Jump to content

யாழ் சோழியன் அண்ணா காலமானார்


Recommended Posts

மிகவும் துயரமான செய்தி. பல்கலை ஆற்றல்கள் கொண்டவர்.

சோழியன் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்!

குடும்பத்தினரின் துயரில் யாழ் குடும்பத்துடன் இணைந்து பங்குகொள்கின்றேன்.  

+++

மோகன், முகப்பில் சோழியன் அண்ணாவின் அஞ்சலியை இணைத்தமைக்கு நன்றி!

Link to post
Share on other sites
 • Replies 120
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஒரு கள உறவுக்கு,,,எனது கண்ணீர் அஞ்சலி!   புகையிரதத்  தரிப்பிடங்களில்,, ஏறி இறங்கும் பயணிகளைப் போன்றே, பிறப்புக்களும்...இறப்புக்களும் என.., இது வரை நினைத்திருந்தேன்!  

இராஜன் முருகவேல் (சோழியன்) மறைந்தார்! நண்பனே உனக்காக மௌனமாக நிற்பதை தவிர  ஒன்றும் செய்ய தெரியவில்லை! இலங்கை சுழிபுரத்தை பிறப்பிடமாகவும் , ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கொழும்பு றோயல் கல்

செத்தும் கொடுத்தான் சீதக்காதி ! மறைந்தும் கொடுத்தார் எங்கள் யாழுறவு சோழியன் !! தான் மறைந்துவிட்டபோதும், மறைந்திருந்த பல யாழ் உறவுகளை மீண்டும் களத்தில் காணவைத்த பெருமை சோழியன் அவர்களையே

 • கருத்துக்கள உறவுகள்

முதல் வேலையாக விடிகாலையில்...யாழைத் திறப்பது தான் எனது வழக்கம்!

இன்றைய செய்தி இடியைப் போல இறங்கியது!

முகநூல் மூலமும், யாழ் மூலமும் மிகவும் நெருங்கியவர்!

அண்மையில் கூட ஊருக்குப் போய் வந்து..திருவிழாப் படங்களைப் பெருமையுடன் இணைத்திருந்தார்!

 

கோஷான் கூறியது போன்று...இந்த உலகம் நல்லவர்களை நீண்ட காலம் விட்டு வைப்பதில்லை!

 

அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களும், நண்பனுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகளும்!

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரின் குடும்பத்தினரின் துயரில் பங்கு கொள்கிறோம். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சோழியன் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களும், நண்பனுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகளும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

ஆழ்ந்த அனுதாபஙகள்

Edited by unarvu
Link to post
Share on other sites

எழுத்துலகில் தனக்கான இருக்கையையும் தன்னோடு சார்ந்தவர்களிற்கான இருக்கையையும் உருவாக்கி தந்த வழிகாட்டி சோழியன் அண்ணா.  என்னை எனக்கே அறிமுகம் செய்து வைத்த ஆசான். இழப்பறிந்து துடிக்கிறது மனது. வயது வித்தியாசமின்றி பழகிய அன்பான நண்பன்.

வாழ்க்கையில் எத்தனையோ நபர்களை காலம் காட்டி சென்றாலும் ஒரு சிலரே மனதோடு நெருக்கமாகின்றனர். என் எழுத்தை இணையத்தில் ஏற்ற தொடங்கிய காலம் தொடக்கம் நேற்றுவரை கரம் கொடுத்து தூக்கிய அன்பு நண்பர் இன்று எம்மோடு இல்லை.

எழுத்துக்கள் வாழும் காலம் வரை உன் பெயர் நிலைக்கும் அண்ணா. 

ஆழ்ந்த அனுதாபஙகள்

என்றும் உங்கள் ஆசியோடு

கரவை பரணீ 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் கவலையான செய்தி. சோழியன் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

பிரபல தமிழ் எழுத்தாளரும்,
சோழியான் என்ற புனைபெயரில்
தமிழ் இலக்கிய உலகில் அறியப்படுபவரும்,
கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரும்,
பாறாளை வீதி, யாழ்.சுழிபுரம்-கிழக்கைப்
பிறப்பிடமாகக் கொண்டவரும்
ஜேர்மனி பிறேமன் நகரை வதிவிடமாகக் கொண்டவருமான
திரு. இராஜன் முருகவேல் அவர்கள்
15.11.2016 திங்களன்று இறைவனடி சேர்ந்தார்

அன்னாரது இறுதிக்கிரியைகள்
30.11.2016 புதன்கிழமை நடைபெறும்.

கிரியைகள் நடைபெறும் இடம்:
GE BE IN Bestattungsinstitut,
Korn Strasse. 217,
28201 Bremen

நேரம்: முற்பகல் 10.00 மணிமுதல் பிற்பகல் 13.00 மணிவரை

உற்றார் உறவினர் நண்பர்கள் இத்தகவலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு:
செல்லிடப் பேசி.
மகன் - 0049 176 20102799

'பிரபல தமிழ் எழுத்தாளரும், சோழியான் என்ற புனைபெயரில் தமிழ் இலக்கிய உலகில் அறியப்படுபவரும், கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரும், பாறாளை வீதி, யாழ்.சுழிபுரம்-கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் ஜேர்மனி பிறேமன் நகரை வதிவிடமாகக் கொண்டவருமான திரு. இராஜன் முருகவேல் அவர்கள் 15.11.2016 திங்களன்று இறைவனடி சேர்ந்தார் அன்னாரது இறுதிக்கிரியைகள் 30.11.2016 புதன்கிழமை நடைபெறும். கிரியைகள் நடைபெறும் இடம்: GE BE IN Bestattungsinstitut, Korn Strasse. 217, 28201 Bremen நேரம்: முற்பகல் 10.00 மணிமுதல் பிற்பகல் 13.00 மணிவரை உற்றார் உறவினர் நண்பர்கள் இத்தகவலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்புகளுக்கு: செல்லிடப் பேசி. மகன்  -  0049 176 20102799'
Link to post
Share on other sites

சோழியன் அண்ணாவின் மறைவை  மறுக்கிறது மனது. பழக இனிமையானவர். எனது யாழ் பயணத் திரியின் பின்னர் எப்படியோ எனது முகப் புத்தகத்தை மோப்பம் பிடித்து நண்பராக இணைத்திருந்தார். எனது முகப்புத்தகம் கடும் கட்டுப்பாடுகளுடன் இருந்ததால் அந்த நட்பு அழைப்பை அப்படியே விட்டுவிட்டேன்.

அண்ணா,  உங்கள் ஆன்மா சாந்தி அடைவதாக, அத்துடன் அவரின் மனைவி, பிள்ளைகள் நண்பர்களின் துயரில் நானும் பங்கு கொள்ளுகிறேன்.

Link to post
Share on other sites

மிகவும் துக்கம் தரும் செய்தி.

சோழியன் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைவதாக.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சோழியன் அண்ணாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள். சோழியன் அண்ணாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருடனும் இனிமையகநட்பாக பழகும் சோழியன் அண்ணாவின் இழப்பு கவலையை தருகிறது.

அவருடைய குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சோழியன் அண்ணாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோழியன் அண்ணாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சோழியன் அண்ணாவின் மரணத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. மனம் நம்ம மறுக்கின்றது. எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கெல்லாமோ அலைந்து ...யாழ்களம் எனும் வீட்டில் முகமறியாமலே சகோதரபாசத்துடன் பழகிய எம் சோழியன் அண்ணாவின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை..இது பொய்யாக இருக்கக்கூடாதா என் மனம் தத்தளிக்கின்றது.
சோழியன் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி....அவரின் பிரிவின் துயரால் மூழ்கியிருக்கும் உற்றார் உறவினர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நினைச்சுப் பார்க்கவே முடியல்ல. மிகவும் அதிர்ச்சியான செய்தி மட்டுமன்றி ஒரு அன்பான குடும்ப உறவை இழந்த சோகம். இப்போது தான் இந்தச் செய்தியே கிட்டியது.

மாள முடியாத சோகம். இன்னும் எவ்வளவோ சாதிப்பார் என்று எதிர்பார்த்திருந்த போதில்......................................

வெறும் கண்ணீரஞ்சலியால் அடங்கிவிட முடியாது.. இந்தச் சோகத்தை. 

நம்பவே கஸ்டமா உள்ளது. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சோழியன் அண்ணா,

மிகவும் துயரமாக இருக்கிறது 

எத்தனை எத்தனை  தடவைகள் அன்பும் ஆறுதலும் பாராட்டும்,

சந்திக்ககூடிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்தும் சந்திக்காமல் போனதை இப்ப நினைத்து வருந்துகிறேன்... 

நீங்கள் நேசித்த இறைவனிடத்தில் அமைதி கொள்ளுங்கள் அண்ணா.

நீங்கள் எனக்கு அனுப்பிய கதைகளையும் வில்லிசை நிகழ்வுகளையும் இனியாவது பார்த்துவிடுகிறேன்... tw_cold_sweat:

Edited by நெற்கொழு தாசன்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று மதியம்  இந்த செய்தியை பார்த்தபோது மிகவும் அதிர்ச்சியாகவும் கவைலையாகவும் இருந்தது.  நம்ப முடியவில்லை :( யாழில் இணைந்த காலத்தில் இருந்து மிகவும் நடப்பாகவும் இனிமையாகவும் பழகிய நண்பர்.  பின்னர் முகப்புத்தகத்தில் நண்பர்களாகி farmville இல் இருவரும் நேரம் கழித்தோம்.  அவரது ஆக்கங்கள் வில்லுபாட்டுகளை பகிர்வார்.  பின்னர் சில காலங்கள் தொடர்பற்று போக, முகப்புத்தகத்தில் சில கட்டுப்பாடுகளை செய்தபோது அவர் முகப்புத்தக நடப்பு அறுந்து விட்ட்து. :(
சோழியான் அண்ணாவின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எங்கள் அன்பிற்கும் மதிப்புக்கும் உரிய சோழியன் அண்ணாவின் திடீர் மறைவு நீங்க முடியாத சோகத்தையும் வேதனை அளிக்கிறது. இந்த வேளையில் அவரின் மறைவால் துயரிற்றிருக்கும் அவர் தம் குடும்பம் மற்றும் உற்றார் உறவினர்கள் யாழ் கள மற்றும் முகநூல் நண்பர்கள் உட்பட எல்லோரோடும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைப் பகிர்ந்து கொள்கிறோம்.

குருவிகள் மற்றும் நண்பர்கள். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழின் ஆரம்ப கால உறுப்பினராக இருந்து களத்திற்கு தனது படைப்புகளால் மெருகேற்றி ஏனைய அங்கத்தவர்களையும் எழுதுவதற்கு உற்சாகப்படுத்திய கள உறவான சோழியான் அண்ணாவின் மறைவுச் செய்தி கவலை தருகிறது. 

அவரின் மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தவர் உறவினர் நண்பர்கள்  அனைவருக்கும் ஆழ்ந்த  அனுதாபங்களைப் பதிவு செய்கிறேன்.

Edited by Manivasahan
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

செத்தும் கொடுத்தான் சீதக்காதி !


மறைந்தும் கொடுத்தார் எங்கள் யாழுறவு சோழியன் !!


தான் மறைந்துவிட்டபோதும், மறைந்திருந்த பல யாழ் உறவுகளை மீண்டும் களத்தில் காணவைத்த பெருமை சோழியன் அவர்களையே சாரும்.
 

 • Like 3
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • பல காலத்தின் பின் பார்ப்பமென்று 5 குடும்பம் போனம், சேதுபதியின் நடிப்புதான் ஆறுதல் பரிசாக கிடைத்திச்சு😊   இங்கு ஒரு வருடத்திற்கு மேல் வழமையாக இயங்கி கொண்டிருக்கு, வெளி நாடுகள் போவதுதான் கட்டுப்பாடு
  • கொரோனா பாதிப்பு: ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி; ஜோ பைடன் திட்டம்   உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.‌ அங்கு வைரஸ் தொற்றும் அதனால் நிகழும் மரணங்களும் மட்டுமல்லாமல் வேலை இல்லா திண்டாட்டமும் உச்சத்தில் உள்ளது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வேலையை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.‌ இதனிடையே தற்போதைய ஜனாதிபதி டிரம்பைவிட சிறப்பான முறையில் கொரோனா வைரஸ் பிரச்சினையைக் கையாளுவேன் என்ற பிரசாரத்தின் மூலம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வருகிற 20-ந்தேதி பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில் கொரோனா தொற்றின் தாக்கத்தில் இருந்து அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க 1.9 லட்சம் அமெரிக்க டாலர் செலவிடுவதற்கான திட்டத்தை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.138 லட்சத்து 811 கோடியாகும். இந்த திட்டத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் கொடுக்குமானால், இதன் மூலம் ஒவ்வொரு அமெரிக்கரும் தலா 1,400 டாலர் (சுமார் ரூ.1 லட்சம்) நிதியுதவி பெறுவார்கள் என ஜோ பைடன் தெரிவித்தார்‌. மேலும் கொரோனாவால் வேலை இழந்தவர்களுக்கு வாரம் தோறும் வழங்கப்படும் நிவாரண தொகை 300 டாலரில் (சுமார் ரூ.21 ஆயிரம்) இருந்து 400 (சுமார் ரூ.29 ஆயிரம்) டாலராக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/16065648/Corona-vulnerability-Rs-1-lakh-financial-assistance.vpf    
  • புதிய ஐ.நா தீர்மானத்தில் தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது என்ன? வேல்ஸ் இல் இருந்து அருஸ்    87 Views எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடர் தொடர்பில் பல நகர்வுகளை சிறீலங்காவும், தமிழர் தரப்புக்களும் முன்னெடுத்துவரும் நிலையில், இந்தியாவும் தனது கவனத்தை திருப்பியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் பாதுகாப்புச் செயலாளர் சிறீலங்கா வந்து சென்ற பின்னர், தற்போது இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இந்த வாரம் சிறீலங்காவுக்கு 3 நாள் பயணமாக வந்து சென்றுள்ளார். அமெரிக்காவை எதிர்க்கும் நிலைக்கு சிறீலங்கா சென்றதுடன், சீனாவுடன் நெருங்கி வருவதை தொடர்ந்து, இந்தியா தனது நடவடிக்கைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. எனினும் சிறீலங்கா அரசை அரவணைத்து செல்லும் தனது நிலையில் இருந்து தற்போதும் இந்தியா விலகவில்லை என்பதே ஜெய்சங்கரின் பயணத்தின் முடிவாக உள்ளது. என்றுமில்லாதவாறு பல தமிழ் கட்சிகளை அவர் சந்தித்துள்ள போதும், தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வை சிறீலங்கா அரசிடம் விட்டுச் சென்றதும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. சிறீலங்கா மீது ஒரு தீர்மானத்தை பிரித்தானியா தலைமையில் அமெரிக்கா கொண்டுவரத் தீர்மானித்துள்ள நிலையில், அது தொடர்பில் இந்தியா என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்பது பற்றி அறிந்துகொள்ள சிறீலங்கா அரசு முயன்றுவருவதுடன், இந்தியாவுடன் நட்பை பாராட்டவும் முற்பட்டு வருகின்றது. முன்வைக்கப்படும் தீர்மானத்தை இந்தியா எதிர்க்காது; ஆனால் அதனை ஆதரிக்கவும் செய்யாது; எனினும் அதனை நீர்த்துப்போகச் செய்யும் சாத்தியங்கள் அதிகமுள்ளது என்ற நிலைப்பாடே சிறீலங்காவின் தரப்பில் உள்ளது. எனினும் ஆசியாவின் நேட்டோ எனப்படும் அமெரிக்கா, இந்தியா, யப்பான் மற்றும் அவுஸ்திரேலியா இணைந்துள்ள குவாட் என்ற பாதுகாப்பு கூட்டணியானது, சீனாவின் வளர்ச்சிக்கு எதிரானது. அது சிறீலங்காவுக்கு அனுகூலமானது அல்ல. இந்த நிலையில் தான் நேபாள பயணத்தின் போது சிறீலங்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவுகள் தொடர்பில் காட்டமான கருத்து ஒன்றை இந்திய பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்திருந்தார். இந்திய அதிகாரிகளின் தொடர் சிறீலங்கா பயணத்தின் நோக்கம் என்பது, தமிழர் தரப்பு மேற்குலகத்துடன் அல்லது அனைத்துலக சமூகத்துடன் நெருங்கிவிடக் கூடாது என்பதை முதன்மையாகக் கொண்டதாகவே அவதானிகளால் நோக்கப்படுகின்றது. எதிர்வரும் ஜெனீவா கூட்டத்தொடர் தொடர்பில் தமிழ்த் தரப்பு முன்னரைவிட அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது. பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட ஏறத்தான 250இற்கு மேற்பட்ட அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் இணைந்து பிரித்தானிய பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சருக்கு கடிதம் ஒன்றையும் இந்த வாரம் அனுப்பியுள்ளன. பிரித்தானியா தலைமை தாங்கும் இந்த தீர்மானமானது, முன்னைய தீர்மானத்தை போல் இல்லாது காத்திரமாக இருக்க வேண்டும் என்பது கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், சிறீலங்காவினை அனைத்துலக போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்துவது தொடர்பில் பின்வரும் விடயங்களை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனத்தில் எடுத்து, அதனை ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளருக்கு தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அனைத்துலக ஈழத்தமிழர் மனித உரிமை மையத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது. அவர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் முக்கிய பகுதிகள் வருமாறு: கடந்தகால நடவடிக்கைகளின் விளைவாக தமிழ் மக்கள் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர். ஐ.நா தீர்மானத்தில் இருந்து சிறீலங்கா அரசு வெளியேறியது என்பது இந்த நம்பிக்கையை முற்றாக சீரழித்துள்ளது. 30/1 தீர்மானம் என்பது நீர்த்துப்போகச் செய்யப்பட்ட ஒன்று. கலப்பு நீதிமன்ற விசாரணைகள் வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை செய்தபோதும், தீர்மானத்தில் திட்டமிட்ட ரீதியில் அது உள்ளடக்கப்படவில்லை. எனினும் உள்ளக விசாரணைகள் மூலம் சிறீலங்காவில் யாரும் நீதி விசாரணைகளுக்கு உட்படவில்லை. நீதியை நிலைநாட்டுவதற்கு உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும் என ஆணைக்குழுவின் 40 ஆவது கூட்டத்தொடரிலும், அதன் தலைவர் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் எதுவும் இடம்பெறவில்லை. இந்த நிலையில் தான் சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐ.நா பாதுகாப்பு சபையை அல்லது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை ஆணைக்குழு பரிந்துரை செய்ய வேண்டும் என தமிழ் மக்கள் வேண்டி நிற்கின்றனர். ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நீதியை பெற்றுத்தரும் என்பதில் நம்பிக்கையில்லை. எனவே இந்த தீர்மானத்தின் மீது அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் தேவை. இதுவே போர் நிறைவடைந்து 10 ஆண்டுகள் கடந்த பின்னரும் நீதி கிடைக்காது தவிக்கும் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுத்தரும். தீர்மானம் தொடர்பில் சிறீலங்கா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் அது தொடர்பில் அனைத்துலக பொறிமுறை ஒன்று தொடர்பில் உறுப்பு நாடுகள் சிந்திக்க வேண்டும் என 36 மற்றும் 37 ஆவது கூட்டத்தொடரில் ஆணையாளர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் ஏனைய ஐ.நா அறிக்கைகள் தொடர்பில் அனைத்துலக நடவடிக்கை தேவை என்பதையே நாம் இங்கு வலியுறுத்துகிறோம். ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் ஐ.நா செயலாளர் நாயகத்தின் உள்ளக விசாரணை குழு சமர்ப்பித்த அறிக்கை (பெற்றி அறிக்கை 2012) என்பன அனைத்துலக நாடுகளை ஒருங்கிணைத்து அனைத்துலக விசாரணைக்கான கோரிக்கையை விடுப்பது தொடர்பில் ஆணையாளருக்கு அதிகாரத்தை வழங்க வல்லது. 1948 ஆம் ஆண்டு ஐ.நாவினால் அமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானத்தில் சிறீலங்காவும் ஒரு அங்கத்துவ நாடு. இந்த தீர்மானத்தின் அடிப்படையில் அங்கத்துவ நாடுகளில் இடம்பெறும் இனப்படுகொலை தொடர்பில் உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் விசாரணைகளை மேற்கொண்டு தண்டனைகளை வழங்க முடியும் என்பதை சிறீலங்கா நினைவில் கொள்ள வேண்டும். ஆணைக்குழுவின் தீர்மானத்தில் இனப்படுகொலை என்ற பதம் இல்லை. அதில் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணக்கான பரிந்துரைகளே உள்ளன. ஆனால் நீதிமன்ற விசாரணைகளின் முடிவில் அது இனப்படுகொலையாக மாறலாம் என 2015 ஆம் ஆண்டு ஆணைக்குழுவின் தீர்மானத்தை வெளியிட்ட பின் பேசிய ஆணையாளர் செயிட் அல் குசைன் தெரிவித்திருந்தார். எனவே விசாரணைகளில் கிடைக்கும் ஆதாரங்களை ஐ.நா ஆணைக்குழு அனைத்துலக நீதிமன்ற விசாரணக்கு பரிந்துரை செய்ய முடியும். சிறீலங்காவில் ஒரு இனப்படுகொலை இடம்பெற்றுள்ளதா அல்லது அதனை மேற்கொள்ள அரசு முற்பட்டு வருகின்றதா என்பது தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது. உயர் அரச அதிகாரிகளின் உத்தரவுக்கு அமைவாக பெருமளவான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என அவுஸ்திரேலியா, மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தின் அனைத்துலக மற்றும் அரசியல் கற்கைகளுக்கான பேராசிரியர் டாமியன் கின்ஸ்பெரி தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசு தொடர்ந்து திட்டமிட்ட ரீதியில் தமிழ் மக்களை அழித்துவருவதாகவும், ஆனால் அங்கு வாழும் தமிழ் மக்கள் சுயஉரிமைகளுடன் வழ உரிமை உடையவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 2020 இடம்பெற்ற 43 ஆவது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் வெளியிடப்பட்ட ஆணையாளரின் அறிக்கையில் சிறீலங்காவில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிய தீர்மானத்தில் பின்வரும் விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்: ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் போது சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் கையளிக்க வேண்டும். ஐ.நா பாதுகாப்புச்சபை போன்ற அமைப்புக்களுடன் இணைந்து மனித உரிமைகள் ஆணைக்குழு செயற்படுவதுடன் சிறீலங்கா மீதான அனைத்துலக விசாரணக்கும் கோரிக்கை விடுக்க வேண்டும். இனப்படுகொலைக்கு எதிரான ஆலோசகர் ஒருவரை நியமித்து சிறீலங்காவின் நடவடிக்கைகளை கண்காணிப்பதுடன், அங்குள்ள தடையங்கள் மற்றும் சாட்சியங்களையும் பாதுகாக்க வேண்டும். போர்க்குற்ற விசாரணகனை மேற்கொள்ள சிறீலங்கா அரசு மறுத்து வருவதற்கு எதிராக அங்கத்துவ நாடுகள் தமது எதிர்ப்புக்களை தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆணைக்குழு அதன் அங்கத்துவ நாடுகளிடம் விடுக்க வேண்டும். மறுக்கப்படும் நீதி அங்கு மேலும் வன்முறைகளை உருவாக்கலாம். ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதுபோல, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறீலங்கா இணைய வேண்டும். உறுப்பு நாடுகள் அனைத்துல நீதி பொறிமுறைகளை சிறீலங்கா மீது நடைமுறைப்படுத்துவதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகள் குழு போன்ற குழுங்களும் சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சிறீலங்காவில் இடம்பெறும் தற்போதைய நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு சிறப்பு தூதுவர் நியமிக்கப்பட வேண்டும். அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதைப் போல வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைத்து பொதுமக்களின் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும். அதனை அனைத்துலக சுயாதீன அதிகாரி மேற்பார்வை செய்ய வேண்டும். முன்னைய குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளாது விட்டால், அது மீண்டும் நிகழ்வதற்கு வாய்ப்புக்கள் உள்ளது. ஆணைக்குழுவின் தீர்மானத்தில் இருந்து சிறீலங்கா வெளியேறியுள்ள நிலையில், சிறீலங்கா மீது அனைத்துலக நீதி விசாரணைகளை கொண்டுவருவது தொடர்பில் ஆணைக்குழு தீர்மானிக்க வேண்டும் என அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம் தெரிவித்துள்ளது. தற்போது தமிழ் மக்களிடம் ஏற்பட்டுவரும் மாற்றம் என்பது இந்துசமுத்திரப் பிராந்திய ஆதிக்கப் போட்டியில் அவர்கள் ஒரு புறக்கணிக்க முடியாத சக்திகளாகி விடுவார்களோ என்ற அச்சத்தை இந்தியாவுக்கு தோற்றுவித்துள்ளது. எனவே எதிர்வரும் நாட்களில் நாம் பல மாற்றங்களை பார்க்கலாம். அதனை எதிர்கொள்ள தமிழ் சமூகம் தன்னை தயார்படுத்த வேண்டியதே தற்போதைய தேவையாக உள்ளது.   https://www.ilakku.org/?p=39540
  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • என்னைப்பொறுத்தவரை இக்கட்டுரையின் உண்மையான நோக்கம் தமிழினத்தின் துரோகிகளில் ஒருவரான முன்னாள் யாழ்ப்பாண மேயர் அல்பேர்ட் துரையப்பாவிற்கு வெள்ளையடிப்பதும், தமிழ் இடதுசாரிகள் சமாதிக்குள் இருந்தாலும் இன்னும் இறுதிமூச்சினை விடவில்லை என்று காட்டுவதும் தான். இதை விட இக்கட்டுரையில் சமகாலத்திற்குச் சம்பந்தமான விடயங்கள் இருப்பதாகத் தெரியவில்லை, புலிவாந்தியைத் தவிர. ஆனால் ஒன்று, எப்படா புலிவாந்தியொன்றுவரும், அள்ளிப் பருக என்று காத்திருப்பவர்களுக்கு இது ஒரு பஞ்சாமிர்தம் என்பதில் ஐய்யமில்லை !
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.