• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
SUNDHAL

யாழ் சோழியன் அண்ணா காலமானார்

Recommended Posts

ஜெர்மனியை சேர்ந்த எழுத்தாளரும்

யாழ் கருத்து களத்தில் சோழியான் என்ற பெயரில் எழுதுபவருமான ராஜன் அண்ணாவின் இறப்பு அதிர்ச்சி தருகிறது

RIP

தகவல்

சபேசன் 

ஜெர்மனி

Edited by SUNDHAL

Share this post


Link to post
Share on other sites

ஐயோ

என்ன இது???

 

Share this post


Link to post
Share on other sites

கடவுளே...! பிறந்தநாள் வாழ்த்து திரியை திரு. சோழியன் அவர்கள்தான் தொடக்கி வைத்தார். நேற்றுக்  கூட  அதை ஒரு திரியில் நினைவு கூர்ந்திருந்தேன். அண்ணாரின் ஆத்மா சாந்தியடையட்டும். அவரின் குடும்பத்தாரின் துயரிலும் பங்கு கொள்கின்றோம்....!

Share this post


Link to post
Share on other sites

மிகவும் கவலையான செய்தி. சோழியன் அண்ணாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

யாழில் சோழியன் அண்ணாவின் ஆக்கங்களில் சில :

http://www.yarl.com/எழுதியவர்/இராஜன்-முருகவேல்

(எழுத்து வடிவமைப்பு சீராக இல்லாமைக்கு வருந்துகிறோம்)

Share this post


Link to post
Share on other sites

மிகவும் கவலையான செய்தி. சோழியன் அண்ணாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites

மிகவும்  இனிமையாக பேசக்கூடியவர்

மிகவும் கடினமான விடயங்களையும் சுடு சொல் சேராது எழுதுபவர்

எங்கிருந்தாலும் தன்னை சுற்றி சந்தோசத்தை தரக்கூடியது போல் பழகுபவர்

அண்ணா அண்ணா என்று நான் அழைத்த என் அண்ணன்

பலமுறை வாங்கோ வாங்கோ என்று அவரும் நானும்  மாறி மாறி அழைத்த போதும்

அவர் பிரான்சுக்கும்

நான் அவரது இடத்துக்கும் சென்று வந்த  போதும்

சந்திக்கவே முடியவில்லை

இனி.....???

ஆத்ம சாந்திக்கும்

உங்கள் குடும்பம் இத்துயரிலிருந்து மீளவும்

 வேண்டுகின்றேன்  அண்ணா

ஓம் சாந்தி. ஓம் சாந்தி ஓம் சாந்தி.

 

 

Edited by விசுகு

Share this post


Link to post
Share on other sites

என்ன இது ஐயோ என்னால் நம்ப முடியவில்லை நாள் தவறாமல் முகநூலில் உள்பெட்டியில் அரட்டை அடிக்கும் எனது அண்ணன் காலில் ஒரு காயம் வந்ததாக சொன்னார் சில‌ வாரங்களுக்கு முன்னர் தான் தொடர்பை இழந்தேன் தனிமடல் அனுப்பியிருந்தேன் இதுவரை பதில் இல்லை இந்த செய்தி எனக்கு இடியாக இறங்கிறதே அண்ணை  உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் 

ஊர் வந்து போனதில் இருந்து சுகமில்லையென்று சொன்னார் நாள் தோறும் நலம் விசாரித்து அரட்டை அடிக்கும் அண்ணை கதை ஒன்று எழுதியிருக்கிறேன் ( குறிஞ்சி மலர்கள் )அதைப் படிங்கள் என்று சொன்னதும் யாழுக்கு வராமல் இருந்தவர் வந்தார் சந்தோசம் ஆனால்  இந்த‌ துயரச்செய்தி என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையே

Share this post


Link to post
Share on other sites

கவலையான செய்தி..tw_cold_sweat:

சோழியன் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites

மிக மென்மையான மனிதர். ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

மிகவும் கவலையான செய்தி. சோழியன் அண்ணாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites

நம்பமுடியாத செய்தி. ஆனாலும் நம்பித்தான் ஆகவேண்டும். குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவிப்பதுடன், இனிய உள்ளம்கொண்ட அவர் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.

 

Share this post


Link to post
Share on other sites

நம்ப முடியாத ஒரு செய்தி.ஆழ்ந்த அனுதாபங்கள்:( 

Edited by யாயினி

Share this post


Link to post
Share on other sites

இதை எதிர்பார்க்கவில்லை. சோழியான் அண்ணாவின் ஆன்மா அமைதி பெறட்டும்..! அவரை இழந்து துயருறும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!!

Share this post


Link to post
Share on other sites

காலையில் அதிர்ச்சியான செய்தி! சோழியன் அண்ணரின் ஆத்மா சாந்தி பெறவும், குடும்பத்தினர் ஆறுதல் பெறவும் பிரார்த்திக்கிறேன்! 

Share this post


Link to post
Share on other sites

எப்படி, என்ன எழுதுவதென்று தெரியவில்லை.

குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites

கள உறவு சகாராவின் இரு புத்தகங்களைத் தபால் மூலம் அனுப்பியிருந்தார். அன்றிலிருந்து  அவருடைய விலாசத்தைப் பத்திரமாக வைத்திருக்கின்றேன் . அவருடைய நகரத்திற்கு எப்போதாவது   சென்றால்
அவரைச் சந்திக்கும் முடிவில் இருந்தேன். ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை.  
யாரையும் நோகடிக்காமல் பக்குவமாகக் கருத்தெழுதும் சோழியன்  அண்ணா எம்முடன் எம்மனதில் என்றும் நிலைத்திருப்பார்.
அன்னாரின் குடும்பத்தினருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும்  ஆழ்ந்த இரங்கல்கள்.

Share this post


Link to post
Share on other sites

இராஜன் முருகவேல் (சோழியன்) மறைந்தார்!

நண்பனே உனக்காக மௌனமாக நிற்பதை தவிர 
ஒன்றும் செய்ய தெரியவில்லை!

இலங்கை சுழிபுரத்தை பிறப்பிடமாகவும் , ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவன் , இராஜன் முருகவேல் (சோழியன்) மறைவு ஓர் அதிர்ச்சியாக தம்பி பரணி மூலம் முகப் புத்தகம் வாயிலாக அறிய முடிந்தது.

சில காலமாக உடல் நலமில்லாமல் இருந்தார். நான் இடையிடையே தொலைபேசி வழி பேசுவேன். பெட்டி செய்தி ஊடாக கருத்து பரிமாற்றம் செய்து கொள்வோம். யாழ் இணையம் மூலம் ஏற்பட்ட நட்பு. அன்று முதல் தொடர்ந்து வந்தது.

ஆரம்ப காலம் தொட்டு யாழ் இணைய உறவாக இருந்தவர். அரசியல் ரீதியாக நாங்கள் இருவரும் முரண்பட்டவர்கள். இருந்தாலும் நட்பு ரீதியாக அது எம்மை பிரித்ததில்லை. காயப்படுத்தியதும் இல்லை. அப்படியான ஒரு குண நலன் கொண்டவரை பார்ப்பது மிக அரிது. நான் பல முறை அவர் வீட்டுக்கு போய் தங்கி மகிழ்வாய் கழித்துள்ளோம். உண்மைகளை அஞ்சாமல் பேசும் ஒரு அன்பர். அதை நகைச்சுவையாக சொல்வதில் கை தேர்ந்தவர். கடினமான எதையும் சிரித்துக் கொண்டே சொல்வார். அதனால் அவரை எனக்கு நன்கு பிடிக்கும்.

புலி ஆதரவாளர்களில் எனக்கு மிகவும் பிடித்த நண்பர்களில் இவரும் ஒருவர். இதைவிட அதிகம் தேவையில்லை.

செய்தி கேட்டதும் வீட்டுக்கு தொடர்பு கொண்டேன். மகனோடு பேசினேன். அனைவரோடும் எனக்கு நல்ல உறவு. இராஜனுக்கு கொலொஸ்ரோல் இருந்து வந்தது. அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். அண்மையில் இலங்கைக்கும் போய் வந்தார். முகப் புத்தகத்தில் படங்களை போட்டு , ஊரின் நிலை குறித்து உண்மையை பதிவு செய்து கொண்டிருந்தார்.

உடல் நலமில்லாமல் எதுவும் செய்யாமல் சில நாட்களாக கட்டிலிலேயே இருந்துள்ளார். நேற்று தூங்கியவரை எழுப்பிய போது அவர் எழுந்திருக்கவில்லை.

நண்பர்கள் அழைப்பதற்காக அவரது வீட்டு தொலைபேசி எண் : 0049 421 55 37 27

 

 

 • Like 6

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள். 

ஒரு நாள் ஐயாவுடனும், விசுகு அண்ணாவுடனும் நீண்ட நேரம் திண்ணையில் அரட்டை அடித்த ஞாபகம். எனக்கு நூலகம் என ஓர் இணைப்பை அனுப்பியிருந்தார் இதில் நிறைய சிறுகதைகள் இருந்தன.

ஆத்மா சாந்தியடைவதாக‌

Share this post


Link to post
Share on other sites

காலை யில் பார்த்த அதிர்ச்சியான சேதி  .. இவரின் .ஐஸ்கிரீம் சிலையே என்ற கதை வசித்த ஞாபகம்  காலில் கட்டுடன் முக புத்தகத்தில் பார்த்த ஞாபகம்  ..  பிறந்த நாள்  இரண்டு  கொண்டாடடம் என்பார் .பிறந்தா நாள் ஒன்றும்  பதிவில் உள்ள  நாள்  வேறு ஒன்றுமாக இரண்டு என்பார் .   பேசிப் பழக இனிய   மனிதர் . ஆன்மாவின் சாந்திக்கு என்   பிரார்த்தனைகள் 

Share this post


Link to post
Share on other sites

ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தனைகள்!

Share this post


Link to post
Share on other sites

மிகவும் கவலையான செய்தி. அதிர்ச்சியாகவும் இருக்கிறது. 8 வருடங்களுக்கு முன் வீட்டிற்கு வந்துள்ளார். அந்த பசுமையான நாட்களை நினைத்து பார்க்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஒத்துழைப்பு வழங்குவேன்    முன்னெடுக்ககப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை எவ்வித பிரச்சினைகளும் இன்றி நடைமுறைப்படுத்த வேண்டுமானால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற்றுக் கொள்ள கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அதனூடாக நாட்டில் பல்வேறு மாற்றங்களை முன்னெடுக்க எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.       http://tamil.adaderana.lk/news.php?nid=124750    
  • ஓய்வுபெற்ற நீதிபதி பத்மினி ரணவக்க CCD யிற்கு       ஓய்வுபெற்ற நீதிபதி பத்மினி ரணவக்க வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக கொழும்பு குற்றவியல் பிரிவில் ஆஜராகியுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயகவுடன் சர்ச்சைக்குரிய வகையில் நீதிமன்ற செயற்பாடுகள் குறித்து உரையாற்றியமை தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது. இதேவேளை, சர்ச்சைக்குரிய தொலைப்பேசி உரையாடல்கள் தொடர்பில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதி தம்மிகா ஹேமபால ஆகியோரிடமும் கொழும்பு குற்றவியல் பிரிவு வாக்குமூலங்களை பதிவு செய்துக் கொள்ளவுள்ளது. சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் குறித்து மேற்குறிப்பிட்ட நீதிபதிகளிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துகொள்ளுமாறு கொழும்பு குற்றவியல் பிரிவின் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் தம்புல டி லிவேரா கடந்த 16 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   http://tamil.adaderana.lk/news.php?nid=124751
  • பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்படவுள்ளது அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு உள்ளிட்ட குழுக்களுக்கான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் சபாநாயகர் கரு ஜயசூரியவின் பங்களிப்புடனான பாராளுமன்ற தெரிவுக்குழு நாளை (21) சபையில் அறிவிக்கப்படவுள்ளது. இந்தத் தெரிவுக்குழுவானது பாராளுமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட 17 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டதாக அமையும். சமல் ராஜபக்ஷ, நிமல் சிறிபால டி சில்வா, தினேஷ் குணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, டக்ளஸ் தேவானந்தா, மஹிந்த சமரசிங்க, காமினி லொக்குகே, மஹிந்த யாப்பா அபேவர்த்தன, ரோஹித்த அபேகுணவர்த்தன, லஷ்மன் கிரியல்ல, ஜோன் அமரதுங்க, விஜித ஹேரத், ரிஷாட் பதியுதீன், பாட்டலி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், நிரோஷன் பெரேரா, மாவை சேனாதிராஜா ஆகியோர் இந்தத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர். இந்த 17 உறுப்பினர்களும் 8 வது பாராளுமன்றத்தின் 4 வது கூட்டத் தொடருக்கான தெரிவுக்குழு உறுப்பினர்களாகச் செயற்படுவர். இந்தத் தெரிவுக்குழுவின் 1 வது கூட்டம் நாளை (21) பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.   http://tamil.adaderana.lk/news.php?nid=124754
  • கெஹலிய மற்றும் ஜயம்பதி ஆகிய இருவரும் வழக்கில் இருந்து விடுதலை   பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹின்கெந்த ஆகியவர்களுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்த அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் அந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அப்போதைய ஊடக அமைச்சராக செயற்பட்ட கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு சொந்தமான தனியார் கைப்பேசியின் கட்டணமான இரண்டு இலட்சத்து முப்பதாயிரம் ரூபாவினை அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் பணத்தில் செலுத்தியதன் ஊடாக அரசிற்கு நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அந்த கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹீன்கெந்த ஆகியவர்களுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவினால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கினை தாக்கல் செய்த போது இலஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தால் குறித்த வழக்கு தாக்கலுடன் தொடர்புடைய அந்த ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் மூவரின் எழுத்து மூல அனுமதி நீதிமன்றில் தாக்கல் செய்யப்படாததால் அதனை விசாரணைக்கு உட்படுத்த இயலாது என பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளால் அடிப்படை ஆட்சேபனை மனுவொன்று நீதிமன்றில் முன்வைக்கப்பட்டது. எனினும், குறித்த அடிப்படை ஆட்சேபனையை நிராகரித்த நீதவான் நீதிமன்றம் குறித்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்த நிலையில், குறித்த தீர்மானத்திற்கு எதிராக கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் ஜயம்பதி பண்டார ஹீன்கெந்த ஆகியோர் கொழும்பு மேல் நீதிமன்றில் சீர்த்திருந்த மனுவொன்றை தாக்கல் செய்தனர். குறித்த சீர்த்திருத்த மனுவை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரன், வழக்கொன்றை தாக்கல் செய்யும் போது ஆணைக்குழுவின் ஆணையாளர்களின் எழுத்து மூல அனுமதியினை சமர்ப்பிப்பது அத்தியாவசிய அம்சமாக அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றினால் அறிவிக்கப்பட்ட தீர்ப்பொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். எனினும், இந்த வழக்கு தாக்கல் செய்த போது இலஞ்ச ஆணைக்குழுவினால் குறித்த அத்தியாவசிய அம்சங்கள் முழுமைப்படுத்தப்படாததால் அது சட்டத்திற்கு முரணான வழக்கு என கடந்த டிசம்பர் 20 ஆம் திகதி நீதிபதி தீர்ப்பளித்திருந்தார். http://tamil.adaderana.lk/news.php?nid=124746
  • முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமருக்கு ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம்   புலனாய்வு தகவல்கள் கிடைக்கபெற்றிருந்த போதும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்து நிறுத்தாததன் ஊடாக மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் ஆட்சேபனை தெரிவிக்க உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. குறித்த மனுக்கள் இன்று (20) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனெக அலுவிகார, சிசிர த ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, எல்.ரீ.பி தெஹிதெனிய, முர்த்து பெர்ணான்டோ மற்றும் பிரீதி பத்மன் சூரசேன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது குறித்த மனுக்கள் தொடர்பில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியவர்கள் சார்ப்பில் தொடர்ந்தும் சட்டமா அதிபர் ஆஜராக போவதில்லை என சட்டமா அதிபர் சார்ப்பில் ஆஜரான அரசாங்க மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் பர்சானா ஜமில் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் அவர்கள் சார்ப்பில் தனிப்பட்ட நீதிபதிகள் இருவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். அத்துடன் குறித்த மனுக்கள் தொடர்பில் ஆட்சேபனைகளை தெரிவிக்க மார்ச் 6 ஆம் திகதி வரையில் உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=124744&mode=lead