Jump to content

ஜெயலலிதா


Recommended Posts

ஜெயலலிதா நேசித்த 5 பெண்கள்! #jayalalithaa

ஜெயலலிதா

ஒரு பெண்ணின் எல்லைகள் இவைதான் என வகுத்திருந்தவற்றைத் தகர்த்தெறிந்து சாதனை படைத்தவர் ஜெயலலிதா. அவரின் மறைவுக்கு கட்சி பேதமின்றிப் பலரும் கண்ணீர் சிந்துவதற்கு முக்கியக் காரணம், தான் ஒரு பெண்தானே என்று எந்த இடத்திலும் தயக்கம் கொள்ளாமல், தன் ஆளுமையை வளர்த்துக்கொண்டு நிகரில்லாத தலைமையாக விளங்கியதே. பல தலைவர்களோடு கைகோத்து தேர்தல் களத்தைச் சந்தித்து வெற்றி, தோல்விகளைப் பார்த்தவர். எப்போதும் தன் ஆளுமையைச் சரித்துக்கொள்ளாதவர். ஜெயலலிதா, தன் வாழ்க்கையில் நேசித்த பெண்களில் ஐந்து பேர் முக்கியமானவர்கள்.

15319475_1512308715465294_155914506_n_11

அன்னை சந்தியா: தன்னுடைய சிறுவயதிலேயே அப்பாவை இழந்த ஜெயலலிதாவுக்கு அம்மாவாக மட்டுமல்லாமல் சிறந்த தோழியாகவும் இருந்தவர் சந்தியா. ஜெயலலிதாவின் ஒவ்வோர் அசைவையும் அன்போடு கவனித்து வழிநடத்தியவர். அதேபோல, அம்மாவின் அரவணைப்பை எப்போதும் விரும்பும் பெண்ணாக இருந்தார் ஜெயலலிதா. சென்னை சர்ச் பார்க்கில் தான் படிக்க வந்ததைப் பற்றி குறிப்பிடும்போது, "பல ஆண்டுகள் அம்மாவைப் பிரிந்து பெங்களூரில் இருந்த எனக்கு, சென்னையில் அம்மாவுடன் இருந்து படிக்கும் வாய்ப்பாக அமைந்தது" என உற்சாகமானார். ஒரு நிகழ்ச்சிக்குச் செல்லவேண்டுமானால், என்ன உடை உடுத்திச் செல்வது என்பதில்கூட அம்மாதான் உதவ வேண்டும். பள்ளிக்குச் செல்லும்போது அடம்பிடித்தவர், பின்னாளில் நடிக்கச் செல்லும்போது, இன்றைக்கு லீவு போட்டுவிடவா என அடம்பிடிப்பாராம். அப்போதும் செல்லக் கோபத்துடன் கடிந்துகொண்டு, அனுப்பிவைப்பது அம்மாதான். பள்ளிக்கோ, நடிக்கவோ எங்கு சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பினாலும், வீட்டில் இருந்து அம்மா வரவேற்க வேண்டும் என்பதில் கறாராக இருப்பராம் ஜெயலலிதா. இவரின் மனதை நன்கறிந்த அம்மா, தான் வெளியே எங்கு சென்றிருந்தாலும் ஜெயலலிதா வீட்டுக்கு வரும் நேரத்திற்கு தவறாமல் ஆஜராகிவிடுவார். ஜெயலலிதாவிடம் அவர் மிகவும் கடுமையாக  நடந்துகொண்ட ஒரே விஷயம், பரதநாட்டியம் பழகுவதற்குத்தான். நாட்டியம் கற்றுக்கொடுக்க வரும்  குருவிடம், தலை வலிக்கிறது... வயிறு வலிக்கிறது... என ஏதேனும் ஒரு காரணம் சொல்லி அனுப்பிவிடுவார். இந்த விஷயம் அம்மாவுக்குத் தெரிந்ததும் கண்டிப்போடு, உனக்கு என்னவானாலும் சரி, பரதநாட்டிய  வகுப்புக்குச் சென்றே ஆகவேண்டும் என வற்புறுத்துவாராம். அந்த நடனம்தான் சினிமா வாழ்க்கைக்கு கை கொடுத்தது என்பார் ஜெயலலிதா. 'பத்திரிகைகளில் வரும் எதிர்மறைச் செய்திகளைத் தலைக்குள்  ஏற்றிக்கொள்ளாதே' என்று ஆறுதல்படுத்திய அம்மாவே, தன்னுடைய குரு, சிநேகிதி, வழிகாட்டி என்பார் ஜெயலலிதா.

Jayalalithaa_600_15308_12026.jpg

கேத்ரின் சைமன்: ஜெயலலிதாவின் ஆங்கிலத் திறன் எல்லோரையும் வியக்கவைக்கக்கூடியது. சின்னத்  தடையுமின்றி ஆங்கிலத்தில் உரையாற்றுவார் என்பதற்கு மாநிலங்களவையில் அவர் நிகழ்த்திய பேச்சுக்களே உதாரணம். ஜெயலலிதாவின் இநந்த் திறமைக்கு, அவர் பயின்ற ஆசிரியர்களே காரணம். அவர்களில் முதன்மையானவர், கேத்ரின் சைமன். சென்னை சர்ச் பார்க் பிரசன்டேஷன் கான்வென்ட்டில் ஜெயலலிதா  படிக்கும்போது, அவரிம் அன்புகொண்டு தனிக்கவனம் எடுத்துக்கொண்டவர். மாணர்களோடு நட்புறவோடு பழகி, அவர்களைப் பண்படுத்தும் குணம் கொண்டவர் கேத்ரின் சைமன். சில மாதங்களுக்கு முன் கேத்ரின் இறந்தபோது, 'தன் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் என் ஆசிரியர்' என நெகிழ்வோடு குறிப்பிட்டார் ஜெயலலிதா.

15320348_1512296815466484_1408141489_n-1

இந்திராகாந்தி: 1984-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக ஜெயலலிதா நியமிக்கப்பட்டபோது, பாராளுமன்றத்தில் ஆங்கிலத்திலும் சக எம்.பி-க்களிடம் இந்தியிலும் பேசி அசரவைத்தார். இந்த மொழியாற்றல் இந்திரா காந்தியின் நட்பு கிடைக்க வழிசெய்தது. இயல்பாகவே இந்திரா காந்தியின் மீது ஈர்ப்பும் பிரமிப்பும் உள்ள ஜெயலலிதா, இந்திரா காந்தியுடன் நெருக்கமானார். அது எந்தளவுக்கு என்றால், ஜெயலலிதா, தனக்கு ஒரு நெருக்கடி வந்தபோது, "அம்மா... எனத் தொடங்கித் தன் நிலையை விளக்கி, உதவுமாறு கடிதம் எழுதியபோது... இந்திரா காந்தி, டெல்லியிலிருந்து தனக்கு நம்பிக்கையானவர்களை அனுப்பி ஆறுதலும் உதவியும் செய்யவைத்தார். நம்பிக்கை தரும் இளம் அரசியல் தலைவர் என ஜெயலலிதா மீது இந்திரா காந்திக்கும் அன்பு இருந்தது. அதனால்தான் யூகோஸ்லேவியா நாட்டு அதிபருக்குத் தரப்பட்ட விருந்துக்கு ஜெயலலிதாவை அழைத்திருந்தார். அந்த விருந்தில் கலந்துகொண்டவர்கள் மொத்தம் 16 பேர்தான் எனும்போதே, இதன் முக்கியத்துவத்தை உணர முடியும். ஒவ்வொரு நாட்டு அதிபரிடமும் ஜெயலலிதாவை அறிமுகம் செய்துவைத்தார் இந்திரா காந்தி. தன் அரசியல் வாழ்வைப் பிரகாசிக்கவைக்கப் பெரிதும் உதவுவார் என நம்பிக்கையோடு இருந்த ஜெயலலிதாவுக்கு இந்திராகாந்தியின் படுகொலை பெரும் இடியாக விழுந்தது.

Manorama-_jaya_11391.jpg

மனோரமா: 'ஆச்சி' என்று திரை உலகினரால் அன்போடு அழைக்கப்பட்ட மனோரமாவும் ஜெயலலிதாவும் திரைப்படங்களில் நடிக்கும்போதிருந்தே நல்ல தோழிகள். பல திரைப்படங்களில் இணைந்து நடித்ததன் மூலம் நட்பு இன்னும் வலுப்பட்டது. தனிப்பட்ட வாழ்வில் ஏற்றம், சரிவு ஏற்படும்போதெல்லாம் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தனர். ஜெயலலிதா அரசியலுக்கு வந்தபிறகு, மனோரமா அவருக்கு ஆதரவாக தேர்தல்  பிரசாரம் செய்தார். மனோரமா இறந்தபோது, ஜெயலலிதா சிறுதாவூரில் இருந்தார். பரபரப்பான அரசியல் சூழல்
நிலவிய நேரம் அது. ஆனாலும் அங்கிருந்து வந்து அஞ்சலி செலுத்தினார். 'தன் அம்மாவுக்குப் பிறகு, தன்னை  அம்மு என பாசத்தோடு அழைக்கும் மனோரமா, தனக்கு மூத்த சகோதரி என நினைவுகூர்ந்தார்.

22jaya1_%281%29_11115.jpg

சசிகலா: ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியாகக் கருதப்படுவர் சசிகலா. தமிழ்நாடு அரசு மக்கள் தொடர்பாளராக இருந்த நடராசனின் மனைவி. வாடகை வீடியோ கடையை நடத்தி வந்தவர். ஜெயலலிதா அறிமுகமான சிறிது காலத்திலேயே அவரின் நம்பிக்கைக்கு உரியவராக மாறினார். எம்.ஜி.ஆர் இறந்த பிறகு, ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்தார். பின்னாட்களில் போயஸ் கார்டனிலேயே குடியேறும் அளவுக்கு இவரின் நட்பு வளர்ந்தது. இவரின் சகோதரி மகன் சுதாகரனை ஜெயலலிதா வளர்ப்பு மகனாக தத்தெடுத்து பிரமாண்ட திருமணம் செய்து வைத்தார். ஜெயலலிதாவின் நிழலாக தொடரும் அளவுக்கு அவரின் நம்பிக்கையைப் பெற்றவர். வெற்றியிலும் தோல்வியிலும் கூடவே இருக்கும் இவர்களின் நட்பில், சில நேரங்களில் உரசல்கள் வந்தபோதிலும், இன்று, ஜெயலலிதாவின் உடல் அருகே கலங்கி நிற்கும் வரை உடன் இருப்பவர்.

http://www.vikatan.com/news/tamilnadu/74289-jayalalithaa-and-the-women-she-loved-the-most.art

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply

கோமளவல்லி, பிளைமவுத் கார், 7 நாய்க்குட்டிகள், பியானோ...! ஜெயலலிதாவின் பெர்சனல் பக்கங்கள் #Infographic

க்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதல்வர் செல்வி ஜெயலலிதா.  அவர் அரசியலுக்கு வந்த பின்னர் அவருடைய வாழ்க்கையில் நடந்தது என்ன என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், அவர் சிறுவயது முதல் விரும்பி உண்ட உணவு, பிடித்த செல்லப் பிராணிகள், எந்தத் துறையில் ஆர்வம் கொண்டவர், யாரை ரொம்பப் பிடிக்கும் போன்ற விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமெனில் கீழே உள்ள படத்தை க்ளிக் செய்யவும்... 

ஜெயலலிதா

 

http://www.vikatan.com/news/tamilnadu/74280-childhood-information-about-jayalalithaa.art

Link to comment
Share on other sites

ஜெயலலிதாவிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய குணங்கள்!

ஜெயலலிதா

ஜெயலலிதாவின் மரணத்தை தமிழகம் எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகிறது. அரசியல் அபிமானம் என்பதையெல்லாம் தாண்டி ஒரு மனிதராக, தலைவியாக எல்லோருக்கும் பிடித்தமான ஒருவராக அவர் வாழ்ந்திருந்தார் என்பதையே இது காட்டுகிறது. பலருக்கும், பல விஷயங்களுக்கும் உதாரணமாக வாழ்ந்து சென்ற ஒருவரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் உண்டு. அவற்றில் சில...

1) உறுதி:

 ஜெயலலிதா மறைந்தவுடன் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் எழுதப்பட்ட வார்த்தை ‘இரும்பு மனுஷி’. தனது முடிவுகளில், ஜெயலலிதா போல உறுதியாக நின்ற வேறு தலைவரை நம்மால் நினைவு கூற முடியாது. அரசியல் பிரவேசங்களுக்கு முன்பே இதுதான் அவரின் குணம். பலம். சில சமயங்களில் இந்த உறுதியே அவருக்கு எதிர்மறையாக போயிருக்கிறது. ஆனால், அதை பலமாக மட்டுமே கூடுமானவரையில் இருக்குமாறு பார்த்துக் கொண்டார் ஜெயலலிதா. 

2) தைரியம்:

உறுதியான முடிவுகள் எடுக்க தேவை தைரியம். ஜெயலலிதாவிடம் இருந்த தைரியம் மிகப்பெரியது. எந்தச் சூழலை கண்டும், எந்த மனிதரைக் கண்டும், எந்தப் பிரச்னையைக் கண்டும் ஜெயலலிதா பயந்ததில்லை. அந்த தைரியம் தான் அவரை கோடிக்கணக்கான மக்கள் மனதுக்கு கொண்டு சென்றது. கட்சிக்குள்ளேயும், கட்சிக்கு வெளியேயும் அவருக்கு நிகழ்ந்த பல கொடுமைகளை தைரியத்துடன் எதிர்கொண்டதாலே அவரால் இத்தனை ஆண்டும் இந்த நாட்டை ஆள முடிந்தது

3) நம்பிக்கை

தன் மேல் மட்டுமல்ல, மற்றவர்கள் மேலும் ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை அதிகம். அவரை போல புதுமுகங்களுக்கு அரசியலில் வாய்ப்பு தந்த இன்னொரு தலைவர் கிடையாது. ஒரே தேர்தலில் ஒரு சாதாரண தொண்டன் அமைச்சர் ஆக முடிந்ததெல்லாம் ஜெயலலிதா காலத்தில் தான். இதை அரசியல் விமர்சகர்கள் பலர் குறையாக பார்த்தாலும், ஜெயலலிதா பாஸிட்டீவாகத்தான் நினைத்தார். அதன் பலன்களை அவர் கண்கூடாக பார்த்ததாலே தொடர்ந்து புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்புகளை அளித்தார். அதிகாரம் பகிர்ந்து பலருக்கும் கிடைக்க இது முக்கியமான ஒரு வாய்ப்பாக இருந்தது என்பதை மறுக்க முடியாது.

4) யாரையும் சார்ந்து இருந்ததில்லை

பிறர் மேல் அதிக நம்பிக்கை வைத்தவர் என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு உண்மைதான் அவர் யாரையும் நம்பி இருந்ததில்லை என்பதும். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேட்ட குதர்க்கக் கேள்விகளுக்கு கூட துறை அமைச்சர்கள் பதில் அளிக்க இயலாமல் நிற்கும்போது அவரே பதில் அளித்ததுண்டு. எல்லா கன்ட்ரோலையும் தன்னிடத்தில் வைத்துக்கொண்டவர், அதை திறம்படவும் செய்தார் என்பதுதான் ஆச்சர்யம்.

sddefault_10417.jpg

5) மொழி ஆளுமை:

எந்த ஒருவரின் வெற்றிக்கும் அவர்களது கம்யூனிகேஷன் மிக முக்கிய பங்கு வகிக்கும். அதற்கு மொழியில் ஆளுமை முக்கியம். ஜெயலலிதாவுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகள் நன்றாக தெரியும். அவரது ஆங்கில உச்சரிப்பும், வார்த்தை தேர்வுகளும் பிரபலம். சொல்ல வருவதை தெளிவாகவும், சுருக்கமாகவும், இன்முகத்தோடும் சொல்வதில் ஜெயலலிதாவுக்கு நிகர் அவரேதான்.

6) தலைமைப் பண்பு:

ஜெயலலிதா என்ற வார்த்தைக்கு அர்த்தமாக இதை சொல்லலாம். கோடிக்கணக்காக தொண்டர்கள் கொண்ட ஒரு கட்சியை, தன் ஒற்றை சொல்லுக்கு கீழ் கொண்டு வருவதெல்லாம் இமாலய சாதனை. மூத்த அரசியல்வாதிகள், அபார திறமைசாலிகள், வழிவழியாக அரசியலில் இருந்தவர்கள் என பலரையும் சமாளித்துதான் நிரந்தரப்  பொதுச்செயலாளர் என்ற இடத்துக்கு வந்தார். அதுபோலவே, எம்.ஜி.ஆருக்கு அடுத்து தொடர்ந்து இரண்டு முறை முதல்வராக தேர்வானவர் ஜெயலலிதா மட்டுமே. இவை அனைத்துக்கும் காரணம் அவரின் தலைமைப்பண்புதான். மக்களும் அதை நம்பியே அவருக்கு வாக்களித்தார்கள்.

7)  கடின உழைப்பு
ஒரு மாநிலத்தை ஆள்வது என்பது சாதாரண விஷயமில்லை. அதிகாரிகள், வசதிகள் என அனைத்தும் இருந்தாலும் தினம் தினம் பல மணி நேரங்கள் உழைக்க வேண்டிய ஒரு செளகர்ய சிரமம் அது. தனது வாழ்க்கையில் ஜெயலலிதா இத்தனை சிரமப்பட்டிருக்க வேண்டியதில்லை என ஒரு முறை சொல்லியிருக்கிறார்.

“"அம்மா சம்பாதித்ததை எல்லாம் சேர்த்துவைத்திருந்தால், நான் சினிமாவுக்கே வந்திருக்க வேண்டாம். என்னை நல்லா படிக்கவைச்சு, சாதாரணமான  குடும்பத்துப் பெண் மாதிரி 18, 19 வயசிலே நல்ல இடத்திலே கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்தால், நான் நாலு குழந்தைகளுக்குத் தாயாகி இருப்பேன்... ஹேப்பியாக. இத்தனை அப்ஸ் அண்ட் டவுன்ஸ் என் லைஃப்பிலே இருந்திருக்காது."

என சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. எவ்வளவு சிரமங்கள் வந்தபோதும், தனது உழைப்பால் அதையெல்லாம் வெற்றிப்படிக்கட்டுகள் ஆக்கியவர் என்பது உண்மை. 

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

எம்.ஜி.ஆர் வழியில் ஏழைகளின் ஏந்தலாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா!

Jayalalithaa_001_00256.png

"மக்களால் நான், மக்களுக்காகவே நான்" - இந்த தாரக மந்திரச் சொல்லைக் கேட்டதுமே, தமிழக மக்கள் அனைவர் மனதிலும் நிழலாடும் உருவமாகத் திகழ்ந்தவர் முதலமைச்சர் ஜெயலலிதாதான்.

திரைத்துறையிலும், அரசியல் வாழ்விலும் தனக்கென ஒரு தனியிடத்தைக் கொண்டு, இறுதி மூச்சு உள்ளவரை, எண்ணற்ற சாதனைகளைப் படைத்தவர் ஜெயலலிதா. 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எம்.ஜி.ஆர், கடந்த 1972-ம் ஆண்டு தொடங்கியது முதல், கோடிக்கணக்கான எம்.ஜி.ஆர் ரசிகர்களும், சாமான்ய மற்றும் ஏழை-எளிய மக்களும், குறிப்பாக தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பெண்களும் எம்.ஜி.ஆரின் பின்னால் அணிவகுத்து, அவருக்கு மகத்தான ஆதரவை அளித்தனர்.

ஏழை-எளிய மக்களும், ரசிகர்களும் அளித்த பேரன்பு, எம்.ஜி.ஆரே எதிர்பார்க்காதது. திரையுலகில் அளித்த பேராதரவைக் காட்டிலும், அரசியலில் தம்மை திக்குமுக்காடச் செய்யும் அளவுக்கு அன்பையும், ஆதரவையும் தொடர்ந்து அளித்த சாமான்ய மக்களுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறோம்? என்று பல நாட்கள் இரவு, பகலாக எம்.ஜி.ஆர் யோசித்ததன் விளைவாகவே, தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

சத்துணவுத்திட்டம், வீட்டில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை, ஏழை மக்களுக்கு இலவச காலணி வழங்கும் திட்டம், விவசாயிகளுக்கு தடையில்லா இலவச மின்சாரம் என்று, தம்மை முதல்வர் பதவியில் அமர்த்தி வைத்த, சாமான்ய மக்களின் நலனில் அன்றாடம் அக்கறை கொண்டு, தமிழக முதல்வர் பதவியை அலங்கரித்தவர் எம்.ஜி.ஆர்.Jayalalitha_Rare_8_1_00575.jpg

கடந்த 1977-ல் ஆட்சியைப் பிடித்தது முதல், 1987-ல் எம்.ஜி.ஆர் மறையும் வரை, தொடர்ந்து முதல்வராகப் பதவியில் இருந்தவர் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரை, தனது அரசியல் ஆசானாகக் கொண்டு, அரசியலில் அவரது வழியைப் பின்பற்றி ஏழை-எளிய மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காகவும், மகளிர் வாழ்வில் தன்னம்பிக்கையுடனும், துணிவுடனும் திகழ்வதற்காகவும் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தியவர் முதல்வர் ஜெயலலிதா.

தமது 68-வது வயதில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார் ஜெயலலிதா. கடந்த 75 நாட்களாக, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும், அவரது உடல்நிலைலயில் முன்னேற்றம் ஏற்படவில்லை. நேற்று மாரடைப்பு ஏற்பட்டு, தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

எம்.ஜி.ஆர் வழியில், செயல்பட்ட முதல்வர் ஜெயலலிதா, 'எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்' என்று தனது ஒவ்வொரு உரையின் போதும், ஜெயலலிதா தவறாமல் குறிப்பிடுவார். 

ஏழை மக்கள் எல்லாமும் பெற வேண்டும் என்பதற்காக, எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி, அல்லும், பகலும் ஏழை மக்கள் நல்வாழ்விற்காக அயராது பாடுபட்டு வந்த, ஏற்றமிகு ஏந்தலான முதல்வர் ஜெயலலிதா என்னும் ஒளிவிளக்கு இப்போது அணைந்து விட்டது. 

ஏழை மக்களுக்கு என்றென்றும் அரணாக விளங்கிய ஜெயலலிதா-வின் ஆன்மா அவர் ஒவ்வொரு அ.தி.மு.க தொண்டன் மறைவின்போதும், தெரிவிப்பது போன்ற, இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும். 

ஏழைகள் வாழ்வில், ஜெயலலிதா தொடங்கி வைத்த எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள், என்றென்றும் நீடிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

http://www.vikatan.com/news/coverstory/74257-jaya-follows-the-footpath-of-mgrs-path-till-death.art

Link to comment
Share on other sites

"என்னுடைய வாழ்க்கையும், கரியரும் சூறாவளி போன்றது!'' #JayalalithaaQuotes

வாழ்க்கை

 

"செய்வீர்களா... நீங்கள்? செய்வீர்களா?" என்று தேர்தல் பிரசாரங்களில் போது கம்பீரமாக முழங்கிய ஜெயலலிதா, தன் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் சொன்ன சில முக்கியமான வாசகங்கள் மட்டும் தொகுப்பாக இங்கே... ஜெயலலிதா சொல்லிய ஒவ்வொரு சொல்லுக்கு பின்னாலும் வலிமை, வேதனை, போராட்டம், நம்பிக்கை... மிகுந்து இருப்பதை இவர் சொன்ன வாக்கியங்களில் இருந்தே புரிந்துகொள்ள முடிகிறது.

 

"என்னுடைய வாழ்க்கையும், கரியரும் ஒரு சூறாவளி காற்றை போன்றது."

"எனக்கு உள்ளும் சோகம், கோபம், அழுகை எல்லாம் உண்டு. ஆனால், ஒரு தலைமை பொறுப்பிற்கு வரும்போது உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது."

"அம்மா சம்பாதித்ததை எல்லாம் சேர்த்துவைத்திருந்தால், நான் சினிமாவுக்கே வந்திருக்க வேண்டாம். என்னை நல்லா படிக்கவைச்சு, சாதாரணமான  குடும்பத்துப் பெண் மாதிரி 18, 19 வயசிலே நல்ல இடத்திலே கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்தால், நான் நாலு குழந்தைகளுக்குத் தாயாகி இருப்பேன் ஹேப்பியாக. இத்தனை அப்ஸ் அண்ட் டவுன்ஸ் என் லைஃப்பிலே இருந்திருக்காது."

"என்னை வீழ்த்த நினைத்தவர்கள் ஒருபோதும் வென்றதில்லை. நம் கட்சியினர் நினைத்தது குறித்த நேரத்தில் நடக்கும். இதை யாராலும் தடை செய்ய முடியாது."

"நமது இலட்சியம் உயர்வானது! நமது பார்வை தெளிவானது! நமது வெற்றி முடிவானது!"

"இந்தியாவில் நடைபெறும் அத்தனை போராட்டங்களிலும் 25 சதவீதம் தமிழ்நாட்டில் மட்டுமே நிகழ்கின்றன என்றால் அவ்வளவு தாராள மனதோடு ஜனநாயக நெறிமுறைகளை காக்க வேண்டும் என்ற உணர்வோடு இந்த அரசும், காவல்துறையும் அத்தனை போராட்டங்களுக்கும் அனுமதி வழங்குகின்றன என்று தான் பொருள்."

unnamed_09079.jpg

"எனக்கென்று தனிப்பட்ட வாழ்வு இல்லை. எனக்கென்று தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை. நான் வாழ்வதே இந்த இயக்கத்திற்காகத்தான்; தமிழக மக்களுக்காகத்தான்."

“குடும்ப அரசியல் என்னும் நச்சு மரம் தமிழகத்தில் வேர்களையும், விழுதுகளையும் பலப்படுத்திக்கொள்ளுமேயானால் அது தனிமனித சுதந்திரத்திற்கு ஆபத்தாக முடியும்.”

"காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது, எனது 30 ஆண்டு கால அரசியல் வாழ்வில் கிடைத்த வெற்றி."

"எப்போதெல்லாம் நான் ஆட்சிக்கு வருகிறேனோ, அப்போதெல்லாம் தமிழ் சினிமாத் துறைக்கு தேவையான ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்கி வருகிறேன்."

"தமிழக மக்கள் யாரிடத்திலேயும் கை நீட்டிப் பெறுகின்ற நிலைமை இருக்கக் கூடாது. இந்த நிலையை எனது வாழ்நாளில் நான் காண வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. அதுதான் என்னுடைய இலட்சியம்."

"எனக்கென்று யார் இருக்கிறார்கள். நான் தவ வாழ்க்கை வாழ்கிறேன்."

"உயிரைவிட வேண்டுமானால் கட்சிக்காக விடத்தயார்."

"என் வாழ்வின் ஒருகட்டத்தில் நான் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தேன். ஆனால், என் மன வலிமையினால் அதில் இருந்து மீண்டு வந்தேன்."
 
"முதல் தவறு, என் வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட அநேகம் பேர்கள் இருக்கும்போது சுயசரிதம் எழுத ஆரம்பித்தது. இரண்டாவது தவறு, எழுதுவதில் ரொம்ப ஃபிராங்க் ஆக இருந்ததுதான்."

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

'மக்களால் நான், மக்களுக்காக நான்'

 
 

வெளிப்படையாக தனது மனதில் தோன்றியதை பேசும் ஜெயலலிதாவுக்கு, அவரது பேச்சு பல ஆதரவாளர்களையும், வெற்றியையும் பெற்றுத் தந்திருந்தாலும், சில சமயங்களில் சர்ச்சையையும் உருவாக்கியுள்ளது.

செய்வீர்களா! நீங்கள் செய்வீர்களா!'
 செய்வீர்களா! நீங்கள் செய்வீர்களா!'

''எனக்கென்று எதுவுமில்லை, எனக்கென்று யாருமில்லை தமிழக மக்கள் தான் எனக்கு எல்லாமே '' அதிமுக தொண்டர்களை உணர்ச்சி வெள்ளத்தில் தத்தளிக்க செய்யும் ஜெயலலிதாவின் வாசகம்.

'' நான் ஆளுநர் மாளிகைக்கு சென்ற போது, ஆளுநர் சென்னா ரெட்டி என்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்தார்'' - தமிழக ஆளுநர் சென்னா ரெட்டி மீது சட்டமன்றத்தில் ஜெயலலிதா தெரிவித்த பகீர் குற்றச்சாட்டு இது.

தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் திரண்டிருக்கும் மக்கள் கூட்டத்தை பார்த்து ஜெயலலிதா வினவும் ''செய்வீர்களா! நீங்கள் செய்வீர்களா!'' வாசகம் தமிழக அரசியல் வரலாற்றில் மிகவும் பிரசித்தி பெற்றது.

ஜெயலலிதா  ஜெயலலிதா

''இஸ்லாமிய சகோதரர்களுக்கு நான் ஓர் உத்தரவாதம் தருகிறேன். நான் முன்பு ஒரு தவறு செய்து விட்டேன். நான் செய்த தவறை ஒப்புக் கொள்ளும் துணிச்சல், தைரியம் எனக்கு உண்டு அந்தத் தவறுக்குப் பரிகாரமாகத்தான் பிஜேபி ஆட்சியை நான் கவிழ்த்தேன்.'' - சென்னை கடற்கரையில் ஒரு இஸ்லாமிய அமைப்பு ஏற்பாடு செய்த மாநாட்டில் உரையாற்றிய ஜெயலலிதா தான் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தது தவறு தான் என்று தெரிவித்தார்.

2001ல் ஆட்சியிலிருந்த போதே "தகரம் கண்டுபிடிக்கும் முன்பே கம்யூனிஸ்டுகள் உண்டியலைக் கண்டுபிடித்தவர்கள்" என்று கம்யூனிஸ்ட் கட்சியினரை ஏளனம் செய்து சட்டமன்றத்திலும் அதனை ஜெயலலிதா பதிவு செய்தது கம்யூனிஸ்ட் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தகரம் கண்டுபிடிக்கும் முன்பே கம்யூனிஸ்டுகள் உண்டியலைக் கண்டிபிடித்தவர்கள்"

1998-ஆம் ஆண்டில் நடந்த கோவை குண்டு வெடிப்பை மையமாக வைத்து திமுக ஆட்சியை தங்களின் கூட்டணிக் கட்சியான மத்திய பாஜக கலைக்கவில்லை என்ற கோபத்தில் ஜெயலலிதா கூறியது "பல பிரச்சினைகளை நினைவில் வைத்திருக்கும் பாஜக தலைமை குறிப்பிட்ட சிலவற்றில் மட்டும் நினைவிழந்து (செலக்டீவ் அம்னெஷியா) பாதிக்கப்பட்டிருப்பது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது. ஆசியாவிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கு தேசப்பாதுகாப்பில் அக்கறை இல்லாத இப்படிப்பட்ட ஒருவர் (அத்வானி). உள்துறை அமைச்சராக கிடைத்து இருக்கிறாரே என்ற வேதனைதான் ஏற்படுத்துகிறது" என்று பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பினார்.

மக்களால் நான், மக்களுக்காக நான்  மக்களால் நான், மக்களுக்காக நான்

1989 காலகட்டத்தில் தனது கட்சியின் மூத்த உறுப்பினர்களான கே. ஏ. கிருஷ்ணசாமி, அரங்கநாயகம் போன்றவரை நீக்கிய ஜெயலலிதா உதிர்த்த வார்த்தைகள் ''அவர்கள் உதிர்ந்த ரோமங்கள். அவர்களால் எனக்கு எந்த பயனும் இல்லை. கவலையும் இல்லை''

ஆமாம்! நான் பாப்பாத்தி தான்''
  •  

ஒரு திராவிடக் கட்சிக்கு பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தலைமை தாங்குவதா என்ற விமர்சனம் எழுந்த போது, ஜெயலலிதா, "ஆமாம்! நான் பாப்பாத்தி தான்'' என்று தமிழக சட்டமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்தார்.

1991-96-ல் பிரதமராக இருந்த நரசிம்மராவிற்கும், தனக்கும் "ஒரு தலைமுறை இடைவெளி இருக்கிறது" என்று குற்றம் சாட்டினார்.

''மக்களால் நான், மக்களுக்காக நான்'' - இது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஜெயலலிதா அடிக்கடி முழங்கிய வாசகம் . இது குறித்து சில எதிர்க்கட்சியினர் ஏளனம் செய்த போதிலும், மக்களின் குறிப்பாக அதிமுக தொண்டர்களின் மத்தியில் வரவேற்பு பெற்ற வாசகம் இது.

 

http://www.bbc.com/tamil/india-38209182

Link to comment
Share on other sites

'அசாத்திய ஆளுமை, எண்ணற்ற போராட்டங்கள்': ஜெயலலிதா குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொள்கிறார் வாஸந்தி

 
 

காலஞ்சென்ற தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் சுயசரிதையை எழுதிய எழுத்தாளரும், பத்திரிகையாளருமான வாஸந்தி, ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை, சிறப்பு அம்சங்கள் மற்றும் போராட்ட குணம் ஆகியவை குறித்து 'பிபிசி தமிழோசை' ஆசிரியர் மணிவண்ணனிடம் பகிர்ந்து கொண்டார்.

ஜெயலலிதா
 ஜெ. ஜெயலலிதா

தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றிய ஜெயலலிதா

ஜெயலலிதாவின் ஆரம்பகால அரசியல் வாழ்க்கை குறித்து வாஸந்தி கூறுகையில், ''அரசியல் வாழ்வில் சாதனை புரிவதற்கு பல தடைகளை ஆரம்ப காலங்களில் ஜெயலலிதா சந்தித்தார்.

ஒரு பெண்ணாக, குறிப்பாக நடிகையாக ஜெயலலிதா இருந்தது, மேலும் திராவிட அரசியலின் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ள பிராமண வகுப்பை சேர்ந்தவர் அவர் என கருதப்பட்டது ஆகியவை அவர் சந்தித்த தடைகளாகும்.

ஆனால், அசாதாரண அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரரான ஜெயலலிதா, தான் சந்தித்த தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி சாதனை புரிந்தவர் என்றார் வாஸந்தி .

2004ம் ஆண்டு பிபிசியின் ‘ஹார்ட் டாக்’ நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா அளித்த பிரபலமான பேட்டியின் எழுத்து வடிவத்தைப் படிக்கஜெயலலிதா பிபிசிக்கு வழங்கிய பேட்டியின் எழுத்து வடிவம்

வாஸந்தி  எழுத்தாளரும், பத்திரிகையாளருமான வாஸந்தி

கடந்த 1982-ஆம் ஆண்டில், கடலூரில் 'பெண்ணின் பெருமை' என்ற தலைப்பில் ஜெயலலிதா தனது முதல் அரசியல் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது ' நடிகை' என்ற ரீதியில் அவர் கடுமையாக எதிர்க்கட்சிகளாலும், ஊடகங்களாலும் தனி நபர் தாக்குதலுக்கும், உதாசீனத்துக்கும் உள்ளானார்'' என்று நினைவுகூர்ந்த வாஸந்தி, ஜெயலலிதாவின் போராட்ட குணம் எத்தகையது என்று உதாரணங்களைக் கொண்டு எடுத்துரைத்தார்.

அரசியல் வெற்றிடத்தை நிரப்பியவர்

''கடுமையான விமர்சனங்கள் மற்றும் தனிநபர் தாக்குதல்களை சந்தித்து வந்த ஜெயலலிதா, தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, அண்ணாதுரை ஆகியோரைப் போல சொல்லாற்றல் மிக்கவர் அல்ல.

மொழி வித்தகராகவோ, அடுக்குத் தொடரில் புலமைப் பெற்றவரோ இல்லையெனினும், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்னர் அக்கட்சியிலும், அரசியல் தளத்திலும் எழுந்த வெற்றிடத்தை, தன் கடின உழைப்பாலும், அரசியல் குறித்த உன்னிப்பான பார்வையாலும் ஜெயலலிதாவால் நிரப்ப முடிந்தது'' என்று வாஸந்தி தெரிவித்தார்.

ஜெயலலிதா  ஜெயலலிதா

ஜெயலலிதாவின் ஆரம்பகால அரசியல் வாழ்க்கை குறித்து மேலும் நினைவுகூர்ந்த வாஸந்தி , கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஜெயலலிதா, அதிகமாக வாசிக்கும் பழக்கம் உள்ளவர் என்றும், இப்பழக்கமும், நினைவாற்றலும் அவர் கட்சி பொறுப்பில் மேலும் முன்னேற பெரிதும் உதவியது என்று குறிப்பிட்டார்.

தேவைப்பட்டது இரும்புக்கரம்

கட்சித் தொண்டர்கள், ஊடகங்கள் என்று பலராலும் அணுக முடியாதவர் ஜெயலலிதா என்று கூறப்பட்டது, அவர் முதல்வர் பதவியேற்ற பிறகுதான் என்று கூறிய வாஸந்தி , அவ்வாறு அவர் அணுக முடியாதவர் போல் தோற்றமளிப்பதற்கு காரணம் யாரையும் எளிதில் நம்ப முடியாது என்ற திடமான எண்ணம் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டதுதான் என்று விவரித்தார்.

சிறந்த நிர்வாகத் திறனுள்ள அதிகாரிகளின் துணை கொண்டு, தனது ஆளுமை திறனால் ஆட்சி நடத்தியவர் ஜெயலலிதா. யாரையும் நம்பாத தனது குணத்தால், இரும்புக்கரம் கொண்டு ஆட்சியையும், கட்சியையும் நடத்திய போக்கு ஆரோக்கியமானதாக இல்லாமல் இருக்கலாம் என்றாலும், எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அவர் சந்தித்த எண்ணற்ற சிக்கல்களையம், ஏமாற்றங்களையும் சமாளிக்க அவருக்கு அந்த இரும்புக்கரம் தேவைப்பட்டது என்று வாஸந்தி கூறினார்.

2016-இல் தமிழக சட்டசபை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட ஜெயலலிதா  2016-இல் தமிழக சட்டசபை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட ஜெயலலிதா

ஜெயலலிதாவின் ஆட்சியில் பெண்களுக்கான நலத்திட்டங்கள்

அடிமட்டத்தில் உள்ள பெண்களுக்கு ஜெயலலிதாவின் ஆட்சியில் பல நலத்திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. அவரது ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட இலவசத் திட்டங்கள் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தாலும், அத்திட்டங்கள் பலன் தந்துள்ளதாக பல பெண்கள் கருதுகின்றனர் என்று வாஸந்தி குறிப்பிட்டார்.

அனைத்து மகளிர் காவல் நிலையம், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% ஒதுக்கீடு ஆகியவை ஜெயலலிதாவின் ஆட்சியில் பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட முக்கிய திட்டங்கள் என்று தெரிவித்த வாஸந்தி, 'தொட்டில் குழந்தை திட்டம்' பல காரணங்களால் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கியது என்றும் குறிப்பிட்டார்.

ஜெயலலிதா  பெண்களின் முதல்வரா ஜெயலலிதா?

ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவின் நிலை என்னவாகும்?

முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிறுவனத் தலைவருமான எம்.ஜி. ஆர், தனக்குப் பிறகு யார் கட்சியை வழிநடத்துவார்கள் என்று அறிவிக்கவில்லை. ஜெயலலிதாவும் அவ்வாறே தான். அவருக்குப் பிறகு கட்சியில் ஏற்படும் வெற்றிடத்தை யாரும் நிரப்புவது சுலபமல்ல என்று தெரிவித்த வாஸந்தி , அதிமுகவின் எதிர்காலம் குறித்து குழப்பமான சூழல் காணப்படுகிறது என்றும், அதிமுக என்ற இயக்கம் உடைவதற்கு கூட வாய்ப்புண்டு என்று மேலும் கூறினார்.

வாஸந்தி  ஜெயலலிதா குறித்து சுயசரிதை எழுதியுள்ள வாஸந்தி

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட தான் சந்தித்த பல தடைகளை நினைவுகூர்ந்த வாஸந்தி, அதில் ஜெயலலிதாவின் பலம், பலவீனம் என இரண்டும் சரிசமமாக இடம்பெற்றது என்று குறிப்பிட்டார்.

தனது கடந்தகால வாழ்க்கையை திரும்பிப் பார்க்க விருப்பமில்லாதவராக இருந்தார் ஜெயலலிதா, அதனால்தானோ என்னவோ, அவர் குறித்து தான் எழுதிய தனது புத்தகத்துக்கு ஜெயலலிதா தடை கோரினார் என்று வாஸந்தி தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/india-37572917

 

Link to comment
Share on other sites

ஜெயலலிதா வாழ்க்கையின் 14 திருப்புமுனை ஆண்டுகள்!

ஜெயலலிதா

ஜெயலலிதா ..! பெங்களூரில் தொடங்கி கோட்டையை தொட்டு முடிந்த சரித்திரப் பயணத்தின் 'கழுகுப் பார்வைக் காட்சிகள்’ இங்கே...

1948 பிப்ரவரி 24, ஜெயராமுக்கும் வேதா என்ற சந்தியாவுக்கும் பிறந்த மகள்தான் ஜெயலலிதா. இவருக்கு ஒரு அண்ணன் உண்டு. அவர் பெயர் ஜெயகுமார். 

1958 அம்மா சந்தியாவுடன் சென்னை வந்தார்.  

1960 சென்னை சட்டக் கல்லூரியில் வைத்துதான் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் முதன் முதலாகச் சந்தித்தனர். சென்னை சட்டக் கல்லூரியின் ஆண்டு விழாவில் பரத நாட்டியம் ஆட பன்னிரெண்டு வயதில் வந்திருந்தார். அன்றைய சிறப்பு அழைப்பாளர் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுக்கு ஒரு வெள்ளிக் கோப்பையை வாங்கி வரச் சொல்லி எம்.ஜி.ஆர் பரிசுக் கொடுத்தார். 

1964 'வெண்ணிற ஆடை' படத்தில் நடிக்கிறார். அவரை இயக்குநர் பந்தலு பார்க்கிறார். 'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்கு ஒப்பந்தம் செய்கிறார். ஆயிரத்தில் ஒருவனின் அடிமைப் பெண் ஆகிறார்.

1972 காலகட்டத்தில் 'மனம் திறந்து சொல்கிறேன்' என்ற தலைப்பில் தனது வாழ்க்கை வரலாற்றை எழுத ஆரம்பித்தார் ஜெயலலிதா. 23 வாரங்கள் அவர் சொல்லச் சொல்ல பாத்திரிக்கையாளர் எஸ்.ரஜத் எழுதினார். 24-வது வாரம் அவரே எழுதுவதை நிறுத்திவிட்டார். நிறுத்த அவர் நிர்பந்திக்கப்பட்டார். 

"இந்தத் தொடரை நிறுத்துவதிலே மகிழ்ச்சியே கிடையாது. எல்லோருமே வாழ்க்கையிலே தவறுகள் பண்றோம். என்னுடைய தவறையும் ஒத்துக்கிறேன். முதல் தவறு, என் வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட அநேகம் பேர் உயிருடன் இருக்கும்போது சுயசரிதம் எழுத ஆரம்பித்தது. இரண்டாவது தவறு, எழுதுவதில் ரொம்ப ஃபிராங்க் ஆக இருந்ததுதான்." என்று வெளிப்படையாக சொன்னார்.

1977-ல் எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்து, ஆட்சியை பிடித்தபோதும். 1980-ல் மீண்டும் ஆட்சியைப் பிடித்தபோதும் அரசியல் ஆர்வம் இல்லாமல் இருந்தவர்  - 1982-க்குப் பிறகு மீண்டும் எம்.ஜி.ஆருடன் வெளிப்படையாக அடையாளம் காட்டுக்கொண்டார். 

1982-ல் அ.தி.மு.க-வின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆனார் ஜெயலலிதா. அவருக்கு தலைமைக் கழகத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டது. 

1984 அக்டோபர் 4-ம் தேதி எம்.ஜி.ஆர். சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அவரைப் பார்க்க அப்போலோ சென்றார் ஜெயலலிதா. அவரைப் பார்க்க விடாமல் ஜெயலலிதாவை தடுத்தார்கள். 

1986-ல் மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர் மன்ற மாநாட்டில் ஜெயலலிதாவுக்கு பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தார் எம்.ஜி.ஆர். 6 அடி உயரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி செங்கோலை, ஜெயலலிதாவுக்கு கொடுத்தன் மூலம் எனக்கு அடுத்து இவர்தான் என்பதை எம்.ஜி.ஆர் சொல்லாமல் சொன்னார். 

1989-ம் அ.தி.மு.க ஜானகி மற்றும் ஜெ. தலைமையில் இரண்டு பிரிவுகளாக தேர்தலை எதிர்கொண்டது. ஜெ.அணி 27 இடங்களில் வெற்றிப்பெற்றது. பெற்ற வாக்குகள் 21.15%. ஜானகி அணி 9.19%. 

1991 ஜெயலலிதா தலைமையில் போட்டியிட்ட அ.தி.மு.க 168 தொகுதிகளில் போட்டியிட்டு 164 இடங்களில் வென்றது. ஜெயலலிதா முதல்முறை முதல்வர் ஆனார். 

2001-ம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆனார். 

2011-ம் ஆண்டு 150 தொகுதிகளில் வென்று ஜெயலலிதா ஆட்சி அமைத்தார். 

2016 மே மாதம் நடந்த தேர்தலிலும் வென்று முதல்வர் ஆனார் ஜெ.

http://www.vikatan.com/news/politics/74303-fourteen-years-which-were-a-turning-point-in-jayalalithaas-life.art

Link to comment
Share on other sites

ஜெயலலிதாவின் தேர்தல் களம் : பிரமிக்கத்தக்க வெற்றிகள், சில படுதோல்விகள்

 
 

மறைந்த தமிழக முதலைமைச்சர் ஜெயலலிதா, கடந்து வந்த தேர்தல் பாதை குறித்து கண்ணோட்டம்.

ஜெயலலிதா
 

1989-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜெயலலிதா போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா, திமுக வேட்பாளர் முத்து மனோகரனை வெற்றி கொண்டு, முதல் முறையாக தமிழக சட்டமன்றத்தில் காலடியெடுத்து வைத்தார்.

தான் முதல்முறையாக தமிழக முதல்வரான 1991-ஆம் ஆண்டில், அப்போதயை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் மற்றும் மேற்கு பகுதியான ஈரோடு மாவட்டத்தின் காங்கேயம் தொகுதிகளில் போட்டியிட்ட ஜெயலலிதா இரண்டு தொகுதிகளிலும் வென்றார்.

ஜெயலலிதா ஜெயலலிதா

பர்கூரில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தமிழக முன்னேற்றக் கழகத்தின் டி.ராஜேந்தரை ஜெயலலிதா வென்றார். காங்கேயம் தொகுதியில் ஜெயலலிதா, அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் ராஜ்குமார் மன்றாடியாரை வென்றார். பின்னர், காங்கேயம் தொகுதியை ஜெயலலிதா ராஜினாமா செய்தார்

1996-ஆம் ஆண்டு மீண்டும் பர்கூர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு முதல் முறையாக தோல்வியைத் தழுவினார். திமுகவின் சுகவனம் 8000-க்கும் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயலலிதாவை அதிர்ச்சித் தோல்வியடைய செய்தார்.

2001-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் போட்டியிட மனு செய்ததால் அவரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. பின்னர், 2002ஆம் ஆண்டு நடந்த ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார் ஜெயலலிதா. இத்தேர்தலில், திமுகவின் வைகை சேகரை ஜெயலலிதா வெற்றி கொண்டார்.

2006-ஆம் ஆண்டில் மீண்டும் ஆண்டிபட்டி தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு வென்றார். இத்தேர்தலில் ஜெயலலிதா 73,927 வாக்குகளையும் திமுகவின் சீமான் 48,741 வாக்குகளையும் பெற்றார்.

2011-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் வென்ற ஜெயலலிதா  2011-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் வென்ற ஜெயலலிதா

2011-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா மத்திய பகுதியான ஸ்ரீரங்கம் தொகுதியைத் தேர்ந்தெடுத்தார். அங்கு போட்டியிட்டு வென்ற ஜெயலலிதா, 1,05,328 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் ஆனந்த் 63,480 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தண்டனை விதித்ததால், தனது சட்டமன்ற பதவியை இழந்த ஜெயலலிதாவை கர்நாடகா உயர்நீதிமன்றம் விடுதலை செய்திருப்பதால் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டார்.

ஜெயலலிதா போட்டியிட வசதியாக, சென்னை ஆர்.கே.நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால், அங்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் மகேந்திரனை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 722 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், ஆர். கே.நகர் தொகுதியில் தம்மை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழனை வெற்றி கொண்ட ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

http://www.bbc.com/tamil/38209181

Link to comment
Share on other sites

’அம்மா என்றால் அன்பு’... சொந்தக்குரலில் பாடி சொக்க வைத்த ஜெயலலிதா!

சிறந்த நடிகை எனப் பெயரெடுத்த ஜெயலலிதா, தனது இனிமையான குரலால் பல திரைப்படங்களில் சொந்தக்குரலில் பாடல்களும் பாடி அசத்தியுள்ளார்.

 
 

சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறந்த நடிகை மட்டுமின்றி, மிகச் சிறந்த குரல்வளமும் மிக்கவராக திகழ்ந்தவர்.

சிறுவயதிலேயே பரதநாட்டியம், கர்நாடக இசை கற்றவர் ஜெயலலிதா. சினிமாவில் நுழைந்து சிறந்த நடிகை எனப் பெயரெடுத்த அவர், தனது இனிமையான குரலால் சில தமிழ்ப்படங்களில் பாடல்களும் பாடி அசத்தியுள்ளார்.

 

 
Jayalalithaa film songs
 

 

இதோ அவற்றின் விபரமாவது...

- அடிமைப்பெண் படத்தில், 'அம்மா என்றால் அன்பு' என்ற பாடல்

- சூரிய காந்தி படத்தில் ஓ மேரி தில் ரூபா...

 
 

- சூரியகாந்தி' படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் சேர்ந்து 'நான் என்றால் அது அவளும்   நானும்'என்ற பாடலின் இடையில் ஆங்கிலத்தில் வசன நடையுடன், அற்புதமான உச்சரிப்பில்ஜெயலலிதா பாடி இருப்பார்.

- வந்தாளே மகராசி படத்தில் 'கண்களில் ஆயிரம்'...

-. வைரம் படத்தில் 'இரு மாங்கனி போல்'...

- அன்பைத்தேடி படத்தில் 'சித்திர மண்டபத்தில்'...

- திருமாங்கல்யம் படத்தில் 'திருமாங்கல்யம் கொள்ளும் முறை'...

- திருமாங்கல்யம் படத்தில் 'பொற்குடத்தில் பொங்கும் எழிற் சுவையோ'...

- உன்னை சுற்றும் உலகம் படத்தில் 'மெட்ராஸ் மைல்'... இவை சினிமாவில் ஜெயலலிதா பாடிய பாடல்கள் ஆகும்.

இது தவிர, குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் 'மாறி வரும் உலகினிலே...', 'மாரியம்மா முத்து மாரியம்மா...', 'காளி மகமாயி கருமாரியானவளே...', 'தங்க மயிலேறி வரும் எங்கள் வடிவேலவன்...' போன்ற பக்திப் பாடல்களையும் ஜெயலலிதா ஆல்பங்களில் பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalithaa-film-songs-269117.html

Link to comment
Share on other sites

ஜெயலலிதா- கடந்து வந்த பாதையின் முக்கிய மைல்கல்கள்

ஜெயலலிதாவின் தொடக்கம் முதல் முடிவு வரை : முக்கிய காலகட்டங்கள்
ஜெயலலிதாவின் தொடக்கம் முதல் முடிவு வரை : முக்கிய காலகட்டங்கள்
24பிப்ரவரி 1948 அன்றைய மைசூர் மாகாணத்தின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மேலுக்கோட்டேவில் ஜெயலலிதா பிறந்தார். தாய் வேதவல்லி - தந்தை ஜெயராமன்.
   
1961 ஸ்ரீ ஷைல மகாத்மே என்ற கன்னடப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானார் ஜெயலலிதா.
   
1965 ஏப்ரல் 9 வெண்ணிற ஆடை திரைப்படத்தின் மூலம் ஜெயலலிதாவை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்துகிறார் இயக்குனர் ஸ்ரீதர்.
   
9 ஜூலை 1965 பிற்காலத்தில் ஜெயலலிதாவின் அரசியல் குருவாகவும் தமிழக முதல்வராகவும் ஆன எம்.ஜி. ராமச்சந்திரனுடன் ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவர் படம் வெளியானது.
   
1982 ஜூன் 4 எம்.ஜி.ஆர். துவங்கிய அகில இந்திய அண்ணா தி.மு.க.வின் கடலூர் மாநாட்டில் கட்சியில் இணைகிறார். ஒரு ரூபாய் கொடுத்து உறுப்பினர் அட்டையைப் பெறுகிறார்.
   
1983 அ.தி.மு.கவின் கொள்கைபரப்புச் செயலாளராக்கப்படுகிறார்.
   
1984 மார்ச் 24 அ.தி.மு.கவின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைக்கப்படுகிறார் ஜெயலலிதா.
   
1988 எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதா தலைமையிலும் எம்.ஜி.ஆரின் விதவை மனைவியான ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலும் அதிமுக இரண்டாக உடைகிறது. இரட்டை இலை சின்னம் முடக்கப்படுகிறது.
   
1989 ஜனவரி 21 சேவல் சின்னத்தில் தேர்தலைச் சந்திக்கும் ஜெயலலிதா, போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றதோடு, சட்டமன்றத்தில் 27 இடங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சித் தலைவியாகிறார்.
   
1989 மார்ச் 25 தமிழக சட்டமன்றத்தில் பெரும் அமளி. தான் தாக்கப்பட்டதாகச் சொல்லி வெளியேறிய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, மீண்டும் முதல்வராகத்தான் அவைக்குள் நுழைவேன் என்கிறார்.
   
1991 ஜூலை 24 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் இணைந்து 225 இடங்களைக் கைப்பற்றி முதலமைச்சராக, முதல் முறையாகப் பதவியேற்கிறார் ஜெயலலிதா.
   
7 செப்டம்பர் 1995 தன் வளர்ப்பு மகன் என அறிவித்த சுதாகரனின் திருமணத்தை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்துகிறார் ஜெயலலிதா. ஒன்றரை லட்சம் பேருக்குமேல் கலந்துகொண்ட இந்தத் திருமணம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது. ஜெயலலிதா மீது கடும் விமர்சனங்களை இந்தத் திருமணம் ஏற்படுத்தியது.
   
1996 சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியடைகிறார் ஜெயலலிதா. 168 இடங்களில் போட்டியிட்டு, 4 இடங்களில் மட்டுமே வெற்றிபெறுகிறது அதிமுக. பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதாவும் தோற்றுப்போனார்.
   
1996 டிசம்பர் 7 கலர் டிவி ஊழலில் கைதுசெய்யப்பட்டு 30 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்படுகிறார்.
   
3 பிப்ரவரி 2000 பிளஸன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
   
14 மே 2001 2001ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நான்கும் நிராகரிக்கப்பட்ட நிலையிலும் அ.தி.மு.க. பெரும்பான்மை பெற்றதால் முதல்வராகப் பதவியேற்கிறார்.
   
21 செப்டம்பர் 2001 ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது செல்லாது எனத் தீர்ப்பளிக்கிறது உச்ச நீதிமன்றம். ஓ. பன்னீர்செல்வம் முதல்வராகிறார்.
   
4 டிசம்பர் 2001 பிளஸன்ட் ஸ்டே, டான்சி வழக்குகளில் ஜெயலலிதா விடுவிக்கப்படுகிறார். உச்ச நீதிமன்றமும் இந்த உத்தரவை 2003 நவம்பர் 4ல் உறுதி செய்கிறது.
   
2 மார்ச் 2002 வழக்குகளில் விடுவிக்கப்பட்ட பிறகு, மீண்டும் முதலமைச்சராகிறார் ஜெயலலிதா. மதமாற்றத் தடைச் சட்டம் போன்ற சர்ச்சைக்குரிய சட்டங்கள், சந்தன மரக் கடத்தல்காரனாகக் கருதப்பட்ட வீரப்பன் கொல்லப்பட்டது, காஞ்சி மடத்தைச் சேர்ந்த சங்கராச்சாரியார் கைதுசெய்யப்பட்டது, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் லட்சக்கணக்கில் ஒரே இரவில் பணிநீக்கம் செய்யப்பட்டது ஆகிய பரபரப்பான சம்பவங்கள் இந்த ஆட்சிக்காலத்தில் நடந்தன.
   
16 மே 2011 மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்கிறார் ஜெயலலிதா.
   
27 செப்டம்பர் 2014 பெங்களூரில் நடந்துவந்த சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்படுகிறார் ஜெயலலிதா. 100 கோடி ரூபாய் அபராதமும் 4 ஆண்டுகால சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கிறது சிறப்பு நீதிமன்றம். பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்படுகிறார் ஜெயலலிதா.
   
17 அக்டோபர் 2014 ஜாமீனில் விடுதலையாகிறார் ஜெயலலிதா.
   
11 மே 2015 சொத்துக்குவிப்பு வழக்கில் எல்லாக் குற்றங்களிலிருந்தும் ஜெயலலிதாவை விடுவிக்கிறது கர்நாடக உயர்நீதிமன்றம்.
   
23 மே 2015 மீண்டும் முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்கிறார்.
   
23 மே 2016 2016 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. பெரும்பான்மை பெறுகிறது. தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, பதவியிலிருந்த ஒரு முதலமைச்சர் மீண்டும் வெற்றிபெறுவது இதுவே முதல்முறை. முதல்வராகப் பதவியேற்கிறார் ஜெயலலிதா.
   
22 செப்டம்பர் 2016 உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார் ஜெயலலிதா.
   
24 செப்டம்பர் 2016 காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
   
18 நவம்பர் 2016 அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முழுமையாகக் குணமடைந்துவிட்டதாக அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்தார்.
   
04 டிசம்பர் 2016 சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, இன்று மாலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
   
05 டிசம்பர் 2016

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார்.

 

http://www.bbc.com/tamil/india-38203801

Link to comment
Share on other sites

ஜெ.ஜெயலலிதாவாகிய ஆளுமையின் அடையாளம்!

ஜெயலலிதா

லகின் மிகப்பெரிய வல்லரசே ஒரு பெண்ணை தனது அரியணையில் ஏற்றிப் பார்க்க விரும்பாதபோது, ஒரு பெண் ஒற்றை ஆளாக ஒரு மாநிலத்தை ஆட்சி செய்து... இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைக்கும் பலம் ஜெயலலிதாவுக்கு மட்டும்தான் உண்டு. சினிமா நடிகை, அரசியல்வாதி, கட்சியின் பொதுச் செயலாளர், முதல்வர் இப்படி பல முகங்கள் கொண்ட ஜெயலலிதாவின் ஆளுமை முகம் சிறப்பு வாய்ந்தது. ஒரு மேலாண்மை பாடத்தில் ஒரு தலைவனுக்குரிய ஆளுமைகளாக என்ன கூறப்பட்டுள்ளதோ... அத்தனையும் அவரின் இயல்பான குணங்களாகவே இருந்துள்ளன.

ஒன் வுமன் ஆர்மி!

ஜெ. வின் முதல் 20 வருடங்கள் அம்மாவின் வளர்ப்பு என்றால், அடுத்த 20 வருடங்கள் எம்.ஜி.ஆர் வளர்ப்பு. சினிமா மற்றும் அரசியலில், முதல் 40 வருடங்கள் யாரோ ஒருவரின் கண்காணிப்பிலேயே இருந்த ஜெயலலிதா, பின்னர் அனைவருடனும் சகஜமாக பழகி, கட்சி அலுவலகத்தில் அனைவருக்கும் பதில் கூறி, ஒரே மூச்சில் 20 மேடைகளில் பேசி... 1990-க்குப் பிறகு, குறுகிய வட்டம், சிலரோடு மட்டுமே நெருக்கமான பழக்கம் என பெரும்பாலும் தனியாகவே இருந்திருக்கிறார். ’ஒரு தலைவன் எந்த அளவுக்கு தனது பர்சனல் பக்கத்தைத் தனிமைப்படுத்திக் கொள்கிறானோ... அவனால் பொதுவெளியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்’ என்பது மேலாண்மை விதி. இது, ஜெயலலிதாவின் 25 வருட அனுபவம். ஜெயலலிதாவின் மேடைப்பேச்சுகளோ... கட்சி பொதுக்கூட்டங்களோ அவர், பேசும்போது குறுக்குப் பேச்சுக்கு இடமிருக்காது... சரியோ, தவறோ? ஜெயலலிதாவின் சில தீர்க்கமான முடிவுகள்... யார் என்ன சொன்னாலும் இறுதி வடிவம் ஜெயலலிதா என்ற தனி ஒரு நபரால் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதில், ஜெயலலிதாவுக்கு நிகர் ஜெயலலிதாதான்.

h3_13152.jpg

யாருக்கும் முக்கியத்துவம் இல்லை!

ஒரு தலைவன் எப்போதுமே ஒருதலைபட்சமான முடிவுகளை எடுக்கக் கூடாது. குறிப்பிட்ட நபருக்கு மட்டும் சாதகமாக இருக்கக் கூடாது. இதனை தனது அமைச்சரவை மாற்றங்களிலும், கட்சிப் பதவிகளிலும் அசாதாரணமாக செய்து காட்டியுள்ளார் ஜெயலலிதா. தவறு என்று வந்துவிட்டால், நம்பிக்கையான அமைச்சர் எனப் பெயர்பெற்றவருக்குக்கூட அடிப்படை உறுப்பினர் பதவிகூடக் கொடுக்காமல் ஒதுக்கிவைப்பதிலும் சரி, திறமையான ஒருவர் கீழ் நிலையில் இருந்தால்... அவரை உரிய இடத்துக்குத் தூக்கிவிடுவதிலும் ஜெயலலிதாவின் செயல்களில் இயல்பாகவே உள்ள குணம். பிடிக்காது என்றால் பிடிக்காதுதான். இந்த அசாதாரண மனோபாவம்தான் ஜெயலலிதாவின் அடையாளம்.

துணிச்சல்!

‘‘ஒரு விஷயத்தைத் தவறாகச் செய்தால் ஒப்புக்கொள்ளுங்கள், அதனை அடுத்த முறை நடக்காமலும், சென்ற முறையைவிடச் சிறப்பாகவும் செய்துகாட்டுங்கள்’’ என்பது ஸ்டீவ் ஜாப்ஸின் வரிகள். ஜெயலலிதாவைப் பார்த்து நீங்கள் தவறான முடிவெடுத்துவிட்டீர்களா என்ற கரண தப்பாரின் பேட்டியாக இருக்கட்டும், வழக்குகள் நிரூபிக்கப்பட்டு மீண்டும் ஆட்சியைப் பிடித்த கர்ஜனையாகட்டும், துணிச்சல் இல்லாவிட்டால் ஜெயலலிதா என்றைக்கோ அரசியலைவிட்டு வெளியேற்றப்பட்டிருப்பார். சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் கர்ஜனை மிகுந்த வார்த்தைகள் அவ்வளவு பெரிய அரங்கில் அனைவரையும் ஒரே பக்கமாக இழுக்கும் ஆளுமை நிறைந்தவை. கருணாநிதியை எழுத்திலும், பேச்சிலும் வெல்வது கடினம் என்றால், அதற்கு சற்றும் சளைக்காதவர் ஜெயலலிதா.  இந்தத் துணிச்சல்தான் 110 விதியில் அத்தனை அறிவிப்புகளையும் யார் விமர்சித்தும் கேட்காமல் அரங்கேற்றியது. இன்னும் சொல்லப்போனால், ஜெயலலிதாவின் நிழல்கூடப் பிடிவாதமாகத்தான் இருக்கும். அதுதான் ஜெயலலிதா. தன் தவறுகளில் இருந்து சட்டென்று மீண்டு வெற்றிபெறும் குணம் கொண்டவர் ஜெயலலிதா.

h2_13277.jpg

நான், எனது - தலைமை + ஆளுமை:

அனைத்துத் தலைவர்களின் உரையும், நாம், நமது என்ற போக்கிலேயே இருக்கும். இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர் ஜெயலலிதா. ‘எனது ஆட்சியில் நடந்த சாதனைகள்’, ‘மக்களுக்காக நான்... மக்களால் நான்’ எனும் தனிமனித விஷயத்தை முன்னிறுத்துவதில் ஜெயலலிதா கில்லாடி. ‘வீழ்வதைவிட விரைந்து எழுவதே மேல்’ என்ற வாசகம் ஜெயலலிதாவுக்குத்தான் பொருந்தும். இவர், வீழ்ந்தபோதெல்லாம் எவ்வளவு சீக்கிரம் திரும்ப வரவேண்டும் என்று ஆக்ரோஷமாக யோசிக்கும் மனோபாவத்தை இவரிடம் பார்க்க முடியும். ஜெ.வுக்கு முன்பே அரசியலுக்கு வந்தவர்களும் சரி, ஜெயலலிதாவுக்கு பின் அரசியலுக்கு வந்தவர்களும் சரி... கட்சியில் ஜெயலலிதாதான் எல்லாம் என்று நினைக்கவைத்தது அவரது ஆளுமைதான். அதுதான் அனைவரையும் இவரைப் பார்த்து இரும்பு மனுஷி எனச் சொல்ல வைத்துள்ளது.

h4_13447.jpg

ஜெ.ஜெயலலிதா எனும் ரோல்மாடல்!

தமிழ்நாட்டில் கட்சி, அரசியல் ஆர்வம் இல்லாத பல பெண்களிடம் சென்று... ‘உங்கள் ரோல்மாடல் யார்’ என்றால், ‘ஜெயலலிதா’ என்ற பதில் சற்றும் தாமதமில்லாமல் வரும். இந்திரா காந்திக்கு நிகரான பிரச்னையைச் சந்தித்தவர், சொந்தக் கட்சியாலேயே சில காலம் ஓரங்கட்டப்பட்டவர். வழக்காக இருந்தாலும் சரி, பர்சனல் சறுக்கல்களாக இருந்தாலும் சரி... அதிலிருந்து மீண்டுவர மிகவும் கடுமையாகப் போராடிக்கொண்டே இருந்திருக்கிறார் ஜெ. கடைசியாக அவரது உடல்நிலையோடும்கூட அவர் போராடிக்கொண்டுதான் இருந்திருக்கிறார். ‘‘உங்களை யாரோடும் ஒப்பிட்டுக்கொள்ளாதீர்கள். அது, உங்களையே அவமானப்படுத்திக் கொள்வதற்குச் சமம்’’ என்பது ஹிட்லரின் வரிகள். ஜெயலலிதா தன்னை யாரோடும் ஒப்பிடாத தலைவர் என்பது அனைவரும் அறிந்ததே. 

இன்று, அவர் மறைந்துவிட்டார் என்றாலும்... நான், ஜெயலலிதாபோல இருக்க வேண்டும் என்ற எண்ணம் பலரது சமூக வலைதள பதிவுகளில் பிரதிபலிக்கிறது. ‘ஒரு மாநிலத்தின் முதல்வர் இறந்துவிட்டார்’ என்பதை, ஒரு நாடு இத்தனை சீரியஸாகப் பார்க்கிற‌து என்றால்... அது, ஜெயலலிதாவாக மட்டுமே இருக்க முடியும். ஒரு பெரிய நிறுவனம், ஒரே தலைவனின் கீழ் நீண்டகாலம் நன்றாக இயங்குகிறது. திடீரென அவரை இழக்கிற‌து என்றால், அங்கு மிகப்பெரிய வெற்றிடம் உருவாகும். அந்த நிலைதான், அ.தி.மு.க-வுக்கும். ஜெயலலிதா போன்ற தனிமனித ஆளுமையின் வெற்றிடத்தை நிரப்ப பல வருடங்கள் ஆகும். எந்த ஒரு பெண்ணாவது மிகுந்த துணிச்சலோடு நான், எனது என்ற தொணியில் பேசினால் முதலில் நினைவுக்கு வருவது ஜெயலலிதாவாகத்தான் இருக்கும்.

http://www.vikatan.com/news/tamilnadu/74306-leadership-skill-of-jjayalalithaa.art

Link to comment
Share on other sites

தலைவர்களுடன் ஜெயலலிதா: அரிய புகைப்படங்கள்

ஜெயலலிதா

ஜெயலலிதா

ஜெயலலிதா

 

ஜெயலலிதா

  ஜெயலலிதா

எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியுடன்

காமராஜருடன்

ஜெயலலிதா

 

ஜெயலலிதா

ஜெயலலிதா

டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனுடன்

ஜெயலலிதா

பெரியாருடன்

ஜெயலலிதா

லால் பகதூர் சாஸ்திரியுடன்

ஜெயலலிதா

எம்.ஜி.ஆர், கருணாநிதி, சிவாஜியுடன்

ஜெயலலிதா

ஜெயலலிதா

ஜெயலலிதா

 

ஜெயலலிதா

 

ஜெயலலிதா

 

 

ஜெயலலிதா

ஜெயலலிதா

ஜெயலலிதா

அன்னை தெரஸாவுடன்

 

ஜெயலலிதா

ஜெயலலிதா

நாடாளுமன்றத்தில்

நாடாளுமன்றத்தில் எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில்

BBC

 

 

 

Link to comment
Share on other sites

அம்மாவும்... அம்மாவின் அம்மாவும்!

அம்மா

‘அம்மா’ என்பது ஜெயலலிதாவுக்கு தொண்டர்களால் அளிக்கப்பட்ட அடையாளம்! தமிழக அரசியல் என்பது பெரியார், ராஜாஜி, காமராசர், ஜீவா, அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் என்று இதுவரை ஆண்களுக்கான இடம் என்று அறியப்பட்ட சூழலில், தந்தை, பேரறிஞர், மூதறிஞர், பெருந்தலைவர், புரட்சித்தலைவர், கலைஞர் என அந்த ஆளுமைகளுக்கான பட்டங்களும் தவிர்க்க முடியாததாவிட்டது.

தமிழக ஆட்சி அரசியலில் தனித்த ஒரு பெண் ஆளுமையான ஜெயலலிதாவுக்கு  முன்னும் பின்னும் வேறு யாரும் இல்லை. அவர் மட்டுமே தனித்து அறியப்படுகிறார். ஆளுமைகள் என்றாலே அவர்களுக்குப் பட்டங்கள் அளிப்பதும் அளித்துக்கொள்வதும் அரசியலும் கலையுலகும் ஒருங்கிணைந்து இயங்கும் தமிழகச் சூழலில் தவிர்க்கமுடியாதது.

அப்படி பெண் ஆளுமையான ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட பட்டம், ‘அம்மா’. தொடக்கத்தில் ‘தங்கத்தாரகை’ , ‘புரட்சித் தலைவி’ என்று மட்டுமே அழைக்கப்பட்டு வந்தவர், அவரது அரசு அறிமுகப்படுத்திய தொட்டில் குழந்தை திட்டத்துக்குப் பிறகுதான் தொண்டர்கள் மற்றும் பெண்களால் அதிகமாக ‘அம்மா’ என அழைக்கப்பட்டார்.

unnamed_%281%29_11291.jpg‘அம்மா’,ஜெயலலிதாவின் மனதுக்கு நெருக்கமான சொல்லும் அதுவே!.அவரது ஆட்சிகாலங்களில் அவர் அறிவித்து வரும் திட்டங்கள் அதற்கு சான்று. தொட்டில் குழந்தை திட்டம், பெண்கள் பொது இடங்களில் பிள்ளைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க ஏதுவாக இலவசமாக அமைக்கப்பட்ட அம்மா தாய்ப்பால் புகட்டும் அறைகள். கர்ப்பிணி பெண்களுக்கான ‘அம்மா’ மகளிர் சிறப்பு சஞ்சீவி’ திட்டம். அரசு சார்பில் இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகை என அவர் அறிவித்த சில ‘அம்மா’ திட்டங்கள்தான் தமிழக அரசியலில் அவரை ‘அம்மா’ என்று அழைக்கப் பதவிக்காலங்களில் விதைத்த விதைகள்.

‘அம்மா’ என்கிற ஆளுமைக்கு அரசியலில் அஸ்திவாரமிட்டவர் எம்ஜி.ஆர் என்றால், எம்ஜிஆருக்கு ஜெயலலிதாவை அடையாளம் காட்டியது சினிமா. சினிமாவை ஜெயலலிதாவின் வாழ்வில் பிரிக்க முடியாததொரு அங்கமாக்கியது, அவரது ‘அம்மா’ வேதவல்லி (எ) சந்தியா.பெற்றோர்களின் எஞ்சியிருக்கும் நீட்சிதான் பிள்ளைகள். சந்தியாவின் ஆரம்பகாலங்களுடைய நீட்சியாகவே ஜெயலலிதா வளர்ந்தார்.

சந்தியாவுக்கு, ஆறாம் வகுப்பு படிக்கையிலேயே அதாவது பதினோராவது வயதிலேயே மணமாகிவிட்டது. புத்தகங்கள் படித்தல், வாய்ப்பாட்டு, வீணை, வயலின், நீச்சல் டென்னிஸ் ஆகியவற்றைக் கற்றார். கணவர் ஜெயராமின் மறைவுக்குப் பிறகு ஒரு கம்பெனியில் காரியதரிசியாக பணிபுரியத் தொடங்கினார். அவரது தங்கையின் அறிமுகத்தால்தான் சந்தியா சினிமாவுக்கு வந்தார். தன் பன்முகத் திறமைகளுக்கான களமாக சினிமாவைப் பயன்படுத்திக் கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாகத்தான் இருந்தது.

இந்நிலையில்தான் தன் செல்ல மகள் அம்முவை ஆளுமை உள்ளவராக ஆக்குகிறார் சந்தியா. மூன்று வயதில் நடனம் கற்றுக் கொடுக்கத் தொடங்குவது, பிறகு பியானோ வாசிக்கக் கற்றுக்கொடுப்பது, காலச்சுழற்சியில் இலக்கியப் புலமை என சந்தியாவின் சுதந்திர நீட்சியாகத்தான் அம்முவாகிய ஜெயா வளருகிறார். ஒரு ஆளுமைக்கான அஸ்திவாரத்தை சந்தியாதான் அவருக்கு வித்திடுகிறார்.

சினிமாவில் இருந்தாலும் தன் பிள்ளைக்குச் சினிமா வேண்டாம் என முடிவெடுக்கும் சந்தியா, ஒரு கட்டத்தில் தன் முடிவினை மாற்றிக் கொள்கிறார். அம்முவும் சந்தியாவுடன் சினிமா ஷுட்டிங் ஸ்பாட்டுகளுக்குச் செல்வார். அனைத்தையும் அந்த வயதுக்கே உண்டான ஆர்வத்துடன் கண்கள் விரிய அணுகுவார். சினிமா நாடகம் என அவ்வப்போது தலைகாட்டிய அம்மு, முழுநேர நடிகையாக தன் பதினாறாம் வயதில் இயக்குநர் ஸ்ரீதரின் இயக்கத்தில் வெண்ணிற ஆடை படம் வழியாக ஜெயலலிதா அறிமுகமாகிறார்.

அந்தப் படத்தில் அவர் அம்முவை நடிக்க வைப்பதாக இல்லை. ஶ்ரீதரின் நிர்பந்தத்தின் பேரில்தான் நடிக்கவைத்தார், ஆனால், ஒன்று மட்டும் நிதர்சனம், சினிமா என்னும் பெருநகரத்திற்குள் அம்முவை கரம் பிடித்து அழைத்து வந்து அதில் அவருக்கான பாதையை ஏற்படுத்தித் தந்தது சந்தியாவும் ஸ்ரீதரும்.

ஆனால், அம்மு சுதந்திரமாக வளர வகை செய்தாலும், ஒரு அம்மாவாக சந்தியா முழுமையான வெற்றி அடைந்தாரா? ஜெயலலிதா, ஒரு பேட்டியில் இவ்வாறு கூறுகிறார், “என் அம்மா இருந்திருந்தால், நான் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன், என் அப்பா இருந்திருந்தால் நான் சினிமாவுக்கே வந்திருக்க மாட்டேன்” என்று சொல்லியிருக்கிறார். சினிமா ஜெயலலிதா தேர்ந்தெடுக்க விரும்பிய பாதையாக இருந்திருக்கவில்லை. மாநிலத்திலேயே முதல் இடம் பிடித்ததால், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அவருக்கான இடம் காத்திருந்தது. மேலும் அவருக்குச் சட்டம் படிக்க வேண்டும் என்கிற ஆர்வமும் இருந்தது. இந்திய ஆட்சிப்பணிக்காகப் படிக்க வேண்டும் என்றும் நினைத்திருந்தார். ஆனால், இறுதியில் நடந்தது வேறு.

விகடனுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தன் அம்மாவின் தேவையும் இருப்பும் தனக்கு எவ்வளவு அவசியமானதாக இருந்தது என்பதை அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

303356_11189.jpg

‘எந்தப் பொது நிகழ்ச்சிக்கும் செல்லும் முன் எந்தப் புடவையை உடுத்திக் கொண்டு தயாராகுவது என்கிற குழப்பத்துடன் பீரோவில் இருக்கும் அத்தனை புடவைகளையும் எடுத்து என் முன் விரித்துப் போட்டு விட்டு குழப்பத்தில் விழித்தபடி உட்கார்ந்திருப்பேன். அம்மா வருவார், ‘அம்மு! இன்னும் கிளம்பாம ஏன் உட்கார்ந்துட்டு இருக்கே? சரி !சரி! சீக்கிரம் இந்தப் புடவையைக் கட்டிக்கொண்டு கிளம்பு என்பார். நானும் அதனை உடுத்திக் கொண்டு கிளம்புவேன். ஆனால், என் அம்மா இல்லாமல் நான் கலந்துகொண்ட முதல் விழா சென்னை சினிமா ரசிகர்கள் நடத்திய பரிசளிப்பு விழாதான். அந்த விழாவுக்குச் செல்லும் முன்பு, என்ன செய்வது என்று தெரியாமல் அம்மாவின் புகைப்படத்தின் முன்பு என்னுடைய புடவைகளை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். கண்களை மூடிக்கொண்டு அம்மாவை மனதில் நினைத்தபடி ஒரு புடவையைத் தொட்டேன். அதை உடுத்திக்கொண்டுதான் அன்றைய நிகழ்வுக்குச் சென்றேன்” என்கிறார்.

நடிகையாகப் பரிமாணம் எடுத்ததன் ஆரம்பக் காலங்களில் தான் ஷூட்டிங் விட்டு வீடு வந்ததும் அம்மா எங்கே என்று தேடுவதை வழக்கமாக வைத்திருந்ததைக் குறிப்பிடுகிறார். அம்மா வீட்டில் இல்லையென்றால், தன் அறைக்கே போக மாட்டாராம். அம்மா வந்ததும் அவருடன் பேசிவிட்டுதான் செல்வாராம். 1965-ல் ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பின் மூலம் எம்.ஜி.ஆருடனான நட்பு பரிமளிக்கத் தொடங்கிய பிறகும் கூட அவருக்கு அம்மா சொல்தான் மந்திரமாக இருந்திருக்கிறது. யார் வந்து ‘நீ நன்றாக நடித்தாய், நடனமாடினாய்’ என்று சொன்னாலும் கூட, விருதுகளே தரப்பட்டாலும் கூட அம்மாவின் பாராட்டு ஒன்றைத்தான் அவர் முழுமையாக எதிர்பார்த்து இருந்திருக்கிறார். அன்றைக்கு ஷூட்டிங் செல்ல வேண்டுமா? வேண்டாமா? என்பதைக் கூட அம்முவுக்கு அவர் அம்மாதான் முடிவு செய்ய வேண்டும். அம்முவுக்கான சுதந்திரத்தை அவரது அம்மாவே கட்டமைத்தார் எனச் சொல்லலாம். 1971 முடிய ஜெயாவின் நடிப்பில் ஒவ்வொரு கட்டத்தையும் வடிவமைத்தது அவர்தான். அந்த வருடம் அக்டோபர் மாதம் இறக்கிறார் சந்தியா. அதுவரை ஜெயலலிதா என்னும் ஆளுமையை ஒவ்வொரு கட்டமாகச் செதுக்கி வந்த சந்தியாவின் இன்மை அவருக்குப் பெருத்த இழப்பாக இருக்கிறது. அம்மா என்கிற ஒருவரை இழந்தது ஒருபக்கம் இருந்தாலும், வாழ்வில் தன் அடுத்த கட்டத்தை எப்படி நகர்த்திச் செல்வது என்று தெரியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார் ஜெயலலிதா.

1972-ல் தானும் தன் தாயும் சேர்ந்து கட்டிய வீட்டுக்கு வேதா இல்லம் எனப் பெயர்வைத்துக் குடிபுகுகிறார் ஜெயலலிதா. புதுமனைப் பிரவேசமும் அரசியல் பிரவேசத்துக்கான ஆயத்தமும் ஒருசேரத் தொடங்கியது எனலாம், அன்று தொடங்கி சரியாகப் பத்து வருடங்களில் அவரது அரசியல் பிரவேசம் நிகழ்கிறது. அம்மா இல்லை! அரசியலில் நுழைகிறார்!தலைவியாக்கப்படுகிறார்! ‘அம்மா’ எனப்படுகிறார்!

தன் அம்மாவுக்காக ஜெயலலிதா எழுதிய கவிதை ஒன்று

என் அன்பான தாய்க்கு!

உனக்கொரு அம்மா இருந்தால்

அவளை அன்பாகக் கவனித்துக் கொள்!

அவள் அமர்ந்திருந்த நாற்காலியை

வெறுமையாகப் பார்க்கும்வரை

அவளது அருமை உனக்குப் புரியாதென்பதை

இப்போதே அன்புடன் கவனி!

http://www.vikatan.com/news/tamilnadu/74287-fond-memories-of-jayalalithaa-and-her-mother-sandhya.art

Link to comment
Share on other sites

இவற்றைச் செய்யும் துணிச்சல் ஜெயலலிதாவிடம் மட்டுமே இருந்தது! #Jayalalithaa

ஜெயலலிதா

எம்.ஜி.ஆர் ஆரம்பித்த அ.தி.மு.க-வில் ஜெயலலிதா இணைந்தபோது, தமிழக அரசியலில் பெண்கள் என்ற பதமே பெரிய அளவில் மக்களுக்கு பரிச்சயம் இல்லாதது. அ.தி.மு.க-வில் நுழைந்து, தமிழக அரசியலில் வலிமை மிகுந்த முதல்பெண் என்ற பெருமையை ஜெயலலிதா பெற்றார். சினிமாவில், அரசியலில், ஆட்சிப் பதவியில் என பல துறைகளிலும் முன்னோடியாக இருந்த 'முதல் பெண்' என்ற எண்ணற்ற சாதனைகளைத் தக்க வைத்துக் கொண்டவர். 

 
 

தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என ஜெயலலிதா, நடிகையாக இருந்த காலத்திலேயே பன்மொழிப் புலமையைப் பெற்றிருந்தார். அந்தக் காலத்திலே சரளமாக ஆங்கிலம் பேசக்கூடிய ஒரே சினிமா நடிகையாக ஜெயலலிதா திகழ்ந்தார். எம்.ஜி.ஆர் இறந்த பிறகு, அ.தி.மு.க இரண்டாக பிளவுபட்டது. இதையடுத்து 1989-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க வெற்றி பெற்றது. ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க, 27 இடங்களைக் கைப்பற்றியது. இதன்மூலம் தமிழகத்தின் முதல் பெண் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக சட்டமன்றத்துக்குள் முதல்முறையாக எதிர்க்கட்சித் தலைவராக நுழைந்தார். ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவரான சில மாதங்களில், அ.தி.மு.க ஒன்றிணைந்தது. அப்போது முதல் அ.தி.மு.கவை வழி நடத்தி வரும், ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்குப் பின்னர் அவரது அரசியல் வாரிசு தான்தான் என்பதை தொண்டர்கள் மூலம் நிரூபித்தார்.

204111_12552.jpg

1991-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றிபெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது. தமிழகத்தில் ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். ஜெயலலிதா முதல்வராக இருந்த 1991-96 காலகட்டத்தில், ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான 'தொட்டில் குழந்தை திட்டம்', அனைத்து மகளிர் காவல்நிலையம், காவல்துறையில் பெண்களுக்கு 30 சதவிகித இடஒதுக்கீடு, கல்வி, வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 69 சதவீத ஒதுக்கீடு என இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும், பெண்களுக்கான மாபெரும் திட்டங்களையும் ஜெயலலிதா தொடங்கி வைத்து, மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கினார்.

 
Advertisement
 
 
 

204474_12262.jpg

கடந்த 30 வருடங்களாக இந்தியாவின் சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராகத் திகழ்ந்த ஜெயலலிதா, தென் இந்தியாவின் வலிமை மிகுந்த பெண்களில் ஒருவராக விளங்கினார். கோடிக்கணக்கானத் தொண்டர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அ.தி.மு.க என்னும் மிகப்பெரிய கட்சியின் பொதுச் செயலாளராக 26 வருடங்களுக்கும்மேல் இருந்துள்ளார். ஜெயலலிதாவின் ஆளுமை, கட்சித் தொண்டர்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழக மக்களிடமும் மிகுந்த பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தது. தமிழகத்தில் 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்காமல், அனைத்து 39 தொகுதிகளிலும் தனித்து நின்று, அ.தி.மு.க 37 மக்களவைத் தொகுதியைக் கைப்பற்றியது. தமிழக நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில், முதல் முறையாகும்.

37 தொகுதிகளை அ.தி.மு.க பிடிப்பதற்கு, ஜெயலலிதாவின் மக்களைக் கவரும், தேர்தல் பிரசாரம் மிகவும் முக்கியக் காரணமாக அமைந்தது. அதன் பின்னர் 2016-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், அனைத்து 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில், அ.தி.மு.க-வை முதல்முறையாக களமிறங்கச் செய்து,  தனித்து நின்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது, ஜெயலலிதாவின் அரசியல் சாதுர்யத்திற்கு மிகப்பெரும் சான்றாகத் திகழ்கிறது.

315428_12011.jpg

32 ஆண்டுகளுக்குப் பின்னர், அதாவது எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, 1984-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ஆட்சியில் இருந்த ஒரு கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்த பெருமையை ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க பெற்று மேலும் சாதனையைப் படைத்தது.

எண்ணற்ற சாதனைகளை தன்னகத்தே கொண்டுத் திகழ்ந்த, சாமான்ய மக்களும், சாதாரண தொண்டனும் அ.தி.மு.க-வில் எந்தநிலையையும் எட்டவைத்து, அவர்களுக்கான பதவி அங்கீகாரத்தை அளித்த சாதனை மிக்கத் தலைவி முதல்வர் ஜெயலலிதா. இத்தகைய பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி, லட்சக்கணக்கான பெண்களுக்கு அரசியல் முன்னோடியாக விளங்கிய ஜெயலலிதா என்றும் மகத்தான மாண்புமிக்க தலைவர் இன்று கோடிக்கணக்கான தொண்டர்களையும், தமிழக மக்களையும் மீளாத்துயரில் ஆழ்த்தி விட்டு, இப்பூவுலக வாழ்வில் இருந்து மீண்டு விட்டார்!

http://www.vikatan.com/news/tamilnadu/74297-only-jayalalithaa-had-brave-to-do-these-during-her-regime.art

Link to comment
Share on other sites

எல்லோருக்கும் ஏதோ ஒரு காரணத்தால் ஜெயலலிதாவைப் பிடித்திருப்பது ஏன்?

 

எல்லோருக்கும்

நடு வீட்டில் அலங்கரிக்கப்பட்டிருந்த பூத உடலை, மயானத்துக்கு தூக்கிச் செல்லும் அந்த நொடியில், அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கம் பீறிட்டு வெளிப்படும். அத்தனை சொந்தமும் வெடித்து அழும். கலங்காத மனமும் கலங்கும். 

அப்போலோவில் இருந்து போயஸ்கார்டனுக்கு ஆம்புலன்ஸ் புறப்பட்டதும், ‛முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பூத உடல்...’ என செய்தி சேனல்கள் உச்சரித்த நொடியிலேயே, அதிமுக அல்லாதவர்களின் கண்களிலும் கண்ணீர். அப்போது டிவிகளில் ஒளிபரப்பான ஜெயலலிதாவின் சிரித்த முகம் ரொம்பவே  வாட்டியது. இதைப் பார்க்க முடியாது வெளிய வந்த பக்கத்து வீட்டுக்காரர்,  'இத்தனைக்கும் ஜெயலலிதாவை எனக்குப் பிடிக்காது. செத்துட்டாங்கன்னு தெரிஞ்சதும் ஏனோ கலங்குது' என்றார்

அவரைப் போலவே, ‛ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும்...’ என  பலரும் கலங்கினர். ‛பள்ளியைமுடித்து வெளியே வந்ததும்தான் கண்டிப்பான ஆசிரியர்கள் மீதான மரியாதை துளிர்விடத் துவங்குகிறது’ என நண்பர் ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். யோசித்துப் பார்த்தால், ஆதரவாளர்களை விட எதிர்ப்பாளர்களே ரொம்பவும் ஆதங்கப்படுகின்றனர்.  உண்மை அது.  ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தவர்கள்தான் இன்று கலங்கி நிற்பது விநோத முரண். 

ராஜாஜி - பெரியார் இருவரும் கொள்கை ரீதியாக கடைசி வரை முட்டிக் கொண்டவர்கள். ஆனால் ராஜாஜி இறந்தபோது பெரியார் கலங்கி அழுதார். இன்று ஜெயலலிதா விட்டுச் சென்ற வெற்றிடம் கருணாநிதிக்கே கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். குறைந்தபட்சம், தனக்கு நிகரான ஒரே எதிரியும் இனி இல்லை என்றாவது நினைத்திருப்பார்.  எதிரியை பட்டவர்த்தனமாக வெற்றியாளன் என அறிவிக்க, மரணம் தேவைப்படுகிறது. 

ஜெயகாந்தனை ஒருவன் ஆழ்ந்து படித்திருக்கவே மாட்டான். ஏன் அவரைப் பிடிக்கும் என கேட்டால் ‛அவர் சிங்கம் மாதிரி, அந்த ஆளுமை, அந்த திமிர், மீசையை முறுக்கி விடுறது’ என அடுக்குவான். அதேபோலத்தான் இன்று. ஜெயலலிதா இறந்ததும் எல்லோரும் இப்போது அந்த ஆக்ருதியைத்தான் பேசுகிறோம். நேற்று வரை திமிர் என்று சொன்னவன் இன்று மிடுக்கு என்கிறான்.  அகம்பாவம் என்றவன் இன்று போர்க்குணம் என்கிறான். அவரது ஆணவம் கம்பீரமாகப் பார்க்கப்படுகிறது. ‛இரும்பு மனுஷி’ என பெருமையாக சொல்கிறார்கள். இத்தனை நாள் ”இவ்வளவு திமிரா” என கோவப்பட்டவர்கள் எல்லாம், இனிமேல் இப்படியொரு பெண்ணை பார்க்க முடியுமா என ஏங்குகிறார்கள். 

சில சமயங்களில் நிசப்தம் பயங்கரமானது. ஓயாது அடம் பிடிக்கும் குழந்தை, கொஞ்ச நேரம் அமைதியாக தூங்கினால், எதாவது சேட்டை பண்ண மாட்டானா என மனம் ஏங்கும் இல்லையா?  ஜெயலலிதாவை இத்தனை நாள் எதிர்த்தவர்கள் இன்று அந்த மனநிலையில்தான் இருக்கின்றனர்.  ‛ஜெயலலிதா முதல்வரா இருந்ததால் எனக்கு எந்த பலனுமே இல்லை. ஆனா, அவங்க இல்லைன்னதும் தமிழ்நாடு அநாதை மாதிரி ஆயிடுச்சேன்ற நினைப்பு வந்திருச்சு. தார்மீக பலம் இல்லாத பயம் வந்திருச்சு’ என்பதே அரசியல் வாடையே இல்லாதவரின் கருத்து. கிட்டத்தட்ட, 75 நாட்கள் மனதை தயார்படுத்தியே,  இப்படியொரு சூழல் எனில், பட்டென செப்டம்பர் 23-ம் தேதியே இறந்து விட்டதாக அறிவித்திருந்தால், என்ன ஆயிருக்கும்? 

‛ஆணவக்காரி’  என திட்டிய பெண்கள் கூட, இன்று இமயம் சரிந்து விட்டதாகவே உணர்கின்றனர்.  , ‛அவங்க என்னுடைய ரோல் மாடல்டா. அவங்க. உங்களை எல்லாம் காலில் போட்டிருந்தாடா’ என உள்ளூர பெருமை கொண்டிருந்த பெண்கள், இந்த மரணத்தை பெண்மையின் மரணமாகப் பார்க்கின்றனர். 

பிரிவினால்தானே பிரியத்தின் மொழியைப் பேச முடியும். இவ்வளவு பேருக்கு ஜெயலலிதாவைப் பிடிக்கும் என்பதே ஆச்சரியம்தான். ரத்த சொந்தம் யாரும் இல்லாததும், இந்த பரிதாப காட்சிகளும் காரணமாக இருக்கலாம். சொந்தமே இல்லாமல் இப்போது தனியாக இருப்பதைப் பார்த்தால் அவ்வளவு திமிர்  இல்லாவிடில், பொதுவாழ்க்கையை எப்படி சமாளித்திருக்க முடியும் என்ற எண்ணம் எழுகிறது.

‛ஜெயலலிதாவைச்  சுற்றி நிற்கும் யார் முகத்திலும் துக்கம் இல்லை.  கோரம்தான் இருக்கிறது. இவர்களுக்கு நடுவில் இந்த அம்மா எப்படி சாந்தமாக இருந்திருக்க முடியும்? அப்ப இந்த அம்மா இத்தனை நாள் இந்த வலி எல்லாம் பொறுத்திட்டுதான் இருந்திருக்கு’ என்பது ஒரு ர.ர.வின் கேள்வி.

எது எப்படியோ,  அவர்  மரணம் புனிதத்தன்மையை ஏற்படுத்தி விட்டுச் சென்று விட்டது. தன் மீதான விமர்சனத்துக்கு முற்றப்புள்ளி வைக்க ஜெயலலிதாவுக்கு மரணம் தேவைப்பட்டிருக்கிறது. என்ன செய்தால் என்னை விமர்சிப்பதை நிறுத்துவீர்கள் என்ற கேள்வி அவரைத் துரத்திக் கொண்டே இருந்திருக்கும் அல்லவா? மரணம்தான் அதன் பதில். அது அவருக்கு கடைசி வரைக்கும் தெரியவே இல்லை.

சமூக வலைதளத்தில் ஒருவர் இப்படி எழுதியிருக்கிறார். “ எல்லோருக்கும் ஏதோ ஒரு காரணத்தால் அவரைப் பிடித்தேதான் இருந்தது.! ”

http://www.vikatan.com/news/tamilnadu/74315-everyone-has-one-reason-to-like-jayalalitha.art

Link to comment
Share on other sites

ஒரே ஆண்டில் 20 படங்கள்… சொந்த குரலில் 11 பாடல்கள்… இது ஜெயலலிதாவின் சினிமா கிராப்!

 

தொட்ட துறை எல்லாம் கொடி கட்டி பறந்தவர் ஜெயலலிதா. அவரை தமிழகத்துக்கு முதலில் அறிமுகப்படுத்தியது சினிமாத் துறை. சங்கீதம், பரதநாட்டியம் என சிறு வயது முதலே கலையோடு வளர்ந்த அம்முவுக்கு சட்டம் பயில வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் சினிமா என்ட்ரி, அவர் வாழ்வில் எதிர்பாராத திருப்பம். 1960-ம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் தனது பரதநாட்டிய அரங்கேற்றத்தைச் செய்தார் ஜெயலலிதா. அந்த விழாவுக்கு தலைமை தாங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ‘பெரிய சினிமா நடிகையாக வருவார்’ என்று சிவாஜியிடம் வாழ்த்து பெற்றவர், பின் நாட்களில் அவருடன் இணைந்து 17 படங்களில் நடித்தார். தமிழில் 87 படங்களும், தெலுங்கில் 29 படங்களும், கன்னடத்தில் 7 படங்களிலும் நடித்துள்ளார். ஒரே ஒரு ஆங்கிலப்படத்தில் மட்டும் நடித்துள்ளார். அது ஒரு ஆவணப்படமாக உருவானது. மலையாளத்தில் 'ஜீசஸ்' என்ற ஒரு படம் மட்டுமே நடித்தார். அதுவும் ஹிட்டடித்தது. ஹிந்தியில் இரண்டு படங்களில் நடித்துள்ளார். மொத்தம் அவரது திரை வாழ்வில் 127 படங்கள் நடித்துள்ளார். 1970-களின் தொடக்கத்தில் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக புகழ் பெற்று வளம் வந்தவர் ஜெயலலிதா.

 

ஜெயலலிதா நடித்த படங்கள்

 

1961 -ம் ஆண்டு 'ஶ்ரீ ஷைல மஹாத்மியா' என்ற கன்னடப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததே அவருக்கு கேமரா முன்பு முதல் தோற்றம். அதிலிருந்து அவரது வாழ்க்கை சினிமா துறையில் ஊடுருவி உச்சம் தொட்டது. 1964 'சின்னத கொம்பே' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 15. பின் ‘வெண்ணிற ஆடை’ படம் மூலம் தமிழில் பிரேக்கிங் என்ட்ரி. அதன்பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம் என 15 ஆண்டுகள் விழா நாயகியாக திகழ்ந்தார். அவர் நடித்த 30 படங்கள் 100 நாட்களையும் தாண்டி திரையை அலங்கரித்தன. அதிகபட்சமாக 1968-ம் ஆண்டு மட்டும் 20 படங்களில் நடித்துள்ளார். அதிகபட்சமாக எம்.ஜி.ஆர் உடன் 28 படங்களில் நடித்துள்ளார். அனைத்துமே மக்கள் மனதில் இடம் பிடித்த படங்கள். அவரது திரை வாழ்வை, இன்ஃபோகிராபாக பாருங்களேன்...

ஜெயலலிதா நடித்த படங்கள்

 

கர்ஜிக்கும் பெண்ணின் மெல்லிய பின்னணி….

நடிப்பில் மட்டும் அல்ல இசையிலும் மக்களை கட்டிப்போட்டவர் ஜெயலலிதா. தமிழ் சினிமாவில் இதுவரை 11 பாடல்களைப் பாடியுள்ளார். சிவாஜி - ஜெயலலிதா இணைந்து நடித்து தேசிய விருது பெற்ற 'பட்டிக்காடா பட்டணமா' திரைப்படம் தேசிய விருது பெற்றது. இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட். அதில் ‘கேட்டுக்கோடி உருமி மேளம்’ என்ற பாடல் கம்போசிங்கின் போது, எம்.எஸ்.விக்கு பல்லவி அமைத்து கொடுத்தது ஜெயலலிதா தானாம். பாடலை பாடியதும் அவரே. இசை மீது அவருக்கு இருக்கும் ஆர்வமும், புரிதலையும் எடுத்துக்காட்ட இந்த ஒரு உதாரணம் போதும். ஜெயலலிதா பாடிய பாடல்களில் சிலவற்றின் தொகுப்பு உங்களுக்காக….

 

'கேட்டுக்கோடி உருமிமேளம்' - பட்டிக்காடா பட்டணமா

 

 

 

 

'நான் என்றால் அது அவளும் நானும்' - சூரிய காந்தி

 

 

'அம்மா என்றால் அன்பு' - அடிமைப் பெண்

 

 

 

 

'கண்கள் ஆயிரம்' - வந்தாளே மகராசி

 

 

 

 

'சித்திரை மணடபத்தில்' - அனபைத் தேடி

 

 

 

'திருமாங்கல்யம் கொள்ளும் முறை' - திருமாங்கல்யம்

 

 

 

 

'உலகம் ஒரு நாள் பிறந்தது' - திருமாங்கல்யம்

 

 

 

http://www.vikatan.com/news/coverstory/74300-list-of-films-and-songs-by-actress-jayalalitha.art

Link to comment
Share on other sites

அறைகூவல்கள் பொதிந்துகிடந்த ஜெயலலிதாவின் நாவல்கள்

 
 
jaya_1767639g_3099824f.jpg
 
 
 

முதல்வர் ஜெயலலிதா எப்போதும் தனது சுயசரிதையை எழுதியதில்லை. மாறாக தனது சொந்த வாழ்க்கைக் கதைகளை புனைகதைகளாக எழுதினார். அவர் ஏதோ நாவல் எழுதுகிறார் என்றுதான் முதலில் நினைத்திருப்பார்கள்.

அது அவரது கதை மட்டுமல்ல சம்பந்தப்பட்ட பலரது கதைகளும் அந்த தொடர்கதைகளில் வருவதைக் காணும்போதுதான் அது தடைசெய்யப்பட்டது. ஒரு முறை 'குமுதத்'திலும் இன்னொருமுறை 'தாய்' வார இதழிலும் அவரது படைப்புகள் பாதியிலேயே நின்றன.

நிறைய புனைவிலக்கியங்களை வாசித்தவர் என்ற முறையில் அவருக்கு எழுத்து சரளமாகவே வந்தது. அவர் எழுதிய தொடர்கதை முழுமையாக வெளிவந்தது எதில் என்றால் அது 'கல்கி' வார இதழில்தான். 1979களில் 'உறவின் கைதிகள்' என்ற பெயரில் வெளிவந்தது. வாரந்தோறும் அவரது கதைகளைப் படிக்க வாசகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

காரணம் அதில் அவர் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு பாத்திரமும் நம் நிஜவாழ்க்கையில் பிரபல பிம்பங்களாக வலம் வந்தவர்கள் என்பதை வெவ்வேறு வாரங்களில் வாசகர்கள் உணர்ந்துகொண்டனர். கூடவே மாயா எனும் ஓவியரின் கைவண்ணத்தில் கதாசிரியர் உணர்த்த விரும்பும் பாத்திரங்கள் பட்டவர்த்தனமாய் வெளிப்பட்டது ரசிக்கத்தக்க அம்சமாக அமைந்தது.

ஆனால் எந்தப் பாத்திரமும் அததற்கு உண்டான மிகைஅழுத்தமின்றி இயல்புநவிற்சியோடே படைக்கப்பட்டன. உறவின் கைதிகளில் சுவாரஸ்யமிக்க அதே நேரத்தில் தவிர்க்கமுடியாத, கூடாத உண்மைகள் உள்கூடத்தில் வைக்கப்பட்ட அகல்விளக்கைப்போல நின்றொளிர்ந்தன. அதனாலேயே அவர் எழுத வேண்டாம் எனவும் முக்கியமானவரால் பலமுறை அறிவுறுத்தப்பட்டது. அவர் அரசியலில் முக்கியமான பொறுப்பேற்கும்வரை அவரது எழுத்துப்பணி அவரது வாழ்க்கையோடு தொடர்புடையவர்களுக்கு நேரடியாக அன்றி மறைமுகமாக விடுக்கப்படும் அறைகூவலாகவே இருந்தது.

எழுத்தை குறைந்தபட்சம் தனது வாழ்வின் வெளிச்சத்திற்காகவாவது பயன்படுத்துவதில் தெளிவாக இருந்தது அவரது புத்திக்கூர்மையும் அவருக்குள் மறைந்துகிடந்த போராட்ட உணர்வையுமே வெளிப்படுத்தியதை புரிந்து கொள்ளமுடிகிறது.

http://tamil.thehindu.com/opinion/blogs/அறைகூவல்கள்-பொதிந்துகிடந்த-ஜெயலலிதாவின்-நாவல்கள்/article9413197.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஜெ - சசி தோழமைக்கு களம் அமைத்துக் கொடுத்த கடலூர்

 

 
ஜெயலலிதா-சசிகலா முதன்முறையாக சந்தித்து உரையாடிய கட்டிடம்
ஜெயலலிதா-சசிகலா முதன்முறையாக சந்தித்து உரையாடிய கட்டிடம்
 
 

ஜெயலலிதாவின் அரசியல் மற்றும் தனி வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் சசிகலா. அப்படி ஒரு நட்பை இருவரும் பேணிக்காத்து வந்தனர். இவர்களின் நட்பு உருவான கதை சுவாரஸ்யமானது.

1982-ம் ஆண்டு கடலூர்-விழுப்புரம் மாவட்டங்கள், ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டமாக இருந்த போது, மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தவர் எம்.நடராஜன். இவரது மனைவி தான் சசிகலா.தென்னாற்காடு மாவட்டத்தின் அப்போதைய ஆட்சியராக இருந்த சந்திரலேகாவுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார் நடராஜன்,

அப்போது எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த தருணத்தில், கடலூரில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்தப் பொதுக்கூட்டத்தில் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் என்று அறிவிக்கப்பட்டு அவருக்கு செங்கோல் ஒன்றினை அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் வழங்கினார்.

எம்ஜிஆருக்கு நெருக்கமானவர் என்ற நிலையில் கடலூர் வந்த ஜெயலலிதாவிற்கு, சந்திரலேகா அவரை நன்கு உபசரித்ததோடு, அவருக்கு உதவிகளை செய்ய நடராஜன் மனைவி சசிகலாவுக்கு அறிமுகம் செய்துவைத்தார். ஜெ-சசி முதல் சந்திப்பு கடலூரில் உள்ள தற்போதைய முகாம் அலுவலகத்திற்கு அருகாமையில் உள்ள கட்டிடத்தில் நடந்தது.(தற்போது அந்தக் கட்டிடம் பராமரிப்பின்றி உள்ளது.)

அப்போது தொடங்கிய தோழமை நாளுக்கு நாள் அதிகரித்தது.பின்னர் நடராஜன் சென்னைக்கு மாற்றலாகி சென்றதும், வீட்டில் தனியே இருந்த ஜெயலலிதாவுக்கு வீடியோ கேசட்களை கொண்டு சென்று கொடுத்து வந் தார் சசிகலா. அந்த நட்பு இறுகி இருவரும் பிரிய முடியாத தோழி களாயினர்.

http://tamil.thehindu.com/opinion/reporter-page/ஜெ-சசி-தோழமைக்கு-களம்-அமைத்துக்-கொடுத்த-கடலூர்/article9413250.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

ஜெயலலிதாவின் கடைசி நாள் டிசம்பர் 5 என வரலாற்றில் பதிவாகிவிட்டது. இதைப்போல, ஜெயலலிதா வாழ்வில் கடைசி என்று வரலாற்றில் பதிவாகப்போகிற சில நாட்கள், சில நிகழ்வுகள், சில சம்பவங்கள்.. 

வேதா நிலையத்தில் கடைசி நாள்... 

போயஸ் கார்டன், வேதா நிலையம்தான் ஜெயலலிதாவின் வீடு. இந்த உலகில் அவருடைய உணர்வோடு கலந்த ஒரு இடம் வேதா நிலையம். ஜெயலலிதாவின் வாழ்க்கையில் வேதா நிலையம் மிக முக்கியமான பாத்திரம். அந்த வீட்டில் ஜெயலலிதாவின் கடைசி நாளாக இருந்தது, செப்டம்பர் 22-ம் தேதி. ஜெயலலிதாவின் உயிரைப் பறித்த உடல்நிலைக் கோளாறுகள் வெளிப்படத் தொடங்கி, அவர் வேதா நிலையத்தில் அன்றுதான் மயங்கிச் சரிந்தார். அந்த செப்டம்பர் 22 தான் வேதா நிலையத்தில் ஜெயலலிதா கடைசியாக வாழ்ந்த நாள். 

204201a_10502.jpg

 

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கடைசி நாள் 

1989-க்குப் பிறகு, செயின்ட் ஜார்ஜ் கோட்டைதான் ஜெயலலிதாவின் ஒரே குறிக்கோள். அதற்காகவே சிந்தித்தார். அதற்காகவே உழைத்தார். அதற்காகவே வாழ்ந்தார். அந்தக் கோட்டைக்குள் அவர் சந்தித்த  அவமானம் கொடுமையானது. ஆனால், அதே கோட்டையில் அவர் ஈட்டிய பெருமைகள் புகழ்வாய்ந்தவை. ஒரு முறை அல்ல... இருமுறை அல்ல... 6 முறை முதலமைச்சராக அங்கிருந்து ஆட்சி நடத்தினார். சென்னை விமானநிலையம் முதல் சின்னமலை வரையிலான மெட்ரோ ரயில் சேவை, மெட்ரோ ரயில் நிலையங்கள், 200 புதிய அரசுப் பேருந்துகளை தொடங்கி வைக்க, செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு ஜெயலலிதா செப்டம்பர் 21-ம் தேதி வந்தார். அதுதான் அங்கு அவர் காலடித் தடம் பதிந்த கடைசி நாள். 

கடைசியாகச் சந்தித்த பொதுஜனங்கள்... 

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் செப்டம்பர் 21-ம் தேதி, செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் தேயிலை தோட்ட  தொழிற்குழுக்களுக்கு வாகனங்கள், கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி அது. அதில் ஜெயலலிதாவின் கைகளால் உதவிகளைப் பெறுவதற்கு நீலகிரியில் இருந்து பெண் தோட்டத் தொழிலாளர்கள் சிலர் வந்திருந்தனர். அவர்கள்தான், நடமாடும் ஜெயலலிதாவை கடைசியாகப் பார்த்த பொதுஜனங்கள். 

204171a_11418.jpg

 

கடைசி அர்ப்பணிப்பு - புத்தகங்கள்! 

அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவாக, அவர் இந்த உலகத்துக்கு கடைசியாக புத்தகங்களை அர்ப்பணித்துள்ளார். புரட்சித்தலைவி அம்மா பெஸ்ட் சாரிட்டபிள் டிரஸ்ட், நமது எம்.ஜி.ஆர் பெஸ்ட் சாரிடபிள் டிரஸ்ட் மூலமாக 10-ம் வகுப்பு மற்றும் எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பிற்கான புத்தகங்களை, அரசு மருத்துவக் கல்லூரி நூலகங்களின் பயன்பாட்டிற்காக வழங்கினார். மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறைச் செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அதைப் பெற்றுக் கொண்டார். செப்டம்பர் 21-ம் தேதி இது நடந்தது.

 

கடைசி மரியாதை - பகுத்தறிவு சூரியனுக்கு...

முதலமைச்சர் ஜெயலலிதா கடைசியாக மலர்தூவி அஞ்சலி செலுத்தியது, தந்தை பெரியாரின் திருவுருவப்படத்துக்குத்தான். கடந்த செப்டம்பர் 17-ம் தேதி பெரியாரின் 138-வது பிறந்தநாள். அதையொட்டி ஜெயலலிதா இந்த மாரியாதையை செலுத்தினார். இதுதான் ஜெயலலிதா கடைசியாக செய்த மரியாதை.  

 

கடைசி இரங்கல் - இசைக் கலைஞனுக்கு!

கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா, நவம்பர் 22-ம் தேதி மரணமடைந்தார். அவருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதுதான் ஜெயலலிதாவின் பெயரில் வெளியான கடைசி இரங்கல் அறிக்கை. 

 

கடைசி குடைச்சல் - சசிகலா புஷ்பா!

இந்தியா அரசியலில், தனது தனிப்பட்ட வாழ்வில் என இரண்டிலும்  ஜெயலலிதா சந்தித்த எதிரிகள் யாரும் சாதரணமானவர்கள் அல்ல. ஆனால், அந்த ஜாம்பவான்கள் யாரும் ஜெயலலிதாவுக்கு கடைசி நேர குடைச்சலாக இருக்கவில்லை. ஆனால், ஜெயலலிதாவால் அரசியலில் அங்கீகாரம் பெற்று, ஜெயலலிதாவால் பதவி கொடுத்து அழகு பார்க்கப்பட்ட சசிகலா புஷ்பா கடைசி நேரத்தில் ஜெயலலிதாவை அகில இந்திய அளவில் சர்ச்சைக்குள்ளாக்கினார். இந்திய நாடாளுமன்றத்தில் வைத்து, ஜெயலலிதா மீது புகார் வாசித்தார் சசிகலா புஷ்பா.

 

கடைசி கைநாட்டா? கையெழுத்தா?

திருச்சி, தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு நவம்பர் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் போட்டியிடும் வேட்பாளர்களின் ‘பி-பார்ம்’-ல் அ.தி.மு.க பொதுச் செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதா கையெழுத்துப்போட வேண்டும். ஆனால், அதில் ஜெயலலிதா கைநாட்டு வைத்திருந்தார். அதுதான் அவர் வாழ்நாளில் முதலும் கடைசியுமாக வைத்த கைநாட்டாக இருக்கும். ஆனால், அதன்பிறகு நவம்பர் 19-ம் தேதி நடைபெற்ற இடைத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அவர்களை வெற்றி பெற வைத்ததற்கு நன்றி தெரிவித்து நவம்பர் 22-ம் தேதி ஜெயலலிதாவின் பெயரில் அறிக்கை வெளியாகி இருந்தது. அதில் இருந்த கையெழுத்துத்தான் அதிகாரபூர்வ ஜெயலலிதாவின் கடைசி கையெழுத்து. 

jayasign28_vc2_18177_12086.jpg

 

கடைசி நாட்கள் 75!

செப்டம்பர் 22-ம் தேதி, அப்போலோ மருத்துவமனையில்  சிகிச்சைக்காக ஜெயலலிதா சேர்க்கப்பட்டார். அன்றில் இருந்து அவர் உயிர் பிரியும் கடைசி தருணம்வரை, அவர் அப்போலோவில்தான் இருந்தார். ஜெயலலிதா தன்னுடைய வாழ்நாளின் கடைசி 75 நாட்களை அப்போலோவில் கழித்தார். அரண்மனையைப்போன்ற வேதா நிலையம், அதிகாரம் செலுத்தும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட், ஹைதரபாத் திராட்சைத் தோட்டம் என்று எதுவும் கடைசி நாட்களில் ஜெயலலிதாவுக்குப் பயன்படாமல் போனது. 

 

கடைசி சட்டமன்ற உரை!

6 முறை முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, 15-வது சட்டமன்றத்தின், முதல் பட்ஜெட் கூட்டத் தொடரில் பேசியதுதான், அவருடைய கடைசி சட்டமன்ற உரை. அந்த உரைகள், அவருடைய துறை சார்ந்த மானியக் கோரிக்கைகளில் பேசியவை. ஜெயலலிதா கலந்து கொண்ட கடைசி சட்டமன்றக் கூட்டத் தொடர், பங்கெடுத்த கடைசி பட்ஜெட் என இரண்டுமே இதற்குள் அடங்கும். 

 

கடைசி தேர்தல் பிரசாரம்!

2016 சட்டமன்றத் தேர்தலுக்கு ஜெயலலிதா வழக்கம்போல் பிரசாரம் செய்யவில்லை. சென்னை, மதுரை, நெல்லை, கோவை, ஈரோடு என்று தேர்ந்தெடுத்த ஊர்களில் மட்டும் பிரசாரம் செய்தார். அதுவும் அவர் பொதுக்கூட்டம் போட்டு, அதையே தேர்தல் பிரசாரம் ஆக்கினார். அப்படி அவர் கடைசியாக செய்த தேர்தல் பிரசாரம், சென்னை தீவுத் திடலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரம். 

jayalast2_11562.jpg

 

பழிவாங்கிய கடைசி வெளிமாநிலப் பயணம்! 

தமிழகத்தில் இருந்து ஜெயலலிதா கடைசியாக சென்ற வெளிமாநிலம் கர்நாடகம். பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை பெறுவதற்காக 2014 செப்டம்பர் 27-ம் தேதி அங்கு சென்றார், ஜெயலலிதா. ஆனால்,  20 வருடமாக இழுத்தடிக்கப்பட்ட அந்த வழக்கின் தீர்ப்பு ஜெயலலிதாவை பழிவாங்கியது. குற்றவாளி என்று தீர்ப்பு வந்ததால், பரப்பன அக்ரஹாரா சிறையில் 22 நாட்களை கழிக்க வேண்டியதானது. 

 

கடைசி வழக்கு - ஜெயலலிதாவின் வாழ்வில் 20 ஆண்டுகள் அவரை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று  கொண்டிருந்த வழக்கு, சொத்துக்குவிப்பு வழக்கு. அவர் 1996-ம் ஆண்டு சிறையில் இருக்கும்போது தொடரப்பட்டு, 2014-ம் ஆண்டு ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பிய வழக்கு. ஜெயலலிதா இறந்துவிட்டார். ஆனால், அவர் சந்தித்த அந்த கடைசி வழக்கு இன்னும் உயிரோடு இருக்கிறது. 

 

கடைசி தொகுதி - ஆர்.கே.நகர் 

ஜெயலலிதா பர்கூர், ஆண்டிபட்டி, ஸ்ரீரங்கம் என்று பல தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று விடுதலையானபிறகு அவர் போட்டியிட்ட தொகுதி ஆர்.கே.நகர். அப்போது அந்த மக்கள் தந்த வெற்றி, ஜெயலலிதாவை 2016 சட்டமன்றத் தேர்தலிலும் ஆர்.கே நகரிலேயே போட்டியிட வைத்தது. அப்போதும் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனார். ஜெயலலிதாவின் இறப்பு, முதலமைச்சரை இழந்த தமிழக மக்களுக்கு ஒரு இழப்பு. ஜெயலலிதாவின் இறப்பு, முதலமைச்சர், தொகுதி எம்.எல்.ஏ என்ற வகையில் ஆர்.கே.நகர் மக்களுக்கு இரண்டு இழப்பு. 

 

கடைசி பயணம் -

ராஜாஜி அரங்கத்தில் இருந்து மெரினாவிற்கு ஜெயலலிதாவின் உடல் கொண்டு செல்ல இருப்பது தான் அவருடைய கடைசிப் பயணம். 

http://www.vikatan.com/news/jayalalithaa/74278-moments-from-jayalalithaas-life.art

Link to comment
Share on other sites

நடிகை ஜெயலலிதா பற்றிய 7 சுவாரஸ்யமான விஷயங்கள்

 

 சென்னை: ஜெயலலிதாவின் பெயர் அவர்கள் வசித்த இரண்டு வீடுகளின் முதல் பெயர்களாகும். ஜெயலலிதாவை அவரது குடும்பத்தாரும், சக கலைஞர்களும் அம்மு என்றே அழைத்தனர்.

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது.

7 facts about actress Jayalalithaa

நடிகை

ஜெயலலிதாவின் தாய் சந்தியா தமிழ் படங்கள் மட்டும் நாடகங்களில் நடித்து வந்தார். தாயின் வழியில் ஜெயலலிதாவும் நாடகங்களில் நடித்து சினிமா படங்களில் நடிக்கத் துவங்கினார்.

நடனம்

ஜெயலலிதாவுக்கு பியானோ வாசிக்கத் தெரியும். அவர் பரதம், மோகினியாட்டம், மணிபுரி மற்றும் கதக் ஆகிய நடனங்களை கற்றுத் தேர்ந்தவர்.

அம்மு

ஜெயலலிதாவின் பெயர் அவர்கள் வசித்த இரண்டு வீடுகளின் முதல் பெயர்களாகும். ஜெயலலிதாவை அவரது குடும்பத்தாரும், சக கலைஞர்களும் அம்மு என்றே அழைத்தனர்.

இஸ்ஸத்

ஜெயலலிதா பாலிவுட் சூப்பர் ஸ்டார் தர்மேந்திராவுக்கு ஜோடியாக இஸ்ஸத் என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார்.

உச்சம்

1965ம் ஆண்டு முதல் 1980ம் ஆண்டு வரை திரையுலகின் முடிசூடா ராணியாக திகழ்ந்தார் ஜெயா. அந்த காலகட்டத்தில் அதிகம் சம்பளம் வாங்கிய இந்திய நடிகையும் ஜெயலலிதா தான்.

ஹீரோக்கள்

ஜெயலலிதாவை சுற்றியே கதை நகர்வதாக இருந்தாலும் அந்த படங்களில் நடிக்க ஹீரோக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருந்தாலும் அது ஜெயலலிதாவாக இருந்ததால் ஹீரோக்கள் ஏற்றுக் கொண்டனர்.

எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் சேர்ந்து 28 படங்களில் நடித்துள்ளனர். அவர்கள் முதன்முதலாக ஜோடி சேர்ந்த படம் ஆயிரத்தில் ஒருவன், கடைசியாக ஜோடி சேர்ந்தது பட்டிக்காட்டு பொன்னையா.

Read more at: http://tamil.filmibeat.com/news/7-facts-about-actress-jayalalithaa-043698.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லட்சக்கணக்கான மக்களின் கண்ணீரின் மத்தியில் தமிழக முதல்வரின் பூதவுடல் நல்லடக்கம் .

1f337.png? கோமளவள்ளி என்ற பெயரை அவரே மறந்திருப்பார். பிறந்ததும் ஜெ.வுக்கு சூட்டிய பெயர் அது. ஆனால் சில காலத்தில் ஜெயலலிதா ஆகிப்போனார். ஜெயா, ஜெய், லில்லி எனப் பல பெயர்களில் பள்ளித்தோழிகளால் அழைக்கப்பட்டவர். ஆனால், அவரது அம்மாவுக்கு "அம்மு".அதிமுகவினருக்கு "அம்மா".

1f337.png? சர்ச் பார்க் பள்ளி மாணவி என்றுதான் பலருக்கும் தெரியும். ஆனால், மாம்பலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டுத்தான் மெட்ரிக் வரை சர்ச் பார்க்கில் படித்தார். "இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் சர்ச் பார்க்கில் படிக்க வேண்டும்" என்பதை தனது ஆசையாகச் சொல்லியிருந்தார்.

1f337.png? போயஸ் கார்டன், சிறுதாவூர், ஹைதராபாத் திராட்சைத்தோட்டம், ஊட்டி கொடநாடு எஸ்டேட் ஆகிய நான்கும் ஜெ. மாறி மாறி தங்கும் இடங்கள். தற்போது ஹைதராபாத் செல்வதை நிறுத்திவிட்டார். இப்போதெல்லாம் திடீர் ஓய்வுக்கு சிறுதாவூர். மாதக்கணக்கில் தங்க வேண்டுமென்றால் கோத்தகிரியில் உள்ள கோடநாடு.

1f337.png? சினிமா காலத்தில் இருந்தே இவரை "வாயாடி"என்று அழைத்தவர் எம்.ஜி.ஆர். இதுபற்றி நிருபர் ஒருவர் ஜெ.விடம் கேட்டதுக்கு, "அவர் கலகல, நான் லொட லொட" என்றாராம் சிரித்தபடி.

1f337.png? உடல்நலனில் ஆரம்பகாலத்தில் அதிக அக்கறையுடன் இருந்தவர். தற்போது சில நிமிடங்கள் நடைப்பயிற்சி மட்டும் மேற்கொள்கிறார்.

1f337.png? இவர் நடித்த மொத்தப்படங்கள் 115.எம்.ஜி.ஆருடன் நடித்தவை 28. இருவரும் இணைந்து நடித்த முதல்படம் "ஆயிரத்தில் ஒருவன்".

1f337.png? "சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா"என்ற "அரசிளங்குமாரி" படப்பாடல் தான் எனக்கு எப்போதும் பிடித்த நல்ல பாடல் என்பார். அப்பாடலை எழுதிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் மனைவியிடம் 10 லட்சம் பணம் கொடுத்து அவரது எழுத்துக்களை நாட்டுடமையாக்கினார்.

1f337.png? "அரசியலில் நான் என்றைக்குமே குதிக்க மாட்டேன் "என்று பேட்டி கொடுத்தவர் ஜெயலலிதா. "நாடு போகிற போக்கை பார்த்தால் ஜெயலலிதா கூட முதலமைச்சராகி விடுவார் போல "என்று இவர் நடிக்க வந்த காலத்தில் பேட்டியளித்தார் முரசொலிமாறன்.

1f337.png? ஜெயலலிதா முதலில் குடியிருந்தது தி நகர் சிவஞானம் தெருவில். பிறகு அடையாறில் சிலகாலம் இருந்தார். படங்கள் குவிந்து நடிப்பில் கொடிகட்டிய காலத்தில் தான் போயஸ் வீடு கட்டப்பட்டது. அதன் ஒவ்வொரு செங்கல்லையும் பார்த்து கட்டியர் இவருடைய அம்மா சந்தியா. அதனால் "வீட்டுக்குள் என்ன மாற்றமும் செய்யலாம். ஆனால் அம்மா வைத்த. வாசலை மட்டும் மாற்றக்கூடாது எனக் கூறியிருக்கிறார்.

1f337.png? எப்போதும் அம்மா செல்லம்தான். அவருக்கு இரண்டு வயதாக இருக்கும்போது அப்பா இறந்துவிட அந்த நினைவுகள் இல்லை.

1f337.png? போயஸ் வீட்டுக்குள் நுழையும் இடத்தில் இவரது தாயார் சந்தியா, எம்.ஜி.ஆர்.ஆகிய இருவரின் படங்கள் மட்டுமே இருக்கும்.

1f337.png? எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற விழாவில் ஆறடி உயரமுள்ள வெள்ளி செங்கோலை எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா வழங்கினார். இவருக்கு மிகவும் பிடித்த படம் இதுதான்.

1f337.png? பெருமாளை விரும்பி வணங்குகிறார். மன்னார்குடி இராஜகோபாலசாமி இதில் முதன்மையானது. மயிலை கற்பகாம்பாளையும்,கும்பகோணம் ஐயாவாசி பிரத்தியங்கிரா தேவியையும் சமீப காலமாக வணங்கி வருகிறார்.

1f337.png? தினமும் காலையில் நிஷாகாந்தி எனப்படும் இருவாட்சி மலர்களை பறித்து பூஜைக்கூடையில் தயார்நிலையில் வைத்திருப்பார்கள் கார்டன் பணியாளர்கள். அதை எடுத்தபடியே பூஜையறைக்குள் நுழைவார். சமீபமாக துளசியும் பூஜையில் தவறாமல் இடம்பெறுகிறது.

1f337.png? யாகம் வளர்ப்பதிலும், ஹோமத்தில் உட்காருவதிலும் ஜெயலலிதாவிற்கு ஈடுபாடு அதிகம். யாகத்தில் 6 மணிநேரம் வரை கூட உட்கார்ந்திருக்கிறார். அவசரமாக மந்திரம் சொன்னாலோ, தவறாக மந்திரம் சொன்னாலோ கண்டுபிடித்து நிறுத்தச் சொல்லும் அளவுக்கு வேதஞானம் உண்டு.

1f337.png? சிறுதாவூர் பங்களா இருக்குமிடம் மொத்தம் 116 ஏக்கர். அங்கு புறா, கிளி, காடை, கௌதாரி போன்றவற்றை வளர்த்து வந்தார்.இந்திரா,சந்திரா என்ற ஈமூக்களும் வளர்த்தார். இரண்டும் திடீரென இறந்துவிட ஈமு வளர்ப்பதையே விட்டுவிட்டார்.

1f337.png? பரதம்,ஓரிண்டல் டான்ஸ் இரண்டையும் முறைப்படி கற்று அரங்கேற்றம் செய்தவர். முதல்வராக இருந்தபோது ஒருமுறை ஊட்டியில் மேடையைவிட்டு இறங்கி வந்து ஆடினார்.

1f337.png? ஜெ.வின் 100-வது படத்துக்கான பாராட்டு விழாவில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் *"நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் ஜெயலலிதா"* என்று பாராட்டப்பட்டவர்.

1f337.png? பழைய பாடல்கள் கேட்பதில் அதிக ஆர்வ முள்ளவர். ஜெயா டிவியில் வரும் பழைய பாடல்கள் அனைத்தும் இவருடைய விருப்பங்கள்.

1f337.png? ரயில் பயணம் பிடிக்காது. கார் மற்றும் ஹெலிகாப்டர் பயணங்கள்தான் அதிக விருப்பம்.

1f337.png? போயஸ் வீட்டில் எப்போதும் 7 நாய்க்குட்டிகள் இருக்கும். அவரது பிறந்தநாளை யொட்டி ஆண்டுதோறும் ஒரு குட்டி புதிதாக இணைந்து கொள்ளும். இந்த எண்ணிக்கை காலப்போக்கில் அதிகமானதால் சில குட்டிகள் சிறுதாவூர், கோடநாடு என அனுப்பி வைக்கப்படுகின்றன.

1f337.png? இந்தியாவில் உள்ள அத்தனை பிரபலங் களையும் தனது "வாக் அண்ட் டாக் "பேட்டிக்கு வரவழைத்த NDTV-யால் ஜெயலலிதாவின் மனதை மட்டும் மாற்றமுடியவே இல்லை.கடைசிவரை உறுதியாக இருந்து மறுத்துவிட்டார்.

1f337.png? ஓஷோவின் புத்தகங்களை மொத்தமாக வாங்கி படித்து வந்தார். இப்போது ரமணர் பற்றியே அதிகம் படிக்கிறார்.ரமணர் தொடர்பான முக்கிய புத்தகங்கள் அனைத்தும் சமீபகாலமாக அவர் மேஜையில் உள்ளன.

1f337.png? ஜெயலலிதாவின் முழு இருப்பும் போயஸ் கார்டனின் முதல் மாடியில்தான்.அங்கு சசிகலா, மற்றும் முக்கியப்பணியாளர்கள் தவிர யாருக்கும் அனுமதி இல்லை.

1f337.png? பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்தின் முதல் மாணவியாக வந்தவர் ஜெயலலிதா!

1f337.png? திரைப்பட துறையை ஜெ. தெரிவு செய்திருந்தாலும் வழக்குரைஞராக வேண்டுமென்பதே அவரது லட்சியமாக இருந்தது. ஆனால் குடும்பச்சூழல் காரணமாக நடிப்புத்தொழிலை முன்னெடுக்கும் நிலை ஏற்பட்டது.

1f337.png? பாடசாலை மாணவி யாக இருக்கும்போதே ஜெயலலிதா பல்வேறு நாடகங்களில் நடித் துள்ளார். அதில் உன்று *TEA HOUSE* என்ற ஆங்கில நாடகம்.அதன் பின்னர் *THE EPISTLE* என்ற ஆங்கிலப்படத்திலும் நடித்துள்ளார்.

1f337.png? திரையிலகில் அதிக வெள்ளிவிழா திரைப்படங்களை வழங்கிய சாதனை ஜெவுக்கு உண்டு.அவர் நடித்துள்ள 92 தமிழ்படங்களில் 85 படங்கள் வெள்ளிவிழா கண்டவை.

1f337.png? *சிவாஜியுடன்* இவர் நடித்துள்ள *தங்கமகன்* திரைப்படம் தான் *ஆஸ்காருக்கு* பரிந்திரை செய்யப்பட்ட *முதல் தமிழ் படம்.*

1f337.png? *ஜெயலலிதா அறிமுகமான 5 மொழித் திரைப்படங்களும் பெரும் வெற்றிப் பெற்றவை.*

1f337.png? "நான் அனுசரித்துப் போகிறவள் தான்.ஆனால் எனக்கென்று சில சிந்தனைகள் உண்டு. அதை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டேன் என்று தன் கேரக்டருக்கு விளக்கம் அளித்துள்ளார்.

Link to comment
Share on other sites

ஜெயலலிதா | தேசிய ஆளுமை | சிறப்பு புகைப்படத் தொகுப்பு

 

 
23_3099665f.jpg
 
 
 

21_3099652a.jpg

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுடன்

20_3099653a.jpg

முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன்

19_3099654a.jpg

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியுடன்.

18_3099655a.jpg

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியுடன்

17_3099656a.jpg

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன்

16_3099657a.jpg

அன்னை தெரசாவுடன்

15_3099658a.jpg

முன்னாள் குடியரசு தலைவர் கே.ஆர்.நாராயணனுடன்

14_3099659a.jpg

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி

13_3099660a.jpg

பிரதமர் மோடியுடன்

12_3099661a.jpg

காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன்

11_3099662a.jpg

முன்னாள் பிரதமர் தேவகவுடாவுடன்

10_3099663a.jpg

மத்திய திட்ட குழு முன்னாள் துணை தலைவர் அலுவாலியாவுடன்

 

1_3099648a.jpg

முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனுடன்

2_3099647a.jpg

முன்னாள் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா மற்றும் அவரது மனைவியுடன்

3_3099646a.jpg

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமுடன்

4_3099645a.jpg

முன்னாள் துணை பிரதமர் அத்வானியுடன்

5_3099644a.jpg

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாபு(இடது).. சுப்பிரமணிய சுவாமியுடன்

6_3099643a.jpg

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன்

7_3099642a.jpg

டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்துடன்

8_3099641a.jpg

மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஹர்கிஷண் சிங் சுர்ஜித்துடன்

9_3099640a.jpg

முலாயம் சிங்குடன்

http://tamil.thehindu.com/tamilnadu/ஜெயலலிதா-தேசிய-ஆளுமை-சிறப்பு-புகைப்படத்-தொகுப்பு/article9412336.ece?homepage=true&theme=true

Link to comment
Share on other sites

 

''பெண் என்பதால் ஊடகங்கள் என் மீது காழ்ப்புணர்ச்சி”

தான் ஒரு அரசியல் குடும்பத்தின் பின்னணியில் வராமல், சுயமாக உருவான பெண் அரசியல்வாதி என்பதால், ஊடகங்கள் தன் மீது காழ்ப்புணர்வுடன் நடந்து கொள்வதாக 2004ம் ஆண்டில் பிபிசியின் கரன் தப்பாருக்கு அளித்த ஆங்கில பேட்டியில் ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார். அதன் ஒரு சிறு பகுதியை இங்கு வழங்கியிருக்கிறோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.