சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
-
Tell a friend
-
Topics
-
Posts
-
கடைசியா அணிலைப் பார்த்துப் போக வந்தவவோ?
-
இந்த மொரகொட...அமெரிக்காவில்..புஸ் கட்சி ஆண்டால் அவருதான் அமெரிக்க தூதுவர்..எங்கையோ ஒரு அமெரிக்கன் சம்பந்தியாம் ..இப்ப இந்தியாவில்..அங்கையும் யாருடைய சம்பந்தியாம்...ஆனால் போற இடத்தில் காரியம் சாதிச்சு விடுவான் மனிசன்..என்ன மாய் மாலமோ...12 ம் 13 ம் அமுல் படுத்துவதில் கில்லாடி போல..இங்கை ஜெயசங்கர் பதுங்குது..
-
சுதந்திர தினத்தை சர்வதேச விருந்தாளிகளை அழைத்து வெகு விமரிசையாக கொண்டாட ஆண்டி நரி திட்டம். மறுபுறம் குடிக்க கஞ்சியில்லாமல் போராட்டம், அதைக்கலைக்க அதிரடிப்படை களமிறக்கம். சும்மா கலாய்க்கப்போகுது சுதந்திர தின விழா. எங்கோ இருந்து பாத்து அறிக்கை விட்டவர்கள், நேரடியாக கண்டு களிக்கப்போகிறார்கள் இலங்கையின் சுதந்திரத்தை! சில ராஜதந்திரிகள் தங்கள் வருகையை ரத்தும் செய்யலாம், பல போராட்ட ஏற்பாட்டாளர்கள் கைதும் செய்யப்படலாம். சுதந்திர தினம் கலக தினமாகலாம். இறப்புகள்.....?
-
அந்த வேலைத்திட்டங்கள் என்னவென்பதையும் தெரிவிக்கிறது. சும்மா பலவேலைத்திட்டங்கள் என மொட்டையாய்ச் சொன்னால் எப்படி? ஆமா.... அங்கஜனும் திட்டங்கள் போட்டவர், தாடியரும் போட்டவர், நீங்களும் சளைத்தவர்களல்லர் திட்டங்களை காட்டி மக்களை ஏமாற்றுவதில். திட்டங்களை நீங்கள் போட்டீர்கள் என்பதற்காக மாற்றாமல் அதை அப்படியே நிறைவேற்றுவதே சாதனை! உங்களின் கடந்த காலத்தையும் கொஞ்சம் நினைத்துப்பார்த்து கருத்து தெரிவித்தால் பின்னர் வரும் விமர்சனங்களை தவிர்க்கலாம்.
-
சரத் வீரசேகர என்கிற விசரன் இன்று தெரிவித்த கருத்து. புலம்பெயர் தமிழரின் முதலீடுகளுக்காக நாட்டை காட்டிக்கொடுக்க முடியாதாம். முதலீடு செய்யுங்கள் என்று வலிந்திழுத்த ஒருவரை தேடுகிறேன். இலங்கை மீது உண்மையான பற்று இருந்தால் முதலீடுகளை செய்யலாம் ஆனால் அதிகாரங்களை தரமுடியாது. அதிகாரமற்ற அடிமைகள் நாட்டை முன்னேற்ற வேண்டும் என்று கேட்க இதுக்கு வெட்கம் இல்லையா? சிங்கள பவுத்தநாடு என முரசு கொட்டுபவர்கள் முன்னேற்றி பாக்கட்டும். சுற்றவர கைநீட்டி, பிச்சை யார் போடுவாரென காத்திருக்கிறார்கள் அதற்குள் திமிர்பேச்சு வேறு. போடுகிறவனையும் கடுப்பேத்தி அல்லாடப்போகிறார்கள். உண்மையிலேயே பதின்மூன்றை எதுவும் குறைபடாமல் நிறைவேற்றுபவர் ரணிலாக இருந்தால்; இந்த விசரை பிடிச்சு பத்துநாள் உள்ளே போடட்டும் பாப்போம்! நிஞாயத்தை கேட்ட மாணவரை உள்ளே போட முடியுமென்றால், ஏன் இது முடியாது? குறைந்தது மனநல காப்பகத்துக்கு என்றாலும் அனுப்பி பாக்கட்டும்! எல்லா இனவாதியையும் குரைக்க விட்டிட்டு, பதின்மூன்றை இல்லாதொழிக்கிற ஆலோசனையையும் சொல்லி ஒரு குறைப்பிரசவம் நடந்தேறப்போகிறது. அதற்கு இவ்வளவு ஆலாபனை, நிபந்தனை. வெளிநாடுகள் பங்குபற்றினால் ஒன்றும் வெருட்டல், உருட்டல், ஏமாற்றல் செய்ய முடியாது. சுதந்திர தினத்துக்கு இந்த ஏமாந்ததுகளை அழைத்து, சர்வதேசத்துக்கு படம் காட்டி, நாங்கள் எல்லோரும் ஒன்று பிச்சை போடுங்கோ என்று தட்டு நீட்ட எண்ணிவிட்டார் போலும்.
-
Recommended Posts