Jump to content

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of outdoors

சம்பந்தமில்லாத ஒன்றில், மண்டைய ஓட்டினா.. அது இப்பிடி கூட வந்து முடியும்.

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்..சொன்ன தன்னம்பிக்கை கதை
நிருபர்:
நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?
நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார்.
ஒரு கட்டடம் கட்டும் போது,
சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி,
குறுக்குப் பலகைகள் போட்டு,
அதன் மேல பல சித்தாள்கள் நின்னு,
கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் அது முடிந்த பிறகு,
அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு,
கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.
கட்டடம் முடிந்து,
கிரஹப் பிரவேசத்தன்று
கட்டடம் கட்டுவதற்கு எது முக்கிய காரணமாக இருந்ததோ,
அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால்,
எங்கயோ மறைத்து வைத்துவிட்டு,
வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.
அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும்.
இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா?
அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும்.
ஆடுமாடுகள் மேயும்.
குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள்.
பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும்.
எங்கோ மூலையில் மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை.
அடுத்த கட்டடம் கட்டுவதற்கு ஏணியாக தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!
*நான் வாழை அல்ல...! சவுக்குமரம்.!
  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image en noir et blanc de 1 personne, position debout et plein air

32 ஆண்டுகள் அயராது ஓடிய கால்கள்..,
தாயின் போராட்டம்.., 🖤🖤🖤
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

👉 https://www.facebook.com/100004043022957/videos/523352719273805 👈

இந்தக் கோழி... செய்த வேலையை, பாருங்கள்.
உண்மையான அன்பு... எல்லா உயிரிடமும் இருக்கிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'இட்லி இட்டிலி இட்டலி இட்டு+ அவி= இட்டவி "இட்டவி" என்ற சொல் "இட்டலி" என்று திரிந்தது நமக்கு அதெல்லா தெரியாதுங்க இட்லி வாங்கி திங்கிறதோட சரி சரிக'

இட்லி, இட்டலி... இதில் எது சரி. 🙂
தமிழ்நாட்டுக்காரர் சொல்வது பிழை போலுள்ளது. 😎

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of food and outdoors

வெட்டிய வாழைமரத்திலிருந்து... வாழைக்குலை.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2022 at 11:39, தமிழ் சிறி said:

May be an image of food and outdoors

வெட்டிய வாழைமரத்திலிருந்து... வாழைக்குலை.

வாழைக் குலையை திரும்ப செருகி இருக்கு!🤭

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேரளாவில்... இது, எல்லாம் கிடையாது.

May be an image of text that says 'இது கேரளாவில் 1 1.ஆழ்துளை கிணறு (போர்வல்) கிடையாது. 2.மணல் எடுக்க கிடையாது. அனுமதி 3. அரசாங்க அனுமதி இல்லாமல் மரம் வெட்டமுடியாது.( (உங்கள் மனையில் இருந்தாலும்) 4.விளைநிலங்களில் பிளாட் போட்டு விற்பனை செய்ய முடியது. 5. காவல் நிலையம் அதிகம் கிடையாது 6. 6.நெகிழிக்கு (பிளாஸ்டிக்) முழு தடை உள்ளது. 7. அரசியல்வாதிகளுக்கு அடைமொழி கிடையாது.'

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, தமிழ் சிறி said:

கேரளாவில்... இது, எல்லாம் கிடையாது.

May be an image of text that says 'இது கேரளாவில் 1 1.ஆழ்துளை கிணறு (போர்வல்) கிடையாது. 2.மணல் எடுக்க கிடையாது. அனுமதி 3. அரசாங்க அனுமதி இல்லாமல் மரம் வெட்டமுடியாது.( (உங்கள் மனையில் இருந்தாலும்) 4.விளைநிலங்களில் பிளாட் போட்டு விற்பனை செய்ய முடியது. 5. காவல் நிலையம் அதிகம் கிடையாது 6. 6.நெகிழிக்கு (பிளாஸ்டிக்) முழு தடை உள்ளது. 7. அரசியல்வாதிகளுக்கு அடைமொழி கிடையாது.'

 

யுவர் ஆனர் இரண்டாவதாக இருக்கும் 

மணல் எடுக்க அனுமதி கிடையாது.

ஆனால் அடுத்த மாநிலத்தில் இருந்து களவாக எடுப்போம்.

என்று வரணும்.

5 hours ago, suvy said:

Peut être une image de texte qui dit ’Out of the millions of statues built across the world. Only the statue of Marilyn Manroe is useful’

சுவி
இந்த சிலைக்கு கீழே நிற்பவர்கள் உண்மையா மழைக்குத் தான் நிற்கிறார்களா?

என்று ஒரு விசாரணைக் கமிசன் அமைக்கணும்.

உடனடியாக ஏற்பாடு செய்யுங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ஈழப்பிரியன் said:

 

சுவி
இந்த சிலைக்கு கீழே நிற்பவர்கள் உண்மையா மழைக்குத் தான் நிற்கிறார்களா?

என்று ஒரு விசாரணைக் கமிசன் அமைக்கணும்.

உடனடியாக ஏற்பாடு செய்யுங்க.

இந்த ஐயம் எனக்கும் இருந்தது அதனால் நான் விசாரித்து விட்டேன்....... அவர்கள் சொல்கிறார்கள் மழை இல்லையென்றால் என்ன வெய்யிலுக்கும்  இங்குதான் வந்து நிற்பார்களாம்......!   😂

  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.