Jump to content

அப்போலோவில் திடீர் பரபரப்பு


Recommended Posts

அப்போலோவில் திடீர் பரபரப்பு

 

உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்து, சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் இன்று மாலை முதல் அப்போலோ வளாகம் பரபரப்படைந்துள்ளது.

jaya_apollo_19537.jpg


குறிப்பாக அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் அனைத்து உயர் போலீஸார்களும் அப்போலோ விரைந்துள்ளதாக தகவல்கள்  வருகின்றன. நீண்ட நாட்களுக்கு பின்னர், அரசுத்துறை உயர் அதிகாரிகள் அப்போலோ விரைந்துள்ளதால், மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது. சென்னையில் இருக்கும் காவல் நிலையங்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறதாம்.

மருத்துவர்கள், ஜெயலலிதாவின் இதய செயல்பாடுகளை உற்று நோக்கி வருகிறார்களாம்

இதனால் கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்போலோவில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது

http://www.vikatan.com/news/tamilnadu/74154-tense-situation-in-apollo-hospital.art

அப்போலோவில் குவியும் அதிமுகவினர்

 

 

உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்து, சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் இன்று மாலை முதல் அப்போலோ வளாகம் பரபரப்படைந்துள்ளது.

apollo_20099.jpg

மதுசூதனன்,சைதை துரைசாமி, பா. வளர்மதி ஆகியோர் தற்போது அப்போலோ மருத்துவமனை வந்துள்ளார்கள். அப்போலோ மருத்துவமனையின் வாயிலில் அதிமுகவினர் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். ஏறத்தாழ அனைத்து தமிழக அரசு உயர் அதிகாரிகள், காவல் துறையினர் அப்போலோவிற்கு வந்து இருக்கிறார்கள். அப்போலோவில் பரபரப்பான சூழலில் நிலவுகிறது

http://www.vikatan.com/news/tamilnadu/74155-apollo-crowded-with-admk-officials.art

Link to comment
Share on other sites

  • Replies 79
  • Created
  • Last Reply
முதல்வர் ஜெ.,க்கு திடீர் உடல்நலக் குறைவு
 
அப்பல்லோவுக்கு விரைகிறார் தமிழக கவர்னர்

முதல்வர் ஜெ., அவசர சிகிச்சைப்பிரிவிற்கு மாற்றம்

http://www.dinamalar.com/

முதல்வர் ஜெ.,வுக்கு திடீர் மாரடைப்பு :அப்பல்லோ
Link to comment
Share on other sites

ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு
-----------------------------
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாகவும் இருதயவியல் நிபுணர்கள், நுரையீரல் நிபுணர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள் அவரது உடல் நிலையைக் கண்காணித்துவருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ஆம் தேதியன்று உடல் நலக் குறைவின் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுவந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்தப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

BBC

 

 

 

 

அப்போலோவில் இப்போது! #Photos

 

அப்போலோ வளாகம் மீண்டும் பரபரப்படைந்துள்ளது. ஒரே நேரத்தில் தமிழ அரசு துறை அதிகாரிகள் குவிந்துள்ளனர். அதே போல் அதிமுகவினர்களும் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அப்போலோவில் தற்போது நிலவும் நிலைமை குறித்து லேட்டஸ்ட்ஸ் புகைப்படங்களின் தொகுப்பு கீழே.

d08b7a2d-a1ff-46e1-b88a-5018a7396a8f_211

585b9d5a-cd72-4dc0-81aa-546c2f2f4025_215

d0b74794-9848-49b0-b596-471e58e3a469_211

d08b7a2d-a1ff-46e1-b88a-5018a7396a8f_210

3fb1feec-a553-4b8c-bf2a-514666a91fb7_215

7b8b7d0c-13a0-461c-b0cb-96fe0e0e4ed9_212

8604e187-c986-410b-bc34-0523b401a07f_214

196eb2c7-7f4f-48a6-9f2b-5d69b798a988_215

படங்கள் நிவேதன் குமார்

http://www.vikatan.com/news/tamilnadu/74156-tense-situation--continues-in-apollo-photos.art

Link to comment
Share on other sites

முதல்வருக்கு மாரடைப்பு: அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
 
52136987.jpg
 
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதயநோய் மருத்துவர்கள், சுவாசயியல் மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அப்பல்லோ மருத்துவமனையில் அதிமுக தொண்டர்கள், உயர் அதிகாரிகள் குவிந்ததால் பரபரப்பு
 
3211111111111.jpgஅப்பல்லோவில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென பரபரப்பு ஏற்பட்டது. உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி உள்பட உயர் போலீஸ் அதிகாரிகள் அப்பல்லோவில் குவிந்தனர். செய்தி நிறுவனங்களின் புகைப்படக்காரர்கள், நிருபர்கள் அப்பல்லோவில் குவிந்தனர். அப்பல்லோ தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வந்தனர். 
 
ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, அவர் நடக்க ஆரம்பித்துள்ளார். இன்று போயஸ் கார்டன் திரும்புவார் என்று ஒரு பக்கம் செய்தி வெளியானது. இன்னொரு பக்கம் அவர் உடல்நிலை சரியில்லை என்று செய்தி வெளியானது. அவரது இதயத் துடிப்பில் கவனம் செலுத்துகிறார்கள் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. 
 
நாம் விசாரித்ததில் அப்பல்லோ டாக்டர்கள் ஜெயலலிதா செயற்கை சுவாத்தில் இருந்து இயற்கை சுவாசத்திற்கு 90 சதவீதம் வந்துவிட்டார். அப்படி அவர் இயற்கையாக சுவாசித்துக் கொண்டிருக்கும்போதே திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. செயற்கை சுவாச கருவிகளோடு கூடிய சிசியு வார்டு பகுதியில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருப்பதால் டாக்டர்கள் செயற்கை சுவாச கருவிகள் மூலம் அந்த மூச்சுத் திணறலை சரிசெய்துவிட்டார்கள். இந்த தகவலை கேள்விப்பட்ட போலீஸ் உயர் அதிகாரிகள், அப்பல்லோவிற்கு விரைந்துள்ளார்கள். இதனால் செய்தி நிறுவனங்களின் புகைப்படக்காரர்களும், நிருபர்களும் அப்பல்லோவில் குவிந்தார்கள் என்கிறது அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள். 
 
தாமோதரன் பிரகாஷ்

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=178945

 

Link to comment
Share on other sites

முதல்வர் ஜெ.,விற்கு இதயத்துடிப்பு முடக்கம்: அப்போலோ அறிக்கை

 

496bcdca-939e-4470-aff9-31ecc1bf64b0_213

அப்போலோ மருத்துவமனை வளாகம் மீண்டும் பரபரப்படைந்துள்ளது இந்நிலையில் அப்போலோ மருத்துவமனை சற்றுமுன் அறிக்கை அனுப்பியுள்ளது. அதில், ஜெயலிலதாவுக்கு மாலை இதய துடிப்பு முடக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக இதய மற்றும் நுரையீரல் துறை நிபுணர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் அப்போலா தெரிவித்துள்ளது. 

http://www.vikatan.com/news/tamilnadu/74158-jeyalalithaa-suffered-cardiac-arrest.art

Link to comment
Share on other sites

ஆளுநர், பிரதமர் அப்போலோ வருவதாகத் தகவல்..!?

 

modi_ad_1_600_22100.jpg

இன்று மாலை முதல்வர் ஜெயலலிதாவுக்கு இதயத்துடிப்பு முடக்கம் ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, அவருக்கு அப்போலோ மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கேட்டறிந்துள்ளார். இன்று இரவு ஆளுநர் அப்போலோவுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே போல பிரதமர் நரேந்திர மோடியும் அப்போலோவுக்கு வரக்கூடும் எனத் தகவல்கள் கூறுகின்றன.

http://www.vikatan.com/news/tamilnadu/74159-governor-and-pm-modi-might-visit-apollo-hospital.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி இவன்களின் செய்தியை பார்ப்பதை விட தமிழிச்சி செய்தி அந்த மாதிரி போகும் அவங்க முகநூல் இன்னும் இருக்கா இல்லையா ? தெரிலையே .இனியும் இழுத்துக்கொண்டு இருக்காங்கள் போல் இருக்கு ....................

Link to comment
Share on other sites

அப்போலோவில் என்ன நடக்கிறது? #ApolloSpotUpdates

 

 

உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்து, சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் இன்று மாலை முதல் அப்போலோ வளாகம் பரபரப்படைந்துள்ளது.

 

apollo_21202.jpg

மாலை 7.30 மணி

குறிப்பாக அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் அனைத்து உயர் போலீஸார்களும் அப்போலோ விரைந்துள்ளதாக தகவல்கள்  வருகின்றன. நீண்ட நாட்களுக்கு பின்னர், அரசுத்துறை உயர் அதிகாரிகள் அப்போலோ விரைந்துள்ளதால், மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது. சென்னையில் இருக்கும் காவல் நிலையங்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறதாம்.

மருத்துவர்கள், ஜெயலலிதாவின் இதய செயல்பாடுகளை உற்று நோக்கி வருகிறார்களாம்

இதனால் கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்போலோவில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது

இரவு 8.30 மணி

மதுசூதனன்,சைதை துரைசாமி, பா. வளர்மதி ஆகியோர் தற்போது அப்போலோ மருத்துவமனை வந்துள்ளார்கள். அப்போலோ மருத்துவமனையின் வாயிலில் அதிமுகவினர் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். ஏறத்தாழ அனைத்து தமிழக அரசு உயர் அதிகாரிகள், காவல் துறையினர் அப்போலோவிற்கு வந்து இருக்கிறார்கள். அப்போலோவில் பரபரப்பான சூழலில் நிலவுகிறது

இரவு 9.30 மணி

496bcdca-939e-4470-aff9-31ecc1bf64b0_213

அப்போலோ மருத்துவமனை வளாகம் மீண்டும் பரபரப்படைந்துள்ளது இந்நிலையில் அப்போலோ மருத்துவமனை சற்றுமுன் அறிக்கை அனுப்பியுள்ளது. அதில், ஜெயலிலதாவுக்கு மாலை இதய துடிப்பு முடக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக இதய மற்றும் நுரையீரல் துறை நிபுணர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் அப்போலா தெரிவித்துள்ளது

http://www.vikatan.com/news/tamilnadu/74157-tense-situation-continues-in-apollo-apollospotupdates.art

Link to comment
Share on other sites

ஜெயலலிதா உடல்நிலை: மருத்துவமனையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ்

 
 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து தெரிந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்போலோ மருத்துவமனைக்கு வருகைத்தந்துள்ளார்.

மருத்துவமனைக்கு விரைகிறார் ஆளுநர் வித்தியாசாகர் ராவ்
 

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மும்பையில் இருந்த தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகரிடம் ஜெயலலிதா உடல்நிலை குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து, மும்பையிலிருந்து புறப்பட்டு தமிழகம் திரும்பினார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்.

இச்சூழலில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்ட செய்தி குறித்து கவலை அடைந்தேன். அவர் விரைவில் குணம்பெற பிரார்த்திக்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

@RashtrapatiBhvn 

மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் தமிழக காவல் துறை தலைவரிடம் பேசியுள்ளனர். தமிழகத்தில் பாதுகாப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.bbc.com/tamil/india-38203048?ocid=socialflow_facebook

 

 

அப்பல்லோ மருத்துவமனை வந்தார் கவர்னர் வித்யாசாகர் 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திராவிட அரசியல் அழிந்து போக வேண்டும் என்று யாரோ திட்டமிட்டு சதி செய்யினம்

Link to comment
Share on other sites

அப்போலோவில் 7 அடுக்குப்பாதுகாப்பு! #ApolloSpotUpdates

 

app2_23063.jpg

மிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில் இன்று மாலை 6.30 மணி அளவில் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. இதைத்தொடர்ந்து அப்போலோ மருத்துவமனை வாசலில் தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

அதைத்தொடர்ந்து அ.தி.மு.க நிர்வாகிகளும் திரள ஆரம்பித்தனர். நிலைமை விபரீதம் அடைந்ததை உணர்ந்த சென்னை காவல் துறையினர் அடுத்த கட்ட பாதுகாப்பு  பணிகளில் இறங்கினர். உடனே சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் 7 மணி அளவில் அவரது அலுவலக அறையில் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.  அவருடன் 4 இணை கமிஷனர்கள், சென்னை உளவுப்பிரிவு போலீசார் ஆகியோரும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்திற்கு சட்டம்- ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து பிரிவையும் சேர்ந்த துணை கமிஷனர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

இந்நிலையில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் வெளியான அறிக்கை தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 15 நாட்களாக எந்த அறிக்கையும் வெளியாகாத நிலையில், இன்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியானது. அதில் முதல்வருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்றும், முதல்வருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து, சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அதில் குறி ப்பிடப்பட்டு இருந்தது. இது அ.தி.மு.க நிர்வாகிகள், மற்றும் தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

app_23194.jpg


இவ்வளவு நாட்கள் முதல்வர் குணமடைந்து வருவதாகவும், தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் மட்டுமே செய்தி வந்தநிலையில் இன்று வெளியான அப்போலோ அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி வெளியானதும் உடனடியாக தமிழக பொறுப்பு கவர்னருக்கு ஃபேக்ஸ் அனுப்பட்டது. அதற்கு எந்தவித பதிலும் அளிக்கப்படாத நிலையில், கவர்னர் அப்போலோ விரைவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.


இன்று சென்னையில் நடக்கும் ஒரு காவல் துறையினரின் திருமணத்தில் பங்கேற்கச் சென்ற, போலிஸ் கமிஷனர் ஜார்ஜ் இந்த செய்தியைத் தொடர்ந்து பாதியிலேயே அலுவலகம் திரும்பினார். அத்துடன் அனைத்து காவல்நிலைய அதிகாரிகளுக்கும், சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருக்கும் படி வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏராளமான தொண்டர்கள் குவிந்ததால், எப்போதும் மூன்றடுக்கு பாதுகாப்பில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையின் பின்வாசலுக்கு இன்று 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல் துறையினர் மட்டுமில்லாமல், அதிரடிப் படையினர் சென்னை முழுவதும் குவிக்கப்பட்டனர். அப்போலோ மருத்துவமனை அருகே பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.  மருத்துவமனையை நோக்கி அ.தி.மு.க தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

 

பரபரப்பான சூழ்நிலை நிலவுவதால், பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாநகரப் பேருந்துகளை மீண்டும் வெளியே எடுத்துவர வேண்டாம் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.vikatan.com/news/tamilnadu/74160-security-tightened-in-apollo-hospital.art

Link to comment
Share on other sites

1 minute ago, ரதி said:

திராவிட அரசியல் அழிந்து போக வேண்டும் என்று யாரோ திட்டமிட்டு சதி செய்யினம்

திமுக தலைவர் கலைஞர் உடல்நலக் குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Link to comment
Share on other sites

சென்னை முழுவதும் பெட்ரோல் பங்குகள் மூடல்

லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே உடன் ஆலோசனை
டில்லி எய்ம்ஸ் மருத்துவ குழு அப்பல்லோ வருகை

http://www.dinamalar.com/

 

அப்போலோவில் என்ன நடக்கிறது? #ApolloSpotUpdates

 

11:30 PM

* 30 கம்பெனி சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.

* ’முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டும்; பொதுச்சேவையை தொடர வேண்டும் என்று விருப்பத்தை  தெரிவித்துக் கொள்கிறேன்!’ - ராமதாஸ் அறிக்கை 

ராமதாஸ்

* பிரதமர் மோடி நாளை காலை சென்னை வர உள்ளதாக தகவல்.

* ’தமிழக முதல்வர் ஜெயலலிதா கார்டியாக் அரெஸ்ட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிந்து கவலையுற்றேன். அவர் விரைவில் பூரண நலம் பெற பிரார்திக்கிறேன்!’ - இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ட்விட்டரில் வருத்தம்.

* சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வந்தடைந்தார் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ்

1676384f-b9a3-47e9-a7f6-f3eb92eda5aa_230

* ’முதல்வர் ஜெயலலிதாவின் இதயம் கருவிகள் மூலம் இயல்பு நிலைக்கு கொண்டு வரச் செய்யும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மிகத் தேர்ந்த மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார் முதல்வர். அவர் விரைவில் நலம்பெற அப்போலோ ஊழியர்கள் மேற்கொள்ளும் பிரார்த்தனையில் அனைவரும் பங்கெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்!’ - அப்போலோ நிர்வாகம்

apollo_23035.png

 

* ’தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா  குணமடைய வேண்டுகிறேன். அவர் விரைவில் நலம் பெறுவார் என நம்புகிறேன்!”- ராகுல் காந்தி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிக்கும் வரை பொறுத்திருப்போம்.

Link to comment
Share on other sites

அப்போலோ மருத்துவமனையின் முன் குழுமியிருக்கும் கூட்டம்

 
 

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உடல் நலன் குன்றியதால், மருத்துவமனையின் முன் தற்போது கட்சித் தொண்டர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்பட பெருங் கூட்டம் திரண்டுள்ளது.

அப்பல்லோ மருத்துவமனையின் முன் குழுமியிருக்கும் கூட்டம்
 அப்பல்லோ மருத்துவமனையின் முன் குழுமியிருக்கும் கூட்டம் அப்பல்லோ மருத்துவமனையின் முன் குழுமியிருக்கும் கூட்டம்  அப்பல்லோ மருத்துவமனையின் முன் குழுமியிருக்கும் கூட்டம்

முன்னதாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, இன்று மாலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

அப்பல்லோ மருத்துவமனையின் முன் குழுமியிருக்கும் கூட்டம்  

அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாகவும் இருதயவியல் நிபுணர்கள், நுரையீரல் நிபுணர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள் அவரது உடல் நிலையைக் கண்காணித்துவருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதியன்று உடல் நலக் குறைவின் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுவந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்தப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து தெரிந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்போலோ மருத்துவமனைக்கு வருகைத்தந்துள்ளார்.

http://www.bbc.com/tamil/india-38200046?ocid=socialflow_facebook

 

 

 

கருணாநிதி வீட்டு முன் போலீஸ் குவிப்பு!

 

கருணாநிதி வீடு

தி.மு.க தலைவர் கருணாநிதி வீடு அமைந்துள்ள கோபாலபுரத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவரது வீட்டிற்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து வெளியான தகவல்களைத் தொடர்ந்து, எழுந்த பரபரப்பான நிலைமையைத் தொடர்ந்து, தி.மு.க தலைவர் கருணாநிதியின் வீட்டிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோபாலபுரத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் வீட்டிற்கும், சி.ஐ.டி காலனியில் உள்ள ராசாத்தி அம்மாள் வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது

.Gopalapuram003_23109.jpg

 
 
 

 

மேலும். தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கும், தி.மு.க பொருளாளர் மு.க. ஸ்டாலின், பொதுச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட தி.மு.க முக்கியத் தலைவர்களின் வீடுகளுக்கும் தீவிர பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/74166-police-protection-to-karunanidhis-house-and-anna-arivalayam.art

Link to comment
Share on other sites

தமிழக முதல்வருக்கு வழங்கப்படும் அவசர சிகிச்சை: லண்டன் மருத்துவர் ஆலோசனை

 

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சைகள் குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பெயிலுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அப்போலோ மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திகளை நீங்கள் காணலாம்.

 
டுவிட்டர்

அவருடைய உடல் நலம் பெற மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று அப்போலோ கேட்டு கொண்டுள்ளது.

அப்போலோ  

முன்னதாக, கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அப்போலோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் சிகிச்சை பெற்று வந்தார்.

சற்று உடல் நலம் பெற்று, பொது வார்டுக்கு மாற்றப்பட்டு, சீக்கிரம் முழு உடல் நலத்துடன் வீடு திரும்புவார் என்று இன்று முற்பகல் அதிமுக தெரிவித்திருந்த நிலையில் அவருக்கு இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போலோ தெரிவித்தது.

BBC

30 கம்பெனி சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்னை வருகை

 

 
CRPF

 

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவல் உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், சென்னைக்கு 30 கம்பெனி சிஆர்பிஎஃப் வீரர்கள் வந்துள்ளனர்.

இதற்கிடையே, சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ், க்ரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.

தமிழகத்தின் முக்கிய அமைச்சர்களும் அப்பல்லோ மருத்துவமனைக்கு உடனடியாக வரவழைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

அப்போலோவில் என்ன நடக்கிறது? #ApolloSpotUpdates

12:00 AM

'சகோதரி ஜெயலலிதா நலமுடன் திரும்பவேண்டும்!’ கருணாநிதி அறிக்கை

அப்போலோ மருத்துவமனை அமைந்திருக்கும் பிராந்தியத்தில் அதிகரித்தபடியே இருக்கும் கட்சித் தொண்டர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் 
போலிசார் தவிப்பு! 

சென்னையில் பெரும்பாலான பெட்ரோல் பங்குகள் அடைப்பு!

புதுச்சேரி முழுக்க பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறைக்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவு!

’முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் தீவிர சிகிச்சைகள் பலனளித்து விரைவில் நலம் பெற விரும்புகிறேன்!’ - மு.க.ஸ்டாலின்

Link to comment
Share on other sites

ஜெயலலிதா உடல்நிலை அப்போலோ அட்மிட் முதல் இன்று வரை! #TimelineStory

 

ஜெயலலிதா

டந்த செப்டம்பர் மாதம் 22ந்தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவால்,சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முதல்வர் ஜெயலலிதா. அதையடுத்து ஜெ. உடல்நிலை தேறிவருவதாக அப்போலோ மருத்துவர்கள் சொல்லிவந்த நிலையில் இன்று திடீரென அவருக்கு இதயத்துடிப்பில் சிக்கல் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில் ஜெ. உடல்நிலை தொடர்பாக இதுவரை நிகழந்தது என்ன?.


22 செப்’16- காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெ. அனுமதி

2_23300.jpg

23 செப்’16- ஜெ. உடல்நிலை சீராக இருப்பதாக அப்போலோ முதல் அறிக்கை

24 செப்’16 - ஜெ. சாதாரண உணவுகளை உட்கொள்வதாக சொன்னது அப்போலோ 25 செப்’16 - ஜெ. மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வார் என்று தவறான செய்திகளை யாரும் வெளியிட வேண்டாம் அப்போலோ கேட்டுக் கொண்டது.

29 செப்’16- முதல்வரின் உடல்நிலை சீராக உள்ளது, அவர் சிகிச்சைகளுக்கு நல்ல முறையில் ஒத்துழைக்கிறார் என்றது அப்போலோ.

2 அக்’16 -  லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பியெல்  அப்போலோ  வருகை தந்து மருத்துவர்களுடன் ஜெ. சிகிச்சை குறித்து ஆலோசனை.

3 அக்’16- முதல்வருக்கு ஏற்பட்டிருக்கும் தொற்று நோயை சரிசெய்ய, நோய்க்கொல்லி மருந்துகள் தரப்பட்டது , சுவாசக்கருவிகள் பொருத்தம்.

4 அக்’16- முதல்வரின் உடல்நிலை முன்னேறி வருகிறது, அவருக்குத் தரப்படும் சிகிச்சை தொடரப்படுகிறது எனத் தகவல்.

6 அக்’16 - எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் லண்டன் மருத்துவர் அனைவரும் அப்போலோ மருத்துவர்களுடன் முதல்வர் சிகிச்சை குறித்து கலந்தாலோசனை. விண்டர் பிராங்கைடிஸ் மற்றும் நாட்பட்ட நீரிழிவு நோய்க்கு தகுந்தது போல் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகத் தகவல்

8 அக்’16- ஜெ. நுரையீரலில் இருக்கும் அடைப்புகளை நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.

10 அக்’16 - பிஸியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவர்கள் மீண்டும் அப்போலோ வருகை.

9_23070.jpg

21 அக்’16- தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்களின் தலைமையில் இதயநோய்,நுரையீரல் நோய், தொற்று நோய் சிகிச்சை உள்ளிட்ட மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளிப்பதாக அப்போலோ அறிக்கை.

Cy2DSTBUkAAcogP.jpg_large_23413.jpg

4 டிச’16- முதல்வருக்கு மாலையில் திடீர் இதயதுடிப்பு பிரச்னை ஏற்பட்டதால் இதயநோய் மற்றும் நுரையீரல் நோய் மருத்துவர்கள்  சிகிச்சை அளிப்பதாக அப்போலோ திடீர் அறிக்கை.

http://www.vikatan.com/news/india/74171-jayalalitha-suffers-sudden-cardiac-arrest-and-here-is-the-list-of-reports-apollo-released-on-her-health-status-timelinestory.art

Link to comment
Share on other sites

போலீசார் அனைவரும் கட்டாயம் பணிக்கு திரும்ப உத்தரவு!

 

WhatsApp_Image_2016-12-04_at_11_%E0%AE%A

 

தமிழகம் முழுவதும் விடுப்பில் சென்ற போலீசார் அனைவரும் காலை 7 மணிக்குள்  கட்டாயம் பணிக்கு திரும்ப வேண்டும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், சென்னை அப்போலோ மருத்துவமனையைச் சுற்றி சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கியமாக சென்னை மாநகர் முழுவதும் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம் பாக்கம், அண்ணாசாலை உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே தடுப்புகளும் போடப்பட்டுள்ளது.

முக்கியமாக தமிழகம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களுக்கு ரெட் அலர்ட் செய்யப்பட்டுள்ளது. இதனால், விடுமுறையில் இருந்த அனைத்து காவல் துறை அதிகாரிகள் அனைவரையும் காலை 7 மணிக்கு சீருடையில் கட்டாயம் பணிக்கு திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், விடுமுறையில் சென்ற போலீசார் அனைவரும், கட்டாய பணிக்கு திரும்பி வருகின்றனர். மேலும், தமிழகம் முழுவதும் நாளை 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு உள்ளதாகவும் போலீசார் வட்டாரத்தில் கூறப்படுகிறது. 

http://www.vikatan.com/news/tamilnadu/74170-police-suggested-to-return-to-work-today.art

 

 

'இப்பவும் என்னை பார்க்க விட மறுக்கின்றனர்': கதறும் ஜெ., அண்ணன் மகள்

 

534fee9d-f8fc-49fa-82c7-f1939dfd7aa9_004

அப்போலோவில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதிமுக தொண்டர்கள் அங்கு குவிந்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு அப்போலோவில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் மருத்துவமனை கேட் முன்பு நின்று கொண்டிருக்கிறார். தீபா கடந்த முறை அப்போலோ சென்ற போதும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதுகுறித்து தீபா விகடன் செய்தியாளரிடம் கூறுகையில், " அத்தைக்கு உடல்நிலை சரியில்லை என கேள்விப்பட்டதுமே மருத்துவமனைக்கு வந்துவிட்டேன். முதல்வரின் அண்ணன் மகள் நான் என போலீஸ் உயர் அதிகாரியிடம் தெரிவித்தும்  என்னை மருத்துவமனைக்குள் அனுமதிக்கவில்லை. ரத்தபந்தமான என் அத்தையை கூட பார்க்க அனுமதிக்க மறுக்கிறார்கள். எப்படியாவது அத்தையை பார்த்துவிட வேண்டும் என்று ஆசையில் காத்துகொண்டிருக்கிறேன்". என்றார்

2e817890-cccc-4dab-b867-f95eb565b3f4_003

 

http://www.vikatan.com/news/tamilnadu/74173-even-now-they-are-not-allowing-to-see-her-cries-jayalalithaas-niece.art

 

 

Link to comment
Share on other sites

அப்போலோவில் அமைச்சர்கள் அவசர ஆலோசனை

 

f66e206b-5c79-4543-ab0b-7443430f6af5_%28

அதிமுக தொண்டர்கள் குவிந்ததால் கவர்னர் வித்யாசாகர் ராவ் மாற்று வழியில் அப்போலோ வளாகத்துக்குள் நுழைந்துள்ளார். இதையடுத்து தற்போது அமைச்சர்கள் அப்போலோவில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடிதம் ஒன்றை தயாரிக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.  சுமார் 15 நிமிடங்கள் இருந்த கவர்னர் சற்று முன் அப்போலோவில் இருந்து வெளியேறியுள்ளார். அவருடன் அப்போலா குழும தலைவர் பிரதாப் ரெட்டியும் வெளியேறியதாக கூறப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/74172-ministers-meeting-at-apollo.art

Link to comment
Share on other sites

ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம்.. 3 விதமான சிகிச்சைகள்!

 

 

முதல்வர் ஜெ.,வுக்கு அப்போலோவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஜெயலலிதா குணமடைய அரசியல்கட்சி தலைவர்கள், பொதுமக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என அப்போலோ மருத்துவமனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. மேலும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆலோசனைப்படி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதோடு 3 விதமான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்படுவதாகவும் திங்கள் அதிகாலைதான் எதையும் உறுதியாகத் தெரிவிக்க முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தற்போதைய நிலவரம் குறித்து ஆளுநர் விளக்கியுள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

jaya_apollo_19537_01395.jpg

http://www.vikatan.com/news/tamilnadu/74176-3-different-treatments-to-be-provided-for-jayalalithaa.art

Link to comment
Share on other sites

ஜெயலலிதாவை பாதித்த Cardiac arrest என்றால் என்ன?

 

549921-jayalalithaa700_01342.jpg

முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லண்டனிலிருந்து டாக்டர். ரிச்சர்ட் பியெல், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் கில்நானி, திரிகா மற்றும் நிதிஷ் நாயக் உள்ளிட்ட நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களின் உதவியுடன் அப்போலோ மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர்.  பிஸியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டது, அவர் உடல்நலம் தேறிவருகிறார் என்று அப்போலோ வட்டாரங்கள் அறிக்கை வெளியிட்டு வந்தது. அப்போலோ டாக்டர் ரெட்டியும் ஜெ. எப்போது வேண்டுமானாலும் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குச் செல்லலாம். இனி வீட்டிற்கு செல்வது அவரது முடிவு எனத் தெரிவித்து வந்தார். இந்த நிலையில் ஜெயலலிதாவிற்கு டிசம்பர் 4-ம் தேதி அன்று திடீரென இதயத்துடிப்பில் பாதிப்பு (cardiac arrest) ஏற்பட்டதாக  அப்போலோ அறிக்கை வெளியிட்டுள்ளது.

கார்டியாக் அரெஸ்ட் என்றால் என்ன?

இதயநோய் நிபுணர்கள் விளக்கம் அளிக்கையில், இதயத்தின் செயல்பாடு திடீரென நின்றுவிடும் நிலையில், அது கார்டியாக் அரெஸ்ட் எனப்படும். இதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் குழாயிலோ அல்லது இதயத்திலிருந்து ரத்தம் வெளியேற்றும் குழாயிலோ அடைப்பு ஏற்பட்டால் அல்லது இதயத் தசைகளில் பிரச்னை ஏற்பட்டாலோ இதயத்தின் செயல்பாடு பாதிக்கப்படும். இதயத்தசைகளுக்கும் ரத்த ஓட்டம் தடைபடுவது, நாட்பட்ட இதயநோய் பிரச்னை இருப்பது, மரபணு ரீதியாக இதய பாதிப்பு ஏற்படுவது போன்றவை இந்த சிக்கலை உருவாக்கும். நாட்பட்ட சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களின் இதயச் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட அதிக சாத்தியம் உண்டு. நுரையீரலும் இதயமும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படுவது என்பதால் அதன் செயல்பாட்டில் ஏற்படும் தாக்கமும் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால், சிறுநீரக கோளாறால் ஏற்படும் இதயநோய் சிக்கலை விட நுரையீரலால் இதயச் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுவது குறைவு என்றனர்.

http://www.vikatan.com/news/india/74174-what-is-meant-by-cardiac-arrest.art

 

 

தமிழகத்தில் 144 தடை உத்தரவா ?

 

காவல்துறை

மிழக காவல்துறை தலைவர் திரிபாதி தலைமையில் சென்னையில் காவல்துறை உயரதிகாரிகள் திடீரென்று அவசர ஆலோசனை நடத்தியுள்ளனர்.

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதலமைச்சரின் உடல் நிலை குறித்து தெரிந்துகொள்ள  வெளியூர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான அ.தி.மு.க தொண்டர்கள் அப்போலோவில் குவிந்து வருகின்றனர்.

தொண்டர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த அப்போலோ மருத்துவமனை பகுதியிலும் சென்னையின் முக்கிய இடங்களிலும் ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.அப்போலோ மருத்துவமனை அமைந்துள்ள கீரிம்ஸ் சாலை மட்டுமல்லாது அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்த நிலையில் காவல்துறை டி.ஜி.பி திரிபாதி தலைமையில் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி சத்யமூர்த்தி மற்றும் சென்னை மாநகர ஆணையர்  ஜார்ஜ் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தியுள்ளனர்.

காவலர்கள்  ஏழு மணிக்கு பணியில் இருக்க உத்தரவு

சென்னை மாநகர் முழுவதும் காவல்துறையினர் ரோந்துப் பணியிலும், கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். ஆங்காங்கே முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.மேலும் ஆணையர்கள்,காவல்துறைகாணிப்பாளர்கள் முன்பு காவலர்கள் காலை ஏழுமணிக்கே சீருடையில் பணியில் இருக்க வேண்டும்.பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் சி.பி.சி.ஐ.டி போலீசாரும் பணிக்குதிரும்ப வேண்டும் உத்தரவிட்டுள்ளதாக தகவல்வெளியாகி உள்ளது.

மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் இரவில் பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது .
அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் திமுக  தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோரின் வீடுகளுக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 சென்னை மாநகரில் மக்கள் அதிகளவில் கூட்டம் கூடாமல் இருக்குமாறு காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.மேலும் சி. ஆர். பி .எப் படை வீரர்களும்  வரவழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

http://www.vikatan.com/news/coverstory/74177-possibilities-for-prohibitory-orders-in-tamil-nadu.art

 

 

Link to comment
Share on other sites

அப்போலோவில் ஜெயலலிதா... மாலை 5 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை... பரபரப்பு தருணங்கள்!

 

அப்போலோ மருத்துவமனை

.

அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தகவலால், மருத்துவமனையின் இரண்டாவது தளம் நேற்று மாலை பரபரப்படைந்தது. 

மாலை 5 மணிக்கு, முதல்வர் ஜெயலலிதாவிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. 

மாலை 5.30 மணியவில், மூத்த அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் அப்போலோ விரைந்தனர்.

மாலை 6 மணிக்கு, அப்போலோ மருத்துவமனை அருகே அ.தி.மு.க தொண்டர்களும், பெருந்திரளான தொண்டர்களும் குவிந்தனர். 

இரவு 7 மணி: அசாதாரணமாக சூழ்நிலையைத் தொடர்ந்து,  தமிழக காவல்நிலையங்களுக்கு அப்போலோவில் இருந்து உத்தரவு வெளியானது. 

இரவு 8 மணி : அ.தி.மு.க தொண்டர்கள் பெருந்திரளாக அப்போலோ முன்பு குவியத் தொடங்கினர். இரவு 
ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், இரவு 9.00 மணிக்கு, அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. 

இரவு 10 மணி : ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டறிந்தனர்.

 

இரவு 11.30 மணிக்கு மும்பையில் இருந்து, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், சென்னை விமான நிலையம் வந்தார்.

12.03 மணியளவில் விமான நிலையத்தில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார் ஆளுநர்.

12.15 மணியளவில் கிண்டி ஆளுநர் மாளிகைக்கு திரும்பிய ஆளுநர், மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை 

அதிகாலை 1.00 மணி தொடர்ந்து அ.தி.மு.க தொண்டர்கள் அப்போலோவின் குவிந்து வருகின்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/74175-apollo--from-5-pm-to-midnight-1-pm-apolloupdates.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலநாட்களாக செயற்கைச் சுவாசத்தில் இருந்து வந்தவருக்கு இதய நிறுத்தம் என்பது கிட்டத் தட்ட ஒரு முன்னோடி மரண அறிவித்தல் தான். உடனடியாக அறிக்கை மூலம் அறிவித்தமையும் மருத்துவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று காட்டுகிறது. ஆனாலும், தலைவர்கள் சாகாவரம் பெற்றவர்கள் என்று நம்புவதைத் தமிழகத் தொண்டர்கள் கைவிட வேண்டும்! இல்லையேல் தீக்குளிப்பு அது இது என்று வீணான மரணங்கள் தான் நிகழும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆள் அவுட் 100வீதம்  இம்முறை சென்றலின் மூவ் கூடவாக இருப்பதை வைத்து அடித்து சொல்லக்கூடியதாக இருக்கிறது .

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.