Jump to content

அப்போலோவில் திடீர் பரபரப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Relevant questions

அனைத்துமே மர்மம்##??

மிக நன்றாக இருந்தவர் 2மாதங்களுக்கு முன்பு திடீரென இரவோடு இரவாக மருத்துவமனையில் மர்மமாக அனுமதி.

சாதாரண காய்ச்சல் தான் 2 நாட்களில் வீடு திரும்புவார் என தகவல்.

தினம், தினம், ஒவ்வொரு நோய்க்கு சிகிச்சை அளிப்பதாக மாறி, மாறி அறிவிப்பு.

3மாதம் ஆனபோதும் கூட எவரையும் பார்க்க கடைசிவரை அனுமதிக்கவில்லை.
இது யாருடைய உத்தரவு??

3மாதம், கட்சி , மற்றும் அரசு யாருடைய கட்டுப்பாட்டில் இயங்கியது?

அனைத்தும் சரியாகிவிட்டது சராசரி உணவை சாப்பிட தொடங்கி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு விட்டார் 2நாளில் நலமுடன் வீடு திரும்பவுள்ளார் என்று சொன்னீர்களே...??

கடைசி வரை சிகிச்சை எடுக்கும் ஒரு புகைப்படம் கூட வெளியிடவில்லையே ஏன்?

இறப்பதற்கு முன்பே தமிழகம் முழுவதும் உள்ள எல்லா அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் எவ்வாறு உடனடியாக ஒன்று கூடி புதிய முதல்வரை தேர்வு செய்தனர்.

அமைச்சர்களும் எந்த குழப்பமின்றி இலாகா நியமிக்கப்பட்டு உடனடியாக எப்படி பதவியேற்க முடிந்தது?

ரத்த உறவான அவரது அண்ணன் மகளை கூட மருத்துவமனைக்குள் அனுமதிக்காமல் மிரட்டி வீட்டுக்கு செல்ல சொன்ன காரணம் என்ன?

ஊடகங்களுக்கு மரணத்தை முன் கூட்டியே அறிவித்ததும், அதிமுக அலுவலகத்தில் கட்சி கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு, அதை உடனே திரும்பபெற்றதும் யாரால், ஏன்?

இறந்து அரை மணி நேரம் கூட ஆகாத இந்த துக்கத்திலும் இவ்வளவு தெளிவாக ஆளுநரை சந்தித்து முதல்வராக பதவியேற்பு நிகழ்சி நடத்தியது எப்படி ?

கைது நேரத்தில் பேச முடியாமல் குழுங்கி குழுங்கி அழுது கொண்டே உறுதிமொழியை பாதியிலேயே நிறுத்திவிட்டு பதவியேற்ற நீங்கள் தற்போது சிறப்பாக அழுகையின்றி உறுதி மொழி எடுக்க எவ்வாறு முடிந்தது??

காலையில் இருந்து இந்த இரவு வரையும் கூட மருத்துவமனை முன்பாக பட்டினியாக அழுது உருண்டு கிடப்பதில் பஞ்சபராரி பாமர மக்களை தவிர ஒரு பண முதலை கூட தென்படவில்லையே எப்படி.??

இன்னும் கேள்விகள் ஆயிரம் உள்ளது எனது சார்பில் அல்ல..
முதல்வர் மீது மாசில்லா அன்பு கொண்டு வாக்களித்த எம் வெள்ளந்தி பாமர தமிழ்மக்கள் சார்பாக.

FB

Link to comment
Share on other sites

  • Replies 79
  • Created
  • Last Reply

மிஸ்டர் கழுகு: அந்த 24 மணி நேரம்!

 

 

p44a.jpgடந்த 75 நாட்களாக இரவு பகல் பார்க்காமல் அப்போலோ வட்டாரத்திலேயே அலைந்த கழுகார் 4-ம் தேதி காலையில் அங்கிருந்து பரபரப்பாக வந்தார்!

‘‘முதலமைச்சர் ஜெயலலிதா செப்டம்பர் 22-ம் தேதி சாதாரணக் காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாட்டால் ஏற்பட்ட உடல்சோர்வுக்காக அப்போலோ மருத்துவமனையில் ‘அட்மிட்’ ஆனார். ‘கடந்த 2 மாத சிகிச்சையில் அவர் உடல்நலம் தேறிவிட்டது. அவர் எப்போது வேண்டுமானாலும் வீடு திரும்பலாம்’ என்றுதான் அப்போலோ நிர்வாகம் சொன்னது. ஆனால், திடீரென்று கடந்த 4-ம் தேதி மாலை எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.’’

‘‘அந்த 24 மணி நேரத்தில்  என்ன நடந்தது?’’

‘‘4-ம் தேதி மாலை 5 மணியளவில், தமிழக அரசுத்துறை செயலாளர்கள்,  அதிகாரிகள் எல்லாம், அப்போலோவில் குவிந்தனர். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், டி.ஜி.பி. ராஜேந்திரன், உளவுத்துறை ஐ.ஜி. உள்ளிட்டவர்களும் இருந்தனர். காரணம், 4-ம் தேதி மாலை நேரத்தில் ஜெயலலிதாவின் உடல் நிலை இயல்புத் தன்மை மாறியதாம். லேசான அளவில் வாந்தி வந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்று மருத்துவர்களால் கணிக்க முடியவில்லை. ஜெயலலிதா ஏதோ சொல்வதற்கு குரல் கொடுத்ததாகவும் அப்போது அவர் குரல் உயர்ந்து இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து திடீரென அவரது உடல்நிலையில் உதறல் இருந்துள்ளது. இதயத் துடிப்புக்குத் திடீரென தடங்கல் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டது. அந்தக் கருவியின் செயல்பாட்டை ஜெயலலிதாவின் உடல் ஏற்றுக் கொள்கிறதா என்பதை உன்னிப்பாகப் பார்த்தார்கள். ஆனால், அது மருத்துவர்களுக்கு திருப்தி ஏற்படுத்துவது மாதிரி இல்லை!”

‘‘இதய முடக்கத்துக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டதாக சொல்கிறார்களே?’’

‘‘ஆஞ்சியோ செய்யப்பட்டதாக அப்போலோ நிர்வாகம் சொல்லவில்லை. வழக்கம்போல்,  சில ஊடகங்கள்தான் அதனை திரும்பத் திரும்பச் சொன்னார்கள். ‘ உண்மையில்  ஜெயலலிதாவின் உடல்நிலை இருக்கும் கண்டிஷனுக்கு ஆஞ்சியோ எல்லாம் செய்ய முடியாது. இதுபற்றிய ஆலோசனை ஏற்கெனவே நடந்தது. அப்போதே, எய்ம்ஸ் டாக்டர்கள் அந்த யோசனையை முழுமையாக நிராகரித்துவிட்டனர். அதனால், ஆஞ்சியோ செய்ததாகச் சொல்வது முற்றிலும் தவறான தகவல்’ என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.” 

p44.jpg

‘‘ஏன் திடீரென சூழ்நிலை மாறியது?’’

‘‘அப்போலோ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி, கடந்த வாரங்களில் சொன்னதுபோல், ஜெயலலிதாவின் உடல்நிலை ஓரளவு சீராக இருந்தது. முழுக்க முழுக்க வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசம் செய்துவந்த ஜெயலலிதா அது தேவைப்படாத அளவுக்கு சில மணி நேரங்களாவது இருந்தார். ஆனால், அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடு சரியாக இல்லை. அதற்காகத் தான் பேஸிவ் பிசியோதெரபி அவருக்குத் தரப்பட்டது. பேஸிவ் பிசியோதெரபி கொடுத்து அவரது உடல் உறுப்புகளின் செயல் பாட்டை மீண்டும் பழைய நிலைமைக்குக் கொண்டு வர வேண்டுமானால் சில மாதங்கள்கூட ஆகலாம். அதுவரை மருத்துவ மனையில் வைத்து சிகிச்சை எடுத்துக்கொள்வதை அப்போலோ தவிர்க்க நினைத்தது. பிசியோதெரபி சிகிச்சையை போயஸ் கார்டனில் இருந்தே முதல்வருக்கு வழங்கலாம் என்று நினைத்தது. ஆனால், அதனை சசிகலா விரும்பவில்லை. ‘மருத்துவமனையில் வைத்துப் பார்க்கிறோம். திடீரென ஏதாவது ஆகிவிட்டால், உடனே எங்களால் சமாளிக்க முடியாது’ என்று சசிகலா சொல்லிவிட்டார். மற்ற நோயாளிகளுக்கும் நிர்வாகத்துக்கும் இது சிக்கலை ஏற்படுத்தியது. அதை சசிகலா குடும்பத்துக்கு எப்படிச் சொல்வது என்றும் பிரதாப் ரெட்டிக்குத் தெரியவில்லை. இந்த நிலையில் தான் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் பேசியபோது, ‘முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணம் பெற்றுவிட்டார். அவர் எப்போது வேண்டுமானாலும் வீடு திரும்பலாம். அவர் எப்போது வீடு திரும்பலாம் என்பதை அவரே முடிவு செய்யலாம்’ என்று தொடர்ந்து சொல்லி வந்தார். வீட்டுக்கு அழைத்துச் செல்வதா வேண்டாமா என்ற விவாதத்தில் ஜெயலலிதா தங்கி இருந்த அறை மட்டுமே மாற்றப்பட்டது. இதற்கு இடையில், சில நாட்களுக்கு முன் போயஸ் கார்டன் வீட்டுக்கு ஜெயலலிதாவை அழைத்துச் செல்லலாம் என்று சசிகலா இறங்கி வந்தார். தேவையில்லாமல் மருத்துவமனைக்கு சிக்கலை ஏற்படுத்த வேண்டாம் என்றுகூட நினைத்திருக்கலாம். வரும் வெள்ளிக்கிழமை அதாவது 9-ம் தேதி ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.”

‘‘போயஸ் கார்டனுக்கா?”

‘‘போயஸ் கார்டன், சிறுதாவூர் பங்களா என்று இரண்டு வீடுகளும் ஜெயலலிதாவுக்கு ஏற்றார் போல் மாற்றியமைக்கப்பட்டன. புது டைல்ஸ்கள் பதிக்கப்பட்டு, லிஃப்டுகள், படிக்கட்டுகள் எல்லாம் மாற்றியமைக்கப்பட்டன. சிறுதாவூர் பங்களாவில் பதிக்கப்பட்டிருக்கும் டைல்ஸ் டெம்ப்ரேச்சரைக் கூட்டக்கூடியது. அந்த அளவுக்கு நவீன டைல்ஸ்கள் பதிக்கப்பட்டு, லிஃப்டுகள் அகலப்படுத்தப்பட்டு இருந்தன. ஆனால், அதற்குள் எல்லாம் மாறிவிட்டது.”

p44b.jpg

‘‘ம்ம்ம்..!”

‘‘ஜெயலலிதாவை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போகலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, கடந்த 4-ம் தேதி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவது மாதிரி  ஜெயலலிதாவுக்கு இதயத்துடிப்பு முடக்கம் ஏற்பட்டது. ‘அதற்கு முதல்நாள் அதாவது கடந்த 3-ம் தேதியே, ஜெயலலிதாவின் உடல்நிலை மிக மோசமடைந்தது. அதையடுத்து, அமைச்சர்கள், அதிகாரிகள் தலைமையிலான அவசர-ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது’ என்றும் சொல்லப்படுகிறது. மறுநாள், அதாவது 4-ம் தேதி ஜெயலலிதாவின் உடல்நிலை மிக மோசமடைந்தது.”

‘‘ஓஹோ!”

‘‘உடனடியாக மருத்துவமனையில் குவிந்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் டெல்லிக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் அதிகாரிகள் மீட்டிங் தனியாக நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழகம் முழுவதும் ஹை அலர்ட் கொடுக்கப்பட்டது. டெல்லியில் உள்துறை அமைச்சகத்துக்கும்  தகவல் கொடுக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் இருக்கும் அ.தி.மு.க எம்.பி-க்கள் உடனடியாகத் தமிழகம் திரும்ப உத்தரவிடப்பட்டது. வெளியூர்களில் இருக்கும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் சென்னை வரும்படி தகவல் கொடுக்கப்பட்டது. அதோடு கவர்னருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதனால்தான், மகாராஷ்டிராவில் இருந்த கவர்னர் உடனடியாக சென்னைக்கு வந்து, நள்ளிரவு 12 மணிக்கு அப்போலோ வந்தார். ‘ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமாக இருக்கிறது. கவர்னர் வருகிறார்’ என்று தகவல்கள் வந்த உடன், அப்போலோ முன்பு பெரும் கொந்தளிப்பு உருவானது. அதை சமாளிக்க அரசுத் தரப்பு ஒரு யுக்தியை கையாண்டது. பிரபல தொலைக்காட்சி சேனல்களின் எடிட்டர்களை தனியாக அப்போலோவுக்கு அழைத்து வந்தது. அவர்களை மட்டும் ரகசியமாக அப்போலோ முதல் தளம் வரை அழைத்துச் சென்று, ‘முதலமைச்சருக்கு ஆஞ்சியோ சிகிச்சை கொடுக்கப்பட்டது என்று போடுங்கள். அது ஓரளவுக்குக் கொந்தளிப்பைக் குறைக்கும். அதன்பிறகு நிலைமை யைப்பொறுத்து செய்திகளை மாற்றிக்கொள்ளலாம்’ என்று அறிவுறுத்தினார்களாம். இதையடுத்துத்தான் ‘ஆஞ்சியோ’ என்ற வார்த்தை சீனுக்கு வந்தது!”

p44d.jpg

‘‘திடீரென எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்து விட்டார்களே?”

‘‘ஜெயலலிதாவைப் பார்க்க டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர் அக்டோபர் 5-ம் தேதி சென்னை வந்து சென்றனர். பின்னர், அக்டோபர் 17-ம் தேதி சென்னை வந்தனர். 3-வது தடவையாக டிசம்பர் 2-ம் தேதி காலை 8.30 மணிக்கு அப்போலோ மருத்துவமனைக்கு எய்ம்ஸ் டாக்டர்கள் வந்தனர். டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ் நாயக் ஆகியோர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அவர் எடுத்துவரும் சிகிச்சை குறித்தும் அப்போலோ டாக்டர்கள் குழுவினருடன் கலந்து ஆலோசித்தனர். அதன் பின்னர், தலைமைச்செயலாளர், ஆலோசகர் ஆகியோரை சந்தித்தனர். ‘எந்த சிகிச்சையும் ஜெயலலிதாவுக்கு சரியான பேச்சை உருவாக்கவில்லை. அவர் குரல் சரியாக வரவில்லை’ என்று சசிகலா தரப்பு வருத்தப் பட்டுள்ளது. ‘ஜெயலலிதாவை இதுவரை யார் யார் சந்தித்து பேசினார்கள்?’ என்று மருத்துவர்கள் கேட்டார்களாம். ‘யாரும் பார்க்கவில்லை’ என்று சொல்லி இருக்கிறார்கள்.  ‘இதுவரை ஜெயலலிதாவைப் பார்க்க யாரையும் அனுமதிக் காதது ஏன்? ஜெயலலிதாவை மற்றவர்கள் பார்த்துப் பேசும்போதுதானே அவருக்குக் குரல் வரும். அதைச் செய்யாமல் எப்படி பேசுவார்?’  என்று மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.”

‘‘லண்டன் டாக்டர் ரிச்சர்டு பியெல் என்ன சொன்னாராம்?”

‘‘ஜெயலலிதாவுக்கு இதயச் சிக்கல் வந்ததும்  லண்டன் டாக்டர் ரிச்சர்டு பியெலுக்கு சொன்னார்கள். அவர் அதிர்ச்சி அடைந்துவிட்டார். அவரைப் பற்றி முன்பே நான் சொல்லி இருக்கிறேன். ‘என்னால் முடிந்ததைச் செய்துவிட்டேன். இனிமேல் நான் செய்வதற்கு எதுவும் இல்லை. இதற்கு மேல் ஏதாவது முயற்சிக்க வேண்டும் என்றால் லண்டன்தான் அழைத்துவர வேண்டும். ஆனால், அழைத்து வரும் நிலையில் அவர் உடல் நிலை இல்லை’ என்று ஏற்கெனவே நான் சொல்லி இருக்கிறேன். அதைத்தான் ரிச்சர்டு சொல்லி இருக்கிறார். ‘ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கிறது என்பதை அறிந்து எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவருக்குத் திடீரென இதய முடக்கம் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. உடனே எக்மோ கருவியை பொறுத்துங்கள்’ என்று சொல்லி இருக்கிறார். அவர் சொன்னபடி எக்மோ கருவி பொருத்தப்பட்டது. ஆனால், அது பலன் தரவில்லை. தீபாவளிக்கு முந்தைய நாள் ரிச்சர்டு இங்கிருந்து கிளம்பிச் சென்றார். போகும்போதே, ‘இனி என் கையில் எதுவும் இல்லை’ என்று சொல்லித்தான் சென்றுள்ளார். இறுதிக்கட்ட முயற்சிகள் பலன் அளிக்கிறதா என்று பார்ப்போம். பலனளிக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்!” என்றபடி பறந்தார் கழுகார்!

படங்கள்: சு.குமரேசன், மீ.நிவேதன்
அட்டை ஓவியம் : ப்ரேம் டாவின்ஸி


p44c.jpg

புதிய அதிகார மையம்!

ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமான நிலையில் அடுத்த முதல்வர் யார் என்கிற மிக முக்கியமான விவாதம் நடந்துகொண்டிருந்தது. மன்னார்குடியின் கட்டுப்பாட்டில்தான் ஜெயலலிதாவின் சிகிச்சையே நடைபெற்றுவந்த சூழலில் அவர்களை சுற்றியே அடுத்த முதல்வர் விவகாரமும் சுழன்றுகொண்டிருந்தது. சசிகலாவின் சகோதரர் திவாகரன், தினகரன், எம்.நடராஜன், சுதாகரன், திவாகரனின் மகன் ஜெயானந்த் என அரசியல் ஆர்வம் கொண்டவர்கள் புதிய அதிகார மையங்களாக உருவெடுத்திருக்கிறார்கள். அதனால் அவர்களை நோக்கியே அ.தி.மு.க. புள்ளிகள் மையம் கொண்டிருக்கின்றன.

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

ஒன்றுகூடிய மன்னார்குடி... விரட்டப்பட்ட தீபா!

 

சண்டே லைவ் கவரேஜ்...

 

முதலமைச்சர் ஜெயலலிதா அப்போலோவில் அட்மிட் ஆகி 75 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், மிக அதிகமான பதட்டத்தை உண்டாக்கியது டிசம்பர் 4-ம் தேதிதான். 75 நாட்களில், முதல் 30 நாட்கள் மட்டும்தான் அப்போலோ பரபரப்பாக இருந்தது. அதன்பிறகு, காவிரி, ரூபாய் நோட்டுப் பிரச்னைகளால் மக்களின் மனதில் இருந்து அப்போலோ மெள்ள மறையத் தொடங்கியது. இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அப்போலோ மீண்டும் பரபரப்புச் செய்தியானது. ‘நீர்ச்சத்துக்குறைவு’ என ஜெயலலிதா அட்மிட் ஆனபோது என்ன பரபரப்பு நிலவியதோ, அதைக்காட்டிலும் பல மடங்கு பரபரப்பும் பதற்றமும் அப்போலோவைச் சூழ்ந்தன.

p36.jpg

மாலை 5.30 மணியில் இருந்து அப்போலோ ஏரியாவில் சந்தேகத்துக்குரிய சில அறிகுறிகள் தென்படத் தொடங்கின. தமிழகத்தின் அரசுத் துறை செயலாளர்கள் அனைவரும் அப்போலோவை நோக்கி வர ஆரம்பித்தனர். சென்னையிலும் வெளியூரிலும் இருந்த அமைச்சர்கள் பதறியடித்துக்கொண்டு அப்போலோ வந்தனர். போலீஸ் உயர் அதிகாரிகள் அனைவரும் அப்போலோவை முற்றுகையிட்டனர். ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், ஒட்டுமொத்த அரசாங்கமும் அப்போலோவில் மையம் கொண்டது. இவ்வளவு பரபரப்புகள் அரங்கேறியபோதும், அங்கு என்னதான் நடக்கிறது என்பதே தெரியாமல், அப்பாவியாக இருந்தனர் அ.தி.மு.க தொண்டர்கள். அவர்களில் சிலர், கடந்த 75 நாட்களாக அங்கு காத்துக் கிடப்பவர்கள். அரசுத் தரப்பில் இருந்து எந்தத் தகவலும் இல்லை. எனவே, வழக்கம்போல் அதிகாரிகள் வருகின்றனர், அமைச்சர்கள் வருகின்றனர் என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர்.

மாலை 6.30 மணி அளவில், மெதுவாக ஒரு தகவல் வெளியானது. `முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்’ என்பதுதான் அந்தத் தகவல். ஆனால், மாரடைப்பில் இருந்து முதலமைச்சர் மீண்டுவிட்டாரா? அல்லது விபரீதமாக ஏதாவது நடந்துவிட்டதா? என்பது பற்றி உறுதியான தகவல் எதுவும் இல்லை. அந்த நேரத்தில், அரசு இயந்திரம் அசுரத்தனமாக இயங்கிக் கொண்டிருந்தது. மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை மிக மோசமாக இருக்கிறது என்ற தகவல் போனது. அதனால், தமிழகம் பரபரப்பு அடை வதற்கு முன்பே டெல்லி பரபரத்தது. டெல்லி பத்திரிகையாளர்கள் அனைவரும் சென்னையில் உள்ள பத்திரிகையாளர்களிடம் விசாரிக்கத் தொடங்கினார்கள். உள்துறை அமைச்சகம் அவசர அவசரமாக சில உத்தரவு களைப் பிறப்பித்தது. அவர்கள் மூலம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும்,  ராகுல் காந்திக்கும் தகவல் போனது. அதையடுத்து, “முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும்” என்று டெல்லியில் இருந்து தலைவர்களின் அறிக்கைகள் 9 மணியில் இருந்து அடுத்தடுத்து வெளியாகின. அதன் பிறகுதான், அப்போலோ மருத்துவ மனையின் அறிக்கை வெளியானது.

அப்போலோ மருத்துவமனை சார்பில் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி வெளியான அந்த மருத்துவ அறிக்கை ‘இறுக்கமாக’ இருந்தது. முன்பு வெளியான அறிக்கைகளில், “முதலமைச்சர் நலமுடன் இருக்கிறார்; உடல்நிலை தேறிவருகிறார்” என்பது போன்ற வாசகங்கள் இருக்கும். ஆனால், 4-ம் தேதி வெளியான அறிக்கையில், அப்படி எந்த வாசகமும் இல்லை. மாறாக, ‘முதலமைச்சருக்கு கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டு, அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்” என்று மட்டும் சொல்லப்பட்டு இருந்தது.  இது அ.தி.மு.க தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அந்த நேரத்தில், அங்கு வந்த டி.டி.வி.தினகரன் அப்போலோவுக்குள் சென்றார். இவர், இதற்குமுன் ஒரே ஒருமுறை அப்போலோவுக்கு வந்து, உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் திரும்பிச் சென்றவர். இந்த முறை அவரைத் தடுக்க எந்த அதிகாரியும் முன்வரவில்லை.

p36b.jpg

ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரெஸ்ட் என்ற செய்தி ஊடகங்களில் வெளியான உடனே, அப்போலோ மருத்துவமனை முன்பு கொந்தளிப்பு மிகுந்த சூழல் உருவானது. அ.தி.மு.க தொண்டர்கள், மருத்துவமனையை நோக்கி சாரை சாரையாகப் படையெடுத்து வரத் தொடங்கினார்கள். பாதுகாப்புக்காக அங்கு நின்றிருந்த போலீஸ்காரர்களை ஏக வசனத்தில் திட்டிவிட்டு, இரும்புத் தடுப்புகளைத் தள்ளிவிட்டு அப்போலோ முன்பு குவிந்தனர். அங்கு, கவரேஜ் செய்து கொண்டிருந்த தொலைக்காட்சிகளின் கேமரா மேன்களையும் அவர்கள் திட்டித் தீர்த்தனர். இந்த பரபரப்பான சூழலில், ஓரமாக நடந்துவந்த டாக்டர் வெங்கடேஷ், சத்தமில்லாமல் அப்போலோவுக்குள் போனார். முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் எல்லாம் அப்போலோவுக்குள் இருந்தனர். அப்போலோவுக்கு வெளியே அ.தி.மு.க வி.ஐ.பி-க்கள் யாரும் இல்லை. அதனால், தொண்டர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

‘ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரெஸ்ட்’ என்ற செய்தியை அறிந்ததும், ஒட்டுமொத்த தமிழக காவல்துறையும் அலர்ட் ஆனது. உளவுத் துறை உயர் அதிகாரிகளோடு, காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கமிஷனர் ஜார்ஜ் தலைமையில் இந்தக் கூட்டம் நடந்தது. பின்னர், மத்திய உள்துறையின் உதவியும் கோரப்பட்டது. மத்திய அரசு, தன் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 30 கம்பெனி போலீஸை உடனடியாக அனுப்பி வைத்தது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள போலீஸ் பிரிவுகள் அலர்ட் செய்யப்பட்டன. சென்னையில் விடுமுறையில் இருந்த காவலர்கள் அனைவரும் மறுநாள் (5-ம் தேதி) காலையில் வந்துவிட வேண்டும் என உத்தரவுகள் பறந்தன. இந்த உத்தரவுகள் எல்லாம் கன்ட்ரோல் ரூம் மூலமாகவே சென்றன.

மகாராஷ்டிராவில் இருந்த தமிழகத்தின் பொறுப்பு கவர்னர் வித்யாசாகர்ராவ், அவசர அவசரமாக சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து அப்போலோவுக்கு கவர்னர் வந்தபோது, அவருடைய காரை அ.தி.மு.க தொண்டர்கள் சூழ்ந்துகொண்டனர். அதனால், அப்போலோ முன்பு கவர்னரின் கார் சிறிதுநேரம் நின்றது. அதன்பிறகு, கூட்டத்தைக் கட்டுப்படுத்திய போலீஸ்காரர்கள், கவர்னர் காருக்கு வழி ஏற்படுத்திக்கொடுத்தனர். அப்போலோவுக்குள் கவர்னர் நுழைந்தபோது, நள்ளிரவு 12 மணி. உள்ளே சென்ற கவர்னர், 12.15 மணிக்கு வெளியே வந்தார். கவர்னரின் கார் வெளியே வந்தபோது, அதற்குப் பின்னால், அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டியின் காரும் வந்தது. இருவருடைய கார்களையும் சூழ்ந்துகொண்ட ஊடகவியலாளர்கள், அவர்களிடம் கேள்வி கேட்க முயன்றனர். ஆனால் அவர்கள், கார்களை விட்டு வெளியே தலைகாட்டவில்லை.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அப்போலோவில் இருந்து துரத்தப்பட்ட அதே நேரத்தில், மன்னார்குடி உறவுகள் அனைத்தும் அப்போலோவில் ஒன்றுகூடின. திவாகரன், டி.டி.வி.தினகரன், பாஸ்கரன், இளவரசி, டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் சிவக்குமார் உள்ளிட்ட மன்னார்குடி சொந்தங்கள் எல்லாம் அப்போ லோவில் இருந்தனர். ஆனால், சசிகலாவின் கணவர் நடராஜன் அப்போலோ பக்கம் வரவில்லை. அவர் பெசன்ட் நகர் வீட்டிலும் இல்லை. மாறாக, ரகசியமான இடத்தில் இருந்து சில முக்கியமான வேலைகளுக்கு காய் நகர்த்திக்கொண்டிருந்தார்.

p36a.jpg

அப்போலோ மருத்துவமனை ஏரியாவில் நிலவிய கொந்தளிப்பான சூழல், நள்ளிரவு 2 மணிக்கு மேல் சீரடைந்தது. மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டனுக்கு கிளம்பிப் போனார், சசிகலா. அவரையடுத்து டி.டி.வி.தினகரனும் வெளியே சென்றார். அதன் பிறகு, என்ன மாயமோ தெரியவில்லை, அப்போலோவில் ஏரியாவில் அமைதி திரும்பத் தொடங்கியது. அத்துடன் மழையும் சேர்ந்துகொண்டதால், அங்கிருந்து தொண்டர்கள் கலையத் தொடங்கினார்கள்.

- ஜோ.ஸ்டாலின், பிரம்மா

படங்கள்: சு.குமரேசன், பா.காளிமுத்து, ஆ.முத்துக்குமார், மீ.நிவேதன், தே.அசோக்குமார்


``என்னிடம் நேரில் சொல்லட்டும்!’’

அப்போலோவைச் சுற்றி சோகமும் கொந்தளிப்பும் இருந்த நேரத்தில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தன் அத்தையைப் பார்க்க வந்தார். ஆனால், யார் உத்தரவிட்டார்களோ தெரியவில்லை, தீபாவை அப்போலோவின் கேட் அருகில்கூட நெருங்கவிடவில்லை. “தயவுசெய்து போய்விடுங்கள். இங்கே பிரச்னை செய்யாதீர்கள். உங்களை உள்ளேவிடக்கூடாது என்று எங்களுக்கு உத்தரவு” என்று தீபாவை போலீஸ்காரர்கள் மிரட்டினர். அதனால், பத்திரிகையாளர்களிடம் தீபா பேச முயன்றார். ஆனால், அதற்கும் போலீஸ்காரர்கள் அனுமதிக்கவில்லை. ஆனாலும், பத்திரிகையாளர்கள் விடாமல் தீபாவை துரத்திச் சென்று பேசினர். அப்போது, “என்னை உள்ளே விடக்கூடாது என்று சொல்ல அவர்கள் யார்? அவர்களை வெளியே வரச்சொல்லுங்கள். அவர்கள் என்னிடம் நேரில் சொல்லட்டும்” என்று கொந்தளித்தார். அவரிடம் பத்திரிகையாளர்கள், “மேடம், உங்களை உள்ளே விடக்கூடாது என்று சொன்னவர்கள் யார் என்று உங்களால் கணிக்க முடிகிறதா?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, “என் அத்தை கூடவே இருப்பவர்கள்தான் சொல்லி இருப்பார்கள்” என்று தீபா சொன்னார். போலீஸார் கடும் கெடுபிடி காட்டவே, தீபா தன் கணவருடன் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த சம்பவத்துக்குப் பிறகு மீடியாவினர் படம் எடுக்கவிடாமல் போலீஸ் தடுத்தது.

http://www.vikatan.com/juniorvikatan

 

Link to comment
Share on other sites

அந்த 75 நாட்கள்! - செப்டம்பர் 22 - டிசம்பர் 5

 

 

முதல்வர்  ஜெயலலிதா  உடல்நலம்  குன்றி  அப்போலோ  மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு டிசம்பர் 5-ம் தேதியுடன் 75 நாட்கள் ஆகின்றன. கடந்த இரண்டு மாதங்களாக, உடல்நிலையைத் தீர்மானிக்கும் இடமாக மட்டும் இல்லாமல், தமிழக அரசியலைத் தீர்மானிக்கும் இடமாகவும் அப்போலோ மாறிப்போனது. கடந்த 75 நாட்களாக இரும்புத் திரையாக இருந்த அப்போலோ மருத்துவ மனையில் நடந்தவை பற்றிய தொகுப்பு இங்கே...

p6a.jpg

செப்டம்பர் 22: இரவு 9.30 மணிக்கு, போயஸ் கார்டனில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அப்போலோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஜெயலலிதா.

செப்டம்பர் 23: ‘முதலமைச்சர் ஜெயலலிதா, சாதாரண காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவால் ஏற்பட்ட உடல்சோர்வுக்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருக்கிறார்’ என அப்போலோ முதல் அறிக்கையை வெளியிட்டது.

‘முதல்வர் ஜெயலலிதாவோடு கொள்கை அளவில் வேறுபட்டாலும், விரைவில் அவர் உடல்நலம் பெற்று பணியினைத் தொடர வாழ்த்துகிறேன்’ என தி.மு.க தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டார்.

‘முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டும்’ என பிரதமர் நரேந்திர மோடி, தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

செப்டம்பர் 25: முதல்வரின் உடல்நிலை குறித்தும், மேல் சிகிச்சைக்காக அவர் வெளிநாடு செல்ல இருக்கிறார் என்றும் செய்திகள் கிளம்பின.

‘‘ஜெயலலிதா ஓரிரு நாட்களில் வீடு திரும்பி, பணிகளை மேற்கொள்வார். வெளிநாட்டுச் சிகிச்சை அவருக்கு அவசியம் இல்லை’’ என அப்போலோ மருத்துவர்கள் பேட்டி அளித்தனர்.

செப்டம்பர் 27: ‘அப்போலோ மருத்துவமனையில் காவிரிப் பிரச்னை குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்’ என அரசு அறிக்கை வெளியிட்டது.

செப்டம்பர் 30: ‘முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவமனையில் இன்னும் சில தினங்கள் இருந்துவிட்டு தன் பணிகளுக்குத் திரும்புவார்’ என அப்போலோவின் அடுத்த அறிக்கை வெளியானது.

p6.jpg

‘ஜெயலலிதா உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் வருவதால், அவருடைய சிகிச்சைபெறும் படத்தை வெளியிட வேண்டும்’ என தி.மு.க தலைவர் கருணாநிதி அறிக்கை.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க, லண்டனில் இருந்து பிரபல டாக்டர் ரிச்சர்ட் பியெல் சென்னை வந்தார்.

அக்டோபர் 1: ஜெயலலிதாவை நலம் விசாரிக்க அப்போலோ மருத்துவமனைக்கு தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் வந்தார். ‘முதல்வர் உடல்நலம் தேறிவருகிறார்’ என அறிக்கை.

மருத்துவர் ரிச்சர்ட் பியெல் ஆலோசனைப்படி ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அப்போலோ மருத்துவமனை செய்திக்குறிப்பு.

அக்டோபர் 3:  ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் முன்னாள் ஆசிரியர் மாலினி பார்த்தசாரதி, ‘ஜெயலலிதா அபாயகட்டத்தைத் தாண்டி விட்டார்’ என ட்விட் செய்தார். தொல்.திருமாவளவன் அப்போலோ வந்தார்.

அக்டோபர் 5: ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி.சி.கில்நானி, மயக்க மருத்துவ நிபுணர் டாக்டர் அஞ்சன் த்ரிகா, இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் நிதிஷ் நாயக் ஆகியோர் சென்னை வந்தனர்.

அக்டோபர் 6: சிகிச்சை பெற்றுவரும் முதல்வரின் உடல்நிலை குறித்து புகைப்படத்துடன் கூடிய விவரங்களை வெளியிடக் கோரி டிராஃபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

‘ஜெயலலிதா இன்னும் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது’ என அப்போலோ அறிக்கை வெளியிட்டது.

‘‘மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் என் அத்தையைப் பார்க்கவிடாமல் தடுக்கின்றனர்’’ என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குற்றம்சாட்டினார்.

அக்டோபர் 7: ‘தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்த வேண்டும்’ என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு பி.ஜே.பி. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதினார். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து நேரடியாக வந்து கேட்டு அறிவதற்காக அப்போலோ வந்தார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.

p6b.jpg

அக்டோபர் 8: ‘முதலமைச்சருக்கு நுரையீரல் பிரச்னை, செயற்கை சுவாசம், பாஸிவ் பிசியோதெரபி, நோய்த்தொற்றுப் பிரச்னைகள் இருக்கின்றன’ என அப்போலோவில் இருந்து அறிக்கை வெளியானது. ஸ்டாலின் அப்போலோ விசிட். வைகோ, இரா.முத்தரசன் உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் ஆஜர்.

அக்டோபர் 10: மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு அப்போலோ வந்தார். கேரள முதல்வர் பினராயி விஜயன் வருகை.

அக்டோபர் 11:  ‘முதலமைச்சர் ஜெயலலிதாவின் துறைகளை, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார்’ என தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவித்தார்.

அக்டோபர் 12: ஜெயலலிதா உடல்நிலை குறித்து விசாரிக்க பி.ஜே.பி தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, இல.கணேசன் ஆகியோர் அப்போலோவுக்கு வந்தனர்.

அக்டோபர் 13: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையைக் கண்காணிக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு மீண்டும் சென்னை வந்தது.

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக ஏழு பேரை தமிழக போலீஸார் கைது செய்தனர்.

அப்போலோ மருத்துவமனைக்கு வந்த கருணாநிதியின் துணைவி ராஜாத்தி அம்மாள், சசிகலாவை சந்தித்து ஜெ-வின் உடல்நிலை பற்றி விசாரித்தார்.

அக்டோபர் 16:  நடிகர் ரஜினிகாந்த் அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார்.

அக்டோபர் 19: அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி நெல்லிக்குப்பம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கப்பூரில் இருந்து பிசியோதெரபி மருத்துவர்கள் குழு வருகை.

அக்டோபர் 21:  ‘ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் பேசுகிறார்’ என அப்போலோ தெரிவித்தது.

நவம்பர் 4: ‘‘முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து வருகிறார். தன்னைச் சுற்றி நடப்பவை பற்றி அறிந்துகொள்கிறார். மருத்துவமனையில் இருந்து எப்போது வீடு திரும்புவது என்பதை அவரே முடிவு செய்வார்’’ என்றார் மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி ரெட்டி.

நவம்பர் 12:   அனைவரது பிரார்த்தனைகளால்தான் நான் மறுபிறவி எடுத்துள்ளேன் என முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்.

நவம்பர் 19:  ‘‘செயற்கை சுவாச உதவி இல்லாமல் ஜெயலலிதா சுவாசிக்கிறார்’’ என அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி ரெட்டி கூறினார்.

‘‘ஜெயலலிதா தீவிரச் சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்’’ என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்தனர்.

p6c.jpg

நவம்பர் 21: ஜெயலலிதாவின் இதயநோய், தொற்றுநோய் போன்றவற்றுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

நவம்பர் 25: ‘‘தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 90 சதவிகிதம் தாமாகவே சுவாசிக்கிறார். அவருக்கு ‘ட்ராக்யோஸ்டமி’ செய்யப்பட்டிருப்பதால், சிறிய ஸ்பீக்கர் உதவியுடன் பேசுகிறார்’’ என பிரதாப் சி ரெட்டி தெரிவித்தார்.

டிசம்பர் 4:  ‘‘முதல்வர் பூரணமாக நலமடைந்து வருகிறார். அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேட்டி.

முதல்வருக்கு திடீர் இதயத்துடிப்பு முடக்கம் ஏற்பட்டதால் இதயநோய் மற்றும் நுரையீரல் நோய் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதாக அப்போலோ அறிக்கை.

முதல்வர் உடல்நிலை மோசமாக உள்ள தகவல் காட்டுத் தீபோல பரவியதால், தமிழகம் முழுக்க உள்ள அ.தி.மு.க தொண்டர்கள் அப்போலோவுக்கு விரைந்தனர்.

தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அவசர அவசரமாக மகாராஷ்டிராவில் இருந்து சென்னை அப்போலோவுக்கு வந்து முதல்வரின் உடல்நிலை பற்றிக் கேட்டறிந்தார்.

டிசம்பர் 5: காலை 11 மணிக்கு அப்போலோ மருத்துவமனையில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடந்தது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை எதுவும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் விளக்கம் அளித்தார். மருத்துவர் கில்நானி தலைமையிலான 4 எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க டெல்லியில் இருந்து சென்னைக்கு விரைந்தனர்.

மதியம் 1 மணி: ‘முதல்வர் ஜெயலலிதா இதயத்துடிப்பு முடக்கத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவரின் சுவாசம், இதய செயல்பாடு உதவிக்காக எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதல்வருக்கு மருத்துவ நிபுணர்களால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என அப்போலோ அறிக்கை.

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.