Jump to content

அரசியலமைப்பு திருத்தம்: 6 குழுக்களின் அறிக்கை சமர்ப்பிப்பு


Recommended Posts

அரசியலமைப்பு திருத்தம்: 6 குழுக்களின் அறிக்கை சமர்ப்பிப்பு
 
 

article_1479541689-Parliament3.jpgஅரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான அரசியலமைப்பு பேரவை, சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில், இன்று சனிக்கிழமை (19) காலை 9 மணிக்குக் கூடியது.

இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசியமைப்பு பேரவை வழிநடத்தல் குழுவின் கீழான ஆறு குழுக்களின் அறிக்கைகளை சமர்ப்பித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/186399/அரச-யலம-ப-ப-த-ர-த-தம-க-ழ-க-கள-ன-அற-க-க-சமர-ப-ப-ப-ப-#sthash.dj6YG2DB.dpuf
Link to comment
Share on other sites

புதிய அரசியல் யாப்பைத் தயாரிப்பதற்கான அறிக்கைகள் அரசியல் சாசன சபையிடம் கையளிப்பு
 
 
புதிய அரசியல் யாப்பைத் தயாரிப்பதற்கான அறிக்கைகள் அரசியல் சாசன சபையிடம் கையளிப்பு
புதிய அரசியல் யாப்பைத் தயாரிப்பதற்கான அரசியல் சாசன பேரவையினால் நியமிக்கப்பட்ட ஆறு உப குழுக்களினால் தயாரிக்கப்பட்ட ஆறு அறிக்கைகளும் இன்று அரசியல் சாசன சபையிடம் கையளிக்கப்ப ட்டுள்ளன. 
 
அரசியல் சாசன பேரவையின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த உப குழுக்களினால் தயாரிக்க ப்பட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
 
அரசியல் சாசன பேரவை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் கூடிய போதே, அரசியல் சாசன உப குழுக்களினால் தயாரிக்கப்பட்ட ஆறு அறிக்கைகளும் பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 
 
அடிப்படை உரிமைகள் தொடர்பான உப குழு, நீதித்துறை தொடர்பான உபகுழு, நிதி தொடர்பான உப குழு, பொது மக்கள் பாதுகாப்பு, காவல்துறை, சட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பான உப குழு,அரச சேவையில் மறுசீரமைப்பை ஏற்படுத்துவதற்கான உப குழு மற்றும் மத்திய அரசுக்கும் – மாகா ணங்களுக்கும் இடையிலான உறவுகளை கட்டியெழுப்புவதற்கான உப குழு ஆகியவற்றின் அறிக்கைகளே இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 
 
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள உப குழுக்களுக்கு ஒவ்வொரு அரசியல் கட்சியையும் சேர்ந்த தலா உறுப்பினர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை அந்த உப குழுக்களுக்கு தலைவர் ஒருவரும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். 
 
உப குழுக்களின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் கருத்துத் தெரிவித்த எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதற்கான உத்தேச அறிக்கை முன்வைக்கப்பட்டதும், அந்த அறிக்கை நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என தெரிவித்தார்.
 
அதேவேளை சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாகவும் உத்தேச அரசியல் யாப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிர்கட்சித் தலைவரின் இந்த கருத்து க்களை  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கீகரித்துள்ளார்.

http://www.onlineuthayan.com/news/20387

Link to comment
Share on other sites

புதிய அர­சி­ய­ல­மைப்­பின் மீது சர்வஜன வாக்கெடுப்பு

 

ஆறு உபகுழுக்களின் அறிக்கைகள் சமர்ப்பிப்பு: எதிர்த்தரப்பினர் சபையில் வலியுறுத்து
ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்

புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்கு பாரா­ளு­மன்­றத்தில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை பெறப்­பட்­டாலும் நாட்டு மக்­களின் இறை­மையை நிலை­நாட்டும் பொருட்டு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வேண்டும் என ஆளும், எதிர்த்­த­ரப்­புக்கள் சபையில் வலி­யு­றுத்­தின.

அர­சி­ய­ல­மைப்பு சபை நேற்று சனிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பின் தலைவர் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் காலை 9மணிக்கு கூடி­யது. அதன்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் அர­சி­ய­ல­மைப்­பு­ ச­பையின் வழி­ந­டத்தும் குழுக்­க­ளினால் நிய­மிக்­கப்­பட்ட ஆறு உப­கு­ழுக்­களின் அறிக்­கைகள் சமர்ப்­பிக்­கப்­பட்­டன.

அடிப்­படை உரி­மைகள், நீதி­மன்றம், நிதி, தேசிய மற்றும் பொது­மக்கள் பாது­காப்பு மற்றும் பொலிஸ் சட்­டத்தை நிலை­நாட்­டுதல், அர­ச­சே­வையை மறு­சீ­ர­மைத்தல், மத்­தியும், சுற்­றயல் உற­வுகள் ஆகிய ஆறு உப­கு­ழுக்­களின் அறிக்­கை களே சபையில் சமர்ப்­பிக்­கப்­பட்டன.

தொடர்ந்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உப­குழு அறிக்­கை­களை சமர்ப்­பித்து உரையை ஆரம்­பித்து வைத்தார். தொடர்ந்து ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் ஒன்­றி­ணைந்த எதி­ர­ணியின் ஆத­ரவு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான தினேஸ் குண­வர்த்­தன, எதிர்க் கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன், அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந், எதிர்க்­கட்சி பிர­தம கொர­டாவும் ஜே.வி.பி தலை­வ­ரு­மான அநு­ர­கு­மார திஸ­நா­யக்க எம்.பி ஆகியோர் உரை­யாற்­றினர். அவை வரு­மாறு,

பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க

அர­சி­ய­ல­மைப்பு சபை நிய­மித்த வழி­ந­டத்தல் குழு­வினால் நிய­மிக்­கப்­பட்ட ஆறு உப­கு­ழுக்­களின் அறிக்­கைகள் சபையில் சமர்ப்­பிக்­கப்­ப­டு­கின்­றமை விசே­ட­மா­னது. அடிப்­படை உரி­மைகள், நீதி­மன்றம், நிதி, தேசிய மற்றும் பொது­மக்கள் பாது­காப்பு மற்றும் பொலிஸ் சட்­டத்தை நிலை­நாட்­டுதல், அர­ச­சே­வையை மறு­சீ­ர­மைத்தல், மத்­தியும், சுற்­றயல் உற­வுகள் ஆகிய ஆறு உப­கு­ழுக்­களின் அறிக்­கை­களும் வழி­ந­டத்தல் குழு­வுக்கு வழங்­கப்­பட்ட பின்னர் அதனை அர­சி­ய­ல­மைப்பு சபையில் சமர்ப்­பிக்கத் தீர்­மா­னித்தோம்.

இந்த உப­கு­ழுக்­களின் அறிக்­கைகள் தொடர்பில் அர­சி­ய­ல­மைப்பு சபையில் விவா­தித்து அதன் அடிப்­ப­டை­யி­லேயே வழி­ந­டத்தல் குழு இவை பற்­றிய தீர்­மா­னத்­துக்கு வரும். இவ்­வாறு செயற்­பா­டு­களை மேலும் ஜன­நா­ய­கப்­ப­டுத்­து­வ­தா­னது அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிப்­ப­தற்­கான சிறந்த பின்­பு­லத்தை ஏற்­ப­டுத்தும். இந்த உப­கு­ழுக்­களின் அறிக்­கை­களில் உள்ள சகல விட­யங்­களும் அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்­கப்­ப­டாது. இவற்றின் அடிப்­ப­டை­யி­லான பின்­பு­லத்­துடன் விட­யங்­களை கலந்­து­ரை­யா­டியே வழி­ந­டத்தல் குழுவின் அறிக்­கையைத் தயா­ரிக்க எதிர்­பார்த்­துள்ளோம்.

இந்த உப­கு­ழுக்கள் பல்­வேறு நபர்கள், அமைப்­புக்கள், அர­சியல் கட்­சிகள், சிவில் சமூகப் பிர­தி­நி­திகள் என பலரைச் சந்­தித்­த­துடன், அவர்­களின் கருத்­துக்­களை முன்­வைப்­ப­தற்கும் அவ­காசம் வழங்­கி­யி­ருந்­தன. இந்த அறிக்­கை­களை தயா­ரித்­தி­ருக்கும் உப­கு­ழுக்­க­ளுக்கும், அக்­கு­ழுக்­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கிய விசேட நிபு­ணர்­க­ளுக்கும் அர­சி­ய­ல­மைப்பு சார்பில் நன்­றியைத் தெரி­வித்துக் கொள்­கிறோம்.

அர­சி­ய­ல­மைப்புத் தொடர்­பான வழி­ந­டத்தல் குழு இது­வரை 40 சந்­திப்­புக்­களை நடத்தி, பல்­வேறு விட­யங்கள் பற்றி ஆராய்ந்­துள்­ளது. தற்­பொ­ழுது அர­சி­ய­ல­மைப்பில் உள்ள அர­சாங்­கத்தின் தன்மை, மதத்­துக்­கான முன்­னு­ரிமை என்­ப­வற்றை நீக்­கு­வது எமது நோக்கம் அல்ல. ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் அவற்றை பலப்­ப­டுத்­து­வதே வழி­ந­டத்தல் குழுவின் எதிர்­பார்ப்­பாகும். நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை ஒழித்து அதற்கு மாற்­றீ­டாக மூன்று முறை­களை தெரி­வு­செய்­துள்ளோம். இவை குறித்து அர­சி­ய­ல­மைப்பு சபையில் விவா­தித்து பொருத்­த­மான முறை எது என்­பதை முடி­வு­செய்ய முடியும்.

தேர்தல் முறை மறு­சீ­ர­மைப்பில் கலப்பு முறை­யொன்­றுக்­கான விருப்பம் உள்­ளது. உலக நாடு­களில் பின்­பற்­றப்­படும் கலப்பு முறை­களை ஆராய்ந்து மாற்­றீ­டுகள் சில­வற்றை முன்­மொ­ழிந்­துள்ளோம். இதில் இரண்டு விட­யங்கள் உள்­ளன. வாக்­கா­ளர்கள் வழங்­கிய வாக்­கு­களின் வீதத்­துக்கு சம­மான பிர­தி­நி­தித்­து­வத்தை கட்­சி­க­ளுக்கு வழங்­க­மு­டியும். மறு­பக்­கத்தில் ஐந்து வரு­டங்கள் உறு­தி­யான அர­சாங்­க­மொன்றை அமைக்க முடியும். இது­போன்ற விட­யங்­களே கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. நிறை­வேற்று அதி­கார முறையின் கீழ் ஜனா­தி­பதி நிய­மிக்­கப்­ப­டு­வதால் பாரிய குறை­பாடு காணப்­ப­டு­கி­றது. அதி­கா­ரங்­களை பகிர்­வது குறித்து கலந்­து­ரை­யா­டி­யுள்ளோம். சில அறிக்­கையில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக இடம் தொடர்­பான பிரச்­சினை தொடர்பில் ஆரா­யந்­துள்­ள­தோடு, உப­கு­ழுவின் அறிக்­கையில் இது­பற்றி குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்த விட­யங்கள் தொடர்பில் ஆரம்ப விவா­தத்தை ஜன­வரி மாதத்தில் நடத்­த­மு­டியும். இதற்­காக ஜன­வரி 9, 10 மற்றும் 11ஆம் திக­தி­களில் விவா­தித்து முடி­வுக்கு வர­மு­டியும். இல்­லா­விட்டால் மேலும் காலம் எடுக்க முடியும். இது குறித்து கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கலாம். அடுத்த அர­சி­ய­ல­மைப்பு சபை எதிர்­வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி கூட­வுள்­ளது. வழி­ந­டத்தல் குழுவின் அறிக்கை தயா­ராக இருந்தால் அதனை அர­சி­ய­ல­மைப்பு சபையில் சமர்ப்­பிப்­ப­தற்­கா­கவே டிசம்பர் மாதம் கூட­வுள்ளோம்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஸ் குண­வர்த்­தன

ஜன­வரி மாதத்­தி­லேயே அர­சி­ய­ல­மைப்பு சபையின் அடுத்த அமர்வை நடத்­து­வது என கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. எனினும், அவ­சர அவ­ச­ர­மாக கூடி அறிக்­கை­களை சமர்ப்­பிக்கும் செயற்­பாட்­டுடன் நாம் இணங்­க­வில்லை. இது மோச­மான நிலைப்­பா­டாக இருக்கும் என்றார்.

எதிர்க்­கட்சி பிர­த­ம­கொ­ரடா அநு­ர­கு­மார திசா­நா­யக்க எம்.பி.

1978ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பு 19 தட­வைகள் திருத்­தப்­பட்­டுள்­ளன. இவற்றில் 17 தட­வைகள் ஆட்­சி­யி­லி­ருக்கும் தரப்­பி­னரின் அதி­கா­ரங்­களை தக்­க­வைத்துக் கொள்­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்ட திருத்­தங்கள். எனவே புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான தேவையை நாம் ஏற்றுக் கொள்­கின்றோம்.

தேர்­தல்­முறை மாற்­ற­மா­னது நாட்­டி­லுள்ள மக்­களின் தெரி­வு­களின் ஊடான பிர­தி­நி­தித்­துவம் சரி­யான முறையில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இருந்தே இதனை நோக்­கு­கின்றோம். மனித சமூக சமூக உரு­வாக்கம் மற்றும் அதன் பின்­பற்­றல்­க­ளுக்கு முழு மாற்­றான வகை­யி­லேயே நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை காணப்­ப­டு­கி­றது. அதா­வது ஒரு­வ­ருக்கு தனி­யான ஏகா­தி­பத்­திய அதி­கா­ரத்தை வழங்கும் முறை­யாகும்.

முழு­மை­யாக ஒழிக்­கப்­பட வேண்டும். இதனை நிறை­வேற்றக் கூடி­ய­வ­கை­யி­லான அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்டும். இதற்கு மாற்­றாக செயற்­ப­டக்­கூ­டாது என்­பதே எமது நிலைப்­பா­டாகும். அர­சி­ய­ல­மைப்­புக்கு பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை வழங்­கப்­ப­டு­வ­துடன், சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பில் மக்­களின் விருப்­பமும் பெற்றுக் கொள்­ளப்­பட வேண்டும் என்றார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஸ் குண­வர்த்­தன

ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி என்ற ரீதியில் 14 அடிப்­படை விட­யங்கள் தொடர்பில் நாம் முன்­மொ­ழி­வு­களை சமர்ப்­பித்­துள்ளோம். வழி­ந­டத்தல் குழுவில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள இந்த அடிப்­ப­டை­க­ளுக்கு வெளியே எந்­த­வொரு விட­யத்­துக்கும் நாம் ஒத்­து­ழைப்பு வழங்­கப்­போ­வ­தில்லை. இதற்­க­மைய நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிக்­கும்­போது, தற்­பொ­ழுது அவ­ருக்குக் காணப்­படும் அதி­கா­ரங்­க­ளுக்கு என்ன நடை­பெறும்? நாட்டின் ஒற்­று­மைத்­தன்மை பாதிக்­கப்­பட்டு, வேறு வேறு நாடுகள் உரு­வா­குமா? இது பாரி­ய­தொரு பிரச்­சி­னை­யாகும். எனவே இது நிறை­வேற்று அதி­கார முறை தொடர்பில் ஆழ­மான கலந்­து­ரை­யா­டல்கள் நடத்­தப்­பட வில்லை.

நாடு முழு­வ­தற்கும் சட்­டங்­களை தயா­ரிப்­ப­தற்கு பாரா­ளு­மன்­றத்­துக்கு காணப்­படும் அதி­காரம், விசே­ட­மாக உச்­ச­நீ­தி­மன்றம் வழங்­கிய தீர்ப்­பா­னது ஒற்­றை­யாட்­சியின் இறு­திக்குச் சென்­ற­தாக நீதி­ய­ரசர் சர்­வா­னந்தா கூறி­யி­ருந்தார். சட்­டங்­களை உரு­வாக்கும் அதி­காரம் பாரா­ளு­மன்­றத்­துக்கு இருந்­தாலும், மக்­களின் ஆட்­புல ஒரு­மைப்­பாட்டை அப­க­ரிக்க முடி­யாது.

நாட்டின் ஐக்­கியம் மாத்­தி­ர­மன்றி பாரா­ளு­மன்­றத்­திற்கு காணப்­படும் உரி­மைகள் என்­பன அர­சி­ய­ல­மைப்பில் இல்­லாமல் செய்­யப்­படக் கூடாது. இந்­நாட்டில் மாகாண சபை­களை ஒன்­றி­ணைக்கும் பிழை­யான செயற்­பாட்­டு­களால் நாட்டை மோச­மான நிலைக்குக் கொண்டு செல்லும் முயற்­சிகள் தொடர்பில் நாம் எமது கருத்­துக்­களை தெளி­வாகக் கூறி­யுள்ளோம். இவ்­வா­றான கருத்­துக்­க­ளுக்கு அமைய அர­சி­ய­ல­மைப்பு சபை எந்­த­வித அவ­ச­ரமும் இன்றி செயற்­ப­டு­வது அவ­சி­ய­மா­னது.

அவ­சர அவ­ச­ர­மான ‘புல்­டோசர்’ முறையை நிறுத்தி, மக்கள் மத்­தியில் கலந்­து­ரை­யா­டல்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான வழிகள் ஏற்­ப­டுத்துக் கொடுக்­கப்­பட வேண்டும். மக்கள் மத்­தியில் சிறந்­த­தொரு தெளிவு இல்லை. மக்கள் என்ன நடக்­கி­றது எனக் கேட்­கின்­றனர் என்றார்.

அமைச்சர் சுசில் பிரேம்­ஜெயந்

உப­கு­ழுக்­களின் அறிக்­கை­களை ஆராய்ந்து, தாம் பிர­தி­நி­தித்­துவப் படுத்தும் கட்­சியின் பிர­தி­நி­திகள் ஊடாக வழி­ந­டத்தல் குழு­வுக்கு நிலைப்­பா­டு­களை வழங்க முடியும். 1978ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பு 19 தட­வைகள் திருத்­தப்­பட்­டுள்­ளன. இதில் உள்ள சில திருத்­தக்கள் அர­சி­ய­ல­மைப்பின் அடிப்­படை நோக்­கத்­துக்கு முர­ணாக இருப்­பதைக் காண­மு­டி­கி­றது. இந்த நிலைமை மாற்­றப்­பட வேண்டும். அர­சி­ய­ல­மைப்பு சபையின் செயற்­பாடு அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிப்­ப­தாகும்.

அர­ச­சே­வை­களை மறு­சீ­ர­மைக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் சக­லரும் இருக்­கின்­றனர். இவ்­வா­றான நிலையில் அர­சாங்­கத்தின் தன்மை, தேர்தல் மறு­சீ­ர­மைப்பு, அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்கல் ஆகிய மூன்று விட­யங்கள் தொடர்பில் இன்­னமும் இறுதி முடி­வுக்கு வர­வில்லை. இருந்­த­போதும் இவற்­றுக்கு சம­மான விட­யங்­களைக் கொண்ட உப­குழு அறிக்­கைகள் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன என்றார்.

எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன்

அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிக்கும் செயற்­பாட்டில் நாம் பங்­க­ளிப்புச் செலுத்­தி­யுள்ளோம். இதனை தயா­ரிக்கும் கடமை அர­சி­ய­ல­மைப்பு சபைக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. அர­சி­ய­ல­மைப்புத் தொடர்­பான வழி­ந­டத்தல் குழுவால் நிய­மிக்­கப்­பட்ட ஆறு உப­கு­ழுக்­களின் அறிக்­கைகள் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன. அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிப்பில் பல்­வேறு மாற்­றீ­டுகள் குறித்து ஆராயும் நோக்­கத்­தி­லேயே நாம் இந்த விட­யங்­களில் ஈடு­பாட்டை செலுத்­தி­யுள்ளோம்.

வழி­ந­டத்தல் குழுவில் ஆரா­யப்­படும் விட­யங்கள் அர­சி­ய­ல­மைப்பு சபையில் கலந்­து­ரை­யா­டப்­பட்டு, அது அமைச்­ச­ர­வைக்கு அனுப்­பி­வைக்­கப்­படும். அங்கு அனு­மதி வங்­கப்­பட்­டதும் மீண்டும் பாரா­ளு­மன்­றத்தில் அர­சி­ய­ல­மைப்பு முன்­வைக்­கப்­படும். பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்­றப்­பட்­டாலும், சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பின் ஊடாக மக்­களின் அனு­ம­தியை பெற்­றுக்­கொள்­வது மிகவும் அவ­சி­ய­மா­னது. புதிய அர­சி­ய­ல­மைப்பு பாரா­ளு­மன்­றத்தால் அனு­ம­திக்­கப்­பட்­டாலும் அதனை மக்­களே இறு­தியில் தீர்­மா­னிக்க முடியும். அதற்­கான இறைமை நாட்டு மக்­க­ளுக்கே உள்­ளது என்றார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க

பாரா­ளு­மன்­றத்தில் எந்­த­வொரு கட்­சிக்கும் பெரும்­பான்மை கிடைக்­கா­மை­யா­னது, அர­சி­ய­ல­மைப்பை தயாரிக்கும் செயற்பாடுகளுக்கு பலமாக அமைந்துள்ளது. சகலரின் கருத்துக்களை செவிமடுப்பதற்கே சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. விவாதம் 9,10,11ஆம் திகதிகளில் ஆரம்பிக்கின்றோம். இந்த மூன்று தினங்களில் விவாதத்தை பூர்த்திசெய்ய வேண்டுமென்ற தேவை இல்லை. அதன் பின்னர் நாட்டில் இது பற்றிய கலந்துரையாடல்களை ஏற்படுத்த இடமளித்து மீண்டும் பெப்ரவரி மாதம் கூடி ஆராய முடியும்.

உபகுழுக்களின் அறிக்கைகள் சகலவற்றையும் மக்களைச் சென்றடையும் வகையில் மதஸ்தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்குச் செல்லும் வகையில் விநியோகிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளேன். இணையத்தளத்தில் தரவேற்றினால் சகலரும் இதனைப்பார்வையிட முடியும். நாம் தயாரிப்பது எமது அரசியலமைப்பு அல்ல. விசேடமாக விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி அதிகாரங்கள் எங்கு செல்வது என்பதை மக்கள் இறுதியில் தீர்மானிக்க முடியும். 13, சர்வானந்தன் வழக்கு முடிவுகளிலிருந்து விலகப்போவதில்லை. அரசியலமைப்பானது நாட்டின் பெரும்பான்மை மக்களும், சிங்கள மக்களும் அனுமதிக்க வேண்டும் என்றார்.

அரசியலமைப்பு பேரவையின் வழி நடத்தும் குழுவினால் நியமிக்கப்பட்ட ஆறு உபகுழுக்களினதும் அறிக்கைகைள் ஆராயப்பட்டு எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி அரசியலமைப்பு மீண்டும் கூடவுள்ளதோடு வழிநடத்தும் குழுவின் இடைக்கால அறிக்கை வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2016-11-20#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.