Jump to content

ஃபிடல் காஸ்ரோ காலமானார்


Recommended Posts

நவம்பர் 26 இன்று பி.பி.சி செய்தித் தளம் பிடல் காஸ்ரோ காலமாகி விட்டதாக அறிவித்து உள்ளது. ஃபிடல் என்று காலமாகினார் என்றோ அல்லது மேலதிக தகவல்களோ தெரிவிக்கப்படவில்லை.

Fidel Castro, Cuba's former president and leader of the Communist revolution, has died aged 90, state TV has announced.

It provided no further details.

Fidel Castro ruled Cuba as a one-party state for almost half a century before handing over the powers to his brother Raul in 2008.

His supporters praised him as a man who had given Cuba back to the people. But his opponents accused him of brutally suppressing opposition.

In April, Fidel Castro gave a rare speech on the final day of the country's Communist Party congress.

He acknowledged his advanced age but said Cuban communist concepts were still valid and the Cuban people "will be victorious".

 

http://www.bbc.com/news/world-latin-america-38114953

Link to comment
Share on other sites

கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மறைவு

 
 
 
பிடல் காஸ்ட்ரோ | கோப்புப் படம்: ஏபி
பிடல் காஸ்ட்ரோ | கோப்புப் படம்: ஏபி
 

கியூபாவின் புரட்சியாளரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 90.

கடந்த பல மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மறைந்த தகவலை, கியூபாவின் அரசு தொலைக்காட்சி வெளியிட்டது.

பிடல் காஸ்ட்ரோ பற்றி 'தி இந்து' நாளிதழில் ஜி.எஸ்.எஸ். எழுதிய வாழ்க்கைக் குறிப்புகள் இங்கே:

யாருக்கும் இல்லாத ஒரு பெருமை பிடல் காஸ்ட்ரோவுக்கு உண்டு. உலகின் மேற்குப் பாதியில் முதன்முதலாக ஒரு கம்யூனிஸ தேசத்தை உருவாக்கியவர் அவர்.

1926 ஆகஸ்ட் 13 அன்று பிறந்தவர். இளம் வயதிலேயே தடாலடிச் செயல்களைச் செய்தவர்.

படித்தது மதபோதகப் பள்ளிகளான ஜெசூட் கல்வி அமைப்புகளில்தான். படிப்பில் நிறைய நாட்டம் கொண்டவர். முக்கியமாக ஸ்பானிஷ் மொழியில் மிகுந்த தேர்ச்சி கொண்டவர். விவசாயம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்கள் என்றால் அவருக்கு மிகவும் விருப்பம். பாடங்கள் ஒருபுறமிருக்க பாடமல்லாத விஷயங்களிலும் மிகுந்த அக்கறை காட்டினார்.

அரசியலில் மாளாத ஆர்வம். தவிர தடகளப் போட்டிகளிலும் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். ஆனால் இத்தனை இருந்தும் அவர் கூச்ச சுபாவம் கொண்டவராக இருந்தாராம். பிறருடன் எளிதில் பழகமாட்டார். ஆனால் இந்தக் கூச்சமெல்லாம் கல்லூரியில் சேரும் வரையில்தான்.

1945-ல் கியூபாவின் தலைநகரில் இருந்த ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை எடுத்துப் படித்தார். அந்த ஊர் சட்டக் கல்லூரியிலும் வன்முறை, அரசியல், கோஷ்டி மோதல் ஆகியவை நீக்கமற நிறைந்திருந்தன.

பிடல் காஸ்ட்ரோவும் ஓர் புரட்சி இயக்கத்தில் சேர்ந்தார். அதன் பெயர் The Union Insurreccional Revolucionaria என்பதாகும். இந்தக் காலகட்டத்தில் பிடல் காஸ்ட்ரோ மீது சரியாகவோ தவறாகவோ சில குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவற்றில் முக்கியமானது எதிரணியைச் சேர்ந்த ஒரு மாணவர் தலைவனை அவர் கொலை செய்தார் என்பது. பரவலாகப் பேசப்பட்டா லும் இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப் படவில்லை.

கல்லூரிப் பருவத்தில் பிடல் காஸ்ட்ரோவின் அபாரமான பேச்சுத் திறமை வெளிப்பட்டது. கல்லூரியில் அவர் மாணவர் சங்கத் தலைவர் பதவியை வகிக்கவில்லை. அப்படிப்பட்ட ஆசை அவருக்கு இல்லை என்பதில்லை. சிலமுறை மாணவர் சங்கத் தேர்தலில் நின்றும் அவர் ஜெயிக்கவில்லை.

என்றாலும் பிடல் காஸ்ட்ரோவின் புகழ் பரவிக் கொண்டேவந்தது. அவரது அரசியல் ஆசையும் பெருகிக் கொண்டே வந்தது.

ரஃபேல் ட்ரூஜில்லோ என்பவர் டொமினி கன் குடியரசை ஆண்டு வந்தார் (மேற் கிந்தியத் தீவுகளில் கியூபாவுக்கு அடுத்த பெரிய நாடு இது). இவரது அரசின் அடக்கு முறையை எதிர்த்து பிரபல எழுத்தாளர் ஜுவான் போஷ் என்பவர் உருவாக்கிய புரட்சிப் படையில் சேர்ந்து கொண்டார் பிடல் காஸ்ட்ரோ.

இதற்காக அவர் தற்காலிகமாக பல்கலைக்கழகப் படிப்பிலிருந்து விலகினார். (இப்போதெல்லாம் பணியிலிருந்து சிறிது காலம் விலகி மீண்டும் அதில் சேரும் sabbatical என்ற வசதி சில நிறுவனங்களில் இருப்பதுபோல் அப்போது ஹவானா பல்கலைக்கழகத்திலும் இருந்திருக்க வேண்டும்!)

ஆனால் டொமினிகன் குடியரசை நோக்கி கப்பலில் இந்தப் புரட்சிக் குழு பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென்று `இப்போது செயல்பாடு வேண்டாம்’ என்ற ஆணை வந்தது.

அப்போது பிடல் காஸ்ட்ரோ எதிர்பாராத ஒரு செயலைச் செய்தார். கடலில் குதித்தார். தன் தலைமீது துப்பாக்கியை சுமந்தபடி வெகுதூரம் கடந்து கரையை அடைந்தார். அந்தப் பகுதியில் சுறாமீன்கள் அதிகம் என்பதும் இந்தத் தகவல் பிடல் காஸ்ட்ரோவுக்குத் தெரியும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

அதற்கு அடுத்த ஆண்டு பிடல் காஸ்ட்ரோ பலவித செயல்களில் ஈடுபட்டார். அந்தச் செயல்களைப் புரட்சி என்று கூறி சிலிர்ப்பதோ, வன்முறை என்று கூறி வெறுப்பதோ அவரவர் பார்வையைப் பொறுத்தது.

கொலம்பியாவில் லிபரல் கட்சித் தலைவர் ஜார்ஜ் கெய்டான் என்பவர் படுகொலை செய்யப்பட அந்த நாடே பற்றி கலவரங்களில் எரியத் தொடங்கியது. அந்தக் கலவரங்களில் முக்கிய பங்கெடுத்துக் கொண்டார் பிடல் காஸ்ட்ரோ. தெருக்களில் வீடுவீடாகச் சென்று அமெரிக்காவுக்கு எதிரான அறிக்கைகளை விநியோகித்தார்.

கொலம்பிய ஆட்சியாளர்கள் கியூபா மாணவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுப்பதற்காக அவர்களைத் துரத்த, அவர்கள் கொலம்பியாவில் உள்ள கியூபா தூதரகத்தில் சரணடைந்தனர். பிறகு அங்கிருந்து ஹவானா வந்து சேர்ந்த பிடல் காஸ்ட்ரோ தனது சட்டப் படிப்பைத் தொடர்ந்தார்!

பல்கலைக்கழகத்தில் பயின்றபோது கம்யூனிசத்தைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொண்ட பிடல் காஸ்ட்ரோ அதனால் ஈர்க்கப்பட்டார். கூடவே அரசியலில் நேரடிப் பங்கேற்கும் ஆர்வமும் வந்தது.

கியூபாவில் அப்போது ஆர்டொடாக்ஸோ கட்சி என்ற ஒன்று இருந்தது. நாட்டிற்கு பொருளாதார சுதந்திரம் தேவை என்றது அந்தக் கட்சி. சமூக நீதியை முன்வைத்தது. ஆட்சிக்கு வந்ததும் ஊழலை ஒழிப்பது தன் தலையாய பணி என்றது. பிடல் காஸ்ட்ரோ இந்தக் கட்சியின் சித்தாந்தங்களினால் ஈர்க்கப்பட்டார்.

*

அமெரிக்காவின் தெற்கு நுனியில் உள்ள ஃப்ளோரிடாவிலிருந்து 140 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தீவு கியூபா. அமெரிக்காவின் பரப்பளவில் பத்தில் ஒரு பங்குகூட இல்லாத குட்டி நாடு. இதன் தலைநகர் ஹவானா. இரண்டாவது பெரிய நகர் சாண்டியாகோ. கியூபாவின் அதிகாரப்பூர்வ மொழி ஸ்பானிஷ். பல புயல்களை எதிர்கொண்ட நாடு (நிஜமாகவும், உருவகமாகவும்).

அமெரிக்கா ஒதுக்கி வைத்ததனால் பொருளாதாரம் சீர்குலைந்த நாடு கியூபா. அதன் அரசியல்கூட இதனால் பெருமளவில் சிதைந்தது. என்றாலும்கூட கியூபா என்றவுடன் புரட்சி வீரர்களுக்கு இதெல்லாம் மனதில் தைக்காது. அவர்கள் நினைவில் எழும் உருவம் ஃபிடல் காஸ்ட்ரோ. சோவியத் ரஷ்யா துண்டு துண்டாகிவிட்ட நிலையிலும்கூட நம்பிக்கை இழக்காமல் கம்யூனிஸத்தை ஆதரிக்கும் ஒரே நபர் ஃபிடல் காஸ்ட்ரோ.

அவரை அழிக்க அமெரிக்கா பல முயற்சிகள் எடுத்ததாகக் கூறுவார்கள். ஃபிடல் காஸ்ட்ரோ பிடிக்கும் சுருட்டுக்குள் வெடிவைத்து அவர் முகத்தை சின்னாபின்னமாக்கக்கூட ஒரு முயற்சி நடந்ததாகக் கூறுவார்கள். ஆனால் பலிக்கவில்லை.

http://tamil.thehindu.com/world/கியூபா-முன்னாள்-அதிபர்-பிடல்-காஸ்ட்ரோ-மறைவு/article9389418.ece?homepage=true

Link to comment
Share on other sites

கியூபாவின் முன்னாள் தலைவர் பிடல் காஸ்ட்ரோ காலமானார்

 

November 26, 2016

 
 

 

 

 

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ காலமானார். அவருக்கு வயது 90.

 

கடந்த ஆகஸ்ட் மாதம் தனது 90 ஆவது பிறந்த நாளை ஹவானாவில் கோலாகலமாக கொண்டாடிய காஸ்ட்ரோ தனது மரணத்தின் பின்னரும் கியூபாவின் கம்யூனிச சிந்தனைகள் தொடரும் என்று கூறியிருந்தார்.

 

பிடல் காஸ்ட்ரோ இறந்துவிட்ட செய்தியை கியூபாவின் ஜனாதிபதி ராகுல் காஸ்ட்ரோ தேசிய தொலைக்காட்சியில் அறிவித்தார் 

 

2006 ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த காஸ்ட்ரோ படிப்படியாக தனது அதிகாரங்களை சகோதரர் ராகுல் காஸ்ட்ரோவிடம் கையளித்துவிட்டு 2008 ஆம் ஆண்டு முதல் முழுவதுமாக ஓய்வு பெற்றார். 

 

1950 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கம்யூனிச புரட்சிகளின் முன்னோடியாக காஸ்ட்ரோ திகழ்கிறார். லத்தீன் அமெரிக்காவையும் தாண்டி அவரது சிந்தனைகளும் போராட்டமும் உலகம் முழுவதும் மக்களை ஈற்றது. 

 

http://www.lankatamildaily.com/single-post/2016/11/26/கியூபாவின்-முன்னாள்-தலைவர்-பிடல்-காஸ்ட்ரோ-காலமானார்

Link to comment
Share on other sites

க்யூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மரணம்

400_11326.jpg

90 வயதான க்யூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ, உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சி அறிவித்துள்ளது. இதை ஃபிடல் காஸ்ட்ரோவின் தம்பி ரௌல் காஸ்ட்ரோவும் அறிவித்துள்ளார். க்யூபாவில் ராணுவ ஆட்சியாளரான பாடிஸ்டாவிடம் இருந்து ஆட்சியைப் பறித்து மீண்டும் மக்களுக்கே கொடுத்தவர் காஸ்ட்ரோ. கம்யூனிச புரட்சியாளரான காஸ்ட்ரோ, 1959ல் இருந்து 2008 வரை க்யூபாவின் அதிபராக இருந்தார். சேகுவேராவின் நண்பராகவும், சக போராளியாகவும் இருந்தவர் காஸ்ட்ரோ. 

பிடல் காஸ்ட்ரோ வரலாறு

காஸ்ட்ரோவின் இயற்பெயர் பிடல் அலெஜாண்ட்ரோ காஸ்ட்ரோ ரூஸ்

1926ல் கியூபாவின் ஹொல்கூன் மாகாணத்தில் பிறந்தவர் காஸ்ட்ரோ

கியூபாவில் புரட்சியின் போது சேகுவேராவும், பிடல் காஸ்ட்ரோவும் இணைந்து போராடினர்

ராணுவ  ஆட்சியாளர் பாடிஸ்டாவுக்கு எதிராக போராடி ஆட்சியை பிடித்தவர் பிடல்

1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராக இருந்தவர் பிடல் காஸ்ட்ரோ

1976 முதல் 2008 வரை அதிபராக பதவி வகித்தவர் பிடல் காஸ்ட்ரோ

பிடல் காஸ்ட்ரோ -கம்யூனிச வரலாற்றில் மார்க்ஸ்,ஏங்கல்ஸ்,லெனின் ஆகியோர் வரிசையில் உச்சரிக்கப்படும் பெயர் பிடல் கேஸ்ட்ரோ இவருடையது. வக்கீலாகத் தன் தொழிலில் ஈடுபட்ட கரும்புப்பண்ணை பணக்கார விவசாயியின் பையன் முதலாளித்துவத்தை எதிர்க்கிற ஆளாக நிமிர்ந்து நின்றதற்குக் காரணம் அவர் நாட்டின் சூழல். ஒரு பக்கம் மக்கள் துன்பத்தில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருந்தார்கள். வறுமை மக்களை வாட்டிகொண்டு இருக்க,அடிப்படை வசதிகள் இல்லாமல் நாடே துன்பப்பட்டுக்கொண்டு இருந்த பொழுது அமெரிக்காவின் பெருநிருவனங்களைக் காக்கும் பணியைத் தான் செவ்வனே க்யூபாவின் ஆட்சியாளர்கள் செய்தார்கள். மாடு திருடி பிழைத்தவர் எல்லாம் தலைவன் ஆகி நாட்டைக் காலி பண்ணி கொண்டு இருந்தார்கள்.

f26111_11543.jpg

காஸ்ட்ரோ எக்கச்சக்க நிலங்கள் கொண்டிருந்தவரின் மகன். பாடிஸ்டா எனும் ஆட்சியாளன் (அமெரிக்காவின் கைப்பாவை )தேர்தல் நடத்துவதாகச் சொல்லிவிட்டு தேர்தலை நடத்தாமல் போக அதில் போட்டியிட்ட காஸ்ட்ரோ அதிர்ந்து போனார் ;அவனுக்கு எதிராக ஒரு புரட்சி நடத்தி அதில் பலபேரை இழந்த பின் நீதிமன்றத்தில் அவரை நிறுத்திய பொழுது வரலாறு என்னை விடுதலை செய்யும் என அவர் ஆற்றிய உரை சிலிர்க்க வைப்பது -வெகு சீக்கிரமே அரசாங்கம் அவரை ஒரு பொருட்டாக மதிக்காமல் விடுதலை செய்தது -சே குவேராவுடன் சேர்ந்து பன்னிரண்டு தோழர்களுடன் உதவியோடு கொரில்லா போரை ஆரம்பித்து ஆட்சியை எளிய மக்களின் துணையோடு பிடித்துக் காண்பித்தார்.

அவர் ஆட்சியை ஒழிக்க அமெரிக்க எடுத்த முயற்சிகள் ஏராளம் காஸ்ட்ரோவை கொல்ல 638 வழிகள் என்கிற ஆவணப்படமே வந்தது .

அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களைக் கச்சா எண்ணெயை ரஷ்ய நிறுவனங்களிடம் வாங்க சொன்னார் .அவர்கள் நோ சொன்னார்கள் .தேசிய மயமாக்கினார் .அடிமாட்டு விலைக்குக் கரும்பு விளைவிக்கும் நிலங்களை விவசாயிகளிடம் இருந்து வாங்கிய யூனைடட் ப்ரூட் கம்பெனிக்கு அதே விலைக்கு இழப்பீடு கொடுத்து டாட்டா காண்பித்து அனுப்பினார் .அமெரிக்கா என்னடா இது எனச் சுதாரிப்பதற்குள் இப்படி நடந்ததும் சர்க்கரையை வாங்கிக்கொள்ள மாட்டேன் என்றது . இதற்குதான் காத்திருந்தேன் என அமெரிக்காவின் வங்கிகள்,நூற்றி அறுபத்தி ஆறு கம்பெனிகள் என எல்லாவற்றையும் தேசிய மயமாக்கினார் கேஸ்ட்ரோ . ரஷ்யா கைகொடுத்தது.நடுவில் ஒரு ஆயிரத்து நானூறுபேரை அமெரிக்கா இவரின் ஆட்சியை ஒழிக்க அனுப்பி முகத்தில் கரிப்பூசிகொண்டது.

fi1126_11562.jpg

காலி என அமெரிக்கா நினைத்த,காலியாக்க நினைத்த காஸ்ட்ரோ மற்றும் க்யூபா பல்வேறு பொருளாதாரத் தடைகள்,சதிகள் யாவற்றையும் மீறி வளர்ச்சிப்பாதையில் நடை போடவே செய்தது . மக்கள் ஓயாமல் உழைத்தார்கள். உலகில் மிகச்சிறந்த பொதுமருத்துவ வசதிகள் மக்களுக்குக் கிடைக்கும் நாடுகளில் க்யூபா முதன்மையானது. குழந்தைகள் நலம்,கல்வி ஆகியவற்றுக்கும் ஒதுக்கப்படும் பணம் மொத்த வருமானத்தில் அதிகமே. மனித வள குறியீட்டில் குறிப்பிடத்தகுந்த இடத்தில் அந்நாடு இருக்கிறது. க்யூபா அமெரிக்காவின் காலின் கீழ் உள்ள முள் போல உலக வரைபடத்தில் இருக்கும். அது காலில் தைத்த முள் இல்லை;கண்ணில் தைத்த முள். அந்த நம்பிக்கை தேசத்தின் நாயகன் பிடல் காஸ்ட்ரோ.

http://www.vikatan.com/news/world/73515-cubas-former-president-fidel-castro-passes-away-at-90.art

Link to comment
Share on other sites

ஒரு புரட்சியாளனின் வாழ்வில் -- முக்கிய நாட்கள்

 

மறைந்த கியூபப் புரட்சியின் தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ குடல் உபாதை காரணமாக 2006ல் தனது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவிற்கு தற்காலிகமாக தனது அதிகாரங்களை வழங்கினார்.

பின்னர் இரண்டாண்டுகளுக்குப் பிறகு, ரவுல் காஸ்ட்ரோ முழுமையாகப் பதவிப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

கியூபா புரட்சியின் தந்தை ஃபிடல் காஸ்ட்ரோ மறைந்தார்

 
  ஃபிடல் காஸ்ட்ரோ

உலக வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் ஃபிடல் காஸ்ட்ரோவின் வாழ்க்கையில் இருந்து சில முக்கிய துளிகள்

1926 : கியுபாவின் தென் கிழக்கு மாநிலமான ஓரியண்ட் மாகாணத்தில் பிறப்பு.

1953: பட்டிஸ்டா அரசுக்கு எதிராக நடத்தி தோல்வியில் முடிந்த கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய பிறகு சிறை வைப்பு

1955: பொது மன்னிப்பின் கீழ் சிறையிலிருந்து வி்டுதலை

1956: செ குவெராவுடன் இணைந்து அரசுக்கு எதிராக கெரில்லாப் போர் தொடக்கம்

1959: பட்டிஸ்டா அரசை தோற்கடித்து, கியுபாவின் பிரதமராகப் பதவியேற்பு

1961: கியுபாவிலிருந்து வெளியேறி நாடுகடந்த நிலையில் இருந்தவர்களால், அமெரிக்க உளவு நிறுவனமான, சி.ஐ.ஏவின் உதவியுடன் நடந்த ‘ பன்றிகள் குடா’ ( Bay of Pigs) ஆக்ரமிப்பு தோற்கடிப்பு.

1962: சோவியத் ஒன்றியத்தின் ஏவுகணைகளை கியுபாவில் நிலைநிறுத்துவதற்கு உடன்பட்டதன் மூலம், அமெரிக்காவுடன் போர் மூள வைத்திருக்கக்கூடிய `கியூபா ஏவுகணை நெருக்கடி`தூண்டப்பட்டது.

1976: கியுபாவின் தேசிய நாடாளுமன்றத்துக்குத் தேர்வு

1992: அமெரிக்காவுடன் கியூபா அகதிகள் தொடர்பில் ஒப்பந்தம் எட்டப்படுகிறது.

2008: கியூப அதிபர் பதவியிலி்ருந்து உடல் நலக் குறைவு காரணமாக காஸ்ட்ரோ பதவி விலகல்.

http://www.bbc.com/tamil/global-38115213

Link to comment
Share on other sites

 

அணி சேரா மாநாட்டில் ஒரு அணைப்பு : இந்திராவுடன் காஸ்ட்ரோ (காணொளி)

இந்திய தலைநகர் டில்லியில் 1983 மார்ச் மாதம் நடந்த அணி சேரா நாடுகளின் ஏழாவது உச்சி மாநாட்டுக்கு வந்த கியூபத் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ, அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியை கட்டியணைத்த காட்சி. அணி சேரா நாடுகளின் அமைப்பு இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தோனீஷியாவின் முதல் அதிபர் சுகர்ணோ, யுகோஸ்லேவிய அதிபர் மார்ஷல் டிட்டோ, எகிப்து அதிபர் கமால் அப்தெல் நாசர் மற்றும் கானா அதிபர் க்வாமே இங்ருமா ஆகியோரால் 1961ல் உருவாக்கப்பட்டது.

BBC

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இலங்கையிலும் தமிழ் மக்களால் பிடல் காஸ்ரோ மிகவும் மதிக்கப்பட்டார்.

ஆனால் பிடல் காஸ்ரோவின் கியூப அரசானது தமிழ் மக்களுக்கு விரோதமாக இலங்கை அரசின் இனப்படுகொலையை ஆதரித்தது.

பிடல் காஸ்ரோவின் கியூப அரசானது இலங்கை அரசின் இனப் படுகொலைக்கு வழங்கிய ஆதரவானது தமிழ் மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை மட்டுமல்ல முள்ளிவாய்க்கால் வலியைவிட அதிகமானது.

இந்த கசப்பான உண்மைகளை மறந்து பிடல் காஸ்ரோவை என்னால் போற்ற முடியவில்லை. என்னை மன்னித்து கொள்ளுங்கள்.

எனக்கு காஸ்ரோவைவிட என் தமிழ் இனம்தான் பெரிது. முக்கியமானது.

Link to comment
Share on other sites

ஃபிடல் காஸ்ட்ரோவின் உடல் இன்று இரவு தகனம் : அதிபர் ரவுல் காஸ்ட்ரோ

 

ஃபிடல் காஸ்ட்ரோவின் உடல் இன்று இரவு தகனம் செய்யப்படும் என்றும் இறுதிச் சடங்கு டிசம்பர் மாதம் 4ம் தேதி தென்கிழக்கில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரமான சாண்டியாகோவில்நடைபெறும் என்றும் கியூப அரசு தெரிவித்துள்ளது.

ஃபிடல் காஸ்ட்ரோ (கோப்புப்படம்)

 

 இன்றிரவு தகனம்

கியூபாவின் அரசு தொலைக்காட்சியில் காஸ்ட்ரோவின் சகோதரரும், தற்போதைய அதிபருமான அதிபர் ரவுல் காஸ்ட்ரோ இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ஃபிடல் காஸ்ட்ரோவின் மரணத்தை ஒட்டி கியூபாவில் ஒன்பது நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனிப்போரின் போது புரட்சி மற்றும் எதிர்ப்பின் சின்னமாகத் திகழ்ந்த, முன்னாள் கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ, தனது 90வது வயதில் காலமானார்.

அமெரிக்காவின் கடற்கரை பகுதியில் இருந்து வெகு அருகில் உள்ள ஒரு தீவு நாடான கியூபாவில், உலகின் நீண்ட கால ஆட்சி செய்த கம்யூனிச ஆட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோ.

மறைந்த கியூப தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சீன மக்கள் ஒரு உண்மையான காம்ரேடை இழந்துவிட்டனர் என்றும் காஸ்ட்ரோவின் சாதனைகள் என்றும் நிலைத்திருக்கும் என்றும் சீனா அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்தார்.

ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், காஸ்ட்ரோ ''ஒரு சகாப்தத்தின் சின்னம்'' என்றார்.

போப் பிரான்சிஸ் அவரது மரணம் ஒரு சோக செய்தி மற்றும் அதற்காக பிரார்த்தனை நடத்தப்பட்டது என்று கூறினார்.

இந்திய பிரதமர் மோதி, இருபதாம் நூற்றாண்டின் மிக சின்னமான நபர்களில் ஒருவர் காஸ்ட்ரோ என விவரித்தார்.

http://www.bbc.com/tamil/global-38117858

Link to comment
Share on other sites

காஸ்ட்ரோவின் மறைவைக் கொண்டாடும் அமெரிக்க புலம்பெயர் கியூபர்கள்

 

கியூபப் புரட்சியின் தந்தையும், கியுபாவின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ காலமானதை தொடர்ந்து, அமெரிக்க மாகாணமான ஃபுளோரிடாவில் உள்ள கியூப புலம்பெயர் மக்கள் செறிந்து வாழும் நகரான மையாமியின் தெருக்களில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கோப்புப்படம்
 கோப்புப்படம்

பொதுமக்கள் தங்களுடைய கார்களில் ஒலிப்பான் மற்றும் உலோகத்தட்டு மூலம் சத்தங்களை எழுப்பியும், பட்டாசுகளை வெடித்தும் வருகின்றனர்.

மியாமியின் லிட்டில் ஹவானா மாவட்டம் , புலம் பெயர்ந்து வாழும் பல கியூப மக்கள் அதிகம் வாழும் பகுதியாகும்.

 

கோப்புப்படம்

 கோப்புப்படம்

'கியூபா வேண்டும், காஸ்ட்ரோ வேண்டாம்' என்ற கோஷங்களும் ஆங்காங்கே ஒலித்தன.

மக்கள் கூட்டமிகுந்த தெருக்களில் தடுப்புகளை அமைக்கும் கட்டாயத்திற்கு போலிசார் தள்ளப்பட்டுள்ளனர்.

ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு கொடூரமான சர்வாதிகார ஆட்சியை உருவாக்கியதாகவும், அங்கு அதிகார பூர்வ நிலைப்பாட்டிலிருந்து மிகச் சிறிய அளவு விலகினாலும் மக்கள் துன்புறுத்தப்பட்டதாகவும் கியூப ஜனநாயக இயக்குனரகத்தை சேர்ந்த ஓர்லாண்டோ க்யுட்டெரெஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு காந்த சக்தி மிகுந்த ஆளுமையாக திகழ்ந்தாலும், கியூபாவை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க கடினமாகவும் சில நேரங்களில் மோசமாகவும் நடந்து கொண்டதாக காஸ்ட்ரோவை பலமுறை சந்தித்த பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

http://www.bbc.com/tamil/global-38115874

Link to comment
Share on other sites

 

அமெரிக்க கொலையாத்தை எதிர்த்து நின்ற கியூப டேவிட் -- ஃபிடல் காஸ்ட்ரோ

கியூபா புரட்சியின் தந்தையும் கியுபாவின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ காலமானார். அவருக்கு வயது 90.
ஃபிடல் காஸ்ட்ரோ உலகில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த ஒரு சர்வாதிகாரி.
அவரை ஒழித்துக் கட்ட அமெரிக்கா பல முறை முயன்றபோதும், காஸ்ட்ரோ ஒன்பது அமெரிக்க அதிபர்களைப் பார்த்துவிட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

 இலங்கையிலும் தமிழ் மக்களால் பிடல் காஸ்ரோ மிகவும் மதிக்கப்பட்டார்.

ஆனால் பிடல் காஸ்ரோவின் கியூப அரசானது தமிழ் மக்களுக்கு விரோதமாக இலங்கை அரசின் இனப்படுகொலையை ஆதரித்தது.

பிடல் காஸ்ரோவின் கியூப அரசானது இலங்கை அரசின் இனப் படுகொலைக்கு வழங்கிய ஆதரவானது தமிழ் மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை மட்டுமல்ல முள்ளிவாய்க்கால் வலியைவிட அதிகமானது.

இந்த கசப்பான உண்மைகளை மறந்து பிடல் காஸ்ரோவை என்னால் போற்ற முடியவில்லை. என்னை மன்னித்து கொள்ளுங்கள்.

எனக்கு காஸ்ரோவைவிட என் தமிழ் இனம்தான் பெரிது. முக்கியமானது.

இது கனபேருக்கு தெரியவில்லை நீங்கள் பழையயவர் வரலாறு தரிந்தவர் உங்களுக்கு ஒரு லைக்கு  

Link to comment
Share on other sites

'ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு சர்வாதிகாரி' - ட்ரம்ப்

 

Trump-Yupp-Tv_22187.jpg

க்யூபா நாட்டின் முன்னாள் அதிபர்  ஃபிடல் காஸ்ட்ரோ உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் கூறுகையில், 'காஸ்ட்ரோ ஒரு மிருகத் தன்மை மிகுந்த சர்வாதிகாரியாக இருந்தார். சொந்த நாட்டு மக்களையே நீண்ட ஆண்டுகள் ஒடுக்கி வைத்திருந்தார். க்யூபா ஒரு சர்வாதிகார நாடாக இருந்தது. இனி அந்த நாட்டின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். குறிப்பாக க்யூபா மக்கள் இனி சுதந்திரமாக செயல்படலாம்' என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் காஸ்ட்ரோவின் மறைவுக்கு தற்போது அமெரிக்க அதிபராக இருக்கும் ஒபாமா இரங்கல் தெரிவித்துள்ளார்.

http://www.vikatan.com/news/world/73569-castro-was-dictator-says-trump.art

Link to comment
Share on other sites

8 minutes ago, நவீனன் said:

அதே நேரத்தில் காஸ்ட்ரோவின் மறைவுக்கு தற்போது அமெரிக்க அதிபராக இருக்கும் ஒபாமா இரங்கல் தெரிவித்துள்ளார்.

மனிதன்

Link to comment
Share on other sites

'வரலாறு என்னை விடுதலை செய்யும்!' - சகாப்த நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ

 

fidel03_16246.jpg

"நீங்கள் ஒரு குற்றவாளியைப் பிடித்து விசாரணை செய்வதற்கு முன், உங்களால் குற்றவாளியாக கருதப்படும் அவன் எத்தனை காலம் வேலை இல்லாமல் இருந்தான் எனக் கேட்டதுண்டா? 'உனக்கு எத்தனைக் குழந்தைகள்? வாரத்தில் எத்தனை நாட்கள் உனது குடும்பத்தினர் உணவு உண்பீர்கள்? எத்தனை நாட்கள் பட்டினி கிடந்தீர்கள்?' என்றெல்லாம் அவனிடம் கேட்டதுண்டா? அவனின் சூழ்நிலை பற்றியாவது விசாரித்ததுண்டா? இவைகளைப் பற்றி எதுவும் அறியாமல், அவனைச் சிறையில் தள்ளி விடுகிறீர்கள். ஆனால், கோடிக்கணக்கான ரூபாய்களை கொள்ளை அடிப்பவர்களையும், மக்களின் உரிமைகளைச் சுரண்டுபவர்களையும் ஒரு நாள்கூட சிறையில் தள்ள மாட்டீர்கள். இதுதான் உங்கள் சட்டம்" - 1953 ஆம் ஆண்டு மோன் காடா தாக்குதலில் 76 நாட்கள் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டு பின் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ஃபிடல் காஸ்ட்ரோ நீதிபதியைப் பார்த்து இப்படிக் கேட்கிறார்.

ஃபிடல் காஸ்ட்ரோ பிறப்பு:

கியூபாவின் பிரான் அருகில் ஒரு கரும்பு தோட்டத்தில், 1926-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் நாள் ஏஞ்சல் காஸ்ட்ரோ - லினா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் அல்ஜாந்திரோ காஸ்ட்ரோ. இவரது தந்தை ஏஞ்சல் காஸ்ட்ரோ பெரும் பண்ணையார். அதனால் சுகபோக வாழ்வில் ஃபிடலுக்கு குறைவேதும் இல்லை. இவர் இளைஞனாக இருந்தபோது, அமெரிக்கர்களின் ஏகாதிபத்தியத்தில் கியூபா சிக்குண்டு கிடப்பதைக் கண்டு மனம் வருந்தினார்.

அமெரிக்காவை எதிர்த்த ஃபிடல்

fidel00_16183.jpg

என்னதான்  ஃபிடல் செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அமெரிக்கா கியூபா மக்களை அடிமையாக வைத்திருப்பதைக் கண்டு வெகுண்டெழுந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடத் தொடங்கினார். ஹவானா பல்கலைகழகத்தில், ஃபிடல் படித்துக் கொண்டிருந்த சமயம் இரண்டு முக்கியக் கட்சிகள் மாணவர்களிடையே இயங்கிக் கொண்டிருந்தன. ஒன்று கம்யூனிசம், மற்றொன்று ஆர்த்தோடாக்ஸ் இயக்கம். கியூபா மக்களின் விடுதலைக்கு கம்யூனிசம்தான் மிகச் சரியானது என உணர்ந்த ஃபிடல், கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.


1952 - ல் அமெரிக்காவின் கைப்பாவையான பாடிஸ்டா என்பவர் கியூபாவின் ஆட்சியைப் பிடித்தார். அதனால், பாடிஸ்டா ஒரு அமெரிக்க கைக்கூலி என்பதையும் அவரின் உண்மையான முகத்தைப் பற்றி மக்களுக்குச் சொல்வதற்காகவும் 'குற்றம் சாட்டுகிறேன்' என்ற பத்திரிகையைத் தொடங்கினார் ஃபிடல். ஃபிடலின் எண்ணம் முழுவதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், பாடிஸ்டாவையும் கியூபாவிலிருந்து அடியோடு துரத்தி அடிக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தது. இதனால் ஃபிடலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலானப் பகைமை அதிகமாகிக் கொண்டே இருந்தது.

முதல் தாக்குதல் :

1953-ம் ஆண்டு மோன்காடா ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்துவதற்காக இரவில், செல்லும்போது ஃபிடலின் வாகனம் பழுதாகிறது. உடன் சென்ற மற்றப் போராளிகளோ இருட்டில் வழி தவறியதால், திட்ட மிட்ட அந்தத் தாக்குதல் தோல்வியை சந்திக்கிறது. காஸ்ட்ரோ ராணுவத்திடம் மாட்டிக்கொண்டார். பின் சிறையில் அடைக்கப்பட்டு 1955 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்படுகிறார். அப்போது நீதிமன்றத்தில், 'வரலாறு என்னை விடுதலை செய்யும்' என்று ஃபிடல் நிகழ்த்திய உரைதான் பின்நாளில் வெளிவந்த THE HISTORY WILL ABSOLVE ME என்ற புத்தகமாகும்.

'சே'வுடன் முதல் சந்திப்பும் கியூபா விடுதலையும் :

fidel002_16578.jpg

இப்படியே போராடிக்கொண்டிருந்தால் ஒருபயனும் ஏற்படாது. இனி கெரில்லா யுத்த முறைகளைக் கையாள வேண்டும் என எண்ணி, யுத்த முறைகளைக் கற்றுக்கொள்வதற்காக மெக்சிகோவுக்கு பயணப்படுகிறார். அங்குதான் 'எனது கால்கள் அநீதிகளை எதிர்க்க எல்லைகளைக் கடந்தும் பயணிக்கும்' என்று சொன்ன மாவீரன் 'சேகுவேரா' வை சந்திக்கிறார். கியூபாவின் பிரச்னையை அறிந்த 'சே', 'நானும் உங்களோடு கியூபா வருகிறேன்' என்று சொல்கிறார். இரண்டு மாபெரும் சக்திகள் இணைந்தது தெரியாமல், அமெரிக்காவும், பாடிஸ்டாவும் கியூபாவில் ஆதிக்க வெறியை அதிகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஃபிடலும், சே-வும் இணைந்து அடர்ந்த வனப்பகுதியான சியாரா மேஸ்த்ரா காடுகளில் இளைஞர்களையும், விவசாயிகளையும் ஒன்றுதிரட்டி கடுமையான போர் பயிற்சிகளை வழங்குகிறார்கள். 1956 -ல் கியூபா புரட்சியாளர்கள் தோற்கடிக்கப் படுகிறார்கள். ஆனால் சே, ஃபிடல் காஸ்ட்ரோ, ஃபிடலின் தம்பி ரவுல் காஸ்ட்ரோ உட்பட 12 வீரர்கள் தப்பித்துச் சென்றனர். கிடைத்த வாய்ப்பில், இன்னும் பல இளைஞர்களைத் திரட்டிக் கெரில்லா யுத்தப் படை வீரர்களாக அவர்களையும் மாற்றினார்கள். 1959-ம் ஆண்டு 9,000 கெரில்லா யுத்த வீரர்கள் ஹவானா வழியாக ஊடுருவி பாடிஸ்டா ராணுவ வீரர்களுடன் யுத்தம் புரிந்தபோது, 'இனியும் இவர்களோடு சண்டையிட்டு நம்மால் தப்பிக்க இயலாது' என நினைத்த பாடிஸ்டா கியூபாவை விட்டு தப்பித்து ஓடுகிறான். இந்த யுத்தத்தின் மூலம் அமெரிக்க காலனி ஆட்சி முறை கியூபாவில் முடிவுக்கு வருகிறது. கியூபாவின் ஆட்சி அதிகாரத்துக்கு வருகிறார் ஃபிடல். கியூபா விடுதலைக்குப் பெரும் பங்காற்றியவர் 'சே' என பின்நாளில் ஃபிடல் அறிவிக்கிறார். இப்போதும் உலக வழக்கத்தில் 'சே'வையும்  ஃபிடலையும் இப்படிக் கூறுவார்கள்... 'சிறந்த தலைவன் ஃபிடல் என்றால், ஆகச் சிறந்த தளபதி சே' என்று.

அமெரிக்காவின் சதிகளை முறியடித்த ஃபிடல் :

இவர் பதவியேற்றதை அமெரிக்காவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் ஃபிடலுக்கும் அமெரிக்காவுக்கும் நேரடி மோதல்கள் நடைபெறத் தொடங்கின. ஆனால் அதையெல்லாம் ஃபிடல் வெற்றிகரமாக முறியடித்தார். இதில் ஏமாற்றத்தை சந்தித்த அமெரிக்கா ஃபிடலை எப்படியாவது தன் பக்கம் இழுத்துக்கொள்ளத் திட்டம் தீட்டியது. ஆனால், அனைத்துத் திட்டங்களுமே தோல்வியாகத்தான் இருந்தது. 'கியூபாவுக்கு சொந்தமான எல்லா வளங்களும் கியூபா மக்களுக்கே சொந்தம். வேறு எந்த ஏகாதிபத்தியத்துக்கும் அது கிடையாது' என அறிவித்தார் ஃபிடல். இதனால் கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. அதனால், கியூபாவில் உற்பத்தியான பொருட்கள் அனைத்தும் கியூபாவிலேயே தேங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நேரத்தில் கியூபாவுக்கு ரஷ்ய அரசு கைகொடுக்கத் தயாரானது. கியூபாவின் பொருட்களை ரஷ்யாவில் இறக்குமதி செய்ய சம்மதித்தது அந்த நாடு. இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற அமெரிக்கா, அமெரிக்காவின் மத்திய உளவுப் பிரிவின் துணையோடு ஃபிடலை கொல்லத் திட்டம் தீட்டியது. ஒரு முறை இருமுறையல்ல 650- க்கும் அதிகமான முறை ஃபிடலைக் கொல்ல முயற்சிகள் செய்தது C.I.A எனப்படும் அமெரிக்காவின் மத்திய உளவுப் பிரிவு.

ரசாயனக் குண்டுகள் போடுவது, சுருட்டில் விஷம் தடவிக் கொடுப்பது, துப்பாக்கியால் சுடுவது, மேலாடையில் விஷ வாயுவைத் தேய்த்துக் கொடுப்பது, விஷ மாத்திரைகளைக் கொடுப்பது, விபத்தினை ஏற்படுத்துவது உள்ளிட்டத் திட்டங்களை செயல்படுத்தி 650-க்கும் மேற்பட்ட முறை ஃபிடலைக் கொல்ல முயற்சி செய்தது அமெரிக்கா. ஆனால் அந்த முயற்சிகள் அனைத்திலும் ஃபிடல் தப்பித்துக் கொண்டே இருந்தார். கொலைத் திட்டங்களில் ஒவ்வொரு முறையும் தப்பித்து வருவதால் ஃபிடலைப் பற்றி மக்களிடத்தில் தவறான கருத்துகளையும் பரப்பத் தொடங்கியது அமெரிக்கா. இதனால் அடிக்கடி மக்கள் முன் தோன்றி உரையாற்ற வேண்டிய அவசியம் ஃபிடலுக்கு இருந்தது. எப்படியாவது ஃபிடலைக் கொன்று, கியூபாவில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தத் தீவிரக் கவனத்தைக் காட்டி வந்தது அமெரிக்கா. ஆனால், அவர்கள் செய்த சதிகள் அனைத்தையும் தூள் தூளாக்கினார் ஃபிடல். பிடலின் இந்த வாக்கியம் இப்போது மட்டுமல்ல எப்போதும் மிகப் பிரசித்தி பெற்றது 'படுகொலை முயற்சியில் உயிரோடு இருப்பதற்கான ஒலிம்பிக் போட்டி இருந்தால், கண்டிப்பாக நான்தான் தங்கப் பதக்கம் வெல்வேன்.

fidel04_16140.jpg

இப்படி ஒவ்வொரு முறையும் அமெரிக்காவின் சதி செயல்களில் இருந்து தப்பித்து கியூபா மக்களின் நல் வாழ்வுக்காகவே வாழ்ந்து வந்தார். 1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும் அதன் பின் 1976-லிருந்து அதிபராகவும் திகழ்ந்து வந்த ஃபிடல் வயது மூப்பின் காரணமாக அதிபர் பதவியை 2008ம் ஆண்டு  தனது தம்பி ரவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வெடுத்து வந்தார். அவருக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போகவே சிகிச்சைக்காக மருத்துவமனை சென்று வந்தார். இந்த நிலையில்  கியூப நேரப்படி 25-ம் தேதி இரவு பத்தரை மணி அளவில் இயற்கை மரணம் அடைந்தார் ஃபிடல் காஸ்ட்ரோ. கடந்த ஆகஸ்ட் மாதம்தான் தனது 90-வது பிறந்தநாளைக் கொண்டாடினார், என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபிடலின் புகழ்மிக்க பொன்மொழிகள்:

*இறந்த காலத்துக்கும் வருங்காலத்துக்கும் இடையே மரணத்துக்கான போராட்டம்தான் புரட்சி!

*கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்!

*நீங்கள் என்னைக் தண்டியுங்கள், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஏனெனில், வரலாறு எனக்கு நீதி வழங்கும்!

*அவர்கள் சோஷலிசத்தின் தோல்வி பற்றி பேசுகின்றனர். ஆனால், ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் எங்கே முதலாளித்துவம் வெற்றி பெற்றுள்ளது?

இப்போதும் கியூபாவில் ஒரு வழக்கம் உண்டு. அதிகாலையில் வகுப்பறைகளுக்குச் செல்லும் முன், அத்தனைக் குழந்தைகளும் ஒருமித்தக் குரலில் முழங்குகிற வாசகம் என்ன தெரியுமா? ‘‘ஆம், எங்களது முன்னோர்கள் கம்யூனிஸ்ட்களாக இருந்தனர். நாங்கள் 'சே'-வைப்போல ஃபிடல் காஸ்ட்ரோ-வைப் போல இருப்போம்!” என்பதே. ஆம்.... அந்த மாபெரும் தலைவரின் ஆத்மா கண்டிப்பாகக் காற்றில் கலந்து கியூபா மக்களை வழி நடத்திக் கொண்டே இருக்கும்!

http://www.vikatan.com/news/world/73550-history-will-absolve-me---fidel-castro.art

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளி வாய்க்கால் அழிவுக்கும் , பிடல் காஸ்டரோவுக்கும் நேரடி தொடர்பு இருந்ததாக நான் அறியவில்லை.
ஐ.நா சபையில் வரும் வாதங்கள், விவாதங்களில் செலுத்தப்படும் ஓட்டுக்கள் வைத்துக்கொண்டு ஒரு தீர்மானிப்பது சரியல்ல. கியூபா இலங்கைக்கு உறுதுணையாக நீண்டது மனக்கசப்பான செயல் தான்.
எம்மவர்களால் எந்தளவுக்கு அரசியல் "லோபியிங்" செய்யப்பட்டதோ யார் அறிவார்கள்.
எப்படியோ வரலாறு படைத்த ஒரு தலைவன் பிடல் காஸ்ரோ.
கியூபா மக்களை ஒரு  அணியில் திரட்டியவர். தன்னிடம் இருப்பதை வைத்துக்கொண்டு, தன்னால் எதை படைக்க முடியுமோ அதையே அவர் செய்தார். 

"Under Fidel, and now Raul Castro, Cuba has a literacy rate of 98.9%, a infant mortality rate of 6.1 per thousand, complete with universal health care and education; which is significantly more than what the USA has got." 

இதைவிட எதை நான் எழுதிவிட முடியும்... 

வரலாறு உன் பெயர் சொல்லும்.... 
அஞ்சலி....
 

 

Link to comment
Share on other sites

நான் உரையாற்றுவது இதுவே கடைசியாக இருக்கலாம்... ஃபிடல் காஸ்ட்ரோவின் கடைசி உரை !

 

e4_18050.jpg


'கியூபா' இந்த தேசத்தின் அடையாளமாக இருந்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ. உலக கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும், கியூபா புரட்சியின் தலைவருமான ஃபிடல் காஸ்ட்ரோ உடல்நலம் குன்றி இன்று உயிரிழந்தார். உலகில் நீண்ட நாள் சேவையாற்றிய அரசியல் தலைவர்களில் மிக முக்கியமானவரும், முதன்மையானவருமான ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு வயது 90.

இவர் கடைசியாக உரை நிகழ்த்தியது க்யூபா கம்யூனிஸ்ட் கட்சியின் 7வது மாநாட்டில். கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி அவர் நிகழ்த்திய உரை மிக முக்கியமான உரையாகப் பார்க்கப்படுகிறது. ஃபிடல் காஸ்ட்ரோ கடைசியாக பேசியதாவது.

நெருக்கடியான காலகட்டங்களின்போது எந்தவொரு பகுதி மக்களையும் அணிதிரட்டுவதும், அவர்களுக்குத் தலைமையேற்பதும் மிகக் கடுமையான காரியம். ஆனால் அப்படி மக்களை அணிதிரட்டாமல் மாற்றங்கள் சாத்தியமில்லை. நான் ஏன் ஒரு சோசலிஸ்ட் ஆனேன்?. இன்னும் சரியாக கேட்க வேண்டும் என்றால், நான் ஏன் கம்யூனிஸ்ட் ஆனேன்?

e2_18244.jpg

ஏழைகளைச் சுரண்டுவதை தங்களது உரிமையாக எடுத்துக் கொண்டவர்களாலும், உழைப்பு, திறமை மற்றும் ஒட்டுமொத்த மனித சக்தியால் உருவாக்கப்படும் அனைத்து பொருட்செல்வத்தையும் முற்றாக அபகரித்துக் கொள்வது தங்களது உரிமையாக எடுத்துக் கொண்டவர்களால் வரலாறு நெடுகிலும் கம்யூனிஸ்ட் என்ற வார்த்தை மிகவும் கீழ்த்தரமானதாக சித்தரிக்கப்பட்டு வந்துள்ளது. கம்யூனிச சித்தாந்தம் என்பது சிறுமைப்படுத்தப்பட்டு வந்துள்ளது. வரலாறு நெடுகிலும் மனிதர்கள், இந்த இரண்டில் எதைத் தேர்வு செய்வது என்ற மனநிலையிலேயே இருந்து வந்திருக்கிறார்கள்.

நாம் அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் நான் எளிமையாகச் சொல்கிறேன். நான் ஏதும் அறியாதவனும் அல்ல, எல்லாம் தெரிந்தவனும் அல்ல; நான் பொருளாதாரம் படித்துக் கொண்டிருந்த போது நானாகவே எனது சித்தாந்தத்தைப் பெற்றுவிடவில்லை. நான் சட்டம் மற்றும் அரசியல் அறிவியல் மாணவனாக இருந்தபோது தனியாக பாடம் நடத்தும் ஆசிரியரைப் பெற்றிருக்கவில்லை. பெரும் கடல் போன்ற பாடமான அரசியல் அறிவியலுக்கு ஆசிரியரைப் பெற்றிருக்கவில்லை.

e1_18386.jpg

நான் 20 வயது இளைஞனாக இருந்தபோது விளையாட்டிலும், மலையேறுவதிலும் ஆர்வத்துடன் இருந்தேன். அந்த சமயத்தில் மார்க்சியம் - லெனினியம் குறித்து கற்பிக்கவும், படிக்கவும் உதவி செய்வதற்கு எந்த ஆசிரியரும் இல்லை; அந்த சமயத்தில் நான் மார்க்சிய, லெனினியக் கோட்பாடுகளைப் பற்றி லேசாக அறிந்திருந்தேன். அவ்வளவு தான். அதற்கு மேல் அதையும் நான் தெரிந்திருக்கவில்லை.

சோவியத் ஒன்றியத்தின் மீது முழுமையான நம்பிக்கை மட்டுமே என்னை உற்சாகமூட்டியது. மாமேதை லெனினின் பணிகள், சோவியத் புரட்சியின் 70 ஆண்டுகள் கழித்து மீறப்பட்டன. ரஷ்யப்புரட்சியைப் போன்று இன்னொரு புரட்சி நடப்பதற்கு 70 ஆண்டுகாலம் காத்திருக்கத் தேவைப்படாது என்று கருதுகிறேன். காலனி ஆதிக்கத்திற்கு எதிராகவும், ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் நடைபெற்ற மிகப்பிரம்மாண்டமான போராட்டத்தின் விளைவாக எழுந்த சோவியத் புரட்சியைப் போன்றதொரு பிரம்மாண்டமான சமூகப் புரட்சியை இந்த மனித குலம் அவசியம் பார்க்க வேண்டியுள்ளது.

e3_18592.jpg

இன்றைக்கு பூமியின் தலைக்கு மேலே மிகமிகப்பெரிய ஆபத்து தொங்கிக் கொண்டிருக்கிறது; நவீன ஆயுதங்களின் பேரழிவு சக்தியிடமிருந்து அந்த ஆபத்து வந்துகொண்டிருக்கிறது; அந்த ஆயுதங்கள் இந்த புவிக்கோளத்தின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கக் காத்திருக்கின்றன; புவியின் மீது மனிதகுலம் வாழ்வதை சாத்தியமற்றதாக மாற்றிடக் காத்திருக்கின்றன.

டைனோசர்கள் மறைந்ததைப் போல, இன்றைய உயிரினங்களும் மறைந்துபோகும் ஆபத்து காத்திருக்கிறது. ஒன்று, மிக அறிவார்ந்த வாழ்க்கையின் புதிய வடிவங்கள் எதிர்காலத்தில் உருவாகலாம்; அல்லது சூரியனின் வெப்பம், மெல்ல மெல்ல அதிகரித்து, சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்துக் கோள்களையும் துணைக்கோள்களையும் அது உருக்கி அழித்துவிடலாம். இதை பெருவாரியான விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கிறார்கள்.அவர்களது கோட்பாடுகளில் சில உண்மையாக இருக்குமானால்  நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு அதனுடைய வீச்சு புரியாமல் கூட இருக்கலாம்  அதை உணர்ந்து, இன்னும் கற்றுக்கொண்டு எதார்த்தத்திற்கு நம்மை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.

புவிக்கோளத்தின் உயிரினங்கள், காலவெளியில் இன்னும் நீண்ட காலத்திற்கு உயிர்வாழுமானால், எதிர்காலச் சந்ததியினர், நாம் அறிந்துகொண்டு பங்காற்றியதைவிட இன்னும் அதிகமாக அறிந்துகொண்டு செயலாற்றுவார்கள்.ஆனால், அவர்கள் முதலில் மிகப்பெரிய பிரச்சனை ஒன்றைத் தீர்த்தாக வேண்டும்.

e5_18482.jpg

உண்மையில் கோடிக்கணக்கான மனிதர்களுக்கு தேவைப்படுவதைவிட, மிக மிகக் குறைவான குடிநீரும், இயற்கை வளங்களுமே உள்ளது. இந்நிலையில் தவிர்க்க முடியாத வகையில் துன்ப துயரங்களுக்குள் சிக்கியிருக்கும் மக்களுக்கு - எப்படி உணவளிப்பது என்பதைப் பற்றி அவர்கள் யோசித்தாக வேண்டும். நீங்கள் ஆச்சரியப்படலாம், எனது இந்தப் பேச்சில் அரசியல் எங்கே போனது என்று யோசிக்கலாம். நான் இதையெல்லாம் சொல்வதற்கு வருத்தப்படுகிறேன்; ஆனால் இன்றைக்கு அரசியல் என்பது நான் கூறிய இந்த வார்த்தைகளில்தான் அடங்கியிருக்கிறது.

மனிதர்கள் மேலும் மேலும் இந்த உண்மைகளைப் பற்றி கவலைப்பட வேண்டும். இன்னும் ஆதாம் - ஏவாள் காலத்திய மூடநம்பிக்கைகளில் ஆழ்ந்து கிடக்கக்கூடாது. எந்தவிதமான தொழில்நுட்பமும் சென்றடையாத, பசியோடு காத்திருக்கும் கோடிக்கணக்கான ஆப்பிரிக்க மக்களுக்கு யார் உணவளிப்பது? மழை இல்லை, அணைகள் இல்லை, நிலத்தடி நீர் இல்லை; முற்றிலும் மணலால் மூடப்பட்ட அந்தப் பிரதேசத்தின் மக்களுக்கு யார் உணவு தருவது?

இந்தப் பிரச்சனைகள் அனைத்திலும் நாம் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி, அடித்து நொறுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த அடிப்படை அம்சங்களின் மீது இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை எனக் கருதுகிறேன். விரைவில் எனக்கு 90 வயது ஆகப்போகிறது. 90 வயது குறித்து எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த ஒரு கருத்தும் இல்லை. அதில் பெரிதாக மகிழ்ச்சியடைவதற்கும் ஒன்றும் இல்லை. நானும் விரைவில் எல்லோரையும் போலவே மரிக்கப்போகிறேன். நாம் எல்லோருமே அந்த நிலையை எட்டுவோம்.

e6_18129.jpg

ஆனால் கியூபக் கம்யூனிஸ்ட்டுகளின் சிந்தனைகள் என்றென்றும் ஒரு புவிக்கோளத்தின் அழியாத சின்னமாக மிளிரும்; மனிதகுலத்தின் மாண்புகளைக் காப்பதற்காக அந்தச் சிந்தனைகள் செயலாற்றிக் கொண்டே இருக்கும்; மனித குலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் பொருட்களையும், கலாச்சாரச் செல்வங்களையும் அது உற்பத்தி செய்துகொண்டே இருக்கும்; அந்த மகத்தான பொன்னுலகத்தைப் பெறுவதற்காக நாம் ஓய்வின்றி போராடுவது அவசியம்.

லத்தீன் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள எனது சகோதரர்களே, கியூப மக்களும், கியூப மக்களின் சிந்தனைகளும் மகத்தான வெற்றி பெறுவது என்பது உறுதி. இத்தகையதொரு மாநாட்டு அரங்கில் நான் உரையாற்றுவது இதுவே கடைசியாக இருக்கலாம். தொடர்ந்து முன்னேறுவோம்; அந்தப் பாதையை மிகச்சரியானதாக இருக்குமாறு செப்பனிடுவோம்; அதற்காக நாம் ஏற்றுக்கொண்ட சித்தாந்தத்தின் மீது அதிகபட்ச விசுவாசத்துடனும் மிக உயர்ந்த ஒன்றுபட்ட சக்தியுடனும் முன்னேறுவோம். நம்முடைய இந்தப் பயணம் எவராலும் தடுக்க முடியாதது.

இவ்வாறு ஃபிடல் காஸ்ட்ரோ பேசியிருந்தார்.

அவர் அன்று சொன்னதைப்போல இதுவே அவரது இறுதி உரையாகவும் மாறிப்போனது தான் சோகம்.

http://www.vikatan.com/news/coverstory/73558-this-might-be-my-last-speech---this-is-fidel-castros-last-speech-ever.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள் ......மாவீரர் வாரத்தில் அவரும் மறைந்திருக்கின்றார்,,,,,


எனது ஆதங்கம்.....அவர் செய்த ஜனநாயக விரோத செயல்களை மறைத்து ,அவரை புரட்சிவாதி என முழங்கும் எம்மவர்கள் .....எமது போராளிகளை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதில் பின் நிற்பதில்லை......
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, putthan said:

அஞ்சலிகள் ......மாவீரர் வாரத்தில் அவரும் மறைந்திருக்கின்றார்,,,,,


எனது ஆதங்கம்.....அவர் செய்த ஜனநாயக விரோத செயல்களை மறைத்து ,அவரை புரட்சிவாதி என முழங்கும் எம்மவர்கள் .....எமது போராளிகளை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதில் பின் நிற்பதில்லை......
 

விருப்பு புள்ளி கொடுப்பதற்கு என்னிடம் இருப்பு இல்லை புத்தன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சி மூலம் நீண்டகாலம் ஜனாதிபதியாக இருந்து கல்வி, மருத்துவத்தில் முன்னேற்றத்தை கியூப மக்களுக்குத் தந்த ஃபிடல் காஸ்ரோவிற்கு அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

3 minutes ago, கிருபன் said:

புரட்சி மூலம் நீண்டகாலம் ஜனாதிபதியாக இருந்து கல்வி, மருத்துவத்தில் முன்னேற்றத்தை கியூப மக்களுக்குத் தந்த ஃபிடல் காஸ்ரோவிற்கு அஞ்சலிகள்.

 

கல்வியில் முன்னேறிய நாடு எனில் ஏன் சிறுவர் விபச்சாரத்தினை இன்னும் ஏன் ஊக்குவிக்கின்றனர்? இங்கு கனடா தமிழ் பிரமுகர்கள் கியூபா போவதே சிறுமிகளுடன் உடலுறவு கொள்ளவும் அங்குள்ள இளம் பாலியல் தொழிலாளர்களுடன் சல்லாபிக்கவுமே.

தன் இளம் பராயத்தினை விற்றுப் பிழைக்கும் கியூபாவை தோற்றுவித்த ஃபிடல் தோற்றுப் போன கம்யூனிசத்தின் இன்னொரு உதாரணம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நிழலி said:

 

கல்வியில் முன்னேறிய நாடு எனில் ஏன் சிறுவர் விபச்சாரத்தினை இன்னும் ஏன் ஊக்குவிக்கின்றனர்? 

தன் இளம் பராயத்தினை விற்றுப் பிழைக்கும் கியூபாவை தோற்றுவித்த ஃபிடல் தோற்றுப் போன கம்யூனிசத்தின் இன்னொரு உதாரணம்

 

இது உண்மையா நிழலி?அல்லது (அமெரிக்கா எகாதிபத்தியவாதிகளின் பொய் பிரச்சாரமோ).......அப்படியாயின் "காசேதான் கடவுளடா " என்ற தனிமனித ஆசையை எந்த புரட்சிவாதியாலும் மாற்றமுடியாது.....

இங்கு கனடா தமிழ் பிரமுகர்கள் கியூபா போவதே சிறுமிகளுடன் உடலுறவு கொள்ளவும் அங்குள்ள இளம் பாலியல் தொழிலாளர்களுடன் சல்லாபிக்கவுமே.

 கனடா தமிழ் எகாதிபத்திகளின்உந்த‌ செயல் வன்மையாக கண்டிக்கவேண்டும்tw_tounge_wink:

Link to comment
Share on other sites

Just now, putthan said:

இது உண்மையா நிழலி?அல்லது (அமெரிக்கா எகாதிபத்தியவாதிகளின் பொய் பிரச்சாரமோ).......அப்படியாயின் "காசேதான் கடவுளடா " என்ற தனிமனித ஆசையை எந்த புரட்சிவாதியாலும் மாற்றமுடியாது.....

100 வீத உண்மை புத்தன். காசு கொடுத்தால் எத்தனை வயது சிறுமியையும் கியூபாவில் பாலுறவுக்கு அழைக்க முடியும் என்பதுடன் இதனை ஒரு விற்பொருளாக (Selling product)  உல்லாச பயண முகவர்கள் விற்கின்றனர்

கனடாவில் இப்படி கியூபா போய் சிறுமிகளை பயன்படுத்தியவர்களை கண்காணித்து தண்டனை கொடுக்கும் ஒரு நடவடிக்கையை பழமைவாத கட்சி ( Conservatives) ஆரம்பித்து இருந்தது....ஆனால் இன்றிருக்கும் இடது சாரி சார்பான லிபரல் கட்சி அதை கைவிட்டு விட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, நிழலி said:

 

கல்வியில் முன்னேறிய நாடு எனில் ஏன் சிறுவர் விபச்சாரத்தினை இன்னும் ஏன் ஊக்குவிக்கின்றனர்? இங்கு கனடா தமிழ் பிரமுகர்கள் கியூபா போவதே சிறுமிகளுடன் உடலுறவு கொள்ளவும் அங்குள்ள இளம் பாலியல் தொழிலாளர்களுடன் சல்லாபிக்கவுமே.

தன் இளம் பராயத்தினை விற்றுப் பிழைக்கும் கியூபாவை தோற்றுவித்த ஃபிடல் தோற்றுப் போன கம்யூனிசத்தின் இன்னொரு உதாரணம்

 

 விக்கிபீடியா இப்படிச் சொல்கின்றது.

 

Although Fidel Castro sought to eliminate prostitution after taking power, the discrepancy between typical Cuban wages (less than one US dollar per day) and the spending power of foreign tourists lures some Cubans, including minors,[21] into prostitution. However, allegations of widespread sex tourism have been downplayed by Cuban justice minister Maria Esther Reus.[22] According to the Miami Herald, prostitution is not illegal in Cuba, but procuring a prostitute for others is outlawed. The age of sexual consent on the island is 16.[22] According to a travel advice website by the government of Canada, "Cuba is actively working to prevent child sex tourism, and a number of tourists, including Canadians, have been convicted of offences related to the corruption of minors aged 16 and under. Prison sentences range from 7 to 25 years."[23]It is illegal to import, possess or produce pornography in Cuba.

While the growth of tourism has benefited the city of Havana economically, there have been several negative side effects. One such side effect is the revival of sex tourism in the city. Sex tourism was a central part of the tourism industry before the Revolution. However, after 1960, prostitution was essentially eradicated on the island due to government initiatives and a significant drop in demand as tourism was minimized.[24]With tourism becoming more prevalent in the 1990s, however, so did the practice of prostitution. The demographic profile of tourists (the overwhelming majority being men between ages 25–60) is a key indicator of the existence of prostitution. Additionally, websites and magazines, such as Playboy, have outlined the opportunities for both heterosexual and homosexual sex tourism.[24] According to Trumbull, many prostitutes engage in the practice out of economic necessity, but they do not work in oppressive conditions and a large number of prostitutes in contemporary Havana see the work as a way to earn a better living than if they were to work in open jobs throughout the city.[24]Therefore, contemporary prostitution is different than the sex tourism of the 1950s in this regard.[citation needed]

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கியூபாவின் தேசத் தந்தைக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேற்று இனத்தவர்களை விட இப்போ எல்லாம் நம்மவர்களே உல்லாசப்பயணம் போவது  அதிகம்..அதிலும் கியுபா பக்கேஜ் கேட்பவர்களே அதிகம்.அப்படி என்ன தான் கியூபாவிற்குள் கொட்டிக்கிறது........சிறிது காலம் நானும் பயண முகவராக இருந்திருக்கிறேன்...அதனடிப்படையில் மக்களின் ஊத்தைக் கேள்விகளுக்கு பதில் சொல்வ இயலாது திணறியிருக்கிறேன்..நம்மவர்களின் ஆசைகள் . தேவைகள்இப்படி எல்லாமா இருக்கிறது என்று நிறைய அரிகண்டப்பட்டிருக்கிறேன்.இது தான் கியுபா.நான் வேலை குயிட் பண்ணீட்டன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏.............................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.