Jump to content

Recommended Posts

அழகுசாதனப் பொருட்கள்... ஆபத்தை விளைவிக்கும் பின்னணிச் செய்திகள்! நலம் நல்லது-77 #DailyHealthDose

அழகுசாதனப் பொருட்கள் - நலம் நல்லது

ழகுசாதனப் பொருட்கள்... இன்றைக்கு ஆண்கள், பெண்கள் இருபாலினரும் பயன்படுத்தும் அத்தியாவசியமான சமாசாரமாகிவிட்டன. அழகாக இருக்க எல்லோரும் ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால், அழகுசாதனப் பொருட்கள் எப்படித் தயாரிக்கப்படுகின்றன... மணமூட்டுவதற்கும், நிறமேற்றுவதற்கும், அழகு சேர்க்கவும் இவற்றில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் என்னென்ன...! இவை பாதுகாப்பானவைதானா... உடல்நலத்துக்குத் தீங்கு ஏற்படுத்துபவையா...? என்பதை எல்லாம் நாம் யோசிப்பதில்லை. உலகில் இது தொடர்பாக அதிகம் ஆய்வுகளும் நடைபெறுவதில்லை என்பதுதான் உண்மை..பல அழகுசாதனப் பொருட்கள் நம் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிப்பவை. அழகுசாதனப் பொருட்கள் என்ன செய்யும்? ஆபத்தை விளைவிக்கும் பின்னணிச் செய்திகள்...

அழகுசாதனப் பொருட்கள்

* நெயில் பாலீஷ்... குழந்தைகளுக்குப் பிடித்த அழகுசாதனப் பொருள். இதில் காரீயம் கலக்கப்படுகிறது. இது, குழந்தைகளின் மூளைத் திறனையே பாதிக்கக்கூடியது. 

* பல மணமூட்டிகளில் (சென்ட்) உள்ள ஃபார்மால்டிஹைடு (Formaldehyde), நரம்பைப் பாதிக்கும் ஒரு நச்சுப் பொருள். 

* அதேபோல மணமூட்டிகள், அழகூட்டிகளில் சேர்க்கப்படும் எத்தலின் ஆக்ஸைடு (Ethylene oxide) ரசாயனம் புற்றுநோயை உண்டாக்கக்கூடியது. இப்படி `உலகம் எங்கும் தயாராகும் அழகுசாதனப் பொருட்களில், 22 சதவிகிதப் பொருட்களில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்கள் இருக்கின்றன’ என எச்சரிக்கிறது `ஸ்கின் டீப்’ என்ற அமைப்பு. 

காஸ்மெட்டிக்ஸ்

* பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பருவம் எய்துவதற்கும், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கும் அழகூட்டிகளில் உள்ள ஹார்மோன்கள் காரணமாக இருக்குமோ என்கிற ரீதியிலும் ஆய்வுகள் நடைபெறுகின்றன. `தாலேட்’ (Phthalate) எனும் முகத்தில் மேக்கப்பை நிறுத்தும் ரசாயனம், கண் அழகுக்குப் பயன்படுத்தப்படும் பாலிசைக்ளிக் ஹைட்ரோகார்பன் (Polycyclic Hydrocarbon) ஆகியவை ஆரோக்கியத்துக்குத் தீங்கு விளைவிப்பதாக அஞ்சப்படுபவை. ஆனாலும், இன்று வரை நம் சந்தையில் விற்பனையில் உள்ளவை. ஐந்து வயதேயான குழந்தைக்கு ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்து, முகத்தில் ஸ்க்ரப் செய்து, பாலீஷ் போட்டு, ஸ்ப்ரே அடித்து, காற்றுப் புகாத பளபள ஆடை அணிவித்து நடத்தும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள், அந்தக் குழந்தையின் அழகையும் ஆரோக்கியத்தையும் கெடுத்துவிடும் என்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள். 

* `ஆர்கானிக்’ என்கிற பெயரில் விற்கப்படும் பொருட்களிலும் எச்சரிக்கை தேவை. விற்பனை உத்திக்காக மட்டுமே பல பொருட்களில் `ஆர்கானிக்’ என்கிற வார்த்தைப் பயன்படுத்தப்படுகிறது. மூலிகை ஷாம்பூக்களில், சோடியம் லாரல் சல்பேட்  (Sodium Lauryl Sulfate) கலக்கப்படாதவை மிக மிக அரிதானவை. `கொஞ்சம் ரசாயனம், சிறிது மூலிகை’ என்ற கலப்பில் வருபவைதான் அதிகம். `ஆர்கானிக் என உலக அளவில் விற்கக்கூடிய அழகூட்டிகளில் பத்து சதவிகித மூலப் பொருட்கள் மட்டுமே ஆர்கானிக்’ என்கிறது சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் பொருட்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் `செர்டெக்’ (Certech) அமைப்பு. அதிலும், குழந்தைகளுக்காக விற்கப்படும் ஆர்கானிக் நேச்சுரல் அழகூட்டிகளில் 35 சதவிகிதம் கெமிக்கல் பிரிசர்வேட்டிவ் சேர்க்கப்படுகின்றன என்றும் இந்த அமைப்புத் தெரிவித்திருக்கிறது. 

அழகூட்டும் பொருட்கள்

* `அழகுசாதனப் பொருட்கள் எல்லாம் மேலே பூசுவதற்குத்தான். அவை உடலுக்குள் செல்லாது’ என நினைக்க வேண்டாம். தாலேட் பிளாஸ்டிசைசர்ஸ் (Phthalate Plastcizers) மற்றும் பாரபென்கள் (க்ரீம்கள், ஷாம்பூக்கள் போன்ற அழகுசாதனப் பொருட்கள் கெடாமல் இருக்க சேர்க்கப்படும் பிரிசர்வேட்டிவ்), அதோடு நிறமூட்டுவதற்காகச் சேர்க்கப்படும் நானோ துகள்கள் ஆகியவை உடலுக்குள் உறிஞ்சப்படுவது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அவற்றில் சில மணமூட்டிகளும், சன் ஸ்கிரீனர்களும் விந்தணுக்களின் எண்ணிக்கையைக்கூடக் குறைக்குமாம். அதிகமாக உடலுக்கு ஸ்ப்ரே அடித்துக்கொள்ளும் ஆண்கள் அதைத் தவிர்க்கவும். சன் ஸ்கிரீன் பூசித் திரிபவர்களுக்கு, வைட்டமின் டி குறைபாடும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகமாகும். 

அழகுப் பொருட்கள்

கறுப்பு அழகு. கறுப்பாக இருப்பவர்களை கேலி செய்வதும், இழிவாகப் பார்ப்பதும் அறியாதவர்கள் செய்யும் வேலை. குழந்தைகளுக்கு கறுப்பு என்கிற அழகை ரசிக்கவிடாமல், பௌடர் போட்டு, க்ரீம் பூசி வளர்ப்பது, சிறு வயதிலேயே கறுப்பு நல்லதில்லையோ என்கிற எண்ணத்தை ஏற்படுத்திவிடும். கறுப்பு அழகு, ஆரோக்கியம் என்பதை குழந்தைப் பருவம் முதலே விதைக்கவேண்டியிருக்கிறது. 

அழகு என்பது வெறும் வெளித்தோற்றம் மட்டுமல்ல. குழந்தையின் பாசம், கணவரின் கரிசனம், அம்மாவின் பரிவு, காதலியின் அன்பு எல்லாமே அழகுதான். எனவே அழகுசாதனப் பொருட்கள் விளைவிக்கும் தீங்குகளைப் புரிந்துகொள்வோம். இயற்கையே அழகு என்பதையும் அறிந்துகொள்வோம். 

http://www.vikatan.com/news/health/81569-harmful-effects-of-using-cosmetics.html

 • Like 1
Link to post
Share on other sites
 • Replies 475
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

முதுகுத்தண்டை வலுவாக்கும் முதுகுவலி போக்கும் எளிய யோகா பயிற்சிகள்! #YogaForBackPain     இன்றைக்குப் பெரும்பாலானவர்களுக்கு இருசக்கரவாகன பயன்பாடு அத்தியாவசியமாகிவிட்டது. அடு

யார் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம் ? #MustKnow     நமது உடல் 70 சதவிகிதம் நீரால் ஆனது. மனிதன் சாப்பிடாமல் சில வாரங்கள்கூட உயிர் வாழ முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் மூன்று நா

புற்றுநோய் ஏன், எப்படி..? தவிர்க்கும் வழிமுறைகள்!     செல்களின் கூட்டமைப்பில் உருவானதே மனித உடல். நவரசங்களையும் எண் சுவைகளையும், ஆயற் கலைகளையும் அனுமதிப்பது செல்கள். இந்தக

டானிக் சாப்பிடலாமா... எந்த உணவில் எந்தச் சத்து கிடைக்கும்? நலம் நல்லது-78 #DailyHealthDose

டானிக் - நலம் நல்லது

இதய ஆரோக்கியம், மூளைத்திறன் மேம்பாடு, கிட்னி நலம், இரும்புச்சத்து... என எல்லாவற்றுக்கும் தனித்தனியே கடைகளில் கிடைக்கிறது டானிக்! இவற்றை வாங்கிச் சாப்பிட்டு உடல்நலத்தோடு வாழ விரும்புகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிவருகிறது. இவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் `டானிக்’ வியாபாரம் சக்கைபோடுபோடுகிறது என்பதுதான் வருத்தத்துக்குரிய செய்தி. உடல்மீது லேசான அக்கறையும், உறுத்தலும், அதிகப் பயமும் கொண்ட நடுத்தர வர்க்கத்தினர்தான் இந்த வியாபாரத்தின் இலக்கு. இப்போது பலரின் மாத மளிகைச் சாமான் பட்டியலில் உயிர்ச்சத்து மாத்திரைகளும், இரும்புச்சத்து டானிக்குகளும் இடம்பெறத் தொடங்கிவிட்டன. இப்படி டானிக்காகச் சாப்பிடாமல், பயறுகள், காய்கறி, பழ வகைகளில் இருந்து  இயற்கையாகவே கிடைக்கும் சத்துக்களைப் பெறலாம். சரி... எந்த உணவில் எந்தச் சத்து கிடைக்கும்? பார்க்கலாமா?

காய்கள்

எல்லோருக்கும் எல்லாவற்றிலும் அவசரம்... இப்படிப்பட்ட ஒரு சூழலில் பி-காம்ப்ளெக்ஸ் மாத்திரைகளையோ சத்து தரும் டானிக்குகளையோ வாங்கிச் சாப்பிடுவது தவறில்லை என்றுகூடத் தோன்றலாம். அவசியம் இல்லாமல் எடுத்துக்கொள்ளும் இந்த மருந்துகள் ஆபத்தைத்தான் விளைவிக்கும். எனவே, இயற்கையாகக் கிடைக்கும் சத்துகளை உடலுக்குக் கொடுப்பதுதான் சிறந்தது. 

இரும்புச்சத்து 

பலராலும் அதிகமாக வாங்கிப் பயன்படுத்தப்படுவது இரும்புச்சத்து டானிக்தான். ரத்தசோகையைப் போக்க உதவும் அவசியமான இந்த டானிக், தேவையில்லாமல் அதிகமாகப் பயன்படுத்தப்படும்போது, இரைப்பைக் குடலில் புண்களையும், மலச்சிக்கலையும், சில நேரங்களில் ஈரலில் பாதிப்பையும்கூட ஏற்படுத்திவிடும். `குழந்தைகளுக்கு அவசியமின்றி இரும்புச்சத்து டானிக் கொடுப்பது அவர்களின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடும்’ என எச்சரிக்கிறது நவீன மருத்துவம். 

நம் அன்றாட உணவில் ஏற்கெனவே இரும்புச்சத்து நிறைய இருக்கிறது. இந்தச் சத்தை உடல் கிரகிக்க வைட்டமின் சி சத்து தேவை. பாலீஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசியில் இரும்புச்சத்து கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம். ஆனால், கம்பு அரிசியில் இது அதிகமாக இருக்கிறது. குதிரைவாலி அரிசி, வரகு, சாமை ஆகியவற்றிலும் இது அதிகம். இந்தச் சிறுதானியங்களில் எலுமிச்சை சாதம் செய்து சாப்பிடுவது, வைட்டமின் சி சேர்த்து இரும்புச்சத்து மாத்திரை சாப்பிடுவதற்குச் சமமானது. 

முருங்கை

முருங்கைக்கீரை சூப் அல்லது ரசம், நாட்டுக்கோழியின் ஈரல், நிலக்கடலை மிட்டாய், நெல்லிக்கனிச் சாறு, உலர்ந்த திராட்சை இவை அனைத்திலும் இரும்புச்சத்து உண்டு. இவற்றையெல்லாம் சாப்பிடுகிறவர்கள் இரும்புச்சத்துக்கு என தனியாக டானிக்கோ, மருந்தோ வாங்கிச் சாப்பிடத் தேவையில்லை. 

துத்தநாகச்சத்து (Zinc) 

குழந்தைகளுக்கான சத்து டானிக்குகளில் வெகு பிரபலமானது நாகச்சத்து. இது, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்; புற்றுநோயைத் தடுக்கும்; ஹார்மோன் சுரப்பைச் சீராக்கும் என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இந்த நாகச்சத்து நம் ஊர் நிலக்கடலை, சோயா, பீன்ஸ், மாதுளம்பழம், கோழி மற்றும் ஆட்டு ஈரல், பூசணி விதை, தர்பூசணி விதை, வெள்ளரி விதை ஆகியவற்றில் ஏராளமாக உள்ளது. 

தர்பூசணி

பூசணி, தர்பூசணியைச் சாப்பிடும்போது அல்லது சமைக்கும்போது அவற்றின் விதைகளைத் தூர எறிந்துவிடக் கூடாது. அவற்றை எடுத்து, உலர்த்தி வைத்து அவ்வப்போது சாப்பிட்டுவந்தால், நாகச்சத்து தாராளமாகக் கிடைக்கும். `இப்படி இயற்கையாகக் கிடைக்கும் உணவில் சாப்பிடாமல், டானிக்காக வாங்கி அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் நம் உடலுக்கு நல்லது செய்யும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு குறையும். மற்ற வைட்டமின்கள் உட்கிரகிக்கப்படுவதைக் குறைத்து, குழந்தைகளுக்கு சளிப்பிடிக்கும் தன்மையைக் கொடுத்துவிடும்’ என எச்சரிக்கிறது உலகின் பிரபல மருத்துவமனையான மேயோ கிளினிக். 

வைட்டமின் ஆபத்து!

வைட்டமின்கள், மிக அவசியமான உணவுக் கூறுகள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், சோர்வு நீங்க வேண்டும், தோல் மினுங்க வேண்டும், மூளைத்திறன் மேம்பட வேண்டும் என்பதற்காக மூன்று வேளையும் இஷ்டத்துக்கு வைட்டமின் மாத்திரைகளைச் சாப்பிடுவது உயிர்ச் சத்தாகாமல், உயிருக்கு உலைவைக்கும் ஒன்றாகிவிடும். அளவுக்கு அதிகமான `ஃபோலிக் அமிலம்’ எனும் வைட்டமின் பி9, மலக்குடல் புற்றுநோயை ஏற்படுத்திவிட வாய்ப்பு உண்டு. அளவுக்கு அதிகமாக வைட்டமின் சி சத்தை மருந்தாக எடுத்துக்கொண்டால், சிறுநீர்ப்பை புற்று வரவும் வாய்ப்பு உண்டு. ஆனால், இந்த இரு வைட்டமின்களையும் இயற்கையாக அளவோடு சாப்பிட்டால், புற்றுநோயைத் தடுக்கக்கூடிய ஆற்றலுடன் செயல்படும். 

வைட்டமின் சி நிறைந்தவை

புரதச்சத்துமிக்க பானமோ, மூளைக்கு பலம் தரும் டானிக்கோ சத்துக்களை மருந்தாகச் சாப்பிட வேண்டாம். எந்த உணவில் எந்தச் சத்து கிடைக்கும் என்பதை தெரிந்துகொண்டு அவற்றைச் சாப்பிடுவோம். உடல்நலத்தை என்றென்றும் நம் வசப்படுத்துவோம். 

http://www.vikatan.com/news/health/81687-can-we-drink-tonic-which-foods-are-more-nutritional.html

 • Like 1
Link to post
Share on other sites

மனச்சோர்வு... மனஅழுத்தம்... வழிவிடவேண்டாம்! நலம் நல்லது-79 #DailyHealthDose

மனச்சோர்வு

மனச்சோர்வு, மனஅழுத்தம் இவை இரண்டும் இன்று புற்றுப்போல ஒவ்வொருவருக்குள்ளும் வளர்ந்துவருகின்றன. காரணம், நெரிசலும் இரைச்சலுமான வாழ்க்கைமுறை. இது பின்னாளில் முழு மனநோயாக உருவாக வாய்ப்பும் உண்டு. அது மட்டுமல்ல... காய்ச்சல், தலைவலி, புற்றுநோய் என மற்ற நோய்களை உருவாக்க, ஊக்குவித்து வளர்க்க மனஅழுத்தம் காரணமாகிவிடும். எனவே, மனச்சோர்வு... மனஅழுத்தம் இரண்டும் மிகத் தீவிரமாக அணுகவேண்டிய பிரச்னைகள். 

மனச்சோர்வு

மூட்டுவலிக்கு முடக்கத்தான் தோசை, மாதவிடாய் வலி நீக்க உளுந்தங்களி, மைக்ரேன் தலைவலிக்கு இஞ்சி ரசாயனம்... இப்படி மருந்துகள் இருக்கின்றன. ஆனால், மனவலியைப் போக்கத்தான் மருந்து இல்லை. பணி நெருக்கடி ஒரு பக்கம், குட்டியூண்டு பாராட்டு, சுமையை இறக்கிவைக்க உதவும் அரவணைப்பு, மருந்தாகும் புன்னகை, நம் கவலைகளைக் காது கொடுத்துக் கேட்கும் பொறுமை... இவை இல்லாதது மறுபக்கம். இதன் காரணமாக, மனதை அழுத்தும் பாறாங்கல்லின் கனம் அதிகமாகிக்கொண்டே போகிறது. 

மனஅழுத்தம்தான் காதலையும் கருத்தரிப்பையும் தாமதிக்கச் செய்கிறது. ஆண்களின் பிரத்யேக ஹார்மோனான டெஸ்டோஸ்டீரான், லேடிக் (Leydic Cells) செல்களில் இருந்து ஊற வேண்டும். ஆனால், இந்த மாற்றம் மனஅழுத்தத்தால் மந்தப்பட்டு விந்தணு உற்பத்தி குறைவதும், உடலுறவுக்கான நாட்டத்தைக் குறைப்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு சினைமுட்டை சரியான நாளில் வெளியேறி, கருப்பையை நோக்கி வருவதைத் தாமதப்படுத்தி, கருத்தரிப்பில்கூட சிக்கலை ஏற்படுத்துகிறது மனஅழுத்தம். 

மனஅழுத்தம்

பெண்களுக்கு மனஅழுத்தத்தால் ஏற்படும் கருத்தரிப்பு கோளாறு மற்றும் சினைமுட்டைப் பிரச்னைகள் இரண்டுக்கும் எள் சிறந்த மருந்து. எள்ளெண்ணெய் (நல்லெண்ணெய்) தடவிய உளுந்தங்களியும், தொலி உளுந்தும் புழங்கல் அரிசியும் சேர்த்துச் சமைத்த உளுந்தஞ்சோறும், அதில் பிசைந்து சாப்பிட எள்ளுத் துவையலும் பெண்களுக்கான ஆரோக்கிய உணவுகள். ஆண்மையைப் பெருக்கும் ஆங்கில மருந்துகளில் பரவலாகச் சேர்க்கப்படும், `எல்-அர்ஜினைன்’ (L-Arginine) எனும் அமினோ அமிலமும் புரதமும் எள்ளில்தான் அதிகம் உள்ளன. எனவே, ஆண்களும் எள்ளை உணவில் சேர்த்து, அடிக்கடி சாப்பிடலாம். மனச்சோர்வு, மனஅழுத்தம் தொடர்பான பிரச்னைகளில் எள்ளும் உளுந்தும் மட்டும் உதவாது. மனஅழுத்தத்தை நீக்கும் புரிதலையும் பொறுமையையும் வளர்க்க வேண்டும். இன்றைய இன்ஸ்டன்ட் உலகில் இந்த இரண்டுக்குமான மெனக்கெடலுக்குப் பலருக்கு நேரம் இருப்பதில்லை என்பதே உண்மை. 

`காளாஞ்சகப்படை’ என அழைக்கப்படும் சோரியாசிஸ், மனஅழுத்தத்தால் பெருகும் முக்கியமான தோல் நோய்களில் ஒன்று. வெட்பாலை மரத்தின் இலையை மட்டும் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் ஊறப்போட்டு, இரண்டு நாட்கள் வெயிலில் வைத்து எடுத்தால், எண்ணெய் அடர்ந்த கருநீல நிறமாகும். அந்த எண்ணெயை சோரியாசிஸ் பாதித்த சருமத்தில் வெளிப் பூச்சாகப் பூசினால், இந்த நோயை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியும். இதை, மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆராய்ந்து உறுதிப்படுத்தியுள்ளது. மருந்துடன் மனசையும் லேசாக்கினால் மட்டுமே சோரியாசிஸ் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். 

மனச்சோர்வு

மனச்சோர்வு, இளம் தலைமுறையினர் எதிர்கொள்ளும் முக்கியமான தொல்லை. `கேஸ்ட்ரோஈஸோபேஜியல் ரெஃப்ளெக்ஸ் டிசீஸ்’ (Gastroesophageal Reflux Disease - GERD) - வயிற்று வலி வந்து, உணவை எதுக்களித்து, தொண்டையில் சமயங்களில் புண்ணையும் உண்டாக்குவது இந்த குன்ம நோய். அடிக்கடி ஆர்ப்பரித்து வெம்பும் மனம் இதற்கு ஒரு முக்கியமான காரணம். காரமான எண்ணெயில் பொரித்த உணவையும் கிழங்குகளையும் சில மாதங்கள் விட்டுவிட்டு, இட்லிக்கு பிரண்டைச் சட்னி, இடியாப்பத்துக்கு தேங்காய்ப்பால், மோர், சீரகத் தண்ணீர், இரவில் வாழைப்பழம்... என உணவைத் திட்டமிடுங்கள். 

`மலக்குடலுக்குள் வரும் சாதாரண பாலிப் (Polyp), மார்பகத்திலும் கர்ப்பப்பையிலும் வரும் சாதாரண நார்த்தசைக் கட்டிகள்... இவை, எப்போதும் நெருக்கடியிலும் மனச்சோர்விலும் இருப்பவர்களுக்கு புற்றுநோயாக மாற வாய்ப்பு இருக்கிறது’ என்கிறது இன்றைய அறிவியல். மனச்சோர்வில் இருந்து விடுபட மூச்சுப் பயிற்சியும் பிராணாயாமமும் மிக மிக அவசியம். 

வாழ்வில் கடந்துபோன ஏக்கமும், நேசமும், கோபமும், வலியும் வாழ்வின் பல பரிமாணங்களைக் காட்டி மன எழுச்சியைத் தரும். ஆனால், இன்றைய தலைமுறையோ இப்படி எதையும் கடக்காமல், பணமும் பணம் சார்ந்த அசைவுகளுமாக வாழும் தட்டையான நகரத்து ஓட்டங்களுக்குள் சிக்கியிருக்கிறது; சிக்கவிடப்பட்டிருக்கிறது. அதை மீட்டெடுக்கவேண்டியது அவசியம். மனச்சோர்வு, மனஅழுத்தம் போக்க இதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். 

http://www.vikatan.com/news/health/81825-dont-let-depression-stress-ruin-your-life.html

 • Like 1
Link to post
Share on other sites

வெள்ளைச் சர்க்கரை என்கிற விபரீதம்! நலம் நல்லது-80 #DailyHealthDose

நலம் நல்லது

தொழில்நுட்பம் `வளர்ச்சி’ என்ற பெயரில் உருவாக்கியதுதான் வெள்ளைச் சர்க்கரை என்கிற விபரீதம். எப்படி புகை, மதுவைத் தடைசெய்யப்படவேண்டிய பட்டியலில் வைத்திருக்கிறோமோ, அப்படி வைக்கவேண்டிய பொருள் சர்க்கரை. ஆனால், இதுவோ உணவு அரசியலில் அரிசிக்கும் கோதுமைக்கும் அடுத்த இடத்தைப் பிடித்துவிட்டது. உலக அளவில் சர்க்கரை நோயாளிகள் பட்டியலில் இந்தியர்களை முதல் இடத்துக்குத் தள்ளியதிலும், பெரும்பாலான பெண்களுக்கு வரும் ஆஸ்டியோபொரோசிஸ் நோய்க்கும், பல புற்றுநோய்கள் வளர்வதற்கும் இந்த வகைச் சர்க்கரை அளித்த பங்கு அளவில்லாதது. 

வெள்ளைச் சர்க்கரை

நியூட்டனின் புவியீர்ப்புவிசை சிந்தனையிலும், `கறந்த பால் முலை புகா; கடைந்த வெண்ணெய் மோர் புகா; விரிந்த பூ, உதிர்ந்த மலர் மரம் புகா’ என எழுதிய சிவவாக்கியரின் சிந்தனையிலும், அறிவியலே அடித்தளம். நீயூட்டன் தொடங்கிய புள்ளிக்கு நியூகோமனும் ஜேம்ஸ் வாட்டும் வரைந்த கோலங்கள்தாம் நீராவி இன்ஜினில் இருந்து தொழில் புரட்சி வரைக்குமான வளர்ச்சி. அந்த தொழில் வளர்ச்சிதான் இந்தச் சர்க்கரை உருவாக்கக் காரணமானது. 

தயாரிப்பு முறை

இனிப்பையோ, இனிப்பு உணவுகளையோ நாம் சாப்பிடாதவர்கள் அல்ல. விதவிதமாகச் சாப்பிட்டிருக்கிறோம். தஞ்சை நாயக்க மன்னர் விஜய ராகவ நாயக்கர் எழுதிய `இரகுனாதப்யுதய’ நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் இனிப்புப் பட்டியல் அதற்குச் சிறந்த உதாரணம். கஜ்ஜாயம், அதிரசம், மோதகம், சாரத்லு, மிகடசட்லு (பாசந்தி), பன்னீர் பாயசம், சீரகப் பாயசம், குளிர் பாயசம், திரட்டுப் பால், சீகரணி, தேங்காய்ப்பால்... என லாலா கடையில்கூட கிடைக்காத இனிப்புகள் ஒரு வேளை உணவில் பரிமாறப்பட்டுள்ள குறிப்பு உள்ளது. அவை அத்தனையும் அப்போது வெள்ளைச் சர்க்கரையில் அல்ல... வெல்லத்திலும், பனைவெல்லத்திலும், தேனிலும்தான் செய்யப்பட்டிருந்தன. எந்த் வகையிலும் இந்த இயற்கை இனிப்புக்கு மாற்றாக வருவதற்குத் தகுதியே இல்லாத இந்தச் சர்க்கரை, தொழில்நுட்ப உதவியால் ஒட்டுமொத்தமாக நம் மீது திணிக்கப்பட்டுவிட்டது. 

வெள்ளைச்சர்க்கரை ஆபத்தா

ஏன் தேவையில்லை?

நம் உடல், தனக்குத் தேவைப்படும் சர்க்கரையை தினையில் இருந்தோ, அரிசியில் இருந்தோ, கிழங்கில் இருந்தோ, கீரையில் இருந்தோ எடுத்துக்கொள்ளும். எனவே, தனியே வெள்ளைச் சர்க்கரை என்ற ஒன்று தேவையற்றது. ஆனால் உண்மையில், இன்றைக்கு ஒவ்வொருவரும் கிட்டத்தட்ட நேரடியாகவோ, மறைமுகமாகவோ தினமும் 30 முதல் 40 கிராம் வரை வெள்ளைச் சர்க்கரையைச் சாப்பிடுகிறோம். 

கரும்பை, சர்க்கரை ஆலைக்கு மட்டுமே தர வேண்டும் என வெல்லத்தை ஒழித்து, வெள்ளைச் சர்க்கரை ஆட்சி நடத்த தொழில்நுட்பம் வழிவகுத்துவிட்டது. எத்தனையோ பேருக்கு வேலைவாய்ப்பையும், சாப்பிடுகிறவர்களின் உடலுக்கு நன்மையையும் தரக்கூடிய வெல்லம் ஓரம் கட்டப்பட்டுவிட்டது. அதற்குக் காரணங்களாக, `வெல்லம் சீக்கிரம் கெட்டுவிடும். நீரை உள்வாங்கும். உற்பத்தி தரமாக இல்லை’ ஆகியவை சொல்லப்படுகின்றன. ஆனால், உண்மையான காரணம் இதன் பின்னணியில் இருக்கும் உணவு அரசியலும், ஆல்கஹால் அரசியலும்தான். 

சர்க்கரை

இன்று இட்லிக்குப் பதிலாக சோள அவல் புகுத்தப்படுவதும், வடநாட்டு கோதுமைச் சப்பாத்திக்கு மாற்றாக வெள்ளை பிரெட் வருவதும், கனிமச் செறிவு நிறைந்த கல் உப்பை விரட்டிவிட்டு, `அயோடைஸ்டு சோடியம் குளோரைடு’ எனும் ரசாயனத்தை `சாப்பாட்டு உப்பு’ எனத் திணிப்பதும் தொழில்நுட்ப அறிவியல் போர்வையில் உள்ளே நுழைந்திருக்கும் வணிகம்தானே தவிர, வேறு என்ன?

இங்கே `வளர்ச்சி’ பரிணாமமாக அல்லாமல், வன்முறையாகத் திணிக்கப்படுகிறது. காப்புரிமைகளை கடைசி வரை காசாக்க, மனிதம் முற்றிலும் மறுக்கப்படுகிறது. எதிர்த்துக் கேள்வி கேட்கும் திறன் உருவாகாதபடி, நம் கல்வியை அடிமை முறையில் வடிவமைத்துவிட்டார்கள். அன்றைய கிழக்கு இந்திய கம்பெனியை வெள்ளந்தியாக வரவேற்றதுபோல, வெள்ளைச் சர்க்கரையையும் வரவேற்று வீட்டுக்குள் உட்காரவைத்துவிட்டோம். வெள்ளைக்கு அடிமையாகிவிட்டோம். அதன் மூலம், பல தொற்றா நோய்கள் நம்மைத் தாக்க வழிவிட்டுவிட்டோம். 

வெள்ளைச் சர்க்கரை என்பது விபரீதம். ஆகவே அதைத் தவிர்ப்பதே ஆரோக்கியத்துக்கு அழகு. 

நலம் நல்லது முடிவுரையாகச் சில வரிகள்...

மனிதனின் உலகில் பல்வேறு விந்தைகளை, உடலின் சூட்சுமங்களை அறியும் ஆற்றலும் முனைப்பும் அளப்பரியது. பிக்காத் துகள் வடிவில் உடம்பில் உள்ள புரதக் கூறில் ஒளிந்திருக்கும் முப்பாட்டனின் கழுகுமூக்கு நுனிக்கான காரணம் முதல் எறும்புக்கண்ணில் எட்டாயிரத்தில் ஒரு பங்காயிருக்கும் வைரஸ் நம் குடலுள் ஒளிந்துகொண்டு உன் புத்திசாலித்தனத்துக்கும் அறியாமைக்கும் காரணமாயிருப்பதுவரை இன்றைய மருத்துவ அறிவியலின் கண்டுபிடிப்புகள் அளப்பரியது. 

ஆனால், கருங்குளத்து வற்றிப்போன கம்மாயின் ஓரத்தில் நிற்கும், வருசத்துக்கு 100 நாள் கூலியாக மாற்றப்பட்ட விவசாயி, குப்பனின் சாதாரணச் சளிக்கும் இருமலுக்கும் கூடச் சில நேரத்தில் சரியான மருந்துதரமுடியாத போது அளப்பறிய அறிவியல் இருந்து என்ன பயன்? எனத் தோன்றுகிறது. அதே சமயம் மூன்று நாளாய் நீடிக்கும் இருமலுக்குப் பின்னால், நுரையீரலின் புற்று ஒட்டியிருப்பதையும், லேசானத் தலைவலிக்கு ஆசுவசப்படுத்தும் அரவணைப்பில் மூளைக்குள் முக்கிப்பிதுங்கும் கிளையோமாகட்டியும் அறிய முடியாத அவசரத்தில் நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம் . 

தலைவாழை இலையில் இனிப்புப் பரிமாறியக் காலம் மாறிப்போய்ச் சர்க்கரை மாத்திரையான மெட்பார்பினை முதலில் இலையில் பரிமாறும் வல நிலைக்கு ஏற்கனவே வந்து விட்டோம். கருத்தரித்த சந்தோஷத்தில். வளைகாப்பு நடத்திக் கை நிறைய வளையல் ஒலிக் கேட்டு மகிழ வேண்டிய தருணத்தில் "இப்பவுமா இன்சுலின் போட வேண்டும்?" எனச் 'சினையுற்றக் காலத்துச் சர்க்கரை நோய்' எனும் புது வரவில் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர்.

என்ன நடக்கின்றது இங்கே? ஏன் இத்தனை அவசர நோய்கள் அவசரக் கதியாய்? "இளமையில் கல்லையும் செரிக்கும் வயது" என்ற நிலை மாறிப்போய் .. இளமையில் எதைத் தின்னால் பித்தம் தெளியும்? எனும் குழப்ப நிலை வந்து குடியேறிய. அவலம் ஏன்? 

பயிராக்கலில் துவங்கிப் பாதுகாப்பதில் பக்குவப்படுத்தலில் பதப்படுத்துவதில் பரிமாறப்படுவதில் என அத்தனையிலும் வணிக வன்முறை. "உன் வாயில் ஊட்டப்படும் ஒரு கவளச் சோற்றில் ஒரு பருக்கைக் காசு காப்புரிமையாய் என் வங்கிக்கு வந்து கொண்டே இருக்க வேண்டும்; என் புன்னகைக்கு நீ இக்குப்பையைச் சுவைத்தாக வேண்டும்;" என நம் பசிக்கும் ருசிக்கும் பின் உள்ள வணிகம் அறமற்றதாய் ஆகிப்போனதில்

"உணவெனப்படுவது நிலத்தொடு நீரே" எனப் புறநானூற்றுக் கிழவன் பாடிய வரிகளின் சூழல் காப்புச் சிதைந்து போனது. "அடிச்சட்டி ஆனைப் போல ஏன் ராசா இதுதாண்டாக் கடசி உருண்டை; வாங்கிக்கோடாச் செல்லம்" என நம் குழந்தையை ஒக்கலில் வைத்து ஊட்டிய உணவின் வளமும் நலமும் ஒட்டுமொத்தமாய் ஓரங்கட்டுப்பட்டுவிட்டது.

இனியேனும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். அன்றி விடுதலைக்குக் காந்தி விடுத்த அறைகூவலான உப்புச் சத்தியாகிரகம் போல் உணவுச்சத்தியாகிரகம் இக்காலத்தின் கட்டாயம். அந்நிய உணவு அமிர்தமாய் இருப்பினும், நமக்கு வேண்டாம்.உள் நாட்டுத் தானியங்களை, உள்ளூர்க் கனிகளை, நம் நிலத்துப் புலாலை நம் மரபுத் தின்பண்டங்களை உண்டு உறுதியாய் நலமாய் வாழ்ந்திட முடியும். நம் பாட்டனும் பாட்டியும் அப்படித்தானே இருந்தார்கள். இரசாயனக் கலப்பால் நம் உடலையும்  நம் மண்ணையும் மாசுபடுத்தும் வணிகத்தை உற்றுப்பார்த்து ஒதுக்குவோம். நமக்கு மட்டுமல்ல.. நாளை தலைமுறைக்கும் நாளைய நம் இந்தியாவுக்கும் உணவு நல்லது வேண்டும்!

http://www.vikatan.com/news/health/82086-why-is-white-sugar-bad-for-your-health.html

 • Like 1
Link to post
Share on other sites
 • 2 weeks later...

ஆப்பிள் ஆயுளைக் கூட்டும்... ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும்!

யிற்றுவலி, தலைவலி, அஜீரணம் தீர வேண்டுமா... கொழுப்பைக் கரைக்க வேண்டுமா? எல்லா உபாதைகளையும் சமையல் அறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டே கஷாயம் செய்து தீர்த்துவிடுவார்கள் நம் பாட்டிமார்கள். அதேபோல இதுபோன்ற பிரச்னைகளுக்குப் பல வெளிநாட்டினருக்கு இன்ஸ்டன்ட் கஷாயமாகப் பயன்படுவது ஆப்பிள் சிடர் வினிகர்தான். ஆப்பிள் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர்தான் ஆப்பிள் சிடர் வினிகர். வெளிநாட்டில் அனைத்து வீடுகளிலும் அத்தியாவசியமாக வைத்திருக்கும் ஒன்று இது. நம்மூர் சூப்பர் மார்க்கெட்டில்கூட நாம் இதைப் பார்த்திருப்போம். ஆனால், பலரும் இதை எதற்குப் பயன்படுத்துவது என்று தெரியாமல் விட்டிருப்போம். ஆப்பிள் ஆயுளைக் கூட்டும் என்றால், ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆன்டிபயாடிக் பண்புகள் நிறைந்த இந்த ஆப்பிள் சிடர் வினிகர் தரும் பலன்கள் ஒன்று, இரண்டல்ல... ஏராளம்! அவை...

ஆப்பிள் 

* ஆப்பிள் சிடர் வினிகரில், `பெக்டின்’ (Pectin) என்னும் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. வயிற்றுப்போக்கை சரிசெய்யக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. நீங்கள் பருகும் எலுமிச்சைச் சாற்றிலோ, ஆரஞ்சு சாற்றிலோ ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு சரியாகும்.

* இரைப்பை அழற்சி, வீக்கம், அஜீரணம் ஆகியவற்றையும் குணப்படுத்தும். இது குடலின் இயக்கங்களை ஊக்குவிப்பதால் மலச்சிக்கல் நீங்கும். வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் 5 மி.லி ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து, சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர் குடித்துவர, உணவு எளிதில் செரிமானம் ஆகிவிடும் .

* இது மூக்கடைப்பையும் சரி செய்யும். அத்துடன் மூக்கிலுள்ள மியூகஸை உடைத்து சைனஸைக் குறைக்கும். வெதுவெதுப்பான நீரில் 5 மி.லி அளவுக்கு வெறும் ஆப்பிள் சிடர் வினிகரை மட்டும் கலந்து குடித்தால் சைனஸ் குறையும்.

* அமில இயல்புகளைக்கொண்ட ஆப்பிள் சிடர் வினிகர் வாய் மற்றும் ஈறுகளில் மறைந்துள்ள கிருமிகளை அழித்து, வாய் துர்நாற்றத்தைப் போக்கி, சுவாசப் புத்துணர்வைத் தரும். காலை எழுந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீரில் 5 மி.லி ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து 10 நொடிகள் வரை வாய் கொப்பளிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து ஐந்து முறை செய்யவேண்டும். இப்படிச் செய்துவர, கிருமிகள் அழிவதோடு, பற்களிலுள்ள கறைகள் நீங்கி வெண்மையாகப் பளிச்சிடும். ஆனால், இதை 15 நாட்களுக்கு ஒரு முறை செய்தால் போதுமானது .

ஆப்பிள் சிடர் வினிக 

* இதிலுள்ள கிருமி நாசினி பண்புகள் தோல் மற்றும் நகங்களிலுள்ள கிருமிகளையும் பூஞ்சைகளையும் அழிக்கக்கூடியவை. ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்த வெதுவெதுப்பான நீரில் கால்களை 15 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் சுத்தமான நீரால் கால்களைக் கழுவிவர கால் மற்றும் பாதத்தில் உள்ள பூஞ்சைகள் அழிந்துவிடும்.

* முகத்தில் உள்ள கருமை, கரும்புள்ளிகள் ஆகியவற்றைச் சரிசெய்து, முகத்தைப் பளபளப்பாகவும் ஈரப்பதத்துடனும் வைத்திருக்க உதவும். தண்ணீரில் ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து அதைச் சிறிய பஞ்சால் முகத்தில் ஆங்காங்கே ஒற்றி எடுத்து, 10 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவினால், முகம் பளபளப்பாகவும் சுருக்கங்கள் வராமலும் தடுக்கும். 

* இது, தலையிலுள்ள பொடுகை நீக்குவதோடு, அடர்த்தி இல்லாத முடியை அடர்த்தியாக்கவும் உதவும். தலையில் ஒவ்வொரு பகுதியாக வகுடு எடுத்து அங்கே  தண்ணீரில் நனைத்த ஆப்பிள் சிடர் வினிகரை அப்ளை செய்ய வேண்டும். பின்னர் வெந்நீரில் நனைத்த துண்டை நன்கு பிழிந்து, தலையைச் சுற்றிக் கட்ட வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து தலையை அலச, முடி உதிர்வது கட்டுப்படும்.

* சளி, இருமல், தொண்டைப் பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வை அளிக்கும். ஒரு சிறிய துண்டு இஞ்சி, இரண்டு பல் பூண்டு, ஒரு கிளாஸ்  வெதுவெதுப்பான நீர், ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து குடிக்கலாம். நல்ல பலன் கிடைக்கும்.

ஆப்பிள் சிடர் வினிகர் 

* இதிலுள்ள அசிடிக் ஆசிட் (Acetic Acid) உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை சரிப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கத் துணைபுரிகிறது.
தினமும் இரண்டு லிட்டர் நீரில் 30 மி.லி ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து அடிக்கடி குடித்துவர, அதிகப்படியான நச்சுக்கள் மற்றும் கொழுப்புகள் வெளியேறும்.

கவனம்...

ஆப்பிள் சிடர் வினிகர் பல நன்மைகளைத் தந்தாலும், அளவுக்கு அதிகமாக உபயோகிப்பதால் தலைவலி, ஏப்பம், வயிற்றுப்போக்கு, உணவுக்குழாய் மற்றும் தொண்டையில் எரிச்சல் ஏற்படும். நாள் ஒன்றுக்கு ஒரு டீஸ்பூன் அளவுக்கு மேல் வேண்டாம். தண்ணீர் மற்றும் ஜூஸ்களில் கலந்து குடிக்கும்போதும், முகத்தில் பூசும்போதும் அதன் வீரியம் குறைந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. அமிலத்தன்மை அதிகமாக இருப்பவர்கள், மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக்கொள்ளலாம்.

http://www.vikatan.com/news/health/82939-amazing-benefits-of-apple-cider-vinegar.html

Link to post
Share on other sites

‘சமோசா... வேண்டவே வேண்டாம்!’ மருத்துவம் சொல்லும் காரணங்கள்

எல்லா டீக்கடைகளிலும் தவறாமல் காணப்படும் ஒரு நொறுக்குத்தீனி, சமோசா. `மூணு பத்து ரூபா’ என குட்டியூண்டு சைஸில் பேப்பர் கவரில் விற்கப்படுவது தொடங்கி, உள்ளங்கைகொள்ளாத சைஸ் வரை விதவிதமான வகைகள் உண்டு. சினிமா தியேட்டர்களில் இடைவேளையில் சமோசா கடித்து, டீ குடிக்காத தமிழ் ரசிகர்கள் வெகு குறைவு. மதுரைப் பக்கம் வெதுவெதுப்பான சூட்டில் வெங்காய மசாலா வைத்துப் பரிமாறப்படும் `சமோசா’, அலாதிச் சுவைகொண்டது. சென்னை சௌகார்பேட்டை பகுதியில் மொறுமொறு சுவையுடன் பச்சைச் சட்னி, சாஸுடன் கிடைக்கும் வட இந்திய வகைக்கு, பிரத்யேக ரசிகர்கள் இருக்கிறார்கள். சென்னையில் பல இடங்களில் சமோசா-சுண்டல் காம்பினேஷனுக்கு மயங்கிக்கிடக்கிறவர்கள் உண்டு. `எல்லாம் சரி... இது, நம் உடலுக்கு நல்லதுதானா?’ என்கிற கேள்வியையும் கூடவே கேட்கவேண்டியிருக்கிறது.  

சமோசா 

‘சமோசாவும் நம் ஆரோக்கியமும்’ என்கிற பக்கத்துக்குப் போவதற்கு முன்னால், இதன் வரலாற்றை மேம்போக்காக ஒரு புரட்டுப் புரட்டிவிடலாம். `சமோசா’,  மட்டுமல்ல... ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு பகுதியிலும் அழைக்கப்படும் இதன் பெயர், மலைப்பைத் தருகிறது. சமஸ்கிருதத்தில், `கட்டக்கா’, பெங்காலியில் `ஷிங்காரா’, உஸ்பெஸ்கிஸ்தானில் `சொம்சா’, அரபியில் `சம்புசாக்’, பர்மிய மொழியில் `சமோஷா’! 

சப்பாத்திக்கு இடுவது மாதிரி, கோதுமை மாவை (மைதாவும் இப்போது சேர்க்கப்படுகிறது) இட்டு, அதில் மசாலா வைத்து முக்கோணமாக மடித்துப் பொரித்து எடுத்தால், அது சமோசா. சைவம் எனில் மசாலாவில் வேகவைத்த உருளைக்கிழங்கு, பட்டாணி, பச்சைமிளகாய், வெங்காயம், இன்னும் சில வாசனைப் பொருள்கள் கலந்தும் மசாலா தயாரிக்கிறார்கள். அசைவம் எனில், இறைச்சியில் செய்யப்பட்ட மசாலா! இந்தியாவில் பெரும்பாலும் சைவ சமோசாதான் புழக்கத்தில் இருக்கிறது. 

சம்சா 

கடந்த எட்டு நூற்றாண்டுகளாக தெற்காசிய சமையலில் சமோசா வெகு பிரபலம். என்றாலும், `இதன் பூர்வீகம் எது?’ என்றால், மத்தியக் கிழக்கு நாடுகளைத்தான் காட்டுகிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். ஈரானிய வரலாற்றியலாளர் அபுல்ஃபாஸல் பேஹாக் (Abulfazl Beyhaqi), `தாரிக்-ஏ பேஹாக்’ (Tariq-e Beyhaqi) என்ற வரலாற்று நூலில், 10-ம் நூற்றாண்டுக்கு முன்னரே சமோசா இருந்ததைக் குறிப்பிட்டிருக்கிறார். 13, 14-ம் நூற்றாண்டில்தான் வியாபாரிகள் மூலமாக இந்தியாவுக்குள் மூக்கை நுழைத்திருக்கிறது சமோசா. அப்படி அல்ல... டெல்லி சுல்தான்களுக்காக சமைக்க வந்த மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த சமையல்காரர்கள்தான் இதை அறிமுகப்படுத்தினார்கள் என்றும் சொல்கிறார்கள். 

டெல்லி சுல்தான்கள் சபையில் இருந்த அரசவைக் கவிஞர் அமிர் குஸ்ரோ (Amir Khusro), உலகைச் சுற்றிவந்த யாத்ரீகர் இபின் பதூதா (Ibn Battuta)... எனப் பலரும் சமோசா பற்றிய குறிப்பை எழுதிவைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். முகமது பின் துக்ளக்கின் அரண்மனைச் சமையலில் சமோசாவுக்கும் இடம் இருந்ததாகச் சொல்கிறார் இபின் பதூதா. 

ஆரம்பத்தில் படைவீரர்கள், வியாபாரிகள், ஊர் ஊராகப் பயணம் செய்கிறவர்கள் இரவில் தங்க நேரிடும்போது, சமோசாக்களை செய்து வைத்துக்கொள்வார்களாம். அடுத்த நாளில் பகல் உணவுக்கு உபயோகப்படும் என்பதற்காக இந்த ஏற்பாடு. அரசர்கள், சுல்தான்களுக்கு மட்டுமல்ல... சாமான்யர்களுக்கும் பிடித்த நொறுக்குத்தீனி சமோசா. இந்தியாவில் இது அறிமுகமானபோது, உத்தரப்பிரதேச மாநில மக்கள், அதை சைவ வடிவத்துக்கு மாற்றி ஏற்றுக்கொண்டார்கள். சில நூற்றாண்டுகளிலேயே சமோசா இந்தியாவில் பிரபலமாகிவிட்டது. வட இந்தியாவில் சமோசா மாவுக்குப் பெரும்பாலும் மைதாவைத்தான் பயன்படுத்துகிறார்கள். 

சம்சா 

வட இந்தியாவில் சில நகரங்களிலும் பாகிஸ்தானிலும் அசைவ சமோசா வெகு பிரபலம். ஆடு, மாடு, கோழி இறைச்சிகளை ஸ்டஃபிங்கில் சேர்க்கிறார்கள். பஞ்சாப்பில் சமோசாவுடன் சென்னா பரிமாறப்படுகிறது. மும்பையில், `சமோசா பாவ்’ பிரசித்திபெற்ற ஒன்று. பன்னில் வைத்துத் தரப்படும் இதை `இந்தியன் பர்கர்’ என்றுகூடச் சொல்லலாம். தீபாவளிப் பண்டிகையின்போது வட இந்தியாவில் சில இடங்களில் இனிப்பு சமோசா தயாரித்து, பரிமாறும் வழக்கம் இன்றைக்கும் இருக்கிறது. 

ஆப்பிரிக்கா, எத்தியோப்பியா, சோமாலியா உள்ளிட்ட நாடுகளில் சமோசா, பண்டிகைகால ஸ்பெஷல் ரெசிப்பி. பொரித்துச் சாப்பிட்டால் உடலுக்குத் தீங்கு என்பதற்காக சில மேற்கத்திய நாடுகளில் சமோசாவை மைக்ரோவேவ் அவனில் பேக் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். ஸ்டஃபிங்குக்கு ஆரோக்கியமான காய்கறிகள்! உலகமெங்கும் பிரபலான உணவுப்பொருளாகிவிட்டது சமோசா... ஒவ்வோர் இடத்திலும் ஒரு சுவை. சுவைத்து மகிழலாம்தான். அதற்கு முன்னர், `சமோசா ஆரோக்கியமானதுதானா?’ என்ற கேள்விக்கு டயட்டீஷியன் சௌமியா சொல்லும் விளக்கத்தையும் பார்த்துவிடுவோம்...   

சம்சா 

``மாலை 4 மணி. டீ குடிக்கப் போகிற இடத்தில் தட்டில் சுடச்சுட கொட்டிவைக்கப்பட்டிருக்கிறது சமோசா. ஒன்றை எடுத்துக் கடித்துச் சுவைக்க வேட்கை எழும்தான். ஆனால், அதனால் ஏற்படும் சில பக்கவிளைவுகளைத் தெரிந்துகொண்டால், அதன் பக்கம் போக மாட்டீர்கள்.  

ஒரு சின்ன சமோசாவில் 240 கலோரிகள் இருக்கின்றன. நம் உள்ளூர் கடைகளில் விற்கப்படும் சமோசாக்களில் ஊட்டச்சத்தைத் தரக்கூடிய பொருட்கள் கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம். சர்க்கரைநோயாளிகளுக்குச் சேராத உருளைக்கிழங்கு இருக்கிறது; அதற்கான மாவில் நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் மைதா கலக்கப்படுகிறது. மைதாவில் இருக்கும் அதிக அளவிலான கிளைசெமிக் இண்டெக்ஸ் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டும். கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். இதுகூடப் பரவாயில்லை. சமோசாவைப் பொரிக்கப் பயன்படுத்தப்படும் எண்ணெய்... அதுதான் ஆபத்தானது. 

சம்சா 

தெருவோரக் கடைகளில் சமோசா பொரிக்க எந்த வகை எண்ணெயைப் பயன்படுத்துகிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. அதேபோல ஒரே எண்ணெயில் திரும்பத் திரும்ப பொரிப்பார்கள். அது ட்ரான்ஸ் ஃபேட்டுக்கு (Trans fat) வழிவகுக்கும். இதை `ஹைட்ரோஜனேஷன்’ (Hydrogenation) என்பார்கள். அதாவது ஒரு உணவைத் திரும்பத் திரும்ப சூடுபடுத்தும்போதோ, ஒரே எண்ணெயை மேலும் மேலும் பயன்படுத்தும்போதோ ஹைட்ரஜன் உணவோடு சேரும். இது ட்ரான்ஸ்ஃபேட்டுக்கு வழிவகுக்கும். சர்க்கரைநோயாளிகளும், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் இதைச் சாப்பிட்டால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அவர்களின் பிரச்னை தீவிரமாகும்.

மற்ற ஸ்நாக்ஸைவிட சமோசா கொஞ்சம் டேஞ்சர்தான். அதீத கொலஸ்ட்ரால், செரிமானக் கோளாறுகள், ட்ரான்ஸ் ஃபேட் (கெட்ட கொழுப்பு), சுகாதாரமற்ற மைதா மற்றும் எண்ணெய்... இவை போதுமானவை சமோசாவை வேண்டாம் என்று சொல்ல! 

தொடர்ந்து சமோசா சாப்பிடுவது, வயிற்றில் தொப்பையை உருவாக்கும். அதோடு  சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் வருவதற்கெல்லாம் பாதை வகுக்கும். சமோசா சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் வீட்டிலேயே செய்யலாம். நல்ல எண்ணெயில், ஆரோக்கியமான ஸ்டஃபிங்கோடு மைதா மாவுக்கு பதிலாக கோதுமை மாவு, அரிசி மாவு சேர்த்து சாப்பிட்டால் தவறில்லை. மற்றபடி, சமோசாவுக்கு `நோ’ சொல்வதே புத்திசாலித்தனம்.’’

ஆக, வீட்டு சமோசாவுக்கு வெல்கம் (எப்போதாவது) சொல்வோம்! கடை சமோசா..? வேண்டவே வேண்டாம்! 

http://www.vikatan.com/news/health/82890-what-makes-samosa-dangerous-is-it-bad-for-health.html

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் இதைத் தான்...சிம்பிளாய்...பற்றீஸ் என்கிறோம்!
கொஞ்சம் சேப்  வித்தியாசம்....அவ்வளவு தான்! 

Link to post
Share on other sites

அன்றாட உணவுப் பட்டியலில் இடம்பெறவேண்டிய 10 உணவுகள்! #HealthTips

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் சமையலுக்குப் பயன்படுத்தும் பொருள்கள் பலவிதமானவை. அதிலும் வீட்டுக்கு வெளியே நாம் சாப்பிடும் உணவுகளில் என்னென்ன கலந்திருக்கின்றன என்பது நமக்கு நிச்சயம் தெரியாது. இவற்றில் பெரும்பாலானவை கொஞ்சம் கொஞ்சமாக நம் உடலைக் கெடுக்கக்கூடியவை. சமயத்தில், மிக மோசமான உடல் கோளாறுகளை நமக்கு வரவழைக்கக்கூடியவை. பொதுவாக நாம் சாப்பிடும் உணவு, நம் உடலுக்கு ஊட்டம் தருகிற வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பைட்டோகெமிக்கல்கள் மற்றும் என்ஸைம்கள் அடங்கிய ஒரு கூட்டுக் கலவையாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட உணவுதான் நம் உடலை வலிமை அடையச் செய்யும்; நம்மை எப்போதும் துடிப்பாக வைத்திருக்க உதவும்; மிக முக்கியமாக, நோய்களில் இருந்து நம்மைக் காப்பாற்றும். அப்படி சத்துகள் நிறைந்த ஒன்றாவது, நம் அன்றாட உணவில் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்வது நம் ஆரோக்கியத்துக்கும் ஆயுளுக்கும் நல்லது. உடல்நலம் காக்கும், உடலுக்கு உறுதி தரும் 10 உணவுகள் இங்கே...  

உணவுகள் 

கிரீன் டீ

கிரீன் டீ 

பெயரிலேயே பசுமையைக்கொண்டிருக்கும் இந்தத் தேநீரைப் பருகினால், இளமைத் தோற்றத்தைத் தக்கவைக்கலாம். கிரீன் டீயால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் குறித்து எத்தனையோ ஆய்வு முடிவுகள் தெரிவித்திருக்கின்றன... அத்தனையும் பலே பலன்கள்! நோய்கள் நம்மை நெருங்கவிடாமல் பார்த்துக்கொள்வதில் பெரும் பங்கு வகிக்கிறது கிரீன் டீ. தேயிலை இலைகளில் உள்ள கேட்டசின்கள் (Catechins) சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்; நோய்களுக்கு எதிராகச் செயல்படுபவை. இதில் ஈ.ஜி.சி.ஜி (EGCG - Epigallocatechin Gallate) அடங்கியுள்ளதால், ஆரோக்கியத்துக்கு பக்கபலமாக இருக்கும். உடல் எடை குறைப்பதற்கும் கிரீன் டீ உதவும்.   

பாதாம் பருப்பு

பாதாம் 

ஆரோக்கியமாக இருக்க தினமும் என்னென்ன சாப்பிட வேண்டும் என்று ஒரு பட்டியல் போட்டால், கண்டிப்பாக அதில் பாதாம் இடம் பெற்றிருக்கும். பாதாமில் இதயத்துக்கு நன்மை செய்யும் ஒலீயிக் அமிலம் (Oleic Acid) அதிக அளவில் இருக்கிறது. இது, உடல் ஆரோக்கியத்துக்குப் பலவிதத்தில் உதவுவதோடு, நினைவாற்றலை அதிகரிக்கவும் துணைபுரிகிறது. பாதாமில் நார்ச்சத்து, கால்சியம், கொழுப்பு மற்றும் புரதம் அதிகமாக இருப்பதால், உடலுக்கு வலிமை கிடைக்கும். மற்ற பருப்புகளுடன் ஒப்பிட்டால், பிரமாதப் பலன்களில் பாதாம் பருப்பே நம்பர் ஒன். 

நாவல்பழம் 

நாவல்பழம் 

நாவல்பழம் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த உணவுகளில் ஒன்று. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன. இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கக்கூடியது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்றது. இதில் இருக்கும் அதிக அளவிலான பாலிபினால்கள் உடலுக்குப் பல நன்மைகளை அள்ளித் தருபவை. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. ஆனாலும், ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு நாவல்பழங்கள் மட்டுமே சாப்பிடுவது நல்லது. 

குடமிளகாய் 

பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு... எனப் பல்வேறு நிறங்களில் உள்ளது. உணவுக்கு சுவைகூட்டுவது. ஊட்டச்சத்துகள் நிறைந்த ஆரோக்கியத்தை கொடுப்பது இந்த குடமிளகாய்.. இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ உள்ளதால், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். உடலுக்கு வலிமை கிடைக்கும். அதோடு மக்னீசியம், இரும்புச்சத்தும் இதில் உள்ளன. 

யோகர்ட்

யோகர்ட் 

வழக்கமாக நாம் சாப்பிடும் தயிரைவிட யோகர்ட்டில் அதிகமான புரதச்சத்து நிறைந்துள்ளது. இதில் கால்சியம் மிகுதியாக இருக்கிறது. ஒரு கப் யோகர்ட்டில், நமக்கு ஒரு நாளைக்குத் தேவையான 25 சதவிகித கால்சியம் கிடைத்துவிடும். உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கும். இதில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் இருக்கின்றன; அவை செரிமானத்தைச் சீராக்கும்; நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும். 

அவகேடோ

அவகேடோ 

நவீன வாழ்வியல் முறையில் உடலில் உள்ள கொழுப்புகளை நீக்க நிறையப் பேர் மேற்கொள்வது உடற்பயிற்சிகள். எடையைக் குறைப்பது மட்டுமே கொழுப்பைக் குறைப்பதாகாது உண்மையில் நம் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்புகளும் தேவை. அவகேடோ நம் உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான கொழுப்பைத் தரக்கூடியது. இது நம் மனநிலையை மேம்படுத்தவும் உதவும். அவகேடோவில் இருப்பது, ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு (Monounsaturated fat), நல்ல கொழுப்பை மேம்படுத்தவும் ரத்தத்தில் ட்ரைகிளிசரைடுகள் (கொழுப்பு) குறைவாகச் சுரக்கவும் உதவும். இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றுக்கான அபாயத்திலிருந்து காக்கும். `ஃபுட் கிரேவிங்ஸ்' எனப்படும் அதீதமாகச் சாப்பிடும் எண்ணத்தைப் போக்க உதவும்.

தினை

தினை 

சிறுதானிய உணவுகளில் அதிகப் புரதச்சத்துள்ள உணவு தினை மட்டுமே. இது அனைவருக்கும், குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்கான முக்கியமான தகவல். இதில் பழுப்பு அரிசியைவிட அதிக நார்ச்சத்தும் இரு மடங்கு புரதச்சத்தும் இருக்கின்றன. தினையை அரிசியைப் போலவே பல்வேறுவிதமாகச் சமைக்கலாம். இதில் இருக்கும் முழுமையான ஆரோக்கிய சத்துக்களான நார்ச்சத்து, புரதச்சத்து ஆகியவை நம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சீராக வைத்திருக்க உதவும். உடலின் எடையைக் குறைக்கும்; ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஆப்பிள்

ஆப்பிள் 

அமெரிக்காவில் மற்ற பழங்களைவிட ஆப்பிள் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். காரணம், இதில் அதிக அளவில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ். ஆப்பிளின் தோலில்தான் அற்புதமான ஆன்டிஆக்ஸிடன்ஸ் நிறைந்துள்ளன. அதனால் தோலுடன் கூடிய ஆப்பிளைச் சாப்பிடுவதே ஆரோக்கியத்துக்கு நல்லது. ஆப்பிளில் நார்ச்சத்து சுமாரான அளவிலேயே இருந்தாலும், அதில் பழப்பசை சத்து (Pectin) நிறைவாக இருக்கிறது. இது, நம் உடலுக்கு சக்தியைத் தரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போதுமானது. இதய ஆரோக்கியம், சர்க்கரைநோய், புற்றுநோய், பக்கவாதம், மூளை வளர்ச்சிக் குறைபாடு போன்றவற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் ஆற்றல் ஆப்பிளுக்கு உண்டு.

கீரைகள்

கீரைகள் 

எல்லாக் கீரைகளிலுமே சக்திவாய்ந்த பீட்டா-கரோட்டின் (Beta-Carotene) உள்ளது. இது நோய்களுக்கு எதிராகப் போராடும் ஆன்டிஆக்ஸிடன்ட். எனவே, இதய நோய் மற்றும் புற்றுநோய்க்கு எதிராகப் போராடும். கீரைகளில் லுடீன் (Lutein) உட்பட பல முக்கியமான பைட்டோகெமிக்கல்கள் உள்ளன. இவை, கண்களைச் சுற்றி வரும் கருவளையத்தைத் தடுக்க உதவுகின்றன. கீரையில் லிபோயிக் அமிலம் (Lipoic Acid) இருக்கிறது. இந்த அமிலம், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ ஆகியவற்றின் உற்பத்திக்கு உதவும்; ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். கீரைகளில் ஒமேகா 3 கொழுப்புகள் நிறைந்த அளவில் இருக்கின்றன. ஆக, சைவப் பிரியர்களுக்கு கீரைகள் உடல் ஆரோக்கியத்துக்கு உதவக்கூடிய முக்கியமான உணவு. 

முட்டை

முட்டை 

முட்டை, கலோரிகள் குறைவாக உள்ள உணவு. ஆனால், புரதச்சத்து, ஊட்டச்சத்து, நல்ல கொழுப்புகள் நிறைந்தது. காலையில் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளுக்குப் பதிலாக, முட்டையைச் சாப்பிடுபவர்களுக்கு 65% எடை குறைகிறது என்பது சமீபத்தில் ஓர் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. முட்டையில் இருக்கும் அதீதமான புரதம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சீராக வைத்திருக்கும்; தசைகளுக்கு வலு சேர்க்கும்.

இந்த பத்து உணவுகளும் நாளுக்கு ஒன்றாக நம் அன்றாட உணவில் இணையட்டும். உடல்நலம் மேம்படட்டும்! 

http://www.vikatan.com/news/health/82981-10-foods-you-should-eat-every-day.html

Link to post
Share on other sites

சிறுநீரகங்கள் நம் உடலில் என்னவெல்லாம் செய்கின்றன? #WorldKidneyDay #Infographics

உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும், தேவையில்லாத உப்புச் சத்துக்களையும் வடிகட்டும் முக்கிய பணியை செய்கின்றன சிறுநீரகங்கள். இதனாலே இது உடலின் 'துப்புரவுத் தொழிற்சாலை' என்று அழைக்கப்படுகிறது. இதயத்துக்கு அடுத்து ஓயாது உழைக்கும் உறுப்பு சிறுநீரகம். சிறுநீரகத்தில் ஏற்படும் ஒரு சிறு குறையும் உடலில் உள்ள பல பாகங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கும் எனவே, சிறுநீரகத்தை கவனமாக பார்த்துக் கொள்வதால் பல்வேறு விதமான நோய்களையும் தவிர்க்கலாம். சிறுநீரகம் செய்யக்கூடிய பணிகளையும், அதை எப்படி பாதுகாப்பது என்பது பற்றி தெரிந்துகொள்வோமா!

சிறுநீரகம்


 

http://www.vikatan.com/news/health/83208-what-are-the-primary-functions-of-kidney.html

'உங்கள் உடல் சுத்திகரிப்பு நிலையம் சுகமா?’ -  #WorldKidneyDay

சிறுநீரகம்... இயற்கை நமக்கு அளித்த உடல் சுத்திகரிப்பு நிலையம். அதுவும் ஒன்றல்ல, இரண்டு! உள்ளங்கையில் அடங்கிவிடும் அளவுக்கு அளவில் சிறியதான சிறுநீரகத்தின் செயல்பாடு உடல் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது. சிறுநீரகத்தின் சிறப்புகளையும், அவற்றின் பாதிப்புகள் குறித்த விழிப்பு உணர்ச்சியையும் மக்களிடம் ஏற்படுத்துவதற்காக 2006-ம் ஆண்டில் 'உங்கள் சிறுநீரகங்கள் நலம்தானா?’ என்ற கருப் பொருளுடன் ஆரம்பிக்கப்பட்டதுதான் `உலக சிறுநீரக தினம்'.

உடல் சிறுநீரகம் 

 

 

 

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமையில் அனுசரிக்கப்படும் இந்த தினத்தின் 2017-ம் ஆண்டுக்கான நோக்கம்... `உடல் எடை அதிகரிப்பும் - சிறுநீரக பாதிப்புகளும்'. 2006-ம் ஆண்டில் 66 நாடுகள் அனுசரிக்க ஆரம்பித்த இந்த நாளை இரண்டே வருடங்களில், 2008-ம் ஆண்டில் 88 நாடுகள் அனுசரித்ததிலிருந்தே இந்த தினத்தின் அவசியம் தெளிவாகியிருக்கிறது.

உலக சிறுநீரக தினம்-2017: உடல் எடை அதிகரிப்பும் - சிறுநீரக பாதிப்புகளும்...

`உடல் எடைக்கும் சிறுநீரகத்துக்கும் என்ன தொடர்பு?’ என யோசிக்கலாம். உடல் எடை அதிகரிக்கும்போது, சாதாரணமாக இருப்பதைவிட சிறுநீரகம் அதிக ரத்தத்தை வடிக்கட்டி, அதிலிருந்து உடல் எடைக்குத் தேவையான அளவு வளர்சிதைப் பொருள்களைப் பிரித்தெடுக்க வேண்டியிருக்கும். அதிகமாக உழைக்கும் மெஷின் சீக்கிரமே தேய்ந்துவிடுவதைப்போல சிறுநீரகத்தின் செயல்பாடு அதிகரிக்கும்போது, நாள்பட்ட சிறுநீரக பாதிப்புகள் ஏற்படும். அதோடு, சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்டியோபோரசிஸ் (மூட்டுகள் தேய்ந்து போதல்) தொடங்கி இதய அடைப்பு வரை அனைத்து உடல் உபாதைகளின் முதல் மற்றும் முக்கியக் காரணியாக‌ உடல் எடை அதிகரிப்பு பிரச்னை இருக்கிறது. எனவே, உடல் எடை அதிகரிப்பின் விளைவுகளை விளக்கி, அதற்கான தீர்வுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் இந்தக் கருப்பொருளின் நோக்கம்.

சிறுநீரகம்

சிறுநீரகத் துறை நிபுணர், டாக்டர்.வி.சந்திரசேகரன் சிறுநீரகம் தொடர்பான சில முக்கியக் கேள்விகளுக்கு இங்கே பதிலளிக்கிறார்... டாக்டர்.வி.சந்திரசேகரன்

``சிறுநீரக பாதிப்புகள் பெருகிவருவதற்குக் காரணம் என்ன?’’

`` `உலகளவில் ஆண்டுதோறும் 50 கோடிப்பேர் ஏதாவது ஒரு வகையான சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் கிட்டத்தட்ட 15 லட்சம் பேருக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்ளும் அளவுக்கு சிறுநீரகத்தின் செயல்பாடு முற்றிலுமே நின்றுவிடுகிறது’ என்கின்றன புள்ளிவிவரங்கள். ஒரு சிறுநீரகம் முழுவதுமே பழுதடைந்து, மற்றொன்றும் 75 சதவிகிதம் பாதிக்கப்பட்டிருந்தாலும்கூட, 25 சதவிகிதம் சரியான நிலையில் இருக்கும் சிறுநீரகமே அனைத்து வேலைகளையும் செய்யக்கூடியதுதான். ஆனாலும், ஏன் இவ்வளவு பாதிப்புகள் என யோசித்தால் அதற்கு முதல் காரணம், `நாகரிகம்’ என்ற பெயரில் மாறிவரும் வாழ்க்கை முறைகளும், நஞ்சாகிவரும் உணவுப் பொருள்களும்தான்.’’

``பொதுவாக சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?’’

``சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்னைகளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்னர் அதன் செயல்பாடுகளைத் தெரிந்துகொள்ளவேண்டியது மிகவும் அவசியம். உடலில் உள்ள ரத்தத்தைச் சுத்திகரித்து, தேவையான அளவுக்கு தாதுக்களையும், புரோட்டீன்களையும் மட்டும் உடலில் தக்கவைத்து, தேவையில்லாதக் கழிவுகளை சிறுநீரில் கலந்து வெளியேற்றுவதோடு மட்டும் சிறுநீரகத்தின் செயல்பாடுகள் நின்றுவிடுவதில்லை. அத்தியாவசியமான சில ஹார்மோன்கள் உற்பத்தியிலும் இவை பங்கு பெறுகின்றன...

* உடலின் அமிலத்தன்மை மற்றும் நீர்மைத் தன்மையை சமநிலையில் வைத்திருத்தல்.
* 'ரெனின்' (Renin) புரோட்டீனின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல். 
* ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கான 'எரித்ரோபாய்டின்' (Erythropoietin) என்னும் ஹார்மோனை உற்பத்தி செய்தல்.
* உணவிலுள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களை உறிஞ்சுவதற்குத் தேவையான செயல்நிலை வைட்டமின் டி-யைத் தயாரித்தல்.

சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, அவற்றின் செயல் அலகுகளான நெஃப்ரான்கள் பாதிப்படையும்போது, இந்த அனைத்துச் செயல்பாடுகளுமே குறையத் தொடங்கும்போதுதான் `தீவிர சிறுநீரக நோய்’, `நாள்பட்ட சிறுநீரக நோய்’ ஆகியவை ஏற்படுகின்றன. இவற்றின் கடைசிக்கட்டம்தான் `ESRD’ எனப்படும் இறுதிநிலை சிறுநீரக நோய். இந்த நோய்களுக்கு சிகிச்சை அளித்தாலும்கூட பழையநிலைக்கு சிறுநீரகத்தைக் கொண்டுவர முடியாது. சிறுநீரகக் கற்கள், சிறுநீரகத் தொற்று போன்ற சிகிச்சையால் குணமாகக்கூடிய சில பிரச்னைகளும் இன்று அதிகளவில் ஏற்படுகின்றன.

சிறுநீரகம்

தீவிர சிறுநீரக நோய்

ஒரு சில நாள்களில், ஒரு சில மாதங்களில்... ஏன் ஒரு சில மணி நேரங்களிலேயே எந்த முன் அறிகுறிகளும் இன்றி ஏற்படுவதுதான் தீவிர சிறுநீரக நோய். ஒரு சில நோய்களின் பக்க விளைவுகள், டாக்ஸின்களின் செயல்பாடு, திடீரென ஏற்படும் அதிக நீரிழப்பு போன்றவை இதற்கான காரணங்கள். இவை தவிர, பிறப்பிலேயே குழந்தைகளின் சிறுநீரகத்தில் ஏற்படும் சில நோய்களும் தீவிர சிறுநீரக நோயை ஏற்படுத்தும். சில சமயங்களில் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையிலிருப்பவர்களுக்கேகூட
இந்தப் பாதிப்புகள் திடீரென ஏற்படும்.

நாள்பட்ட சிறுநீரக நோய் 

கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரைநோய், அதிக உடல் எடை, ரத்த அழுத்தம் போன்ற நோய்களாலும், வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் சிறுநீரகத்தை பாதிக்கக்கூடிய சில ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்வதாலும் சிறிது சிறிதாக சிறுநீரகத்தின் செயல்பாடு குறைந்துகொண்டே வந்து 90% அளவுக்கு பாதிக்கப்பட்ட பின்னர்தான் அறிகுறிகளே வெளிப்படத் தொடங்கும்.

இறுதிநிலை சிறுநீரக நோய்

`ஈ.எஸ்.ஆர்.டி’ (ESRD - End Stage Renal Disease) எனச் சொல்லப்படும் இந்த நிலையில், சிறுநீரகம் தனது செயல்பாட்டை முழுவதுமே நிறுத்திவிடும். டையாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்தால் மட்டுமே நோயாளியைக் காப்பாற்ற முடியும்.

சிறுநீரகக் கற்கள்

நாம் குடிக்கும் தண்ணீரிலும், சாப்பிடும் உணவிலும் உள்ள கால்சியம், பாஸ்பேட், ஆக்சலேட் போன்ற பல தாது உப்புகள் உணவு செரித்த  பிறகு சிறுநீர் வழியே வெளியேறிவிடும். ஆனால், இவற்றின் அளவு ரத்தத்தில் அதிகமாகும்போது, சிறுநீரில் வெளியேறுவதற்குச் சிரமப்படும். அப்போது சிறுநீரகம், சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப் பை ஆகிய இடங்களில் இந்த உப்புகள் படிகம்போல் படிந்து, கல் போலத் திரளும். சிறு கடுகு அளவில் ஆரம்பித்துப் பெரிய நெல்லிக்காய் அளவுக்கு வளர்ந்துவிடும். இதுதான் சிறுநீரகக் கல். இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். வழக்கமாக பெண்களைவிட ஆண்களுக்கே இது அதிக அளவில் தோன்றுகிறது. சிறுநீரகக் கற்களை அதன் தன்மையைப் பொறுத்து பல வகைகளாகப் பிரிக்கலாம். தக்காளியில் உள்ள ஆக்சாலிக் அமிலத்தால், ஆக்சலேட் கற்கள் உண்டாகின்றன. பால், தயிர் போன்ற‌ கால்சியம் அதிகமான உணவுகள் மற்றும் கால்சியம் சத்து மாத்திரைகளை அதிகம் எடுத்துக்கொள்ளும்போதும் அளவுக்கதிகமான கால்சியம் சிறுநீரகத்தில் கற்களாக படிந்துவிடுகிறது. மேலும், அதிக மசாலா சேர்த்த உணவு, புளிப்பு சுவை, இறைச்சி, முட்டை போன்றவற்றை அதிகம் சாப்பிடுவது, குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது, உணவிலும் குடிநீரிலும் கால்சியம், குளோரைடு மிகுதியாக இருப்பது, சிறுநீர் கழிப்பதைத் தள்ளிப்போடுவது ஆகியவை சிறுநீரகக் கல் தோன்றுவதற்கு முக்கியக் காரணங்கள்.’’

``சிறுநீரக பாதிப்புகளை எப்படிக் கண்டறியலாம்?’’

``சிறுநீரகத்தின் செயல்பாடு 90% குறைந்து போகும் வரையிலும்கூட பெரும்பாலானவர்களுக்கு பாதிப்புக்கான எந்த அறிகுறியும் தெரிவதில்லை. சில நோயாளிகளின் சிறுநீரின் அளவு எப்போதும்போல சரியாகவே இருக்கும். ஆனால், பரிசோதனையில் பார்த்தால் கிரியாட்டினைன், யூரிக் ஆசிட் அளவுகள் உயர்ந்திருக்கும். எனவே, மூன்று மாதத்துக்கு ஒரு முறை மருத்துவரின் பரிந்துரையின்
பேரில் சிறுநீரக செயல்பாட்டைக் கண்டறிய உதவும் பரிசோதனைகளையும், குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்டிப்பாகச் செய்துகொள்ள வேண்டும். கீழ்க்கண்ட அறிகுறிகள் தெரிந்தால், மருத்துவரிடம் உடனே சென்றுவிடவும்.

* அடிவயிற்றில் வலி, முதுகுவலி, வலி மற்றும் எரிச்சலுடன் சிறுநீர் வெளியேறுதல். சில நேரங்களில் ரத்தமும் வெளியேறுதல்.

* குறிப்பிட்ட அளவுக்கு நீரை வெளியேற்ற முடியாததால், மூட்டுகளில் நீர் தேங்கி வீக்கம் ஏற்படுதல்.

* யூரியா, யூரிக் ஆசிட் போன்ற நைட்ரஜன் கழிவுகள் உடலில் தங்குவதால் அடிக்கடி வாந்தி எடுத்தல்.

* பசியின்மை மற்றும் அசதி.

* கட்டுப்படுத்த முடியத அளவுக்கு ரத்த அழுத்தம் உயருதல்.

* மூச்சு வாங்குதல்.

* வைட்டமின் டி உற்பத்திக் குறைவதால், மூட்டுகளில் வலி ஏற்படுதல்.

* எரித்ரோபாய்டின் ஹார்மோனின் உற்பத்தி குறைந்து, அதனால் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி குறையும்போது கண்கள் வெளுத்துப் போய் ரத்தசோகை ஏற்படும்.’’

 

சிறுநீரக சிகிச்சை 

``என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன?’’

``சிறுநீரகம் பாதித்ததற்கான அறிகுறிகள் வெளிப்பட்டு, மருத்துவரை நாடும்போது அந்த அறிகுறிகளுக்கு ஏற்ப முதலில் மருந்துகள் அளிக்கப்படுகின்றன. மருந்துகளால் குணப்படுத்த முடியாத நிலை வரும்போதுதான் டையாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. நோயின் தீவிரத்துக்கு ஏற்ப டையாலிசிஸ் செய்யக்கூடிய முறை, செய்துகொள்ளவேண்டிய கால அளவு அனைத்துமே மாறும். பொதுவாக ஒன்று விட்டு ஒரு நாள், அதாவது வாரத்துக்கு மூன்று முறை (மொத்தமாக 12 மணி நேரம்) பெரும்பாலானவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.’’

``சிறுநீரகத்தைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன?’’

``வயதுக்கும் உயரத்துக்கும் ஏற்ற அளவில் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள, முறையான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ரத்த சர்க்கரையின் அளவு மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளுங்கள். சுய மருத்துவம் மற்றும் அளவுக்கு அதிகமான மாத்திரைகள் உட்கொள்ளுதல் கட்டாயம் கூடாது. புகைப்பிடித்தல் மற்றும் ஆல்கஹால் அருந்துதல் நோயின் வீரியத்தை இன்னும் அதிகமாக்கும். எனவே, கண்டிப்பாக இந்தப் பழக்கங்களைக் கைவிட வேண்டும். சிறுநீர் நோய்த்தொற்று அடிக்கடி ஏற்படும்போது, அதுவே சிறுநீரகத்தின் செயல்பாட்டைப் பாதிக்கும். எனவே, சுய சுத்தம் மிக அவசியம்.’’

பழங்கள்

 

``சிறுநீரகத்தைப் பாதுகாக்கும் உணவுகள் என்னென்ன?’’

``அவரை விதை வடிவில் உள்ள சிறுநீரகத்துக்கு அவரைக்காய் ஆகாது. இதில் அதிக பொட்டாசியம் மற்றும் யூரிக் அமிலம் இருப்பதுதான் காரணம். சிறுநீரக பாதிப்புள்ளவர்கள் மற்றும் இதய பாதிப்புள்ளவர்கள் அவரைக்காயை நீரில் வேகவைத்து, அந்தத் தண்ணீரை நீக்கிவிட்டு, அவரைக்காயை எடுத்துக்கொள்ளலாம். `சிறுநீரக கற்களில் பாதிப்புள்ளவர்களுக்கு உணவில் தக்காளி விதைகளை மட்டும் நீக்கினால் போதும்’ என்பது உண்மையல்ல. ஏனெனில், தக்காளியின் தோலிலுள்ள ஆக்சாலிக் அமிலம்தான் அதிகளவில் ஆக்சலேட் கற்களை உண்டாக்கும். எனவே, தக்காளி பயன்படுத்துவதையே குறைத்துக்கொள்ள வேண்டும். அதிக உப்பு, உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, உப்பின் உபயோகத்தைக் குறைத்துவிடுங்கள். அதிகமாக புரோட்டீன் உணவுகள் உண்பதையும் குறைத்துக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழ‌ங்களை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். சிறுநீரகத் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க, தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். சிட்ரஸ் பழ வகைகளான எலுமிச்சை, ஆரஞ்சுப்பழச் சாறு போன்றவை தொற்றைக் குறைக்கும்.’’

``தண்ணீர் குடிப்பதில் கவனம் தேவையா?’’

``நிச்சயமாக. அதிகமான வெப்பத்தின் தாக்குதலில் வசிக்கும் நாம் தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதுதான் சரியான அளவு. ஆனாலும், சிறுநீரகத்தின் செயல்பாடு குறையும்போது சிறுநீரை உற்பத்தி செய்யும் திறன் குறைந்துவிடும். எனவே, அதற்கேற்ப தண்ணீர் குடிப்பதையும் குறைத்துக்கொள்ள வேண்டும். மருத்துவர் பரிந்துரைத்த அளவுக்கு மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த நேரங்களில் அதிகமான தண்ணீர் குடிக்கும்போது அது, மூட்டுகளில் மட்டும் தங்காமல் நுரையீரலுக்குள் சென்று நீர்கோத்து பாதிப்புகள் ஏற்படுத்தும் அபாயம் உணடு.’’ 

குறிப்பிட்ட உணவு வகைகள், முறையான உடற்பயிற்சி, தகுந்த மருத்துவப் பரிசோதனை... இவற்றைக் கடைப்பிடித்தாலே போதும்... நீங்கள்தான் ஆரோக்கியத்தின் அதிபதி!

http://www.vikatan.com/news/health/83172-how-healthy-is-your-kidney.html

Link to post
Share on other sites

`பச்சை நிறமே... பச்சை நிறமே...’ பச்சைப் பட்டாணி தரும் அபாய எச்சரிக்கை! #HealthAlert

ச்சைப் பட்டாணி... உலகின் ஆரோக்கியமான உணவுகள் பட்டியலில் பிரதானமான இடத்தில் இருக்கும் ஒன்று. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவும் இதுதான். அவசரத்துக்குப் பிள்ளைகளுக்கு பிரிஞ்சி சாதம் செய்து கொடுக்க வாங்குவோமே... கடைகளில் பாக்கெட்டுகளில் ஐந்து ரூபாய்க்குக் கிடைக்குமே... அதே பச்சைப் பட்டாணிதான். நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள்... என எத்தனையோ அபரிமிதமான சத்துக்களைக்கொண்டிருப்பது இது. நோய் எதிர்ப்புச் சக்தி தரும்; உடல் எடையைக் குறைக்க உதவும்; ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும்; கர்ப்பிணிகளுக்கு நல்லது... என இதன் நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், இந்த பலே பச்சைப் பட்டாணி, தற்போது நம்மைக் கொஞ்சம் கலங்கவும் வைத்திருக்கிறது. `பச்சைப் பசேல்’ என்று தெரிவதற்காக இதில் கலக்கப்படும் ஒரு ரசாயனம் நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியது... கொஞ்ச நஞ்சமல்ல... மிக மோசமாக! 

பட்டாணி

உலக அளவில், பச்சை, மஞ்சள்... இந்த இரு நிறங்களிலும் பட்டாணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை. இன்றைக்கு, சீனா, இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பாவில் சில நாடுகள் பச்சைப் பட்டாணியை விளைவிப்பதில் முன்னணியில் நிற்கின்றன. கி.மு. 9750-ம் ஆண்டிலேயே மனிதர்கள் பச்சைப் பட்டாணியை சாப்பிட்டதற்கான ஆதாரம் இருக்கிறது. பர்மா-தாய்லாந்து எல்லைப் பகுதியில் `ஸ்பிரிட் குகை’ (Spirit Cave) என்ற இடத்தில் அந்த ஆதாரத்தைத் தொல்லியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். வடமேற்கு ஈராக்கில் உள்ள ஜார்மோ (Jarmo) என்ற இடத்தில் கி.மு. 7000-க்கும் 6000-க்கும் இடைப்பட்ட காலத்தில் விளைவிக்கப்பட்ட பட்டாணிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. ஆக, இது மிக தொன்மையான தானிய வகை என்பதில் சந்தேகம் இல்லை. ஆரம்பத்தில் ஆதிவாசிகளால் உற்பத்தி செய்யப்பட்டு, யாத்ரீகர்கள் மூலமாக இது மத்தியத் தரைக்கடல் நாடுகளுக்கும், பிற இடங்களுக்கும் பரவியிருக்கிறது. 

பச்சைப் பட்டாணி குறித்தத் தகவல்கள் சொல்லச் சொல்லத் தீராதவை. முதலில் இதற்கு ஆங்கிலத்தில் `பீஸ்’ (Pease) என்றுதான் பெயர் இருந்தது. லத்தீனில் `பிஸம்’ (Pisum) என அழைக்கப்படும் இந்த வார்த்தை, பழைய கிரேக்கச் சொல்லான `பிஸோஸ்’, (Pisos), `பிஸன்’ (Pison) ஆகியவற்றிலிருந்து வந்தது என அடித்துச் சொல்கிறார்கள் வரலாற்றியலாளர்கள். ஆக்ஸ்ஃபோர்டு யூனிவர்சிட்டி அகராதிப்படி, 1600-ம் ஆண்டு, `பீஸ்’ என்பது பன்மையைக் குறிக்கும் வார்த்தை என்பதால், 'se' என்ற கடைசி இரு சொற்களை எடுத்துவிட்டு, 'Pea' என அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.  13-ம் நூற்றாண்டில் பாரீஸில், தெரு வியாபாரிகள் கூவிக் கூவி பச்சைப் பட்டாணி விற்ற தகவல்கள் எல்லாம் வரலாற்றில் கிடைக்கின்றன. 1800-ம் ஆண்டு, ஃப்ரான்ஸில் வெளியிடப்பட்ட, `தி வெஜிட்டபுள் கார்டன்’ (The Vegetable Garden) என்ற என்சைக்ளோபீடியாவில் பச்சைப் பட்டாணி, அதன் வகைகள் குறித்து விளக்குவதற்காக ஒதுக்கப்பட்ட பக்கங்கள் மட்டும் ஐம்பது! `கிரிகர் மெண்டல்’ (Gregor Mendel) என்ற ஆஸ்திரிய பாதிரியார் தொடங்கி எத்தனையோ பேர் பச்சைப் பட்டாணி குறித்த பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்; ஈடுபட்டு வருகிறார்கள்.  

இன்றைக்கும் நம் இந்தியாவில் உள்ள பல சைவ ரெஸ்டாரன்ட்களில் நாண், ரொட்டிக்குத் தொட்டுக்கொள்ள `பனீர் பட்டர் மசாலா’, `கோபி மசாலா’ என கேட்கிறவர்களுக்கு இணையாக, `கிரீன் பீஸ் மசாலா’ கேட்கிறவர்களும் இருக்கிறார்கள். சைவம், அசைவம் எந்த வகை பிரியாணியாக இருந்தாலும், இதைக் கொஞ்சம் போட்டால் அதன் மணம், சுவையே தனி. இதை சுண்டல், குருமா, கூட்டு, அவியல், பொரியல், குழம்பு... என பலவிதமான உணவுகளுக்குப் பயன்படுத்தலாம். நா அதிரும் சுவைக்கு உத்தரவாதம். பச்சைப் பட்டாணி மிக நல்லது; ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது என்பதை நம் முன்னோர்கள் முதல், இன்றைய மருத்துவர்கள் வரை நன்கு உணர்ந்திருக்கிறார்கள். அதில் ஏன் கலப்படம்? 

முக்கியக் காரணம், பச்சைப் பசேல் எனத் தெரிந்தால்தான் பார்ப்பவர்களுக்குப் பிடிக்கும். நாவில் சுவை நரம்புகளைச் சுழல வைக்கும். அதற்காக இதில் கலப்படக்காரர்கள் கலப்பது `மாலாசைட் கிரீன்’ (Malachite Green) எனும் ரசாயனம். உலர்ந்த பட்டாணியை நீரில் ஊறவைத்துவிடுகிறார்கள். அதில், மாலாசைட் கிரீனைக் கலந்து நிறமேற்றுகிறார்கள். உலர்ந்த பட்டாணி மட்டுமல்ல, உலராத வகையிலும்கூட இந்தக் கலப்படம் நடக்கிறது. பச்சை மிளகாய், கோவைக்காய் போன்றவற்றிலும் இதே ரசாயனம் சேர்க்கப்படுகிறது.  இந்தக் கலப்பட உணவுகளைச் சாப்பிடுவதால் பெரிதும் பாதிக்கப்படுவது குழந்தைகள் மற்றும் முதியவர்கள். 

சரி... மாலாசைட் கிரீன் என்பது என்ன தெரியுமா? கிராமங்களில் சாணம் தெளித்து வாசலில் கோலமிடுவார்கள். சாணம் கிடைக்காததால், இதை கலர் பொடியாக (சாண பவுடர்) எடுத்து தண்ணீரில் கலந்து, வாசலில் தெளிப்பர். சில நாடுகளில், விஷக் காளான்களைக் கொல்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ரசாயனம் இது. ஆனால், 1900-ம் ஆண்டே இந்த ரசாயனம், உலக அளவில் தடைசெய்யப்பட்டுவிட்டது. ஆனால், இதைத்தான் இன்றைக்கு பட்டாணிக்குப் பளிச் பச்சை தர, நிறமேற்றியாகப் பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக நமக்கு புற்றுநோய் வரக்கூடிய அபாயம் உண்டு; மரபணுக்களில் மாற்றங்கள் நிகழலாம்; ஆண்களுக்கும் பெண்களுக்கும் மலட்டுத்தன்மை ஏற்படவும் வாய்ப்பு உண்டு. 

 

 

பச்சைப் பட்டாணியை எப்படித் தேர்ந்தெடுப்பது? 

நம் உள்ளூர் வியாபாரிகளிடம் அல்லது உற்பத்தியாளர்களிடம் நேரடியாக (பீன்ஸ் தோற்றத்தில்) வாங்கி, சிரமம் பார்க்காமல் தோல்களை நீக்கிப் பச்சைப் பட்டாணிகளைப் பிரித்தெடுத்து பயன்படுத்துவது மிகச் சிறந்தது. நம்பகமான கடைக்காரர்களிடம் இயற்கையான பட்டாணிதான் வேண்டும் எனச் சொல்லிவைத்து வாங்கிப் பயன்படுத்தலாம். தொட்டு பார்த்தால், கைகளில் பச்சை நிறம் ஒட்டும்.

கலப்படப் பட்டாணியைக் கண்டறிவது எப்படி? 

எத்தனை ஃப்ரெஷ்ஷாக இருந்தாலும், கலப்படமாக இருந்தால் கண்டுபிடித்துவிடலாம். ஒரு கைப்பிடி பச்சைப் பட்டாணியை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீரை ஊற்றி, அதில் பட்டாணியைப் போடுங்கள். சில நிமிடங்களில் அதிலிருந்து பச்சை நிறம் பிரிந்து வருகிறதா? அது கலப்படம்தான். 

ஸ்டெப் 1

ஸ்டெப் 2

ஸ்டெப் 3

ஸ்டெப் 4

ஸ்டெப் 5

எப்படி கரப்பான்பூச்சிகளை ஒழிக்க முடியாதோ, அப்படி கலப்படத்தையும் ஒழிக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. எத்தனை அரசுகள் மாறினாலும், எத்தனை ஆட்சியாளர்கள் வந்தாலும் கலப்படம் என்றும் நிரந்தரம் என ஆகிப்போனது. நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்! 

http://www.vikatan.com/news/health/82708-check-whether-you-are-consuming-adulterated-green-peas.html

Link to post
Share on other sites

நுரையீரல் புற்றுநோய்... எளிதாக அறியலாம் அறிகுறிகள்! #LungCancerAlert

ன்று உலகெங்கிலும் புற்றுநோய் பற்றிய விழிப்பு உணர்வு அதிகரித்துக்கொண்டே வருகிறது. மார்பகப் புற்றுநோயைப் பற்றி கிராமத்தில் இருக்கும் பெண்களுக்குக்கூட அரசாங்கமும் சில தன்னார்வ அமைப்புகளும் விழிப்பு உணர்வை ஏற்படுத்திவருகின்றன. ஆனாலும், நுரையீரல் புற்றுநோயைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் நம் எல்லோருக்குமே இருக்கிறது. காரணம், இது எளிதில் ஏற்படக்கூடிய மாசு நிறைந்த சூழலில் வசிக்கிறோம் என்பதுதான். கவனம்... நாம் வசிக்கும், வேலை செய்யும் இடங்களில் டீசல் வெளியேற்றிய புகையை சுவாசிப்பது, ஆஸ்பெஸ்ட்டாஸ் (Asbestos) கூரையின் கீழ் வசிப்பது போன்ற சூழல் இருந்தால் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். நுரையீரல் புற்றுநோய் ஏற்பட காற்று மாசும் ஒரு காரணம். 

புற்றுநோய்

 

இதைத் தவிர புகைப்பிடிப்பவர்களுக்கும் அப்புகையை அருகே இருந்து சுவாசிப்பவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கு 90 சதவிகித வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக, ஒருவர் நாள் ஒன்றுக்கு இரண்டு பாக்கெட் சிகரெட் புகைக்கிறார் என வைத்துக்கொள்வோம். இப்படித் தொடர்ந்து 10 ஆண்டுகள் புகைபிடித்தால், அவரது உடல்நிலை, 20 ஆண்டுகளாக புகைபிடிப்பவரின் உடல்நிலைக்குச் சமமாகிவிடும். இதுபோன்ற நிலையில், அவருக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம்.

 

இதில், நாம் ஆறுதல் அடையக்கூடிய விஷயம் ஒன்று இருக்கிறது. நுரையீரல் புற்றுநோயின் அறிகுறி தெரிந்தவுடன், ஆரம்பத்திலேயே அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டால், அதை முற்றிலும் குணப்படுத்திவிடலாம்! 

புற்றுநோயின் அறிகுறிகள்...

* தொடர்ச்சியாக தொண்டைவலியோ, உணவை விழுங்கும்போது தீவிரவலியோ ஏற்பட்டால், அது டிஸ்பேகியாவாக (Dysphagia) இருக்கலாம். டிஸ்பேகியா நுரையீரல் புற்றுநோயுடன் தொடர்புடையது. இது, மிகவும் அபாயமான அறிகுறியும்கூட. புற்றுநோய் தொண்டையிலிருந்து உணவுக்குழாய் வரை பரவும்போது, இதுபோன்ற வலிகள் ஏற்படும்.

* தொடர்ச்சியாக உடல்வலி இருப்பின் அதுவும் நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறியே. புற்றுநோய் செல்கள் எலும்புகளில் பரவி, அவற்றை வலுவிழக்கச் செய்வதால் வலி ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் கடுமையான வலி ஏற்படும். தொடர்ந்து முதுகு, தோள்பட்டை, கைகள் மற்றும் கழுத்துகளில் அதிக வலி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

* சிலருக்கு மார்பகத்தில் நீண்ட நேரத்துக்கு மிதமான வலி இருக்கும். சிலருக்கு நுரையீரலைச் சுற்றி கூர்மையான வலி அவ்வப்போது ஏற்படும். இதனுடன் சேர்ந்து முதுகு, தோள்பட்டையிலும் வலி உண்டாகும்.

புற்று நோய்

* திடீரென அசாதாரணமான, அதிகளவு எடை இழப்பு ஏற்படும். பொதுவாகவே உடல் எடை அதிக அளவில் குறைவதென்பது, `உடல் ஆரோக்கியமாக இல்லை’ என்பதைக் குறிக்கும். ஆனால், புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு இதுவே முக்கிய அறிகுறி. ஏனெனில், புற்றுநோய் உண்டாக்கும் செல்கள், உங்கள் உடம்பில் உள்ள ஆற்றலைக் கட்டுப்படுத்துகின்றன. அத்துடன் தேவையின்றி சத்துக்களை வெளியே தள்ளுகின்றன.

* நீங்கள் மூச்சை உள்ளிழுக்கும்போதும், வெளியேற்றும்போதும் விசில் அடிப்பதுபோன்ற சத்தத்தை உணர்கிறீர்களா? இதற்கு சுவாசப் பாதையிலுள்ள வீக்கம் அல்லது அடைப்பு காரணமாக வரும் மூச்சுத்திணறலே காரணம். பொதுவாக மாசு, அலர்ஜி, தூசியின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்படலாம். ஆனால் இதுவும் நுரையீரல் புற்றுநோய்க்கு ஓர் அறிகுறியே.

* உங்களின் குரல் கரகரப்பாக மாறி இருக்கிறதா? அப்படி என்றால் உப்பு போட்ட வெதுவெதுப்பான நீரால் வாயைக் கொப்பளியுங்கள். அதைச் செய்த பிறகும் உங்கள் குரல் அப்படியே இருந்தால், உடனே மருத்துவரை நாடுங்கள். ஒருவேளை, குரல் வளையில் உள்ள நரம்புகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இதற்குத் தகுந்த சிகிச்சை எடுக்கவில்லை என்றால், உங்கள் குரல் வளையை இது குலைத்துவிடும்; குரல் வளத்தையும் பாதித்துவிடும். 

சுகாதாரமான சுற்றுச்சூழலில் வசிப்பது, சமச்சீரான உணவுகளை உட்கொள்வது, சரியான வாழ்வியல் முறையைப் பின்பற்றுவது ஆகியவை நுரையீரல் புற்றுநோயில் இருந்து நம்மைத் விலக்கி வைத்திருக்கும். இதன் அறிகுறி தென்பட்டால், கவலைப்படாமல் உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால், முழுமையாக இதன் பிடியில் இருந்து விடுபடலாம்.

http://www.vikatan.com/news/health/83268-causes-and-symptoms-for-lung-cancer.html

Link to post
Share on other sites

அதிகரிக்கும் தற்கொலைகள்... காரணமாகும் மனஅழுத்தம்... விரட்டியடிக்கும் திறவுகோல் எது? #MustRead

‘நான் பயங்கர டென்ஷன்ல இருக்கேம்ப்பா...’ (Yes I’m Stressed...) இந்த வாசகத்தை உபயோகிக்காதவர்கள் எவரும் இல்லை. அவ்வளவு ஏன்... குழந்தைகள்கூட சர்வ சாதாரணமாகச் சொல்லக்கூடிய வாசகமாகிவிட்டது இது! 

மனஅழுத்தம்

அதீத உழைப்பும் ஆபத்தே!

‘அதிகமாக வேலை பார்த்தால் டென்ஷன் குறையும்’ (Less Tension More Work) என்ற வாசகம்கூட உற்பத்தித்திறனை (Productivity) மையப்படுத்தியே உருவாக்கப்பட்டிருக்கும் எனத் தோன்றுகிறது. இந்த நூற்றாண்டில்தான் `டென்ஷன்’ என்ற வார்த்தை மிக இயல்பாக புழங்கிக்கொண்டிருக்கிறது. அதாவது உலகமயமாக்கல், குழந்தைகளைக்கூட விட்டுவைக்கவில்லை. 

ஒரே கலாசாரம், கல்வி முறையில் இருப்பவர்களுக்குள் நிகழ்ந்த போட்டியைவிட உலகமயமாக்கலுக்குப் பின்னர் பூமத்திய ரேகை தாண்டியும் போட்டியிடவேண்டிய அவசியத்தை நாம் உருவாக்கிக்கொண்டோம். இதில் வெவ்வேறு நேர மண்டலங்களையும் (Time Zone) இருக்கும் 24 மணி நேரத்துக்குள் அடக்கிக்கொள்ளும் எல்லையற்ற சுதந்திரம் வளர்ச்சிதான் என்றாலும், ஏதோ ஒரு கட்டத்தில் அந்த முன்னேற்றத்தை வரைமுறைப்படுத்தவும், `போதும்’ என நிறுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்படாமலேயே வாழ்கிறோம். சிறு வயதில் சைக்கிள் ஓட்ட ஆசைப்படும் காலத்தில், எப்படியோ பெடலில் கால் வைத்து ஏறி மிதிப்போம், வானத்தில் பறப்பதுபோல இருக்கும். நாம் பெரியவர்களாகிவிட்டோம் என்கிற நினைப்பும் கூடவே ஓடும். ஆனால், சில அடிகள் நகர்ந்து போனதும், எப்படி இறங்குவது எனத் தெரியாமல் விழிப்போம். அதைப்போன்றே இன்றைய வாழ்க்கைச் சூழலும் அமைந்துவிட்டது. `சூரியன் உதிப்பதற்கு முன்னர் எழு! அஸ்தமனத்துக்குள் வேலைகளை முடித்துக்கொள்! நிலவொளியில் தூங்கு!’ என்பதெல்லாம் மாறிப் போக, இயற்கைக்கு எதிர்த்திசையில்... சொல்லப்போனால் எதிரி திசையிலேயே பயணித்துக்கொண்டிருக்கிறோம். 

தத்துவவாதியும், மானுடவியலாளருமான ஹெர்பெர்ட் ஸ்பென்ஸர் (Herbert Spencer) முதன்முறையாக உதிர்த்த தத்துவம்தான் `வலுவுள்ளவனே வாழத் தகுந்தவன்’ (Survival of the fittest) எனும் பரிணாமக் கொள்கை. அது இன்று ஆழ்மனதில், நம் அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகளின் ஒவ்வொரு செயலிலும் தெரிகிறது. இதில் உடலும் மனமும் சதா உழைப்பதற்காகவே ஆயத்தப்படுத்தப்படுகிறது. இங்கு இளைப்பாறுவதற்கான காலங்கள்கூட சோம்பல் என்ற வகையில் முகம் சுளிப்புக்குள்ளாவதை பலரும் உணர்ந்திருப்போம். `உடல் சோர்வாக இருக்கிறது; ஓய்வெடுக்கலாம்’ என நினைத்தால், எத்தனை பேரால் அதை நிகழ்த்திக்கொள்ள முடியும்? பெரும்பாலானவர்களால் நிச்சயம் முடியாது. காரணம், ஒவ்வொரு மணித் துளிகளையும் கணக்கிட்டு செலவழித்துக்கொண்டிருக்கும் நாம், உண்மையில் பயணிப்பதை விரும்பத் தொடங்கி, இறுதியில் வேகத் தடைகளையும் மதிக்காமல் பிரேக் இல்லாத வண்டிபோல எங்கேயாவது முட்டி நிற்கும்வரை ஓடிக்கொண்டிருக்க முனைகிறோம். அது பெரும்பாலும் இயல்பான நிறுத்தமாக இல்லாமல், ஆக்ஸிடன்ட்டாகவே முடிந்து போகிறது என்பதுதான் சோகம். 

மனஅழுத்தம்

ஐம்பது வருடங்களுக்கு முன்பெல்லாம், பத்து மாதத்துக்கு மேலாகியும் ஓரிரு வாரங்கள் கூடுதலாக வயிற்றில் பிள்ளையைச் சுமந்த தாய்மார்களைப் பற்றிக் கேட்டிருப்போம் இப்போதெல்லாம் டாக்டரின் இருப்பையும், பேறுகால விடுமுறையை கணக்கில் வைத்தும் அறுவைசிகிச்சைக்கான தேதி குறிக்கப்படுகிறது. இதில் தனி மனிதர்கள் மீது தவறு எனச் சொல்வதற்கில்லை. அவசரம் இல்லாத மனிதர்கள், வளர்ச்சியின் பாதையில் புறக்கணிக்கப்படுவதாக ஒரு கூற்றும் உண்டு. எனவே, ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தானே ரோபோவைப்போல வடிவமைத்துக்கொள்கிறோம் இதில் நாமாக நமக்கு வைத்துக்கொள்ளும் டார்கெட்தான் ஆபத்தை வரவேற்கச் செய்யும் முதல் செயல்பாடு.

உடலும் மனமும் ஒருங்கிணைக்கப்படாத இடத்தில் நோய்கள் சூழும்!

உடல் களைத்துப் போய் இருந்தாலும், உடல்மொழியையும் மனச்சோர்வையும் நாம் குரல் கொடுத்துக் கேட்பதில்லை. கேட்கப்படாத மனதின் இந்தக் குமுறல்தான் இன்று பெண்கள் மத்தியில் மிக அதிகமாக இருக்கிறது; இள வயதுப் பிள்ளைகளையும் தொடர்கிறது. இதுதான் பின்னாளில் உயிரை வாங்கும் தற்கொலையைத் தூண்டும் மனஅழுத்த நோயாகவும் மாறிவிடுகிறது. 

மனஅழுத்தம் என்பது ஒரே நாளில் நிகழ்ந்துவிடுகின்றதா என்றால், அது மிக மிக அரிது என்று சொல்லலாம். அப்படியென்றால், மனஅழுத்தம் எப்படி அவதரிக்கிறது... இது அனைவருக்கும் வருமா? எனக் கேட்டால், மரபணுரீதியில் சிலருக்கும், வாழ்வியல் முறை நோய்கள் (Lifestyle Diseases) வழியில் பலருக்கும் இது நிகழும். 

குறிக்கோள்களை குறிபார்க்கும் மனஅழுத்தம்

குறிக்கோள் (Ambition - Aim) இதுதான் நாம் வாழ்ந்துகொண்டிருப்பதற்கான அடையாளம். இறுக்கமாக பின்னப்பட்ட வீணைக் கம்பிகளில் முன்னும் பின்னுமாக மீட்டப்படும் மெல்லிசையைப்போல, ஒவ்வொரு செயலையும் ஆனந்தமாக விரைந்து செய்ய, மனிதனுக்காக இயற்கை கொடுத்த செயலியாகத்தான் குறிக்கோள்களை நான் கருதுகிறேன். ஒருவேளை, குறிக்கோள் எனும் இந்தச் செயலி இல்லாமல் போனால், மனிதர்கள் எல்லோரும் ஏதுமற்ற ஏகாந்த நிலையில் தேவைகள் தேவைப்படாமல் வாழ்ந்துகொண்டிருக்கலாம். இன்று இந்த அறிவியலும், மனித வாழ்வியல் வளர்ச்சிகளும் ஏன் மனிதனின் பரிணாம வளர்ச்சியும்கூட திசைமாறியிருக்கலாம். மனிதனை இயக்கும் குறிக்கோள் எனும் இந்தச் செயலியின் மேனுவல் (Manual) மனிதனால்தான் உருவாக்கப்படுகிறது என்றாலும், முன்னர் குறிப்பிட்டதுபோல வீணைக் கம்பியின் லாகவமான இறுக்க அளவில் குறிக்கோள்களைக் கையாளும்வரை இந்தச் செயலி பிரச்னையின்றி செயல்பட முற்படும். எப்போது இதன் இறுக்கம் அதிகமாகி, எதிர்பார்ப்பு எனும் அழுத்தம் கூடுகிறதோ, அப்போதே உடலும் மனமும் ஓய்வுக்கான அறிகுறியாக, தவறு (Error) காட்ட முற்பட்டுவிடும். மனநலக் காப்பாளர், ரமா இன்பா சுப்ரமணியத்தின் ஒரு வாசகத்தை இங்கு நினைவுகூர விரும்புகிறேன்... `மன அழுத்தத்தின் நுழைவாயில் டென்ஷன்’ (Tension is the Gateway of Stress). இந்தத் தவறுதான் மனதில் அழுத்தத்தை உருவாக்கி, `டென்ஷன்தானே..!’ என நாம் ஒதுக்கும் உணர்வை, ஸ்ட்ரெஸ் ஆக உருவாக்குகிறது. 

தற்கொலை

பாபுவுக்கு 12 வயது. ஐந்து வயதிலிருந்தே சங்கீதம்தான் அவன் இலக்கு. வசதி குறைவு மற்றும் சுற்றுப்புறச்சூழலால் வீட்டுக்கு அருகிலேயே கிடைத்த ஒரு குருவை ஏற்று, சங்கீதம் கற்றான். இருந்தாலும், தேர்ந்த குருவிடம் சங்கீதம் கற்க பணமும் வாய்ப்பும் கிடைக்கவில்லையே எனச் சஞ்சலப்படவும் தொடங்கினான். ஆரம்பத்தில் வீட்டில் அவனுடைய சங்கீத ஆர்வத்துக்கு மறுப்புதான் பதிலாகக் கிடைத்தது. பக்கத்து வீட்டு சங்கரைப்போல கம்ப்யூட்டர், கராத்தே ஆகியவற்றில் சேர்க்கவே வீட்டார் விரும்பினார்கள். பிறகு, வேறு வழியின்றி ஒப்புக்கொண்டார்கள். ஓரிரு கோயில்களில் அவன் இறை வாழ்த்துப் பாடியதும் கிடைத்த கைதட்டல்களும் வாழ்த்துக்களும் அவனை மெய்சிலிர்க்கச் செய்தன. `மற்றவர்போல நாம் இல்லை’ என்ற உணர்வும், இதை அப்படியே தக்கவைத்துக்கொள்ளவேண்டிய எண்ணமும் வந்தது. உடன் இருந்தவர்கள், `ஆஹா... `பாட்டு போட்டி’ல கலக்கிடுவடா பாபு’ எனச் சொன்னதும் இன்னமும் பிரஷர் ஏற ஆரம்பித்தது. இனி சரியாகப் பாடவில்லை (Perform செய்யவில்லை) என்றால் மானம் போகும் என்பதை மெள்ள மெள்ள உணர ஆரம்பித்திருந்தான் பாபு. 

அடுத்து நடந்த ஒரு பள்ளிப் போட்டியில் பாபு தோல்வி அடைந்தான். மேலும் ஓரிரு போட்டிகளிலும் அதே நிலை. `சரி சங்கீதத்தை விட்டுவிடலாம்’ என்றால், நெருங்கியவர்களும் உடன் இருப்பவர்களும் அவன் மீது வைதிருந்த நம்பிக்கையும், `இவ்வளவு காசு செலவு பண்ணியிருக்கேன்... ஆரம்பத்துலயே சொன்னேன் கேட்டியா? நீ வேஸ்டு...’ என இவனைப் புரிந்துகொள்ளாத குடும்பச் சூழலும் நிலவுகின்றன. இந்த நிலையில், குறிக்கோள் குப்புறச் சாய்ப்பதும் சாத்தியமே. தன்நம்பிக்கை வழியும், முயற்சியின் வழியும் இயல்பாக நிகழவேண்டிய செயல், அழுத்தம் காரணமாக நிகழ்த்தியே ஆகவேண்டும் என்ற பரபரப்பை உண்டாக்குகிறது. இது நம்மாலும் நம்மைச் சார்ந்தவர்களாலும் போட்டிகள் நிறைந்த இவ்வுலகத்தாலும்தான் உருவாக்கப்படுகிறது.

மனஅழுத்தம் (Stress) ஒரு நோய் அல்ல!

குடும்பத்தாரின் நேர்மறையான அணுகுமுறை (Positive Approach), ஊக்கம் இவை கிடைத்தால் நிச்சயம் மனஅழுத்தம் என்பது, எளிதில் களையக்கூடிய ஒன்று. ஆனால், அந்த ஆறுதல் கிடைக்காத பட்சத்தில் ஏமாற்றத்தால் மனமுடைந்து தூக்கமிழப்பதும், உணவில் கவனம் செலுத்தாமல் இருப்பதும், போதுமான அளவுக்குத் தண்ணீர் அருந்தாத நிலையும் களைப்புக்கு உள்ளாகவைக்கும். பின்னர் அதுவே இயலாமையை அதிகப்படுத்தி, நம்பிக்கையின்மையும் உண்டாக்கும். ஒரு கட்டத்தில் தனக்கு யாருமில்லை என்ற ஆதரவற்ற நிலையில் ஏற்படும் சுயபச்சாதாபத்தையும் உருவாக்கிவிடும். இப்படி குடும்பத்தில் புரிதல் கிடைக்காமல், குறிக்கோள்களில் தோல்விகளைச் சந்திக்கும்போது இயற்கையின் எச்சரிக்கை மணியை மதிக்காமல் மனச்சோர்வுடன் டார்கெட்டை நோக்கி ஓடுபவர்களை மனஅழுத்தம் அதன் அடுத்த கட்ட தாக்குதலான `மனச்சிதைவு’ எனும் நிலைக்குத் தள்ளிவிடுகிறது. 

அப்படி என்னதான் உடலில் நிகழ்ந்துவிடும்?

உணர்வுச் சமநிலையின் (Emotional Balance) ஒரு பகுதியாக இது பார்க்கப்பட்டாலும், உடலில் அப்படி என்னதான் நிகழ்ந்துவிடுகிறது என யோசித்தால், `மூளையின் நியூரோட்ரான்ஸ்மிட்டரில் நிகழும் மாறுதல்கள்தான் மனஅழுத்தத்தை உருவாக்குகிறது’ என்கிறார்கள் வல்லுநர்கள். பல வேதிப் பொருட்களைத் தாங்கிய நம் மூளைப் பகுதியில், சில வேதிப் பொருட்கள் நம் வேகத்தைக் கூட்டவும், சில நம்மை அமைதிப்படுத்தவும் பயன்படுகின்றன. இதில் நிகழும் மாறுதல்கள்தான் மனஅழுத்தம்.

உடல் பாதிப்பு

எப்படித் தெரியும்?

‘ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி வெளிப்படும் என்றாலும், படுத்தால் தூக்கம் வரவில்லை, எப்போதும் சாப்பிட்டுக்கொண்டிருப்பது அல்லது பசியில்லாமல் இருப்பது, ஒபிசிட்டி, தனக்கென யாரும் இல்லை எனும் சுயபச்சாதாபம், உதவி கோருவதில் இறுக்கம், மனநிலை ஊசலாட்டம் (Mood Swing), களவு, குற்றஉணர்வு, மிக முக்கியமாக தற்கொலை முயற்சிகள் நிகழ்வது இந்த மனஅழுத்தத்தின் வெளிப்பாடே' என்கிறார்கள் மருத்துவர்கள். 

உலக சர்வே என்ன சொல்கிறது?  

உலக சுகாதார நிறுவனம் 2015–ம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையின்படி, `உலக அளவில் 15 – 29 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிக மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள். ஆண்களைவிட பெண்களே அதிக அளவில் மனஅழுத்ததில் உழல்கிறார்கள்.’  

குறிப்பாகப் பெண்கள் ஏன்?

பெண்களைக் குறிப்பிடுவதற்கான முக்கியக் காரணம், அவர்கள் உடம்பில் இருக்கும் ஹார்மோன்களின் வடிமைப்புகள்தான் இதில் பெரும் பங்காற்றுகின்றன. ஆண்களின் உடம்பைவிட பல்வேறு வேதியல் மாற்றங்களுக்கு மிக எளிதாக மாறவேண்டிய நிலையில் இருக்கும் பெண்களின் உடலும் மனமும் அதிக ஓய்வு தேவைப்படுபவை. எனவேதான், `நாளொன்றுக்கு ஆண்களுக்கு 6 மணி நேரத் தூக்கமும், பெண்களுக்கு 8 மணி நேரத் தூக்கமும் அவசியம்’ என அறிவியலாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இளைப்பாறுங்கள்!

வளர்ச்சி மற்றும் குறிக்கோள்கள் மிக அவசியமானவை. என்றாலும், அவற்றின் அளவுகோலை நம் உடல் சூழல் மற்றும் மன திடத்துக்கு ஏற்ப அமைத்துக்கொள்ள வேண்டும். 

`போட்டிகள் நிறைந்த உலகம்’ எனச் சொல்லிக்கொண்டு, குறிக்கோள் எனும் செயலியை அடுத்தவரின் தகுதியை வைத்து நம் இலக்கை நிர்ணயிக்க வேண்டாம். இது பெரும்பாலும் பேரன்ட்டல் கைடுலைனில் கொடுக்கப்படும் அறிவுரைதான் என்றாலும், நம் அனைவருக்குமே இது பொருந்தும் . 

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு என உணர்ந்து, அதன் வழி நம் குறிக்கோள்களைத் திட்டமிடுவோம். குறிக்கோள்கள், பல சமயங்களில் சுற்றுச்சூழலாலும், பால்யத்தின் பதிவுகளாலும் உருவாக்கப்பட்டிருக்கலாம். எனவே, குறிக்கோள்களை அடைய மனஅழுத்தம் இன்றி தன்னம்பிக்கையோடு முனையுங்கள். இலக்கு எட்டப்படவில்லை என்றாலும், வாழ்க்கை முடிந்துவிடப் போவதில்லை. வாழ்க்கையின் ஓட்டத்தில் குறிக்கோள்களும் நம் தேவைகளுக்கு ஏற்ப மறுபரிசீலனைக்கு உட்பட்டவையே. 

மனமும் உடலும் நோயின்றி இருக்க வாழ்க்கை ஓட்டத்துக்கு இடையே இளைப்பாறுங்கள். அதுதான் மனஅழுத்ததை விரட்டியடிக்கும் ஆரோக்கியத்தின் திறவுகோல். 

மனநல ஆலோசனை

மனநல ஆலோசனை மிக அவசியம்!

வெற்றியில் உடன் இருக்க அவசியமில்லை; தோல்வி என்றால், தோள் கொடுத்தால் போதும். மனநல ஆலோசகரின் உதவியுடன் எளிதில் இயல்பு நிலைக்கு மாறிவிடலாம். டென்ஷன், மனஅழுத்தம் இவற்றைக் குடும்ப உறுப்பினர்கள் நினைத்தால் எளிதில் சரிசெய்துவிடலாம். பாதிக்கப்பட்டவர் பேசும்போது `உம்...’ கொட்டும் குணத்தை மட்டும் கையாளுங்கள். அவர்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டாமல், விட்டுக் கொடுத்து முதுகை வருடிவிடுங்கள். அது அவர்களின் குறிக்கோள்களை மீண்டும் தட்டியெழுப்பி, சாதிக்கவும் உதவலாம். மன அயர்ச்சியில் இருக்கும் எவரைச் சந்தித்தாலும் அன்புடன் அணுகுங்கள். மனநல ஆலோசகரிடம் செல்பவர்கள் எல்லாம் பைத்தியக்காரர்களாகப் பார்க்கப்படும் மனத்தடையெல்லாம் மாறிவிட்டன. அலுவலகம், பள்ளி, மருத்துவமனை... என எல்லா இடங்களில் இன்று கவுன்சலிங் வெகு எளிதில் கிடைக்கிறது. பல ஐடி கம்பெனிகளில் `ஸ்ட்ரெஸ் பால்’ (Stress Ball) வழங்குவதுபோல மனஅழுத்த ஆலோசனைகளும் சர்வ சாதாரணமாக நிகழ ஆரம்பித்துவிட்டன. 

வருமுன் காப்போம்! (Prevention is better than cure) 

மனஅழுத்தத்தோடு இருப்பதாக உணரும்போதே மனநல ஆலோசகரை அணுகி, அதற்கான வாழ்வியல் மாற்றங்களைக் கையாளுங்கள். தற்கொலை எண்ணங்கள் நிகழாமல் ஆரோக்கியமாக வாழ இது மிக அவசியம். 

 

வாழ்க்கை சுமைதாங்கி மட்டும் அல்ல; அது இளைப்பாறவும் தகுதியான இடமே. எனவே, வாழ்க்கையை நம் மனநிலைக்கு ஏற்ப பழக்கப்படுத்திக்கொள்வோம். வருமுன் காப்போம்!

http://www.vikatan.com/news/health/82768-how-to-overcome-the-stress.html

Link to post
Share on other sites

சர்க்கரை நோயாளிகள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய குறிப்புகள்! #HealthTips

இது ஒரு நோயல்ல... குறைபாடு. கணையத்தின் பீட்டா செல்களால் இன்சுலினை சுரக்க முடியாமல் போகும்போது ரத்தத்தில் சேரும் குளூக்கோஸின் அளவு கூடும். இதைத்தான் `டயாபடீஸ்’ என ஆங்கிலத்திலும் `சர்க்கரைநோய்’ எனத் தமிழிலும் சொல்கிறோம். மற்ற நாடுகளில் 55 வயதிலும், இந்தியாவில் 40 வயதிலும் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்’ என்கின்றன ஆய்வுகள். சர்க்கரைநோய், உடலுக்குப் பலவிதமான நோய்களைக் கொண்டுவந்து சேர்க்கும் நுழைவாயில். இதயநோய், சிறுநீரகக் கோளாறு, பக்கவாதம்... என ஒரு பெரும் பட்டியலே உண்டு. சரி... சர்க்கரைநோயை முற்றிலுமாகப் போக்க முடியுமா? முடியாது. ஆனால், கட்டுக்குள் வைத்திருக்கலாம். அதன் மூலம் ஆரோக்கியத்தைப் பராமரிக்கலாம். சர்க்கரைநோய் என்றால் என்ன, ஏற்பட என்ன காரணம், தவிர்க்கவேண்டிய உணவுகள், பின்பற்றவேண்டிய வழிமுறைகள்... அனைத்தையும் பார்க்கலாம். 

சர்க்கரை நோயாளிகள்

வகைகள் 

டைப் 1 சர்க்கரைநோய்:  சிறு வயதிலேயே ஏற்படும் இவ்வகையில், கணையத்தால் இன்சுலினைச் சுரக்க முடிவதில்லை. எனவே, உடலுக்குத் தேவையான இன்சுலினை வெளியே இருந்து உடலுக்குள் செலுத்தவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனால் மாத்திரைகளுடன் ஊசி மருந்தும் கட்டாயமாக்கப்படும். இவ்வகை சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், குறைவான எடையுள்ளவர்களாக இருப்பார்கள்.

டைப் 2 சர்க்கரைநோய்: பெரியவர்களுக்கு ஏற்படும் இந்த வகையில் இன்சுலின் சுரப்பு இருந்தாலும், மிக மெதுவாகத்தான் தன் பணியைச் செய்யும். எனவேதான் மாத்திரைகளுடன் உடற்பயிற்சி செய்யவேண்டியிருக்கும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவைப்படும். இந்த வகை டயபடீஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக உடல் எடையுடன் இருப்பார்கள். 

காரணங்கள் 

அக்யூட் ஸ்ட்ரெஸ் (Acute stress): மனஅழுத்தம் ஹார்மோன் சமநிலையைப் பாதிப்பதால், இன்சுலின் பணி மந்தமடையும். 

உணவு: உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகளை அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கும், உடல்பருமன் அதிகரித்து அதை கவனத்தில்கொள்ளாமல் இருப்பவர்களுக்கும் சர்க்கரைநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

பரம்பரை: பரம்பரையில் யாருக்காவது சர்க்கரைநோய் இருந்தால், தலைமுறைப் பண்புகளைக் கொண்டு செல்லும் ஜீன்கள் டைப்-2 டயாபடீஸை உருவாக்கும். அதிகக் குழந்தைகளைப் பெற்ற பெண்கள், அவர்களின் வயதான காலத்தில் டைப்-2 டயாபடீஸால் பாதிக்கப்படுவார்கள். 

தொற்று: சில சமயங்களில் காயங்களாலோ, அறுவைசிகிச்சையின்போதோ ஏற்படும் தொற்றுகள் ஹார்மோன்களைப் பாதிப்பதால், சுரப்பிகளின் பணி நின்றுபோகும். டைப் 1 சர்க்கரைநோயை ஏற்படுத்தும் இந்த வைரஸ்கள், நோய் எதிர்ப்புச் சக்தியை பாதித்து, இன்சுலினைச் சுரக்கும் கணையத்தின் (பான்கிரியாஸ்) செல்களை அழிக்கக்கூடியவை. 

வயது: பொதுவாக நடுவயதினரை இது தாக்கும். 

அதீதக் கொழுப்பு: உடல்பருமனால் இடுப்பைச் சுற்றிச் சேரும் அதிகக் கொழுப்பு, இன்சுலினின் பணியை முடக்கும். 

கர்ப்பகாலம்: இந்தச் சமயத்தில் பிளசென்ட்டாவின் ஹார்மோன்களால் இன்சுலின் அளவு கூடும். இதனால் டயாபடீஸ் ஏற்படும். 

அறிகுறிகள்... 
* அதிக தாகம்

* அதிகப் பசி

* அடிக்கடி சிறுநீர் கழித்தல் 

* மங்கும் பார்வைத்திறன்

* எடை கூடுதல் அல்லது குறைதல்

* புண்கள் ஆறும் தன்மை குறைதல் 

* தோல் அரிப்பு

* சிறுநீர்த் தொற்று

* நீர்ச் சமநிலைக் குறைபாடு

இந்த அறிகுறிகளுக்குப் பின்னரும் சர்க்கரைநோய்க்கான சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால், கோமாவோ உயிரிழப்போகூட ஏற்படலாம்.

சர்க்கரை நோய் அறிகுறி மற்றும் கண்டறியும் முறைகள்

கண்டறியும் முறைகள்... 

சிறுநீரகப் பரிசோதனை: வெறும் வயிற்றிலும் சாப்பிட்ட பின்னரும் இரண்டு மணி நேரம் கழித்து சிறுநீர் சாம்பிள் எடுக்கப்பட்டு டெஸ்ட் செய்யப்படும். இது நோயின் தாக்கத்தைப்  பொறுத்து `+’ முதல் `+ + + +’  வரை என குறிப்பிடப்படும். 

ரத்தப் பரிசோதனை: இதன் சாம்பிளும் வெறும் வயிற்றிலும், காலை உணவுக்குப் பின்னரும் இரண்டு மணி நேரம் கழித்து எடுக்கப்பட்டு டெஸ்ட் செய்யப்படும். இதில் கணக்கிடப்படும் அளவு 110 mg/dl - 180 mg/dl-க்கு அதிகமாக இருந்தால் `டயாபடீஸ்’ என்கிறார்கள். 

HbA1C டெஸ்ட்: இதுவும் ஒரு ரத்தப் பரிசோதனைதான். இதன் மதிப்பு 7 அல்லது 7-க்கு கீழே இருந்தால் நார்மல். உடலின் சுகர் கட்டுப்பாட்டு திறனை அறிய உதவுகிறது. 

சிகிச்சை முறைகள்... 

சிகிச்சையின் முக்கிய அம்சங்களில் 

* உணவு

* உடற்பயிற்சி

* இன்சுலின் ஊசி மருந்துடன் மாத்திரைகள்

* டயாபடீஸைக் குறித்த விழிப்புணர்வு
ஆகியவை அடங்கும். 

சர்க்கரை நோயாளிகள் சேர்த்துக்கொள்ளவேண்டிய உணவு நட்ஸ்

சேர்த்துக்கொள்ளவேண்டிய உணவுகள்... 

* கீரைகள்

* சூப் வகைகள்

* எலுமிச்சை

* வெங்காயம்

* புதினா

* வெண்ணெய் எடுக்கப்பட்ட மோர்

* நட்ஸ்

* நறுமணமூட்டிகள் (Spices).

தவிர்க்கவேண்டிய உணவுகள்... 

* தேன் 

* சர்க்கரை 

* ஸ்வீட்ஸ்

* டிரை ஃப்ரூட்ஸ்

* குளூகோஸ் 

* சாக்லேட், மிட்டாய் போன்ற நேரடி இனிப்புகள்

* கேக், பேஸ்ட்ரீஸ்

* பொரித்த உணவுகள்

* இனிப்பான குளிர் பானங்கள்

* மது

* ஜூஸ் வகைகள்

தேன் front_%282%29_17568.jpg chocolate_17392.jpg

சாப்பிடவேண்டிய மாதிரி மெனு... 

காலை எழுந்தவுடன்… 

வெதுவெதுப்பான நீர், ஒரு கிளாஸ் லெமன் டீ
(அல்லது)
ஆடை நீக்கப்பட்ட ஒரு டம்ளர் பால்.

காலை உணவு

இட்லி-2, தோசை-1, சாம்பார் - 1 கிண்ணம், மீடியம் சைஸ் ஆப்பிள் (அல்லது)
சப்பாத்தி-2, சென்னா மசாலா - 1/2 கிண்ணம், கொய்யா-1 
(அல்லது)
கோதுமை பிரெட், முட்டை வெள்ளைக்கரு ஆம்லெட், ஆப்பிள்-1.

காலை இடை உணவு

தயிருடன் கலந்த வெள்ளரி சாலட் 
(அல்லது)
ஏதாவது ஒரு சூப் - 1 கப்.

மதிய உணவு

சாதம் - 100 கிராம், பருப்பு - 20 கிராம் (அல்லது) சாம்பார் - 1/2 கப், அரைக்கீரை அல்லது பொன்னாங்கண்ணி பொரியல் - 100 கிராம், கத்திரிக்காய் புளி கொத்சு - 100 கிராம், மோர் - 1 டம்ளர். 

(அல்லது)

சிக்கன் சூப் - 1 கப், ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் - 20கி, ஃப்ரைடு ரைஸ் - 100 கி (வீட்டில் தயாரிக்கப்பட்டவை), வறுத்த கோழி - 2 லெக் பீஸ், ஆலோவேரா டிரிங்க் - 1 கிளாஸ்.

மாலை

2 - 3 பாதாம் பருப்புகள், லெமன் ஜூஸ் - 1கிளாஸ்
(அல்லது)
பாசிப் பயறு சுண்டல் (50கி), ஆடை நீக்கப்பட்ட பால் - 1 கிளாஸ்.

இரவு உணவு

ஃபுல்கா சப்பாத்தி (2), சென்னா மசாலா, பருப்பு, பயறு – அரை கப், தயிர் பச்சடி - 30 கிராம்
(அல்லது)
சோள சிறுதானிய தோசை (2-3), புதினா சட்னி – அரை கப். 
(அல்லது)
வெஜிடபிள் சாண்ட்விச் - 2.

படுப்பதற்கு முன்னர்...

ஆப்பிள், கொய்யா, திராட்சை கலந்த சாலட் (அல்லது) ஏதாவது ஒரு பழம், ஆடை நீக்கப்பட்ட பால் - 1 கிளாஸ்.

பழங்கள்

சர்க்கரைநோயாளிகளுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் சில உணவுகள்...

* வெஜிடபிள் சாலட்

* ஃப்ரூட் சாலட்

* ஆவியில் வேகவைத்த உணவுகள் (இட்லி, இடியாப்பம், கொழுக்கட்டை)

* வேகவைத்த மீன்

* முட்டை வெள்ளைக்கரு ஆம்லெட்

* பருப்பு, பயறு, சுண்டல் வகைகள்

* கீரைப் பொரியல்

* இனிப்பு இல்லாத காபி, டீ

* இனிப்பு இல்லாத இஞ்சி டீ, பிளாக் டீ

* எல்லா வகையான சூப்

பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள்

பின்பற்றவேண்டிய சில விஷயங்கள்... 

* மேலே குறிப்பிடப்பட்டுள்ள உணவு முறையை பின்பற்றவேண்டியது அவசியம்.

* பசியைத் தாங்கக்கூடிய, ஆனால் கட்டுப்பாடான உணவுமுறை அவசியம். கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்பதற்காக பசியோடு இருக்கக் கூடாது. 

* குறைந்த எண்ணெயிலும் உப்பு இல்லாமலும் சமைப்பது நல்லது. பொரித்த உணவுகள், கொழுப்பு உணவுகளைத் தவிர்க்கவும்.

* அடிக்கடி தண்ணீர் குடிக்கவும். உணவுக்கு முன்னர் அருந்தும் ஒரு டம்ளர் நீர், உணவின் அளவைக் குறைக்கும்.

* அதிகமாக வேகவைக்கப்படும் காய்களிலிருந்து சத்துகள் வெளியேறி வீணாகும். உணவை அளவோடு வேகவைத்தால், சத்துகள் முழுவதுமாகக் கிடைக்கும்.

* ஒவ்வொரு மூன்று மாதத்துக்கும் ஒரு முறை உடலில் சர்க்கரை அளவைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். 

* கட்டுப்பாடான உணவும் உடற்பயிற்சியும் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

* சாப்பிட்ட உணவின் கலோரிகளைப் பயன்படுத்தும் அளவுக்கு சுறுசுறுப்பாக இருக்கவும் வேலை செய்யவும் வேண்டும். 

* டயட்டீஷியனின் ஆலோசனையின்போது, நமக்குள்ள அசௌகரியங்களைக் குறிப்பிட்டு ஆலோசனை பெற வேண்டும்.

* ஆறு மாதத்துக்கு ஒரு முறை உடல் பரிசோதனையும், மாதத்துக்கு ஒரு முறை எடை பரிசோதனையும் செய்துகொள்ள வேண்டும். 

* உங்கள் மருத்துவர் அல்லது உணவு ஆலோசனை நிபுணர் பரிந்துரைத்த சத்தான உணவு வகைகளை உட்கொள்ளவும். 

* மருத்துவரின் அறிவுரைப்படி சிறந்த உடற்பயிற்சிகளை, குறைந்தது 30 நிமிடங்களுக்குச் செய்ய வேண்டும். 

* பரிந்துரை செய்யப்பட்ட மருந்துகளைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும். 

* கால் பாதங்களில் வெட்டுகள், கொப்புளம், புண், வீக்கம் அல்லது காயங்கள் இருக்கின்றனவா என்று தினமும் பரிசோதிப்பது நல்லது. வெளியில் சென்று வந்தவுடன் கால்களை நன்கு கழுவவும், இந்தப் பழக்கம் பாதங்களைப் பாதுகாக்க உதவும்.  

* தினசரி இரண்டு முறை பல் தேய்த்து வாய் கொப்பளிப்பது நல்லது. 

* ரத்த அழுத்தத்தையும் கொலஸ்ட்ராலையும் உணவு உண்ணும் முறையால் கட்டுப்பாடுடன் வைத்துக்கொள்ளவும்.

ரத்த சக்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் சிறப்பு உணவுகள்...

பாகற்காய் 

தினமும் உணவில் பாகற்காய் சேர்த்துக்கொண்டால், டயாபடீஸ் வராமல் தடுக்கும். இதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. பாகற்காயில் இருக்கும் சாரன்டின் (Charantin) ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும். இதிலுள்ள லெக்டின் (Lectin) பசியைக் கட்டுப்படுத்தி, உடலில் சேர்ந்திருக்கும் குளூக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். 

பாகற்காய்


வெந்தயம் 

வெந்தயத்தில் அதிக அளவில் எளிதாகக் கரையும் நார்ச்சத்து உள்ளது. இது, ஜீரணத்தின் வேகத்தைக் குறைத்து கார்போஹைட்ரேட் உணவுகளை உண்ணும் அளவையும் குறைக்கும். எனவே, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

வெந்தயம்

 

நெல்லி 

இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கக்கூடியது. இதில் பாலிபீனால் (Polyphenol) சத்து நிறைந்து இருக்கிறது. இது, இன்சுலின் உறிஞ்சப்படுவதற்கு உதவி செய்கிறது. இதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். தினமும் 2 நெல்லிக்காய்  உட்கொண்டுவந்தால், ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கலாம்.'

நெல்லி

கறிவேப்பிலை 

இது இன்சுலின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும். தினசரி 10 முழு கறிவேப்பிலை இலைகளைத் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் உண்டுவந்தால், பரம்பரை சர்க்கரைநோயையும், உடல்பருமனால் ஏற்படும் சர்க்கரைநோயையும் முழுவதுமாகத் தடுக்கலாம்.

கறிவேப்பிலை

கொய்யா 

கொய்யாப்பழத்தில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. இது மலச்சிக்கலை தடுத்து, டைப் - 2 சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தும். கொய்யா இலைகளும் சத்து மிகுந்தவை. கொய்யா இலைகளைக் காயவைத்து, பொடியாக்கி, நீரில் கொதிக்கவைத்து குடித்துவர, சர்க்கரைநோய் வருவதைத் தடுக்கலாம். 

கொய்யா

முருங்கை இலை 

முருங்கை இலையில் அஸ்கார்பிக் ஆசிட் (Ascorbic acid) நிறைந்துள்ளது. இது, இன்சுலின் சுரப்பை அதிகரிப்பதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும். உடலில் குளூக்கோஸ் அளவைச் சீராக்கி, இயற்கையான வழியில் டயாபடீஸை கட்டுப்படுத்தும்.

பட்டை 

தினசரி 1-6 கிராம் பட்டைப் பொடியை 40 நாட்களுக்கு உட்கொண்டால், ரத்த சர்க்கரை அளவு 18-29 சதவிகிதம் குறையும். ஒவ்வாமை இருப்பவர்கள் மட்டும் இதைத் தவிர்க்கவும்.

பட்டை

உடற்பயிற்சி

சரியான, முறையான உணவோடு உடற்பயிற்சி செய்வது சர்க்கரைநோயைக் கட்டுப்பாடாக வைத்திருக்க உதவும். உடற்பயிற்சி, இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி, ரத்த சர்க்கரை அளவை குறைக்கும். தினமும் உணவு சாப்பிட்ட அரை மணி நேரத்துக்குப் பிறகோ (உடலில் சர்க்கரை அதிகமாகும் நேரம்) அல்லது காலை வெறும் வயிற்றிலோ உடற்பயிற்சி செய்யலாம். சில நேரங்களில் உடற்பயிற்சிக்கு பின்னர் ஹைபோகிளைசீமியாவின் (Hypoglycemia) அறிகுறிகளான சர்க்கரைக் குறைபாடு ஏற்படலாம். இந்த நேரங்களில் குறைந்த சர்க்கரை அளவை ஈடுகட்ட, சக்கரைக்கட்டி அல்லது மிட்டாய் சாப்பிடலாம்.

உடற்பயிற்சி

சர்க்கரைநோயாளிகளுக்கான ஸ்பெஷல் சர்க்கரை(!) ரெசிப்பி 

டியாபெடிக் பூசணிக்காய் அல்வா

தேவையானவை: 

துருவிய பூசணிக்காய் - 1 கப், பால் - 1 கப், குங்குமப்பூ – சிறிதளவு, ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன், சுகர் ஃப்ரீ ஸ்வீட்னர் - 1 டீஸ்பூன், நெய் - 1 டீஸ்பூன், பாதாம் (துருவியது) – தேவைக்கேற்ப.

செய்முறை

வாணலியில் நெய் ஊற்றி, சூடானவுடன், துருவிய பூசணிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் பால் சேர்த்து, சுண்டும் வரை கிளறவும். பிறகு, சுகர் ஃப்ரீ, ஏலக்காய் தூள், குங்குமப் பூ சேர்த்துக்கொள்ளவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, ஓரங்களில் ஒட்டாமல் சுருண்டு வரும் வரை கிளறவும். பின்னர் ஒரு கிண்ணத்தில் வைத்து பாதாமால் அலங்கரித்துப் பரிமாறவும்.

http://www.vikatan.com/news/health/83523-health-tips-for-diabetes-patient.html

Link to post
Share on other sites

ஆண்ட்ரோபாஸ்... ஆண்களை பாதிக்கும் ஹார்மோன் பிரச்னை... கவனம்! #MensHealthAlert

`ஹார்மோன் பிரச்னை' என்று சொன்னவுடன் பெரும்பாலானவர்களுக்கு பெண்கள்தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால், பெண்களை பாதிக்கிற அதே அளவுக்கு ஹார்மோன் பிரச்னைகள் ஆண்களையும் பாதிக்கும் என்பது பலர் அறியாதது. குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு பெண்களுக்கு மாதவிடாய் நின்றுவிடும். மெனோபாஸ் (Menopause) எனப்படும் அந்த நிலை பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இதே மாதிரியான ஹார்மோன் மாற்றம் ஆண்களுக்கும் நிகழும். இதை, `ஆண்ட்ரோபாஸ்' (Andropause) என்கிறார்கள். இதை, `ஆண்களுக்கான மெனோபாஸ்' என்றும் சொல்லலாம்.

ஹார்மோன்

ஆண்களின் ஹார்மோன் மாற்றம், பெண்களின் மெனோபாஸ்போல அல்லாமல், மெதுவாகவும் படிப்படியாகவும் நடக்கும். வெளியில் தெரியாத நோய்கள், மனஅழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை போன்றவையும் ஹார்மோன் மாற்றங்களுக்கான காரணங்களே. ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டிருப்பதை சில அறிகுறிகளை வைத்து முன்னரே அறிந்துகொள்ள முடியும். அவை என்னென்னவென்று பார்ப்போம்... 

எடை அதிகரிக்கும்!

ஆண்களின் உடலில் டெஸ்ட்டோஸ்டீரான் (Testosterone) என்ற ஹார்மோன் உள்ளது. ஒருவரின் உடல் அமைப்பு ஆண் தன்மையோடு இருப்பதற்கு இந்த ஹார்மோன்தான் காரணம். இந்த டெஸ்ட்டோஸ்டீரான் அளவு குறையும்போது, உடலில் கொழுப்பும் எடையும் அதிகரிக்கும். அதிகமான மனஅழுத்தம் `கார்டிசால்’ (cortisol) என்கிற மனஅழுத்தத்தை ஏற்படுத்தும்; ஹார்மோனின் அளவை உயர்த்தும்.  இந்த ஹார்மோன் உயர்வால், உடலில் கொழுப்பு செல்கள் அதிகமாகி, எடை கூடும்.

உடல் எடை அதிகரிக்கும்

ஆண்மைக்குறைவு... உஷார்!

நாம் முன்னரே பார்த்த டெஸ்ட்டோஸ்டீரான் ஹார்மோன், ஆண்களின் இனப்பெருக்க ஆற்றலை மேம்படுத்த உதவுவது. இதன் அளவு குறைந்துவிடும்போது விந்தணுக்களின் உற்பத்தியும் அவை நகரும் தன்மையும் குறையும். இதனால் ஆண்மைக்குறைவு ஏற்படும். தொடர்ச்சியான மனஅழுத்தம், ஆரோக்கியக் குறைவு போன்றவற்றால் கார்டிசால் உயரும்போதும் ஆண்மைக்குறைவு ஏற்படும். 

உடல் சோர்வு!

இரவு முழுக்க நன்றாக ஓய்வெடுத்த பிறகும் உடல் சோர்வாக இருக்கிறதா? அப்படி என்றால், டெஸ்ட்டோஸ்டீரான் அளவு குறைந்திருக்கும். டெஸ்ட்டோஸ்டீரான் அளவு குறையும்போது சோர்வும் தூக்கமின்மையும் ஏற்படும். 

கார்டிசால் (Cortisol) ஹார்மோன் நமது தூக்கத்தைச் சீராக்க உதவுகிறது. தொடர்ச்சியான மனஅழுத்தம், கார்டிசாலின் அளவை அதிகரித்துவிடும். இதனால் சோர்வு, தளர்ச்சி உண்டாகும்.  கார்டிசாலின் அளவு குறையும்போதும் இதே மாதிரியான விளைவுகள் ஏற்படும். 

மனச்சோர்வு ஏற்படும்!

டெஸ்ட்டோஸ்டீரான் அளவு குறையும்போது மனச்சோர்வு ஏற்படும். தைராய்டு சுரப்பி சரியாக செயல்படாதபோதும் மனச்சோர்வு வரும். தைராய்டு ஹார்மோனில் ஏற்படும் குறைபாடு மனநிலை மாற்றம், மகிழ்ச்சியின்மை, ஊக்கமின்மைக்கு வழிவகுக்கும். 

மனச்சோர்வு ஏற்படும்

முடி கொட்டும்!

டெஸ்ட்டோஸ்டீரானுக்கு வேறு எந்த மூலக்கூறாகவும் மாறும் தன்மை உண்டு. முடியில் உள்ள ஒரு என்ஸைம் (Enzyme ) டெஸ்ட்டோஸ்டீரானை , டைஹைட்ரோ டெஸ்ட்டோஸ்டீரானாக (Dihydrotestosterone ) மாற்றிவிடுகிறது.  மிகவும் சக்திவாய்ந்த இந்த ஹார்மோன் , வழுக்கைக்கு முக்கியமான காரணம். இந்த ஹார்மோனால் முடி பலவீனமடையும். மிச்சமிருக்கிற முடியும் மெல்லியதாக மாறிவிடும்.

மார்பகம் மாறுதலுக்கு உள்ளாகும்!

பெண்களின் மார்பக அமைப்புக்கு காரணமான ஹார்மோன்,  ஈஸ்ட்ரோஜென். சாதாரணமாக, ஓர் ஆணின் உடல், ஈஸ்ட்ரோஜெனைவிட, டெஸ்டோஸ்டீரானைத்தான் அதிகமாக உற்பத்தி செய்யும். அதனால்தான் ஆண்களுக்கு தட்டையான மார்பகம் இருக்கிறது. இந்த அமைப்புக்கு டெஸ்ட்டோஸ்டீரான் ஹார்மோன்தான் காரணம். ஆண்களின் ஹார்மோனில் சமநிலையின்மைத் தன்மை ஏற்பட்டால்,  உடலில் டெஸ்ட்டோஸ்டீரான் குறைவாகவும், ஈஸ்ட்ரோஜென் அதிகமாகவும் சுரக்கும். இதன் காரணமாக, ஆண்களின் மார்பகம் மாறுதலுக்கு உள்ளாகும். லேசாக வளர்ச்சி அடைந்ததுபோலக்கூடத் தெரியலாம்.

ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக, மேலே சொல்ல ஆறு அறிகுறிகளில் ஏதாவது ஓர் அறிகுறி ஆண்களுக்குத் தென்படலாம். ஹார்மோன் பிரச்னைகளுக்கு வயதாவதும் ஒரு காரணம். அது தவிர, கண்ணுக்குத் தெரியாத பல காரணங்களும் உள்ளன. இந்த அறிகுறிகள் தோன்றும்போதே மருத்துவரைச் சந்தித்து, உரிய சிகிச்சை பெறுவது மிக மிக முக்கியம். கவனம் மக்களே! 

http://www.vikatan.com/news/health/83611-andropause-what-are-the-signs-of-male-menopause.html

Link to post
Share on other sites

நெல்லி முதல் மஞ்சள் வரை... கல்லீரல் காக்கும் இயற்கை உணவுகள்!

கல்லீரல் பிரச்னைகள் வருகிற வரைக்கும் அதன் நலன் பற்றிப் பெரும்பாலும் யாரும் சிந்திப்பதே இல்லை. நாம் சாப்பிடுகிற ஒவ்வோர் உணவும் ஏதாவது ஒரு வடிவில் கல்லீரலைச் சென்றடையும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கடைசியாகச் சாப்பிட்ட சாப்பாடு, வேலை முடிந்த பிறகு குடித்த குளிர்பானம் அல்லது உட்கொண்ட மருந்தும்கூட கல்லீரலை அடைந்திருக்கும். எனவேதான், `கல்லீரலுக்கு நன்மை செய்யும் உணவுகளைச் சாப்பிட வேண்டும்; கல்லீரலைப் பாதிக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்’ என அழுத்தமாகச் சொல்கிறார்கள் மருத்துவர்கள்.  

கல்லீரல்

திராட்சை, விஷ்ணு கிரந்தி, இஞ்சி, மஞ்சள், முட்டை, நெல்லிக்காய், வால்நட், பீட்ரூட் போன்றவை கல்லீரலைப் பாதுகாக்க உதவுவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. மதுசாரா  கல்லீரல் நோயிலிருந்தும் (Non-alcoholic fatty liver disease) இந்த உணவுகள் நம்மைக் காப்பாற்றுகின்றன. மணமுள்ள காய்கறிகளான வெங்காயம், பூண்டு போன்றவை நச்சுப்பொருட்களை வெளியேற்றி, கல்லீரலைச் சுத்திகரிக்கக்கூடியவை. கல்லீரலைச் சுத்திகரிக்கவும் பாதுகாக்கவும் உதவும் உணவுப் பொருட்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். ஆனாலும், ஏற்கெனவே கல்லீரல் தொடர்பான நோய்கள் இருப்பவர்கள், மருத்துவரின் ஆலோசனையைக் கேட்ட பிறகுதான் இவற்றைப் பயன்படுத்த வேண்டும். 

 

இஞ்சி

இஞ்சி

இஞ்சி, உணவின் சுவையைக் கூட்டுகிறது. அதோடு, கல்லீரல் பாதுகாப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது. இஞ்சி உடலின் செரிமான மண்டலத்தைச் சீராக்கும். வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும். மதுசாரா  கல்லீரல்  நோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளவர்கள், கண்டிப்பாக இஞ்சியை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

நெல்லிக்காய்

நெல்லி
 

நெல்லிக்காய் கல்லீரலுக்குப் புத்துயிரூட்டக்கூடியது. வீங்கிய நிலையில் இருக்கும் கல்லீரல்களைச் சரிசெய்யும் ஆயுர்வேத சிகிச்சையில், நெல்லிக்காய் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் காமாலையை குணப்படுத்தவும் இது உதவும். இதில் ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் தன்மை (Hypolipidemic) உள்ளது. எனவே கல்லீரலின் சுமையை இது  குறைக்கும். 

ஒமேகா-3 நிறைந்த உணவுகள்
கல்லீரலைப் பாதுகாக்க தினசரி உணவில் ஒமேகா-3 அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.  வஞ்சிர மீன், முட்டை, வால்நட் போன்றவற்றில் ஒமேகா-3 உள்ளது. கல்லீரலில் கொழுப்பு சேரும் நிகழ்வை (Triglyceride synthesis) ஒமேகா-3 உணவுகள் தடுக்கின்றன. இது தொடர்பாக ஓர் ஆய்வே நடந்திருக்கிறது. ரத்தத்தில் கொழுப்பு அதிகம் சேரும் நோயான ஹைபர்லிபிடிமியாவால் (Hyperlipidemia) பாதிக்கப்பட்ட சிலருக்கு 5 மி.லி ஒமேகா-3 கொழுப்பு அமிலம் தினமும் இரண்டு வேளைகளாக, 24 வாரங்களுக்குக் கொடுக்கப்பட்டது. இந்தச் சிகிச்சையின் முடிவில் அல்ட்ரோஸோனோகிராபி (Ultrasonography) முறையில் அவர்களைப் பரிசோதித்ததில், கல்லீரல் பாதிப்புகள் நீங்கி அவர்கள் நலமாக இருப்பது தெரிய வந்துள்ளது. 

மணமுள்ள உணவுகள்

பூண்டு

பூண்டு, வெங்காயம் போன்ற மணமுள்ள உணவுகளும் கல்லீரலைப் பாதுகாக்க உதவுகின்றன. அவற்றில் உள்ள சல்ஃபர்தான் மணம் உருவாகக் காரணமாவது. சல்ஃபர், கல்லீரலில் என்ஸைம் உற்பத்திக்கு உதவுவது. நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு கல்லீரலுக்குத் தேவையானது இந்த என்ஸைம்கள்தான்.  

காய்கறிகள்
பூண்டு மற்றும் வெங்காயத்தின் மணத்தை சிலரால் சகித்துக்கொள்ள முடியாது. அவர்கள், சல்ஃபர் அதிகமுள்ள வேறு சில காய்கறிகளைச் சாப்பிடலாம். முட்டைக்கோஸ், புரோக்கோலி, காலிஃபிளவர் போன்றவற்றில் சல்ஃபர் நிறைய உண்டு. இவற்றில் உள்ள குளுக்கோசினோலேட் (Glucosinolate) என்ற சல்ஃபர் கலந்த கலவை, என்ஸைம் உற்பத்தியை அதிகரித்து உடலின் நச்சு நீக்கத்துக்கு உதவும்.

ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரியில் பாலிபினால் (Polyphenols) மற்றும் அந்தோசயனின் (Anthocyanins) அதிகம் உள்ளன. இவை வீக்கம், கட்டி முதலியவற்றுக்கு எதிராகச் செயல்படுபவை. இவை சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களும் கூட. ஸ்ட்ராபெர்ரி கல்லீரலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கும். 

பீட்ரூட்

பீட்ரூட்

பீட்ரூட்டில் உள்ள ஃபிளேவனாய்ட்ஸ் (Flavonoids) என்ற நிறமி, கல்லீரலைப் பாதுகாக்க உதவக்கூடியது. பீட்ரூட் ஜூஸ் அருந்துவது, கார்சினோஜென் (Carcinogen)   எனும் புற்றுநோய் காரணியை உடலில் சேராமல் தடுக்கும். தொடர்ந்து பீட்ரூட்டை நீண்ட நாட்களுக்குச் சாப்பிடுவது கல்லீரல் பாதிப்புகளிலிருந்து  நம்மைப் பாதுகாக்கும். 

திராட்சைப்பழம் 
புளிப்பான திராட்சைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம். இது, குடல் நன்றாகச் செயல்பட உதவுவதோடு, கல்லீரலில் உள்ள நச்சுகளை வெளியேற்றவும் உதவும்.  திராட்சையில் உள்ள `நாரின்ஜெனின்’ (Naringenin) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட், கல்லீரல் கொழுப்பை நீக்க உதவும்.  
விஷ்ணு கிரந்தி
விஷ்ணு கிரந்தியில் டீ போட்டுக் குடிப்பது கல்லீரலுக்கு மிகவும் நல்லது. சிலர் இதை சாலட்களிலும் பயன்படுத்துவார்கள். `சிலிமரின்’ (Silymarin)  என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் நிறமி இதன் விதைகளில் உள்ளது. இவை கல்லீரல் நச்சை வெளியேற்ற உதவுவதோடு மட்டுமில்லாமல் கல்லீரலை சேதப்படுத்தும் டைல்னோல் (Tylenol) மருந்தை அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது ஏற்படும் பாதிப்புகளிலிருந்தும் காப்பாற்றும். புதிய செல்கள் வளர உதவிசெய்து, கல்லீரலைப் புத்துயுயிரூட்டவும் விஷ்ணு கிரந்தி உதவும். 

மஞ்சள்

மஞ்சள்

இயற்கையான வழிமுறை மூலம் உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் மஞ்சள் இல்லாத பட்டியல் நிச்சயம் இருக்க முடியாது. ஆயுர்வேதம் மற்றும் சீன மருத்துவ முறைகளில் நூறாண்டுகளுக்கும் மேலாக கல்லீரல் சிகிச்சைக்கு மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளில் குர்குமின் (Curcumin) என்ற வேதிப்பொருள் உள்ளது. இது கல்லீரலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கும். 
இது தவிர கல்லீரலை சுத்திகரிக்கவும், பாதுகாக்கவும் சில ஜூஸ்களும் டீக்களும் உதவுகின்றன. 

கலர்ஃபுல் ஜூஸ்
தேவையானவை: 
கேரட் - 3, வெள்ளரிக்காய் (சிறியது) - 1, எலுமிச்சைப்பழம் - 1/2, ஆப்பிள்  - 1. 
செய்முறை: 
எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து ஜூஸாக்கிக் கொள்ளவும். இவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சிதைவதற்குள் ஜூஸைக் குடித்துவிட வேண்டும். தினமும் இரண்டு வேளை இந்த ஜூஸைக் குடித்துவர கல்லீரல் சுத்தமாகும். 

எலுமிச்சை - கிரீன் டீ
அரை கப் கிரீன் டீயை ஆறவைத்துக்கொள்ளவும்.  அதனுடன் பாதி எலுமிச்சைப் பழத்தின் சாற்றை சேர்த்துக்கொள்ளவும். இதனுடன் ஒரு வாழைப்பழத்தையும் கலந்துகொள்ளவும். இதை தினமும் குடித்துவர, கல்லீரல் சுத்தமாகும். கிரீன் டீயில், ஈ.ஜி.சி.ஜி (EGCG) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது கல்லீரலைப் பாதுகாக்க உதவும். 

இஞ்சி - மஞ்சள் சாறு 
அரை டீஸ்பூன் மஞ்சள், சிறிய துண்டு இஞ்சி, பாதி எலுமிச்சையின் சாறு இவற்றுடன் அரை கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். அனைத்தையும் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். இது குடலைச் சுத்தம் செய்யும். பித்தக்கற்கள் வருவதைத் தடுக்கும். கல்லீரலைச் சுத்தப்படுத்தும். 

கல்லீரல் நம் கண்ணுக்குத் தெரியாத ஓர் இடத்தில் இருப்பதால், நாம் அதைக் கண்டுகொள்வதில்லை. ஆனால், நாம் சாப்பிடும் உணவின் ஒரு பகுதி ஏதாவது ஒரு வடிவில் கல்லீரலில்தான் போய்ச் சேரும். கல்லீரலில் சேரும் கொழுப்பை, நச்சுப்பொருட்களை வெளியேற்றவேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று. அவை பெரிய நோய்களாக மாறி நம்மைப் பாதிப்பதற்கு முன்னர் இயற்கை வழிமுறைகள் மூலம் கல்லீரலைக் காப்போம்! 

http://www.vikatan.com/news/health/83641-amla-and-turmeric-will-protect-our-liver.html

Link to post
Share on other sites

ஒற்றைத்தலைவலி முதல் புற்றுநோய் வரை விரட்ட உதவும் ஊதா நிற காய், கனிகள்!

த்திரிக்காய், நாவற்பழம், முட்டைக்கோஸ், திராட்சை, அத்தி, முள்ளங்கி, பீட்ரூட்... அத்தனையும் ஊதா நிறத்தில் (Purple)... ஒரு கூடை நிறைய! கற்பனை செய்து பாருங்கள்! கண்ணைக் கவரும் அந்தக் காட்சியை ஓர் ஓவியமாகத் தீட்டினால் எவ்வளவு அழகாக இருக்கும்? அதைவிட அழகான, ஆரோக்கியமான விஷயம், ஊதா நிறப் பழங்களையும் காய்கறிகளையும் நம் உணவில் சேர்த்துக்கொள்வது! ஏன்? புற்றுநோயைத் தடுப்பதில் தொடங்கி, சிறுநீர்த் தொற்றைத் தடுப்பது வரை ஊதா நிற காய், கனி வகைகளுக்கு அபூர்வமான மருத்துவக் குணம் இருப்பதுதான் காரணம். அவை இங்கே...

ஊதா நிற காய்கள் 

புற்றுநோயைத் தடுக்கும்! 

கத்திரிக்காய், வெங்காயத்தின் மேற் பகுதி ஆகியவை ஊதா நிறத்தில் இருப்பதற்குக் காரணம் அதிலுள்ள ஃபிளேவனாய்ட்ஸ் (Flavanoids) என்ற நிறமிகள்தான். இந்த ஃபிளேவனாய்ட்ஸ்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவற்றுக்குப் புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் உண்டு.

நினைவாற்றலை மேம்படுத்தும்! 

ஊதா நிறப் பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃப்ரீ ராடிகல்ஸை (Free Radicals) எதிர்க்கும் தன்மைகொண்டவை. அதனால், இவை நினைவாற்றலை மேம்படுத்த உதவுகின்றன. உடலில் உள்ள நச்சுப்பொருள்களை வெளியேற்றுவதோடு, வயதானவர்களுக்கு ஏற்படும் பல்வேறுவிதமான நோய்களிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றும். பெர்ரீஸ் மற்றும் அடர்நிற சாக்லேட்டுகளில் இந்தப் பலன்கள் அதிகமாக உள்ளன. எடைக் குறைப்புக்கு உதவும்; பெண்களின் கருத்தரிப்புக்கு தூண்டுதலாக இருக்கும். 

ஒற்றைத்தலைவலியைப் போக்கும்!

பர்பிள் நிறமுள்ள செர்ரியில் இருக்கும் மோனோடெர்பென்ஸ் (Monoterpenes) என்ற பொருளானது, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். தூக்கமின்மை, பதற்றம், ஒற்றைத்தலைவலி, மன அழுத்தத்தைக் குறைக்கும். லேவண்டரைக் கொண்டு தயாரிக்கப்படும் எண்ணெயில், பைட்டோ நியூட்ரியன்ட் பெரில்லில் ஆல்கஹால் (Perillyl alcohol) உள்ளது. இது ஆன்டி-செப்டிக் மற்றும்  தொற்றுகளை எதிர்க்கும் தன்மைகொண்டது. உடல்நலத்தைச் சீராக வைத்திருக்க உதவும். ஆரோக்கியம் காக்கும்.

பிளம்ஸ் 

வீக்கம், கட்டிகளைச் சரியாக்கும்!

ஊதா நிறத்தில் உள்ள பிளம்ஸ், அத்தி போன்ற பழங்களில் பாலிபினால் (Polyphenol) நிறைவாக உள்ளன. இவை உடலில் ஏற்படும் கட்டி, வீக்கத்துக்கு எதிராகப் போராடும் ஆற்றல் கொண்டவை. அதோடு, இதயநோய், சர்க்கரை நோய், மூட்டுவாதம் ஆகியவற்றில் இருந்து காக்கும்; நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதைத் தடுக்கும். உடல் வலிமை பெற உதவும். 

அத்தி 

இதயத்தைப் பாதுகாக்கும்!

ஊதா மற்றும் நீலநிறப் பழங்கள், காய்கறிகளில் ரெஸ்வெரட்ரோல் (Resveratrol) என்ற கிருமி நாசினி (Phenol) உள்ளது. இது ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும். உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும். 

சிறுநீர்ப்பாதை தொற்றைத் தடுக்கும்

ஊதா நிற முட்டைக்கோஸில் அந்தோசயனின் (Anthocyanin) என்ற நிறமி உள்ளது. இது ஹெலிகோபேக்டர் பைலோரி (Helicobacter pylori) என்ற பாக்டீரியாவுக்கு எதிராகப் போராடும் தன்மைகொண்டது. வயிற்றுப்புண் மற்றும் சிறுநீர்ப்பாதை தொற்று ஆகியவை இந்த ஹெலிகோபேக்டர் பைலோரி பாக்டீரியாவால்தான் உண்டாகும். 

இன்னும் அல்சரைக் குணப்படுத்தும், கல்லீரலுக்கு வலுவூட்டும் என ஆரோக்கிய நன்மைகள் நீண்டுகொண்டே போகின்றன. அழகான விஷயங்கள் ஆரோக்கியமானவையாகவும் மாறுவது அபூர்வம். அந்த வகையில் ஊதா நிறப் பழங்களின், காய்கறிகளின் அழகை ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவற்றை ரசித்துச் சாப்பிடவும் செய்தால் அத்தனை நன்மைகளையும் பெறலாம். நலமாக வாழலாம்.

http://www.vikatan.com/news/health/83421-health-benefits-of-purple-colored-vegetables-and-fruits.html

Link to post
Share on other sites

புகை முதல் ஊறுகாய் வரை... புற்றுநோய் தடுக்க தவிர்க்கவேண்டிய பொருட்கள்! #HealthAlert

‘புகையிலைப் பொருள்கள் புற்றுநோயை உண்டாக்கும்; புகைப்பிடித்தல் புற்றுநோயைத் தரும்’... திரைப்படம் தொடங்குவதற்கு முன்னதாக தவறாமல் காண்பிக்கப்படும் வாசகம். உண்மையில் புகைபிடிப்பதால், புகையிலையைப் பயன்படுத்துவதால் மட்டும்தான் புற்றுநோய் வருகிறதா? இல்லை. நமக்கே தெரியாமல், நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் வேறு சில பொருள்களாலும், உணவுகளாலும்கூட புற்றுநோய் வரலாம். பற்பசையிலிருந்து , பாப்கார்ன் வரை புற்றுநோயை உண்டாக்கும், பல்வேறுவிதமான நோய்களை நம் உடலுக்குக் கொண்டுவந்து சேர்க்கும் எத்தனையோ பொருள்கள் உள்ளன. அவற்றில் சில...

புற்றுநோய் - கோதுமை

பாலீஷ் செய்யப்பட்ட கோதுமை

கோதுமையை பாலீஷ் செய்யும் பல ஆலைகள் இதற்காக குளோரின் வாயுவைப் (Chlorine gas) பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் கோதுமையை பளிச்சென்று செயற்கை முறையில் வெள்ளையாக்கி விடுகிறார்கள். இது நாம் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல. பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.  

ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட எண்ணெய்

எல்லாக் காய்கறி எண்ணெய்களிலும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. ஒமேகா-6 உள்ள எண்ணெயை அதிகமாக எடுத்துக்கொண்டால் இதய நோய், தோல் புற்றுநோய் வரும். எனவே, நாம் ஒமேகா-3 உள்ள உணவுகளான வால்நட், முட்டை, சோயா பீன்ஸ், காலிஃபிளவர் போன்றவற்றை இதற்கு பதிலாக எடுத்துக்கொள்ள வேண்டும். 

பற்பசை

நாம் பயன்படுத்தும் பற்பசைகளில் பெரும்பாலும் ஃபுளோரைட்ஸ்( Fluorides), சோடியம் லாரல் சல்ஃபேட் ( Sodium lauryl sulfate), வண்ண சாயங்கள்,  புரோப்பிலீன் கிளைக்கால் (Propylene glycol) போன்றவை உள்ளன. இவை புற்றுநோயை ஏற்படுத்தும். எனவே இதற்கு மாற்றாக ஃபுளோரைடு இல்லாத பற்பசைகளைப் பயன்படுத்த வேண்டும். 

ஊறுகாய்

ஊறுகாய்

`கொஞ்சம் பழைய சோறு... தொட்டுக்கொள்ள ஊறுகாய் போதும்’ எனப் பெருமையாகச் சொல்பவர்களை நாம் பார்த்திருப்போம். ஆனால், ஊறுகாய் ஆபத்தான பொருள் என்பதை பலர் அறிவதில்லை. ஊறுகாயில் உப்பின் அளவு மிக அதிகம். கூடவே இன்றைக்கு சந்தையில் கிடைக்கும் ஊறுகாயில் பல ரசாயனக் கலப்பும் நடக்கிறது. `இதைத்  தொடந்த்து சாப்பிட்டால்  குடல் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்’ என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

குளிர்பானங்கள்

`டயட்’ அல்லது ‘குறைவான கொழுப்பு உள்ளது’ என விளம்பரப்படுத்தப்படும் குளிர்பானங்களில் அஸ்பார்ட்டேம் (Aspartame) என்ற செயற்கை சுவையூட்டி உள்ளது. இது புற்றுநோய் மற்றும் இதயநோயை ஏற்படுத்தும். 

மைக்ரோவேவ் அவன் பாப்கார்ன்

மைக்ரோவேவ் அவனில் தயாரிக்கப்படும் பாப்கார்ன்கள் அடைக்கப்படும் பைகளில் பெர்ஃப்ளுரோக்டானிக் (PFOA - Perfluorooctanoic acid) ஆசிட் உள்ளது. இது ஒரு நச்சுப்பொருள். இது பெண்களுக்கு மலட்டுத்தன்மையை உண்டாக்கும் என சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

செயற்கையான பழங்கள்

செயற்கையான பழங்கள்

செயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்படும், பழுக்கவைக்கப்படும் பழங்களில் கடுமையான பாதிப்புகள் தரும் அட்ரஸின் (Atrazine), தியோடிகார்ப் (Thiodicarb), ஆர்கனோபாஸ்பேட்ஸ் (Organophosphates) போன்ற பூச்சிக்கொல்லிகள் கலந்துள்ளன. இவற்றில் அட்ரஸின், ஐரோப்பிய நாடுகளில் தடைசெய்யப்பட்டிருக்கிறது. இது, மனிதர்களுக்கு மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.  குறிப்பாக இனப்பெருக்க ஆற்றலை இது பாதிக்கும். 

உருளைக்கிழங்கு சிப்ஸ்

பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உருளைக்கிழங்கு சிப்ஸில் கொழுப்பும் கலோரியும் அதிகம். இவை எடையை அதிகரிக்கும். அதிக கொலஸ்ட்ராலையும் ஏற்படுத்தும். இதில் சோடியம் அதிகமாக இருப்பதால், உயர் ரத்த அழுத்தத்தை உண்டாக்கும். 

மது

மது

புற்றுநோய் உண்டாக மிக முக்கியக் காரணங்களில் புகைபிடிப்பதற்கு  அடுத்த இடத்தைப் பிடித்திருப்பது மது. அளவுக்கு மீறி மதுவைக் குடித்தால் இதயச் செயலிழப்பு,  பக்கவாதம், திடீர் மரணம் போன்றவை நிகழும். 

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை

சுவையான பொருள்கள் ஆபத்தை ஏற்படுத்த வல்லவை. அந்த வகையில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, டியூமர் மற்றும் புற்றுநோயால் உருவாகும் கட்டிகளைப் பெரிதாக்கும். இதேபோல் சோடா குளிர்பானங்களும் எடை அதிகரிப்பு, உடல்பருமன், வீக்கம், கட்டி முதலியவற்றை ஏற்படுத்தும்.  

மாய்ஸ்ச்சரைசர்

மாய்ஸ்ச்சரைசர்

மாய்ஸ்சரைசர்களில் இருக்கும் மினரல் எண்ணெய், கரி எண்ணெய், ஆர்செனிக் (Arsenic)  போன்றவை தோல் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை.  மினரல் எண்ணெய் தடிப்பு, எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். மாய்ஸ்சரைசர்களுக்கு பதிலாக கிளிசரினுடன் தண்ணீர் கலந்த கலவையைப் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் முதலிய இயற்கை எண்ணெய்களையும்  மாய்ஸ்சரைசர்களுக்கு பதிலாகப் பயன்படுத்தலாம். 

அழகு தரும் க்ரீம்கள்

அழகை அதிகப்படுத்துவதாகச் சொல்லப்படும் பெரும்பாலான க்ரீம்களில் மெர்குரி அதிக அளவில் உள்ளது. இவை புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை உள்ளவை. எனவே தோல், முகத்தை மென்மையாக்க க்ரீம்களுக்கு பதிலாக பழங்கள், காய்கறிகள்  போன்ற இயற்கை வழிமுறைகளைப் பயன்படுத்தலாம். 

அழகு தரும் க்ரீம்கள்

மஸ்காரா

பெண்கள் கண் இமைகளில் பயன்படுத்தும் மஸ்காராவில் அலுமினியம், பெட்ரோலேட்டம் (Petrolatum), ஃபார்மால்டிஹைடு (Formaldehyde), ரெட்டினல் அசிட்டேட் (Retinyl Acetate),  பாரபென்ஸ் (Parabens)  போன்றவை உள்ளன. இவை மிகவும் ஆபத்தானவை.  தயாரிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேல் ஆன மஸ்காராவைக் கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது.

டால்கம் பவுடர்

டால்கம் பவுடரில் மக்னீசியம் சிலிகேட், ஆஸ்பெஸ்டாஸ் (Asbestos ) போன்ற முக்கியமான மூலப் பொருள்கள் உள்ளன.  இவை கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும்  சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடியவை. 

டியொடரென்ட்(Deodorant)

`டியொடரென்ட்’ எனப்படும் நறுமணப் பூச்சுகளில் அலுமினியம், பாரபென் (Paraben), பெட்ரோலியப் பொருட்கள் கலந்துள்ளன. இவை பெண்களின் அக்குள் மற்றும் மார்பகங்களில் புற்றுநோயை ஏற்படுத்தும். இவை வளர்சிதை மாற்றத்தை பாதிப்பதோடு, மைய நரம்பு மண்டலத்தையும் பாதிக்கும். 

நகப்பூச்சு

நகப்பூச்சு

நகப்பூச்சில்  இமிடாசோலிடினைல் யூரியா (Imidazolidinyl urea) , டி.எம்.டி.எம் ஹைடண்டாயின்(DMDM hydantoin ) போன்ற பொருட்கள் உள்ளன. இவை ஃபார்மால்டிஹைடை (Formaldehyde) உருவாக்குகின்றன. இதனால் புற்றுநோய், அலர்ஜி, ஆஸ்துமா, மனச்சோர்வு, தூக்கமின்மை, தலைச்சுற்றல்  போன்றவை உண்டாகலாம்.

இவை தவிர முடிக்கு அடிக்கும் ஸ்பிரே, லிப்ஸ்டிக், பதப்படுத்தப்பட்ட இறைச்சி,  சிவப்பு இறைச்சி இவற்றாலும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. புற்றுநோய் உருவாகக் காரணமாக இருப்பவற்றின் பட்டியலைப் பார்க்கும்போது ஒன்றை நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும். இவை ஒன்றுகூட இயற்கையான பொருட்கள் அல்ல. எல்லாமே செயற்கையான வழிமுறைகள் மூலம் உருவாக்கப்படுபவை. செயற்கையான பொருட்களிலிருந்து நாம் எந்த அளவு தள்ளி இருக்கிறோமோ அந்த அளவுக்கு புற்றுநோய் போன்ற ஆபத்துகளிடம் இருந்தும் தள்ளி இருக்கலாம். 

http://www.vikatan.com/news/health/83708-beware-of-cancer-causing-foods-and-products.html

Link to post
Share on other sites

தேன்-தேங்காய் பால்- தக்காளி ஃபேஸ் பேக் எளிய ஆரோக்கிய முகப் பராமரிப்பு #FacePack

லகம் ஒரு வட்டம். எங்குத் தொடங்கினோமோ அங்கேயே வந்து முடியும். `இந்த வேரைச் சாப்பிடு... நோய் குணமாகிவிடும்’ என்று தொடர்ந்த கதை. `என்னய்யா... இந்தக் காலத்துல, அதுவும் டெக்னாலஜி வளர்ந்த காலத்துல வேரைத் தேடிச் சாப்பிடுறீங்க?’ என்று மருந்துகளுக்கு, நவீன சிகிச்சைகளுக்கு மாறினோம். இப்போது மீண்டும் `கோ கிரீன்; கோ நேச்சுரல்...’ என்று கொடியைப் பிடித்திருக்கிறோம். காரணம், இயற்கையே அற்புதமானது; பாதுகாப்பானதும்கூட. `இந்த க்ரீம் பயன்படுத்துங்க’ என்று சொன்னாலும், `வீட்டிலேயே தயாரிக்கிற மாதிரி இருந்தா சொல்லுங்க டாக்டர்!’ என நோயாளிகள் கேட்கும் அளவுக்கு கெமிக்கல்களின் மேல் நமக்கு அச்சம் வந்துவிட்டது. காரணம், புற்றுநோயும் புதுப்புது நோய்களும். 'குறைந்த செலவில் புத்துணர்வுடன், அழகாக இருக்க முடியும்' என்கிறார் அழகுக்கலை நிபுணரான ராதீஸ். அதுவும், வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யக்கூடிய சருமத்தைப் பாதுகாக்கும் ஃபேஸ்பேக்குகளைப் பற்றி விளக்குகிறார். 

ஃபேஸ் பேக்

கிரீன் ஃபேஸ் பேக் 

பாதி எலுமிச்சைப் பழத்தின் சாறு, அரை வெள்ளரிக்காய் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் பச்சைப் பயறு மாவு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். அனைத்தையும் ஒன்றாகக் கலந்து அதை முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைக் கழுவலாம். 

பலன்கள்: எண்ணெய்ப் பசை நீங்கி, முகம் பளபளக்கும். பருக்கள் நீங்கும். முகம் பளபளப்புடன் காணப்படும். 

லைட் அண்ட் லிக்விடு பேக் 

ஒரு முட்டையின் வெள்ளைக் கரு, ஒரு டேபிள்ஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் கற்றாழை (Aloe vera) ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் அடித்துக்கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் ஊறியதும், வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவ வேண்டும். 

பலன்கள்: இந்த மாஸ்க்கை முகத்தில் பூசுவதால், வறண்ட தன்மை நீங்கி முகத்துக்குப் பொலிவு கிடைக்கும். இது சருமத்தில் காணப்படும் அதிகப்படியான வறண்ட தன்மையை உறிஞ்சுவதோடு அழுக்கையும் அகற்றும். 

கோக்கனட் மில்க் பேக் 

இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய்ப்பால், ஒரு டேபிள்ஸ்பூன் பச்சைப் பயறு மற்றும் ஒரு பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றைச் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும். பிறகு இந்தக் கலவையை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். 

பலன்கள்: நேச்சுரல் மாய்ஸ்ச்சரைசர் தரும் பேக் இது. மிருதுவாக, மென்மையாகச் சருமம் மாறும். சூரியக் கதிர்களால் பாதித்த சருமத்துக்கு மிகவும் நல்லது. 

கோக்கனட் மில்க் பேக்

வொயிட் மாஸ்க் 

ஒரு டேபிள்ஸ்பூன் தயிரை, ஒரு டீஸ்பூன் மைதா மாவுடன் நன்கு கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்துத் தண்ணீரில் முகத்தைக் கழுவலாம். 

பலன்கள்: இந்த வகை ஃபேஸ்பேக் வறண்ட மற்றும் எண்ணெய் சருமத்தினருக்கு ஏற்றது. சருமம் மிருதுவாகும். பளிச்சென்று சருமம் மாறும். இன்ஸ்டன்ட் பொலிவு பெற இந்த ஃபேஸ் பேக் பெஸ்ட் சாய்ஸ். 

மைல்டு ரெட் பேக் 

ஒரு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டேபிள்ஸ்பூன் தேன், ஒரு பெரிய பழுத்த தக்காளி பழம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவலாம். 

பலன்கள்: முகம் பளிச்சென மாறும். சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றும். எண்ணெய் பசையை நீக்கும். சிறந்த டோனராகச் செயல்படும். இயற்கையாகவே பளபளப்பான சருமம் பெற உதவும். 

ஃப்ரூட்ஸ் மாஸ்க் 

ஒரு கப் பழுத்த பப்பாளி, ஒரு கப் பழுத்த வாழைப்பழம், ஒரு டேபிள்ஸ்பூன் பால் பவுடர் ஆகியவற்றைத் தண்ணீருடன் சேர்த்து அரைக்கவும். இந்த விழுதை முகத்தில் தடவ வேண்டும்.  20 நிமிடங்கள் கழித்துத் தண்ணீரால் முகத்தைக் கழுவலாம். 

பலன்கள்: சருமம் புத்துணர்வாகும். ஈரப்பதத்துடன், மென்மையாகவும் இளமையாகவும் காணப்படும். இந்த வகை ஃபேஸ் பேக்கை அடிக்கடி முகத்தில் பூசி வந்தால் தோலில் காணப்படும் கரும்புள்ளிகள் நீங்கும். 

ஹாஃப் வொயிட் பேக் 

ஒரு டேபிள்ஸ்பூன் அரிசி மாவு, ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த் துருவல், ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாற்றைக் கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவலாம். 

பலன்கள்: முகம் பளிச்சென மாறும். இந்த பேக்கை வாரத்தில் நான்கு முறை தொடர்ந்து பூசினால் முகத்தில் காணப்படும் கரும்புள்ளிகள் மறையும். 

http://www.vikatan.com/news/health/83744-homemade-face-pack-for-healthy-skin.html

Link to post
Share on other sites

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க... #HealthAlert

நாள் முழுக்க வேலை செய்த களைப்பில் தூங்கலாம் என்று தலை சாய்த்திருப்பீர்கள். ஆனால், தூக்கமே வந்திருக்காது; சிந்தனைகள் மட்டும் கொசுவர்த்திச் சுருள்போல ஓடிக்கொண்டே இருக்கும். நண்பர்களிடம் `என்ன செய்யலாம்?' என ஆலோசித்து, ஒன்று முதல் 100 வரை எண்ண ஆரம்பித்திருப்பீர்கள். ஆனால், 120-ஐ தாண்டியும் கூடத் தூங்கி இருக்க மாட்டீர்கள். அப்படியானால், தூக்கம் வர என்னதான் செய்வது? மனதை ஒருமுகப்படுத்துவது என்பது புதுமுயற்சி. அதுவும் கை கொடுக்கவில்லை என்றால் அது ஒரு நோயாக இருக்குமோ..!? என்பது குறித்து யோசிக்க வேண்டும். தூக்கம் வராமல் துரத்தும் இந்தப் பிரச்னைக்குப் பெயர்தான் என்ன? அதுதான் இன்சோம்னியா (Insomnia). அதற்கு, மனஅழுத்தம் ஒரு முக்கியக் காரணம். இன்னொரு காரணம் இரவில் சாப்பிட்ட உணவாகக்கூட இருக்கலாம். இரவு உணவு சரியில்லையென்றால், அது தூக்கத்தை நிச்சயம் கலைக்கக்கூடும். அப்படி உங்கள் தூக்கத்தைக் கலைக்கும் உணவுகளைப் பற்றித் தெரிந்துகொள்வோமா..!

தூக்கம் தொலைக்கும் மது

மது 

இன்சோம்னியா வருவதற்கு மனஅழுத்தம் மிக முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது. மது அருந்துவதன்மூலம் மனஅழுத்தம் குறைந்து நன்றாகத் தூக்கம் வரும் என்று தோன்றுவது இயல்புதான். ஆனால், மது அருந்தியதும் நமது உடல் ஓய்வாகி தூக்கம் வருவதுபோலத் தோன்றும். ஆனால் மது செரிமானமானதும் மூளையைத் தூண்டிவிடும். இதனால் சில மணி நேரங்களிலேயே தூக்கமும் தொலைந்து மீண்டும் பிரச்னை வரும். ஆகவே, மது அருந்துவதால் தூக்கம் வரும் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தக்காளி

தக்காளி 

இரவில் தக்காளி சாப்பிட்டால், அது செரிமானமாக நீண்ட நேரம் ஆகும். அதிலும் தூங்குவதற்குச் சில மணி நேரங்களுக்குமுன் இதைச் சாப்பிட்டால் தூக்கமின்மை ஏற்பட வாய்ப்புள்ளது. தக்காளியில் உள்ள அமிலங்கள் ஆசிட் ரிஃப்ளக்ஸ் (Acid reflux) பிரச்னையை ஏற்படுத்தும். இதனால் வயிற்றில் உள்ள அமிலங்கள் தவறான பாதையில் சென்று உணவுக்குழாய்க்கு திரும்பி வருவதால் வாய் வழியாக வெளியேறும்.  இது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். நேராகப் படுக்கும்போது, நிலைமை இன்னும் மோசமாகும். எனவே, இரவில் தக்காளி சட்னி, தக்காளி சாஸ், தக்காளி சூப் போன்ற தக்காளி தொடர்பான எதையும் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. 

துரித உணவுகள்

துரித உணவுகள் 

துரித உணவுகள், சீன உணவுகளில் மோனோசோடியம் குளூட்டமேட் (Monosodium glutamate) என்ற சோடியம் உப்பு அதிகமாக உள்ளது. இது மூளையைத் தூண்டிவிடும். அதனால் தூக்கமின்மை ஏற்படும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் தலைவலி, ஒற்றைத் தலைவலி, வயிறு வலி போன்ற பிரச்னைகள் வரும். 

சர்க்கரை

சர்க்கரை 

சர்க்கரை சாப்பிட்டால், மூளையை இயல்புக்கு மாறாக ஆக்டிவ்வாக மாற்றும். மாலை நேரத்துக்கு மேல் சர்க்கரை அதிகமாக உள்ள உணவுகளைச் சாப்பிடுவது தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். அதேபோல், பகலிலும் சர்க்கரை நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டால், நடு இரவில் விழிப்பு வரும். அதாவது, தொடர்ந்து அதிகப்படியான சர்க்கரை நிறைந்த உணவுகளைச் சாப்பிடும்போது, கார்டிசால் (Cortisol) எனும் ஹார்மோனை தூண்டி, நடுஇரவில் விழிப்பு வரும் நிலைக்குத் தள்ளிவிடும். 

மசாலா உணவுகள்

மசாலா உணவுகள் 

காரமான உணவுகள் உடலுக்குச் சூட்டைத் தரக்கூடியவை. தக்காளியைப் போல ஆசிட் ரிஃபிளக்ஸை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளன. எனவே நிம்மதியாகத் தூங்க முடியாது. உடலுக்குள் உள்ள சூடு, மூளையைத் தூண்டிவிட்டு தூக்க உணர்வை போக்கிவிடும். எனவே, காரமான உணவுகள், மசாலா நிறைந்த உணவுகளை இரவில் தவிர்க்க வேண்டும்

காபி

காபி 

காபியில் கஃபெய்ன் (Caffeine) அதிகம். இது உடனடி உற்சாகத்தைத் தரக்கூடியது. இதனால், காபியை இரவில் அருந்தினால் தூக்கம் வராமல் தவிக்க நேரிடும். 

சாக்லேட்

சாக்லேட் 

காபியைவிட சாக்லேட்டில் கஃபெய்ன் குறைவுதான் என்றாலும் இதுவும் தூக்கத்தைக் கலைக்கக் கூடியவைதான். மாலையில் சாக்லேட் சாப்பிட்டால்கூட இரவில் தூக்கம் வராமல் தவிப்போம். ஏற்கெனவே சர்க்கரை தூக்கமின்மையை ஏற்படுத்தும் எனப் பார்த்தோம். சாக்லேட்டில் சர்க்கரையும் கஃபைனும் இருப்பதால் இரண்டுமே தூக்கத்தைக் கெடுக்கக்கூடியவை. 

கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள்

கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் 

உருளைக்கிழங்கு, பூசணி, பிரெட், நூடுல்ஸ், பீட்சா போன்றவற்றில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. இந்த உணவுகள் உடலுக்குள் சேர்ந்து சீக்கிரமே சர்க்கரையாக மாறிவிடும். காரணம், இதெல்லாம் ஹை கிளைசமிக் உணவுகள். சர்க்கரையைச் சாப்பிட்டால் என்ன நடக்குமோ அதுவேதான் கார்போஹைட்ரேட் உணவுகளைச் சாப்பிட்டாலும் நடக்கும். 

முழுத் தானியங்கள்

இரவில் என்ன சாப்பிடலாம்? 

காய்கறிகள் 

பழங்கள் 

புரத உணவுகள் 

பால் மற்றும் ஒரு வாழைப்பழம் 

முழுத் தானியங்கள் 

ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவுகளான இட்லி, இடியாப்பம், புட்டு. 

ஆக, சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் தூக்கமின்மை மறையும் என்பது உண்மைதான். ஆனால் தூக்கமின்மைக்கு முக்கியக் காரணம் மன அழுத்தம் என்பதையும் மறந்துவிடக்கூடாது. என்னதான் உடல்நலம் சிறப்பாக இருந்தாலும் மனநலம் நன்றாக இல்லையென்றால் அத்தனையும் வீண். மனநலம் சிறப்பாக அமைய யோகா, மூச்சுப் பயிற்சி, தியானம் ஆகியவற்றைத் தொடர்ந்து செய்யவேண்டும். உடல்நலத்தோடு மனநலத்தையும் கவனமாகப் பார்த்துக்கொண்டால் தூக்கமின்மை பிரச்னையைத் தவிர்க்கலாம். 

http://www.vikatan.com/news/health/83815-do-not-eat-these-foods-at-night-if-you-need-a-deep-sleep.html

Link to post
Share on other sites

இன்சுலினுக்கு மாற்றாக பி.சி.ஜி தடுப்பூசி! சர்க்கரை நோயாளிகளுக்கு விடிவு காலமா?

ன்சுலின் எடுத்துக்கொள்ளும் சர்க்கரை நோயாளிகள், இனி பி.சி.ஜி தடுப்பூசி போட்டுக்கொண்டால் நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்ற நல்ல தகவல் ஒன்று பரவி வருகிறது. அது குறித்து மேலும் தகவல்கள் திரட்ட ஆரம்பித்தோம்.

தடுப்பூசி

சர்க்கரை நோய் குறித்த ஆய்வுகளை அமெரிக்க சர்க்கரைநோய் சங்கம் (American Diabetes Association) தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த சங்கத்தின் 75-வது அறிவியல் மாநாட்டில் ஒரு முடிவு வெளியிடப்பட்டது. அதாவது, வாழ்நாள் முழுவதும் இன்சுலினுடன் போராடும் டைப்-1 சர்க்கரை நோயாளிகளுக்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதிநிலைக்கு வந்துவிட்டதாக அறிவித்துள்ளது. அந்த தடுப்பூசி, ஏற்கெனவே கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக மருத்துவத் துறையில் இருந்து வரும் பி.சி.ஜி தடுப்பூசி என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளுக்குப் போடப்படும் பி.சி.ஜி தடுப்பூசி, இதுவரை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகப் (Food and Drug Administration) பட்டியலில்கூட இருந்ததில்லை. காரணம், வளர்ந்துவிட்ட வல்லரசு நாடுகளில் காசநோய் வருவதில்லை. ஆனால், இன்றைக்கு அதே அமெரிக்கா, அடுத்த கட்டமாக டைப்-1 சர்க்கரை நோயாளிகள் 150 பேரிடம் பி.சி.ஜி தடுப்பூசி ஆய்வு மேற்கொள்ளப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்ததிலிருந்தே வருங்காலச் சந்ததியினருக்கு இன்சுலினுக்குப் பதிலாக நல்ல மாற்று உருவாகியுள்ளது என்பது தெளிவு.

டாக்டர் ஆனந்த் மோசஸ், சர்க்கரைநோய் மருத்துவர், சென்னை இது குறித்து மேலும் விவரிக்கிறார்....ஆனந்த் மோசஸ், சர்க்கரைநோய் மருத்துவர்

டைப் 1 சர்க்கரை நோய்:

டைப் 1 சர்க்கரைநோய், இந்த நோயின் மற்றொரு பெயரே ஜூவினைல் டயபெட்டிக்ஸ் (Juvenile diabetes) அல்லது இன்சுலின் சார்ந்த சர்க்கரை நோய் என்பதுதான். பொதுவாக 20 வயதுக்குட்பட்ட இளம்பருவத்தினரிடம் இன்சுலின் முழுமையாக இல்லாததால் ஏற்படும் ஒரு பாதிப்பு இது. டைப்-2 சர்க்கரை நோயைப் போன்று வாழ்க்கைமுறை மாறுபாடுகளாலோ அல்லது மரபியல்ரீதியாகவோ வருவதில்லை. இந்த நோயாளிகளிலும் ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவும் இன்சுலினைச் சுரக்கும் செல்களான கணையத்திலுள்ள பீட்டா செல்கள், நோய் எதிர்ப்பு மண்டலத்திலிருந்து உருவாகும் `டி' செல்களால் முழுமையாக அழிக்கப்பட்டுவிடுகின்றன. இதனால் இன்சுலின் சுரப்பும் முழுமையாக நின்று, ரத்தத்திலுள்ள குளூக்கோஸ் மூலக்கூறுகளின் வளர்சிதை மாற்றமும் தடைபட்டு ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் உயர்ந்துவிடுகிறது.

இன்சுலின்

இந்தியா முதலிடம்

சர்க்கரை நோயாளிகளின் பட்டியலில் 6 கோடியே 20 லட்சம் நோயாளிகள் எண்ணிக்கையுடன் முதலிடம் வகிக்கும் இந்தியாவில் டைப்-1 சர்க்கரை நோயைப் பொறுத்தவரை சற்று ஆறுதலாகிக்கொள்ளலாம். அதாவது, கண்டறியப்படும் சர்க்கரை நோயாளிகளில் பத்தில் ஒருவருக்குத்தான் இங்கே  டைப்-1 சர்க்கரை நோய் இருக்கிறது. ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் பல மில்லியன்களைத் தொடுகிறது இந்த டைப்-1 சர்க்கரைநோய். இதனால்தான் இத்தனை நாட்கள் பி.சி.ஜி தடுப்பூசி என்பதையே உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தில் சேர்க்காத அமெரிக்கா, தற்போது அதே தடுப்பூசியை ஆராய்ச்சி செய்து இறுதிநிலைக்கும் வந்துள்ளது.

பி.சி.ஜி செயல்பாடு!

பி.சி.ஜி தடுப்பூசி... `பேசில்லஸ் கால்மெட்டி க்யூரின்’ (Bacillus Calmette Guerin) என்பதன் சுருக்கமே பி.சி.ஜி. குழந்தைக்கு முதன்முதலில் போடப்படும் இந்தத் தடுப்பூசி, காசநோயைத் தடுப்பதற்காக மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. சிறுநீர்ப்பை புற்றுநோயைக்கூட குணப்படுத்த, பரவலாக பரிந்துரைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. டைப்-1 சர்க்கரைநோயைப் பொறுத்தவரை டி.என்.எஃப் (Tumour Necrosis Factor) என்று சொல்லக்கூடிய கட்டி நசிவுக் காரணியை அதிகமாக சுரக்கச் செய்து, அதன்மூலம் நோய் எதிர்ப்பு மண்டலத்திலிருந்து உருவாகும் 'டி' செல்களிடமிருந்து பீட்டா செல்களை அழியவிடாமல் பாதுகாக்கிறது.

தடுப்பூசி

முற்றிலும் தடுக்கப்படுமா?

`பி.சி.ஜி தடுப்பூசியால் டைப்-1 சர்க்கரைநோய் முற்றிலும் தடுக்கப்படுமா?’ எனக் கேட்டால் கண்டிப்பாக இல்லை. பொதுவாக தடுப்பூசி என்றதும் நாம் நினைப்பது நோய் வராமல் தடுத்து நிறுத்திவிடும் என்பதே. ஆனால் டைப்-1 சர்க்கரைநோயில் இது சற்றே மாறுபடுகிறது. டைப்-1 சர்க்கரைநோயானது ஒரு தனி மனிதனின் சுய நோய்க் காப்புத் தடை மண்டலத்தால் ஏற்படக்கூடிய நோயாக இருப்பதால், யார் யாருக்கு, எப்போது வரும் என்பதை எல்லாம் முன்கூட்டியே கண்டறிய முடியாது. எனவே, டி.பி நோய்க்குத் தடுப்பூசி போடுவதுபோல், பி.சி.ஜி தடுப்பூசியை இன்னும் சற்று முன்கூட்டியே போட்டுக்கொண்டால் சர்க்கரைநோயைத் தடுக்க முடியும் என்பதெல்லாம் கிடையாது. ஆனால், இன்சுலின் சுர‌ப்பு முற்றிலுமாக‌ நின்று ர‌த்த‌ ச‌ர்க்க‌ரையின் அள‌வு அதிக‌மாகும்போது, டைப் 1 சர்க்கரைநோய் என்ப‌து உறுதிசெய்ய‌ப்பட்டுவிடும். உறுதி செய்யப்பட்ட ஆரம்பநிலையிலேயே பி.சி.ஜி தடுப்பூசியை பூஸ்டர் டோஸில் போட்டுக்கொண்டால், மீதியுள்ள பீட்டா செல்கள் அழிவது தடுக்கப்படுவதுடன், இன்சுலின் சுரப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம். இதனால் நாளொன்றுக்கு 50 யூனிட் இன்சுலின் எடுத்துக்கொள்ளும் நோயாளிகளுக்கு அது 20 யூனிட்டாகக் குறையலாம். நோய் மற்றும் நோயாளியின் தன்மையைப் பொறுத்து இன்சுலின் பயன்பாடு முற்றிலும்கூட தவிர்க்கப்படலாம்.

பி.சி.ஜி தடுப்பூசியால் பாதிப்பா? 

100 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள ஒரு தடுப்பூசி என்பதால், இதுகுறித்த பயம் தேவையில்லை. ஆனால், நோய் முற்றிய நிலையில் இந்தத் தடுப்பூசி கண்டிப்பாகப் பயன்படாது. அதேபோன்று சர்க்கரைநோய் வராமல் கட்டுப்படுத்துகிறேன் என தடுப்பூசியை பூஸ்டர் டோஸில் போட்டுக்கொள்ளக் கூடாது. இது உடலின் சர்க்கரை அளவை அறியாமலேயே இன்சுலின் ஊசியை நீங்களே போட்டுக்கொள்வதற்குச் சமம்!

http://www.vikatan.com/news/health/83992-bcg-vaccine-an-alternative-for-insulin-is-this-the-best-therapy-for-diabetes.html

Link to post
Share on other sites

உடல் உறுதிக்கு உதவும் 10 பருப்புகள் மற்றும் நட்ஸ்! #HealthTips

மார்க்கெட்டில் நம் கண்களில் பட்டும், பார்த்தும் பார்க்காமல் நாம் கடந்துபோகிற பல உணவுப் பொருட்கள் உள்ளன. அவற்றில் பருப்புகள், விதைகள், நட்ஸ் ஆகியவையும் அடங்கும். பருப்புகள் என்றால், நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, உளுந்து ஆகியவை அல்ல... முந்திரி, பாதாம் போன்றவை. இவற்றில் இருக்கும் சத்துக்கள் அளப்பரியவை. இவற்றை தினமும் உணவோடு அல்லது தனியாகச் சாப்பிட்டு வந்தால், எண்ணற்ற ஆரோக்கியப் பலன்களைப் பெறலாம். அப்படி நம் உடல் உறுதிக்கு உதவும் 10 பருப்புகள் மற்றும் நட்ஸ் இங்கே.

நட்ஸ் - பாதாம்

பாதாம் பருப்பு (Almond)

பாதாம் பருப்பு, வாதுமை மரத்தின் கொட்டை. ஒரு கைப்பிடி பாதாம் பருப்பை தினமும் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியம். இதில் நார்ச்சத்து, புரதச்சத்து, கால்சியம், ஜிங்க், மக்னீஸியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், காப்பர், இரும்பு மற்றும் வைட்டமின் B போன்ற சத்துக்கள் இருக்கின்றன. இது கொலஸ்ட்ராலைக் குறைக்கும்; இதய நோய்கள் வராமல் காக்கும்; மூளையைச் சுறுசுறுப்பாக இயங்கவைக்கும். சருமப் பாதுகாப்புக்கு உதவும்; ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்; செரிமானத்தை சீராக்கும். 

பிரேசில் நட்ஸ் (Brazil nuts)

இது டிபார்ட்மென்ட் ஸ்டோர்களிலும், பெரிய கடைகளிலும் கிடைக்கும். இதுவும் கொட்டை வகையைச் சேர்ந்ததுதான். ஆனால் இதன் காவி நிற வெளித் தோற்றத்தைப் பார்த்து பருப்பு என்றும் சொல்கிறார்கள். இது, புற்றுநோய், கல்லீரல் அரிப்பு, இதய நோய் மற்றும் வயதான தோற்றம் ஆகியவற்றைத் தடுக்கும். இதயத்தை பலப்படுத்தும், சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தும். ஆர்த்ரைடிஸ் (மூட்டு) வலிகளைக் குறைக்கும். சூரியக் கதிரிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கும். கெட்டக் கொழுப்பைக் குறைக்கும். ரத்தசோகையைத் தவிர்க்கும்.

முந்திரி

முந்திரி 

முந்திரியும் பருப்பு வகையைச் சேர்ந்ததல்ல. இது, சிறுநீரக வடிவில் முந்திரிப் பழத்தின் அடிப்பகுதியில் இருக்கும் கொட்டை. முந்திரியில் இருக்கும் பல வகையான சத்துக்கள் உடல் வலுவுக்கும் இதய ஆரோக்கியத்துக்கும் உதவக்கூடியவை. இது, கொழுப்பைக் குறைக்கும்; இரும்புச்சத்து தரும்; சர்க்கரைநோயைத் தடுக்கும்; கண் பார்வை, முடி வளர்ச்சி, சருமப் பாதுகாப்புக்கு நல்லது.

விதைகள்

சியா விதைகள் (Chia seeds)

இதுவும் பெரிய கடைகளில் கிடைக்கக்கூடியது. தினமும் இதைச் சாப்பிட்டு வந்தால், மூட்டுவலி தீரும்; செரிமானத் திறன் அதிகரிக்கும்; உடல் எடை குறையும்; புத்துணர்ச்சியைக் கொடுத்து மூளைச் செயல்பாட்டுக்கு உதவும்; மனஅழுத்தத்தைக் குறைக்கும்; ஆர்த்ரைட்டீஸ், சர்க்கரைநோய், கல்லீரல் நோய், இதய நோய் ஆகியவற்றைத் தடுக்கும்.

ஆளி விதைகள்

ஆளி விதைகள் (Flax seeds)

இதில் இருக்கும் நார்ச்சத்து குடல் செயல்பாட்டை அதிகரிக்கும்; உடல் எடை குறைப்பதற்கு உதவும். கொழுப்பைக் குறைத்து, இதய நோயைத் தடுக்கும்; ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்; புற்றுநோய் வருவதற்கான ஆபத்தையும் குறைக்கும்; உறுதியான உடல் மற்றும் ஆரோக்கியமான கூந்தலுக்கு வழிவகுக்கும்.

தேவதாரு கொட்டை (Pine nuts)

தேவதாரு மரங்களின் கொட்டைகளையும் சாப்பிடலாம். தினசரி இரண்டு முதல் மூன்று டீஸ்பூன் இதன் உடைத்த நட்ஸ்களைச் சாப்பிடலாம். இது, இதயத்தைப் பலப்படுத்தும்; கெட்ட கொழுப்பைக் குறைக்கும்; ரத்தக் குழாய்களைப் பாதுகாக்கும்; புத்துணர்வைக் கொடுக்கும்; பார்வைத்திறனை மேம்படுத்தும். இரும்புச்சத்தை அதிகரிக்கும்; களைப்பையும் சோர்வையும் போக்கும்.

பூசணிக்காய் விதைகள்

பூசணிக்காய் விதைகள் (Pumpkin seeds)

தட்டையாகவும், நீள் உருண்டை வடிவிலும் இருக்கும் பூசணி விதைகளை தினமும் சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்; கெட்ட கொழுப்பைக் குறைக்கும்; மனஅழுத்தத்தைப் போக்கும்; ஆர்த்ரைட்டீஸ் வலிகளைக் குறைக்கும்; இதயத்தை வலுப்படுத்தும்; புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

எள்ளு விதை

எள்ளு விதை (Sesame seeds)

எள்ளு விதைகள் எண்ணெய் தயாரிப்புக்குத்தான் அதிகம் பயன்படுகின்றன. எளிதில் கெட்டுப்போகும் தன்மை இதற்கு இல்லை. இது, ரத்த அழுத்தத்தையும் கொழுப்பையும் குறைக்கும்; கல்லீரல் பாதிப்பைத் தடுக்கும்; ஆர்த்ரைட்டீஸ், ஆஸ்துமா, தலைவலி, ஆஸ்டியோபோரோசிஸ், புற்றுநோய் ஆகியவற்றில் இருந்து காக்கும். அதே நேரத்தில் அதிகமாகச் சாப்பிட்டால் தலைவலி, குடல்புண் ஆகியவை ஏற்படும்.

சூரியகாந்தி விதைகள்

சூரியகாந்தி விதைகள் (Sunflower seeds)

சூரியகாந்தியிலிருந்து எடுக்கப்படும் இந்த விதைகளில் வைட்டமின் இ நிறைந்துள்ளது. இது கொழுப்பைக் குறைக்கும் தன்மைகொண்டது. தினமும் இதைச் சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா, ரத்த அழுத்தம், தலைவலி, மாரடைப்பு ஆகியவற்றைத் தடுக்கும். ஒரு நாளைக்கு கால் கப் (சிறிய கப்பில்) சாப்பிடலாம்.

வால்நட்

வால்நட் (Walnut)

தினமும் ஏழு வால்நட் சாப்பிட்டு வந்தால், பலவகைப் பலன்களைப் பெறலாம். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மார்பகப் புற்றுநோயைத் தடுக்கலாம்; ரத்த அழுத்தம் குறையும்; கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்; உடல் எடை குறையும்; மூளை புத்துணர்ச்சியோடு, சுறுசுறுப்பாக இருக்கும். இது, ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும்; சருமப் பளபளப்புக்கும், முடி ஆரோக்கியத்துக்கும் உதவும்.

http://www.vikatan.com/news/health/84038-10-nuts-for-building-strong-bones-and-muscles.html

Link to post
Share on other sites

வெனிலா, சாக்லேட், ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்... பரவசம்! உண்மை நிலவரம் என்ன? #HealthAlert

“ஒரு போட்டியில் ஜெயித்ததும், அந்த வெற்றியை ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிட்டுக் கொண்டாடுவது என் வழக்கம்’’ - இப்படிச் சொல்பவர் பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க ஐஸ் க்ரீம் பிரியர்கள் அதிகம். ஒரு பஃபே விருந்தில் விதவிதமான உணவுகள் இருந்தாலும், ஆரம்பத்திலேயே ஐஸ் க்ரீம் கவுன்ட்டர் அருகே களைகட்டும் கூட்டம் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. குழந்தைகள், பெரியவர்கள் என விதிவிலக்கில்லாமல் அனைவரையும் ஈர்க்கும் அபார சுவை இதற்கு உண்டு. வெனிலா, சாக்லேட், ஸ்ட்ராபெர்ரி... என நீள்கிற ஐஸ்க்ரீம் வகைகள் தரும் பரவசம் ஒருபுறம் இருக்கட்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை இதன் உண்மை நிலவரம் என்ன... பார்க்கலாமா? 

ஐஸ்க்ரீம்

முப்பது வருடங்களுக்கு முன்னால் ‘குச்சி ஐஸ்’ என்று ஒன்று இருந்தது. ஒரு சிறிய மர வண்டியைத் தள்ளிக்கொண்டு வருவார் ஐஸ்காரர். உள்ளங்கை அளவுக்கே இருக்கும் சதுரமான மூடியைத் திறந்து, கையை உள்ளேவிட்டு அதை எடுத்துத் தருவார். பார்த்தவுடனேயே பிள்ளைகளுக்கு ஜொள்ளு வடியும். ஆரஞ்சு, மஞ்சள், ரோஸ், சிவப்பு, வெள்ளை, கறுப்பு என விரிகிற நிறங்கள் சொக்கவைக்கும். `அந்த கலர் ஐஸை எடுத்திருக்கலாமோ!’ என தன் கையில் இருப்பதோடு, மற்ற பிள்ளைகளின் கையில் இருப்பதை ஒப்பிட்டுப் பார்த்து ஏங்கவைக்கும். சில நேரங்களில் ஐஸோடு ஜவ்வரிசி, சேமியா எல்லாம் கலந்து ஜில்லென்ற சுவை மிரட்டும். 

குச்சி ஐஸ், பால் ஐஸ், கப் ஐஸ், கோன் ஐஸ், ஃபலூடா எனப் பல வடிவங்கள்... வெனிலா, சாக்லேட், மேங்கோ, பட்டர்ஸ்காட்ச் என விதவிதமான ஃப்ளேவர்கள்... அத்தனையிலும் ருசித்து ரசிக்க ஐஸ் க்ரீம் போன்ற அட்டகாச உணவு வேறு இல்லை. இன்றைக்கும் தமிழ்நாட்டின் சில நகரங்களில் `குல்ஃபி ஐஸ்’ என்று ஒன்று உண்டு. பெரிய மண் பானையை வண்டியில் வைத்துத் தள்ளிக்கொண்டு வருவார் ஐஸ்காரர். உள்ளே மெட்டல் கிண்ணங்களில், உருண்டை வடிவில் இருக்கும் குல்ஃபியை கத்தியால் லாகவமாகப் பிரித்தெடுத்து, ஒரு குச்சியைச் செருகி நீட்டுவார். லேசாக உப்புச் சுவை கூடிய குல்ஃபி, ஆயிரக்கணக்கான மக்களின் ஃபேவரைட்! இரவு பத்து மணி தாண்டிய பிறகும், காத்திருந்து அதை வாங்கி, சுவைத்து மகிழ்பவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள்.  

ஐஸ்கிரீம்

ஆங்கிலத்தில் இதை `டெசர்ட்’ (Dessert) என்கிறார்கள். அதாவது, உணவுக்குப் பிறகு வழங்கப்படும் இனிப்பு. `ஐஸ் க்ரீமைக் கண்டுபிடித்தது நான்தான் என்று யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. ஆனால், அது கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம்’ என்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள். ஆனாலும், எங்கே, எப்போது, யாரால் கண்டுபிடிக்கப்பட்டது என்பது புரியாத மர்மமே! மாவீரன் அலெக்ஸாண்டர் ஐஸ் கட்டிகளுடன் பழச்சாறு, தேன் கலந்து பருகியிருக்கிறான். பைபிளில் சாலமன் அரசன், அறுவடைக் காலங்களில் ஐஸ் கட்டி கலந்த பானத்தைப் பருகியதாகக் குறிப்பு இருக்கிறது. ரோம் நகரை ஆண்ட நீரோ மன்னன் (Nero Claudius Caesar) தன் வீரர்களை பனி மலைகளுக்கு அனுப்பி, அங்கிருந்து பனித்துகள்களைக் கொண்டு வந்து, பழங்களிலும் பழச்சாறிலும் கலந்து பருகியிருக்கிறான். 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யாத்ரீகர் மார்கோ போலோ இத்தாலிக்கு வந்தபோது, கையோடு கொண்டு வந்த ஒரு ரெசிப்பிதான் இன்றைய சர்பத் என்றும் சொல்கிறார்கள். ஐஸ் க்ரீம் என்கிற டெசர்ட் விரிவாக்கம் பெற்றது 16-ம் நூற்றாண்டில் இருக்கலாம் என்கிறார்கள் வரலாற்றாளர்கள். இங்கிலாந்தில் அது ஆரம்பத்தில் `க்ரீம் ஐஸ்’ என்று அழைக்கப்பட்டதாம். இன்னும் ஃபிரான்ஸ், இத்தாலி, அமெரிக்கா என்று இது உருவான வரலாறு சுற்றிச் சுழன்றடித்து விரிந்துகொண்டே போகிறது. பாரீஸில் உள்ள `கேஃப் புரோகோப்’ (Cafe Procope) என்ற ரெஸ்டாரன்ட்தான் முதன்முதலில் பால், க்ரீம், வெண்ணெய், முட்டை எல்லாவற்றையும் கலந்து ஐஸ்க்ரீமை உருவாக்கி, ஐஸ் க்ரீம் விற்பனையை ஆரம்பித்து வைத்தது என்ற குறிப்பும் இருக்கிறது. இந்தியாவுக்குள் இது நுழைந்ததென்னவோ இந்து குஷ் மலையில் இருந்து டெல்லிக்கு வந்த முகலாயர்களால்தான். ஐஸை அவர்கள் சர்பத்துக்குப் பயன்படுத்தினார்கள்.

ஐஸ்க்ரீம் 

ஐஸ் க்ரீமைப் போலவே அதன் வரலாறும் திகட்டாத சுவை உடையது. `நான் மகான் அல்ல’ படத்தில் ஒரு காட்சி வரும். நடிகர் கார்த்தி, கல்யாண மண்டபத்தில் ஒரு குழந்தைக்கு ஐஸ் க்ரீம் கொடுப்பதற்காக பெட்டியைத் திறப்பார். உடனே மண்டபத்தில் குழுமியிருக்கும் மொத்த குழந்தைகளும் அங்கே படையெடுப்பார்கள். இது வெறும் திரைப்படக் காட்சி அல்ல. உண்மை நிலையும் இதுதான். குழந்தைகள் என்ன... சாப்பாட்டைக் குறைத்துக்கொண்டு ஐஸ் க்ரீமை வெட்டும் பெருசுகளும் இருக்கிறார்கள். அந்தப் பரவசம் ஒருபுறம் இருக்கட்டும்... ஐஸ் க்ரீம் நம் உடலுக்கு ஆரோக்கியம்தானா? டயட்டீஷியன் சௌமியாவிடம் கேட்டோம்... செளமியா

``ஐஸ் க்ரீம் நம் உடலுக்கு நன்மையும் தீமையும் கலந்து தரக்கூடியது... ஆனால், தீமைகளின் அளவு கொஞ்சம் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். அதிகக் கொழுப்புள்ள பால், க்ரீம் கலவையைக் கடைந்து, குளிரூட்டி தயாரிக்கப்படுவது ஐஸ்க்ரீம். `கார்ன் சிரப்’ என்ற வடிவில் ஃப்ரக்டோஸ் (Fructose) அல்லது குளூக்கோஸ் இனிப்புகள் இதில் சேர்க்கப்படுகின்றன. சுவை மற்றும் வாசனைக்காக வெனிலா, சாக்லேட் போன்ற ஃப்ளேவர்களும் கலக்கப்படுகின்றன. இந்தக் கலவை ஜில்லென்று ஆகும்போது குழைந்த க்ரீமாகிறது. 

விதவிதமான வகைகள், இதைத் தயாரிக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றின அடிப்படையில் இதில் உள்ள ஊட்டச்சத்தின் அளவு வேறுபட்டாலும், பொதுவாக ஐஸ் க்ரீம், நம் உடலுக்கு சக்தி தரும் ஒன்று. இதில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. அதாவது, ஒன்றரை கப் (சிறிய அளவு) ஐஸ் க்ரீமில், 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. அதோடு இதில் உள்ள 7 கிராம் கொழுப்பு, 2 கிராம் புரோட்டீன் ஆகியவையும் சேர்ந்து நம் உடலுக்கு சக்தி அளிக்கக்கூடியவை. 137 கலோரி இதில் இருக்கிறது. சுருக்கமாக, ஒன்றரை கப் பாலில் இருக்கும் கலோரியைப்போல இரு மடங்கு! ஆக, உடலில் சக்தி அதிகரிக்க, உடல் எடையைக் கூட்ட நினைப்பவர்களுக்கு இது சிறந்தது. 

இதில் பாஸ்பரஸும் கால்சியமும் நிறைந்துள்ளன. வைட்டமின்கள் ஏ, சி, இ, டி ஆகியவை உள்ளன. தையமின், ரிபோஃப்ளோவின், நியாசின், ஃபோலேட், வைட்டமின் பி-6, வைட்டமின் பி-12, மிகக் குறைந்த அளவில் வைட்டமின் கே ஆகியவையும் உள்ளன. 

ஐஸ்க்ரீம்

அதிகக் கொழுப்புள்ள உணவு ஐஸ் க்ரீம். இதில் பால் கொழுப்பு (Milk Fat) அதிக அளவில் உள்ளது. இது ஒரு நிறைவுற்ற (Saturated) கொழுப்பு. ஒருவருக்கு ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள பட்சத்தில், ரத்த நாளங்களில் (Arteries) படியும் கொழுப்பு, ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும்; இதயக் கோளாறுகள், பக்கவாதம் ஆகியவை வருவதற்கும் வழிவகுக்கும். அதோடு சர்க்கரை, கார்போஹைட்ரேட் ஆகியவற்றின் அளவும் இதில் அதிகம். அடிக்கடி அல்லது அதிக அளவில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது உடல் எடையைக் கூட்டும்; பல உடல்நலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும்; பற்சிதைவை உண்டாக்கும். சர்க்கரைநோயாளிகளும், கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்களும் ஐஸ்க்ரீமைத் தவிர்ப்பதே நல்லது. 

ஐஸ் க்ரீமில் லேக்டோஸ் (Lactose) என்ற சர்க்கரைப் பொருள் இருக்கிறது. இது செரிமானம் ஆவதற்கு நம் உடலில் உள்ள லேக்டேஸ் (Lactase) என்ற என்ஸைம்தான் உதவும். உடலில் லேக்டேஸ் குறைவாக இருப்பவர்களுக்கு, `லேக்டோஸ் ஒவ்வாமை’ (Lactose Intolerance) எனும் பிரச்னை ஏற்பட்டு செரிமானத்தைப் பாதிக்கும். இந்தக் குறைபாடு உள்ளவர்கள் ஐஸ் க்ரீம் பக்கம் போகாமல் இருப்பதே சிறந்தது’’ என்கிறார் சௌமியா. 

குழந்தைகளுக்கு பற்சிதைவு, ஐஸ் இருப்பதால் இருமல், சளித் தொந்தரவு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அதிக ஐஸ், தொண்டையை பாதிக்கும். எனவே, ஐஸ் க்ரீமை அளவாக, எப்போதாவது சாப்பிடுவது என வைத்துக்கொள்வதே ஆரோக்கியம்!

http://www.vikatan.com/news/health/84050-is-ice-cream-good-for-our-health.html

Link to post
Share on other sites

சளி, இருமல் விரட்ட உதவும் எளிய வீட்டு வைத்தியம்! #HealthTips

ளியும் இருமலும் வந்துவிட்டால் நாம் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. கூடவே தொண்டைவலியும் வந்துவிட்டால் அவ்வளவுதான். சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடும். பருவநிலை மாறும்போது இவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம். எப்படி?

சளி

உப்புநீரில் வாயைக் கொப்பளித்தல்
தொண்டைவலி வந்துவிட்டால், உடனே வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை. தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்கும்;  தொண்டை உறுத்தலை நீக்கும்; சளியையும் குறைக்கும். 

இஞ்சி

இஞ்சி
இஞ்சி, வறண்ட இருமலை எளிதில் நீக்கக்கூடியது. ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து, அதில் சிறிது உப்பைத் தூவவும். உப்பு கலந்த இஞ்சியை சில நிமிடங்களுக்கு நன்கு மெல்லவும்.  இஞ்சியோடு துளசி இலையையும் சேர்த்துக்கொண்டால், சளி, இருமலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

பூண்டு

பூண்டு
நான்கு அல்லது ஐந்து  பூண்டுப் பற்களை எடுத்துக்கொள்ளவும். அத்துடன் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றிச் சேர்த்து பூண்டைப் பொரித்து எடுக்கவும். சூடு ஆறுவதற்குள் இதைச் சாப்பிட்டுவிட வேண்டும். பூண்டை நன்றாக நசுக்கி குழம்பு அல்லது சூப்பில் போட்டும் பயன்படுத்தலாம். சளி, இருமலை இயற்கைவழியில் நீக்கும்.

ஆளி விதை
சிறிது ஆளி விதையை நீரில் கொதிக்கவைத்தால் பசை மாதிரி ஆகிவிடும். இதனுடன் இயற்கை ஆன்டிபயாடிக்குகளான (Antibiotics) எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் சேர்த்துப் பருகிவர தொண்டை வீக்கம் குறையும். 

கருமிளகு

கருமிளகு டீ
கருமிளகு இருமல், சளிக்கு மிக நல்ல மருந்து. கருமிளகு டீ குடிப்பது தொண்டைவலியைக் குறைக்கும்.  ஒரு கப் வெந்நீரில் இரண்டு டேபிள்ஸ்பூன்  தேன், சிறிதளவு கருமிளகு சேர்த்துக்கொள்ளவும். இதை அப்படியே மூடிவைக்கவும்.  15 நிமிடங்களுக்குப் பிறகு இதைக் குடிக்கலாம். 

மஞ்சள் பால்

பால் மற்றும் மஞ்சள்
சூடான பாலில் மஞ்சள் சேர்த்துப் பருகுவது சளியைப் போக்கும். பால் மற்றும் மஞ்சளில் நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய பல பொருட்கள் உள்ளன. பொதுவாகவே, சளி போன்ற பாதிப்புகள் இல்லாத நாள்களிலும் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதும் ஆரோக்கியம் தரும். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்றது மஞ்சள் பால். 

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை சிரப்
ஒரு வாணலியில் 100 மி.லி தேனை ஊற்றி, அதன் அடர்த்தி குறைகிற வரை சூடாக்கவும்.  இதனுடன் சிறிது எலுமிச்சைச் சாறு, லவங்கப்பட்டை சேர்த்துப் பயன்படுத்திவர சளி குறையும்.

வெங்காயம்

வெங்காய சிரப்
ஒரு வெங்காயத்தை உரித்து நன்றாக நசுக்கிக்கொள்ளவும்.  அதனுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும். இதனுடன்  ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்துக்கொள்ளவும். சூடு ஆறிய பிறகு இதனைக் குடிக்கலாம். வெங்காயம் சளி, இருமலுக்கு மிக நல்ல மருந்து. வெங்காயத்தில் உள்ள ஃபிளேவனாய்ட்ஸ் நிறமி, சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளுக்கு எதிராகச் செயல்படும் தன்மைகொண்டது. 

எளிய வீட்டு மருந்து
சளி, இருமலைப் போக்கும்  இனிப்பான மிட்டாய்களை கடைகளில் வாங்கிச் சாப்பிட்டிருப்பீர்கள். இவற்றை நாம் வீட்டிலேயே தயாரித்துவிட முடியும். 
ஒரு சிறிய துண்டு இஞ்சியைச் சாறாகப் பிழிந்துகொள்ளவும்.  சிறிதளவு கருமிளகை வறுத்து, பொடியாக்கிக்கொள்ளவும். இஞ்சிச் சாறு, கருமிளகுப்பொடி இவற்றுடன் கொஞ்சம் மஞ்சள், தேன் சேர்த்து கெட்டியான பேஸ்ட் மாதிரி  தயாரித்துக்கொள்ளவும். இதை பந்து மாதிரி உருட்டி வைத்துக்கொள்ளலாம். 10 முதல் 15 நிமிடங்களுக்கு இதை வாயிலேயே வைத்திருந்து பின் விழுங்கிவிட வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை இதைச் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். 

சளி, இருமல் வந்துவிட்டால் தண்ணீரை சூடாக்கித்தான் குடிக்க வேண்டும். வெந்நீருக்கு தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உண்டு.  இது சளி, காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுகளை நீக்கவும் உதவும். எனவே, சளி வந்தால் வெந்நீர் அருந்தவேண்டியது கட்டாயம். அதோடு மேலே சொன்ன வழிமுறைகளில் ஒன்றையும் பின்பற்றினால் சளியும் இருமலும் வந்த இடம் தெரியாமல் ஓடிப்போவது உறுதி.

http://www.vikatan.com/news/health/83958-simple-home-remedies-for-cold-and-cough.html

 • Like 1
Link to post
Share on other sites

நோமோபோபியா, சைபர்சிக்னெஸ்... உங்களுக்கும் இருக்கலாம் கவனம்! #VikatanExclusive

நாளொரு போனும், பொழுதொரு ‘ஆப்’ஸுமாக மாறிக்கொண்டே இருக்கிறது நம் வாழ்க்கை. சிட்டிசன்களில் முக்கால்வாசிப் பேர் நெட்டிசன்களாகவும் இருக்கிறார்கள். தகவல் பரிமாற்றத்தின் பிரமாண்டமாக ஆரம்பித்து, இன்றைக்கு கைக்கு அடக்க குட்டிச்சாத்தானால் ஆளப்படுகிறவர்களாக ஆகிவிட்டோம். 

நோமோபோபியா

அழுகிற குழந்தைக்கு ஆங்க்ரி பேர்ட்ஸைக் கொடுப்பதிலிருந்து, அப்பத்தா இறந்ததை இரங்கல் (RIP) ஹேஷ்டேக்குடன் ட்விட்டரில் போடுவது வரை மெய்நிகர் உலகே, பலருக்கும் மெய்யுலகாக மாறிவிட்டிருக்கிறது. மருத்துவ உலகிலும் இன்டர்நெட் புரட்சிக்குப் பிறகு ஏகப்பட்ட மாறுதல்கள். அதனால் விளையும் நிகழ்வுகளுக்குக் காரணம் என்ன, தீர்வு என்ன என்று ஆராய்ச்சிகள் நடந்தவண்ணம் இருக்கின்றன.

தலைவலி என்று டாக்டரிடம் போய் அவர் மாத்திரை கொடுத்தால், “டாக்டர்... ஒருவேளை இது வெர்டிகோவா இருக்குமோ... இதனால ஹியரிங் லாஸ் வரைக்கும்கூட போகும்ங்கறாங்க. அப்படி ஏதும் இருக்குமோ... நான் `வெஸ்டிபுலர் ரீஹேபிலிடேஷன்’ (Vestibular rehabilitation) மாதிரியான ட்ரீட்மென்ட் எடுத்துக்க வேண்டியிருக்குமோ... இது ஹெரிடிட்டி நோயா டாக்டர்?’’ என்று கூகுளாய்ந்துவிட்டு வந்து தானும் பீதியாகி, அவரையும் பீதிக்குள்ளாக்கிவிட்டு வருபவர்கள் ஏராளம். 

இப்படி எல்லாவற்றுக்கும் கேட்ஜெட்ஸை சார்ந்து வாழ்வது சரியா... என்ன சொல்கிறார் டாக்டர் ருத்ரன்?டாக்டர் ருத்ரன்

“செல்ஃபோன், டேப்லெட் என்று பல கேட்ஜெட்ஸ் இப்போது மனிதனை ஆள்கின்றன. `கேட்ஜெட்ஸ் என்பது திறன்கருவிகள்’ என்று மொழியாக்கம் சொல்கிறது. ஆனால், அது கருவியின் திறனைக் குறிப்பிடுவதாக இருக்கிறது. இது, நம் திறனை மழுங்கடிப்பதாகவே பார்க்கிறேன். எந்தக் கட்டத்திலும் கருவிகள் இல்லாமல் நாம் இருந்தது கிடையாது. ஆனால், இப்போது இருக்கும் கருவிகள் மீது நமக்கு ஒரு சார்புநிலை வந்திருக்கிறது. 

`அது இருந்தாத்தான் ஒரு செயலைச் செய்ய முடியும்’ என்பது சார்புநிலை. `பேனாவை உபயோகித்தவர்கள்தான் இப்போ கீபோர்டுல எழுதறாங்க. ஒருவேளை, மீண்டும் பேனாவுல எழுதணும்னா அவங்களால முடியும்’. இது வெறும் சார்பு நிலைதான். சார்பு நிலைதாண்டி, ’அப்செஷன்’ சில பேருக்கு இருக்கும். ஒரே விஷயம் மனதில் உழன்றுகொண்டே இருப்பதுதான் அப்செஷன். அதைத் தாண்டி மனசு திரும்ப வராது. அப்படி தாண்டிப் போனாலும், இயல்பாக இருக்க முடியாது. குழந்தையாக இருக்கும்போது கார், ஏரோப்ளேன் பொம்மைகள் மேல ஒரு ஈர்ப்பு இருக்கும். வளர்ந்த பிறகு இந்த மாதிரி கருவிகள் மீது வந்திருக்கிறது.

மூன்றாவது போதை. கிட்டத்தட்ட மதுவுக்கு அடிமையானதுக்கு சமம் இது.’’ 

``இதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம்?’’

``மெய் நிகர் உலகு, பிறழ் நம்பிக்கையைக் கொடுக்கிறது. கற்பனையான உறவு வட்டத்துக்குப் பின்னால் போகவைக்கிறது. உண்மையான உறவுகளின் தொடர்பு அறுந்துபோகிறது. 

குழந்தைகள் அழுதால்கூட இப்போதெல்லாம் தாலாட்டுப் பாடுவதைவிட, போனை எடுத்துக் காண்பித்து சமாதானப்படுத்துவதுதானே நடக்கிறது?

இதற்கு இன்டர்நெட் மட்டும்தான் காரணமா? வெளியில் போய் ‘குருவி பாரு... காக்கா பாரு’ என்று சொல்வதற்கு அவை இல்லையே? செல்போனில்தானே காட்டவேண்டியதாக இருக்கிறது! ஆக சமூகமும் இதற்கு மறைமுகமாகக் காரணமாக இருக்கிறது. அதுவும் போக, குழந்தைகள் எதை உபயோகிக்கக் கூடாது என்று நினைக்கிறோமோ, அதை அவர்கள் முன்னால் பெற்றோர்களே உபயோகித்துக்கொண்டே இருப்பதும் ஒரு காரணம்.’’     

``என்ன செய்யலாம்?’’

``முதலில், `தினமும் ஒரு மணி நேரம் மொபைலையோ, வேறெந்த கேட்ஜெட்ஸையோ தொட மாட்டேன்’ என்று உறுதியாக இருக்க வேண்டும். உங்கள் நட்பு, அலுவலகம் அனைவரையும் அதற்குப் பழக்க வேண்டும். அதன் பிறகு இந்த நேரத்தை இரண்டு மணி நேரமாக மாற்ற வேண்டும். பிறகு வாரத்துக்கு ஒரு நாள் ‘நோ ஃபோன் டே’வாக மாற்றலாம். `இந்த நாளில் இவர் மொபைலைத் தொட மாட்டார்’ என்பதை உங்களைத் தொடர்புகொள்ள விரும்புபவர்கள் அனைவரும் அறிய, அதிகபட்சம் இரண்டு மாதங்கள் ஆகலாம். அதற்குப் பின்னர், உங்களை மொபைலால் ஆள முடியாது.’’ 

``உங்களிடம் செல்போன் இருக்கிறதா டாக்டர்?’’

``இல்லை.’’

நோமோபோபியா


செல்போன் வைத்திருக்கும் அத்தனை பேருமே தெரிந்தோ, தெரியாமலோ அது தரும் சில நோய்க்குறிகள் (Syndrome) மற்றும் பிரச்னைகளுக்கு ஆளாகியிருப்பார்கள். அவை...

பேன்டம் ரிங்கிங் சிண்ட்ரோம் (Phantom Ringing Syndrome)

என்ன இது? உங்கள் பாக்கெட்டில் சும்மா இருக்கும் போன் அடித்ததாக உங்களுக்குக் கற்பனையாகத் தோன்றுவது. `ஐடிஸ்ஆர்டர்’ (iDisorder) என்ற புத்தகத்தை எழுதிய லாரி ரோஸன் (Larry Rosen), போன் உபயோகிப்பவர்களில் 70 சதவிகிதம் பேருக்கு இந்த சிண்ட்ரோம் இருப்பதாகக் கூறுகிறார். அரிக்காமலேயே அரிப்பதுபோலத் தோன்றுவதால், சொறிந்து கொள்வதுதான், இந்த டெக் யுகத்தில், இந்த சிண்ட்ரோமாக உருமாறியிருக்கிறது. `நம் கண்முன் இல்லாத, ஆனால் நாம் பாதி நேரம் சேர்ந்து வாழ்கிற சோஷியல் உலகம் நம் பாக்கெட்டிலேயே இருப்பதால், அது நம்மை அழைப்பதான கற்பனையில் இப்படிச் செய்கிறோம். எதிர்காலத்தில், கூகுள் கிளாஸெல்லாம் வந்துவிட்டால், நம் மூளை இல்லாததையும் காட்டினால் ஆச்சர்யபடுவதற்கில்லை’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

நோமோபோபியா (Nomophobia)

`நோ மொபைல் போபியா’வின் (No Mobile Phobia) சுருக்-தான் `நோமோபோபியா’. மொபைலில் சார்ஜ் தீர்ந்து, இன்னும் சில மணி நேரங்களுக்கு மொபைலையோ வேறெந்த கேட்ஜெட் சமாசாரங்களையோ தொட முடியாதென்றால், இந்த போபியா ஆரம்பிக்கும். யாருடைய மொபைலையாவது கையிலெடுக்கத் தோன்றும்; ஆனால் முடியாது. `அப்படித் தோன்றும் எண்ணமுடையவர்கள் `பாவ்லோஸ் டாக்ஸ்’ (Pavlov’s dogs) ஆகிவிட்டார்கள்’ என்கிறது மருத்துவம். ஒரு நாய்க்கு மணி அடிக்கும்போதெல்லாம் எலும்பைவைத்து, பிறகு எலும்பே வைக்காவிட்டாலும் மணி அடித்தால் எலும்பு அதன் நினைவில் வருவதுதான் பாவ்லோஸ் டாக்ஸ் தியரி. அதன்படி எந்த மணி அடித்தாலும், நமக்கானதாகத் தோன்றி, டக்கென்று பாக்கெட்டிலிருந்து மொபைலை எடுத்துப் பார்ப்பார்கள். எதையும் தவறவிட்டுவிடக் கூடாது என்கிற பதற்றத்தின் விளைவாக வரும் FOMO (Fear Of Missing Out)-வின் ஒரு நிலைதான் இதுவும் என்கிறார்கள்.

நோமோபோபியா

சைபர்சிக்னெஸ் (Cybersickness)

இணையமாகட்டும், அடிக்கடி உபயோகிக்கும் ஒரு சில ‘ஆப்’ஸ் ஆகட்டும்... உங்கள் மனதில் பதிந்திருக்கும் லேஅவுட்டில் இருந்தால்தான் அவற்றை ரசிப்பீர்கள். ஆப்பிள் ஒருமுறை தன் புதிய பதிப்பில், அதன் ஆப்ஸ்-ன் சின்னங்களை முப்பரிமாணத்தில் கொடுத்தபோது, அலறினார்கள் உபயோகிப்பாளர்கள். ‘ஐயையோ தலை சுற்றுகிறது... குமட்டுகிறது... யார் இந்த வடிவத்துக்கு ஒப்புதல் கொடுத்த ஆசாமி?’ என்று ஆப்பிள் வாடிக்கையாளர் குறை தீர்ப்பு மின்னஞ்சல் ஐடி, கடிதங்களால் நிரம்பி வழிந்தது. 

உதாரணத்துக்கு, நாளைக்கு நீங்கள் விழித்து, மொபைலைத் திறந்ததும், ஃபேஸ்புக் ஐகான் வேறு நிறத்தில், செவ்வகமாக இருந்தால், உங்கள் மனம் அதை ஏற்கவே ஏற்காது. அதனால்தான் நிறுவனங்கள் தங்கள் லோகோவை மாற்றுவதற்கு முன்னர் முழுப் பக்க விளம்பரங்கள் மூலம் மக்கள் மனதை அதை ஏற்பதற்குத் தயார் செய்கிறார்கள்.  

தி கூகுள் எஃபெக்ட் (The Google Effect)

இன்டர்நெட் புரட்சிக்குப் பிறகான உலகின் முதல் அறிகுறியாகவே இந்த ‘கூகுள் எஃபெக்ட்’ இருக்கிறது. அதாவது, ‘எல்லாம் நெட்டில் பார்த்துக்கலாம்’ என்கிற மனோபாவத்தால் நம் மூளை மிகக் குறைவான விஷயங்களையே தக்கவைத்துக்கொள்கிறது. `நம் குடியரசுத் தலைவர் யார்?’ என்று யோசிப்பதைக் காட்டிலும். ‘கூகுள் பண்ணினா தெரியப்போகுது’ என்றுதான் எண்ணுகிறோம். நிச்சயமாக இந்த கூகுள் பல விஷயங்களில் உபயோகமாக இருந்தாலும், சின்ன வயதிலேயே கற்றுக்கொண்டு, தகவல்களை அறிந்துகொள்வதோ, மூளையில் அதை சேமித்துக்கொள்வதோ இல்லை போன்ற பின் விளைவுகளும் உள்ளன.

http://www.vikatan.com/news/health/84164-you-might-be-affected-with-nomophobia-cybersickness.html

Link to post
Share on other sites

மீன் உணவு... இதயத்துக்கு இதம், உடலுக்கு பலம், மனதுக்கு நலம்! #HealthyFood

நெத்திலி, வஞ்சிரம், வாளை, கெளுத்தி, கெண்டை, சுறா, இறால், காரப்பொடி.... மீன்களில்தான் எத்தனை வகை! கடல், ஏரி, குளம், ஆறு, கிணறு... எந்த நீர்நிலையில் பிறந்திருந்தாலும் மீனின் ருசிக்கு ஈடு இணை வேறு எதுவும் இல்லை. நகரத்தில் உழைத்துக் களைத்து வரும் ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கு, ஒரு தட்டு சோற்றுடன் பரிமாறப்படும் ஒரு துண்டு மீன் மகா விருந்து. கடல் அன்னை அள்ளி அள்ளிக் கொடுத்த மகா கொடை. மீன் உணவு உலகம் முழுக்கப் பிரபலம். பரவலாக, அதிகம் சாப்பிடப்படும் உணவு இது என்றாலும், மீனை நம்பிப் பிழைப்பவர்கள் கோடிக்கணக்கானோர்... பலரின் வாழ்வாதாரமே மீன்தான்.  

மீன் உணவு

ஆதி மனிதன், மாமிச பட்சிணி! காடுகளில், சமவெளிகளில், பள்ளத் தாக்குகளில், மற்ற நிலப்பரப்புகளில் கிடைத்த காய், கனிகள் தவிர நீர் நிலை இருந்த இடங்களில் எல்லாம் மீன் பிடித்து உண்டு வந்தவன். மனிதன் தோன்றி, பல லட்சக்கணக்கான ஆண்டுகளான பின்னும் அவனுக்கு உணவாகிறது மீன்... அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக விளைவித்துக்கொண்டே இருக்கிறது கடல். உண்மையில் கடல் வளம் என்பது மீன் வளமே! அந்த வளம் கெட்டுப்போகக் கூடாது என்பதற்காக `மீன் பிடி தடைக்காலம்’ எல்லாம் உண்டு. 45 நாட்களுக்கு கடல் பக்கமே போக மாட்டார்கள் நம் மீனவர்கள்.  

உலக அளவில் மீனை ஆதாரமாகக் கொண்டு செழித்து நடக்கும் வியாபாரம் பிரமிக்கத்தக்கது. குளம், குட்டைகளில் வளர்ப்பது, இறால் பண்ணை வைப்பது, கடலில் மொத்த மொத்தமாக வலைவீசிப் பிடித்து, அவற்றைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்வது, வீட்டில் தொட்டிகளில் காட்சிப்பொருளாக்க ஆசைப்படுபவர்களுக்காக குட்டிக் குட்டி வண்ண மீன்களை வளர்த்து விற்பது... எனச் செழித்துக் கொழிக்கிறது மீன் வியாபாரம். இறந்த பிறகும் உப்புச் சேர்க்கப்பட்டு, காயவைத்து கருவாடாகவும் உணவாகிறது இந்த அற்புத ஜீவன். சென்னை பேசின்பிரிட்ஜ் பாலத்துக்குக் கீழே இன்றைக்கும் பழம்பெருமை வாய்ந்த கருவாடு மார்க்கெட் இருக்கிறது. மொத்த, சில்லறை விற்பனைக் கடைகள் வரிசையாக இருக்கின்றன. வாசனை தாங்காமல் மூக்கைப் பொத்திக்கொண்டு நகர்கிறவர்களைப் பார்த்து, ஏளனமாகச் சிரிப்பார்கள் மீன் பிரியர்கள். இந்தக் காட்சியை இன்றைக்கும் காணலாம். காசி மேடு, ராயபுரம் கடற்கரைகளில் காலை வேளையில் போய்ப் பார்த்தால், மீனை நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பார்க்கலாம். 

மீன்

மீன், ஆங்கிலத்தில் `ஃபிஷ்’ (Fish) என அழைக்கப்படுகிறது. இது பழைய ஆங்கிலச் சொல்லான `ஃபிஷ்க்’ ((Fisc) என்ற வார்த்தையில் இருந்து வந்தது. ஆரம்பகாலத்தில் இருந்தே மீன் வளர்ப்பு பெரிய வேலையாகவே மனிதனால் செய்யப்பட்டு வந்திருக்கிறது. தொல்லியல் துறை அடுக்கும் இதற்கான ஆதாரங்கள் மலைக்கவைக்கின்றன. நியாண்டர்தால் மனிதன் இருந்த காலத்திலேயே மீன் உணவு வழக்கத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு ஆசியாவில் வாழ்ந்த, பழைமையான தியான்யுவான் (Tiyanyuan) வம்சத்தைச் சேர்ந்த மனிதர்கள் மீன் உணவு சாப்பிட்டதும் அறியப்பட்டிருக்கிறது. 

மீன் உணவுகள்

அது கடலோ, ஆறோ அவற்றில் இருந்து கிடைக்கும் மீன் உணவு ஆரோக்கியமானது என்பதை அறிந்திருந்தார்கள் மனிதர்கள். வேக வைத்து, வறுத்து, பொரித்து,மைக்ரோவேவ் அவனில் வைத்து என விதவிதமாக சமைத்துச் சாப்பிடப் பழகிவிட்டார்கள். குழம்பில் இருந்து பர்கர் வரை மீன் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஜப்பானில், சஷிமி (Sashimi) என்ற ஒரு வகையான மீனைப் பச்சையாகவே சாப்பிடுவார்களாம். இன்றைக்கும் ஆற்றில் துண்டையோ, வேட்டியையோ வைத்துப் பிடித்ததில் கிடைக்கும் மீனை வீடு வரை கொண்டு சென்று, சமைத்துச் சாப்பிட பொறுமை இல்லாதவர்களும் உண்டு. ஆற்றங்கரையிலேயே கிடைக்கிற சிறு குச்சிகளைக் கொளுத்தி, ஃப்ரெஷ்ஷாகச் சுட்டுச் சாப்பிடும் ருசி அவர்களுக்கு அலாதியானது. மீனின் முள் குத்திவிடாமல் சாப்பிடுவது கிராமத்தில் வாழும் மனிதர்களுக்குக் கை வந்த ஒரு கலை. 

மீன் குழம்பு

நம்மை பயமுறுத்தும் சுறா மீனில் இருந்து, நம்முடன் குழந்தைபோலக் கொஞ்சி விளையாடும் டால்பின் வரை பல வகை உண்டு. மீனை மையமாக எடுத்துக் கோடிக்கணக்கான பணத்தை வசூலில் வாரிக்குவித்தது ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் `ஜாஸ்’ (Jaws) என்றால், எர்னஸ்ட் ஹெமிங்வேயின் `கடலும் கிழவனும்’ (The Old Man and the Sea) நாவலில் வரும் மார்லின் மீன் ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளைகொண்டது. இவ்வளவு ஏன்... மகா விஷ்ணு `மச்சாவதாரம்’ என்று மீனாகவே அவதரித்ததாக நம் புராணம் சொல்கிறது. சொல்லச் சொல்லத் தீராதது மீன் புராணம். சரி... ஓர் உணவாக மீன், சாப்பிட ஏற்றதுதானா? விளக்குகிறார் டயட்டீஷியன் பத்மினி... பத்மினி டயட்டீஷியன்

``அசைவம் சாப்பிடுபவர்களில் மீனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆடு, மாடு... என மற்ற இறைச்சிகளோடு ஒப்பிடும்போது, மீன் உணவால் அதிகத் தீங்கு இல்லை என்றே சொல்லலாம். இதில் புரோட்டீன், வைட்டமின் டி மற்றும் செலினியம் (Selinium) போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நெத்திலி போன்ற சில வகை மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருக்கிறது. இது, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்; இதயத் துடிப்பைச் சீராக்கும்; இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை வெகுவாகக் குறைக்கும். ஆண், பெண் இருவருக்குமே உகந்தது மீன் உணவு. அதேபோல பக்கவாதம் வராமல் காக்கும்; மனஅழுத்தத்தைக் குறைக்கும். மனரீதியான பிரச்னைகளுக்குத் தீர்வு தரும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மீன் உணவு சாப்பிட வேண்டியது அவசியம்.  ஏனெனில், இதில் இருக்கும் `டி.ஹெச்.ஏ’ (DHA - Docosahexaenoic acid) எனும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு நன்மை தரக்கூடியது.  

மீன் வறுவல்

மத்தி மீன் என்று ஒன்று உண்டு. இதை வாணலியில் இட்டு வறுக்கும்போதே அதில் இருந்து எண்ணெய் வடியும். அந்த எண்ணெயில் ஒமேகா 3 கொழுப்பு உள்ளது. உடலுக்கு எத்தனையோ நன்மைகளைத் தரக்கூடியது. இன்றைக்கும் சென்னை, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடல்புறப் பகுதிகளில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சுறாப்புட்டு செய்து தரும் வழக்கம் உள்ளது. கண்பார்வை மேம்பட உதவக்கூடியது, சருமப் பொலிவுக்கு நல்லது, செரிமானப் பிரச்னையை அதிகம் ஏற்படுத்தாதது மீன் உணவு. அசைவம் சாப்பிடாதவர்கள்கூட, மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் மீனின் சத்துக்களை மாத்திரைகளாகவும், எண்ணெயாகவும் எடுத்துக்கொள்வது உண்டு. அதிக நாள் ஃப்ரிட்ஜில் வைத்துப் பதப்படுத்தப்படாத, வெளிநாட்டில் இருந்து வருகிறது என்பதற்காக இறக்குமதி செய்யப்பட்ட மீன் வகைகள் வேண்டாம். உள்ளூரில் கிடைக்கும் நல்ல மீன்களை வாங்கிப் பயன்படுத்துவது ஆரோக்கியத்துக்கு நல்லது’’ என்கிறார் பத்மினி

சுருக்கமாக, மீன் உணவு இதயத்துக்கு இதம், உடலுக்கு பலம், மனதுக்கு நலம்! 

http://www.vikatan.com/news/health/84247-fish-food-is-good-for-heart-and-brain-health.html

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஜுனில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த திட்டம் மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் ஜுன் மாதத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதில் காணப்படும் தாமதம் குறித்தும் காணப்படும் நிலையிலேயே அரசாங்கம் ஜுன் மாதத்தில் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களை சந்திக்கவுள்ளதுடன், இதன்போது மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகுமாறு அவர்களுக்கு அறிவிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. அனைத்து மாகாண சபைகளுக்கும் பதவிக் காலம் முடிவடைந்து இரண்டு வருடங்களை கடந்துள்ள போதும், இன்னும் தேர்தல் நடத்தப்படாதுள்ளது. புதிய முறையில் தேர்தலை நடத்துவதற்காக கடந்த அரசாங்கம் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த போதும், எல்லை நிர்ணயம் தொடர்பான சர்ச்சைகளால் அந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்த முடியாது போயுள்ளது. இதனால் மீண்டும் அதில் திருத்தத்தை கொண்டு வந்து பழைய முறையில் தற்போதைய அரசாங்கம் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. -(3)   http://www.samakalam.com/ஜுனில்-மாகாண-சபைகளுக்கான/  
  • அழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை – பிரதமர் மோடி   பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றது முதல், ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இதன்படி 74-வது முறையாக இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு  பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “உலகில் உள்ள மொழிகளில் மிக தொன்மையான மொழி, தமிழ். அழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை. தமிழை கற்க முயற்சி மேற்கொள்ளாதது, என்னுடைய குறைபாடுகளுள் ஒன்று. நமது அறிவும், தன்னம்பிக்கையும் வலிமையாக இருந்தால் எதை கண்டும் அஞ்ச வேண்டியதில்லை. தற்போதைய இளைஞர்களிடம் புது மாற்றத்தை உணர முடிகிறது. இந்திய அறிவியலின் வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நமது கனவுகளை நனவாக்க நாம் பிறரை சார்ந்து இருக்க வேண்டியது இல்லை.மாணவர்கள் தேர்வு குறித்து அச்சம் கொள்ளாமல் சிரித்த முகத்துடன் செல்ல வேண்டும். இன்று தேசிய அறிவியல் தினம். விஞ்ஞானி டாக்டர் சி.வி.ராமன் எழுதிய ‘ராமன் விளைவு’ கண்டுபிடிப்பிற்கு இது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நமது இளைஞர்கள் இந்திய விஞ்ஞானிகளைப் பற்றி நிறையப் படித்து இந்திய அறிவியலின் வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஹரித்வாரில் கும்பமேளா நடைபெற உள்ளது. மார்ச் 22-ந் தேதி உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கோடை காலத்திற்காக மழைநீரை சேமிக்க வேண்டும். நீர்நிலைகளை சுத்தப்படுத்தி முறையாக தூர்வாருவதன் மூலம் மழைநீரை சேமிக்க முடியும். கொரோனாவுக்கு எதிரான போரில், அஜாக்கிரதையுடன் இருக்க கூடாது” என்று கூறினார்.மேலும் வாழைக்கழிவிலிருந்து ஏராளமான மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து வருவதாக, மதுரையை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.   http://www.samakalam.com/அழகிய-மொழியான-தமிழை-சரிய/  
  • தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக இரா.சாணக்கியனை களமிறக்க திட்டம் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை வவுனியாவில் இடம்பெற்றது.இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.ஸ்ரீதரன், இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், அரியநேத்திரன், சிவமோகன், ஞா.சிறிநேசன் ஆகியோர் பங்கேற்றனர்.இந்தநிலையில் இதன்போதே இரா.சாணக்கியனை களமிறக்கும் யோசனை ஒன்றினை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.எனினும், இதுகுறித்து இரா.சாணக்கியன் கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை எனவும் கூறப்படுகின்றது.வடமாகாணசபை தேர்தலில் மாவை சேனாதிராசா களமிறக்கப்பட வேண்டும். கடந்த மாகாணசபை தேர்தலில் அவர் தனது இடத்தை விக்னேஸ்வரனிற்கு விட்டுக் கொடுத்தார். இம்முறை அப்படியான முடிவை எடுக்கக்கூடாது. அவரது தலைமையில் இளைஞர்களை களமிறக்க வேண்டும். அத்துடன், கிழக்கு மாகாணசபை தேர்தலில் இரா.சாணக்கியனை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க வேண்டும் எனவும் யோசனை ஒன்றினை சிறிதரன் முன்வைத்துள்ளார். முஸ்லிம் மக்கள் அவரை ஆதரிப்பார்கள் என்பதால், அவரை களமிறக்கி வெற்றியடையலாமென சிறிதரன் குறிப்பிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.(15)   http://www.samakalam.com/தமிழ்த்-தேசியக்-கூட்டமை-32/
  • தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமது சுயநல அரசியலிற்காக எமது அமைப்பின் பெயரை பயன்படுத்தி போராட்டம் செய்து மூக்குடைபட்டு வருகின்றது தமது வங்குரோத்து அரசியலை நிமிர்த்துவதற்காக கடந்த காலங்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் செயற்பட்டு வந்தனர்.இந்த நிலையில் தமது போராட்டங்களை திசை திருப்பி, அரசினை திருப்திபடுத்த முயல்கின்றது. தேர்தல் வெற்றிக்கு முன்னர் சரிந்து கிடந்த அரசியல் நிலையை மீள கட்டியெழுப்புவதற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை பயன்படுத்தி, அதாவது அவர்களது உணர்வுகளை பயன்படுத்தி வருகின்றனர் என வடக்கு- கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளார். இந்த நிலையில் வடக்கு- கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பால் கிளிநொச்சியில் ஒழுங்குபடுத்தப்பட்ட மக்கள் போராட்டத்தை குழப்பும் வகையிலும் இலங்கை அரசை திருப்திபடுத்தும் வகையிலும் தற்போது யாழில் குழப்பகரமான போராட்ட சூழலை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. போலியான அரசியல் தலைமைக்கு வாக்களித்தமையையிட்டு, மக்கள் தலைகுனிய வேண்டிய நிலைக்கு அவர்களின் செயற்பாடு தற்போது காணப்படுகின்றது. சுய இலாப அரசியலுக்காகப் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் செயற்பாட்டை சிதைக்கும் இவர்களது செயற்பாடு மிகவும் கண்டிக்கப்படவேண்டியவை.சக கட்சி உறுப்பினரின் வாக்கை கொள்ளையடித்து, வெட்கமின்றி அரசியல் செய்யும் இவர்களை மக்கள் அறிந்து செயற்பட வேண்டும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமது சுயநல அரசியலிற்காக எமது அமைப்பின் பெயரை பயன்படுத்தி போராட்டம் செய்து, மூக்குடைபட்டு வருகின்றது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமது சுயநல அரசியலிற்காக பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை சிதைத்து, கட்சி இலாபம் தேடி வருகின்றது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு, நேற்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையில் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளது.(15)   http://www.samakalam.com/தமிழ்த்-தேசிய-மக்கள்-முன-13/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.