SUNDHAL

யாழ் சோழியன் அண்ணா காலமானார்

Recommended Posts

ஆழ்ந்த அனுதாபங்கள். சோழியன் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

 அண்ணனுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்.

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் சோழியன் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் :(

Share this post


Link to post
Share on other sites

யாழின் மூத்த உறுப்பினர் சோழியானின் மறைவு அவரது குடும்பத்திற்கு மட்டமல்ல யாழுக்கும் பெரியதொரு இழப்பே.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

Share this post


Link to post
Share on other sites

காலையில் மிகவும் அதிர்ச்சியை தந்த செய்தி.  குடும்ப உறவை இழந்தது போன்று மனது மிகவும் பாரமாகவும் கவலையாகவும் இருக்கின்றது :(:( .

சோழியன் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன் அத்தோடு அவரை இழந்து நிக்கும் அவரது குடும்பத்தவர்களுக்கும், உற்றார் உறவினர்கள் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்!

zoom_FWSW7003frenchfloristlasympathyflow

 

Share this post


Link to post
Share on other sites

யாழ்களக் குடும்பம் ஓா் உறவை இழந்து விட்ட சோகத்தை இன்று காலையில் அறிந்து மிகவும் அதிா்ச்சியாக உள்ளது. சோழியானின் ஆன்ம சாந்திக்காகப் பிராத்திக்கும் இவ் வேளையில் அவாின் குடும்பத்தினருக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்களையும் தொிவித்துக் கொள்ளுகின்றோம்.

Share this post


Link to post
Share on other sites

காலையில் யாழை திறந்தவுடன் இப்படி ஒரு அதிர்ச்சி கிடைக்கும் என நினைக்கவில்லை. யாழின் மூத்த உறுப்பினரான சோழியன் அண்ணாவின் மறைவுச் செய்தி மிகவும் அதிர்ச்சியையும் வேதனையையும் தருகின்றது.

சோழியன் அண்ணாவின் இழப்பால்  துயருறும் அவர் குடும்பத்தினரதும் உறவினர்களினதும் நண்பர்களினதும் துயரத்தில் பங்கு கொள்கின்றேன்.

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, AJeevan said:

இராஜன் முருகவேல் (சோழியன்) மறைந்தார்!

நண்பனே உனக்காக மௌனமாக நிற்பதை தவிர 
ஒன்றும் செய்ய தெரியவில்லை!

இலங்கை சுழிபுரத்தை பிறப்பிடமாகவும் , ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவன் , இராஜன் முருகவேல் (சோழியன்) மறைவு ஓர் அதிர்ச்சியாக தம்பி பரணி மூலம் முகப் புத்தகம் வாயிலாக அறிய முடிந்தது.

சில காலமாக உடல் நலமில்லாமல் இருந்தார். நான் இடையிடையே தொலைபேசி வழி பேசுவேன். பெட்டி செய்தி ஊடாக கருத்து பரிமாற்றம் செய்து கொள்வோம். யாழ் இணையம் மூலம் ஏற்பட்ட நட்பு. அன்று முதல் தொடர்ந்து வந்தது.

ஆரம்ப காலம் தொட்டு யாழ் இணைய உறவாக இருந்தவர். அரசியல் ரீதியாக நாங்கள் இருவரும் முரண்பட்டவர்கள். இருந்தாலும் நட்பு ரீதியாக அது எம்மை பிரித்ததில்லை. காயப்படுத்தியதும் இல்லை. அப்படியான ஒரு குண நலன் கொண்டவரை பார்ப்பது மிக அரிது. நான் பல முறை அவர் வீட்டுக்கு போய் தங்கி மகிழ்வாய் கழித்துள்ளோம். உண்மைகளை அஞ்சாமல் பேசும் ஒரு அன்பர். அதை நகைச்சுவையாக சொல்வதில் கை தேர்ந்தவர். கடினமான எதையும் சிரித்துக் கொண்டே சொல்வார். அதனால் அவரை எனக்கு நன்கு பிடிக்கும்.

புலி ஆதரவாளர்களில் எனக்கு மிகவும் பிடித்த நண்பர்களில் இவரும் ஒருவர். இதைவிட அதிகம் தேவையில்லை.

செய்தி கேட்டதும் வீட்டுக்கு தொடர்பு கொண்டேன். மகனோடு பேசினேன். அனைவரோடும் எனக்கு நல்ல உறவு. இராஜனுக்கு கொலொஸ்ரோல் இருந்து வந்தது. அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். அண்மையில் இலங்கைக்கும் போய் வந்தார். முகப் புத்தகத்தில் படங்களை போட்டு , ஊரின் நிலை குறித்து உண்மையை பதிவு செய்து கொண்டிருந்தார்.

உடல் நலமில்லாமல் எதுவும் செய்யாமல் சில நாட்களாக கட்டிலிலேயே இருந்துள்ளார். நேற்று தூங்கியவரை எழுப்பிய போது அவர் எழுந்திருக்கவில்லை.

நண்பர்கள் அழைப்பதற்காக அவரது வீட்டு தொலைபேசி எண் : 0049 421 55 37 27

 

 

வணக்கம் அஜீவன் நீண்ட நாட்களின் பின் உங்களை களத்தில் கண்டது ரொம்ப மகிழ்ச்சி. பழைய மாதிரி யாழ் களத்துடன் இணைந்து இருங்களேன்.

Share this post


Link to post
Share on other sites

நல்லவர்கள் விரைவில் போய்விடுவார்கள் என்பார்கள். அதேபோல நல்லவர்களுக்கு தூக்கத்தில் சாவு வரும் என்பார்கள்.

இந்த இரண்டையும் மெய்பித்துப் போயுள்ளார் சோழியன் அண்ணா.

ஒரு உண்மையான, பகட்டு இல்லாத இன உணர்வாளர்.

தம் தரப்பு நியாயத்தை மட்டுமில்லாமல், அநியாயத்தையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பண்பாளர்.

சக்கரை நோய் இருப்பதாயும் அநேகம் ஆஸ்பத்திரி போய் வருவதாயும் சில ஆண்டுகளுக்கு முதல் திண்ணையில் பேசும் போது சொன்னார்.

சக்கரை நோயாளருக்கு கொலஸ்டிரோல் குழப்படியும் கூடவே வரும் என்றும் கதைத்திருந்தோம்.

இவ்வளவுதான் உலகம். ???

அண்ணாவின் குடும்பத்தாருக்கு என் இரங்கல்கள்.

Share this post


Link to post
Share on other sites

அண்ணாரின் ஆத்மா சாந்தியடையட்டும். அவரின் குடும்பத்தாரின் துயரிலும் பங்கு கொள்கின்றோம்....!

Share this post


Link to post
Share on other sites

இனிய மனிதர், அவரின் மறைவு நம்ப முடியவில்லை..!

 

roses-beautiful-bouquet-cool-elegantly-f

ஆழ்ந்த இரங்கல்கள்..

 

Share this post


Link to post
Share on other sites

யாழின் ஆரம்பகாலத்தில் யாழுடன் இணைந்து  பயணித்த சோழியன் அவர்களுக்கு அஞ்சலிகள். அவரது இழப்பால் துயருற்றிருக்கும் அனைவரின் துயரங்களிலும் பங்கு கொள்கின்றோம்.

Share this post


Link to post
Share on other sites

அன்பு ஈழபிரியன்


இராஜன் முருகவேல் (சோழியன்)  மறைந்த நேரத்தில்  என் தாய் வீடான யாழ் இணையம்தான் கண்ணில் தெரிந்தது.

ஒரு சகோதரனின் மறைவின் போது குடும்பமாக இணைய வேண்டிய தருணம்!
தூர தேசங்களில் நாம் வாழ்ந்தாலும் - அவர் எம்மோடு இணைந்து இருந்த காலத்தை மறக்க முடியாது.

அன்னாருக்கு அஞ்சலி செலுத்தும் அதே சமயம் - அவர் குடும்பத்தோடு நம் துயரத்தை பகிர்ந்து கொள்வோம்.

அவர்களுக்கு வார்த்தைகளால் ஆவது ஆதரவாக நிற்போம்.

Edited by AJeevan
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

funeral_flower_posy_pad.jpg

சோழியான் அண்ணா அவர்களின் இழப்பு அவரது குடும்பத்தாருக்கும் யாழுக்கும்  எழுத்துலகுக்கும் பேரிழப்பாகும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார் உறவுகள் நண்பர்கள் அனைவரோடும் ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்துகொள்கின்றேன். 

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

சோழியன் அண்ணாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites

யாழ் இணையம், தமிழ் உணர்வு, அதனால் வந்த ஸ்நேகம்   
அந்தி வரும் பொழுதில் திண்ணை சாயும்  நேரம் 
நலம் விசாரித்து ....நட்பாய் பேசி... சினிமா கதைத்து... 
கால இடைவெளியில் சில பொழுது காணாமல் போனவரை 
பலமுறை தேடியும் பதிலெதுவும் வரவில்லை...
உன் பிரிவறிந்தோம், இது நிரந்தரமாம்!!!  
சோழியன் இல்லா திண்ணை... சோபை இழந்த மண்ணாய் 
மனசெல்லாம் வெறுமை மண்ட...தூரத்தில் ஒரு உறவு...
இல்லை ... என் கணக்கில் பிழை  ...

பல உறவு உனக்காக கண் கலங்கும்...
நீ கொண்ட தமிழ் உணர்வு உன் ஆத்மாவுக்கு சாந்தி தரட்டும்...
போய்வா அண்ணா ... tw_cry:

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

மிகவும் அதிர்ச்சியான செய்தி. சோழியன் அண்ணா மறைந்தார் என்பதை இன்னமும் நம்பமுடியாமல் உள்ளது.

சோழியன் அண்ணாவின் திடீர் மறைவினால் துயருற்றிருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த கவலைகளையும் இரங்கல்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

மிகவும் கவலையான செய்தி. சோழியன் அண்ணாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் இழப்பை ஏற்க முடியவில்லை. பல இனிமையான திரிகள் யாழ் களத்தில் உண்டு. திண்ணையில் காரசாரமான விவாதங்களில் கூட தனது கருத்துக்களை தயங்காமல் அதே நேரம் யாரையும் நோகடிக்காமல் கருத்து வைப்பதில் அவருக்கு நிகர் அவரே தான். 

Share this post


Link to post
Share on other sites

அண்ணா; சோழியனின் இனிய மற்றும் நகைச் சுவைப் பதிவுகளை ரசித்தவன் என்ற முறையில் என்னை அவரின் மறைவுசட செய்தி வெகுவாகப் பாதிக்கிறது.அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேn

Edited by சுவைப்பிரியன்

Share this post


Link to post
Share on other sites

நம்ப முடியாத திடீர் இழப்பு.சோழியன் அண்ணாவின் ஆத்மா சாந்தியடையட்டும்...அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.நல்லதொரு பல்கலை கலைஞனை சமூகம் இழந்து விட்டது...வசம்புவின் இழப்பினை தொடர்ந்து மற்ற ஒரு யாழ் கள உறவின் இழப்பு இது.

Share this post


Link to post
Share on other sites

யாழ் இணையம் இணைத்து வைத்த உறவுகளில் ஓன்று சோழியன்.முன்னர் யாழிலும் பின்னர் முகநூலிலும் அடிக்கடி விவாதங்களால் முரண்பட்டிருக்கிறோம்.கோபித்துக்கொண்டதில்லை.அருமையானதொரு உறவு அஞ்சலிகள் .

Share this post


Link to post
Share on other sites

மிகவும் கவலையான செய்தி. சோழியன் அண்ணாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites

மிகவும் மனவருத்தம் தருகிறது சோழியன் அண்ணாவின் இழப்பு. அவரின் ஆன்மா நின்மதியடையட்டும்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.