Jump to content

சசிகலா: ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான கதை!


Recommended Posts

"சண்டைக்களமான சட்டமன்றம்" : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான கதை, அத்தியாயம் - 25

சசிகலா, ஜெயலலிதா

ஜா.- ஜெ. அணிகள் அரங்கேற்றிய நாடகம்!

ஜா. அணியின் தளபதிகளாக ஆர்.எம்.வீரப்பன், ராஜராம், முத்துச்சாமி போன்றவர்கள் இருந்தனர். அவர்களோடு ஜானகி அணியின் கிச்சன் கேபினட்டில் இருந்த நாராயணன், சுலோச்சனா சம்பத் இருந்தனர். ஜெ.அணியின் தளபதிகளாக பண்ரூட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் இருந்தனர். அவர்களோடு போயஸ் கேபினட்டில் இருந்த சசிகலாவும் நடராஜனும் ஜெயலலிதாவுக்காக வேலை பார்த்தனர்.  இரண்டு அணிகளும் ஆளுக்கொரு வியூகத்தை வகுத்துக் கொண்டு, சட்டசபை கூடும் நாளை கழுகுபோல் எதிர்பார்த்துக் காத்திருந்தன. அவர்கள் எதிர்பார்த்த அந்த நாள் 1988 ஜனவரி 25-ம் தேதியில் வந்தது. அன்று ஜானகியின் நாற்காலியைக் காப்பாற்றும் நோக்கத்துடன் கூடப்போகும் அந்த சட்டமன்றத்தை அமளிதுமளியாக்கிவிட ஜெ.அணி திட்டம் போட்டு வைத்திருந்தது. ஜெயலலிதா அணியின் திட்டத்தை அடித்து நொறுக்கி எப்படியாவது நாற்காலியைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்பதற்கு ஜா.அணி திட்டம் போட்டு வைத்திருந்தது. இரண்டு அணிகளும் கச்சிதமாக அதற்கு ஒத்திகை பார்த்து இருந்தன. அதனால், சட்டமன்றத்தில்  அவர்களின் நாடகம் வெற்றிகரமாக அரங்கேறியது. ஜானகி நினைத்தபடி, நம்பிக்கைத் தீர்மானம் வென்றது. அது ஜா.அணிக்கு கிடைத்த வெற்றி; நம்பிக்கைத் தீர்மானத்தை வெற்றிபெற வைக்க, சட்டமன்றத்தில் நடத்தப்பட்ட களேபரங்களைக் காரணம்காட்டி, ஆட்சியைக் கலைத்தது மத்திய அரசு. அது ஜெ.அணிக்கு கிடைத்த வெற்றி! 

சண்டைக்களமான சட்டமன்றம்!

ஜானகி

1988 ஜனவரி 28-ம் தேதி வியாழக்கிழமை தமிழக சட்டசபை கூடியது. காலையில் 10 மணிக்கு ஜானகி அம்மாள் சபைக்கு வந்தார். திருக்குறளுடன் சபையைத் தொடங்கிய சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன், “இந்திரா காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 5 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக  என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தனர். அதனால், சபையை தொடர்ந்து நடத்த முடியாது. இப்போது சபையை ஒத்திவைக்கிறேன். மீண்டும் மதியம் 12 மணிக்கு சபை கூடும்” என்று அறிவித்தார். அதற்குக் காரணம், ஜானகியை எதிர்த்து வாக்களிக்க முடிவு செய்திருந்த இ.காங் எம்.எல்.ஏ-க்கள் மீது நேரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற படபடப்பில் பி.ஹெச்.பாண்டியன் இருந்ததுதான். சபை ஒத்திவைக்கப்பட்ட நேரத்தில், இ.காங்கிரஸில் உள்ள சிவாஜி கோஷ்டி எம்.எல்.ஏ-க்கள் சபைக்குள் நுழைந்தனர். அவர்கள் ஜானகியை ஆதரிக்கும் எண்ணத்தில் இருந்தனர். அதனால், அவர்களை மற்ற இ.காங்கிரஸ் கோஷ்டி எம்.எல்.ஏ-க்கள் சுற்றி வளைத்துக் கொண்டனர்.  அந்த வளையத்தில் இருந்து சிவாஜி கோஷ்டி எம்.எல்.ஏ-க்களை விடுவிக்குமாறு சபைக் காவலர்களுக்கும் போலீஸூக்கும் சபாநாயகர் உத்தரவிட்டார் சபாநாயகர். சட்டசபைக்குள் போலீஸ் வருவது ‘உரிமை மீறல்’ என்று எதிர்ப்புத் தெரிவித்தனர் இ.காங்கிரஸில் உள்ள ஜானகி எதிர்ப்புக் கோஷ்டி எம்.எல்.ஏக்கள். இந்தச்  சலசலப்புகளுடன் சபை ஒத்திவைக்கப்பட்டது. 

ஜெ.அணி எம்.எல்.ஏ-க்களின் பதவி பறிப்பு!

பி.ஹெச்.பாண்டியன்

12  மணிக்கு மீண்டும் சபை கூடியதும், “ஜெ.அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான நெடுஞ்செழியன், பண்ரூட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம், கே.கே.எஸ்.எஸ்.ஆர், சௌந்தராஜன், திருநாவுக்கரசு ஆகியோர் கட்சி மாறி உள்ளனர். அவர்கள் அவை விதிப்படி நடவடிக்கைக்கு உள்ளாகிறார்கள். அவர்களின் பதவி பறிக்கப்படுகிறது” என்று பி.ஹெச்.பாண்டியன் அறிவித்தார். அவ்வளவுதான்... அவையில் கலவரம் தொற்றிக் கொண்டது. மேஜைகளில்  இருந்த மைக்குகள் பிடுங்கப்பட்டன. உடைத்து எறியப்பட்டன. ஜெ.அணி எம்.எல்.ஏ-க்களில் ஒரு கோஷ்டி சபாநாயகரை நோக்கி முன்னேறியது. அவர்கள் கையில் சிக்கி என்ன ஆவாரோ என்று பயந்து போன ஜா.அணி எம்.எல்.ஏ-க்கள் அவர்களை மறித்து சபாநாயகருக்குப் பாதுகாப்பு வளையம் அமைத்தனர். அந்த வளையத்தை ஜெ.அணியின் ஆகிருதியாய் இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆவேசத்துடன் பாய்ந்து உடைக்க முயன்றார். முதல்வர் இருக்கைக்கு எதிரே உள்ள மைக்கை எடுத்துக் கொண்டு சபாநாயகரை அடிக்கப் பாய்ந்தார்.

அன்றைய சபாநாயகர் பி.ஹெச் பாண்டியன்

அதில் மிரண்டுபோன பி.ஹெச்.பாண்டியன் பின்னங்கால் பிடரியில் அடிக்க தன் அறைக்குள் ஓடிப்போய் பதுங்கிக் கொண்டார். இடையில் புகுந்த கே.பி.ராமலிங்கம் கே.கே.எஸ்.எஸ்.ஆரைத் தடுக்க முயன்றார். அதில் இருவரும் கைகலப்பானது. கே.கே.எஸ்.எஸ்.ஆரின் அடி தாங்காமல் கே.பி.ராமலிங்கம் மயங்கிச் சரிந்தார். ஜானகி அணி எம்.எல்.ஏ-க்கள் பின்வாங்கினர். இதையடுத்து ஒன்றாக அமர்ந்த எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் இ.காங்கிரஸைச் சேர்ந்த சிவராமனை புது சபாநாயகராகத் தேர்ந்தெடுத்தனர். அவர் ஜனாகி மீதான நம்பிக்கைத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது என்றுஅறிவித்தார். சபாநாயகர் பதவியில் இருந்து பி.எச்.பாண்டியனை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார். இந்த அட்டாகாசத்தை நிறுத்த சட்டசபைச் செயலாளர் ராமசாமி முயன்றார். உடனே, சபையின் மின்சாரத்தைத் துண்டிக்கவும், எம்.எல்.ஏ-க்களை வெளியேற்றவும் உத்தரவிட்டார். சபை இருளில் மூழ்கியது. இதையடுத்து வெளியேற்றப்பட்டவர்களில் இ.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கவர்னரைப் போய்ச் சந்தித்து முறையிட்டனர். அவர்களும் ஜெயலலிதா அணியினரும் சட்டசபைக்குப் போவதில்லை என்றும் அறிவித்தனர். 

டெல்லியின் நிறம் மாறியது!

ஜானகி அணியை ஆதரிப்பேன் என்று சொல்லிக் கொண்டிருந்த ஜனாதிபதி வெங்கட்ராமனிடம் ஜெயலலிதாவுக்காக சிலர் பேசினார்கள். அத்துடன், தமிழக கவர்னர் குரானா, “உங்களுக்கும் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் தவறான தகவல்களைக் கொடுத்து ஜானகி அணியை ஆதரிக்க வைத்துள்ளார்” என்றனர். ஜானகி அணிக்குப் பெரும்பான்மை இல்லை என்றனர். இந்த வார்த்தைகளைக் கேட்ட ஜனாதிபதியின் மனம் மாறியது. பிரதமர் ராஜீவ் காந்தியைப் பொறுத்தவரை அவர் ஆரம்பத்தில் இருந்தே ஜானகியின் ஆட்சியை விரும்பவில்லை. தமிழகத்தில் அரசாங்கத்தைக் கலைத்துவிட்டு தேர்தலைச் சந்திப்பதுதான் காங்கிரஸூக்கு நல்லது என்று நினைத்தார். ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து அதிக இடங்களைக் கைப்பற்றலாம். ஒருவேளை காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்கவும் இது ஒரு வாய்ப்பாகக்கூட இருக்கலாம் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தார். இப்போது பிரதமர் ராஜீவ் காந்தியின் எண்ணத்துக்கு இசைந்து ஜனாதிபதியும் வந்துவிட்டதால், ஜானகி ஆட்சியை கலைக்கும் முடிவுக்கு டெல்லி வந்துவிட்டது. இதையடுத்து, ஜானகிக்கு எதிர்த்து வாக்களிக்கக் கோரி, இ.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுக்கு மதியத்துக்கு மேல்  டெல்லியில் இருந்து உத்தரவு வந்தது. அதனால், சபையை புறக்கணித்து வெளியில் வந்த இ.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் சபைக்குள் சென்றனர். 

ஒரு சட்டமன்றம்... இரண்டு சபாநாயகர்கள்! 

சட்டமன்றம்

எதிர்க்கட்சிகள் தேர்ந்தெடுத்த புது சபாநாயகர் சிவராமன், சபாநாயகர் இருக்கையில் அமர்வதற்காகப் போனார். அதற்குள் ஆளும்கட்சியின் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் அதில் போய் அமர்ந்துவிட்டார். இதில் கடுப்பான சிவராமன்,  “இறங்குங்கள்... இப்போது நான்தான் சபாநாயகர்” என்று சத்தம்போட்டார். ஆனால், பி.ஹெச்.பாண்டியன் நகரவில்லை. அவரை கீழே இழுக்க சிவராமன் முயற்சித்தார்; அவரால் முடியவில்லை. அதனால், பி.ஹெச். பாண்டியன் மடியிலேயே ஏறி அமர்ந்துவிட்டார். பி.ஹெச்.பாண்டியன் மடியில் அமர்ந்திருந்த சிவராமனை, ஜானகி அணி எம்.எல்.ஏ-க்கள் இழுத்துக் கீழே தள்ளினர். இதில், மீண்டும் ரகளை ஆரம்பித்தது. 2.30 மணிக்கு லாபியில் சீருடை அணிந்து நின்றிருந்த வெளியாட்கள் சிலர் ரகளைக்குள் புகுந்து சரமாரியாக தாக்கத் தொடங்கினார்கள். எல்லாம் நடராஜன் கைங்கர்யம். ஜானகி அணியைச் சேர்ந்த பி.என்.ராமச்சந்திரன் இடுப்பு பெல்டைக் கழற்றி எதிரணி எம்.எல்.ஏ-க்களை விரட்டி விரட்டி அடித்தார். அதில் இ.காங்கிரஸ் எம்.எல்.ஏ யசோதாவின் கை முறிந்தது; அமைச்சர் வி.வி.சாமிநாதன் முகத்தில் குத்து ஒன்று விழுந்தது; ஆர்.எம்.வீ மீது ‘டேபிள் வெயிட்’ பாய்ந்தது; மற்றொரு டேபிள் வெயிட்டை எடுத்து பொன்னையன் யாருக்கோ குறிவைத்துக் கொண்டிருந்தார்.  

99 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு!

யசோதா எம்.எல்.ஏஜா.-ஜெ. அணிகளின் இந்த மோதல் சட்டமன்றத்துக்குள் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதையடுத்து, ஜெ.அணி, இ.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூண்டோடு தூக்கி வெளியில் எறியப்பட்டனர். அதன்பிறகு, சட்டமன்றத்தின் கதவுகள் இழுத்துப் பூட்டப்பட்டன. அதன்பிறகு உள்ளே இருந்த எம்.எல்.ஏ-க்களை வைத்து, ஜானகி மீது நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 99 பேர் ஆதரவளித்தனர். அந்த அறைக்குள் சத்தமில்லாமல் ஒளிந்திருந்த 8 தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் எதிர்த்தனர். ஆனால், அவர்களின் சொல் அம்பலம் ஏறவில்லை.  “எதிர்ப்பவர்களைவிட... ஏற்போரே அதிகம் என்பதால்...  தீர்மானம் நிறைவேறியது” என்று சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் அறிவித்தார். அத்துடன் இந்த தீர்மானத்தின் மீது வாக்களிக்காத ஜெ.அணி எம்.எல்.ஏ-க்களின் பதவிகளை சட்டமன்ற விதிப்படி பறிப்பதாகவும் அறிவித்தார். இத்தகைய களேபரங்கள் முடிந்து ஓய்ந்த பிறகு மீண்டும் சபைக்கு வந்தார் ஜானகி.

அவர் முகத்தில் வெற்றிப் பெருமிதம் இருந்தாலும்... கொஞ்சம் கலவரமும் இருந்தது. அவர் கலவரமடைந்தபடி, அதற்கடுத்து வந்த மூன்றாவது நாள் அவர் ஆட்சியை டிஸ்மிஸ் செய்தது மத்திய அரசு. அதற்கு மத்திய அரசு கூறிய காரணம், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பது. அதற்கு அவர்கள் காட்டிய உதாரணம், சட்டசபையில் நடந்த ரகளைதான். 11 வருடங்கள் முதலமைச்சர் பொறுப்பில் இருந்த எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியின் ஆட்சி 24 நாட்களில் கவிழ்ந்தது. தமிழக முதலமைச்சர்கள் பட்டியலில் மட்டும் ஜானகி ராமச்சந்திரன் பெயர் சேர்ந்தது. அவ்வளவுதான். அதன்பிறகு தேர்தல் களத்துக்குத் தயாரானார்கள் ஜானகியும் ஜெயலலிதாவும். அந்தக் களத்திலும் ஜெயலலிதாவுக்குப் பக்கபலமாக சசிகலாவும் நடராஜனும் இருந்தனர். இப்போது, சசிகலா நடராஜனுக்கு அதைவிட முக்கியமான வேலை ஒன்று பாக்கி இருந்தது. போயஸ் கார்டன் வீட்டில் இருந்தவர்களைத் துரத்தியதுபோல், அரசியலில் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருப்பவர்களைத் துரத்தியடிக்க வேண்டும். அதற்கான பட்டியல் தயாரானது. அதில் திருநாவுக்கரசு, நாவலர் நெடுஞ்செழியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர், சேலம் கண்ணன் பெயர்கள் இருந்தன. 

கதை தொடரும்...

http://www.vikatan.com/news/coverstory/79557-assembly-turns-battleground--how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter---25.art

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

மன்னார்குடிக்குள் வந்த போயஸ் கார்டன்: சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 26

sasikala_001_12373_17537_14577.jpg

மன்னார்குடிக்குள் வந்த போயஸ் கார்டன்!

1982-ம் ஆண்டு ஜெயலலிதாவை, கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமித்தார் எம்.ஜி.ஆர்; அதையடுத்து, ஜெயலலிதாவுக்கு உதவியாளராக கொண்டுவரப்பட்டார் சசிகலா. போயஸ் கார்டன் வீட்டுக்குள் சசிகலா கால் பதிக்கத்  தொடங்கிய நாளன்றே, வேதா நிலையத்தின் ஆதிக்க உரிமை, ஜெயலலிதாவிடம் இருந்து சசிகலாவின் கரங்களை நோக்கி நகரத் தொடங்கிவிட்டது. தன் இரும்புக் கரங்களுக்குள் வந்த ஆதிக்கத்தை சசிகலா இறுக்கிப் பற்றிக் கொண்டார். அதை அவர் மற்றவர்கள் மீது பிரயோகப்படுத்தத் தொடங்கியபோது, அந்தத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல், அலறி ஓடினர். ஜெயலலிதாவின் உறவினர்கள், நண்பர்கள், நம்பிக்கைக்குரிய பணியாளர்கள் என ஒருவரும் சசிகலாவின் தாக்குதலுக்குத் தப்பவில்லை. அதில் சிக்கி எல்லோரும் சிதறி ஓடியபிறகு, சசிகலாவின் கொடி மட்டுமே போயஸ் கார்டனில் பறந்து கொண்டிருந்தது. அந்தக் கொடியின் நிழலில் மன்னார்குடி குடும்பம் தஞ்சமடையத் தொடங்கியது. இப்போது போயஸ் கார்டன் வீட்டுக்குள் சசிகலாவுக்கு எதிரிகளும் இல்லை... இடைஞ்சலும் இல்லை... 

சசிகலா-நடராஜன் வீழ்த்திய வேலிகாத்தான்கள்!

சசிகலாபோயஸ் கார்டன் வீட்டில் சசிகலாவுக்குத் தொந்தரவுகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அ.தி.மு.க என்ற கட்சியில் தொந்தரவுகள் இருந்தன. கட்சித் தொண்டர்களும் தலைவர்களும் வேறு மாதிரி. வீட்டு வேலைக்காரர்களை ‘டீல்’ செய்து வெளியில் அனுப்பியதுபோல், கட்சிக்காரர்களை அனுப்ப முடியாது. அவர்கள் ஜெயலலிதாவின் கனிவுப் பார்வையில் இருந்தனர். நாவலர் நெடுஞ்செழியன் மீது ஜெயலலிதா மதிப்பு வைத்திருந்தார்; பண்ரூட்டி ராமச்சந்திரன் மீது ஜெயலலிதா நம்பிக்கை வைத்திருந்தார்; திருநாவுக்கரசு ஜெயலலிதாவின் அணுக்கமான ஆலோசகராக இருந்தார்; கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஜெயலலிதாவால் தவிர்க்க முடியாத நபராக வலம் வந்தார். இவர்கள் ஜெயலலிதாவைச் சுற்றி அமைத்து வைத்திருக்கும் இந்த நம்பிக்கை வளையம்... நட்பு வளையம்... சசிகலாவுக்கு எரிச்சலைக் கொடுத்தது. “இந்த வளையங்களை உடைத்தால் ஓழிய தன் மனைவி சசிகலாவுக்கு ஜெயலலிதாவிடம் எதிர்காலம் இல்லை என்று நினைத்தார் நடராஜன்.

ஜெயலலிதாவின் வளர்ச்சி சிறியதாக இருக்கும்போதே, அவரைச் சுற்றி இருக்கும் இந்த வேலி காத்தான்களை வெட்டி எரியாவிட்டால், பிறகு இது வேர் பிடித்துவிடும். அது ஆபத்து” என்று யோசித்துக் காய்களை நகர்த்தினார் நடராஜன். அந்தக் காய்கள் நகர்த்தப்பட்ட காலம் 1988. எம்.ஜி.ஆர் அப்போது இல்லை; எம்.ஜி.ஆரின் நாற்காலியில் அமர்ந்திருந்த ஜானகியை கவிழ்த்தாகிவிட்டது; ஜெயலலிதாவை அந்த இடத்துக்கு கொண்டு வருவதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன; அந்த வேலையோடு, ஜெயலலிதாவைச் சுற்றி இருக்கும் வேலி காத்தான்களையும் வெட்டிவிட்டால்தான், ஜெயலலிதா முதலமைச்சராக வரும்போது, அவரோடு தன் மனைவி சசிகலா மட்டும் நெருக்கமாக இருப்பார் என்று கணக்குப்போட்ட நடராஜன், திவாகரனை உள்ளே இழுத்து வந்தார். 

திவாரகனின் படை வந்தது! திருநாவுக்கரசு படையை வென்றது!

திவாகரன்எம்.ஜி.ஆர் இறந்தபிறகு, ஜெயலலிதாவைச் சுற்றி ஒரு பாதுகாப்பு படை நிறுத்தப்பட்டது. அது திருநாவுக்கரசு செய்த ஏற்பாடு. அந்தப் படை, ஜெயலலிதாவை யாரும் தேவையில்லாமல் தொந்தரவு செய்வதைத் தடுத்தது. சுற்றுப் பயணத்தில், பொதுக்கூட்டங்களில், ஹோட்டல்களில் அந்தப் படை ஜெயலலிதாவைச் சுற்றியே இருந்தது. அது சசிகலாவுக்கு நெருடலை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவிடம் ரகசியம் எதையும் சசிகலாவால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால், ஜெயலலிதாவைச் சுற்றி நிறுத்தப்பட்டு இருப்பது திருநாவுக்கரசின் படை. அவர்கள்மூலம் சசிகலா எதைப்பேசினாலும் அது திருநாவுக்கரசின் காதுகளுக்குப் போய்விடுகிறது. எனவே, இப்போது திருநாவுக்கரசின் பாதுகாப்புப் படையை ஜெயலலிதாவிடம் இருந்து அகற்ற வேண்டும் என்று முடிவெடுத்த சசிகலா-நடராஜன் திவாகரன் மூலம் ஒரு பாதுகாப்புப் படையை உருவாக்கினார்கள்.

கருப்பு நிற ஆடை, கைத்துப்பாக்கி, கையில் வாக்கிடாக்கி என்று பந்தாவாக வலம் வந்தது அந்தக் கருப்புப் பூனைப் படை. ஜெயலலிதாவுக்கு அது ஒரு போதையைக் கொடுத்தது. முதலமைச்சர் கனவில் இருந்த அவர், இந்த டூப்ளிகேட் கருப்புப் பூனைப்படையின் அணிவகுப்பில், முதலமைச்சராகவே ஆகிவிட்டதாக உணர்ந்தார். திருநாவுக்கரசின் பாதுகாப்புப் படைக்கும் திவாகரனின் பாதுகாப்புப் படைக்கும் அவ்வப்போது உரசல் ஏற்பட்டது. எப்போதும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டனர். சமயங்களில் மோதிக் கொண்டனர். ஒரு முறை மோதல் முற்றியதில், திவாகரனின் கருப்புப் பூனைப் படை வீரர்களில் சிலருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

அதையே பூதாகரமாக்கி சசிகலா வைத்த ஒப்பாரியில், ஜெயலலிதா திருநாவுக்கரசின் பாதுகாப்புப் படையை துரத்திவிட்டார். திருநாவுக்கரசும் நமக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை என்று அமைதியாக இருந்துவிட்டார். அப்போது முதலே திருநாவுக்கரசு ஜெயலலிதாவை நெருங்குவதைக் குறைத்துக் கொண்டார். இப்போது, திவாகரனின் பாதுகாப்புப் படை மட்டுமே ஜெயலலிதாவை நிழல் போலச் சுற்றி வந்தது. அதை வைத்து, உள்கட்சி எதிரிகளுக்கு ஆட்டம் காட்டினார் நடராஜன். அடிமட்டத் தொண்டன் முதல் நாவலர் நெடுஞ்செழியன்வரை  நடராஜனின் ஆட்டத்தைக் கண்டு அரண்டு போனார்கள்; அதிருப்தி அடைந்தார்கள். ஆனால், வாய் திறக்க முடியவில்லை. 

தொண்டர்களை அடித்து நொறுக்கிய தலைவியின் படை!

ஜெயலலிதா

திவாகரன் அமைத்த கருப்புப் பூனைப்படை ஜெயலலிதாவிடம் தங்கள் முரட்டு விசுவாசத்தைக் காட்டிக் கொண்டே இருந்தது. எந்த அளவுக்கு என்றால், ஜெயலலிதா மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் முகத்தின் முன்னால் பறக்கும் வண்டோடு மல்லுக்கட்டி அதை வீழ்த்தும் அளவுக்கு விசுவாசத்தைக் காட்டியது திவாகரனின் கருப்புப் பூனைப்படை. அதுபோல், ஜெயலலிதாவை நெருங்கும் தொண்டர்களை விலக்கிவிடுவதுபோல், அவர்களை உதைத்துத தள்ளுவது; போயஸ் கார்டன் வீட்டில் சிவப்புக் கம்பளத்தில் தவறிக் கால் வைக்கும் தொண்டர்களையும் புரட்டி எடுப்பது; ஜூனியர் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களை வாசலில் நிறுத்தி மணிக்கணக்கில் விசாரித்து அவமானப்படுத்துவது என்று இந்தப்படையின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே போனது. நாளடைவில் இது தொண்டர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியது. அதனால், போயஸ் கார்டனுக்குள் வரும் அதிகாரம் படைத்தவர்கள்கூட உள்ளே ஒதுங்கி நிற்கப் பழகிக் கொண்டனர். அதை... அதைத்தானே எதிர்பார்த்தனர் நடராஜனும்... சசிகலாவும்... 

நாவலருக்கு இடி... பண்ரூட்டிக்கு அடி...

தொண்டர்களை கட்டுப்படுத்திய கருப்புப் பூனைப் படை, கட்சியின் முன்னணித் தலைவர்களை குறிவைத்தது. நாவலர் நெடுஞ்செழியனை குறிவைத்து எரிச்சல் படுத்தச் சொன்னார் நடராஜன். அதற்கான வியூகத்தையும்ச ரியாக வகுத்த பாதுகாப்புப் படை, கூட்ட நெரிசல் ஒன்றில் குறிவைத்து நாவலர் வயிற்றில் இடித்தது. அதில் வலி பொறுக்க முடியாத நாவலர் துடித்துப்போனார். ஆத்திரத்தோடு கருப்புப் பூனை படை வீரர் ஒருவரின் முதுகில் சாத்து சாத்தென்று சாத்தினார். அப்போதைக்கு அவரின் ஆத்திரம் தீர்ந்தாலும், அதற்குப் பின்னால் இருக்கும் ஆபத்தை அவர் உணர்ந்து கொண்டார். அதேபோல், தஞ்சைக் கூட்டத்தில் பண்ரூட்டி ராமச்சந்திரனின் மூக்கை உடைத்தனர்; திருநாவுக்கரசின் உதவியாளர்களைத் தாக்கினர்; கே.கே.எஸ்.எஸ்.ஆரை வெறுப்பேற்றினர். இப்படி இவர்களின் அழிச்சாட்டியத்தை பொறுக்க முடியாத தலைவர்கள், “தங்களுக்கென்று ஒரு பொது இடம் வேண்டும்... போயஸ் கார்டனை பொது இடமாக வைத்து நாம் அங்கு போய் கூடுவது சரியில்லை...” என்று பேச ஆரம்பித்தனர். ஆனால், அப்படி ஒரு முடிவை எடுக்க நடராஜன் நேரமே கொடுக்கவில்லை. 

நடராஜன் கொடுத்த புரட்சித் தலைவி பட்டம்!

நாவலர், ஜெயலலிதா

போயஸ் கார்டனை ஆக்கிரமித்திருந்த நடராஜன் அடுத்தகட்டமாக மற்றொரு அதிர்ச்சியை கட்சிக்காரர்களுக்கு கொடுத்தார். இனிமேல் ஜெயலலிதாவை ‘புரட்சித் தலைவி’ என்றுதான் எல்லோரும் அழைக்க வேண்டும் என்றார். அதைக் கேட்டு மூத்த தலைவர்கள் நெளிந்தனர். ஆரம்பத்தில் யோசித்தவர்கள் பிறகு சம்மதித்தனர். ஆனால், நாவலர் மட்டும் சிரமப்பட்டார். அதை ஜெயலலிதாவிடம் வத்தி வைத்தார் நடராஜன். ஜெயலலிதா நாவலரை போனில் அழைத்து, “நான் உங்கள் மகள் மாதிரி... உங்களை எல்லாம் நம்பித்தான் மலை போன்ற பொறுப்புகளை சுமக்கத் துணிந்துள்ளேன். உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால், நீங்கள் என்னை புரட்சிச் செல்வி என்றே அழைக்கலாம்” என்றார். ஆனாலும், நாவலர் மீது அப்போதே ஜெயலலிதாவுக்கு ஒரு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. நாவலர் தகுதிக்கு, தன்னை புரட்சிச் செல்வி என்று அழைப்பதே பெரிது என்பதை ஜெயலலிதா உணரவில்லை. ஆனால், தன் தகுதிக்கு ஜெயலலிதாவை ‘புரட்சிச் செல்வி’ என்று அழைப்பதே தனக்கு அசிங்கம் என்று நாவலர் உணர்ந்திருந்தார். ஆனாலும், அவருக்கு வேறு வழியில்லை. 

அதே நேரத்தில், ஜெயலலிதா கூட்டத்துக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் ‘வருங்கால முதல்வர்’, ‘தமிழகத்தின் எதிர்கால முதல்வர்’ என்று போஸ்டர் அடித்து ஒட்டச் சொல்லி இருந்தார் நடராஜன். அதை எல்லாம் பார்க்கும்போது, நாவலருக்கு கலக்கம் ஏற்பட்டது; ஜெயலலிதாவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. நாவலர் நெடுஞ்செழியனுக்கும், பண்ரூட்டி ராமச்சந்திரனுக்கும், திருநாவுக்கரசுக்கும் நடராஜனின் வளர்ச்சி புரிய ஆரம்பித்தது. இப்போது ஜெயலலிதாவுக்கு நாவலர் மீதான மதிப்பு குறைந்தது; பண்ரூட்டி ராமச்சந்திரன் மீதான நம்பிக்கை குறைந்தது; திருநாவுக்கரசை தள்ளிவைத்தார்; இவர்களுக்கே இந்த நிலை என்றால், மற்றவர்கள் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. 

கதை தொடரும்.... 

http://www.vikatan.com/news/coverstory/80144-poes-garden-into-mannarkudi-how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter---26.art

Link to comment
Share on other sites

சசிகலாவால் உருவான ‘நால்வர் அணி’! சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை - 27

சசிகலா

ஜெ.அணிக்குள் ஒரு சீனியர் அணி!

போயஸ் கார்டனுக்குள் வந்த சசிகலாவால், மன்னார்குடிக்குள் மூழ்கிப்போனது போயஸ் கார்டன். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்த மன்னார்குடி வெள்ளத்தில், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.கவும் மூழ்கத் தொடங்கியது. அதில் மூச்சுத் திணறியவர்கள், தங்கள் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள எங்கேயாவது ஒரு பிடிமானம் கிடைக்குமா என்று தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

ஜெயலலிதா, நாவலர், திருநாவுக்கரசு

அப்படித் தத்தளித்தவர்கள் ஒருவர் கையை ஒருவர் பிடித்து கரையேறி கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தனர். அவர்கள் தங்களுக்கென்று தனியாக ஒரு கூடாரம் போடும் வேலையிலும் கவனம் செலுத்திக் கொண்டிருந்தனர். அதற்கான ஆலோசனைகள் நாவலர் நெடுஞ்செழியன் வீட்டில் பல நாட்கள், பல மணி நேரங்கள் நடைபெற்றன.  ஏற்கெனவே, அ.தி.மு.க என்ற மிகப்பெரிய அரசியல் கட்சி ஜா.அணி - ஜெ. அணி என்று பிளவுபட்டுக் கிடந்தநிலையில், ஜெ.அணிக்குள்ளேயே ஒரு சீனியர் அணி உருவாக நாவலர் வீடு களமாக அமைந்தது. 

ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் நடராஜன்!

ஜெயலலிதா அணிக்குள் ஒரு சீனியர் அணி உருவாவதற்கு பல காரணங்கள் இல்லை. அதற்கு ஒரே காரணம், சசிகலா குடும்பம். நடராஜன்ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக திருநாவுக்கரசு, 24 கராத்தே வீரர்களை வைத்து ஏற்படுத்தி இருந்த பாதுகாப்புப் படையை சசிகலா அப்புறப்படுத்தினார். திவாகரன் தலைமையில் நடராஜன் புதிதாக ஒரு கறுப்புப் பூனைப் படையை ஜெயலலிதாவுக்காக அமைத்துக் கொடுத்தார். அந்தக் கறுப்புப் பூனைப்படையின் தொந்தரவு தாங்காமல் தொண்டர்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள் அவதிப்பட்டனர். இதில் ஏற்கெனவே அவர்கள் புழுங்கிக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில், ஜெயலலிதா தனது புதிய அரசியல் ஆலோசகர் என்று எல்லா இடத்திலும் நடராஜனை அடையாளப்படுத்த ஆரம்பித்தார். அதுவரைக்கும், நாவலர், பண்ரூட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, சேலம் கண்ணன் போன்றவர்கள்  சசிகலாவை ஜெயலலிதாவின் உதவிக்கு வந்த பணிப்பெண் என்ற தோரணையில்தான் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், நடராஜன் ஜெயலலிதாவின் முழு அரசியல் ஆலோசகர் ஆனபோது, எல்லாம் தலைகீழானது. குறிப்பாக ஜானகி ஆட்சியை கவிழ்ப்பதற்கு ஜெ.அணியின் ஆலோசனைகள் நடந்தபோதே ஜெயலலிதா நடராஜனை தனது ஆலோசகராக காட்டத் தொடங்கி இருந்தார். ஜெ.அணியில் அரசியல் விவகாரக் குழு என்று ஒன்று இருந்தது. அதில் நாவலர், பண்ரூட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, எஸ்.டி.எஸ் போன்றவர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்கள் விவாதித்துத்தான் ஜெயலலிதாவுக்காக முடிவெடுப்பார்கள். அந்த ஆலோசனைக் கூட்டங்களில், ஜெயலலிதா நடராஜனையும் அழைத்து உட்கார வைக்கத் தொடங்கினார். நாவலரும் பண்ரூட்டியாரும் ஆலோசனைகள் சொல்லிக் கொண்டிருக்கும்போது, ஜெயலலிதா குறுக்கிட்டு, “நடராஜன் இதில் உங்கள் கருத்து என்ன?” என்று கேட்க ஆரம்பித்தார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, நடராஜனும் தனது ஆலோசனைகளை அள்ளித் தெளிக்க ஆரம்பித்தார். நாடாளுமன்றம், சட்டமன்றம் என்று இரண்டு களங்களிலும் தேசியத் தலைவர்கள், மாநிலத் தலைவர்களை எல்லாம், தங்கள் தர்க்கத்தாலும், வாதத்தாலும் தெறிக்கவிட்டவர்கள் நாவலரும் பண்ரூட்டியும். அவர்களுக்கு மத்தியில் அமர்ந்து  நடராஜன் ஆலோசனை சொல்வதை அவர்களால் பொறுக்க முடியவில்லை; சகிக்க முடியவில்லை. 

மன்னார்குடியின் மயக்கம் ஒரு புரியாத புதிர்!

போயஸ் கார்டன் வீட்டுக்குள் சசிகலாவை மீறி ஜெயலலிதா எதையும் செய்வதில்லை; பொதுக்கூட்ட மேடைகளில் திவாகரனின் பூனைப்படையை  மீறி ஜெயலலிதாவை யாரும் நெருங்க முடியவில்லை; அரசியல் விவாதங்கள் என்றால், அங்கும் இப்போது இடைஞ்சலுக்கு நடராஜன் வரத் தொடங்கிவிட்டார்; புதிதாக தினகரனும் போயஸ் கார்டனுக்குள் வலம் வருகிறார். சசிகலா குடும்பத்துக்கு ஜெயலலிதா இவ்வளவு இடம் கொடுப்பது ஏன்? என்பது சீனியர்களுக்கு புரியாத புதிராக இருந்தது. சசிகலா குடும்பம் போயஸ் கார்டன் வீட்டுக்குள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும், கட்சிக்குள் ஏன் தலையிடுகிறார்கள்? அதை ஏன் ஜெயலலிதா அனுமதிக்கிறார்? ஜெயலலிதாவுக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் பட்டியலைத்  தயாரிக்க இவர்கள் யார்? இந்தக் குடும்பத்தை வெளியேற்ற என்ன செய்யவது என்று சீனியர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டனர். 

சசிகலா-நடராஜன் என் நலம்விரும்பிகள்! - ஜெயலலிதா

சசிகலா, நடராஜன்சசிகலா-நடராஜனை வீட்டுவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் சொல்ல ஆரம்பித்தனர். இதை நால்வர் அணி சார்பில் ஜெயலலிதாவிடம் முதலில் சொன்னவர் திருநாவுக்கரசுதான். அவருக்கு ஜெயலலிதா அப்போது சொன்ன பதில், “சசிகலா-நடராஜன் என் குடும்ப நண்பர்கள்; என் நலம் விரும்பிகள். அவர்களைக் கட்சியில் விட்டு நீக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று முகத்தில் அடித்ததுபோல் சொன்னார்; திருநாவுக்கரசு மிரண்டுபோனார்.

நிலைமை இப்படி முற்றிய நிலையில், ஜெயலலிதா ‘நமது எம்.ஜி.ஆர்’ பத்திரிகையைத் தொடங்கினார். கட்சிக்காக அந்தப் பத்திரிகை என்று காரணம் சொல்லப்பட்டது. ஆனால், அதன் பங்குதாரர்களாக கட்சிக்காரர்கள் யாரும் இல்லை. ஜெயலலிதா, சசிகலா, நடராஜன், திவாகரன் பெயர்களை ‘நமது எம்.ஜி.ஆர்’ பங்குதாரர்கள் பட்டியலில் இருந்தது. கட்சிக்காக வசூல் செய்யப்பட்ட பணம், பத்திரிகையில் முடக்கப்பட்டது. கட்சியின் பொருளாளராக பெயருக்குத்தான் திருநாவுக்கரசு இருந்தார். ஆனால், கட்சியின் வரவு செலவு விபரங்கள் அவருக்குத் துளியும் தெரியாமல் மறைக்கப்பட்டது. ஜெயலலிதா பெயரில் நடராஜன் பணம் எடுத்துக் கொண்டே இருந்தார். பணத்தை நடராஜன், தனக்காக செலவு செய்தாரா? ஜெயலலிதாவுக்காக செலவு செய்தாரா? என்பது நடராஜனுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். இந்த விஷயங்களும் நால்வர் அணியிடம் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியது. 

நடராஜன் கொளுத்திய வெடிகள்!

கட்சியின் சீனியர்களுக்கும் மன்னார்குடி குடும்பத்துக்கும் ஏற்பட்ட மோதல் பனிப்போராகத் தொடர்ந்தது. நாவலர் நெடுஞ்செழியன், பண்ரூட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, அரங்கநாயகம் உள்ளிட்டவர்கள் தனி அணியாக செயல்பட்டனர். சசிகலா, நடராஜன், திவாகரன், தினகரன் மற்றொரு அணியாக செயல்பட்டனர். கட்சிக்குள் பிளவுக்கான வேர் விடத் தொடங்கியது. ஆனாலும் பிளவு நிகழ்ந்துவிடவில்லை. அதற்கு ஒரே காரணம், ஜா.அணியை தோற்கடித்து, ஜெ.அணி ஆட்சியைப் பிடிக்க வேண்டும். அனைவரும் அதிகாரத்தைச் சுவைக்க வேண்டும் என்பதே. ஆனால், நடராஜன் “ஆட்சியைப் பிடிப்போம்... அதிகாரத்தைச் சுவைப்போம்... அதில் பங்கு கேட்க யாரும் இருக்கக்கூடாது!” என்று களமிறங்கிச் செயல்பட்டார். வாய்ப்புக் கிடைக்கம் போது எல்லாம் வேட்டுக்களை வெடிக்க வைத்துக் கொண்டிருந்தார். “காங்கிரஸுடன் கூட்டணி வைத்தால்தான் நமக்கு வெற்றி” என்று நாவலரும் பண்ரூட்டியும் சொல்லிவந்தனர். அதையே நடராஜன் ஜெயலலிதாவிடம், “இவர்கள் இருவரும் உங்களைத் தனியேவிட்டுவிட்டு காங்கிரஸுடன் போய்விடுவார்கள்” என்று கொஞ்சம் மாற்றிச் சொன்னார். ஜெயலலிதா அதை நம்பினார். திருநாவுக்கரசு புதுக்கோட்டைக்கு தற்செயலாக சென்றிருந்தார். அதை நடராஜன் ஜெயலலிதாவிடம், “திருச்சியில் மூப்பனார் மாநாடு நடத்துகிறார்; அதற்கு ஆள் சேர்க்க திருநாவுக்கரசு போய் இருக்கிறார்" என்று போட்டு வைத்தார். அதையும் ஜெயலலிதா நம்பினார். சேலம் கண்ணன் தன் நண்பர்களிடம், “ஜெயலலிதாவிடம் எனக்கு செல்வாக்கு இருக்கிறது” என்று சொல்லிவந்தார். அதை நடராஜன் ஜெயலலிதாவிடம், “உங்களைப் பற்றிய அந்தரங்க விஷயங்களை சேலம் கண்ணன் பொது இடத்தில் பேசுகிறார்” என்று வத்தி வைத்தார். ஜெயலலிதா அதையும் நம்பினார். அதனால், அவர்கள் அனைவரையும் ஜெயலலிதா கொஞ்சம் தள்ளிவைக்க ஆரம்பித்தார். அப்படித் தள்ளிவைக்கப்பட்டவர்களால்,  ஜெயலலிதாவை நெருங்கி தங்கள் தரப்பு நியாயத்தைச் சொல்லவிடாமல் திவாகரனின் கறுப்புப் பூனைப்படை தடுத்து வைத்தது. 

ஜா.அணி-ஜெ.அணி வரிசையில் ‘நால்வர் அணி’

நாவலர், பண்ரூட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்

கட்சிக்குள் இருந்த இந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஜெ.அணியை இரண்டாகப் பிளந்தது ஒரு அரசியல் விவகாரக்குழுக் கூட்டம். அந்தக் கூட்டத்தை திடீரென்று ஜெயலலிதா, தலைமைக் கழகத்தில் கூட்டப்போவதாக அறிவித்தார். “அந்தக்கூட்டத்துக்கு இப்போது என்ன அவசியம்... தேர்தல்கூட அறிவிக்கப்படவில்லையே” என்று சீனியர்கள் அணி  கேள்வி எழுப்பியது.  அது ஜெயலலிதா காதில் கேட்கவில்லை போல... அவர் சொன்னதுபோல் கூட்டத்தை நடத்தினார். ஆனால், அதற்கு சீனியர்கள் யாரும் போகவில்லை. மறுநாளும் அந்தக் கூட்டத்தைக்கூட்டினார். அப்போதும் சீனியர்கள் வரவில்லை. உடனே அவர்களுக்கு விளக்கம் கேட்டு  நோட்டீஸ் அனுப்பினார். அது உச்சக்கட்டமாக சீனியர்களின் ஈகோவைக் கிண்டிவிட்டது. அவர்கள் தனியாகப் பிரிந்துபோய் புதிதாக ஒரு அணியை ஆரம்பித்தனர். நாவலர் நெடுஞ்செழியன், பண்ரூட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம், திருநாவுக்கரசு அதில் அங்கம் வகித்தனர். சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தைத் தாக்குப்பிடிக்காதவர்கள், தமிழகத்தில் ஆரம்பித்த அந்த அரசியல் அணி “அ.தி.மு.க நால்வர் அணி” என்று அழைக்கப்பட்டது. சசிகலா குடும்பத்தின் தொந்தரவுகள் தாங்காமல் உருவான இந்த அணியை, ஒருவகையில் சசிகலா உருவாக்கிய நால்வர் அணி என்றே எடுத்துக்கொள்ளலாம். 

கதை தொடரும்...

http://www.vikatan.com/news/coverstory/80628-four-member-team-constituted-by-sasikala-how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter---27.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மர்ம பங்களா.. பயங்கர மனிதர்கள் மற்றும் ஜெயலலிதா! சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 28

சசிகலா, ஜெயலலிதா

மர்மபங்களா... பயங்கர மனிதர்கள் மற்றும் ஜெயலலிதா!

“ஜெயலலிதா ஒரு மர்ம பங்களாவில் வசிக்கிறார். அங்கு ஜெயலலிதாவுடன் சில பயங்கர மனிதர்கள் இருக்கிறார்கள். அந்தப் பயங்கர மனிதர்களின் கட்டுப்பாட்டுக்குள்தான் ஜெயலலிதா இருக்கிறார்”. இந்த வார்த்தைகள், 1988-ம் ஆண்டு திருநாவுக்கரசு ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்ட வார்த்தைகள். அவர் குறிப்பிட்ட மர்ம பங்களா போயஸ் கார்டன், வேதா நிலையம். அவர் சொன்ன அந்த மர்ம மனிதர்கள் சசிகலா, நடராஜன், திவாகரன், தினகரன்.

திருநாவுகரசு, நெடுஞ்செழியன், பண்ருட்டி

ஜா.அணி-ஜெ.அணி என ஏற்கனவே இரண்டாகப் பிளந்துகிடந்த அ.தி.மு.கவுக்குள் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டது. ஜெ.அணி இரண்டாக உடைந்து, அதில் இருந்து நால்வர் அணி முளைத்தது. நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம், திருநாவுக்கரசு ஆகியோர் அந்த அணியின் நால்வராகத் திகழ்ந்தனர். ஜெயலலிதாவை நம்பி, ஜா.அணியை விட்டு ஜெ.அணிக்கு வந்த மாவட்டச் செயலாளர்கள், கட்சிக்காரர்களுக்கு ஜெ.அணிக்குள் ஏற்பட்ட இந்தப் பிளவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படியே போனால் கருணாநிதி அ.தி.மு.க-வை கபளீகரம் செய்துவிட்டு ஆட்சியைப் பிடித்துவிடுவார் என்று அஞ்சிக் கொண்டிருந்தனர்.

ஆனால், ஜெயலலிதா எதைப் பற்றியும் யோசித்ததாகத் தெரியவில்லை. இப்படிப்பட்ட இக்கட்டான நேரத்தில் பள்ளிக்கூடத்துப் பிள்ளையைப்போல்  ‘மெடிக்கல் லீவ்’ போட்டுவிட்டு 2 மாதங்கள் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். அதற்குமுன்பாக நாவலரிடம் மட்டும் நேரில் போய் ஜெயலலிதா சமாதானம் பேசினார். ஆனால், நாவலர் அதற்கு அசைந்து கொடுக்கவில்லை. “சமாதானம் பேசுவது என்றால், எங்கள் அணியில் அனைவரையும் வைத்துக் கொண்டு பேசுங்கள்” என்று சொல்லி ஜெயலலிதாவைத் திருப்பி அனுப்பிவிட்டார். திருநாவுக்கரசை ஆள் அனுப்பி சமாதானப்படுத்தினார் ஜெயலலிதா. ஆனால் அவரும் சமாதானத்துக்கு உடன்படவில்லை. மிகப் பிடிவாதமாக ஜெயலலிதாவின் சமாதானத்தை மறுத்துவிட்டார். அந்த அளவுக்கு நடராஜன்-சசிகலா குடும்பத்தால் திருநாவுக்கரசு தொல்லைகளையும் அவமானங்களையும் அனுபவித்திருந்தார். 

கே.கே.எஸ்.எஸ்.ஆர் எந்தப் பக்கம்?

நடராஜன் திருநாவுக்கரசை ஒருமுறை தொலைபேசியில் அழைத்து, கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை வாசித்தார். அதைக் கேட்ட திருநாவுக்கரசு, “கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு முக்கியமானதாக இல்லை. மிகச் சாதாரணமான பொறுப்பாக இருக்கிறது. நம் அணி  இக்கட்டான நேரத்தில் இருந்தபோது, ஜானகி அணியின் திட்டங்களை முறியடித்து நம்முடைய 33 எம்.எல்.ஏ-க்களையும் பம்பாய், டெல்லி என்று சுற்றுலா அழைத்துச் சென்றவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அதுபோக அவருடைய மில்லில் தங்கவைத்துத்தான் நம் அணி எம்.எல்.ஏ-க்களை பாதுகாத்தோம். அப்படிப்பட்டவருக்கு கட்சியின் மாநில அமைப்பாளர் பொறுப்பு அல்லது எம்.ஜி.ஆர் இளைஞரணி மாநிலச் செயலாளர் பொறுப்பைக் கொடுத்தால் அவர் இன்னும் உற்சாகமாக பணியாற்றுவார் எனக் குறிப்பிட்டார்.

அதைக்கேட்ட நடராஜன், நான் உங்களிடம் ஆலோசனை கேட்க இந்தப் பட்டியலை வாசிக்கவில்லை; உங்களுக்கு தகவல் சொல்வதற்காக மட்டுமே இந்தப் பட்டியலை வாசித்தேன்; உங்களுக்கு வாசித்துக் காட்டுவதற்கு முன்பே பத்திரிகைகளுக்கும் அனுப்பிவிட்டேன்” என்றார். நடராஜனின் அந்த வார்த்தைகளைக் கேட்ட திருநாவுக்கரசு துடித்துப் போனார். உடனே சில குறிப்பிட்ட பத்திரிகையாளர்களிடம் திருநாவுக்கரசு இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார். அது கே.கே.எஸ்.எஸ்.ஆரின் காதுகளை எட்டியிருந்தது. அதுதவிர, கே.கே.எஸ்.எஸ்.ஆரிடம் நடராஜனும் ஜெயலலிதாவும் நடந்து கொண்டவிதம் அவரையும் வேதனைக்கு உள்ளாக்கி இருந்தது. இந்த நேரத்தில் தன் இடத்தை உறுதிப்படுத்த நினைத்த கே.கே.எஸ்.எஸ்.ஆர் என்ன செய்வதென்று புரியாமல் தவித்தார்.

காலையில் நாவலர் நெடுஞ்செழியனையும், பண்ருட்டி ராமச்சந்திரனையும் சந்திப்பார்... மாலையில் ஜெயலலிதாவையும் நடராஜனையும் சந்திப்பார். அவ்வப்போது ஜெயலலிதாவைச் சந்தித்து சமாதானம் பேசினார். அதில் கோபப்பட்ட ஜெயலலிதா ஒரு நாள் “எனக்கு நீங்கள் அறிவுரை சொல்லத் தேவையில்லை... அந்த அணிக்குப் போவது என்றால் போய்த் தொலையுங்கள்” என்று கத்தினார். அதற்குமேல் பொறுக்கமுடியாத கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஜெயலலிதாவுக்கு முன்னாள் இருந்த நாற்காலியை உதைத்துத் தள்ளிவிட்டு போயஸ் கார்டனை விட்டு வெளியேறினார்.

நேராக விருதுநகர் கிளம்பிப்போனவர் பத்திரிகைகளில் ஒரு செய்தியை வரவழைத்தார். “கே.கே.எஸ்.எஸ்.ஆர்  பின்னால் 10 மாவட்டச் செயலாளர்கள் இருக்கிறார்கள். விரைவில் அவர்களோடு நால்வர் அணியில் போய் இணையப்போகிறார்” என்று வெளியான அந்தச் செய்தியைப் பார்த்ததும் ஜெயலலிதா கொஞ்சம் கதிகலங்கித்தான் போனார். திருநாவுக்கரசு இல்லாத நேரத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆரும் இல்லாமல் போனால் அது மிகப்பெரிய பின்னடைவு என்று யோசித்தவர் நடராஜனை சமாதானம் பேச விருதுநகருக்கு அனுப்பினார். ஜெயலலிதாவே விருதுநகர் ஜின்னிங் பேக்டரி தொலைபேசிக்குத் தொடர்பு கொண்டு கே.கே.எஸ்.எஸ்.ஆரை சமாதானப்படுத்தவும் செய்தார். 

கே.கே.எஸ்.எஸ்.ஆர், ராமராஜன், திருநாவுக்கரசு

கே.கே.எஸ்.எஸ்.ஆரை வீழ்த்திய நடராஜன்!

கே.கே.எஸ்.எஸ்.ஆரை சமாதானப்படுத்த விமானத்தில் சென்ற நடராஜன் மதுரையில் போய் இறங்கினார். அங்கிருந்து விருதுநகர் சென்று கே.கே.எஸ்.எஸ்.ஆரை சமாதானப்படுத்தினார். அந்த வேலையை மட்டும் முடித்துவிட்டு நடராஜன் சென்னை திரும்பிவிடவில்லை. கே.கே.எஸ்.எஸ்.ஆர் பின்னால் எந்தெந்த மாவட்டச் செயலாளர்கள் போவார்கள் என்று சந்தேகம் இருந்ததோ... அவர்களை எல்லாம் சந்தித்துப் பேசிவிட்டு வந்தார். ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் தென்னவன், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்டவர்களை ஜெ.அணியில் இருந்து யாரும் பிரிக்கமுடியாதபடி பார்த்துக் கொண்டார். அதன்பிறகு அங்கிருந்து கிளம்பியவர் ஜெயலலிதாவைச் சந்தித்து, “கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு பின்னால் பத்து மாவட்டச் செயலாளர்கள் இல்லை; மதுரை நவநீதனும், திருநெல்வேலி கருப்பசாமி பாண்டியன் மட்டும்தான் உள்ளனர்; அவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று ஜெயலலிதாவுக்கு தெம்பு கொடுத்தார்.

அதில் ஆறுதலடைந்த ஜெயலலிதா மீண்டும் தன்னைச் சந்திக்க வந்த கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு நேரம் ஒதுக்காமல் அவமானப்படுத்தினார். அதனால் மீண்டும் என்ன செய்வதென்று தெரியாமல் கே.கே.எஸ்.எஸ்.ஆர் முழித்துக் கொண்டிருந்தபோது அவரது முகத்தில் சிலர் ஆசிட் அடித்தனர். அந்த சிகிச்சைக்காக சென்னை அப்போலோவில் அட்மிட் ஆன கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு 6 மாதங்களுக்கு மேல் சிகிச்சை நடைபெற்றது. அதனால், அப்போதைக்கு அவர் எந்த அணி என்ற பிரச்னை முற்றுப்பெற்றது. 

கதை தொடரும்...

http://www.vikatan.com/news/coverstory/81747-mystery-bungalow-terrific-humans-and-jayalalithaa-how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter-28.html

Link to comment
Share on other sites

நடராசனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்! சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 29

சசிகலா

நடராஜனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்!

“நீங்கள் என்னைவிட்டு விலகிப்போய்விட்டால், நான் அரசியலைவிட்டே ஒதுங்கிவிடுவேன்” என நடராசனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். தன் அரசியல் வெற்றிகளுக்கு நடராஜனை எந்த அளவுக்கு ஜெயலலிதா நம்பி இருந்தார் என்பதற்கு அந்தக் கடிதமே சாட்சி. நடராசனின் அரசியல், சசிகலாவின் உபசரிப்புகள், திவாகரன் அளித்த பாதுகாப்புப்படை என மன்னார்குடி குடும்பம், ஜெயலலிதாவை ஒரு மகாராணியைப்போல் பார்த்துக்கொண்டது. மன்னார்குடி குடும்பத்தின் கண்காணிப்பும், கவனிப்புமே போதும் என்று முடிவுசெய்துவிட்ட ஜெயலலிதா, கட்சிக்குள் மற்றவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. 

உதிர்ந்த ரோமங்களுக்கு மதிப்பில்லை! 

ஜெயலலிதாஇந்த அரசியலை அறியாத கட்சியின் சீனியர்கள் சிலர், நால்வர் அணியோடு ஜெ.அணி சார்பில் சமாதானம் பேசினார்கள். அவர்களில் முக்கியமானவர் மதுரை நவநீதன். இவர் மதுரை மாநகரின் முன்னாள் மேயராக இருந்தவர். நாவலர் நெடுஞ்செழியனிடம் போய் சமாதானம் பேசினார். அதற்கு நாவலர், “கட்சிக்குள் சசிகலா-நடராஜன் குடும்பம் தலையிடக்கூடாது; கட்சியின் வரவு-செலவுக் கணக்குகளை சமர்பிக்கவேண்டும்; அரசியல் விவகாரக்குழுவுக்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும்; இந்த நிபந்தனைகளை ஜெயலலிதா ஏற்றால் சமாதானம் பேசலாம்” எனச்சொல்லி நவநீதனை அனுப்பினார். ‘நாம் ஏதோ சாதித்துவிட்டோம்’ என்ற மிதப்பில் நாவலரின் கோரிக்கைகளோடு போயஸ் கார்டனுக்குப் போனார் நவநீதன். அங்கு அவரால் கேட்டைத் தாண்டி உள்ளே போக முடியவில்லை. எவ்வளவு கெஞ்சியும் பூனைப்படை அவரை உள்ளேவிடவில்லை. அவர்களிடம் நாவலர் சொன்ன விஷயங்களைச் சொல்லி போராடிப்பார்த்தார் நவநீதன். எதற்கும் மசியவில்லை பூனைப்படை. அந்தப் படையை மீறி ஒன்றும் செய்யமுடியாத இயலாமையோடு சோர்ந்துபோய் மதுரைக்குத் திரும்பினார் நவநீதன். நவநீதன் திரும்பவரமாட்டார் என்பது நாவலருக்கு நன்றாகத் தெரியும். இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு தஞ்சாவூர் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஜெயலலிதா, “ஜெ.அணியில் இருந்து பிரிந்துபோன நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம், திருநாவுக்கரசு போன்றவர்கள் உதிர்ந்த ரோமங்கள். தலையில் இருந்துவிட்டு ரோமங்கள் உதிர்ந்துவிட்டால் அவற்றுக்கு எந்த மதிப்பும் இருக்காது. அதுபோலத்தான் அந்த நால்வர் அணிக்கும் இப்போது அரசியலில் எந்த மதிப்பும் இல்லை” என்று பேசினார். 

இறங்கிச் சென்று ஏறி மிதிக்கும் கொள்கை! 

ஜெயலலிதாவின் சுபாவம் எல்லோரும் அறிந்தது; அவர் யாரிடமும் இறங்கிப்போகமாட்டார்; ஆனால் அரசியலுக்காக சிலரிடம் கொஞ்சம் இறங்கிப்போக நேரிட்டது. ஜெயலலிதாவே அப்படி இறங்கிப்போக நினைத்த நேரத்தில், நடராஜன் ஜெயலலிதா இறங்காமல் பார்த்துக்கொண்டார். திருநாவுக்கரசு விஷயத்தில் இது அப்பட்டமாக வெளிப்பட்டது. நால்வர் அணிக்குப் போன திருநாவுக்கரசு மீண்டும் தனது அணிக்குத் திரும்பவேண்டும் என்று ஜெயலலிதா நினைத்தார். திருநாவுக்கரசாலும் ஜெ.அணியில் இருந்து விலகி வேறு அணியில் இருக்கமுடியவில்லை. அதனால், அவரும் சமாதானத்தையே விரும்பினார். ஜெயலலிதா சார்பில் ஜெகதீசன் என்பவர் திருநாவுக்கரசிடம் சமாதானம் பேசினார். திருநாவுக்கரசு சேலத்தில் இருந்தபோது, ஜெயலலிதாவே தொலைபேசியில் அழைத்துக் கனிவாகப் பேசி மீண்டும் தன் அணிக்கு வருமாறு அழைத்தார். அதையடுத்து ஒரு முறை போயஸ் தோட்டத்துக்கு இரவு 7 மணிக்குமேல் நேரில் வந்த திருநாவுக்கரசு ஜெயலலிதாவிடம் சமாதானம் ஆனார். அதன்பிறகு வெள்ளிக்கிழமை மீண்டும் ஜெயலலிதா அணிக்கு வந்து சேர்ந்தார். அவர் வந்து சேர்ந்ததும் ஜெயலலிதா பெயரில் நடராஜன் ஒரு அறிக்கையை பத்திரிகைகளுக்கு அனுப்பினார். அதில் “என்னைக் கடுமையாக விமர்சனம் செய்ததற்காக திருநாவுக்கரசு நேரிலும் எழுத்துப்பூர்வமாகவும் மன்னிப்பு கேட்டார். அவர் மன்னிப்பை ஏற்று நான் அவரைக் கட்சியில் சேர்த்துக் கொண்டேன்” என்று  இருந்தது. அது அவமானமாக இருந்தாலும் திருநாவுக்கரசு பெரிதுபடுத்தவில்லை.

ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட கே.கே.எஸ்.எஸ்.ஆர்

“நம்முடைய பெயரில் நடராஜன்தான் இந்த அறிக்கையைக் கொடுத்திருக்கிறார்” என்பது ஜெயலலிதாவுக்குத் தெரியும். ‘நடராஜன் செய்தால்... சரியாகத்தான் இருக்கும்’ என்று நினைத்து அவரும் அதைக் கண்டுகொள்ளவில்லை. கே.கே.எஸ்.எஸ்.ஆரை சமாதானப்படுத்தி சென்னைக்கு வரவழைத்துவிட்டு, அதன்பிறகு அவருக்கு நேரம் கொடுக்காமல் அவரை அவமானப்படுத்தினார். ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆரை கடைசிவரை ஜெயலலிதா போய்ப் பார்க்கவில்லை. அதுபற்றி பலரும் கேள்வி எழுப்பியபோது, ‘அப்போலோ பி.சி.ரெட்டிக்கும் ஜெயலலிதாவுக்கும் கொஞ்சம் பிரச்னை. அதனால்தான் அந்த மருத்துவமனைக்கு அவர் போகவில்லை’ என்று நடராசன் ஒரு தகவலைப் பரப்பினார். ஓரிருமுறை நடராசன் மட்டும் கே.கே.எஸ்.எஸ்.ஆரைப் போய்ப் பார்த்துவிட்டு வந்து, அவருடைய மருத்துவச்செலவுகளை ஜெயலலிதாதான் செய்கிறார் என்று செய்தியைப் பரப்பிவிட்டார். ஆனால், உண்மையில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் குடும்பம்தான் மருத்துவச் செலவுகளைப் பார்த்துக் கொண்டது. 
எம்.பி.சுப்பிரமணியன் மீண்டும் ஜெ.அணிக்குத் திரும்பினார். அவர் தனது ஆதரவாளர்களுடன் திரளாக போயஸ் கார்டன் வந்தார். ஆனால், வீட்டுக்குள் எம்.பி.எஸ்-க்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டது. அதுவும் உள்ளே போனதும் ஜெயலலிதா பக்கத்தில் நிறுத்தி, இரண்டே நொடியில் ஒரு புகைப்படத்தை எடுத்துவிட்டு வெளியில் அனுப்பிவிட்டனர். தலைமைக் கழகத்தில் போய்ப் பார்க்கலாம் என்றால், அங்கு ஜெயலலிதா வந்தே பல வருடங்கள் ஆகிவிட்டது என்றனர்.  சேலம் மாவட்டத்தில் சேலம் கண்ணனுக்கு இணையாக நாச்சிமுத்துவையும் ஒரு மாவட்டச் செயலாளராக நியமித்து கண்ணனை அவமானப்படுத்தினார். இதில் நொந்துபோன கண்ணன் ஒரே மேடையில் ஜெயலலிதாவுடன் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தார். திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் பவுன்குமாரை நீக்கிவிட்டு, அவருக்கு பதில் கே.பி.கண்ணனை நியமித்தார். அதன்பிறகு என்ன நினைத்தாரோ பவுன்குமாரை போயஸ் தோட்டத்துக்கு வரச் சொன்னார் ஜெயலலிதா. போயஸ் கார்டன் வந்தவரை வீட்டுக்குள் விடாமல் பார்த்துக் கொண்டார் நடராஜன். அவரும் திரும்பிப்போய்விட்டார். இப்படிப்பட்ட அவமதிப்புகள் ஒருபக்கம்தொடர்ந்து கொண்டே இருந்தன. கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் அழைத்து அவமானப்படுத்தும் வேலையையும் ஜெயலலிதா செய்தார்.

ஜெயலலிதாவை அலையவிட்ட டெல்லி!

ஜெயலலிதாதமிழ்நாட்டில் கட்சி சீனியர்களை இவ்வளவு அவமானப்படுத்திய ஜெயலலிதாவை டெல்லி தொடர்ந்து அவமானப்படுத்திக்கொண்டே இருந்தது. தேர்தல் கூட்டணிக்காக பிரதமர் ராஜீவ் காந்தியை சந்திக்க எவ்வளவோ முயன்றார் ஜெயலலிதா. யார் யாரையோ தூது அனுப்பினார். ஆனால், சந்திக்க வாய்ப்பே கிடைக்கவில்லை. ஓரிருமுறை தொலைபேசியில் ராஜீவ் காந்திக்கு பேச முயன்றார். அப்போது ராஜீவ் காந்திக்கு பெர்சனர் செக்ரட்டரியாக இருந்த ஷீலா தீட்சித், “பிரதமரிடம் நீங்கள் நினைத்தபோது எல்லாம் தொலைபேசியில் பேச முடியாது. முறையாக கடிதம் கொடுத்து, நேரில் வந்து சந்திக்கப்பாருங்கள்” என்று கறாராகச் சொல்லிவிட்டார். தேர்தல் தேதி நெருங்கிக்கொண்டிருந்தது. ஆனால், கூட்டணிக்கு கட்சிகள் யாரும் வரவில்லை. அதனால், ஜெயலலிதா என்னசெய்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்தார். ஜெயலலிதாவை அமைதியாக இருக்க வைத்துவிட்டு அதற்காக ஒரு ஆட்டத்தை நடராஜன் ஆடினார். அந்த ஆட்டத்தில், தமிழக இ.காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஜானகி அணி, நால்வர் அணி எல்லாம் தெறித்தன. தமிழகத்துக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் பூட்டாசிங்கும், தமிழகத்தில் ராஜீவ் காந்தி கலந்து கொண்ட காங்கிரஸ் பேரணியும்கூட, நடராஜனின் ஆட்டத்தில் கலகலத்துப் போனது.

கதை தொடரும்.

http://www.vikatan.com/news/coverstory/81984-jayalalithaa-wrote-a-letter-to-natarajan-how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter---29.html

Link to comment
Share on other sites

ஒரு இலை ஜா... மறு இலை ஜெ... நடராசனின் போஸ்டர்! - சசிகலா ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 30

ஜெயலலிதா, சசிகலா

ராஜீவ்காந்தி அனுப்பிய பூட்டாசிங்!

எம்.ஜி.ஆர் உருவாக்கிய அ.தி.மு.க என்ற அரசியல் கட்சி ஜா.அணி-ஜெ. அணி என ஏற்கெனவே இரண்டாக உடைந்துகிடந்தது. அதுபோதாது என்று சசிகலா, நடராஜன், திவாகரன், தினகரன் அட்ராசிட்டியில், ஜெ.அணியில் இருந்து நால்வர் அணி என மற்றொரு அணியும் பிய்த்துக்கொண்டு போனது. இவற்றில் எந்த அணியோடும் கூட்டணி வைப்பது லாபமல்ல என்று இ.காங்கிரஸ் முடிவு செய்துவிட்டது. “ஒருவேளை இந்த அணிகளில் எந்த அணியுடன் கூட்டணி வைத்தாலும் முதலமைச்சர் பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்குத்தான்; அதற்கேற்ப மூன்றில் இரண்டு பங்கு இடங்களை விட்டுத்தரும் அணியோடு மட்டுமே கூட்டணி” என்று இறுதி முடிவை எடுத்து வைத்திருந்தது காங்கிரஸ் கட்சி.

ராஜீவ் காந்தி-பூட்டாசிங்

தமிழகத்தில் பறிபோன ஆட்சி அதிகாரத்தை இந்தமுறை எப்படியாவது மீண்டும் கைப்பற்றிவிட வேண்டுமென துடித்தது அந்தக் கட்சி. இரவில் டெல்லி செல்லும் பிரதமர் ராஜீவ் காந்தி, காலையில் தமிழகத்தில்தான் கண் விழித்தார். அந்தளவுக்கு அவர் அடிக்கடி தமிழகத்தில் சோனியா காந்தியோடு சேர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்கிடையில் ஜெயலலிதா பிரதமர் ராஜீவ் காந்தியைச் சந்திக்க பலவழிகளில் முயன்றார். ஆனால், முடியவில்லை. முன்னாள் அமைச்சர் ஹண்டேவே டெல்லிக்கு அனுப்பிப்பார்த்தார். டெல்லிபோன ஹண்டே பிரதமரைப் பார்க்காமல் வெறும் கையோடு திரும்பினார். கடைசியில் ராஜீவ் காந்தியே ஒரு முடிவுக்கு வந்தார். காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் அமைவதற்கு ஏற்ப உடன்பாட்டுக்கு அ.தி.மு.கவில் எந்த அணியாவது ஒத்துக்கொள்கிறதா எனப் பார்த்துக் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த, அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் பூட்டாசிங்கை தமிழகம் அனுப்பிவைத்தார். திரிபுராவில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்திய பூட்டாசிங் தமிழகம் வந்தார். 

நடராசனிடம் பூட்டாசிங் போட்ட சவால்!
 
நடராஜன்ஒருநாள் ஜானகி அணியோடு பேச்சுவார்த்தை நடத்தினார்; மறுநாள் நால்வர் அணியில் நெடுஞ்செழியனைப் பார்த்தார்; கடைசியில் ஜெ.அணி சார்பாக நடராஜனைப் பார்த்தார். “50 சீட்களை எடுத்துக் கொள்ளுங்கள் மற்றவற்றை எங்களிடம் விட்டுவிடுங்கள்... அல்லது 85 சீட்களை காங்கிரஸ் கட்சிக்குக் கொடுங்கள்எ” எனக் கேட்டார் பூட்டாசிங். நடராஜன் சிரித்துக்கொண்டே, “காங்கிரஸுக்கு 85 சீட்களைக் கொடுப்பதற்கு பதில், அவற்றை ஜானகி அணிக்கே கொடுத்து அ.தி.மு.க ஆட்சியை அமைத்துவிடுவோம்” என்றார். எரிச்சலான பூட்டாசிங், “முடியுமா உங்களால்? நீங்கள் இரண்டு அணியும் சேரவே முடியாது. நீங்களே சேர நினைத்தாலும் நாங்கள் விடமாட்டேம்” என்றார்.

அதற்கும் அலட்டிக்கொள்ளாத நடராஜன், “ஜா.அணி எப்போதும் எங்களுடன் இணையத் தயாராகத்தான் இருக்கிறார்கள். நாங்கள்தான் பிடிகொடுக்காமல் இருக்கிறோம்” என்றார். நீங்கள் அதை நிரூபித்துவிட்டால், உங்களுடைய நிபந்தனைகளுக்கு நான் டெல்லியைச் சம்மதிக்கவைக்கிறேன் என்றார். பூட்டாசிங்குக்கு என்ன திட்டம் என்றால், ஒன்றுபட்ட அ.தி.மு.க என்றால் எந்த நிபந்தனைக்கும் நான் சம்மதிக்கலாம் என்று ராஜீவ் காந்தி சொல்லியிருந்தார்.

அதனால், இரண்டு அணிகளும் இணையட்டும். இல்லையென்றால், நாம் கேட்கும் சீட்டைக் கொடுக்கட்டும் என்பது பூட்டாசிங்கின் எண்ணம். அதைக்கேட்ட நடராஜன், இப்போதே பாருங்கள் என்று சொல்லிவிட்டு, அங்கிருந்தே தொலைபேசியைச் சுழற்றி மதுசூதனனைப் பிடித்தார். அவரிடம் இரட்டை இலையைப்போட்டு போஸ்டர் அடிக்க உத்தரவிட்டார். இரட்டை இலைகளில் ஒரு இலையில் ஜானகி படம்,  மற்றொரு இலையில் ஜெயலலிதா படத்தைப்போட்டு, இந்த இலையில் வாக்களித்தால் எம்.ஜி.ஆர் ஆட்சி மலரும் என்ற வாசகங்களையும் போடச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். நடராஜன் சொன்னதுபோல் மதுசூதனன் போஸ்டர்களை ரெடிசெய்து சென்னையிலும், தமிழகத்தில் முக்கியமான பகுதிகளிலும் ஒட்டினார். போஸ்டர் உபயம் : உக்கம்சந்த், போஸ்டர்களை சென்னையில் ஒட்டியவர் : பல்லாவரம் அடைக்கலம், போஸ்டர் ஐடியா : ம.நடராசன். 

ஒரு இலையில் ஜானகி... மறு இலையில் ஜெயலலிதா!

ஜெயலலிதா1988 நவம்பர் 28-ம் தேதி. சென்னையில் காங்கிரஸ் கட்சியின் பிரமாண்ட பேரணி ஏற்பாடாகி இருந்தது. பேரணியைக் காண எழுந்த மக்களுக்கு அதைவிடப் பெரிய ஆச்சர்யமாக அமைந்தது நடராசன் திட்டமிட்ட இரட்டை இலைப் போஸ்டர்தான். ஒரு இலையில் ஜானகி... ஒரு இலையில் ஜெயலலிதா சிரித்துக்கொண்டிருந்தனர். தமிழகம் முழுவதும் அந்த விஷயம் பரபரப்பானது. அதையொட்டி, ஜ.-ஜெ.அணி இணைப்புக்கான வேலைகளே தொடங்கின.

நடராஜன் கே.கே.எஸ்.எஸ்.ஆரிடம் சில விஷயங்களைச் சொன்னார். கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஜா. அணியில் முத்துச்சாமியைப் பிடித்து சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். முத்துச்சாமி ஜானகியின் காதுகளுக்கு இந்த விஷயங்களைக் கொண்டுபோனார். சேலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஜானகி, உடல்நலக்குறைவு என்று காரணம் சொல்லிவிட்டு அவசரமாக சென்னை திரும்பினார். திருநெல்வேலியில் சுற்றுப்பயணத்தில் இருந்த ஜெயலலிதாவைச் சந்தித்து நடராஜன் சில விஷயங்களைச் சொன்னார். நடராசன் சொன்னதற்கு ஜெயலலிதாவும் ஒத்துக்கொண்டார். இரு அணிகளின் இணைப்புக்கு உடன்பாடுகள் தயாராயின.

ஜானகி முதலமைச்சர், ஜெயலலிதா கழகப் பொதுச் செயலாளர். அல்லது, ஜானகி முதலமைச்சர், கழகப்பொதுச் செயலாளர். ஜெயலலிதா துணை முதலமைச்சர், கழகத்துக்கு துணைப்பொதுச் செயலாளர் என்று முடிவானது. இந்த உடன்பாட்டை ஜானகி தரப்பு ஏற்றுக் கொண்டது. ஜெ.தரப்பும் ஏற்றுக்கொள்வது போல் பாவலா காட்டியது. தென்காசிப் பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, ஜா.-ஜெ.அணிகள் இணைந்து பணியாற்றவேண்டும் என்ற தொனியில் பேசினார். திருநெல்வேலியில் வைத்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜெயலலிதா, நீங்களும் ஜானகியும் இணையவேண்டும் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளனவே என்ற நிருபர்களின் கேள்விக்கு இணையலாம் என்று பதில் சொன்னார். 

ஜெயலலிதாவின் சுயரூபம் எனக்குத் தெரியும்! - ஆர்.எம்.வீ

ஜெயலலிதா

ஜெயலலிதா இவ்வளவு இறங்கிவந்ததை உணர்ந்த ஜானகி அதிரடியாக இறங்கிவந்தார். கட்சி நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்டார். அனைவரும் இரு அணிகளின் இணைப்புக்குப் பச்சைக்கொடி காட்டினார்கள். ஜானகி கறாராக எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. முதலில் இணைவோம். பிறகு பேசிக்கொள்வோம் என்று சொல்லிவிட்டார். அதையடுத்து உயர் மட்டக்குழுக்கூட்டத்தைக் கூட்டினார். அதில் ஆர்.எம்.வீரப்பன் மட்டும் ஜெ.அணியோடு இணைவது என்ற முடிவுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். காங்கிரஸை மிரட்ட ஜெயலலிதா போடும் நாடகம் இது. நம் அணியிலிருந்து யாராவது ஒருவர்போய் ஜெயலலிதாவுடன் நேரில் பேசிப்பாருங்கள்... அப்போது தெரியும், அவருடைய உண்மையான சுயரூபம் என்னவென்று எனச் சொல்லிவிட்டு அந்தக் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

ஜானகியும் அவரது அணியும் இணைப்பு உறுதி என்ற நிலையில் செயல்பட, ஜெ.அணி சார்பில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சுற்றிச் சுழன்று உற்சாகமாக வேலை பார்த்தார். இரண்டு அணிகளும் சேர்ந்துவிட்டால், எங்களுக்கு இரண்டு பங்கு இடங்களை விட்டுக்கொடுத்து இ.காங்கிரஸ் எங்களோடு உடன்பாடு காணும் என்று பத்திரிகைகளுக்கு எல்லாம் பேட்டி கொடுத்தார் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ஜானகி அம்மாளும் அவற்றை எல்லாம் அப்படியே நம்பினார். நம் அணியில் இருப்பவர்கள் யாரும் இணைப்புக்கு எதிராக எந்தக் கருத்தையும் வெளியில் பேசக்கூடாது என்று கடும் உத்தரவு போட்டார். இந்த நேரத்தில் பூட்டாசிங் மட்டுமல்ல, தமிழக காங்கிரஸும் உண்மையில் மிரண்டுதான் போனது.

ஆட்டத்தைக் கலைத்த நடராசன்... அவமானப்பட்ட கே.கே.எஸ்.எஸ்.ஆர்...

ஜெயலலிதாதிடீரென நடராசனிடம் இருந்து, போதும்... வேஷத்தைக் கலையுங்கள் என்ற ரீதியில் உத்தரவு வந்தது. “ஜெயலலிதாவைத் தலைவியாகவும், முதல்வராகவும் ஏற்றால்தான் இணைப்பு... என்று எஸ்.டி.எஸ் மூலம் அறிக்கை வெளியிட்டார் நடராசன். ஜெ.அணியும் திடீர் பொதுக்குழுவைக்கூட்டியது. இணைப்பு பற்றி ஏதோ சொல்லப்போகிறது என்று எதிர்பார்க்க, நானே முதலமைச்சர்.... நானே தலைவி... இதனை ஏற்பவர்களுடனே கூட்டணி என்று கொக்கரித்தார் ஜெயலலிதா.

அதில், கே.கே.எஸ்.எஸ்.ஆரின் மூக்கு உடைபட்டது; ஜானகி அம்மாள் ஏமாந்துபோனார்; பூட்டாசிங் மிரண்டுபோனார். தமிழகத்தில் எந்த அணியும் நமக்கு வேலைக்காகாது... நம்மிடமே இவ்வளவு ஆட்டம் காட்டுகிறார்களே! என்று நினைத்த அவர் ராஜீவ் காந்தியிடம் நடந்தவற்றை எல்லாம் புட்டுப்புட்டு வைத்தார். தமிழகத்தில் யாருடனும் கூட்டணி இல்லை என்று காங்கிரஸ் அறிவித்தது.

இந்த விவகாரத்தில் அதிகம் நொந்துபோய் இருந்தவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்தான். இந்த அவமானத்தைப் பொறுக்கமுடியாத அவர் நேராக போயஸ் கார்டன் போனார். ஜெயலலிதாவைச் சந்தித்தவர் கோபமாக, “உங்கள் அட்வைசர் நடராஜன் சொல்லித்தானே, இரண்டு அணிகளுக்கான இணைப்பு வேலைகள் எல்லாவற்றையும் நான் முன்னால் நின்று செய்தேன். அப்போது எல்லாம் அமைதியாக இருந்துவிட்டு  திடீரென ஏன் இப்படி நடந்துகொண்டீர்கள்?” என்று வெடித்துள்ளார்.

கே.கே.எஸ்.எஸ்.ஆரைக் கூர்மையாகப் பார்த்த ஜெயலலிதா, “அப்படியானால் ஜா. அணியோடு இணைவதில் உங்களுக்கு ஏன் அவ்வளவு விருப்பம் என்று நக்கலாகக் கூறிவிட்டு, இரண்டு அணிகளும் இணைந்துவிட்டால் நீங்கள் எல்லாம் அந்த அம்மா பின்னால் போய்விடுவீர்கள். அப்புறம் என் கதி என்ன? ஒரு வருடமாக ஊர் ஊராகச் சுற்றி அலைந்துவிட்டு கடைசியில்  தனியாக நிற்பதுதான் என் கதியா? உங்களையும், காங்கிரஸ் கட்சியையும், அந்த ஜானகி அணியையும் ஆழம்பார்க்கத்தான் இணைப்பு என்று ‘சும்மா‘ சொல்லிப் பார்த்தோம் என்றாராம் ஜெயலலிதா!

கதை தொடரும்!

http://www.vikatan.com/news/coverstory/82237-natarajans-master-plan-posters-how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter---30.html

Link to comment
Share on other sites

நடராசன் நாடகம்... சீறிய கே.கே.எஸ்.எஸ்.ஆர்... கிறுகிறுத்த தா.பாண்டியன், சசிகலா! ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 31

சசிகலா

“ஒரு இலையில் ஜானகி, மறு இலையில் ஜெயலலிதா... இந்த இலை மலர்ந்தால் எம்.ஜி.ஆர் ஆட்சி மலரும் என்ற வாசகம்...”என்று போட்டு நடராசன் அடித்த போஸ்டரில் தமிழகம் குழம்பிப்போனது; இ.காங்கிரஸ் திகைத்துப்போனது. அதோடு ஜெ.அணியோடும் கூட்டணி இல்லை... ஜா.அணியோடும் கூட்டணி இல்லை என்று  இ.காங்கிரஸ் திட்டவட்டமாக அறிவித்தது. இரண்டு அணியில் உள்ளவர்களும் சோர்ந்து போனார்கள். அந்த அறிவிப்பு வெளியானதற்கு மறுநாள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்  போயஸ் கார்டன் போனார். நடராஜன் அங்கு இருந்தார். 

நடராசன் நாடகம்... சீறிய கே.கே.எஸ்.எஸ்.ஆர்!

நடராசன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்

கே.கே.எஸ்.எஸ்.ஆரைப் பார்த்த நடராசன், “எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை; தனித்துத்தான் போட்டி என்று அறிவித்தபின்னர் கோட்டையிலிருந்து ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் எல்லாம் போன் செய்தார்கள்! அம்மாவுக்கு ஒரே பாராட்டு மழை! அதோடு இன்னொரு செய்தி... நாம் தனித்துப் போட்டியிடுவதால் பிரபல ஆங்கில நாளிதழ் நம்மை ஆதரிக்க முன்வந்துள்ளது” என்றார். அதுவரை பொறுமையாக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. நடராசனிடம், “யோவ்! காரியாப்பட்டிக்காரர்களும் சத்திரப்பட்டிகாரர்களும் இங்கிலீஷ் பேப்பர் பார்த்துத்தான் ஓட்டுப்போடப் போகிறீர்களா? என்று சீறினார். தொடர்ந்து... “அஞ்சு நாளைக்கு முன்னாலே நீ என்ன சொன்னே? காங்கிரஸ் கட்சியோடு உடன்பாடு ஏற்பட்டிருச்சு, அது மூப்பனாருக்கே தெரியாது.

டெல்லியிலிருந்து அம்மாகூட நேரடியா பேசிட்டாங்கன்னு சொன்னியா இல்லையா? இப்ப காங்கிரஸோடு ஆதரவு இல்ல... இங்கிலீஷ் பேப்பர் ஆதரவு குடுத்திருக்குன்னு சொல்ற...வயித்தெரிச்சலைக் கிளப்பதா... யோவ்... இதுவரை நீ என்னென்ன சொன்னேனு யோசிச்சுப்பாரு... பிரைம் மினிஸ்டர் ஆபிஸோடு உனக்கு காண்டக்ட்னு சொன்ன... தினமும் பிரைம் மினிஸ்டர் ஆபிஸுக்குப் பேசுறதா சொன்ன... ஒரு நாளைக்கு மூன்று முறை உன்னோட சிதம்பரம் பேசுறார்ன்னு சொன்னே! இப்பத்தான் பிரைம் மினிஸ்டரோடு போனில் பேசிவிட்டு வர்ரேன்னு சொன்ன.. அம்மாவுக்கு டெல்லியில இருந்து அழைப்பு வரப்போகுது பாருங்கன்னு சொன்ன... ஒரு நாளா... ரெண்டு நாளா... பத்து மாசமா இந்தக் கதைகளச் சொன்னே... இப்ப என்னடான்னா கோட்டையில இருந்து பாராட்டுனாங்க.... இங்கிலீஷ் பேப்பர் ஆதரிக்கப்போகுதுன்னு சொல்ற... வயித்தெரிச்சலைக் கிளப்பாதய்யா... என்று கத்திவிட்டு, “இப்ப அம்மாவைப் பாக்கனும் முடியுமா?” என கோபத்தோடு கேட்டார். நடராஜன் விடுவாரா? ‘அம்மா ரெஸ்ட்’ என்று சொல்ல கே.கே.எஸ்.எஸ்.ஆர் வெளியேறினார். 

நடராசன் நடத்திய வசூல்! 

கே.கே.எஸ்.எஸ்.ஆர்ஜெயலலிதா அணியில் இப்போது நால்வர் அணி இல்லை. இ.காங்கிரஸோடு கூட்டணி இல்லை; ஜா.அணியியோடு இணைப்பு இல்லை. ஆனாலும் அந்த அணியில் போட்டியிட சீட் கேட்டு பலரும் விண்ணப்பித்தனர். அதற்கான விண்ணப்பத்தின் விலை மட்டும் ஆயிரம் ரூபாய்.

இருப்பதே 234 தொகுதிகள். ஆனால், தேர்தலில் போட்யிட சீட் கேட்டு ஜெ.அணியில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியது. “நீங்கள் போய்விட்டால், நான் அரசியலைவிட்டே போய்விடுவேன்” என்று ஜெயலலிதா, நடராசனுக்கு எழுதிய கடிதத்தை அவர் கட்சிக்காரர்களிடம் வலியப்போய் காட்டிக்கொண்டிருந்தார். அதனால், நடராசனை நம்பினால்தான் அம்மாவை அணுகமுடியும் என நினைத்தவர்கள் நடராசனை கொத்துக் கொத்தாய் நாடிவந்தனர். அவர்களிடம் நடராசனும், எஸ்.டி.எஸ்ஸும் நேர்காணல் நடத்தினார். 

“உங்கள் தொகுதிக்கு மட்டும் 5 லட்சம் செலவு செய்ய வேண்டும்; முடியுமா?

அதுபோக தனியாக கட்சி நிதி கொடுக்க வேண்டும்; முடியுமா?

இப்போது உடனடியாக 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்; முடியுமா?

அதை ஒருவாரத்தில் தலைமைக்கழகத்தில் கொண்டுவந்து கொடுக்க வேண்டும்; முடியுமா? என்ற ரீதியில் நடந்தது அந்த நேர்காணல். 

இப்படி நடந்தது அந்த நேர்காணல். இந்தக் கோரிக்கைகளை ஒத்துக்கொள்ள உண்மையான தொண்டனால் முடியுமா? நிச்சயம் முடியவில்லை. மாறாக, சாராய ஆலை அதிபர்கள், கந்துவட்டிக்காரர்கள், பிராந்திக்கடை முதலாளிகள், வியாபாரிகள் வரிசைகட்டி நின்றனர். அவர்கள் மூலம் நடராசன், சசிகலாவின் கல்லா நிறைந்தது.

தா.பாண்டியனுடன் நடராசன் போட்ட ‘டீல்’!

தா.பாண்டியன்ஜெ.அணியோடு எந்தக் கட்சியும் கூட்டணி இல்லை என்று முடிவானலும், காங்கிரஸ் கட்சியோடு எப்படியாவது கூட்டணி வைத்துவிட வேண்டும் என்று ஜெயலலிதா முயன்றார். அதற்கு உதவிட சரியான நபர் யார் என்று தேடியபோது, தா.பாண்டியன் பெயர் அடிபட்டது. எங்கெங்கோ தேடி தா.பாண்டியனைப் பிடித்தார் நடராசன். அப்போதுதான்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்ற புதிய கட்சி உருவாகி இருந்தது.

தா.பாண்டியன் ஜெயலலிதாவைச் சந்திக்க, மூப்பனாரிடம் அனுமதிபெற்று போயஸ் தோட்டத்துக்கு வந்தார். அங்கு ஜெயலலிதாவைச் சந்தித்த அவர்  “முதலில் சீட்களைப் பிரித்துக் கொள்வோம்; முதலமைச்சர் யார் என்பதெல்லாம் பிறகு பேசிக்கொள்ளலாம்; நான் காங்கிரஸோடு கூட்டணிக்கு ஏற்பாடு செய்கிறேன்” என்றார்.

அப்போது அங்கிருந்த ஜெயலலிதா, “யார் முதலமைச்சர் என்பதை பிறகு பேசுவதா? நான்தான் முதலமைச்சர். அதில் எந்த மாற்றமும் இல்லையே” என்றார். அதோடு தா.பாண்டியன் திகைத்துப் போனார். அவர் நடத்திய கூட்டணிப்பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. ஜெயலலிதாவைச் சந்தித்துவிட்டு வெளியில் வந்த தா.பாண்டியனை நடராசன் தனியாக அழைத்து ஒரு ‘டீல்’ போட்டார். “உங்களுக்கு 25 சீட்களை ஒதுக்கித்தர நான் ஏற்பாடு செய்கிறேன்; உங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் தேர்தல் செலவுக்கு நாங்கள் பணம் கேட்கமாட்டோம்; நீங்கள் எங்கள் அணிக்கு வந்துவிடுங்கள்” என்றார். தா.பாண்டியனுக்கு அப்போது ஏற்பட்ட தலைசுற்றல் பல நாள்களுக்கு நிற்கவே இல்லை. “உங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் தேர்தல் செலவுக்கு நாங்கள் பணம் கேட்கமாட்டோம்” என்று நடராசன் சொன்னதற்கு என்ன அர்த்தம் என்பதை இன்றுவரை தா.பாண்டியனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. 

கதை தொடரும்...

http://www.vikatan.com/news/coverstory/82372-natarajans-drama-how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter---31.html

Link to comment
Share on other sites

சசிகலா-சோதிடர்-சேவல் சின்னம்! சசிகலா,ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 32

சசிகலா, ஜெயலலிதா

ஜெ.அணி-ஜா.அணி இணைப்பு நடக்கவில்லை; இ.காங்கிரஸோடு ஜெ.அணி கூட்டணி அமைக்க முடியவில்லை; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், தி.மு.க கூட்டணி அமைந்துவிட்டது. இப்போது ஜெ.அணியோடு கூட்டணி அமைக்க தா.பாண்டியன் பிரிந்துவந்து புதிதாகத் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான் இருந்தது. அந்தக் கட்சியோடு ஒரு வழியாக ஜெ.அணி கூட்டணி அமைத்துக் கொண்டது. தேர்தல் வேலைகள் பரபரப்பாக நடந்தன. சசிகலா எப்போதும் ஜெயலலிதாவுடனே இருந்தார். நடராஜன் பரபரப்பாக சுற்றிக் கொண்டிருந்தார். 

நாவலர், நவநீதன், சேலம் கண்ணனை காலி செய்தேன்: நடராசன்

நடராசன்

1989 தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ஜெ. அணியில் சீட் கிடைக்காதவர்கள் நாள்தோறும் போயஸ் கார்டன் வந்து புலம்பிக் கொண்டிருந்தனர். சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு நாள் திடீரென அவர்களிடம் நடராஜன் மிகப்பெரிய உரையாற்றினார். போயஸ் கார்டன் வீட்டின் முன் குவிந்த தொண்டர்கள் சேலம் ஓமலூரில் வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று தகராறில் ஈடுபட்டனர். அவர்களைச் சமாதானப்படுத்திய நடராஜன், “ஆனானப்பட்ட நாவலரையே நார்நாராகப் பிய்த்துவிட்டேன்; இந்தக் கண்ணன் யார்? சேலம் மாவட்டத்தில் பெரிய கொம்பனா? அவன் இறக்கையை வெட்டி எரிந்துவிட்டேன்; திருச்செங்கோட்டுக்கு சீட் கேட்டான்... ஏன் கொடுக்க வேண்டும்? அவனுடைய நண்பன் ராஜாவுக்குக் கொடுத்தேன்; இப்போது அவனுங்களுக்குள்ள மோதல்; திருச்சியில் ஸ்ரீரங்கத்துக்காரனை காலி செய்தாகிவிட்டது; மதுரையில் யாரோ நவநீதன் என்று ஒரு பொடியன்... அவனை ஓடஓட விரட்டிவிட்டேன்; தேர்தல் முடியட்டும்... இன்னும் எவனெவன் இறக்கையை வெட்டுகிறேன்” என்று பாருங்கள் கர்ஜித்தார். அதில் சமாதானம் அடைந்த தொண்டர்கள் கலைந்துசென்றனர். இப்படி தினம்தோறும் பல பஞ்சாயத்துக்களை அன்றைக்கு ஜெயலலிதாவுக்காக நடத்தினார்  நடராசன். 

ஸ்ரீரங்கமா... போடிநாயக்கனூரா... 

ஜெயலலிதா, சசிகலாஜெயலலிதா எந்தத் தொகுதியில் போட்டியிட்டால் அவருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும்; எந்தத் தொகுதியில் பிரசாரம் செய்வது எளிது; எந்தத் தொகுதியில் பலவீனமான எதிரி போட்டியிடுகிறார் என்பதை எல்லாம் கணக்குப்போட்டு அவருக்கு தொகுதிகளை தேர்வு செய்தவர் நடராஜன்தான். தமிழகம் முழுவதும் சுற்றி ஜெயலலிதாவுக்காக இரண்டு தொகுதிகளைத் தேர்வு செய்தார். ஒன்று ஸ்ரீரங்கம்... மற்றொன்று போடி நாயக்கனுர். இரண்டு தொகுதிகளும் ஜெயலலிதாவுக்குச் சாதகமான தொகுதிகள். ஸ்ரீரங்கம் ஜெயலலிதாவுக்கு சமூகரீதியாக பாதுகாப்பான தொகுதி. அதுபோல, போடி நாயக்கனூர் அ.தி.மு.க.வுக்கு எப்போதும் சாதகமான தொகுதி. அவற்றைவிட முக்கியம் இந்த இரண்டு தொகுதிகளையும் இரண்டே நாட்களில் சுற்றி வந்து பிரசாரத்தை முடித்துவிடலாம். அது ஜெயலலிதாவுக்கு மிக வசதி. அதனால், இந்த இரண்டு தொகுதிகளையும் நடராஜன் ஜெயலலிதாவுக்காக தேர்வு செய்தார். ஆனால், ஜெயலலிதா போட்டியிடும் தொகுதிகளை முன்கூட்டியே அறிவிக்கவில்லை. அதை ரகசியமாக வைத்திருந்தார். முன்பே அறிவித்துவிட்டால் தி.மு.க-வும் சரி... ஜா.அணியும் அந்தத் தொகுதியில் வலுவான வேட்பாளர்களை நிறுத்திவிடும் என்பதால் அப்படி ஒரு திட்டம். பிறகு ஒருநாள் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் போய், அங்கிருந்து காரில் போடி நாயக்கனூருக்கு சசிகலாவுடன் சென்று ஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அங்கு வந்த கம்பம் கோபால், “அம்மா வேட்புமனுத் தாக்கலின்போது வரவேற்பு ஏற்பாடுகளை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்ல, சசிகலா அவரிடம் ஒரு லட்சம் ரூபாயை எடுத்துக் கொடுத்தார். ஆனால், அதோடு போன கோபால் திரும்பிவரவே இல்லை. ஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கல் செய்யச் சென்றபோது எந்த வரவேற்பும், ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இருந்தது. சத்தமில்லாமல் போன ஜெயலலிதா வேட்புமனுத்தாக்கல் செய்துவிட்டு சசிகலாவுடன் வெறுமையாகத் திரும்பினார். சசிகலாவும் ஜெயலலிதாவும் கம்பம் கோபால் செய்த வேலையால் வெறுப்புடன் திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில், நிலக்கோட்டை அன்பழகன் என்பவர் பக்கத்தில் இருந்த அம்பாசிடர் காரில் நின்று ஜெயலலிதாவை வரவேற்று தனியாகப் பேசிக் கொண்டிருந்தார். அங்கு காரை நிறுத்திய ஜெயலலிதா, “மற்றவர்கள் எங்கே.. ஏன் நீங்கள் தனியாக நின்று பேசுகிறீர்கள்” என்று கேட்க, நிலக்கோட்டை அன்பழகன், “நீங்கள் வரும் தகவலை இங்கு யாரும் சொல்லவில்லை. அதனால் எந்த ஏற்பாடுகளும்  செய்யமுடியவில்லை. கடைசியில் தாலுகா அலுவலகத்தில் சொன்னார்கள். அதுதான் அவரச அவரசமாக மைக் செட்டை போட்டு இந்தக் காரையே மேடையாக்கிப் பேசுகிறேன்” என்றார். அதைக் கேட்ட ஜெயலலிதா, சசிகலா இருவருக்கும் மகிழ்ச்சி. அடுத்தத் தேர்தலில் நிலக்கோட்டை அன்பழகனுக்கு சீட் கிடைத்தது. அவரும் எம்.எல்.ஏ ஆனார்.  

ஜெ.வை வீழ்த்த வெண்ணிற ஆடை நிர்மலா!

ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா

ஜெயலலிதா போட்டியிடும் தொகுதியில் வலுவான வேட்பாளரை நிறுத்தி ஜெயலலிதாவை தோற்கடிக்க வேண்டும் என்று ஜானகி விரும்பினார். அதனால், ஜெயலலிதா போட்டியிடும் தொகுதி தெரிந்தபின்னரே தன் அணியின் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று ஜானகியும் திட்டவட்டமாக இருந்தார். ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரையும் தேர்வு செய்து வைத்திருந்தார். அதையும் ரகசியமாக வைத்திருந்தார். கடைசியில் ஜெயலலிதா போடி நாயக்கனூரில் போய் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். திருச்சி வரை விமானத்தில் போய், அங்கிருந்து காரில் போய் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். சசிகலா கூடவே சென்றார். இந்தத் தகவலை முன்கூட்டியே அறிந்துகொண்ட ஜானகி அணி, ஜெயலலிதாவுடன் சேர்ந்து அறிமுகமான ‘வெண்ணிற ஆடை’ நிர்மலாவை போடியில் வேட்பாளராக நிறுத்தியது. வெண்ணிற ஆடை நிர்மலா வேட்பு மனுத்தாக்கல் செய்ததும்,அந்தத் தகவலை கம்பம் ஆர்.டி.கோபால் ஓடிவந்து ஜெயலலிதாவிடம் தெரிவித்தார். ஜெயலலிதாவின் முகம் கறுத்துவிட்டது. “உங்களுக்கு நன்றாகத் தெரியுமா? இல்லை எதாவது வதந்தியா? ” என்று கேட்டு உறுதி மீண்டும் அந்தத் தகவலை உறுதி செய்துகொண்டவர் மிகவும் குழப்பமடைந்து காணப்பட்டார். ஜெயலலிதாவைச் சமாதானப்படுத்திய நடராஜன், தேர்தலில் ஜெயிக்க நிறைய வழிகள் இருக்கின்றன. நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் ஜெயித்துவிட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டார்.

சசிகலா-சோதிடர்-சேவல் சின்னம்!

ஜெயலலிதா, சசிகலா

ஜெ.-ஜா. அணி பிரிவால் அ.தி.மு.க-வின் இரட்டை இலைச்சின்னம் பறிபோனது. ஜானகிக்கு இரட்டைப்புறா சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கியது. ஜெயலலிதாவுக்கு யானை, இரட்டை மெழுகுவர்த்தி, சேவல் சின்னங்களில் ஒன்றைத் தேர்வு செய்துகொள்ள தேர்தல் ஆணையம் வாய்ப்புக் கொடுத்தது. அதில் சசிகலாவின் தேர்வு சேவல் சின்னமாக இருந்தது. அதற்குக் காரணம் சசிகலாவின் ஆஸ்தான சோதிடர் தர்மராஜ். அவர்தான் சேவல் சின்னத்தைத் தேர்வு செய்யச் சொன்னார். திட்டை பிச்சை என்ற மற்றொரு சோதிடர் மூலம் சசிகலா-நடராஜனுக்கு அறிமுகமான தர்மராஜூக்கு போயஸ் கார்டனில் தனிக்குடிசை போட்டுக் கொடுக்கப்பட்டது. அந்தக் குடிசையில் சேவல் கொடியை ஏற்றி தினமும் பூஜைகள் நடந்தன. தர்மராஜ் சொன்னபடி சேவல் சின்னத்தைத் தேர்வு செய்த சசிகலா, திருப்பதிக்குப்போய் சேவல் சின்னத்தை வைத்து பூஜை செய்துவிட்டு, 27 பவுன் தங்கத்தையும் காணிக்கையாக செலுத்திவிட்டு வந்தார். தர்மராஜ் சொன்னபடி முதல் வேட்பாளர் பட்டியல் 99 பெயர்கள் வரும்படி வெளியிடப்பட்டது. சசிகலா காலையிலும் மாலையிலும் ஜெயலலிதா வெற்றி பெற நடந்த பூஜைகளில் கலந்து கொண்டார். 

சீட்டுக்கு அடிபிடி! தொகுதிகளில் குளறுபடி!

நடராசன்அ.தி.மு.க ஆய்வுக்குழு பரிந்துரை செய்ததில் 30 சதவிகிதம் பேருக்குத்தான்  சீட். 70 சதவிகிதம் பேருக்கு சீட் டெண்டர்கள் மூலம்தான் சீட் ஒதுக்கப்பட்டன. கே.கே.எஸ்.எஸ்.ஆர் பரிந்துரை செய்த மூன்று பேருக்கு மட்டும்தான் சீட். அந்த மூன்று சீட்களை வாங்குவதற்குள் அவருக்கு உயிர் போய் உயிர் வந்தது. சேடப்பட்டி முத்தையா பரிந்துரைக்கும் மூன்று சீட். செங்கோட்டையனுக்கும் அதே கதி. சேலம் கண்ணன் பரிந்துரை செய்ததில் இரண்டு ரிசர்வ் தொகுதிகளுக்கு மட்டும்தான் சீட். சேலம் மாவட்டத்தில் எஸ்.டி.எஸ் கையே ஓங்கி இருந்தது. நெல்லைத் தொகுதி வேட்பாளராக ஆதம் என்பவர் அறிவிக்கப்பட்டார். ஆனால், மாவட்டச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் சென்னையில் இருந்து நெல்லை போய் சேர்வதற்குள் ஆதம் மாற்றப்பட்டார். சென்னை உதயம் தியேட்டர் உரிமையாளர்களில் ஒருவருக்கு சீட் மாற்றிவிடப்பட்டது. மீண்டும் கருப்பசாமி பாண்டியன் சென்னையில் இருந்து நெல்லை செல்வதற்குள் நாங்குநேரி வேட்பாளர் மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டார். இதில் கருப்பசாமிப் பாண்டியன் கொந்தளித்த பிறகு அந்த முடிவு மாற்றி அமைக்கப்பட்டது. இப்படிக் குளறுபடிகளுடன் ஜெ.அணியின் தேர்தல் வியூகங்களை நடராஜன் வகுத்தார். ஆனால், ஜெயலலிதாவை அவர் சொன்னபடியே வெற்றி பெற வைத்தார். அதற்காக நடராஜன் அன்று நடத்திய தேர்தல் தில்லாலங்கடிகள்தான் இன்று எல்லாக்கட்சிகளிலும் தொடர்கிறது. பம்பாயில் இருந்து தனி விளம்பர ஏஜென்சிகள், இலவச வேட்டி சேலைகள், கத்தை கத்தையாக பறக்கவிடப்பட்ட பணம், சர்வே முடிவுகள் என்று ஜமாய்த்துக்காட்டினார் நடராசன்

கதை தொடரும்... 

http://www.vikatan.com/news/coverstory/83058-sasikala-astrologer--party-symbol-how-sasikala-became-bestie-of-jayalalithaa-episode---32.html

Link to comment
Share on other sites

"ஜெயலலிதா, நடராசனை கைது செய்!" சசிகலா; ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை; அத்தியாயம் - 33

sasikala_001_12373_17537_%282%29_12233.j

1989 தேர்தல் : வாழ்வா... சாவா? 

1989-ம் ஆண்டுத் தேர்தல் தமிழக அரசியல் கட்சிகளுக்கு வாழ்வா... சாவா? போராட்டம். “எம்.ஜி.ஆரிடம் தோற்று,10 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தை இழந்து நிற்கும் தி.மு.க-வை,எம்.ஜி.ஆர் இறந்துவிட்ட பிறகும் அரியணைக்கு கொண்டு செலுத்தவில்லை என்றால்... இனி ஒருபோதும் கொண்டு செல்ல முடியாது. இதை உணர்ந்த கருணாநிதி வெறிபிடித்தவர் போல் அந்தத் தேர்தலில் வேலை பார்த்தார். ஒவ்வொரு தி.மு.க தொண்டனையும் வேலை பார்க்க வைத்தார்.

‘‘தன் கதாநாயகனும் கணவருமான எம்.ஜி.ஆர் உருவாக்கி,கட்டிக்காத்து வளர்தெடுத்த கட்சியையும், ஆட்சியையும் இடையில் வந்தவர்களிடம் பறிகொடுத்துவிடக்கூடாது” என்ற பதற்றம் ஜானகிக்கு. அதனால் அவரும் சுற்றிச் சுழன்று வந்தார்.

1967-ல் தி.மு.கவிடம் பறிகொடுத்த தமிழகத்தை மீட்டெடுக்க நல்ல சந்தர்ப்பம். மத்தியில் அதிகாரம் உள்ளது. ராஜீவ் காந்தி என்ற கவர்ச்சி இருக்கிறது. மாநிலத்தில் பெரிய கட்சியான அ.தி.மு.க ஜா.அணி-ஜெ.அணி-நால்வர் அணி என்று சில்லுச் சில்லாய் சிதறிக் கிடக்கிறது. கருணாநிதியை மட்டும் சமாளித்துவிட்டால் போதும். மீண்டும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி. காங்கிரஸ் ஆட்சியில் நாம்தான் முதலமைச்சர் என்று மூப்பனார் மனக்கோட்டை கட்டிக் கொண்டு வேலை பார்த்தார். 

ஜெயலலிதா

‘‘இந்தத் தேர்தலில் தோற்றுவிட்டால், தனக்கு அரசியல் எதிர்காலமே கிடையாது; தன்னுடைய முதலமைச்சர் கனவு என்றென்றும் பலிக்காது; தன் அடையாளம் அழிக்கப்பட்டுவிடும். எந்தநிலையிலும் அந்தநிலை வந்துவிடக்கூடாது என்று ஜெயலலிதா பிரயத்தனப்பட்டார். ஜெயலலிதா கௌரவமான வெற்றி பெற்றால்தான் சசிகலாவுக்கு எதிர்காலம்; சசிகலாவின் எதிர்காலம்தான் தனது எதிர்காலம். அதனால், ஜெயலலிதாவை எப்பாடுபட்டாவது கரையேற்றிவிட வேண்டும்” என்று நடராஜன் வியூகங்களை வகுத்து முன்னேறிப்போய்க் கொண்டே இருந்தார். 

நடராசன் உருவாக்கிய ‘வைட்டமின்’ பார்முலா!

ஜெயலலிதாவை வெற்றிபெற வைக்க அந்தத் தேர்தலில் நடராசன் பல ‘வைட்டமின்’ பார்முலாக்களை உருவாக்கினார்.  தேர்தல் நேரங்களில் இன்றுவரை பல கட்சிகளுக்கு அந்தப் பார்முலாக்கள்தான் தேர்தலைச் சந்திக்கும் பலத்தைக் கொடுக்கின்றன. 1989-ல் தொடங்கிய  ஜெயலலிதாவின் பயணம் 2016-வரை அந்தப் பாதையிலேயே தொடர்ந்தது. சில ஏற்ற இறக்கங்கள் அதில் மாற்றப்பட்டு இருக்கலாம்; ஆனால், கடைசிவரை ஜெயலலிதாவின் தேர்தல் பாதையும் பார்முலாவும் அதுவாகவே இருந்தது. பம்பாயில் இருந்து அழைத்துவரப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்று ஜெ.அணியின் பிரசார போஸ்டர்களை டிசைன் செய்தது. உள்ளூர் டிடெக்டிவ் ஏஜென்சியைச் சேர்ந்தவர்கள் வெற்றி தோல்விக்கான காரணங்களைக் கண்டுபிடித்துப் பட்டியல்போட்டுக் கொடுத்தனர். மற்றொருபக்கம் போயஸ் கார்டன் குடிசையில் குடியேற்றி வைக்கப்பட்ட பூசாரி, சேவல் கொடிக்கு காலையும் மாலையும் பூஜை செய்து கொண்டிருந்தார். ஜெயலலிதாவின் பிரசாரத்துக்காக வாடகை ஹெலிகாப்டரை பயன்படுத்தும் திட்டம் ஒன்றும் நடராசனிடம் அப்போதே இருந்தது. ஆனால், அந்தத் தேர்தலில் அதை அவர் நடைமுறைப்படுத்தவில்லை. பிறகு அதுவும் வந்து ஜெயலலிதாவோடு ஒட்டிக்கொண்டது தனிக்கதை. சேவல் சின்னம் பதிக்கப்பட்ட வேட்டிகள்-சேலைகள்-துண்டுகள் லட்சக்கணக்கில் கொள்முதல் செய்யப்பட்டு குடோன் குடோனாகப் பதுக்கப்பட்டது. 

நடராசன்

அசராத பிரசாரம்.... அசத்தலான பிரசாரம்...

ஜெயலலிதா பிரசாரத்துக்காக தமிழகம் முழுவதும் சுற்றி வந்தார். அந்தப் பயணம் முழுவதும் சசிகலா ஜெயலலிதாவைச்  சுற்றிவந்தார். ஜெயலலிதாவை எதிர்த்துப்போட்டியிட்ட வெண்ணிற ஆடை நிர்மலா, போடியில் மட்டும் பிரசாரம் செய்தால் போதுமானது; ஆனால், ஜெயலலிதா போடியில் தனக்கும் பிரசாரம் செய்ய வேண்டும்; மற்ற தொகுதிகளில் தன் அணியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்ய வேண்டும். ஆனால், அதை அவர் அசராமல் செய்தார். சென்னையில் 14 தொகுதிகளை 7 மணி நேரத்தில் சுற்றி வந்து பிரசாரம் செய்தார். இதன் காரணமாக அவர் போட்டியிட்ட போடியில் நிரந்தரமாகத் தங்கவில்லை. ஆனால் போடியில் ஜெயலலிதா அடித்த ஸ்டன்ட்களால் எதிர்க்கட்சி வேட்பாளர்கள், எதிரணி வேட்பாளர்கள் அலறினார்கள். பிரசார வேனில் மேலே ஏறி நின்று கொண்டு பிரசாரம் செய்தார்; ஒத்தையடி மலையடிவாரங்களில் நடந்து சென்று ஓட்டுக் கேட்டார்; அழுக்காக நின்ற(நிறுத்தப்பட்ட) குழந்தைகளை அள்ளி எடுத்துக் கொஞ்சினார்; அவர்களுக்கு புதிய உடைகள் வழங்கினார்;  தொகுதிக்குள் காரில் சென்ற நேரங்களில், கார் கண்ணாடியை கீழே இறக்கி வழியில் நின்ற வயதான பெண்களை வலியப்போய் நலம் விசாரித்தார். 

சுலோக்சனா சம்பத், வெண்ணிற ஆடை நிர்மலா, வளர்மதி

ஜெயலலிதாவை எதிர்த்துப்போட்டியிட்ட வெண்ணிற ஆடை நிர்மலா, போடி ரெங்கராஜன் மாளிகையில் தங்கி தேர்தல் வேலைகளைப் பார்த்தார். அவருக்குத் துணையாக சுலோசனா சம்பத்தும், பா.வளர்மதியும் உடன் இருந்தனர் (அப்போது வளர்மதி ஜா.அணியில் இருந்து ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தவர்). ஜெயலலிதா செய்த எல்லா வேலைகளையும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் செய்தார். ஆனால், ஜெயலலிதா அளவுக்கு அவரால் பணத்தை வாரி இறைக்க முடியவில்லை. ஜெயலலிதா சார்பில் நடராஜன் பணத்தை தண்ணியாக செலவழித்தார். ஜெ.அணியில் சீட்டு கேட்டவர்களிடம் வாங்கிய 50 ஆயிரம், ஒரு லட்சம் மதிப்புள்ள நோட்டுக் கட்டுக்கள் போடி தொகுதியில் காகிதங்களாகப் பறந்தன. 

என்னை ஆதரிப்பீர்களா... என்னை ஆதரீப்பீர்களா?

கருணாநிதியையும், ஜானகியைத்தான் ஜெயலலிதா தனது பிரசாரத்தில் வறுத்தெடுத்தார்.

“கருணாநிதி தீயசக்தி; அவரை அழிக்க என்னால்தான் முடியும்; அதனால்தான் அரசியல் பணியை புரட்சித் தலைவர் என்னிடம் ஒப்படைத்தார். கருணாநிதி அவருக்குப் பிறகு, அவருடைய மகன் ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்கப் பார்க்கிறார். அதற்கு நீங்கள் துணைபோய்விடக்கூடாது” என்றார். இந்தப் பிரசாரம் பொதுமக்களிடம் மட்டும் அல்ல. தி.மு.க கூடாரத்துக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியது. 

ஜெயலலிதா

“ஜானகி ஒன்றும் தெரியாத பாப்பா போல் இன்று நடிக்கிறார். புரட்சித் தலைவரின் பணத்தை எல்லாம் ஏழைகளுக்கு கொடுக்கச் சொன்னார். ஆனால், ஜானகி அதைச் செய்யாமல் அதை தன் சொந்த நலனுக்காக பயன்படுத்துகிறார். இவரா ஏழைகளுக்கு நல்லாட்சியை வழங்கப்போகிறார்” எனப் பிரசாரம் செய்து ஜானகியை வறுத்தெடுத்தார் ஜெயலலிதா. “நான் உங்களுக்கு ஊழலற்ற ஆட்சியை அமைத்துத் தரப்போகிறேன். என்னை ஆதரிப்பீர்களா... என்னை ஆதரிப்பீர்களா...” என்று தனக்கு ஆதரவைத் திரட்டினார் ஜெயலலிதா. இதன் பரிணாமவளர்ச்சிதான், 2011 தேர்தலில் செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா... என்று ஜெயலலிதா மக்களிடம் கேட்டது. 

வேட்டி-சேலை-துண்டும்... பொங்கல் வாழ்த்தும்!

ஜெயலலிதாவின் வெளிப்படையான பிரசாரங்கள் இப்படி நடந்துகொண்டிருந்தன. ஜெயலலிதாவுக்கான மறைமுகப் பிரசாரங்களை நடராஜன் நடத்திக் கொண்டிருந்தார். தேனியில் இருந்து போடி செல்லும் வழியில் உள்ள ஜின்னிங் பேக்டரி குடோனில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று போலீஸுக்குத் தகவல் வந்தது. தி.மு.க, காங்கிரஸ், ஜா.அணியைச் சேர்ந்தவர்களும் போலீஸ் பட்டாளத்தோடு அந்தக் குடோனில் நுழைந்தனர். அவர்கள் போனபோது, சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர் தலைவர் ஐசரி கணேசன் (இன்றைய வேல் டெக் கல்லூரி தாளாளர்) அங்கே நின்றிருந்தார்.

nadarajan1_1989_13380.jpg

அந்த இடத்தில் இருந்த ஜீப்பில், சேவல் சின்னம் பொறிக்கப்பட்ட வேட்டி சேலைகளை அவசர அவரசமாக அவருடைய ஆட்கள் ஏற்றிக் கொண்டிருந்தனர். ஜெயலலிதாவுக்கு ஓட்டுப்போடச் சொல்லி தொகுதி மக்களுக்கு கொடுப்பதற்கான அவை ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. இதை அறிந்து எதிர்க்கட்சிக்காரர்கள் பிரச்னை செய்ய, “எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவில் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு” என்று ஐசரி கணேசன் விளக்கம் கொடுக்க, அவர் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விழுந்தது. அதில் ஆடிப்போன ஐசரி கணேசன் ஒதுங்கிக் கொண்டார். அதன்பிறகு குடோனுக்குள் புகுந்த எதிர்கட்சிக் கும்பல் அங்கிருந்த வேட்டி சேலைகளை அள்ளிக் கொண்டுவந்து ரோட்டில் பரப்பிப் போட்டன. அதனால் தேனி-போடி மெயின் ரோட்டில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆனால், ஒரு குடோனைப் பிடித்தவர்களால் மற்ற குடோன்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. சென்னை வானவில் உட்பட பல்வேறு இடங்களில் தனித்தனியாக கொள்முதல் செய்யப்பட்ட வேட்டி,சேலை,துண்டுகள் சென்னையில் இருந்து லாரிகளில் தேனிக்கு வந்தன. பழனிசெட்டியபட்டி மில்லில் அவை குவித்து வைக்கப்பட்டன. ஒரு சேலை, ஒரு வேட்டி, ஒரு துண்டு என்று அவை தனித்தனி பார்சல்களாகக் கட்டப்பட்டன. சில்லுமரத்துப்பட்டி என்ற கிராமத்தில்தான் முதன் முதலில் வேட்டி-சேலை-துண்டு அடங்கிய பார்சலும், அதோடு சேர்த்து சேவல் சின்னத்துக்கு ஓட்டுப்போடுங்கள் என்ற வாசகம் இடம்பெற்ற நோட்டீஸும் விநியோகம் செய்யப்பட்டன. அதுபோல பல இடங்களிலும் வேட்டி சேலை துண்டு விநியோகம் செய்யப்பட்டது. சினிமா நோட்டீஸ்களை வீசி எறிந்துவிட்டுச் செல்வதுபோல், திடீரென தெருக்களுக்குள் நுழையும் டெம்போ வேன்கள், சேவல் சின்னம் பொறிக்கப்பட்ட நோட்டீஸ்களையும், ரூபாய் நோட்டுக்களையும் சேர்த்து வீசிவிட்டு மறைந்தன. போடி முழுவதும் ஜெயலலிதா-சேவல் சின்னம்-வேட்டி சேலை பணம் என்பதே பேச்சாக மாறியது. போடியில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வாக்காளர்கள் அன்றைக்கு இருந்தனர். அவர்களுக்கு தனித்தனியாக ஜெயலலிதா பொங்கல் வாழ்த்து அனுப்பினார். அன்றைய தேதியில் தபால் செலவே பல லட்சத்தைத் தாண்டியது. ஆனால், அதை கச்சிதமாக செய்து முடித்தது நடராஜனின் நெட்வொர்க். 

ஜெயலலிதா-நடராசனைக் கைது செய்!

ஜெயலலிதாவின் பிரசாரமும், ஜெயலலிதாவுக்காக நடராசன் செய்யும் அமளிதுமளிகளும் ஜா.அணி சார்பில் போட்டியிட்ட வெண்ணிற ஆடை நிர்மலா, தி.மு.க சார்பில் போட்டியிட்ட முத்து மனோகரன், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.எம்.ராமச்சந்திரனை திணற அடித்தது. ஜனவரி 19-ம் தேதி இறுதிநாள் பிரசாரம். பிரசாரத்தை முடிப்பதற்கு முன்பு, தொகுதிக்குள் பேரணி நடத்த அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் போட்டா போட்டி போட்டனர். நடராசன் ஜெயலலிதாவுக்காக போடியைத் தேர்ந்தெடுத்தபோதே,பேரணிக்கும் அனுமதி கேட்டு போலீஸுக்கு விண்ணப்பம் கொடுத்திருந்தார். அதனால் ஜெ.அணிக்குத்தான் பேரணி நடத்த போலீஸ் அனுமதி கொடுத்தது. இதில் கடுப்பாகிப்போன காங்கிரஸ்காரர்கள், ஓட்டுக்கு வேட்டி சேலை கொடுக்கும் ஜெயலலிதா-நடராஜனைக் காவல்துறையே கைது செய்! என்று தட்டிபோர்டு வைத்தனர். அந்த நாட்களில் ஜெயலலிதாவோடு நெருக்கமாக இருப்பவர்கள், போயஸ் கார்டன் வீட்டுக்கு அடிக்கடிப்போய் வருகிறவர்களுக்கு மட்டும்தான் நடராசனைத் தெரியும். ஆனால், போடியில் நடராசனையும் கைது செய் என்று தட்டிபோர்டு வைக்கும் அளவுக்கு அந்தத் தொகுதியில் நடராசனின் தேர்தல் வேலைகள் இருந்தன. எதிரணி அதில் அவ்வளவு எரிச்சல் அடைந்திருந்தது. 

ஜீப்பில் ஆட்கள்... வேனில் கல்... 

சசிகலா, ஜெயலலிதாஇறுதி நாள் பேரணிக்காக கேரளாவில் இருந்து 75 ஜீப்களை கொண்டு வந்தது ஜெ.அணி. அதில் வெளியூர்களில் இருந்து ஆட்களை ஏற்றி வந்து பேரணியை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. அதற்கு முன்பாக, வேனில் நின்றபடி போடி நகருக்குள் ஓட்டுக் கேட்டுவந்தார் ஜெயலலிதா. அப்போது ஒரு சிறிய கல் ஜெயலலிதாவின் வேனில் பாந்தமாகப் போய் விழுந்தது. அதற்காகவே காத்திருந்ததுபோல அந்தக் கல்லைக் கையில் எடுத்த  ஜெயலலிதா, “பொதுமக்களே! நான் வெற்றி பெறப்போவதை அறிந்து கொண்ட என் எதிரிகள், இப்போது என்னைக் கல்லால் அடிக்கிறார்கள். இதற்கு நீதி வழங்குங்கள்!” என்றார். எரியப்பட்ட கல்லும் செட்டப்... எரிந்த ஆளும் செட்டப்... அதை வைத்து ஜெயலலிதா செய்த பிரசாரமும் செட்டப். எல்லாம் நடராஜனின் சித்து வேலைகள். ஜெ.அணியில் சீட் கேட்டவர்களிடம் 50 ஆயிரம், ஒரு லட்சம் என்று நடராஜன் வசூல் செய்திருந்தார். சீட் கிடைக்காதவர்கள் பணத்தைக் கேட்க ஆரம்பித்தனர். ஆனால், யானை வாயில் போன கரும்பு திரும்ப வருமா? ஏமாந்த சோணகிரிகளிடம் இருந்து டெபாசிட்டாக வாங்கிய தொகை மட்டும் மூன்று கோடியே எழுபத்து நான்கு லட்ச ரூபாய். அதைத் திருப்பிக் கேட்டவர்களிடம், “நம் ஆட்சி வந்தால்... உங்கள் பணம் திரும்பி வந்துவிடும்” என்றார் நடராஜன். “நாம் ஆட்சிக்கு வரவில்லை என்றால்” என பணம் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டபோது, “அது கட்சிக்கு நன்கொடையாகிவிடும்” என்று மனதுக்குள்ளே சொல்லிக் கொண்டார் நடராசன். இவ்வளவு களேபரங்களை நடத்தி தேர்தலைச் சந்தித்தார் ஜெயலலிதா. தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியானபோது, ஜெயலலிதா வெற்றி பெற்றார்; ஆனால், அவர் அணி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை; ஆனாலும், சட்டமன்றத்தில், ஜெயலலிதாவுக்கு ஒரு அழுத்தமான அடையாளம் கிடைத்தது. எம்.ஜி.ஆர்-கருணாநிதி என்று சுழன்ற தமிழக அரசியல், கருணாநிதி-ஜெயலலிதா என்று சுழலத் தொடங்கியது அந்தப் புள்ளியில்தான்.  

கதை தொடரும்...

http://www.vikatan.com/news/coverstory/83613-arrest-jayalalithaa-and-natarajan-how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter-33.html

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

ஆளும் கட்சியை ஆட்டம் காணவைத்த இடைத்தேர்தல்! சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை-34  

சசிகலா, ஜெயலலிதா

வனவாசத்தில் இருந்து மனவாசம்

1989 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், தமிழகத்தின் ஆட்சியதிகாரத்தை மீண்டும் தி.மு.க.விடம் ஒப்படைத்தது. 232 தொகுதிகளுக்கு (மதுரை கிழக்கு, மருங்காபுரி தொகுதிகளுக்கு மட்டும் அப்போது தேர்தல் நடக்கவில்லை) நடைபெற்ற அந்தத் தேர்தலில் 150 தொகுதிகளை வென்று தி.மு.க தனிப்பெரும்பான்மை பெற்றிருந்தது. அ.தி.மு.க-வின் ஜெ.அணியால் வெறும் 27 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. ஜெயலலிதாவின் அதிர்ஷ்டம்... மற்றக் கட்சிகளின் துரதிருஷ்டம்... அந்தளவு இடங்களைக்கூட வேறு எந்தக் கட்சியும் பெறவில்லை. மூப்பனார் தலைமையில் தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ் 26 இடங்களை மட்டும் கைப்பற்றி மூன்றாவது இடத்தில் இருந்தது. சி.பி.ஐ.எம் 15 இடங்களையும், அ.தி.மு.க-வின் ஜா.அணி இரண்டு இடங்களையும், தா.பாண்டியன் தலைமை வகித்த சி.பி.ஐ 3 இடங்களையும், சிவாஜி கணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியையும் பெற்றது. 1989 சட்டமன்றத் தேர்தல் அடுத்து வரப்போகும் 30 ஆண்டுகளும் கருணாநிதி, ஜெயலலிதா என்ற இருவரைச் சுற்றித்தான் தமிழக அரசியல் சுழலும் என்பதற்கு அச்சாரம் போட்டு வைத்தது. 13 ஆண்டுகள் வனவாசம் சென்றிருந்த கருணாநிதி மனவாசம் திரும்பினார். ஜானகி தனது அணியை ஜெ.அணியோடு இணைத்துவிட்டு, மொத்தமாக கட்சியை ஜெயலலிதாவிடம் ஒப்படைத்துவிட்டு ஒய்வெடுக்கும் முடிவுக்குப்போனார். டெல்லியில் இருந்த காங்கிரஸ் தலைமை ஜெயலலிதாவின் ஈர்ப்பைப் புரிந்துகொண்டது. தமிழகத்தில் தி.மு.க-வை எதிர்க்க வேண்டுமானால், காங்கிரஸூக்கு  ஜெயலலிதாவின் தயவு தேவை என்பதை கணக்குப்போட்டு குறித்துக் கொண்டது. 
 

சசிகலா-நடராஜன் மீது வெறுப்பு விதைகள்!

கருணாநிதி - ஜெயலலிதா

1989 ஜனவரி 27-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் கருணாநிதி முதல் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். 1989 பிப்ரவரி 9-ம் தேதி ஜெயலலிதா எதிர்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காமராஜர், அண்ணா, பி.ராமமூர்த்தி, எம்.ஜி.ஆர் போன்றவர்களோடு அரசியல் செய்த கருணாநிதிக்கு எதிரில் எதிர்கட்சித் தலைவராக ஜெயலலிதா அமர்ந்தார். ஆனால், அது ஜெயலலிதாவை மகிழ்ச்சி அடையச் செய்யவில்லை. அவருக்குள் விரக்தி பரவி இருந்தது. வெறும் 27 இடங்களை மட்டுமே தன் அணி வென்றதை அவர் வெற்றியாகப் பார்க்கவில்லை; தோல்வியாகவே கருதினார். ‘எம்.ஜி.ஆருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு, தனக்கு இல்லையே’ என்று நினைத்து புழுங்கிப் போயஸ் கார்டனுக்குள் முடங்கினார். பதவி ஏற்றதோடு சரி... அதன்பிறகு சட்டமன்றம் இருக்கும் திசையைக்கூட திரும்பிப் பார்க்கவில்லை ஜெயலலிதா. “இந்த நிலைக்குக் காரணம், சசிகலா-நடராஜனின் தவறான அணுகுமுறை தான்” என்று அப்போது சிலர்  ஜெயலலிதாவுக்கு அறிவுரை சொன்னார்கள்; எம்.எல்.ஏ சீட்டுக்காக நடராஜனிடம் பணம் கொடுத்தவர்கள், கொடுத்த தொகையைத் திருப்பிக்கேட்டு போயஸ் கார்டன் முன்பு குவியத்தொடங்கினர்; ஜெயலலிதா வங்கிகளுக்கு கொடுத்த செக்குகள் பணம் இல்லாமல் திரும்பி வந்தன; அதற்குக் காரணம்,  வங்கிகளில் இருந்த பணத்தை எல்லாம் நடராஜன் தன் வீட்டுக்கு எடுத்துப்போய்விட்டார் என்று சிலர் காரணம் கண்டுபிடித்துச் சொன்னார்கள்;  ஜெ-ஜா.அணி இணைப்பை நடத்த பேச்சுவார்த்தை நடந்தபோதும், சசிகலா-நடராஜன் பற்றிய பேச்சும் வந்தது. அப்போது சிலர், சசிகலா-நடராஜனை கட்சியைவிட்டு ஜெயலலிதா ஒதுக்கிவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். காங்கிரஸ் கட்சியில் இருந்து அ.தி.மு.க-வுடன் இணக்கமாகப்போக விரும்பியவர்களும் நடராஜன்-சசிகலா விவகாரத்தை சுட்டிக்காட்டத் தவறவில்லை. ஜெயலிதாவின் விரக்தி அதிகமானது. சசிகலா-நடராஜன் மீது இலேசான வெறுப்பு ஏற்பட்டது. ஆனால், அவர்களை முற்றிலுமாக ஜெயலலிதா ஒதுக்கவில்லை; என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல், தீராத குழப்பத்தில் இருந்தார். வழக்கம்போல், நடராஜனும் சசிகலாவும் தினமும் போயஸ் கார்டனுக்குப் போவதும் வருவதுமாக இருந்தனர். ஜெயலலிதா அவர்களிடம் அதிகம் முகம்கொடுத்துப் பேசவில்லை; அந்த நேரத்தில், மதுரை கிழக்கு, மருங்காபுரி இடைத்தேர்தல் வந்தது. அந்தத் தேர்தலில் அ.தி.மு.க பெற்ற வெற்றி ஜெயலலிதாவின் குழப்பம் கலையவும், ஜெயலலிதாவுக்கு சசிகலா-நடராஜன் மேல் வெறுப்பு அகலவும் தீர்வாக அமைந்தது.
 

தமிழக அரசியலைத் திசைதிருப்பிய இடைத்தேர்தல் 

இடைத்தேர்தல்

 

1989 மார்ச் 11-ம் தேதி மதுரை கிழக்கு, மருங்காபுரித் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அன்றைக்கு ஆளும் கட்சியாக தி.மு.க அசுரபலத்தில் இருந்தது. ஆனால், அ.தி.மு.கதான் அந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது. அது தமிழக அரசியலில் ஜெயலலிதாவை அசைக்க முடியாத சக்தியாக திகழப்போகிறார் என்பதற்கு மீண்டும் ஒரு சாட்சியாக அமைந்தது. அந்தத் தேர்தலில் தி.மு.க-அ.தி.மு.கவுக்கு நேரடிப் போட்டியாக அமைந்தது(ஜா., ஜெ. அணிகள் இணைப்பு அப்போது நடந்துவிட்டது. இரட்டை இலைச் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் மீண்டும் வழங்கிவிட்டது). அந்தத் தேர்தலில் ஆளும்கட்சியான தி.மு.கதான் வெற்றிபெறும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அதனால், ஜெயலலிதா அந்தத் தொகுதிகளுக்குப் பிரசாரத்துக்குக்கூட போகவில்லை. ஆனால், நடராஜன் விடவில்லை. கே.கே.எஸ்.எஸ்.ஆர் மதுரை கிழக்குத் தொகுதிக்கு பொறுப்பாளராக்கப்பட்டார். திருநாவுக்கரசு மருங்காபுரித் தொகுதிக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். தேர்தல் முடிவுகள் வெளியானபோது, எதிர்கட்சியான அ.தி.மு.க இரண்டு தொகுதிகளையும் வென்றது. தி.மு.க அவமானத்தில் குறுகிப்போனது; அதுவும் பல தேர்தல் களங்களைக் கண்ட கருணாநிதி அதிர்ந்தே போனார். எம்.ஜி.ஆர் உயிரோடு இல்லை; ஆட்சியதிகாரம் நம் கையில் இருக்கிறது; எதிர்த்துப்போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயலலிதா அரசியல் கத்துக்குட்டி; அவரிடம் இடைத்தேர்தலில் தோற்பதா? என்று நினைத்து நினைத்து வருந்தினார். ஆனால், அதைக் கொண்டாட வேண்டிய ஜெயலலிதாவும் கொண்டாடவில்லை. “நாம் பிரசாரத்துக்குப் போகாமலேயே நம் அணி வெற்றி பெறுகிறது என்றால், மக்கள் நம்மைவிட எம்.ஜி.ஆரையும் இரட்டை இலைச் சின்னத்தையும்தான் நேசிக்கின்றனர்” என்று நினைத்து அவரும் புழுங்கினார். அப்போது, மதுரையில் இருந்து போயஸ் கார்டனுக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர் தொலைபேசியில் அழைத்தார். இந்தப் பக்கம் தொலைபேசியில் பேசியவர் சாட்சாத் நடராஜனேதான். தொலைபேசியில் அழைத்த கே.கே.எஸ்.எஸ்.ஆர் நடராஜனிடம், “அண்ணாச்சி, நீங்க சொன்ன ‘வைட்டமின் ப’ பார்முலா நல்லா வேலை செஞ்சுடுச்சு. நாம ஜெயிச்சுட்டோம்” என்றார். நடராஜன் மகிழ்ந்தார். இந்த இரண்டு முனைகளைத்தாண்டி, மூன்றாவது ஒரு முனையில் இந்தத் தொலைபேசி உரையாடல் ஒட்டுக் கேட்கப்பட்டுக் கொண்டிருந்தது.  
 

ஜெயலலிதா ராஜினாமா கடிதம்

நடராஜன்

மதுரை கிழக்கு, மருங்காபுரித் தொகுதி இடைத்தேர்தல் வெற்றிகள் ஜெயலலிதாவுக்கு ஆச்சரியத்தை அளித்தது. மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. நாம் ஊர் ஊராகப்போய் பிரசாரம் செய்தே வெறும் 27 தொகுதிகளைத்தான் ஜெயிக்க முடிந்தது. ஆனால், நாம் பிரசாரத்துக்கே போகாமல், இந்த இரண்டு தொகுதிகளிலும் நம் கட்சி வெற்றி பெற்றுள்ளதே என்று அவர் ‘அப்செட்’ ஆனார். ஏற்கெனவே, சோர்வில் இருந்த ஜெயலலிதா இடைத்தேர்தல் வெற்றியால் மிகவும் எரிச்சலடைந்தார். அந்த நேரத்தில் என்ன நினைத்தாரோ, “நான் என்னுடைய எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்கிறேன். அரசியலில் இருந்து ஓய்வுபெறுகிறேன்” என்று கடிதம் எழுதினார். ஆனால், அந்தக் கடிதத்தையும் ஒளித்துவைத்து நடராஜன் நடத்திய நாடகம் தமிழக சட்டமன்றத்தையே ஆட்டம் காண வைப்பதற்கான ஒத்திகையாக அமைந்தது. ஜெயலலிதாவின் ராஜினாமா கடிதத்தை நடராஜன் ஒளித்துவைத்து ஆடிய நாடகத்தில் கருணாநிதி நடராஜன் மீது உச்சக்கட்ட வெறுப்படைந்தார். “நாம் முதலமைச்சராக இருக்கும்போது நடக்கும் இடைத்தேர்தலில் நம் வெற்றியைத் நடராசன் தடுக்கிறார்... அரசியலைவிட்டு போகிறேன் என்று சொல்லும் ஜெயலலிதாவை பிடித்துவைக்கிறார்... ஜெயலலிதாவைவிட நடராசன் குடைச்சல் அதிகமாக இருக்கிறதே! இதற்குமேல் நடராசனுக்கு பாடம்புகட்டாமல் விடுவது ஆபத்து” என்று நினைத்த கருணாநிதி நடராசனைக் கைது செய்ய உத்தரவிட்டார். நடராசன் கைது செய்யப்பட்டார். ஜெயலலிதாவின் சோர்வு போனது. சிறிதுநாள்கள் ஒதுக்கிவைத்திருந்த நடராஜன் மீது பரிவு ஏற்பட்டது. நமக்காக இவ்வளவு சிரமங்களைச் சந்திக்கிறாரே இந்த நபர் என்று ஜெயலலிதா யோசித்த நேரத்தில் கருணாநிதி மீது அவருக்கு அளவில்லாத ஆத்திரம் ஏற்பட்டது. பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கொந்தளித்தார். கவர்னரைச் சந்தித்து நடராஜனை விடுவிக்க முறையிட்டார். அப்போது நடராசனைச் ஜெயலலிதா சந்தித்தபோது “கருணாநிதி ஆட்சியைக் கவிழ்த்து உங்களை முதலமைச்சர் ஆக்குவது என் பொறுப்பு” என்று வாக்களித்தார். அதற்கென்று பிரத்யேகமாக ஒரு திரைக்கதை எழுதப்பட்டது. 1989 மார்ச் 25-ம் தேதி கூடிய தமிழக சட்டமன்றத்தில் அந்தக் கதையை அரங்கேற்ற மார்ச் 24-ம் தேதி போயஸ் கார்டனில் ஒத்திகை நடந்தது. 

கதை தொடரும்...

http://www.vikatan.com/news/coverstory/85905-byelection-and-ruling-government-how-sasikala-became-bestie-of-jayalalithaa-34.html

Link to comment
Share on other sites

"கிரிமினல்... கிரிமினல்... கிரிமினல்...!" : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம்-35

சசிகலா , ஜெயலலிதா

ஆட்சியைக் கலைக்க ‘பட்ஜெட்’டை பயன்படுத்து! 

தி.மு.க ஆளும்கட்சியாக இருக்கும்போதே, மதுரை, மருங்காபுரி தொகுதி இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க வென்றது.  இத்தனைக்கும் அந்தத் தொகுதிகளில் பிரசாரம் செய்யக்கூட ஜெயலலிதா போகவில்லை. ஆனாலும் அ.தி.மு.க வென்றது. அந்த அரசியல் ஆச்சரியம் தமிழக அரசியல் களத்தில் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இனி தமிழக அரசியலில் ஜெயலலிதா தவிர்க்க முடியாத சக்தி என்பதை எதிர்கட்சிகள் அனைத்தும்  ஏகமானதாக உணரத் தொடங்கின. காலம் கனிந்து வரும் நேரத்தில், ‘அரசியலைவிட்டு ஒதுங்குகிறேன்; எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என்று ஜெயலலிதா கடிதம் எழுதியது, அந்தக் கடிதம் முரசொலியில் வெளியானது, அதையொட்டி நடராசன் கைது செய்யப்பட்டது என்று தமிழக அரசியல் அப்போது ட்வீஸ்டுகளால் நிரம்பிக்கிடந்தது. யாராலும் அடுத்து என்ன என்பதைக் கணிக்க முடியாத அசாதரண சூழல்களோடு 1989-ம் ஆண்டு நகர்ந்து கொண்டிருந்தது. அப்படிப்பட்ட குழப்பமான நேரத்தில் பட்ஜெட்டுக்காக  சட்டமன்றத்தில் தேதி குறிக்கப்பட்டது. மார்ச் 25-ம் தேதி தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் அமைச்சர் நாற்காலியில் அமர்ந்த கருணாநிதியை, அங்கிருந்து அகற்றுவதற்கான செயல் திட்டமும் அந்தக் கூட்டத்தொடரில் இருந்தே தொடங்கியது. 

அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு புது அசைன்ட்மென்ட்!

நடராஜன்‘அரசியலைவிட்டுப் போகிறேன்’ என்று சொன்ன ஜெயலலிதாவை நடராசன் விடவில்லை. “ஜெயலலிதாவை முதலமைச்சராக்கி, அவருக்குப் பக்கத்தில் தன் மனைவி சசிகலாவை ஆணியடித்து உட்கார வைக்க வேண்டும்” என்ற கனவில் நடராசனுக்கு 5 வருடங்கள் காத்திருக்கப் பொறுமை இல்லை. கருணாநிதியின் அரசாங்கத்தைக் கலைத்தே தீர வேண்டும் என்று களமிறங்கினார். அதற்கு மார்ச் 25-ம் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத் தொடரை எப்படிப் பயன்படுத்தலாம் என்று திட்டம் தீட்டினார். அந்தத் திட்டத்துக்கு ஒத்திகை பார்க்க, மார்ச் 24-ம் தேதியே அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை போயஸ் கார்டனுக்கு வரச்சொல்லி வகுப்பெடுத்தனர். மறுநாள் கூடப்போகும் சட்டசபையை கலவரக்களமாக மாற்ற வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட். 

1989 மார்ச் 25-ம் தேதி தமிழக சட்டமன்றம் கூடியது. பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால், அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ-க்களும் ஆஜராகி இருந்தனர். சபை நிரம்பி இருந்தது. சபாநாயகர் தமிழ்குடிமகன் திருக்குறள் வாசித்து அவையைத் தொடங்கிவைத்தார். முதல் அமைச்சர் கருணாநிதி, அமைச்சர் க.அன்பழகன் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர். அவர்களுக்குப் பின்னால் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்டவர்கள் இருந்தனர். அதற்கும் பின்னால்தான் துரைமுருகன் உட்கார்ந்திருந்தார். எதிர்கட்சிகள் பக்கம் முதல்வரிசையில் ஜெயலலிதா அமர்ந்திருந்தார். அவர் முகத்தில் கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. அவர் உதடுகள் எதையோ முனுமுனுத்துக் கொண்டிருந்தன. ஜெயலலிதாவுக்குப் பின்னால், மற்ற எதிர்கட்சிகளின் பெண் எம்.எல்.ஏ-க்களும் இருந்தனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ பொன்னம்மாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ பாப்பா உமாநாத்தும் அந்த அவையில் நடந்தவற்றுக்கு சாட்சியாக இருந்தனர். 

கிரிமினல்.. கிரிமினல்... கிரிமினல்...

முதல் அமைச்சர் கருணாநிதி பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்குவதற்கு முன்பே ஜெயலலிதா கோபத்தோடு எழுந்தார். “நடராஜன் கைது செய்யப்பட்ட விவகாரம், தனது ராஜினாமா கடிதம் முரசொலியில் வெளியான விவகாரம்” குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்றார். சபாநாயகர் தமிழ்குடிமகன், “பட்ஜெட் கூட்டத் தொடரின்போது மற்ற விவகாரங்களை விவாதிக்க முடியாது. சபை விதிகளில் அதற்கு இடமில்லை. திங்கள்கிழமை நீங்கள் சொல்லும் விவகாரங்கள் குறித்த விவாதத்தை வைத்துக் கொள்ளலாம்” என்று சொல்லிவிட்டு, முதல் அமைச்சர் கருணாநிதியை பட்ஜெட்டை வாசிக்க அழைத்தார். கருணாநிதி பட்ஜெட்டை வாசித்தபோது, அவருக்கு எதிரில் அமர்ந்திருந்த ஜெயலலிதா, “கிரிமினல்... கிரிமினல்... கிரிமினல்...” என்று முனுமுனுத்துக் கொண்டே இருந்தார். அந்த வார்த்தைகள் கருணாநிதியின் காதுகளிலும் விழுந்தன. ஆனாலும் அவர், தொடர்ந்து பட்ஜெட்டை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று எழுந்த ஜெயலலிதா, முதல் அமைச்சர் கருணாநிதிக்கு எதிரில் நின்று, அவருக்கு நேராக சுட்டுவிரலை நீட்டி “நீ ஒரு கிரிமினல்” என்று கத்தினார். ஒருமுறை அல்ல... இருமுறை அல்ல... பலமுறை அந்த வார்த்தையைச் சத்தம்போட்டுச் சொன்னார். சரியாக அந்த நேரத்தில், ஜெயலலிதாவுக்குப் பின்னால் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அணிவகுக்கத் தொடங்கிவிட்டனர். கருணாநிதிக்கு ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பது புரிந்துவிட்டது. ஆனாலும் அவர் பட்ஜெட்டை வாசிப்பதிலேயே குறியாக இருந்தார். அதில் எரிச்சல் அடைந்த ஜெயலலிதா, “நீ ஒரு கிரிமினல் குற்றவாளி.... நீ பட்ஜெட்டை படிக்க நான் அனுமதிக்கமாட்டேன்” என்று கருணாநிதியைப் பார்த்து ஒருமையில் ஆவேசமாகக் கத்தினார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை-மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரை ஜெயலலிதா ஒருமையில் ‘டா’ போட்டே சட்டமன்றத்தில் பேசினார் (கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ பாப்பா உமாநாத் ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில் அதை உறுதி செய்துள்ளார்).

ஜெயலலிதா, திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்

துரைமுருகன் துச்சாதனன் ஆக்கப்பட்ட கதை!

கருணாநிதியின் கையில் இருந்த பட்ஜெட் பேப்பர்களில் சில பக்கங்களைப் பிடுங்கி கிழித்து எறிந்தார். அதோடு ‘குத்துடா அவனை’ என்ற கட்டளையும் ஜெயலலிதாவிடம் இருந்து பிறந்தது. அந்த வார்த்தைகளைக் கேட்டதும் கருணாநிதியும் ஆவேசம் அடைந்தார். ஜெயலலிதாவைப் பார்த்து “வார்த்தைகளை அளந்து பேசவேண்டும்” என்று எச்சரித்தார். அதைக் கருணாநிதி சொல்லி முடிப்பதற்குள், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களில் ஒருவர் கருணாநிதியைப் பிடித்து பலமாகக் கீழே தள்ளினார். சுதாரித்துக் கொண்ட கருணாநிதி, கீழே விழுந்துவிடாமல் இலேசான  தள்ளாட்டத்துடன் சமாளித்துக் கொண்டார். ஆனால், அவருடைய மூக்குக் கண்ணாடி கழன்று விழுந்தது. உடனே, பின்வரிசையில் இருந்த வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட சிலர் கருணாநிதியைச் சூழ்ந்து நின்று அ.தி.மு.க-வினரை எச்சரித்தனர். jayalalitha_k.k.s.s.r_11135.jpgமற்ற தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஆத்திரமடைந்து புத்தகக் கட்டுக்களை தூக்கி அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பக்கம் வீசி எரிந்தனர். பதிலுக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பக்கம் புத்தகக்கட்டுகளை வீசி எரிந்தனர். கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஓடிப்போய் காங்கிரஸ் எம்.எல்.ஏ பொன்னாம்மாளின் மேஜையில் இருந்த மைக்கைக் கழற்றி வீரபாண்டி ஆறுமுகம் மண்டையைப் பிளந்தார்.

வீரபாண்டி ஆறுமுகம் அடிபட்டதும் அவரைத் தாங்கிப்பிடிக்க துரைமுருகன் ஓடிவந்தார். சட்டமன்றம் கூச்சல்களால் அதிர்ந்தது. கருணாநிதி, பேராசிரியர் க.அன்பழகன், அமைச்சர் சாதிக் பாட்சா உள்ளிட்டவர்கள் உடனே அவையை விட்டு வெளியேறினார்கள். அந்த நேரத்தில் ஜெயலலிதாவிடம் இருந்து திடீரென்று “என்னைக் காப்பாற்றுங்கள்” என்று கூச்சல் கிளம்பியது. அதையடுத்து அவரும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் அவையில் இருந்து வெளியேறினார்கள். வெளியில் வந்த ஜெயலலிதா தலைவிரிகோலமாக இருந்தார். அவர் சேலை கிழிந்து இருந்தது. “ஜெயலலிதாவுக்கு ஒன்றும் இல்லையே... பிறகு ஏன் அவர் என்னைக் காப்பாற்றுங்கள்” என்று கத்தினார் என எதிர்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த மற்ற கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு குழப்பமாக இருந்தது. சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய ஜெயலலிதா நேராக ராஜ் பவன் சென்றார். அன்றைய ஆளுநர் பி.சி.அலெக்சாண்டரிடம் புகார் கொடுத்தார். அதில், “ஆளும்கட்சி எம்.எல்.ஏ துரைமுருகன் சட்டமன்றத்தில் என் சேலையைப் பிடித்து இழுத்து என்னை மானபங்கப்படுத்த முயன்றார்” என்று குறிப்பிட்டு இருந்தார். அங்கிருந்து கிளம்பி போயஸ்கார்டன் வந்த ஜெயலலிதா அங்கு வைத்துப் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியிலும், துரைமுருகன் தன் சேலையைப் பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயன்றதாக தெரிவித்தார். ஆனால், உண்மையில் அன்று ஜெயலலிதாவுக்குப் பக்கத்தில் கூட துரைமுருகன் வரவில்லை. அவர் மண்டை உடைந்த வீரபாண்டி ஆறுமுகத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டுதான் நின்றிருந்தார். ஆனால், ஜெயலலிதாவின் குற்றச்சாட்டால் தமிழக அரசியல் வரலாற்றில் துரைமுருகனுக்கு துச்சாதனன் பட்டம் கிடைத்தது. ‘ஜெயலலிதாவின் சேலையைப் பிடித்து இழுத்த துரைமுருகன்’ என்று எதிர்கட்சிகளின் மேடைகளில் இன்னமும்கூட துரைமுருகன் துகிலுரிக்கப்படுகிறார். 

டெல்லி நாடகம் தொடக்கம்!

jaya_left_11491.jpgபோயஸ் கார்டனில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுத்த ஜெயலலிதா, நேராக தேவகி மருத்துவமனையில் போய் படுத்துக்கொண்டர். உடனே அவரை நலம் விசாரிக்க மத்திய அமைச்சர் தினேஷ் சிங்கை அனுப்பி வைத்தார் ராஜீவ் காந்தி. அவரிடம் கருணாநிதியின் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் ஜெயலலிதா. ‘இதை வைத்து எல்லாம் ஆட்சியைக் கலைக்க முடியாது’ கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்று சொல்லிவிட்டு தினேஷ் சிங் மீண்டும் டெல்லி பறந்தார். மருத்துவமனையில் இருந்து திரும்பிய ஜெயலலிதாவும் டெல்லி விரைந்தார். அங்கு பிரதமர் ராஜீவ் காந்தியைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பிலும் மத்திய அமைச்சர் தினேஷ் சிங் உடன் இருந்தார். அங்கும் ஜெயலலிதா வைத்த கோரிக்கை, “கருணாநிதி ஆட்சியைக் கலைத்துவிடுங்கள். நான் காங்கிரஸூடன் கூட்டணிக்குத் தயார். இருவரும் சேர்ந்து தேர்தலைச் சந்திப்போம்” என்பதுதான். ராஜீவ் காந்தி என்ன சொன்னாரோ, அதன்பிறகு ஜெயலலிதா பூட்டாசிங்கை சந்தித்தார். ஜனாதிபதி வெங்கட்ராமனைச் சந்தித்து புகார் கொடுத்தார். அதன்பிறகு விறுவிறுவென டெல்லியில் காட்சிகள் மாறின. கருணாநிதியின் ஆட்சியைக் கலைப்பதற்கான காரணங்கள் ஒவ்வொன்றாகத் தேடித்தேடி எடுக்கப்பட்டன. கடைசியில் விடுதலைப்புலிகளுக்கு உதவினார் என்று சொல்லி 1991-ம் ஆண்டு கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டது. அ.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டது. ஜெயலலிதா முதல் அமைச்சர் நாற்காலியை நோக்கி முன்னேற்றிப் போய்க் கொண்டிருந்தார். நடராசன் அவருக்குப் பின்னால் இருந்து வேகமாக காய்களை நகர்த்திக் கொண்டிருந்தார். 

கதை தொடரும்

http://www.vikatan.com/news/coverstory/86080-criminal-criminal-criminal-how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter---35.html

Link to comment
Share on other sites

ஆட்சியைக் கலைக்க அ.தி.மு.க, காங். கூட்டணி! - சசிகலா,ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 36

 

சசிகலா

ருணாநிதி ஆட்சியைக் கலைத்துவிட வேண்டும் என்று துடியாய் துடித்துக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. அதற்காக ராஜீவ் காந்தியோடு பல பேரங்களை நடத்திப் பார்த்தார். ஜெயலலிதாவின் ஒற்றைக் கோரிக்கையை பணயமாக ஏற்ற ராஜீவ்காந்தி, 1989 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியை சாதித்துக் கொண்டார். தமிழகத்தில் வெற்றிகரமாக அ.தி.மு.க-காங்கிரஸ்-சி.பி.ஐ(தா.பாண்டியன்) அமைந்தது. இதற்குப் பின்னணியில் காங்கிரஸ் பக்கம் இருந்து வாழப்பாடி ராமமூர்த்தி வேலை செய்தார். வழக்கம்போல், அ.தி.மு.க பக்கம் இருந்தது சாட்சாத் நடராசன்தான்.

அ.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி

ஜெயலலிதா, ராஜீவ் காந்தி

1989-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் மாதம் நடந்தது. தேர்தல் முடிவுகள் வெளியானபோது, அ.தி.மு.க-காங்கிரஸ்- இந்திய கம்யூனிஸ்ட்(தா.பாண்டியன்) கூட்டணி அசுரத்தனமான வெற்றியை ஈட்டி இருந்தது. தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளில் நாகப்பட்டினத்தைத் தவிர மற்ற அ.தி.மு.க 11, காங்கிரஸ் 27, சி.பி.ஐ (தா.பாண்டியனும் கைசின்னத்தில் போட்டியிட்டார்) - 1 தொகுதி என 39 தொகுதிகளை இந்தக் கூட்டணியே கைப்பற்றி இருந்தது. தி.மு.க-வுக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. தி.மு.க கோட்டையான சென்னையே ஓட்டையாகிப் போய் இருந்தது. காங்கிரஸுக்கு தமிழகத்தில் கிடைத்திருந்த இந்த வெற்றி மற்ற மாநிலங்களில் கிடைக்கவில்லை. அதனால், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையவில்லை. மாறாக, தேசிய முன்னணி ஆட்சி அமைத்தது. வி.பி.சிங் பிரதமரானார். அதனால், தி.மு.க ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கை கானல் நீராகக் கட்சியளித்தது. ‘எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவதுபோல்’ தமிழகத்தில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத தி.மு.க-வுக்கு வி.பி.சிங் அமைச்சரவையில் இடம் கொடுக்க முன்வந்தார். பதறிப்போனார் ஜெயலலிதா, டெல்லி பறந்தார் நடராசன்.

தேர்தல் நேர பேரங்கள் வெளியாகும்! - டெல்லி எச்சரிக்கை

ராஜீவ் காந்தி, ஜெயலலிதாடெல்லி சென்ற நடராசன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர்களைச் சந்திக்கவில்லை. தேசிய முன்னணித் தலைவர்கள் சிலரைச் சந்தித்தார். ஜெயலலிதா சொன்னவர்களையும் சந்தித்தார்... ஜெயலலிதா சொல்லாதவர்களையும் சந்தித்தார் நடராசன். அப்போது, ஹெக்டே மூலம் தேசிய முன்னணித் தலைவர்களில் ஒருவரான அருண் நேருவுக்கு நடராசன் தகவல் அனுப்பினார். “தி.மு.க-வுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டாம். ஒரு இடம் கூட ஜெயிக்காத தி.மு.க-வை நம்பி எந்தப் பயனும் இல்லை. தேவைப்பட்டால் தமிழகத்தில் 11 எம்.பி-க்களை வைத்துள்ள அ.தி.மு.க ஆதரவு கொடுக்கும். எதிர்காலத்தில் கூட்டணிகூட வைத்துக் கொள்ளலாம்” என்பதுதான் நடராசன் கடத்திய தகவல்.

ஆனால், நடராசன்-ஜெயலலிதாவின் இந்தக் கோரிக்கையை பிரதமர் வி.பி.சிங் புறக்கணித்துவிட்டார். “கருணாநிதியை வஞ்சிப்பதன் மூலம் தேசிய முன்னணி உடைவதை நான் விரும்பவில்லை” என்று கறாராக வி.பி.சிங் மறுத்துவிட்டார். இந்த திரைமறைவு பேரங்களுக்கு அடிப்படையாக இருந்த ரகசியம் ஒன்று அந்த நேரத்தில் வெளியாகி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அருண்நேருவை சந்திக்க நடராசனுக்கு ஜெயலலிதா கொடுத்தனுப்பிய அறிமுகக் கடிதத்தின் நகல்தான் அந்த ரகசியம். அது டெல்லி வழியாக கருணாநிதியின் கைகளுக்கு வந்துசேர்ந்தது.

கருணாநிதிக்கு வந்ததுபோல், ஜெயலலிதாவின் ‘டபுள் கேம்’ பற்றிய பிளான் காங்கிரஸ் கட்சியின் தலைமையையும் எட்டியது. ஜெயலலிதாவின் இரட்டை நிலைப்பாட்டைப் பார்த்து கடுப்பான காங்கிரஸ் தலைமை, “ஜெயலலிதாவைத் தொடர்பு கொண்டு என்ன நாடகம் நடத்துகிறீர்கள். நீங்கள் இப்படி எல்லாம் அரசியல் செய்தால், நாங்கள் இதைவிட பலமடங்கு செய்வோம். தேர்தல் நேரத்தில் கைமாறிய பண விவகாரங்களை எல்லாம் வெளியிட வேண்டியது வரும்” என்று மிரட்டியது. அதில் கொஞ்சம் மிரண்டுபோனார் ஜெயலலிதா!

ஜெ. நடத்திய ‘இரண்டாவது ராஜினாமா’ நாடகம்!

jayalalitha_resign_300_17378.jpgநடராசனிடம் ரகசியமாகக் கொடுத்தனுப்பிய அறிமுகக் கடிதம் கருணாநிதியின் கைகளுக்கு எப்படி வந்தது என்பதில் ஜெயலலிதாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்த விவகாரத்தை வைத்து ஜெயலலிதா, சசிகலாவோடு சண்டை போட்டார். இருவருக்கும் மனஸ்தாபம் முற்றியது. வருத்தத்தில், சசிகலா போயஸ் கார்டனை விட்டு வெளியேறினார். நடராசனையும் கூட அழைத்துக் கொண்டு, கூத்தாநல்லூரில் உள்ள தனது அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டார் சசிகலா. ஒருநாள் ஆனது... இரண்டு நாள் ஆனது... அதற்கு மேல் ஜெயலலிதாவால் அந்தப் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்தளவுக்கு சசிகலா அந்த நேரத்தில் ஜெயலலிதாவின் மனதில் இடம்பிடித்திருந்தார். ஜெயலலிதாவின் தேவைகளை சசிகலாவால் மட்டும்தான் சரியாக நிறைவேற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டு இருந்தது. அதனால் சசிகலா பிரிந்து சென்றதும் தவித்துப்போன ஜெயலலிதா, கூத்தாநல்லூருக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால், சசிகலாவைத் தொலைபேசியில் பிடிக்க முடியவில்லை. என்ன செய்வதென்று யோசித்தவர், சசிகலாவை திரும்ப வரவழைக்க ராஜினாமா நாடகத்தை அரங்கேற்ற முடிவு செய்தார்.1989 டிசம்பர் 18-ம் தேதி மாலை போயஸ் கார்டனுக்கு சில குறிப்பிட்ட பத்திரிகை நிருபர்களை ஜெயலலிதா அழைத்தார். அவர்களுக்குப் பேட்டி கொடுத்த ஜெயலலிதா, “நான் என் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்; அரசியலில் இருந்தும் முற்றிலுமாக ஒதுங்குகிறேன்; முன்புபோல இல்லை. இம்முறை என் முடிவு மாறாது” என்று அறிவித்தார். நிருபர்களும் இதென்ன மீண்டும் ஒரு நாடகம் என்று அதிர்ச்சி அடைந்தனர். பேட்டியை முடித்துக் கொண்டு வெளியே வந்த நிருபர்கள் கொஞ்ச நாளில் சரியாகிவிடுவார் என்று பேசிக்கொண்டே கலைந்தனர். “தான் ராஜினாமா செய்வதாக அறிவித்தால் சசிகலா-நடராசன் தன்னிடம் திரும்பிவிடுவார்கள்” என்பது ஜெயலலிதாவின் கணிப்பு. தங்கள் போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியேறினால், ஜெயலலிதாவின் கோபம் மறைந்து மீண்டும் தங்களை அழைத்துக் கொள்வார் என்பது சசிகலா-நடராசனின் கணிப்பு. இரண்டு கணிப்புகளும் அன்று சரியாகப் பலித்தது.

மீண்டும் சசிகலா... மீண்டும் ஜெயலலிதா...

ஜெயலலிதாவின் ராஜினாமா விவகாரம், கூத்தாநல்லூரில் இருந்த சசிகலா, நடராசனுக்குத் தெரிவிக்கப்பட்டது. அ.தி.மு.கவில் பலர் நடராசனைத் தொடர்பு கொண்டு பேசினர். “நீங்கள் வந்தால்தான் அந்த அம்மாவைச் சமாதானப்படுத்த முடியும். இல்லையென்றால், இந்தக் கட்சி அழிந்துவிடும். எங்களுக்கு எதிர்காலமே இல்லாமல் போய்விடும்” என்று புலம்பினர். சசிகலா-நடராசன் சென்னை திரும்பினார்கள். டிசம்பர் 19-ம் தேதி காலை போயஸ் கார்டனுக்கு சசிகலா மட்டும் சென்றார். அப்போது நடந்த ஜெ-சசி சந்திப்பு உணர்ச்சிகரமாக இருந்தது. “இனி உங்களைவிட்டு எங்கும் போகமாட்டேன்” என்று சசிகலா சத்தியம் செய்தார். ஜெயலலிதா நார்மலானார். அந்த நேரத்தில், ஜெயலலிதாவைச் சந்திக்க ஏராளமனவர்கள் அப்பாயிண்ட்மென்ட் கேட்டிருந்தனர். அவர்களில் மூன்று பேரை மட்டும் உள்ளே அனுமதிக்கும்படி சசிகலா உத்தரவு பிறப்பித்தார்.

ஜெயலலிதா

முத்துச்சாமி, மாதவன், எஸ்.டி.எஸ். என்று மூன்றுபேர்தான் அந்த அதிர்ஷ்டசாலிகள். மூவரும் ஜெயலலிதாவைச் சமாதானம் செய்தார்கள். மற்றவர்களைவிட சசிகலாதான் ஜெயலலிதாவை அதிகமாகச் சமாதானம் செய்தார். அதன்பிறகு, அன்று மாலையும் பத்திரிகை நிருபர்கள் போயஸ் தோட்டத்துக்கு அழைக்கப்பட்டனர். அவர்களிடம் ராஜினாமாவை வாபஸ் வாங்குவதாக ஜெயலலிதா பேட்டி கொடுத்தார்.இப்படி அந்தக் காலகட்டத்தில் நடராசன்-ஜெயலலிதா மோதல் பலமுறை எழுந்தது. அந்த மோதல்களில் ஜெயலலிதாவை ஜெயிக்கவிடாமல் செய்தவை, அவர் சசிகலா மீது வைத்திருந்த பாசமும் தேவையும்தான். இரண்டாவது முறையாக ஜெயலலிதாவின் ராஜினாமா நாடகம் அரங்கேற்றப்பட்டதற்கும் அதுதான் காரணம். அது ஒரே நாளில் முடிவுக்கு வந்ததற்கும் அதுதான் காரணம்.

கதை தொடரும்...

http://www.vikatan.com/news/coverstory/86360-admk-joined-hands-with-congress-to-dissolve-the-govt-how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter---36.html

Link to comment
Share on other sites

சசிகலாவை நலம் விசாரித்த முன்னாள் பிரதமர் : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 37

 
 

சசிகலா, ஜெயலலிதா

“அரசியலில் இருந்து ஒய்வு பெறுகிறேன்; என் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று முதல் நாள் பேட்டி கொடுத்த ஜெயலலிதா, சசிகலாவை நேரில் பார்த்ததும் தன் முடிவை மாற்றிக்கொண்டார். அவருடைய இரண்டாவது ராஜினாமா நாடகம் 24 மணிநேரம்கூட தாக்குப்பிடிக்கவில்லை. கூத்தாநல்லூர் சென்றிருந்த நடராசனும் சசிகலாவும் மீண்டும் போயஸ் கார்டனுக்குள் வலம்வந்தனர். ஜெயலலிதா-சசிகலா-நடராசன் கூட்டணி பழனி பாராளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல், பாண்டிச்சேரி சட்டமன்றத் தேர்தல் வேலைகளில் பரபரப்பானது.

சீரணி அரங்கம் - நடராசனின் ரசிகர் பட்டாளம்!

1989 நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற அ.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி, நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்துக்கு ராஜீவ் காந்தி, ஜெயலலிதாபிரம்மாண்ட ஏற்பாடுகளைச் செய்தது. 1990 ஜனவரி 24-ம் தேதி சென்னை மெரீனா கடற்கரையில் இருந்த சீரணி அரங்கத்தில் அந்தக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள சென்னை வந்த ராஜீவ் காந்திக்கு விமான நிலையத்திலேயே பலத்த வரவேற்பு. அங்கேயே கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டிருந்தது. ராஜீவ் காந்தியை வரவேற்கப்போய் இருந்த ம.பொ.சி, “அய்யோ என்னை விட்டுவிடுங்கள்... நான் வெளியில் போகிறேன்...” என்று கூப்பாடு போடும் அளவுக்கு கூட்டநெரிசல் இருந்தது. அப்படியானால் மாலை மெரீனாவில் திரண்ட கூட்டம் பற்றிச் சொல்லவா வேண்டும்! சீரணி அரங்கத்தில் ராஜீவ் காந்தி பேசும் மேடை வழக்கத்துக்கு மாறாக சாதரண மேடையாக அமைக்கப்பட்டு இருந்தது. அதற்கு முன்பு அவர் தமிழகத்தில் கலந்துகொண்டு பேசிய பொதுக்கூட்டங்களில் எல்லாம் ‘குண்டு துளைக்காத மேடை’ தான் அமைக்கப்பட்டன. ஆனால், சீரணி அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு குண்டு துளைக்காத மேடை அமைக்கப்படவில்லை.

ராஜீவ் வாழ்க்கையை முடிக்கப்போகும் ரத்தக்களறிக்கான ஒத்திகை இப்படிப்பட்ட சின்னச் சின்ன அஜாக்கிரதைகளில்தான் ஆரம்பித்தது. சீரணி அரங்க மேடையில் ஜெயலலிதா உற்சாகமாக அமர்ந்திருந்தார். கூட்டம் தொடங்குவதற்கு முன் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசைக் கச்சேரி நடைபெற்றது. மேடைக்கு எதிரில்  பத்திரிகையாளர்கள் அமர்ந்திருந்தனர். தோளில் கம்பளி சால்வையைப் போட்டுக் கொண்டு பத்திரிகையாளர்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்து நடராசன் அமர்ந்தார். பத்திரிகையாளர்களோடு கேஷூவலாக பேசிக் கொண்டிருந்தவர், “பார்த்தீர்களா! எவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டியிருக்கிறோம் என்று... ‘டைம்’ போதவில்லை. இன்னும் கொஞ்சம் கூடுதலா ‘டைம்’ கிடைச்சிருந்தா, இதைவிட பெரிய கூட்டத்தை கூட்டியிருப்போம்...” என்று காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டார். இடையிடையே அ.தி.மு.க தொண்டர்கள் நடராசனிடம், ரூபாய் நோட்டுக்களிலும், கைகளில் கிடைத்த காகிதங்களிலும் ‘ஆட்டோகிராஃப்’ வாங்கிக் கொண்டிருந்தனர். நடராசனைச் சுற்றி கூடியிருந்த கூட்டம் தனியாகத் தெரிந்தது. அன்றைக்கு அது ஆச்சரியம். இன்றைக்கு அது வரலாறு.

எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா, இந்திரா காந்தி-ராஜீவ் காந்தி!

சீரணி அரங்கப் பொதுக்கூட்டத்தில் ராஜீவ் காந்தி ஆங்கிலத்தில் பேசினார். அதை ப.சிதம்பரம் தமிழில் மொழிபெயர்த்தார். ராஜீவ் தனது நடராசன்பேச்சில், “இந்திரா-எம்.ஜி.ஆர் நட்புடன் இருந்து தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டனர். அதுபோல், நானும் ஜெயலலிதாவும் இணைந்து செயல்பட்டு தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பாடுபடுவோம்” எனக் குறிப்பிட்டார். ஜெயலலிதா, “என்னைப் பார்க்க தமிழகம் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் வர முயன்றனர். அவர்களைத் தடுக்கப் பார்த்தார் முதியவர் கருணாநிதி. அவர் எண்ணம் ஈடேறவில்லை. அதனால்தான் எனக்குப் பின்னால் வங்கக்கடல் இருப்பதுபோல்... இன்று எனக்கு முன்னே மக்கள் கடல் இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தமிழக மக்கள் முகத்தில் விழிக்கமாட்டேன் என்று சொன்ன திருவாரூர் தந்த திருவாளர் தேசியம்பிள்ளை கருணாநிதி, டெல்லிக்கு காவடி தூக்கிக் கொண்டிருக்கிறார். இங்கே மக்களால் நிராகரிக்கப்பட்ட கருணாநிதி, தேசியப் பிரச்னைகளைத் தீர்க்கப்போகிறேன் என்று சொல்வது ‘கூரை ஏறிக் கோழிபிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போகப்போகிறேன்’ எனச் சொல்வதுபோல் இருக்கிறது” எனச்சொல்லி கருணாநிதியை தன் அனல் கக்கும் பேச்சில் வறுத்தெடுத்தார்.

சீரணி அரங்கப் பொதுக்கூட்டம் ஏகமொத்தமாக பல விஷயங்களை தமிழகத்துக்கு உணர்த்தியது. ஜெயலலிதா-ராஜீவ்காந்தி கூட்டணி எதிர்காலத்தில் தி.மு.க-வின் தூக்கத்தைக் கெடுக்கப்போகிறது என்பதை அது தெளிவுபடுத்தியது. மத்திய அரசில் சிறிய அதிர்வு ஏற்பட்டாலும், அது மாநில அரசை உலுக்கி எடுத்துவிடும் என்பதை கருணாநிதிக்கு வெளிப்படையாக உணர்த்தியது. அ.தி.மு.க-வுக்குள் நடராசனுக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருப்பதை அம்பலப்படுத்தியது. 

jayalalithaa

நள்ளிரவில் நடுரோட்டில் பிறந்தநாள் வாழ்த்து!

1990 பிப்ரவரி 23-ம் தேதி, நடு இரவு. பாண்டிச்சேரி தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு சசிகலாவும் ஜெயலலிதாவும் காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். காரின் முன் இருக்கையில் சசிகலா அமர்ந்திருந்தார். பின் இருக்கையில் தனியாக ஜெயலலிதா அமர்ந்திருந்தார். அப்போது ஜெயலலிதாவின் டிரைவராக இருந்த அண்ணாதுரை என்பவர் காரை ஓட்டினார். இரவில் மிதமான வேகத்தில் வந்து கொண்டிருந்த அந்தக் காரை, பாண்டிச்சேரி எல்லையில் சுலோச்சனா சம்பத் கை காட்டி நிறுத்தினார். சுலோச்சனா சம்பத் அந்த இரவில் கைகாட்டி நிறுத்துவதைப் பார்த்ததும் காருக்குள் இருந்த ஜெயலலிதா பதறிப்போய் காரைவிட்டு கீழே இறங்கினார். ஜெயலலிதா கீழே இறங்கியதும், சுலோச்சனா சம்பத் சில்க் சால்வை ஒன்றை ஜெயலலிதாவுக்குப் போர்த்தி, ‘ஹேப்பி பார்த்டே’ என்றார். அதில் நெகிழ்ந்துபோன ஜெயலலிதா, “இந்த நேரத்தில்... இந்த இடத்தில் வைத்து எனக்கு நீங்கள் பிறந்த நாள் வாழ்த்து சொல்வது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்தப் பிறந்தநாளில் எனக்கு முதல் வாழ்த்துச் சொன்னவர் நீங்கள்தான். என்னை நீங்கள் ஆசிர்வாதம் செய்ய வேண்டும்” என்று கேட்டு சுலோச்சனா சம்பத்திடம் ஆசிர்வாதமும் வாங்கினார். அந்த சந்தோஷத்தோடு காரில் ஏறிய ஜெயலலிதாவும் சசிகலாவும் பழைய பாடல்களைக் கேட்டுக் கொண்டே பயணத்தைத் தொடர்ந்தனர்.

விபத்தில் சிக்கிய சசிகலா-ஜெயலலிதா!

ஜெயலலிதா, ராஜீவ் காந்தி, முத்துச்சாமி

சென்னை மீனம்பாக்கம் பழைய விமானநிலையத்தை ஜெயலலிதாவின் கார் நெருங்கியது. அப்போது, முன் சீட்டில் உட்கார்ந்திருந்த சசிகலாவிடம், கேஸட்டை மாற்றி வேறு கேஸட் போடச் சொன்னார் ஜெயலலிதா. சசிகலா வேறொரு கேசட்டைப் போட்டுவிட்டு தூங்காமல் முழித்திருந்தார். பின் சீட்டில் இருந்த ஜெயலலிதாவும் தூங்கவில்லை. ஆனால், அவர் படுத்துக்கொண்டே பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் இவர்களுடைய காருக்கு இணையாக வந்த லாரி ஒன்று, தீடிரென காரை இடித்துத் தள்ளியது. அதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. சசிகலா-ஜெயலலிதா இருவருக்கும் தலையிலும் கண்களிலும் பலத்த அடி. டிரைவர் அண்ணாதுரை லேசான காயத்துடன் தப்பினார். சசிகலாவும், ஜெயலலிதாவும் தேவகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவல் தெரிந்து அ.தி.மு.க வி.ஐ.பி-க்கள், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தேவகி மருத்துவமனைக்குப் படையெடுத்தனர். ராஜீவ் காந்திக்கும் தகவல் சொல்லப்பட்டது. 

சசிகலாவை தனியாக நலம்விசாரித்த முன்னாள் பிரதமர்

ராஜீவ் காந்தி, சசிகலா

சசிகலாவிடம் நலம் விசாரிக்கும் ராஜீவ் காந்தி

தேவகி மருத்துவமனையின் முதல் மாடியில் இருந்த 104-ம் எண் கொண்ட அறையில் சசிகலா தங்கி இருந்தார். இரண்டாவது மாடியில் இருந்த 216-ம் எண் அறையில் ஜெயலலிதா தங்கி இருந்தார். நடராஜன் 106-ம் எண் கொண்ட அறையில் தங்கி இருந்து இருவரையும் கவனித்துக் கொண்டார். மருத்துவமனைக்கு வந்த ராஜீவ் காந்தி ஜெயலலிதாவை நலம் விசாரித்தார். அதன்பிறகு, சசிகலாவையும் நேரில்பார்த்துத் தனியாக நலம் விசாரித்தார். அ.தி.மு.க எம்.எல்.ஏ முத்துச்சாமியும், தலைமை நிலையச் செலலாளர் துரையரசனும் 215-ம் எண் அறையில் தங்கி, அங்கு ‘மினி’ அ.தி.மு.க அலுவலகத்தையே நடத்திக் கொண்டிருந்தனர். சில நாட்கள் போனபிறகு, ஜெயலலிதாவால், சசிகலாவைப் பிரிந்து இருக்க முடியவில்லை. அதனால், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையிலேயே எக்ஸ்ட்ரா பெட் போடப்பட்டு சசிகலாவும் ஜெயலலிதாவின் அறைக்கு மாற்றப்பட்டார்.

மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா மிகவும் பயந்துபோய் இருந்தார். “என்னைக் கொன்னுடுவாங்க போல... அதற்காக திட்டம் தீட்டிச் செயல்படுகின்றனர்” என்று அவரைப் பார்க்க வந்த காங்கிரஸ் கட்சி எம்.பி ஒருவரிடம் தெரிவித்தார். சசிகலா தைரியமாக இருந்தார். அந்த விபத்துகுறித்துப் பேசிய ஜெயலலிதாவின் கார் டிரைவர் அண்ணாதுரை, “மேடம் காரில் பின் சீட்டில் படுத்துக்கொண்டே வந்தார். அதனால் காரை நான் மிகவும் மெதுவாகவே ஓட்டினேன். அப்போது அந்த லாரி எங்கிருந்து வந்ததென்றே தெரியவில்லை. அகலமான ரோட்டில் நிறைய இடம் இருந்தும், அந்த லாரி எங்கள் காரை குறிவைத்து வந்து மோதியதுபோல் தெரிந்தது” எனத் தெரிவித்தார். அந்த விபத்துக்குறித்து வழக்குப் பதிவு செய்த மீனம்பாக்கம் இன்ஸ்பெக்டர் சிவாக்குமார் அனைத்து விசாரணைகளையும் முடித்துவிட்டு, ஜெயலலிதா-சசிகலாவிடம் ‘ஸ்டேட்மென்ட்’ வாங்க காத்திருந்தார். மார்ச் 2-ம் தேதிதான் அவருக்கு  அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தார் ஜெயலலிதா. ஸ்டேட்மென்ட் வாங்க வந்த இன்ஸ்பெக்டரை ஜெயலலிதா கேள்விகளால் துளைத்தெடுத்துவிட்டார். சசிகலாவும் அந்த இன்ஸ்பெக்டரிடம் “எந்த செக்ஷனில் வழக்குப் பதிவு செய்துள்ளீர்கள்... கொலை முயற்சி வழக்குத்தான் போடவேண்டும். விபத்து நடந்த ரோடு அகலமானது. எனக்கு நல்லா நியாபகம் இருக்கு... அந்த லாரி எங்களுக்கு எதிர்புறமாக வரவில்லை. அகலமான சாலையில் எங்களுக்கு பின்னால் வந்தது. அதன்பிறகு எங்கள் காருக்கு இணையாக வந்தது. ஆனால், சிறிது நேரத்தில் எங்கள் காரை குறிவைத்து வேகமாக வந்து இடித்துத் தள்ளியது. அது திட்டமிட்ட கொலை முயற்சி” என்றார்.

கதை தொடரும்...

http://www.vikatan.com/news/coverstory/86753-how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter---37.html

Link to comment
Share on other sites

ஜெயலலிதாவை வீட்டுச் சிறையில் வைத்தாரா நடராசன்? : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 38

 
 

சசிகலா, ஜெயலலிதா

ஜெயலலிதாவை சிறைவைத்தாரா நடராசன்?

ஜெயலலிதாஜெயலலிதாவின் கார் மீது லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்த ஜெயலலிதாவும், சசிகலாவும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். அன்று போயஸ் தோட்டத்து வீட்டுக்குள் போன ஜெயலலிதா, அதன்பிறகு 5 மாதங்களுக்கு வெளியில் வரவே இல்லை. பொது நிகழ்ச்சிகள், கட்சிப் பொதுக்கூட்டங்கள், அ.தி.மு.க அலுவலகம், சட்டமன்றம் என எங்கும் அவர் செல்லவில்லை. அவரைச் சந்திப்பதற்காக போயஸ் தோட்ட வீட்டுக்கு தேடிச்சென்றவர்களையும் சந்திக்கவில்லை. முற்றிலுமாக வெளியுலகைத் துண்டித்து, தன்னைத்தானே வீட்டுச் சிறையில் அடைத்துக் கொண்டார் ஜெயலலிதா! அவருடைய இந்த நடவடிக்கைக்குக் காரணம் என்ன? என்பது யாருக்கும் தெரியவில்லை. ஒருகட்டத்தில் ஜெயலலிதா இருக்கிறாரா... இல்லையா... என்பதே சந்தேகத்துக்கு உரியதாக இருந்தது. மாற்றுக் கட்சிக்காரர்களைச் சந்திக்கத் தேவையில்லை... சொந்தக் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களைச் சந்திக்கவேண்டிய கட்டாயம் இல்லை... ஆனால், கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளில் ஒருவரையாவது சந்திக்கலாமே... அதுவும் தேவையில்லை என்றால், “ஏன் சந்திப்பதில்லை” என்பதை விளக்கி ஒரு அறிக்கையாவது கொடுக்கலாமே! எதையும் செய்யாமல், ஒன்றும் சொல்லாமல் 5 மாதங்களாக ஒருவரைக் காணவில்லை என்றால் என்ன நினைப்பது... இவரை நம்பி எப்படி அரசியல் செய்வது... அடுத்தகட்டமாக செய்ய வேண்டிய வேலைகள் பற்றி யாரிடம் கலந்து பேசுவது... என்ற குழப்பத்திலேயே அ.தி.மு.க கூடாராம் இருந்தது. பலவிதங்களில் வதந்திகள் பரவின. “நடராசன்தான் ஜெயலலிதாவை வீட்டுச் சிறையில் வைத்துள்ளார்” என்று ஜெயலலிதா ரகசியத்துக்குச் சிலர் சுவாரசியத்தைக் கூட்டினர்.

நாவலரிடம் தெளிவுபடுத்திய நடராசன்!

நடராசன்நடராசன் ஜெயலலிதாவை வீட்டுச் சிறையில் வைத்துள்ளார் என்ற தகவல் பரவிக் கொண்டிருந்த நேரத்தில், நடராசன் திடீரென நாவலர் நெடுஞ்செழியனை நேரில்போய் சந்தித்தார். நாவலர் வீட்டில் நடந்த அந்தச் சந்திப்பின்போது நடராசன் “கட்சிக்கு நீங்கள்தான் தலைமை தாங்க வேண்டும் என அம்மா விரும்புகிறார்; அதனால், உடனே கட்சிக்குத் திரும்புங்கள்” என அழைப்பு விடுத்தார். நாவலர் நெடுஞ்செழியன் குழம்பிப்போனார். “நான் கொஞ்சம் யோசித்துத்தான் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க முடியும்” என்று நடராசனுக்குப் பதில் சொன்ன நாவலர், “அதற்குமுன் எனக்குச் சில விஷயங்களைத் தெளிவுபடுத்துங்கள்... ஜெயலலிதாவுக்கு என்ன ஆனது? அவர் எங்கே இருக்கிறார். வெளியில் ஏதேதோ செய்திகள் வருகிறதே!” என்று கேட்டார். சிரித்துக்கொண்டே நாவலரின் கேள்விக்குக் ‘கூலா’க பதில் சொன்ன நடராசன், “இதை எல்லாம் நீங்களும் நம்புகிறீர்களா? என்னால் அந்த அம்மாவை வீட்டுச்சிறையில் அடைத்து வைக்க முடியுமா? அவருக்கு உடல்நிலை கொஞ்சம் சரியில்லை. அதனால், ஓய்வில் இருக்கிறார். அதை வெளியில் சொல்வதற்கு அவர் ‘இமேஜ்’ தடுக்கிறது. வேகமாக குணமடைந்து வருகிறார். எல்லோரும் பிரமிக்கும்படி விரைவில் வெளியில் வருவார். இன்று தவறான தகவலைப் பரப்புபவர்கள், அப்போது உண்மையைப் புரிந்து கொள்வார்கள்” என்றார்.

ஆற்காடு வீராச்சாமியை காவு வாங்கிய நடராசன்!

க.அன்பழகன், கருணாநிதி, ஆற்காடு வீராச்சாமி

ஜெயலலிதா போயஸ் கார்டன் சிறைக்குள் இருந்தாலும், நடராசன் காரியம் ஆற்றிக் கொண்டே இருந்தார். அவர் தொட்ட விவகாரங்கள் அனைத்திலும் அவருக்கு வெற்றியே கிட்டியது. “ஜெயலலிதா வீட்டுக்குள் முடங்கி இருக்கும் நேரத்தில், பரபரப்பாக எதையாவது செய்ய வேண்டும். அது தி.மு.க-வுக்கு அதிர்ச்சியாக இருக்கவேண்டும். அப்போதுதான், அ.தி.மு.க-வை உயிரோட்டமாக வைத்திருக்க முடியும்” என்று நினைத்த நடராசன், ‘பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சி’ வைத்து நடத்திக் கொண்டிருந்த குலோத்துங்கச் சோழனைத் தொடர்பு கொண்டார். தனது விருப்பத்தை அவரிடம் சொல்லி, “தி.மு.க அமைச்சர்கள் செய்யும் முறைகேடுகள் தொடர்பான ஆதாரங்களை எடுத்துத்தர முடியுமா?” எனக் கேட்டார். நடராசன் கொடுத்த வேலையை ஒத்துக்கொண்ட குலோத்துங்க சோழன், “ஜெயலலிதாவை நேரில் பார்த்துப் பேச வேண்டும்; அதன்பிறகுதான் என்னுடைய வேலைகளை ஆரம்பிப்பேன்” என்று நிபந்தனை விதித்தார். அதற்கு ஒத்துக்கொண்ட நடராசன், குலோத்துங்க சோழனை ஜெயலலிதாவிடம் நேரில் அறிமுகப்படுத்தி வைத்தார். வேலைக்கான கட்டணங்கள் பேசப்பட்டன. அதன்பிறகு தி.மு.க அமைச்சர்கள் பற்றிய விபரங்களைத் திரட்டி ஜெயலலிதாவிடம் கொடுத்தார் குலோத்துங்கச் சோழன். அதில் வசமாகச் சிக்கியது ஆற்காடு வீராச்சாமிதான். அவர் பொறுப்பில் இருந்த உணவுத்துறையில் நடந்த சில முறைகேடுகள் பற்றிய ஆவணங்கள் வசமாக ஜெயலலிதாவிடம் சிக்கிக் கொண்டன. அந்த விபரங்களை சில பத்திரிகைகளுக்கு கொடுத்தார் நடராசன். ஆற்காடு வீராச்சாமிக்கு வில்லங்கம் ஆரம்பமானது. பத்திரிகைகளில் செய்திகள் வெளியானதும், எதிர்கட்சிகள் அறிக்கைகளால் ஆளும்கட்சியை வறுத்தெடுத்தன. கருணாநிதிக்கு தலைவலி அதிகமானது. ஏதாவது ஒரு நடவடிக்கையை எடுத்தே தீரவேண்டிய கட்டாயத்துக்கு அவர் ஆளானர். தலைமைச் செயலகத்தில் தன்னை வந்து பார்க்கும்படி ஆற்காடு வீராச்சாமிக்கு உத்தரவிட்டார். கருணாநிதி அழைத்த தகவல் கிடைத்ததும் கோட்டைக்குச் சென்றார் ஆற்காடு வீராச்சாமி. அவர் கருணாநிதி அறைக்குள் நுழைந்தபோது, கருணாநிதியோடு பேராசிரியர் அன்பழகனும், தலைமைச் செயலாளரும் அமர்ந்து இருந்தனர். கருணாநிதியின் கையில் சில பைல்கள் இருந்தன. அவற்றை வைத்துக்கொண்டு ஆற்காடு வீராச்சாமியிடம் சில விளக்கங்களைக் கேட்டார் கருணாநிதி. ஆற்காடு வீராச்சாமி அதற்கு சில விளக்கங்களைக் கொடுத்தார். அவை கருணாநிதிக்கு திருப்தியாக இல்லை. உடனே கறாராகப் பேசிய கருணாநிதி, “அந்த பல ஆதாரங்களைக் கையில் வைத்திருக்கிறது; அவற்றைப் பத்திரிகைகளுக்கு கொடுத்து நம் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகிறது; உங்களை ராஜினாமா செய்யச் சொல்கிறது; நீங்கள் என்ன சொல்கிறீர்கள்” என்றார். ஆற்காடு வீராச்சாமி அமைதியாக இருந்தார். அதில் கடுப்பான கருணாநிதி, “வேண்டுமானால் நான் ராஜினாமா செய்யட்டுமா?” என்று கேட்டு ஆற்காட்டாருக்கு அதிர்ச்சி கொடுத்தார். உடனே, “இல்லை தலைவரே... நானே ராஜினாமா செய்கிறேன்” என்று அந்த இடத்திலேயே தனது ராஜினாமா கடிதத்தை எழுதிக் கொடுத்தார் ஆற்காடு வீராச்சாமி. இந்தச் சம்பவம் அன்றைக்கு தி.மு.க-வுக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது; நடராசனுக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது; சசிகலாவுக்கு பெருமிதமாக இருந்தது; ஜெயலலிதாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 

ராஜீவ் காந்தியை சந்திக்க மறுத்த ஜெயலலிதா!

ராஜீவ் காந்தி1990 ஜூன் மாதம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி காஞ்சிபுரம் வந்தார். அங்கு பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் கலந்துகொள்ள கிளம்பிய அவர், ஜெயலலிதாவையும் சந்திக்க விரும்பினார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி உத்தரவிட்டு இருந்தார். ராஜீவ் காந்தி அலுவலகத்தில் இருந்து டெல்லியில் இருந்த சேடப்பட்டி முத்தையாவைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னார்கள். அதைக் கேட்ட சேடப்பட்டி முத்தையாவுக்கு இரட்டை மகிழ்ச்சி! ஒன்று... முன்னாள் பிரதமர் அலுவலத்தில் இருந்து நம்மைத் தொடர்பு கொண்டு பேசுகிறார்களே என்பது. மற்றொன்று... ராஜீவ் காந்தி பெயரைச் சொன்னால், போயஸ் கார்டன் கதவுகள் நிச்சயம் திறக்கும். 5 மாதங்களாக வெளியில் தலைகாட்டாத ஜெயலலிதா எப்படி இருக்கிறார் என்பதையும் தெரிந்து கொள்ளலாம் என்பது. ஆனால், அவருக்கு நடராசனைப் பற்றியும் தெரியும். அதனால், தனியாகப்போகாமல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியையும் அழைத்துக்கொண்டு போனார். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. இருவராலும் ஜெயலலிதாவைச் சந்திக்கவே முடியவில்லை. சசிகலாவை மட்டும்தான் பார்க்க முடிந்தது. அவர், “அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை; வீல்சேரைப் பயன்படுத்தித்தான் உலவுகிறார்; அதனால், இந்தமுறை ராஜீவ்காந்தியைச் சந்திக்க முடியாது; தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்” என்று சொல்லி அனுப்பிவிட்டார். அதன்பிறகும் ஜெயலலிதா பற்றி தெளிவான விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஜெயலலிதா சார்பில் அனைத்தையும், சசிகலா, நடராசன்தான் ‘டீல்’ செய்தனர்.

கதை தொடரும்...

http://www.vikatan.com/news/coverstory/87170-was-jayalalithaa-kept-under-house-arrest-how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter---38.html

Link to comment
Share on other sites

போயஸ் கார்டனில் மாதவன் செய்த ரகளை : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 39

 
 

சசிகலா, ஜெயலலிதா

.தி.மு.கவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ‘அஞ்ஞாதவாசம்’ போனவரைப்போல, யார் கண்ணிலும்படாமல் தலைமறைவாக இருந்தார். ஒரு நாள் அல்ல... இருநாள் அல்ல... ஏறத்தாழ 5 மாதங்களாக அவரைக் காணவில்லை. ஜெயலலிதாவை நிழலாகப் பின் தொடரும் சசிகலாவும், நடராசனும்தான் அவரை வீட்டுச் சிறையில் வைத்திருப்பதாக பேச்சுகள் உலவின. ஆனால், உண்மையில் அந்தக் காலகட்டத்தில் நடராசனுக்கே ஜெயலலிதாவோடு லேசான மனஸ்தாபம் ஏற்பட்டு இருந்தது. அவரே அன்றாடம் போயஸ் கார்டன் வீட்டுக்குப் போவதை குறைத்துக் கொண்டிருந்தார். சசிகலா மட்டும் தினமும் சென்று வந்து கொண்டிருந்தார். அதுபோல, நடராசன் கட்டுப்பாட்டில் இருந்த போயஸ் கார்டன் தொலைபேசிக்கு புதிதாக ஆள் போடப்பட்டது. மோகன் என்ற அந்த நபர்தான், அந்த நேரத்தில் போயஸ் கார்டனுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார். நடராசனுக்கு அந்த அளவுக்குச் சிக்கல் ஏற்பட முக்கியக்காரணம் மாதவன். 

யார் அந்த மாதவன்?

மாதவன்மாதவன் தி.மு.க-வில் சட்டத்துறை அமைச்சராக இருந்தவர். அதன்பிறகு அ.தி.மு.க-வுக்கு வந்தார். எம்.ஜி.ஆர் இறந்தபிறகு ஜா.அணியில் முக்கியத் தலைவர்களில் ஒருவராக வலம் வந்தார். ஜானகி கட்சியை மொத்தமாக ஜெயலலிதாவிடம் ஒப்படைத்த பிறகு, மாதவனும் ஜெயலலிதாவின் தலைமையை சத்தமில்லாமல் ஏற்றுக் கொண்டார். கட்சியின் பொருளாளர் பதவி, ராஜ்ய சபா எம்.பி. பதவியை ஜெயலலிதாவின் தயவால் பெற்றார். எதிர்கட்சியில் இருந்துவிட்டு... அதன்பிறகு எதிரணியில் இருந்துவிட்டு... ஜெயலலிதாவிடம் வந்தவர், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி வரிசையாகப் பதவிகளையும் பெற்றார். மாதவனின் அரசியல் சாணக்கியத்தனத்துக்கு இதைவிட உதாரணம் வேறு என்ன இருக்க முடியும். அப்படிப்பட்ட மாதவனால் இடையில் கொஞ்சகாலம் நடராசனுக்குச் சிக்கல் வந்தது.

ஒருநாள் மாதவன், காரைக்குடி அருகில் உள்ள கல்லலில் நடைபெற்ற அ.தி.மு.க தொண்டர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார். அப்போது அவரைச் சூழ்ந்து கொண்ட, அ.தி.மு.க தொண்டர்கள், “கட்சிக்குள் என்ன நடக்கிறது என்பதே எங்களுக்குப் புரியவில்லை. இந்த அம்மாவை நம்பி எப்படி அரசியல் நடத்துவது? நடராசன் என்பவர்தான் கட்சியில் அனைத்தையும் தீர்மானிக்கிறார் என்கிறார்கள். யார் அந்த நடராசன்? அவர் கட்சியில் என்ன பொறுப்பில் இருக்கிறார்? அவருக்கு கட்சியில் அவ்வளவு முக்கியத்துவம் எப்படி வந்தது? எங்களைப்போன்ற சாதரணத் தொண்டர்களை அந்த அம்மா சந்திக்கத் தேவையில்லை. ஆனால், உங்களைப் போன்றவர்களைக்கூட சந்திக்கவில்லை என்றால், நாங்கள் எந்த நம்பிக்கையில் கட்சியில் இருப்பது... அரசியல் செய்வது...” எனக்கேட்டு மாதவனை சூடேற்றிவிட்டனர்.

மாதவனுக்கும் நடராசன் மீது ஏற்கனவே கடுமையான எரிச்சலும் அதிருப்தியும் இருந்தது. அந்தநேரத்தில் இந்தப் புலம்பல்களையும் சேர்த்துக் கேட்ட மாதவன் ஒரு முடிவோடு சென்னை திரும்பினார். மறுநாள் காலை, போயஸ் கார்டனுக்குப் போனார். அவர் அங்கு போனபோது, நடராசன், சசிகலா அங்கு இல்லை. ஆனாலும் மாதவனுக்கு ஜெயலலிதாவைச் சந்திக்க ‘அப்பாயின்ட்மென்ட்’ மறுக்கப்பட்டது. ஆனால், மாதவன் சோர்ந்துவிடவில்லை. சசிகலா, நடராசன் இல்லை என்பதை அறிந்துகொண்ட அவர், “நான் அந்த அம்மாவை நேரில் சந்திக்க வேண்டும். அதற்கு வாய்ப்பு இல்லையென்றால், தொலைபேசி, இன்டர்காம் என எதிலாவது அவருடன் பேசியேதீர வேண்டும். அதுவரை இந்த இடத்தைவிட்டு நகரமாட்டேன்” என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டார்.

அதன்பிறகு, மாதவனின் பிடிவாதம் ஜெயலலிதாவுக்கு தெரிவிக்கப்பட்டது. “பைஃவ் மினிட்ஸ் மாதவனை வெயிட் பண்ணச் சொல்லுங்க. நான் அவர மீட் பண்றேன்” என்று பதில் சொன்ன ஜெயலலிதா, சரியாக 5 நிமிடங்கள் கழித்து மாடியில் இருந்து இறங்கி வந்தார். மாதவனிடம் எல்லா விஷயங்களையும் கேட்டுக் கொண்ட அவர், “நான் விரைவில் திரும்பி வந்துவிடுவேன்; யாரும் சோர்வு அடையத் தேவையில்லை; நான் இப்போது நடராசனுக்கு கட்சி வேலைகள் எதையும் கொடுப்பதில்லை; அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கட்சி விவகாரங்கள் தொடர்பாக நடராசனும் எதையும் கலந்து கொள்ளத் தேவையில்லை; நீங்களும் இதை நம் கட்சிக்காரர்களிடம் தெரியப்படுத்துங்கள்” என்று நம்பிக்கை கொடுத்தார். மாதவன் இந்த விஷயத்தை கட்சியில் அனைத்துமட்டங்களிலும் மகிழ்ச்சியோடு தெரிவித்தார். ஆனால், அப்போதே நடராசன் மாதவனுக்கு கட்டம் கட்டும் வேலைகளைத் தொடங்கிவிட்டார். 

மீண்டும் டிஸ்மிஸ்... மீண்டும் போட்டி அணி...

குழந்தைவேலு,கே.கே.எஸ்.எஸ்.ஆர்,ராமராஜன், திருநாவுக்கரசு12 ஜூலை 1990-ல் ‘நமது எம்.ஜி.ஆர்’ பத்திரிகையில் ஒரு அறிவிப்பு வந்தது. அதில், திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர், குழந்தைவேலு, நடிகர் ராமராஜன் ஆகியோரை நீக்கம் செய்து ஜெயலலிதா அறிவித்து இருந்தார். ஜெயலலிதா வீட்டைவிட்டு வெளியில் வரவில்லை என்றாலும், இதுபோன்ற கட்சியின் அதிரடி வேலைகள் கச்சிதமாக நடந்துகொண்டே இருந்தன. எல்லாம் நடராசன் வேலைகள். அதோடு, அந்தப் பத்திரிகையில், கட்சியின் உயர்மட்டக் குழுவில் புதிதாக 49 பேரை இணைத்திருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதையடுத்து மீண்டும் திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர், குழந்தைவேலு, பண்ரூட்டி ராமச்சந்திரன் ஆகியோர் தனியாகக் கூடிப் பேசினார்கள். நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க என்றனர். அ.தி.மு.க அலுவலகத்தை கைப்பற்றும் முயற்சியில் இறங்கினர். ஆனால், எதற்கும் அசையவில்லை ஜெயலலிதா. 

ஜெயலலிதா பராக்... பராக்...

ஜெயலலிதா, ஆர்.எம்.வீரப்பன்1990 ஆகஸ்ட் 3-ம் தேதி ஜெயலலிதா தரிசனம் தந்தார். ஏறத்தாழ 5 மாதங்கள் அஞ்ஞாதவாசம் போய் இருந்த அவர், ஆகஸ்ட் மாதம் வெளியில் வந்தார். அன்று ஆடிப்பெருக்கு வேறு. பல மாதங்களுக்குப் பிறகு, வெளியில் வரும் தங்கள் தலைவிக்கு அ.தி.மு.க-வினர் அமோக வரவேற்பு கொடுத்தனர். ஜெயலலிதாவை நடராசன் சிறை வைத்துள்ளார் என்ற வதந்திகள் எல்லாம் மறைந்தன. போயஸ் கார்டன் வீட்டில் இருந்து அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க அலுவலகம் வரை பேனர்கள், அ.தி.மு.க கொடிகள் என்று திருவிழா போல இருந்தது. ஜெயலலிதாவைக் காணக்கூடிய பொதுமக்கள் கூட்டம், கட்சித் தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. சரியாக காலை பத்தரை மணிக்கு அவ்வை சண்முகம் சாலை பட்டாசுகளால் அதிர்ந்தது. காரில் வந்து இறங்கிய ஜெயலலிதா, நேராக மாடிக்குப்போய் கூட்டத்தைப் பார்த்து கை அசைத்தார். ‘நானே தலைவி... நான் ஒருவரே தலைவி!’ என்பதுபோல் ஜெயலலிதா அந்தக்கூட்டத்தில் உயர்ந்து நின்றார். அதன்பிறகு கூடிய, கட்சியின் உயர்மட்டக்குழுவில், “கே.கே.எஸ்.எஸ்.ஆர், திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை கட்சியில் இருந்து நீக்கியது சரிதான்... அந்த நடவடிக்கையை நான் எடுத்ததைப் பாராட்டி வெளியூர்களில் இருந்து வரும் பாராட்டுக் கடிதங்கள், தொலைபேசி அழைப்புகளே அது சரியான நடவடிக்கை என்பதற்கு சாட்சி. இனிமேல் அஞ்ஞாதவாசம் என்பது எல்லாம் இருக்காது. நேரடி அரசியலில் தீவிரமாக ஈடுபடுவேன்” என்று கட்சிக்காரர்ளுக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டு கிளம்பினார்.

அந்தக் கூட்டத்தில் பொருளாளர் மாதவன் ஜெயலலிதாவை புகழ்ந்து இரண்டு நிமிடங்கள் பேசினார். ஆனால், அதேநாளில் சென்னை நகரம் முழுவதும், ‘மாதவனை கட்சியைவிட்டு வெளியேற்றுங்கள்’ என்ற போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தன. தர்மலிங்கம் என்பவர் பெயரில் அந்தப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. ஆனால், “நான் இந்தப் போஸ்டர்களை அச்சடிக்கவே இல்லை; நான் இதை ஒட்டவும் இல்லை” என்று தர்மலிங்கம் பத்திரிகையாளர்களிடம் சத்தியம் செய்து புலம்பிக் கொண்டிருந்தார். அது யாருடைய வேலையாக இருக்கும் என்பதை கணிப்பது பெரிய வேலை அல்ல. 

ஜெயலலிதாவின் இரண்டு நாள் உண்ணாவிரதம்...

தலைமைக் கழகத்தில் ஜெயலலிதாஅ.தி.மு.க கட்சி அலுவலகத்துக்காக திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் அணி ஜெயலலிதாவோடு மீண்டும் சண்டை பிடித்தது. உட்லண்ட்ஸ் ஹோட்டலில் திருநாவுக்கரசு தலைமையில் ஒரு பொதுக்குழு கூடியது. அந்தப் பொதுக்குழு திருநாவுக்கரசை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தது. அதன்பிறகு கட்சி அலுவலகம் தங்களுக்குத்தான் சொந்தம் என்று தீர்மானம் நிறைவேற்றியது. அதனால், இரண்டு அணிகளுக்கும் மீண்டும் பிரச்னை எழுந்தது. கட்சி அலுவலகத்தைக் கைப்பற்ற ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். 1990 ஆகஸ்ட் 12-ம் தேதி உண்ணாவிரதத்தை, போயஸ் கார்டன் வீட்டில் தொடங்கினார். அது இரண்டு நாட்கள் நீடித்தது. அவர் உடல்நிலை மோசமானது. கட்சிக்காரர்கள் சிலர் டெல்லியைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். “கட்சி அலுவலகத்துக்கும், இரட்டை இலைச் சின்னத்துக்கும் எந்தப் பாதிப்பும் வராது” என்று ராஜீவ் காந்தியிடம் இருந்து நம்பிக்கையான பதில் வந்தது. வழப்பாடி ராமமூர்த்தி ஜெயலலிதாவிடம் வந்து பேசினார். நெடுஞ்செழியன் பழச்சாறு கொடுத்து ஜெயலலிதாவின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். 

கதை தொடரும்...

http://www.vikatan.com/news/coverstory/87523-madhavans-atrocity-in-poes-garden-how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter---39.html

Link to comment
Share on other sites

வருங்கால முதல்வர் நடராஜன்! சசிகலா,ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம்-40

 
 

சசிகலா, ஜெயலலிதா

போயஸ் கார்டன் விருந்து!

ராஜீவ் காந்தி, ஜெயலலிதா1990 காலகட்டத்தில், ஜெயலலிதா தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தாலும், முழுமையான ஓய்விலேயே இருந்தார். 5 மாதங்கள் அஞ்ஞாத வாசம் போனதுபோல், போயஸ் கார்டனுக்குள்ளேயே இருந்தார். அ.தி.மு.க-வில் இருந்து கே.கே.எஸ்.எஸ்.ஆர், திருநாவுக்கரசை நீக்கி கட்சிக்குள் மீண்டும் சிறு பிளவை உருவாக்கினார். கட்சி அலுவலகம், கொடி, சின்னத்தைக் காப்பாற்ற இரண்டு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். ராஜீவ் காந்தியை அழைத்து வந்து எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்தார். அதன்பிறகு ஓய்வெடுக்க ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்துக்குச் சென்றுவிட்டார். அரசியலில் அடிக்கடி ‘லீவ்’ எடுத்துக் கொண்ட ஜெயலலிதா மீது டெல்லிக்குப் பரிவு இருந்தது. அரசியலில் சுறுசுறுப்பாக வலம் வந்த கருணாநிதி மீது டெல்லிக்கு விரோதம் இருந்தது. அதனால், தலைநகரில் மாறிய அரசியல் காலநிலை ஜெயலலிதாவுக்கு  சாதகமாக அமைந்தது; கருணாநிதிக்குப் பாதகமாக அமைந்தது. சாதகங்களை ஜெயலலிதா சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். இதற்கிடையில் ஜெயலலிதாவுக்கும் நடராசனுக்கும் கொஞ்சம் மோதல் ஏற்பட்டது. அதனால், நடராசனை கொஞ்சம் விலக்கி வைத்தார். ஆனால், சசிகலாவோடு முன்பைவிட அதிக நெருக்கம் காட்டினார். தமிழகத்தில் உச்சக்கட்ட அரசியல் அனல் அடித்தது. சென்னை அண்ணாசாலையில் இருக்கும் ஸ்பென்சர் பிளாசா எதிரில் அ.தி.மு.க சார்பில் புதிதாக எம்.ஜி.ஆர் சிலை ஒன்று நிறுவப்பட்டது. 1990 அக்டோபர் மாதத்தில் அந்தச் சிலையைத் திறக்கத் தேதி குறிக்கப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்துகொள்ள ராஜீவ் காந்தி தனி விமானத்தில் பறந்து சென்னை வந்தார். ராஜீவ் காந்தியை வரவேற்க ஜெயலலிதா ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே விமான நிலையம் சென்று காத்திருந்தார். ராஜீவ் காந்திக்கு பிற்பகல் விருந்து, போயஸ் கார்டனில் தயாரானது. அந்த விருந்தில் கலந்துகொள்ள வாழப்பாடி ராமமூர்த்தி, ப.சிதம்பரம், ஆர்.எம்.வீரப்பனுக்கும் ஜெயலலிதா அழைப்பு விடுத்திருந்தார். ராஜீவ் காந்திக்கு போயஸ் கார்டனில் கொடுக்கப்பட்ட விருந்தில், 21 வகையான வெஜிடேரியன் உணவுகளோடு, இரண்டு அரசியல் கோரிக்கைகளையும் சேர்த்தே ஜெயலலிதா பரிமாறினார். முதல் கோரிக்கை, ‘சீரணி அரங்கத்தில் நடக்கும் கூட்டத்தில், ‘எம்.ஜி.ஆரின் வாரிசு’ எனத் தன்னை அறிவிக்கவேண்டும். இரண்டாவது கோரிக்கை, ‘எவ்வளவு முடியுமோ... அவ்வளவு வேகமாக தமிழகத்தில் நடக்கும் தி.மு.க ஆட்சியைக் கலைக்க வேண்டும்”. ஜெயலலிதாவின் இந்த இரண்டு கோரிக்கைகளையும் ராஜீவ் காந்தி நிறைவேற்றிக் கொடுத்தார். 

எம்.ஜி.ஆரின் வாரிசு ஜெயலலிதா ஜீ!

அண்ணாசாலையில் அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் சிலையை ராஜீவ் காந்தி திறந்து வைத்தார். அதையடுத்து, அண்ணாசாலையில் அ.தி.மு.க-காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடந்தது. அதற்குப் பிறகு வழக்கம்போல், மெரீனா கடற்கரையில் இருந்த சீரணி அரங்கத்தில் பொதுக்கூட்டம் தொடர்ந்தது. அதில் பேசிய ராஜீவ் காந்தி, “ஜெயலலிதா ஜீ... நீங்கள்தான் எம்.ஜி.ஆரின் வாரிசு” என்று அறிவித்தார். ராஜீவ் காந்தி முழங்கிய அந்த வார்த்தைகளில் ஜெயலலிதாவின் முதல் கோரிக்கை நிறைவேறியது. ராஜீவ் அந்த வார்த்தைகளை மேடையில் உரக்கச் சொன்னபோது, ஜெயலலிதா அகம் மகிழ்ந்து முகம் பூரித்துக் காட்சி அளித்தார். மேடைக்குப் பின்னால் நின்றிருந்த மணிசங்கர் அய்யர் ஜெயலலிதாவை “பொம்பிளை எம்.ஜி.ஆர்” என்று வர்ணித்துக் கொண்டிருந்தார். அதைக் கேட்டு நடராசன் சிரித்த சிரிப்பில், அங்கிருந்த நிருபர்கள் கவனம் சிதறியது. அவர்கள் அனைவரும் மேடைக்குப் பின்னால் மற்றொரு அரங்கக்கூட்டம் நடப்பதை அப்போதுதான் கவனித்தனர்.

ராஜீவ் காந்தி, ஜெயலலிதா

வி.பி.சிங் போனார்... சந்திரசேகர் வந்தார்...

எம்.ஜி.ஆர் சிலைத் திறப்பு விழா முடிந்ததும், ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தில் ஓய்வெடுக்கப்போய்விட்டார் ஜெயலலிதா. ராஜீவ் காந்தி ஒரு முடிவோடு டெல்லி நோக்கிப் பறந்து சென்றார். டெல்லியின் அரசியல் தட்ப வெட்பம் ராஜீவ் காந்திக்குச் சாதகமாக நிறம் மாறி இருந்தது. தேசிய முன்னணி சார்பில் பிரதமராக இருந்த வி.பி.சிங் ஆட்சி நாடாளுமன்றத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது. அதையடுத்து 1990 நவம்பர் 7-ம் தேதி, வி.பி.சிங் தலைமையிலான ஆட்சிக்கு அக்னீப் பரிட்சை நடத்தப்பட்டது. நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் வி.பி.சிங் வெற்றி பெறவில்லை. அதோடு அவர் பிரதமர் நாற்காலியை விட்டுவிட்டு ஒதுங்கிக்கொண்டார். ராஜீவ் காந்தி, சமாஜ்வாதி ஜனதா கட்சித் தலைவர் சந்திரசேகரை அந்த நாற்காலியில் அமர வைத்தார். ஆனால், சந்திரசேகருக்கு அந்த நாற்காலியைக் கொடுப்பதற்கு முன் ராஜீவ் காந்தி சில பேரங்களை கறாராகப் பேசிவிட்டார். அவற்றை செய்து கொடுப்பதாக ஒத்துக் கொண்டுதான் சந்திரசேகர் பிரதமர் நாற்காலியைப் பெற்றிருந்தார். 1990 நவம்பர் 10-ம் தேதி சந்திரசேகர் இந்தியாவின் எட்டாவது பிரதமராகப் பொறுப்பேற்றார். இப்படித்தான் நடக்கும் என்பதை, அக்டோபர் மாதமே ஜூனியர் விகடனுக்கு எழுதிய கட்டுரையில் ப.சிதம்பரம் சரியாக கணித்திருந்தார். சந்திரசேகர் பிரதமர் ஆனாதும், தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு இறுதிக் கட்டம் நெருங்கிவிட்டது என்பதையும் டெல்லி மெல்ல உணர்த்தத் தொடங்கியது. போயஸ் கார்டனில் ராஜீவ் காந்திக்கு வைக்கப்பட்ட விருந்து சரியாக வேலை செய்தது.

தி.மு.க ஆட்சியின் இறுதிக்கட்டம் ஆரம்பம்! 

கருணாநிதி, சந்திரசேகர்

புதிய பிரதமர் சந்திரசேகரும், தி.மு.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான நாஞ்சில் மனோகரனும் நெருங்கிய நண்பர்கள். 
நாஞ்சிலார் டெல்லி போனால், ஹோட்டல் மௌரியாவில்தான் தங்குவார். சந்திரசேகர் அந்த ஹோட்டலுக்கே தேடிவந்து நாஞ்சிலாரைச் சந்திப்பார். அந்த அளவுக்கு அவர்களுக்குள் நெருக்கமான நட்பு இருந்தது. அதனால், சந்திரசேகர் பிரதமரானதும், நாஞ்சிலாருக்கு ஏக மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியோடு கருணாநிதியைச் சந்தித்த அவர், “பிரதமருக்கு கடிதம் மூலம் வாழ்த்துத் தெரிவிக்கலாமா? அல்லது நானே நேரில் போய் வாழ்த்துச் சொல்லவா? எனக் கேட்டார். கருணாநிதி, “அவர் உங்கள் நெருங்கிய நண்பராச்சே... அதனால், நேரிலேயே போய் வாழ்த்துச் சொல்லுங்கள்” என்று நாஞ்சிலாருக்கு பச்சைக் கொடி காட்டினார். நாஞ்சிலார் நேரில் சென்றால்தான், “தமிழகத்தின் ஆட்சிக் கலைப்பு பற்றி டெல்லி என்ன நினைக்கிறது என்பதை தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்” என்பது கருணாநிதியின் கணக்கு. கருணாநிதியின் அனுமதி கிடைத்ததும் நாஞ்சிலார் தொலைபேசியில் பிரதமர் சந்திரசேகரைத் தொடர்பு கொண்டு, “டெல்லி வந்தால் உங்களைச் சந்திக்க நேரம் கிடைக்குமா?” என்று கேட்டார்.  அதற்கு சந்திரசேகர், “விளையாடதீர்கள், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம்” என்று சொன்னதும் நாஞ்சிலார் கிளம்பி டெல்லி சென்றார். ஒருவழியாக பிரதமர் சந்திரசேகரைச் சந்தித்த நாஞ்சிலார் நேரடியாகவே, “எங்கள் ஆட்சியைக் கலைக்கும் எண்ணம் இருக்கிறதா?” என்று கேட்டுவிட்டார். பிரதமர் சந்திரசேகரும் அவரிடம் எதையும் மறைக்கவில்லை. நாஞ்சிலாரிடம், “உங்களுக்கு தனிப்பட்ட முறையில் சொல்கிறேன். எனக்கு ஆதரவளித்தபோது ராஜீவ் காந்தி வைத்த பல நிபந்தனைகளில் முக்கியமான நிபந்தனை உடனடியாக தமிழ்நாடு, அஸ்ஸாம் மாநிலங்களில் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்பதுதான். அதனால், ஆட்சியைக் கலைப்பதற்குத் தேவையான காரணங்களை தமிழக ஆளுநரிடம் கேட்டிருக்கிறேன்” என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டார். நாஞ்சிலார் பிரதமர் சொன்ன விஷயங்களைக் கருணாநிதியிடம் தெளிவாகச் சொல்லிவிட்டார். தி.மு.க ஆட்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது என்பதை கருணாநிதியும் புரிந்து கொண்டார். 1989-ல் இருந்தே ஜெயலலிதாவும் நடராசனும் இதைத்தானே எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

நடராசன்-ஜெயலலிதா மோதல்!

நடராசன், ஜெயலலிதா

ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தில் தங்கி இருந்த ஜெயலலிதா அங்கிருந்து அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அறிக்கையைப் பத்திரிகைகளுக்குக் கொடுப்பதற்காக, தலைமைக் கழகத்தையும், ‘நமது எம்.ஜி.ஆர்’ பத்திரிகை அலுவலகத்தையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ஆனால், இரண்டு இடங்களிலும் தொலைபேசி இயங்கவில்லை. உடனடியாக தனது போயஸ் தோட்ட வீட்டு தொலைபேசிக்குப் பேசிய ஜெயலலிதா, தலைமைக் கழக நிர்வாகி துரையை பிடித்தார். துரையிடம் “நடராசன் என் குடும்ப நண்பர் இல்லை. அவருக்கும் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று தனது அறிக்கையை வாசித்தார். அத்துடன், “இந்த அறிக்கை நாளை வெளிவரும் நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையில் முதல் பக்கத்திலேயே வெளிவர வேண்டும். மற்ற பத்திரிகைகளுக்கும் இந்தச் செய்தி உடனடியாகப் போய்ச்சேர வேண்டும்” என்று துரைக்கு உத்தரவு பிறப்பித்தார். ஜெயலலிதாவின் அறிக்கை மறுநாள் அனைத்துப் பத்திரிகைகளிலும் பிரதானச் செய்தியாக வெளியானது. இதற்குப் பின்னணியில்தான், ‘எதிர்கால முதல்வர் நடராசன்’ என்ற கதை இருக்கிறது. தன்னை எப்போதும் புதிரான மனிதனாக, தன்னுடைய நடவடிக்கைகளை எப்போதும் மர்மமான நடவடிக்கைகளாக வைத்திருக்கும் நடராசன், சில முக்கிய நிகழ்வுகளில் ஜெயலலிதாவுக்கு தவறான தகவல்களைக் கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக அ.தி.மு.க பொருளாளர் மாதவன் பற்றி நடராசன் சொன்ன தகவல்கள். மாதவன் சில நாள்கள் சொந்த வேலையாக சிங்கப்பூர் சென்றிருந்தார். அந்தநேரம் ஜெயலலிதாவைச் சந்தித்த நடராசன் “இனிமேல் மாதவன் வரமாட்டார்; அவர் அரசியலில் இருந்து முழுமையான ஓய்வு பெற்று சிங்கப்பூர் சென்று செட்டில் ஆகிவிட்டார்; அதனால், உடனடியாக அவர் பொறுப்பை வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டும்” என்றார். அதற்கு ஜெயலலிதா என்ன சொன்னாரோ... தெரியாது. ஆனால், பொருளாளர் பொறுப்பை நடராசனை எடுத்துக் கொண்டார். சிங்கப்பூர் சென்றிருந்த மாதவன் அங்கே தன் வேலை முடிந்ததும் தமிழகம் திரும்பிவிட்டார். அவர் ஜெயலலிதாவைச் சந்தித்தபோது, “ ‘நீங்கள் சிங்கப்பூரில் செட்டிலாகிவிட்டீர்கள்’ எனக் கேள்விப்பட்டேன்” எனக் கேட்டு மாதவனுக்கு அதிர்ச்சி அளித்தார் ஜெயலலிதா. பதறிப்போன மாதவன், “யார் உங்களிடம் இப்படி எல்லாம் சொல்வது? நான் அப்படி ஒரு முடிவை எடுத்தால் உங்களிடம் தெரிவிக்காமல் எடுப்பேனா?” என்று நொந்து புலம்பினார்.

வருங்கால முதல்வர் நடராசன்!

நடராசன்

அடுத்த சம்பவம், வி.பி.சிங் ஆட்சி கவிழ்ந்தபோது, நடராசன் டெல்லியில்தான் இருந்தார். ஆனால், டெல்லியில் நடந்த பல விஷயங்களை அவர் ஜெயலலிதாவிடம் முழுமையாகச் சொல்லவில்லை. இதுபற்றி ஒருமுறை எச்.கே.எல்.பகத்திடம் புலம்பிய ஜெயலலிதா, “நடராசனும், டெல்லியில் உள்ள அ.தி.மு.க எம்.பி-களும் என்னை இருட்டிலேயே வைத்துள்ளனர்” என்று வருத்தப்பட்டாராம். “நடராசன் பத்திரிகைகளுக்குப் பல தகவல்களை அவரே கொடுக்கிறார். அதையும் பத்திரிகைகளுக்குத் தகுந்த மாதிரி மாற்றி மாற்றிக் கொடுத்து எல்லோரையும் குழப்புகிறார். உங்களைப் பற்றி தவறான தகவல்களை அவரே பத்திரிகைகளுக்கு கொடுத்துவிட்டு, அந்தப் பழியை அவருக்குப் பிடிக்காதவர்கள் மீது போட்டுவிடுகிறார்” என்று அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் பலர் ஜெயலலிதாவிடம் தொடர்ந்து புகார்களை அடுக்கினர். குறிப்பாக கடந்த காலத்தில், நடராசனால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாவலர் நெடுஞ்செழியன் ஜெயலலிதாவிடம் ஒரு தகவலைக் கொண்டுபோனார். அவர் ஜெயலலிதாவிடம், “நடராசனுக்கு தமிழகத்தின் முதல்வர் ஆகும் ஆசை வந்துவிட்டது. அதற்கான வேலைகளில் அவர் இறங்கி உள்ளார். அதுபற்றி சோதிடர்களிடம் எல்லாம் நடராசன் குறி கேட்கிறாராம். அதோடு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்து ஜெயலலிதா சி.எம். ஆனாலும் தான்தான் ‘டிஃபாக்டோ சி.எம்’. ஜெயலலிதாவால் முழுமையாக சி.எம் வேலைகளைப் பார்க்க முடியாது. அதற்கு அவருடைய உடல்நிலை ஒத்துவராது என்றெல்லாம் சில இடங்களில் பேசி உள்ளார். எனவே, அவரிடம் எச்சரிக்கையாக இருங்கள்” என்று சொன்னார். அதுபோல சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு வழக்கில் ஆஜராக வரும் நடராசனை வரவேற்க, அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்கள் பலர் வருகிறார்கள். சிலர் கட்டாயப்படுத்தி வரவழைக்கப்படுகிறார்கள். நடராசன் நீதிமன்றத்துக்கு வரும்போதும்... அங்கிருந்து கிளம்பும்போதும்... ‘வருங்கால முதல்வர் நடராசன்’ என்று கோஷம் எழுப்பப்படுகிறது” என்றெல்லாம் ஜெயலலிதாவிடம் புகார் வாசிக்கப்பட்டன. அதையடுத்துத்தான், ஜெயலலிதா அந்த அறிக்கையை வெளியிட்டார். ஆனால், அதில் ஆச்சரியம் அப்போதுதான் முன்பைவிட சசிகலாவை தனக்கு நெருக்கமானவராக வைத்திருந்தார் ஜெயலலிதாவுக்கு. ஜெயலலிதாவின் நிழலாக சசிகலா இருக்கும்போது, நடராசனை ஒதுக்கி வைத்தால் என்ன... வைக்காவிட்டால் என்ன? என்று நொந்து கொண்டனர் அ.தி.மு.க-வினர்.

கதை தொடரும்...

http://www.vikatan.com/news/coverstory/87935-natarajan-future-chief-minister-of-tn-how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter---40.html

Link to comment
Share on other sites

தமிழக அரசு டிஸ்மிஸ்! சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம்- 41

 
 

சசிகலா

“தமிழகத்தில் ஆட்சி தொடர்ந்தால் டெல்லியில் ஆட்சி கவிழும்; தமிழகத்தில் ஆட்சி கலைந்தால் டெல்லியில் ஆட்சி பிழைக்கும்” என்று டெல்லியை மிரட்டினார் ஜெயலலிதா. 

தி.மு.க ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் என்று அப்படித் துடித்துக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. அதைப் பயன்படுத்தி ஜெயலலிதாவை வைத்தே, பிரதமர் சந்திரசேகருக்கு பிரஷர் கொடுத்துக் கொண்டிருந்தார் ராஜீவ் காந்தி. ஜெயலலிதா கேட்கிறபடி தி.மு.க ஆட்சியைக் கலைக்க காரணங்கள் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார் சந்திரசேகர். காரணங்கள் இருக்கிறது என்று சொல்லி பக்கம் பக்கமாக குற்றச்சாட்டுக்களை பட்டியல் போட்டுக் கொண்டிருந்தார் ப.சிதம்பரம். ஆட்சி 5 ஆண்டுகளுக்கும் நிலைக்குமா... இடையில் கலையுமா... என்று தெரியாமல் கணக்குப்போட்டுக் கொண்டிருந்தார் கருணாநிதி. கடைசியில் ஜெயலலிதா நினைத்ததே நடந்தது.

வாழப்பாடி வைத்த வெடி!

கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஜெயலலிதா

தி.மு.க ஆட்சியைக் கலைக்கும் வேலைகள், 1990 அக்டோபர், நவம்பர் மாதங்களில் வேகம் பிடிக்கவில்லை. மந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ‘அது நடக்கும்போது நடக்கட்டும்...’ என்ற எண்ணத்தில்தான் ஜெயலலிதாவும் இருந்தார். அதனால்தான் அவர் அந்த நேரத்தில் ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தில் போய் ஓய்வெடுக்கப் போனார். அதோடு அந்தத் தோட்டத்தின் மையத்தில், பளிங்கு மாளிகை ஒன்றைக் கட்டும் வேலைகளையும் தொடங்கினார். சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் உதவியோடு அந்த மாளிகை வேகமாக எழும்பியது. அந்தத் திருப்தியில், அங்கிருந்து கிளம்பி பெங்களூரு ஜிண்டால் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கக் கிளம்பிவிட்டார். இப்படி ஓரளவுக்கு பெரிய குழப்பம் இல்லாமலேயே தமிழகத்தின் அரசியல் சூழல் நகர்ந்து கொண்டிருந்தது. ஜெயலலிதா தமிழகத்தில் இல்லாத அந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சியில் சில தலைவர்களின் நிறமும் குணமும் லேசாக மாறத் தொடங்கின. தமிழக காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி ஒரு வெடியைக் கொளுத்திப் போட்டார். அவர் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டி ஒன்றில், “அ.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமைத்து வெற்றிபெற்றால், தமிழகத்தில் கூட்டணி அரசாங்கம் தான் அமையும்; அதற்கு யார் முதல்வர் என்பதை ராஜீவ்காந்தியும் ஜெயலலிதாவும் கலந்துபேசி பிறகு முடிவு செய்வார்கள்” என்று தெவித்தார். இந்தப் பேட்டி ஜெயலலிதாவின் நிம்மதியைக் கெடுத்தது. ஜிண்டால் மருத்துவமனையில் சிகிச்சையை முடித்துவிட்டு, பெங்களூரு ஜெய மஹால் எக்ஸ்டென்சன் வீட்டில் ஓய்வில் இருந்த ஜெயலலிதாவின் நிம்மதி குலைந்தது. ஜெயலலிதா கொதித்துப் போனார். நடராசன் துடித்துப் போனார். காங்கிரஸ் கட்சி ஜெயலலிதாவின் கனவை மட்டும் கலைக்கவில்லை... நம் இலட்சியத்தையும் தகர்க்கப் பார்க்கிறது என்று நடராசன் நினைத்தார். அதன்பிறகுதான் தி.மு.க-வைக் கலைப்பதற்கான வேலைகளில் தீவிரமாகக் களம் இறங்கினார் ஜெயலலிதா. 

பெண் என்று நினைத்து ஏமாற்றப் பார்க்கிறீர்களா?

பெங்களூரு ஜெய மஹால் வீட்டில் இருந்து, டெல்லியில் இருந்த சுப்பிரமணிய சுவாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜெயலலிதா, “என்னிடம் ராஜீவ் காந்தி ஒன்றைச் சொல்கிறார்... தமிழகத்தில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் அதற்கு நேர் எதிராகப் பேசுகிறார்கள். ஒரு சாதரண பெண் என்று நினைத்து என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்களா... மத்தியில் சந்திரசேகர் அரசாங்கத்துக்கு ராஜீவ் காந்தி என்னிடம் ஆதரவு கேட்டபோது என்ன சொன்னார்? தமிழகத்தில் நீங்கள்தான் முதல்வர் என்று சொல்லித்தானே என் ஆதரவைப் பெற்றார். ஆனால், வாழப்பாடி ராமமூர்த்தி இப்போது அதற்கு நேர்மாறாகப் பேசுகிறார். அப்படியானால், நானும் என் ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டியது வரும்” என்று பொறிந்து தள்ளினார். ஜெயலலிதாவின் இந்த கோபத்தில் டெல்லி கொஞ்சம் நடுங்கிப் போனது. ஜெயலலிதாவிடம் டெல்லி சரண்டர் ஆனது. பிரதமர் சந்திரசேகரே ஜெயலலிதாவைச் சந்திக்க சென்னை வந்தார். ‘ஜெயலலிதாவைச் சந்திப்பதற்காகவே பிரதமர் தமிழகம் வருகிறார்’ என்று அறிவிப்பது நன்றாக இருக்காது என்பதால், ‘காஞ்சி சங்கராச்சாரியாரை சந்திக்கப் பிரதமர் வருகிறார்’ என்று அறிவித்தனர். 

ஜெயலலிதாவை சமாதானம் செய்த சந்திரசேகர்!

பிரதமர் சந்திரசேகர், ஜெயலலிதா

சங்கராச்சாரியாரைச் சந்தித்துவிட்டு, ஜெயலலிதாவைச் சந்தித்த பிரதமர் சந்திரசேகர், “அ.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால், தமிழகத்தின் முதல்வர் நீங்கள்தான்; இந்த உறுதியை ராஜீவ் காந்தி என் மூலமாக உங்களிடம் தெரிவிக்கச் சொன்னார்; அதனால், தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் பேசுவதை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று சமாதானம் செய்தார். அதில் சமாதானம் ஆனாலும்கூட ஜெயலலிதா அதோடு ஓய்ந்துவிடவில்லை. “தி.மு.க ஆட்சியை எப்போது கலைக்கப் போகிறீர்கள்” என்று கறாராகக் கேட்டார். அதற்குப் பொறுமையாகப் பதில் சொன்ன பிரதமர் சந்திரசேகர், “தி.மு.க ஆட்சியைக் கலைக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால், எந்த அடிப்படையில் கலைக்கச் சொல்கிறீர்கள். தமிழகத்தில் சட்டம்-ஓழுங்கு அவ்வளவு மோசமாக இல்லை. பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் ஒரு அரசாங்கத்தை அவ்வளவு எளிதாக கலைக்க முடியாது. நான் அட்டர்னி ஜெனரல் ஜி.ராமசாமியை கூடவே அழைத்து வந்துள்ளேன். அவரிடம் நீங்கள் ஆலோசனை நடத்துங்கள். அதோடு தமிழகத்தில் ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நிறைய நடத்துங்கள்” என்று சொல்லிவிட்டு மீண்டும் டெல்லிக்கு கிளம்பிச் சென்றார். இதையடுத்து டெல்லி கிளம்பிப்போன ஜெயலலிதா, ஜனாதிபதி வெங்கட்ராமனைச் சந்தித்தார். அவரிடம் தி.மு.க ஆட்சி மீதான குற்றச்சாட்டுக்களை பட்டியல் போட்டுக் கொடுத்துவிட்டு வந்தார். 

இரண்டாவது விருந்து... இறுதி எச்சரிக்கை...

ஜெயலலிதா டெல்லியில் இருந்து திரும்பிய சில நாட்களிலேயே, ராஜீவ் காந்தி சென்னை வந்தார். 1991 ஜனவரி 16-ம் தேதி அந்தச் சந்திப்பு நடந்தது. ராஜீவ் காந்தியும் சங்கராச்சாரியாரைச் சந்திக்க வருவதாகச் சொல்லிவிட்டுத்தான் வந்தார். சென்னையில் விமானத்தைவிட்டு இறங்கிய ராஜீவ் காந்தியை வரவேற்க ஜெயலலிதா மதியம் 2.30 மணிக்கே விமான நிலையம் வந்துவிட்டார். வி.ஐ.டி பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் விஸ்வநாதனின் ‘கண்டஸா‘ காரில் ஜெயலலிதா வந்திருந்தார். விமான நிலையத்தில் இறங்கிய ராஜீவ் காந்தி அங்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில், “கருணாநிதி ஆட்சியைக் கலைப்பதற்கான காரணங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றை எல்லாம் பிரதமரே சொல்லி இருக்கிறார். அதனால், இந்த ஆட்சி கலைக்கப்படுவது உறுதி. அது எப்போது என்பதை பிரதமர் தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார். அதுவே ஜெயலலிதாவுக்கு பரம திருப்தியாக இருந்தது. அன்று இரவு ராஜீவ் காந்திக்கு போயஸ் கார்டன் வீட்டில் விருந்து நடந்தது. அந்த விருந்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, எச்.கே.எல்.பகத், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர். விருந்தின்போது, “பிப்ரவரி மாதத்தில் தி.மு.க ஆட்சி தமிழகத்தில் இருக்கக்கூடாது. அதன்பிறகும் தி.மு.க ஆட்சி இருந்தால், மத்தியில் சந்திரசேகர் ஆட்சிக்கு அ.தி.மு.க கொடுக்கும் ஆதரவை மறு பரீசிலனை செய்ய வேண்டியது வரும்” என்று எச்சரிக்கை தொனியில் ஜெயலலிதா தன் முடிவை தெளிவாக எடுத்துச் சொன்னார். 

கவர்னருக்கு கருணாநிதி கொடுத்த பட்டம் - ‘மாவீரன்’ பர்னாலா!

சுர்ஜித்சிங் பர்னாலா‘ஆட்சி கலைக்கப்படப் போகிறது’ 1991 ஜனவரி 30-ம் தேதி மதியமே தி.மு.க-வுக்கு தெரிந்துவிட்டது. காரணம், முதல்நாள் இரவு திடீரென தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா அவரசமாக டெல்லிக்கு அழைக்கப்பட்டார். அந்தத் தகவல் கருணாநிதிக்கு கிடைத்ததுமே, ‘ஆட்சி கலைக்கப்படும்’ என்பதை அவர் யூகித்துவிட்டார். ஜனவரி 30-ம் தேதி ஆலிவர் வீட்டில் அமைச்சரவை சகாக்களுடன் முக்கியமான ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தார் கருணாநிதி. அந்த நேரத்தில் திடீரென நியாபகம் வந்தவராய், பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் கூட்டத்துக்கு கிளம்பினார். அவருடைய சகாக்கள், இந்த நேரத்தில் போய்த்தான் ஆக வேண்டுமா? என்று கேட்டபோது, “நிச்சயம் போய்த்தான் ஆகவேண்டும்... அங்கு நான் பேசுவதன் மூலம் நான் தெரிவிக்கும் கருத்துக்கள் முக்கியமானவை... நான் என்ன பேசப்போகிறேன் என்பதை அங்கு வந்து பாருங்கள் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

பட்டதாரி ஆசிரியர் கழகத்தில் எந்தவித சலனத்தையும் காட்டாமல் நிதானமாகப் பேசத் தொடங்கிய கருணாநிதி, “நான் இப்போது முதல் அமைச்சரா? இல்லையா? என்று எனக்கே தெரியாது. நான் அந்த நாற்காலியில் இருந்தாலும்... இல்லை என்றாலும்... நான் உங்களோடுதான் இருப்பேன். தமிழகத்தின் ஆளுநர் பர்னாலா டெல்லிக்கு அவசரமாக அழைக்கப்பட்டு இருக்கிறார். அவர் எதற்காக அழைக்கப்பட்டுள்ளார் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. டெல்லியில் அவர் இந்த நிமிடம் வரை ஆட்சிக் கலைப்பு கடிதத்தில் கையெழுத்துப் போடவில்லை. எனவே, அவரை நான் இனிமேல் ‘மாவீரன்’ பர்னாலா என்றுதான் அழைப்பேன் என்றார். 

தமிழக அரசு டிஸ்மிஸ்!

ஜனாதிபதி வெங்கட்ராமனுடன் ஜெயலலிதா

டெல்லியில் தமிழ்நாடு ஹவுஸில் தங்கி இருந்தார் தமிழக ஆளுநர் பர்னாலா. அவரை உள்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் வரிசையாக வந்து சந்தித்தனர். “தி.மு.க அரசை டிஸ்மிஸ் செய்வதற்கான குற்றச்சாட்டுப் பட்டியல் தயாராகிவிட்டது. நீங்கள் அதில் கையெழுத்திட வேண்டும்” என்றனர். பர்னாலா அதற்கு மறுத்தார். கடைசிவரை அவர் கையெழுத்துப்போடவில்லை. “ஆட்சியைக் கலைக்கும் அளவுக்கு தமிழகத்தில் நிலைமை மோசமாக இல்லை” என்று வாதாடிப் பார்த்தார். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. கடைசியில் அவர் அந்த அறிக்கையில் கையெழுத்துப் போடாமலே திரும்பிவிட்டார். தமிழ்நாடு ஹவுஸில் பணிபுரிந்த தமிழக இணை இயக்குனர் சம்பத் மூலம், ‘ஆட்சி கலைப்பு உறுதி’ என்ற தகவலை கருணாநிதிக்கு தெரியப்படுத்தினார். அதன்பிறகு சென்னை கிளம்ப ஆளுநர் பர்னாலா முடிவெடுத்தபோது அவருடைய விமானம் தாமதம் செய்யப்பட்டது. அவருக்கு பல வழிகளில் மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. ஆனால், பர்னாலா எதற்கும் வளைந்து கொடுக்கவில்லை.  கிண்டி கவர்னர் மாளிகைக்கு வந்ததும் கருணாநிதியைத் தொலைபேசியில் அழைத்தார். “ நான் என் மனசாட்சிப்படி நடந்துகொண்டேன். என் சம்மதமின்றியே அனைத்தும் நடக்கின்றன” என்று சொன்னார். அதே நேரத்தில் டெல்லியில் கருணாநிதி ஆட்சியை டிஸ்மிஸ் செய்யும் உத்தரவில் ஜனாதிபதி கையெழுத்திட்டார். 

அமர்க்களப்பட்ட போயஸ் கார்டன்... 

தி.மு.க ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டதும், நடராசன் வீட்டில் அ.தி.மு.க-வினர் குழுமத் தொடங்கினார்கள். டிஸ்மிஸ்க்கு மறுநாள் வெகு அமர்க்களமாக விழித்தெழுந்தது நடராசனின் வீடு. “அரசியல் பேசுபவர்கள் இங்கு வரவேண்டாம்” என்று அவர் வீட்டுக் கதவில் மாட்டப்பட்டு இருந்த போர்டு மாயமாய் மறைந்தது. காலையிலேயே தொண்டர்கள், வட்டம், மாவட்டச் செயலாளர்கள் பெரிய பெயரி ரோசப்பூ மாலைகளோடு நடராசனைப் பார்க்க வந்துவிட்டனர். நேரம் ஆக ஆக ஆட்டோக்களும் கார்களும் நடராசன் வீட்டைச் சூழ ஆரம்பித்தன. கருணாநிதியின் ஆட்சியைக் கலைத்தே தீருவேன் என்ற நடராசனின் சபதம் நிறைவேறியது. மாலையில் ஒரு காரில் நான்கு பேருடன் அங்கிருந்து கிளம்பினார் நடராசன். அந்தக் கார் போயஸ் கார்டனுக்குப் போனது. அங்கு ஜெயலலிதா முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட்ட சந்தோஷத்தில் இருந்தார். 

கதை தொடரும்...

http://www.vikatan.com/news/coverstory/88384-tamil-nadu-government-dissolved-how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter---41.html

Link to comment
Share on other sites

நடராசனை நாடுகடத்திய ஜெயலலிதா : சசிகலா ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 42

 

சசிகலா, ஜெயலலிதா

1991-ம் ஆண்டு தமிழகத்தில் இருந்த தி.மு.க ஆட்சியை டெல்லி கலைத்தது. கருணாநிதியின் தலைமையில், தமிழகத்தில் அன்று அமைந்திருந்தது பலவீனமான ‘மைனாரிட்டி’ அரசாங்கம் அல்ல. அசுர பலம் கொண்ட ‘மெஜாரிட்டி’ அரசாங்கம். அந்த அரசாங்கம் நடத்திய நிர்வாகத்தில் மிகப்பெரிய ஓட்டைகள் எதுவும் விழவில்லை; சட்டம் ஒழுங்கு மோசமாகக் கெட்டுப்போய்விடவில்லை. தமிழகத்தில் அந்த அரசுக்கு முன்பும் பின்பும் நடைபெற்ற அரசுகளோடு ஒப்பிடும்போது, 1990-ல் நடைபெற்ற கருணாநிதியின் அரசு நன்றாகத்தான் நடந்தது. ஆனாலும்கூட, வம்படியாக காரணங்களைக் கண்டுபிடித்து அதை டிஸ்மிஸ் செய்தது டெல்லி. அதற்கு இரண்டே காரணங்கள் மட்டுமே இருந்தன. முதல் காரணம், ராஜீவ் காந்திக்கு  ஜெயலலிதா கொடுத்த நிர்பந்தம்; இரண்டாவது காரணம், பிரதமர் சந்திரசேகருக்கு ராஜீவ் காந்தி கொடுத்த நிர்பந்தம்.  இப்படி, தமிழகத்தின் முதல்வர் பதவியை அடையத் துடித்த ஜெயலலிதாவும், இந்தியப் பிரதமர் பதவியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த ராஜீவ் காந்தியும் கூட்டுச் சேர்ந்து கருணாநிதியின் ஆட்சியைக் காவு வாங்கினர்.   

நடராசனை நாடு கடத்திய ஜெயலலிதா!

தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டதும் ஜெயலலிதா தமிழக அரசியலில் வேகமெடுத்து ஓடத் தொடங்கினார். நடராசன் நிதானமாக வியூகங்களை வகுத்துக் கொடுத்தார். சசிகலா எல்லாவற்றுக்கும் சாட்சியாக ஜெயலலிதாவின் நிழலாக வலம்வந்தார். இந்தக் கூட்டணி நடராசன்அந்தக் காலகட்டத்தில் மூன்று முக்கியத் திட்டங்களைத் தீட்டியது. அதன்படி கட்சியில், “ ‘எங்கும் ஜெயலலிதா... எதிலும் ஜெயலலிதா...’ என்ற ஒற்றைச் சிந்தனை மட்டுமே நிலைக்க வேண்டும், ஜானகி அணியில் இருந்து வந்தவர்களை கொஞ்சம் கொஞ்சமாக களையெடுக்க வேண்டும்,  அவர்களையும் அவர்களுடைய ஆதரவாளர்களையும் தேர்தலில் போட்டியிடாமல் தடுக்க வேண்டும்” என்று தீர்மானமான வேலைகளைத் தொடங்கினார். ஆனால், அவற்றைச் நடைமுறைப்படுத்தும்போது  ஜெயலலிதாவுக்குத் துணையாக நடராசன் இல்லை. அவர் இருந்தால் திட்டத்தின் முதல் நோக்கமான, ‘எங்கும் ஜெயலலிதா... எதிலும் ஜெயலலிதா...’ என்பதே நிறைவேறாது; மீண்டும் எல்லா இடத்திலும் நடராசனே இருப்பார் என்பதால் அவரைக் கொஞ்சம் ஒதுங்கி இருக்கச் சொன்னார் ஜெயலலிதா.

‘தனக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை’ என்பதைப்போல் ஒதுங்கிக் கொண்டார் நடராசன். ஜெயலலிதா-நடராசன் சேர்ந்து நடத்திய இந்த நாடகத்துக்கு வேறோரு காரணமும் இருந்தது. ‘நடராசனை கொஞ்சம் ஒதுக்கிவைக்கச் சொல்லி ஜெயலலிதாவுக்கு டெல்லி காங்கிரஸ் தலைமையும் ஓலை அனுப்பிக் கொண்டே இருந்தது. டெல்லியை அப்படிச் சொல்லச் சொல்லி தொல்லை கொடுத்தவர்கள், தமிழ்நாடு காங்கிரஸில் இருந்த சில தலைவர்கள். அதற்கு அவர்கள் ஏகமொத்தமாக சொன்ன காரணம், “நடராசன் பக்கத்தில் இருந்தால் ஜெயலலிதாவின் கவனத்தை எந்த நேரத்திலும் திசை திருப்பிவிடுவார்; கூட்டணிப் பேச்சு வார்த்தைகளுக்கு அது மிகப்பெரிய இடையூறாக அமையும்” என்பதே. அதன் அடிப்படையில் “நடராசனோடு கட்சிக்காரர்கள் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்” என்று அடிக்கடி ஜெயலலிதா அறிவுறுத்திக் கொண்டே இருந்தார். அதனால், ஜெயலலிதாவே அவருடைய சொந்த செலவில் நடராசனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தார். தமிழகத்தில் இருந்து தலைமறைவான நடராசன் சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். அங்கிருந்து அமெரிக்கா சென்று சில நாட்கள் தங்கி இருந்தார். தமிழகத்தில் இருந்த ஜெயலலிதா ஒவ்வொரு திட்டமாக நடைமுறைப்படுத்தினார். எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்கள் அதற்கு  முதல் பலியாகக் கொடுக்கப்பட்டன. கட்சியில் இருக்கும் எம்.ஜி.ஆர் இளைஞரணி மட்டும் போதும் என்றார். அதுவரை எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களை முன்னெடுத்து நடத்தியவர்கள் கட்சியில் காலாவதியாகத் தொடங்கினார்கள். 

எங்கும் ஜெயலலிதா... எதிலும் ஜெயலலிதா...

நேர்காணல் நடத்தும் ஜெயலலிதா

அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் நிர்வாகிகள் கூட்டம் கூடியது. ஜெயலலிதாவுக்கு வலதுபுறம் ஒன்பது உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர்; இடதுபுறம் ஒன்பது உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர். ஆனால், யாரும் பேசவில்லை. ஜெயலலிதா மட்டுமே பேசினார். “வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் யாரும் சீட் கேட்கக்கூடாது. அவர்கள் தொகுதியில் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபட வேண்டும். எந்தத் தொகுதிக்கு யார் வேட்பாளர்கள் என்று தலைமைக் கழகம் அறிவிக்கிறதோ... அவர்கள்தான் உங்களுக்கும் வேட்பாளர்கள். அவர்களை எதிர்த்து கழகத்தினரே வேலை செய்வதோ... மனுத்தாக்கல் செய்வதோ கூடாது. அதுபோன்ற துரோகச் செயல்களில் ஈடுபட்டால், கூண்டோடு டிஸ்மிஸ் செய்யப்படுவீர்கள். இப்போதே சிலர் தலைக்கனம் பிடித்து அலைகிறார்கள். அவர்கள் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள். அதிகாரிகளை எல்லாம் இப்போதே மிரட்டுகிறார்கள். ஏதோ ஆட்சிக்கு இப்போதே வந்துவிட்டோம் என்ற மமதையில் அப்படி நடந்து கொள்கிறார்கள். நீங்கள் என்ன செய்தாலும் உடனே நிறுத்த வேண்டும்... அதை மீறி எனக்குத் தெரியாமல் எதுவும் செய்யலாம் என யாரும் நினைக்க  வேண்டாம். யார் என்ன செய்தாலும் எனக்கு உடனடியாக தகவல் வந்துவிடும். அவர்கள் கழகத்தில் இருந்து நீக்கப்படுவார்கள். வேட்பு மனு விற்பனை மூலம் ஒரு கோடி ரூபாய் நாம் எட்ட முடியவில்லை. அதனால், தொகுதியில் நிதி வசூல் செய்ய வேண்டும். அதிகம் எல்லாம் இல்லை. தொகுதிக்கு ஒரு லட்சம் தான். இது மாவட்டச் செயலாளர்களின் பொறுப்பு. இது கழகம் வைத்திருக்கும் அக்னீப் பரிட்சை” என்றார். வேட்பாளர் தேர்வும் சூடுபிடித்தது. ஜெயலலிதாவே தலைமைக் கழகத்துக்கு நேரில் வந்து வேட்பாளர் தேர்வை நடத்தினார். வழக்கம்போல, “என்ன ஜாதி, நீங்கள் போட்டியிடும் தொகுதியில் எந்த ஜாதிக்காரர்கள்  அதிகம் உள்ளனர், எவ்வளவு செலவு செய்வீர்கள் என்ற கேள்விகளுடன் 1989-க்குப் பிறகு நீங்கள் கழகத்துக்கு செய்த பணி என்ன? என்றும் கேட்டுவைத்தார். இப்படி கட்சிக்குள், ‘எங்கும் ஜெயலலிதா... எதிலும் ஜெயலலிதா...’ என்ற சிந்தனை ஆழமாக நிறுவப்பட்டது.

வேட்பாளர் பட்டியல் வெளியானது!

தமிழகத்தில் தி.மு.க ஆட்சியைக் கலைத்த சந்திரசேகரின் ஆட்சியை மத்தியில் ராஜீவ் காந்தி கலைத்தார். 1991 மார்ச் 6-ம் தேதி, சந்திரசேகர் அரசாங்கத்துக்கு கொடுத்த ஆதரவை ராஜீவ் காந்தி வாபஸ் வாங்கினார். அதில் மத்தியில் இருந்த அந்த அரசாங்கம் கவிழ்ந்தது. இதையடுத்து வெளிநாட்டில் இருந்த நடராசனுக்கு அதற்குமேல் அங்கு இருக்கப் பிடிக்கவில்லை. அவசரமாக நாடு வேட்பாளர்கள் பட்டியலுடன் வரும் ஜெயலலலிதாதிரும்பினார். ஆனால், போயஸ் கார்டன் பக்கமே அவர் வரவில்லை. தலைமைக் கழகத்தின் திசையைக்கூட திரும்பிப் பார்க்கவில்லை. எங்கோ இருந்துகொண்டு காய்களை நகர்த்தும் வேலையை மட்டும் செய்து கொண்டிருந்தார். எப்படியோ அவரைக் கண்டுபிடித்து போய் தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கேட்ட சிலரையும், “செங்கோட்டையனிடம் போய்க் கேளுங்கள்” என்று சொல்லி அனுப்பினார். அதற்கு முன்பே நடராசன் தனது அரசாங்க வேலையை ராஜினாமா செய்திருந்தார். அதை அப்போது இருந்த தி.மு.க அரசு ஏற்காமல் இருந்தது. ஆனால், அது டிஸ்மிஸ் ஆனதும் நடராசனின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது. டெல்லியில் இருந்த சுப்பிரமணியசாமியைப் பிடித்து, நடராசனின் ராஜினாமாவை காதும் காதும் வைத்ததுபோல் முடித்துக் கொடுத்தார் ஜெயலலிதா. ஏனென்றால், நடராசனுக்கு கட்சிக்குள் நிழல் வேலைகள் காத்திருந்தன.

அ.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடிந்தன. எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களை ஏற்கெனவே கலைக்கச் சொல்லியிருந்த ஜெயலலிதா, அந்த மன்றங்களை முன்னின்று நடத்தியவர்களைத் தேர்தலில் முழுமையாக ஓரம் கட்டினார். செங்கோட்டையனும் மதுசூதனனும்   மட்டுமே அதில் தப்பிப் பிழைத்தனர். ஜானகி அணியில் விசுவாசமாக இருந்து பின் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்றுக் கொண்ட அரசியல் ஜாம்பவான், ஆர்.எம்.வீரப்பனுக்கே சீட் இல்லை என்று மறுத்துவிட்டார் ஜெயலலிதா. வேடசந்தூர் வி.பி.தணிகாசலம், தாம்பரம் எல்ல.ராஜமாணிக்கம் உள்பட சைதை துரைசாமிக்கும் நோ சீட். இதைச் செய்ததன் மூலம் ஜானகி அணியில் இருந்து வந்தவர்களை எல்லாம் முழுமையாக ஓரம் கட்டினார் ஜெயலலிதா. 1991 தேர்தலில் அ.தி.மு.கவில் போட்டியிட சீட் வாங்கியவர்கள் எல்லாம் ஜெயலலிதா, சசிகலா-நடராசனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் மட்டுமே. ஆனால், நடராசனின் அரசியல் ஆசானாக இருந்த எஸ்.டி.சோமசுந்தரம் பெயர் ஆரம்பத்தில் அந்தப் பட்டியலில்  விட்டுப்போனது. ஆனால், தன் அரசியல் ஆசானை நடராசன் விட்டுவிடவில்லை. ‘எஸ்.டி.எஸ் இல்லையென்றால், தஞ்சையில் கட்சி தேர்தலில் தோற்றுவிடும்’ என்பதை விளக்கி நூற்றுக்கணக்கில் போயஸ் கார்டனுக்கு கடிதங்கள் வரவழைத்தார். சசிகலா அவற்றை  ஜெயலலிதாவின் பார்வைக்குக் கவனமாகக் கொண்டு சென்றார். அதையடுத்து, எஸ்.டி.சோமசுந்தரத்தை தொலைபேசியில் அழைத்த ஜெயலலிதா “உங்களுக்கு சீட் உண்டு... போட்டியிடுங்கள்’‘ என்றார். எஸ்.டி.சோமசுந்தரம் நெகிழ்ந்து போனார். 

காலில் விழும் கலாசாரம் ஆரம்பம்!

ஜெயலலிதாவின் காலில் விழும் வேட்பாளர்வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் சென்னை மெரீனாவில் கூடியது. ராஜீவ் காந்தி வழக்கம்போல தனி விமானத்தில் வந்தார். அந்தக் கூட்டத்துக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத ஆர்.எம்.வீரப்பன் வரவில்லை. நாவலர் தலைமையுரை ஆற்றினார். அந்த மேடையில்தான் ஜெயலலிதா காலில் விழும் கலாசாரம் அப்பட்டமாகத் தொடங்கியது. சென்னையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஜெயலலிதா அறிமுகம் செய்தபோது, கே.ஏ.கே, மயிலை ரங்கராஜன், தென் சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் ஸ்ரீதர் தவிர மற்ற அனைவரும் ஜெயலலிதாவின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்கள். அதைப் பார்த்த ராஜீவ் காந்தியே கொஞ்சம் அசந்து போனார். அந்த மேடையில் பேசிய ஜெயலலிதா அனுதாப அஸ்திரத்தை முழு ஆவேசத்துடன் எய்தார்.

கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, “என்னை ஒரு பெண் என்று பார்க்காமல் கருணாநிதி சட்டமன்றத்தில் குண்டர்களை வைத்துத் தாக்கினார். மீனம்பாக்கத்தில் என்னை லாரி ஏற்றிக் கொல்ல முயற்சி செய்தார். அந்த விபத்தில் சிக்கிய நான் குணமடைந்து வருவதற்குள் அந்த லாரி டிரைவரை அபராதம் மட்டும் விதித்து விடுதலை செய்து கருணாநிதி வழக்கை முடித்துவிட்டார். இதுபோன்ற கருணாநிதியின் அராஜகத்தைப் பார்த்துதான் அவரை நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் புறக்கணித்தார்கள். அவருடைய ஆட்சியும் பறிபோனது. ஆட்சியை இழந்த கருணாநிதி, இப்போது மீண்டும் உங்களிடம் வாக்கு கேட்டு வருகிறார். அவரைப் புறக்கணிப்பீர்களா... புறக்கணிப்பீர்களா?” என்று முழங்கினார். கடற்கரையில் கூடியிருந்த கூட்டம், ‘புறக்கணிப்போம்... புறக்கணிப்போம்’ என்று கோரஸாகத் திரும்பச் சொன்னது. சொன்னபடி அதைச் செய்தும் காண்பித்தது. அதன் எதிர் வினையை அடுத்து வந்த 5 ஆண்டுகளுக்கும் தமிழகம் அனுபவித்தது.

கதை தொடரும்...

http://www.vikatan.com/news/coverstory/88735-jayalalithaa-expatriates-natarajan-how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter---42.html

Link to comment
Share on other sites

சசிகலா சகாப்தம் ஆரம்பம் : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 43

 
 

சசிகலா, ஜெயலலிதா

1991 சட்டமன்றத் தேர்தலுக்கான மல்லுக்கட்டுக்கள் சாதரணமாகத்தான் தொடங்கின. வழக்கமான பொதுக்கூட்டங்கள், பிரசாரங்கள், தேர்தல் அறிக்கைகள், தேர்தல் சூளுரைகள், கருத்துக்கணிப்புகள் என்றே அந்தத் தேர்தல் களமும் உருவெடுத்திருந்தது. ஒரு படுகொலை... தமிழகத்தில் அதுவரை இருந்த காட்சிகள் அனைத்தையும் உரு மாற்றியது. அந்தப் படுகொலைக்குப் பிறகு, இந்தியாவின் பார்வை தமிழகத்தின் மீது பதற்றத்துடன் படரத் தொடங்கியது; தேர்தல் கணக்குகள் தூள் தூளாயின; கருத்துக் கணிப்புகள் நொறுக்கித் தள்ளப்பட்டன. அந்த ஒரு படுகொலை... தமிழக அரசியலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஜெயலலிதாவை ஆட்சியதிகாரத்தில் கொண்டு போய் அமரவைத்தது; ஜெயலலிதாவின் அரசியல் வரலாற்றில் முன்னுரைக்கு முடிவுரை எழுதிவிட்டு, அவரின் அத்தியாயங்களை ஆரம்பித்து வைத்தது; தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் சசிகலாவின் சகாப்தத்துக்கு கொடியேற்றம் செய்து வைத்தது; அடுத்து வந்த 5 ஆண்டுகளும், தமிழகம் துயரங்களுக்குள் மூழ்கடிப்பட்டு துன்பப்படுவதற்கு காரணமாக மாறின; ‘மன்னார்குடி குடும்பம்’ என்றொரு புதிய கும்பல் தமிழகத்தில் உருவாக வழிவகுத்துக் கொடுத்தது. இப்படிப்பட்ட எல்லாப் பிழைகளுக்கும் காரணமாக அமைந்த அந்தப் படுகொலை... ராஜீவ் காந்தியின் படுகொலை. 

விறுவிறுப்பான தேர்தல் களம்!

ஜெயலலிதா

1991 ஜனவரி 30-ம் தேதி தி.மு.க அரசாங்கம் கலைக்கப்பட்டது. ஒரு மாநிலத்தில் இருந்த ‘மெஜாரிட்டி’ அரசாங்கத்தை, தகுந்த காரணம் இல்லாமல் மத்திய அரசு கவிழ்த்தது. ராஜீவ்-ஜெயலலிதா நிர்பந்தங்கள் மட்டுமே கருணாநிதியின் அரசாங்கத்தைக் காவு வாங்கின. தமிழகம் தேர்தல் கோலம் பூண்டது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு, மீட்டெடுத்த ஆட்சியதிகாரத்தை பாதியில் தோற்ற கருணாநிதி, அடிபட்ட புலியின் சினத்தோடு வலம் வந்தார். அவருடைய அரசாங்கம் நியாயமற்ற முறையில் கலைக்கப்பட்டதை தமிழகமும் கொஞ்சம் உணர்ந்தே இருந்தது. அதனால் தி.மு.க மேல் ஒரு அனுதாபமும், கருணாநிதியின் மேல் ஒரு பரிதாபமும் அப்போது தமிழக மக்களிடம் உருவாகி இருந்தது. கடுமையான சூழ்நிலைகளுக்கு இடையிலேயே கட்சியையும் வளர்த்து, தன்னையும் வளர்த்துக் கொண்ட கருணாநிதிக்கு அது கூடுதல் தெம்பைக் கொடுத்தது. ‘டெல்லியிடம் தோற்ற அதிகாரத்தை தமிழகத்தில் வென்றே தீர வேண்டும்’ என்ற வெறியோடு தேர்தல் களத்தில் ஓடிக் கொண்டிருந்தார். சென்னை துறைமுகம் தொகுதியில் அவர் போட்டியிட்டார். ‘பல ஆண்டுகளாக எட்டாத தொலைவில் இருந்த முதல்வர் நாற்காலி, இப்போது எட்டிப் பிடிக்கும்  தூரத்துக்குள் வந்துவிட்டது. கொஞ்சம் முயன்றால் அதைத் தொட்டுவிடலாம்’ என்ற எண்ணத்தோடு ஜெயலலிதாவும் முதல்வர் நாற்காலியைக் குறிவைத்து தேர்தல் களத்தில் ஓடிக் கொண்டிருந்தார். பர்கூர், காங்கேயம் என்று இரண்டு தொகுதிகளில் ஜெயலலிதா போட்டியிட்டார். அவரும் தேர்தல் வேலைகளில் கொஞ்சமும் சுணக்கம் காட்டவில்லை. வன்னியர் சங்கம் என்பது பாட்டாளி மக்கள் கட்சியாக பரிணமித்து முதல்முறையாக தேர்தல் களம் கண்டிருந்தது. அந்தக் காலத்தில், தேர்தல் பிரச்சாரங்களுக்கும், பொதுக்கூட்டங்களுக்கும்  காலக்கெடு, நேரக்கெடு என்பதெல்லாம் கிடையாது. அதனால், இரவு-பகல் என எந்நேரமும் ‘மைக் செட்டு’கள் பெரியோர்களே... தாய்மார்களே... என விடாது முழங்கிக் கொண்டே இருந்தன. 

கோரப் படுகொலையும்... வீண் பழியும்!

rajiv_dead_body_18265.jpg

1991 மே மாதம் 21-ம் தேதி ராஜீவ் காந்தி சென்னை வந்தார். அன்று ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரக்கூட்டம். அதற்கு மறுநாள்-மே 22ம் தேதி-கிருஷ்ணகிரியில் ஒரு பிரசாரக்கூட்டம். அதில், ராஜீவ்காந்தி, ஜெயலலிதா, மூப்பனார், ப.சிதம்பரம், வாழப்பாடி ராமமூர்த்தி ஒரே மேடையில் பேசுவதாகத் திட்டம். அதற்குமுன்பு கிருஷ்ணகிரியில் 15 கிராமங்களில் ஜெயலலிதா பிரசாரம் செய்வதாக நிகழ்ச்சி திட்டமிடப்பட்டு இருந்தது. அதற்காக மே 21-ம் தேதியே ஜெயலலிதா, சசிகலா, நடராசன் அங்கு சென்றுவிட்டனர். கிருஷ்ணகிரியில் பிரம்மாண்ட மேடை தயாராகிக் கொண்டிருந்தது. சென்னையில் விதி வேறு மாதிரி ஒரு கணக்கைப் போட்டு வைத்திருந்தது. மே 21-ம் தேதி இரவு ராஜீவ் காந்தி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு தன் கடைசி பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துவிட்டு, காரில் ஸ்ரீபெரும்புதூர் கிளம்பினார். ஸ்ரீபெரும்புதூரில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தை அடைந்ததும், ராஜீவ் காந்தி காரைவிட்டுக் கீழிறங்கி மேடை நோக்கி வேகமாகச் சென்றார். அவர் மேடைக்குப் போவதற்கு முன்பே, காதைக் கிழிக்கும் வெடிச் சத்தம் கேட்டது. அதன்பிறகு என்ன நடந்ததென்றே யாருக்கும் தெரியவில்லை. சுற்றிலும் புகை மண்டலம்; அலறல் சத்தம்; கருகல் மணம் என்று களேபரமான காட்சிகளாக இருந்தன. புகை மண்டலம் லேசாகக் கலைந்தபோது, மனித உடல்கள் சிதறிக் கிடந்தன. ரத்தத் கறைகளும், ரத்தத் திட்டுகளும் சதைத் துணுக்குகளுமாய் அந்த இடம் பலி பீடத்தைப் போல் காட்சி அளித்தது.

ராஜீவ் காந்தியைக் காணவில்லை. மூப்பனார் ஓடி வந்து, கிழே கிடந்த உடல்களுக்குள் ராஜீவ் காந்தியின் உடலைத் தேட ஆரம்பித்தார். ராஜீவ் காந்தியும் அங்கு அடையாளம் தெரியாத அளவுக்கு சதைத் துண்டங்களாய்ச் சிதறிக் கிடந்தார். இந்தியாவின் எதிர்காலப் பிரதமர், தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில், பனங்காடுகளுக்கு மத்தியில் உடல் சிதறிக் கிடந்தார். அந்தக் கோரக் கட்சிகள் கலர் படங்களாக எடுக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் போஸ்டர்களாக ஒட்டப்பட்டன. அதோடு சேர்த்து, ‘ஆட்சியைக் கலைத்த ஆத்திரத்தில் தி.மு.கதான் விடுதலைப்புலிகளை வைத்து ராஜீவ் காந்தியைத் தீர்த்துக்கட்டியது’ என்ற வதந்தியும் தீயாய்ப் பரப்பப்பட்டது. வதந்தியை யார் பரப்பி இருப்பார்கள் என்ற ஆராய்சிக்குள் போகத் தேவையில்லை. ஆனால், தேர்தலுக்கு ஓட்டுக் கேட்பதை விட்டுவிட்டு, இந்த வதந்திக்கு விளக்கம் சொல்வதிலேயே தி.மு.க-வுக்கு நேரம் விரயமானது.  

அழுகை... கண்ணீர்... அனுதாப சுனாமி!

ரோஜாப்பூ நிறத்தில் இருந்த ராஜீவ் காந்தி, சதைத் துணுக்குகளாய் சிதறிக் கிடந்த புகைப்படங்களும், பால்வடியும் சோக முகத்தோடு ராஜீவ் காந்தியின் சிதைக்கு ராகுல் காந்தி தீ மூட்டும் காட்சிகளும் இந்தியாவை உலுக்கியது. தமிழகத்தை குற்றவுணர்வுக்கு ஆளாக்கியது. அதில் தமிழகம் முழுவதும் ஒரு அனுதாபம் உருவானது. அதைச் சாதரண அனுதாபம் என்று கணக்கிட முடியாது; அனுதாப அலை jaya_oath_18429.jpgஎன்றும் எழுதிவிட முடியாது; சுனாமிப் பேரலையைப் போல் அந்த அனுதாபம் தமிழகத்தை வாரிச் சுருட்டி வைத்திருந்தது. அந்த அனுதாபச் சுனாமியில், தமிழகம் போட்டு வைத்திருந்த தேர்தல் கணக்குகள் எல்லாம் துவம்சமாகிப் போனது. ஆட்சியை இழந்ததால் தி.மு.க மேல் இருந்த அனுதாபம் அடித்துக் கொண்டு போனது. அ.தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. 168 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க 164 தொகுதிகளை வென்றெடுத்தது. 65 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 60 தொகுதிகளைக் கைப்பற்றியது. பர்கூர், காங்கேயம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட ஜெயலலிதா, இரண்டிலுமே வெற்றி பெற்றார். ஆனால், 176 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க மொத்தமே இரண்டு தொகுதிகளில் மட்டும்தான் கைப்பற்றியது.

ஜெயலலிதா என்ற ஒருவர் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தார். தி.மு.க என்ற மாபெரும் கட்சியும் மொத்தமே இரண்டு தொகுதிகளில் மட்டும்தான் வெற்றி பெற்றிருந்தது. தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற அந்த இரண்டு வேட்பாளர்கள், துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதியும், எழும்பூரில் போட்டியிட்ட பரிதி இளம்வழுதியும் மட்டுமே. தி.மு.க கூட்டணியில் இருந்து 22 தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. அந்தக் கட்சியின் சார்பில் திருவாரூரில் போட்டியிட்ட தம்புசாமி வெற்றி பெற்றிருந்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிட்டது. அந்தக் கட்சியின் சார்பில் திருத்துறைப்பூண்டியில் போட்டியிட்ட பழனிச்சாமி மட்டும் வெற்றி பெற்றிருந்தார். தாயக மறுமலர்ச்சி கழகம் சார்பில் போட்டியிட்ட திருநாவுக்கரசு அறந்தாங்கியிலும், கே.கே.எஸ்.எஸ்.ஆர் சாத்தூரிலும் வெற்றி பெற்றிருந்தனர். பட்டாளி மக்கள் கட்சி 194 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், அந்தக் கட்சியின் சார்பில் பண்ரூட்டியில் போட்டியிட்ட பண்ரூட்டி ராமச்சந்திரன் மட்டும் வெற்றி பெற்றிருந்தார். ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட குமாரதாஸ், கிள்ளியூர் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். விருதுநகரில் இந்தியன் காங்கிரஸ் என்ற கட்சியின் சார்பில் போட்டியிட்ட சஞ்சய் ராமசாமி என்பவர் வெற்றி பெற்றிருந்தார். சுயேட்சையாகப் போட்டியிட்டவர்களில் ஸ்ரீவில்லிபுத்தூரில் தாமரைக்கனி மட்டும் வெற்றி பெற்றிருந்தார்.

சசிகலா சகாப்தம் தொடக்கம்!

sasi_jaya_18361.jpg

அசுர பலத்துடன் அ.தி.மு.க ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா முதல் அமைச்சர் ஆனார். “ஜெ.ஜெயலலிதாவாகிய நான்...” என்று உறுதிமொழியேற்றுப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். காங்கேயம் தொகுதியில் பெற்ற வெற்றியை ரத்து செய்தார். அந்தத் தொகுதியில் ஆர்.எம்.வீரப்பனை போட்டியிட வைத்தார். அதற்கு முன்பே, அவரை அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார். ஆரம்பம் நான்றாகத்தான் இருந்தது. ஆனால், எதிர்பாராமல் கிடைத்த அசுரத்தனமான வெற்றி... பலவீனமான எதிர்கட்சிகள்... சட்டமன்றத்தில் எதிர்த்துக் கேள்வி கேட்க ஆள் இல்லாத நிலை... ஜெயலலிதாவின் கண்ணை மறைத்தது. “இனி ஜெயலலிதா தான் தமிழகம்... தமிழகம்தான் ஜெயலலிதா” என தனக்குத்தானே அவர் நினைத்துக் கொண்டார். ஜெயலலிதா சகாப்தம் தொடங்கியது. அதே நேரத்தில் நடராசனும் சசிகலாவும், “இனி சசிகலாதான் ஜெயலலிதா... ஜெயலலிதாதான் சசிகலா” என்றும் நினைக்க ஆரம்பித்தனர். அங்கிருந்து சசிகலா சகாப்தமும் ஆரம்பமானது. 
 
கதை தொடரும்...

http://www.vikatan.com/news/coverstory/89095-the-rise-of-sasikala-how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter---43.html

Link to comment
Share on other sites

கும்பகோணம் மகாமகம் : சசிகலா ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 44

 
 

சசிகலா, ஜெயலலிதா

1991-ம் ஆண்டு ஜெயலலிதா முதல் அமைச்சராக  பொறுப்பேற்பதற்கு முன்பே சசிகலா, ஜெயலலிதாவின் இணைபிரியாத் தோழியாகி இருந்தார். சசிகலா இல்லாமல் ஜெயலலிதா இல்லை என்ற நிலை அப்போதே உருவாகி இருந்தது. அதனால்தான், போயஸ் கார்டன் மற்றும் கட்சிக்குள் இருந்து தினகரன், திவாகரன், நடராசனை ஒதுக்கி வைத்த ஜெயலலிதாவால் சசிகலாவை விலக்கவே முடியவில்லை; விலகவும் அவர் விரும்பவில்லை. அதே நேரத்தில் சசிகலாவின் கணவர் நடராசனிடம் ஜெயலலிதா கொஞ்சம் எச்சரிக்கையைக் கடைபிடிக்க ஆரம்பித்தார். “நம்மை அரியணையில் ஏற்றி வைக்க நடராசனால் இத்தனை திட்டங்களைத் தீட்ட முடிகிறதென்றால்... நம்மை அரியணையில் இருந்து இறக்குவதற்கும் நடராசனால் பல திட்டங்களைத் தீட்ட முடியும்” என்ற எச்சரிக்கை அது. நடராசனின் செயல்பாடுகளும் ஜெயலலிதாவின் உள்ளுணர்வு ஒலித்த எச்சரிக்கைக்கு ஏற்பவே இருந்தன. தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க எம்.பி-க்களை அழைத்துக் கொண்டு போய் மத்திய அமைச்சர்களைச் சந்திப்பது, தமிழகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் வட்டத்தை தனக்கு நெருக்கமானவர்களைக் கொண்டு நிரப்புவது, தன் தயவு இல்லாமல் ஜெயலலிதாவால் எதையும் செய்ய முடியாது என்று பேசுவது, பேட்டி கொடுப்பது என்று புதிராகவே நடராசன் வலம் வந்தார். கடைசிவரை ஜெயலலிதாவால் அவரைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அதனால் வெறுத்துப்போய் கொஞ்சம் ஒதுக்கி மட்டும் வைத்தார்.

மகாமகம் விழாவில் ஜெயலலிதா, சசிகலா

சசிகலா விவகாரத்தில் அதைக்கூட அவரால் செய்ய முடியவில்லை. தமிழகத்துக்கே முதல்வர் ஆன பிறகும்கூட சசிகலாவின் தயவு இல்லாமல் ஜெயலலிதாவால் செயல்பட முடியவில்லை. முதல்வராகும் வரை இணை பிரியாத்தோழி என்றளவில் இருந்த ‘ஜெயலலிதா-சசிகலா நட்பு’, ஜெயலலிதா முதல்வரான பிறகு, ‘சசிகலா, ஜெயலலிதாவின் உடன் பிறவாச் சகோதரி’ எனச் சொல்லும் கட்டத்தை நோக்கி நகர்ந்தது. தினகரன், திவாகரன், நடராசனுக்குப் பதில் சசிகலாவின் அண்ணன் விநோதகன் போயஸ் தோட்டத்துக்குள் ஆட்சி செய்து கொண்டிருந்தார். தமிழகத்தை கேடு காலம் மெல்லச் சூழத் தொடங்கியது. அதேநேரத்தில், சசிகலா குடும்பத்துக்கு நல்ல யோகம் பொங்கிப் பிரவாகம் எடுக்கத் தொடங்கி இருந்தது. திருத்துறைப் பூண்டியில் விநோதகன் ஆடம்பரத் திருமண மண்டபம் ஒன்றை கட்டத் தொடங்கினார். அந்தக் காலத்திலேயே அது முழுமையான ஏ.சி வசதி செய்யப்பட்ட திருமண மண்டபமாக கட்டப்பட்டது. திருத்துறைப் பூண்டி பேருந்து நிலையமே இடம் மாற்றத்தில் சிக்கி சில நாள்கள் தவித்துப்போனது. 

தமிழகத்தின் இருண்ட காலம் தொடக்கம்!

தாக்கப்பட்ட தராசு பத்திரிகை அலுவலகம், ஆசிரியர் சியாம்

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில், 7 துப்பாக்கிக் சூடுகள் தமிழகத்தில் நடந்தன. ஜெயலலிதாவை விமர்சித்த எதிர்கட்சித் தலைவர்கள் கொலை வெறியோடு துரத்தி துரத்தி தாக்கப்பட்டனர். ப.சிதம்பரத்துக்கு எதிராக, திருச்சி விமான நிலையத்தில் அ.தி.மு.க-வினர் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை அறிவித்தனர். பெயருக்குத்தான் அது கருப்புக் கொடி காட்டும் போராட்டம். ஆனால், உண்மையில் அது சிதம்பரத்தை சின்னபின்னப்படுத்துவதற்கான திட்டம். அதில் இருந்து தப்பித்து, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சிதம்பரம் பட்டபாடு அவர் மனதில் இன்னும் இருக்கிறது. இப்போது அவரைச் சந்தித்து அந்தச் சம்பவம் குறித்துக் கேட்டாலும், அது ஏற்படுத்திய வடுவை அவர் வார்த்தைகளில் உணர முடியும்.   மணிசங்கர் அய்யர் பாண்டிச்சேரி வரை துரத்தி அடிக்கப்பட்டார். ஆளும்கட்சியை விமர்சித்த பத்திரிகைகளின் குரல்வளைகள் நெரிக்கப்பட்டன. மற்ற ஆட்சிகளிலும் அது நடக்கும். ஆனால், அவதூறு வழக்குகள், தொலைபேசியில் கெட்ட வார்த்தைகளால் நடத்தப்படும் அர்ச்சனை என்ற அளவில் மட்டுமே இருக்கும். ஆனால், ஜெயலலிதா ஆட்சியில் ஆளும் கட்சியை, ஜெயலலிதாவை விமர்சித்த பத்திரிகைகளை அடக்க,  பாக்ஸர் வடிவேலு போன்ற ரவுடிகள் களம் இறக்கப்பட்டனர். கொலைவெறித் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன.

கொல்லப்பட்ட தராசு பத்திரிகை ஊழியர்கள் தாராசு பத்திரிகை ஊழியர்கள் சுப்பிரமணி, சத்தியமூர்த்தி கொல்லப்பட்டனர். நக்கீரன் கோபாலுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான தலைவலி காத்திருந்தது. திடீரென்று நக்கீரன் அலுவலகத்தில் மட்டும் கரண்ட் கட் ஆகும்; திடீரென்று நக்கீரன் அலுவலகத்துக்குள் போலீஸ் படை உள்ளே நுழையும்; விசாரணை என்ற பெயரில் நக்கீரன் கோபாலை படுத்தி எடுத்துவிடுவார்கள். ஆசிட் வீச்சு, ஆட்டோவில் குண்டர்கள், அடி-தடி, ரவுடிகள் ராஜ்ஜியம், துப்பாக்கிச் சூடு,  ஒவ்வொரு துறையிலும் ஊழல்... ஊழல்... ஊழல்... என தமிழகம் அல்லோலகல்லோலப்பட்டது. ஆறே மாதத்தில் இந்த ஆட்டம் என்றால், மீதமிருக்கும் நான்கறை ஆண்டுகளையும் கடத்தப் போகிறோம் என்று தெரியாமல் தமிழகம் விழி பிதுங்கி நின்றது. தமிழகம் கண்ட இந்த வேதனைகள் எல்லாவற்றுக்கும் பின்னால் ஆளும் கட்சி இருந்தது; ஆளும் கட்சிக்குப் பின்னால் ஜெயலலிதா இருந்தார்; ஜெயலலிதாவுக்குப் பின்னால் சசிகலா இருந்தார்; சசிகலாவுக்குப் பின்னால் சசிகலா குடும்பம் இருந்தது. ஆனால், அவர்கள் எல்லாம் வேறு உலகத்தில் இருந்தனர். தமிழக அரசியல் அதுவரை காணாத ஆடம்பரத்தைக் காணத் தொடங்கியது. தனிப்பட்ட முறையில் ஜெயலலிதாவும் சசிகலாவும் அப்போது அனுபவித்த ஆடம்பரங்களை, அதிகாரத்தின் உச்சத்தை, உலகத்தையே ஒரு காலத்தில் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த விக்டோரியா மாகராணியேகூட அனுபவித்திருப்பாரா? என்பது சந்தேகம் தான். அவற்றைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் அந்த காலத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் சேர்ந்து அரங்கேற்றிய சில சம்பவங்களைத் திரும்பிப் பார்க்க வேண்டும். கும்பகோணம் மகாமகம், மதுரை உலகத் தமிழ் மாநாடு, வளர்ப்பு மகன் திருமணம், மிரட்டி வாங்கப்பட்ட மாளிகைகள், போயஸ் கார்டன் வீட்டில் இருந்த வைர-வைடூரிய-தங்க நகைகளின் மதிப்பு, ஜெயலலிதா, சசிகலா பெயரில் வாங்கிக்குவிக்கப்பட்ட சொத்துக்களின் கதைகளுக்குள் போய் வரவேண்டும். அந்தச் சொத்துக்கள், சொகுசுகள், ஆடம்பரங்களின் கதைகளுக்குப் பின்னால்தான், ஜெயலலிதா ஏன் சசிகலாவை விலக்கி வைக்கவில்லை என்பதற்கான காரணம் இருக்கிறது. சசிகலா ஏன் ஜெயலலிதாவை விட்டு விலகவில்லை என்பதற்கான காரியமும் அதற்குள்தான் ஒளிந்திருக்கிறது.  

கும்பகோணம் மகாமகம் தொடக்கம்...

மகாமகத்தில் சசிகலா, ஜெயலலிதா ஒருவருக்கொருவர் நீராட்டிவிட்ட போது

1992 பிப்ரவரி 18-ம் தேதி கும்பகோணம் மகாமகம். அதற்கான நாள் நெருங்க நெருங்க பலவிதமான சர்ச்சைகளும், இனம் புரியாத அச்சமும் தமிழகத்தில் பரவிக் கொண்டிருந்தன. கும்பகோணம் மகாமகக் குளத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா நீராடப் போகிறார் என்ற செய்தி மேலும் பதற்றத்தை உருவாக்கியது. கும்பகோணம் முழுவதும் ஜெயலலிதாவின் வானுரய கட்-அவுட்களால் நிறைந்து போனது. அ.தி.மு.க-வினர் தீவிர வசூல் வேட்டையில் இறங்கினர். 17-ம் தேதியே போலீஸ் கெடுபிடிகள் தொடங்கின. ஜெயலலிதா நீராடுவதற்காக பல லட்சங்களைக் கொட்டி குளியலறை அமைக்கப்பட்டது. “முதல்வர் வந்து நீராடிவிட்டுப் போகும்வரை பக்தர்கள் யாரும் குளத்தில் இறங்கக்கூடாது” என்று போலீஸ் கட்டுப்பாடு விதித்தது. திகிலடைந்தவர்கள் மகாமகத்துக்கு முதல் நாளே நீராடிவிட்டுக் கிளம்பினர். மகமகத்தன்று காலை 8.30 மணிக்கு குளத்தருகே பக்தர்கள் மெதுவாகக் கூடத் தொடங்கினர். போலீஸ் அவர்களைக் கட்டுப்படுத்தியது. அந்தக் கட்டுப்பாடு எல்லாம், 9.30 மணி வரை மட்டுமே. அதன்பிறகு, குளத்தில் நின்ற மக்கள் கூட்டம் வேகமாகக் கூடிக் கொண்டே போனது. போலீஸால் அதைக் தடுக்க முடியவில்லை. ஜெயலலிதா நீராடுவதைப் பார்க்க மக்கள் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு அந்த இடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டே இருந்தனர். ஜெயலலிதா வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே குளத்தருகே வந்த தேவாராம் ஐ.ஜி. பைனாகுலரில், மக்கள் நெருக்கியடித்து அவதிப்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், அவர் கையை விட்டு எல்லாம் போய் இருந்தது. அவரால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் சூழல் அப்போது. சரியாக காலை 11.32 மணிக்கு ஜெயலலிதா நீராடுவதற்காக பிரத்யோகமாக அமைக்கப்பட்டு இருந்த பகுதிக்கு வந்தார். அங்கிருந்து கூட்டத்தைப் பார்த்துக் கையசைத்தார்.

கும்பகோணம் மகாமகம் முடிவு...

மகாமகத்தில் பலியானவர்கள்

ஜெயலலிதா கை அசைத்ததை அவருக்கு நேர் எதிரில், வடக்கு வீதிப்பக்கம் இருந்தவர்களால் பார்க்க முடியவில்லை. இடையில் இருந்த ஒரு கோயில் அவர்களை மறைத்தது. எனவே, அந்தப் பகுதியில் இருந்தவர்கள் முன்னுக்கு வந்து பாங்கூர் தர்மசாலா கட்டடத்தின் வெளிப்புறம் இருந்த கிரில் வைத்த கட்டைச் சுவர் மீது ஏற முயன்றனர். அதைத் தொடர்ந்து இரும்பு கிரில் கட்டைச் சுவரோடு சாய்ந்தது. அதில் நசுங்கி பலர் இறந்தனர். அந்தத் துயரம் ஏற்படுத்திய ஓலம், பதற்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தெறித்து ஓடத் தொடங்கினர். அதே நேரத்தில் குளத்துக்குள் இருந்தவர்கள் வெளியில் ஏறி ஓடத் தொடங்கினர். இதனால், நேரேதிரில் பதற்றத்தோடு ஓடிய கும்பல், கூட்டம் ஒன்றும் புரியாமல், ஒன்றோடு ஒன்று மோதி, கீழே விழுந்து, நசுங்கி, மூச்சுத் திணறி உயிரைவிட்டது. அதற்கு நூறு அடி தூரத்துக்குள் சசிகலா ஒரு குடத்தில் மகாமகக் குளத்தின் தண்ணீரை அள்ளி அள்ளி ஜெயலலிதாவின் தலையில் ஊற்றினார். அதன்பிறகு ஜெயலலிதா அதேபோல் சசிகலாவின் தலையில் தண்ணீரை ஊற்றினார். கொஞ்சம் தள்ளி மக்கள் உயிரை விட்டுக் கொண்டிருந்தனர். நிகழ்ச்சியை வர்ணித்தவர்களின் வர்ணனை ஒலியில் மக்களின் மரண ஓலம் ஜெயலலிதா-சசிகலாவின் காதுகளில் விழவில்லை. போலீஸ் தரப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 48 என்று சொல்லப்பட்டது. ஜெயலலிதாவும் சசிகலாவும் கும்பகோணத்தில் இருந்து தனி ஹெலிகாப்டரில் இரண்டறை மணிக்கு மேல்தான் கிளம்பினார்கள். ஆனால், இறந்த உடல்கள் வைக்கப்பட்டு இருந்த குடந்தை மருத்துவமனைப் பக்கமோ...  காயம்பட்டவர்கள் சிகிச்சை பெற்ற அவசர சிகிச்சைப் பிரிவையோ திரும்பிக்கூட பார்க்கவில்லை. ‘ரெட் கிராஸ்’ அமைப்பின் ஆம்புலன்ஸ்கள் மட்டும் இறந்தவர்களையும் காயம்பட்டவர்களையும் தேடி அலறிக் கொண்டிருந்தது. 

தமிழகம் முழுவதும் கடும் சர்ச்சைகளை எழுப்பிய இந்த விவகாரத்துக்குப் பின்னால், சசிகலாவின் செல்வாக்கு கார்டனுக்குள் இன்னும் கூடியது. அதன்பிறகு அவர் தினம்தோறும் நமது எம்.ஜி.ஆர் அலுவலகத்துக்குச் செல்ல ஆரம்பித்தார். அதோடு எப்போதும் சசிகலா-நடராசனுக்கு ஆகாத ஆர்.எம்.வீ-யின் அமைச்சர் பொறுப்பும் பறிக்கப்பட்டது.

கதை தொடரும்...

http://www.vikatan.com/news/coverstory/89586-kumbakonam-mahamakam-how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter---44.html

Link to comment
Share on other sites

அ.தி.மு.க அரசைக் கவிழ்க்க நடராசன் சதி? : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 45 

 
 

சசிகலா

தி.மு.க ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வைத்து, முதல்வர் நாற்காலியைக் கைப்பற்றினார் ஜெயலலிதா. ஆனால், “தனது ஆட்சிக்கும் அப்படிப்பட்ட நிலை ஏற்படுமோ... தன்னிடம் இருக்கும் முதல்வர் நாற்காலியையும் டெல்லி பறித்துவிடுமோ...” என்ற அச்சத்திலேயே ஜெயலலிதா நாள்களை நகர்த்திக் கொண்டிருந்தார். நடராசன் அப்படியானதொரு இனம் புரியாத பயத்தை ஜெயலலிதாவிடம் ஒவ்வொரு நாளும் உருவாக்கிக் கொண்டே இருந்தார். ஜெயலலிதாவால் நடராசனை கணிக்கவும் முடியவில்லை; கட்டுப்படுத்தவும் முடியவில்லை. ஜெயலலிதாவின் எண்ணத்திற்கேற்ப நடராசனின் நடவடிக்கைகளும் புரியாத புதிராகவே இருந்தன. 

ஜெயலலிதாவை எச்சரித்த நரசிம்மராவ்!

1991-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா சில மாதங்கள் கழித்து, பிரதமர் நரசிம்மராவை டெல்லியில் போய்ச் சந்தித்தார். பல விஷயங்கள் நரசிம்ம ராவ், ஜெயலலிதாகுறித்து ஜெயலலிதாவிடம் பேசிய நரசிம்மராவ் இறுதியில், “நடராசன் என்பவர் யார்? உங்கள் கட்சியில் அவர் என்ன பொறுப்பில் இருக்கிறார். அவர் அடிக்கடி அ.தி.மு.க எம்.பி-க்களை அழைத்து வந்து மத்திய அமைச்சர்களை சந்திக்கிறாரே. யார் அவர்... கட்சியில் அவர் என்ன பொறுப்பில் இருக்கிறார்...?” என்று கேட்டு பொடி வைத்தார். பிரதமர் வாயில் இருந்து நடராசனின் பெயரைக் கேட்ட ஜெயலலிதா அந்த இடத்திலேயே கொஞ்சம் உறைந்து போனார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமலேயே பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த ஜெயலலிதா, அ.தி.மு.க எம்.பி-க்களை அழைத்து திட்டித் தீர்த்தார். “நடராசனுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று நான் பலமுறை உங்களை எச்சரித்துள்ளேன்; ஆனால், நீங்கள் அதைப் பொருட்படுத்தவே மாட்டேன் என்கிறீர்கள்; இனிமேல் நடராசனோடு தொடர்பு வைத்துக் கொண்டு நீங்கள் ‘லாபி’ செய்வது எனக்குத் தெரியவந்தால், என் நடவடிக்கை கடுமையானதாக இருக்கும்” என எச்சரித்துவிட்டு தமிழகம் திரும்பினார். தமிழகம் வந்ததுமே, அப்போது உளவுத்துறை டி.ஐ.ஜியாக இருந்த பஞ்சாபகேஷனிடம் நடராசன் விவகாரங்கள் குறித்து ரிப்போர்ட் கேட்டார். அவர் அளித்த ரிப்போர்ட் ஏற்கெனவே அதிர்ச்சியில் இருந்த ஜெயலலிதாவுக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது. “அந்த அளவுக்கு அரசாங்கத்தின் எல்லா இடத்திலும் நடராசனின் ஆதிக்கம் இருந்தது” என அந்த ரிப்போர்ட் தெளிவுபடுத்தியது. ‘பாம்பறியும் பாம்பின் கால்’ என்பதற்கேற்ப, “நம்மைக் கவிழ்த்துவிட்டு, ஆட்சியில் அமர நடராசன் திட்டமிடுகிறார்” என்றே ஜெயலலிதா கருதினார். 

அடுத்த முதல்வர் நடராசனா?

ஜெயலலிதாவின் இரும்புக்கரம் நடராசனுக்கு எதிராக நீண்டது. 1992 ஆகஸ்ட் 2ஆம் தேதி தஞ்சையில் நடராசன், ‘தமிழ் அரசி’ பத்திரிகையின் வாசகர் வட்ட சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்தப் பத்திரிகையின் ஆசிரியர், வெளியீட்டாளர் எல்லாம் நடராசன்தான். நிகழ்ச்சிக்கு முதல் நாள் போலீஸ் நடராசனைச் சந்தித்து, ‘உங்களுக்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி இல்லை’ என்றது. அதோடு, நடராசனை ஏறத்தாழ வீட்டுச் சிறையில் வைத்ததுபோல் அவரை நகரவிடாமல் வைத்தது. நடராசன் கொந்தளித்தார். ஆனாலும் அவரால் நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை. அதன் பிறகு  சுப்பிரமணிய சாமி சென்னையில் ஒரு புத்தகம் வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் நடராசனும் கலந்துகொண்டார். பூச்செண்டு, தஞ்சாவூர் தட்டு எல்லாம் கொடுத்து சுவாமியை நடராசன் குஷிப்படுத்தினார். அப்போது நடராசனோடு வந்த சிலர், “50 எம்.எல்.ஏ-க்கள் அண்ணன் பின்னால்தான் இருக்கின்றனர்” என்றனர். அதைக் கேட்டு சிரித்த சுவாமி, “ஓகோ... அப்போ தமிழ்நாட்டுக்கு அடுத்த சி.எம். நடராஜன்தானா” என்றார். இந்தத் தகவலும் ஜெயலலிதாவை எட்டியது.

சுப்பிரமணிய சாமி, நடராசன்

A to Z.... Z to A....

ஜெயலலிதாவின் நடவடிக்கைகளால் வெறுத்துப்போய் இருந்த நடராசனும் தன் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை. அவர் வழக்கம்போல் அவர் பாதையில் மாயமானைப் போல் காட்சி அளித்துக் கொண்டிருந்தார். இந்தியன் வங்கி சார்பில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்ட நடராசன், “A இருக்க வேண்டிய இடத்தில் Z-ஐப் போட்டு, Z இருக்க வேண்டிய இடத்தில் வேறொன்றைப் போட்டு, இன்றைக்கு அரசியலில் Z-யை A-ஆக்கியிருக்கிறேன். நான் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் Z-யை காலி செய்து அந்த இடத்துக்கு A-வைக் கொண்டு வருவேன்” என்றார்.

சசிகலா - நடராசன்

இவை எல்லாவற்றையும் கேட்ட ஜெயலலிதா பத்திரிகைகளுக்கு காட்டமாக ஒரு அறிக்கையைக் கொடுத்தார்.  அதில், “கழகத்தின் ஆட்சியைக் கவிழ்க்க நடராசன் சதித் திட்டம் தீட்டுகிறார். அதனால், அவரோடு கழகத்தினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது” என்று குறிப்பிட்டு இருந்தார். அதோடு நடராசனோடு நெருங்கிய தொடர்பில் இருந்த தேனி பன்னீர் செல்வம், சிவகங்கை முருகானந்தம், நெல்லை வேலய்யா, பால்ராஜ், ஆர்.பி.ஆதித்தன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தார். ஆனால், அப்போதும் சசிகலா ஜெயலலிதாவுடனேயே இருந்தார். தன் சொந்தத் தம்பி திவாகரனை துரத்திவிட்டபோதும் சசிகலா ஜெயலலிதாவுடனே இருந்தார். தனது அண்ணன் விநோதகனை ஜெயலலிதா துரத்தி விட்டபோதும் சசிகலா ஜெயலலிதாவுடனே இருந்தார். தனது அக்காள் மகன் தினகரனை ஜெயலலிதா துரத்திவிட்டபோதும் சசிகலா ஜெயலலிதாவுடன்தான் இருந்தார். தன் கணவர் நடராசனை ஜெயலலிதா துரத்தி துரத்தி அடித்தபோதும் சசிகலா, ஜெயலலிதாவுடனே இருந்தார். ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாத நடராசன் நேராக போயஸ் கார்டனுக்கு கிளம்பிப்போய், “உங்களை ஆட்சியில் அமர்த்தப் பாடுபட்டவன் நான்... என்னை சந்தேகிக்கிறீர்கள்.. என்னை வெளியில் அனுப்பிவிட்டு, என் ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கி விட்டீர்கள். அதுபோல, சசியையும் அனுப்பிவிடுங்கள். உங்களுக்கு உதவி செய்வதற்கு மட்டும் சசி வேண்டுமா? என்று சத்தம் போட்டார். ஆனால், அந்தச் சத்தம் வெறுமனே காற்றில் கரைந்து காணாமல் போனது. ஜெயலலிதாவும் சசிகலாவை அனுப்பிவிடவில்லை; சசிகலாவும் ஜெயலலிதாவை விட்டு விலகிவிடவில்லை. 

கதை தொடரும்....

http://www.vikatan.com/news/coverstory/90049-natarajan-s-master-plan-to-dismiss-admk-govt-how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter---45.html

Link to comment
Share on other sites

“போஸ்டர்... கட்-அவுட்... நான்கு லாரிப் பூக்கள்!” : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 46

 

sasikala_001_12373_17537_%282%29_17075.j

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் தமிழக மக்களுக்கு... தமிழக அரசியலுக்கு... ஒருவிதமான படோடோபமான, ஆடம்பர அரசியலை அறிமுகம் செய்தார். காமராஜர் காலத்தில் அதற்கு வழியே இல்லை. அண்ணா காலத்தில் அதை யாரும் நினைத்துப் பார்த்திருக்கக்கூட முடியாது. கருணாநிதி காலத்திலும் அவ்வளவு ஆடம்பரம் அரசியலில் எட்டிப்பார்க்கவில்லை. சொகுசான நடிகராக இருந்து, முதல்வரான எம்.ஜி.ஆர் காலத்தில்கூட நிலைமை அவ்வளவு மோசமாகவில்லை. அதுவரையிலும் ஆர்ப்பாட்டமான அரசியல் இருந்தது. ஆனால், ஆடம்பர அரசியல் என்ற ‘கான்செப்ட்’ தமிழகத்துக்கு அறிமுகம் ஆகவில்லை.  ஜெயலலிதா காலத்தில் அது தமிழகத்துக்குள் எட்டிப் பார்க்கத் தொடங்கி... பிறகு, அரசியலின் அங்கமாக மாறிப்போனது. அந்தக் காலகட்டத்தில் ஜெயலலிதா தன்னை, தமிழகத்தை ரட்சிக்க வந்த ஆதிபராசக்தியின் வடிவமாக கற்பனை செய்து கொண்டார். தன்னைவிட்டால் தமிழகத்துக்கு வேறு நாதி இல்லை என்ற நினைப்பில் இருந்தார். இனி நிரந்தரமாக தமிழகத்தில் அ.தி.மு.க-வின் ஆட்சிதான் என்று தப்புக் கணக்கைப் போட்டுக் கொண்டார். அந்த எண்ணம் அவர் கண்ணில் இருந்து எதார்த்தத்தை மறைத்தது. எதார்த்தம் தெரியாததால், அவருக்கும் தமிழக மக்களும் இருந்த இடைவெளி அதிகரித்துக்கொண்டே போனது. 

madurai_con_1_17593.jpg

ஜெயலலிதா எங்கு போனாலும் அவருடைய காருக்கு முன்னாலும் பின்னாலும் தலா 50 கார்கள் அணிவகுத்தன; மேரி மாதா, ஆதி பாராசக்தி வடிவத்தில் சித்தரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் போஸ்டர்கள் தமிழகத்தை கேலிக்குரிய மாநிலமாக பார்க்க வைத்தன; ஜெயலலிதாவின் 150 அடி உயர கட்-அவுட்கள் பொதுமக்களை வாய்பிளக்க வைத்தன; ஜெயலலிதா கடந்து செல்லும்வரை மணிக்கணக்கில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களால் பொதுமக்கள் எரிச்சல் அடைந்தனர். ஜெயலலிதா கலந்து கொள்ளும் சில மணி நேர கூட்ட மேடைகளுக்கு அருகில் அவருக்காக  லட்சக் கணக்கில் பணத்தைக் கொட்டி கழிப்பறைகள் உருவாக்கப்படுவதும், கூட்டம் முடிந்ததும் அவை இடித்துத் தகர்க்கப்படுவதும் தமிழக மக்களை ஆத்திரமுறச் செய்தன. ஆனால் ஜெயலலிதா இவற்றை எல்லாம் விரும்பினார். அவற்றை ரசித்தார். அது ஒவ்வொன்றுக்கும் சசிகலா சாட்சியாக இருந்தார். ஜெயலலிதாவுக்கு இப்படிப்பட்ட ஆடம்பரங்களை பழக்கிவிடுவதும், அவற்றைச் செய்யத் தூண்டுவதும் சசிகலாதான் என்று பலர் குற்றம் சாட்டினர். அந்தக் குற்றச்சாட்டுகள் எதையும் சசிகலா கண்டுகொள்ளவில்லை. அந்த விமர்சனங்கள் எதற்கும் ஜெயலலிதா பதில் சொல்லவில்லை. இவற்றை எல்லாம் உணர்ந்து கொள்ள ஜெயலலிதாவின் 1991-96 ஆட்சியில் பல சம்பவங்கள் இருக்கின்றன. அதில் கும்பகோணம் மகாமகத்துக்கு அடுத்து நடந்த மதுரை மாநாடு உலகப்பிரச்சித்தம். 

மதுரை மாநாடு : ஆடம்பர அரசியலின் உச்சம்! 

1992 ஜுன் 27,28,29 மதுரையில் அ.தி.மு.க மாநாடு நடக்கும் என்று ஜெயலலிதா அறிவித்தார். அதையடுத்து மதுரை சசிகலா, ஜெயலலிதாஅல்லோலகல்லோலப்படத் தொடங்கியது.  மதுரையில் சர்க்கியூட் ஹவுஸில் ஜெயலலிதா, சசிகலா தங்குவதற்காக தனி அறைகள் உருவாக்கப்பட்டன. அந்த அறைகளின் கட்டமைப்பு, ஒருமுறை அல்ல... இருமுறை அல்ல... 27 முறை மாற்றி அமைக்கப்பட்டது. மதுரை, தேனி, திண்டுக்கல்லில் இருந்த சீஃப் இன்ஜினீயர்கள் எல்லாம் மதுரையில் மாநாடு நடைபெறும் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் குவிக்கப்பட்டனர். ஜெயலலிதா தங்கப்போகும் அறைக்கு ‘ஸ்பார்டெக்ஸ்’ டைல்ஸ்கள் பதிக்கப்பட்டன. தமுக்கத்தில் அமைக்கப்பட்ட மாநாட்டு மேடையின் முகப்பில் மழை பெய்தால் தண்ணீர் உள்ளே வடிந்துவிடாமல் இருக்க, தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக ‘பைபர் ஸ்பான்ஞ்’ கூரைகள் வேயப்பட்டன. மேடையிலும்  டைல்ஸ்கள் பதிக்கப்பட்டன. மேடையில் இருந்து ஜெயலலிதாவின் ரெஸ்ட் ரூம் செல்லும் பாதையில், பாலீஸ் செய்யப்பட்ட கடப்பா கற்கள் பதிக்கப்பட்டன. ஜெயலலிதா தங்கப்போகும் அறைக்கு ரத்தினக் கம்பளங்கள் கொண்டு வரப்பட்டு விரிக்கப்பட்டன அதற்குள்ளேயே மேக்கப்-ரூம், டிரெஸ்ஸிங் ரூம், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த டிஸ்கஷன் ரூம் அமைக்கப்பட்டது. மன்னார்குடியில் இருந்து சமையலுக்கு தனி சமையல்காரர்கள் இறக்கப்பட்டனர். 

 

போஸ்டர்... கட்-அவுட்... நான்கு லாரிப் பூக்கள்!

மதுரை மாநாட்டில் மாநாடு

தலைநகரின் ஜான்சி ராணி... என்று கலர் போஸ்டர்கள் பளபளத்தன. செங்கோட்டையன், கண்ணப்பன், அழகு திருநாவுக்கரசுதான் மாநாட்டு ஏற்பாடுகளை முன்னின்று செய்தனர். 70 எம்.எம். கான்கிரீட் மேடை அமைக்கப்பட்டது. அதன் முன்பு பிளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்த பிரம்மாண்ட யானை சிலைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. 150 அடி உயரத்துக்கு ஜெயலலிதாவின் கட்-அவுட்கள் தமிழகத்தில் மதுரை மாநாட்டில் அறிமுகமானது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்களைவிட அந்த கட்-அவுட்கள் உயரமாக இருந்தன. அதைப் பார்த்து மதுரை அஞ்சியது. 27 ஆம் தேதி தொடங்கிய மாநாட்டுக்கு தனி ஹெலிபேடில் சசிகலாவும் ஜெயலலிதாவும் வந்திறங்கினர். ஜெயலலிதா நேராக நடக்க, சசிகலா தனியாக வேறு ரூட்டில் நடந்து போனார்.  சசிகலாவோடு டி.எஸ்.பி சிவனாண்டி சகஜமாகப் பேசிச் சிரித்துக்கொண்டு, அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். ஹெலிபேட் மைதானத்தில் நின்று கொண்டிருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் ஜெயலலிதா வந்தவுடன் தபதபவென வரிசையாய் அவர் காலில் விழுந்தனர். தொலைவில் இருந்து அந்தக் காட்சியைப் பார்த்தவர்களுக்கு ஒரு மனிதக் கோபுரம் ஸ்லோமோஷனில் சாய்வது போலத் தெரிந்தது. அதன்பிறகுதான் உச்சக்கட்ட அதிர்ச்சி அவர்களுக்கு காத்திருந்தது. ஜெயலலிதாவுக்காக பல லட்சங்களைக் கொட்டி, பார்த்து பார்த்து இழைக்கப்பட்ட அந்த அறையில்... 27 முறை மாற்றி அமைக்கப்பட்ட அந்த அறையில் ஜெயலலிதா தங்க முடியாது என்று மறுத்துவிட்டார். அசோக் ஹோட்டலில் தங்கினார். 28 ஆம் தேதி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஜெயலலிதா கொடியேற்றி வைத்தார். அங்கிருந்து மாநாட்டுப் பந்தலுக்கு ஜெயலலிதா வரும் வழியில் 4 லாரிகளில் கொண்டு வந்து பூக்களைக் கொட்டி இருந்தனர். அது ஜெயலலிதா நடந்துவருவதற்காக கொட்டப்பட்ட பூக்கள் அல்ல... ஜெயலலிதாவின் கார் மிதந்து வருவதற்காக கொட்டப்பட்டவை. முதல்நாள் நிகழ்ச்சியில், முசிறித் தொகுதி எம்.எல்.ஏ பிரின்ஸ் தங்கவேலுவின் திருமணம் உட்பட நான்கு திருமணங்களை மாநாட்டில் ஜெயலலிதா நடத்தி வைத்தார். 

ஜெ.வுக்கு இணையாக சசிகலாவுக்கு மரியாதை!

சசிகலா குடும்பம்

முதல்நாள் மாநாட்டில் மடிப்பாக்கம் வேலாயுதம் வெள்ளி சிம்மாசனத்தை ஜெயலலிதாவுக்கு வழங்கினார். அதில் யாழி வடிவமைக்கப்பட்டு இருந்தது. அதனால், அதற்குத் தனியாக சாந்தி பூஜை செய்த பிறகே ஜெயலலிதா  அதில் அமர்ந்தார். ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் முதல்நாள் யானைப்படை, குதிரைப்படை, தரைப்படை அணிவகுப்பு நடைபெற்றது. அதன்பிறகு, வேல் காவடி, மயில் காவடி, சிலம்பாட்டங்கள் நடைபெற்றன. கவிஞர் இளந்தேவனும், சுதா சேஷய்யனும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சசிகலா ஒவ்வொரு முறை எழுந்து வெளியில் சென்றபோதும், திரும்பி வந்து தன் இருக்கையில் அமர்ந்தபோதும், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள் எழுந்து நின்று வணக்கம் வைத்தனர். சசிகலாவின் குடும்பம் அந்த மாநாட்டில் பிரதானமாக வலம் வந்தது. இவற்றை எல்லாம் மேடையில் இருந்து ஜெயலலிதா அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். அதிகாரிகளும் ஜெயலலிதாவுக்குக் கொடுக்கும் மரியாதையை சசிகலாவுக்கும் கொடுத்தனர்.  மதியம் 2.25 மணிக்கு ஜெயலலிதா மாநாட்டுக்கு வந்தார். அங்கு உண்மையிலேயே கூட்டம் லட்சக்கணக்கில் திரண்டிருந்தது.  ஜெயலலிதா சாதனைகள் பற்றி அமைச்சர்கள் அடுக்கடுக்காக பேசினார்கள்.  பேச வருவதற்கு முன் அமைச்சர் விஸ்வநாதன், வெல்வெட் சூட்கேஸ் ஒன்றை ஜெயலலிதாவிடம் கொடுத்தார். அதை மடியில் வைத்து திறந்து பார்த்த ஜெயலலிதா, அதை உடனே மூடி தனது பாதுகாப்பு அதிகாரியிடம் கொடுத்தார். அது அங்கிருந்து நேராக சசிகலாவின் கைகளுக்குப் போனது. சசிகலாவும் அதைப் பார்த்துவிட்டு ஒரு சீட்டை எழுதி ஜெயலலிதாவுக்கு அனுப்பினார். அதைப் படித்த ஜெயலலிதா சசிகலாவை ஒருமுறை பார்த்துக் கொண்டார். இரண்டறை மணிநேரம் பேசிய ஜெயலலிதா, “ராஜிவ் காந்தியின் ரத்தத்தில் நான் வெற்றி பெறவில்லை என்று பேசினார். 29 ஆம் தேதி அதிகாலையில் 4 மணிக்கு ஜெயலலிதா மாநாட்டை முடித்துவிட்டு சென்னை திரும்பினார். அந்த மாநாடுதான் அடுத்தடுத்த தமிழகத்தில் ஜெயலலிதா-சசிகலா கூட்டணி தமிழகத்தில் நடத்தப்போகும் ஆடம்பரங்களுக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது. 

http://www.vikatan.com/news/coverstory/90388-admk-conference-in-madurai-how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter---46.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

“ஜெயலலிதா சந்திரலேகா மோதல்” சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 47

 

:சசிகலா

ஜெயலலிதாவின் முதல் அரசாங்கம் பொதுமக்களை அநாசயமாக அலட்சியப்படுத்தியது. அதற்கு உதாரணம் கும்பகோணம் மகாமகம். ஜெயலலிதாவின் முதல் அரசாங்கம் அராஜகமாகத் தொடர்ந்தது. அதற்கு எடுத்துக்காட்டு, தராசு பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டு, அதன் இரண்டு ஊழியர்களின் உயிர் பறிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் முதல் அரசாங்கம், தமிழகத்தில் ஆடம்பர அரசியலுக்கு அச்சாரம் போட்டது. அதற்கு  விளக்கம் மதுரையில் நடந்த  வெற்றி விழா மாநாடு. ஜெயலலிதாவின் முதல் அரசாங்கம் கொடூரங்களின் கோட்டையாக நின்றது. அதன் நிகழ்கால அடையாளம், ஆசிட் வீச்சில் சிதைக்கப்பட்ட ஐ.ஏ.எஸ்.அதிகாரி சந்திரலேகாவின் முகம். 

 

ஜெயலலிதா

ஆசிட் வீச்சு : கொடூரத்தின் அடையாளம்!

1992 மே 19-ம் தேதி ஒரு செவ்வாய் கிழமை. அன்று காலையே வெயில் கொளுத்தத் தொடங்கியது. ஊர் முழுவதும் புழுக்கம் நிரம்பி இருந்தது. தன் வீட்டில் இருந்து அலுவலகம் கிளம்பிய ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா தனது காரின் பின் சீட்டில் அமர்ந்து கொண்டார். கார் கண்ணாடியை இறக்கிவிட்டு, வெளிக்காற்றை வாங்கிக் கொண்டும், சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டும் பயணத்தில் சந்திரலேகா ஆசிட் வீச்சுமூழ்கி இருந்தார். அவருடைய கார் எழும்பூர் அருகே வந்தபோது கடுமையான போக்குவரத்து நெரிசலில் அந்தச் சாலை சிக்கித் கொண்டிருந்தது. ஊர்ந்து... ஊர்ந்து... மெல்ல நகர்ந்து கொண்டிருந்த வாகனங்கள் ஒரு கட்டத்தில், திணறத் தொடங்கின. அந்த நேரத்தில் சாலையின் ஓரத்தில் ஒரு இளைஞன் பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தான். அவன் எதேச்சையாக சந்திரலேகாவின் கண்களில் தென்பட்டான். ஏனோ... அவனை கவனிக்க வேண்டும் போல் சந்திரலேகாவுக்குத் தோன்றியது. அதே நேரத்தில் அந்த இளைஞனும் சந்திரலேகாவின் காரை நோக்கியே ஓடி வந்தான். காகிதங்களில் அச்சடிக்கப்பட்ட நோட்டீஸ் எதையாவது விநியோகிப்பான் என சந்திரலேகா நினைத்துக் கொண்டார். இப்போது அந்த இளைஞன் சந்திரலேகாவின் காரை வெகு அருகில் நெருங்கி இருந்தான். அந்த நேரத்தில் சட்டென சந்திரலேகாவுக்கு மனதில் ஒரு உறுத்தல்... “இவன் வரும் பரபரப்பில் நோட்டீஸை விசிறியடித்தான் என்றால், அது கண்களில் படுமே!” என நினைத்து, வலதுபக்கம் திரும்பி கண்களையும் லேசாக மூடிக் கொண்டார். அடுத்த சில நொடிகளில், எரிகிற தீயில் உருக்கப்பட்ட இரும்பு நெருப்புக் குழம்பை முகத்தில் ஊற்றியது போன்ற ஒரு கொடூர வேதனையை சந்திரலேகாவின் மூளை உணர்கிறது. எந்த வார்த்தையாலும் உணர்த்திவிட முடியாத ரணவேதனை அது. சந்திரலேகாவால் குரல் எழுப்பி அலறக்கூட முடியவில்லை. அனைத்தையும் மீறி லேசாகக் கண்களைத் திறந்து அவர் பார்த்தபோது அவருடைய புடவை, ஜாக்கெட்டும் எரிந்து கரும்புகைக் கிளம்பிக் கொண்டிருந்தது.

சட்டென செயல்பட்ட சந்திரலேகாவின் டிரைவர் பிரேம்குமார், காரை விட்டு இறங்கி அந்த இளைஞனை துரத்திப் பிடித்தார். சந்திரலேகா ரோட்டில் இறங்கி வேதனையில் துடித்தார். அப்போது, அவரைத் தாண்டிச் சென்ற எந்தக் காரும் அவருக்காக நிற்கவில்லை. ஆட்டோவில் ஏறி மருத்துவமனைக்குப் போனார். வேதனையும் இயலாமையும் சூழ்ந்திருந்த அந்தச் சூழலிலும் சந்திரலேகாவின் மனமும் புத்தியும், இது சதித்திட்டம் என்று அவரை எச்சரித்தது. இதைச் செய்தவர்கள் கொன்று கூவத்தில் வீசவும் தயங்கமாட்டார்கள் என்பதை உணர்ந்த சந்திரலேகா, நினைவை மட்டும் இறுக்கிப்பிடித்துக் கொண்டார். அவர் மருத்துவமனையில் இருந்தபோது, நெருங்கிப் பழகிய அதிகாரிகள், ஐ.ஏ.எஸ் வட்ட நண்பர்கள் என யாரும் அவரை வந்து பார்க்கவில்லை. ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் நலனுக்குப் பொறுப்பு மாநில முதலமைச்சர்தான். அவர்களுக்கு விடுமுறையை அனுமதிக்கும் அதிகாரம் படைத்தவர் மாநில முதல்வர்தான். அப்படி இருந்தும், தனது அரசாங்கம் நடக்கும் மாநிலத்தில், தனக்கு கீழ் பணியாற்றும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆசிட் வீச்சுக்கு ஆளாகி மருத்துவமனையில் இருந்தபோதும், ஜெயலலிதா அவரைப் போய்ப் பார்க்கவில்லை. ஆறுதலாக ஒரு அறிக்கையைக்கூட வெளியிடவில்லை. ஆனால், அதன்பிறகு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில், யாராவது ஒரு அதிகாரி கையெழுத்துப் போட மறுத்தால், “பாத்துப்பா... உன் முகத்துல ஆசிட் அடிச்சிரப்போறாங்க” என்று பேச ஆரம்பித்தனர்.. 

யார் அழகு : ஜெ.-சந்திரலேகா நடத்திய நீயா? நானா?

சந்திரலேகா

1992 காலகட்டத்தில் சந்திரலேகா டிட்கோ சேர்மனாக இருந்தார். அந்த நேரத்தில் ஸ்பிக் நிறுவனத்தின் 26 சதவிகித பங்குகளை அரசாங்கம் வைத்திருந்தது. அவற்றையும் தாங்களே வாங்கிவிட வேண்டும் என ஸ்பிக் நிறுவனத்தின் உரிமையாளர்களான ஏ.சி முத்தையாவும் எம்.ஏ.சிதம்பரமும் துடித்தனர். அந்த நேரத்தில் அரசாங்கமும் பங்குகளை விற்க முடிவு செய்தது. ஆனால், என்ன விலைக்கு விற்பது என்பதில் சிக்கல் ஏற்பட்டது. அந்தச் சிக்கலுக்குள்தான் கண்ணுக்குத் தெரியாத ஊழல் ஒன்று ஊடுருவி இருந்தது. 1992 ஜனவரி 24-ம் நாள் அரசின் வசம் உள்ள ஸ்பிக் பங்குகளை, அந்த நிறுவனத்துக்கே விற்பனை செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது. அந்த முடிவை அரசாங்கம் எடுத்தபோது, ஒரு பங்கின் விலை 80 ரூபாய். அதன்பிறகு இரண்டு மாதங்கள் கழித்துத்தான் பங்குகளை விற்பனை செய்ய ஒப்பந்தம் போடப்படுகிறது. அந்த ஒப்பந்தம் போடப்பட்டபோது (1992 மார்ச் 23-ம் தேதி) ஒரு பங்கின் விலை 210 ரூபாய். ஏறத்தாழ 3 மடங்கு அளவுக்கு பங்கின் விலை உயர்ந்திருந்தது. ஆனால், அரசாங்கம் 80 ரூபாய்க்கே ஸ்பிக் நிறுவனத்துக்கு பங்குகளை விற்பனை செய்ய ஆர்வம் காட்டியது. அதற்கு டிட்கோ சேர்மன் சந்திரலேகா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, “சந்திரலேகாவிடம் நானே பேசுகிறேன்” என்று சொல்லி தொலைபேசியில் அவரைத் தொடர்பு கொண்டார். அந்தத் தொலைபேசி உரையாடலில், “ஜெயலலிதா சொன்னதை சந்திரலேகா மறுக்க... சந்திரலேகா சொன்னதை ஜெயலலிதா எதிர்க்க...” என இருவருக்கும் வாக்குவாதம் வளர்ந்தது. கடைசியில் அந்த வாக்குவாதம், ‘யார் அழகு : நீயா? நானா?” என்ற இடத்தில் வந்து நின்றது. ஒருகட்டத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா, “முகத் தோற்றம்தான் முதலமைச்சராவதற்கு அடிப்படைத் தகுதி என்றால், நானும் முதல்வராகியிருப்பேன்” என்று கூறியதாக அப்போது பரவலாகப் பேசப்பட்டது. அதில் காயம்பட்ட ஜெயலலிதா சந்திரலேகாவுக்குத் தக்க பாடம் புகட்டக் காத்திருந்தார். அந்த நேரத்தில்தான் அவர் மீது ஆசிட் அடிக்கப்பட்டது. அதில் டிரைவரிடம் பிடிபட்ட இளைஞன் பெயர் சுடலை என்கிற சுர்லா என்று சொல்லப்பட்டது. 5 ஆண்டுகள் ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு வழக்கு கடுமையாகப் போடப்பட்டு இருந்தது. ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட சுர்லா மீதும் குற்றம் நிருபிக்கப்படவில்லை. கடைசிவரை சந்திரலேகா மீது ஆசிட் வீசப்பட்ட வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் யார் என்பது வெளி உலகத்துக்கு தெரியாமலே போனது. பெண்களை பழிவாங்க ஆசிட்டை கையில் எடுக்கும் புதிய-கொடூர கலாச்சாரம் ஒன்று தமிழகத்துக்கும் தமிழக அரசியலுக்கும் அறிமுகம் ஆனது. 

ஜெயலலிதாவின் கொடுங்கனவு நடராசன்! 

இத்தனை அட்டூழியங்களையும் ஒரு சேர சேர்த்து நடத்திய ஜெயலலிதாவை, நடராசனின் நடவடிக்கைகள் மட்டும் கொடுங் கனவாய்த் சசிகலா,அனுராதா, தினகரன்,ந்டராசன்துரத்திக் கொண்டே இருந்தன. நடராசன் தன் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்கிறார் என்ற அச்சத்திலேயே ஜெயலலிதா நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தார். அதனால், ‘நடராசனோடு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது’ என தன் கட்சிக்காரர்களை, தன் கட்சியின் எம்.எல்.ஏ-க்களை, எம்.பி-க்களை, மந்திரிகளை எச்சரித்துக் கொண்டே இருந்தார். அவர்களை நடராசன் பக்கமே அண்டவிடவில்லை ஜெயலலிதா. நடராசனின் மனைவி சசிகலாவுக்கும் அதே கட்டளையைப் பிறப்பித்திருந்தார் ஜெயலலிதா.  தன் தோழியின் விருப்பப்படியே சசிகலாவும் நடராசனை முற்றிலுமாக வெட்டி விட்டிருந்தார். ஜெயலலிதாவின் சொல்லை சசிகலா எந்த அளவுக்கு கறாராகப் பின்பற்றினார் என்றால், நெருங்கிய உறவுகளுக்குள் நடந்த டி.டி.வி.தினகரனின் திருமண விழாவில் கூட நடராசனோடு சசிகலா ஒரு வார்த்தைகூட பேசவில்லை. சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் மகன் டி.டி.வி.தினகரனின் திருமணம், 1992 அக்டோபர் 30-ம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்றது. சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகள் அனுராதாதான் மணமகள்.

நெருங்கிய சொந்தங்களுக்குள் நடைபெற்ற திருமணத்தில் ஜெயலலிதா கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், அவர் வரவில்லை. திருமணம் நடைபெற்ற ‘குருதயாள் சர்மா’ கல்யாண மண்டபத்துக்கு கட்சிக் கரை வேட்டிகள் யாரும் வரவில்லை. எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்களும் வரவில்லை. ஆனால், அதிகாரிகள் வந்திருந்தனர். டாமின் தியானேசுவரன், முதலமைச்சர் பாதுகாப்பு அதிகாரி பழனிவேல் என ஆரம்பித்து போலீஸ் அதிகாரிகள் எக்கச்சக்கமாக குவிந்திருந்தனர். அந்தத் திருமணத்தில் கலந்து கொண்ட சசிகலாவும் நடராசனும் பேசிக் கொள்ளவே இல்லை. ஆனால், நடராசன் உறவினர்களுக்கு மத்தியில் நின்றுகொண்டு, ஏதோ ஒரு ஜோக்கை சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். அவற்றை ஓரத்தில் நின்று கவனித்துக் கொண்டிருந்த சசிகலா, நடராசனின் ஒரு ஜோக்கைக் கேட்டு சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தார். அதிகபட்சமாக தினகரனின் திருமண விழாவில் சசிகலா, நடராசனின் சந்திப்பு அந்தச் சிரிப்போடு முடிந்தது. 

கதை தொடரும்....

http://www.vikatan.com/news/coverstory/91314-chandralekha-opposes-jayalalithaa-how-sasikala-became-bestie-of-jayalalithaa-episode-47.html

Link to comment
Share on other sites

ஜெயக்குமார் Vs சசிகலா! சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 48

 

சசிகலா, ஜெயலலிதா

ஜெயலலிதாவின் உடன்பிறந்த சகோதரர் ஜெயக்குமார். ஜெயலலிதாவுக்கு உடன்பிறவாச் சகோதரி சசிகலா. இந்த இரண்டு உறவுகளையும் தன்  தராசுத் தட்டில் சமமாக நிறுத்தி வைக்க அரும்பாடுபட்டார் ஜெயலலிதா. அந்தப் பாசப் போராட்டத்தில் ஜெயலலிதா தோற்றார்; சசிகலா வென்றார். வேறு வழியில்லாமல் தன் அண்ணன் ஜெயக்குமாரின் குடும்பத்தை முற்றிலுமாக ஒதுக்கி வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் ஜெயலலிதா. அவருக்கு ஏற்பட்ட அந்த நிலைக்குக் காரணம், சசிகலாவின் பழிக்குப் பழி வாங்கும் திட்டமாக இருக்கலாம்; அல்லது எதிர்காலத்தில் ‘தனக்கு எதிரியாக ஜெயக்குமாரின் மகள் தீபா வரக்கூடும்’ என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கலாம்; அல்லது ஜெயலலிதாவும் சசிகலாவும் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட, ஈவு இரக்கமற்ற ஒரு கறார் ஒப்பந்தமாகவும் இருக்கலாம். ‘உன்னுடன் இருப்பதற்காக நான், என் கணவரைப் (நடராசன்) பிரிந்துள்ளேன்; உறவுகளை ஒதுக்கி வைத்துள்ளேன்; தம்பியைத் தள்ளி வைத்துள்ளேன். அதுபோல, என்னுடன் நீ இருக்க வேண்டுமானால் உன் அண்ணனையும் அவர் குடும்பத்தையும் ஒதுக்கி வை’ என்பதைப் போன்றதொரு ஒப்பந்தமாகவும் அது இருந்திருக்கலாம். ஜெயலலிதாவுடன் தனக்கு ஏற்பட்ட இணைப்பை தக்க வைத்துக் கொள்ள சசிகலா எதையும் செய்யவும் தயங்காதவராக இருந்தார். ஜெயலலிதாவுக்குப் பிடிக்கவில்லை என்றதும், தன் ரத்த உறவுகள் அத்தனையையும் கொஞ்சமும் தயங்காமல் சசிகலா ஒதுக்கித் தள்ளினார். அதேபோல ஜெயலலிதாவோடு தனக்கு உருவான பிணைப்புக்கு இடையில், ஜெயலலிதாவின் உறவுகள் குறுக்கிட முயன்றபோது அவைகளைக் கொஞ்சமும் இரக்கமின்றி ஓரம் கட்டினார். அப்படி ஓரம் கட்டப்பட்டதுதான் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் குடும்பம்

ஜெயக்குமார் Vs சசிகலா!

ஜெயக்குமார், தீபக், விஜயலெட்சுமி, தீபா, சசிகலா

1993 வரை ஜெயலலிதா அவரது அண்ணன் ஜெயக்குமாரின் குடும்பத்தோடு நெருக்கமாகத்தான் இருந்தார். அப்போது ஜெயக்குமாரின் குடும்பம் தி.நகரில் வசித்தது. ஜெயக்குமாரின் மனைவி விஜய லெட்சுமி. மகள் தீபா. மகன் தீபக். தங்கை தமிழக முதல்வராக இருந்தாலும், ஜெயக்குமார் தனியாக-எளிமையாகவே தன் வாழ்க்கையை நடத்தி வந்தார். எப்போதாவது அவர் போயஸ் கார்டனுக்கு குடும்பத்தோடு வந்து போவதும், சில தேவைகளைக் கேட்டுப் பெறுவதும், போயஸ் கார்டனில் நடக்கும் விழாக்கள், விருந்துகளில் கலந்து கொள்வதுமாக இருந்தார். அது சசிகலாவுக்கு உறுத்திக் கொண்டே இருந்தது. குறிப்பாக அந்தப் பெண் தீபா... சசிகலாவுக்கு உறுத்தலோடு எரிச்சலையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தார். போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்தால், ஜெயலலிதாவின் சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்வது, ஜெயலலிதாவைப் போலவே கைக்குட்டையால் முகம் துடைப்பது என தீபா ஒரு மினி ஜெயலலிதாவாகவே இருந்தார். 12-ம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த தீபாவின் பார்வையும், பேச்சும், பாவனைகளும் நொடிக்கு நொடி ஜெயலலிதாவையே நினைவுபடுத்தியது. அதோடு அத்தையின் உடைகளை அடுக்கி வைப்பது, அத்தைக்கு உடைகளைத் தேர்வு செய்வதிலும் தீபா தலையிட்டார். ஜெயலலிதாவும் தீபாவை, ‘டார்லிங்... டார்லிங்’ என அன்பொழுக அழைத்துக் கொஞ்சினார். இது எல்லாம் சசிகலாவுக்கு எரிச்சலையும், எதிர்காலம் பற்றிய கலக்கத்தையும் உண்டாக்கியது. 

தீபா vs சசிகலா!

தீபா, சசிகலா

நேரு ஸ்டேடியம் திறப்பு விழா நிகழ்ச்சி வந்தது. அதில் பிரதமர் நரசிம்மராவ் கலந்து கொண்டார். சசிகலாவின் அக்காள் வனிதாமணி உள்ளிட்ட சசிகலாவின் உறவினர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தனர். ஜெயலலிதா தன் அண்ணன் குடும்பத்தை நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார். இரண்டு குடும்பங்களும் போயஸ் கார்டனில் சங்கமித்தன. அங்கிருந்து அனைவரும் ஒரே வேனில் கிளம்பி நேரு ஸ்டேடியத்துக்குப் போனார்கள். பிரதமர், முதலமைச்சர் அமர்ந்திருந்த மேடைக்குப் பக்கவாட்டில் வி.ஐ.பி-க்களுக்கு இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. சசிகலாவுக்காக தனி சோஃபா போடப்பட்டு இருந்தது. மூன்று பேர் அமரக்கூடிய அந்தச் சோபாவில் சசிகலாவும், ஜெயலலிதாவின் அண்ணி விஜயலெட்சுமியும் உட்கார்ந்திருந்தனர். மூன்றாவது இடம் சசிகலாவின் அக்காவுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த இடத்தில் தீபா வந்து அமர்ந்து கொண்டார். சசிகலாவின் அக்காள் பின்வரிசைக்குத் தள்ளப்பட்டார்.

இந்த நிகழ்வு, ஏற்கெனவே தீபா மீது ஆத்திரத்தில் இருந்த சசிகலாவின் மனதில் மேலும் கொந்தளிப்பை உருவாக்கியது. நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பியதும் ஜெயலலிதாவிடம் சசிகலா புகார் வாசித்தார். அதைக் கேட்டு ஆத்திரப்பட்ட ஜெயலலிதா, தன் அண்ணனைக் குடும்பத்துடன் மீண்டும் ஒரு நாள் போயஸ் தோட்டத்துக்கு வரவழைத்தார். 4 மணிநேரம் தன் அண்ணனோடு பேசினார். அந்த சமயத்தில் ஜெயலலிதா கடும் கோபத்தில் இருந்தார். அந்த பேச்சுவார்த்தை முற்றியபோது ஜெயலலிதாவிடம் கோபம் கொப்பளித்தது. அதைப் பார்த்தே மிரண்டுபோன தீபா, மயக்கம் போட்டுக் கீழே சரிந்தார். தீபா மயங்கிச் சரிந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா கோபம் தணிந்து நிதானத்துக்கு வந்தார். தனது அண்ணன் குடும்பத்தைச் சமாதானம் செய்து அனுப்பிவைத்தார். ஆனால், அதன்பிறகு ஜெயக்குமாரின் குடும்பம் போயஸ் கார்டன் பக்கமே வரவில்லை. அந்த நேரத்தில் ஜெயக்குமாரின் குடும்பம் போயஸ் கார்டனுக்குள் மீண்டும் வருவதற்குப் மேகநாதன் என்பவர் பாலம் போட்டார். 

கஞ்சா வழக்கில் மேகநாதன் கைது. 

ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவின் காலத்தில் இருந்து, மேகநாதன் ஜெயக்குமாரோடு இருந்தவர். உதவியாளர், கார் டிரைவர், அட்வைசர் என ஜெயக்குமாருக்கு மேகநாதன்தான் ஆல்-இன்-ஆல். மேகநாதன் இல்லாமல் கழியும் ஒரு நாள், ஜெயக்குமாருக்கு மிகக் கடினமானதாக இருக்கும். அப்படிப்பட்ட மேகநாதன், ஜெயக்குமார் குடும்பத்தை மீண்டும் போயஸ் கார்டனுக்குள் கொண்டு வந்துவிட வேண்டுமெனத் துடித்தார். ஜெயக்குமார் குடும்பம் போயஸ் கார்டனுக்கு வராத அந்த நேரத்தில், மேகநாதன் ஜெயலலிதாவைச் சந்தித்தார். meganathan_07137.jpgஜெயக்குமார் குடும்பத்தைச் சேர்த்துக் கொள்ளச் சொல்லி ஜெயலலிதாவிடம் பேசினார். இதையடுத்து மேகநாதனுக்கு ஜெயலலிதாவைப் பார்க்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஆனால், அதற்கும் சளைக்காத மேகநாதன், போயஸ் கார்டன் ஊழியர்கள் சிலரை வெளியில் சந்தித்து, ஜெயலலிதாவுக்குச் சில தகவல்களைக் கொண்டு போக முயன்றார். அதில்தான் அவருக்கு சனி பிடித்தது. மேகநாதனை ஒடுக்க முடிவு செய்து, விறுவிறுவென சசிகலா காய்களை நகர்த்தினார். 1993 மார்ச் 5-ம் தேதி இரவு. மேகநாதனைச் சந்திக்க பாண்டிபஜார் இன்ஸ்பெக்டர் பாபு வந்து அவரிடம் அன்பாகப் பேசினார். பிறகு, “ஒரு முக்கியமான விஷயம்... உங்களிடம் பேச வேண்டும். ஹோட்டல் கண்பத்தில் போய் பேசுவோம்” என்று சொல்லி மேகநாதனை இன்ஸ்பெக்டர் பாபு அழைத்துச் சென்றார்.

ஹோட்டலுக்குள் நுழைந்தபோது, அங்கு இரண்டு கான்ஸ்டபிள்களும், ஒரு சப்-இன்ஸ்பெக்டரும் இருந்தனர். இடத்தின் சூழல் வேறு மாதிரியாக இருந்தது. ஹோட்டலுக்கு வரும்வரை அன்பாகப் பேசிக்கொண்டு வந்த இன்ஸ்பெக்டர் பாபு, இப்போது வேறு தொனியில் பேச ஆரம்பித்தார். அதன்பிறகுதான், “ஏதோ ஒரு வில்லங்கம் நம்மை மெல்லச் சுற்றிக் கொண்டிருக்கிறது” என்பது மேகநாதனுக்குப் புரிந்தது. உடனே சுதாரித்துக் கொண்டு, அங்கிருந்து கிளம்ப முயன்ற மேகநாதனை அவர்கள் வெளியில் விடவில்லை. “உன் மீது கஞ்சா வழக்குப் போடப்பட்டுள்ளது. காலையில் நீதிமன்றத்துக்குப் போக வேண்டும். அதனால், நீ எங்கேயும் போகக்கூடாது” என்றனர். அவ்வளவுதான்... அதன்பிறகு மேகநாதன் கதறி அழுது கெஞ்சினார். ஒன்றும் பலனளிக்கவில்லை. மாறாக, “உன் மேல் பிரவுண் சுகர் வைத்திருந்ததாக வழக்குப் போடச் சொல்லித்தான் எங்களிடம் இந்த வேலை ஒப்படைக்கப்பட்டது. ஆனால், நீ எனக்கு அறிமுகமான ஆள் என்பதால் கஞ்சா வழக்கோடு நிறுத்திக் கொண்டோம். அதனால், நீதிமன்றத்தில் எந்தப் பிரச்னையும் செய்யாமல், குற்றத்தை ஒத்துக் கொண்டு சிறைக்குப் போய்விடு” என்று மிரட்டல்தான் வந்தது. மறுநாள் காலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மேகநாதன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ரிமாண்ட் செய்து மாஜிஸ்திரேட் அருணா ஜெகதீசன் உத்தரவிட்டார். 

ஜெயா-ஜெயக்குமார் உறவில் முறிவு!

ஜெயலலிதா, அவரது அண்ணன் ஜெயக்குமார், அண்ணி விஜயலெட்சுமி

இதற்கிடையில் மேகநாதனின் மனைவி ரேணுகா தேவியும், ஜெயக்குமாரும்  மேகநாதனை சென்னை முழுவதும் தேடினார்கள். போலீஸ் உயரதிகாரிகளிடம் ஜெயக்குமார் முறையிட்டார். “எங்களுக்கு ஒன்றும் தெரியாது” என அவர்கள் கையை விரித்தனர். ஜெயக்குமார் போயஸ் தோட்டத்துக்கு நேரில் கிளம்பிப் போனார். ஆனால், அவரை தெருமுனையிலேயே சிலர் மடக்கிவிட்டனர். அதன்பிறகு தொலைபேசியில் தன் தங்கையும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவைத் தொடர்பு கொள்ள முயன்றார். ஒரு நாள் அல்ல... இருநாள் அல்ல... தொடர்ந்து மூன்று வாரங்கள்... ஒரு நாளைக்கு 50  போன் கால்கள்... என்று முயற்சித்துக் கொண்டே இருந்தார். ஆனால், கடைசிவரை அவரால் ஜெயலலிதாவிடம் பேசவே முடியவில்லை. ஒவ்வொருமுறையும் “சி.எம். ரெஸ்டில் இருக்கிறார்... கோட்டைக்குப் போய் இருக்கிறார்... தூங்குகிறார்” என்ற பதில்கள் மட்டுமே வந்தன.

ஒரு கட்டத்துக்குப் பிறகு,  ஜெயக்குமாரின் வீட்டுத் தொலைபேசியும் வேலை செய்யாமல் போனது. அதைச் சரிசெய்ய வந்த டெலிபோன் துறை ஊழியர்கள், “சார் எங்களால் முடிந்த அளவுக்கு சரி செய்துவிட்டோம். டெலிபோன் எக்ஸ்சேன்ஜில் ஏதோ பிரச்னைபோல. இதற்கு மேல் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது” எனக் கையை விரித்தனர். ஜெயக்குமார் விரக்தியான புன்னகையுடன் அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ஜெயக்குமார் போயஸ் கார்டன் பக்கமே போகவில்லை. மேகநாதனின் மனைவி ரேணுகாதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் “என் கணவர் மேகநாதன், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் அவருடைய அண்ணன் ஜெயக்குமாரின் குடும்பத்துக்கும் நெருக்கம் உண்டாக்க முயற்சித்தார். அது முதல்வரின் தோழி சசிகலாவுக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவர் உத்தரவின்பேரில் தான், போலீஸ்காரர்கள் என் கணவர் மீது கஞ்சா வழக்குப் போட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டு இருந்தார். 

ப்ரியமுள்ள அம்மு! 

பல முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் ஜெயலலிதாவோடு பேச முடியவில்லை என்பதில் விரக்தி அடைந்த ஜெயக்குமார், ஒரு கடிதத்தை ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைத்தார். அதில், jaya_kumar_letter_07449.jpg

பிரியமுள்ள அம்மு,

நீ நலமாய் இருப்பாய் என நம்புகிறேன். ஆனால், நானும் என் குடும்பமும் பெரும் சிக்கலில் இருக்கிறோம். நான் கடந்த மூன்று வாரங்களாக உன்னுடன் தொலைபேசியில் பேச முயற்சிக்கிறேன். ஆனால், முடியவில்லை. மேகநாதன் ஒரு அப்பாவி. அவன் குற்றவாளி அல்ல. ஆனால், அவன் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளான். அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்திலேயே நாங்கள் இங்கு இருக்கிறோம். அதனால் எனது கோரிக்கையை ஏற்று மேகநாதனை விடுதலை செய்ய நீ உதவ வேண்டும். என்னுடைய எல்லா வேலைகளுக்கும் நான் அவனையே சார்ந்துள்ளேன். என் மேனேஜர், உதவியாளர், டிரைவர் என எனக்கு எல்லாம் அவன்தான். அவன் கைது செய்யப்பட்டதில் இருந்து நான் உதவிக்கு ஆள் இல்லாமல் தவிக்கிறேன். நான் நேரில் உன்னைச் சந்தித்து விளக்கம் கொடுக்க முயற்சித்தேன். ஆனால், உன்னைச் சந்திக்கும் எல்லா வழிகளும் எங்களுக்கு அடைக்கப்பட்டுவிட்டன. கடைசி முயற்சியாகத்தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். என்னுடைய வேண்டுகோளைப் புரிந்துகொண்டு நீ உதவுவாய் என நம்புகிறேன். 

உன் அன்புள்ள 
பாப்பு (ஜெயக்குமார்).

கதை தொடரும்...

http://www.vikatan.com/news/tamilnadu/91566-jayakumar-vs-sasikala-how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter---48.html

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

சசிகலாவுக்குச் சம அதிகாரம் : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 49

 
 

சசிகலா, ஜெயலலிதா

சசிகலாவின் சதுரங்கம்! 

சசிகலாஅ.தி.மு.க என்ற கட்சியின் எல்லைக்குள், அதன் ஆட்சி அதிகாரத்துக்குள், போயஸ் கார்டன் வீட்டுக்குள், ஜெயலலிதாவின் ரத்த உறவுகளுக்கு மத்தியில் சசிகலா சதுரங்கம் ஆடிக் கொண்டிருந்தார். அந்த ஆட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் வெட்டப்பட்டனர்; அதிகாரிகள் அகற்றப்பட்டனர்; அமைச்சர்களின் பதவி பலி வாங்கப்பட்டன; ஜெயலலிதாவின் ரத்த உறவுகள் துண்டிக்கப்பட்டன; தேவைப்படும்போது சசிகலாவின் சொந்தங்களும் விரட்டியடிக்கப்பட்டனர். ஆனால், ஜெயலலிதாவின் ராஜ்ஜியத்தில், சசிகலா மட்டும் இறுதிவரை ராணியாகவே வலம் வந்தார். சசிகலா-ஜெயலலிதா உறவை எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியவில்லை. இந்த நேரத்தில் தஞ்சையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடு, “சசிகலா தனக்குச் சமமான அதிகாரம் படைத்தவர்” என்பதை ஜெயலலிதா சொல்லாமல் சொல்வதற்குப் பயன்படுத்தப்பட்டது. மதுரையில் நடைபெற்ற மாநாட்டில்கூட அந்தளவுக்கு சசிகலாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அந்த மாநாட்டில் பிரதானமாக வலம் வந்தது ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் குடும்பம்தான். ஆனால், தஞ்சை மாநாடு மன்னார்குடி குடும்ப மாநாடாகவே நடந்து முடிந்தது. அந்தக் கதை அரங்கேறுவதற்கு சில நாள்களுக்கு முன்பு, போயஸ் தோட்டத்துக்குள் புகுந்த ஒரு புதிய சக்தி சசிகலாவுக்குச் சிறிது நாள்கள் லேசாக குடைச்சல் கொடுத்தது. 

ஜெயலெட்சுமி Vs சசிகலா!

ஜெயலலிதாவின் சொந்த சித்தி ஜெயலெட்சுமி. 17 வருடங்களுக்கு முன்னால், ஜெயலலிதாவுடன் அவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. அதையடுத்து, ஜெயலலிதாவோடு இருந்த பேச்சுவார்த்தைகளை முறித்துக்கொண்டார். அதன்பிறகு ஜெயலலிதாவும் சித்தியைத் தேடிப் போகவில்லை. ஆனால், மீண்டும் ஜெயலலிதா-ஜெயலெட்சுமி உறவு துளிர்த்தது. 1994-ம் ஆண்டு ஜெயலெட்சுமி திடீரென சீனுக்கு வந்தார். ஜெயக்குமாரின் குடும்பம் வெளியே போன சில நாள்களில் ஜெயலெட்சுமி போயஸ் கார்டனுக்குள் புகுந்தார். “தன் கணவருக்கு அப்போலோவில் சிகிச்சை நடக்கிறது. அதற்கு ஜெயலலிதா உதவ வேண்டும்” என்ற கோரிக்கையோடுதான் அவர் போயஸ் கார்டன் வந்தார். அதற்கு முன்பே ஜெயலலிதாவின் வளர்ச்சி பற்றி ஜெயலெட்சுமி அறிந்து வைத்திருந்தாலும், அதை நேரில் அவர் கண்டதில்லை. ஆனால், போயஸ் கார்டன் வீட்டுக்குள் வந்தபிறகே ஜெயலெட்சுமிக்கு எதார்த்தம் புரிந்தது. அரசியலில் ஜெயலலிதா அடைந்திருந்த அபார வளர்ச்சி, ஜெயலலிதாவிடம் குவிந்து கிடந்த அதிகாரம், ஜெயலலிதா வீட்டுக்குள் இருந்த செல்வச் செழிப்பின் மகத்துவத்தை உண்மையாக அவரால் உணர முடிந்தது. போயஸ் கார்டன் வீட்டைச் சுற்றிப் பார்த்துப் பிரமித்தார். ஜெயலலிதாவின் காருக்கு முன்னும் பின்னும் அணிவகுக்கும் பாதுகாப்புப் படைகள், ஜெயலலிதா முன் குனிந்து வணங்கும் அமைச்சர்கள், ஜெயலலிதாவின் தரிசனத்துக்காக காத்துக்கிடக்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஜெயலெட்சுமியை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. ஆனால், இவற்றை எல்லாம் தாண்டி, ஒரு விஷயம் அவரை உறுத்திக்கொண்டே இருந்தது.  அது சசிகலாவின் இருப்பு. போயஸ் கார்டன் மாளிகையில் எல்லாம் இருந்தாலும், அவற்றோடு ஏதோ ஒரு மர்மம் சூழ்ந்திருக்கும் ஆபத்தான மாளிகையைப் போலவே அது இருப்பதாக ஜெயலெட்சுமி உணர்ந்தார். எப்போதும் ஜெயலலிதாவை நிழலைப்போலவே ஒட்டிக்கொண்டிருக்கும் சசிகலாவுக்கும் அதற்கும் தொடர்பிருப்பதாகவும் ஜெயலெட்சுமி கருதினார்.

ஜெயலலிதா, சசிகலா

சசிகலாவைத் தாண்டி ஜெயலலிதாவால் எதையும் செய்ய முடியவில்லை; ஜெயலலிதாவை அப்படி எதையும் செய்ய சசிகலாவும் அனுமதிப்பதில்லை” என்பதும் ஜெயலெட்சுமிக்கு அப்போது புலப்பட்டது. வீட்டில் தனக்கு வேண்டிய தகவல்களை யார் கொடுப்பார்கள் என்று ஜெயலெட்சுமி ஆழம் பார்த்தார். அதற்கும் சிலர் இருந்தனர். சசிகலாவை நினைத்து மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருந்த சிலர் ஜெயலெட்சுமியிடம் மனம் திறந்து விஷயங்களைக் கொட்டினர். அதன்பிறகு, ஜெயலெட்சுமியும் ஜெயலலிதாவை நிழல் போல் தொடர ஆரம்பித்தார். அந்தப் புள்ளியில்,  சசிகலா-ஜெயலெட்சுமிக்கு இடையில் பனிப்போர் மூளத் தொடங்கியது. அந்த நேரத்தில், சென்னை தரமணியில் திரைப்பட நகரம் திறக்கப்பட்டது. அந்த விழாவில் ஜெயலெட்சுமியும் பிரதான வி.ஐ.பி-யாக பங்கேற்றார். அது சசிகலாவை உச்சக்கட்டமாக எரிச்சல் அடைய வைத்தது. “கணவரின் சிகிச்சைக்கு உதவி கேட்டு வந்தவர், நிழலாகத் தொடர ஆரம்பித்து, இன்று அரசு விழாவுக்கும் வந்துவிட்டாரே...” என அச்சமடையத் தொடங்கினார். “உண்மையில், ஜெயலெட்சுமி கணவரின் சிகிச்சைக்காக வரவில்லை... வேறு நோக்கத்தோடு வந்துள்ளார்” என சசிகலா சந்தேகப்படத் தொடங்கினார். போயஸ் தோட்டத்துக்குள் கனன்று கொண்டிருந்த சசிகலா-ஜெயலெட்சுமியின் அதிகாரச் சண்டையின் அனல் மெல்ல வெளியிலும் அடிக்கத் தொடங்கியது. இருவரும் ஒருவரைமாற்றி ஒருவர் உளவு பார்க்கத் தொடங்கினர். உளவு ரிப்போர்ட்டுகள், சசிகலாவின் சந்தேகம் சரியானதே என்பதை உறுதி செய்தன. “ஜெயலெட்சுமியின் வருகை, கணவரின் சிகிச்சைக்காக அல்ல; ஜெயக்குமார் கேட்டுக் கொண்டதன்படி, ஜெயக்குமார்-ஜெயலலிதா குடும்பங்களை இணைப்பதற்காகவும், சசிகலாவை கொஞ்சம் தலையில் தட்டி வைப்பதற்காகவும்தான்” என்று உளவுத்துறை அறிக்கை சொன்னது. 

சசிகலா உள்ளே... ஜெயலெட்சுமி வெளியே! 

ஜெயலலிதாவின் சித்தி ஜெயலெட்சுமிதரமணியில் ‘ஜெ.ஜெ பிலிம் சிட்டி’ திறப்பு விழா நடந்த அன்று மாலை, தீபக்கிற்கு பூணூல் அணிவிக்கும் விழாவும் நடந்தது. அங்கு சென்ற ஜெயலலிதாவின் சித்தி ஜெயலெட்சுமி, பல விஷயங்களை ஜெயக்குமாரிடம் பேசினார். அங்கிருந்து மீண்டும் போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்தவர், ஜெயலலிதாவிடம் பேசினார். ‘நீ ஏன் பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு வரவில்லை’ என்று ஜெயலெட்சுமி கேட்டபோது, ‘எனக்கு அழைப்பே அனுப்பவில்லையே’ என்றார் ஜெயலலிதா. உடனே, ஜெயலெட்சுமி பல விஷயங்களைப் போட்டு உடைத்தார். “அண்ணன் உனக்கு அழைப்பிதழ் அனுப்பினான். 10-க்கும் மேற்பட்ட தடவை ‘பேக்ஸ்’ தகவல் கொடுத்துள்ளான். ஆனால், அவை எதுவும் உன்னை வந்து சேரவில்லை. அவற்றை உன்னிடம் சேர்க்காமல், இங்குள்ள சிலர் குப்பைத் தொட்டிக்கு அனுப்பிவிட்டனர்” என்றார். ஜெயலலிதா அதிர்ந்து போனார். அதன்பிறகு ஜெயலெட்சுமி சொன்ன பல விஷயங்கள் ஜெயலலிதாவை மிரள வைத்தன. ஆனால், என்ன செய்ய? இதற்காகவெல்லாம், சசிகலாவைப் பிரிந்துவிட முடியாது. இந்த விஷயங்களை நான் சசியிடம் பேசி சரி செய்துவிடுவேன். ஆனால், சசி இங்கிருந்து சென்றுவிட்டால், அந்த இழப்பை வேறு எதுவாலும் நிகர் செய்ய முடியாது” என ஜெயலெட்சுமியிடம் கறாராகச் சொல்லிவிட்டார் ஜெயலலிதா.

அதன்பிறகும் ஜெயலெட்சுமி எவ்வளவோ பேசிப் பார்த்தார். ஆனால், ஜெயலலிதாவின் மனதைக் கரைக்க முடியவில்லை. அதன்பிறகு ஒரு கட்டத்தில் ஜெயலெட்சுமியும் போயஸ் கார்டனை விட்டு வெளியேறும் சூழலுக்குத் தள்ளப்பட்டார். சித்தி சொல்வதில் உண்மை இருப்பது ஜெயலலிதாவுக்குப் புரிந்தாலும், அதைவிட அதிகமாக சசிகலாவின் இருப்பு ஜெயலலிதாவுக்குத் தேவைப்பட்டது. அதனால், சசிகலாவை போயஸ் கார்டனுக்குள் உள்ளேயே வைத்துக்கொண்டு, சித்தியை வெளியேற்றினார் ஜெயலலிதா. 

சசிகலாவுக்கு சம அதிகாரம் 

தஞ்சையில் எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டை தன் வழக்கமான ஆடம்பரங்களுடன் நடத்தினார் ஜெயலலிதா.  உலகத் தமிழ் மாநாடு, தமிழின் புகழைப் பாடியதைவிட, ஜெயலலிதாவின் புகழையே அதிகமாகப் பாடியது. அந்த மாநாட்டில் உறுதியாக... இறுதியாக ஒன்றைத் தெளிவுபடுத்தினார் ஜெயலலிதா. “தானும் சசிகலாவும் சமம்... இருவரின் அதிகாரமும் சம அதிகாரம்” என்பதை அந்த மாநாட்டில் ஜெயலலிதா நிருபித்தார்.  

தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டில் நாவலர் நெடுஞ்செழியன், எஸ்.டி.எஸ், ஜெயலலிதா, சசிகலா

முதல்நாள் ஊர்வலத்தைப் பார்வையிட சசிகலா குடும்பத்துக்குத் தனி மேடை அமைக்கச் சொல்லி ஜெயலலிதா உத்தரவிட்டார். முக்கியக் கட்சிப் பிரமுகர்கள் எல்லாம் சாலையில் அமர்ந்து மாநாட்டைப் பார்வையிட, சசிகலா குடும்பம் தனி மேடையில் அமர்ந்து பார்த்து ரசித்தது. அதைவிட முக்கியம் வெளிநாட்டில் இருந்து வந்திருந்த வெளிநாட்டு அமைச்சர்கள், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட விஐபி-கள் அனைவருக்கும் சசிகலாவைத் தானாகப் போய் அறிமுகப்படுத்தினார் ஜெயலலிதா. ‘வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களுக்கு, தானும் சசிகலாவும் சேர்ந்திருக்கும் படத்தைத்தான் கொடுக்க வேண்டும்’ என்று கறார் உத்தரவும் போட்டார் ஜெயலலிதா. தஞ்சையில் ஜெயலலிதாவும் சசிகலாவும் தங்கிய அந்த 5 நாள்களும் தஞ்சை பஞ்சர் ஆனது. மூன்றாம் நாளில் இருந்தே பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற பெயரில், தஞ்சையில் உள்ள அனைத்து ரோடுகளும் முடக்கப்பட்டன. பீரங்கி வண்டிகளோடு வந்திருந்த Anti Air Craft ராணுவத்தினர், வானில் ஏதாவது சந்தேகப்படும்படியான விமானங்கள் பறக்ககிறதா? எனக் கண்காணிக்க ஆரம்பித்தபோது தஞ்சை மக்கள் கதிகலங்கினர். அலங்காரங்கள், ஆடம்பரங்கள், கலைப் பயிற்சிகள் என்று மக்கள் பணம் வாரி இறைக்கப்பட்டன. மாநாட்டுக்குப் பல நாள்களுக்கு முன்பு இருந்தே, சாலைகள் முழுவதும் 50 கி.மீ. தூரத்துக்கு யூப் லைட்டுகளைப்போட்டு இரவைப் பகலாக்கி இருந்தனர். இதுதவிர சோடியம் விளக்குகள், கட்-அவுட்கள் என்று தஞ்சை குலுங்கியது. விளக்குகளை அமைப்பதற்கான மொத்தக் குத்தகையை எடுத்திருந்தவர், சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் பிள்ளைகள்தான்.  

நீதியால் சரித்திரம்... நிதியால் தரித்திரம்!

மாநாட்டின் முதல் நாளான்று எம்.ஜி.ஆர் சிலை திறக்கப்பட்டது. மூன்றரை மணி நேரம் நடந்த மாநாட்டு நிகழ்ச்சிகளைப் பார்வையிட மூன்று மேடைகள் அமைக்கப்பட்டன. முதல் மேடையில் ஜெயலலிதா, சசிகலா, வெளிநாட்டு அமைச்சர்கள் அமர்ந்திருந்தனர். இரண்டாவது மேடை தமிழக அமைச்சர்களுக்காக. மூன்றாவது மேடை சசிகலாவின் குடும்பத்துக்காக. தஞ்சை காவலர் அணிவகுப்புத் திடலில் 1-ம் தேதியில் இருந்து 5-ம் தேதி வரை கவியரங்கள் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட கவிஞர்கள் எல்லாம் சொல்லிவைத்தாற்போல, மறைமுகமாக, நேரடியாக கருணாநிதி, வாழப்பாடி ராமமூர்த்தியை கவிதைகளால் இகழ்ந்தனர்.

அமைச்சர் இந்திரகுமாரி, ஜெயலலிதா, சசிகலா

ஜெயலலிதாவைப் புகழ்ந்தனர். அப்படிப் படிக்கப்பட்ட கவிதை ஒன்றில், 

“திருவாரூருக்கு நீதியினால் (மனுநீதிச் சோழன்) 
வந்தது சரித்திரம்...
நிதியினால் (கருணாநிதி வந்தது தரித்திரம்...” 

என்ற வரிகள் வந்தபோது, சசிகலாவும், ஜெயலலிதாவும் ரசித்துச் சிரித்தனர். பக்கத்தில் அமர்ந்திருந்த அமைச்சர் இந்திராகுமாரியும் ரசித்துச் சிரித்தார்.(மேலே உள்ள படம்).விழாவில் பிரதமர் நரசிம்மராவ் ஒப்புக்கு கலந்துகொண்டு ராஜராஜ சோழனின் ஸ்டாம்பை வெளியிட்டார். 

நடராஜனுக்குத் தடா!

ஜெயலலிதா அந்தக் காலகட்டத்தில், சசிகலாவை தனது சதுரங்க ஆட்டத்தில் ராணியாக வைத்துக்கொண்டார்; சசிகலாவின் உறவுகளை தன் தேவைக்கேற்ப அமைச்சர்கள், தளபதிகள், சிப்பாய்களாகப் பயன்படுத்திக்கொண்டார். ஆனால், நடராஜனை மட்டும் நடராசன்ஆட்டத்துக்குள்ளேயே சேர்த்துக்கொள்ளவில்லை. அந்தக் காலகட்டம் முழுவதும் நடராசனை ஜெயலலிதா துரத்தி துரத்தி அடித்தார். நடராசனும் விடாமல் ஜெயலலிதாவை மிரட்டிக்கொண்டே இருந்தார். தஞ்சையில் உலகத் தமிழ் மாநாடு துவங்கிய முதல் நாள், இரவு தஞ்சை அருகே உள்ள தனது சொந்த ஊரான விளாருக்கு வந்துவிட்டார் நடராசன். தனக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளை எல்லாம் அங்கு வரவழைத்துச் சந்தித்தார். செய்தித்துறை இணை இயக்குநர் சம்சுதின், விளார் கிராமத்துக்கு இரவில் சென்று நடராசனைச் சந்தித்தார். மாநாட்டின் கருத்தரங்கு நிகழ்ச்சிகள் தஞ்சைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றன. அந்த மாநாட்டில் நடைபெற்ற ஒரே ஒரு உருப்படியான நிகழ்ச்சி அதுதான். ஆனால், 5 நாள்களில் ஒரு நாள்கூட அந்தப் பக்கமே போகவில்லை ஜெயலலிதா. அதைத் தெரிந்துகொண்ட நடராசன் 5-வது நாள் காலையில் பந்தாவாக அங்கு போனார். தஞ்சைப் பல்கலைக் துணைவேந்தர் அவ்வை நடராசனுடன் பேசிக் கொண்டிருந்தார். அதன்பிறகு மாநாட்டு நிகழ்ச்சிகளைக் காண வி.ஐ.பி கேலரி வழியாக நுழைய முயன்ற நடராசனை போலீஸார் தடுத்தி நிறுத்தினர். அதற்கு அசைந்து கொடுக்காத நடராசன், “நான் பத்திரிகைக்காரனாக வந்துள்ளேன்” என்றார். நடராசனுக்குச் சளைக்காத போலீஸ், “பி.ஆர்.ஓ அலுவலகத்தில் இருந்து கொடுத்த பாஸ் இருக்கிறதா?” எனக் கேட்டு, அவரைத் திருப்பி அனுப்பினார்கள். அதன்பிறகு பொதுமக்கள் செல்லும் வழியில் சென்று மாநாட்டைப் பார்வையிட்டார் நடராசன். இப்படித் தொடர்ந்து, தான் அவமானப்படுத்தப்படுவதை உணர்ந்து நொந்துகொண்ட நடராசன், தனக்கு நெருக்கமான ஒருவரிடம், “இந்தம்மா என்னைப் போய் ஏன் போட்டியா நினைக்குது? உண்மையில் நான் அந்த அம்மாவுக்கு பாதுகாப்பாகத்தான் இருக்கிறேன். சுப்பிரமணியன் சுவாமி, வாழப்பாடி ராமமூர்த்தி என இருவரையும் என் கைக்குள் வைத்திருந்தேன். அதைப் புரிந்துகொள்ளாமல், ‘நான் அவர்களோடு சேர்ந்து இந்த அம்மாவுக்கு எதிராக சதி செய்கிறேன்’ என்று நினைக்கிறது. என் பெயர் வேண்டுமானால் நடராசனாக இருக்கலாம்... ஆனால், நான் உண்மையில் யாரையும் அழிக்கும் சிவன் இல்லை. படைக்கும் பிரம்மா. காக்கும் விஷ்ணு. அதை இந்த அம்மா மிகத் தாமதமாகத்தான் புரிந்துகொள்ளும்போல...” என்று பொங்கித் தள்ளினார். 

சசிகலாவுக்கு சம அதிகாரம் கொடுத்த ஜெயலலிதா, சசிகலாவின் குடும்பம்தான், தன் குடும்பம் என்று அறிவிக்கும் காரியம் ஒன்றையும் செய்தார். தமிழகம் என்றென்றைக்கும் மறக்காது அந்தக் காரியத்தை!

கதை தொடரும்...

http://www.vikatan.com/news/coverstory/93868-jayalalithaa-gives-equal-power-to-sasikala-how-sasikala-became-bestie-of-jayalalithaa-chapter---49.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தப்பி கிப்பி பிழைத்து வந்தால் அவர்களுக்கு சிறிலங்காவில் கதாநாயக வரவேற்பு வழங்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வைத்தவிடுவார்கள் சிங்கள மக்கள்...அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிய சிங்கள லே (ரத்தம்)என கோசத்தை முன் வைப்பார்கள்
    • ஈரான் ரோனின் பெருமதி ஆயிரம் டொல‌ர் ர‌ஸ்சியா ஈரானிட‌ம் வாங்கும் போது இந்த‌ விலைக்கு தான் வாங்கினார்க‌ள்.....................ஈரான் ரோன்க‌ளில் ப‌ல‌ வ‌கை ரோன்க‌ள் இருக்கு 1800 கிலோ மீட்ட‌ர் தூர‌ம் போகும் அளவுக்கு கூட‌ ரோன்க‌ள் இருக்கு.....................இந்த‌ ரோன்க‌ளின் வேக‌ம் மிக‌ குறைவு......................நாச‌கார‌ ரோன்க‌ளை ஈரான் இன்னும் பய‌ன் ப‌டுத்த வில்லை...................அதை ப‌ய‌ன் ப‌டுத்தினால் அழிவுக‌ள் வேறு மாதிரி இருந்து இருக்கும் ........................2010க‌ளில் இஸ்ரேல் ஜ‌டோம்மை க‌ண்டு பிடிக்காம‌ இருந்து இருக்க‌னும் பாதி இஸ்ரேல் போன‌ வ‌ருட‌மே அழிந்து இருக்கும்....................ஹ‌மாஸ் ஒரு நாளில் எத்த‌னை ஆயிர‌ம் ராக்கேட்டை இஸ்ரேல் மீது  ஏவினார்க‌ள்............................   இர‌ண்டு நாளுக்கு முத‌ல் ஈரான் ஏவிய  ரோன்க‌ளின் விலை 3ல‌ச்ச‌ம் டொல‌ருக்கு கீழ‌ என்று நினைக்கிறேன்  ஈரான் ரோன்க‌ளை  தாக்கி அழிக்க‌ 3.3மில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் என்ப‌து அதிக‌ தொகை................நூற்றுக்கு 90வித‌ ரோன‌ அழிச்சிட்டின‌ம் 10 வித‌ம் இஸ்ரேல் நாட்டின் மீது வெடிச்சு இருக்கு அது புதிய‌ கானொளியில் பார்த்தேன் .................த‌ங்க‌ட‌ விமான‌ நிலைய‌த்துக்கு ஒன்றும் ந‌ட‌க்க‌ வில்லை என்று இஸ்ரேல் சொன்ன‌து பொய் இதை நான் இர‌ண்டு நாளுக்கு முத‌ல் எழுத‌ கோஷான் அவ‌ரின் பாணியில் என்னை ந‌க்க‌ல் அடித்தார்............ இப்ப‌ நீங்க‌ள் எழுதின‌து புரிந்து இருக்கும் பணரீதியா யாருக்கு அதிக‌ இழ‌ப்பு என்று......................................
    • அதுதான் எனக்கும் விளங்கவில்லை. அதுவும் ஆதவன் இதை தூக்கி, தூக்கி அல்லவா அடித்திருக்க வேண்டும். சுபாஷ் கவனத்துக்கு - லைக்காவில் நல்ல சம்பளத்தில் PR Director வேலை இருந்தால் - நான் தயார்🤣. தமிழ் யுடியூப் - அவர்கள் எங்கே சுயமாக செய்தி சேகரிக்கிறார்கள்- ஹைகோர்ட்டுக்கு எப்படி போவது என்பதே தெரிந்திருக்காது. எவனாவது செய்திபோடுவான் - அதை பற்றி ஒரு பத்து நிமிடம் விட்டத்தை பார்த்து யோசித்து விட்டு, பின் வாங்குகிறார்கள், பாண் வாங்குகிறார்கள் என கமெரா முன் வந்து வாயால் வடை மட்டும் சுடுவார்கள். முன்பு நிலாந்தன், அரூஸ், ரிசி, திருநாவுகரசர் பேப்பரிலும், ரமேஷ் வவுனியன், நிராஜ் டேவிட் ரேடியோவிலும் சுட்ட அதே வடைதான். இப்போ யூடியூப்பில். இவர்கள் புலம்பெயர் தமிழர் இயலுமை பற்றி  சுட்ட வடைகளை அவர்கள் நம்ப, அவர்கள் பற்றி இவர்கள் சுட்ட வடையை புலம்பெயர் தமிழர் நம்ப - இப்படி உருவான ஒரு மாய வலை - 2000 பின்னான அழிவுக்கு பெரும் காரணமானது. அத்தனை அழிவுக்கு பின்னும் இவர்கள் வடை வியாபார மட்டும் நிற்கவே இல்லை. வடைகளை வாங்க வாடிக்கையாளர் இருக்கும் போது, யூடியூப் காசும் தரும் போது - அவர்கள் ஏன் விடப்போகிறார்கள். நான் இப்போ யூடியூப்பில் தமிழ் வீடியோ என்றால் - மீன் வெட்டும் வீடியோத்தான். ஒரு சாம்பிள். நான் ஸ்பீட் செல்வம்னா ரசிகன். ஆனாலும் உங்க அளவுக்கு Artificial intelligence   இல்லை Sir.
    • இன்றைய கால கட்டங்களிலும் இப்படியான நம்பிக்கையில் ஆசிரியர்கள் இருப்பது மிகவும் கவலையளிக்கும் விடயம் ..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.