Jump to content

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம்


Recommended Posts

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம்

சகுனி ஆட்டத்தைவிட மோசமான ஆட்டம்!

 

2014 செப்டம்பர் 27-ம் தேதி!

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நின்று கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. 4 ஆண்டுகள் சிறையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு எழுதுகிறார் நீதிபதி குன்ஹா. மதியம் 3 மணிக்கு சிறைக்குள் அடைக்கப்படுகிறார் ஜெயலலிதா.

2014 செப்டம்பர் 29-ம் தேதி!

சென்னை ராஜ்பவனில் பிற்பகல் 3 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை அழுகாச்சியோடு பதவியேற்கிறது.

இந்த இரண்டு சம்பங்களுக்கும் இடைவெளி, இரண்டு நாட்கள். சரியாகச் சொன்னால் 48 மணி நேரம். வழக்கில் தண்டிக்கப்பட்ட உடனே ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோகிறது. தெய்வமாகவே பூஜிக்கும் தலைவி, சிறையில் தள்ளப்பட்டதுமே தவித்துப் போனார்கள் கட்சியினர். அழுது புரண்டார்கள். அறிவிக்கப்படாத பந்த் போல காட்சி அளித்தது தமிழ்நாடு. 48 மணி நேரம் காத்திருந்து கடைசியில் தான் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை தேம்பிப் தேம்பி அழுதபடியே பதவியேற்றது.

p6.jpg

2016 டிசம்பர் 5-ம் தேதி

அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் மாலை 6 மணிக்கு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாக அங்கே ஆஜர் ஆகிறார்கள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள். இரவு 7.30 மணிக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களை கவர்னர் மாளிகைக்கு அழைத்துச் செல்ல மூன்று சொகுசுப் பேருந்துகள் கட்சி அலுவலக வாசலுக்கு வந்து நிற்கின்றன. ‘இரவு 11-30 மணிக்கு ஜெயலலிதா இறந்துவிட்டார்’ என்கிற தகவலை அப்போலோ வெளியிடுகிறது. கிட்டத்தட்ட அதே நேரம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, தங்கமணி உள்ளிட்டோர் ஒரே காரில் அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் நுழைகிறார்கள். உயிருக்கு உயிரான தலைவி உயிர்விட்ட பிறகு கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். ஜெயலலிதாவின் உடல் அப்போலோவில் கிடக்க... இங்கே

ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராகத் தேர்வு செய்து கொண்டிருந்தார்கள். நள்ளிரவு 12.30 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்கள் அனைவரும் ஆளுநர் மாளிகை நோக்கிச் சென்றனர். குளு குளு பஸ்களில் ஆளுநர் மாளிகை வந்து இறங்கினார்கள் எம்.எல்.ஏ-க்கள். நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சரவை அடம்பிடிக்காமல்... அழாமல் பதவியேற்கிறது.

இந்தியாவிலேயே முதன்முறையாக ஊரே அடங்கிய நள்ளிரவில் பதவிப் பிரமாணம்  நடந்த பெருமை தமிழகத்துக்குக் கிடைத்தது. அந்தப் பெருமையை விடுங்கள். ஜெயலலிதா உயிருடன் சிறையில் இருந்தபோது 48 மணி நேரம் பொறுத்து கர்சீஃப் நனைய பதவியேற்ற மாண்புமிகுகள், ஜெயலலிதா செத்த செய்தி தெரிந்தும் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை நடத்தினார்கள். அப்போலோவில் இருந்து அவர் உடல் வீட்டுக்கு வந்து சேர்வதற்குள் நள்ளிரவில் அவசர அவசரமாக கண்ணீர் துளிகளைக்கூட சிந்தாமல் பதவியை ஏற்றார்களே... இவர்கள் இத்தனை காலம் ஜெயலலிதா மீது வைத்திருந்தது எல்லாம் வேஷமா? ஜெயலலிதா உயிருடன் சிறையில் இருந்தபோது 48 மணி நேரம் பொறுத்தவர்கள், ஜெயலலிதா இறந்த பிறகு சில மணி நேரம்கூட இவர்களால் பொறுக்க முடியாமல் போனதற்குப் பின்னால் இருந்த அரசியல் என்ன? மன்னார்குடி ஆட்கள் நடத்திய சதுரங்க ஆட்டம்தான் இது. மகாபாரதத்தில் சகுனி ஆடிய சதுரங்கத்தைவிட மோசமான அரசியல் சதுரங்கம் ஆடப்பட்டு கொண்டிருந்தது. ஜெயலலிதாவோடு 30 ஆண்டு காலமாக இருந்த சசிகலா, அவரிடம் கற்ற அரசியலை அவருக்கு பின்னால் ஆட ஆரம்பித்திருக்கிறார். பொதுக்குழுவுக்கு வந்தாலே ஜெயலலிதாவை வரவேற்று பேனர்களால் சென்னையை மூடி விடுவார்கள் கட்சிக்காரர்கள். கோட்டையில் வீடியோ கான்ஃபரன்ஸிங்கில் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்கே விடிய விடிய முழித்து போயஸ் கார்டன் டு கோட்டை வரையில் ஃப்ளக்ஸ் வைப்பார்கள். ஆனால், ஜெயலலிதா இறந்தபோது சென்னையில் இருந்த மொத்த அஞ்சலி போஸ்டர்கள் ஆயிரத்தைக்கூட தாண்டவில்லை. ஆனால், ‘கழகத்தின் பொதுச் செயலாளராக தலைமையேற்க தலைமகளே வா’ என்ற பேனர்கள் முளைத்தன. அதை தூக்கிவந்து வைத்தது ஜெயலலிதாவின் ஆவியா? ‘சிலர் ஆசைக்கும், தேவைக்கும், வாழ்வுக்கும், வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார். ஒரு மானம் இல்லை! அதில் ஈனம் இல்லை! அவர் எப்போதும் வால் பிடிப்பார்!’ என்று எம்.ஜி.ஆர். பாடிவிட்டுப் போனதும்கூட தீர்க்கதரிசனம்தான் போல.

கட்சிக்குத் தலைமையேற்கச் சொல்லி, ‘சொல்லிவைத்தார் போல’ கட்சிக்காரர்கள் படை திரண்டிருக்கிறார்கள். கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா இருந்தபோது மீடியா முன்பு பேசாதவர்கள் எல்லாம், ‘‘அம்மாவை முதல்வர் ஆக்கியதில் சின்னம்மாவுக்குப் பங்கு உண்டு. கட்சியின் வெற்றிடத்தை நிறைவுசெய்ய சசிகலா வர வேண்டும்’’ என பேட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதைக் கொஞ்சமும் செவிசாய்க்காமல் பற்றற்ற துறவு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார் சசிகலா. ஜெயலலிதா வின் உடலைச் சுற்றி அரண் அமைத்தவர்கள், ஜெயலலிதாவை எப்படி சுற்றி வளைத்தார்கள்? அரசியல் அரிச்சுவடியை சசிகலா எங்கே கற்றார். அவருக்குப் பின்னால் இருந்து இயக்கும் மன்னார்குடி ஆட்கள் செய்து வரும் மாயங்கள் என்ன? எப்படி வந்தார்கள்? வளர்ந்தார்கள்!

மன்னார்குடி ஜாதகத்தை அலசுவோம்.

அடுத்த இதழில்

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • Replies 79
  • Created
  • Last Reply

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 2 - சசிகலா சரித்திரம்!

 

 

46p1.jpg

படம்: சு.குமரேசன்

1984-ம் ஆண்டு. ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க-வின் தலைமை அலுவலகத்துக்குள் தயங்கியபடியே நுழைகிறார் அந்தப் பெண். அலுவலக மேனேஜர் துரையிடம் போய் நிற்கிறார். ‘‘கடலூர் கலெக்டர் சந்திரலேகா ஐ.ஏ.எஸ் மேடம் சொல்லியிருக்காங்க... மேடத்தைப் பார்க்க வந்திருக்கிறேன்’’ எனச் சொல்லி தனது விசிட்டிங் கார்டை நீட்டினார். அதில் ‘வினோத் வீடியோ விஷன்’, புரொப்பரைட்டர் என்.சசிகலா, நம்பர் 33, பீமண்ண கார்டன் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை-18 என எழுதப்பட்டிருந்தது.

சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு 1982-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் முன்பு அ.தி.மு.க-வில் சேர்ந்தார் ஜெயலலிதா. 1984-ல் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆனார். அப்போது பொதுக்கூட்டங்களில் பேசுவதற்காக மாவட்டம் தோறும் டூர் போய்க்கொண்டிருந்தார் ஜெயலலிதா. கடலூர்தான் முதல் ஸ்பாட். அங்கே கலெக்டராக இருந்தவர் சந்திரலேகா. பிறகு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது சந்திரலேகா மீது ஆசிட் அடிக்கப்பட்டது எல்லாம் தனிக் கதை. ‘‘அம்மு முதன்முறையாக உங்க மாவட்டத்துல பேசுறாங்க.. அவங்களுக்கு சிறப்பான கவரேஜ் கொடுங்க’’ என சந்திரலேகாவிடம் சொல்கிறார் முதல்வர் எம்.ஜி.ஆர். அப்போது கடலூர் அரசு மக்கள் தொடர்பு அதிகாரியாக (பி.ஆர்.ஓ) சசிகலாவின் கணவர் நடராஜன் இருந்தார். அவரை அழைத்து ஜெயலலிதாவுக்கு சிறப்பான கவரேஜ் தர சொல்கிறார் சந்திரலேகா. பி.ஆர்.ஓ வேலை மீடியாவோடு தொடர்புடையது. அதனால், ஜெயலலிதாவுக்கு பத்திரிகைகளில் நல்ல கவரேஜ் கிடைக்கிறது. தொடர்ந்து மற்ற மாவட்டங்களுக்கும் கவரேஜ் தரச் சொல்லி சந்திரலேகாவை எம்.ஜி.ஆர் வற்புறுத்த... அந்தப் பணி நடராஜனுக்கே கிடைக்கிறது.46p2.jpg

அதற்கு முன் சின்ன ஃப்ளாஷ்பேக்... பீமண்ண கார்டன் தெருவில் 33 நம்பர் வீட்டில்தான் நடராஜனும் சசிகலாவும் வாழ்ந்து வந்தார்கள். அரசு வேலையை நடராஜன் பார்த்துக்கொண்டிருக்க... மனைவிக்கு ஒரு தொழிலை வைத்துக்கொடுக்க நினைத்தார் நடராஜன். பி.ஆர்.ஓ என்பதால் அது சார்ந்த தொழிலா இருந்தால் தனக்கு உதவியாக இருக்கும் என கணக்குப் போட்டு வீடியோ தொழிலை சசிகலாவுக்கு ஏற்படுத்தித் தந்திருந்தார். போட்டோக்கள் மட்டுமே இருந்த காலத்தில் புதிய தொழில்நுட்பமாக வந்த வீடியோவை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். ‘ஜெயலலிதாவுக்கு கவரேஜ் கொடுங்கள்’ என மேலிடத்தின் உத்தரவை ‘வினோத் வீடியோ விஷன்’ மூலம் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார் நடராஜன். சசிகலாவின் அண்ணன் விநோதகன் நினைவாகத்தான் ‘வினோத் வீடியோ விஷன்’ பிறந்தது.

சந்திரலேகாவின் சிபாரிசோடு விசிட்டிங் கார்டை எடுத்துக்கொண்டு ஜெயலலிதாவை சந்திக்கப் போனார் சசிகலா. ஜெயலலிதாவும் சசிகலாவும் முதன்முறையாக சந்தித்துக்கொள்கிறார்கள். அந்தப் புள்ளியில் தொடங்குகிறது அடுத்த 30 ஆண்டுகளுக்கான அ.தி.மு.க-வின் அரசியல் அத்தியாயம். உயிர்த் தோழி ஆகி, போயஸ் கார்டனுக்கு வேலியான கதை பல அத்தியாயங்களைக் கொண்டது.

திருத்துறைப்பூண்டிதான் சசிகலாவின் பூர்வீகம். அங்கே மெடிக்கல் ஷாப் நடத்திவந்த சந்திரசேகரன்தான் சசிகலாவின் தாத்தா. சந்திரசேகரனின் மகன் விவேகானந்தன் - கிருஷ்ணவேணி தம்பதிக்கு, சுந்தரவதனன், விநோதகன், ஜெயராமன், வனிதாமணி, சசிகலா, திவாகரன் என 6 வாரிசுகள். இந்த வாரிசுகளும் அவர்களின் வாரிசுகளும் பெண் எடுத்தவர்களும் கொடுத்தவர்களும் சேர்ந்து மன்னார்குடி மகா சமுத்திரம் ஆனது. இவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.ஜி.ஆரின் கட்சியை ஆட்டிப்படைத்து வருகிறார்கள்.

திருத்துறைப்பூண்டி வடக்குச் செட்டித் தெருவில்தான் விவேகானந்தன் குடும்பம் வசித்து வந்தது. அங்கே போர்டு ஹைஸ்கூலில் 10-ம் வகுப்பு வரை படித்தார் சசிகலா. படிப்பைவிட விளையாட்டில் ஆர்வம் அதிகம். ஓட்டப் பந்தயங்களில் அவர் வாங்கிக் குவித்த பரிசுகளே அதற்கு சாட்சி. பிறகு மன்னார்குடி ஏரியாவுக்கு இடம்பெயர்கிறது விவேகானந்தன் குடும்பம். அங்கேதான் சசிகலாவின் திருமணம் நிச்சயம் ஆகிறது. புகுந்த வீட்டுக்குப் போகிறார். அந்த ஊரின் பெயர் விளார். சசிகலாவின் கணவர் எம்.நடராஜனின் ஊர்.

-அடுத்த இதழில்...

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 3 - சசிகலா திருமணம்!

 

 

‘வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு’


என்ற திருக்குறளை எழுதி ஜெயலலிதாவின் படத்தைப் போட்டு ‘நீங்கா நினைவுகளுடன் அஞ்சலி’ என நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்திருந்தது கேரள அரசு. மூன்று நாள் துக்கம் கடைப்பிடித்ததோடு கேரள கவர்னர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர்கள் உம்மன் சாண்டி, சென்னிதாலா என நால்வரும் ஒருசேர பயணிகள் விமானத்தில் மீனம்பாக்கம் வந்திறங்கினர். அங்கிருந்தும் அவர்கள் ஒரே காரில் பயணித்து வந்து ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டுப் போனார்கள்.

p26.jpg

ஜெயலலிதா தொடங்கி வைக்கும் திட்டங்களுக்காக நாளிதழ்களில் பக்கம் பக்கமாக அரசு விளம்பரங்கள் பளிச்சிடும். 100 நாள் சாதனைக்காகக் கடந்த ஆகஸ்ட் மாதம் பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் ஜெயலலிதாவின் படத்தைப் போட்டு விளம்பரங்கள் கொடுத்தது அரசு. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது காட்டப்பட்ட விசுவாசம் இது. அவர் சுவாசம் நின்று போனபிறகு ஒரு அஞ்சலி விளம்பரத்தைக்கூட கொடுக்க முடியாத அளவுக்கு அரசுக்குப் பண முடை போல! முல்லைப் பெரியாறு, அட்டப்பாடி, சிறுவாணி என தண்ணீருக்காக நம்மோடு மல்லுக்கு நிற்கும் கேரளம்கூட அஞ்சலி செய்கிறது. ஆனால், ஜெயலலிதா அஞ்சலியைவிட சசிகலாவுக்கு புகழாஞ்சலிதான் முக்கியம் என மூழ்கி கிடக்கிறார்கள் மாண்புமிகுக்களும் மக்கள் பிரதிநிதிகளும். இதற்குக் காரணம் சசிகலா!  ஜெயலலிதாவை தூரத் தள்ளிவைத்துவிட்டு சசிகலாவுக்குப் பல்லக்குத் தூக்கினால்தான் பதவியில் நீடிக்க முடியும் என்கிற அரசியல் ஆத்திச்சூடி தெரியாதவர்கள் அல்ல நம் அரசியல்வாதிகள்.

p26a.jpgகருணாநிதியின் உடல்நிலையை விசாரிக்க அமைச்சர் ஜெயக்குமாரும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையும் காவேரி மருத்துவமனைக்கு சசிகலாவின் சார்பில் போயிருக்கிறார்கள்.  ஜெயலலிதாவிடம் இல்லாத அரசியல் நாகரிகம் என்னிடம் இருக்கிறது எனச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் சசிகலா. புதிய அரசியல் பாதை போட்டிருக்கும் சசிகலாவின்  திருமணம் எப்படி நடந்தது?

மன்னார்குடிக்கு அருகில் இருக்கும் விளார் எம்.நடராஜனின் ஊர். படிப்பை முடித்த கையோடு அரசாங்க வேலையில் அமர்கிறார் எம்.நடராஜன். அரசு மக்கள் தொடர்பு அதிகாரி பணி. இந்த வேலை கிடைப்பதற்குப் பின்புலமாக இருந்தது அரசியல்.

தமிழ் ஆர்வமும் அரசியல் ஈடுபாடும் கொண்டது மருதப்பன் குடும்பம். மருதப்பனின் மகன்தான் எம்.நடராஜன். 1967-ல் தி.மு.க. முதன்முறையாக ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பு வரையில், அண்ணா தலைமையில் தி.மு.க. கொள்கை அரசியலில் ஈடுபட்டிருந்தது. அப்போது மாணவராக இருந்த எம்.நடராஜன் அதில் தன்னையும் இணைத்துக்கொண்டார். அந்த நேரத்தில்தான் 1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டம் மாணவர்களால் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. அதில் பங்கெடுத்தார் எம்.நடராஜன். தி.மு.க-வில் முக்கியப் புள்ளியாக இருந்து ம.தி.மு.க  தொடங்கப்பட்டபோது அங்கே போய் பிறகு தி.மு.க-வுக்கு திரும்பி வந்தவர் எல்.கணேசன். இவரின் சிஷ்யர்களில் ஒருவராக எம்.நடராஜன் அப்போது இருந்தார்.

p26c.jpg

1967-ல் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கிறது. அண்ணா முதல்வர் ஆகிறார். 1969-ல் அண்ணா மறைந்துபோக, கருணாநிதி முதல்வர் ஆனார். அரசியல் பின்புலம் கொண்டவர்களை ஆட்சிப் பணிகளில் அமர்த்துவதற்காக ஆட்சியாளர்களே நேரடியாக நியமிக்கும் அதிகாரம்கொண்ட கொல்லைப்புற பதவிதான் மக்கள் தொடர்பு அதிகாரிகள். முதல்வரின் நேரடி சிபாரிசில் இந்தப் பதவிக்கு ஆட்கள் நியமிக்கப்படுவார்கள். 1969-ல் கருணாநிதி போட்டுத் தந்த இந்த பாதையில்தான் இன்றுவரையில் ஆட்சியாளர்கள் பயணிக்கிறார்கள்.

கருணாநிதி முதன்முறையாக முதல்வர் ஆனபோது உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக (ஏ.பி.ஆர்.ஓ) ஆனார் எம்.நடராஜன். அரசு வேலை கிடைத்துவிட்டது. அடுத்து என்ன...திருமணம்தான். எம்.நடராசனுக்கு பெண் பார்க்கும் பணியை அவருடைய அக்கா பட்டம்மாளும் அவர் கணவர் சம்பந்தமூர்த்தியும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். உறவினர்கள் மூலம் திருத்துறைப்பூண்டியில் ஒரு பெண் இருக்கும் தகவல் கிடைக்கிறது. பெண் பார்க்கும் படலம் முடிகிறது. குடும்பத்தினர் `ஓகே’ சொல்ல... விளாரை சேர்ந்த நடராஜன், சசிகலாவைக் கரம் பிடிக்கிறார். அந்தக் காலக்கட்டத்தில் தஞ்சையில் முக்கிய தளபதியாக இருந்த மன்னை நாராயணசாமி தலைமையில்தான் திருமணமே நடைபெறுகிறது. ஏ.பி.ஆர்.ஓ போஸ்டிங் போட்டுத் தந்த கருணாநிதிதான்        எம்.நடராஜனின் திருமணத்தை நடத்தி வைக்கிறார். ‘இந்த சசிகலாதான் பின்னாளில், ஜெயலலிதாவுக்கு உடன்பிறவா சகோதரி ஆகப் போகிறார்; ஜெயலலிதாவுக்குப் பிறகு அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராகவும் ஆகலாம்’ என்றெல்லாம் அப்போது கருணாநிதியே நினைத்திருக்கமாட்டார். ஆனால், காலம் நினைத்திருந்தது.

மண வாழ்க்கையை சென்னையில் ஆரம்பித்தார்கள் எம்.நடராஜன் - சசிகலா தம்பதி. அரசியல் ஆர்வம் கொண்ட எம்.நடராஜன், அரசியல் காய்களை நகர்த்தத் தொடங்கினார். கடலூரில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில்தான் அங்கே கலெக்டராக இருந்த சந்திரலேகா ஐ.ஏ.எஸ் மூலம் ஜெயலலிதாவுக்கு கவரேஜ் கொடுத்து லிஃப்ட் ஆனார். அதன்பிறகுதான் மனைவிக்கு ‘வினோத் வீடியோ விஷன்’ என்ற வீடியோ கடையை வைத்துக்கொடுத்தார். ஜெயலலிதா அ.தி.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆனதும் தனது வெளியூர் டூர் பயணத்தை எல்லாம் வீடியோவில் பதிவு செய்ய நினைத்தார். அதைக் கச்சிதமாகப் பிடித்துக்கொண்டார் நடராஜன்.

p26b.jpg

ஏற்கெனவே கடலூர் டூர் புரோகிராமுக்கு கொடுத்த கவரேஜ் ஜெயலலிதாவுக்கு பிடித்துப் போயிருந்தது. முதல்வர் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்த பத்திரிகையாளர் சோலைக்கு வேண்டப்பட்ட ரங்கராஜனை அணுகினார் எம்.நடராஜன். அதனால் ஜெயலலிதாவின் டூர் கவரேஜ் சான்ஸ் சுலபமாக  ‘வினோத் வீடியோ விஷனு’க்கு கிடைத்தது. அ.தி.மு.க-வின் தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவை முதன்முறையாக சசிகலா சந்தித்தபிறகு அடுத்தடுத்து சந்திப்புகள் நடக்கின்றன. டூர் கவரேஜ் கேசட்டுகளை கொடுப்பதற்காக, வேதா இல்லத்துக்குள் போய் வருகிறார் சசிகலா. அதன்பிறகு என்ன நடந்தது?

-அடுத்த இதழில்...

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 4 - கேசட் விடு தூது!

 
இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

 

ஜெயலலிதாவின் டூர் கவரேஜ் வீடியோக்கள் ரெடியானதும் அதைக் கொடுப்பதற்கு போயஸ் கார்டனுக்கு போய் வந்துகொண்டிருந்தார் சசிகலா. புதிய வரவாக வந்த வீடியோ தொழிலில் 1980-களில் ஒரு பெண் கால் பதிப்பது ஆச்சர்யமான விஷயம். அந்த ஆச்சர்யம் ஜெயலலிதாவுக்கும் ஏற்பட்டது. சக பெண்மணியாக சசிகலாவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்தார் ஜெயலலிதா. இப்போது இருக்கிற சசிகலாவை பார்க்கிறவர்கள் அவர் கொஞ்சம் ‘மூடி டைப்’ என்றுதான் நினைப்பார்கள். ஆனால், சசிகலா அப்படிப்பட்டவர் அல்ல. எல்லோரிடமும் சகஜமாக பேசக் கூடியவர், பழகக் கூடியவர். அதுதான் அவரை போயஸ் கார்டனுக்குள் சகஜமாகப் போய் வரும் அளவுக்கு வளர்த்தது. அப்படி போய் வந்து கொண்டிருந்த காலத்தில் அங்கே ஜெயலலிதாவைச் சந்திக்கவரும் கட்சி நிர்வாகிகளிடமும் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். புத்தாண்டு அல்லது விழாக் காலங்களில் டைரி, பேனா என பரிசுகளை கொடுத்து தொழிலை வளர்க்க ஆரம்பித்தார். பெண் என்பதால் போயஸ் கார்டனுக்குள் சசிகலாவால் சகஜமாகப் போய் வர முடிந்தது.

p30.jpg

திரைப்படத் துறையில் இருந்து வெளியேறிய பிறகு புதிய சினிமா படங்களைப் பார்க்க நினைத்தார் ஜெயலலிதா. ப்ரிவியூ தியேட்டர்களில் மட்டும் நடிகர்களால் புதிய படங்களைப் போய் பார்க்க முடியும் என்கிற காலகட்டம் அது. அப்போது ப்ரிவியூ தியேட்டர்களில் படங்களைப் பார்க்க ஜெயலலிதா விரும்பவில்லை. ஆனால், படங்களைப் பார்க்கும் ஆர்வம் மட்டும் இருந்தது. அதற்கு வீடியோ வரப்பிரசாதமாக அமைந்தது. VCR, VCP என்கிற வீடியோ பிளேயர்கள் மூலம் படங்களைப் பார்க்கும் தொழில்நுட்பம் பிரபலமாக ஆரம்பித்திருந்தது. அதில் VHS கேசட்டுகள் மூலம் வசதி படைத்தவர்கள் படங்களைப் பார்க்க ஆரம்பித்தார்கள். படங்களைப் பார்க்க விரும்பும் ஜெயலலிதாவின் ஆர்வத்தைக் கவ்வி பிடித்துக் கொண்டார் சசிகலா. ஜெயலலிதாவுக்காகப் புதிய மற்றும் பழைய படங்களின் வீடியோ கேசட்டுகளைக் கொண்டு போனார் சசிகலா.

‘வினோத் வீடியோ விஷன்’ அமைப்பதற்காக கணவர் நடராஜனோடு சிங்கப்பூர் போனார் சசிகலா. வீடியோ பிளேயர்கள், கேமராக்கள், கேசட்டுகள் என வீடியோ தொழிலுக்குத் தேவையான கருவிகளை எல்லாம் வாங்கினார். புதிய மற்றும் பழைய படங்களின் வீடியோ கேசட்டுகள் எல்லாம் பெரும்பாலும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்துதான் தமிழகத்துக்கு வந்து கொண்டிருந்தன. தமிழகத்தில் படங்களை வீடியோ கேசட்டுகளில் காப்பி செய்ய வசதிகள் எல்லாம் குறைவாக இருந்ததால் வாரா வாரம் சிங்கப்பூரில் இருந்து படங்கள் வந்தன. சிங்கப்பூர் போனபோது அந்தத் தொடர்புகளை சசிகலா ஏற்படுத்திக்கொண்டார். அதனால், சிங்கப்பூரில் இருந்து புதிய படங்கள் வர வர... அதை கார்டனில் தந்து ஜெயலலிதாவின் மனதில் இடம்பிடித்தார். குறிப்பிட்ட ஒரு படத்தை ஜெயலலிதா பார்க்க விரும்பி அந்தப் படத்தின் டைட்டிலை சொன்னால் எப்பாடுபட்டாவது அந்தப் படத்தை சசிகலா வாங்கி கொடுத்துவிடுவார்.

p30b.jpg

அந்தக் காலகட்டத்தில் ஜெயலலிதாவுக்கு பி.ஏ-வாக இருந்த பிரேமா, ஜெயலலிதாவின் ஆல் இன் ஆல் தேவைகளைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துகொண்டிருந்தார். எம்.ஏ., எம்ஃபில் படித்தவர் பிரேமா. சினிமாவில் ஜெயலலிதா இருந்த காலத்தில் இருந்து ஜெயலலிதாவுக்கு பி.ஏ-வாக இருந்தவராம். ஜெயலலிதாவின் நிழலாக இருந்து எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பிரேமாவுக்கு சோதனை ஒன்று வந்தது. வயிற்றுவலி தொந்தரவால் பிரேமாவுக்கு அப்பன்டீஸ் ஆபரேஷன் நடந்தது. காத்துக்கொண்டிருந்த சசிகலா அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தத் தவறவில்லை.

அதற்கு முன்பு சின்ன ஃபிளாஷ்பேக்... சிகிச்சைக்காக பெங்களூர் ஜிண்டால் மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப் பட்டிருந்தார். வீடியோ கேசட் கொடுத்த நட்பின் அடையாளமாக பெங்களூருவுக்குச் சென்று ஜெயலலிதாவைப் பார்த்தார் சசிகலா. ஜெயலலிதாவோடு நட்பாகிவிட வேண்டும், அவருக்கு நெருக்கமாகிவிட வேண்டும் என சசிகலா நடத்திய மூவ்களில் இதுவும் ஒன்று. பெங்களூரில் சசிகலாவைப் பார்த்தது ஜெயலலிதாவுக்கு ஆச்சர்யம். ‘‘எதற்காக சிரமப்பட்டு வந்த... என்னைப் பார்க்கிறதுக்காக இவ்வளவு தூரம் வந்திருக்க?’’ என ஜெயலலிதா உருக... ‘‘சிரமம் எல்லாம் இல்ல p30a.jpgமேடம்... உங்களுக்கு உடல்நிலை சரியில்லைனு கேள்விப்பட்டதுமே நலம் விசாரித்துவிட்டு வரலாம் என கிளம்பிவந்துட்டேன். உங்களுக்கு உதவிகள் தேவைப்பட்டால் நான் இங்கே இருந்து உங்களுக்கு உதவக் காத்திருக்கிறேன்’’ என சொன்னதும் ஜெயலலிதா நெகிழ்ந்து போய்விட்டார். இந்த சம்பவம்தான் சசிகலா மீதான நம்பிக்கையை ஜெயலலிதா மனதில் விதைத்தது.

அ.தி.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆகி கொஞ்ச காலத்திலேயே ராஜ்ய சபா எம்.பி. ஆக்கப்பட்டார் ஜெயலலிதா. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க இருந்த நிலையில்தான் பிரேமாவுக்கு ஆபரேஷன் நடந்தது. ‘‘என் பி.ஏ-வுக்கு உடல்நிலை சரியில்லை... உதவிக்கு என்னோடு டெல்லி வர முடியுமா?’’ என ஜெயலலிதா கேட்க... சசிகலா ஜெயலலிதாவோடு நெருக்கமாகத் தொடங்கினார். டெல்லியில் இரண்டு மாத காலம் ஜெயலலிதாவோடு இருந்து சகல உதவிகளையும் செய்து கொடுத்ததால் சசிகலாவைப் பிடித்துப் போய்விட, பிரேமா புறந்தள்ளப்பட்டார். ‘‘தன் மகனுக்கு என்ஜினீயரிங் சீட் வாங்கித் தர சொல்லி ஜெயலலிதாவிடம் கேட்டிருந்தார் பிரேமா. ஆனால், ஜெயலலிதா சிபாரிசு செய்தும் சீட் வாங்கித் தர முடியாமல் போய்விட்டது. அந்தக் கோபத்தில்தான் ஜெயலலிதாவுக்கு `குட்பை’ சொல்லிவிட்டு பிரேமா கிளம்பிவிட்டார்’’ என ஒரு தரப்பு சொல்கிறது.

பிரேமா இடத்தைப் பிடித்த சசிகலாவின் ஆட்டம் அடுத்தடுத்து ஆரம்பமானது.

-அடுத்த இதழில்...

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 5 - நாடாளுமன்ற நாடகம்!

 
இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

 

p16b.jpgநாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு ஜெயலலிதா போய்வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தான், சசிகலாவின் நட்பு ஒட்ட ஆரம்பித்திருந்தது. ஜெயலலிதாவின் பி.ஏ-வாக இருந்த பிரேமாவின் இடத்தில் சசிகலா அமர்ந்தார். பிரேமாவுக்கு உடல்நிலை சரியில்லாத சூழலில், தன் மகனுக்கு கல்லூரியில் ஜெயலலிதா இடம் வாங்கித் தராதது போன்ற விஷயங்கள், பிரேமாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே விரிசல் ஏற்படக் காரணமாக இருந்தாலும், இதற்குப் பின்னால் சத்தமில்லாமல் சசிகலாவின் காய் நகர்த்தல்களும் இருந்தன.

அ.தி.மு.க-வில் இணைந்து, கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆனபோதும்  அதைவிட பெரிய பதவியை ஜெயலலிதா எதிர்பார்த்திருந்தார். கொள்கைப் பரப்புச் செயலாளர் என்ற முறையில் மாவட்டம்தோறும் விசிட் அடித்தபடியே இருந்தார். காலம் உருண்டோடிக் கொண்டிருந்தது. கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்த முசிறி புத்தன், ‘மன்ற முரசு’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார். 1984-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி அந்தப் பத்திரிகையின் வெளியீட்டு விழாவுக்கு தேதி குறிக்கப்பட்டது. காரணம், அன்று எம்.ஜி.ஆரின் பிறந்தநாள். ‘மன்ற முரசு’ பத்திரிகையை முதல்வர் எம்.ஜி.ஆர் வெளியிட, நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் பெற்றுக்கொண்டார். ‘‘சினிமாவில் எனக்கு வாரிசு வேண்டும் என தேடினேன். என் வாரிசு பாக்யராஜ்தான்’’ என எம்.ஜி.ஆர் மேடையிலே சொன்னது பலருக்கு ஆச்சர்யம். சிலருக்கு அதிர்ச்சி. அடுத்த மாதமே பாக்யராஜ் - பூர்ணிமா திருமணத்தை எம்.ஜி.ஆர் நடத்தி வைத்தார். பாக்யராஜுக்கு எம்.ஜி.ஆர் முக்கியத்துவம் தருவதை ஜெயலலிதா ரசிக்கவில்லை. ‘‘என் வாரிசு ஜெயலலிதா’’ என எம்.ஜி.ஆர் சொல்ல வேண்டும் என நினைத்தார் ஜெயலலிதா.

p16.jpg

ஜெயலலிதாவுக்கு இருந்த மனவருத்தம் எம்.ஜி.ஆருக்கும் தெரியாமல் இல்லை. ஜெயலலிதா, அ.தி.மு.க-வுக்கு வந்து 3 ஆண்டுகள்கூட ஆகாத நிலையில், ஜெயலலிதாவை ராஜ்ய சபா எம்.பி ஆக்கினார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் மனப்புண்ணுக்கு மருந்து தடவும் நிகழ்வு இது. ‘மன்ற முரசு’ நிகழ்ச்சி நடந்த மூன்றே மாதங்களில் அதாவது, 1984-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி நாடாளுமன்றத்துக்குள் முதன்முறையாக நுழைந்தார் ஜெயலலிதா. ராஜ்ய சபா எம்.பி-யாக பதவியேற்ற செய்தி தமிழக பத்திரிகைகளில் பெரிய அளவில் ஃபோக்கஸ் ஆகவில்லை என்கிற வருத்தம் ஜெயலலிதாவுக்கு இருந்தது. அதனால், நாடாளுமன்றத்தின் தனது கன்னிப்பேச்சு மீடியாவில் பெரிதாக வர வேண்டும் என விரும்பினார். கொள்கைப் பரப்பு செயலாளராக இருந்தபோது டூர் நிகழ்ச்சிகளை கவரேஜ் செய்து கொடுத்த நடராஜன் - சசிகலா தம்பதிதான், அவருடைய நினைவுக்கு வந்தனர். மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றிய
எம்.நடராஜனுக்கு பி.ஆர். (Public Relations) வேலை நன்றாகவே தெரியும். நாடாளுமன்றத்தில் ஜெயலலிதாவின் முதல் கன்னிப்பேச்சு 1984-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி அரங்கேறியது. ‘‘கல்பாக்கம் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்கே தர வேண்டும்’’ என முதல் பேச்சில் குறிப்பிட்டார். அவரின் பேச்சை எல்லா பத்திரிகைகளிலும் வர வைத்தார் நடராஜன். அடுத்த சில நாட்களில் ‘‘இந்தித் திணிப்பு கூடாது’’ என சொல்லி நாடாளுமன்றத்தில் இந்தியில் பேசினார் ஜெயலலிதா. அதற்கும் நல்ல கவரேஜ் கிடைத்தது.

p16a.jpg

இவை எல்லாவற்றையும்விட ஒன்று நடந்தது.  சினிமாவில் இருந்து வந்தவர் என்பதால் தன் மீது மீடியா வெளிச்சம் இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்பது ஜெயலலிதாவின் விருப்பம். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த பிறகும் சினிமாவில் கிடைத்த அளவுக்கு மீடியாவின் பார்வை தன் மேல் குவியவில்லை என ஜெயலலிதா நினைத்தார். அதற்குக் காரணம் எம்.ஜி.ஆர் என்றுகூட நினைத்தார். அப்படிப்பட்ட சூழலில்தான், நடராஜனின் தயவு அவருக்குத் தேவைப்பட்டது. அண்ணா, ராஜ்ய சபா எம்.பி-யாக இருந்த காலத்தில் அவருக்கு நாடாளுமன்ற ராஜ்ய சபாவில் 185-வது எண் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. அதே இருக்கைதான் ஜெயலலிதாவுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. இது ஏதேச்சையாக நடந்த விஷயம். ஆனால், ஊதிப் பெரிதாக்கினார்கள். ‘அண்ணா இருக்கையில் ஜெயலலிதா’ என செய்திகளை வரவழைத்தார் நடராஜன். டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்புகள் ஏற்பாடு செய்தது வரையில் நடராஜனின் கரம் விரிவடைந்தது.

நடராஜனின் மீடியா உதவி, வீடியோ கவரேஜ், கேசட் விடு தூது, பெங்களூரு மருத்துமனையில் ஜெயலலிதாவுக்கு நலம் விசாரிப்பு எல்லாம் சேர்ந்து ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம் பிடித்தார் சசிகலா. பிரேமாவின் இடத்தையும் பிடித்தார்.

-அடுத்த இதழில்...

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 6 - வேவும் காய் நகர்த்தலும்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

 

p34a.jpg

‘பூவே உனக்காக’ படத்தில் ஒரு காட்சி. ஹீரோ விஜய்க்கு திருமணம் ஆகிவிட்டதாகப் பொய் சொல்லி அதை நம்பவைக்க மனைவியிடம் இருந்து கடிதம் வருவதுபோல போலியாகக் கடிதம் எழுதுவார் சார்லி. அப்படி அவரே எழுதிய கடிதத்தைப் படிப்பார். ‘‘அன்புள்ள அத்தானுக்கு உங்கள் ஆசை நிம்மி எழுதிக்கொள்வது. இங்கு நான் நலம். அதுபோல் நீங்கள் மற்றும் உங்கள் உயிர் நண்பர் `உத்தமர்’ கோபி நலமா? அத்தான் உங்களுக்கு ஒன்று தெரியுமா? அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, அதிலும் கோபி போன்ற ஒரு தெய்வப்பிறவி உங்களுக்கு நண்பராய் கிடைத்தது மிக மிக அரிது’’ என சார்லி படித்துக்கொண்டே போக... ‘‘என்னடா இது.... அவன் பொண்டாட்டி.... இவனைப் புகழ்ந்து எழுதியிருக்கா?’’ என மீசை முருகேசன் கேள்வி எழுப்புவார். இந்தக் கேள்வியைத்தான் அ.தி.மு.க-வினர் பலரும் எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

p34.jpg

ஜெயலலிதா இறந்தபோது அவருக்குக் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள், ஃப்ளெக்ஸ்கள் முளைப்பதற்குப் பதிலாக சசிகலாவின் படங்கள்தான் எங்கும் பளிச்சிட்டன. ஜெயலலிதாவுக்குப் புகழஞ்சலி செய்வதற்குப் பதிலாக, சசிகலாவுக்குப் பாதாஞ்சலி நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ‘உத்தமர் கோபி நலமா?’ என மாறியவர்களை விடுங்கள். அந்த இடத்துக்கு வந்த சசிகலா செய்த தியாகங்களைப் பார்ப்போம்.

ஜெயலலிதாவைக் கட்சிக்குள் கொண்டுவந்தபிறகு அம்மு மீது அதிக அக்கறை எடுத்துக்கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, கொள்கைப்பரப்புச் செயலாளர் ஆன பிறகு, அவரின் வெளியூர் சுற்றுப்பயணத்துக்கு முக்கியத்துவம் தரச்சொல்லி அப்போது கடலூர் கலெக்டராக இருந்த சந்திரலேகாவிடம் எம்.ஜி.ஆர் அறிவுறுத்தியிருந்தார். அதன்பிறகுதான் நடராஜன், சசிகலா தொடர்புகள் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டன. அந்தக் காலகட்டத்தில் தனக்கு மிகவும் நெருக்கமாக இருந்த பத்திரிகையாளர் சோலையிடம், ‘‘அம்முவுக்குத் துணையாக நம்பிக்கைக்குரிய ஒருவரை வைக்க வேண்டும். யாரை அனுப்பி வைக்கலாம்?’’ எனக் கேட்டார் எம்.ஜி.ஆர்.  சசிகலா உட்பட பலருடைய பெயர்கள் அடிபட்டன. அப்போது, டி.ஜி.பி-யாக இருந்த மோகன்தாஸிடம் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. அடுத்து சசிகலா பற்றி உளவுத்துறை விசாரிக்க ஆரம்பித்தது. ரிப்போர்ட் நல்லவிதமாக வந்தது.

போலீஸ் அதிகாரி தனுஷ் என்பவர்தான் இதுபற்றி நடராஜனிடம் பேசியிருக்கிறார். அதே நேரம் ஜெயலலிதாவிடம் கருத்துக் கேட்டிருக்கிறார்கள். இரண்டும் ஒரே நேர்க்கோட்டில் வந்ததால் சசிகலா ஓகே செய்யப்பட்டார். பத்திரிகைகளில் கவரேஜ் கொடுத்தது, வீடியோ கேசட், நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு வந்து உதவியது என எல்லாம் சேர்ந்து சசிகலா மீது ஜெயலலிதாவுக்கு மதிப்பு கூடியிருந்தது. அதனால், ‘‘சசிகலா என்றால் ஓகேதான்’’ என்றார் ஜெயலலிதா. 

p34b1.jpg

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சசிகலா என்கிற இந்த முக்கோணத்துக்குப் பின்னால், ஓர் அரசியல் உண்டு என்ற பேச்சும் இருக்கிறது. ‘அடுத்த வாரிசு’ என்கிற அங்கீகாரம் பாக்யராஜுக்குக் கிடைத்தப் பிறகு தனக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என எம்.ஜி.ஆரை ஜெயலலிதா நச்சரிக்கத் தொடங்கிய காலம் அது. அதனால், ஜெயலலிதாவைக் கண்காணிக்க நினைத்தார் எம்.ஜி.ஆர் அதற்காக சசிகலாவைப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துதான் இப்படியொரு பிளான் போட்டார் என்று இன்னொரு கோணமும் சொல்லப்படுகிறது. ஜெயலலிதா அருகிலேயே ஓர் ஒற்றர் இருந்தால் நல்லது என்று கணக்குப் போட்டுதான் சசிகலா தேர்வை எம்.ஜி.ஆர். நடத்தினார். நடராஜன் ஏற்கெனவே அரசு வேலையில் இருக்கிறார். அவர் மனைவி சசிகலா, ஜெயலலிதா அருகில் இருந்தால் அது நமக்கு வசதி என முடிவு செய்துதான் சசிகலாவை ஜெயலலிதாவுக்குத் துணையாக நியமித்தார்கள். ‘அங்கே என்ன நடக்கிறது... யார் யார் வந்து போகிறார்கள் என்கிற விவரத்தை எல்லாம் தெரிவிக்க வேண்டும்’ என்ற நிபந்தனையை ஏற்றுக்கொண்டனர்  சசிகலா தம்பதியினர்.

அரசு வேலையில் இருப்பதால் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு கட்டுப்பட்டுத்தான் இருக்க வேண்டும்... அதை மீற முடியாது என்பது நடராஜனுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், ஜெயலலிதாவின் பொதுக்கூட்ட கவரேஜ் அசைன்மென்டை பார்த்த மாத்திரத்திலேயே எம்.ஜி.ஆருக்கு அடுத்த இடத்தில் ஜெயலலிதாதான் வருவார் என கணித்தார் நடராஜன். நிகழ்காலத்தில்  எம்.ஜி.ஆருக்கும் எதிர்காலத்துகாக ஜெயலலிதாவுக்கும் வேலைகளைப் பார்த்தார்கள் நடராஜனும் சசிகலாவும். போயஸ் கார்டனுக்குள் அவ்வப்போது போய்வந்துகொண்டிருந்த சசிகலா, ஒரு கட்டத்தில் அங்கேயே நிரந்தரமாகத் தங்கத் தொடங்கினார்.

அடுத்த இதழில்...

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 7 - களையெடுத்தல்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

 

1984-ம் ஆண்டு ஜூலை மாதம் புதுக்கோட்டை திலகர் திடலில் அ.தி.மு.க பொதுக்கூட்டம். ஜெயலலிதாதான் சிறப்புப் பேச்சாளர். ‘‘அரசியலே ஒரு நாடகம். அதில் கருணாநிதி சிரிப்பு நடிகர். பாலையாவையே மிஞ்சிவிட்டார். வில்லன் நடிப்பில் நம்பியாரை மிஞ்சிவிட்டார். கோபாலபுரத்தில் இருந்து கோர்ட் வரையில் கருணாநிதி நடத்திய நாடகத்தை மக்கள் மறக்க மாட்டார்கள். காகிதப்பூ கதாநாயகன் வீரம் வெறும் வாய் வீரம்தான்’’ என கருணாநிதியை ஜெயலலிதா சகட்டுமேனிக்குத் திட்டியது எல்லாம் பத்திரிகைகளில் கொட்டை எழுத்துகளில் வந்தது. உபயம், எம்.நடராஜன்.

p30b.jpg

இப்படி கவரேஜ் ஒரு பக்கம் போய் கொண்டிருக்க, ஜெயலலிதாவை வேவு பார்க்கச் சொன்ன எம்.ஜி.ஆரின் கட்டளையை நிறைவேற்ற ஆரம்பித்திருந்தார்கள் சசிகலாவும் நடராஜனும். அதே நேரத்தில் தனது எதிர்காலத்துக்கும் கட்டளைகளை போயஸ் கார்டனில் புகுத்தினார் சசிகலா. அதில், போயஸ் கார்டனில் அதுவரை பணியில் இருந்தவர்கள் எல்லாம் பந்தாடப்பட்டார்கள். காரணம், தன்னைத் தவிர மற்ற யாரும் ஜெயலலிதாவை நெருங்கிவிடக் கூடாது என்பதில் சசிகலா உஷாராகவே இருந்தார். அதுதான், அப்போலோ ஆஸ்பிட்டல் வரையில் தொடர்ந்தது.

கட்சி அலுவலகத்திலும் போயஸ் கார்டனிலும் வருவதும் போவதுமாக இருந்த சசிகலா, போயஸ் கார்டனிலேயே ஒரு நாள் இரண்டு நாள் எனத் தங்க ஆரம்பித்தார். அது ஒரு வாரம், மாதம் என மாறி, நிரந்தமாகிப் போனது. அதுவரையில் வீட்டில் வேலைபார்த்து வந்தவர்களை நம்பிவந்த ஜெயலலிதா, சசிகலாவையும் நம்பினார். இந்த நம்பிக்கை எங்கே தொடங்கியது என்பதற்கான ஆணிவேர் மட்டுமல்ல, சல்லி வேர்கூட இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. சசிகலாவின் என்ட்ரிக்கு முன்பே அங்கே வேலை செய்தவர்கள் சகஜமாக வேதா இல்லத்தில் வலம்வந்து கொண்டிருந்தனர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்களின் சுதந்திரத்துக்கும் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கும் வேட்டு வைக்கப்பட்டது. ஜெயலலிதாவோடு நெருங்கமாக இருந்தவர்கள் எல்லாம் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி துடைத்தெறியப்பட்டார்கள். அந்தக் காரணத்துக்குக்(!) காரணகர்த்தா சசிகலாதான்! அதில் ஒரு சாம்பிள் இது.

p30c.jpgஜெயலலிதாவின் அம்மா சந்தியா காலத்தில் இருந்தே வேலை பார்த்து வந்தார் மாதவன் நாயர். அவருடைய பணி ஜெயலலிதா காலத்திலும் தொடர்ந்தது. போயஸ் கார்டனின் மேனேஜர். வரவு செலவுகளையும் மாதவன் நாயர்தான் பார்த்து வந்தார். அவரின் தலைதான் முதலில் உருண்டது. பண விஷயத்தில் நேர்மையானவர் என்ற பெயர் அவருக்கு உண்டு. திடீரென்று அவருடைய பேங்க் அக்கவுன்டில் 36 ஆயிரம் ரூபாய் இருந்தது. அது அவர் நேர்மையாகச் சேர்த்தப் பணம். விவகாரத்தை ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டுபோனார் சசிகலா. ‘‘பணத்தைச் சுருட்டிவிட்டார்’’ என்ற அவப்பெயர் மாதவன் நாயர் மீது சுமத்தப்பட்டது. விசாரணை எதுவும் நடைபெறவில்லை. பணம் வந்த வழியை எல்லாம் ஜெயலலிதா கேட்கவில்லை. 23 ஆண்டுகள் வேலை பார்த்த மாதவன் நாயர், 36 ஆயிரம் ரூபாய்க்காக வெளியேற்றப்பட்டார்.

ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்தவர் ஜெயமணி. சேடப்பட்டி முத்தையாவின் சிபாரிசு. அவர்மீது ‘ஒற்றன்’ பட்டம் சூட்டப்பட்டது. எம்.ஜி.ஆர் - ஜானகி அம்மாள் - ஜெயலலிதா என முக்கோணப் பிரச்னை அப்போது பிணைந்துக் கிடந்தது. இதில் மூவருக்கும் இடையே பனிப்போர் நடந்துகொண்டிருந்தது. ‘‘கார்டன் செய்திகள் ராமாவரம் தோட்டத்துக்குக் கடத்தப்படுகின்றன. உளவுப் பார்க்க சேடப்பட்டி முத்தையாவால் அனுப்பப்பட்ட ஆள்தான் ஜெயமணி’’ என உளவாளிகளே உச்சரித்தார்கள். அடுத்து ஜெயமணிக்கு மங்களம் பாடப்பட்டது. அண்ணாதுரை புது டிரைவர் ஆனார். அண்ணாதுரை மட்டுமல்ல, அப்படி நியமிக்கப்பட்ட மற்ற பணியாளர்களும் சசிகலா - நடராசன் ஆட்கள்தான்.

ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்தவர் கவிஞர் எஸ்.ரவிராஜ். இவருடைய கவிதைகளை எல்லாம் ஜெயலலிதாவே பாராட்டியிருக்கிறார். ‘என் கணவர் எனக்காக வேண்டுகிறார். நான் சுமங்கலியாகத்தான் சுடுகாடு போக வேண்டுமாம்’ என்ற அவரின் கவிதையை நினைவில்வைத்து மற்றவர்களிடம் சிலாகித்துப் பேசியிருக்கிறார் ஜெயலலிதா.  இவர் சசிகலாவுக்கு உறவுக்காரரும்கூட. ஆனால் அவரும் விரட்டப்பட்டார்.

p30.jpg

‘‘ஜெயலலிதாவுக்கு ஒரு நாயைவிட அதிக விசுவாசமாக இருந்தவர் மாதவன் நாயர். 23 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவின் மேலாளராக இருந்தவர். சசிகலாவின் வருகையால் முதன்முதலில் பாதிக்கப்பட்டவர் மாதவன் நாயர்தான்’’ எனச் சொல்லியிருக்கிறார் மறைந்த எழுத்தாளர் ‘வார்த்தை சித்தர்’ வலம்புரி ஜான்.

ஜெயலலிதாவின் எழுத்துத் தாகத்துக்கு உதவியவர் வலம்புரி ஜான். எழுதத் தூண்டியதோடு அவரின் எழுத்துக்களை எல்லாம் பத்திரிகைகளில் வரவைத்தார். அவருக்குத் தேவையான புத்தகங்களை எல்லாம் வாங்கிக்கொடுத்தவர். ஏன், ஜெயலலிதாவுக்கே அறிக்கை எழுதிக் கொடுத்தவர். அவருக்கு நேர்ந்த கதி என்ன?

அடுத்த இதழில்...

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 8 - வஞ்சிக்கப்பட்ட வலம்புரி ஜான்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

 

லம்புரி ஜான், எம்.ஜி.ஆருக்கு மிக நெருக்கமாக இருந்தார். ‘‘அம்முவுக்குத் தேவையான உதவிகளை செய்து கொடுங்கள்’’ என்று சொன்னதால் ஜெயலலிதாவுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொண்டிருந்தார் வலம்புரி ஜான். ஆங்கிலத்தில் புலமை, எழுத்தாற்றல், பேச்சாற்றல் எனப் பன்முகத் திறமை கொண்டவர் வலம்புரி ஜான். தி.மு.க, ‘குங்குமம்’ பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்தபோது அதற்குப் போட்டியாக ‘தாய்’ பத்திரிகையை நடத்தினார் எம்.ஜி.ஆர். அவரின் வளர்ப்பு மகன் அப்பு என்கிற ரவீந்திரன் பொறுப்பில் ‘தாய்’ வெளிவந்து கொண்டிருந்தது. அதன் ஆசிரியராக இருந்தார் வலம்புரி ஜான்.

‘தாய்’ பொங்கல் மலரில் எம்.ஜி.ஆரும் ஜானகி அம்மாளும் சேர்ந்திருக்கும் பழைய சினிமா ஸ்டில் ஒன்று அட்டைப் படமாக வெளியானது. இதைப் போடச் சொன்னவர் அப்பு. உடனே வலம்புரி ஜானுக்கு ஜெயலலிதாவிடம் இருந்து ஓலை. அந்தப் படத்தைப் போட்டதற்காக அவரிடம் சண்டை போட்டார். ‘‘அப்புதான் தாயின் பதிப்பாளர். அவர் சொன்னதை நான் மறுக்க முடியாது’’ என வலம்புரி ஜான் விளக்கம் கொடுத்திருக்கிறார். ஜானகி அம்மாளுடன் எம்.ஜி.ஆர் ஏேதா சண்டை போட்டிருக்கிறார். அதனால், சில நாட்கள் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லை. அவர்களை சமாதானம் செய்வதற்காக நிகழ்ந்த ஏற்பாடுதான் இது.

p20b.jpg

அப்போது அமைச்சராத இருந்த ஆர்.எம்.வீரப்பன், வலம்புரி ஜானுக்கு மிகவும் பழக்கம். ‘‘ஜெயலலிதா, இந்த அளவு உங்கள் மீது கோபப்படுவதற்கு காரணம் யார் என்பது போகப் போக உங்களுக்குத் தெரிய வரும்’’ என பொடி வைத்திருக்கிறார் ஆர்.எம்.வீரப்பன்.

ஜெயலலிதாவின் கோபத்திலிருந்து தப்பிக்க நினைத்த வலம்புரி ஜான், நூலகத்தில் புத்தகத்தைப் புரட்டுவது போன்ற படத்தை ஜெயலலிதாவிடம் வாங்கி ‘தாய்’ பத்திரிகையில் போட்டார். என்ன நேரமோ, அந்தப் படம் அச்சில் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை. சில நாட்கள் கழித்து வலம்புரி ஜானிடம் பேசிய p20a.jpgஆர்.எம்.வீரப்பன்,  ‘‘எம்.ஜி.ஆர் - ஜானகி அம்மாள் படம் போட்டதற்காக ஜெயலலிதாவிடம் கோள்மூட்டியவர்களை கண்டுபிடித்து விட்டீர்களா? இப்போது ஜெயலலிதாவின் படத்தை ஒழுங்காகப் பிரசுரிக்க வில்லை என உங்களுக்கு எதிராக வேட்டு வைக்கப்படுகிறது. அதாவது தெரியுமா?’’ எனச் சொல்லிவிட்டு ‘‘சசிகலா - நடராஜன் இருவரும்தான்’’ எனச் சொன்னார். இதைக் குறிப்பிடும் வலம்புரி ஜான், ‘‘பல சந்தர்ப்பங்களில் ஜெயலலிதா வெறும் அம்பாகத்தான் பயன்பட்டிருக்கிறார். அவரைப் பயன்படுத்தி பழிதீர்த்துக் கொண்டவர் நடராஜன்தான்’’ என எழுதியிருக்கிறார்.

இப்படித்தான் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு வந்தனர்.  போயஸ் கார்டன் வீட்டில் இருந்தவர்களை வெளியேற்றுகிற வேலையை சசிகலாவும், அரசியலில் இருந்தவர்களை முடக்கும் பணியை நடராஜனும் செய்தார்கள்.

ஜெயலலிதா ஒரு முறை அமெரிக்கா போனார். வெளிநாடு போவதாக இருந்தால் ‘எதற்காகப் போகிறேன்’ என்கிற தகவலை வருமான வரித் துறையிடம் தெரிவிக்க வேண்டும். ‘சிகிச்சைக்காகப் போகிறேன்’ என ஜெயலலிதா கடிதம் கொடுத்திருந்தார். இதை வைத்து ‘முரசொலி’யில் ஜெ. உடல்நிலைப்பற்றி கட்டுரை வெளியானது. அந்தக் கட்டுரையை பொய்யாக்கும் வேலைகள் நடந்தன. வருமான வரித் துறை அதிகாரி ஒருவர், ஃபைலில் இருந்து `சிகிச்சைக்காகச் செல்கிறேன்’ என இருந்த அந்தக் கடிதத்தை எடுத்து ஜெயலலிதாவிடம் கொடுத்தார். ‘வருமான வரித்துறை அதிகாரியே இதை தன்னிச்சையாக செய்திருக்க முடியாது. இதற்கு ஏதோ பின்னணி இருக்கிறது’ என எம்.ஜி.ஆர் சந்தேகப்பட்டார். ஜெயலலிதாவை உளவு பார்க்க அனுப்பப்பட்ட சசிகலாவிடமே இதைக் கேட்டார். ‘‘கடிதத்தை எடுக்கச் சொன்னது ஜெயலலிதாதான்’’ என்றார் சசிகலா. சில நாட்கள் கழித்து வலம்புரி ஜானை அழைத்து, ‘‘வருமான வரித் துறை கடிதத்தை நான்தான் எடுக்கச் சொன்னேன் என எம்.ஜி.ஆரிடம் ஏன் சொன்னீர்கள்?’’ எனக் கேட்டிருக்கிறார் ஜெயலலிதா. இந்த விவகாரமே வலம்புரி ஜானுக்கு தெரியாது. இந்தப் பழியைத் தூக்கிப்போட்டது சசிகலாதான் என பிறகு தெரிந்துகொண்டார்.

p20.jpg

‘‘நடராஜனின் பிடியில் இருந்து தப்புவதற்கு ஜெயலலிதா பலமுறை முயற்சி செய்தார். ஆனால், ஒவ்வொரு முயற்சிக்குப் பிறகும் நடராஜனின் பிடியே இறுகியது. ‘ஜெயலலிதாவுக்கு ஆபத்து’ என்று அடித்துச் சொல்லி, நடராஜன் அற்புதமாக இந்த அடிமைப்பெண்ணை ஒரு நிரந்தரக் கைதியாகவே ஆக்கிவிட்டார். தனக்கு எதிராக ஜெயலலிதா செயல்பட்ட ஒவ்வொரு முறையும், ஒரு செயற்கையான சிக்கலை நடராஜன்  அவருக்கு உண்டாக்குவார். உடனே ஜெயலலிதா ‘ஆபத்பாந்தவா அநாத ரட்சகா’ என்று நடராஜனின் அரசியல் பிடிக்குள் அடைக்கலம் ஆவார்’’ எனச் சொல்கிறார் வலம்புரி ஜான்.

- அடுத்த இதழில்

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 10 - காணாமல் போன லீலா!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

 

34p5.jpg

ஜெயலலிதாவை கட்சியில் சேர்த்த எம்.ஜி.ஆர் சில காலத்துக்குள்ளேயே ஜெயலலிதாவின் மீது சந்தேகத்தைக் குவித்தார். ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக முடிவு செய்தார். கட்சியில் சேர்ந்த பிறகு தனக்கான ஓர் இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என ஜெயலலிதா ‘மூவ்’ நடத்திக்கொண்டிருந்தார். ஜெயலலிதா பங்கேற்ற பொதுக்கூட்டங்களில் எல்லாம் கட்சியினர் திரண்டார்கள். இதெல்லாம் சேர்ந்து, ‘தனக்கு ஆபத்தாக ஜெயலலிதா வந்துவிடுவாரோ’ என்ற சந்தேகத்தை எம்ஜி.ஆருக்கு ஏற்படுத்தியது. அதன் விளைவு... கண்காணிப்பு ஏற்பாட்டை செய்தார் எம்.ஜி.ஆர்.

34p1.jpg

ஒரு பெண்ணைப் பயன்படுத்தி மற்றொரு பெண்ணை உளவுபார்த்தார். சசிகலாவும், ஜெயலலிதாவும்தான் அந்த இரண்டு பெண்கள். அன்றைக்கு இருந்த சசிகலா, எம்.ஜி.ஆர் ஆளா? ஜெயலலிதா ஆளா? இந்த சந்தேகம் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்தவர்களுக்கு ஏற்பட்டது. ‘‘சசிகலா எம்.ஜி.ஆர். ஆளா? ஜெயலலிதா ஆளா? சசிகலா, எம்.ஜி.ஆர் ஆளும் அல்ல, ஜெயலலிதாவின் ஆளும் அல்ல. சசிகலா, சசிகலாவின் ஆள். இதை தமிழ்நாடு ஒருநாள் உணரும். அப்பொழுதுகூட ஜெயலலிதா உணர மாட்டார்’’ என நக்கீரனில் எழுதிய ‘வணக்கம்’ தொடரில் குறிப்பிட்டிருக்கிறார் வலம்புரி ஜான். ஜெயலலிதா பற்றிய தகவல்களை எம்.ஜி.ஆரிடம் சொல்லி வந்தார் சசிகலா. இ்தற்காகவே எம்.ஜி.ஆரிடம் சில காரியங்களை சாதித்தார்.34p4.jpg

எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் செய்தித்துறை அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். அவர் அ.தி.மு.க-வில் ஜெயலலிதாவின் வருகையை கொஞ்சமும் ரசிக்கவில்லை. சசிகலாவின் கணவர் நடராசன் அந்தக் காலகட்டத்தில் அரசு மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஜெயலலிதாவுக்குப் பக்கத்தில் சசிகலா இருந்தார். அந்த ஜெயலலிதாவுக்கு உதவக்கூடியவராக வலம்புரி ஜான் இருந்தார். அந்த வலம்புரி ஜான், ஆர்.எம்.வீரப்பனுக்கு நெருக்கமாக இருந்தார். இப்படியான சங்கிலித் தொடர் நட்பில் நடராசன் கோரிக்கை ஒன்றை வலம்புரி ஜானிடம் வைத்தார். அரசு மக்கள் தொடர்பு அதிகாரியான தனக்கு பதவி உயர்வு வேண்டுமென தனது துறை அமைச்சரான ஆர்.எம்.வீரப்பனிடம் சிபாரிசு செய்யுங்கள் என வலம்புரி ஜானிடம் கேட்டார். இதுபற்றிக் குறிப்பிடும் வலம்புரி ஜான், ‘‘ஜெயலலிதாவையும், அவர் உடனிருக்கும் சசிகலாவையும் அவரது கணவர் நடராசனையும் பிடிக்காத ஆர்.எம்.வீரப்பன், நடராசனுக்கு உதவவில்லை. இந்தப் பின்னணிதான் என்னை விரட்டி அடிக்கக் காரணம்’’ என்கிறார். எம்.ஜி.ஆரிடமும் ஜெயலலிதாவிடமும் செல்வாக்கோடு இருந்த வலம்புரி ஜானுக்கே இந்த நிலை என்றால் மற்றவர்களின் நிலை எப்படி இருந்திருக்கும் என சொல்லத் தேவையில்லை.

34p2.jpg

ஜெயலலிதாவின் ஆரம்பகாலத் தோழி லீலா. ஜெயலலிதாவிடம் நெருங்கிப் பேசக்கூடியவர்களில் லீலாவும் ஒருவர். ஆல் இந்தியா ரேடியோவில் பணியாற்றிக் கொண்டிருந்தார். சசிகலா போயஸ் கார்டனை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்த நேரத்தில், வழக்கம்போலவே அங்கே போனார் லீலா. ஆனால் அங்கே அவருக்குப் பழைய மரியாதை கிடைக்கவில்லை. தோட்டக்கலை தொடர்பான புத்தகங்களை லீலாவிடம் கேட்டிருந்தார் ஜெயலலிதா. அவற்றை லீலாவும் அனுப்பியிருந்தார். ஆனால் அதன்பின் அதுபற்றி எந்தத் தகவலையும் ஜெயலலிதா சொல்லவில்லை என்பதால் கார்டனுக்குப் போனார். ‘‘மேடம் வரச் 34p3.jpgசொல்லியிருந்தார்கள்’’ என சொல்லியிருக்கிறார். ‘‘காத்திருங்கள்’’ என பதில் வந்தது. மூன்று மணி நேரத்துக்கும் மேலாக கார்டன் ரிசப்ஷனில் காத்திருந்தும் அவருக்கு ஜெயலலிதாவைச் சந்திக்கும் வாய்ப்பு வாய்க்கவில்லை. கடைசியாக, ‘‘அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. அவர் இன்று யாரையும் பார்க்க மாட்டார். பிறகு வாருங்கள்’’ எனச் சொல்லி அவரை சசிகலா அனுப்பிவைத்தார். ‘‘அவர்தான் என்னை வரச் சொல்லியிருந்தார்’’ என லீலா சொன்னது எடுபடவில்லை. ஆனால் அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த ஜெயலலிதாவுக்காக காத்திருந்த வலம்புரி ஜான் மட்டும் கிளம்பவில்லை. சசிகலா போனபிறகு தனக்கு வேண்டப்பட்ட லீலாவிடம் ‘‘என்னம்மா ஆச்சு’’ என கேட்டிருக்கிறார் வலம்புரி ஜான். விரக்தியாக சிரித்துவிட்டுப் போனார் லீலா. அதன்பிறகு அவரால் கார்டன் பக்கமே தலை வைக்க முடியவில்லை. லீலா வந்து போன தகவல் ஜெயலலிதாவிடம் எப்படிச் சொல்லப்பட்டிருக்கும் என சொல்லத் தேவையில்லை.

தோட்டக்கலை தொடர்பான புத்தகங்களையும், அவற்றை எழுதிய கிருஷ்ணமூர்த்தி என்பவரையும் ஜெயலலிதாவுக்கு பிறகு சசிகலா அறிமுகம் செய்து வைத்தார். ‘தோட்டக்கலை பற்றிய செய்திகளை ஜெயலலிதாவுக்கு சொல்வதாக இருந்தாலும் தனக்கு வேண்டப்பட்ட கிருஷ்ணமூர்த்தி மட்டுமே சொல்ல வேண்டும். தனக்கு வேண்டப்பட்டவர் மட்டும்தான் ஜெயலலிதாவின் பக்கத்தில் போக முடியும் என சசிகலா போட்ட கணக்கில் காணாமல் போனார் லீலா. அன்றைக்கு சசிகலா போட்ட கணக்கு ஜெயலலிதா மறைவு வரை தொடர்ந்தது.

- அடுத்த இதழில்

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 11 - தீபாவுக்கு வைத்த செக்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

எஸ்.ஏ.எம். பரக்கத் அலி

 

‘வேதா நிலையம், எண் 36, போயஸ் கார்டன், சென்னை-86’ என்கிற ஜெயலலிதாவின் வீட்டு முகவரியில் முழுமையாகக் குடிபுகுவதற்கு முன்பு ஆழ்வார்பேட்டை பீமண்ண கார்டன் தெருவில்தான் சசிகலா வசித்து வந்தார். அந்தத் தெருவின் ஒரு முனையில் சசிகலாவின் வீடும் இன்னொரு முனையில் ‘வினோத் வீடியோ விஷ’னும் இருந்தன. ஆழ்வார்பேட்டை வீட்டிலிருந்து போயஸ் கார்டனுக்கு ஆட்டோ ரிக்‌ஷாவில்தான் ஆரம்பத்தில் வருவார் சசிகலா. அந்த ஆட்டோ ரிக்‌ஷாவுக்கான கட்டணம் ஐந்து ரூபாயை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தின் மேனேஜர் துரையும் கேஷியர் சாமிநாதனும்தான் சசிகலாவுக்குக் கொடுப்பார்கள் என்று சொல்கிறார்கள்.

வீடியோ கடை நடத்தி வந்த சசிகலா, ஜெயலலிதாவின் பொதுக்கூட்டங்களை வீடியோ கவரேஜ் எடுக்க நினைத்தபோது, அதற்கு உதவியவர்களில் துரையும் ஒருவர். ஜெயலலிதாவை முதன்முறையாக சந்திப்பதற்கு முன்பு துரையைத்தான் சசிகலா முதலில் போய்ப் பார்த்தார். சசிகலாவை ஜெயலலிதாவிடம் அறிமுகம் செய்துவைத்த துரையும் களையெடுப்பில் தப்பவில்லை. துரையும் கேஷியர் சாமிநாதனும் ஆடிட்டர் சுந்தரேசனும் சசிகலா வருகைக்குப்பின் தாக்குப்பிடிக்க முடியவில்லை. மன்னார்குடியினர் செய்த மாயத்தில் எம்.ஜி.ஆரின் அபிமானத்தைப் பெற்றவர்கள் எல்லாம் பந்தாடப்பட்டார்கள். ‘எதிர்காலத்தில் எதிரியாவார்கள்’ என யார் மீதெல்லாம் சந்தேகம் எழுந்ததோ, அவர்கள் எல்லாம் தூக்கியடிக்கப்பட்டனர். இப்படி ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்ட காலகட்டத்தில் அடுத்த இலக்கு, ஜெயலலிதாவின் ரத்த உறவுகள்.

p22.jpg

ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டனில்தான், அவர் அண்ணன் ஜெயக்குமார் மனைவி விஜயலட்சுமியோடு வாழ்ந்து வந்தார். அங்கேதான் அவர்களின் மகள் தீபா பிறந்தார். அண்ணன் மகள் தீபாவுக்கு அந்தப் பெயரை வைத்தவரே ஜெயலலிதாதான். மூன்று வயது வரையில் அங்கேதான் தீபா வளர்ந்தார். ஜெயக்குமாருக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டன. இதனால் அங்கிருந்து ராயப்பேட்டைக்கு ஜெயக்குமாரின் குடும்பம் குடிபெயர்ந்தது. ஆனாலும் அவர்களோடு அடிக்கடி போனில் ஜெயலலிதா பேசி வந்தார். ‘போயஸ் கார்டனில் பிறந்தவர்’ என்பதால் தீபா மீது ஜெயலலிதாவுக்குப் பாசம் அதிகம். அதனால் அவரின் வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டினார். தீபாவின் பிறந்தநாளுக்குப் பரிசுகள் கொடுப்பார். புத்தகங்கள் எல்லாம் வாங்கித் தந்திருக்கிறார். போயஸ் கார்டனுக்கு எப்போது வேண்டுமானாலும் போய் வந்துகொண்டிருந்தார் தீபா. அவர் கார்டனுக்கு வருவதும், செக்யூரிட்டிகள் கேள்வி எதுவும் கேட்காமல் உள்ளே அனுப்புவதும் சகஜமாக நடந்து கொண்டிருந்தன. அந்த அளவுக்கு கார்டனில் செல்லப்பிள்ளையாக இருந்தார் தீபா.

p22a.jpgகார்டனை விட்டுப் போனாலும் அண்ணன் ஜெயக்குமார் குடும்பத்தினர் மீது ஜெயலலிதா அக்கறை காட்டி வந்தார் என்பதற்கு சாம்பிள் இந்த சம்பவம்... வெயிட் லிஃப்ட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஜெயக்குமாருக்கு எலும்பு முறிந்துவிட்டது. விஷயத்தைக் கேள்விப்பட்ட ஜெயலலிதா, உடனே டாக்டர் சொக்கலிங்கத்துக்கு போன் செய்து அண்ணன் ஜெயக்குமாரை பார்க்கச் சொன்னார். தொடர்ச்சியாக விசாரித்துக்கொண்டிருந்தார். இதன்பிறகு அண்ணன் குடும்பத்துக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே திரை போடப்பட்டது. என்னதான் நடந்தது? தீபாவே அதை விவரிக்கிறார்...

‘‘1995-ம் ஆண்டு செப்டம்பரில் வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன் திருமணம் நடந்தது. அக்டோபரில் அப்பா ஜெயக்குமார் இறந்து போனார். அதன்பிறகு கொஞ்சம் மாற்றங்கள் ஏற்பட்டன. நாங்கள் இருப்பது யாருக்குப் பிரச்னை எனத் தெரியவில்லை. வழக்கம் போல கார்டனுக்குள் போய் வர முடியவில்லை. 2002-ம் ஆண்டுதான் கடைசியாக அத்தையைப் பார்த்தேன். அதன்பிறகு அந்த ரோட்டுப் பக்கம்கூடப் போக முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக எங்களை சிலர் ஒதுக்க ஆரம்பித்தார்கள். அப்போது நான் சின்னப் பெண் என்பதால் அதையெல்லாம் புரிந்துகொள்ளத் தெரியவில்லை. கடைசியாக அத்தையைப் பார்க்கப் போனபோது, ‘தீபா இங்கே வந்தால் என்னிடம் முதலில் தகவல் தெரிவிக்க வேண்டும்’ என அங்கே இருந்த பணியாளர்களிடம் அத்தை சொன்னார். ஆனால், அதன்பிறகு பல முறை அங்கே போனபோது விரட்டியடிக்கப்பட்டோம். நாங்கள் வந்து போன தகவலைக்கூட அத்தையிடம் சொல்லவில்லை’’ என்கிறார் தீபா.

அந்த தீபாதான் ஜெயலலிதாவின் கடைசி தினங்களில் அப்போலோ முதல் ராஜாஜி ஹால் வரை விரட்டியடிக்கப்பட்டவர். அந்த தீபா வீட்டுக்கு தினமும் தொண்டர்கள் திரண்டு வருகிறார்கள். எதிர்காலத்தைக் கணித்து காய் நகர்த்தும் வித்தை சசிகலாவுக்கு கைவந்த செயல். 

- அடுத்த இதழில்

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 12 - அப்போலோ to ராஜாஜி ஹால் அரண்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

எஸ்.ஏ.எம். பரக்கத் அலி

 

ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா, போயஸ் கார்டனைவிட்டுப் போனபிறகு இதழியல் படிப்பை முடித்து வெளிநாட்டில் அந்தப் படிப்பு தொடர்பான பயிற்சிகளில் பங்கேற்று வந்தார். ஆனாலும் அத்தையுடனான தொடர்பில் எந்த பங்கமும் ஏற்படவில்லை. வழக்கம் போல கார்டனுக்கு வந்து போய்க்கொண்டிருந்த தீபாவை மன்னார்குடி குடும்பம் ரசிக்கவில்லை. ஜெயலலிதாவோடு அவர் நெருக்கம் ஆகிவிடக்கூடாது என்பதில் உஷாராக இருந்தார்கள்.

அப்படி என்ன சசிகலாவுக்கு தீபா மீது கோபம்? அதுபற்றி தீபாவே சொல்கிறார்... ‘‘அவங்களுக்கும் எனக்கும் வாக்குவாதங்கள் நடக்கும். ‘அத்தை உன் மேல கோபமாக இருக்காங்க... இங்கே வர வேண்டாம்’ என்றெல்லாம் சசிகலா சொன்னபோது அவரிடம் நான் சண்டை போட்டிருக்கிறேன். இதுதான் அவர் மனசுல இருந்திருக்கும். ‘நீ இங்க வர்றது அவங்களுக்குப் பிடிக்கல’ என் பல தடவை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். ‘இதை அத்தை என்னிடம் சொல்லட்டும்’ என நானும் பலமுறை சொல்லிவிட்டேன். அத்தை அப்படி ஒருமுறைகூட சொன்னதே இல்லை. அப்படிச் சொல்லியிருந்தால் அதற்கு ஆதாரம் வேண்டும். எதை வைத்து இதை நம்புவது? அத்தை நேரடியாகச் சொல்லியிருந்தால் மட்டுமே நம்ப முடியும். பலமுறை அத்தை என்னை அழைத்து வரச் சொல்லியிருக்கிறார். ‘தீபா அங்கே இல்லை. அவரிடம் இருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லை’ என்றெல்லாம் அவர்கள் பொய் சொல்லியிருக்கிறார்கள். எல்லாமே அத்தையிடம் நான் நெருங்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான்’’ என்கிறார் தீபா.

p20.jpg

ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் சந்திக்க பலமுறை முயன்று தோற்றுப் போனார் தீபா. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா இருந்தபோதும் அவரைப் பார்க்கப் போனார் தீபா. அங்கேயும் அத்தையை அவரால் பார்க்க முடியவில்லை. சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த ஜெயலலிதா போயஸ் கார்டனுக்குத் திரும்பியபோது, போயஸ் கார்டன் ரோட்டில் தொண்டர்களோடு ஒருவராக தீபா நின்றிருந்தார். அப்போதும் அவரை கார்டனுக்குள் அனுமதிக்கவில்லை. இது அப்போலோ வரையில் தொடர்ந்தது.

அப்போலோவில் அவரைப் பார்க்க பெரிய போராட்டமே நடத்தினார் தீபா. ஆனால், அவரை அப்போலோ வாசலிலேயே தடுத்து நிறுத்தினார்கள். மற்ற வி.ஐ.பி-கள் எல்லாம் இரண்டாவது மாடி வரை போக முடிந்தபோது, மெயின் கேட்டைக்கூட தீபாவால் தாண்ட முடியவில்லை. ஜெயலலிதா இறந்தபிறகும்கூட இது தொடர்ந்தது. போயஸ் கார்டனில் காத்திருந்தார். ஜெயலலிதாவின் உடல் அங்கே வந்தபோதும் பார்க்கவிடாமல் தடுக்கப்பட்டார். அதிகாலை வரை போயஸ் கார்டனில் காத்திருந்துவிட்டு, ராஜாஜி ஹாலுக்குப் போன தீபாவுக்கு அங்கேயும் தடைகள்.

p20a.jpg‘‘அத்தையின் உடல் போயஸ் கார்டனுக்கு வந்தபிறகு அப்போலோவில் இருந்து கார்டனுக்குப் போனேன். அங்கே நள்ளிரவு 12.30 மணியில் இருந்து அதிகாலை 6 மணி வரையில் ரோட்டில்தான் நின்றுகொண்டிருந்தேன். அத்தையைப் பார்க்கவிடவில்லை. அதன்பிறகு ராஜாஜி ஹாலுக்குப் போய் போராடினேன். அனுமதி தரவேயில்லை. ‘அத்தை முகத்தைக் கடைசியாகப் பார்க்க அனுமதியுங்கள்’ என கெஞ்சியும் போராடியும் அழுத பிறகுதான் அஞ்சலி செலுத்த முடிந்தது. அப்போலோவில் அத்தையைப் பார்க்கவிடாமல் தடுத்தார்கள். அதைவிட ராஜாஜி ஹாலில் மோசமாக நடந்துகொண்டார்கள். ஒருவர் இறந்தபிறகு அவரைப் பார்க்கவிடாமல் கடைசி நேரம் வரையில் இப்படி நடந்து கொண்டவர்கள் மனசாட்சியே இல்லாதவர்கள். இது மனிதர்கள் செய்யும் வேலையே இல்லை. அத்தை இருந்தபோது அவரை வைத்து பாலிடிக்ஸ் செய்தீர்கள்! உயிருடன் இல்லாதபோது அவரைக் கடைசியாகப் பார்க்கக்கூட விடாமல் தடுத்தது ஏன்? இதில் அவர்களுக்கு என்ன பிரச்னை? போயஸ் கார்டன் வீட்டில் பிறந்து அவரால் பெயர் வைக்கப்பட்ட நான், அத்தையிடம் கடைசியாக ஒரு முறை பேசிவிட முடியாதா என துடித்தேன். உறவினர் என்ற முறையில் அத்தையைப் பார்க்க என்னை அனுமதித்திருக்க வேண்டும். அந்த விருப்பத்தைக்கூட நிறைவேற்ற முடியாமல் தடுத்தார்கள். வலுக்கட்டயமாக வெளியேற்றியது எல்லாம் தவறு’’ என்கிறார் தீபா.

‘‘அப்போலோவில் ஜெயலலிதா அட்மிட் ஆனபிறகுதான் தீபாவைப் பற்றி பலருக்கும் தெரியும். அதற்கு முன்பு தீபா எங்கே போனார்’’ என கேள்வி எழுப்பப்படுகிறது. அதற்கு முன்பே தீபா முயற்சிசெய்து கொண்டுதான் இருந்தார். ஆனால் அது செய்தியாக மாறவில்லை. எல்லாம் போயஸ் கார்டன் வாசலுக்குள்ளேயே முடிந்து விட்டதால் வெளியே தெரியவில்லை.

ராஜாஜி ஹாலில் போராடி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார் தீபா. ஆனால், ஜெயலலிதாவின் உடல் அருகில்கூட தீபாவை நிற்கவிடாமல் பார்த்துக்கொண்டார்கள்.

- தொடரும்...

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 13 - தீபா திருமணம்... திடுக் திருப்பம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

எஸ்.ஏ.எம். பரக்கத்அலி

 

p18b.jpgஜெயலலிதாவோடு தொடர்பில் இருந்த காலத்தில், போயஸ் கார்டனுக்கு சகஜமாக வந்து போய்க்கொண்டிருந்தார் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா. ஜெயலலிதாவின் நிகழ்ச்சிகளில் எல்லாம் சசிகலாவுக்கு நிகராக தீபாவும் பங்கேற்றுக் கொண்டிருந்தார். 1991 - 1996 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தீபா செல்வாக்கோடு வலம்வந்தார். அப்போது நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் தீபாவும் கலந்துகொண்டார். ஜெயலலிதாவின் இருக்கைக்குப் பின்னால் சசிகலாவுக்கு நிகராக தீபாவும் அமர்ந்திருந்தார். இந்த அளவுக்கு தீபா நெருங்கியது, மன்னார்குடியினர் வயிற்றில் புளியைக் கரைத்தது. தீபாவை விரட்டியடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். கார்டனுக்கு வந்துபோய்க்கொண்டிருந்த தீபாவை ஏதாவது ஒரு காரணம் சொல்லி கத்தரிக்க நினைத்தார்கள். ஆரம்பத்தில் கொஞ்ச காலம் கார்டனுக்குள் அனுமதிக்கப்பட்டார். கொஞ்ச காலம் அங்கே காத்திருக்க மட்டும் அனுமதித்தார்கள். ஒரு கட்டத்தில் அவரால் வேதா இல்லத்தின் பிரமாண்ட கேட்டைத் தாண்டி உள்ளே நுழைய முடியாமல் போனது. அதன்பிறகு போயஸ் கார்டன் ரோடு பக்கமே தீபாவால் போக முடியவில்லை.

p18a.jpg

தீபாவின் திருமணத்தில் நடந்த திருப்பங்களைப் பார்ப்போம். ஜெயலலிதாவின் விருப்பம் மற்றும் தேதி எல்லாம் கேட்டுதான் தீபாவின் திருமணத்துக்கு நாள் குறித்தார், அவரின் தாய் விஜயலட்சுமி. அந்தத் தேதி, 2012 நவம்பர் 11. பல ஆண்டுகளுக்கு முன்பே ஜெயக்குமார் இறந்துவிட்டதால் திருமண ஏற்பாடுகளை விஜயலட்சுமியும் அவர் உறவினர்களும் சேர்ந்து செய்திருந்தார்கள். ஜெயலலிதா அண்ணனின் திருமணத்துக்குப் பிறகு, பல வருடங்கள் கழித்து அவரது ரத்த உறவில் நடக்கும் சுபநிகழ்வு, தீபாவின் திருமணம். அதனால் திருமண ஏற்பாடுகளைப் பார்த்துப் பார்த்து செய்தார்கள். திருமணம் நடந்த நேரத்திலேயே விஜயலட்சுமி உடல்நலக் குறைவோடுதான் இருந்தார். சக்கர நாற்காலியில் வந்துதான் அவரால் திருமணத்தில் கலந்துகொள்ள முடிந்தது. தீபாவுக்கும் மாதவனுக்கும் திருமணம் என முடிவு செய்து, ஜெயலலிதாவுக்கும் தெரிவிக்கப்பட்டது. திருமணத்தில் ஜெயலலிதா பங்கேற்க வேண்டும் என விஜயலட்சுமி ரொம்பவே விரும்பினார். அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்ததால், அவருக்கு வசதியாகத் திருமணத் தேதியை முடிவு செய்திருந்தார்கள். ‘‘நான் நேரில் வந்து வாழ்த்துகிறேன்’’ என வாக்குறுதியும் கொடுத்திருந்தார் ஜெயலலிதா.

p18.jpg

முந்தைய நாள் மாலையில் நிச்சயதார்த்தமும் அடுத்த நாள் காலையில் திருமணமும் நடந்தன. தன்னுடைய ‘ஆசை அத்தை வந்து ஆசீர்வதிப்பார்’ என மாலைகளோடு மணமகள் தீபா காத்திருந்தார். அவர் p18c.jpgமட்டும் அல்ல, திருமணத்துக்கு வந்த உறவுகள் எல்லோரின் எதிர்பார்ப்பும் அதுதான். அதுவரையில் ஜெயலலிதாவைச் சந்திக்க முடியாமல் இருந்த உறவினர்கள் பலரும், இந்தத் திருமண நிகழ்வில் அவரைப் பார்க்கலாம், பேசிக் கொள்ளலாம் என நினைத்தார்கள்.

அப்படி அவர்கள் சந்தித்துக் கொண்டால் மன்னார்குடி குடும்பத்துக்குச் சிக்கல் வந்துவிடுமே. என்னதான் நடந்தது? ‘அந்த உறவுகள் இணைந்துவிடக் கூடாது’ என்பதில் அக்கறை கொண்டவர்கள், ஜெயலலிதாவைத் தடுத்து நிறுத்திவிட்டார்கள். இத்தனைக்கும் ஜெயலலிதா திருமணத்துக்கு வருவதற்காக எல்லா ஏற்பாடுகளும் நடந்தன. பாதுகாப்பு தொடர்பாக உறவினர்களிடம் போலீஸ் அதிகாரிகள் பேசியிருந்தார்கள். போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதா புறப்படுவதற்கான கான்வாயும் ரெடியாக இருந்தது. அத்தை வருகைக்காக தீபாவின் கண்கள் மண்டப வாசலைப் பார்த்துக்கொண்டே இருந்தன. கடைசி நேரத்தில் அத்தனையும் பொய்த்துப் போயின. ‘‘முதல்வர் வரவில்லை’’ என தகவல்கள் சொல்லப்பட... சுற்றமும் நட்பும் அட்சதை தூவ, தீபாவின் திருமணம் முடிந்தது. ஜெயலலிதாவின் விருப்பத்தைக் கேட்டுத்தான் திருமணத்தை முடிவு செய்தார்கள், தேதியும் குறித்தார்கள், ஜெயலலிதா வருவதாக வாக்குறுதியும் கொடுத்தார், வருவதற்கான ஏற்பாடுகளும் நடந்தன. கடைசி நேரத்தில் என்ன நடந்திருக்கும் என்பது யூகிக்காமலே எவருக்கும் புரியும்.

p18e.jpg

‘‘தீபா எங்கள் வீட்டுப் பெண்’’ என்கிறார் நடராசன். தீபாவின் அத்தை ஜெயலலிதாவை திருமணத்துக்கு அழைத்து வராமல் யார் தடுத்தார்கள்? திருமணத்துக்கு ஜெயலலிதா வராமல் போனாலும், புதுமணத் தம்பதியை கார்டனுக்கு அழைத்து ஜெயலலிதா வாழ்த்துவார் என எதிர்பார்த்தார்கள். அதுகூட நடக்கவில்லை. இந்தத் திருமணம் பற்றி தீபா என்ன சொல்கிறார்? ‘‘வருவதாகத்தான் இருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதிகாரிகள் எல்லாம் வந்திருந்தார்கள். ஆனால், கடைசி நிமிடத்தில் அவர் மைண்ட் சேஞ்ச் ஆகியிருக்கிறது. அதனால் வரவில்லை. அதன்பிறகு 20 நாட்களிலேயே  உடல்நிலை மோசமாகி என் அம்மா இறந்துவிட்டார். அம்மா இறந்த தகவல்கூட அத்தைக்குப் போய்ச் சேரவில்லை’’ என்கிறார்.

திருமணத்துக்குத்தான் வரவில்லை... அண்ணி விஜயலட்சுமியின் இறப்புக்குக்கூட ஜெயலலிதா வரவில்லை. நல்ல விசேஷங்களுக்குக்கூட போகாமல் இருக்கலாம். துக்கத்துக்குக்கூட எட்டிப்பார்க்காமல் இருக்க என்ன காரணம்? நுண்ணரசியல்.

(தொடரும்...)

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 14 - புரொப்பரைட்டர் சசிகலா!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

எஸ்.ஏ.எம்.பரக்கத்அலி

 

p16aa.jpgஜெயலலிதாவுக்கும் தீபாவுக்கும் இடையே சந்திப்பு நடக்காமல் பார்த்துக் கொண்டது மன்னார்குடி. அது தீபாவின் கல்யாணம் தொடங்கி அப்போலோ வரை தொடர்ந்தது. ‘‘எங்கள் சந்திப்பு நடந்துவிடாமல் சசிகலா தடுத்தார்’’ எனச் சொல்லும் தீபா, அதுபற்றி விரிவாகவே பேசினார்.

‘‘1996-ம் ஆண்டு அத்தை கைது செய்யப்பட்டு சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் போய் அவரைப் பார்த்தேன். அப்போது நான் சின்னப் பெண். ‘எப்படி இருக்கீங்க அத்தை’ எனக் கேட்டேன். ‘நல்லா இருக்கேன். நீ இங்கே எல்லாம் வரக்கூடாது’னு சொல்லி என்னை அனுப்பி வைத்தார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அத்தை அடைக்கப்பட்டிருந்த நேரத்தில்கூட போய்ப் பார்க்க முயன்றேன். அவர் ஜாமீனில் வந்தபோது கார்டனில் தொண்டர்களோடு கலந்து நின்றேன். அவரை நேரில் சந்திக்க முயன்று தோற்றுப் போனேன். நூற்றுக்கணக்கில் கடிதங்களும் ஃபேக்ஸ்களும் அனுப்பியும், எதுவுமே அத்தையின் கைகளுக்குப் போய்ச் சேரவில்லை. எந்த நிலையிலும் அத்தையை எப்படியாவது சந்தித்துவிட முடியாதா எனத் தொடர்ந்து முயன்றேன். முடியவில்லை. ‘அத்தையை சந்திக்கவிடாமல் ஏன் தடுக்கிறார்கள்?’ என்பதுதான் புரியவில்லை. என்னைப் பற்றியும் எங்கள் குடும்பத்தைப் பற்றியும் அத்தையிடம் தவறாகச் சொல்லி நெகட்டிவான செய்திகளைப் பரப்பி, ரத்த பந்தங்களிடையே பிரிவை ஏற்படுத்திவிட்டார்கள். அத்தையை சந்திக்க முயன்றால் ‘உங்களை மேடத்துக்குப் பிடிக்கவில்லை. சொந்த பந்தமே வேண்டாம் என்கிறார்’ எனச் சொல்லி அனுப்பிவிடுகிறார்கள். ஆனால் அத்தை அப்படி நடப்பவர் இல்லை என்பது எனக்குத் தெரியும். நாங்கள் வந்தால் யாருக்காவது பாதிப்பு வரும் என நினைக்கிறார்கள் போல. நான் கார்டனுக்கு வந்து போன காலத்தில்கூட அவர்கள் அங்கே இருந்தார்கள். அவர்களை எந்த நேரத்திலும் நாங்கள் வெளியே போகச் சொல்லவில்லையே! ரத்த உறவுகளான எங்களை மட்டுமே சந்திக்கவிடாமல் தடுப்பது எதற்காக என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. நாங்கள் உள்ளே வந்தால் அவர்களின் ரிலேஷன் கட்டாகிவிடும் என நினைக்கிறார்கள். அவர்கள் மட்டுமே பக்கத்தில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். சோல் புரொப்பரைட்டர் மாதிரி தனி உரிமையாளராக இருக்க விரும்புகிறார்கள். அதற்கு முட்டுக் கட்டைகள் விழுந்துவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். பத்து வருடங்களுக்கும் மேலாக அவரை சந்திக்க முயன்று கடைசியில் அவரின் உடலைத்தான் பார்க்க முடிந்தது. அப்போலோவில் பார்க்க முயன்ற நேரத்தில், இப்போதுதான் அத்தையை சந்திக்க முயன்றதாக ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். ‘உனக்குப் பெயர் வைத்ததே நான்தான்’ என அத்தை என்னிடம் சொல்லியிருக்கிறார். அந்த அளவுக்கு நான் அத்தையின் செல்லமாக இருந்தேன். அத்தையின் பாசத்துக்காகத்தான் ஏங்கினேன்’’ என்கிறார் தீபா.

p16.jpg

அந்த ஏக்கம்தான் தீபாவிடம் கவிதைகளாய் கொட்டியது.

சின்னச் சின்ன ஞாபகங்கள்
சின்னவள் என் சிந்தையிலே!
அத்தை என்று உன்னை அழைக்க
அமுதூறுது என் நாவிலே!
வண்ண வண்ணப் பூங்காவில்
அத்தை மடி மெத்தையிலே


‘இளவேனில் பூக்கள்’ என்கிற தீபாவின் கவிதைத் தொகுப்பில் ‘அத்தை மடி மெத்தையடி’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட முதல் கவிதை இதுதான்.

‘அரசன் அன்று ஆட்சி புரிந்தான். அரசியல் மட்டும்தான் நடந்தது; அக்கிரமக்காரன் இன்று ஆட்சி புரிகின்றான் அரசாங்கமே சீர்குலைந்தது! வெள்ளைக்காரன் அன்று கோட்டையில் நுழைந்தான். எல்லையற்ற துன்பம் நிகழ்ந்தது. கொள்ளைக்காரன் இன்று கோட்டையில் நுழைந்தான். கொடுமைகள் கொடிகட்டிப் பறக்கிறது’ என பல வருடங்களுக்கு முன்பே தீபா எழுதியிருக்கிறார். அவர் யாரை மனதில் வைத்து எழுதினார் எனத் தெரியவில்லை. ஆனால் அது மறைமுகமாக மன்னார்குடியினரைதான் சுட்டிக் காட்டுகிறது. ‘இன்னும் எத்தனை காலங்கள் இறைவா இந்த வேதனைகள். இந்த பூலோகச் சிறையை திறந்துவிடு, என்னை பூமித்தாய் மடியில் உறங்கவிடு. பொறுத்தேன் பொறுத்தேன் பல நாட்கள். பொறுக்காது, இன்னும் சில நாட்கள்! விதியே எனக்கு விடை கொடு, விடுதலை காண வழிகொடு’ என அந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார் தீபா.

p16b.jpg

p16a.jpg

‘‘நர்சுகளோடு பந்து விளையாடினார்... கிச்சடி சாப்பிட்டார்’’ என ஜெயலலிதாவைப் பற்றி தினமும் திரைக்கதை எழுதியவர்கள், அப்போலோவில் இருந்து ஒரு போட்டோவையாவது வெளியிட்டார்களா? ‘‘புகைப்படம் வெளியிடுங்கள்’’ என்று தமிழகமே வைத்த கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை சசிகலா. ‘‘முதல்வர் விரைவில் வீடு திரும்புவார்’’ என கடைசி நாள் வரையில் சொல்லிவிட்டு சடலத்தைத்தானே காட்டினார்கள். நம்பிக்கையை விதைக்காமல் போனதால்தானே அ.தி.மு.க.வினர் எல்லோரும் தீபாவின் வீட்டு வாசலில் காத்துக்கிடக்கிறார்கள். சசிகலா வசிக்கும் போயஸ் கார்டன் வீட்டுக்குக்கூட திரளாத கட்சியினர், தி.நகர் சிவஞானம் தெருவில் இருக்கும் தீபாவின் வீட்டுக்குப் படையெடுக்கின்றனர். ஆளும் கட்சித் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சசிகலாவைக்கூட ஆரம்பத்தில் சில நாட்கள்தான் கட்சி நிர்வாகிகள் பார்த்தனர். ஆனால் எந்த ஒரு நிர்வாகத்திலும் இல்லாத தீபாவைப் பார்க்க தொண்டர்கள் தினமும் ஜெ ஜெ என குவிகிறார்கள். தி.நகர் சிவஞானம் தெருவை போயஸ் கார்டனாக மாற்றிய பெருமை சசிகலாவைத்தான் சேரும்.

(தொடரும்...)

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 15 - “ஜெயலலிதாவுக்கு ஒரு பெண்ணால் ஆபத்து!”

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி, படம்: சு.குமரேசன்

 

‘ராஜீவ் காந்தி உயிருக்கு ஆபத்து இருக்கிறது. மரணம் அவரை நெருங்கிக் கொண்டிருக்கிறது!’ - ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டுக்கு ராஜீவ் காந்தி பலியாவதற்கு சரியாக ஒரு மாதம் முன்பு இப்படிச் சொன்னவர் ஜோதிடர் லட்சுமண்தாஸ் மதன்.

p16s.jpg‘பாபாஜி’ என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்த ஜோதிடர் லட்சுமண்தாஸ் மதன், பிரபலமான ஆங்கிலப் பத்திரிைககளில் எழுதி வந்தார். ‘ஆந்திராவில் என்.டி.ராமாராவ் இந்தத் தேதியில் ஆட்சியைப் பிடிப்பார். இத்தனை மணிக்குப் பதவி ஏற்பார்’ என்பதையெல்லாம் தேர்தலுக்கு முன்பே கணித்த கில்லாடி, லட்சுமண்தாஸ் மதன். இந்தியா முழுவதும் இருக்கும் பிரபல அரசியல்வாதிகள் எல்லாம் அவரிடம் ஆலோசனைக் கேட்டு வந்தார்கள். முன்னாள் பிரதமர் சந்திரசேகர், முன்னாள் மத்திய அமைச்சர்கள் அர்ஜுன்சிங், வாழப்பாடி ராமமூர்த்தி என அவரிடம் ஜோதிடம் பார்த்த வி.ஐ.பி-க்கள் பட்டியல், டெலிபோன் டைரக்டரியைப் போன்றது. அந்த வகையில் வலம்புரி ஜானும் லட்சுமண்தாஸ் மதனுக்குப் பழக்கம்.

ஜோதிடத்தில் அதிக நம்பிக்கைக் கொண்ட ஜெயலலிதா, தன் ஜாதகத்தின் சாதக பாதக பலன்களை அறிந்து கொள்ள விரும்பினார். அதற்கு வலம்புரி ஜானின் உதவியை நாடினார். வலம்புரி ஜானும் ஜெயலலிதாவும் எம்.ஜிஆரால் நாடாளுமன்ற ராஜ்ய சபாவுக்கு அனுப்பப்பட்டிருந்தக் காலம் அது. இன்னும் சொல்லப்போனால் ஜெயலலிதாவுக்கு உதவிகள் செய்வதற்காக எம்.ஜிஆரால் பணிக்கப்பட்டவர்தான் வலம்புரி ஜான். ஒருமுறை வலம்புரி ஜானிடம் ஜெயலலிதா பேசிக் கொண்டிருந்தபோது, ஜாதகம் பக்கம் பேச்சுப் போனது. பல ஜோதிடர்கள் பற்றி விவாதம் போய்க் கொண்டிருந்த நிலையில் தனது ஜாதகத்தை வலம்புரி ஜானிடம் தந்து, ‘‘இந்தியாவில் தலைசிறந்த ஜோதிடரிடம் பலன் கேட்டுத் தாருங்கள்’’ எனச் சொன்னார் ஜெயலலிதா. ‘பலன் சரியாக சொல்லப்படுகிறதா’ என்பதை அறிந்துகொள்வதற்காக ‘ஜெயலலிதா’ என்கிற பெயருக்குப் பதிலாக வேறு பெயரை எழுதி வலம்புரி ஜானிடம் தன் ஜாதகத்தைக் கொடுத்திருந்தார் ஜெயலலிதா.

p16.jpg

அந்த ஜாதகத்தை லட்சுமண்தாஸ் மதனிடம் காட்டினார் வலம்புரி ஜான். ‘ஜெயலலிதாவின் ஜாதகம் இது’ என தெரிந்துகொள்ளாமலேயே ஜாதகக் கட்டங்களை எல்லாம் அலசி ஆராய்ந்து மனதில் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார் லட்சுமண்தாஸ் மதன். ஜெயலலிதாவின் கலை உலகம், அரசியல் வாழ்க்கை ஆகியவற்றைத் துல்லியமாகச் சொன்னார். அதன்பிறகுதான் ‘‘இந்த ஜாதகக்காரர் இப்போது எம்.பி.-யாக இருக்கிறார்” என்ற தகவலை வலம்புரி ஜான் சொன்னார். அப்போது லட்சுமண்தாஸ் மதன் சொன்ன விஷயங்கள் இவை:

dot.png எம்.பி பதவியை விடவும் பெரிய பதவிக்கு ஜெயலலிதா வருவார்.

dot.png ஜெயலலிதாவுக்கு ஒரு பெண்ணால் ஆபத்து உண்டு.

dot.png எந்த அளவுக்கு ஜெயலலிதா புகழோடு இருக்கிறாரோ, அந்த அளவுக்கு மக்கள் அவரைத் தூற்றுவார்கள்.

dot.png மயக்கம் தரும் போதைப் பொருட்களைப் பொறுத்தமட்டில் ஜெயலலிதா எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

லட்சுமண்தாஸ் மதன் சொன்னதை அப்படியே ஜெயலலிதாவின் காதில் போட்டார் வலம்புரி ஜான். இந்தச் சம்பவங்கள் எல்லாம் 1985-1986 காலகட்டத்தில் நடந்தவை. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவோடு வலம்புரி ஜானுக்கு மோதல் ஏற்பட்டது. ஜெயலலிதாவின் ஆட்சியை விமர்சித்து ‘வணக்கம்’ என்ற பெயரில் தொடர் ஒன்றை எழுதினார். அதில், இந்த விஷயங்கள் அனைத்தையும்  வலம்புரி  ஜான் குறிப்பிட்டிருக்கிறார்.

‘ஒரு பெண்ணால் ஜெயலலிதாவுக்கு ஆபத்து வரும்’ என லட்சுமண்தாஸ் மதன் கணித்ததைப் பார்த்து, ‘அந்தப் பெண் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள்தான்’ என ஜெயலலிதா நினைத்தார். ஜெயலலிதாவை அரசியலுக்குக் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்.தான். இது ஜானகி அம்மாளுக்குப் பிடிக்கவில்லை. அதனால் ஜானகி அம்மாளுக்கும் ஜெயலலிதாவுக்கு இடையே பனிப்போர் நடந்துகொண்டிருந்தது. எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு கட்சி இரண்டாக உடைந்த நேரத்தில்கூட அது ஜானகி அணி, ஜெயலலிதா அணிகளாகப் பிரிந்து கிடந்தது.

“ஜெயலலிதாவுக்கு ஜானகி அம்மாவால் எந்த ஆபத்தும் வரவில்லை. ஜெயலலிதாவுக்குக் கூடவே இருக்கிற ஒரு பெண்ணால் ஆபத்து உண்டு. அது எந்தப் பெண் என்பதை தமிழ்நாட்டில் ஆறாம் வகுப்பு சிறுவர்களும் அறிவார்கள்” என வலம்புரி ஜான் குறிப்பிடுகிறார். இப்படி, பல ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன வலம்புரி ஜான் இப்போது உயிருடன் இல்லை. ஜெயலலிதா மரணத்துக்கான பழியை சசிகலா தாங்கி நிற்கிறார். இதைப் பல ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன தீர்க்கதரிசி வலம்புரி ஜான்.

ஜெயலலிதாவைப் போலவே சசிகலாவுக்கும் ஜோதிடத்தில் நம்பிக்கை உண்டு. வடுகப்பட்டி தர்மராஜன்தான் அந்தக் காலகட்டத்தில் சசிகலாவுக்கு ஆஸ்தான ஜோதிடர். 20 ஆண்டுகளுக்கு முன்பு சசிகலாவின் ஜாதகத்தைக் கணித்த வடுகப்பட்டி தர்மராஜன் சொன்னது இதுதான்.

‘சசிகலா ஒரு காலத்தில் முதலமைச்சராகவும் ஆகிவிடுவார்...’

ஜோதிடம் பலிக்குமா?

(தொடரும்...)

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 16 - விரட்டப்பட்ட சட்ட மூளை!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

எஸ்.ஏ.எம்.பரக்கத்அலி, படம்: சு.குமரேசன்

 

p34b.jpgஎம்.ஜி.ஆரின் இறுதி ஆட்சிக் காலத்தில் நடந்த எரிசாராய ஊழல் கொந்தளிப்பை உண்டாக்கியது. இதனை விசாரிக்க மத்திய அரசு, ரே கமிஷனை அமைத்தது. அந்த கமிஷனில் எம்.ஜி.ஆர் சார்பாக ஆஜரானவர் கே.சுப்பிரமணியம். ஏற்கெனவே ஹண்டே தேர்தல் வழக்கு தொடர்பாக வாதாடியவர். அந்த கே.சுப்பிரமணியம், பிறகு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்.

நடராசனும் சுப்பிரமணியமும் தஞ்சை மாவட்டத்துக்காரர்கள். அதனால் சுப்பிரமணியத்தை நடராசனுக்கு தெரியும். ஜெயலலிதாவுக்கு வேண்டிய சட்ட உதவிகளை சுப்பிரமணியம்  செய்து வந்தார். ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் ரோட்டில்தான் சுப்பிரமணியத்தின் வீடு இருந்தது. ஆரம்பக் காலத்தில் நடராசனும் சசிகலாவும் இவர் வீட்டுக்கு ஸ்கூட்டரில் வருவார்கள். அப்போது வி.என்.சுதாகரன் சின்ன பையன். இவர், போயஸ் கார்டனில் இருந்து முக்கியமான பேப்பர்களை சைக்கிளில் அடிக்கடி எடுத்து வந்து சுப்பிரமணியத்திடம் கொடுத்துவிட்டுப் போவார்.  சில காலம் கழித்து சிவப்பு கலர் மாருதி காரில் நடராசனும் சசிகலாவும் வந்து போனார்கள். ஏன்... ஜெயலலிதாவே சுப்பிரமணியம் வீட்டுக்கு வந்து போயிருக்கிறார். ஒரு கட்டத்தில் உயில் ஒன்றை எழுதி அதை ‘நிறைவேற்றாளர்’ என்ற பொறுப்பில் கே.சுப்பிரமணியத்தை நியமித்ததாகவும் சொல்வார்கள். அந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராக மாறியிருந்தார்.

p34.jpg

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ‘ஜானகி அணி’, ‘ஜெ அணி’ என அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. இதனால், 1989 சட்டசபைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. தேர்தலில் ஜெயலலிதா அணி 27 இடங்களைப் பிடித்தது. ஜானகி அணிக்கு ஓர் இடம்தான் கிடைத்தது. இதனால் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க ஒன்றிணைந்தது. இரட்டை இலை சின்னம் மீண்டும் கிடைத்தது. அதை வாங்கிக் கொடுத்ததில் சுப்பிரமணியம் பெரிய பங்காற்றினார். அவருக்குத் தேவையான உதவிகளை நடராசனும் சசிகலாவும் செய்து கொடுத்தனர். ஜானகி அணியில் பொதுச்செயலாளராக இருந்த ராகவானந்தமும் ஜெயலலிதாவும் சேர்ந்து கையெழுத்துப் போட்ட மனுவை ரெடி செய்து,  அதைத் தேர்தல் கமிஷனிடம் கொடுத்தார் சுப்பிரமணியம். சட்டமன்றத் தேர்தல் முடிந்த ஒரு மாதத்திலேயே, மருங்காபுரி, மதுரை கிழக்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தத் தேர்தலுக்குள் இரட்டை சிலை சின்னத்தை வாங்கிவிட துரிதமாக வேலை பார்த்தார்கள். தேர்தல் கமிஷனில் ஆஜர் ஆவதற்காக சேடப்பட்டி முத்தையா, முன்னாள் எம்.எல்.ஏ மரூர் தர்மலிங்கம் உட்பட அ.தி.மு.க-வின் நிர்வாகிகள் பலரையும் டெல்லி அழைத்துச் சென்றார் சுப்பிரமணியம். பலருக்கும் அதுதான் முதல் விமானப் பயணம். டெல்லியில் இறங்கியபோது விமானத்தில் கோளாறு ஏற்பட, பலரும் உயிர் பயத்தில் உறைந்து போனார்கள். அந்த நிர்வாகிகளை ஒருவழியாக தேர்தல் கமிஷனின் முன்பு ஆஜர்படுத்தி சின்னத்தை வாங்கினார்கள். ‘‘ஒரு கட்சியின் சின்னம் என்பது குழந்தையைப் போல. அதை முடக்கிய நானே அதைத் திரும்பத் தருவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன். முடக்கப்பட்ட தேர்தல் சின்னம், மீண்டும் ஒன்றுபட்ட கட்சிக்குக் கிடைப்பது தேர்தல் கமிஷனின் வரலாற்றில் இது முதல்முறை’’ எனச் சொன்னார் அப்போது தலைமைத் தேர்தல் கமிஷனராக இருந்த பெரி சாஸ்திரி. அதன்பின் ‘அ.தி.மு.க-வின் சட்ட மூளை’ ஆனார் சுப்பிரமணியம்.

p34a.jpgஜெயலலிதா, 1991-ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தபோது சுப்பிரமணியம், அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். முதல்வராக இருந்த அந்தக் காலகட்டத்தில்தான் காவிரிக்காக கடற்கரையில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார் ஜெயலலிதா. அப்போது அது தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார் அவர். அவருக்கு உரிய மரியாதை தர வேண்டும் என தன் சகாக்களிடம் ஜெயலலிதா சொல்லியிருந்தார். அப்போதுதான் டான்சி நிலத்தை ஜெயலலிதா வாங்கினார். அது, அவரின் அரசியல் வாழ்க்கையில் புயலாக மாறியது. அந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதால் 2001 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது. ஆட்சியில் அமர்ந்தும் முதல்வர் பதவியை இழக்க நேரிட்டது. ‘டான்சி நிலத்தை வாங்க வேண்டாம்’ என சுப்பிரமணியம் அட்வைஸ்  செய்தார். அவர் ஜெயலலிதாவுக்கு ஆலோசனை சொல்வதை சசிகலா ரசிக்கவில்லை. சசிகலா பங்குதாரராக இருந்த ஜெயா பப்ளிகேஷன் நிறுவனம்தான் அந்த நிலத்தை வாங்கியது. ‘ஜெயலலிதாவுக்கு ஆலோசனை சொல்வதாக இருந்தாலும் பக்கத்தில் இருக்கிற மன்னார்குடியினர்தான் சொல்ல வேண்டும்’ என நினைத்தார்கள். விளைவு சுப்பிரமணியத்தை சீண்ட ஆரம்பித்தார்கள்.

சுப்பிரமணியம் போன்றவர்களின் கார்கள் மட்டுமே போயஸ் கார்டன் உள்ளே அனுமதிக்கப்படும். ஒரு சமயம் அவர் ஜெயலலிதாவைப் பார்க்கப் போனபோது, உள்ளே நிறுத்தப்பட்ட அவரின் காரை எடுத்து வெளியே விட்டார் டி.டி.வி.தினகரன். வெளியே வந்த சுப்பிரமணியம், காரைக் காணவில்லை எனத் தேடியிருக்கிறார். விஷயம் கேள்விப்பட்டு ஜெயலலிதா வெளியே வந்து விசாரித்தார். உடனே தினகரன், ‘‘உங்கள் பாதுகாப்பு கருதி காரை நான்தான் வெளியே விட்டேன்’’ எனச் சொன்னார். தினகரனைத் திட்டிய ஜெயலலிதா, ‘‘சாரிடம் மன்னிப்பு கேள்’’ எனச் சொல்ல, தினகரன் மன்னிப்பு கேட்டார். அதன்பிறகு அடுத்தடுத்து மன்னார்குடியினரின் அத்துமீறல்கள் தொடரவே, ஒதுங்கிப் போனார் கே.சுப்பிரமணியம்.

(தொடரும்)

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள்(நல்ல சக்தி ) எப்போதும் சில துரோகிகளை அரியணையில் ஏற்றி விட்டுக்கொண்டே 
இருக்கிறார் ..........
அவர்களை பார்த்து வாயூறி ... அடிப்படை மனித நேயம் மறந்து 
பின்னால் செல்ல சில மனிதர்களுக்கு போடப்படும் தூண்டில் 
இரையாக அது பள பளத்துக்கொண்டே இருக்கும்.

மாத்தையா ஒரு காலத்தில் வீரமிகு புலிகளை கட்டி ஆண்ட ஒருவர் ....
மாத்தையா குரூப் என்பது .... புலிகளின் இறுதி பலம் அதுதான் என்று கூட 
ஒரு காலத்தில் இருந்ததுண்டு அவரின் கீழ் இருந்த பல போராளிகள் 
தமிழ் ஈழம் என்ற இல்டசியம் தாண்டி .... புலிகளின் வளரச்சி என்பதுக்கவே இறந்தவர்கள் பலர். எல்லாவற்றையும் கண்ணால் கண்ட மாத்தையா 
இறுத்தியில் புலிகளையே போட்டுத்தள்ளலாம் என்று துணிந்து விடுகிறார்.
கிட்டுவின் இறப்பு ஒருபுறம் இருக்க .... அந்த காலத்தில் குட்டி சிறியின் இழப்பு என்பதும் அந்த கப்பலில் சென்ற அனைவருமே அந்த காலத்தில் கப்பல் போக்குவரத்தை கையாண்டு கொண்டு இருந்தவர்கள் .... அவர்கள் அனைவரின்  இழப்பும் ஈடுகொடுக்க முடியாத ஒன்றாகவே புலிகளுக்கு இருந்தது.

கருணா டக்ளஸ் போன்றவர்கள் மின்னுவதும் இப்படித்தான் ..
இறுதியில் ஒருநாள் சிங்களவன் போட்டு தள்ளிவிடுவான் .... வாழ்வுக்கு ஒரு நாள் மகிந்தவை பாடுவார்கள் ஆடசி கவுண்டால் ரணிலை பாடுவார்கள் 
விட்டுவைத்தால்தானே இந்த வில்லங்கம் என்று சிங்களவன் எண்ணும்போதுதான்  ............. எமக்கு புரியும் அது ஒரு இரையாக மின்னியது என்று. 

Link to comment
Share on other sites

சசிகலா ஜாதகம் - 17 - கார்டனில் ஜொலித்த ஜோதி!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

எஸ்.ஏ.எம்.பரக்கத்அலி

 

‘மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம்’ இனி ‘சசிகலா ஜாதகம்’ என உருமாறுகிறது. ‘‘மன்னார்குடியினர்னு இனி சொல்லாதீங்க...’’ என்ற மன்னை மக்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்கிறோம்!

p16a.jpg1996-ம் ஆண்டின் பிற்பகுதி. அமைதியாக இருந்தது போயஸ் கார்டன். வேதா நிலையத்தின் உள்ளே இருக்கும் மீட்டிங் ஹாலில் நீள்வட்ட டேபிளைச் சுற்றி 15-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் அமர்ந்திருக்கிறார்கள். டேபிள் முழுக்க கேஸ் கட்டுகள். சன்னமான குரலில் முணுமுணுத்தபடியே இருக்கும் வழக்கறிஞர்கள், அடிக்கடி வாசலை நோக்கிப் பார்வையைத் திருப்பியபடியே இருக்கிறார்கள். திடீரென கதவு திறக்க, உள்ளே நுழைகிறார் ஜெயலலிதா. அத்தனை பேரும் எழுந்து வணக்கம் வைக்கிறார்கள். நடுநாயகமான இருக்கையில் அமர்கிறார் ஜெயலலிதா.

வளர்ப்பு மகன் திருமணம், ஊழல்கள், வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் என 1991 - 1996 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அரங்கேறிய சம்பவங்கள், அரசியல் பக்கங்களின் முக்கியமான அத்தியாயங்கள். சுடுகாட்டுக் கூரை, கலர் டி.வி, செருப்பு, டான்சி, பிளசன்ட் ஸ்டே ஹோட்டல், நிலக்கரி இறக்குமதி, டிட்கோ-ஸ்பிக் பங்குகள், பிறந்த நாள் பரிசுகள், வருமானவரிக் கணக்கு, சொத்துக் குவிப்பு என வரிசையாக வழக்குகள் பாய்ந்தன. ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம்பெற்ற அத்தனை பேரும் இ.பி.கோ-வின் செக்‌ஷன்களைத் தாங்கி நின்றார்கள். அதற்காகவே ஆட்சியை இழந்து நின்றார் ஜெயலலிதா. ஆட்சியைப் பிடித்த கருணாநிதி, அ.தி.மு.க ஆட்சியின் ஊழல்களை விசாரிக்க, தனி நீதிமன்றம் அமைத்தார்.

p16b.jpgஇந்த வழக்குகளை எல்லாம் எப்படி சமாளிக்கலாம் என்பதற்காகத்தான் போயஸ் கார்டனில் வழக்கறிஞர்கள் கூட்டத்தைக் கூட்டியிருந்தார் ஜெயலலிதா. ஒவ்வொரு வழக்கறிஞரும், தங்களைப் பற்றியும் வழக்குகளைப் பற்றியும் ஒருசில வார்த்தைகள் பேசினர். அந்த வழக்கறிஞர்களுக்குத் தலைமை ஏற்றிருந்தவர் பி.ஹெச்.பாண்டியன். அவர் ஜெயலலிதாவுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தார். அறிமுகப் படலம் முடிந்தபிறகு, ‘‘யார் யார் என்னென்ன வழக்குகளை எடுத்துக்கொள்ளப் போகிறீர்கள் என்பதை ஆலோசித்துச் சொல்லுங்கள்’’ என்றார் ஜெயலலிதா.  

வழக்கறிஞர்கள் ஒவ்வொருவராக கருத்துகளை முன்வைத்தார்கள். மேஜையின் இன்னோர் ஓரத்தில் உட்கார்ந்திருந்த வழக்கறிஞர் ஒருவர், ‘‘சவாலான வழக்குகளைக் கையாளும் பிரபல வழக்கறிஞர்கள்கூட ஜெயிக்கக் கூடிய வழக்குகள் மீதுதான் கண் பதிப்பார்கள். இது சாதாரண வழக்கறிஞர்களுக்கும் பொருந்தும். அந்த வகையில், ஜெயிக்கக் கூடிய டான்சி வழக்கை நான் எடுத்துக்கொள்கிறேன்’’ என்றார். அத்தனை பேரின் பார்வையும் அவர் பக்கம் திரும்பியது. அந்த வழக்கறிஞர், என்.ஜோதி. ஜெயலலிதா ஆச்சர்யத்தோடு பார்த்தார். ‘‘அரசு நிலத்தை முதல்வரே வாங்கியதாகச் சொல்லி டான்சி வழக்கைப் போட்டிருக்கிறார்கள். இதை வைத்து என்னைத் தேர்தலில் நிற்கவிடாமல் தடுக்க முடியும் என தி.மு.க-வே நம்பிக் கொண்டிருக்கும் வழக்கு அது. அந்த வழக்கில் எப்படி ஜெயிக்க முடியும் என நம்புகிறீர்கள்?’’ எனக் கேட்டார் ஜெயலலிதா. ‘‘டான்சி வழக்கு ரொம்ப சிம்பிளான வழக்கு. நாம் ஜெயிப்பதற்கான நிறைய ஸ்கோப் இருக்கிறது’’ என அடித்துச் சொன்னார் ஜோதி. ‘‘எப்படிச் சொல்கிறீர்கள்’’ எனக் கேட்ட ஜெயலலிதா, தனது பக்கத்தில் இருந்த பி.ஹெச்.பாண்டியனை எழுப்பிவிட்டு அங்கே ஜோதியை அமர வைத்தார்.

p16.jpg

சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் அடங்கிய புத்தகம் ஒன்றைப் புரட்டிய ஜோதி, அதை ஜெயலலிதாவிடம் காட்டினார். ‘‘கேரளா பள்ளிக் கல்வித்துறை பள்ளிகளுக்கு சர்க்குலர் ஒன்றை அனுப்பி, ‘அனைத்துப் பள்ளிகளிலும் காலையில் தேசிய கீதம் கட்டாயம் பாட வேண்டும்’ எனச் சொன்னது. ஒரு பள்ளியில் இரண்டு மாணவர்கள் மட்டும் தேசிய கீதம் பாடப்பட்டபோது ஓரமாகப் போய் நின்று கொண்டார்கள். ‘ஜெகவோ மதத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் நாங்கள். தேவனை மட்டுமே வழிபடுவோம். தேசிய கீதத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், என் பிள்ளைகள் அதைப் பாட மாட்டார்கள். அது எங்கள் மதத்துக்கு எதிரானது’ என அந்த பிள்ளைகளின் தந்தை பிஜு இம்மானுவேல் பள்ளிக்குக் கடிதம் அனுப்பினார். அதைப் பள்ளி நிர்வாகம் ஏற்காமல், மாணவர்களைப் பள்ளியைவிட்டு நீக்கியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கேரளா அரசு வெற்றி பெற்றது. சுப்ரீம் கோர்ட்டில் பிஜு இம்மானுவேல் அப்பீல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘தேசிய கீதம் பாடம் வேண்டும் என கேரளா அரசு சொன்னது சட்டம் அல்ல. அது சுற்றறிக்கைதான். நன்னடத்தை விதி, சட்டம் ஆகாது’ என பிஜு இம்மானுவேலுக்குச் சாதகமாக 1986-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி தீர்ப்பளித்தது’’ எனச் சொல்லி முடித்த ஜோதி, ‘‘அரசு விற்பனை செய்யும் ஆவின் பாலை அரசு ஊழியர்கள் வாங்கக்கூடாது எனச் சொல்ல முடியுமா? அரசு நிலத்தை அரசு ஊழியர் வாங்கக் கூடாது என்பது நன்னடத்தை விதிதான். அது சட்டம் அல்ல. அதனால் டான்சி வழக்கில் நாம் ஜெயிக்க முடியும்’’ என்றார் ஜோதி.

அவர்தான் பிறகு ஜெயலலிதாவின் வழக்கறிஞராக மாறினார். டான்சி வழக்கை ஜெயித்துக் காட்டினார். இதனால் ஜெயலலிதாவுக்கு ரொம்பவே நெருக்கமாகிவிட்ட ஜோதியையும் விட்டுவைக்கவில்லை மன்னார்குடியினர்.

கார்டனில் ஜொலித்த ஜோதிக்கு என்ன நேர்ந்தது?

(தொடரும்)

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

சசிகலா ஜாதகம் - 18 - சசிகலாவைச் சிறைக்கு அனுப்பிய தினகரன்!

 

.தி.மு.க-வின் பொருளாளராக இருந்த டி.டி.வி.தினகரனின் பதவி பறிக்கப்பட்ட தினம், 2007 ஆகஸ்ட் 28-ம் தேதி. அ.தி.மு.க-வில் பதவி பறிப்பும் நியமனமும் வழக்கமான சம்பிரதாயம் என்பதால், தினகரனின் பொருளாளர் பதவியைப் பறித்துவிட்டு அதைப் பன்னீர்செல்வத்திடம் ஜெயலலிதா கொடுத்தபோதும் அப்படித்தான் பேசப்பட்டது. ‘தினகரனின் பதவியை ஜெயலலிதா எதற்காக காலி செய்தார்’ என்கிற விஷயம் ஒன்றரை ஆண்டுகள் கழித்துதான் வெளிச்சத்துக்கு வந்தது. எதற்காக நடந்தது அந்தப் பதவிப் பறிப்பு?

p24a.jpgசசிகலா குடும்பத்தில் இருந்து முதன்முறையாக ஜெயலலிதாவால், கட்சிக்கு அடையாளம் காட்டப்பட்டவர் தினகரன்தான். சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகன்தான் தினகரன். 1999 தேர்தலில்  பெரியகுளம் எம்.பி, ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலாளர், 2004 எம்.பி. தேர்தலில் பெரியகுளம் வேட்பாளர், தோற்றதுமே ராஜ்ய சபா எம்.பி., கட்சியின் பொருளாளர் என அ.தி.மு.க-வில் உச்சத்துக்குப் போனவர் தினகரன். அதனாலேயே அவர் பின்னால் கட்சிக்காரர்கள் திரண்டார்கள். அப்படி உயரத்துக்குப் போனவர் திடீரென கீழே சரிந்தார். இதற்குக் காரணம் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி.

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டிருந்தது. லண்டனில் தினகரன், ஹோட்டல் ஒன்றை வாங்கியதாகப் புகார் எழுந்தது. அந்த ஹோட்டல் வழக்கு கர்நாடகாவில்தான் நடைபெற்றுவந்தது. சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை அதிகாரி துக்கையாண்டியும் அரசு வழக்கறிஞரும் வெளிநாடுகளுக்குச் சென்று ஆவணங்களைத் திரட்டிவந்து, தனியாக லண்டன் ஹோட்டல் வழக்கு ஒன்றைப் போட்டார்கள். இதற்கு ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி எதிர்ப்பு தெரிவித்தார். ‘சொத்துக் குவிப்பு வழக்குப் புலன் விசாரணையின் தொடர்ச்சிதான் இது. தனியாக லண்டன் ஹோட்டல் வழக்கைப் போடக்கூடாது. இரண்டையும் ஒன்றாகத்தான் விசாரிக்க வேண்டும்’ என கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் மனு போட்டார் ஜோதி. இப்படி அவர் சொன்னதற்குப் பின்னால் ஒரு சூட்சுமம் உண்டு.

p24b.jpg

சொத்துக் குவிப்பு வழக்கு கிட்டத்தட்ட பாதி கிணறு தாண்டி, தீர்ப்பை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. 272 சாட்சிகள் விசாரிக்கப் பட்டிருந்தனர். இப்படிப்பட்ட நிலையில் லண்டன் ஹோட்டல் வழக்கையும் சொத்துக் குவிப்பு வழக்கோடு சேர்த்தால், மீண்டும் சாட்சிகள் விசாரணை நடைபெறும். பொதுவாக ஒரு வழக்கில் வேறொரு வழக்கை சேர்த்தாலோ, புதிதாக ஒன்றை இணைத்தாலோ அந்த வழக்கை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து விசாரிக்க வேண்டும் என்பது நடைமுறை. இந்த அடிப்படையில்தான் சொத்துக் குவிப்பை வழக்கை முதலில் இருந்து ஆரம்பிக்க பிளான் போட்டார் ஜோதி. போதாக்குறைக்கு லண்டன் ஹோட்டல் வழக்கில் இருக்கிற சாட்சிகள் எல்லாம் வெளிநாட்டில் இருப்பவர்கள். அவர்களை அவ்வளவு சீக்கிரம் இந்தியாவுக்கு அழைத்து வந்து சாட்சி சொல்ல வைக்க முடியாது. ‘லண்டன் ஹோட்டல் வழக்கையும் சொத்துக் குவிப்பு வழக்கோடு சேர்த்து விசாரிக்கச் சொல்லிவிட்டால், இன்னும் சில வருடங்களுக்கு வழக்கு விசாரணை போய்க்கொண்டிருக்கும். அதுவரையில் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் பிரச்னை ஏற்படாது’ என்பதுதான் ஜோதியின் திட்டம். ஜெயலலிதா, சசிகலா ஆகியோரிடம் இந்த யோசனையைச் சொல்லி, அவர்களின் அனுமதியோடுதான் இப்படியான ஏற்பாட்டைச் செய்தார் ஜோதி. ஆனால், லண்டன் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தினகரனுக்கோ ஜோதி மீது கோபம். லண்டன் வழக்கால் தனக்கு எதிர்காலத்தில் பிரச்னை ஏற்படும் என நினைத்தார் அவர்.

‘வழக்கை ஒன்றாக விசாரிக்க வேண்டும்’ என்கிற ஜோதியின் மனுவை சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. சொத்துக் குவிப்பு வழக்கைப் போட்டது தி.மு.க அரசுதான். அந்த நேரத்தில் தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் இருந்தது. சில காலம் கழித்து, ‘இரண்டு வழக்குகளும் ஒன்றாக நடந்தால் வழக்கு இன்னும் இழுத்தடிக்கப்படும்’ என்பதை உணர்ந்த தி.மு.க அரசு, ‘லண்டன் ஹோட்டல் வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறோம்’ என உச்ச நீதிமன்றத்தில் மனு போட்டது. நீதிமன்றம் அதை ஏற்றுக்கொண்டதால், லண்டன் ஹோட்டல் வழக்கு வாபஸ் பெறப்பட்டது. தி.மு.க-வால் தினகரன் தப்பித்தார். ஆனால், ஜெயலலிதாவும் சசிகலாவும் இளவரசியும் சுதாகரனும் வழக்கில் மாட்டிக்கொண்டார்கள். எப்படித் தெரியுமா? லண்டன் ஹோட்டல் வழக்கு வாபஸ் பெறப்பட்டதால், சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை விரைவாக முடிக்கப்பட்டு நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார். இதனால், ஜெயலலிதாவின் பதவி பறிக்கப்பட்டு சிறைக்குப் போனார். அதன்பிறகு குமாரசாமி தீர்ப்பால் விடுதலை ஆனார். ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் சசிகலா சிறைக்குள் போவதற்கு தினகரனும் ஒருவகையில் காரணம்தான்.

p24.jpg

அது ஒரு பக்கம் இருக்கட்டும்... சொத்துக் குவிப்பு வழக்கையும் லண்டன் ஹோட்டல் வழக்கையும் ஒன்றாகச் சேர்த்த ஜோதி மீது கடும் கோபமானார் தினகரன். ஜோதிக்கும் அதை எதிர்த்த தினகரனால் ஏற்பட்ட பிரச்னை என்ன தெரியுமா? தினகரனின் பொருளாளர் பதவி பறி போனதற்குக் காரணம் என்ன?

‘‘என்னைக் கொலை செய்துவிடுவேன் என தினகரன் மிரட்டினார். மிகவும் அசிங்கமான வார்த்தைகளில் திட்டித் தீர்த்தார். என் பெற்றோரைக் கேவலமாக விமர்சித்தார்’’ எனக் கொதித்தார் ஜோதி. அவர் கொளுத்திய தீ தினகரனின் பதவியைக் காவு வாங்கியது.

தினகரன் என்ன சொல்லித் திட்டினார்? அதனால் ஜோதி எடுத்த முடிவு என்ன?

(தொடரும்)

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

சசிகலா ஜாதகம் - 19 - கொடநாடு பிரளயம்!

 

கொடநாடு எஸ்டேட்டில், 2007 ஆகஸ்ட் மாதம் நடந்த பிரளயம்தான், அ.தி.மு.க-வின் பொருளாளராக இருந்த டி.டி.வி.தினகரனின் பதவி பறிப்புக்கு காரணம்.

p16b.jpgசொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருடன்  டி.டி.வி. தினகரனும் முதலில் சேர்க்கப்பட்டிருந்தார். ஜெயலலிதாவின் சொத்து பட்டியலில் ஒன்றாக, லண்டனில் உள்ள காப்ஸ் கிராப்ட் ஹோட்டலும் சேர்க்கப்பட்டிருந்தது. ‘இந்த ஹோட்டலை வாங்கிய ஐந்து பேரில் தினகரனும் ஒருவர்’ என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிறகு அதிலிருந்து தினகரன் விடுவிக்கப்பட்டார்.

இந்த ஹோட்டல் வழக்கை சொத்துக் குவிப்பு வழக்கோடு சேர்த்து விசாரிக்கச் சொல்லி, அதன்மூலம் சொத்துக் குவிப்பு வழக்கை இன்னும் தாமதப்படுத்தத் திட்டம் போட்டார் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி. இது தனக்கு சிக்கலை உண்டாக்கிவிடும் என்பதால் ஜோதி மீது கடும் கோபத்தில் இருந்தார் தினகரன். டென்ஷனான மூடில் இருந்த தினகரன், இரவில் ஜோதிக்கு போன் போட்டு சகட்டுமேனிக்கு திட்டித்தீர்த்தார். ‘‘வழக்கை ஒன்றாகச் சேர்க்க நீ யார்? பரமசிவன் கழுத்தில் இருக்கிற பாம்பு நீ... உன்னைக் கழற்றாமல் விடமாட்டேன்’’ என இரண்டு மூன்று தடவை தினகரன் பேசியபோதும், ஜோதி ஆரம்பத்தில் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் அவருடைய பெற்றோர்களைப் பற்றி மிகவும் மோசமாகத் திட்டியதால், வேறுவழியில்லாமல் விஷயத்தை ஜெயலலிதாவிடம் தெரிவித்தார் ஜோதி.

  ‘‘உங்கள் நன்மைக்காகத்தான் சொத்துக் குவிப்பு வழக்கோடு லண்டன் ஹோட்டல் வழக்கையும் சேர்த்தேன். இந்த ஏற்பாடு தினகரனுக்குப் பிடிக்கவில்லை. அதற்காக என்னை மோசமான வார்த்தைகளில் அவர் திட்டினார். நான் தெய்வமாகவே வணங்கி வரும் என் பெற்றோர்களை இழிச்சொல்லால் அர்ச்சித்தார். என்னைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். இப்படிப்பட்ட சூழலில் நான் பணியாற்ற விரும்பவில்லை. தயவுசெய்து என்னை விடுவித்து விடுங்கள்’’ என 23 பக்கங்களுக்கு ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியிருந்தார் ஜோதி.

p16.jpg

ஜோதியையும் தினகரனையும் அழைத்து விசாரித்தார் ஜெயலலிதா. ஓய்வு எடுக்கச் செல்லும் கொடநாட்டில், 2007 ஆகஸ்ட் தொடக்கத்தில் விசாரணை நடைபெற்றது. பொருளாளர், ராஜ்யசபா எம்.பி என கட்சியில் பெரும் செல்வாக்கோடு இருந்த தன் மீது யாரும் புகார் சொல்லிவிட முடியாது என்கிற தைரியத்தில் இருந்த தினகரனுக்கு இது அதிர்ச்சி. காலையில் கோவை போய் இறங்கிய ஜோதியையும் தினகரனையும் பிக்அப் செய்வதற்காக கொடநாட்டில் இருந்து தனித் தனியாக கார்கள் ஏர்போர்ட்டில் வந்து நின்றன. கொடநாட்டில் இளவரசிதான் ஜோதிக்கு உணவு பரிமாறினார். ஃப்ரைடு ரைஸ் சாப்பிட்டுவிட்டு, ஜெயலலிதா அழைப்புக்காக ஜோதி காத்திருந்தார்.

ஜெயலலிதா அறைக்கு முதலில் ஜோதி அழைக்கப்பட்டார். ‘‘அம்மா... மனம் பொறுக்க முடியாமல்தான் நீண்ட யோசனைக்குப் பிறகு கடிதத்தை எழுதினேன். வாழ்நாளில் இப்படி மோசமாக என்னை யாரும் திட்டியதில்லை. உங்களுக்கு நான் கட்டுப்படுகிறேன். ஆனால் வேறு யாரிடமோ நான் திட்டு வாங்க வேண்டியதில்லை’’ என்றார் ஜோதி. அடுத்து தினகரனை அழைத்து விசாரித்தபோது, அனைத்தையும் மறுத்திருக்கிறார் அவர். பிறகு இருவரையும் ஒன்றாக அழைத்து, ‘‘ஜோதி... நீங்க சொன்ன புகார் அனைத்தையும் தினகரன் மறுக்கிறாரே” என ஜெயலலிதா சொன்னபோது, ‘‘என் பெற்றோர்கள் மீது சத்தியம். அவர் என்னை திட்டியது உண்மை’’ என சொல்லியிருக்கிறார் ஜோதி. உடனே தினகரன், ‘‘அம்மா... அண்ணன் மீது நான் ரொம்ப மரியாதை வைத்திருக்கிறேன். எப்போது பார்த்தாலும் அவரை நான் அண்ணன் என்றுதான் அழைத்திருக்கிறேன். மரியாதைக் குறைவாக நான் யாரையும் நடத்தியதில்லை. பேசியதும் கிடையாது. அண்ணன் விஷயத்திலும் நான் அப்படித்தான் நடந்து கொண்டேன்’’ என தினகரன் சொன்னார்.

உடனே ஜோதி, ‘‘கடவுளாக வணங்கும் என் அப்பா அம்மாவை மோசமான வார்த்தைகளில் திட்டியது எல்லாம் பொய்யா? என்னை திட்டியபோது காட்டிய வேகம், அம்மாவை பார்க்கும்போது எங்கே போனது? தவறு செய்தால் ஒத்துக்கொள்ளுங்கள். அம்மாவிடம் மறைத்து என்னை பொய்க்காரன் ஆக்க முயற்சிக்க வேண்டாம்’’ என தினகரனை பார்த்து கோபப்பட்டார் ஜோதி.

p16a.jpg

பிறகு ஜெயலலிதா பக்கம் திரும்பி, ‘‘தினகரன் மீது எனக்கு என்னம்மா கோபம்? அவரைப் பற்றி உங்களிடம் எப்போதாவது குறை சொல்லி இருக்கிறேனா? சின்னம்மா குடும்ப உறுப்பினர்களை விமர்சித்து எங்கேயாவது பேசியிருக்கிறேனா? கடைசியாக என்னிடம் அவர் பேசியபோது, 50 நிமிடங்கள் திட்டினார். ‘கொலை செய்துவிடுவேன்’ என்றார். நான் செத்து இவர் ஏன் கொலைகாரன் ஆக வேண்டும். அதனால் ஒதுங்கிவிடுகிறேன்மா’’ என ஜெயலலிதாவிடம் சொல்லியிருக்கிறார் ஜோதி.

விசாரணைப் படலம் முடிந்தது. ‘‘ஜோதி... நீங்க வெளியே இருங்க. மீண்டும் உங்களை அழைக்கிறேன்’’ எனச் சொல்லி ஜோதியை வெளியே அனுப்பி வைத்தார் ஜெயலலிதா. உள்ளே தினகரனை ஜெயலலிதா திட்டுவது கொடநாடு பங்களா முழுவதும் எதிரொலிக்கிறது. சில நாட்களில் தினகரனின் பொருளாளர் பதவியும் பறிபோகிறது.

(தொடரும்)

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

சசிகலா ஜாதகம் - 20 - “சசிகலா... என் அக்கவுன்ட்டன்ட்!”

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

 

டி.டி.வி.தினகரனுக்கும் வழக்கறிஞர் ஜோதிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பற்றிய பஞ்சாயத்தை கொடநாட்டில் கூட்டியிருந்தார் ஜெயலலிதா. அன்றைக்கு கருநீல நிறத்தில் புடவை கட்டியிருந்தார்  ஜெயலலிதா. அதைவிட அவரது முகம் கறுத்திருந்தது. காரணம், தினகரன்.  விசாரணைக்குப் பிறகு அவரைக்  கண்டித்து அனுப்பிவிட்டு ஜோதியை அழைத்த ஜெயலலிதா, ‘‘தினகரன் திட்டியதற்காக என்னைவிட்டு நீங்கள் எப்படி போகலாம்?’’ என ஜோதியைப் பார்த்துக் கேட்டார்.

இப்படி ஜோதி மீது ஜெயலலிதா அக்கறைக் காட்டியதற்கு, வழக்குகளை ஜெயித்துக் கொடுத்தார் என்பது மட்டும் காரணம் அல்ல. 2001 - 2006 அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் அரசுக்கு நல்ல யோசனைகளையும் அவர் தெரிவித்தார். ‘‘கந்துவட்டியாலும் லாட்டரி சீட்டாலும் அடித்தட்டு மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்காக நாம் சட்டம் கொண்டு வர வேண்டும்’’ என ஜெயலலிதாவிடம் ஜோதி சொன்ன பிறகுதான் கந்துவட்டி ஒழிப்புச் சட்டமும் லாட்டரி சீட்டு தடையும் கொண்டுவரப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஜெயலலிதாவிடம் மற்றவர்கள் சொல்லத் தயங்கும் விஷயங்களைக்கூட சகஜமாகப் பேசிவிடுவார் ஜோதி.

p22.jpg

அப்படித்தான் கொடநாடு பிரளயத்தின்போது ‘‘அந்தக் குடும்பத்தைக் கைகழுவுங்கள். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து ஒதுக்கிவிடுங்கள். ராமேஸ்வரத்தில் தலை முழுகிவிட்டு மதுரை வந்தால் மொத்த தமிழ்நாடும் உங்கள் பக்கம்தான் நிற்கும்’’ என ஜெயலலிதாவிடம் சொன்னார் ஜோதி. எந்த விஷயம் பற்றியும் ஜெயலலிதாவுக்குக் கடிதம் அனுப்பும்போது அதன் ஒரு காப்பியை சசிகலாவுக்கும் போட்டுவிடுவது ஜோதியின் வழக்கம். அப்படித்தான் தினகரன் பற்றி அவர் எழுதிய கடிதமும் சசிகலாவுக்கு அனுப்பப்பட்டது. இதை சுட்டிக்காட்டிய ஜெயலலிதா, ‘‘எனக்கு எழுதிய கடிதத்தை அவளுக்கு ஏன் காப்பி போட்டீங்க... அவளுக்குப் போட வேண்டிய அவசியம் இல்லை. அவள் யார்? என் அக்கவுன்ட்டன்ட்.’’ என்றார் ஜெயலலிதா. ‘‘அம்மா... நீங்க இப்படி சொல்றீங்க... ஆனால் அவர்கள்தான் எல்லா அதிகாரமும் செய்கிறார்கள்’’ என ஜோதி சொல்ல... ‘‘எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்க கிளம்புங்க’’ என ஜோதியை அனுப்பி வைத்திருக்கிறார் ஜெயலலிதா.

கொடநாடு பிரளயம் நடந்தபோது சசிகலா அங்கு இல்லை. கொடநாட்டில் இருந்து ஜோதி கிளம்பி காரில் மலைப்பாதையில் இறங்கிக்கொண்டிருந்தார். அதே நேரம் கொடநாட்டை நோக்கி சசிகலாவின் கார் மலையில் ஏறிக்கொண்டிருந்தது. ஒரு வளைவில் இரண்டு கார்களும் சந்தித்துக் கொண்டன. காரைவிட்டு இறங்கிய ஜோதி, சசிகலாவைப் போய் பார்த்தார். ‘‘என்ன ஜோதி... தினகரனுடன் சமாதானம் ஆகிவிட்டீர்களா? இரண்டு பேரும் கைகுலுக்கிக் கொண்டீர்களா? அம்மா சமாதானம் செய்துவைத்தாரா?’’ என சசிகலா கேட்க... ‘‘இல்லம்மா.. சமாதானம் ஆகல..’’ என்றார் ஜோதி. ‘‘அதையே நினைத்து கவலைப்படாதீங்க... பழையபடி உங்கள் பணிகளை செய்யுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்.’’ என சொன்னார் சசிகலா. ஆனாலும், ஜோதியின் இறங்குமுகம் அந்த நிமிடத்தில் இருந்து ஆரம்பமாகிவிட்டது. ‘ஜெயலலிதாவிடம் இவ்வளவு நெருக்கமாக ஒருவரை விட்டதே தவறு’ எனத் தாமதமாக உணர்ந்த சசிகலா, காயை கச்சிதமாக வெட்ட காத்துக்கொண்டிருந்தார். சரியாக 11 மாதங்கள்தான். கார்டனில் இருந்து ஜோதி விரட்டப்பட்டார்.

p22a.jpgதினகரனுக்கு ‘பொருளாளர்’ பதவி மட்டும் பறிபோகவில்லை. அ.தி.மு.க-வில் இருந்த செல்வாக்கும் சேர்ந்தே சரிந்தது. கட்சிக்குள்ளும் கார்டனிலும் அவரால் தலைகாட்ட முடிய வில்லை. அது ஜெயலலிதா மரணம் வரையில் தொடர்ந்தது. ராஜாஜி ஹாலில் ஜெயலலிதாவின் உடல் கிடத்தப்பட்டிருந்தபோதுதான் தினகரனால் வர முடிந்தது. 

ஜெயலலிதா மீது போடப்பட்டிருந்த வழக்குகள் அப்போது நீதிமன்றங்களில் நடந்துகொண்டிருந்தன. இப்போது மத்திய நிதி அமைச்சராக இருக்கும் அருண் ஜெட்லியும் பிறகு, நீதிபதியான நாகேஸ்வர ராவும் ஜெயலலிதாவுக்காக நீதிமன்றங்களில் ஆஜர் ஆனார்கள். இதற்கான ஏற்பாடுகளை ஜோதிதான் செய்து வந்தார். வழக்கறிஞர்களுக்கான கட்டணம், ஹோட்டல் வாடகை, விமான செலவுகள் என பதின்மூன்றரை லட்சம் ரூபாய்க் கான கணக்குகளை கார்டனில் அளித்தபிறகும் ஜோதியிடம் பணம் தராமல் இழுத்தடித்தார்கள். அந்த வழக்கறிஞர்களுக்கான செலவை ஜோதியே செய்துவிட்டு, பணம் வரும் எனக் காத்திருந்தார்.

வழக்குகளில் வெற்றியைத் தேடிக் கொடுத்ததற்காக ஜோதியை 2002-ல் ராஜ்ய சபா எம்.பி. ஆக்கியிருந்தார் ஜெயலலிதா. அதன் பதவிக் காலம் 2008 மார்ச்சில் முடிவடைய இருந்தது. ‘இரண்டாவது முறையும் ராஜ்ய சபா பதவி தொடரும்’ என நம்பிகொண்டிருந்த ஜோதியின் ஆசையில் மண் விழுந்தது. ‘அ.தி.மு.க சார்பில் நா.பாலகங்கா நிறுத்தப்படுகிறார்’ என்கிற தகவலைக் கேள்விப்பட்டபோது ஜோதி டெல்லியில் இருந்தார். உடனே சசிகலாவுடன் போனில் பேசினார். ‘‘வழக்குகள் எல்லாம் எப்படி போகின்றன’’ எனக் கேட்டார் சசிகலா. சம்பிரதாயப் பேச்சுகள் முடிந்தபிறகு, ‘‘பாலகங்காவுக்கு ராஜ்ய சபா சீட் தரப்போவதாக கேள்விப்பட்டேன். அது உண்மையா?’’ என ஜோதி கேட்க... எதிர்முனையில் நிசப்தம். ‘‘அம்மா... நான் பேசுறது கேட்கிறதா...’’ என ஜோதி சத்தமாகப் பேச... ‘‘ஆமாம்’’ என்றார் சசிகலா. ‘‘டான்சி வழக்கில் ஜெயித்து கொடுத்ததற்காகத்தான் அம்மா என்னை ராஜ்ய சபா எம்.பி ஆக்கினார். எம்.பி-யாக இருந்து நிறைய விஷயங்கள் செய்வார் என நினைத்துதான் அந்தப் பதவியை அம்மா கொடுத் தாங்க. 13 வருடங்கள் கஷ்டப்பட்ட எனக்கு நீங்க காட்டுகிற மரியாதை இதுதான் என்றால் நான் பல விஷயங்களை யோசிக்க வேண்டி வரும்மா’’ எனச் சொல்லி, போனை கட் செய்தார் ஜோதி.

(தொடரும்)

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

சசிகலா ஜாதகம் - 21 - சதியில் வீழ்ந்த ஜோதி!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

 

கொளுத்தும் அக்னி நட்சத்திர வெயில் நாட்களிலும்கூட வெந்நீரில் குளிப்பதுதான் ஜோதியின் வழக்கம். கொதிப்பில் இருந்த அன்றைக்கும் அப்படித்தான் குளித்தார். வெப்ப உடல், வெந்நீரால் இன்னும் சூடேறி இருந்தது. அ.தி.மு.க உறவையும், ஜெயலலிதா நட்பையும் 2008 மார்ச் 13-ம் தேதியோடு தலைமுழுகினார். குளித்துவிட்டு வந்து விறுவிறு என ராஜினாமா கடிதத்தை எழுதி முடித்தார். சசிகலாவோடு போனில் பேசிய அடுத்த நாள் இந்த அதிரடியைச் செய்தார் ஜோதி.

p30b.jpg‘கட்சியிலிருந்து ஒதுங்கிக்கொள்கிறேன்; வழக்குகளில் இருந்து விடுவித்துக்கொள்கிறேன்; வேறு வழக்கறிஞரை நியமித்துக்கொள்ளுங்கள்; வழக்குத் தொடர்பான ஆவணங்களை எடுத்துச் செல்லுங்கள்’ எனச் சொல்லி, ராஜினாமா கடிதத்தை ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைத்தார். அதோடு, வழக்குகள் தொடர்பாகச் செய்யப்பட்ட பதின்மூன்றரை லட்சம் பாக்கி பணத்துக்கான செலவுப் பட்டியலையும் அனுப்பியிருந்தார்.

கடிதம் கிடைத்ததும், கார்டன் அதிர்ந்தது. சமாதானப் படலம் நடந்தது. ஜெயலலிதா சார்பாக முக்கியப் புள்ளி ஒருவர் ஜோதியின் வீட்டுக்கு வந்தார். பெயரிலேயே தோட்டத்தை வைத்திருக்கும் அந்தப் புள்ளி, ஜோதியிடம் சாமர்த்தியமாகப் பேசினார். ‘‘என்னங்க... இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறீங்க. அம்மா இதை விரும்பவில்லை. ராஜ்ய சபா சீட் தரவில்லை என்பதற்காக ‘வழக்குகளை நடத்த விரும்பவில்லை’ எனச் சொல்வது அழகா? ராஜினாமாவைத் திரும்பப் பெறுங்கள். பழையபடி பணியைத் தொடருங்கள்’’ என்றார். ‘‘எந்த முடிவையும் நான் அவசரத்தில் எடுக்க மாட்டேன். யோசித்து எடுக்கப்பட்ட முடிவில் இருந்தும் பின்வாங்க மாட்டேன். ராஜினாமா முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன். வழக்குகளை இனி நடத்த முடியாது’’ என அந்தப் புள்ளியிடம் கறாராகச் சொன்னார் ஜோதி. தொடர்ந்து வலியுறுத்தியும் எந்தப் பயனும் ஏற்படாத நிலையில், ‘‘நம்ம எதிரிகள்கிட்ட மாட்டிக்காதீங்க’’ என ஜோதியை எச்சரித்தார் அவர். ‘‘முடிந்தால் பாக்கிப் பணம் பதின்மூன்றரை லட்சம் ரூபாயைப் பெற்றுத் தாருங்கள்’’ என்றார் ஜோதி. ‘‘உங்க பையனுக்கு எம்.எஸ் சீட்டை சிபாரிசு பண்ணி வாங்கிக் கொடுத்ததற்கு எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா?’’ என அவர் கேட்க... ‘‘அப்படியா? எவ்வளவு செலவு செய்தீர்கள் எனச் சொல்லுங்கள். பதின்மூன்றரை லட்சத்தை அதில் கழித்துவிட்டு, மீதித் தொகையை தந்துவிடுகிறேன்’’ என்றார் ஜோதி. அந்தப் பதின்மூன்றரை லட்சம் பணம் இன்றுவரையில் வரவில்லை. ஆனால், ‘அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம்’ என்ற அறிவிப்பு அதிரடியாக வந்தது. ராஜினாமாவுக்கு  பிறகுதான் நீக்கம் என்ற அறிவிப்பு வெளியானது. ராஜ்ய சபாவில் ஜோதியின் இருக்கை எண் 144. அவருக்கே கட்சியில் ‘144’ போட்டார் ஜெயலலிதா!

p30.jpg

‘கழகத்தின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணாகச் செயல்பட்டார். அதனால் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார். அவரிடம் கழகத்தினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது’ - கட்சியில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் இந்த ரெடிமேட் வார்த்தைகள்தான் ஜெயலலிதாவின் நீக்கல் அறிக்கையில் இடம்பெறும். ஆனால், ஜோதி விஷயத்தில் ஏகத்துக்கும் கடுப்பு காட்டினார் ஜெயலலிதா. உபயம், சசிகலா.

ஜெயலலிதா வெளியிட்ட அந்த அறிக்கையில், ‘கீழ் கோர்ட் முதல் சுப்ரீம் கோர்ட் வரை பல்வேறு முக்கியமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வழக்குகளிலிருந்து விலகிக்கொள்வதாக ஜோதி சொன்னது மிகவும் கண்ணியக்குறைவானது. சட்டத்துறைக்கே அவர் களங்கத்தை ஏற்படுத்திவிட்டார். அ.தி.மு.க தொடர்பாக 113 வழக்குகள் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் சொல்லாமல் கொள்ளாமல் ஜோதி விலகியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரிய செயலாகும். உச்ச நீதிமன்றத்தில் ஒரு முக்கிய வழக்கில் ஆஜராகியிருந்த ஜோதி, தனக்கு ராஜ்ய சபா சீட் கிடைக்கவில்லை எனத் தெரிந்ததும், வழக்கிலிருந்து பாதியிலேயே விலகி வெளியேறியுள்ளார். இது சட்டத் தொழிலைக் கொலை செய்வதற்கு சமம். தான் சார்ந்த கட்சிக்கு அவர் துரோகம் செய்துவிட்டார். கட்சி நலனுக்கு எதிராக அவர் செயல்பட்டுள்ளார்’ எனக் குறிப்பிட்டார்.

p30a.jpg

ஜெயலலிதாவின் இந்த அறிக்கைக்குப் பிறகு ஜோதியின் வீட்டில் கல்வீச்சுகள் நடந்தன. போனில் தொடர்ந்து மிரட்டல்கள் வந்தன. அப்படி கல் எறிந்தவர்கள் பிறகு  டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்களாகவும் வந்து உட்கார்ந்தார்கள். கல்லெறியச் சொன்னது யார்? அப்படி எறிந்தவருக்கு பதவி கொடுத்தது யார் என்பதற்கெல்லாம் விடை தேட வேண்டியது இல்லை.

‘ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வு, நீதிமன்றப் போராட்டங்களால் நிறைந்தது. அதனால், மற்ற அரசியல் உதவியாளர்களையெல்லாம்விட சட்ட உதவியாளராக விளங்கிய ஜோதிக்கு ராஜ்ய சபா பதவி நீட்டிப்பு தரப்பட்டிருக்க வேண்டும்’ எனக் கட்சியின் சீனியர்களே சொல்லி வந்தார்கள். ஆனால், தினகரனின் உண்மை முகத்தை ஜெயலலிதாவிடம் அம்பலப்படுத்தியதற்காக, ஜோதியை பழிதீர்க்க சசிகலா நடத்திய சித்து விளையாட்டில், அவர் கட்டம் கட்டப்பட்டார். கடைசியில் வேறு வழியே இல்லாமல் தன்னை தற்காத்துக்கொள்ள, ஜோதி வந்து நின்ற இடம் மீடியா!

அங்கே என்ன நடந்தது?

(தொடரும்)

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

சசிகலா ஜாதகம் - 22 - “கூடா நட்பு கேடாய் முடியும்!”

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

 

‘‘கூடா நட்பு குறித்து திருவள்ளுவர் ஒரு அதிகாரமே எழுதி யிருக்கிறார். கர்ணன் வீழ்ந்ததற்கும், கும்பகர்ணன் வீழ்ச்சிக்கும் கூடா நட்புதான் காரணம்’’ - அ.தி.மு.க-வுக்குத் தலைமுழுகிய பிறகு 2008-ல் முதன்முறையாக மீடியா முன்பு வந்து நின்றபோது, ஜோதி சொன்ன வார்த்தைகள் இவை!

p20a.jpg‘கட்சியில் இருந்து விலகுகிறேன்; வழக்குகளில் இருந்து விடுவித்துக்கொள்கிறேன்’ என ஜோதி நீட்டிய ராஜினாமா கடிதம் அ.தி.மு.க-வில் அதிர்வலைகளை உண்டாக்கியது. மிரட்டல்கள் தொடர்ந்ததால் மீடியா முன்பு அத்தனை உண்மைகளையும் உடைத்துப் போட்டார் ஜோதி. அப்போதுதான் ஜெயலலிதா, சசிகலாவின் கூடா நட்பு பற்றி சொன்னார்.

‘‘தினகரனுடன் எனக்கு எந்த விரோதமும் கிடையாது. சொல்லப் போனால் அவருக்கு நிறைய உதவிகளைச் செய்தேன். நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவர் பதவியை தினகரனுக்காக அப்போதைய அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜிடம் வாதாடிப் பெற்றேன். அந்தப் பதவி, ஒரு துணை அமைச்சர் அந்தஸ்துக்கு இணையானது. அதை தினகரனுக்காகக் கேட்டுப் பெற்றது, அவருக்கு நிர்வாக ஆற்றலும் அனுபவமும் ஏற்படும் என்பதற்காகத்தான். சசிகலாவின் ஒப்புதலுடன் அந்தப் பதவியை வாங்கிக் கொடுத்தும் தினகரன் அதை ஏற்கவில்லை. கடந்த 03.04.07 அன்று போனில் பேசிய தினகரன், என்னை வரம்புமீறித் திட்டித் தீர்த்தார். பத்து மாதங்களுக்கு முன்பே நான் கட்சியிலிருந்தும், எம்.பி பதவியிலிருந்தும் விலக முடிவுசெய்து ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் கடிதம் எழுதினேன். அதில் தினகரன் என்னை அவமானப்படுத்தியதைக் குறிப்பிட்டிருந்தேன். அதன்பிறகு என்னை அழைத்த ஜெயலலிதா, தினகரன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். சில நாட்கள் கழித்து கட்சியின் பொருளாளர் பொறுப்பிலிருந்து தினகரனை ஜெயலலிதா நீக்கிவிட்டார். அந்த கோபத்தில்தான் சசிகலாவும் தினகரனும் என்னைப் பழிவாங்க நினைத்தார்கள். அதற்காக ராஜ்ய சபா சீட் தரவிடாமல் தடுத்தார்கள். எனக்குத் தராததுகூட கவலையில்லை. வேறு ஒருவருக்கு தருவதை, என்னிடம் மரியாதைக்குக்கூட சொல்லவில்லை. எனக்கு மீண்டும் ராஜ்ய சபா எம்.பி பதவி கிடைக்காமல் போனதற்கு தினகரன்தான் காரணம்.

p20.jpg

ஆனால், அவரைவிட கட்சிக்குப் பெரிய கெடுதல் செய்து கொண்டிருப்பவர் சசிகலா. அவரின் முழுக் கட்டுப்பாட்டில்தான் ஜெயலலிதா இருக்கிறார். அது நீடிக்கும் வரை கட்சி தப்ப முடியாது. ஜெயலலிதா மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை. சசிகலாவின் போக்கு குறித்து ஜெயலலிதாவிடம் நான் பேசியபோது, ‘கட்சியின் அதிகார மையமாக அவர் விளங்குகிறார்’ என்றேன். அதற்கு ஜெயலலிதா, ‘அப்படியெல் லாம் இல்லை. அவர் வீட்டை நிர்வகித்து, கணக்கு வழக்குகளை மட்டுமே பார்த்துக் கொள்கிறார்’ என்றார். ஆனால், உண்மை அப்படி இல்லை. ஜெயலலிதா முற்றிலும் சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்’’ என பத்திரிகையாளர்களிடம் சொன்னார் ஜோதி.

அவர் சொல்லி ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அ.தி.மு.க சசிகலா கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டது. கூடா நட்பும் கேடாய் முடிந்துவிட்டது.  

சசிகலாவின் நடவடிக்கைக்கு ஆளானவர்கள் பலரும் அறிவாலயத்தில் ஐக்கியம் ஆவார்கள். அதில் ஜோதியும் விதிவிலக்கு இல்லை. தி.மு.க-வில் ஜோதி சேர்ந்தபோது நடந்த பிரஸ்மீட்டில், ‘‘தி.மு.க ஆட்சியில் தமிழகம் இருண்டு கிடக்கிறது என ஜெயலலிதா அறிக்கையில் சொல்லியிருந்தார். அதனால்தான் இருண்டு கிடக்கிற தமிழகத்தை ஒளிபெறச் செய்ய ஜோதியை அனுப்பியிருக்கிறார்’’ எனச் சொன்னார் கருணாநிதி. அதே பிரஸ் மீட்டில் பேசிய ஜோதி, ‘‘ஜெயலலிதாவே பாதுகாப்பற்ற நிலையில்தான் இருக்கிறார்’’ என்றார்.

p20b.jpg

ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுப்பப்படும் இன்றைய விஷயங்களுக்கு ‘‘ஜெயலலிதாவே பாதுகாப்பற்ற நிலையில்தான் இருக்கிறார்’’ என அன்றைக்கு ஜோதி சொன்ன தகவல் பொருந்திப் போவதை தவிர்க்க முடியவில்லை.

ஜெயலலிதா மீது போடப்பட்ட அடுக்கடுக்கான வழக்குகளில் முன்னணி வழக்கறிஞர்கள் ஆஜரானாலும், அத்தனை வழக்குகளுக்கும் மேற்பார்வையாக இருந்தது ஜோதிதான். ‘டான்சி நில பேர வழக்கில் இருந்து ஜெயலலிதா தப்ப முடியாது’ என கணித்திருந்த வேளையில், அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம்வரை போராடி ‘ஜெயலலிதா நிரபராதி’ என தனது வாதத் திறமையால் நிரூபித்தவர் ஜோதி. ஜெயலிதாவுக்காக அவர் ஜெயித்த வழக்குகள் மட்டும் 14. இதற்கெல்லாம் பரிசாகக் கேட்டது மீண்டும் எம்.பி பதவிதான். அதுவும்கூட, ஆளும் தி.மு.க-வால் தனக்குப் பிரச்னைகள் தொடங்கிவிட்டன என்று உணர்ந்து ஒரு பாதுகாப்புக்காகவே அந்தப் பதவியில் தொடர நினைத்தார். கட்சிக்காரர்கள் போல கூழைக் கும்பிடு போட மாட்டார். அப்படி நேருக்கு நேராகச் சொன்ன தினகரன் விஷயம்தான் அவர் கட்சியைவிட்டே விலகக் காரணம் ஆனது.

க்ளைமாக்ஸுக்கு காரணமான தினகரன் பற்றி ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்தில் அப்படி என்னதான் இருந்தது?

(தொடரும்)

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

சசிகலா ஜாதகம் - 23 - “பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு... கழற்றாமல் விடமாட்டேன்!”

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

 

தினகரன் பற்றி ஜெயலலிதாவுக்கு வழக்கறிஞர் ஜோதி எழுதிய கடிதத்தில் அப்படி என்னதான் இருந்தது? 19.5.2007 தேதியிட்டு எழுதப்பட்ட 19 பக்கக் கடிதத்தில் இடம்பெற்ற விஷயம் என்ன?

p8.jpgமாண்புமிகு அம்மா மற்றும் மதிப்புக்குரிய சின்னம்மா அவர்களுக்கு,

ஜோதி எழுதிக்கொள்வது!


வழக்குகள் ஒரு நிலைக்கு வரட்டும் என அமைதி காத்துவிட்டு இப்போது இந்தக் கடிதத்தை அனுப்புகிறேன். கடந்த 3.4.2007 அன்று, இரவு இடி இறங்கியது போல் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தோட்டத்தில்தான் இருந்தேன். அதற்கு சில வாரங்கள் முன்பு சில நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பெங்களூரு நீதிமன்றத்தில் ‘சொத்து வழக்கையும், லண்டன் ஓட்டல் வழக்கையும் ஒன்றாக விசாரிக்க வேண்டும்’ என்ற மனுவின் மீது, நீதிபதி பச்சபூரே, நமக்கு ஏற்ற உத்தரவைப் போட்டார். இந்த வழக்கில் அம்மா, சின்னம்மா, அண்ணி (இளவரசி) ஆகியோருக்காக நானும், சுதாகரன், தினகரன் ஆகியோருக்காக அவரவர் வக்கீல்களும் பேச வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அந்த இரண்டு வழக்குகளையும் ஒன்று சேர்க்க வேண்டும் என நான் எடுத்த முடிவுக்குக் காரணம், அதில் சட்ட முறையிலான பல அனுகூலங்கள் உள்ளன என்பதுதான்.

எனது உடல் நலம் சரியில்லாத நிலையில் வாய்தா வாங்கச் சொல்லிக் கேட்டபோது தினகரனின் வழக்கறிஞர் உரிய ஒத்துழைப்பு தரவில்லை. எழுந்து நிற்கக்கூட சக்தியில்லாத நான், நான்கு நாட்கள் வழக்காடினேன். நீதிபதி நமக்கு சாதகமாகத் தீர்ப்பு அளித்தார். இதற்காக தி.மு.க உச்ச நீதிமன்றம் சென்றது. இந்த விஷயத்தில் தினகரனின் வக்கீல், உச்ச நீதிமன்றத்தில் எந்தவிதமான ஆர்வத்தையும் காட்டவில்லை. இறுதியாக 9.4.2007 அன்று வழக்கு போடப்பட்ட
போது வாய்தா வாங்கவேண்டிய நிலை நமக்கு இருந்தது. அந்தச் சூழ்நிலையில் சுதாகரன், தினகரன் சார்பில் எந்தவிதமான பதிலும் தாக்கல் செய்யப்படவில்லை. இவர்கள் உதவி இருந்தால்தான் வாய்தா கிடைக்கும்... இல்லையென்றால் வழக்கை 18.5.2007 அன்றுக்குள் முடிக்க தேதி குறித்துவிடுவார்கள். சுதாகரனின் வழக்கறிஞர் ஒத்துக்கொண்டார். 9.4.2007 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாத வகையில், 4.4.2007 மாலை 4 மணிக்குள் வாய்தா கேட்டு, தினகரனின் வழக்கறிஞர் ரிஜிஸ்டிரியில் கடிதம் தர வேண்டும். தினகரன் வழக்கறிஞர் கே.கே.மணியிடம் வாய்தா கேட்கச் சொன்னேன். இதோ, அதோ என்றவர், 2.4.2007 அன்று கடைசி நேரத்தில் ‘நீ சொன்னால் நான் கேட்க முடியாது, என் கட்சிக்காரர் சொன்னால்தான் கேட்பேன்’ என்றார். அதிர்ச்சி அடைந்த நான், மறுநாள் 3.4.2007 அன்று சின்னம்மாவிடம் விஷயத்தைச் சொன்னேன். ‘தினகரனிடம் சொல்லி, அவர் வக்கீலிடம் சொல்லச் சொல்ல வேண்டும்’ என்றேன். ‘சரி’ என்றார். அன்று இரவு 9.30 மணிக்கு தினகரனிடமிருந்து எனக்கு போன்.

p8a.jpg

சுமார் 55 நிமிடங்கள் கீழ்த்தரமாக, அசிங்கமான வார்த்தைகளால், அநாகரிகமான முறையில் பேசினார். அதிர்ச்சி அடைந்த நான், தோட்டத்தில் உள்ள பலா மரத்தின் அடியில் செய்வதறியாமல் உட்கார்ந்துவிட்டேன். இடி இறங்கியதுபோல் மனம் வேதனைப்பட்டது. அவர் பேசிய நாகரிகமான பகுதிகளை மட்டுமே குறிப்பிடுகிறேன்.

தினகரன்: ‘என்னுடைய வக்கீலிடம் நீ எப்படி பேசலாம்? நேரடியாக பேசுவதற்கு உனக்கு என்ன உரிமை? அவரை வாய்தா கேட்க சொல்வதற்கு நீ யார்?’

நான்: ‘இன்று புதிதாக அவருடன் பேசவில்லை. பல ஆண்டுகளாகப் பேசிக்கொண்டு இருக்கிறேன்.’

தினகரன்: ‘நீ அவர் சம்பந்தியாகக்கூட இரு. ஆனால், பேசியது எனது வழக்குப் பற்றி. என் வழக்கு பற்றி நீ எப்படி என் வக்கீலிடம் பேசலாம்.’

நான்: ‘பலர் ஒன்றுபட்ட வழக்கில் ஒரே நோக்கமுள்ள கட்சிக்காரர்களுக்காக ஆஜராகும் இரண்டு வழக்கறிஞர்கள் பேசிக்கொள்வது சாதாரண விஷயம். எதிர்தரப்பு வக்கீலிடம் பேசுவதுதான் தவறு. ஒருவருக்கொருவர் ஆதரவான வழக்கறிஞர்களிடம் பேசுவதில் என்ன தவறு?’

உடனடியாக என்னை அவர் ஒருமையில் ‘வாடா, போடா’ என்றார். ‘60 வயதாகும் உனக்கு மண்டையில் மூளை இருக்கிறதா? நீ எல்லாம் எப்படி வக்கீல் வேலைக்கு வந்தாய்’ என்றார். ‘பிறகு பேசிக்கொள்ளலாம்’ என்றேன். மறுபடியும் தரக்குறைவாகப் பேசினார். ‘எங்கள் குடும்பத்தில் பிரச்னை செய்கிறாயா? என்னைப் பற்றி உனக்குத் தெரியாது. நான் செயல்பட ஆரம்பித்தால் நீ தாங்க மாட்டாய்’ என்றார். ‘இப்போது நீ எங்கே இருக்கிறாய்’ எனக் கேட்டார். ‘நான் வெளியில் இருக்கிறேன்’ என்றேன். அதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், ‘இப்போது உன்னை சித்தி பார்த்ததாகச் சொல்கிறார். ஆனால், நீ வெளியூரில் இருப்பதாகச் சொல்கிறாயே, ஏண்டா பொய் சொல்கிறாய்’ என்றவர், ‘நீ எங்கே இருக்கிறாய் என்று தெரிந்தால், வந்து உதைக்கப் போகிறேன். அதற்குத்தான் கேட்கிறேன்’ எனச் சொன்னார். அதற்கு நான், ‘நீங்கள் இவ்வளவு சிரமப்பட வேண்டாம். உங்கள் வீட்டுக்கு நானே வருகிறேன். என்ன செய்ய வேண்டுமோ செய்யுங்கள்’ என்றேன். தொடர்ந்து பலமுறை அசிங்கமாகப் பேசினார். நான் தொலைபேசியை கட் செய்தாலும் மறுபடியும் மறுபடியும் லைனில் வந்தபடி இருந்தார். இப்படி அவர் இழிவாகப் பேசியது இது முதல் முறையல்ல, மூன்றாவது முறை.

நான் (ஜோதி) பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு. அதனால் ஆட்டம் போடுகிறேன் என்றும், அம்மாவின் அன்புக்குப் பாத்திரமாக இருக்கிறேன் என்றும் கூறினார். ‘அந்தப் பாம்பை வெளியே எடுத்துக் கொல்லும் வித்தை தனக்குத் தெரியும்’ என்றார். தன் வழியில் குறுக்கிட்டவர்களை கட்சியில் காணாமல் செய்திருப்ப தாகவும், தற்போது என் முறை வந்துவிட்டது என்றும் சொன்னார். ‘நீ ரொம்பவும் துள்ளுகிறாய், நல்ல பிள்ளையாக நடிக்கிறாய். இந்த நடிப்பைக் கண்டு அம்மாவும், சின்னம்மாவும் ஏமாறலாம். என்னை ஏமாற்ற முடியாது’ என்றார். ‘இனிமேல் உன்னை விட்டுவைப்பது தவறு. எனக்கு சென்னையிலும், பெங்களூரிலும் ஆட்கள் இருக்கிறார்கள். உன்னை எப்படி ஒழிப்பது என்று எனக்குத் தெரியும்’ என்றார். ‘நீ ஒரு அப்பனுக்குப் பிறந்தவனா? உன் தாய் ஒருவனுக்குத்தான் உன்னைப் பெற்றாளா? உன் பிறப்பிலே குற்றம், உன் கருவில் குற்றம் இருக்கிறது’ என்றெல்லாம் பேசினார். இதே வார்த்தைகளை வேறு யாராவது பேசியிருந்தால், அந்த மனிதர் அடைந்திருக்கும் கதியே வேறு. சின்னம்மாவின் அக்கா மகன் என்ற ஒரே ஒரு தகுதிதான். அதுதான் இவரை கண் மண் தெரியாமல் ஆக்கியிருக்கிறது. இவருக்குப் பாம்பு மட்டும் பிடிக்கவில்லையா? அல்லது பரமசிவனையும் சேர்த்தே பிடிக்கவில்லையா? என் மதிப்பில் வீழ்ந்துவிட்ட இவரை இனி எப்போதும் பார்க்கக்கூடாது. இனிமேல் அவர் திருந்துவார் என்ற நம்பிக்கை எனக்கில்லை. காலம் இவருக்குப் பதில் சொல்லும். எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது.

p8b.jpgஇந்தச் சூழ்நிலையில் நான் கட்சியில் தொடர்வதும் வழக்கினை நடத்துவதும் சரியாக தோன்றவில்லை. அரசியலின் அடிப்படை பாடமே அரவணைத்துச் செல்வதுதான். அதற்கு இவர் தயாராக இல்லை. எல்லோரையும் சூழ்ச்சி செய்து கட்சியை விட்டு விரட்டிவிட்டு, இவர் மட்டும் தனியாக சாம்ராஜ்யம் நடத்தப் போகிறாரா? இவருடைய வக்கீலிடம் பேசியதற்கு இந்தப் பேச்சு பேசுகிறார். என்னை அப்புறப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வந்துவிட்டது. ‘எதற்கோ நான் குறுக்கே நிற்கிறேன்’ என்று இவருக்குத் தோன்றிவிட்டது. அவர் மொழியில் சொல்வதென்றால் நடுத்தெருவில் நான் அடிபட்டு சாகப் போகின்றேன். என்னைக் கொலை செய்துவிட்டு அதன் விளைவாக இவர் சிறைக்குச் செல்ல வேண்டாம். நானே விலகி விடுகிறேன். நான் யாருக்கும் பயப்படுபவன் அல்ல. தகுதியில்லாத மனிதர்களிடம் இருந்து தகுதிக் குறைவான வார்த்தைகளை இனியும் பெற விரும்பவில்லை. வழிப்போக்கனாக வந்தேன். அப்படியே போய்விடுகிறேன். எப்பேர்ப்பட்ட இந்திரலோகப் பதவியாக இருந்தாலும், இவ்வளவு மான அவமானங்களுக்குப் பிறகு அது எனக்குத் தேவையில்லை.

அற்ப அரசியல் சுகங்களுக்கு ஆசைப்பட்டு ஒரு சர்வ சாதாரண மனிதன் என் தாய், தகப்பனாரை விமர்சிக்கும் அளவுக்கு அவர்களுக்கு அவமானத்தைத் தேடித் தந்துவிட்டேன். என் நிழலைக்கூட தொட யோக்கியதை இல்லாத மனிதன், என்னைப்பற்றி பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. ‘இதையெல்லாம் நான் பேசியதற்காக நீ எங்கே போவாய் என்று எனக்குத் தெரியும், பரவாயில்லை, அங்கு போய்ச் சொல், அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. அதை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியும்’ என்றார். ஆக, உங்களைப் பற்றிய கவலைக்கூட அவருக்கு இருக்கவில்லை. அவர் எதையும் விட்டு வைக்கவில்லை. எல்லாம் தெரிந்துதான் பேசினார். எனவேதான், நான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன்.


- ந.ஜோதி

தனது எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்துவிடுவதாக கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். தனது பதவிக்காலம் முடிந்தபிறகு ‘எம்.பி பென்சன்கூட வேண்டாம்’ என எழுதிக் கொடுத்துவிட்டார்.

(தொடரும்)

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

சசிகலா ஜாதகம் - 24 - கதறிய ஜெயக்குமார்... கஞ்சா வழக்கில் மேகநாதன்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

 

டிசம்பர் 6, 2016. எம்.ஜி.ஆர் சமாதி. சசிகலாவுக்குப் பக்கத்தில் நின்றபடியே ஜெயலலிதாவுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்த இளைஞரை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது தமிழகம். அவர், ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகன் தீபக். அத்தைக்கு இறுதிச் சடங்கை நடத்திய அந்த தீபக், சரியாக 23 ஆண்டுகளுக்கு முன்பு அதே இடத்தில் ஜெயலலிதாவைப் பார்க்கத் துடித்தபோது தடுக்கப்பட்ட வரலாறு பலருக்கும் தெரியாது.

p30.jpg

p30a.jpg

p30b.jpg

முதல்வராக இருந்த ஜெயலலிதா, காவிரிப் பிரச்னைக்காக 1993 ஜூலை 18-ம் தேதி எம்.ஜி.ஆர் சமாதியில் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கியிருந்தார். அப்போது சிறுவனாக இருந்த தீபக், அத்தையைப் பார்க்க ஓடோடி வந்தபோது விரட்டியடிக்கப்பட்டார். ‘‘ஆன்ட்டி... ஆன்ட்டி...’’ என தீபக் கதறிய காட்சிகள் காற்றில் கரைந்தன. ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கை நடத்த சசிகலாவால் கைப்பிடித்து அழைத்துவரப்பட்ட தீபக்கை, அன்றைக்கு அப்பா ஜெயக்குமார்தான் கரம் பற்றி அழைத்து வந்தார். அவர்கள் தடுக்கப்பட்டதற்குப் பின்னால் இருந்தது, ஒரு பெரிய சதி. பின்னணியில் இருந்தது, கஞ்சா வழக்கு ஒன்று!

p30c.jpgஉதவியாளர்கள், உறவுகள், நண்பர்கள், நம்பிக்கையாளர்கள் என ஜெயலலிதாவின் உள்ளத்தில் இருந்தவர்கள் சசிகலாவின் ‘சதி’ராட்டத்தில் ஒவ்வொருவராகச் சாய்ந்து கொண்டிருந்தார்கள். அதில் மேகநாதனும் ஒருவர்். 1991-ம் ஆண்டு ஜெயலலிதா முதன் முறையாக ஆட்சிக்கு வந்தபோதுதான் புதுக் கலாசாரமாக, கஞ்சா வழக்குகள் அறிமுகம் ஆகின. எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தின் நிர்வாகி முத்துதான் கஞ்சா வழக்கில் கைதான முதல் அரசியல் நபர். இரண்டாவது, மேகநாதன். ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் உதவியாளராக இருந்தவர்தான் மேகநாதன் எனும் சுந்தரேசன்.

தாய் சந்தியாவுடன் ஜெயலலிதாவும் ஜெயக்குமாரும் இருந்த காலத்திலிருந்தே வேலை பார்த்து வந்தவர் மேகநாதன். சசிகலா வரவால் போயஸ் கார்டனில் இருந்து தி.நகர் சிவஞானம் தெருவுக்குக் குடும்பத்துடன் குடிபெயர்ந்திருந்தார் ஜெயக்குமார். (அங்கேதான் ஜெயக்குமாரின் மகள் தீபா இப்போது வசிக்கிறார்) மேகநாதனுக்குத் திருமணமாகி குழந்தையும் இருந்தது. உடல்நலம் சரியில்லாமல் இருந்த ஜெயக்குமாருக்குச் சகல பணிவிடைகளையும் மேகநாதன்தான் செய்து வந்தார். அதனால் அவர்மீது ஜெயக்குமாருக்குப் பற்றுதல் அதிகம். போயஸ் கார்டன் வீட்டுக்கு ஜெயக்குமாரும் அவரின் மனைவி விஜயலட்சுமியும் அடிக்கடி போய் வருவார்கள். கூடவே தீபாவும் தீபக்கும் செல்வார்கள். தான் கார்டனுக்குப் போக முடியாத சூழலில் மேகநாதன் மூலமாகத்தான் ஜெயலலிதாவைத் தொடர்புகொள்வார் ஜெயக்குமார்.

இப்படிப்பட்ட சூழலில்தான் 1993-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி மேகநாதனை, பாண்டி பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு அதிரடியாக கஞ்சா வழக்கில் அள்ளிக்கொண்டு போனார். பதறிப்போன ஜெயக்குமார் இன்ஸ்பெக்டர் பாபுவிடம் பேசியபோது, ‘‘எனக்கு எதுவும் தெரியாது’’ எனக் கையை விரித்துவிட்டார். ‘‘முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் நான். மேகநாதன் என் உதவியாளர்தான். அவரை ஏன் போலீஸ் அழைத்துப் போனது?’’ என ஜெயக்குமார் கதறலோடு கேட்ட எந்தக் கேள்விக்கும் காக்கிகளிடம் பதில் இல்லை. ஒருவழியாக விஷயம் தெரியவந்தபோது மேகநாதன் சிறைக்குள் தள்ளப்பட்டிருந்தார். அடுத்த நாள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் அருணா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். ‘‘மேடம்... நான் எந்தத் தப்பும் செய்யவில்லை’’ என மேகநாதன் நீதிமன்றத்திலேயே கதறி அழுதார். ஆனாலும், அவரை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டது நீதிமன்றம்.

p30e.jpg

1991-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வென்று முதன்முறையாக அரியணையில் அமர்ந்தார் ஜெயலலிதா. ஜூன் 24-ம் தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. பார்வையாளர் பகுதியில் முதல் வரிசையில் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் குடும்பத்தினரை முக்கியத்துவம் கொடுத்து அமர வைத்திருந்தார்கள். மனைவி விஜயலட்சுமி, பிள்ளைகள் தீபா, தீபக் ஆகியோருடன் ஜெயக்குமார் அமர்ந்திருந்தார். சசிகலாவுக்குக்கூட இந்த அளவுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. ஜெயக்குமார் குடும்பத்தினர் எங்கு சென்றாலும் அரசு அதிகாரிகள் உரிய மரியாதை அளித்தனர். எந்த அளவுக்கு அவர்களுக்கு மரியாதை தரப்பட்டது என்பதற்கு சாம்பிள் இது!

p30d.jpg

திருச்சிக்குக் குடும்பத்தினருடன் ஜெயக்குமார் சென்றபோது, அவர்களை மாவட்ட கலெக்டர் வரவேற்று விருந்தினர் மாளிகையில் தங்க வைத்தார். அதே நேரத்தில்தான் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம்பெற்ற முத்துசாமியும் அரசு விழாவில் பங்கேற்பதற்காகத் திருச்சிக்கு வந்தார். இன்னோர் அமைச்சர் செல்வ கணபதியும் வேறு வேலையாக அங்கே போயிருக்கிறார். விருந்தினர் மாளிகையில் இருந்த மூன்று ‘சூட்’களும் ஃபுல்லாகிவிட்டதால் முத்துசாமியும் செல்வகணபதியும் வேறு இடத்துக்குப் போய்விட்டார்கள். ஜெயலலிதாவின் அண்ணன் குடும்பம் என்பதால் அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரையில் சல்யூட் அடித்தார்கள். ஜெயக்குமார் குடும்பத்தினர் முதல்வருக்கு நெருக்கமாவதையும் செல்வாக்கு பெறுவதையும் சசிகலா குடும்பம் ரசிக்கவில்லை. ஜெயக்குமார் குடும்பத்துக்கும் ஜெயலலிதாவுக்கும் மீடியேட்டராகச் செயல்பட்ட மேகநாதன்தான் முதல் இலக்கானார். அவர்மீது கஞ்சா வழக்கு  பாய்ந்தது.

நொந்துபோன ஜெயக்குமார், முதல்வர் வீட்டுக்குப் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பேசமுடியவில்லை. ‘‘முதல்வர் தூங்குகிறார்... மீட்டிங்கில் இருக்கிறார்... பிஸியாக உள்ளார்’’ என ரெடிமேடு பதில்கள்தான் கிடைத்தன. ஜாமீன் மனு போட்டார்கள். அது தள்ளுபடி ஆனது.

சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் நடந்தது என்ன?

(தொடரும்)

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

சசிகலா ஜாதகம் - 25 - ‘‘கஞ்சா வழக்குக்கு காரணம் சசிகலா!’’

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

 

22p1.jpg

ஜெயலலிதாவுடன் அவரின் அண்ணன் ஜெயக்குமாரின் குடும்பத்தினர் நெருக்கமாவதையும் செல்வாக்குப் பெறுவதையும் சசிகலா குடும்பத்தினர் விரும்பவில்லை. விளைவு, ஜெயக்குமாரின் உதவியாளர் மேகநாதன் பழிவாங்கப்பட்டார்.

கஞ்சா வழக்கில் மேகநாதன் சிறைக்குள் தள்ளப்பட்டதுமே அவரின் மனைவி ரேணுகாதேவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘ஹேபியஸ் கார்பஸ்’ மனு போட்டார். அதில் இருந்த வாசகங்கள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. ‘ஜெயக்குமார் குடும்பத்துக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நெருக்கம் உண்டாக்க என் கணவர் முயன்றார். அது முதல்வரின் தோழி சசிகலாவுக்குப் பிடிக்கவில்லை. அவர் உத்தரவின் பேரில்தான் போலீஸ் அதிகாரிகள், என் கணவர் மீது கஞ்சா வைத்திருப்ப தாகப் பொய் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்’ என மனுவில் சொல்லியிருந்தார்.

22p2.jpg

ஜெயக்குமார் குடும்பத்துக்கு நண்பராக... உதவியாளராக... விசுவாசமான காப்பாளராக இருந்தவர் மேகநாதன். உடல்நலமில்லாத ஜெயக்குமாரால், மேகநாதன் உதவி இல்லாமல் இருக்க முடியாது. வழக்கம் போல ஜெயக்குமாருக்கு உதவிகள் செய்து வந்த மேகநாதன், 1993-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி இரவிலிருந்து திடீரென காணாமல் போனார். ‘‘மேகநாதன் எங்கே?’’ என அவரது மனைவி ரேணுகாதேவியும், ஜெயக்குமாரும் ஊர்முழுக்க தேடி, களைத்துப் போன நிலையில்தான், ‘கஞ்சா கடத்தல் வழக்கில் கைது’ என்கிற செய்தி வந்து சேர்ந்தது. ‘மேகநாதன் மீது சுமத்தப்பட்டிருப்பது வீண்பழி. அவரை விடுவிக்க வேண்டும்’ எனச் சட்டபூர்வமாக ஒருபுறம் போராடிக் கொண்டிருந்த போதும், தன் தங்கை ஜெயலலிதாவைத் தொடர்பு கொண்டு நிலைமையைச் சொல்லி மேகநாதனை மீட்கவும் முயற்சிகள் எடுத்தார் ஜெயக்குமார். முதல்வர் வீட்டுக்குப் பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டும், ஜெயலலிதாவுடன் பேச முடியவில்லை. முதல்வருடன் அவருக்கு இணைப்பு தரப்படவில்லை. ஜெயக்குமார் நொந்துபோனாலும், எந்த நேரத்திலும் முதல்வர் வீட்டில் இருந்து தொடர்புகொள்வார்கள் என நம்பிக்கையோடு காத்திருந்தார். போயஸ் கார்டனில் இருந்து அவருக்கு க்ரீன் சிக்னல் கிடைக்கவில்லை; ரெட் சிக்னல்தான் விழுந்தது.

22p3.jpg

தி.நகரில் இருந்த ஜெயக்குமாரின் வீட்டைச் சுற்றி உளவுப்பிரிவு போலீஸ் கண்காணித்துக் 22p5.jpgகொண்டிருந்தது. கைதானது மேகநாதன் என்றபோதும், ஜெயக்குமார் குடும்பத்தைப் பற்றியே பலரும் பேச ஆரம்பித்திருந்தார்கள். அதனாலோ, அல்லது ‘யாருடைய கோபத்துக்கோ(!) ஆளாகி விட்டார்கள்’ என்பதாலோ, ஜெயக்குமார் வீட்டை உளவு பார்த்தார்கள். மேகநாதன் கைதானதால், அவரின் மனைவி ரேணுகாதேவி ஜெயக்குமாரின் வீட்டில்தான் அப்போது வசித்தார் என்பதும் நோட்டமிடுவதற்குக் காரணம். கார்டனுக்குத் தொடர்ந்து தொலைபேசியில் பேச ஜெயக்குமார் முயன்றுகொண்டிருந்ததால், அவர் வீட்டு டெலிபோன் இணைப்பே துண்டிக்கப்பட்டது. இதுபற்றி தொலைபேசித் துறையிடம் ஜெயக்குமார் புகார் அளித்தார். வீட்டுக்கு வந்த டெலிபோன் ஊழியர் சோதனை செய்துவிட்டு, “சரி செய்ய முடியவில்லை. எக்ஸ்சேஞ்சிலேயே ஏதோ பிரச்னை” என்றார். மேகநாதன் கைதுக்குப் பிறகு இப்படி அடுத்தடுத்து சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தன.

அதேநேரம், சென்னை மத்திய சிறைச்சாலையில் அடைபட்டிருந்த மேகநாதன், நடந்த சம்பவங்களைத் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தார். ‘‘பாண்டி பஜார் இன்ஸ்பெக்டர் பாபு எனக்குத் தெரிந்தவர்தான். மார்ச் 5-ம் தேதி இரவு என்னை நட்புடன் கண்பத் ஹோட்டலுக்கு அழைத்துப் போனார். அங்கே போனதும் அவரின் நடவடிக்கைகள் மாறின. இரண்டு கான்ஸ்டபிள்களும், ஒரு சப்-இன்ஸ்பெக்டரும் அங்கு காத்திருந்தார்கள். இரவு முழுவதும் அடைத்து வைத்திருந்தார்கள். வெளியே போகவிடவில்லை. காலையில் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தார்கள். அப்போதுதான் என் மீது கஞ்சா கடத்தல் வழக்கு போடப்பட்டிருப்பதே தெரிந்தது. ‘பிரவுன் ஷுகர்’ கடத்தியதாக என்மேல் வழக்குப் போட்டுப் பத்து வருடங்கள் உள்ளே தள்ளுவதுதான் முதலில் திட்டமாம். ‘நீ எனக்கு நண்பன் என்பதால், கஞ்சா கேஸ் மட்டும் போட ஒப்புக்கொண்டேன்’ என இன்ஸ்பெக்டர் பாபுவே என்னிடம் சொன்னார்’’ என நடந்த விஷயங்களை மேகநாதன் சொல்ல... அது ஜெயக்குமாரின் காதுக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

22p4.jpg

மேகநாதன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ஒரு பெண் மேகநாதனிடம் ஓடிவந்தார். ‘‘முதல்வரின் அண்ணி போயஸ் கார்டனில்தான் இப்போது இருக்காங்க. அவங்களுக்கு முக்கியமான விஷயம் ஏதாவது சொல்லணும்னா என்கிட்டே சொல்லுங்க’’ என கேட்டார். ஆனால், அந்தப் பெண்ணும் போலீஸ் செட்டப் செய்த ஆள்.

தன்னை சிறையில் வந்து பார்த்த பத்திரிகையாளர் ஒருவரிடம், ‘‘சசிகலாவுக்கு என்னைப் பிடிக்காது. போயஸ் கார்டனுக்கு நான் வருவதையும் அவர் விரும்பவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடராசனுடன் நான் போயஸ் கார்டனுக்குள் போனேன். உடனே ‘ஏன் மேகநாதனையெல்லாம் உள்ளே அழைத்து வருகிறீர்கள்?’ என நடராசனிடம் சசிகலா சத்தம் போட்டார். சசிகலாவுக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் கிடையாது. அவரைப் பார்க்கும்போதெல்லாம் பணிவாகத்தான் பேசுவேன். ஆனாலும், என் மீது அவருக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. நான் ஏதாவது பாவம் செஞ்சிருந்தா... என்னைக் கடவுள் தண்டிக்கட்டும்’’ என புலம்பினார் மேகநாதன்.

மேகநாதனை வெளியில் கொண்டுவர ஜெயக்குமார் அடுத்து எடுத்த நடவடிக்கை என்ன?

(தொடரும்)

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.