Jump to content

'இசை மேதை' பாலமுரளி கிருஷ்ணா காலமானார்


Recommended Posts

'இசை மேதை' பாலமுரளி கிருஷ்ணா காலமானார்

 

bala_17224.jpg

பிரபல கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்குக்கு வயது 86.

சென்னை ஆர்.கே.சாலையில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது. தேசிய விருதுகள், பத்ம விபூஷண், செவாலியே, சங்கீத கலாநிதி உட்பட பல விருதுகளை வென்றவர் இவர். திருவிளையாடல் படத்தில் வரும் 'ஒரு நாள் போதுமா' என்ற பாடல் இவரை பலரிடத்திலும் கொண்டு போய் சேர்த்தது.

கர்நாடக இசையுலகில் தனக்கென ஒரு இடம் கொண்டு சாம்ராஜ்ஜியம் நடத்தியவர் இவர். நடிகர் கமல்ஹாசன் இவரை பற்றி குறிப்பிடும்போது 'என் இசை குரு' என்பார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றவர் இவர்.

http://www.vikatan.com/news/tamilnadu/73159-great-carnatic-singer-balamurali-krishna-passes-away.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் , அண்ணாரின் ஆத்மா சாந்தியடைவதாக....!

Link to comment
Share on other sites

பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல்

கர்நாடக இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

 
 
பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல்
 
சென்னை:

கர்நாடக இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:-

பிரபல கர்நாடக இசை விற்பன்னரும் திரைப்பட பின்னணிப் பாடகருமான டாக்டர் எம். பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் இன்று (22.11.2016) உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.

தனது ஆறாவது வயதில் இசைப் பயணத்தை தொடங்கிய டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா அவர்கள், கஞ்சிரா, மிருதங்கம், வயலின் போன்ற இசைக் கருவிகளை வாசிப்பதிலும் வல்லவராக திகழ்ந்தார். கர்நாடக இசையை முறையாக கற்று, தனது எட்டாவது வயதில் முரளிகிருஷ்ணா என்ற பெயருடன் முழுமையான இசைக் கச்சேரியை நடத்தி தன்னுடைய இசைத் திறமையை வெளிப்படுத்தியதன் காரணமாக அன்று முதல் "பால" என்ற அடைமொழியுடன் பால முரளிகிருஷ்ணா என்று அழைக்கப்பட்டார்.

ஸ்ரீ பத்ராசலம் ராமதாஸ் மற்றும் ஸ்ரீ அன்னமாச்சார்யா கீர்த்தனைகளை பிரபலப்படுத்தியப் பெருமை இவருக்கு உண்டு.  வெளிநாடுகள் பலவற்றிற்கும் சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்திய டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா அவர்கள், தன்னுடைய தாய் மொழியான தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், இந்தி, சமஸ்கிருதம், கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார். கலை மற்றும் பண்பாட்டை மேம்படுத்தும் விதமாக, விரிவான இசை ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், எம்கேபி டிரஸ்ட் என்ற பெயரில் ஓர் அறக்கட்டளையை நிறுவியவர் டாக்டர் பால முரளிகிருஷ்ணா அவர்கள். இசையில் பல்வேறு ஆராய்ச்சிகளை புரிந்தவர் டாக்டர் பால முரளிகிருஷ்ணா அவர்கள்.

டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் திரைத்துறையிலும் காலடி பதித்து, பல திரைப்படங்களுக்குப் பின்னணி பாடியதோடு, பல்வேறு மொழிகளில் 400 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். திருவிளையாடல் திரைப்படத்தில் “ஒரு நாள் போதுமா, இன்று ஒரு நாள் போதுமா....”, கவிக்குயில் திரைப்படத்தில் “சின்னக் கண்ணன் அழைக்கிறான்....”, நூல்வேலி திரைப்படத்தில் “மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே...” போன்ற அவர் பாடிய பாடல்கள் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்த அமரத்துவம் வாய்யத பாடல்கள் ஆகும்.

"பக்த பிரகலாதா" என்ற திரைப்படம் மூலம் நாரதராக நடித்த டாக்டர் பால முரளிகிருஷ்ணா அவர்கள் பல்வேறு படங்களில் தன்னுடைய நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது, சிறந்த இசையமைப்பாளருக்காக தேசிய விருது, சுவாதித் திருநாள் விருது, சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி, சங்கீத கலாசாரதி, செவாலியே விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் என பல்வேறு விருதுகளுக்கும், பட்டங்களுக்கும் சொந்தக்காரர் டாக்டர் பால முரளிகிருஷ்ணா அவர்கள்.

டாக்டர் பால முரளிகிருஷ்ணாவின் 75-வது பிறந்த நாள் விழா மற்றும் செவாலியே விருது பெற்றதற்கான பாராட்டு விழா 2005 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற போது அந்த விழாவில் நான் கலந்து கொண்டு அவரை வாழ்த்திப் பேசியதும், அப்போது எனக்காக "ஜெய ஜெய லலிதே" என்ற ராகத்தை அவர்கள் அர்ப்பணித்ததும், அதே விழாவில் தமிழ்நாடு அரசின் சார்பில் "கந்தர்வ கான சாம்ராட்" என்ற பட்டத்தை நான் வழங்கியதும் இன்னும் என் மனதில் பசுமையாக உள்ளது.

இசைத் துறையில் அளப்பரிய பணி ஆற்றிய டாக்டர் பால முரளிகிருஷ்ணா அவர்கள் மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்கு சென்று விட்டார் என்பது கர்நாடக இசைக் கலைஞர்களுக்கும், இசைத் துறையினருக்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகப் பெருமக்களுக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கும் மிகப் பெரிய இழப்பு. இந்த இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது.  அவருடைய இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது.

டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இசை கலைஞர்களுக்கும், ரசிகப் பெருமக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2016/11/22201344/1052224/Jayalalithaa-condoles-Balamurali-Krishna-death.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பாடகர்.
ஆத்மா சாந்தியடையட்டும்.

Link to comment
Share on other sites

'மெளனத்தில் விளையாடி'
'சின்னக் கண்ணனை' அழைத்து
'தங்க ரதத்தினை வீதி'யில் உலா வர வைத்து
'ஒரு நாள் போதுமா' தன் இனிய குரலை கேட்க என்று பாடி
'அன்பாலே எம் வீட்டை அழகாக்கி' ய ...
அருமையான பாடகர் பாலமுரளி கிருஸ்ணா அவர்களுக்கு
என் கண்ணீர் அஞ்சலி

அவர் பாடலை ரசிப்பதை போன்றே அவரது குழந்தை தனமான முகத்தையும் அதில் குறும்பு கூத்தாடும் விழிகளையும் எல்லாவற்றையும் விட தலைக் கனம் அற்ற அவர் பாவனைகளையும் ரசித்து இருக்கின்றேன்.

என் நினைவு இருக்கும் வரை அவர் பாடல்கள் எனக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கும்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான... குரல் வளம் கொண்டவர். 
அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கின்றேன்.

Link to comment
Share on other sites

‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ #பொக்கிஷ பதிவு

 

 


சென்னை, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள மியூஸிக் அகாடமிக்கு அருகிலேயே, இன்னொரு மியூஸிக் அகாடமி உண்டு.  அந்த அகாடமியை, இசைத் துறையின் பல்கலைக் கழகம் என்றும் சொல்லலாம். சங்கீத ஜாம்பவான் என்றும் பெருமைபட விவரிக்கலாம். அந்த இசைமேதை... டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா.
‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ என்று இவர் பாடி அழைத்தால் போதும்... அந்தக் கண்ணனே ஓடி வந்துவிடுவான். அவரின் குரலும் அதில் இருந்து வெவ்வேறு விதமாக வெளிப்படுகிற குழைவும், நெகிழ்வும் இசை ரசிகர்களுக்கு பெரு விருந்தாகவும் அருமருந்தாகவும் திகழும் என்பதில் சந்தேகமே இல்லை. 
காலமெல்லாம் இசையால் நம்மையும் இறைவனையும் தன்வசப்படுத்தியவர் இன்று இறைவன் வசப்பட்டுவிட்டார்.  சக்தி விகடன் வாசகர்கள் பங்கேற்கும் சக்தி சங்கமம் நிகழ்ச்சிக்காக அந்த இசைமேதையுடன் நடத்திய கலந்துரையாடலின் சில பகுதிகளை அவருடைய நினைவைப் போற்றும் வகையில் இங்கே உங்களுக்காக...

BaLAMURALIKRIS_18354_21365.jpg


மூன்று தலைமுறைக்கும் மேலாக கர்னாடக சங்கீதத்தில் ஒரு ராஜாங்கமே நடத்திவரும் மேதையைப் பார்க்கப் போகிறோம் என்கிற லேசான பதற்றம் ப்ளஸ் பயத்துடனும் வந்திருந்தனர், வாசகர்கள்.


‘‘நீங்க எல்லாரும் வந்தது ரொம்ப சந்தோஷம். வாங்கோ, வாங்கோ!’’ என்று பளீர் புன்னகையும், வாஞ்சையான பார்வையுமாக வரவேற்றார் பாலமுரளி கிருஷ்ணா.


‘’நீங்க எல்லாரும் பாடுவேளா? பாட்டுன்னா, கச்சேரி பண்றதையெல்லாம் சொல்லலே! சாதாரணமா பாடுவீங்களானு கேட்டேன். எல்லாரும் பாடுங்கோ. பாட்டு, ஆத்மாவிலேருந்து வர்ற விஷயம். அதனாலதான் ஒரு பாட்டு, நம்மளை உற்சாகமாக்கிடுது. மொத்தக் கவலையையும் போக்கிடுது’’ என்றார், சிரித்துக் கொண்டே!
ஒரு சின்ன அமைதி. அந்த அமைதி, கேள்விகள் கேட்க வாசகர்களை தயார் படுத்துவதுபோல அமைந்தது. அதையடுத்து வாசகர்கள் மெள்ள கேள்விகளைக் கேட்கத் துவங்கினார்கள்.

unnamed_21460.jpg


 ‘‘உங்களுக்குள் இருந்த இசை ஞானத்தை முதலில் அறிந்தவர் யார்?’’ என்று வாசகி சுகன்யா உரையாடலைத் தொடங்கி வைத்தார்.
 ‘‘எல்லாம் பகவானின் அருள். இதோ... இந்த நிமிஷம் வரைக்கும் குரல் பயிற்சி எடுத்துக்கிட்டதில்லை. சங்கீதம் பெரிசா தெரியாது. கச்சேரிக்கு முன்னாடி, இப்படி இப்படில்லாம் பாடணும்னு எந்தத் திட்டமிடலும் வெச்சுக்கறது இல்லை. இது, தெய்வ சங்கல்பம். இதைப் பெருமையாவோ தன்னடக்கமாவோ சொல்லிக்கலை. நிஜம் இதுதான்.
ஏழு வயசுல கச்சேரி பண்ண ஆரம்பிச்சேன். பாருபள்ளி ராமகிருஷ்ணய்ய பந்துலுதான் என்னோட குருநாதர். அவர்தான் எனக்கு என்னெல்லாம் வரும், எங்கிட்டேருந்து எதெல்லாம் வெளிக் கொண்டுவர முடியும்னு பயிற்சி கொடுத்து உருவாக்கினார். என் அப்பா பட்டாபிராமய்யா மிகப்பெரிய புல்லாங்குழல் வித்வான். அம்மா பிரமாதமா வீணை வாசிப்பாங்க. தாத்தாவும் இசைக்கலைஞர்தான். பாரம்பரியம் மிக்க ஓர் இசைக் குடும்பத்துலேருந்து வந்ததுகூட, என் இந்த வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் காரணமா இருக்கலாம்.’’


 ‘‘இசைத் துறை மட்டும் இல்லாம, சினிமாலயும் நடிச்சிருக்கீங்க. பக்த பிரதலாதன் படத்துல நாரதரா நடிச்சதுக்கு நிறையப் பாராட்டுக்கள் குவிஞ்சுதாமே..?’’ என்று வாசகி சுபஸ்ரீ கேட்டார்.
 ‘’நாரதர் வேஷத்துக்குப் பாராட்டுக்கள் கிடைச்சது இருக்கட்டும். ஆனா, அதுக்குப் பிறகு சான்ஸ் ஏதும் வரலியே! தவிர, அடுத்தடுத்தும் நாரதர் மாதிரியான கேரக்டரே வந்துச்சு. நான் வேணாம்னுட்டேன். ஏன்னா, நாரதருக்கு ஜோடி கிடையாது. ஹீரோயின் இல்லாம எதுக்காக  நடிக்கணும்னு விட்டுட்டேன். சான்ஸ் வேற கிடைக்கலியா... நல்லதாப் போச்சுனு  பேசாம இருந்துட்டேன்’’ என்று வெடிச்சிரிப்பு சிரித்தார் பாலமுரளி கிருஷ்ணா. அவருடன் சேர்ந்து வாசகர்களும் பலமாகச் சிரித்தார்கள்..


 ‘’நீங்கள் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறீர் கள். அதில் உங்களுக்கு மிகவும் பிடித்தது என்று எதைச் சொல்வீர்கள்?’’ என்று வாசகர் நல்லசிவம் கேட்க...
‘’மன்னிக்கணும். பிடிக்காத விஷயங்களை நான் செய்யறதே இல்லை. ஒரு விஷயத்தை பிடிச்சுப் பண்ணணும். மனசு லயிச்சுப் பண்ணணும். பிடிச்சும் லயிச்சும் பண்ற விஷயங்கள் நல்ல விதமாத்தான் வெளிப்படும்னு நம்பறேன்!’’ என்று உறுதியான பதில் வந்தது பாலமுரளிகிருஷ்ணாவிடம் இருந்து.


 ‘’கற்றுக் கொடுத்த குருவின் பெயரைக் காப்பாற்றிவிட்டதாக முதன்முதலில் எப்போது உணர்ந்தீர்கள். அவருக்கு எதைச் சமர்ப்பிக்க விரும்புகிறீர்கள்?’’ - என்று வாசகி சாருலதா தன் கேள்வியை முன்வைத்தார்.
‘’என் குருநாதர், வருடாவருடம் அவருடைய குருவுக்கு ஆராதனை விழா நடத்துவார். அந்த விழாவில் என்னையும் பாட வைச்சார். எனக்கு அடுத்தாப்ல, முசுனூரி சூரிய நாராயண மூர்த்திங்கறவரோட, கதா காலட்சேபம் இருந்துச்சு. மிகப்பிரமாதமா கதை சொல்வார். அதைக் கேக்கறதுக்கு ஆயிரக் கணக்கில் மக்கள் கூடுவாங்க. அவருக்கு முன்னாடி என்னைப் பாட வைச்சா, அந்தக் கூட்டம் என் பாட்டையும் கேக்கும்னு யோசிச்சு, நேரம் ஒதுக்கினாங்க. 8 மணிக்கு ஆரம்பிச்சு, 9 மணிக்கு முடிக்கணும். ஆனா, பாட்டு பாட ஆரம்பிச்சதும் நேரம் போனதே தெரியலை எனக்கு. பத்தரை மணியைத் தாண்டியும் பாடினேன். அப்புறம் குருநாதர் வந்து, ‘போதும்டா! முடிச்சுக்கோ’ன்னார். மேடைக்குப் பின்பக்கம் என்னை கூட்டிட்டுப் போய் திருஷ்டி சுத்திப் போட்டார். கட்டியணைச்சுக் கண்ணீர் விட்டார். இதுதான் குருவின் பெயரைக் காப்பாத்தறதுன்னு நினைக்கிறேன். தவிர, எல்லாமே குருவுக்கு சமர்ப்பணம். இந்த ஞானம், புகழ், கௌரவம் எல்லாத்தையுமே அவருக்கு சமர்ப்பணம் செய்றேன்.

unnamed%20%281%29_21034.jpg


என்னோட குரு, ஆல் இண்டியா ரேடியோல டாப் ஆர்ட்டிஸ்ட்! நான் ஏ கிரேடு. குருவுக்கு வெள்ளிக்கிழமை பாட வாய்ப்பு கிடைக்கும். எனக்கு ஞாயித்துக் கிழமை கிடைக்கும். இதுக்காக ரெண்டு பேரும் வியாழக்கிழமை சாயந்திரம் சென்னைக்குக் கிளம்புவோம். ரயில்ல அஞ்சு ரூபா டிக்கெட். குருவோட சகோதரர் மயிலாப்பூர் லஸ் பக்கத்துல இருந்தார். அவரைப் பார்த்துட்டு ரேடியோ ஸ்டேஷனுக்குப் போவோம். வெள்ளிக் கிழமை குருநாதர் பாடுவார். அப்புறம் சனிக் கிழமை ரெஸ்ட். ஞாயித்துக்கிழமை நான் பாடுவேன். அப்புறம் கிளம்பி ஊருக்கு வருவோம். அப்பா என் குருநாதரா இருந்தார். அதேபோல குருநாதரும் அப்பா மாதிரியே என்னைப் பார்த்துப் பார்த்து வளர்த்தார்’’ என்று பழைய நினைவுகளில் மூழ்கித் திரும்பினார்.

 


‘’உங்களின் இஷ்ட தெய்வம் எந்தக் கடவுள்னு தெரிஞ்சுக்கலாமா சார்?’’ - என்று வாசகி புவனேஸ்வரி கேட்டார்.
‘’நமக்கு இஷ்டமான தெய்வத்தை தேர்ந்தெடுக்கறதா  அல்லது தெய்வத்துக்கு இஷ்டமா நாம இருக்கறதா... இதுல எது முக்கியம்? கடவுளுக்கு இஷ்டமா நாம நடந்துக்கணும். அது இசைத் துறையாகட்டும், வேற துறையாகட்டும். எதுவா இருந்தாலும் சரி... வாழ்க்கையை அர்த்தம் உள்ளதா மாத்திக்கணும். எல்லாருக்கும் உபகாரம் பண்ணிண்டு, ஒருத்தருக்கும் சின்ன உபத்திரவம்கூட பண்ணாம, வாழ்ந்தா... கடவுளுக்கு இஷ்டமானவங்களா நாம ஆகிடலாம். ஒவ்வொரு மனுஷாளுக்கும் இதுதான் அவசியமும்கூட!  
மத்தபடி என் இஷ்ட தெய்வம்னு நீங்க கேட்டதால சொல்றேன். அனுமார்தான் என் இஷ்ட தெய்வம். சின்ன வயசுலேருந்து வந்த பழக்கம் இது. எந்தவொரு செயலா இருந்தாலும் சரி, சட்டுன்னு அனுமார்கிட்ட ஒரு வேண்டுதல் வைச்சிருவேன். அவரோட திருநாமத்தை அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பேன். ஸ்ரீஅனுமன் மேல அலாதி பிரியமும் பக்தியும் உண்டு எனக்கு’’ என்றார்.


‘’இந்தக் கால இசையைக் கேட்கிறீர்களா? கர்னாடக சங்கீதத்துடன் மேற்கத்திய இசையும் கலப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’ என்று வாசகி பத்மலதா கேட்டார்.
‘’ஓய்வு நேரங்கள்ல கேப்பேன். ஆனா, ஓய்வுக்குன்னெல்லாம் நேரம் ஒதுக்கறதே இல்லை. எப்பவும் ஏதாவது பண்ணிக்கிட்டே இருக்கணும். அதான் என் விருப்பம். தவிர, கர்னாடக சங்கீதம் மேற்கத்திய சங்கீதம்னெல்லாம் தனித் தனியா இருக்கிறதா நினைக்கலை. காதுக்கு இனிமையான சங்கீதம் எதுவா இருந்தாலும், அது கர்னாடக சங்கீதமே!’’ என்றார் அழுத்தம் திருத்தமாக.


‘’உங்களிடம் பயிற்சி பெற்றவர்கள் நிறையப் பேர் உண்டு. குறிப்பாக, கமல்ஹாசன்கூட உங்களிடம் சங்கீதம் கற்றுக் கொண்டிருக்கிறாராமே...’’ - என்று வாசகர் ஸ்ரீநிவாசன் கேட்க...
‘’கமல், மகா கலைஞன். கூர்மையான புத்திசாலித்தனம் உண்டு. எதையும் சட்டுன்னு உள்வாங்கிப்பார். அவ்வளவு ஏன்... இப்போ நம்ம தமிழ்நாட்டை ஆட்சி செஞ்சிட்டிருக்கிற ஜெயலலிதா கூட எங்கிட்ட பாட்டு கத்துட்டிருக் காங்க. இசைல பெரிய ஆர்வம் உண்டு அவங்களுக்கு. அவங்க குரலும் பாடுறதுக்கு அத்தனை தோதா இருக்கும். அவங்க கச்சேரிலயோ இல்ல சினிமாலயோ இன்னும் நிறையப் பாடியிருக்கலாம். ஏன் பாடலைனு தெரியலை. ஆனா, இப்ப கமலும் சரி, ஜெயலலிதாவும் சரி... என்னை அடியோடு மறந்துட்டாங்கன்னுதான் சொல்லணும்’’ என்று வெள்ளந்தியாகச் சொல்லிப் புன்னகைத்தார் பாலமுரளி கிருஷ்ணா.


‘’மேடையில் கச்சேரி பண்ணும்போது கையில், பாக்கெட்டில் அல்லது பக்கத்தில் ஏதேனும் ஸ்வாமி படம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது போன்ற சென்டிமென்ட் உண்டா, உங்களுக்கு?’’ என்று வாசகி லலிதா கேட்டார்.
‘’அப்படியெல்லாம் எந்த சென்டி மென்ட்டும் கிடையாது. இந்தக் கலர், இந்த ஸ்வாமி படம், இப்படி திசை பார்த்து உட்கார்றதுன்னு எந்தப் பழக்கமும் கிடையாது. பகவான் எப்பவும் எல்லா பக்கத்திலயும் பக்கத் துணையா இருக்கார். பக்க வாத்தியக்கார கலைஞர்களும் பக்கத் துணையா இருக்காங்க. எதிர்ல இருக்கற ரசிகர்களும் நம்ம மேல மிகுந்த வாத்ஸல்யத்தோட, பிரியத்தோட இருக்காங்க. இவங்க எல்லாரையும் திருப்திப்படுத்தணும்; சந்தோஷப் படுத்தணும்; பெருமைப்படுத்தணும். அவ்வளவுதான் நினைச்சுப்பேன்!
திருவையாறில் ஒரு ஆராதனை விழா. அப்ப எனக்கு 11 வயசு. அங்கே விழாவுல, முத்தையா பாகவதர் மடியில உக்கார்ந்திருந்தேன். ஸ்வாமிக்கு அபிஷேகம் நடந்துட்டிருந்துது. யாரோ ஒருத்தங்க பாடிட்டிருந்தாங்க. அவர் பாடி முடிச்சதும், ‘நீ பாடு... நீ பாடு...’னு முத்தையா பாகவதர் சொல்ல, நான் பாட ஆரம்பிச்சேன். மொத்தக் கூட்டமும் ‘யார் பாடுறது?’னு சுத்திச் சுத்திப் பார்க்க ஆரம்பிச்சுது. கடைசியாதான், முத்தையா பாகவதர் மடியில உக்கார்ந்திண்டிருக்கிற பய பாடுறான்னு தெரிஞ்சுது அவங்களுக்கு.
பெங்களூரு நாகரத்தினம்மாங்கறவங்க, ‘நாளைக் காலைல இவன் பாடட்டும். நான் என் டைமை இவனுக்காக விட்டுத் தரேன்’னு சொன்னாங்க. மறுநாள், மாபெரும் இசைக்கலைஞர்களோட நிகழ்ச்சிகளுக்கு நடுவே பாடினேன். ‘என் நேரத்தையும் பையனுக்கே தரேன்’னு அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் முன்வந்தார். மகாராஜபுரம் விஸ்வநாத அய்யரும் அவர் நேரத்தை எனக்குத் தந்து பாடச் சொன்னார். ஓர் இளம் பாடகன், திருவையாறு கச்சேரில ஒன்றரை மணி நேரம் பாடினது, அதுதான் முதல்முறை. மேடையேறும்போது பல தருணங்கள்ல, 11 வயசுல திருவையாறில மேடையேறின அனுபவம்லாம் சட்டுன்னு நினைவுக்கு வரும். இப்பவும் ஞாபகம் வந்துடுச்சு!’’ என்று சொல்லிப் பூரிக்கிறார் பாலமுரளி கிருஷ்ணா.
பெயருக்கேற்றாற்போலவே, ஒவ்வொரு பதிலிலும் ஒரு குழந்தைத்தனம் கொஞ்சுகிறது டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவிடம். எந்தக் கேள்வி கேட்டாலும், சட்சட்டென்று பதில் சொல்லிவிட்டு, கலகலவெனச் சிரிப்பதில் தான் அவரின் ஆரோக்கியமும் தெளிவும் நிறைந்திருக்கிறதுபோலும்.


 திருவிளையாடல்ல ‘ஒருநாள் போதுமா’ன்னு ஆணவ த்வனியில பாடியிருப் பீங்க. இன்னொரு படத்துல ‘தங்கரதம் வந்தது வீதியிலே’னு குழைஞ்சும் இழைஞ்சும் பாடியிருப்பீங்க. இதுக்காக, என்ன மாதிரியான முயற்சிகள் எடுத்துக் கிட்டீங்க?’’ என்று கேட்டார் வாசகி ராதா சுதர்சனம்.
‘‘இதுக்குப் பெரிசா மாத்திப் பாடணும், முயற்சி எடுத்துப் பாடணும்னெல்லாம் அவசியம் இல்லை. படத்துல அந்தக் கேரக்டரோட குணாதிசயம் என்ன, எந்தச் சூழல்ல இந்தப் பாட்டு வருது, இந்தப் பாட்டின்போது யார் யாரெல்லாம் இருப்பாங்க, பாட்டுக்கு வாயசைக்கிற நடிகர் யாருனு டைரக்டர்கிட்டயும் மியூஸிக் டைரக்டர்கிட்டயும் முழு விவரத்தை யும் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டுப் பாடிட வேண்டியதுதான்!’’


 ‘இந்தக் காலத்தில் சங்கீதம் கற்றுக் கொள்ளும் குழந்தைகளுக்கு உங்களின் அறிவுரை என்ன?’’  இது வாசகர் சேதுராமனின் கேள்வி. 
‘‘அரைகுறையா கத்துக்காதீங்க; முழுசா கத்துக்கோங்க. ஆசைப்பட்டு கத்துக்கோங்க. அப்பா ஆசைப்படுறார், அம்மா விரும்பறானு இல்லாம, நீங்களா விரும்பிக் கத்துக்கணும். சங்கீதத்துல எல்லா நுணுக்கங்களையும் ஈடுபாட்டோட கத்துக்கணும். அந்தக் காலத்துல எல்லாம் இந்த அளவுக்கு வசதிகளோ வாய்ப்புகளோ இல்லை. இங்கேருந்து அங்கே போய் கத்துக்கறதுக்கு, போயிட்டு வர வாகன வசதிகளும் கிடையாது.
இன்னிக்கு எல்லாமே இருக்கு. கத்துக் கொடுக்கறதுக்கும் நிறையப் பேர் இருக்காங்க. போக வர, சாலையும் நல்லாருக்கு. வாகன வசதிகளும் இருக்கு. ரேடியோ, டிவி, மேடை, சபாக்கள்னு நிறைய வாய்ப்புகளும் கிடைக்குது. போட்டிகள் வைக்கிறாங்க. பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்துறாங்க. அதனால, எதைக் கத்துக்கறதா இருந்தாலும், ஆழ்ந்த ஈடுபாட்டோடயும் உத்வேகத்தோடயும் குழந்தைகள் கத்துக்கணும்!’’ என்றார் பாலமுரளி கிருஷ்ணா.


‘‘நீங்களே புதுப்புது ராகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். கீர்த்தனை களை இயற்றியிருக்கிறீர்கள். இதுபற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்’’ என்று வாசகி புவனேஸ்வரி கேள்வி எழுப்பினார்.
‘’இசையில் மொத்தம் 72 மேளகர்த்தாக்கள். ஆனால் அந்த மேளகர்த்தாக்களைப் பற்றி ஒரு சர்ச்சை உண்டு. சம்பூர்ண மேளகர்த்தா, அசம்பூர்ண மேளகர்த்தானு ரெண்டுவிதம். இதுல, அசம்பூர்ண மேளகர்த்தாவை உருவாக்கியவர் வேங்கடபதி. சம்பூர்ண மேளகர்த்தாவுக்கு கோவிந்தாச்சாரி என்பவர்தான் கர்த்தா. தியாகராஜர், சம்பூர்ண விதத்தைத்தான் கையாண்டார். எனக்கும் சம்பூர்ணம்தான் பிடிக்கும்.
முத்துசாமி தீட்சிதர், அசம்பூர்ண மேளகர்த்தாவை போற்றினார். எந்த ராகத்துக்கும் ஒரு பாடல் இருக்கணும். அப்போதுதான், அந்தப் பாட்டைப் பாடும்போதுதான் ராகம் புரியும். ஒரு ராகத்துக்கு பலப்பல பாட்டுகள் இருந்தா, இன்னும் விசேஷம். ஆனா, ஒரு ராகத்துக்கு ஒரேயொரு கீர்த்தனை மட்டுமே இருந்தா, அதை அடிக்கடி பாடணும். அப்படிப் பாடினாத்தான், அந்த அபூர்வ ராகம் வெளியே தெரியவரும். நான் கச்சேரிகள்ல, ரெண்டு பாட்டுப் பாடிட்டு, ஒரு அபூர்வ ராகம் பாடுறது வழக்கம்.
கவிதை, பாடல் எழுதறதை முறையாக் கத்துக்கலை நான். சம்ஸ்கிருதம் தெரியாது எனக்கு. பாடுவேனே தவிர, எழுதத் தெரியாது. திடீர்னு தோணுச்சு. குருநாதர்கிட்ட பாடிக்காட்டினேன்.
‘அற்புதம்... ரொம்ப நன்னா இருக்கு. நிறையப் பண்ணு...’னு ஆசீர்வாதம் பண்ணினார். அப்புறம் குருவை வைச்சே கீர்த்தனை தோணுச்சு. அதுக்கு நிறைய கீர்த்தனைகள் எழுதினேன். எல்லாமே இறையருள். குரு கிருபை.
அப்பய்ய சாஸ்திரி தெரியும்தானே! ஒருநாள், காலைல நாலு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டினார். அப்ப, சின்னவயசுதான் எனக்கு. கதவைத் திறந்து பார்த்ததும், என் அப்பா ஆடிப்போயிட்டார். ‘எழுப்பு... இன்னும் பத்து நிமிஷத்துல உன் பையன் என்னோட வரணும்’னார் சாஸ்திரி. எழுந்து, குளிச்சு நாங்க ரெண்டு பேரும் ரெடியானதும்... ‘நீ வரவேணாம். அவன் மட்டும் வந்தாப் போதும்’னார்.
சாஸ்திரிகளை நிமிர்ந்து என்னால பார்க்கவே முடியலை. அவர் கண்கள்ல அப்படியொரு ஒளி. தேஜஸ். பயமா இருந்துச்சு. ஏதோ மந்திர சக்திக்குக் கட்டுப்பட்டது மாதிரி அவரோடயே போனேன்.  
அவர் வீட்டு பூஜையறையில் என்னை உட்கார வெச்சு. ‘’இங்கே பார். சில விஷயங்களை உங்கிட்ட சொல்லச் சொல்லி, அம்பாள் உத்தரவு. அதைச் சொல்லத்தான் இங்க கூட்டிட்டு வந்தேன். கவிதைங்கறது ஒரு அற்புதமான படைப்பு. அதுக்கு சில விதிமுறைகள் இருக்கு. அதுவொரு அறிவியல். சில முக்கியக் குறிப்புகள் உனக்குத் தெரியணும். கவிதைக்கு ஒரு கனம் அவசியம். மீட்டர் ரொம்பவே முக்கியம். அதெல்லாம் இப்படித்தான் இருக்கணும்’னு சொல்லிட்டு, மடை திறந்த வெள்ளம் போல, சங்கீதம் தொடர்பான குறிப்புகளை சொல்லிக்கிட்டே போனார். அப்பய்ய சாஸ்திரி சொன்ன எல்லாமே அப்படியே என் மனசுல பதிஞ்சிடுச்சு.
வீட்டுக்கு வந்து, எழுதின கீர்த்தனைகளையும் சாஸ்திரி சொன்ன குறிப்புகளையும் வைச்சுப் பார்த்தப்ப, ஒவ்வொரு கீர்த்தனையும் கனகச்சிதமா அமைஞ்சிருந்து. நான் கரகரன்னு அழுதுட்டேன். எல்லாமே தெய்வ சங்கல்பம். வேற என்ன சொல்றது... சொல்லுங்க’’ என்றபோது, நெகிழ்ந்தும் வியந்தும் நின்றது வாசகர் கூட்டம்.


‘‘இப்படித்தான் கச்சேரி பண்ணணும். பூஜை இப்படித்தான் செய்யணும் என்றெல்லாம் உங்களுக்கு நீங்களே கட்டுப்பாடுகள் வைத்துக் கொண்டிருக் கிறீர்களா?’’ என்று வாசகி உமா கேட்டார்.

 


‘’பூஜையாகட்டும், கச்சேரியாகட்டும்... இப்படிக்கட்டுப்பாடுகள் வெச்சுக்கிட்டா, அப்புறம் மனசும் புத்தியும் அந்தக் கட்டுப்பாட்டையே பிடிச்சுண்டு நிக்கும். மனசு ஒரு திசை. புத்தி இன்னொரு திசை. இது ரெண்டும் இப்படிப் போயாச்சுன்னா, அப்புறம் பூஜைலயும் ஆத்மார்த்தம் இருக்காது. கச்சேரியை யும் லயிச்சுப் பண்ணமுடியாது.
அதனால, பூஜைகளை எப்ப செய்யணும்னு தோணுதோ, அப்ப ஆத்மார்த்தமா செய்றவன் நான். அதேபோல கச்சேரி புக்காகி, மேடை ஏறிட்டேன்னா, அந்த நாலஞ்சு மணி நேரமும் பாட்டுலதான் முழுக்கவனமும் இருக்கும்.
அதேபோல, ‘கச்சேரி அன்னிக்கி மௌன விரதம் இருந்து குரலை பாதுகாப்பீங்களா? ஐஸ்க்ரீம் அறவே தொடமாட்டீங்களா?’ன்னெல்லாம் கேப்பாங்க சிலபேர். ‘மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே’னு பாடியிருக்கேன். ஆனா, கச்சேரிக்கும் மௌனமா இருக்கறதுக்கும் சம்பந்தமே இல்லை. ஐஸ்க்ரீமை ரொம்ப விரும்பிச் சாப்பிடுவேன். சாயந்திரம் கச்சேரின்னா, ஒரு மூணு மணி வாக்குல, சுடச்சுட பஜ்ஜி சாப்பிட்டு, ஸ்ட்ராங்கா ஒரு காபி குடிச்சிட்டு, அப்புறம் ஒரு ஐஸ்க்ரீம்கூட சாப்பிட்டுவிட்டு, மேடையேறியிருக்கேன்.
இந்தப் பாட்டு, இசை, ஞானம், கீர்த்தனை, பெயர், புகழ் எல்லாமே பகவான் கொடுத்த பெருங்கருணை. கொடை. அப்படியிருக்கும்போது, குரல் வளத்தோட இருக்கறதுக்கு நாம என்ன பண்ணினாலும் ஒண்ணும் ஆகப்போறதில்லை. தெய்வக் கணக்குக்கு முன்னாடி, நீங்க என்ன.... நான் என்ன... நாமெல்லாம் எம்மாத்திரம்?
இசையுலகத்துக்கும் இறைவனுக்கும் எப்பவும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன். அவ்ளோதான்...’’ என்று ஒரு குழந்தையைப் போல் கபடமின்றிச் சிரிக்கிறார் பாலமுரளி கிருஷ்ணா.
அந்தச் சிரிப்பே ஒரு ஆலாபனைதான். சங்கீதம்தான்!
 

http://www.vikatan.com/news/cinema/73182-memories-of-balamuralikrishna.art

Link to comment
Share on other sites

"இது குழந்தைக்கான ஆசிர்வாதம்!'' பாலமுரளிகிருஷ்ணா பாடிய கடைசி தமிழ்ப் பாடலின் இசையமைப்பாளர் ஜனனி நெகிழ்ச்சி!

 

பாலமுரளி கிருஷ்ணா


இசை உலகில் நிகரில்லாத ஓர் ஆளுமை பாலமுரளி கிருஷ்ணா. அவரின் மறைவு ஈடுசெய்யவியலாதது. கர்நாடக சங்கீதம் மட்டுமன்றி திரையிசைப் பாடல்கள் வழியாகவும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தவர். இவர் பாடிய நூற்றுக்கணக்கான திரையிசைப் பாடல்கள் இசை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. கே.வி.மகாதேவன், இளையராஜா உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியவர் தமிழில் தன் இறுதி பாடலை, தன்னிடம் இசை பயின்ற சிஷ்யை எஸ்.ஜெ.ஜனனியின் இசையில் பாடியுள்ளார்.

01_20483.jpg

தமிழ்த்திரை நிறுவனத் தயாரிப்பில், நந்தன் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் 'பிரபா' படத்தில் 'பூவே பேசும் பூவே...' எனும் பாடலை ஜனனியுடன் இணைந்து பாடியிருக்கிறார் பாலமுரளிகிருஷ்ணா. குருவுடன் பணியாற்றிய அனுபவங்களை எஸ்.ஜெ.ஜனனியிடம் கேட்டோம்.

"எத்தனை வருடங்களாக பாலமுரளி கிருஷ்ணாவிடம் இசை பயின்றீர்கள்?"

"பத்து வருடங்களுக்கு மேலாக குருவிடம் இசைக் கற்றேன். பாடலின் வரிகளை அவர் பாடும்போது கவனத்துடன் கேட்டாலே போதும், நாமும் சிறப்பாக பாடிவிட முடியும். அந்த ஆற்றல் அவரின் குரலுக்கு உண்டு. அவர் எனக்கு இசைக்கான குரு மட்டுமல்ல. வாழ்க்கைகான வழிகாட்டி. என்னை குழந்தையைப் போல நடத்துவார்."

"உங்கள் இசையில் அவரைப் பாட வைக்கும் எண்ணம் எப்போது தோன்றியது?"

"பிரபா படத்திற்கான இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தத்தை அவரிடம் கூறியபோது, மகிழ்ச்சியோடு வாழ்த்தினார். பிறகு, பூவே பேசும் பூவே பாடலின் மெட்டு உருவாகும்போதே, இதை குரு பாடினால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன். உடனே குருவிடமும் விருப்பத்தைக் கூறினேன்"

"உடனே சம்மதித்துவிட்டாரா?"

"என் வளர்ச்சியில் அவருக்கு அவ்வளவு அக்கரையுண்டு. அதனால் சிறிதும் தயக்கமின்றி சம்மதித்தார். பாடல் ஒலிப்பதிவின்போது, பாடல் வரிகளைப் பாடிக் காட்டி, 'இது சரிதானா... மாற்றம் இருந்தால் தயக்கம் இல்லாமல் சொல்லு' என்று கேட்டார். ஆனால் நான் திருத்தம் சொல்வதற்கு ஏதுமில்லாமல் மிக அருமையாக பாடிக்கொடுத்தார்"

பூவே பேசும் பூவே பாடலை இந்த இணைப்பில் 21:45 நிமிடங்களிலிருந்து கேட்கலாம்.

 

 

"பாடலைப் பற்றி என்ன சொன்னார்?"

"'ரொம்ப ரொம்ப நல்ல ட்யூன்மா... எளிதில் ஈர்க்கும் விதத்தில் இருக்கு. நிச்சயம் எல்லோரையும் வசிகரிக்கும். பெரிய அளவில் மக்களிடையே இந்தப் பாட்டு செல்லும். உனக்கும் நல்ல எதிர்காலம் இருக்கு' என்று சொன்னார். ஒரு குழந்தையின் ஆசையை நிறைவேற்றி தந்த மகிழ்ச்சியுடன் அன்றைக்கு இருந்தார். பிறகு, அவரோடு பயணம் செல்லும்போதெல்லாம் காரில் இந்தப் பாடலைப் போடச் சொல்லி ரசிப்பார். கேட்கும்போதெல்லாம் ' நல்ல ட்யூன்... நல்ல ட்யூன்..' என்பார். இதைவிட எனக்கு பெரிய ஆசிர்வாதம் இருப்பதாக நினைக்கவில்லை"

"அவரின் இழப்பை எப்படி உணர்கிறீர்கள்?"

"என்னிடம் அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை 'எல்லாம் வரும்' என்பதுதான். அதுவே எனக்கு பெரும் நம்பிக்கையை அளிக்கும். குரு பாலமுரளி கிருஷ்ணாவின் இழப்பு எனக்கு மட்டுமல்ல, இசை விரும்புகிற ஒவ்வொருவருக்கும் பேரிழப்புதான். அவரின் இசைக்கு என்றும் அழிவில்லை"

பூவே பேசும் பூவே... பாடலை ஶ்ரீதேவி எழுதியிருக்கிறார். 'இந்தப் பாடலை பாலமுரளி கிருஷ்ணா பாடலை பாடவிருக்கிறார் என இசையமைப்பாளர் ஜனனி கூறியதிலிருந்து அவர் பாடும் கணத்திற்காக காத்திருந்து ரசித்தேன்" என்றார் இயக்குநர் நந்தன்.

http://www.vikatan.com/news/cinema/73179-musician-janani-talks-about-legend-balamuralikrishnas-last-song.art

Link to comment
Share on other sites

5 hours ago, suvy said:

ஆழ்ந்த இரங்கல்கள் , அண்ணாரின் ஆத்மா சாந்தியடைவதாக....!

என்ன செய்யுறது புரியவில்லை என்றால் பிரச்சனை வரும் அதுக்குத்தான் ஒரு லைக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பாடகர்.
ஆத்மா சாந்தியடையட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

 

 

அன்னாரின்  ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பாடகர்.
ஆத்மா சாந்தியடையட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரது ஆத்மா..அந்த நாதங்களின் மூல நாயகனுடன் மீண்டும் இணைந்து கொள்ளட்டும்!

ஆந்த அஞ்சலிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின்  ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் பாலமுரளிகிருஷ்ணாவின் சிறந்த சினிமாப்பாடல்களில் ஒன்று....

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்.

மெளனத்தில் விளையாடும் மனச்சாட்சியே என்ற பாட்டு எப்போதும் கேட்டாலும் சலிக்காமல் இருக்கும்.

Link to comment
Share on other sites

செவி வழியாக சங்கீதம் கற்றுத்தந்த ஆசானுக்கு எனது அஞ்சலிகள்

சங்கீதம் நாலாம் வகுப்பு வரை படித்தேன்

மெளனத்தில் விளையாடி அல்ல, 'மெளனத்தில் விளையாடும் மனச்சாட்சியே',  ரகசிய சுரங்கம் நீ நாடக அரங்கம் நீ சோதனை களமல்லவா நெஞ்சே துன்பத்தின் தாயல்லவா ... , முத்தான வரிகள்.

நல்லதொரு பாடகர் என்று சொல்லமாட்டேன் எனக்கதற்கு தகுதியில்லை

உனை நீ அறி

Link to comment
Share on other sites

எந்தக் கண்ணன் அழைத்தானோ?

 

 
prabhu11_3091036f.jpg
 
 

எட்டு வயதில் விஜயவாடாவில் தமது முதல் கச்சேரியை நிகழ்த்திய சிறுவன் முரளி கிருஷ்ணாவின் அசாத்திய இசை நுட்பத்தில் திளைத்த ஹரிகதா பாகவதர் எம்.சூரியநாராயண மூர்த்தி, அவரை ‘பாலமுரளி கிருஷ்ணா’ ஆக்கினார். அதன் பிறகு தொடர்ந்து தமது திறமையை வளர்த்தெடுத்து வந்த அற்புத இசை மேதை டாக்டர் எம்.பால முரளி கிருஷ்ணாவின் மறைவு, கர்னாடக இசை உலக வரலாற்றில் முக்கிய சகாப்தத்தின் நிறைவைக் குறிப்பதாகும்.

முதுமையிலும்கூட ஒரு குழந்தை யின் புன்னகை வற்றாதிருக்கும் முகம். குரலோ, மிகவும் தனித் துவமிக்க நாண்களிலிருந்து புறப் பட்டு வந்தது போன்ற சிறப் பொலியைப் பெற்றிருக்கும். உடல் மொழியில் தமது திறமையின் ஒளிக்கமாட்டாத கம்பீரமும், இசை ஞானத்தின் ஒளியழகும், கற்பனையின் சாரலும், சவாலுக்கு அழைக்கும் பார்வைப் பொறிகளும் மின்னும் எப்போதும்!

வாய்ப்பாட்டு மட்டுமின்றி இசைக்கருவிகளை வாசிக்கவும் கற்றுக்கொண்ட அவரது தேடல் சில புதிய ராகங்கள், தாள லயங் களையும் உருவாக்கிப் பெருமை சூட வைத்தது. அதே நேரத்தில் சில சர்ச்சைகளையும் எழுப்பியது. வீணை எஸ்.பாலசந்தர், எஸ்.ராம னாதன் போன்ற கலைஞர்கள் ‘புதிதாக எதையும் உருவாக்க வில்லை. அவை ஏற்கெனவே இருந்த ராகங்களே’ என்று வாதிட் டனர். பாலசந்தருக்கும், பால முரளிக்கும் இடையிலான மோதலை ஒரு தொடராகவே மாற்றி வெளியிட்டு வந்தது ஒரு வார இதழ். ஆயினும், சமகால இசை விற்பன்னர்கள் நடுவே அவரது இடம் முக்கியமானதாக இருந்தது. கச்சேரிக்கு நடுவே சிறிய இடைவேளை விடுவதென்ற அவரது செயல்பாடு அக்காலத்தில் புரட்சிகரமாகக் கருதப்பட்டதாம்.

தியாகய்யரின் பஞ்சரத்ன கீர்த்த னைகளாகட்டும், என்றும் வாடாத புகழ்மிக்க ‘நகுமோமு’ ஆகட்டும், பாலமுரளி அவர்களது குரல் இனிமை கொடி கட்டிப் பறக்கும்.

திரை இசை ரசிக உலகத்திலும் பாலமுரளிக்கு என்றும் அழியாத ஓர் இடமுண்டு. பாலையா வேறு, பாலமுரளி வேறு என்று பிரித்துவிட இயலாதபடிக்கு திருவிளையாடலின் சிறப்பு அம்சங்களாகத் திகழும் ‘ஒருநாள் போதுமா’ பாடலுக்கு நிகர் எது! கண்ணதாசனின் அருமையான அந்தப் பாடலை கே.வி.மகாதேவன் ஓர் இசைச் சிற்பமாகவே செதுக்கி இருந்தார். போதையூறி மெல்லப் பரவும் ஆலாபனையிலிருந்து, அதன் பல்லவியில் கூடிக்கொண்டே செல்லும் ஒவ்வொரு சொல்லும் கிளர்ச்சியுற வைக்கும். சரணங் களில் பாடகரைத் தொட நீளும் ரசிகரின் கையைப் பிடித்து உடனி ருத்தி ரசிகரையும் குழைந்து, அதிர்ந்து, மிதந்து, முழங்கி நிமிரவைக்கும் குரல் அது. எந்தெந்த ராகங்களின் பெயர் இடம்பெறுகிறதோ அந்த இடங்கள் அதே ராகத்திலேயே அமைக்கப் பட்ட இசையில், ‘கா..னடா’ என்று பாலமுரளி உருக்கி உருக்கி வார்க்கும் வீச்சு அநாயாசமாக வெளிப்படும். ‘என் பாட்டு தேனடா’ என்று அனுபவித்து நகரும் அடுத்த வரியின் எல்லையில், ‘இசைத் தெய்வம் நானடா!’ என்ற அசத்தல் இடத்தில் அந்தப் பாட்டுத் தேர் நிலைக்கு வந்து நிற்பது கண்ணீர் சொரியவைப்பது.

பி.சுசீலாவுடன் அவர் பாடிய ‘தங்க ரதம் வந்தது’ பாடல், சிருங்கார ரசனையில் தொடுக்கப்பட்டிருந்த மதுவின் கோப்பை. கவிக்குயில் படத்துக்கான அவரது, ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’, காற்று டன் அவர் நடந்த வேக நடையின் உரையாடல் பரிமாற்றம். அதில் சரணத்தில், ‘கண்கள் சொல்கின்ற கவிதை இளவயதில் எத்தனை கோடி’ என்ற இடம் கொண்டாட்டக் களம். அதே பாடலைத் தாமும் தனியே பாடியிருந்த எஸ்.ஜானகி, ‘பாலமுரளி பாடியிருந் தது தெரிந்திருந்தால் நான் பாடி இருக்கவே மாட்டேன்’ என்று சொன்னாராம். இளையராஜாவின் மறக்க முடியாத வரிசையில் முக்கிய இடமொன்றில் இருப்பது இந்தப் பாடல்.

‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் ஆசிரியர் குழுவில் இருக்கும் கரிமெல்லா சுப்பிரமணியன், பாலமுரளி கிருஷ்ணாவின் மாண வர்களில் ஒருவர். பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிடி இதழுக்காக கரிமெல்லா அவரை நேர்காணல் செய்தபோது, தமது குருநாதரைப் பற்றிய பெருமை அந்தப் பார்வையற்ற வரின் விழிகளில் சுடர்ந்ததை விவரிக்க முடியாது. சொந்த சாகித்யங்கள் பல இயற்றிய பாலமுரளி கிருஷ்ணா ஒருமுறை சோவியத் ரஷ்யாவுக்குப் பயணம் சென்றுவிட்டு வந்ததும், ‘கன்னுல பண்டுல ரஷ்யா’ என்று தொடங்கும் தெலுங்குப் பாடல் ஒன்றை எழுதி இருக்கிறார். ‘விசால பாவாலு, சுவிசால பவந்துலு’ என்று செல்லும் அந்தப் பாடல், விசாலப் பார்வையால் மக்களை ஆட்கொண்டு முன்னெ ழுந்த சோவியத் உலகின் உன்னத நாகரிகத்தை வியந்து எழுதப்பட்டிருந்தது என்றார் கரிமெல்லா.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளிலும் திரை இசையில் பாடிய பாலமுரளி, தாமே இசையமைக்கவும் செய்தவர். ஏ.பி.நாகராஜன் இயக்கிய ‘நவரத்தினம்’ படத்தில், எம்ஜிஆருக்கும் குரல் கொடுத்தவர் (‘குருவிக்காரன் பொஞ்சாதி மட்டுமல்ல’ என்கிற ஆங்கில இசைப்பாடல் ஒன்றைப் பாடி அதற்கு ஏற்ற கீர்த்தனை ஒன்றையும் பாடி இருப்பார் ஒரு காட்சிக்காக).

‘ஒருநாள் போதுமா’ பாடல் காட்சியில் நடிக்கும் முன்பு, நடிகர் பாலையா அந்தப் பாடல் ஒலிப் பதிவையும், பொதுவாக பாலமுரளி கிருஷ்ணா பாடும் விதத்தையும் கவனித்துவிட்டு வந்ததாகச் சொல்வார்கள். திரை நிரம்பிய ஒரு பேரவை. இரண்டு பக்கங்களிலும் வண்ண வண்ண உடைகள் அணிந்தபடி விதவிதமான வாத்தி யக்காரர்கள். பின்னே விசிறிக் கொண்டிருந்தபடி முக அசைவில் அசத்திக் கொண்டிருக்கும் உசிலைமணி முதலானவர்களுக்கு நடுவே நாயகமாகக் கம்பீர வடிவில் மீசையை அடிக்கடி நீவிவிட்டுக்கொண்டே ‘ஒருநாள் போதுமா’ என்று பாடுவதாக நடித்தது பாலையாதான் என்றாலும், ‘இசைத் தெய்வம் நானடா’என்ற இடத்தில் சாட்சாத் பாலமுரளி கிருஷ்ணா அங்கே தோன்றிவிடுவதாகப் படும்!

அந்தத் தன்னுணர்வும், துணிவு மிக்க ஞானச் செருக்கும் பெருகி வெளிப்படும் ஒரு காந்தாரக் குரலை ஒரு குழந்தையின் புன்னகை நழுவியோட இசைத்துக்கொண்டே இருந்த மகத்தான மனிதரே இப்போது மறைந்துவிட்டிருக்கிறார், தமது இசை மேதைமைக்கு சாகா வரம் அளித்துவிட்டு!

http://tamil.thehindu.com/opinion/blogs/எந்தக்-கண்ணன்-அழைத்தானோ/article9381675.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
    • ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 
    • இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.  
    • 2013 மார்ச் மாதத்தில் திமுக   விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.