Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

இராணுவ ஆய்வு


Recommended Posts

[size="2"]அண்மையில் இந்தியா தமிழ் நாட்டில் பயங்கர ஆயுதங்கள் செய்வதற்கான பொருட்களுடன் ஈழ தமிழர் உட்பட பலர் கைது செய்யபட்டனர் அந்த கைது எப்படி?? எங்கே?? யரால்?? நடந்தது என்பது பற்றிய ஒரு ஆய்வு . ஆய்பவர் புகள் பெற்ற அரசியல் இராணுவ ஆய்வாளர் உங்கள் ஆட்டுப்பால் அப்பாஸ்.

கடந்த வாரம் தமிழ்நாட்டில் ஆயுதம் கடத்தியதாக சிலர் கைது செய்ய பட்டனர் உண்மையில் நடந்தது என்ன?? தை மாதம் 25 ந்திகதி நள்ளிரவு 12.05 தமிழ்நாடு சி.பி.ஜ தலைமை காரியாலத்திற்கு ஒரு போன் கால். போன் அடிக்கிறது . ஆ`ஹா``ஹா`ஹா......... இகி கி கி....ஆ``ஹா`ஹா`ஹா .......... இ கி கி கி...... என்ன அது போன் அடிக்கின்ற சத்தம் தான் . ரெலி போன் மணியை போல நீங்கள் சிரிக்கும் போது போன் மணி மட்டும் நீங்கள் சிரிப்பதை போல அடிக்காதா??

இப்ப போன் சிரிக்கிற அழுகின்ற ஏன் நீங்கள் ஒப்பாரி வைக்கிறமாதிரி கூட அடிக்கும் . சரி ஆய்விற்கு வருவோம். ரெலி போனை சி்.பி.ஜ அதிகாரி உண்ணி கிருஸ்ண மேனன் போனை எடுக்கிறார்.மறு மனையில் கலோ சி பி ஜ ங்களா??. ஆமா சி பி ஜ இன்ஸ்பெக்ரர் உண்ணி கிருஸ்னன் ஸ்பீக்கிங் நீங்க யாரு?? உங்களுக்கு என்ன வேணும்.மறுமுனையில். சார் சார் இங்கை ஒரு குறூப் பயங்கர ஆயுதங்கள் கடத்தி கிட்டு இருக்காங்க சார் உடனே வந்தீங்கன்னா அரஸ்ட்டு பண்ணிடலாம் அவங்களை பாத்தா சிலோன் தமிழங்க மாதிரி இருக்கு

உண்ணி ஆச்சரியமாய் கேட்கிறார் ஆயுதம் கடத்திறாங்களா?? அதுவும் சிலோன் தமிழங்க எண்டு எப்பிடி டெபனற்றா சொல்லுறிங்க

மறு முனையில். ஆமா சார் அவங்க சிலோன் தமிழங்க தான் ஏணெண்ணா அவங்க தமிழ்லை பேசறாங்க சார் அதை விட இரண்டு பாக்சை தூக்க முடியாம தூக்கிட்டு போனாங்க அது நிச்சமா வெப்பனா தான் இருக்கும் இப்ப ஒரு லாட்சிலை தங்கி இருக்காங்க உடனே ஸ்பாட்டக்கு வாங்க சார்.உண்ணி அவசரமாய் புறப்பட்டபடி ஓகே ஓகே அந்த லாட்ச் அட்ரசையும் உங்க பெரையும் சொல்லுங்க உடனே நான் என்னோடை ரீமோடை வாறேன்.மறுமுனையில் உள்ளவர் விலாசத்தை சொல்ல உண்ணி கோபமாய் உங்க பெயர் என்ன சொல்லலலையே நீங்க யார்??

என்கிறார் மறு முனையில் உள்ளவர் நான் இந்தியன் சிட்டிசன் என்று விட்டு போனை வைக்கிறார். இந்த தகவல் உண்மையாக இருக்குமா பெயரை கேட்டா கமல் நடித்த இந்தியன் பெயரையும் அஜித் நடித்த சிட்டிசன் படபெயரையும் சொல்லுறானே என யோசித்த உண்ணி சரி எதற்கு போய் பார்க்கலாம் என நினைத்து மேலதிகாரிகளிற்கு தகவல் தெரிவித்து விட்டு ஆயுதங்களுடன் ஒரு 100 போர் கொண்ட ஒரு காவல் துறை குழுவினரை அழைத்த கொண்டு சென்று அந்த லாட்சை அடைகிறார் இப்போது அதிகாலை 3 மணி ஊரே உறங்கி கொண்டிருந்தது. சப்தம் எதுவுமின்றி மெதுவாக அந்த லாட்சை சுற்றி வழைத்த போலீசார் அந்த லாட்சின் கதவுகளை உடைத்து கொண்டு உள்ளே சென்று அங்கிருந்த அனைவரையும் கைது செய்கின்றனர்.

எது வித மோதலும் இன்றி அனைவரையும் கைது செய்த மகிழ்ச்சியில் உண்ணி உடனே அனைத்த பத்திரிகையாளர்களிற்கும் போன் செய்து தாங்கள் பயங்கர ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் செய்யகூடிய உதிரி பாகங்களுடன் பலரை கைது செய்திருப்பதாகவும் காலை விடிந்ததும் பத்திரிகையாளர் மகா நாடு கூட்டபட்டு அவர்களிற்கு அந்த ஆயுதங்கள் மற்றும் பொருட்கள் காண்பிக்க படுவதடன் அதன் விளக்கங்களும் அளிக்கப்படும் எனவே அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம் என்று விட்டு போனை கட் செய்கிறார்.மறு நாள் காலை 6 மணி பத்திரிகையாளர்கள் எல்லோரும் கையும் மைக்குமாய் உண்ணிகிருஸ்ணனை சுற்றி உண்ணிபோல ஒட்டியபடி சார் எப்பிடி இவங்களை பிடிச்சீங்க எப்படி தகவல் கிடைத்தது? அந்த ஆயுதங்கள் எங்கே? இப்போ அந்த தீவிர வாதிங்க எங்கே? என்று கேள்விகளை தொடுக்கின்றனர்.

உண்ணியோ அவர்களை அமைதிபடுத்தி பிளீஸ் வெயிற் கேள்வி கேட்காமல் நான் சொல்லறதை மட்டும் கேளுங்க பக்கத்திலை இருக்கிற லாட்சிலை தீவிர வாதிங்க இருக்கிறதா கிடைச்ச எங்கள் புலனாய்வு பிரிவின் தகவலின்படி நாங்க அதை ராத்திரி ரவுண்டப் பண்ணி அந்த லாச்சிலை இருந்த 60 பேரையும் அரஸ்ட்டு பண்ணினோம் அதிலையார் உண்மையான தீவிர வாதிங்க எண்டு இன்னமும் தெரியாததாலை அவங்களை பக்கத்திலை உள்ள அலங்கார் சினிமா தியேட்டரிலை அடைச்சு வைச்சிருக்கிறோம்.

பிறகு நாங்க அந்த அறுபது பேரையும் போட்டு மிதிக்கிற மிதியிலை உண்மையான தீவிரவாதிங்க யார் எண்டதை கண்டுபிடிச்சிடுவம்.இப்ப நீங்க எல்லாரும் போய் அவங்களை பாக்கலாம் போட்டோ எடுக்கலாம் அவங்களை பாக்கிறதுக்கு காலரி றிக்கற் 50 ருபா பால்கனி றிக்கற் 80 ருபா.அடுத்ததா அவங்க தீவிரவாதிங்க எண்டதாலை சென்சார் போடு ஏ சேர்ட்டிபிக்கற்தான் குடுத்திருக்காங்க அதனாலை வயசுக்கு வந்தவங்க மட்டும் தான் பாக்கமுடியும்.அதை பாத்திட்டு வாங்க நான் பின்னர் ஆயுதங்கள் மற்றும் அதன் விபரங்களை சொல்கிறேன் என்று அனுப்பிவைத்தார்.

பத்திரிகையாளர்கள் கைதானவர்களை பார்த்து போட்டோ எல்லாம் எடுத்து கொண்டதும் திரு உண்ணி கிருஸ்ணணமேனன் அவர்கள் பறிமுதல் செய்யபட்ட ஆயுதங்களை பத்திரிகையாளர்களிற்கு காண்பித்தார் அதில் பலலட்சம் சைக்கிள் போல்ஸ்கள். ரியூப்புகள் .கிறீஸ் டப்பாக்கள் மற்றும் 120 மி.மீ்150 மி .மீ 180 மி .மீ நீளமுடை இரும்பு குழாய்கள் என்பன இருந்தன . அவற்றையெல்லாம் ஆச்சரியமாக பார்த்த பத்திரிகையாளர்களிற்கு விழக்கமளிக்கையில் இந்த போல்சுகளை இங்கிருக்கும் கிறீஸ்சில் தடவி இந்த குளாய்களில் போட்டு ஒரு கம்பியால் ஓங்கி குத்துவதன் மூலம் அந்த போல்சுகள் பல கி.மீற்றர் தூரம் வரை சென்று ஒரு இலக்கை அழிக்கும் வல்லமை உடையது உதாரணத்திற்கு போர்பஸ் பீரங்கி போன்றது.

அடுத்தாக இன்னொரு முறையாகவும் இந்த போல்சுகளை பயன் படுத்தலாம் அதாவது இரண்டு பெரிய தடிகளை ஒரு நேர் கோட்டில் அருகருகாக நட்டு அவற்றில் ஒரு இந்த சைக்கிள் ரியூப்புகளை கட்டிவிட்டு அந்த ரியூப்பில் இந்த போல்சுகளை வைத்து நன்றாக இழுத்து விட்டால் அது ஆகாயத்தில் வேகமாக பறக்கும் இதன் மூலம் ஆகாயத்தில் பறக்கும் போர் விமானங்களையும் ஏன் அடுத்த நாட்டை கூட தாக்கலாம். உதாரணமாக எங்கள் அக்னி ஏவுகணை போன்று இவர்களை கைது செய்ததன் மூலம் ஒரு பயங்கர சதியை முறியடித்துள்ளோம்.

என்று விளக்கியவர் அருகில் இருந்த பெண்போலீஸ் உதவியாளரின் தலையில் இருந்த றபர்பாண்டை கழற்றி தன்னுடைய சட்டைபையில் இருந்த இரண்டு பேனாக்களில் கட்டி அதில் ஒரு இரும்பு குண்டை வைத்து இழுத்து விட்டு செய்முறையாக செய்து காட்டிபோது அத்தனை பத்திரிகையாளர்களும் வாயடைத்து அதிர்ச்சியில் உறைந்து சிலையாகி போனார்கள். பின்னர் அவர்களை காவல் துறையினர் கடப்பாரைகள் கொண்டு வந்து கிண்டியெடுத்து அவர்களை வழியனுப்பி வைத்தனர். நன்றி மீண்டுமோர் பரபரப்பான விறுவிறுப்பான அரசியல் ஆய்வில் உங்களை சந்திக்கும் வரை உங்கள் புறுபுறுப்பு தாங்காமல் விடைபெறுவது சாத்து

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள் ஆய்வாளர்கள் கஞ்சாதிலகம் குறுக்ஸ், சப்பாத்து பொறுக்கி நல்லவன் வரிசையில் ஆட்டுப்பால் அப்பாஸ் சாத்துவையும் வரவேற்கிறோம். தொடர்ந்து இது போன்ற விறு விறுப்பான ஆய்வுகளை தர வேண்டுகிறோம். :icon_idea::lol::lol::lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பின்னீட்டிங்கள் சாத்திரி.

எப்படி சாத்து உங்களுக்கு இப்படியெல்லாம் ஆய்வு செய்ய வருகிறது.

ஒருவேளை ஆட்டுப்பால் குடிப்பதால் தானோ ?

Link to post
Share on other sites

பின்னீட்டிங்கள் சாத்திரி.

எப்படி சாத்து உங்களுக்கு இப்படியெல்லாம் ஆய்வு செய்ய வருகிறது.

ஒருவேளை ஆட்டுப்பால் குடிப்பதால் தானோ ?

நானும் ஒரு இக்பால் அத்தாஸ் மாதிரி பெரிய ஆய்வாளரா வருவமெண்டுதான் என்ரை பேரையும் கொஞ்சம் அப்பிடி ஆட்டுபால் அப்பாஸ் எண்டு மாத்தி இத்தனை முயற்சி செய்யிறன் நீங்கள் விட மாட்டீங்கள் போலை கிடக்கு

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆகா ஓகோ இது எல்லோ ஆய்வு .இது எல்லோ கட்டுரை.இனி ஆட்டுப்பாலுக்கு

கிராக்கியோ கிராக்கி :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்து சைக்கிள் போல்ஸ் இன்ரை முக்கிய போரியல் பயன்பாட்டை கோட்டை விட்டுட்டார். எதிரி உங்களை நோக்கி ஓடி வரும் பொழுது பாதையில போட்டுவிட்டா சறுக்கி விழுவினம்.

அதை உண்ணி செய்து காட்டாட்டியும் அப்படி ஒண்டிருக்கு எண்டதை சொல்லி தாங்கள் அப்படிச் செய்யமாட்டம் ஏன் என்றால் அந்த பாதையில் இருக்கிற பூச்சி புழுக்கள் மேல எதிரி விழுந்தால் பாதிக்கப்படும். தாங்களுக்கு அப்படித் தேவையில்லை ஏன் என்றால் தாங்கள் ஆச்சாரமான ஆரியர். சிலோன் தமிழர் செய்வினம் ஏன் என்றால் அவர்கள் திராவிடர்.

Link to post
Share on other sites

பெரிய ஆய்வெல்லாம் செய்றிங்க சாத்திரி சார் :icon_idea:

நினைச்சன் எங்கை நான் பொரீய ஆழா வந்திடுவனோ எண்டு உங்களிற்கு எரிச்சல் எரிச்சல் படாதீங்க நான் ஆய்விலை பெரிய ஆழா வந்ததும் உங்களை உதவியாளராய் வைச்சிருக்கிறன் :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல நகைச்சுவையான ஆய்வு.. தொடருங்கள்.. நன்றி..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நினைச்சன் எங்கை நான் பொரீய ஆழா வந்திடுவனோ எண்டு உங்களிற்கு எரிச்சல் எரிச்சல் படாதீங்க நான் ஆய்விலை பெரிய ஆழா வந்ததும் உங்களை உதவியாளராய் வைச்சிருக்கிறன் :D

எதுக்கு? :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்களம் சார்பில் ஆரட்சித்திலகம் என்ற பட்டத்தினை சாத்திரிக்கு வழங்குகிறேன்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யாழ்களம் சார்பில் ஆரட்சித்திலகம் என்ற பட்டத்தினை சாத்திரிக்கு வழங்குகிறேன்

சிறந்த பட்டம் தான் :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆட்டுப்பால் நிப்பால் உப்பிடியே விட்டால் பெரியாளா வந்திடுவீர் போல வயிர்றெறியுது விடமாட்டம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி ஆட்டுப்பால் குடித்ததால் மட்டுமே இப்படியெல்லாம் எழுதுகிறார் என்று நினைக்க வேண்டாம்.

ஹோட்டலில் றூம் புக் பண்ணி மல்லாக்கப் படுத்துக் கிடந்து யோசிச்சிருக்கிறார்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆராட்சிதிலகம் நல்ல ஆய்வு எழுதி இருகிரார் இக்பால் அத்தாஸ்[ யாழ் கள இக்பால் அத்தாஸ் இல்லை]மிஞ்சிவிடுவார் போல இருக்குது??? :P

Link to post
Share on other sites

எதுக்கு? :)

கிருபன் என்ன கேள்வி இது உதவியாளர் எதுக்கு எல்லாம் ஒரு உதவிக்குதான் இது கூட தெரியாமல் :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜோவ்வ் சாஸ்த் தேனி நெருப்பு பிரதம ஆசிரியரை விட 2,1/2இன்சி மேல போய்ட்டீர்... இருந்தாலும் ஒரு சின்ன ஆதங்கம், சிரியாசான ஒரு கட்டுரையை நகைச்சுவை பிரிவுக்கை போட்டது மனசுக்கு கஸ்ரமா இருக்கு.. :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சாத்து இப்ப எங்கே அவரிட்ட ஒரு ஓட்டோ கிராப் வாங்கலாம் என்றால் ஆளையே

பிடிக்க முடியாமல் இருக்கு :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தினந்தோறும் ஆட்டுப்பால் குடிக்கும் எனக்கு ஏன் இப்படியான ஆராய்ச்சி சிந்தனைகள் தோன்றவில்லை.எல்லாம் அந்த சின்னப்புவின் திட்டமிட்ட சதி. :angry:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தினந்தோறும் ஆட்டுப்பால் குடிக்கும் எனக்கு ஏன் இப்படியான ஆராய்ச்சி சிந்தனைகள் தோன்றவில்லை.எல்லாம் அந்த சின்னப்புவின் திட்டமிட்ட சதி. :angry:

அந்த சின்னப்பு எந்த நாட்டு சதிகாரர்

Link to post
Share on other sites

சாத்திரி! சூப்பர். யாழ்களத்தில் இப்படியான ஆராய்வாளர்களை :D வரவேற்கின்றோம்.

தினந்தோறும் ஆட்டுப்பால் குடிக்கும் எனக்கு ஏன் இப்படியான ஆராய்ச்சி சிந்தனைகள் தோன்றவில்லை.எல்லாம் அந்த சின்னப்புவின் திட்டமிட்ட சதி. :angry:

பால் மட்டும் குடிச்சால் போதாது. மண்டைக்குள் கொஞ்சூண்டு களிமண்ணும் இருக்க வேண்டும். :D

Link to post
Share on other sites

சாத்து இப்ப கண்டு பிடிச்சிட்டன்.

நீங்க ஆர்?

உங்க பூர்வீகம் என்ன?

இந்த ஆய்வில் உங்களுக்கு ஏனிந்த உற்சாகம்?

அக்குற்றச்செயலுக்கும் உங்களுக்குமான பெருந்தொடர்பு....

நிறையச் சந்தேகங்கள் தெளிவாகி இருக்கு.

காணும் ஓய் சாத்து, நீங்க அந்த ஆளா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி! சூப்பர். யாழ்களத்தில் இப்படியான ஆராய்வாளர்களை :D வரவேற்கின்றோம்.

பால் மட்டும் குடிச்சால் போதாது. மண்டைக்குள் கொஞ்சூண்டு களிமண்ணும் இருக்க வேண்டும். :lol:

என்னராசா புதுக்கதை சொல்லுறீர்?எனக்கு களிமண்தானே மண்டேக்கை இருக்கெண்டு எல்லாரும் சொல்லீனம். :( :P :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னராசா புதுக்கதை சொல்லுறீர்?எனக்கு களிமண்தானே மண்டேக்கை இருக்கெண்டு எல்லாரும் சொல்லீனம். :lol: :P :(

உங்கட தலையில களிமண் இல்லையாமே கொங்கீரீட்டாம் உண்மையா :P

Link to post
Share on other sites

என்னராசா புதுக்கதை சொல்லுறீர்?எனக்கு களிமண்தானே மண்டேக்கை இருக்கெண்டு எல்லாரும் சொல்லீனம். :lol: :P :(

களிமண் இருந்தாலாவது பரவாயில்லை. உள்ளுக்கே ஒண்டுமில்லாதபடியால் தான்பா, உமக்கு உந்த நிலமை. ஈழவன் எல்லாம் அந்தக் களிமண்ணை வைச்சுத்தானே சமாளிக்கின்றார்

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.