Jump to content

யாழ் சோழியன் அண்ணாவும் நாங்களும்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழ் சோழியன் அண்ணாவுடனான எமது அனுபவங்களையும் நினைவுகளையும் பதிந்து வைப்போம் உறவுகளே...

 

யாழ் ஒரு குடும்பம் என்ற நாங்கள் சொல்வோம்

சோழியன் அண்ணாவின் இழப்பு என்பது எமது யாழ் குடும்பத்தின்

அதன் உண்மையான அர்த்தத்தை

பாசத்தை சொல்கிறது

நேற்றிலிருந்து எதுவுமே ஓடவில்லை

ஒவ்வொரு செக்கனும் அவரது நினைவுகள் வந்து மோதுகின்றன

கண்ணால் காணாது உறவு

ஆனால் அவரை மறக்கமுடியவில்லை.

என்னுடன் அவரது தொடர்புகளையும்

எழுத்துக்களையும் இங்கு பதிகின்றோம்

முடிந்தவரை எல்லோரும் பதியுங்கள்.

அவரது நினைவுப்பதிவாக காலம் காலமாக இங்கு இருக்கட்டும்.

14993393_1496348990394157_26255694274175

 

image.jpg

 

 

image.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15056478_10202301690061524_6613765788965

Link to comment
Share on other sites

யாழ் இணையத்தின் ஆரம்பகால உறுப்பினன் என்ற வகையில் சோழியன் அண்ணா என்ற பெயர் அன்றைய காலங்களில் பலரை ஊக்குவித்த மருந்து என்பதை என்னால் கூறமுடியும். ஒரு சிலரே உலாவிய யாழ் இணையத்தை பலர் கூடி பார்க்க வைத்த அவரின் எழுத்துக்கள் யாராலும் மறக்க முடியாது. எனக்கும் அவரிற்குமான உறவானது துரோணருக்கும் ஏகலைவனுக்குமான உறவு. நேரில் சந்திக்காமலேயே அவரின் எழுத்துக்களால் அவரின் திருத்தங்களால் வளர்ந்தவன் நான். தன் வலைப்பதிவூடாக என்னை விளம்பரப்படுத்தியவர்.

 

IMG_20161116_161849.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரர், எழுத்தாளர் திரு சோழியன் அவர்களது அமரத்துவம் எனை மிகவும் சோகத்திலாழ்துகிறது. 
எமைவிட்டு அவர் நீங்கியது
நான் எனது மண்ணைவிட்டு நீங்கியதற்கிணையான துயத்தினைத் தருகின்றது.
அவரது ஆத்மா வீடுபேறடைய 
எல்லாம்வல்ல இயற்கையை வேண்டிகிறேன்,
அவரது பிரிவால் துயருறும் அன்னாரது சுற்றாத்தார் அனைவருக்கும் 
எனது ஆத்மார்த்தமான இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பகாலத்தில் அவர் ஒரு சிறந்த இலக்கியவாதி, எழுத்தாளர் என நான் அறிந்திருக்கவில்லை. கான நாளைக்குப் பிறகுதான் தெரிந்து கொண்டேன்.

அருமையான நண்பர், செய்தி கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரர், எழுத்தாளர் திரு சோழியன் அவர்களது அமரத்துவம் எனை மிகவும் சோகத்திலாழ்துகிறது. 
எமைவிட்டு அவர் நீங்கியது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன் அண்ணா மீண்டும் யாழ் இணையத்துக்கு வந்தபோது 2013 கடைசியில் என நினைக்கிறேன். முதன் முதலில் நான் தான் திண்ணையில் அவருடன் உரையாடினேன். நீங்கள் பழையவர் அல்லவோ என்று கூறி அவர் பெயரில் இன்னும் ஒரு திரி ஓடிக்கொண்டு இருக்கிறதே என்று கூற மகிழ்ந்தார். நேரில் அவரைப் பார்க்கவில்லையாயினும் முகநூளிலும் கருத்துக்களை எழுதுவார். அவரின்பெயரும் அவர் யாழில் போட்டிருந்த அடையாள படமும் என்னைக் கவர்ந்தவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மூலம் அப்புறம் எம் எஸ் என் மூலம் அப்புறம் முகநூல் மூலம் என்று பல வழிகளிலும் கடந்த 13 ஆண்டுகளாக எந்த ஒரு சர்ச்சையும் சச்சரவும் இல்லாமல் உறவாடிய உறவுகளும் சோழியன் அண்ணாவும் ஒருவர். 

பல விடயங்களைப் பரிமாறி இருக்கிறார்.. வழிகாட்டி இருக்கிறார்.. நல்ல பல விடயங்களைச் சொல்லித் தந்திருக்கிறார். ஒரு சகோதரனுக்குரிய நெருக்கத்தை உணரத்தந்திருக்கிறார்.

எங்கள் முகமறிந்த உறவுகளில்.. சோழியான் அண்ணா தான் முதலாமவர். அந்தளவுக்கு நம்பிக்கைக்குரிய உறவாக இருந்தவர். 

சோழியான் அண்ணா இறந்திட்டார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

எப்பவும் கேட்பார்.. எனக்கு ஒரு வைத்தியம் சொல்லுங்கோன்னு. 

ஊர் போய் வந்தவர்.. இப்படி.. எம்மை எல்லாம் விட்டுப் போவார் என்று நினைச்சுக் கூடப் பார்க்க முடியவில்லை.

ஓரு உடன்பிறந்த சகோதரனை.. உறவை இழந்த வலி.. இதயம் இந்த இழப்பை ஏற்க மறுக்கிறது. 

கண்ணீரோடு. 

Link to comment
Share on other sites

சோழியன்:

 

சோழியன் மாமா பற்றி எனக்கு முதன்முதலாக அறியவந்தது அனிதா மூலம். நல்லாய் கதை எழுதுவார் எண்டு சொல்லி இருந்தா. தாயக பறவைகள் இதலில சோழியன் மாமாவிண்ட தொடர்கதை வாறது எண்டு நினைக்கிறன். நான் யாழில ஆக ஓரிருவரைத்தான் மாமா எண்டு கூப்பிடுறது. ஒருவர் புத்தன். புத்தன் யமுனாவிண்ட (ஜம்முபேபி) உண்மையான மாமா எண்டுறபடியால அவர் மாமா மாம்ஸ் எண்டு கூப்பிட நானும் அவரோட சேர்ந்து புத்தன் மாமா, பிறகு புத்து மாமா எண்டு கூப்பிட வெளிக்கிட்டது. பிறகு நான் மாமா எண்டுகூப்பிடுறது அவருக்கு சங்கடமாக இருக்கும் எண்டு நினைச்சுபோட்டு புத்தன் எண்டு பெயர் சொல்லிக்கூப்பிடுறது.

 

மற்றவர் அம்பளம் அங்கிள் எண்டு அவர்.. கனகாலத்துக்கு பிறகு யாழுக்கு வந்து இருந்தவர். இப்ப திரும்ப காணாமல் போயிட்டார். அவரையும் மாமா எண்டு கூப்பிடுறது. சோழியன் மாமா ஜேர்மனில எங்கையோ அம்மன் கோயிலில தேர்திருவிழாவுக்கு போனதுபற்றியும், அதில தண்டபடமும் போட்டு இருந்தார். அங்க இருந்துதான் எனது உறவு யாழில சோழியன் மாமாவுடன் ஆரம்பித்தது.

 

சிலது கொஞ்சம் பயமாய் இருக்கும் இவர் உண்மையில கொஞ்சம் வயசானவரோ இல்லாட்டிக்கு சின்னப்பெடியனாய் இருக்குமோ எண்டு. ஏன் எண்டால் ஒரு சின்னப்பெடியனை யாராவது மாமா எண்டு கூப்பிட்டால் ஒரு deliberate Insult ஆகத்தானே இருக்கும்? ஆனால்... பிறகு இல்லை இவர் பெரிய ஆள்தான் எண்டு நல்லாய் மனதுக்க உறுதியாய் தெரிஞ்சபிறகு சோழியன் மாமா எண்டுகூப்பிட துவங்கியாச்சிது. சோழியன் மாமாவிண்ட கனதியை – ஆற்றலை – திறமையை அவரிண்ட தமிழமுதம் வலைத்தளத்துக்கு போனபிறகுதான் அறிஞ்சுகொண்டன். அங்க ஒருக்கால் போய்வந்தபிறகு எனக்கு சோழியன் மாமா மீது இருந்த மதிப்பு இன்னமும் அதிகரிச்சுவிட்டிது. தமிழமுதம் இணையத்தை ஒரு.. என்ன எண்டு சொல்லிறது எண்டு தெரிய இல்லை... வலைத்தளத்தில தமிழருக்கு கிடைச்ச ஒரு விலைமதிப்பற்ற சொத்து எண்டு சொல்லலாம். சோழியன் மாமாவிண்ட Profileக்கு போனால் அதில தமிழமுதம் வலைத்தளத்துக்கு போவதற்குரிய முகவரி இருக்கிது.

 

நான் யாழில கனடாக்கிழவன் எண்டு ரெண்டுதரம் ஒரு ஆக்கம் எழுதி ஊர்ப்புதினத்தில இணைச்சது. நான் அதை எழுதினதில பலருக்கு கோபம். ஆனால் சோழியன் மாமா துணிவுடன் அதை பாராட்டி இருந்ததோடு அதை தண்ட வலைத்தளத்தில போடலாமோ எண்டும் கேட்டு இருந்தார். யாழில சோழியன் மாமாவை ஒரு நீதியிண்ட தராசு எண்டு சொல்லலாம் எண்டு நினைக்கிறன். எனக்கு ஆதரவு அளிச்சதுக்காக அப்பிடி நான் சொல்ல இல்லை. நான் கவனிச்சதில சோழியன் மாமா தாயகபோராட்டம் சம்மந்தமாககூட ஆதரவு சொல்லேக்க கண்டதுக்கெல்லாம் தலை ஆட்டமாட்டார். நடுவுநிலமையுடன் கருத்தாடல் செய்பவர். அவரிண்ட கையெழுத்தில இருக்கிற “பழையன அறிந்து புதியன புகுவோம்!” எண்டு இருக்கிறதில இருந்து நீங்கள் சோழியன் மாமாவிண்ட நிலைப்பாட்டை அறிஞ்சுகொள்ளலாம்.

 

எனக்கு அதிகம் சோழியன் மாமாமீது பற்று வந்ததற்கான காரணம் துணிவாக, மற்றது போலியாக வெட்கப்படாமல் தண்ட உணர்வுகளை சொல்லக்கூடியவர். நான் போனவருசம் மாவீரர்கள் நினைவாக யாழில பல விடுதலைகானங்களை பாடி ஒலிப்பதிவுசெய்து இணைச்சு இருந்தன். சோழியன் மாமாவும் தனது குரலில ஒரு பாடலை பாடி இணைச்சு இருந்தார்.

 

எனக்கு இன்னமும் தனிப்பட விரிவாக அவர்பற்றி தெரியாது. ஆனால் நான் ஜேர்மனிக்கு போகும்சமயம் வரும்போது நிச்சயம் அவரைச்சந்திக்க முயற்சிசெய்வதோடு, அவரோட சேர்ந்து ஏதாவது ஒரு சின்னப்படைப்பை ஆகக்குறைஞ்சது ஒரு பாடலையாவது உருவாக்க முயற்சிப்பன். நான் போனவருசம் டென்மார்க் போயிருந்தபோது ரெண்டுமூண்டு இடங்களில பாடல்கள் பாடினது. நாங்கள் அங்கபாவிச்சது ஆக ரெண்டு தபேலா, ஒரு electric drum. எங்களுக்கு வயலின், வீணை எண்டு பக்கவாத்தியங்கள் எல்லாம் தேவை இல்ல பாடுறதுக்கு. கையில ஒரு அண்டா குண்டா ஒண்டு கிடைச்சால் போதும். நான் பொழுதுபோக்கிற்கு வீட்டில பாடுறது. எண்டபாட்டில பியானோ வாசிச்சுக்கொண்டும் பாடுறது. அது நல்லதொரு அனுபவம். இதுமாதிரி ஜேர்மனியில சோழியன் மாமாவோட சேர்ந்து சின்னக்கூத்து ஒண்டு அடிக்கவேணும் எண்டு ஒரு சின்ன ஆசை இருக்கிது. இடைக்கிடை சோழியன் மாமா மின்னஞ்சல் அனுப்புவார். சோழியன் மாமாவிண்ட சேவைகள் தொடர வாழ்த்துகள்!

+++

கருத்துகளுக்கு மிகவும் நன்றி முரளி. எப்போ எல்லோரும் பதில் கருத்தெழுதுவார்கள் என பார்த்துக் கொண்டிருந்தேன் எனது கருத்தை பதிவதற்காக. இது தருணம் என நினைக்கிறேன்.

 

ஒவ்வொரு சந்திப்புகளும் ஒவ்வொரு அனுபவங்களைத் தருகின்றன. அந்த அனுபவங்கள் புதுப்புதுப் படிப்பினைகளைத் தருகின்றன. தாயகத்திலே வாசிக்கும் பெரும்பாலான சஞ்சிகைகள் நூல்கள் தமிழகத்து இறக்குமதிகளாக இருந்த காரணத்தால், அப்போது எனது எழுத்துகளும் அவை சார்ந்தனவாகவே இருந்தன. பின்பு புலம்பெயர்ந்து யேர்மனிக்கு வந்து கிடைத்த சந்திப்புகள் எனது எழுத்தின் போக்கை மாற்றின. இணயத்தளங்களின் வருகைக்குப் பின் எனது எழுத்துகள் பரவலாவதற்கு யாழ் களம் வழி அமைத்துத் தந்தது. அதன் மூலம் ஏற்கெனவே நான் எழுதியவைகளைப் பகிர்ந்து கொண்டேன். யாழுக்காக ஒரு தொடர்கதையை மட்டுமே எழுதினேன் என நினைக்கிறேன். அதற்கு யாழுக்கப்பால் மெசன்சர் வழி நின்று முகம்தெரியாது உற்சாகப்படுத்தியவர்களும் கணனிப்பித்தன், இளைஞன், பரணி போன்ற யாழ்கள உறவுகள்தான். அதேபோல, தமிழமுதம் என்ற இணையத்தளத்தை ஆரம்பிப்பதற்கும் அந்த தேடலை தொடக்கி வைத்தவர்களும் யாழ் கள உறவுகள்தான். முதலில் யாகூவில் ஒரு பக்கத்தை எப்படி அமைப்பது என 'அ' எழுதி தொடக்கி வைத்தவர் யாழ்கள உறவு கணனிப்பித்தன். அவரே 'டைனமிக் போன்ற்' எப்படி உருவாக்குவது என்பதையும் மெசன்சர் மூலம் சொல்லித் தந்தார். அடுத்த படியாக இளைஞன் 'ஸ்கிரிப்ட்' மூலம் இணையத்தளம் உருவாக்கித் தந்ததோடு, அதைப்பற்றியும் எனக்கு புரியக்கூடிய தகவல்களை மெசன்சர்மூலம் சொல்லித் தந்தார். அதேபோல 'தமிழமுதம்' பிரிவுகளுக்கு.. இயலமுதம்.. செயலமுதம்.. அயலமுதம்.. இப்படி அமுதம் என முடியுமாறு பதங்களை தெரிவு செய்து தந்திருக்கிறார் குருவிகள். அதேபோல தூயவனும் அதற்கு சில உதவிகளைத் தந்துள்ளார்.. :Dஇவ்வாறு யாழ் களம் மூலம் நான் பெற்ற அனுபவங்களும், பயன்களும் பற்பல.

 

நானும் யாழில் உணர்ச்சிவசப்பட்டு வரம்புகளை மீறியதுண்டு. உதாரணமாக, திருமதி நளாயினி தாமரைச்செல்வனுடனான கருத்தாடலில்.. இரட்டை அர்த்த வசனங்களில் கருத்தாடல் செய்யப்போய் ஒரு கட்டத்தில் அது எல்லை மீறியதுண்டு. அது பலருக்கு பரியாவிட்டாலும் அவருக்கு புரிந்தது. ஆனால் அவர் நாகரீகமாக தொலைபேசியில் சுட்டிக்காட்டியபூது நான் வருத்தியதுண்டு. இப்படி சில பண்படுத்தல்களுக்கும் யாழ் காரணமாகியது. இதை ஏன் எழுதுகிறேன் என்றால், 'சோழியான் மாமா யாழில் நீதியின் தராசு' என்று பெரிய வார்த்தையால் என் மனதை குறுகுறுக்க வைத்துவிட்டார் முரளி. பிழைவிடுவது இயற்கை. ஆனால் அதை திரும்பவிடாதவாறு பார்த்துக் கொள்வதுதான் சிறப்பு. என்னாலியன்றமட்டும் இதையே கடைப்பிடிக்க விரும்புகிறேன்.

 

முரளி! பிறேமனில் பலதுறையிலும் வல்ல கலைஞர்கள் உள்ளார்கள். இசை, நடிப்பு, நடனம்.. இப்படியாக. நீங்கள் இங்கே வரும்போது எதை உருவாக்க நினைத்து வருகிறீர்களோ.. அதைப்பற்றி ஓரளவு கால இடைவெளியுடன் அறிவித்தால்... நாங்கள் றெடி. :D

Edited December 16, 2008 by sOliyAn

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தைகள் யாவும்
வலுவிழந்து போகின்றன
கார்த்திகை வானம் போல
மனம் கனத்துக் கிடக்கின்றது
நேற்று வரை எம்மோடு இருந்த நீ
இல்லை என்ற சொற்கேட்டு
இடி விழுந்த கோபுரம் போல
இதயம் நொருங்கிக் கிடக்கின்றது
ஆற்றல் மிகுந்த பேராசானே! நீ
ஆக்கி வைத்த இலக்கியங்கள்
இன்னும் நூறு தலைமுறைக்கு
ஈழத் தமிழர் கதை சொல்லி வாழும்
பழகிட இனித்திடும் வெல்லமே
பார்வையாலே பேசும் பெருமகனே
ஈழத்தமிழர் பெயர் சொல்லி எவர்
இரந்து கேட்டாலும் இல்லை எனாமல் 
நிறைந்து வளங்கும் வள்ளலே
உன்னால் உயர்ந்தவர் பலர் - எம்
உள்ளத்தில் என்றும் நீ 
இருப்பாய் பெரும் கனலாய்
வருகின்ற எம் படைப்புக்களின்
இனியும் நீ வாழ்ந்து கொண்டேய் 
இருப்பாய் பெரு நெருப்பாய்...

L’image contient peut-être : 3 personnes
 
J’aime
J’aime
J’adore
Haha
Wouah
Triste
Grrr
 
Commenter

ராஜன் முருகவேள் அவர்களின் இழப்பின் தாக்கம் இன்று முழுதும் இன்னமும் இயல்பாய் இருக்க முடியவில்லை. அதிகம் எம்மோடு வயது வேறுபாடையும் மறந்து சரிக்குச் சரி நின்று பம்பலடிக்கும் ஒரு மனிதன்.

பல நட்புக்களுடனும் இன்றும் நேற்றும் உரையாடியபோது என் மீதும் பரணி அண்ணா மீதும் கானா பிரபா அண்ணா மீதும் மிகுந்த பற்றுக்கொண்டிருந்தாராம் பேசும் நட்புக்களோடு எம்மைப் பற்றி பேசாமல் இருந்ததில்லையாம். இத்தகைய ஒரு உன்னதக் கலைஞனின் மனதில் இடம்பிடித்திருந்தது எமக்கெல்லாம் பெருமையே.

என்னை பரணி அண்ணை போன்றோரை நாம் எழுத முற்பட்ட காலத்தில் எம் மட்டத்திற்கு இறங்கி வந்து தட்டிக் கொடுக்கும் உன்னத குணம் படைத்தவர். எந்த ஒரு படைப்பை நான் பதிவிட்டாலும் ஓடி வந்து தன் கருத்தை பதிவதோடு உள்பெட்டியில் வந்து இன்னும் சிறப்பாய் எழுதக்கூடிய வழிமுறைகளையும் சொல்லிப் போவார்.

இன்று ராஜன் மாமாவுடனான உள்பெட்டி உரையாடல்களை மீண்டும் பார்த்து நினைவுகளை இரை மீட்டிக்கொண்டேன்.

என்ன சார் எப்பிடி இருக்கிறியள்? இப்பிடித்தான் அவரது உரையாடல் தொடங்கும். என்ன ராஜன் மாமா சார் எண்டு சொல்லாதேங்கோ ஒரு மாதிரி இருக்கெண்டா சரி சார் என்பார். அவரையும் சாரையும் கடைசி வரை பிரிக்க முடியாமலே போனது.

கடந்த ஆண்டு தலைவரின் பிறந்தநாளின் போது போற்றி ஒன்றை எழுதி பதிவிட்டிருந்தேன். அதற்கு தனது கருத்தை பதிந்துவிட்டு உள்பெட்டியில் வந்து அதை தொடர்போல மேலும் பல விடயங்களை உள்ளடக்கி எழுதுமாறும் தான் காத்திருக்கிறேன் என்றும் எழுதினார். இம்முறை அவர் குறிப்பிட்ட விடயங்களையெல்லாம் இணைத்து எழுதிக்கொண்டிருக்கிறேன்.

எழுதுங்கள் காத்திருக்கிறேன் என்று சொன்ன ராஜன் மாமா நீங்கள் எங்கே????? 1f623.png?1f623.png?1f623.png?1f622.png?1f622.png?1f622.png?1f622.png?

L’image contient peut-être : texte
 
J’aime
J’aime
J’adore
Haha
Wouah
Triste
Grrr
 
Commenter

https://www.facebook.com/R.P.Mayuran?hc_ref=NEWSFEED&fref=nf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன் அண்ணாவின் நினைவுகள் அழிக்கமுடியாதன

இங்கு  மற்றும் முகநூலில்  எழுதும் உறவுகளின் தகவல்களையும்

அவருடனான அனுபவங்களையும் பார்க்கும் போது மேலும் அவர் மீதான தேடலும்

ஆர்வமும் நேசமும் அதிகரிக்கிறது

 

யாழ் கள உறவுகளின் தகவல்களின் படி

அவர்களில் பலரும் தற்பொழுது யாழ் களத்தில் எழுதாத போதும்

யாழின் குடும்பமாக  யாழூடாக ஏற்பட்ட அவருடனான தொடர்பை

அவர்கள் வெளியிலும்

தனிப்படவும்

முகநூலிலும் இலக்கிய படைப்பாளிகள் சார்ந்தும்

தொடர்ந்திருப்பது தெரிகிறது.

அவர் என்னைத்தான் சார்  என்று அழைப்பார் என நான் நினைத்திருந்தேன்

அதை கண்டித்துமிருந்தேன் (திண்ணையிலும்)

ஆனால் அவர் எல்லோரையும் அவ்வாறே அழைத்திருப்பதும் இங்கு எழுதுபவர்களின் தகவல்படி தெரியவருகிறது.

ஓடிப்போய் பார்க்கணும் போல இருக்கு

ஆனால் 1000 கிலோ மீற்றர் தூரம்.......????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  •  

     
     
  • Rajhan Murugavel
    -PAXP-deijE.gif8/28, 9:44pm
     
     

    அதுவா.. வெள்ளி பின்னேரம் கால் திரும்ப நோகுதென்றூ வந்திட்டன்.. நாளைக்கு டொடரிட்ட போகணும்..

     

     

     

     

    இது தான் எனக்கு கடைசியாக அனுப்பிய பதில் தினம் தினம் அரட்டை அடிப்பது வழக்கம்   முகநூலில்  சார் என்று அழைப்பார் அப்படி அழையாதீங்கோ தம்பி அல்லது பெயரை சொல்லி அழையுங்கள் என்பேன் ஊர் வந்து போகும் போது தான் விமான நிலையத்திலிருந்து அழைத்து முதன் முதலாக பேசினோம் ஊர் எப்படியிருக்கிறது மிக நன்றாக இருக்கிறது  என்று சொல்லி போனவர் சில வேலைகள் அங்கு இருப்பதாகவும் முடிந்த பிறகு ஊர் திரும்பி  ஊரில் இருந்திட வேண்டும் என்று சொன்னவர் 

    கால் காயம் பற்றி சொல்லியிருந்தார்  இப்படி காலவன் வந்து அழைத்து செல்வான் என்பது கனவில் கூட நினைத்தது இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்று கார்த்திகை ராத்திரி

தொலைந்தது எங்கள் வெளிச்சம் 
சோழியன் என்று தளிர் விடட 
சுழிபுரத்தின் மைந்தனே 
இலக்கிய வரலாறில் 
பன்முகம் கொண்ட ஒருமுகம் 
கதை கவிதை, நாடகம் ,இசை
இலக்கியம்,அறிவியல் இன்று 
துயில் கொள்கின்றது

தமிழுக்கும் பெருமை செய்தாய் 
தமிழன் என சொல்லி பெருமை சேர்த்ததை 
சாவில் தமிழ் பாடிச் சாக வேண்டும் -என
உனக்கே நீ சாவம்மிடடாய் 
சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும் 
என் பேரம்பேசுவாய் மரணத்தின் வாயிலில்
பேதமை இல்லை என்று மறந்துவிடடாய் 
காலத்தின் சூத்திரதாரி இங்கிருந்து பிரித்தால் 
உன் பாணியிலும் சொல்லுகின்றேன் 
பிறப்பு என்பது முகவுரை
விருப்பு என்பது கட்டுரை 
சிறப்பு என்பது புகழுரை
இறப்பு என்பது முடிவுரை
இன்று உனக்கு இறப்புரை 
தொலைத்த வெளிச்சம் 
பரவுகிறது மனதில் வரலாறாக 
துயில்வது உன் அமைத்திக்கான பயணம்

L’image contient peut-être : 1 personne
 
 
 

துயர் பகிர்வோம் !
யாழ். சுழிபுரம் பறாளை வீதி யை பிறப்பிடமாகவும், ஜேர்மன்,பிரேமனை வதிவிடமாகவும் கொண்ட சோழியன் என்று இலக்கிய உலகில் அழைக்கப்படும் எனது மனைவியின் மைத்துனர் முருகவேலு ராஜன் அவர்கள் 15-11-2016 செவாய்க்கிழமை காலம் காவு கொண்டுவிட்டது. 
அண்ணனின் காவப்பட்ட் செய்தி சற்றும் எதிர்பாராதது. தாங்க இயலாதது.
இலக்கிய ஆசான் கூறியது போல் மரணத்தின் சபையில் நீதி இல்லை என்பதை நானும் உறுதிப்படுத்திக் கொள்கிறேன் சோழியன் மரணத்தில்,

சில குறிப்பு :-
இராஜன் முருகவேலு சுழிபுரம் பறாளை வீதி யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவர் முருகவேலு சரோயினி தம்பதிகளின் மூத்த புதல்வர் .யாழ் சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியில் ஆரம்ப கற்கயை முடித்து 
கொழும்பு றோயல் கல்லுரியில் தனது மேற்படிப்பை முடித்து 1984 ஆண்டு ஜேர்மன் நாட்டுக்கு புலன்பெயர்ந்து தந்து எழுத்துலகில் வாழ்ந்துவந்தார் 
கவியரங்கு ,பட்டிமன்றம் வில்லுப்பாட்டு ,நாடகம் ,இசையும் கதையும் என்ற வானொலி நாடக நிகழ்வுமுலம் கலைஉலகில் பிரவேசித்த இவர் புதினங்கள் சிறுகதைகள் என 50மேற்படட நாவல்கள் எழுதியுள்ளார் 
உலகளவில் தனது எழுத்து வன்மையால் பல பரிசுகளையும் தட்டிச்சென்றது இவரது கவிதைகள் ,கட்டுரைகள்

https://www.facebook.com/naranderan?hc_ref=NEWSFEED&fref=nf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழியான் இராஜன்முருவேல் என்று
பலராலும் மதிக்கப்படும் என் இனிய நண்பரை இன்றுதான் காணக்கிடைத்தது.

புன்னகையுடன் நீள்துயில் கொள்கிறார்.

30.11.2016 தீயுடன் சங்கமித்த பின் அவருக்கான நினைவுமலர் வெளிவரவுள்ளது.

அவரின் நினைவுகளை பகிர எழுதுங்கள் .

Villu.bremen@gmail.com

 

https://www.facebook.com/rajan.thambayah?hc_ref=NEWSFEED&fref=nf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி சோழியான் யாழ் களத்தில் எல்லோரிடமிருந்தும் ரொம்பவும் வேறு பட்ட ஒரு ஆளாகவே இருந்துள்ளார்.சோழியான் மாதிரி மற்றவர் மனதை நோகாமல் கலை இலக்கிய அனுபவம் ஆர்வம் உள்ளவராக வில்லுப்பாட்டுகளுடன் விளையாடியவராக ஒரு தலைவனாக யாழ் களத்தில் தவழ்ந்த எத்தனை பேரை ஓட வைத்திருக்கிறார்.

நான் யாழில் சேர்ந்த புதிதில் அடிக்கடி கருத்துக்கள் எழுதுவார்.அந்த நேரம் எப்படி இவரால் முடிகிறதென்று ரொம்ப ஆச்சரியமாக இருக்கும்.ஏன் பொறாமையாக கூட இருக்கும்.நான் சேரந்த கொஞ்ச நாட்களிலேயே சோழியானின் தலைமைத்துவத்தை பரிசோதிப்பது போல் ஒரு பட்டிமன்றன்றுக்கு தலைமை தாங்கினார்.அதில் ஒருவர் பதில் எழுதியதும் இவர் எப்படி எழுதப் போகிறார் மாட்டுப்பட்டுவிட்டார் என்று நினைத்துக் கொண்டிருக்க யாருமெ எதிர்பாராத வகையில் யாரையும் நோகடிக்காமல் நாசூக்காக கருத்தொழுதுவார்.அப்போது அவரின் திறமையை எண்ணி ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.

கீழே உள்ள சுட்டியை அழுத்தி சோழியானின் தலைமை எப்படி என்று நீங்களும் அறிந்து கொள்ளலாம்.

http://old.yarl.com/forum/index.php?showtopic=4990

சோழியானின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர் குடும்பத்தினருக்கு எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறந்த இலக்கியவாதியை இழந்து தவிக்கின்றோம்...எனது ஆரம்பகாலபடைப்புக்களுக்கு ஊக்கமளித்த உத்தமர்....ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Kuruvikal Kuruvi a partagé un souvenir.
11 h · 
 

இந்தக் கவி வரிகளை கிறுக்கினது நாங்கள்.. ஆனால் அதற்கு வடிவம் கொடுத்து தமிழமுதத்தில் பிரசுரிச்சது.. அன்புக்கும் மதிப்புக்கும் உரிய எங்கள் சோழியன் அண்ணா. இன்று அவர் நினைவாகவும்.. மாவீரர்கள் நினைவாகவும் இது பகிரப்படுகிறது. மாவீரர்களை மதித்த ஒரு நல்ல மனிதர் நிச்சயம் மாவீரர்களை மதிக்கும் எல்லோராலும் மதிப்படுவார். நினைவில் வைத்துப் பூஜிக்கப்படுவார்.

304284_10150372532537944_924666374_n.jpg

https://www.facebook.com/kuruvikal?hc_ref=NEWSFEED&fref=nf

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15192803_1498158930201260_31506964607357

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராஜன்முருவேல் என்றாலே நினைவுக்கு வருவது யாழ்களம் தான். ஆரம்ப நாட்களில் அவரோடு பகிர்ந்த கருத்துப் பகிர்வுகள், உரையாடல்கள் இன்றும் பசுமையாய் மனதினில் உலா வந்துகொண்டிருக்கிறது.

 

யாரையும் நோகடிக்காமல் பக்குவமாகக் கருத்தெழுதும் இனிய மனிதர், பழக இனிமையானவர்.

அவரின் மறைவு நம்ப முடியவில்லை ..! மனம் கணக்கிறது.

 

யாழின் ஆரம்பகாலத்தில் யாழுடன் இணைந்து பயணித்த சோழியன்

பல்கலை ஆற்றல்கள் கொண்டவர். திறமை மிக்கவர்.

 

யாழ்களத்தின் கவிதை, கட்டுரை, கணனி, விவாதம், போட்டி நிழ்வுகள், போன்ற எல்லா களங்களிலும் அவரது பங்களிப்பு மிளிர்ந்தது.

அவரது கவிவரிகளை கண்டு வியந்து இருக்கிறேன்.

வாகை!

எது கையென்று தூரிகை யெடுத்து கவிதை தர யான் வரவில்லை வாகை யென்றால்

எதுகை வருமோ என்ற கேள்வி இங்கை எதற்கு?

பல கை சேர்ந்து பலகையாக வாகை ஏந்தும் காலம் இப்போ உலகை வியக்க தமிழ்க்கை ஓங்கும் வாழ்க்கை இப்போ வருகை இப்போ!

 

கதைகளில் பல  மனதைத் தொடும்படி அமைந்து இருக்கிறது. ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? பலர் மனதையும் கவர்ந்த தொடர் என் மனதையும் கவர்ந்தது. அடுத்த தொடர் எப்போ வரும் என்ற ஆவலைத் தூண்டிய நாவல்.

8 வருடங்களுக்கு முன் வீட்டிற்கு வந்த அனுபவம் மறக்க முடியாதவை. அன்றுதான் முதன்முதலாய் அவரை பார்த்தேன். கணனியுடன் அமர்ந்து இருந்தார். அப்போது தான் கறுப்பி என்றால் யார் என்று அறிந்து கொண்டார். ஒன்றுமே கேட்கவில்லை ஆனால் அவர் பார்வை தான் வினாவியது  ... அது நீங்களா என்று.

அப்போது எடுத்த ஒரு புகைப்படம் இங்கே

DSC_0110.JPG

அதற்கு பின் அவரின் சந்திப்புகள் இடம்பெறவில்லை. யாருடனும் செட் பண்ணுவது இல்லை அதனால் உரையாடலுகளும் நின்றுபோயின.

 

சோழியன் அவர்களின் மறைவை மறுக்கிறது மனம். ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். அவர் மறைந்தாலும் அவர் ஆரம்பித்து வைத்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

என்ற தலைப்பு பலரை வாழ்த்தியபடியே வாழ்ந்து கொண்டிருக்கிறது. அந்தத் தலைப்பில் பதிவிடும் போது சோழியன் அவர்களின்  நினைப்பும் நிச்சயம் வந்து போதும் என்பதில் சந்தேகமே இல்லை.

அவரின் ஆன்மா சாந்தியடைய பிராத்தனைகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.