30.11.16 ஆனந்த விகடனில் எனது "மாநகரத்தின் அகதிகள்" கவிதை
-
Tell a friend
-
Similar Content
-
By நவீனன்
சொல்வனம்
படம்: கே.ராஜசேகரன்
அன்பு எனும் நான்
என் அன்பு
ஒரு குருட்டுப் பிச்சைக்காரனின் கைத்தடி
மனமுவந்து பெறும் திருநங்கையின் ஆசி
குஷ்டரோகியின் நாற்பட்ட புண்ணுக்கான களிம்பு
நிறைமாதக் கர்ப்பிணியின் மசக்கை
முதிர்கன்னி எதிர்நோக்கும் ஆளரவமற்ற தனிமை
ஊமைச்சிறுமி யாசகம் பெற்ற ஐந்து ரூபாய் பணம்
மடி முட்டிக் கவ்வும் மறியின் காம்பு
இளங்கன்று மேனியை வருடும் பசுவின் நா
வானம் பார்த்த வறண்ட பூமியின் முதல் தூத்தல்
கால்கடுக்கக் காத்திருக்கும் முதியவளின் கடைசிப்பேருந்து
தடம் மறந்த குட்டியானைச் செவிமடுக்கும்
தாய் யானைப் பிளிறல் சத்தம்
கலைமான்கள் அருந்தும் காட்டுச்சுனை
இணைக்கென பாதியிரவில் பார்சலாகும் மூன்று பரோட்டா
முதுகாவலாளியின் குட்டித் தூக்கம்
இறுதிவரை சொல்லப்படாத ஒருதலைக் காதல்
கண்ணீர்த்துளி பெருக்கும் இரவின் கனிவான பாடல்
பைத்தியம் கையேந்தும் அதிகாலைத் தேநீர்
நோய்வாய்ப்பட்ட வயோதிகன் விரும்பிக் கேட்கும்
விடுதலை மரணம்
என் அன்பு…
- தர்மராஜ் பெரியசாமி
ஓவியக்காரி
சுவரெல்லாம் கிறுக்கத் தொடங்கிய
லாவண் குட்டி
முதலில் காடு வரைந்தாள்
மரக்கிளையில் மீன் வரைந்தாள்
நதி வரைந்தாள்
அதன் நீரில் விலங்குகள் வரைந்தாள்
வானம் வரைந்தாள்
அதன்மேலே படகு வரைந்தாள்
கடல் வரைந்தாள்
அதன் மேலே விமானம் வரைந்தாள்
அடுத்து என்ன வரைவதென
யோசித்துக்கொண்டே தூங்கிப்போனவள்
கனவிலும் எதையோ
வரைந்துகொண்டிருப்பாள்.
- கோ.பகவான்
காதல் காலம்
இன்றும்கூட சட்டை காலரில்
கர்சீப்பை வைத்துக்கொண்டு போகும்
ஆண்களின் முகத்தை
வலிய வந்து பார்க்கிறாள்
விமலா அக்கா;
இன்றும்கூட நம்பிக் கொண்டிருக்கிறாள்
ரயில்வே டிராக்கில் அடிபட்டு செத்த
முகமழிந்த பிணம்
வில்லியம் அண்ணா இல்லையென;
இன்னும்கூட நின்று கொண்டிருக்கிறது
அந்தப் பேருந்து நிழற்குடையும்
தட்டச்சுப் பயிலக பாதாம் மரமும்
காவியக் காதலுக்கு சாட்சியாய்;
இன்றும்கூட உயிரோடிருக்கிறார்
ஊர்ப் பெரியவர் சதாசிவம்
தான் எப்போதோ செய்துவிட்ட
பாதகங்களுக்கு
கோயில்தோறும் பாதயாத்திரை
செய்து பிராயச்சித்தம் தேடிக்கொண்டு;
இன்றும்கூட எங்கோ வளர்கிறது
வில்லியம் அண்ணாவின் வெளிர் நிறத்தில்
விமலா அக்காவின் அழகான கண்களுடன்
ஓர் அனாதைப் பிள்ளை;
இன்னும்கூட எங்கோ மூலையில் கிடக்கிறது
அந்த ரெஜிஸ்டர் ஆபீஸ் தடி நோட்டில்
விமலா.s வில்லியம்.j என்ற பெயர்கள்...
- கோஸ்ரீதரன்
http://www.vikatan.com
-
By seyon yazhvaendhan
ஆனந்த விகடன் (15.2.17) இதழில் வெளியான எனது "நகரத்தின் புதிய தந்தை" கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி!
நகரத்தின் புதிய தந்தை
எல்லாவற்றையும் மாற்றப்போவதாக வாக்களித்து
நாற்காலியைக் கைப்பற்றிய
நகரத்தின் புதிய தந்தைக்கு
அவர் பராமரிக்கவேண்டிய
பிள்ளைகளின் கணக்கு கொடுக்கப்பட்டது.
சாதுவானவர்கள், அடங்காதவர்கள்,
ஊதாரிகள், அயோக்கியர்களென
அனைவரின் புள்ளிவிவரம் அவரிடமிருந்தது.
அடங்காதவர்களை அவர் கலாச்சாரக் காவலர்களாக்கினார்.
ஊதாரிகளுக்கு வெகுமதிகள் கொடுத்தார்.
சாதுவானவர்களுக்கு வேலைகளைப் பகிர்ந்தளித்தார்.
அயோக்கியர்களைத் துணைக்கு வைத்துக்கொண்டார்
நகரம் முன்பைவிட நரகமானதைப் பற்றி
ஒருவரும் வாய்திறக்கவில்லை
-சேயோன் யாழ்வேந்தன்
(ஆனந்த விகடன் 15.2.17)
(எனது பதிவுகளில் படங்களை இணைக்க முடியவில்லை. யாழ் தளத்தின்நெறியாளர் அல்லது தோழர்கள் அதற்கான வழிமுறையைக் கூறவும்)
(அல்லது நான் இணைக்க முயன்ற படத்தை இப்பதிவில்இணைத்துவிடவும்)
-
By seyon yazhvaendhan
இந்த வார ஆனந்த விகடன் (18.1.17) இதழில் தனிப்பக்கத்தில் வெளியாகியுள்ள எனது இரண்டு கவிதைகளை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி!
நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு
இரண்டு ஷிப்ட் வேலைக்குப் பின்
நள்ளிரவில் வீடு சேர்பவன்
சூரியனை குண்டு பல்புக்குள் உதிக்கவிடுகிறான்.
தன்னை மலடாக்கிய உணவை
இல்லாளுடன் கதை பேசியபடி உண்கிறான்.
ஆடு மாடுகளின் மேவு
ஆத்தா அப்பனின் அன்றைய பிரச்சனைகளை
அலைக்கற்றைவழி விசாரித்து அறிகிறான்.
டிஜிட்டல் இந்தியாவின் வல்லசுரக் கனவோடு
போட்டியிட முடியாமல் பின்தங்கும் கனவோடு
உறங்கப் போகிறான் சூரியனை அணைத்துவிட்டு.
தலைமுறை இடைவேளை
“கோழி கூப்புட நாலுமணிக்கு
நாலு தூத்தல் போட்டுச்சு
மண்வாசமும் வெக்கையும் கிளம்ப
வெளிய வந்து பார்த்தா
கீகாத்து மழையக் கலச்சுடுச்சு”
என்று சொன்ன அப்பத்தாதான்,
இன்று பிற்பகல் நாலுமணிக்கு
விளம்பர இடைவேளையில் வெளியே வந்து
“மழையா பேஞ்சுச்சு?” என்கிறாள்
ஈரவாசல் பார்த்து.
-சேயோன் யாழ்வேந்தன்
(ஆனந்த விகடன் 18.1.17)
(எனது பதிவுகளில் படங்களை இணைக்க முடியவில்லை. யாழ் தளத்தின் நெறியாளர் அல்லது தோழர்கள் அதற்கான வழிமுறையைக் கூறவும்)
(அல்லது வழக்கம்போல் நான் இணைக்க முயன்ற படத்தை இப்பதிவில் இணைத்துவிடவும்)
-
By seyon yazhvaendhan
நவம்பர் மாத கணையாழி இதழில் வெளியாகியுள்ள எனது "ஒருவழிப் போக்குவரத்து" கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி!
ஒரு வழிப் போக்குவரத்து
-----------------------------------------------
நடுத்தெருவில் நிற்கும் பிழைப்பு அவருக்கு.
உச்சி வெய்யிலில் புகை தூசுக்கள் இடையில்
ஆயிரம் கவலைகளை மனதின் மூலையில் தள்ளி
நம்மை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறார்.
சிவப்பு விளக்கு கண்டல்ல,
சீருடைக் காவலர் சீறுவாரென்றே
விதிகளை மதிக்கப் பழகியிருக்கிறோம் நாம்.
அவருக்குள்ளும் கவிதை இருந்திருக்கும்,
கோடையின் வெப்பத்தில் உருகி ஓடியிருக்கும்.
அவரின் மழைக்கவிதைகள்
பாதாளச் சாக்கடையில் ஓடிக் கலந்திருக்கும்.
கோடையில் ஓர் இளநீரோ தர்பூசணிக்கீற்றோ
இடி மின்னலுக்கு இடையில் நிற்கையில் இதமாக ஒரு தேநீரோ
ஒருநாளும் நாம் அவருக்கு வாங்கிக்கொடுத்ததில்லை.
பரிவும் நேசமும்
ஒருவழிப் போக்குவரத்தாகவே இருக்கும் வாழ்வுக்குத்தான்
நாம் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம்.
(கள நிர்வாகிகள் இணைக்கப்பட்டுள்ள படத்தை upload செய்து உதவவும்)
-
Topics
-
Posts
-
பெருக்கி எழுதினால் காதலியின் பேரன் வந்து கதவை தட்டினால்???😆 தொடருங்கள் அண்ணா அருமையான எழுத்து நடை பரிச்சயமான இடங்கள் பெயர்கள்
-
கடைசியா நல்லூரில் திருநீற்றுப் பட்டையோடும் சந்தனப் பொட்டோடும் பார்த்தது போல் ஒரு நினைவு......! 🤔
-
மிச்சப் பணத்தில் ராமருக்கு மட்டுமல்ல கூட வந்த அனுமனுக்கும் ஒரு கோயில் கட்டிடலாம் .....! 👍
-
இது சுருக்கி எழுதுகிற விடயமல்ல பெருக்கி எழுதுகிற விடயம்......யோசிக்காமல் எழுதுங்கோ......! 😁 பல நினைவுகளை கொண்டு வருகுது.......!
-
நீங்கள் எங்கும் படித்திருக்க மாட்டீர்கள் நான்தான் சொல்லியிருப்பேன். அது முற்றிலும் உண்மை எனது அனுபவத்தில் இருந்து...... அது சரி நான் எப்ப சொன்னனான் உங்களுக்கு ஞாபகம் இருக்கா.......! 🤔
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.