இலையில் உள்ள கண் காக்கும் பீட்டாகரோட்டின்களைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், கண் நோயைப் போக்க முருங்கை அவசியம் என்பதை உணர்ந்திருந்தனர்.

முருங்கை விதை

இன்றைய உணவறிவியல், `கண்ணுக்கு மிக அத்தியாவசியமான அந்த கரோட்டின்களின் அளவு, கேரட்டுகளைவிட முருங்கை இலையில் அதிகம்’ என்று சான்றளிக்கிறது.

 

முருங்கையால் கிடைக்கும் நன்மைகள்...

* பீட்டா கரோட்டின் நிறைந்த தினையரிசி சாதத்துக்கு, முருங்கைக்காய் சாம்பார் வைத்து, அதற்குத் தொட்டுக்கொள்ள முருங்கைக்கீரையைப் பாசிப் பருப்புடன் சமைத்து, சாப்பாட்டுக்குப் பின்னர் பப்பாளிப் பழத்துண்டுகள் கொடுத்தால், நம் நாட்டில் வைட்டமின் ஏ சத்துக் குறைபாட்டினால் வரும் பார்வைக் குறைவை நிச்சயம் சரிசெய்யலாம். செலவும் மிகக் குறைவு.

* முருங்கையில் பொட்டாசியச் சத்து, வாழைப்பழத்தைக் காட்டிலும் அதிகம். புரதச்சத்து, முட்டைக்கு இணையாக முருங்கை இலையில் உண்டு. பாலைக் காட்டிலும், நான்கு மடங்கு கால்சியம் முருங்கையில் உண்டு. ஆரஞ்சைவிட அதிகமான வைட்டமின் சி-யும் முருங்கையில் உண்டு. மற்ற கீரைகளைவிட, முருங்கைக்கீரையில் இரும்புச் சத்து அதிகம். மொத்தத்தில், முருங்கை சங்ககாலம் தொட்டு நம்மிடம் இருந்த மாபெரும் வைட்டமின் டானிக்.

முருங்கைக்காய்

 

* சர்க்கரை நோயாளிகள், வாரத்துக்கு இரண்டு நாள் கம்பு, சிறிய வெங்காயம், முருங்கை இலை போட்ட அடை, ரொட்டி அல்லது கேழ்வரகு தோசையில் முருங்கை இலை போட்டுச் சாப்பிட்டாலே, அதிகபட்சக் கனிம, உயிர்ச் சத்துக்கள் கிடைக்கும்; சர்க்கரைநோய் உண்டாக்கும் சோர்வும் தீரும்.

* சித்த மருத்துவப் பரிந்துரைப்படி, முருங்கை, உயர் ரத்த அழுத்த நோய்க்கும் மருந்து. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், சோர்வு, நரம்புத் தளர்ச்சி போன்ற `காம்போ’ வியாதிகள் பலரது வாழ்விலும் கூட்டமாக வந்து கும்மியடிக்கும். அந்த மொத்தக் கூட்டத்தையும் தனியாளாக விரட்டும் இந்த ஒற்றை முருங்கை.

முருங்கைக் கீரை சூப்

 

* நம் குழந்தைகளிடம் முருங்கைக்கீரை பொரியல், தினையரிசி சாதம் பற்றிச் சொல்ல நினைப்பதும், அவற்றை மெல்ல வைப்பதும் சிரமம்தான். ஆனால், எப்படியாவது முருங்கைக்கு குழந்தைகளைப் பழக்கப்படுத்திவிடுவது அவர்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது.

மொத்தத்தில் முருங்கை பல நோய்கள் வராமல் தடுக்கும்... காக்கும்!

http://www.vikatan.com/news/health/77369-health-benefits-of-drumstick-dailyhealthdose.art

Link to post
Share on other sites

புற்றுநோயைத் தடுக்கும் எலுமிச்சை! நலம் நல்லது-47 #DailyHealthDose

Nalam_logo_new_17510.jpg

றைவழிபாடாக இருந்தாலும் சரி, பெரியோரை வணங்கும் விருந்தோம்பலாக இருந்தாலும் சரி, எலுமிச்சைக்கு தமிழர் அளித்திருக்கும் இடம் பெரிது. மஞ்சள், வேம்புபோல எலுமிச்சைக்கும் நம் மருத்துவ மரபில் பெரும் பயன் இருந்திருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கு மிக அத்தியாவசியமான வைட்டமின் சி சத்து, எலுமிச்சையில் இருப்பது நமக்குத் தெரியும். ஆனால், வாந்தி, தலைசுற்றல், உயர் ரத்த அழுத்தம் காரணமாக வரும் தலைவலி, மயக்கம் போன்ற பல பிரச்னைகளுக்கும் எலுமிச்சை மருந்து என்பது பலருக்கும் தெரியாத விஷயம். 

எலுமிச்சை

`மந்திரிக்கு மந்திரியாக, மன்னனுக்கு மன்னனாக, தந்திரிக்கு மித்திரனாக...’ என விடுகதையாக சித்தர் தேரன் மருந்து பாரதத்தில் பாடியிருக்கும் பழம் எலுமிச்சை. அதாவது, `மந்திரி’ எனும் `பித்தம்’ அதிகரித்துவரும் நோய்க்கு அரசவையின் மந்திரிபோல் சமயோசிதமாக உடலுக்கு வேறு பிரச்னை எதுவும் வராமல், பக்கவிளைவு இல்லாமல் தணிக்கும் ஆற்றல் கொண்டது; உடலின் மன்னனான  `வாதத்தை’, சரியாக நிர்வகிக்கும் மன்னனாக இருக்கிறது; தந்திரமாக உடலில் சேரும் `கபத்துக்கு’ மித்திரனாக (நண்பனாக) இருந்து அதை வெளியேற்றும் இயல்புகொண்டது. `இந்த மூன்று பணிகளையும் செவ்வனே செய்யும் இது’ எனக் கவித்துவத்துடன் சொல்கிறார் சித்தர் தேரன். 

இனிக்க இனிக்க எலுமிச்சையின் பலன்கள்! 

* ஈராக் நாட்டின் எலுமிச்சையைக் காட்டிலும், நம் ஊர் எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம். `சீமை கமலா ஆரஞ்சு’ எனச் சொல்லி, அதிக விலைக்கு விற்கப்படும் பழத்துக்கு இணையான வைட்டமின் சி சத்து, அதைவிட விலை குறைவான நம் நாட்டு எலுமிச்சையில் உண்டு. 

* புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் உணவு வகைகளில், சீனாவின் புரோக்கோலி போல், காபூல் மாதுளையைப்போல், இதன் பயனும் பேசப்பட்டு வருகிறது. 

லெமன்

* எலுமிச்சையின் தோலில், பழத்தில் உள்ள எரியோசிட்ரின் (Eriocitrin), ஹெஸ்பெரிடின் (Hesperidin), நாரின்ஜின் (Naringin) முதலான ஃப்ளேவோன் கிளைகோசைட்ஸ் (Flavone Glycosides) உடல் எடை குறைப்பில், சர்க்கரைநோய் வராமல் தடுக்க, ரத்தக் கொழுப்பைக் குறைக்க என பல வழிகளில் பயனாவதை நவீன உணவு அறிவியல் உறுதிப்படுத்தியுள்ளது. 

* போர்ச்சுக்கல் நாட்டில் நடந்த ஓர் ஆராய்ச்சி, லெமன் டீயில் தேன் சேர்த்துச் சாப்பிடுவதன் பயனை முழுமையாக விளக்கியிருக்கிறது. முக்கியமான விஷயம்... அந்தத் தேநீரில் பாலோ, வெள்ளைச் சர்க்கரையோ சேர்க்கக் கூடாது. அதைவிட முக்கியமான விஷயம், அந்தத் தேநீரை, `இன்ஸ்டன்ட் லைம் டீ பௌடரை’ வெந்நீரில் கலந்து தயாரிக்கக் கூடாது. அதில் மணம் இருக்கும்... ஆனால், மருத்துவப் பலன் அதிகம் இருக்காது. காரணம், தேயிலையை இன்ஸ்டன்ட் பொடியாக மாற்றும் தொழில்நுட்பத்தில் முதலில் சொன்ன பல மருத்துவக் குணமுள்ள பாலிபீனால்கள் அனைத்தும் சிதைந்துவிடும். உண்மையான லெமன் டீயின் பயன் கிடைக்க வேண்டுமா? தேயிலை போட்ட, கொஞ்சம் எலுமிச்சையைப் பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிடுங்கள். 

லெமன் ஜூஸ்

* ஒரு பக்கம், `எலுமிச்சைச் சாறு சேர்ந்த திரவத்தால் பாத்திரம் கழுவலாம், கழிப்பறை கழுவலாம்’ என நவீன வணிகம் இதை வேறு இடத்துக்குக் கொண்டு செல்கிறது. மறுபக்கம், `எலுமிச்சை, கீமோதெரபியைக் காட்டிலும் பாதுகாப்பான கேன்சர் மருத்துவம்’ எனத் தகவல்கள் பரபரக்கின்றன. எலுமிச்சைச் சாறு, கேன்சர் செல் வளர்ச்சியைத் தடுப்பதைப் பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன. ஆனால், எலுமிச்சையின் பயன்கள் முழு மருந்தாக மாறுவதற்குப் பல காலம் பிடிக்கும். காப்புரிமைப் பிடியில் சிக்கியுள்ள மருந்து நிறுவனங்கள், அதற்கெல்லாம் ஆகும் செலவைக் கணக்கிட்டுத்தான் ஆராய்ச்சியையே தொடர்வார்கள். ஒருவேளை, `அதிக லாபம் சம்பாதிக்க முடியாது’ எனக் கணக்காளர்கள் கணக்கிட்டுச் சொல்லிவிட்டால், அந்த நிறுவனங்கள் பயனளிக்கும் மருத்துவ முடிவுகளையே ஓரம் கட்டி வைத்துவிடும். 

எலுமிச்சம்பழம்

* கேன்சர் நோயாளிகள், எலுமிச்சைச் சாற்றில் தேன் சேர்த்தோ, எலுமிச்சைச் சாறு கலந்த பச்சைத் தேநீரில் (Green Tea) தேன் சேர்த்தோ தங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளோடு கூடுதலாகச் சாப்பிடுவதில் தவறு ஒன்றும் இல்லை. 

* மன அழுத்தம், மனச் சோர்வு, மனப் பிறழ்வு போன்ற பல மன நோய்களுக்கு நெடுங்காலமாகப் பயனளித்துவரும் மருத்துவ மூலிகை எலுமிச்சை. எலுமிச்சைச் சாற்றின் குறைந்த அளவு அமிலம் இருந்தால்கூட, அது எளிதில் ஜீரணித்து, உடலின் காரத்தன்மையை அதிகரிப்பதால், புற்றுநோய் வராமல் தடுக்கும் வல்லமை கொண்டது. அத்துடன் சர்க்கரை நோயையும் தவிர்க்க இது உதவிடும். 

எனவே, எலுமிச்சை மீது இச்சைகொள்வோம்!

http://www.vikatan.com/news/health/77486-how-to-prevent-cancer-with-lemon.art

Link to post
Share on other sites

எது காயகல்பம்? நலம் நல்லது-48 #DailyHealthDose

நலம் நல்லது

`காயகல்பம்’. இந்த வார்த்தையைப் பல ஆண்டுகளாக நாம் அறிவோம். அது ஒரு நுட்பமான அறிவியல். இன்றைக்கு வணிகத்தின் பிடிக்குள் சிக்கிக்கொண்டு சீரழிகிறது. கட்டுமஸ்தான, சிக்ஸ்பேக் உடல்வாகுடன் ஒருவர், ஒரு பாட்டிலைக் கையில் வைத்துக்கொண்டு விளம்பரம் செய்வதை நாமும் பார்த்திருப்போம். `இந்த காயகல்பத்தைச் சாப்பிட்டதாலதான் என் உடம்பில் இவ்வளவு வலு, அதோட `அந்த’ விஷயத்துல வீரியமும் கிடைக்குது’ என்று உளறிக்கொட்டிக்கொண்டு இருப்பார். சொல்லப்போனால், காயகல்பம் என்றாலே, `ஆண்மைக்குறைவுக்கான மருந்து’ என்ற அர்த்தமற்ற ஒன்றாக்கிவிட்டது, இதுபோன்ற வியாபார உத்திகள்!

அந்தக் காலத்தில், வாழ்வை `இறைவன்’ எனும் புள்ளியில் விரித்துப் பார்த்தவரும் சரி, `இயற்கை’ எனும் புள்ளியில் பார்த்தவரும் சரி, நோயற்று ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழ்வதை மட்டுமே அடிப்படை ஆரோக்கியம் என அறிந்துவைத்திருந்தார்கள்.

உண்மையில் காயகல்பம் என்றால் என்ன?

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே, `உடம்பை வளர்த்தேன்... உயிர் வளர்த்தேனே!’ என்ற திருமந்திரமும், `உயிர்க் குருதியெல்லாம் உடம்பின் பயனே... அயர்ப்பின்றி யாதியை நாடு’ எனும் ஔவையின் வரிகளும் கூறின. சுருக்கமாகச் சொன்னால், அந்தக் காலத்திலேயே புழக்கத்தில் இருந்த தடுப்பூசி டானிக்குகள் என்றோ, காயகல்ப அறிவியலைப் புரிந்துகொள்ளலாம்.

காயகல்பம்

சில காயகல்ப மருந்துகளை, நோயில்லா காலத்தில் சில உணவு கட்டுப்பாடுகளுடன் ஒரு மண்டலம் அல்லது குறிப்பிட்ட சில நாட்கள் சாப்பிடும்போது, உடல் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உடல் தோல் சுருக்கம், முடி நரைப்பது நிற்கும் அல்லது தள்ளிப் போகும். ஒரு மருந்து அல்லது நலம்புரிதல், வயோதிகத்தைத் தள்ளிப்போட உதவுகிறது என்றால், இன்றைய விஞ்ஞான புரிதலின்படி செல் அழிவை மீட்டெடுக்கும் பணியைச் செய்யக்கூடிய தாவர நுண்கூறுகள் அதில் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று பொருள்.

காயகல்பம் என்றால், முன்பு சொன்னபடி, `அண்டாகாகஸம்... அபூகா ஹுகும்’ கதையெல்லாம் அல்ல. இஞ்சித் தேனூறல், கற்றாழை, வேம்பு, கரிசாலை, பொன்னாங்கண்ணிக்கீரை, மணத்தக்காளி, மஞ்சள் பூசணி இவற்றைத்தான் நோயற்ற வாழ்வுக்கான கற்ப மூலிகைகளாகக் கருவூரார் சித்தர் சொல்கிறார். கருவூரார், `வாத காவிய’த்தில் சொல்லியிருக்கும் 108 மூலிகைகளில் பல, காய்கறி மார்க்கெட்டிலும், வாய்க்கால் வரப்பு ஓரங்களிலும், கோடை வாசஸ்தல மலைகளிலும் கிடைப்பவை.

மஞ்சள் பூசணி

பொன்னாங்கண்ணி கீரைமணத்தக்காளி கீரை

பயணம் செய்துவிட்டு வந்து காலில் நீர் கோத்திருப்பவருக்கு சுரைக்காய் கூட்டு; தூக்கமில்லாமல் கண்விழித்துப் பணியாற்றியவருக்கு கண் எரிச்சலுடன் உடல் சூடும் அதிகமாகியிருக்கும்.. அவருக்கு கீழாநெல்லியும் மோரும்; மந்தபுத்தி போக சிறுகீரையில் மிளகு சேர்த்துக் கூட்டு; சளி பிடித்தவருக்குத் தூதுவளை ரசம்; மெலிந்திருப்பவருக்கு தேற்றான்கொட்டைப் பொடி; மேகவெட்டைக்கு ஓரிதழ் தாமரை... எனக் காயகல்ப மருந்துப் பட்டியல் தமிழர் மருத்துவப் புரிதலில் ஏராளம்.

வேம்பு

திருவள்ளுவ நாயனாரின் கற்ப பாடல் இப்படிச் சொல்கிறது... `காலமே யிஞ்சியுண்ணக் காட்டினார் சூத்திரத்தில் மாலையதிலே கடுக்காய் மத்தியான சுக்கருந்த...’ அதாவது, காலையில் இஞ்சி, கடும் பகலில் சுக்கு, மாலையில் கடுக்காய் சாப்பிடு’ என்று அர்த்தம். அதற்காக, இஷ்டத்துக்கு எதையும் சாப்பிடலாம், எப்படியும் வாழலாம் என்று அர்த்தம் அல்ல. எந்தக் கற்பமும் முறையான யோகப் பயிற்சியுடன் இருந்தால்தான் பயன் தரும். `வளியினை வாங்கி வயத்தில் அடக்கில் பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்’ எனத் திருமூலர் மூச்சுப் பயிற்சியில் சொன்னதும் இதைத்தான்.

அரிஸ்டாட்டில், கேலன், ஹிப்போகிரட்டஸில் இருந்து இன்றைய நவீன மருத்துவப் புரிதல் வந்ததுபோல, நம் தேரனும், திருமூலரும், அகத்தியரும் சொன்னதை ஆய்ந்தும், அலசியும், விரித்தும் பயனாக்க சமகால விஞ்ஞானிகள் தயக்கம் காட்டவே கூடாது. நம் பாரம்பர்ய தமிழ் மருத்துவம் காட்டும் காயகல்பம் எனும் அருமருந்தின் உண்மையான பொருளை உணர்வோம்... ஆரோக்கியத்துக்கு அடித்தளம் இடுவோம்!

http://www.vikatan.com/news/health/77594-which-is-kayakalpa-the-elixir.art

Link to post
Share on other sites

பொங்கல்... இயற்கையை நேசிப்பவர்களின் விழா! நலம் நல்லது-49 #DailyHealthDose

Nalam_logo_new_18349.jpg

தைப் பொங்கல் உழவுக்கும் உணவுக்கும் உள்ள உன்னதத்தை வெல்லப்பாகாக நெய் மணத்துடன் சொல்லும் தமிழர் திருநாள். பொங்கல் திருவிழா... தமிழர்களின் வாழ்வியல் பாரம்பர்யத்தை நினைவுகூரும் அவசியமான பெருவிழா. அன்றைக்கு வீட்டில் சொந்தமாக சிறுகாணி நிலம் இல்லாதபோதும், அந்தப் பொங்கல் நாளில் செருக்குடன், 'உழவு என் உயிர். அதில் கிடைக்கும் உணவு உன் வாழ்வாதாரம்’ என ஒவ்வொருவருக்குள்ளும் உணர்வை உருவாக்கும். வீட்டு நிலை வாசலின் இரண்டு ஓரத்திலும் கட்டும் பீளைச்செடி, புளிபோட்டு விளக்கிக் கழுவி வைத்த வெங்கலப் பானை, அதில் கட்டத் தயாராக இருக்கும் மஞ்சள் கிழங்கு... என பொங்கல் திருநாளின் அடையாளங்கள் தனித்துவமானவை. முக்கியமாக, நாம் வைக்கும் பொங்கல். அதன் சிறப்புகளையும், பயன்களையும் சொல்லி மாளாது.

பொங்கல்

மகத்துவம் மிக்கப் பொங்கல்!

இந்தத் திருநாளில் தமிழரின் பல வீடுகளில் மூன்று பானையிலும், சில வீடுகளில் இருபானையிலும் பொங்குவது வழக்கம். `பால் பொங்கல்’, `சர்க்கரைப் பொங்கல்’, `வெண் பொங்கல்’ என்று சொல்வார்கள். `ரெகமென்டடு டயட்ரி அலவன்ஸ்’ (Recommended Dietary Allowance) விஷயங்கள் தெரியாத காலத்திலேயே பொங்கலிலும் இட்லியிலும் அரிசியையும் பருப்பையும் எப்படி இன்றைய `உணவுப் பிரமிடு’ சொல்லும் சரிவிகிதச் சம அளவில் சேர்த்தார்கள்? நெல்லுக்குப் பிறகு பயறுகளை விளைவித்து, மண்ணின் நைட்ரஜன் சத்தைக் குறையாமல் மீட்கும் தொழில்நுட்பத்தை யார் கற்றுத் தந்தார்கள்? தமிழர்கள், இயற்கையை எப்போதும் நேசித்தும், கவனித்தும், பாதுகாத்தும் பேணியதில் கிடைத்த அனுபவக்கோவை அது. பொங்கல் விழா இந்த நேசிப்பின், இயறகையுடனான நெருக்கத்தின் மகிழ்வுப் பெருக்கம். 

பயன்கள்...

* வெண் பொங்கல், உணவு மட்டுமா... மருந்து! ஹெச்.ஐ.வி பாதிப்பு உள்ளவர்களுக்கு உணவில் ஊட்டம் அளித்து, எடையை உயர்த்துவதில் மருந்துக்கு இணையான முக்கியத்துவம் உடையது. நோயாளிக்கு மட்டுமல்ல, எல்லா நோஞ்சான்களுக்கும் பொங்கல்தான், உடல் எடையை உயர்த்தும் விருந்தும் மருந்தும். ஆனால், உடல் உழைப்பு இல்லாத வாழ்வியலில், குழைவாக வெந்த பச்சரிசி வெண் பொங்கல், சர்க்கரையைத் தடாலடியாக உயர்த்தும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. எனவே, சர்க்கரை நோயாளிகள் பச்சரிசிக்குப் பதிலாகப் பட்டை தீட்டாத தினையரிசியையோ, வரகரிசியையோ பயன்படுத்துவது சிறப்பானது. பாசிப் பருப்புக்கு பதிலாக, உடைத்த, தோல் நீக்காத பாசிப் பயறையும் பயன்படுத்தலாம். 

* வெண் பொங்கலில் மிளகு சேர்க்கும்போது கவனிக்க..! தூளாக்கி விற்கப்படும் மிளகு, காரம் தரும். ஆனால், நீண்ட நாட்கள் பொடித்து வைக்கப்பட்ட மிளகும், நீண்ட நாட்கள் சேகரித்து வைக்கப்பட்ட மிளகும், தன்னுள் உள்ள மருத்துவ ஆல்கலாய்டுகளையும் நறுமணச் சத்துகளையும் இழக்க ஆரம்பித்துவிடும். குறுமிளகை அவ்வப்போது தூளாக்கிப் புதிதாகப் பயன்படுத்துவதுதான் சளியை நீக்க, இரைப்பு நோயில் மூச்சிரைப்பைக் குறைக்க, நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க... எனப் பல வகைகளில் உதவிடும். 

சர்க்கரைப் பொங்கல்

* பொங்கலில் மஞ்சள் தூள் சேர்ப்பதும், கொஞ்சமாக நெய் சேர்ப்பதும் குழந்தைகளுக்கு ஊட்டம் தரும். மஞ்சளின் `குர்குமின்’ சத்தை பலரும் புற்றுநோய்க்கும் தொற்றுநோய்க்கும்தான் நல்லது என நினைக்கிறார்கள். இதயத்தின் ரத்தநாளத்தில் வெடிப்புகள் ஏற்படாமல் இருக்கவும், அதனால் அதில் கொழுப்புப் படியாமல் இருக்கவும், செல் அழிவைத் தடுக்கவும் மஞ்சள் பயன்தரக்கூடியது. 

* பொங்கல் திருநாளின் மறக்க முடியாத இனிப்பு... கரும்பு. சர்க்கரை நோயாளிகளைத் தவிர, பிறருக்கு கரும்புச் சாறு ஊட்டம் அளிக்கும் உணவு. பித்தம் நீக்கி, காமாலையில் ஏற்படும் தடாலடி ரத்த சர்க்கரைக் குறைவுக்கு, பொட்டாசியம் முதலான கனிமம் நிறைந்த கரும்புச் சாறு ஒரு மருந்தும்கூட. கரும்பை நீண்ட நாட்கள் வைத்திருந்தால், அது ஆல்கஹாலாக மெள்ள மெள்ள மாறிவிடும். 

* பொங்கல் திருநாளை ஒட்டி நாம் சுவைத்த, பின்னாளில் மறந்தும் போய்விட்ட ஓர் உணவு, பனங்கிழங்கு. நார்த்தன்மை மிக அதிகம்கொண்ட பனங்கிழங்கை, மஞ்சளும் மிளகுத் தூளும் சேர்த்து வேகவைத்து எடுத்துச் சாப்பிடுவதும் மலச்சிக்கலுக்குத் தீர்வுதரும் அருமருந்து

உழவுக்கும் உணவுக்கும் வந்தனம் சொல்லத்தான் பொங்கல் திருநாள் என்பதை, இயற்கைக்கு மரியாதை செய்வதற்குத்தான் இந்தத் திருநாள் என்பதை நினைவில் கொள்வோம்... நம் சந்ததிக்கும் சொல்லிக் கொடுப்போம்! பொங்கல் வாழ்த்துக்கள்! 

http://www.vikatan.com/news/health/77678-pongal-festival-who-loved-natures.art

Link to post
Share on other sites

இரைச்சல்... செல்லாக்காசாகும் செவித்திறன்! நலம் நல்லது-50 #DailyHealthDose

Nalam_logo_new_11217.jpg

ரக்கப் பேசும் இனக் குழுக்களில் இருந்து வந்தவர்கள் நாம்! சத்தமாக வசனம் பேசுவது; காதலைக்கூட உறக்கச் சொல்வது; தேர்தல் சமயங்களில் மைக்கில் விளாசுவது; திருமணம், பண்டிகைகளில் பட்டாசு கொளுத்துவது; கோஷம் போடுவது... என நம்மிடம் சத்தங்கள் ஏராளம்! இது இருக்கட்டும். இந்தியாவில், ஒலி மாசைக் கட்டுப்படுத்த சட்டங்களும் இருக்கின்றன. ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் எழும் சிக்கல்களால் செவித்திறன் குறைபாடு உடையவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதுதான் கவலைக்குரிய செய்தி. 

செவித்திறன்

பார்வைக் குறைபாடுகளுக்காக கண்ணாடி அணிபவர்களை ஏற்றுக்கொள்கிற இந்தச் சமூகம், செவித்திறன் குறைபாடு உள்ளவர்களை ஏற்றுக்கொள்வது இல்லை. அவர்கள் தங்கள் மன உணர்வுகளை மழலை வார்த்தைகளால் வெளிப்படுத்தும்போது, சிரித்து அவமானப்படுத்துகிறோம். 

செவித்திறன் குறைபாடு... காரணங்கள்! 

* இதற்குப் பல காரணங்கள் உள்ளன. வெளியே தெரியும் வெளிக்காதைத் தாண்டி, நடு காது, உள் காது ஆகியவையும், ஒலியைக் கடத்தும் மிக நுண்ணிய குழலும் இருக்கின்றன. உள் காது முழுக்க நரம்பு இழைகளால் இருக்கும். இதில் எங்கு நோய்வாய்ப்பட்டாலும் செவித்திறன் குறையும் அல்லது முற்றிலுமாகப் பாதிக்கப்படும். 

* நாள்பட்ட சளி, காது-தொண்டை இணைப்புக் குழாயில் வரும் நீடித்த சளி, நடு காதில் தங்கும் சளி... என எளிதில் குணப்படுத்தக்கூடிய தொந்தரவை அலட்சியமாகக் கண்டுகொள்ளாமல் இருப்பதுகூட பின்னாளில் செவித்திறனில் பாதிப்பை உண்டாக்கும். 

* காதுக்குள் ரீங்கார ஒலிபோல கேட்டுக்கொண்டே இருப்பது மினியர்ஸ் நோயாக, வெர்டிகோவுடன்கூடிய காது நோயாக இருக்கக்கூடும். இன்றைக்கு முழுமையாகக் குணப்படுத்தக்கூடியவை இவை. 

* அம்மை முதலான வைரஸ் நோயாலும் உள் காதின் நரம்பிழைகள் பாதிக்கப்படக்கூடும். பிறப்பிலேயே வரும் `ஓட்டோஸ்கிளெரோசிஸ்’ (Otosclerosis) எனும் நோயில், சத்தம் கடத்தும் ஒலியில் அதிரவேண்டிய நுண்ணிய எலும்புகள் சரியாக அதிராததால் செவித்திறன் குறையும். இந்த இரண்டு குறைபாடுகளைக் களைய உபகரண உதவி தேவைப்படும். 

முதுமையில் காதுகேளாமை

* முதுமையில் எந்தக் காரணமும் இன்றி மெள்ள மெள்ள செவித்திறன் குறைவதும் இயல்பு: இது நோய் அல்ல. 

* பெரிய உபகரணங்களைக்கொண்டு பூமியைக் குடைவது, கட்டடங்களை உடைப்பது போன்ற பணியில் ஈடுபடுபவர், விமானங்கள் இறங்கும் விமான நிலையத்துக்கு அருகே வசிப்பவர், டிஸ்கொதேயில் காது கிழியும் சத்தத்தில் ஆடும் இளைஞர்கள், அங்கு பணிபுரியும் உழைக்கும் வர்க்கத்தினர்... என இரைச்சல்களுக்கு நடுவே வாழ்பவர்களுக்கு மேற்சொன்ன எந்தக் காரணமும் இல்லாமல் செவித்திறன் பாதிக்கப்படும். 

* அதிகபட்ச சத்தத்தால் காதுக்குள் உள்ள ஸ்டீரியோசெல்லா எனும் 1,013 மைக்ரோ மீட்டர் அளவுள்ள மிக நுண்ணிய மயிரிழைகள் சிதைவதாலேயே செவித்திறன் குறைபாடு ஏற்படுகிறது. இது, உயர் ரத்த அழுத்தம், மன உளைச்சல் பிரச்னைகளையும் உண்டாக்கும். சமயத்தில் மாரடைப்பையும் ஏற்படுத்திவிடும். 

காது

தவிர்க்க... 

* பேனா, பென்சில், துடைப்பக் குச்சி வரை கையில் கிடைத்ததை வைத்து காது குடைவதும், சுத்தப்படுத்துகிறேன் என கடுஞ்சிரத்தையுடன் சுத்தம் செய்வதும் தவறு. காதினுள் மெழுகு போன்ற பொருள் உருவாவது நோய் அல்ல; நோய்க் கிருமிகளைத் தடுக்கத்தான் உருவாகிறது. அது அளவில் அதிகமானால் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும். 

* சிலர் காதில் சீழ் வந்தால், எண்ணெய் காய்ச்சி காதுக்குள்விடுவார்கள். அது ஆபத்து. சுக்குத் தைலம் போன்ற சித்த மருந்துகளை தலைக்குத் தேய்த்துக் குளித்தாலே போதும், காது சீழ் முதலான நோய்கள் தீரும். 

* அன்று, காது நோய்களுக்கும், கேட்கும்திறனை கூட்டவும் மருள், கணவாய் ஓடு, தைவேளை முதலான மூலிகை மருந்துகள் தமிழ் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தன. இருந்தாலும், காதுக்குள் போடும் மருந்துகளை மருத்துவர் ஆலோசனை இன்றிப் போடுதல் கூடாது. 

* தினமும் தலைக்குக் குளிப்பது, வாரத்துக்கு இரண்டு நாள் எண்ணெய்க் குளியல் போடுவது செவித்திறன் பாதுகாக்கும் தடுப்பு முறைகள். 

காதுகளில் கவனம் செலுத்தவேண்டியது இன்றைய அவசியத் தேவை. கூடுமான வரை இரைச்சல் தவிர்ப்போம்... செவித்திறன் பாதுகாப்போம்! 

http://www.vikatan.com/news/health/77883-noise-pollution-is-the-reason-for-hearing-loss.art

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.