Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

பூட்டிய அறையில் சிக்கிய இந்திய தலைவர்கள்.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

பூட்டிய அறையில் சிக்கிய இந்திய தலைவர்கள்.

Friday, 02 February 2007

லண்டன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பிரபலங்கள் பலரை, ஒரு வீட்டில் சில நாட்கள் பூட்டி வைத்து, அவர்கள் பேசிப் பழகுவதை ஒளிபரப்புவார்களாம். அதே போன்ற நிகழ்ச்சி ஒன்றை இங்கே நடத்தினால், பிரபலங்கள் எப்படிப் பேசிக் கொள்வார்கள் என்று ஒரு கற்பனை. ஒரு பங்களாவில் கருணாநிதி, ஜெயலலிதா, டாக்டர் ராமதாஸ், வைகோ, விஜயகாந்த் ஆகியோர் உள்ளே வைத்து பூட்டப்படுகிறார்கள். அவர்கள் பேசிப் பழகும் நேரடி ஒளிபரப்பு இதோ:

கருணாநிதி: இந்த மர்ம பங்களா போயஸ் தோட்டத்திலுள்ள ஒரு ஆடம்பர பங்களாவை எனக்கு நினைவூட்டுகிறது.

ஜெயலலிதா: போதும் ஃபிளாஷ்பேக்கை நிறுத்துங்க. இந்த நிகழ்ச்சியே நீங்க செய்த சதிதானே?

வைகோ: சரியா சொன்னீங்கம்மா. நம்மளை இங்கே பூட்டி வைச்சிட்டு, தாயகத்தைக் கைப்பற்ற சதி நடக்குது. அந்த இரண்டு கோமாளிகளின் கனவு பலிக்காது.

கருணாநிதி: கோமாளிகளா... யார் அது?

வைகோ: அடடா, இவருக்கு ஒண்ணுமே தெரியாதாமாம்.. எல்.ஜி.., செஞ்சி இந்தத் துரோகிகளாவது யார்னு தெரியுமா?

கருணாநிதி: தெரியாமல் இருக்குமா? எல்.ஜி. என்பது கூட்டுப் பெருங்காயம்.. செஞ்சி என்பது ராஜா தேசிங்கு கோட்டை இருக்கும் இடம்.. இவை எப்படி உங்களுக்குத் துரோகம் செய்ய முடியும்? புரியவில்லையே, முன்னாள் போர்வாளே?

வைகோ: (பற்களை நற நறவென்று கடித்தபடி) எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு உங்களை அப்படியே.. (திடீரென்று முகபாவம் மாறி அழுகிறார்) அய்யோ! அநியாயம் பண்றாங்களே! ரத்தக் கொதிப்பை ஏற்படுத்தறாங்களே! அம்மாவும் ஒண்ணும் கண்டுக்க மாட்டேங்கிறாங்களே?

விஜயகாந்த்: பக்கத்துல ஏதோ புல்டோஸர் வண்டிச்சத்தம் கேக்குது. அநேகமா டி.ஆர். பாலுதான் ஓட்டிட்டுப் போகிறார்னு நினைக்கிறேன். ஹ... மண்டபத்தைத் தானே இடிப்பாரு? மக்களோட மனக்கோட்டையை எப்படி இடிப்பாரு? ஹ.. எல்லா பக்கமும் ஊழல்னு சொல்றேன்.. உங்க பொன்னான ஓட்டை எனக்கே போடணும்னு ஆணித்தரமா கேக்கறேன்.

ஜெ: ஹலோ, இப்ப என்ன தேர்தலா நடக்குது? இன்னும் தெளியலை போலிருக்கு. டிரங்கர்ட் ஃபெல்லோ...

விஜய: தமிழ்நாட்டை சுரண்டினது போதும்.. இப்ப என்னை இங்கே பூட்டி வைச்சுட்டா, என் கட்சியைக் கலைச்சிடலாம்னு கனவு காணாதீங்க. ஆனானப் பட்ட பாகிஸ்தான் தீவிரவாதிங்களோட கொடுஞ்சிறைகள்லேர்ந்தே தப்பிச்சவன் நானு.. ஹ... ஞாபகம் வெச்சுக்குங்க.. ரமணா படம் பாத்திருக்கீங்களா? ஹ.. அதுதான் நடக்கப் போகுது..

ராமதாஸ்: இந்த சினிமாவால தான் நாடே குட்டிச் சுவராகுது... ஒரு நாளைக்கு ஒரு ஷோதான் காட்டணும். படத்துல ஹீரோவே இருக்கக் கூடாது... தம்பி திருமா மட்டும் வேணா, ஹீரோவா நடிக்கலாம். சினிமாவுல எவனாவது சிகரெட் பிடிச்சா தொலைஞ்சீங்க.

கருணா: மருத்துவர் கோபமா இருக்காரு. என்ன வேணும் கேளுங்க, தர்றேன் டாக்டர்...

ராம: பின்ன என்ன தலைவரே, பச்சைத் துரோகம் செஞ்சா கோபம் வருமா வராதா?

கருணா: பச்சைத் துரோகமா? யார் செஞ்சது? ‘பச்சைத் துரோகம்’னு 1962_ல அண்ணா தலைமையில வாணியம்பாடியில நாடகம் ஒண்ணு போட்டிருக்கேன். அதைச் சொல்றீங்களா?

விஜய: வெறும் நாடகம்னு சொல்லாதீங்க.. கபட நாடகம்னு சொல்லுங்க... ஹ... அதுதான் உங்களுக்குக் கைவந்த கலையாச்சே...

கருணா: ‘கபட’ என்றொரு வார்த்தையையே தமிழிலிருந்து அழித்திட வேண்டும் என்று நினைப்பவன் இந்தக் கருணாநிதி...

வைகோ: (கண்களைக் கசக்கியபடி) இவரு எப்பவும் இப்படித்தாங்க... ஒண்ணுமே தெரியாத மாதிரிதான் பேசுவாரு... ஆனா எல்லாத்தையும் செய்யிறது இவருதான்..என் கட்சியைக் கூட உடைக்கப் பார்த்தாரு... பூ... பூ.. (அழுகிறார்)

ஜெ: ஷ்ஷ§... இந்த மாதிரியெல்லாம் அழுது கலாட்டா பண்ணக் கூடாது..என் கட்சியை விட்டு, கூட்டணியை விட்டு எத்தனையோ பேரு போறானுங்க.. அதைப் பத்தியெல்லாம் நான் கவலைப்பட்டிருக்கேனா... போனா போறாங்க... வந்தாவர்றாங்க...

ராம: யார் வேணா வரட்டும், போகட்டும்.. ஆனா எவனும் ராத்திரி எட்டு மணிக்கு மேல ரோட்டுல திரியக் கூடாது.

வைகோ: இந்த பங்களா ரொம்ப நல்லா இருக்கு.. துரோகிகள் கிட்டே பொதுக்குழு உறுப்பினர்கள் போகாம இருக்க உள்ளே வைச்சுப் பூட்டிடலாம்.. விஷயம் வெளியே தெரியாது.

ஜெய: இந்த பங்களா விலைக்கு வருமா? சசியை விட்டுப் பேசச் சொல்லணும்.

கருணா: விலைக்கு வாங்கினால் சட்டம் அதன் கடமையைச் செய்யும்..

விஜய: சட்டம் தன் கடமையைச் செஞ்சா, தெய்வம் நின்னு கொல்லும்.

ஜெய: என்ன இந்தாளு.. எதிர்க்கட்சித் தலைவர் நானா, இவரா? ரொம்ப அதிகமா பேசிக்கிட்டே போறாரு? சினிமாவுல தான் அதிகமா பேசறாருன்னு பார்த்தா, அரசியல்லயும் டூ மச்சாப் பேசறாரு..

வைகோ: இந்தக் கருத்தைச் சொல்றதுக்காக என்னை மன்னிச்சிடுங்கம்மா. நீங்க பேசாம இருக்கிறதுனாலத்தான் இவரை மாதிரி ஆளுங்களெல்லாம் பேச ஆரம்பிச்சுட்டாங்க. எப்படி சக்கைப் போடு போடுறாரு பாருங்க. எனக்கே இவருகிட்டே கூட்டணி மாறிடலாமான்னு உணர்ச்சிவசப்படத் தோணுது..

ஜெ: ஓஹோ, என்கிட்டே பேச இவ்வளவு தைரியம் வந்திடுச்சா? மறுபடியும் உள்ளே வைச்சாத்தான் சரிப்படுவாரு போலிருக்கு. சீக்கிரம் கூட்டணியிலேர்ந்து அனுப்பிட வேண்டியதுதான்..

வைகோ: ( அழுதபடி ) என்னை மன்னிச்சிடுங்கம்மா..

ராம: சரி..சரி.. எல்லாரும் அவங்க அவங்க ரூமுக்குக் கிளம்புங்க. மணி எட்டு ஆகப் போகுது. எல்லா லைட்டையும் ஆஃப் பண்ணிடணும். ஃபேன் போடக்கூடாது. சினிமா பாட்டை யாரும் முணுமுணுக்கக் கூடாது..பாத்ரூம் போகக் கூட யாரும் அறையை விட்டு வெளியே வரக் கூடாது. வந்தா அடி பின்னிடுவேன்.. எல்லோரும் அவரவர் அறைக்குத் திரும்புகிறார்கள்.

ராம: (கலைஞரிடம் ) என்ன, ஏதோ யோசனையில நிக்கறீங்க?

கருணா: உங்க கட்சியிலேர்ந்து சில பேர் உங்களை எதிர்த்து வெளியே வர்றா மாதிரி ஒரு சின்ன கனவு வந்தது. அதான்...

ராமதாஸ் ‘அய்யய்யோ’ என்று கத்தியபடியே ஓடுகிறார்.

குமுதம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நாம கற்பனை பண்ணாததெல்லாம் நடக்குமிடம் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • புலம் பெயர்ந்த சாதியம் – 6 May 11, 2021  — அ. தேவதாசன் —  மாடு ஓடவிட்டு கயிறு எறியவேணும் என்று சொல்லுவார்கள். புலம் பெயர் தேசங்களில் அந்த வித்தையை சாதிய பாதுகாவலர்கள் மிகவும் நிதானமாக கடைப்பிடிக்கிறார்கள். தங்களைவிட குறைந்த சாதியினர் எனக்கருதுவோரை தமது பிள்ளைகள் காதல் கொண்டுவிட்டால் அவர்கள் யாரைக் காதலிக்கிறார்கள் என்பதை தேடித்துளாவிக் கண்டுபிடித்து விடுகிறார்கள். தமது பிள்ளைகளோடு கதையோடு கதையாக “அவையளோட நாங்கள் ஊரில் பழகிறதில்லை, வீட்டுக்குள்ள விடுகிறதில்லை” இப்படியாக பல சுயபெருமைக் கதைகளை ஆலோசனை அல்லது அறிவுரை என்கிற பெயரில் பிள்ளைகளிடம் கூறி மனதை மாற்ற முயற்சிப்பார்கள். ஆனால் பிள்ளைகளுக்கு இது புரியாது. ஒரே மொழி, ஒரே நிறம், ஒரே தொழில், ஒரே நாடு இதிலென்ன வேறுபாடு என யோசிப்பார்கள். இது ஒருபுறம்! மறுபுறம் சிங்களவன்தான் நமது எதிரி நாம் எல்லோரும் தமிழர்கள் ஒன்றுபட்டு போராடி நாடு பிடிக்க வேண்டும் என்கிற கருத்துக்களும் பிள்ளைகள் மத்தியில் புகுத்தப்படுகிறது. ஒருபுறம் தமிழர் ஒற்றுமை, மறுபுறம் சாதிவேற்றுமை. பொது இடத்தில் பேசுவது ஒன்று வீட்டுக்குள் பேசுவது வேறொன்று. தமிழர்களுக்கான ஒரு நாடு வேண்டும் என்பதில் தொண்ணூறுவீதமான தமிழர்களுக்கு எந்த முரண்பாடுகளும் இல்லை. அதற்காக தமிழ்த்தேசியத்தை கையில் எடுப்பதும் முரண்பாடு இல்லை. அதேவேளை சாதிய ஒடுக்குமுறை, பிரதேச வாதம், மதவாதம், பெண்ணிய ஒடுக்குமுறை, வர்க்கமுரண்பாடு என்பனவற்றின் தெளிவும், அதை அகற்றவேண்டும் என்கிற உறுதியும், அதற்கான வேலைத்திட்டங்களும் தமிழ்த் தேசியத்தை உயர்த்திப் பிடிக்கும் தலைமைகளிடம் அறவே இல்லை. மாறாக இவைகள் அனைத்தையும் அழியவிடாது தற்காத்துக்கொண்டே விடுதலையை வென்றெடுப்போம் என்கிற குறுகிய சிந்தனைப் போக்கும், இந்த முரண்பாடான வாழ்க்கை முறையும் இங்கு பிறந்த தலைமுறையினருக்கு விடுதலை பற்றிய பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பெரும்பாலான பிள்ளைகள் பெற்றோரது தர்க்கீகம் அற்ற ஆலோசனையை அல்லது அறிவுரையை கவனத்தில் கொள்வதில்லை. இதற்காக பெற்றோர்களும் துவண்டு விடுவதில்லை. தொடர்ந்து குறைந்தது மூன்று வருடங்கள் காதல் தொடரும்போது காதலர்கள் மத்தியில் சிறிது சிறிதாக உரசல்கள், கோபங்கள், முரண்பாடுகள், சில நாள் பிரிவுகள் வந்து போவது இயல்பு. இந்த இடைவெளிகளை பெற்றோர்கள் மிகக்கெட்டியாக பிடித்துக்கொள்வார்கள். சில தினங்கள் பிள்ளைகள் சோர்வுற்று இருக்கும் நேரங்களில் “நாங்கள் முந்தியே சொன்னனாங்கள் நீதான் கேக்கயில்லை, நீ இப்படி இருக்கிறது எங்கட மனதுக்கு எவ்வளவு கஸ்டமாயிருக்கு” இப்படியாக அன்பு மழை கொட்டி இறுதியாக ஒன்று சொல்வார்கள், “சாதிப்புத்தியக் காட்டிப்போட்டான் அல்லது போட்டாள்”. இவ்வாறு தொடர்ந்து சொல்லிச் சொல்லி சிறிய இடைவெளியை பெரும் வெளியாக மாற்றி விடுவார்கள். கல்லும் கரையத்தான் செய்யும், அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்… இப்படியாக பல காதல்கள் பிரிந்து போன வரலாறுகளும் உண்டு.   இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் சாதியை உடைத்து இணைந்த காதலர்களின் சாதிமறுப்புத் திருமணங்களை ஆதிக்க சாதியினர் அவசரமாக கொலைகள் செய்து பழி தீர்த்து விடுவதுண்டு. அதை ஆணவக்கொலை என்பர். அப்படி யாழ்ப்பாணத்து ஆதிக்க சாதியினர் அவசரப்படுவதில்லை. மிகவும் பொறுமையாக இலக்கை நோக்கி விழிப்புடன் இருப்பார்கள். மாடு ஓட கயிறு எறிந்து வீழ்த்திவிடுவார்கள். அதாவது சந்தர்ப்பம் பார்த்து பிரித்து விடுவார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஆனாலும் சரி யாழ்ப்பாணத் தமிழர்கள் ஆனாலும் சரி நோக்கம் ஒன்றுதான் சாதியை காப்பாற்றுவது. செயயற்பாடுகள்தான் வேறுபாடானவை.. சாதிய ஆதிக்கம் என்பது ஒவ்வொரு விடயத்திலும் மிக நுணக்கமாக புலம் பெயர் தேசங்களில் செயற்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு ஊர்ச்சங்கங்கள் இருப்பது போன்று தமிழர்களுக்கு என பொதுவான சங்கங்களும் உண்டு. தமிழர் நட்புறவுச்சங்கங்கள், அபிவிருத்திச் சங்கங்கள், பாடசாலை பழைய மாணவர் சங்கங்கள், கோயில் பரிபாலன சபைகள் போன்ற பல அமைப்புகள் இயக்குகின்றன. இவைகளில் அதிகமானவை தமிழ்த்தேசிய பற்றாளர்கள் என்போரால் வழி நடாத்தப்படுகின்றன. இவ்வமைப்புக்கள் அறிவியல் பலத்தில் செயற்படுவதில்லை, மாறாக பொருளாதார பலத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டே செயற்படுகின்றன. இப்பொருளாதார பலம் ஆதிக்க சாதியினர் எனப்படுவோர் கைவசமே இருப்பதனால் இவ்வமைப்புகளை ஆதிக்க சாதிகள் கையகப்படுத்த இலகுவான வாய்ப்பாக அமைகிறது.   இவ்வமைப்புக்களை மேலோட்டமாக பார்க்கிற போது தமிழர்களின் விடுதலைக்கும் மேம்பாட்டுக்கும் சமத்துவமாக செயற்படுத்துவது போன்ற தோற்றப்பாடு தெரியும். இவைகளுக்கு உள்ளே சென்று பார்த்தால் சாதிய ஆதிக்கம் மிக நுணுக்கமாக செயற்படுவதை கண்டுகொள்ளலாம். இவ்வமைப்புகளுக்கு வெளித்தோற்றத்தில் ஒரு நிர்வாகம் இருந்தாலும் அதற்குள் ஒரு நிழல் நிர்வாகம் இருந்துகொண்டே இருக்கும். அந்த நிழல் நிர்வாகிகள் அந்த அமைப்புகளின் உறுப்பினராக கூட இருக்கமாட்டார்கள். ஆனால் அவர்களே நிர்வாகம் எப்படி இயங்கவேண்டும் நிர்வாகத்தில் யார் யார் இடம்பெறவேண்டும் என்பதை தீர்மானிக்கிறார்கள். வெளிப்படைத்தன்மையற்ற இவ் இயங்கியல் முறை சரியான ஜனநாயக வடிவத்தை தேட முடியாமலும், சமூக மாற்றத்திற்கான விதைகளை ஊன்ற முடியாமலும், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க முடியாமலும் பழமைவாத சிந்தனைகளுக்குள் முடங்கிக் கிடக்கிறது.   இதனால், புலம்பெயர் தேசங்களில் பிறந்த இளஞ்சந்ததியினர் “பழமைவாத சக்திக”ளோடு தங்களை இணைத்துக்கொள்ள முடியாது தூர விலகி தமக்கான வாழ்க்கையில் மட்டும் கவனம் செலுத்துபவர்களாக இருக்கின்றனர். இச்செயற்பாடுகள் புலம் பெயர்ந்து வாழும் ஏனைய சமூகங்களுடன் புரிந்துணர்வுடன் கூடிய சமூக நல்லுறவை இழக்கும் நிலையையும் ஏற்படுத்துகிறது. புலம் பெயர் தேசங்களில் உருவாக்கப்பட்ட சகல அமைப்புகளின் முதன்மை நோக்கம் என்பது கலாச்சாரத்தை காப்பாற்றுவது. இதற்காக சகல அமைப்புகளும் கலாச்சார நிகழ்வுகள் நடாத்த வேண்டியது கட்டாயம். கலாச்சார நிழ்ச்சிகளில் முதலாவது நிகழ்வாக மங்கல விளக்கு ஏற்றுதல் நடக்கும். ஆளுயர குத்துவிளக்கு வைத்து, அந்தந்த அமைப்புகளுக்கு நிதி வழங்கும் ஊர்ப்பணக்காரர் சிலரும் ஊரில் ஆசிரியராக இருந்து இடையில் விட்டிட்டு வந்தவர்கள் அல்லது பென்சனுக்கு பிறகு வந்தவர்கள் ஆகியோரை அழைத்து விளக்கு ஏற்றப்பட்ட பின்னர் இறைவணக்கம் செய்யப்படும். இவ் இறைவணக்கம் பரதநாட்டிய நடனம் மூலம் கடவுளுக்கு காணிக்கையாக்கப்படும். இதனைத்தொடர்ந்து  நடனம், நாடகம், இசை இப்படி பல நிகழ்வுகள் இடம்பெறும் கலாச்சார நிகழ்வுகளின் பிரதான நிகழ்வாக பரத நாட்டியம் மட்டும் நிகழ்ச்சி நேரங்களில் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும். ஏனேனில், மேற்குலக நாடுகளுக்கு புலம்பெயர்ந்த பின்னர், “பரதம் தமிழர்களின் கலை” என்று பலராலும் கண்டுபிடிக்கப்பட்டு அது கற்றுக்கொள்ளபடுகிறது. மேற்குலக நாடுகளின் பணபலம் நம்மவர் மத்தியிலும் பரவலாக புழக்கத்தில் உள்ளதால் பணம் படைத்தவர்களுக்கான கடவுளைப் புகழும் பரதநாட்டியம் தமிழரின் அதி உச்ச கலையாக மாறிப்போனது வேடிக்கை. மேற்குறிப்பிட்ட சங்க நிகழ்வுகளுக்கு பெண்கள் சீலை அணிந்து வருவதும் ஆண்கள் கோட்சூட் அணிந்து வருவதும் கலாச்சாரத்தை காப்பாற்றும் நோக்கம் என்றே கருதுகிறார்கள். நிகழ்வு மேடைகளிலும் கலாச்சாரம் காப்பாற்ற வேண்டும் என்கிற உபதேசங்கள் உரத்த குரலில் அறிஞர் பெருமக்களால் பேசப்படும். நானும் பலரிடம் தமிழ்க்கலாச்சாரம் பற்றிய அறிதலுக்காக அதற்கான கேள்விகளை முன்வைத்திருக்கிறேன். கலாச்சாரம் என்றால் என்ன என்ற கேள்விக்கு அறிஞர் பெருமக்கள் தொடக்கம் சாதாரண மக்கள் வரை அவர்களின் பதிலாக இருப்பது “பெண்கள் சேலை அணிவது, பொட்டு வைப்பது, தாலி கட்டுவது, ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்வது” ஆகியவைதான் என முடித்து விடுவார்கள். இந்தியாவில் தமிழர்கள் அல்லாதவரும் சேலை, போட்டு, தாலி, ஒருத்தனுக்கு ஒருத்தி வாழ்க்கை முறைப்படி வாழ்கிறார்கள். இதுதான் தமிழ் கலாச்சாரமா? தமிழர்களுக்கென தனித்துவமாக வேறேதும் இல்லையா? என திருப்பிக் கேட்டால் சிரிப்பு மட்டுமே பதிலாக வரும். நமக்கு தெரிவதெல்லாம் கலாச்சாரம் என்கிற ஒற்றைச் சொல் மட்டுமே! இந்த ஒற்றைச் சொல்லக்குப் பின்னால் சாதியமும் பெண்ணொடுக்கு முறையும் நிரம்பிக்கிடக்கிறது.             தொடரும்……   https://arangamnews.com/?p=4998    
  • உங்களை யார் பிள்ளைகளை படிக்க வைத்து அவர்களுக்கு அறிவை ஊட்ட சொன்னது. நாங்கள் அவர்களை தெருவில் நின்று தறுதலையாக திரிய வேண்டும் என்று எவ்வளவு கஸ்ரப்படுகிறோம். நீங்கள் என்ன என்றால்  உங்களை எல்லாம் திருத்த முடியாது. இப்படியே போனால் நாங்கள் எப்படி பிழைப்பு நடத்துவது
  • தமிழ் எழுத்துக்களின் வரலாறு | எழுத்து உருவான பின்னணி | தொல்காப்பியம் | பேசு தமிழா பேசு  
  • எல்லாத்தையும் கலப்பினம், பதவி கொடுப்பினம்  பிறகு பறிகொடுத்துவிட்டு வாய் பாப்பினம். இதுதானே காலா காலமாய் நடக்குது. சாணக்கியன் நிலைத்திருந்தால் அதுவே பெரிய சாதனை.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.