Jump to content

கலைமாமணி


Recommended Posts

கலைமாமணி

 

சிறுகதை: பாவண்ணன், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு

 

p68a.jpg

ரு வகுத்தல் கணக்குக்காக 13-வது வாய்ப்பாட்டை மனசுக்குள் சொல்லிக்கொண்டிருந்ததால், தெருமுனையில் ஒலித்த தமுக்குச் சத்தம் என் காதில் விழவில்லை. ஆனால், என் தம்பி காதுகொடுத்துக் கேட்டுவிட்டான். மறுகணமே கன்றுக்குட்டிபோல துள்ளி எழுந்து வெளியே பாய்ந்து ஓடினான்.

`எழு பதிமூணு தொண்ணுத்தொண்ணு, எட்டு பதிமூணு...' என மனசுக்குள் முணுமுணுத்தபடியே அவன் பக்கமாகத் திரும்புவதற்குள், அவன் ஒரு குட்டிமுயலின் வேகத்தில் வேலிப்படலைத் தாண்டியிருந்தான். எதுவுமே புரியாமல் நோட்டை அப்படியே கவிழ்த்துவைத்துவிட்டு “இருடா ராமு, நானும் வரேன்டா...” என்றபடி அவனுக்குப் பின்னால் ஓடத் தொடங்கினேன்.

தமுக்குத் தாத்தாவின் முன்னால் அவன் பறந்து சென்று நிற்பதைப் பார்த்ததுமே, எனக்கு விஷயம் புரிந்துவிட்டது. தாத்தா குச்சிகளால் தமுக்கைத் தட்டித்தட்டி எழுப்பிய ஓசையால் அந்த இடமே அதிர்ந்துகொண்டிருந்தது. நான் ஓட்டமாக ஓடி தம்பியின் தோளைப் பிடித்தபடி மூச்சுவாங்கினேன்.

“இன்னைக்கு ராத்திரி பத்து மணிக்கு திரெளபதை அம்மன் கோயில் திடல்ல, அக்கம்பக்கம் பதினெட்டுப் பாளையத்திலும் பேர்பெற்ற அமுதகான சிகாமணி, கூத்துச் சக்கரவர்த்தி சிறுவந்தாடு ராமலிங்க வாத்தி யாருடைய குழு `அபிமன்யு வதம்' கூத்து நிகழ்ச்சியை நடத்த இருக்காங்க. தெரு ஜனங்க எல்லாரும் குடும்பத்தோட வந்து கண்டு களிக்கணும்…”

ஒவ்வொரு வாக்கியத்தையும் ராகம் போட்டு அவர் இழுத்து இழுத்துச் சொல்ல, நாங்களும் அவரைத் தொடர்ந்து அதே ராகத்தில் சத்தம் போட்டுச் சொன்னோம். `கண்டுகளிக்கணும்...'னு அவர் ஒருமுறை சொன்னதை, நாங்கள் மூன்று முறை திருப்பித் திருப்பிச் சொல்லிக் குதித்தோம். கண்களைச் சிமிட்டியபடி தாத்தா தன் தோளைக் குலுக்கி தலையைத் திருப்பியபடி தமுக்கை அடித்த ஒவ்வொரு முறையும் எங்கள் ரத்தம் சூடாகியது.  நரம்புகளில் பரவிய துடிப்பை, எங்களால் தடுக்கவே முடியவில்லை. எங்கள் இடுப்பில் இல்லாத தமுக்கை அடிப்பதுபோல அபிநயித்தபடி சத்தம் போட்டுக்கொண்டே அவருக்குப் பின்னால் போனோம்.

வேலை முடிந்து அப்பா வீட்டுக்கு வரும் சமயத்துக்காகக் காத்திருந்து, அவர் வந்ததுமே நானும் தம்பியும் ஓடிச்சென்று ஆளுக்கொரு பக்கமாக நின்று அவரிடம் `அபிமன்யு வதம்' கூத்து பற்றிச் சொன்னோம். அப்பா, ராமலிங்கம் வாத்தியாரின் ரசிகர்; அவருடைய கூத்து நடக்கும்  ஊர்களுக்கு எல்லாம் சிரமத்தைப் பாராமல் சென்று பார்த்துவிட்டு வருவது வழக்கம். அவரைப் பற்றி பேசத் தொடங்கினால், அப்பாவுக்கு நிறுத்தவே மனம் வராது.

“பெரிய தெறமசாலியான கலைஞன். கண்ண மூடிக்கினு கடவுள் தூவுன வெத மாரி இந்தக் கிராமத்துல வந்து பொறந்துட்டாரு. வேற ஊரா இருந்தா, அவருக்குக் கிடைச்சிருக்கக்கூடிய மரியாதை, கெளரவமே வேற மாரி இருந்திருக்கும்” என்று, நாக்கைச் சப்புக்கொட்டியபடி எங்களைப் பார்த்துச் சிரிப்பார்.

``ஊரு ஒலகத்துக்குத் தெரியற மாரி, ஐயாவுக்கு ஏதாச்சும் செய்யணும்” என்று எப்போதும் சொல்லிக் கொண்டே இருந்த அப்பா, ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் ராமலிங்கம் வாத்தியாரை பற்றி பெரிய கட்டுரை ஒன்று எழுதி, ஒரு பத்திரிகைக்கு அனுப்பினார். அடுத்த வாரம் அந்தக் கட்டுரையுடன் வெளியிட, அவரைப் படம் பிடிப்பதற்காக பத்திரிகை ஆபீஸில் இருந்து ஒரு கேமராமேன் வந்திருந்தார்.

வாத்தியாரை பல இடங்களில் பல கோணங்களில் நிற்கவைத்து, படம்பிடித்துக்கொண்டு சென்றார். பிரசுரமான அந்தக் கட்டுரையில், இடையிடையே அந்தப் படங்களும் இருந்தன. அன்று ஊர் முழுக்க வாத்தியாரைப் பற்றிய பேச்சு.
 
``கூத்தாடிக்கு வந்த வாழ்வப் பாத்தீங்களாடா...” என்று சொல்லிச் சிரித்தவர்களும் இருந்தார்கள்.

``எனக்கு ஒரு பெரிய கெளரவத்தைத் தேடிக் குடுத்துட்ட பலராமா” என்று வீட்டுக்கே வந்து வாத்தியார் நெகிழ்ச்சியோடு அப்பாவிடம் சொன்ன போது, நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். ```இதெல்லாம் நமக்கு நடக்காது'னு நெனச்சிட்டி ருந்தேன் பலராமா” என்றபோது, அவர் கண்கள் தளும்பின.

இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசிவிட்டு, புறப்படும் சமயத்தில் “எங்க ஊட்டு ஜனங்க எல்லாருக்குமே என்னைக் கண்டா எப்பவும் ஒரு எளக்காரம்தான். என் ஊட்டுக் காரிக்குக்கூட என்னமோ இந்த ஆளு ஆத்தமாட்டாம இந்தத் தொழிலப் பண்ணிட்டுக் கெடக்கு றான்கிற நெனப்பு உண்டு. பத்திரிகையில படம் வந்த பிறகுதான் என்னமோ இருக்குதுடா இதுலன்னு யோசிக்கிறானுவோ” என்றார்.

p68c.jpg

வாத்தியாருடைய கூத்துகளைப் பற்றி அப்பா எழுதிவைத்த குறிப்புகள், அலமாரியில் ஏராளமாக இருந்தன. கட்டுரை எழுதும்போது இந்தக் குறிப்பு களைத்தான் அவர் பயன்படுத்திக்கொள்வார். சீரான இடைவெளிகளில் அவை பலவிதமான பத்திரிகைகளில் பிரசுரமாகின. அவரோடு சேர்ந்து கூத்துகளைப் பார்த்துப் பார்த்து, எங்களுக்கும் கூத்து மீது ஆர்வம் பிறந்தது; சில பாடல் வரிகளையும் வசனங்களையும்கூட மனப்பாடம் செய்துவைத்திருந்தோம்.

ஞாயிறு காலை நேரத்தில், அப்பா எங்களுக்கு எண்ணெய் தேய்த்துவிடும்போது, எங்கள் வாய் கூத்துப் பாடல்களை ஓயாமல் முழங்கியபடி இருக்கும். வெந்நீரைக் காய்ச்சுவதற்காக அடுப்பின் முன்னால் உட்கார்ந்து மிளார்களை ஒன்றையடுத்து ஒன்றாக அப்பா நெருப்புக்குள் தள்ளத் தொடங்கியதும், அவருடைய ஒரு பக்கத் தோளில் சாய்ந்தபடி நான் அர்ஜுனன் சபதமிடும் பாடல் வரியை நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு சொல்வேன். அடுத்த கணமே என் தம்பி, அப்பாவின் இன்னொரு பக்கத் தோளில் சாய்ந்தபடி பீமன் யானைபோல கர்ஜித்துவிட்டுப் பாடும் பாடல்வரியைப் பாடுவான். பாடல்களாலும் வசனங்களாலும் அப்பாவை மகிழ்ச்சியில் திளைக்க வைப்போம்.

“இந்தப் பாட்டு, வசனங் களுக்கு எல்லாம் ஒரு கொறைச் சலும் இல்லை. வாய்ப்பாடு  சொல்லுங்கடான்னாதான் நம்ம புள்ளைங்களுக்கு நோப்பாளமா இருக்கும்” என்று அம்மாதான் முணுமுணுத்தபடி இருப்பாள்.

பலவிதமான கலைஞர்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் கலைமாமணி விருது வழங்கும் நிகழ்ச்சி பற்றியச் செய்தியை, பத்திரிகையில் தற்செயலாகப் படித்தார் அப்பா. அந்தப் பட்டியலில் எங்களுக்குப் பிடித்த ஒரு நகைச்சுவை நடிகரும் இருந்தார். நானும் தம்பியும் அந்த நடிகரைப் பற்றி உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தோம்.

அப்பா திடீரென எங்களைப் பார்த்து, “இப்படி ஒரு விருது நம்ம கூத்து வாத்தியாருக்குக் கிடைச்சா எப்படிடா இருக்கும்?” என்று கேட்டார். எங்களுக்கு அந்தக் கேள்வியின் ஆழம் புரியாததால் அவரைக் குழப்பத்துடன் பார்த்தோம்.

`` `பிரபல கூத்துக்கலைஞர் சிறுவந்தாடு ராமலிங்கம் வாத்தியாருக்கு, தமிழக அரசு வழங்கும் கலைமாமணி விருது'னு பத்திரிகையில கொட்டை எழுத்துல செய்தி வந்தா நம்ம ஊருக்கே பெருமையா இருக்கும், இல்லையா?” என்று மற்றொரு கேள்வியையும் கேட்டார்.

செய்தியை சத்தம்போட்டு படிப்பதுபோல் அப்போது அவர் குரல் இருந்தது. நாங்கள் பதில் சொல்லாமல் அவரையே பார்த்தோம். அவர் மட்டற்ற உற்சாகத்துடன் இருப்பதுபோலத் தோன்றியது.

``செல்வி... செல்வி!” - தோட்டத்துச் செடிகளுக்கு பூவாளியில் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த அம்மாவை உடனே அழைத்து, அதே கேள்வியை மீண்டும் கேட்டார். அம்மா அமைதியாக “பெருமையாத்தான் இருக்கும். ஆனா, ஒரு விருதை வாங்கிக்குடுக்கிற அளவுக்கு உங்களுக்கு அரசாங்கத்துல செல்வாக்கு இருக்கா?” என்று கேட்டாள்.

ஒரு கணம் யோசனையில் மூழ்கின அப்பா,  “செல்வாக்கு இருக்குதோ இல்லியோ, நம்மால முடிஞ்ச அளவுக்கு முட்டிப்பாக்கலாம்ல?” என்றபடி அம்மாவின் பக்கம் திரும்பினார்.

அம்மாவின் கண்கள் அவரையே அசைவின்றி உற்று நோக்கின. பிறகு, “முட்டுங்க, முட்டுங்க. முட்றதை யாரும் வேணாம்னு சொல்லல. தலையை உடைச்சிக் காமப் பக்குவமா முட்டணும். அவ்ளோதான்” என்றபடி,  தோட்டத்துக்குப் போய் விட்டாள். ஐயாவை, கலை மாமணி விருதுக்குரிய கலைஞ னாக முன்வைப்பதை அன்று முதல் அப்பா தன்னுடைய லட்சியமாகக்கொண்டார்.

ருநாள், சென்னை செல்லும் ரயிலுக்காக விழுப்புரம் ஸ்டேஷனில் நாங்கள் காத்திருந்த சமயத்தில், விழுப்புரத்து ராஜாங்கம் மாமாவும் அந்த ரயிலில் ஏறுவதற்காக வந்திருந்தார். அவரை வழியனுப்பிவைக்க அவர் கட்சியைச் சேர்ந்த ஒரு பெரும் கூட்டமே அவருக்குப் பின்னால் நின்றிருந்தது. அவர் அப்பாவைப் பார்த்ததும் “என்ன மச்சான், குழந்தைப் பட்டாளத்தோடு எங்க கெளம்பிட்டீங்க?” என்று கேட்டார்.

“லீவு நாளாச்சே, வண்டலூர் வரைக்கும் போயி, பசங்களுக்கு ஜூ காட்டிட்டு வரலாம்னு கெளம்பினோம்” என்றார் அப்பா.

பேச்சோடுபேச்சாக, கலைமாமணி விருது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினரைச் சந்திக்க உதவிசெய்யும்படி அப்பா அவரிடம் கேட்டார். “உங்களுக்கு இல்லாத உதவியா மச்சான். அடுத்த ஞாயித்துக்கெழம நம்ம வீட்டுக்கு வந்துருங்க. ரெண்டு பேருமா போய்ப் பாத்துட்டு வந்துருவோம்” என்றார்.

மாமாவின் நம்பிக்கையூட்டும் பேச்சைக் கேட்டு, தன் கனவு நனவாகிவிட்டதைப்போலவே நினைத்தார் அப்பா. அடுத்த வாரம் அவர் கிளம்பியபோது அவர் அழைக்காமலேயே நாங்களும் தயாராகி வாசலில் வண்டிக்கு அருகில் நின்றோம்.

``நீங்க எதுக்குடா?” என்று அப்பா முதலில் தயங்கினார். ஆனால் ``மாமா ஊட்டுல நாலஞ்சு முயல்குட்டிங்க இருக்குப்பா. ஒவ்வொண்ணும் பஞ்சு மூட்டயாட்டம் மெத்து மெத்துன்னு இருக்கும். அதுங்கள பாக்க ஆசையா இருக்குப்பா” என்று சொன்னதும் சம்மதித்துவிட்டார். டி.வி.எஸ் வண்டியிலேயே மாமாவைப் பார்க்க விழுப்புரத்துக்குப் போனோம். அவர் வீட்டில் ஒரு மணி நேரம் கழித்த பிறகு, எல்லோருமாக சட்டமன்ற உறுப் பினரின் வீட்டுக்குச் சென்றோம்.

வீடு மிகப் பெரிதாக இருந்தது. பெரிய சுற்றுச்சுவர். வாகனங் களை நிறுத்தும் வசதியோடுகூடிய பெரிய வளாகம். அதையடுத்து சின்னத் தோட்டம். அதை யொட்டி உயர்ந்து நீண்ட படிகளில் ஏறி அவர் வீட்டுக்குள் சென்றோம். பழகியவர்போல அந்த வீட்டில் மாமா நடந்து செல்வதைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது. வாசலில் நின்றவர்கள் அவருக்கு வணக்கம் வைத்தார்கள்.

``ஐயா வணக்கம்” என்று கதவுக்கு மறுபுறத்தில் நின்றபடி அழைத்தவாறே உள்ளே நுழைந்தார் மாமா. தலைமுடிக்குச் சாயம் ஏற்றிவிட்டு, உலர் வதற்காகக் கூடத்தில் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் “வாய்யா ராஜாங்கம். எப்படி இருக்க?” என்று புன்னகைத்தபடி முகத்தைத் திருப்பினார்.

p68b.jpg

மிகப் பெரிய துண்டால் தன் உடலை அவர் போத்தியிருந்தார். அப்பாவின் வணக்கத்துக்கு பதில் வணக்கம் சொன்னபடியே “ராஜாங்கம், போன்லயே உங்களைப் பற்றிச் சொன்னாரு. நீங்க சொல்லுங்க தம்பி, எந்த மாதிரி விஷயத்துக்கு என் உதவி தேவைப்படுது?” என்று நேராகவே விஷயத்துக்கு வந்துவிட்டார் அவர்.

அப்பா தொண்டையைச் செருமியபடி மாமாவை ஓரக்கண்ணால் ஒருமுறை பார்த்துவிட்டு, தனது லட்சியக்கனவை எடுத்துரைத்தார்.

“அது யாரு ராமலிங்கம் வாத்தியார்... எந்த ஊர்க்காரர்... நான் கேள்விப்பட்டதே இல்லயே?” என்று இழுத்தார் சட்டமன்ற உறுப்பினர்.

“நம்ம பக்கம்தான் ஐயா. சிறுவந்தாட்டுக்காரர்” என்றபடி தயார்செய்து வைத்திருந்த கோப்பை அவரிடம் கொடுத்தார்.

“உங்களுக்குச் சொந்தமா?”

“அதெல்லாம் ஒரு பந்தமும் கெடயாது. அவர் கலைஞர்; நான் ரசிகன். அவ்ளோதான் ஐயா.”
 
அப்பாவை ஒருகணம் உற்றுப் பார்த்துவிட்டு கோப்பின் பக்கங்களை ஒவ்வொன்றாகப் புரட்டினார். ஒருசில நிமிடங்கள் மெளனத்தில் கரைந்தன. ``கவலையேபடாதீங்க. வர்ற வருஷம் அன்னெளன்ஸ் பண்ணப்போற லிஸ்ட்ல இவர் பேரு நிச்சயமா இருக்கும். அதுக்கு நான் உத்தரவாதம்” என மறுபடியும் தன் நெஞ்சைத் தொட்டுச் சொன்னார்.

“ரொம்ப நன்றிங்க ஐயா, இதுக்கு இந்த ஊரே கடமைப் பட்டிருக்குது” என்று கைகளைக் குவித்து வணங்கினார் அப்பா.

ராமலிங்கம் வாத்தியாருக்கு நிச்சயம் கலைமாமணி விருது கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை, அப்பாவின் மனதில் உறுதியாக விழுந்துவிட்டது. ஆனால், அம்மாவுக்கு மட்டும் அந்த நம்பிக்கை வரவில்லை. ஜாடைமாடையாக தன் அவநம்பிக்கையை அப்பாவுக்கு உணர்த்திய படியே இருந்தார். ``ஆமா, உனக்கு வேற வேலையே இல்லை. நான் இடம் போனா, நீ வலம் போவே; நான் வலம் போனா, நீ இடம் போவே. அதான என்னைக்கும் நம்ம ஊட்டுல நடக்குது” என்று முனகியபடி சலித்துக்கொண்டார் அப்பா.

பத்து நாட்கள் கழித்து விருதுப் பட்டியல் அறிவிக்கப்பட்டபோது, ராமலிங்கம் வாத்தியாரின் பெயர் அதில் இல்லை. அப்பா அதிர்ச்சியில் இடிந்துபோய் உட்கார்ந்து விட்டார். வெளியே செல்லவே கூச்சப் பட்டுக்கொண்டு அலுவலகத்துக்கு இரண்டு நாட்கள் விடுப்பு போட்டுவிட்டு வீட்டிலேயே உட்கார்ந்திருந்தார். அவரால் அந்த ஏமாற்றத்தில் இருந்து எளிதில் மீள முடியவில்லை.

``ஆரம்பிக்கும்போதே இந்தக் கரிவாய்க் காரி வசனம் சொல்லிட்டாளே. அப்பறம் எப்படி உருப்படும்?” என்று அம்மாவை நாள்தோறும் திட்டித்தீர்த்தார்.

ஆறேழு மாதங்களுக்குப் பிறகுதான் தன் சோர்வில் இருந்து முற்றிலுமாக மீண்டெ ழுந்தார் அப்பா. முதலில் தயாரித்திருந்த கோப்பை எடுத்து மீண்டும் விரிவுபடுத்தி, ஆறேழு பிரதிகள் தயார்செய்தார். மாவட்ட ஆட்சியரையும் முக்கியமான பிற அதிகாரி களையும் நேரில் சந்தித்து, ஆளுக்கொரு பிரதியைக் கொடுத்து, பரிந்துரைக்கும்படி கேட்டுக்கொண்டார். அந்த ஆண்டு அறிவிக்கப் பட்டப் பட்டியலிலும் அவர் பெயர் இடம்பெறவில்லை. அதற்கடுத்த ஆண்டில் ஒரு பொதுக்குடிமகனின் பரிந்துரை என்கிற அளவில் தன் பெயரிலேயே அந்தக் கோப்பை அரசாங்க அதிகாரியின் பார்வைக்கு நேரடியாக அனுப்பிவைத்தார்.

“இந்த தரமாச்சும் அரசாங்கம் இந்த விருதை ஐயாவுக்கு அறிவிக்கணும். திறமையின் உச்சமான புள்ளியில ஐயா இருக்கிற பொருத்தமான நேரம் இது. இப்ப கெடச்சா, அவருக்கும் கெளரவம்; விருதுக்கும் கெளரவம்.”

பார்க்கிறவர்கள் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு திரிந்தார் அப்பா. ஆனால், அந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலிலும் ஐயாவின் பெயர் இல்லை. மனம் உடைந்து போன அப்பா, யாரிடமும் பேசாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடந்தார். அவரிடம் மெதுவாகப் பேசிப்பேசி அவரை இயல்பானவராக்கினாள் அம்மா.

நடந்த விஷயங்களை எல்லாம் கேள்விப் பட்டு, ராமலிங்கம் வாத்தியாரே ஒருநாள் அப்பாவைத் தேடி வீட்டுக்கு வந்து “ரொம்பப் புத்திசாலின்னு ஒன்ன நெனச்சனே பலராமா. நீயா இப்படி நடந்துக்கிற?” என்றபடி கைகளைப் பற்றினார்.

“அது…” என்று எதையோ சொல்ல அப்பா இழுத்தார்.

``இங்கே பாரு பலராமா, ஒரு கூத்தாடிக்கு அவனுடைய ஆட்டத்தப் பார்த்து ரசிச்சுக் கைதட்டிப் பேசக்கூடிய ரசிகர்களுடைய பாராட்டுதான் ரொம்பப் பெரிய விருது. அரசாங்க விருது எல்லாம் ஒரு கணக்கே இல்லை. இன்னைக்கும் நான் ஆடுற கூத்தப் பார்க்க ஒவ்வொரு இடத்துலயும் வரக்கூடிய முந்நூறு நானூறு பேருங்க, நான் பேசற வசனத்தைக் காதால கேட்டுட்டு நாள் முழுக்கத் திருப்பித் திருப்பிப் பேசுறாங்க, நான் பாடுற பாட்டைப் பாடுறாங்க. இதுக்கும் மிஞ்சிய விருதுனு ஒண்ணு இந்த உலகத்துல இருக்குதா, சொல்லு?”

அப்பாவின் தோளைத் தொட்டு அமைதிப் படுத்தினார் வாத்தியார். நீண்ட உரையாடலுக்குப் பிறகு, அன்று இரவு எங்கள் வீட்டில் அப்பாவோடு சேர்ந்து சாப்பிட்டார்.

சில மாதங்களுக்குப் பிறகு, அப்பா யாரும் எதிர்பார்த்திராத ஒரு செயலைச் செய்தார். அலுவலக விஷயமாக சென்னைக்குச் சென்றிருந்த சமயத்தில் வீடியோ கேமரா மூலம் படமெடுக்கத் தெரிந்த ஒருவரை அழைத்துக்கொண்டு வந்தார். சுற்றுவட்டாரங்களில் ராமலிங்கம் வாத்தியாரின் கூத்து நிகழ்ச்சி நடைபெறும் இடங்களுக்கு எல்லாம் அழைத்துச் சென்று, கூத்தின் முக்கியப் பகுதிகளைப் படம்பிடித்துக்கொள்ள வழி செய்தார். அர்ப்பிசம்பாளையத்தில் `மயில் ராவணன் கதை’, தாதம்பாளையத்தில் `விராட பர்வம்’, சாலையாம்பாளையத்தில் `கர்ண மோட்சம்’, மடுகரையில் `அர்ஜுனன் தபசு’.

``இன்னும் ஒன் கிறுக்குப் போகலையா?” என்று சிரித்தார் ஐயா.

“நீங்க சும்மா இருங்க ஐயா, எந்தக் காரணத்துக் காகவும் என் லட்சியத்துல இருந்து பின்வாங்க மாட்டேன்” என்று பேசிச் சமாளித்தார் அப்பா.

கூத்து இல்லாத ஒரு நாளில் வாத்தியாரைத் தன் சொந்த வாழ்க்கையைப் பற்றிப் பேசவைத்துப் படம்பிடிக்கவைத்தார். அப்புறம் ஊர், கோயில், ஏரிக்கரை, குளங்கள், மரங்கள், தெருக்கள், வயல்வெளிகள் எனக் கண்ணில் பட்டதை எல்லாம் படமாக்கினார். பிறகு, வீடியோக்காரர் சென்னைக்குத் திரும்பிச் சென்றுவிட்டார். எடுத்த காட்சிகளை எல்லாம் வெட்டியும் இணைத்தும் மாற்றி அமைத்துக்கொண்டு ஒரு மாதத்துக்குப் பிறகு அவர் திரும்பி வந்து, தான் எடுத்த படத்தைப் போட்டுக் காட்டியபோது ஆச்சர்யமாக இருந்தது. ஒரு படம் எப்படி உருவாகிறது என்பதை, அன்று நாங்கள் நேருக்குநேர் தெரிந்துகொண்டோம்.

அந்தக் குறும்படத்தின் பிரதியையும் செம்மைப் படுத்தப்பட்ட கோப்பையும் எடுத்துக்கொண்டு சென்னைக்குச் சென்ற அப்பா, யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் உயர்அதிகாரியை நேரில் சந்தித்துக் கொடுத்துவிட்டு வந்தார். ஆனால், அந்த முயற்சிகளுக்கும் பலன் கிடைக்கவில்லை. அந்த ஆண்டின் பட்டியலிலும் வாத்தியாரின் பெயர் இல்லை.

சாப்பிட்டு முடித்த பிறகு, கூடத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.

`` `வதம்'னா என்னப்பா அர்த்தம்?” என்று அப்பாவிடம் கேட்டான் தம்பி.

``பத்து, பன்னெண்டு பேரு சேர்ந்து ஒரு ஆளை அடிச்சுக் கொல்றதுதான் வதம்” என்றார் அப்பா.

தம்பியின் கண்களில் ஒரு மிரட்சி பரவி, தேங்கி நின்றது. “அபிமன்யுவை எதுக்குப்பா வதம் செய்றாங்க?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டான். அப்பா, எங்களுக்கு அபிமன்யுவின் கதையைச் சுருக்கமாகச் சொல்லி முடித்தார். நான், அவர் தோளையொட்டி நின்றிருந்தேன். சக்கரவியூகத்துக்குள் நுழையும் கலையை அறிந்து கொண்டவனுக்கு வெளியேறும் கலை தெரியா ததால், எதிரிகளின் தாக்குதலுக்குப் பலியாகி இறந்துபோனதைச் சொல்லும்போது அவர் குரல் மிகவும் தடுமாறியது.

``அது மரணமே இல்லடா. ஒரு கொலை, கூட்டுக்கொலை” என்று நாக்கு சப்புக்கொட்டியபடி சொன்னார்.

பத்து மணி என்பதன் அடையாளமாக, ஒருமுறை மின்சாரம் நின்று சில கணங்களுக்குப் பிறகு வந்தது. “நீ வரலையா செல்வி?” என்று அம்மாவைப் பார்த்துக் கேட்டார்.

``நீங்க போய் வாங்க சாமிங்களா, அது போதும். எனக்கு கூத்தும் வேணாம், பாட்டும் வேணாம். கண்ணு முழிக்கிற வேலை எல்லாம் நம்ம உடம்புக்கு சரிவராது” என்று சிரித்தபடியே எங்களை அனுப்பிவைத்தாள்.

திரெளபதை அம்மன் கோயில் திடலில் மின்சார விளக்குகளும் காஸ் விளக்குகளும் வெளிச் சத்தைப் பொழிந்தபடி இருந்தன. ஏராளமான கூட்டம். வெள்ளைத் திரையை இருவர் பிடித்தபடி இருக்க, பின்பாட்டுக்காரர்கள் கடவுள் துதிகளைப் பாடிக் கொண்டிருந்தார்கள். ஆட்டத் திடலைத் தாண்டி ஆட்டக் காரர்கள் வேஷம் கட்டும் இடத்துக்குச் சென்று, வாத்தியார் ஐயாவைச் சந்தித்தார் அப்பா. ஐயா, முதல் வேஷக்காரனுக்கு புஜக் கிரீடைகளைப் பொருத்திக் கட்டியபடியே உரையாடினார்.

யாரும் எதிர்பாராதபடி ஐயாவிடம் `‘நீங்கதான் அபிமன்யுவா வேஷம் கட்டப்போறீங்களா?” என்று கேட்டான் தம்பி. அவர் பெருமிதத்துடன் `ஆமாம்' எனத் தலையசைத்தார்.

“ `அபிமன்யு, ரொம்பச் சின்னப்பையன்'னு அப்பா சொன்னாங்க. நீங்க இவ்ளோ பெரியவரா இருக்கீங்களே” என்று தன் முகவாயில் விரலால் தட்டியபடி கேட்டுவிட்டான். அப்படி ஒரு கேள்வியை யாருமே எதிர்பார்க்கவில்லை.

அப்பா “என்னடா கேள்வி இது, வா இங்க!” என்று அவனை வேகமாக தனக்கு அருகில் இழுத்தார்.

“உடு பலராமா, கேட்டுத் தெரிஞ்சுக்கிறது நல்லதுதானே” என்று சிரித்தார் வாத்தியார். பிறகு திரும்பி, “பெரியவங்க சின்னவங்களா மாறி நடிக்கிறதுதான் நடிப்பு” என்று தம்பியிடம் சொன்னார்.

``யாராவது அடிக்க வந்தா விடாதீங்க. நீங்கதான் பெரியவராச்சே. தைரியமா திருப்பி அடிங்க” என்று சொன்னான் தம்பி.
 
“ஐயோ! மானத்த வாங்குறானே” என்று கூச்சத்தில் நெளிந்தார் அப்பா. வாத்தியார் வாய் விட்டுச் சிரித்தபடி அவன் தோளில் தட்டிக் கொடுத்தார்.

“இன்னும் ரெண்டு, மூணு வாரத்துல விருது அறிவிப்பு வந்துடும் ஐயா. இந்த தரம் கண்டிப்பா உங்க பேர் பட்டியல்ல இருக்கும்” - அப்பா புறப்படுவதற்கு எழுந்தார்.

“இன்னும் நீ அந்த முயற்சியை விடலையா பலராமா? நீயும் விடாக்கண்டனா இருக்க. அவனுங்களும் கொடாக் கண்டனுங்களா இருக்கானுவோ” என்று சிரித்தார் வாத்தியார். பிறகு, “வரட்டும் வரட்டும் பலராமா. வர்ற காலத்துல பாத்துக்கலாம்” என்றார்.

கூத்து தொடங்கியது. ஒவ்வொரு கதாபாத்திரமும் பாடும் பாடல்களும் ஆடும் அடவுகளும் புதுமையாக இருந்தன. அபிமன்யுவைக் கொஞ்சியபடி சுபத்திரை பாடும் பாடல்களும் உரையாடல்களும் காதுக்கு இதமாக இருந்தன. விடியும் வரைக்கும் நாங்கள் இந்த உலகத்திலேயே இல்லை. வேறொரு மாய உலகத்தில் வசித்துவிட்டு திரும்பியதுபோல இருந்தது.

வீட்டுக்குத் திரும்பியதும் சுபத்திரையின் பாடல்களை அம்மா, தாத்தா, ஆயா எல்லோரி டமும் பாடிக் காட்டிய பிறகுதான் எங்கள் வேகம் சற்றே குறைந்து இயல்பான நிலைக்குத் திரும்பியது. பள்ளிக்கூடம், விளையாட்டு மைதானம், ஏரிக்கரை என நாங்கள் போகும் இடங்களில் எல்லாம் பல நாட்களுக்கு அந்தப் பாடல்களைப் பாடியபடி திரிந்தோம்.

மடுகரையில் தொடர்ச்சியாக 12 நாட்கள் ஐயாவின் கூத்து தொடங்கியதையொட்டி, அப்பா விடுப்பு எடுத்திருந்தார். தேர்வுக் காலம் என்பதால், எங்களை அழைத்துச் செல்லக் கூடாது என அப்பாவுக்குக் கட்டளை விதித்திருந்தாள் அம்மா. அதனால், அப்பா மட்டும் தனியாகவே இரண்டு நாட்களாகக் கூத்து பார்த்துவிட்டு வந்தார்.

ஒருநாள் காலையில் கூத்து முடிந்து திரும்பிய அப்பாவுக்கு, ஒரு டம்ளரில் தேநீர் கொண்டுவந்து கொடுத்தாள் அம்மா. அதை வாங்கிப் பருகிக் கொண்டிருக்கும்போதே வாசலில் பேப்பர்காரன் மணியடிக்கும் சத்தம் கேட்டது. “இதோ வந்துட்டேன்” என்றபடி அவரே வெளியே சென்று வாங்கிக்கொண்டு வந்து நாற்காலியில் உட்கார்ந்தார். தன்னிச்சையாக அவர் உதடுகள் கூத்துப்பாட்டு ஒன்றை முணுமுணுத்தபடி இருந்தன.

செய்தித்தாளில் முதல் பக்கத்தைத் திறந்து படித்ததுமே சந்தோஷத்தில் எழுந்து நின்று விட்டார் அப்பா. ``டேய், இங்கே பாருடா, இங்கே பாருடா...” என்று என்னிடம் அந்தத் தாளைக் காட்டினார்.
``இங்கே, இங்கே..!” என்று அவர் விரலால் அழுத்திக் காட்டிய இடத்தில் ‘தமிழக அரசின் கலைமாமணி விருதுகள்’ என அச்சாகி இருந்ததை வாய்விட்டுப் படித்தேன். தம்பியும் ஓடிவந்து எனக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு சத்தம் போட்டுப் படித்தான். அதற்குள் அம்மாவும் அங்கே வந்துவிட்டாள். என்னிடம் இருந்து தாளை வாங்கி அவளும் படித்தாள். அப்பா விரலால் சுட்டிய இடத்தில் விருதாளர்களின் நீண்ட பட்டியல் இருந்தது. `நிகழ்கலை’ என்னும் பிரிவில் `ராமலிங்கம் வாத்தியார், சிறுவந்தாடு’ என்னும் பெயர் தடித்த எழுத்தில் அச்சாகி இருந்தது. அப்பாவின் முகத்தில் படர்ந்து இருந்த மகிழ்ச்சியைப் பார்த்து, அம்மாவின் விழிகள் கலங்கின.

“நான் எடுத்த முயற்சிகளுக்கு எல்லாம் ஒரு பெரிய வெற்றி இது செல்வி” என்று அம்மாவைப் பார்த்துச் சிரித்தார் அப்பா. பிறகு, ``ஐயாவுக்கு விஷயம் தெரியுமோ தெரியாதோ. ஒரு எட்டு மடுகரை வரைக்கும் போய்ச் சொல்லிட்டு வரேன். விருது விழாவுக்கு அவரை அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யணும்” என்றபடி அப்பா புறப்பட்டார்.

“அப்பா... நாங்களும் வரோம்பா” என்று பக்கத்தில் சென்று கெஞ்சினோம். மறுத்து விடுவாரோ என, சற்றே எங்களுக்கு ஒருகணம் தயக்கமாக இருந்தது. ஆனால், சிரித்தபடி “வாங்கடா செல்லங்களா” என்று இருவரையும் பின்னால் ஏற்றிக்கொண்டார். அம்மா ஒன்றும் சொல்லாதது எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

மடுகரையில் பங்களா வாசலிலேயே வண்டியை நிறுத்திவிட்டு, உள்ளே படியேறிச் சென்றோம். கூடத்தில் சுவர்க்கண்ணாடியைப் பார்த்தபடி ஒப்பனையைக் கலைத்துக் கொண்டிருந்த ஐயா, சத்தம் கேட்டு எங்கள் பக்கம் முகத்தைத் திருப்பினார். அப்பாவைப் பார்த்ததும் அவர் முகத்தில் ஆச்சர்யம். ``என்ன பலராமா, ஊட்டுக்குப் போவலையா?” என்று கேட்டார்.

“போயிட்டுத் திரும்பி வந்திருக்கேன் ஐயா. இந்த வருஷத்துக்கான கலைமாமணி விருதுப் பட்டியல் அறிவிச்சுட்டாங்க ஐயா. கூத்துக்கலைப் பிரிவுல உங்களுக்குத்தான் விருது. இதோ பாருங்க, உங்க பேர முதல்ல போட்டிருக்காங்க”  - உற்சாக மாகச் சொல்லிக்கொண்டே செய்தித்தாளை அவரிடம் கொடுத்தார் அப்பா.

அவர் சொன்னதைக் கேட்டுவிட்டு, அங்கங்கே ஒப்பனையைக் கலைத்தபடி இருந்த மற்ற கலைஞர்கள் ஒரே நொடியில் ஐயாவைச் சூழ்ந்துகொண்டார்கள். அவர் பெயரை செய்தித் தாளில் பார்த்துவிட்டு அவரைத் தோளில் தூக்கிவைத்து ஆடினார்கள். “டேய் எறக்குங்கடா, எறக்குங்கடா” என்று சிரித்தபடியே கெஞ்சினார் ஐயா.

 “ஐயா, நாளைக்குக் காலையில சென்னையில விழா. நீங்க இன்னைக்கு ராத்திரியே அங்கே போய்த் தங்கினாத்தான், விழாவுல கலந்துக்க சுலபமா இருக்கும்” என்று அப்பா சொன்னார்.
“இன்னிக்கா?” என்றார் ஐயா அதிர்ச்சியுடன். பிறகு, ``அது எப்படி முடியும் பலராமா? 12 நாள் கூத்துக்குக் கைநீட்டி முன்பணம் வாங்கியிருக் கோமே. ரெண்டு நாள் ஆட்டம்தான் முடிஞ்சிருக்கு. இன்னும் பத்து நாள் ஆடியாவணும். உடனே கெளம்புன்னா எப்படி முடியும்?” என்று பதற்றத்துடன் கேட்டார்.

“ரெண்டு நாளுக்கு இங்கே இருக்கிறவங்க, உங்க வேலையைப் பாத்துக்க மாட்டாங்களா ஐயா?” என்று தயக்கத்துடன் கேட்டார் அப்பா.

“நிச்சயமா அவங்க நல்லபடியா பாத்துக்கு வாங்க. அது எனக்கும் தெரியும். ஆனா, அது தர்மம் இல்லை. நான் பொறுப்பெடுத்து நடத்துவேன்னு நம்பிதான் முன்பணத்தை என் கையில குடுத்திருக்காங்க. இப்ப என் சொந்த வேலைதான் முக்கியம்னு ரெண்டு நாள் விட்டுட்டுப் போனா, அடுத்த வருஷம் இப்படி முன்பணம் கொடுப்பாங்களா? யோசிச்சுப் பாருங்க” என்றார்.

ஐயா, அப்பாவின் தோளைத் தொட்டு “இந்த ஊர்ல 20 வருஷத்துக்கு முன்னால ஒரு தரம் மழையே இல்லாமப்போயிடுச்சு பலராமா. அப்ப இந்த ஊர்க்காரங்க மழைக்காகப் பிரார்த்தனைப் பண்ணிட்டு, பன்னெண்டு நாள் கூத்தாடணும்னு தாம்பாளத்துல நூத்தியொரு ரூபா வெச்சுக் குடுத்தாங்க. கூத்து முடிஞ்ச மக்காநாளே மழை கொட்டோ கொட்டுனு கொட்டிச்சு. ஒரு வாரம் அடைமழை. அப்ப இந்த ஊர்க்காரங்க எல்லாரும் சேர்ந்து ஒவ்வொரு வருஷமும் இந்த மாசத்துல இந்த நாள்ல இங்கே வந்து நீங்கதான் வேஷம்கட்டி ஆடணும்னு எங்கிட்ட ஒரு வாக்கு கேட்டு வாங்கிக்கிட்டாங்க. அதை இதுவரைக்கும் நான் மீறினது இல்லை” என்று சொல்லிவிட்டு மூச்சு வாங்கினார்.

முகத்திலும் கையிலும் இருந்த எண்ணெய்ப் பசையை ஒரு துணியில் துடைத்துக்கொண்டார்.

“பேரும் கெடக் கூடாது, தொழிலும் கெடக் கூடாது. அதுதான் பெரிய விருது பலராமா. இந்த மெடல், பட்டம், பேர் எல்லாம் உசிரோட பொழைச்சுக்கெடந்தா, நாளப்பின்ன பார்த்துக்கலாம்.”
 
கையில் இருந்த செய்தித்தாளை ஐயாவிடம் கொடுத்துவிட்டு, பெருமூச்சோடு திரும்பினார் அப்பா. நாங்கள் அவரைப் பின்தொடர்ந்தோம்.
 
“ஒரு நிமிஷம் பலராமா” என்றபடி ஐயா, அப்பாவை நோக்கி கையைக் காட்டினார். அப்பா உடனே அவர் பக்கம் பார்வையைத் திருப்பினார். ``என் சார்பா நீ போய் விருதை வாங்க உனக்கு விருப்பம் இருந்தா, தாராளமா போலாம்” என்றார். மறுப்பின் அடையாளமாக புன்னகையோடு தலையசைத்துவிட்டு, பங்களாவின் படிகளில் இறங்கத் தொடங்கினார் அப்பா.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.