Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம்


Recommended Posts

புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம்

 

 

(ஆர்.ராம்)

ram_logo.jpg

16 ஆம் நூற்­றாண்­டி­லி­ருந்து போர்த்­துக்­கேயர், ஒல்­லாந்தர், பிரித்­தா­னியர் போன்ற அந்­நியர் ஆட்­சிக்கு இலங்­கைத்­தீவு உட்­பட்­டி­ருந்­தது. 1802 ஆம் ஆண்டு முதல் இலங்கை முடிக்­கு­ரிய ஒரு குடி­யேற்ற நாடாக மாறி­யது. இதி­லி­ருந்து இலங்­கையின் கரை­யோரப் பிர­தே­சங்­களின் சிவில் நிர்­வாகம், நீதிப்­ப­ரி­பா­லனம், நிர்­வாக விட­யங்கள் பிரித்­தா­னிய அர­சினால் இலங்­கையில் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த தேசா­தி­ப­தியால் நிறை­வேற்­றப்­பட்­டன.

அத­னைத்­தொ­டர்ந்து 1833இல் பிரித்­தா­னி­யரால் கோல்­புறுக் கமரன் சீர்­தி­ருத்தம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. இது நாட்டின் அர­சி­ய­ல­மைப்பு துறையில் அடித்­த­ளத்­தினை வேரூன்ற ஏது­வாக அமைந்­தது. அத­னை­ய­டுத்து 1912இல் குறு மக்­கலம் சீர்­தி­ருத்­தங்கள் 1922இல் மனிங் சீர்­தி­ருத்­தங்கள், 1924இல் மனிங் டிவன்­சயர் சீர்­தி­ருத்­தங்கள் இடம்­பெற்­றன. தொடர்ந்து 1931ஆம் ஆண்டில் டொனமூர் அர­சி­ய­ல­மைப்பு  அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. 

அதற்­குப்­பின்­ன­ரான கால­கட்­டத்தில் இரண்டாம் உலக யுத்­தத்தின் முடிவில் 1944 இல் பிரித்­தா­னிய அர­சாங்கம் சோல்­பரி பிர­புவின் தலை­மையில் ஆணைக்­கு­ழுவொன்றை இலங்­கைக்கு அனுப்­பி­யது. இலங்கை அமைச்­சர்­களால் வரை­யப்­பட்ட யாப்பில் காணப்­பட்ட சிபா­ரி­சு­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு 1947 ஆம் ஆண்டு சோல்­பரி யாப்பு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. சோல்­பரி அர­சியல் யாப்­பின்­படி இலங்­கையில் பாரா­ளு­மன்ற ஜன­நா­யக முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. 

பிரித்­தா­னிய கால­னித்­துவ ஆட்­சிக்கு முற்­றுப்­புள்ளி வைப்­ப­தாகக் கொண்டு முத­லா­வது குடி­ய­ரசு யாப்­பொன்று 1972ஆம் ஆண்டு இயற்­றப்­பட்­டது. அதனைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டில் நடை­பெற்ற ஆட்சி மாற்­றத்­தினைத் தொடர்ந்து அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்­தங்கள் பற்றி கலந்­து­ரை­யாடும் தீர்­மானம் அனைத்து அர­சியல் தலை­வர்­க­ளி­னாலும் முன்­வைக்­கப்­பட்­டது. முத­லா­வது குடி­ய­ரசு யாப்பின் திருத்­த­மாக அர­சாங்கம் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை அறி­மு­கத்­தோடு 1978ஆம் ஆண்டு இரண்­டா­வது குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்பு முறை கொண்டு வரப்­பட்டு அதுவே இரண்­டா­வது குடி­ய­ரசு யாப்­பாக கொள்­ளப்­பட்­டது.

அடிப்­படை உரி­மைகள், நீதித்­துறை எனப் பல­வற்றை உள்­ள­டக்­கிய விரி­வான முறையில் இவ்­வ­ர­சியல் யாப்பு தற்­போது வரையில்  19 தட­வைகள் திருத்­தங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக ஆறா­வது, பதின்­மூன்­றா­வது, பதி­னே­ழா­வது, பதி­னெட்­டா­வது மற்றும் பத்­தொன்­ப­தா­வது திருத்­தங்கள்  அர­சியல் முக்­கி­யத்­து­வத்­தினை பெற்று நிற்­கின்­றன.

2000 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பு திருத்த யோசனை பாரா­ளு­மன்றில் வரை­பாக முன்­வைக்­கப்­பட்ட போதும் பாரா­ளு­மன்றில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை பெற முடி­யாது தோல்­வியைக் கண்­டது. இந்­நி­லையில் 1972, 1978ஆகிய குடி­ய­ரசு யாப்­புக்­களில் தமிழ் மற்றும் தமிழ் பேசும் சிறு­பான்மை தேசிய இனங்கள் முற்­றாக புறக்­க­ணிக்­கப்­பட்­டி­ருந்­தன. 

2015 ஜன­வரி 08ஆம் திகதி நடை­பெற்ற ஆட்சி மாற்­றத்தின் பின்னர் பிர­தான அர­சியல் கட்­சி­க­ளான ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி, ஐக்­கிய தேசியக் கட்சி ஆகி­யன ஒன்­றி­ணைந்து அமைத்த தேசிய அர­சாங்­கத்தின் ஆட்­சிக்­கா­லத்தில் இலங்கை புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்­றினை இயற்றும் பணிகள் அனைத்து தரப்­பி­னரின் பங்­கேற்­புடன் தற்­போது மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

afafa2.jpg

 

ஏக­ம­ன­தாக நிறை­வே­றிய பிரே­ரணை

அர­சி­ய­லமைப்புச் சபையை நிய­மிப்­ப­தற்­கான பிரே­ர­ணை­யொன்று ஜன­வரி ஒன்­பதாம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. 

குறித்த பிரே­ர­ணை­யில் இலங்­கைக்கு அர­சி­ய­ல­மைப்­பொன்றை வகுத்தல் அவ­சி­யமென இலங்கை மக்கள் மத்­தியில் பரந்­த­ளவில் இணக்­கப்­பாடு காணப்­ப­டு­கின்­றது என்­பது குறிப்­பி­டப்­பட்டு 23வாச­கங்கள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. 

முதலாம், இரண்டாம் வாசகங்களில், இலங்­கையின் அர­சி­ய­லமைப்பு பற்­றிய மக்­களின் கருத்­துக்­க­ளையும் ஆலோ­ச­னை ­க­ளையும் பெற்று அவற்றைப் பற்றிக் கலந்­தா­ராய்ந்து அர­சி­ய­லமைப்பின் 75ஆவது உறுப்­பு­ரையின் கீழ் பாரா­ளுமன்­றத்தின் தத்­து­வங்­களைப் பிரயோ­கிப்­பதில் அதன் பரிசீலனைக்­காக அர­சி­ய­ல­மைப்பு சட்­ட­மூ­லத்தின் வரைபைத் தயா­ரிக்கும் நோக்­கத்­துக்­காக இதன் பின்னர் அர­சி­ய­ல­மைப்புச் சபை என அழைக்­கப்படும். எல்லா பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் உள்­ள­டக்­கிய பாரா­ளு­மன்றக் குழு ஒன்று தாபிக்­கப்­ப­டுதல் வேண்­டு­மென இந்தச் சபை தீர்­மா­னிக்­கின்­றது. பாரா­ளு­மன்­றத்தின் சபா­நா­யகர் அர­சி­ய­லமைப்பு சபையின் தவி­சா­ள­ராக இருப்பார். அர­சி­ய­லமைப்பு சபை ஏழு பிரதித் தவி­சா­ளர்­களைக் கொண்­ட­தாக இருக்கும் என்­ப­துடன் அவர்கள் அர­சி­ய­லமைப்பு சபை­யினால் தெரிவு செய்­யப்­ப­ட­வேண்டும். சபா­நா­யகர் இல்­லாத சந்­தர்ப்­பங்­களில், சபைக்­கூட்­டங்­களின் அமர்­வுக்குத் தலைமை வகிப்­ப­தற்கு அர­சி­ய­லமைப்பு சபையின் பிரதித் தவி­சா­ளர்­க­ளுக்­கி­டையே ஒரு­வரைத் தெரிவு செய்தல் வேண்டும் எனக் கூறப்­பட்­டுள்­ளது.

மிக முக்­கி­ய­மாக 5ஆவது வாச­கத்தில், அர­சி­ய­லமைப்பு சபை பின்­வரும் உப குழுக்­களைக் கொண்­டி­ருத்தல் வேண்டும்.

(அ) அர­சி­யலமைப்பு சபை­யினால் நிய­மிக்­கப்­ப­டு­கின்ற இரு­பத்­தொரு பேரை விஞ்­சாத எண்­ணிக்­கையாகக் கொண்­டதும் அவர்­களில் ஒருவர் தவி­சா­ள­ரா­கவும் கொண்­ட­தொரு வழிப்­ப­டுத்தும் குழு.

வழிப்­ப­டுத்தும் குழு அர­சி­யலமைப்பு சபையின் அலு­வல்கள் மற்றும் இலங்­கையின் அர­சி­ய­லமைப்பை வரையும் பணி ஆகி­ய­வற்­றுக்­கான பொறுப்­புக்­களை கொண்­டி­ருத்தல் வேண்டும்.

(ஆ) அர­சி­ய­லமைப்பு சபை­யினால் நிய­மிக்­கப்­ப­டக்­கூ­டிய அர­சி­ய­லமைப்பு சபையின் உறுப்­பி­னர்களைக் கொண்ட அத்தகைய ஏனைய உப­கு­ழுக்கள்.

ஆயின், ஒவ்­வொரு உப குழுவும் பதி­னொரு பேரை விஞ்­சா­த­வாறு உறுப்­பி­னர்கள் இருத்தல் வேண்டும். ஒவ்­வொரு உப குழு­வி­னதும் தவி­சாளர் வழிப்­ப­டுத்தும் குழு­வினால் நிய­மிக்­கப்­ப­டுதல் வேண்டும் எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அதே­நேரம் குறித்த தீர்­மா­னத்தில் அர­சி­ய­ல­மைப்பு வரைபு நிறை­வேற்­றப்­படும் முறைமை மற்றும் உரு­வாக்­கப்­பட்ட குழுக்கள் கலைக்­கப்­ப­டுதல் தொடர்­பிலும் 20ஆம் 21ஆம் 22ஆம் 23ஆம் வாச­க­ங்­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

20 ஆவது வாச­கத்தில், அர­சி­ய­லமைப்பு சபை­யினால் சாதா­ரண பெரும்­பான்­மை­யினால் மாத்­திரம் அர­சி­ய­லமைப்பு சட்­ட­மூ­லத்தில் உள்ள பிரே­ர­ணைகள் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டு­மி­டத்து.

பிரே­ர­ணைகள் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படல் வேண்­டு­மென்­ப­துடன் அறிக்­கை­யையும் அர­சி­யலமைப்பு சட்­ட­மூ­லத்­தையும் ஒரு மாதத்­திற்குள் சமுக­ம­ளிக்­காத உறுப்­பி­னர்­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக முழுப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கையில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையால் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டு­மி­டத்து. அர­சி­ய­லமைப்பு சட்­ட­மூலம் அமை­ச்சரவைக்கு சமர்ப்­பிக்­கப்­படல் வேண்­டு­மென்­ப­துடன் இதற்குப் பின்னர் இதன் 21 ஆவது பிரிவின் ஏற்­பா­டுகள் ஏற்­பு­டை­ய­தாகும் என்­ப­துடன் அர­சி­யலமைப்பு சபை மற்றும் பிரே­ர ணையை முன்­வைத்த குழு கலைந்­த­தாக கரு­துதல் வேண்டும்.

21 ஆவது வாச­கத்தில், அர­சி­ய­ல­மைப்புச் சபை அர­சி­ய­ல­மைப்பு வரைபு பற்­றிய தீர்­மா­னத்தை மூன்­றில்­இ­ரண்டு பெரும்­பான்­மை­யினால் அங்­கீ­க­ரிக்­கு­மி­டத்து அறிக்­கை மற்­றும்­அ­ர­சி­ய­ல­மைப்பு வரைவும் வழிப்­ப­டுத்தும் குழு­வினால் அமைச்­ச­ரவைக்குச் சமர்ப்­பிக்­கப்­ப­டுதல் வேண்டும் என்­ப­துடன் இந்த தீர்­மா­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள அர­சி­ய­லமைப்பு சபையும் உப குழுக்­களும் கலைக்­கப்­பட்­ட­தாகக் கரு­தப்­படல் வேண்டும்.

22ஆவது வாச­கத்தில், அர­சி­ய­ல­மைப்புச் சபை மற்றும் 5ஆம் வாச­கத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள உப­கு­ழுக்கள் மற்றும் இந்த தீர்­மா­னத்­துக்கு அமை­வாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள பணி­யாளர் மற்றும் ஆலோ­ச­கர்­க­ளுக்­கான செல­வி­னங்கள் திரட்டு நிதி­யத்தில் இருந்து மேற்­கொள்­ளப்­ப­டுதல் வேண்டும் என்­ப­துடன் அர­சி­ய­லமைப்பி 150ஆவது உறுப்­பு­ரையின் பிர­காரம் அவ்­வி­டயம் தொடர்பில் பொருத்­த­மான நட­வ­டிக்­கைகளைப் பாரா­ளு­மன்றம் மேற்­கொள்ளுதல் வேண்டும்.

இறு­தி­யாக 23ஆவது வாச­கத்தில், சந்­தே­கங்­களைத் தவிர்ப்­ப­தற்­காக, சமூ­க­ம­ளிக்­காத உறுப்­பி­னர்கள் உட்­பட பாரா­ளு­மன்­றத்தின் மொத்த உறுப்­பி­னர்­களின் மூன்றிரண்டு பெரும்­பான்­மை­யினால் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட, பின்னர் அர­சி­ய­லமை­ப்பின் 83ஆவது உறுப்­பு­ரையில் தேவை­ப­டுத்­தப்­பட்­ட­வாறு மக்கள் தீர்ப்­பொன்றின் போது மக்­க­ளினால் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டு­மி­டத்து மாத்­திரம் அர­சி­ய­ல­மைப்பு சட்ட மூலம் சட்­ட­மாக்­கப்­ப­டுதல் வேண்­டு­மென குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இப்­பி­ரே­ர­ணை­யா­னது மார்ச் மாதம் 09ஆம் திகதி வாக்­கெ­டுப்­பின்றி பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டது.

 

வழி­ந­டத்தும் குழு

அத­னை­ய­டுத்து அர­சி­ய­ல­மைப்பு சபையை நிய­மிப்­ப­தற்­கான கட்­ட­மைப்பு தீர்­மா­னத்தின் 05 (அ) பிரிவில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­வாறு அர­சி­ய­ல­மைப்பு சபையின்  முத­லா­வது அமர்வு 2016 ஏப்ரல் 05 ஆம் திகதி நடை­பெற்­ற­போது அர­சி­ய­ல­மைப்புச் சபையின் வழிப்­ப­டுத்தும் குழு­வுக்­கான 21 அங்­கத்­த­வர்­களும் நிய­மிக்­கப்­பட்­டனர். 

வழிப்­ப­டுத்தும் குழு­வுக்கு தலை­வ­ராக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நிய­மிக்­கப்­பட்டார். அமைச்­சர்­க­ளான லக் ஷ்மன் கிரி­யெல்ல, நிமல் சிறி­பால டி சில்வா, ரவூப் ஹக்கீம்,கலா­நிதி.விஜே­தாஸ ராஜ­பக் ஷ, ஏ.டீ.சுசில் பிரே­ம­ஜ­யந்த, ரிஷாட் பதி­யுதீன், பாட்­டலி சம்­பிக ரண­வக்க, டி.எம். சுவா­மி­நாதன், மனோ கணேசன், மலிக் சம­ர­விக்­ரம, இரா­ஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா,  ஆகி­யோரும் எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா­ஜ­வ­ரோ­தயம் சம்­பந்தன், ஜே.வி.பி.தலைவர் அநுரகுமார திஸா­நா­யக்க, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான தினேஷ் குண­வர்­தன, கலா­நிதி ஜயம்­பதி விக்­ர­ம­ரத்ன, எம்.ஏ. சுமந்­திரன், டாக்டர் திரு­மதி துஸிதா விஜே­மான்ன, பிமல் ரத்­நா­யக்க, பிர­சன்ன ரண­துங்க, டக்ளஸ் தேவா­னந்தா ஆகி­யோரும் நிய­மிக்­கப்­பட்­டனர். 

 

வழி­ந­டத்தல் குழுவின் அடிப்­படை குறிப்­புக்கள்

சிலோன் அர­சி­ய­ல­மைப்பு ஆணைக்­குழு ஆணை (1946 சோல்­பரி அர­சி­யல்­யாப்பு), 1972 இல் இயற்­றப்­பட்ட முத­லா­வது குடி­ய­ரசு யாப்பு, 1978ஆம் ஆண்டில் இயற்­றப்­பட்ட இரண்­டா­வது குடி­ய­ரசு யாப்பு, 2000 ஆம் ஆண்டின் அர­சி­ய­ல­மைப்பு வரைபு, புதிய அர­சி­ய­ல­மைப்­பினை அடிப்­படை ரீதியில் வடி­வ­மைக்க அனைத்து கட்சி பிர­தி­நி­தித்­துவ குழுவின் பிரே­ர­ணைகள் ஆகி­ய­வற்றை அடிப்­படை குறிப்பு பொரு­ளாக வழி­ந­டத்தல் குழு எடுத்­துள்­ள­தோடு அடிப்­படை உரி­மைகள் மீதான புதிய அத்­தி­யா­யங்கள் தொடர்­பான குழு அறிக்கை, மற்றும் மக்கள் கருத்­துக்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு பொது பிர­தி­நி­தித்­துவ குழு அறிக்கை ஆகி­யவை தொடர்­பா­கவும் ஆழ­மான கவனம் செலுத்­து­கின்­றது. 

நேர­டி­யாக கையாளப்படும் விட­யங்கள்

புதிய அர­சி­ய­ல­மைப்பின் கணி­ச­மான பல்­வேறு அம்­சங்­களில், சிறந்த ஆய்­வு­களை மேற்­கொள்ளல், திருத்­தங்கள் ஏதேனும் இருப்பின் அவற்­றினை பரி­சீ­லித்து திருத்­தி­ய­மைத்தல், அர­சி­ய­ல­மைப்பு பிரே­ரணை வரைபு செய்தல் ஆகிய பணி­களை வழி­ந­டத்தும் குழு மேற்­கொள்­கின்­றது.  

தற்­போ­தய அர­சியல் யாப்பின் முத­லா­வது மற்றும் இரண்­டா­வது அத்­தி­யாயம் தொடர்பில் கலந்­து­ரை­யாடல், நாட்டின் தன்மை, இறை­யாண்மை, மதம், அர­சாங்­கத்தின் கட்­ட­மைப்பு, தேர்தல் சீர்­தி­ருத்­தங்கள், அதி­காரப் பகிர்­வுக்­கான கோட்­பா­டுகள், காணி ஆகிய  தலைப்­புக்­களின் கீழான கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்டு தீர்­மானம் மேற்­கொள்­வ­தென வழிப்­ப­டுத்தல் குழு­வி­னரால் தன்­ன­கத்தே தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. 

தொடரும்...

http://www.virakesari.lk/article/14679

Link to comment
Share on other sites

புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம்

 

நேற்றைய தொடர்ச்சி...

அதேநேரம் அடிப்படை உரிமைகள், நீதித்துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு, பொது நிதி, பொதுச் சேவை, மற்றும் மத்திய அரசாங்கம் - மாகாண சபைகளுக்கிடையிலான தொடர்பு ஆகிய விடயங்களுக்காக வழிநடத்தல் குழுவால் தனித்தனியாக ஆறு உபகுழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

வழிநடத்தல் குழுவின் நிர்வாகம்

பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற பணியாட்தொகுதியின் தலைமை அதிகாரியுமான நீல் இத்தவல அரசியலமைப்பு சபையின் வழிப்படுத்தும் குழுவின் செயலாளராக விளங்கி அதற்கான சேவையை ஆற்றுவதோடு, நடைபெறும் வழிப்படுத்தும் குழுவின் கூட்டங்களில் பேச்சாளராகவும் உள்ளார்.

 வழிநடத்தும் குழுவின் பணிகளை விரிவாக்கவும், ஒழுங்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அவற்றினை முகாமை செய்யும் வகையில் முகாமைத்துவ குழுவொன்று வழிநடத்தும் குழுவின் இரண்டாவது கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி நடைபெற்ற போது நியமனம் செய்யப்பட்டது.

இந்த முகாமைத்துவ குழுவானது வழிப்படுத்தும் குழு, உப குழுக்கள், மற்றும் அலுவலகர்கள் தேவைகள் உட்பட்ட பணிகளையும் கவனத்தில் கொண்டு சேவையாற்ற வேண்டியுள்ளது. குறித்த முகாமைத்துவ குழுவுக்கான அங்கத்தவர்களில் இணைத்தலைவர்களாக டாக்டர் ஜயம்பதி விக்கிரமரத்ன (இணைத் தலைமை) எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இருக்கின்றனர்.

தலைமை அலுவலராக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும் வழிநடத்தும் குழுவின் செயலாளருமான நீல் இத்தவல, பாராளுமன்ற சபைத் தலைவரின் செயலாளர் அப்துல் நௌபர் ரஹ்மான், பிரதமரின் மேலதிக செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திருமதி பிம்பா திலகரத்ன ஆகியோர் காணப்படுகின்றனர்.

அரசியலமைப்புச் சபையின் செயலகம்

அரசியலமைப்புச் செயற்பாட்டுக்கென வழிநடத்தல் குழுவினரால் உருவாக்கப்பட்ட நிர்வாக அலகாக அரசியலமைப்புச் சபையின் செயலகம் விளங்குகின்றது. அரசியலமைப்பு செயலகமானது பாராளுமன்ற செயலகத்தினுள் செயற்பட்டு வருவதுடன் பாராளுமன்ற செயலாளர் நாயகமாக தம்மிக்க தஸநாயக்க விளங்குவதுடன் பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமாக நீல் இத்தவல விளங்குகின்றார்.

அரசியலமைப்புச் சபையின் இரண்டாவது அமர்வின் போது கடந்த மே மாதம் 5ஆம் திகதி அரசியலமைப்புச் சபைச் செயலகத்துக்கான மேலதிக செயலாளராக திருமதி யுரேஷா பெர்னாண்டோ நியமிக்கப்பட்டார். வழிநடத்தும் குழுவின் ஒழுங்கான அமர்வுகளை திட்டமிடுதல், ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல், குறிப்பிட்ட குழுக்களுக்கு தேவையான வளபொருட்களை வழங்குதல், நிபுணர்களின் பங்களிப்புக்களை ஒருங்கிணைத்தல் மற்றும் ஆய்வுகளுக்கு தேவையான அனுசரணைகளை வழங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளை செயலகம் மேற்கொள்கின்றது.

அத்தோடு வழிநடத்தல் குழுவுக்கு நிபுணர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட கல்வி ஆய்வுகள் மற்றும் நிபுணர்களது வாய்மூலமான கருத்துக்கள் உள்ளிட்ட உள்ளீட்டு மூலவளங்களை வழங்குவதும் ஒழுங்குபடுத்துவதும் அரசியலமைப்புச் செயலகத்தின் பணியாகின்றது. மேலும் வழிநடத்தும் குழுவுக்கும் உப குழுக்களுக்கும் இடையிலான பாலமாகவும் அரசியலமைப்புச்சபை செயலகம் செயற்பட்டு வருகின்றது.

அரசியலமைப்புச் சபை மற்றும் வழிநடத்தல் குழுவால் பேராசிரியர் சுரி ரத்னபால, பேராசிரியர் ஒஸ்டின் புள்ளே, பேராசிரியர் ஏ.ம்.நவரத்ன பண்டார, என்.செல்வக்குமாரன், கலாநிதி கமேனா குணரத்ன கலாநிதி.கபில பெரேரா, சுரேன் பெர்னாண்டோ, நிரான் அன்கிற்றெல், அசோக குணவர்த்தன ஆகியோரடங்கிய நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு மேலதிக சந்தர்ப்பம்

நாட்டு மக்களின் தற்போதைய அபிலாஷைகள் மற்றும் எதிர்கால விருப்பங்களையும் உள்ளடக்கியதாக புதிய அரசியலமைப்பு அமைய வேண்டும் என்பதற்காக வழிநடத்தும் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினைத் தொடர்ந்து, பொது பிரதிநிதித்துவ குழுவிற்கு பிரதிநிதித்துவம் செய்யாத பொதுமக்களுக்கு, அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பற்றிய தங்களது கருத்துக்களை எழுத்து மூலம் நேரடியாக வழிப்படுத்தும் குழுவினருக்கு சமர்ப்பிப்பதற்கு மேலதிகமான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

குறிப்பாக வழிநடத்தும் குழுவின் பிரதிநிதிகள் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பற்றிய கருத்துக்களை எழுத்து மூலம் சமர்ப்பிப்பதற்காக பத்திரிகை விளம்பரமொன்று கடந்த மே மாதம் 10 ஆம் திகதி எழுத்துமூல பிரதிநிதித்துவங்கள், வழிப்படுத்தும் குழு உப குழுக்களினால் தீர்மானிக்கப்பட்ட தலைப்புக்களின் கீழ் அனுப்பப்படல் வேண்டும் என்ற வகையில் விபரங்கள் அடங்கலாக பிரசுரிக்கப்பட்டது. அவ்வகையில் எழுத்துமூல சமர்ப்பணங்களைச் சமர்ப்பிக்கும் கால எல்லை கடந்த மே மாதம் 31ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருந்தது.

பலதரப்பினருக்கும் வழங்கப்பட்ட சந்தர்ப்பம் 

அனைத்து அரசியல் கட்சிகள், தொழில் ரீதியான நிறுவனங்கள், அனைத்துக்கும் தத்தமது எழுத்து மூல பிரதிநிதித்துவங்களை சமர்ப்பிக்கும் படி வேண்டுகோள் விடுக்கும் நடவடிக்கையையும் வழிநடத்தல் குழு செய்திருந்தது. அதுமட்டுமன்றி வழிநடத்தும் குழு ஆரம்ப ஆய்வுகளின் போது, அரசியல் கட்சி மற்றும் ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்கள் குழுவின் முன்னிலையாகி தமது கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் சிறந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

அதுமட்டுமன்றி அந்தந்த துறைகளின் உப குழுக்களுக்கு முன்னிலையில் தமது வாய்மூல சமர்ப்பிப்புக்களை வழங்கும் வகையில் அவர்களுக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்குமான வாய்மூல மற்றும் எழுத்து மூல சமர்ப்பிப்புக்களை வழங்குவதற்கான கால எல்லை வழங்கப்பட்டு பின்னர் அவர்களுக்கான தேவைகளின் பொருட்டு கால எல்லை நீடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு துறை ரீதியிலும் அரசியல் கட்சி பிரதிநிதித்துவங்கள் தமது சமர்ப்பிப்புக்களை அரசியலமைப்பு சபை செயலகத்திடம் சமர்ப்பித்தனர்.

உபகுழுக்கள் விபரம்

ஆறு உப குழுக்களும் அக்குழுவின் தலைவர்களை உள்ளடக்கிய வகையில் 11 அங்கத்தவர்களைக் கொண்ட வகையில், அரசியலமைப்புச் சபையின் அங்கீகரிக்கப்பட்ட வழிநடத்தல் குழுவினரால் நியமிக்கப்பட்டன.

அரசியலமைப்புச் சபையின் அங்கீகரிக்கப்பட்ட வழிநடத்தும் குழுவினரால் பாராளுமன்றத்தினுள் காணப்படும் கட்சி பிரதிநிதித்துவங்கள் மற்றும் அரசியல் கட்சிகளினால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு சமத்துவமான முறையில் இவ் உப குழுக்களுக்கான அங்கத்தவர்களின் நியமனம் அமைந்திருந்தது.

ஆறு உப குழுக்களுக்குமான ஆறு தலைவர்களும் உப குழுவின் அங்கத்தவர்களிலிருந்து பதவியின் சிரேஷ்ட பரிசீலனையின் அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். அத்துடன் உப குழுக்களுக்கான நிர்வாக ஆதரவுகளை வழங்கும் வகையில் பாராளுமன்றத்தின் மூத்த அதிகாரிகள் சிலரும் உப குழுக்களுக்கான செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

'அடிப்படை உரிமைகள்' தொடர்பான உபகுழுவில் அடிப்படை உரிமைகள், மொழி உரிமைகள், அரச கொள்கையின் வழிகாட்டும் நெறிகள், குடியுரிமை மற்றும் பல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன. இக்குழுவின் உறுப்பினர்களாக மஹிந்த சமரசிங்க(தலைவர்), அநுராத ஜயரத்ன திருமதி பவித்ராதேவி வன்னியாரச்சி, விஜித ஹேரத், வாசுதேவ நாணயக்கார வணக்கத்துக்குரிய அத்துரலிய ரத்ன தேரர், எஸ்.ஸ்ரீதரன், அ.அரவிந்த் குமார் டாக்டர் ஜயம்பதி விக்கிரமரத்ன, டாக்டர் திருமதி துஷித விஜேமன்ன, எம்.எச்.எம்.சல்மான் உள்ளனர்.

'நீதித்துறை' தொடர்பான உபகுழுவில் நீதித்துறை, நீதிமன்றங்களின் அமைப்பு, நீதிமன்ற பரிசீலனை, அடிப்படை உரிமைகள் சட்ட அதிகாரம் உள்ளடங்கலாக நீதித்துறையின் செயலாட்சி, அரசியலமைப்பு, நீதிமன்றம் மற்றும் பல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன. இக்குழுவின் உறுப்பினர்களாக ரவூப் ஹக்கீம் (தலைவர்) அநுர பிரியதர்ஷன யாப்பா, நவீன் திஸாநாயக்க, திருமதி தலதா அதுகோரள, சந்திம வீரக்கொடி, சுஜீவ சேனசிங்க, திருமதி ஸ்ரீயாணி விஜேவிக்கிரம, எம்.ஏ.சுமந்திரன், உதய பிரபாத் கம்மன்பில, டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோர் உள்ளனர்.

'சட்டம் மற்றும் ஒழுங்கு' தொடர்பான உபகுழுவில் சட்டம் மற்றும் ஒழுங்கு, பொதுமக்கள் பாதுகாப்பு, அவசர தேவை மற்றும் பல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படும். இக்குழுவின் உறுப்பினர்களாக சாகல ரத்நாயக்க (தலைவர்) டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன, பழனி திகாம்பரம், அமீர் அலி சிஹாப்தீன், அஜித் பி.பெரேரா, டக்ளஸ் தேவானந்தா, அநுர திஸாநாயக்க, எம்.எஸ். தௌபீக், மாவை எஸ்.சேனாதிராஜா, நாமல் ராஜபக் ஷ, செஹான் சேமசிங்க ஆகியோர் உள்ளனர்.

'பொது நிதி' தொடர்பான உபகுழுவில் பொதுநிதி, மாகாண மட்டத்திலான நிதி, பொது நிறுவனங்கள், மத்திய வங்கி மற்றும் பல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன. இக்குழுவின் உறுப்பினர்களாக பந்துல குணவர்த்தன (தலைவர்), டாக்டர் சரத் அமுனுகம, வி.எஸ். இராதாகிருஷ்ணன், டாக்டர் திருமதி அனோமா கமகே, டாக்டர் ஹர்ஷ த சில்வா, இரான் விக்கிரமரத்ன, முத்து சிவலிங்கம், கெஹெலிய ரம்புக்வெல்ல, சுனில் ஹந்துன்னெத்தி, ஈ.சரவணபவன், தாரக்க பாலசூரிய ஆகியோர் உள்ளனர்.

'பொதுச் சேவை' தொடர்பான உபகுழுவில் பொதுச் சேவை, பொதுச் சேவை ஆணைக்குழு, மாகாண அரச சேவை, உள்ளூராட்சி சேவை, மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளடங்கலாக சுதந்திர ஆணைக்குழுக்கள், குறைகேள் அலுவல் மற்றும் பல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன. இக்குழுவின் உறுப்பினர்களாக ஏ.டீ.சுசில் பிரேமஜயந்த (தலைவர்), கருணாரத்ன பரணவிதான, சந்திரசிறி கஜதீர, நிஹால் கலப்பத்தி, ஜே.சீ. அலவத்துவல, அப்துல்லா மஹ்ரூப், டாக்டர் ரமேஷ் பதிரண, வேலுகுமார், ஹர்ஷன ராஜகருணா, முஜிபுர் ரஹ்மான், ஞானமுத்து ஸ்ரீநேசன் ஆகியோர் உள்ளனர்.

'மத்திய அரசாங்கம் - மாகாண சபைகளுக்கிடையிலான தொடர்பு' குறித்த உபகுழுவில் மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண சபை ஆணைக்குழுக்களுக்கும் இடையிலான தொடர்பு, உள்ளூர் அதிகார சபைகள், மாகாணசபை நிறைவேற்று அதிகார சபை, மத்திய நிலையங்களுக்கான தகுதிகள், மாகாணங்கள் மற்றும் உள்ளூர் அதிகார சபைகள், நிர்வாக அமைப்பு (மாவட்ட செயலாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள்) மற்றும் பல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன இக்குழுவில் தர்மலிங்கம் சித்தார்த்தன் (தலைவர்), டிலான் பெரேரா, எச்.எம்.எம். ஹரீஸ், டலஸ் அழகப்பெரும, பிமல் ரத்னாயக்க, விதுர விக்கிரமநாயக்க, மயில்வாகனம் திலகராஜா, சனத் நிஷாந்த பெரேரா, எஸ்.எம்.மரிக்கார், திருமதி ரோஹினி குமாரி விஜேரத்ன, விஜேபால ஹெட்டியாராய்ச்சி ஆகியோர் உள்ளனர்.

வழிப்படுத்தும் குழுவினரால் நேரத்துக்கு நேரம் வடிவமைக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் வழிமுறைகள் அனைத்தும் ஆழ்ந்த அவதானிப்பின் பொருட்டு உப குழுக்களுக்கு முன்னிலையாக சமர்ப்பிக்கப்பட்டன. சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அவை அனைத்தும் உப குழுக்களின் தலைவர்களுக்கு உரிய முறையில் பரிமாறப்பட்டு ஆராயப்பட்டன. அவ்வகையில் பரிமாறப்பட்ட அனைத்து அறிக்கைகளும் உப குழுக்களின் தலைவர்களால் ஆழ்ந்து ஆராயப்பட்டன.

இந்த உபகுழுக்கள் பல்வேறு கலந்தாய்வுகளை மேற்கொண்டு தமது இறுதி அறிக்கைகளை வழிநடத்தும் குழுவிற்கு சமர்ப்பித்துள்ளன. வழிநடத்தல் குழுவின் தலைவர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அந்த அறிக்கைகள் ஆறும் அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 9,10,11ஆம் திகதிகளில் அவ்வறிக்கைகள் மீதான விவாதங்கள் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளன.

இவ்வாறான நிலையில் அரசிய லமைப்பை உருவாக்கும் கடினமான பயணத்தில் பங்கேற்றுள்ள வழிநடத்தல் குழுவின் பிரதிநிதிகளின் கருத்து பதிவுகள் அடுத்து....   

வெள்ளியன்று தொடரும்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-12-24#page-5

Link to comment
Share on other sites

புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (03)

 

 

(ஆர்.ராம்)

புதிய அர­சியல் சாசன உரு­வாக்­கத்­திற்­காக அர­சி­ய­ல­மைப்புச் சபையால் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான வழி­ந­டத்தல் குழுவின் அங்­கத்­த­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்பின் விட­ய­தா­னங்கள், விட்­டுக்­கொ­டுப்­பற்ற மன­நி­லையில் உள்ள தென்­னி­லங்கை தலை­வர்­க­ளி­ட­மி­ருந்து தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வு புதிய சாச­னத்­தி­னூ­டாக கிடைக்­குமா என இயல்பாக எழுகின்ற வினாக்கள், பொதுமக்களின் சந்தேகங்கள் தொடர் பில் கருத்துக்களை பதிவு செய்தார்.

கேள்வி: -அர­சி­ய­ல­மைப்பு பணிகள் இடம்­பெற்று வரும் இத்­த­ரு­ணத்தில் புதிய அர­சிய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­டு­கின்­றதா? தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பில் திருத்­தங்கள் மேற் ­கொள்­ளப்­ப­டு­கின்­றதா? 

பதில்:- இந்த ஆண்டு ஜன­வரி மாதம் 9ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக செயற்­ப­டு­வது தொடர்­பான தீர்­மா­னத்தின் பிர­காரம் இந்த நாட்­டுக்கு முழு­மை­யான அர­சி­ய­ல­மைப்பு வரை­பொன்றை வரை­யப்­ப­ட­வேண்­டு­மென்றே கூறப்­பட்­டுள்­ளது. ஆகவே அது தொடர்­பான சந்­தே­கங்கள் யாருக்கும் இருக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. 

அத்­தோடு முழு­மை­யான அர­சி­ய­ல­மைப்பு வரைபு வரை­யப்­பட்­டதன் பின்னர் பாரா­ளு­மன்­ற­த்தில் மூன்­றிலி­ரண்டு பெரும்­பான்மை கிடைத்தால் அந்த வரைபு  அமைச்­ச­ர­வைக்கு அனுப்­பப்­படும்.  அமைச்­ச­ரவை சாதா­ர­ண­மாக சட்ட­மொன்றை இயற்­று­வ­தற்­கான படி­மு­றை­களை கையாண்டு அதனை வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்கும். அதன்

பின்னர் பாரா­ளு­மன்­றத்தில் மூன்­றி­லிரண்டு பெரும்­பான்மை கிடைக்­கப்­பெற்­றதை­ய­டுத்து மக்­களின் அனு­ம­திக்­காக பொது­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு விடப்­ப­டு­மென அத்­தீர்­மா­னத்தில் சொல்­லப்­பட்­டி­ருக்­கின்­றது.  

sssa.jpg

கேள்வி:- தற்போ­தைய சூழலில் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் பணிகள் எந்த மட்­டத்தில் உள்­ளது?

பதில்:- அர­சி­ய­ல­மைப்பு பேரவை ஸ்தாபிக்­கப்­பட்டு வழி­ந­டத்தல் குழு­வொன்றை நிய­மித்­தது. வழி­ந­டத்தும் குழு தான் அர­சி­ய­லமைப்பு வரைபை உரு­வாக்கி அர­சி­ய­ல­மைப்பு பேர­வைக்கு சமர்ப்­பிக்க வேண்­டிய பொறுப்பைக் கொண்­டி­ருக்­கின்­றது. 

வழி­ந­டத்தல் குழு­வா­னது 12விட­யங்­களை ஆரம்­பத்­தி­லேயே அடை­யாளம் கண்டு கொண்­டது. அதில் அடிப்­படை உரி­மைகள், நீதித்­துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு, பொது நிதி, பொதுச் சேவை, மத்­திய அர­சாங்­கத்­துக்கும் - மாகாண சபை­க­ளுக்கும் இடை­யி­லான உறவு ஆகிய ஆறு விட­யங்­களை அடை­யாளம் கண்டு அவற்றை ஆறு உப­கு­ழுக்­க­ளிடத்தில் பாரப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. அந்த உப­கு­ழுக்கள் அறிக்­கை­களை சமர்­ப்பித்­துள்­ளன. 

எஞ்­சி­யுள்ள ஆறு விட­யங்கள் தொடர்­பா­கவும் வழி­ந­டத்தும் குழு தானா­கவே பேச்­சு­வார்த்­தையில் ஈடு­பட்டு அவை நிறை­வ­டைந்த பின்னர் இடைக்­கால அறிக்­கை­யொ­ன்றை சமர்ப்­பிப்­ப­தாக இருந்­தது. டிசம்பர் மாதம் 10ஆம் திகதி அந்த அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­டு­வதாக இருந்­தாலும் கூட சில கட்­சி­களின் வேண்­டு­கோளுக்கிணங்க  தற்­போது தாம­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

எனினும் எதிர்வரும் ஜன­வரி மாதம் 9ஆம், 10ஆம் திகதிகளில் விவா­தங்கள் நடை­பெ­று­வ­தற்கு முன்­ன­தாக அந்த அறிக்­கைகள் வெளியி­டப்­ப­டு­மென நாம் நம்­பு­கின்றோம். அனைத்து விட­யங்­களும் பேசப்­பட்டு தீர்­மா­னிக்­கப்­பட்­டு­விட்­ட­தாக கூற­மு­டி­யாது. சில முக்­கி­ய­மான விட­யங்கள் சம்­பந்­த­மாக தீர்­மா­னங்கள் இது­வ­ரையில் மேற்கொள் ளப்படாதிருக்கின்ற­போதும் அவ்­வி­ட­யங் கள் சம்­பந்­த­மாக நீண்ட பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டி­ரு­கின்­றது. 

அந்த பேச்­சுக்­களின் அடிப்­ப­டையில் வெவ்­வேறு தெரி­வுகள் மக்கள் முன்­பாக சமர்ப்­பிக்­கப்­ப­டலாம் என்ற தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆகவே இடைக்­கால அறிக்­கையை வெளியி­டு­வ­தற்கு அனைத்து கட்­சி­களும் இணங்கும் பட்­சத்தில் எந்த மாதி­ரி­யான அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்தை அனை­வரும் எதிர்­பார்த்­தி­ருக்­கின்றோம் என்­பது தெரி­ய­வரும். 

ddddsssssss.jpg

கேள்வி:- புதிய அர­சி­ய­ல­மைப்பு தமிழ் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வொன்றை பெற்­றுக்­கொ­டுக்கும் என எந்த அடிப்­ப­டையில் எதிர்­பார்ப்­புக்­களைக் கொண்­டி­ருக்­கின்­றீர்கள்? 

பதில்:- இந்த நாட்டில் உரு­வாக்­கப்­பட்ட குடி­ய­ரசு அர­சியல் யாப்­புக்கள் இரண்டும் தமிழ் மக்கள், தமிழ் பேசும் மக்­களை புறந்­தள்­ளியே உரு­வாக்­கப்­பட்­டுள்ளன. இனப்­ பி­ரச்­சினை இவ்­வ­ளவு பூதா­க­ரமாக எழு­வ ­தற்கு அவைஅடிப்­ப­டையாக இருந்தன. அவ்­வா­றான நிலையில் புதிய அர­சி­ய­ல­மைப்­பா­னது தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வை அளிப்­ப­தையே பிர­தான இலக்­காக கொண்டு உரு­வாக்­கப்­ப­டு­கின்­றது. உரு­வாக்கப்­படும் அர­சி­ய­ல­மைப்புச் சட்­ட­மா­னது தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வை வழங்காது ஏனைய விட­யங்­களை கொண்­டி­ருக்­கு­மாயின் அதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. 

கேள்வி:- உப­கு­ழுக்­களில் முரண்­பா­டான விட­யங்கள் முன்­மொ­ழி­யப்­பட்­ட­னவா? அவை உள்­வாங்­கப்­பட்­டுள்­ள­னவா? 

பதில்:- அனைத்துக் கட்­சி­களும் உப­கு­ழுக்­களில் அங்கம் வகிக்கின்றன. சில உப­கு­ழுக்­களில் பொது எதி­ர­ணி­யினர் தங்­க­ளு­டைய மாறு­பட்ட கருத்­துக்­களை முன்­வைத்­தனர். அவை அந்­தந்த அறிக்­கையில் குறிக்­கப்­பட்­டுள்­ளன. சில உப­கு­ழுக்­களில் பொது எதி­ர­ணி­யினர் வழி­ந­டத்தல் குழு­விற்கு நேர­டி­யாக அறிக்­கையை சமர்ப்­பிப்­ப­தாக கூறி­யி­ருந்­தனர். 

உப­கு­ழுக்­களின் அறிக்­கைகள் கிடைத்­ததன் பின்னர் வழி­ந­டத்தும் குழு­வா­னது மாறு­பட்ட கருத்­துக்­களை நேர­டி­யாக அழைத்து அவர்­க­ளி­டத்தில் கருத்­துக்­களை கேட்­ட­றிந்­தது. அதன்­போதும் அறிக்­கை­யொன்றின் மூல­மாக தமது கருத்­துக்­களை வழங்­குவோம் எனக் கூறி­யி­ருக்­கின்ற போதும்

தற்­போது வரையில் அவர்கள் அறிக்­கையை கைய­ளித்­தி­ருக்­க­வில்லை. 

ஆகவே உப­கு­ழுக்­களின் அறிக்­கைகள் அனைத்து கட்­சி­களின் கருத்­துக்­களை உள்­ள­டக்­கி­ய­தா­கவும் அதே­நேரம் வழி­ந­டத்தல் குழுவில் அந்த அறிக்­கை­க­ளுக்கு எதிர்ப்­புக்கள் இல்­லாத நிலை­யிலே தான் அந்த அறிக்­கைகள்  பேர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

கேள்வி:- தேர்தல் முறைமை தொடர்­பாக எவ்­வா­றான இணக்­கப்­பா­டுகள் எட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன?

பதில்:- தேர்தல் முறை­மையை வழி­ந­டத்தும் குழுவே கையா­ளு­கின்­றது. அந்த விடயம் சம்­பந்­த­மாகத் தான் முத­லா­வ­தாக பேசப்­பட்­டது. தேர்தல் முறைமை சம்­பந்­த­மாக இறுதி தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வில்லை என்­றாலும்கூட தேர்தல்முறைமை சம்பந்தமாக உள்ள அடிப்­படைக் கொள்­கைகள் சார்பில் இணக்கம் ஏற்­பட்­டுள்­ளது. குறிப்­பாக கோட்­பாட்­ட­ளவில் ஒரு கலப்பு தேர்தல் முறை­மைக்கு சகல அர­சியல் கட்­சி­களும் இணங்­கி­யுள்­ளன. 

எந்­தெந்த விகி­தா­சா­ரத்தில் தொகுதி முறையும், பிர­தி­நி­தித்­துவ முறையும் அமை­ய­வேண்டும் என்­பதில் இணக்கம் ஏற்­பட்­டுள்­ளது. அத்­தோடு இரண்­டா­வது சபையை ஸ்தாபிப்­பது தொடர்­பா­கவும் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது. 

இரண்­டா­வது சபையை ஸ்தாபித்தல் என்ற விட­யத்தில் குறிப்­பாக மாகாண சபை பிர­தி­நி­தித்­து­வத்­திற்கு முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­பட்­டுள்­ளது. 

கேள்வி: -இரண்­டா­வது சபை­யா­னது எவ்­வாறு ஸ்தாபிக்­கப்­படும்?

பதில்:-இரண்­டா­வது சபை எவ்­வாறு அமைய வேண்டும் என்­பது குறித்து இது­வ­ரையில் முடி­வான தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வில்லை. இருப்­பினும் ஒவ்­வொரு மாகாண சபை­யி­லி­ருந்தும் தலா ஐவர் தெரிவு செய் ­யப்­ப­டு­வார்கள். அந்த ஐவரில் முத­ல­மைச் சர் நிச்­ச­ய­மாக இருக்க வேண்டும். அவர் உள்­ள­டங்­க­லாக மாகாண அமைச்­ச­ரவை அந்­தஸ்து இல்­லா­த­வர்­களும் இக்­கு­ழுவில் இருக்க முடியும் என சிபாரிசு செய்­யப்­பட்­ டுள்­ளது. அந்த அடிப்­ப­டையில் முத­ல­மைச் சர் உட்­பட தலா ஐவர் கொண்ட குழு­வினர் இரண்­டா­வது சபைக்கு தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள். 

அதனைவிட பாரா­ளு­மன்ற தீர்­மா­னத்­திற்கு அமை­வாக பத்து உறுப்­பி­னர்­கள் தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள் அவ்­வாறு தெரிவு

செய்­யப்­ப­டுப­வர்கள், பல்­வேறு துறை­களில் தமது திற­மை­களை காட்­டி­ய­வர்கள், கட்சி அல்­லது தேர்தல் அர­சி­ய­லுக்குள் வர விரும்­பா­த­வர்கள் ஆகி­யோரின் பங்­க­ளிப்­பையும் பெற்­றுக்­கொள்ளும் வித­மாக தெரி­வுகள் இடம்­பெ­று­வ­தற்கு சிபார்சு செய்­யப்­பட்­டுள்­ளது. 

கேள்வி:- புதிய அர­சி­ய­ல­மைப்பில் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை ஒழிக்­கப்­படும் என கூறப்­பட்­டாலும் அவ்­வா­றான அதி­கா­ரங்கள் அனைத்­தையும் பாரா­ளு­மன்­றத்­திற்கு வழங்­கு­வதன் ஊடாக பிர­தமர் நிறை­வேற்று அதி­கா­ரத்தைக் கொண்­ட­வ­ரா­கின்­றாரே?

பதில்:- நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மை நீக்­கப்­ப­ட­வேண்டும் என்ற கருத்துக்கு அனைத்துக் கட்­சி­களும் இணங்­கி­யுள்­ளன. அதன்­பி­ர­காரம் நிறை­வேற்று அதி­கா­ரத்தை நீக்­கி­விட்டு அதற்கு மாற்­றீ­டாக உள்­ளீர்க்­கப்­ப­ட­வுள்ள முறை­மைக்­காக மூன்று யோச­னைகள் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளன.

முத­லா­வ­தாக பிரித்­தா­னி­யாவில் பின்­பற்­றப்­படும் வெஸ்­மி­னிஸ்டர் முறைமை காணப்­ப­டு­கின்­றது. இரண்­டா­வ­தாக பிர­த­மரை நேர­டி­யாக மக்கள் தெரிவு செய்­கின்ற முறை காணப்­ப­டு­கின்­றது. இந்த முறை­மையை தொடர்பில் தான் அச்­ச­ம­டை­கின்­றார்கள். நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­பட்­டாலும் அதற்கு ஈடாக பிர­தமர் நிறை­வேற்று அதி­கா­ரத்தை கொள்­கின்றார் என அச்சம் வெளியி­டு­கின்­றார்கள். அது நியா­ய­மா­ன­தொரு அச்­ச­ம­டையக் கூடிய விடயம். 

மூன்­றா­வ­தாக முழு­மை­யாக வெஸ்­மி­னிஸ்டர் முறை­மையும் இல்­லாத இடைப்­பட்ட முறை­யொன்று சிபார்சு செய்­யப்­பட்­டுள்­ளது. ஆதா­வது பாரா­ளு­மன்ற தேர்தல் நடை­பெ­று­வ­தற்கு முன்­ன­தாக ஒவ்­வொரு கட்­சியும் தங்­க­ளு­டைய கட்சி சார்பில் பிர­தமர் வேட்­பா­ளர் யார் என்­பதை அறி­விக்க வேண்டும். இம்­மு­றை­மைகள் தொடர்பில் அர­சி­ய­ல­மைப்பு பேர­வையில் விரி­வாக ஆரா­யப்­படும். 

கேள்வி:- அர­சி­ய­ல­மைப்பு நீதி­மன்­ற­மொன்றை நிறு­வு­வ­தற்­கான சிபார்சு செய்­யப்­பட்­டுள்ள நிலையில் அதற்­கான சாத்­தி­யப்­பா­டுகள் எவ்­வா­றி­ருக்­கின்­றன? 

பதில்:- இலங்­கையில் அர­சி­ய­ல­மைப்பு நீதி­மன்றம் காணப்­பட்­டி­ருக்­கின்­றது. 1972ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் அர­சி­ய­ல­மைப்பு நீதி­மன்றம் உரு­வாக்­கப்­பட்டு சிறப்­பாக முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. ஆகவே இதனை சாத்­தி­ய­மற்ற விட­ய­மாக சொல்ல முடி­யாது. 

என்­னு­டைய தனிப்­பட்ட நிலைப்­பாட் டின் பிர­காரம், உச்ச நீதி­மன்றம் வழக்­கு­க­ளி­னு­டைய இறுதி நீதி­மன்­ற­மாக இறுதி மேன்­மு­றை­யீ­டு­களை கையா­ளு­கின்ற நீதி­மன்­ற­மாக இருக்கும். 

அர­சி­ய­ல­மைப்பு சம்­பந்­த­மான விட­யங்­களை, சட்ட மூலங்கள் சம்­பந்­த­மான விட­யங்­களை வியாக்­கி­யா­னப்­ப­டுத்­து­வ­தற்கு, பொருள்­கோ­டல்­களை கொடுப்­ப­தற்கு மத்­திக்கும் மாகா­ணத்­திற்கும் அல்­லது மாகா­ணங்­க­ளுக்­கி­டையில் சிக்­க­ல்கள் ஏற்­படும் பட்­சத்தில் தீர்ப்­ப­தற்­காக உயர் நீதி­மன்றம் செயற்­ப­டு­வதை விடவும் அதற்­கென விசேட நீதி­மன்றம் இருப்­பது சிறந்­தது. 

http://www.virakesari.lk/article/14928

Link to comment
Share on other sites

On 31.12.2016 at 5:38 PM, நவீனன் said:

புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (04)

 

 

தொடர்ச்சி......

( ஆர். ராம்)

குறித்த நீதி­மன்­றத்­திற்கு நீதி­ப­தி­களை தவி­ரவும் அர­சி­ய­ல­மைப்பு நிபு­ணத்­துவம் வாய்ந்­த­வர்களை குறித்த அந்த நீதி­மன்­றத்தின் நீதி­ப­தி­க­ளாக ஐந்து வரு­ட­கா­லத்­திற்கு மாத்­திரம் உள்­ள­டக்­கி­ய­தாக ஏற்­பா­டு­களை செய்­வது சிறந்­த­தாகும். 

ram02.jpg

 

கேள்வி:- அர­சி­ய­ல­மைப்பு நீதி­மன்றம் உரு­வாக்­கப்­படும் பட்­சத்தில் உயர் நீதி­மன்­றத்தின் மீயுயர் தன்மை இழக்­கப்­ப­டு­கின்­ற­தல்­லவா?

பதில்:- ஆம். மீயுயர் தன்மை சிறிது வலு­வி­ழக்­கப்­படும். ஆனாலும் தற்­போ­தி­ருக்­கின்ற நீதி­மன்­றக்­கட்­ட­மைப்பின் பிர­காரம் உயர்­நீ­தி­மன்­றமே உயர்ந்­தது. அர­சி­ய­ல­மைப்பு பற்­றிய பொருள்­கோ­ட­லுக்­கான அவ­சியம் ஏற்­பட்டால் அதனை சீர் செய்யும் நீதி­மன்ற  நியா­யா­திக்கம் அர­சி­ய­ல­மைப்பு நீதி­மன்­றத்­திற்கு மட்­டுமே இருக்கும். 

ஆரம்­பத்தில் அர­சி­ய­ல­மைப்பு நீதி­மன்றம் தொடர்பில் முன்­மொ­ழி­கின்­ற­போது நீதி­ப­திகள் கூட விரும்­பி­யி­ருக்­கவில்லை. இருப்­பினும் அது தொடர்­பாக உப­கு­ழுவில் கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தை­ய­டுத்து அவர்கள் ஏற்­றுக்­கொண்­டுள்­ளார்கள். ஆகவே இந்த முன்­மொ­ழிவு நடை­மு­றைக்கு வரு­கின்­ற­போது ஏனைய நாடு­களின் அனு­ப­வங்­க­ளையும் கருத்­திற்­கொண்டே நடை­மு­றைப்­ப­டுத்­துவோம்.

 

கேள்வி:- நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை மாற்­றப்­பட்டு பாரா­ளு­மன்­றத்­திற்­கான அதி­காரம் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­போது ஜனா­தி­பதி பதவி வெறு­மனே கௌர­வப்­ப­த­வி­யா­கி­வி­டுமே?

பதில்:-ஆம்.பெய­ர­ள­வி­லேயே ஜனா­தி­பதி என்­கின்ற நிலைமை தான் ஏற்­படும். எமது நாட்டில் 1978ஆம் ஆண்டு வரையில் இருந்த நிலை­மை­க்கே மீண்டும் செல்­வ­தா­க இருக்கும். 

வர­லாற்றை எடுத்­துப்­பார்க்­கையில் நிறை­ வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மை­யா­னது இந்த நாட்டில் எதேச்சா­தி­கா­ரத்­திற்கு தான் வழி­கோ­லி­யி­ருக்­கின்­றது. முத­லா­வது நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தி­யான ஜே.ஆர்.ஜெய­வர்த்தன முதல் இறு­தி­யாக மஹிந்த ராஜ­பக் ஷ வரையில் அதி­கார துஷ்­பி­ர­யோ­கத்தை தான் மேற்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். இதில் விதி­வி­லக்­காக சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்­கவை சொல்ல முடியும். 

அதன் பிர­காரம் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை மாற்­றப்­பட்டு பாரா­ளு­மன்­றத்­திற்கு பொறுப்­புக்­கூ­றக்­கூ­டிய நாட்டின் தலைவர் இருக்­க­வேண்­டு­மென்­பதே பலரின் கருத்­தா­கின்­றது. 

அது­வொ­ரு­பு­ற­மி­ருக்­கையில், எமக்­குள்ள பிர­தான பிரச்­சினை மாகாண ஆளு­நர்களின் அதி­கா­ரங்கள். தற்­போது இருக்­கின்ற அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் மக்­களால் நேர­டி­யாக தெரிவு செய்­யப்­படும் ஜனா­தி­ப­திக்கு காணப்­படும் நிறை­வேற்று அதி­கா­ரத்­தினால் அவர் தன்­னு­டைய முக­வ­ராக உள்ள மாகாண ஆளு­நர்­க­ளுக்கு அதி­க­ள­வான அதி­கா­ரங்­களை வழங்க முடியும் என 13ஆவது திருத்­தச்­சட்­டத்­திற்கு வழங்­கப்­பட்ட பொருள்­கோ­டலில் நீதி­மன்றம் குறிப்­பிட்­டுள்­ளது. 

ஆகவே நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை நீக்­கப்­ப­டு­கின்­ற­போது மாகாண ஆளு­நர்­க­ளுக்­கான அதி­காரம் நீக்­கப்­ப­டு­வ­தற்கும் வழி­யேற்­படும். மாகா­ணங்­களைப் பொறுத்­த­வ­ரையில் ஆளு­நர்கள் பெய­ர­ள­விலே இருப்­ப­தோடு மக்­களால் தெரிவு செய்­யப்­ப­டு­ப­வர்­க­ளி­டத்தில் தான் மாகாண நிறை­வேற்று அதி­கா­ரங்கள் வழங்­கப்­ப­ட­வேண்டும். அவ்­வாறு செய்­கின்­ற­போது தான் அதி­கா­ரங்கள் மக்கள் கையிலே பகி­ரப்­பட்­ட­தாக இருக்கும். 

கேள்வி:மாகா­ணங்­க­ளுக்கு பொலிஸ் அதி­கா­ரத்தை உறுதி செய்­வ­தற்­காக செய்­யப்­பட்­டுள்ள முன்­மொ­ழி­வு­களின் பிர­காரம் அர­சியல் பிர­தி­நி­தி­யொ­ரு­வ­ரி­டத்தில்(மாகாண முத­ல­மைச்­ச­ரி­டத்தில்) பொலிஸ் தரப்பை கையாளும் அதி­காரம் நேர­டி­யாக கைய­ளிக்­கப்­ப­டு­கின்­றதே?

பதில்:- அர­சி­ய­ல­மைப்பில் 13ஆவது திருத் தம் செய்­யப்­பட்­ட­போது இருந்த நிலைமை 17ஆவது திருத்தம் மேற்­கொள்­ளப்­பட்ட பின்னர் மாறி­யி­ருந்­தது. பொலி­ஸாரின் சுயா­தீன தன்மை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. 18ஆம் திருத்­தத்தின் ஊடாக மீண்டும் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. இருப்­பினும் 19ஆம் திருத்­தத்தின் ஊடாக மீண்டும் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. 

பொலிஸ் பிரிவு சுயா­தீ­ன­மாக இயங்க வேண்­டு­மென்­பது நாடு பூரா­கவும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. அவ்­வா­றி­ருக்­கையில் மாகா­ணத்தில் பொலிஸ் அதி­கா­ரத்தை கொடுக்­கின்­ற­போது அங்கே அர­சியல் தலை­யீ­டுகள் ஏற்­ப­டு­வதை யாரும் விரும்­பாத விடயம். 

மத்­தியில் எவ்­வாறு சுயா­தீன பொலிஸ் ஆணைக்­குழு செயற்­ப­டு­கின்­றதோ அதே­போன்று மாகாண பொலிஸ் ஆணைக்­கு­ழுக்­க­ளுக்கும்  சுயா­தீன தன்மை வழங்­கப்­பட்டு அதன் கீழே தான் பொலிஸ் தரப்பும் தமது செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான முன்­மொ­ழிவே  உப­கு­ழுவால் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளது. இது 13ஆவது சரத் தில் காணப்­ப­டா­ததும் அதே­நேரம் பொலிஸின் சுயா­தீ­னத்­தையும் உறு­தி­செய்வது புதிய விடய­மா­கின்­றது.

 

கேள்வி:-காணி அதி­கா­ரங்கள் வழங்­கப்­ப­டு­வது குறித்து எவ்­வா­றான முன்­னேற்றம் காணப்­ப­டு­கின்­றது?

பதில்:- காணி அதி­கா­ரங்கள் சம்­பந்­த­மான விட­யங்­களை நேர­டி­யாக வழி­ந­டத்தல் குழுவே கையா­ளு­கின்­றது. அது குறித்து ஆரா­யப்­பட்­டுள்­ள­போதும் இறுதி முடிவு எடுக்­கப்­ப­ட­வில்லை. 2000ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா அம்­மை­யாரால் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான நகல் வரை­பொன்று பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்­டது. 

அந்த வரைபில் எவ்­வாறு காணி அதி­கா­ரங்கள் மாகா­ணங்­க­ளுக்கு பகி­ரப்­ப­டலாம் என்­பது கூறப்­பட்­டுள்­ளது. அத­னைத்­தொ­டர்ந்து மஹிந்த ராஜ­ப­க் ஷவின் காலத்தில் சர்வ கட்­சி­களின் திஸ்ஸ விதா­ரண அறிக்­கை­யிலும் காணி அதி­கா­ரங்கள் பற்றி அறிக்கை உண்டு. ஆகவே அவற்­றை­யொட்­டி­ய­தா­கவே காணி அதி­கா­ரங்கள் பகி­ரப்­ப­டு­வ­தற்­கான இறுதி வடிவம் அமையும் என்ற நம்­பிக்கை உள்­ளது. குறிப்­பாக மாகா­ணத்தின் அனு­ம­தி­யின்றி காணி­களை மத்தி எவ­ருக்கும் வழங்­கலாம் என்ற தற்­போ­துள்ள முறைமை நிச்­ச­ய­மாக தடுக்­கப்­படும். 

ram01.jpg

கேள்வி:- மத்­திக்கும்  மாகா­ணத்­திற்கும்  இடையில் அதி­கார எல்லை தொடர்­பாக  குழப்­பங்கள் ஏற்­ப­டு­வ­தற்கு கார­ண­மா­க­வி­ருக்கும் ஒத்­தி­சைவு பட்­டியல் நீக்­கப்­ப­டுமா?

பதில்:- ஒத்­தி­சை­வுப்­பட்­டியல் நீக்­கப்­பட­ வேண்டும் என்­பதே அனை­வ­ரி­னதும் ஏகோ­பித்த நிலைப்­பா­டாக இருக்­கின்­றது. குறிப்­பாக பொது எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹ­லிய ரம்­புக்­வெல்ல கூட தனது அறிக்­கையில் ஒத்­தி­சை­வுப்­பட்­டியல் நீக்­கப்­ப­ட­வேண்­டு­மென கோரி­யி­ருந்தார். இருப்­பினும் அந்த அறிக்­கையை அவர் மீளப்­பெற்­று­விட்டார். சந்­தி­ரி­காவின் வரைவு, திஸ்ஸ விதா­ரண அறிக்கை, தற்­போ­தைய உப­கு­ழுக்­களின் பரிந்­துரை அறிக்­கைகள் என எதிலும் ஒத்­தி­சைவு பட்­டியல் பற்றி குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. 

தேசிய கொள்கை என்­பது அதி­கா­ரப்­ப­கிர்­வுக்கு தடங்­க­லான விட­ய­மாக உள்ளது என்பதை எமது அனு­ப­வத்தில் கண்­டி­ருக்­கின்றோம். இருப்­பினும் சில விட­யங்­களில் தேசிய கொள்கை அவ­சி­ய­மா­கின்­றது. தேசிய கொள்­கை­யா­னது துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்­டி­ருந்­தாலும் கூட அத்­தி­யா­வ­சி­ய­மாக இருக்­கின்­றது. ஜேர்மனி போன்ற நாடு­களில் ஒத்­தி­சைவு பட்­டி­யலில் இருக்­கின்ற விட­யங்கள் தொடர்­பாகத் தான் தேசியக் கொள்கை இயற்­றப்­பட முடியும் என்­றொரு ஒழுங்கு முறைமை உள்­ளது. 

அவ்­வா­றான சில தேவைப்­பா­டு­க­ளுக்­காக ஒரு ஒத்­தி­சைவு பட்­டி­யலை ஏற்­ப­டுத்­தினால் அது பாத­க­மில்லை என்ற சிந்­த­னை­ களும் உள்­ளன. ஆகவே ஒத்­தி­சைவு பட்­டியல் முழு­மை­யாக நீக்­கப்­ப­டுமா இல்­லையா என்­பதை தற்­போது கூற­மு­டி­யாது. ஆனால் ஒத்­தி­சைவு பட்­டியல் உரு­வாக்­கப்­ப­டு­மாக இருந்தால் நாடு பூரா­கவும் தேசிய கொள்கை ஒன்று காணப்­ப­ட­வேண்டும் என்ற அவ­சியம் காணப்­படும் பட்­சத்­தி­லேயே அதனை இணைத்­துக்­கொள்­வ­தற்கு இணங்­குவோம். 

கேள்வி:-  ஒற்­றை­யாட்­சிக்குள் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வைக் காண்­ப­தற்கு த.தே.கூ இணங்­கி­விட்­டதா? ஒற்­றை­யாட்சி சொற்­பதம் புதிய சாச­னத்­திலும் இருக்­குமா? 

பதில்:- ஒற்­றை­யாட்­சிக்குள் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை காண்­ப­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மை­ப்பு இணங்கி விட்­ட­தாக சில அமைச்­சர்கள் கூறி­ய­போது அதனை உடனடியாக நாம் மறுத்­தி­ருக்­கின்றோம். அதன் பின்னர் அந்த அமைச்­சர்கள் இல்லை நீங்கள் எவ்­வாறு இணங்­கி­னீர்கள் என வாதி­டவும் இல்லை. நிரூ­பிக்­கவும் இல்லை. 

வழி­ந­டத்தல் குழுவில் ஒற்­றை­யாட்சி விடயம் சம்­பந்­த­மாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. அதன்­போது பிர­த­மரே தான் ஒற்­றை­யாட்­சிக்கு எதி­ரா­னவர் எனக் கூறி­யி­ருக்­கின்றார். பிர­த­மரின் அவ்­வா­றான கூற்றை முன்­வைப்­ப­தற்­கான கார­ணங்கள் வேறாக இருக்­கின்­றன. 

ஒற்­றை­யாட்சி முறைமை உள்ள நாடொன்றில் சாதா­ரண சட்­ட­மொன்­றி­னா­லேயே நாட்டை பிரித்­துக்­கொ­டுக்க முடியும். கூட்­டாட்­சியால் அவ்­வாறு முடி­யாது என­பதே பிர­த­மரின் கூற்­றுக்­கான கார­ண­மாகும். 

நாட்டை பிள­வு­ப­டுத்தும் ஒற்­றை­யாட்­சி­யையா நீடிக்க வேண்­டு­மென கோரு­கின்­றீர்கள் எனவும் பிர­தமர் வழி­ந­டத்தல் குழுவில் கேள்­வி­யெ­ழுப்­பி­யி­ருந்தார். இதே ­க­ருத்­தையே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப் பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­ட­னான சந்­திப்பின் போதும் பிர­தமர் கூறி­யி­ருந்தார்.

அச்­ச­ம­யத்தில் எமது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர், நீங்கள் ஒற்­றை­யாட்­சியை  எதிர்ப்­ப­தற்­கான காரணம் வேறு. நாங்கள் எதிர்ப்­ப­தற்­கான காரணம் வேறு எனச் சுட்­டிக்­காட்­டினார். 

அச்­ச­ம­யத்தில் பிர­தமர், நீங்கள் என்ன கார­ணத்­திற்­காக எதிர்த்­தாலும், நான் என்ன கார­ணத்­திற்­காக எதிர்த்­தாலும் நாங்கள் ஒற்­றை­யாட்­சிக்கு எதி­ரா­ன­வர்கள் என்று பதி­ல­ளித்­தி­ருந்தார். 

இவ்­வா­றி­ருக்­கையில் ஒற்­றை­யாட்சி என்ற சொற்­பி­ர­யோகம் குறித்து நாங்கள் தீர்க்­க­மாக பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருக்­கின்றோம். ஏனென்றால் சிங்­கள மக்கள் மத்­தியில் இது­வ­ரையில் நடத்­தப்­பட்ட பல்­வேறு கருத்து அறியும் செயல்­வ­டி­வங்­களில் பெரும்­பான்­மை­யா­னவர்கள் ஒற்­றை­யாட்சி இருக்­க­வேண்டும் என்று கூறி­யி­ருக்­கின்­றார்கள். 

அவர்களிடத்தில் நீங்கள் எதற்­காக ஒற்­றை­யாட்­சியை எதிர்க்­கின்­றீர்கள் எனக் கேள்­வி­யெ­ழுப்­பு­கின்­ற­போது, நாடு பிரி­வ­டைந்­து­விடும் என்­பதால் தான் அவ்­வாறு கூறு­கின்றோம் எனவும் அந்த மக்கள் குறிப்­பிட்­டி­ருக்­கின்­றார்கள். 

சிங்­கள மொழியில் ஒற்­றை­யாட்சி என்­ப­தற்கு 'ஏக்­கிய ரஜய' என்ற சொல்லே பயன் படுத்தப்படுகிறது. அந்த சொல் ஆட்சி முறையைக் குறிக்கும் சொற்­பி­ர­யோகம் அல்ல. அது நாடு ஒன்­றாக இருக்­கின்­றது என்­பதைக் குறிக்கும் சொற்­பி­ர­யோ­க­மாகும்.

http://www.virakesari.lk/article/15020

Link to comment
Share on other sites

புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம்

 

(நேற்றைய தொடர்ச்சி)

புதிய அர­சியல் சாசன உரு­வாக்­கத்­திற்­காக அர­சி­ய­ல­மைப்புச் சபையால் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான வழி­ந­டத்தல் குழுவின் அங்­கத்­த­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் எதிர் பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்பின் விட­ய­தா­னங்கள், விட்­டுக்­கொ­டுப்­பற்ற மன­நி­லையில் உள்ள தென்­னி­லங்கை தலை­வர்­க­ளி­ட­மி­ருந்து தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வு புதிய சாச­னத்­தி­னூ­டாக கிடைக்­குமா என இயல்பாக எழுகின்ற வினாக்கள், பொதுமக்களின் சந்தேகங்கள் தொடர்பில் கருத்துக்களை பதிவு செய்தார். 

தமிழ் மொழியில் ஒற்றை ஆட்சி எனக் கூறப்­ப­டு­கின்­றது. அதன் பிர­காரம் அதி­கா­ரங்கள் அனைத்தும் ஒரு இடத்­திலே குவிக்­கப்­பட்­டி­ருப்பவை அதா­வது ஆங்­கி­லத்தில் யுனிற்­றரி (unitary) என்ற சொற்­பி­ர­யோ­கத்­திற்கு ஒவ்­வான சொல்­லா­கவே காணப்­ப­டு­கின்­றது.  

ஏக்­கிய ரஜய என்­பதன் அர்த்­தத்தின் பிர­காரம் அதனை பயன்­ப­டுத்­து­வதில் எமக்கு எதிர்ப்­பி­ருக்­க­மு­டி­யாது. ஆனால் தமிழில் ஒற்­றை­யாட்சி எனவும், ஆங்­கி­லத்தில் யுனிற்­றரி (unitary) எனவும் பயன்­ப­டுத்த முடி­யாது என்­பதே எமது நிலைப்­பாடு.

இருப்­பினும் ஏக்­கிய ரஜய என்­பதன் உண்­மை­யான அர்த்­தத்­திற்கு அப்பால் 1972ஆம் ஆண்­டி­லி­ருந்து தற்­போது வரைக்கும் unitary state என்­ப­தற்கு இணை­யாக அச்­சொற்­பதம் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதன் கார­ணத்தால் அச்­சொற்­ப­தத்தின் வரை­வி­லக்­க­ணமும் அதற்­க­ரு­கி­லேயே சொல்­லப்­பட வேண்டும் என்­பதே எமது நிலைப்­பாடு.

அதா­வது ஏகிய ரஜய என்ற சொற்­பதத்தை பயன்­ப­டுத்­து­வ­தால் அதன் அர்த்தம் ஒரு பிரிக்க முடி­யாத நாட்டை குறிப்­பதாக இருக்கும் என்­பது உறுப்­பு­ரையில் கூறப்­பட வேண்டும். ஆட்சி முறை பற்றி கூறு­வ­தாக அச்­சொற்­பதம் இருக்கக்கூடாது. ஆட்­சி­முறை என்­பது ஒற்­றை­யாட்சி என வரக்­கூ­டாது என்­பதே என்­பதே எமது நிலைப்­பாடு.

ஆனால் சொற்­பி­ர­யோ­கத்தால் மட்டும் அதனை அடைந்­து­வி­ட­மு­டி­யாது. ஓஸ்­ரியா நாட்டின் அர­சி­ய­ல­மைப்பில் ஒற்­றை­யாட்சி என கூறப்­பட்­டி­ருந்­தாலும் அங்கு சமஷ்டி ஆட்­சியே நடை­பெ­று­கின்­றது. ஸ்பெயினில் ஒற்­றை­யாட்சி என எழு­தப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆனால் சமஷ்டி ஆட்­சி­மு­றையே நடை­பெ­று­கின்­றது.

ஆகவே வெறு­மனே பெயர்ப் பல­கை­யைப்­போட்­டு­விட்டு திருப்தி அடைய முடி­யாது. உள்­ள­டக்கம் சரி­யாக அமை­ய­வேண்டும். அதற்­காக உப­யோ­கிக்­கப்­படும் சொற்­பி­ர­யோ­கங்­களில் நாம் கவனம் செலுத்­தா­ம­லில்லை. விசே­ட­மாக உள்­ள­டக்­கப்­படும் சொற்­பி­ர­யோ­கங்கள் குறித்து நீதி­மன்­றங்கள் பொருள்­கோடல் செய்­யும்­போது ஒற்­றை­யாட்சி முறை என நியா­யா­திக்கம் செய்­யாத வகை­யி­லேயே அமை­ய­வேண்டும் என்­ப­திலும் கவனம் செலுத்­து­கின்றோம்.

கேள்வி:- சமஷ்டி தீர்வை முன்­வைத்து ஆணை­பெற்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அச்­சொற்­ப­தத்தை புதிய அர­சி­ய­ல­மைப்பில் நேர­டி­யாக பயன்­ப­டுத்­து­மாறு அழுத்­த­ம­ளிக்­கின்­றதா?

பதில்:- சமஷ்டி என்ற சொற்­ப­தத்தை பிர­யோ­கிக்க வேண்டும் என்று நாங்கள் அழுத்­த­ம­ளிக்­க­வில்லை. நாம் தற்­போது எடுத்­துக்­கொண்டது திடீர் நிலைப்­பாடு அல்ல. பொதுத் தேர்­த­லுக்கு முன்­ன­தா­கவே நான் பகி­ரங்­க­மாக கூறி­யி­ருந்­தி­ருக்­கின்றேன்.

யாழ்ப்­பா­ணத்தில் கஜேந்­தி­ர­கு­மா­ருடன் நடை­பெற்ற விவா­த­மொன்­றிலும் பெயர்ப்­ப­ல­கை­களால் மட்டும் நம்­பிக்கை வைக்­க­வில்லை. உள்­ள­டக்கம் சரி­யாக இருக்க வேண்டும் எனக் கூறி­யி­ருக்­கின்றேன்.

சமஷ்டி என்­ப­தில் இரண்டு முக்­கி­ய­மான அம்­சங்கள் உண்டு. ஓரு விடயம் சம்­பந்­த­மாக மாகா­ணங்­க­ளுக்கு அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட்டால் அந்த விடயம் சம்­பந்­த­மாக மத்தி அதற்கு பின்னர் தலை­யி­டக்­கூ­டாது. அவ்­வாறு கொடுக்­கப்­பட்ட மாகா­ணத்­திற்கு வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்­களை மத்­தி தானா­கவே திரும்பி பெற்­றுக்­கொள்­ள­ாதவாறு இருக்க வேண்டும்.

இந்த இரண்டு அம்­சங்­களும் காணப்­ப­டு­மாயின் அது சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான ஆட்சி முறையே. இந்த இரண்டு முக்­கிய அம்­சங்­களும் புதிய அர­சி­ய­ல­மைப்­பில் உள்­வாங்­கப்­ப­டு­வதுதான் எமது பிர­தான நோக்­க­மா­க­வுள்­ளது. சமஷ்டி என்ற பெயர்ப் பல­கையை மட்டும் எழுதி ஒட்­டப்­ப­ட­வேண் டும் என்­பது நோக்­க­மல்ல.

கேள்வி:- புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக் கப்படும் பய­ணத்தில் வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்­தி­ய­மா­குமா? 

பதில்:- இந்தப் பய­ணத்தில் சாத்­தி­ய­மாகும். ஆனால் உட­ன­டி­யாக சாத்­தி­ய­மா­காது. இந்த வரு­டத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­டு­மா­க­வி­ருந்தால் உட­ன­டி­யாக வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்­தி­ய­மா­காது. அதற்­கான சாத்­தியக் கூறு­களும் அரி­தா­கவே உள்­ளது என்­பது தான் உண்­மை­யான எனது பதி­லாகும்.

அதற்கு காரணம் முஸ்­லிம்­களின் நிலைப்­பாடு அதற்கு எதி­ராக இருக்­கின்­றது. முஸ்லிம் மக்கள் எடுக்கும் நிலைப்­பாடு தொடர்பில் நாம் சரி­யாக அணு­க­வேண்டும். அவ்­வாறு சரி­யாக அணுகும் பட்­சத்­தி­லேயே தான் சிறிது காலம் தள்­ளி­யே­னும் வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்­தி­ய­மாகும்.

ஆகவே நாம் முஸ்­லிம்­களின் கருத்தை நிரா­க­ரித்து வடக்கு, கிழக்கு இணைக்­கப்­ப­ட­வேண்டும் என முரண்டு பிடிப்­போ­மா­க­வி­ருந்தால் தமிழ், முஸ்லிம் உறவு மேலும் விரி­ச­ல­டைந்து விடும்.

போர்க்­கால சூழலில் தமிழ், முஸ்லிம் உறவு பாதிக்­கப்­பட்­ட­மையால் தான் தற்­போது வடக்கு, கிழக்கு இணைப்பு உட­ன­டி­யாக சாத்­தி­ய­மா­கா­துள்­ளது. ஆகை­யி­னால் யாரையும் குறை கூறிக்­கொண்­டி­ருக்­காது அடுத்து எவ்­வாறு நக­ர­மு­டியும் என்­பது பற்றி சிந்­திக்க வேண்டும்.

வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து முஸ்லிம் தரப்­பு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருக்­கின்றோம். அவர்­க­ளு­டைய உத்­தி­யோகபூர்வ நிலைப்­பாடு என்­பது, இணைப்­புக்கு எதி­ரா­னது அல்ல. ஆனால் முஸ்லிம் மக்­க­ளுக்கு காணப்­படும் பல­வி­த­மான பயங்கள், சந்­தே­கங்­களின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக இணங்க மறுக்­கின்­றார்கள்.

ஆகவே குறைந்த காலத்­தி­னுள் வடக்கு, கிழக்கு இணைப்பை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான பொறி­மு­றையை வைத்­துக்­கொண்டு அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்க வேண்டும். தமிழ், முஸ்லிம் உறவு பாதிக்­கப்­ப­டாத நிலை­யி­ருந்த 1987ஆம் ஆண்டில் 13ஆவது திருத்தம் கொண்­டு­வ­ரப்­பட்­ட­போது கூட ஒரு வரு­டத்­தினுள் கிழக்கு மாகா­ணத்தில் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வேண்டும் என்றே கூறப்­பட்­டுள்­ளது. ஆகவே முஸ்­லிம்­களின் அங்­கீ­காரம் இல்­லாது அதனை சாத்­தி­யப்­ப­டுத்த முடி­யாது.

தமிழ், முஸ்லிம் உறவை சீர்­செய்யும் நோக்­கில் தான் கிழக்கு மாகாண சபையில் எமக்கு பதி­னொரு உறுப்­பி­னர்கள் இருந்­த­போதும் முத­ல­மைச்சர் பத­வியை விட்­டுக்­கொ­டுத்து ஒரு கூட்­டாட்­சியை நடத்­திக்­கொண்­டி­ருக்­கின்றோம். இவை எல்லாம் இழந்து விட்ட நம்­பிக்­கையை மீளப்­பெ­று­வ­தற்­கான சில வழி­மு­றைகள். ஆகவே இந்த அர­சி­ய­ல­மைப்பு நிறை­வேற்­றப்­பட்­டதும் வடக்கு, கிழக்கு உட­ன­டி­யாக வந்­து­விடும் என்று பொய்­கூ­று­வ­தற்கு நான் விரும்­ப­வில்லை.

கேள்வி:- வடக்கு, கிழக்கு இணைந்­தி­ருக்­கின்ற பட்­சத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு கரை­யோர நிர்­வாக அல­கொன்று உரு­வாக்­கப்­பட்டு வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­பதை தந்தை செல்வா உட்­பட அனைத்து தமிழ்த் தலை­வர்­க­ளும் ஏற்­றுக்­கொண்­டி­ருந்­தார்கள். அந்த நிலைப்­பாட்­டி­லிந்து நீங்கள் விலகி நிற்­கின்­றீர்­களா?

பதில்:- நாங்கள் அந்த நிலைப்­பாட்­டி­லி­ருந்து மாற­வில்லை. முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளும் மாற­வில்லை. தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணிக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்கும் உடன்­பா­டுகள் எட்­டப்­பட்­டன. அந்த உடன்­பா­டு­களை நாம் தற்­போதும் ஏற்­றுக்­கொள்­கின்­ற­தாக காணப்­ப­டு­கின்­றது.

இருப்­பினும் சிலர் தற்­போது இணைப்பு இல்­லாத நிலையில் அதனைப் பற்றி ஏன் பேச­வேண்டும் எனக் கரு­து­கின்­றார்கள். எவ்­வா­றா­யினும் வடக்கு, கிழக்கு இணைக்­கப்­ப­டு­கின்­ற­போது தனி­யான முஸ்லிம் அலகு வழங்­கப்­ப­டு­வதை எதிர்க்­க­வில்லை. அதற்கு முழ­ுமை­யான இணக்கம் தெரி­விப்போம். இருப்­பினும் அதற்­கான உட­னடிச் சூழல் இல்லை.

கேள்வி:- தமிழ்த் தேசியப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்­காக திம்பு முதல் ஒஸ்லோ வரையில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களின் போது மூன்றாம் தரப்பு மத்­தி­யஸ்தம் ஒன்று காணப்­பட்­டது. தற்­போது உள்­ளக, சர்­வ­தேச அர­சி­யலில் மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்ள நிலையில் அர­சாங்­கத்­துக்கும், கூட்­ட­மைப்­பிற்கும் இடை­யி­லான நேர­டிப்­பேச்­சு­வார்­த­்தையில் மூன்றாம் தரப்பு மத்­தி­யஸ்தம் அவ­சி­யமா? தற்­போது பேச்­சு­வார்த்­தைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளதா?

பதில்:- தற்­போது அனைத்துக் கட்­சி­யி­னரும் ஒன்­றாக அமர்ந்து பேச்­சு­வார்த்­தை­களை வழி­ந­டத்தல் குழுவில் நடத்­து­கின்றோம். இந்த பேச்சுவார்த்­தைகள் மிகவும் பகி­ரங்­க­மாக நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன.

சில சம­யங்­களில் வழி­ந­டத்தல் குழுவின் உறுப்­பி­னர்­க­ளுடன் நாங்கள் பேச்சு நடத்­தி­யுள்ளோம். அவ்­வா­றான பேச்­சுக்கள் தான் இடம்­பெ­று­கின்­றன. அத­னை­வி­டுத்து அர­சாங்­கத்­துக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கும் இடை­யி­லான நேர­டி­யான பேச்­சொன்று ஆரம்­பிக்­க­ப்ப­ட­வில்லை.

தற்­போ­தைய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கும் அர­சாங்­கத்­திற்கும் பேச்­சு­வார்த்தை நடக்­கி­றது. அதில் மூன்­றா­வது தரப்பு இருக்­கின்­றது என்ற தேவை இல்­லாத நிலையில் தான் இருக்­கின்றோம். ஏனென்றால் நேர­டி­யா­கவே நாம் ஒரு­வ­ரோடு ஒருவர் பகி­ரங்­க­மாக பேசக்­கூ­டிய சூழல் இருக்­கின்­றது.

சர்­வ­தேச சமூ­கத்­திற்கு தமிழ் மக்­க­ளுக்கு எவ்­வா­றான விட­யங்கள் வழங்­கப்­பட வேண்டும் என்­பது நன்கு தெரிந்­த­வி­டயம். அதே­நேரம் நாம் சர்வ­தேச சமூகத்­துடன் தொடர்ந்தும் பேச்­சு­வார்த்தை நடத்­திக்­கொண்­டி­ருக்­கின்றோம். அவர்கள் அர­சாங்­கத்­து­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­திக்­கொண்டிருக்கின்றோம். அவர்கள் அரசாங் கத்துடனும் பேசுகின்றனர்.

ஆகவே வெளிநாட்டுத்தலையீடு அர சாங்க, கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் இருக்கின்றது என்று சிங்கள மக்களுக்கு பயம் காட்ட வேண்டிய தேவை தற்போதைக்கு இல்லை. எங்களுக்குள்ளே பேசித் தீர்க்க கூடிய நிலைமை இருக்கின்றது என்பது தான் சிறப்பு. ஆனால் சர்வதேசத்தின் முழுமையான ஈடுபாடும் இப்பணிகளில் இருக்கின்றது.

தொடரும்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-01-07#page-4

Link to comment
Share on other sites

  • 5 months later...

புதிய அரசியல்சாசனத்திற்கான சரித்திர பயணம்....08

 

புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்­கான சரித்­தி­ரப்­ப­யணம் என்ற இப்­ப­குதி வாரா­வாரம் வெள்ளிக்­கி­ழமை மற்றும் சனிக்­கி­ழ­மை­களில் தொடர்ச்­சி­யாக பிர­சுர­மாகும் நோக்­குடன் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்தது.

குறிப்­பாக இந்த நாட்டின் புதி­ய­தொரு அர­சி­ய­ல­மைப்­பிற்­கான செயற்­பா­டுகள் எவ்­வா­றான நிலை­மை­களில் உள்­ளன என்­பதை பொது­மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்­து­வதை பிர­தான நோக்­காக கொண்டே இத்­தொடர் உரு­வா­கி­யி­ருந்­தது.

புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்­காக அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யினால் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான வழி­ந­டத்தல் குழுவின் 21அங்­கத்­த­வர்­களின் கருத்­துக்­களை மையப்­ப­டுத்­தி­ய­தாக இப்­ப­குதி முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

இருப்­பினும் வழி­ந­டத்தல் குழுவில் கலந்­து­ரை­யா­டப்­படும் விட­யங்கள் உட்­பட புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வதில் பல்­வேறு தரப்­பி­ன­ரி­டத்­தி­லி­ருந்தும் கிடைக்­கப்­பெறும் முன்­மொ­ழி­வுகள், ஆலோ­ச­னை­களை உட­ன­டி­யாக வெளிப்­ப­டுத்­து­வ­தில்லை என்ற ஏக முடி­வுக்கு வழி­ந­டத்தல் குழு உறுப்­பி­னர்கள் வந்­தி­ருந்­த­மையின் கார­ணத்தால் வழி­ந­டத்தல் குழுவின் உறுப்­பி­னர்­க­ளான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன், மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அநு­ர­கு­மார திஸா­நா­யக்க ஆகி­யோரின் கருத்­துப்­ப­தி­வு­களின் பின்னர் ஏனைய வழி­ந­டத்தல் குழுவின் உறுப்­பி­னர்­களை அணு­கி­ய­போது அவர்கள் தமது கூட்­டுப்­பொ­றுப்பை விட்டு விலக முடி­யாது என்று அழுத்தம் திருத்­த­மாக குறிப்­பிட்­டதன் கார­ணத்தால் இப்­ப­கு­தியை தொடர்ந்தும் முன்­ன­கர்த்த முடி­யா­த­வொரு நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது.

எனினும் தற்­போ­தைய நிலைமையில் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்­கான செயற்­பா­டுகள் தொடர்பில் பல்­வேறு கருத்­துப்­ப­ரி­மாற்­றங்கள் நடை­பெற்று இந்த நாட்டின் சங்­கைக்­க­ுரிய தேரர்­களே கள­மி­றங்­கி­யுள்­ளனர். இந்த நிலை­மையில்தான் மீண்டும் இப்­ப­கு­தியை தொட­ர­வேண்டி ஏற்­பட்­டுள்­ளது.

இந் நிலையில் உண்­மையில் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் திகதி அர­சி­ய­ல­மைப்புச் சபை­யாக மாற்­றப்­பட்­ட­தி­லி­ருந்து கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யுடன் 65அமர்­வு­களை மேற்­கொண்­டுள்ள அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்­கான வழி­ந­டத்தல் குழுவில் நடை­பெற்­றது என்ன?

வழி­ந­டத்தல் குழு­விற்கு உத­வி­களை வழங்­கு­வ­தற்­காக அமைக்­கப்­பட்­டி­ருந்த அடிப்­படை உரி­மைகள், நீதித்­துறை, சட்டம் ஒழுங்கு, பொது­நிதி, பொதுச்­சேவை, மத்­திய அர­சாங்­கத்­திற்கும் மாகாண சபைக்கும் இடை­யி­லான உறவு ஆகிய தலைப்­புக்­களின் கீழாக அமைக்­கப்­பட்ட உப­கு­ழுக்கள் வழங்­கிய இறுதி அறிக்­கை­க­ளுக்கு நடந்­தது என்ன? போன்ற பல கேள்­விகள் எழுந்­தி­ருக்­கின்­றன.

நாட்டின் பிர­தான பௌத்த பீடங்­க­ளான மல்­வத்த, அஸ்­கி­ரிய, ராமாஞ்ய நிக்­காய, அம­ர­புர நிக்­காய ஆகிய நான்கு பீடங்­களும் புதிய அர­சி­ய­ல­மைப்போ அல்­லது தற்­போ­துள்ள அர­சி­ய­ல­மைப்பில் சீர்­தி­ருத்­தங்­களோ அவ­சி­ய­மில்லை என கூட்­டாக தீர்­மா­னித்து திடீர் அறி­விப்­பொன்­றையும் 05.-07-.2016 புதன்­கி­ழமை அன்று விடுத்­தி­ருந்­தன.

ஒன்­றரை வரு­டங்­க­ளாக இடம்­பெற்று வரும் அர­சி­ய­ல­மைப்புச் செயற்­பா­டுகள் தொடர்பில் மௌன­மாக இருந்த மகா­சங்­கத்­தி­னரின் திடீர் மன­மாற்­றத்­திற்கு காரணம் என்ன?

27-.06-.2017 அன்று பண்­டார­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் தென்­னா­பி­ரிக்­கவின் அர­சி­ய­ல­மைப்பு செயற்­பா­டு­களில் ஈடு­பட்ட தென்­னா­பி­ரிக்­காவின் முன்னாள் பிரதித் தலைமை நீதி­பதி மொசெ­னேகோ பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்ட அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்பு குறித்து நடத்­தப்­பட்ட மாநாட்­டுக்கு பௌத்த மகா­சங்­கத்­தி­ன­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை என வெளியான தக­வல்­களா? இல்லை வேறேதும் பின்­ன­ணிகள் இருக்­கின்­ற­னவா? என்ற கேள்­விகள் மேலெ­ழு­கின்­றன.

குறிப்­பாக புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வதற்­கான வழி­ந­டத்தல் குழுவின் கூட்டம் 05-.07-.2017 புதன்­கி­ழமை பிற்­பகல் 2.30 க்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நடை­பெற்ற கூட்­டத்தில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு குறித்து நடத்தப்பட்ட மாநாட்டுக்கு பௌத்த மகாசங்கத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை என்பது பொய்யான விடயம் என்பது தெளிவுபடுத்தப்பட்டு வழிநடத்தல் குழுவின் செயலாளர் நீல் இத்தவெல்ல அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

ஆக மகாசங்கத்தினரின் இத்திடீர் அறிவிப்பில் நிச்சயமாக வேறொரு பின்னணி இருக்கின்றது என்பது தெட்டத்தெளிவாக புலனாகின்றது. அவை அரசியல் காரணங்களாக இருந்தால் நிச்சயமாக மிகவும் பாரதூரமான விடயமொன்றாகவே பார்க்கப்பட வேண்டியதொன்றாகின்றது.

இந்த நிகழ்வுகளுக்கு அடுத்த தினமான 06-.07-.2017 வியாழக்கிழமை அன்று இரண்டு நிகழ்வுகள் சமாந்தரமாக நிகழ்ந்தன. முதலாவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அமைச்சர் விஜயதாஸ, மத்திய மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க சகிதம் சியம் மகா நிக்காயவின் மல்வத்து பிரிவின் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகாநாயக்க தேரர், அஸ்கிரிய பிரிவின் வரக்காகொட ஸ்ரீ ஞானரதன மகாநாயக்க தேரர், ராமஞ்ஞ நிக்காயவின் நாபான பேமசிறி மகாநாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரைச் சந்தித்தனர்.

இச்சமயத்தில், புதிய அரசியலமைப்பின் மாதிரி சட்டமூலத்தை தயாரிப்பதாயினும் அது தொடர்பாக மதிப்பிற்குரிய மகா சங்கத்தினருக்கு தெரியப்படுத்தி அவர்களது கருத்துக்களும் ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்படும்.

புதிய அரசியலமைப்பு தொடர்பாக எந்தவொரு இறுதி ஆவணமும் இதுவரை தயாரிக்கப்படவில்லை.புதிய அரசியலமைப்பு பற்றிய கலந்துரையாடல் தற்போது நாட்டில் நடைபெறுகிறது. அரசினால் அத்தகைய சட்டமூலமொன்று தயாரிக்கப்படுமாயின் நாட்டின் எதிர்கால நன்மை மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்பாக ஆழமாக ஆய்வுசெய்யப்பட்டதன் பின்னரே அது தயாரிக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தொடரும்...

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-08#page-4

Link to comment
Share on other sites

புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம்

 

நேற்றைய தொடர்ச்சி...

நாட்டின் ஜனா­தி­பதி, பிர­தமர், சபா­நா­யகர், எதிர்க்­கட்­சித்­த­லைவர் போன்ற பத­விகள் பல்­லினம் வாழும் ஒரு நாட்டில் ஒரு சமூ­கத்­தினை மட்­டுமே மையப்­ப­டுத்­தி­ய­தாக இருக்க முடி­யாது. அந்த பத­வி­களில் உள்­ள­வர்கள் தம்மை சமூகம், மதம், மொழி சார்ந்து வரை­யறை செய்­து­கொள்­ளவும் முடி­யாது. அவர்கள் நாட்டில் உள்ள அனைத்து தேசிய இனங்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தி­ய­வர்கள். ஆகவே பிர­தமர் வெளிப்­ப­டுத்தி நிற்கும் கருத்­தா­னது ஒரு சமூகத்­தினை, மதத்­தினை மையப்­ப­டுத்­தி­ய­தாக இருக்­கின்­ற­மை­யா­னது புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கும் செயற்­பாட்டில் அவரின் பக்­கச்­சார்­பற்ற, சுயா­தீன செயற்­பா­டுகள் குறித்தும் கேள்­விக்­குட்­ப­டுத்­தி­யுள்­ளது.

மக்­களால் ஆணை வழங்­கப்­பட்­ட­வர்கள் தமது மக்­க­ளுக்­கான அபி­லா­ஷை­களை மைய­மாக வைத்தே செயற்­ப­டு­கின்­றார்கள். அத­ன­டிப்­ப­டை­யி­லேயே புதிய அர­சி­ய­லமைப்­பினை உரு­வாக்­கு­கின்­றார்கள். அதற்கு அப்பால் மக்­களின் கருத்­துக்­களும் பிரத்­தி­யே­க­மாக அமைக்­கப்­பட்ட குழுவால் உள்வாங்­கப்­பட்டு கருத்­திற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. ஆகவே தற்­போது உரு­வாக்­கப்­பட்டு வரும் அர­சி­ய­ல­மைப்பு என்­பது முழு­மை­யா­கவே மக்­களால் தமக்­காக உரு­வாக்­கப்­படும் அர­சி­ய­ல­மைப்பு என்று நியா­யா­திக்கம் கற்­பிக்­கப்­ப­டு­கின்­றது.

ஆனால் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கும் வழி­ந­டத்தல் குழுவின் தலை­வரின் மேற்­படி கருத்­துக்கள் அந்த நியா­யா­திக்­கத்­திற்கு நேரெ­தி­ரா­கவே அமை­கின்­றன. அதே­நேரம் இக்­க­ருத்­துக்கள் மக்கள் பிர­தி­நி­திகள் உரு­வாக்கப்படும் அர­சி­ய­ல­மைப்பு என்­பது மக்­களால் உரு­வாக்கும் அர­சி­ய­ல­மைப்பு என்ற கோட்­பாட்­டிற்கு அப்பால் அதற்கு மாற்­றான சிந்­த­னை­யையும் முன்­மொ­ழிவை செய்­வ­தற்கு வழி­வ­குத்­தி­ருக்­கின்­றது.

அதா­வது, நாட்டின் மீது உண்­மை­யான பற்­றுள்ள அர­சியல் சாய­மற்ற முழுக்க முழுக்க நாடு, பிர­ஜைகள் சார்ந்து அர­சியல், பொரு­ளா­தாரம், சமூகம் குறித்து சிந்­திக்­க­வல்ல புத்­தி­ஜீ­விகள், துறைசார் நிபு­ணர்கள் அடங்­கிய குழு­வொன்று ஸ்தாபிக்­கப்­பட வேண்டும். இக்­கு­ழுவில் தமது அர­சி­ய­லுக்கு அப்பால் சிந்­திக்கும் முற்­போக்­கான மக்கள் பிர­தி­நி­திகள் பங்­கு­பற்­று­வார்­க­ளாயின் அதனை ஏற்­றுக்­கொள்­ளொள்­ள­மு­டியும்.

மேற்­படி குழு­வா­னது மக்கள் பிர­தி­நி­திகள் அடங்­கிய தரப்­பி­னரால் முன்­மொ­ழி­யப்­படும் கருத்­துக்கள், மக்­க­ளினால் முன்­மொ­ழி­யப்­படும் கருத்­துக்கள் உள்­ளிட்ட அனைத்து விட­யங்­க­ளையும் உள்­ள­டக்கி ஆராய்ந்­த­றிந்து வரை­பொன்றை தயா­ரித்து மக்கள் அங்­கீ­கா­ரத்­தினை பெற்­றுக்­கொள்ள வேண்டும். இதற்கு முன்­னு­தா­ர­ண­மாக இந்­தி­யாவை எடுத்­துக்­கொள்ள முடியும்.

இந்­தி­யாவில் அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கச்­செ­யற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­ப­ட்டபோது, அர­சி­ய­ல­மைப்பு சபையின் தலை­மையை சுதந்­திர இந்­தி­யாவின் முதல் சட்ட அமைச்­ச­ரான டாக்டர் ராம்ஜி அம்­பேத்கர் ஏற்­றுக்­கொண்­டி­ருந்­தாலும் அர­சி­ய­ல­மைப்­பிற்­கான ஆறு பேர் கொண்ட வரை­வுக்­கு­ழு­வொன்று ஸ்தாபிக்­கப்­பட்­டி­ருந்­தது. அக்­கு­ழுவில் தமது அர­சியல் நல­னையோ அல்­லது மீண்டும் அர­சி­ய­லுக்கு வர­வேண்­டு­மென்ற சிந்­த­னையையோ கொண்­டி­ருக்­காத புத்­தி­ஜீ­விகள், நிபு­ணர்கள் காணப்­பட்­டி­ருந்­தனர்.

ஆகவே நாட்டின் பிர­ஜைகள், எதிர்­காலம் ஆகி­ய­வற்றை மைய­மாக கொண்டு புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்­று­உ­ரு­வாக்­கப்­ப­டு­கின்­றது என்றால் அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா, தென்­னா­பி­ரிக்கா, ஜேர்மனி, சுவிட்ஸர்­லாந்து என பல­த­ர­ப­்பட்ட நாடு­களின் அர­சி­யல­மைப்பு விட­யங்­களை ஆராய்­வ­தற்கு முன்­ன­தாக அயல் நாடான இந்­தி­யாவை முன்­னு­தா­ர­ண­மாகக் கொண்டு அர­சி­ய­ல­மைப்பை உரு­­வாக்­கு­வ­தற்­கான அடித்­த­ளத்­தினை சரி­யாக இட்­டுக்­கொள்­­வது அவ­சி­ய­மா­னது.

தற்­போது காலம் கடந்து விட்­டது என்­றாலும் சமூ­கத்தை உயர்த்த வேண்டும் என்ற விழு­மிய நோக்­கத்தில் உந்­தப்­ப­டு­ப­வரே உயர்ந்த மனிதர் என்ற அம்­பேத்­கரின் சிந்­த­னையின் பால் அர­சிய­ல­மைப்­பு­ச­பையின் உறுப்­பி­னர்கள் செயற்­ப­டு­வார்­களா? என்­பதை பொறுத்­தி­ருந்தே பார்க்க வேண்­டி­யுள்­ளது.

இதே­நேரம் பாரா­ளு­மன்­றத்தில் கடற்­தொழில் நீர்வாழ் உயி­ரின வளங்கள் திருத்த சட்­ட­மூலம் மற்றும் வணிக கப்பற் தொழில் சட்­டத்தின் ஒழுங்கு விதிகள் மீதான விவா­வ­தங்கள் இடம்­பெற்ற தினத்­தன்று புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்து பிர­தமர் ரணில், எதிர்க்­கட்சி பிர­தம கொறடா அநு­ர­கு­மார திஸா­ந­ாயக்க எம்.பி., தினேஷ் குண­வர்த்­தன எம்.பி. ஆகி­யோ­ருக்­கி­டை­யி­லான வாதப்­பி­ர­தி­வா­தங்­களை அடுத்து உரை­யாற்ற ஆரம்­பித்­தி­ருந்த ஐக்­கிய மக்கள் சுதந்­தி­ரக் கட்­சியின் கூட்டு எதிர்க்­கட்சி ஆத­ரவு உறுப்­பினர் மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே எம்.பி., மீண்டும் தினேஷ் குண­வர்த்­தன எம்.பி. ஆரம்­பித்த இடத்­தி­லி­ருந்து தொடர்ந்தார்.

அவர், பண்­டா­ர­நா­யக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்­ட­பத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­காக இடைக்­கால அறிக்கை வரைவு கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. இதோ என் கையில் அந்த ஆவணம் இருக்­கின்­றது என்று மீண்டும் கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்த ஆரம்­பித்தார்.

இச்­ச­ம­யத்தில் சபை­யி­லி­ருந்த சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக் ஷ்மன் கிரி­யெல்ல, பிர­தமர் அதற்கு பதி­ல­ளித்து விட்டார். ஆந்த விடயம் முடிந்து விட்­டது எனக் கூறினார். இருப்­பினும் மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே எம்.பி அந்த விட­யத்­தினை விடு­வ­தாக இல்லை.

அச்­ச­ம­யத்தில் புதிய அர­சி­ய­லமைப்­புக்­காக இன்­னமும் ஒரு சரத்துக் கூட எழு­த­வில்லை. இடைக்­கால வரைவு கூட எழு­தப்­ப­ட­வில்லை. இதனை வழி­ந­டத்தல் குழுவின் அங்­கத்­தவர் என்ற அடிப்­ப­டையில் பொறுப்­புடன் பதி­ல­ளிக்­கின்றேன் என்றார்.

இச்­ச­ம­யத்தில், நீங்கள் சபை­யி­லேயே நித்­திரை கொள்­கின்­றீர்கள். அப்­ப­டித்தான் வழி­ந­டத்தல் குழு­விலும் நித்­தி­ரையில் இருந்த நேரத்தில் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்­கலாம் என நகைச்­சு­வை­யாக கூறிய மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே எம்.பி. தனது உரையை தொடர்ந்­தி­ருந்தார். சபை ­மு­தல்­வரும், அமைச்­சரும், வழி­ந­டத்தல் குழுவின் உறுப்­பி­ன­ரு­மான லக் ஷ்மன் கிரி­யெல்­லவின் கூற்றின் பிர­காரம் எந்­த­வொரு வரைவும் தயா­ரிக்­கப்­ப­ட­வில்லை. ஓரு வாசகம் கூட எழு­தப்­ப­ட­வில்லை என்றால் வழி­ந­டத்தல் குழுவின் 65 அமர்­வுகள் எதற்­காக செய்­யப்­பட்­டன. வழி­ந­டத்தல் குழு­வினால் நிய­மிக்­கப்­பட்ட ஆறு உப­கு­ழுக்­க­ளி­னதும் அறிக்­கை­க­ளுக்கும் மக்கள் கருத்­த­றியும் நிபுணர் குழு­வி­னால் சமர்­ப்பிக்கும் அறிக்­கைக்கும் என்ன நடந்­தது என்­பது முத­லா­வ­தாக எழும் கேள்­வி­­யா­கின்­றது.

இரண்­டா­வ­தாக, 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி இடைக்­கால அறிக்­கையின் வரைவு பாரா­ளு­மன்­றத்தில் விவா­தத்­திற்­காக சமர்ப்­பிக்கப்படும் என்று அறி­விக்­கப்­பட்டு பின்னர் ஒத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்­தது. பின்னர் ஜே.வி.பி, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி ஆகி­யன கால­அ­வ­கா­சத்­தினை கோரி­ய­மை­யா­லேயே இடைக்­கால அறிக்கை வரைவு சமர்ப்­பிக்­கப்­ப­டு­வதில் கால­தா­ம­தப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­கவும் அறி­விக்­கப்­பட்­டது.

அதன் பின்னர் மார்ச் மாதத்தில் இடைக்­கால அறிக்கை வரைவு பாரா­ளு­மன்­றத்­திற்கு வரும் எனவும் பின்னர் ஜுன் மாதம் அறிக்கை வரும் எனவும் அடுத்­த­டுத்து எதிர்­பார்ப்­புக்கள் அளிக்­கப்­பட்­டாலும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்து தமது கட்சி ரீதி­யான ஏகோ­பித்த நிலைப்­பா­டொன்றை எடுப்­ப­தற்­காக கால அவ­கா­சத்­தினை கோரி­யதன் கார­ண­மாக இடைக்­கால அறிக்கை வரைவு பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பிப்­பதில் கால­த­ாமதங்கள் காணப்­ப­டு­வ­தாக கூறப்­பட்­டது.

எனவே இடைக்­கால அறிக்கை வரைவு பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பிக்­கப்­ப­டு­வதில் காணப்­பட்ட தாம­தத்­திற்கு இவ்­வாறு கார­ணங்கள் அடுத்­த­டுத்து கூறப்­பட்டு வந்­தி­ருக்க நிலையில் லக் ஷ்மன் கிரியெல்ல கூறுவதைப்போன்று எந்தவாசகமும் எழுதப்படவில்லை என்றால் இடைக்கால அறிக்கை வரைவு சமர்ப்பணம் சம்பந்தமாக டிசம்பர் 10ஆம் திகதியிலிருந்து பொய்யான தகவலாக வெளியிடப்பட்டு வந்திருக்கின்றதா என்றொரு கேள்வி எழுக்கின்றது.

அதே­நேரம் இடைக்­கால அறிக்கை வரை­வினை முழு­மை­யாக இறுதி செய்­வ­தற்­காக வழி­ந­டத்தல் உறுப்­பி­னர்­க­ளி­டத்தில் அது­கு­றித்த ஆவணம் சமர்ப்­பிக்­கப்­பட்டு அவர்­களின் கருத்­துக்­களை கூறு­மாறு கோரப்­பட்­டுள்­ள­தென்றும் அதன்­பின்­னரே சுதந்­தி­ரக்­கட்சி ஐ.தே.க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்­தது என்றும் உறு­தி­படத் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

அப்­ப­டி­யென்றால் அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல பொய்­யான தக­வலை வெளியி­டு­கின்­றாரா என்ற பிறி­தொரு கேள்­வியும் எழு­கின்­றது. இவை எல்­லா­வற்­றுக்கும் அப்பால் இடைக்­கால அறிக்கை வரை­வினை மன்­றுக்கு சமர்ப்­பிப்­ப­தற்­கான தாமதத்திற்கு அரசியல் காரணங்களும் பின்னணியில் இருக்கின்றன.

   தொடரும்...

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-15#page-10

Link to comment
Share on other sites

புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம்

 

ஆர். ராம்

 

தற்போதுள்ள நடைமுறையில் உள்ள 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பில் இரண்டாம் அத்தியாயத்தின் ஒன்பதாம் சரத்தில் பௌத்த மதம் சம்பந்தமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம், இலங்கை குடியரசில் பௌத்த மதத்துக்கு முதன்மை ஸ்தானம் வழங்கப்படுத்தல் வேண்டும் என்பதோடு, அதற்கிணங்க, 10ஆம், 14(1)(உ)ஆம் உறுப்புரைகளால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை எல்லா மதங்களும் காப்புறுதி செய்யும் அதேவேளையில் பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தலும் பேணிவளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தலும் வேண்டும் என்றுள்ளது.

இந்நிலையில் தற்போது புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான செயற்பாட்டில் மத விடயத்தினை வழிநடத்தல் குழுவே நேரடியாக கையாளுகின்றது. அக்குழுவில் பௌத்த மதத்திற்கான முதன்மைத் தன்மை மாற்றப்பட்டுள்ளது என்பதே பிரதான குற்றச்சாட்டாக காணப்படுகின்றது.

குறிப்பாக பௌத்த சமயத்திற்கு வழங்கப்பட்ட முதன்மைத் தன்மைக்கு மாற்றாக எவ்விதமான முன்மொழிவுகளை சமர்ப்பிக்கின்றது என்பதை பார்க்கையில்,

இலங்கை குடியரசில் பௌத்த மதத்துக்கு முதன்மைஸ்தானம் வழங்கப்படல் வேண்டும். என்ற வாசகத்தில் எவ்விதமான மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் அந்த ஏற்பாட்டோடு இந்த நாட்டில் காணப்படுகின்ற ஏனைய சமயங்களுக்கும் கௌரவம் அளிக்கப்பட வேண்டும். பாரபட்சம் காட்டப்படமாட்டாது என்ற உறுதிப்பாடு ஏற்படுத்தப்பட வேண்டும். பௌத்த சமயத்துக்கு உள்ளதைப் போன்று ஏனைய சமயங்களுக்கும் அடிப்படை உரிமைகள் கிடைக்கப்பெற வேண்டும் என்ற தொனிப்படவே உள்ளது.

எனவே இங்கு பௌத்த மதத்திற்கான முதன்மைத்தன்மை இழக்கப்படுகின்றது என்று கொள்ள முடியாது. அதேநேரம் வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் பௌத்த சிறுபான்மை பிரதிநிதித்துவங்களாகவுள்ள எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆகியோர் எந்தவிதமான மறுப்புக்களையும் முன்வைக்கவில்லை.

அதேபோன்று 19 இனங்கள், நான்கு மதங்கள், மூன்று மொழிகள் இந்த நாட்டில் உள்ளன என்பதை அடிக்கடி கூறும் மனோகணேசனும் பௌத்த மதத்திற்கான முதன்மைத்தன்மையை எதிர்ப்பதற்கு வாய்ப்பில்லை. பெரும்பான்மை கட்சியில் இணைந்து பணியாற்றும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனும் எதிர்க்கவில்லை. சிலுவை போடாத கிறிஸ்தவன், காவி தரிக்காத பௌத்தன், திருநீறு பூசாத இந்து, தொப்பி தரிக்காத இஸ்லாமியன் என்று கூறும் டக்ளஸ் தேவானந்தாவும் எதிர்த்திருக்கமாட்டார்.

இன, மொழி, மத, சாதி ரீதியான பிளவுகளுக்கு அப்பால் சமத்துவம் நிலை நாட்டப்படவேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிக்கும் ஜே.வி.பியினரும் எதிர்த்திருக்கவில்லை. அதேபோன்று பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்குவதால் எமக்கு பிரச்சினையில்லை என்றும் அவர்கள் பகிரங்கமாகவே தெரிவித்தும் உள்ளார்கள்.

மேற்படியான நிலைமையே வழிநடத்தல் குழுவின் இதுவரையில் நடைபெற்ற அமர்வுகளில் இடம்பெற்றுள்ளது என்பதே யதார்த்தமாகின்றது.

இவற்றுக்கெல்லாம் மேலாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசியல் அமைப்பில் பௌத்த மதத்திற்கு முதன்மைத் தன்மை வழங்குவதனை ஏற்றுக்கொண்டிருக்கின்றார். ஏனைய கிறிஸ்தவ சபைகள் கூட எதிர்க்கவில்லை. இந்து மதகுருமார் ஒன்றியம், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை ஆகியனவும் பௌத்த மதத்திற்கான முன்னுரிமையை நிராகரிக்கும் வகையில் எவ்விதமான மாற்றுக்கருத்துக்களையும் வெளியிடவில்லை.

இவ்வாறு புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கான முதன்மைத் தன்மையை யாரும் எதிர்க்காத நிலையில் வழிநடத்தல் குழுவில் உள்ள தினேஷ் குணவர்த்தன பிரசன்ன ரணதுங்க போன்ற எம்.பி.க்களும் கூட்டு எதிர்க்கட்சியினரும் பௌத்தத்திற்கான முதன்மைத் தன்மை நீக்கப்படுகின்றது தற்போதுள்ள அரசியலமைப்பின் ஒன்பதாவது சரத்து மாற்றப்படுகின்றது என்ற பிரசாரத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள்.

அந்த பிரசாரம் தான் புரியாத புதிராக உள்ளது. ஒட்டு மொத்தமாக பார்க்கையில் பௌத்த மதம் சார்ந்து இவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் பௌத்தமதத்தினை பின்பற்றும் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்திருக்கின்றது என்பதை தெட்டத்தெளிவாக வெளிப்படுத்துகின்றது. மறுபக்கத்தில் பௌத்த மதத்தலைவர்களை பயன்படுத்தி புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாட்டினை தடுக்க முனைகின்றார்களோ என்ற ஐயப்பாடும் எழாமலில்லை.

புதிய அரசியலமைப்பினை கூட்டு எதிர்க்கட்சியினர் விரும்பவில்லை என்றால் அரசியலமைப்பு பேரவையாக பாராளுமன்றத்தினை செயற்படுத்துவதற்கு எதிர்ப்பினை தெரிவிக்காது ஏகோபித்த ஆதரவை வழங்கி பிரேரணையை நிறைவேற்றும் போது அமைதியாக இருந்தமைக்காக காரணம் என்ன என்பது பிரதானமான கேள்வியாகின்றது. அவ்வாறாயின் கூட்டு எதிர்க்கட்சி மக்கள் மத்தியில் இரட்டை வேடம் போடுகின்றதா என்ற சந்தேகமும் இயல்பாகவே எழுகின்றது.

இலங்கையைப் பொறுத்தவரையில் சமய ரீதியாக பாரிய பிரச்சினைகள் எவையும் இருக்கவில்லை. ஆனால் இங்குள்ள நான்கு சமயங்களுக்கும் உரிய கௌரவம் அளிக்கப்பட்டு அவற்றுக்கான அடிப்படைத் தன்மைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதே பொதுவான நிலைப்பாடாகவுள்ளது.

அதற்காக திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் மதப்பிரசாரங்களை, அல்லது மத திணிப்புக்களை அல்லது குறிப்பிட்ட பிரதேசத்தின் பூர்வீகத்தினை, வரலாற்றினை மாற்றியமைக்க முயல்வது அல்லது இன விகிதாசாரத்தினை மாற்றும் வகையில் மதத்தினை பயன்படுத்த முயல்வது போன்றவற்றுக்கு சிறுபான்மை தேசிய இனங்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு இருக்கின்றது.

அதாவது மதத்தின் பெயரால் நடைபெறும் எந்தவொரு இன அடக்குமுறையையோ அல்லது முரண்பாடுகளை ஏற்படுத்தும் விடயத்தினையோ ஏற்றுக்கொள்வதற்கு சிறுபான்மை தேசிய இனங்கள் ஒருபோதும் தயாராகவில்லை. அநகாரிக தர்மபாலவின் இலங்கை சிங்கள–பௌத்த நாடு என்ற கருத்தியல் உருவாக்கத்திலிருந்து தற்போது வரையில் மதத்தின் பெயரால் சிறுபான்மை தேசிய இனங்கள் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன.

வடக்கு, கிழக்கில் கூட தங்கியிருக்கும் இராணுவத்தினர் வழிபடுவதற்காக தற்காலிகமாக அரச மரங்களில் உருவாக்கப்படும் தற்காலிக வழிபாட்டு இடங்கள் பின்னர் நிரந்தரமாக்கப்பட்டு, நில உரித்துக் கோரி நிற்கின்ற சூழலே தற்போது உள்ளது. ஆகவே எந்தவொரு நபரும் எந்தவொரு மதத்திற்கும் எதிராக இல்லாத நிலையில் மேற்குறித்த நிலைமைகள் எதிர்காலத்தில் ஏற்படாத வகையிலான அரசியலமைப்பு ரீதியான ஏற்பாடொன்றினையே மக்கள் எதிர்பார்த்திருக்கின்றார்கள் என்பது வெளிப்படை.

 

(தொடரும்...)

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-22#page-8

Link to comment
Share on other sites

புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம்

 

ஆர். ராம்

புதிய அர­சியல் அமைப்பில் 'நாட்டின் தன்மை' சிங்­க­ளத்தில் 'ஏகிய ராஜ்ய' தமிழில் ''ஒரு­மித்த நாடு'' ஆங்­கி­லத்தில் ‘Aekiya Rajaya/Ourmitha nadu’ என்றே அமை­ய­வுள்­ளது. 

அதே­போன்று தான் ''ஒற்றை ஆட்சி அரசு'' விட­யத்தில் மாற்றம் ஏற்­ப­டுத்­தியே ஆக வேண்டும். அதில் ''சமஷ்டி'' என்ற பதம் இருக்க வேண்டும். இந்த விட­யத்தில் எந்­த­வி­த­மான விட்­டுக்­கொ­டுப்­புக்­களுக்கும் செல்ல முடி­யாது என்ற நிலைப்­பாட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி, ஈ.பி.ஆர்.எல்.எப், வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் போன்ற தரப்­புக்­களும் இறுக்­க­மாக இருக்­கின்­றன. அதனைத் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தியும் வரு­கின்­றன.

அவர்கள் இவ்­வாறு கூறு­கின்­றார்கள் என்றால் விட்­டுக்­கொ­டுப்­புக்கள் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றதா? அதனைச் செய்­தது யார் என்­றொரு கேள்வி இங்கு எழு­கின்­றது. உண்­மையில் ஒரு சிறு விட்­டுக்­கொ­டுப்பு செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது. அதா­வது, ''பெயர்ப்­ப­ல­கைகள்'' தொடர்பில் தான் அந்த விட்­டுக்­கொ­டுப்பு நடை­பெற்­றிருக்­கின்­றது.

முன்­னரே குறிப்­பிட்­டதைப் போன்று தென்­னி­லங்கை மக்­களின் மாறாத மனோ­நிலை, அங்­குள்ள அர­சியல் சக்­திகள் ஆகி­ய­வற்றின் உச்ச அழுத்­தங்­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டு­மானால் இவ்­வா­றான ஒரு சிறு விட்­டுக்­கொ­டுப்பு அவ­சியம் என்ற அடிப்­ப­டையில் தான் தமிழ்த் தலைமை இப்­ப­டி­யொரு முடிவை எடுத்­தி­ருக்­கின்­றது என்று சொல்­லப்­ப­டு­கின்­றது.

மேலும் இப்­ப­டி­யொரு சின்ன விட்­டுக்­கொ­டுப்பால் பாரி­ய­ளவில் எவ்­வித இழப்­புக்­களும் ஏற்­பட்டு விடப்­போ­வ­தில்லை என்றும் தலை­மையும், அர­சி­ய­ல­மைப்பு செயற்­பாட்டில் ஈடு­பட்டு வரும் பிர­தி­நி­தியும் அழுத்­த­மாக கூறு­கின்­றார்கள்.

அவர்­களின் மொழியில் இவ்­வாறு தான் கூறு­கின்­றார்கள். அதா­வது, "70ஆண்­டு­க­ளாக பல்­வேறு வழி­மு­றை­களை கையாண்­டுள்ள போதும் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு நீடித்து நிலைத்­தி­ருக்க கூடிய, நியா­ய­மான, ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய தீர்­வொன்று கிடைக்­க­வில்லை. தற்­போது பிரிக்க முடி­யாத, பிள­வு­ப­டாத ஐக்­கிய இலங்­கைக்குள் தீர்­வினை பெற்­றுக்­கொள்­வ­தற்கு தயா­ராக இருக்­கின்றோம்.

பிர­தான பெரும்­பான்மை கட்­சிகள் இரண்டும் தேசிய அர­சாங்­க­மாக இருக்­கின்ற நிலையில் அந்த சந்­தர்ப்­பத்­தினை பயன்­ப­டுத்த வேண்டும். கிடைத்த சந்­தர்ப்­பத்­தினை நழு­விட்­ட­வர்கள் என்ற வர­லாற்­றுப்­ப­ழிக்கு ஆளாக கூடாது. ஆகவே தொடர்ந்தும் "பெயர்ப்­ப­ல­கை­களை" முன்­னி­லைப்­ப­டுத்­திக்­கொண்டு நாம் இறுக்­க­மான போக்கை கடைப்­பி­டிப்­போ­மாயின் அது பிர­தான கட்­சி­க­ளுக்கே சாத­க­மாக போய்­விடும்.

எதிர்­கால சமு­தா­யத்தின் நன்மை கருதி "பெயர்ப்­ப­ல­கை­க­ளுக்கு" மட்டும் முக்­கி­யத்­துவம் அளிக்­காது உள்­ள­டக்கம் என்ன இருக்­கின்­றது என்­ப­த­னையே பார்க்க வேண்டும்.

ஆகவே உள்­ள­டக்­கத்தில் நிச்­ச­ய­மாக "சமஷ்டி" க்கு உண்­டான அங்க இலட்­ச­ணங்கள் இருக்கும். மிக முக்­கி­ய­மாக பகி­ரப்­படும் அதி­கா­ரங்கள் மீளவும் மத்­திய அர­சாங்­கத்­தினால் பறிக்­கப்­பட்டு விடாத வகை­யி­லான ஏற்­பா­டுகள் இருக்கும் என்­ப­தாகும்.

இந்த விட­யத்தில் கூட்­ட­மைப்­பிற்குள் இருக்கும் பங்­கா­ளிக்­கட்­சி­க­ளி­டையே வாதப்­பி­ர­தி­வா­தங்கள் காணப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன. வெளியிலும் கடு­மை­யான விமர்­ச­னங்கள் காணப்­ப­டு­கின்­றன. எவ்­வாறு இருந்­போதும் பெயர்ப்­ப­ல­கை­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் இல்­லாத முன்­மொ­ழிவு ஒன்­றுதான் இடைக்­கால அறிக்கை வரைவில் நிச்­ச­ய­மாக வரப்­போ­கின்­றது.

காரணம், வழி­ந­டத்தல் குழுவின் தலை­வ­ராக இருக்­கின்ற பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் நடத்­தி­யி­ருந்த சந்­திப்பு ஏறக்­கு­றைய அதனை உறு­திப்­ப­டுத்­து­வதாக உள்­ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பத்தாம் திகதி சனிக்­கி­ழமை (2017ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­ட­த்தின் இறுதி நாள்) புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கையின் வரைவு அர­சி­ய­ல­மைப்பு பேர­வைக்கு சமர்ப்­பிக்கப்படுவதாக கூறப்­பட்­டி­ருந்­த­போதும் பின்னர் அந்த நிகழ்வு நடை­பெ­ற­வில்லை.

இவ்­வா­றா­ன­தொரு சூழலில் அன்­றைய­தினம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும், எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தலை­மையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­ட­னான சந்­திப்பு பாரா­ளு­மன்ற கட்­டடத்­தொ­கு­தியில் இடம்­பெற்­றது.

இந்தச் சந்­திப்பில் தான் பெயர்­ப்ப­ல­கை­களை களை­வது என்ற இணக்கம் ஏற்­பட்­டது. அது எவ்­வாறு என்று சற்றே விளக்­க­மா­கவும் பார்க்க வேண்­டிய அவ­சியம் இருக்­கின்­றது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­ட­னான சந்­திப்பு ஆரம்­ப­மா­ன­வுடன் பல்­வேறு விட­யங்கள் கலந்­து­ரை­யா­டப்­பட்டு, அடுத்து பிர­தான விட­ய­மான இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு குறித்த விடயம் எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட்டது.

இதன்­போது ஒற்றை ஆட்சி அரசு என்ற கட்­ட­மைப்­பிற்குள் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வினை ஒரு­போதும் எட்­டி­வி­ட­மு­டி­யாது என்ற உறு­தி­யான கருத்­தொன்றை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முன்­வைத்­தது.

அச்­ச­ம­யத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அளித்த பதில் இது தான், பிரித்­தா­னியா போன்ற நாடு­களில் ஒற்றை ஆட்­சியே நில­வு­கின்­றது. அங்கு உச்­ச­பட்ச ஜன­நா­யகம் உள்­ளது. எனினும் நீங்கள் ஒற்றை ஆட்சி அரசை ஏற்க முடி­யாது என்­கின்­றீர்கள். நானும் அதற்கு எதி­ரா­னவன் தான். ஒற்றை ஆட்சி அரசை நீக்க வேண்டும். இங்கு தவ­றான புரி­த­லொன்று ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

அதா­வது, தமிழில் ஒற்றை ஆட்சி அரசு என்­ப­தற்கு சிங்கள மொழியில் ஏகிய ராஜ்ய என்று கூறப்­பட்­டி­ருக்­கின்­றது. ஏகிய ராஜ்ய என்­பது உண்­மை­யி­லேயே ஒரு­மித்த நாடு என்று தான் பொருள்­ப­ட­வேண்டும். ஆங்­கில மொழியில் உள்ள யுனிற்­றரி ஸ்டேட் என்ற சொற்­பதம் தான் ஒற்றை ஆட்­சியை நேர­டி­யாக குறிப்­ப­தாக உள்­ளது. ஆகவே நாங்கள் புதிய அர­சி­ய­ல­மைப்பில் அந்த விட­யத்­தினை கருத்தில் கொள்வோம் என்­றொரு கருத்­தினை முன்­வைத்­தி­ருக்­கின்றார்.

ஆக, பிர­தமர் ரணிலின் கருத்தின் பிர­காரம் ஒரு விடயம் வெளிப்­ப­டை­யாக கூறப்­பட்­டி­ருக்­கின்­றது, சிங்­கள மொழியில் ஏகிய ராஜ்ய என்ற பதம் நீக்­கப்­பட முடி­யாது. அதற்­கான சரி­யான அர்த்­தப்­ப­டு­த்தலை குறிப்­பி­டு­வ­தோடு தமி­ழிலும், ஆங்­கி­லத்­திலும் அதற்­கு­ரிய பதங்ளை மேற்­கொள்வோம் என்­ப­தாகும்.

அதன் பின்னர் நடை­பெற்ற வழி­ந­டத்தல் குழுவின் அமர்­வு­களில் ஏறக்­குறை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கருத்­துக்­களை ஒத்­த­வொரு முன்­மொ­ழி­வொன்று தான் நாட்டின் தன்மை குறித்து பிரே­ரிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

அந்த முன்­மொ­ழிவு இதுதான், சிங்­கள மொழியில் ஏகிய ராஜ்ய என்ற வாசனம் அப்­ப­டியே இருக்கும். அதில் எவ்­வி­த­மான மாற்­றமும் இடம்­பெ­றப்­போ­வ­தில்லை. அதற்­கான முன்­மொ­ழி­வுகள் எவையும் இல்லை. ஆனால் அது நாட்டின் ஆட்­சித்­தன்­மையை குறிக்­காது என்­ப­­தோடு பிரிக்­க­மு­டி­யாத பிள­வு­ப­டாத நாடு என்ற அடிப்­ப­டை­யி­லான விளக்கம் இணைக்­கப்­பட்­டி­ருக்கும்

ஆனால் தமிழ் மொழியில் நாட்டின் தன்மை என்­பது ஒரு­மித்த நாடு என்றே காணப்­ப­டப்­போ­கின்­றது. அச்­சந்­தர்ப்­பத்­திலும் அதற்­கு­ரிய விளக்கம் அரு­கி­லேயே வழங்­கப்­ப­ட­வுள்­ளது. ஆங்­கில மொழியில் ஒற்றை ஆட்­சியை நேர­டி­யாக குறிப்­பிடும் 'யுனிற்­றரி ஸ்டேட்' (Unitary State) என்ற சொற்­பி­ர­யோ­கத்­திற்கு பதி­லாக மாற்றுச் சொல்லைப் பயன்­ப­டுத்­து­வதா இல்­லையா என்­றொரு நிலைமை நீடித்­தி­ருந்­தது.

அத­ன­டிப்­ப­டையில் மாற்­றுச்­சொல்­லாக (Undivided Country) பயன்­ப­டுத்த முடி­யுமா என்­பது இன்னமும் முன்மொழிவாகவும் பரிசீலனையும் செய்யப்பட்டது. அத்துடன் நேரடியாக (Unitary State)சொல்லைப் பயன்படுத்திவிட்டு அந்த சொல்லானது நாட்டின் தன்மையை குறிக்காது என்ற வகையில் சிங்கள பதத்திற்கு வழங்கப்படும் விளக்கத்தினை போன்று அடிக்குறிப்பொன்றை இடுவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டது.

ஈற்றில் ஆங்கில மொழியில் ‘Aekiya Rajaya/Ourmitha nadu’ என்றே புதிய அரசியலமைப்பிற்கான இடைக்கால அறிக்கையில் முன்மொழிவதென்ற முடிவு எடுக்கப்பட்டதோடு அதன் அர்த்தப்படுத்தலையும் அருகில் வழங்குவதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியில் உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியனவும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் இதற்கு இணக்கம் தெரிவித்திருக்கின்றன. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-29#page-9

Link to comment
Share on other sites

புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம்

 

ஆனாலும் சமஷ்டி என்ற சொற்­பதம் அர­சி­ய­ல­மைப்பில் இருக்க வேண்டும் என்று வலி­யு­றுத்­தும் ­பங்­கா­ளிக்­கட்­சிகள், வடக்கு முதல்வர், கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­ப­லத்தின் அணி­யினர். அதற்­காக எவ்­வா­றான முன்­னெ­டுப்­புக்­களை இது­வ­ரையில் செய்­ய­தி­ருக்­கின்­றனர். எதிர்­கா­லத்தில் எவ்­வா­றான முன்­னெ­டுப்­புக்­களை செய்­யப்­போ­கின்­றார்கள். வெறு­மனே ஊட­கங்­க­ளிலும் பொது மேடை­க­ளிலும் கருத்­துக்­களை முன்­வைப்­பதால் எவ்­வி­த­மான பயனும் ஏற்­பட்டு விடப்­போ­வ­தில்லை என்­பதே யதார்த்தம்.

நாங்கள் வழி­ந­டத்தல் குழுவில் அங்­கத்­த­வர்கள் இல்லை. பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­துவம் இல்லை. நாங்கள் என்ன செய்­வது. ஊட­கங்கள் ஊடா­கவே உண்­மைக்­க­ருத்­துக்­களை வெளிப்­ப­டுத்த முடியும் என்று இத்­த­ரப்­பு­களில் சிலர் இல­கு­வாக பதி­லு­ரைக்­கலாம். ஆனால் சமஷ்டி என்ற சொற்­பதம் வந்­தாக வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் உறு­தி­யா­க­வி­ருக்கும் அனைத்து தரப்­புக்­க­ளுக்கும் அது ஏற்­பு­டை­ய­தாகா­தல்­லவா!

இந்த விடயம் குறித்து பங்­கா­ளிக்­கட்­சிகள் தாங்கள் அங்கம் வகிக்கும் கூட்­ட­மைப்­பினுள் இத்­தனை காலத்­திற்குள் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்க வேண்டும். அதற்கு தடைகள் காணப்­பட்­டி­ருப்பின் அவற்றை பகி­ரங்­கப்­ப­டுத்­தி­யி­ருக்­கலாம். அதன் ஊடா­கவே இந்த விட­யத்தில் அக்­கட்­சி­களின் அர்ப்­ப­ணிப்­பான செயற்­பா­டுகள் வெளிப்­பட்­டி­ருக்கும். புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான மக்கள் கருத்­த­றியும் குழுவில் சமஷ்டியுட­னான உரிய முன்­மொ­ழிவைச் செய்­தி­ருக்க வேண்டும். மக்கள் ஆணை மீறப்­ப­டு­கின்­ற­தென்றால் ஆணை வழங்­கிய மக்­களை தெளிவு படுத்தி விழிப்­பு­ணர்வு செயற்­பட்டை ஆரம்­பித்­தி­ருக்க வேண்டும்.

இவை எத­னை­யுமே முன்­னெ­டுத்­த­தாக காண­மு­டி­ய­வில்லை. அறி­யவும் முடி­ய­வில்லை. எண்­ப­து­களில் தமிழ் அர­சியல் கட்­சிகள் தமிழ் மக்­க­ளுக்­கான விடிவு நோக்கி பய­ணித்த பாதை­யி­லி­ருந்து முற்­று­மு­ழு­தாக விலகி பய­ணிக்க வேண்­டு­மென்று இளை­ஞர்கள் இயக்­­கங்­களை ஆரம்­பித்த போது அந்த இயக்­கங்கள் குறித்து மக்கள் மத்­தியில் பிர­சா­ரங்­களை செய்­தமை மட்­டு­மன்றி தமது கொள்­கை­களின் பின்னால் மக்கள் அணி­தி­ர­ளவும் உறு­து­ணை­யாக இருக்­கவும் வழி ஏற்­ப­டுத்­தி­னார்கள்.

அவ்­வா­றி­ருந்­த­வர்கள் தற்­போது அத­னை­யொத்த செயற்­பா­டு­களை மேற்­கொள்ள முடி­யா­தி­ருக்­கின்­ற­மைக்­கான காரணம் என்ன? மக்கள் களத்தில் தடம்­ப­தித்து கருத்­துக்­களை பகி­ராது ஊடங்­க­ளிலும் மேடை­க­ளிலும் இரு­வரின் செயற்­பா­டு­களை சுட்­டிக்­காட்டி கருத்­துக்­களை மட்­டுமே வெளியிடும் செயற்­பா­டுகள் தொடர்­வ­த­ானது அர­சியல் காழ்ப்­பு­ணர்வு என்றே பொருட்­ப­டுத்­தப்­பட்டு விடும் அபா­யமே உள்­ளது.

இது­வொ­ரு­பு­ற­மி­ருக்­கையில் புதிய அர­சியல் அமைப்பில் நாட்டின் தன்மை சிங்­க­ளத்தில் ஏகிய ராஜ்ய, தமிழில் ஒரு­மித்த நாடு, ஆங்­கி­லத்தில் ‘Aekiya Rajaya/Ourmitha nadu’ என குறிப்­பி­டப்­ப­ட­வுள்ள நிலையில் சிங்­கள மொழியில் காணப்­படும் ஏகிய ராஜ்ய என்ற சொற்­பதம் மாற்­றப்­பட்­டே­யா­க­வேண்டும். அது ஒற்றை ஆட்சி அரசு என்றே பொருள்­ப­டு­கின்­றது என்­பதில் இறுக்­க­மா­க­வி­ருக்கும் தரப்­புக்கள் பிறி­தொரு வாத­மொன்­றி­னையும் முன்­வைக்­கின்­றன.

தற்­போது செய்­யப்­பட்­டுள்ள முன்­மொ­ழிவின் அடிப்­ப­டையில் நாட்டின் தன்மை சிங்­க­ளத்தில் ஏகிய ராஜ்ய, தமிழில் ஒரு­மித்த நாடு, ஆங்­கி­லத்தில் ‘Aekiya Rajaya/Ourmitha nadu’ குறிப்­பி­டப்­பட்டு இருக்­கையில் இந்த நாடு, ஒற்றை ஆட்சி அரசு நாடா இல்­லையா என்ற கேள்­வி­யொன்று பொது­ம­க­னொ­ரு­வ­ருக்கு எழு­கின்­றது என்று வைத்­துக்­கொள்வோம். அவர் அதற்­காக உயர் நீதி­மன்­றத்­தினை நாடு­கின்ற போது தமிழ், மற்றும் ஆங்­கில மொழி­களில் கூறப்­பட்­டுள்ள விட­யங்கள் நீதி­மன்ற வியாக்­கி­யா­னத்­திற்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­மாட்­டாது. நாட்டின் தன்மை குறித்து சிங்­கள மொழியில் என்ன வரை­வி­லக்­கணம் காணப்­ப­டு­கின்­றதோ அந்த வரை­வி­லக்­க­ணமே கருத்­திற்­கொள்­ளப்­படும்.

அதில் ஏகிய ராஜ்ய என்­பது தெளிவாக குறிப்­பிட்­டி­ருக்­கின்றபடியால் ஒற்றை ஆட்சி அரசு என்­பது தான் முடிந்த முடி­வாகும். எனவே இந்த நாடு நிச்­ச­ய­மாக ஒற்றை ஆட்சி அரசு என்றே நீதி­மன்றம் வியாக்­கி­யானம் அளித்து தீர்ப்­ப­ளிக்கும் என்­பதில் மாற்­றுக்­க­ருத்­திற்கு இட­மில்லை என்­பதே அந்த வாத­மாகும்.

இவ்­வி­த­மாக முன்­வைக்­கப்­படும் வாதம் தொடர்பில் கருத்­து­ரைத்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும், யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் வழி­ந­டத்தல் குழு உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் கூறு­கையில்,

புதிய அர­சி­ய­ல­மைப்பில் நாட்டின் தன்மை குறித்த விட­யத்தில் உயர்­நீ­தி­மன்றம் சிங்­கள மொழி­யி­லான வியாக்­கி­யா­னத்­தினை ஏற்குமென்றும் ஏனை­ய­வற்றை ஏற்­காது என்றும் வாதங்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

உண்­மையில் இந்த விட­யத்தில் முழு­மை­யான புரி­த­லின்­மையே கார­ண­மா­கின்­றது. புதி­தாக அமை­யப்­போ­கின்ற அர­சி­ய­ல­மைப்பில் நாட்டை தன்மை தொடர்­பி­லான முன்­மொ­ழிவில் சிங்­க­ளத்தில் ஏகிய ராஜ்ய, தமிழில் ஒரு­மித்த நாடு, ஆங்­கி­லத்தில் ‘Aekiya Rajaya/Ourmitha nadu’ என குறிப்­பி­டப்­பட்டு அதற்­கான வரை­வி­லக்­க­ணங்­களும் அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்­தி­லேயே குறிப்­பி­டப்­ப­ட­வுள்­ளது.

குறிப்­பாக மூன்று மொழி­க­ளிலும் மேற்­கு­றித்த சொற்­றொ­டர்­க­ளுக்கு அரு­கி­லேயே அந்த சொற்­றொ­ட­ரா­னது, ஒரு பிள­வு­ப­டாத, பிரிக்­க­மு­டி­யாத நாடு என்ற பொருளை மையப்­ப­டுத்­தி­யா­கவும் அதி­கா­ரப்­ப­கிர்­வுக்கு உட்­பட அரசு என்­பதை வெளிப்­ப­டுத்தும் வகை­யிலும் அவ்­ வ­ரை­வி­லக்­கணம் அமை­யப்­போ­கின்­றது.

அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்­தில் நாட்டின் தன்­மைக்­கான வரை­வி­லக்கணம் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும் நிலையில் நீதி­மன்­றத்தின் வியாக்­கி­யா­னத்­தினை நாட­வேண்­டிய நிலைமை ஏற்­ப­டாது. அவ்­வாறு ஏற்­ப­டாலும் வரை­வி­லக்­க­ணத்­தினை சான்­றுப்­பொ­ரு­ளாக நீதி­மன்றம் எடுத்­துக்­கொள்ளும்.

ஆகவே புதிய அர­சி­ய­ல­மைப்பில் நாட்டின் தன்மை குறித்து செய்­யப்­பட்­டுள்ள முன்­மொ­ழி­வுக்­கான வரை­வி­லக்­கணம் வழங்­கப்­ப­டு­வதன் கார­ண­மாக வேண்­டாத சந்­தே­கங்­களை கொள்ள வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்றார்.

ஆக, தமிழ் மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தி­யி­ருக்கும் ஒரு அர­சியல் கட்­ட­மைப்­பினை மையப்­ப­டுத்­திய தரப்­புக்­க­ளி­டையே புகை­வண்டி தண்­ட­வா­ளங்கள் போன்று சமாந்­த­ர­மாக இரு­வே­று­பட்ட கருத்­துக்கள் காணப்­ப­டு­கின்­றன. தற்­போ­தைய நிலை­மையில் இவை ஒரு­புள்­ளியில் சந்­திக்கும் என்று கரு­த­மு­டி­யாத சூழலே காணப்­ப­டு­கின்­றது. இதன் விளைவு எவ்­வாறு அமையும் என்­ப­தற்­கான பதிலை எதிர்­காலம் தான் வழங்­க­வுள்­ளது.

எனினும் உலகின் மகத்­தான புரட்சி எனக் கூறப்­ப­டு­கின்ற ரஷ்ய புரட்சி ஆரம்­ப­மாகி நிறை­வ­டைந்த காலத்­திற்குள் நடை­பெற்ற ஒரு விட­யத்­தினை இந்த சந்­தர்ப்­பத்தில் மீட்­டிப்­பார்க்க வேண்­டி­யது பொருத்­த­மா­ன­தா­க­வி­ருக்கும்.

1898ஆம் ஆண்டு ரஷ்ய சமூக ஜன­நா­யக தொழி­லாளர் கட்சி உரு­வா­கி­றது. 1903 இல் இக்­கட்­சியில் போல்ஸ்­விக்­குகள் மற்றும் மென்ஸ்­விக்­குகள் என இரண்டு போக்­குகள் உரு­வா­கின்­றன.

ரஷ்ய பொரு­ளா­தார வீழ்ச்­சி இடம்பெற்று அதைத் தொடர்ந்து உள்­நாட்டுக் கல­கங்கள் அதி­க­ரிக்­கின்­றன. 1905 ஆம் ஆண்டு ஜன­வ­ரி மாதம் புனித பீட்டர் பெர்க் என்று அழைக்­கப்­படும் பகு­தியில் நடை­பெற்ற அமை­தி­யான போராட்­டத்தில் இரா­ணுவம் புகுந்து துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­கின்­றது.

இந்த நிகழ்வு இரத்த ஞாயிறு என அழைக்­கப்­ப­டு­கி­றது. ஏற்­க­னவே மிகக் கடு­மை­யான பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கு ஆளா­கி­யி­ருந்த ரஷ்ய மக்கள் அர­சாங்­கத்தின் அடக்­கு­முறைப் போக்­குக்கு எதி­ராக கூர்­மை­ய­டை­கின்­றனர். விவ­சா­யி­களின் எதிர்ப்­பு­ணர்வும் அதி­க­ரிக்­கி­றது.

இத்­த­ரு­ணத்தில் தலை­ம­றைவு வாழ்க்­கை­யி­லி­ருந்து 1917இல் நாடு திரும்­பிய லெனின் ரயில் நிலை­யத்தில் இருந்த போல்ஸ்­விக்­குகள் இடத்தில் அனைத்து அதி­கா­ரங்­களும் சோவி­யத்­துக்கே என்ற பிர­சா­ரத்­தினை செய்து மீண்டும் தனது ஜன­நா­யகப்போராட்டத்தை முன்­னெ­டு­கின்றார்.

இத்­த­ரு­ணத்தில் போல்ஸ்­விக்­கு­களின் மத்திய குழு கூட்டத்தில் ஆயுதப்புரட்சியை தவிர்க்க முடியாது என்ற முடிவு மென்ஸ்விக்குகளின் ஆதிக்கத்தினை தாண்டி எடுக்கப்படுகின்றது. அதனையடுத்தே போல்ஸ்விக்குகளுடன் பொதுமக்கள், பெண்களின் இராணுவ படைப்பிரிவு விவசாயிகள், தொழிற்படையினரின் இணைவு அதிகரித்து ஈற்றில் 1922 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சோவியத் சோஷலிச குடியரசு ஒன்றியம் உருவாகின்றது.

இதன் பிரகாரம் சிறு தரப்பாக இருந்த போல்ஸ்விக்குகளின் முடிவை ஏற்றுக்கொள்ளாத மென்ஸ்விக்குகளின் போக்கை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதன்பால் போல்ஸ்விக்குகளின் கொள்கையின் பின்னால் அனைவரும் அணி திரண்டனர்.

ஆகவே சிறுதரப்பு ஒன்று எடுக்கும் அனைத்து முடிவுகளும் தவறென்றோ அல்லது பெரும்பான்மை தரப்பு ஒன்று எடுக்கும் முடிவு மிகவும் சரியானதென்றோ கொள்ளமுடியாது என்ற படிப்பினையை இந்த வரலாறு உணர்த்தியிருக்கின்றது. அதன் தாத்பரியத்தினை தற்போதுள்ள தமிழ் தலைமைகள் புரிந்து கொள்ளவேண்டிய பெருத்தமான கால கட்டமே இதுவாகும்.  

தொடரும்...

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-08-05#page-8

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம்

 

ஆர் .ராம்

 

அத்தோடு 1972 ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் அனைத்தும் இலங்கை பிரஜைகளுக்கு மட்டுமே ஏற்புடையன எனக் குறிப்பிடப்பட்டிருந்தமையினால் இலங்கையில் வாழ்ந்த பிரஜாவுரிமை அற்றவர்கள் அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கு பெருந்தடையாக இருந்தது.

மேலும் அடிப்படை உரிமைகள் சம்பந்தமாகக் கூறப்பட்டுள்ள அனைத்து ஏற்பாடுகளும் நீண்ட வாக்கியங்கள் ஊடாக வெளிப்படுத்தப்பட்டிருந்தமையையும் அரசியல், சிவில் செயற்பாட்டாளர்கள் கடுமையாக விமர்சித்தார்கள். அமெரிக்கா, சோவியத்யூனியன் போன்ற நாடுகளின் அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் சம்பந்தமான வாக்கியங்கள் சிறிதாகவும் அதிகளவு விடயப்பொருளடங்கியதாகவும் அமைந்திருக்கின்றமையைப் போன்று அமையவேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.

அதேநேரம் பிரஜைகளுக்கான உரிமைகள் என்ற பொருள்படும் வகையில் சில அடிப்படை உரிமைகளே நேரடியாக கூறப்பட்டிருந்ததால் அடிப்படை உரிமைகளாக குறிப்பிட்டிருந்த ஏனைய உரிமைகள் யாருக்கானவை என்ற வினாவும் பொது மக்கள் மத்தியில் வெகுவாக எழுந்திருந்தன. அத்தோடு பொதுமக்களுக்கு தமக்கான தனிப்பட்ட சொத்துக்களை சேர்த்துக்கொள்வதற்கான அனுமதியும் அடிப்படை உரிமைகளில் மறுக்கப்பட்டிருந்தது.

மேலும் குறிப்பிட்ட பொருளாதார கோட்பாட்டினை அரசியல் திட்டமாக்கும் ஒரு முயற்சியாகவே முதலாவது அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் உள்வாங்கப்பட்டுள்ளன என்ற கடும் விமர்சனத்தினையும் பிரதான கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்திருந்தது. இது அரசியல் காரணங்களுக்காக முன்வைக்கப்பட்ட கடுமையான விமர்சனமாக இருந்தாலும் அக்காலத்தில் காணப்பட்ட பொருளாதார நிலைமைகளின் காரணமாக இவ்விமர்சனம் பொது மக்கள் மத்தியிலும் வெகுவாகச் சென்றடைந்திருந்தது.

இவ்வாறான நிலையில் 1977ஆம் ஆண்டு தேர்தலில் பெரு வெற்றி பெற்று ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிப்பீடமேறியது. இக்கட்சி இரண்டாவது குடியரசு அரசியலமைப்பினை உருவாக்குவதற்கு பெருமுனைப்பு காட்டியிருந்தது.

ஏற்கனவே உள்ள அரசியலமைப்பில் குறைபாடுகள் பல காணப்பட்டமையினை சுட்டிக்காட்டியதன் காரணமாகவும் பெரும்பான்மை பலம் காணப்பட்டமையின் காரணமாகவும் அக்கட்சிக்கு அரசியலமைப்பொன்றினை உருவாக்குவதற்கான ஏதுநிலைகள் அதிகமிருந்தன.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியானது தனது ஆட்சியை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டியதற்காகவும், தனது கொள்கைகளை சட்டரீதியானதாக்கும் நோக்கத்தில் அரசியலமைப்பினை உருவாக்கும் முயற்சியில் அப்போதைய ஆட்சியாளர்கள் இறங்கியிருந்தனர்.

1978ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்த இரண்டாவது குடியரசு அரசியலமைப்பில் 1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் அனைத்தும் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளில் சிலவாகும்.

உறுப்புரை 10 முதல் உறுப்புரை14 வரையில் அடிப்படை உரிமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இருப்பினும் வெளிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளில் உறுப்புரை 10, 11 ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளவையே பூரணத்துவமானவையாக காணப்படுகின்றன.

உறுப்புரை 10இல் சிந்தனை செய்யும் சுதந்திரம், மனச்சாட்சியினை பின்பற்றும் சுதந்திரம்,

மத சுதந்திரம் என்பனவும் உறுப்புரை 11இல் சித்திரவதைக்குள்ளாகாமல் இருப்பதற்குரிய சுதந்திரம் ஆகியவை தொடர்பில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

இவை பூரணமான உரிமைகளாக காணப்படுகின்றன எனக் கருதப்படுகின்றமைக்கான காரணம் என்னவெனில் அரசியலமைப்பில் வெளிப்படையாக எந்த மட்டுப்பாடுகளும்

விதிக்கப்படவில்லை. இதன் விளைவாக எச்சந்தர்ப்பத்திலும் இவற்றை மீறவும் முடியாது என்பது பொதுவான நிலைப்பாடாகும்.

அடுத்து, உறுப்புரை 12 ஆனது சமத்துவத்துக்கான உரிமையினைக் கூறுகின்றது. உறுப்புரை 12(1) ஏற்பாடானது, சட்டத்தின் முன் சகலரும் சமமானவர்கள். அத்துடன் சட்டத்தின் சமமான பாதுகாப்பிற்கு உரித்துடையவர்கள் உறுப்புரை12(2) இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியல் கொள்கை, பிறப்பிடம் ஆகியவற்றின் பால் வேறுபாட்டைக் காட்டக்கூடாது எனக் கூறுகின்றது.

உறுப்புரை 12(1), 12(2) ஆகியவற்றுக்கிடையில் பிரதான வேறுபாடொன்றும் காணப்படுகின்றது. 12(1) வெளிநாட்டு பிரஜைகளிற்கும் உரித்துடையதாக உள்ளபோது 12(2) இலங்கைப் பிரஜைக்கு மட்டுமே உரித்துடையதாக உள்ளது. எனவே வெளிநாட்டவர் ஒருவருக்கு மேற்கூறப்பட்ட ஏற்பாடுகளில் ஒன்றின் மீது ஓரம் கட்டப்பட்டுள்ளது என்பது அடிப்படை உரிமை மீறல் ஆகாது.

அடுத்து உறுப்புரை 13ஆனது பல உரிமைகளைக் கூறுகின்றது. எதேச்சையாகக் கைது செய்யப்படாமலும் தடுத்து வைக்கப்படாமலும் அத்துடன் தண்டிக்கப்படாமலும் இருப்பதற்கான சுதந்திரம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கைதிற்கான காரணம் கூறப்பட வேண்டும் மற்றும் கடந்தகாலத்தை உள்ளடக்கும் தண்டனைச் சட்டவாக்கங்களைத் தடைசெய்தல் பற்றிக் கூறுகின்றது. இவ்வுறுப்புரையானது தேசிய பாதுகாப்பு, பொதுமக்கள் ஒழுங்கு, பொதுமக்கள் சுகாதாரம், ஒழுக்கம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்படலாம் என்பது அடுத்த உறுப்புரைகளில் கூறப்பட்டுள்ளது.

உறுப்புரை 14(1)(அ)இல் பேச்சு சதந்திரம், கருத்து தெரிவித்தல் சுதந்திரம் ஆகிய உரிமைகளானவை இனச்சுமூக வாழ்வு, மதச் சுமூக வாழ்வு போன்றவற்றின் நலன்கருதி அல்லது பாராளுமன்ற சிறப்புரிமை, நீதிமன்ற அவமதிப்பு மற்றும் தவறுபுரிய தூண்டுதல் என்பன தொடர்பில் மட்டுப்படுத்தப்படலாம் என உறுப்புரை 15(2) குறிப்பிடுகின்றது.

உறுப்புரை 14(ஆ)ஒன்றுகூடுவதற்கான சுதந்திரமானது, இனச்சுமூக வாழ்வு, மதச் சுமூகவாழ்வு போன்றவற்றின் நலன்கருதி மட்டுப்படுத்தப்படலாம் என உறுப்புரை 15(3) குறிப்பிடுகின்றது.

உறுப்புரை(14)(இ)ஒருங்கு சேருவதற்கான சுதந்திரமானது, இனச்சுமுகவாழ்வு, மதச் சுமுகவாழ்வு, தேசிய பொருளாதார நலன்கருதியும் மட்டுப்படுத்தப்படலாம் என உறுப்புரை 15(4) குறிப்பிடுகின்றது.

உறுப்புரை(14)(ஈ)தொழிற்சங்கத்தை அமைக்கவும் அதில் சேரவுமான உரிமையானது, தேசிய பொருளாதார நலன்கருதியும் மட்டுப்படுத்தப்படலாம்.

உறுப்புரை14 (உ)மதவழிபாட்டினை செய்வதற்கான சுதந்திரம் காணப்படுகின்றது. அதற்கு எவ்விதமான மட்டுப்பாடுகளும் இல்லை.

உறுப்புரை 14(ஊ) சொந்த கலாசாரத்தையும் மொழியையும் பயன்படுத்துவதற்கான உரிமை காணப்படுகின்றது. அதற்கும் எவ்விதமான மட்டுப்பாடுகளும் இல்லை.

உறுப்புரை 14(எ)சட்டமுறையான தொழிலில் ஈடுபடுவதற்கான உரிமை ஆகியன தேசிய பொருளாதார நலன்கருதி மட்டுப்படுத்தப்படலாம் என உறுப்புரை 15(5) குறிப்பிடுகின்றது.

உறுப்புரை14(ஏ) இலங்கை முழுவதும் நடமாடுவதற்கும் வசிப்பதற்குமான உரிமை. உறுப்புரை14(ஐ) இலங்கைக்கு திரும்பி வருவதற்கான உரிமை என்பவற்றிலும் எவ்விதமான மட்டுப்பாடுகளும் இல்லை.

இதேநேரம் உறுப்புரை 16இல் இப்போதுள்ள எழுத்திலான சட்டங்கள், எழுத்திலில்லாச் சட்டங்கள் எல்லாம் தொடர்ந்தும் வலுவிலிருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளதோடு உறுப்புரை 17 ஆனது அடிப்படை உரிமைகளை மீறுவதற்கெதிரான பரிகாரங்களைக் கூறுகின்றது.

அதில் "ஆளொவ்வொருவரும், இந்த அத்தியாயத்தின் ஏற்பாடுகளின் கீழ் அவருக்குரித்தாகவுள்ள அடிப்படை உரிமையானது ஆட்சித்துறை நடவடிக்கை மூலம் அல்லது நிருவாக நடவடிக்கை மூலம் மீறப்பட்டமை தொடர்பில் அல்லது உடனடியாக மீறப்படவுள்ளமை தொடர்பில் 126ஆம் உறுப்புரையினால் ஏற்பாடு செய்யப்பட்டவாறாக உயர் நீதிமன்றத்திற்கு விண்ணப்பிப்பதற்கு உரித்துடையவராதல் வேண்டும்" என்றுள்ளது.

தொடரும்.... 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-08-19#page-5

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

21752737_498755730485062_711738534765200

 

 

 

புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் 24

 

ஆர் . ராம்

 

அடிப்­படை உரி­மைகள் தொடர்­பான விட­யங்­களை கடந்த தொடர்­களில் கூடி­ய­ளவு ஆராய்ந்­த­தை­ய­டுத்து தற்­போது நடை­மு­றையில் உள்ள 1978ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பின் அத்­தி­யாயம் நான்கில் காணப்­படும் மொழி சம்­பந்­த­மான விட­யத்தில் எவ்­வா­றான புதிய முன்­மொ­ழி­வுகள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன என்­பது தொடர்­பாக கவனம் செலுத்த வேண்­டி­யுள்­ளது.

சுதந்­திர இலங்­கையின் வர­லாற்­றினை எடுத்­துக்­கொண்டால் 1948 ஆம் ஆண்டில் இலங்கை பிரித்­தா­னி­ய­ரிடம் இருந்து விடு­தலை பெற்று டொமி­னியன் அந்­தஸ்து பெற்­றது. 1936ஆம் ஆண்டில் அர­சாங்க சபைத் தேர்­தலில் வெற்றி பெற்ற இட­து­சா­ரி­க­ளான என். எம். பெரேரா, பிலிப் குண­வர்த்­தன போன்­ற­வர்கள் ஆங்­கி­லத்­திற்குப் பதி­லாக சிங்­களம், மற்றும் தமிழ் ஆகி­ய­வற்றை ஆட்­சி­மொ­ழி­க­ளாக்க வேண்டும் என வலி­யு­றுத்­தி­னார்கள்.

1936 நவம்­பரில், இலங்கைத் தீவு முழு­வதும் உள்ள உள்­ளு­ராட்சி மன்­றங்கள், பொலிஸ்­துறை, நீதித்­துறை, ஆகி­யன உள்ளூர் மொழி­க­ளி­லேயே வழக்­குகள் நடத்­தப்­பட வேண்டும் பொலிஸ் நிலை­யங்­களில் சாட்­சி­களின் மொழி­க­ளி­லேயே வழக்­குகள் பதி­யப்­பட வேண்டும் போன்ற சட்­ட­மூ­லங்கள் அர­சாங்க சபையில் கொண்­டு­வ­ரப்­பட்டு சட்டச் செய­லா­ள­ருக்கு மேல­திக ஆணைக்­காக அனுப்­பப்­பட்­ட­ன.

இவ்­வா­றி­ருக்­கையில் 1944 ஆம் ஆண்டில் ஜே. ஆர். ஜெய­வர்த்­தன ஆங்­கி­லத்­துக்குப் பதி­லாக சிங்­க­ளத்தை அதி­கா­ர­பூர்­வ­ மொ­ழி­யாக்க வேண்டும் என அர­சாங்க சபையில் கோரினார். ஆனாலும் ஆங்­கிலம் தொடர்ந்து 1956 வரை ஆட்சி மொழி­யாக இருந்து வந்­தது. 1951ஆம் ஆண்டில் பண்­டா­ர­நா­யக்க ஐக்­கிய தேசியக் கட்­சியில் இருந்து வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை ஆரம்­பித்தார்.

இவ்­வா­றி­ருக்­கையில் தமிழ் மொழிக்கும், சிங்­கள மொழிக்கும் சம உரிமை வழங்­கப்­பட வேண்­டு­மென்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கலா­நிதி என்.எம். பெரேரா 1955 அக்­டோபர் மாதம் 19 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் பிரே­ரணை கொண்­டு­வந்தார். துர­திஷ்­ட­வ­ச­மாக அது சாத்­தி­ய­மா­காத நிலைக்குச் சென்­றது.

இவ்­வா­றான நிலையில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி தலை­மை­யி­லான கூட்­டணி 1956 இல் நடை­பெற்ற தேர்­தலில் பெரும் வெற்றி பெற்­றது. பண்­டா­ர­நா­யக்­காவின் அமைச்­ச­ரவை பத­வி­யேற்று 53 நாட்­க­ளுக்குள் சிங்­களம் மட்டும் சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்­டது.

தனிச்­சிங்­களச் சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்­ட­போது கலா­நிதி கொல்வின் ஆர்.டீ. சில்வா ஒரு மொழி­யென்றால் இரு நாடுகள் இரு மொழி­யென்றால் ஒரு நாடு என்று தமிழ் மொழிப் புறக்­க­ணிப்பால் பின்­னாளில் பிரி­வி­னை­வாதம் தலை­தூக்கும் என்­பதை பாரா­ளு­மன்­றத்தில் கடு­மை­யாக எதிர்த்து எச்­ச­ரித்­தி­ருந்தார்.

எனினும் 1956ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க அர­ச­க­ரும மொழிகள் சட்­ட­மாக கொண்­டு­வ­ரப்­பட்ட சிங்­களம் மட்டும் சட்­ட­மூலம் பிர­தி­நி­திகள் சபையில் நிறை­வேற்­றப்­பட்­டது. இச்­சட்ட மூலத்­துக்கு ஐக்­கிய தேசியக் கட்சி ஆத­ர­வ­ளித்­தது. தமிழ்க் கட்­சிகள், மற்றும் சம­ச­மாஜக் கட்சி, கம்­யூனிஸ்­டுகள் எதிர்த்து வாக்­க­ளித்­தன. ஜுன் 6ஆம் திகதி செனட் சபையில் நிறை­வேற்­றப்­பட்ட போது 19 பேர் ஆத­ர­வா­கவும், 6 உறுப்­பி­னர்கள் எதிர்த்தும் வாக்­க­ளித்­தனர்

இச்­சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டதால் சிங்­களம் மட்­டுமே இலங்­கையின் அர­ச­க­ரும மொழி என்­பது சட்­ட­மா­னது. இலங்­கையின் ஆட்­சி­மொ­ழி­யான ஆங்­கில மொழி அகற்­றப்­பட்டு 70சத­வீத பெரும்­பான்மை சிங்­க­ள­வர்கள் பேசும் சிங்­கள மொழி ஆட்சி மொழி­யாக்­கப்­பட்­டது. தமிழ் மொழி அரச கரும மொழி என்­ப­தி­லி­ருந்தும் ஆட்­சி­மொழி என்­ப­தி­லி­ருந்தும் புறக்­க­ணிக்­கப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து அர­ச ­ப­ணியில் உள்ள தமி­ழர்­களும் சிங்­களம் கற்­றாக வேண்­டிய நிர்­ப்பந்­தத்­திற்கு உள்­ளாக்­கப்­பட்­டார்கள். சுதந்­திர கட்சி ஒரு இட­து­சாரி கட்­சி­யாக இருந்­தாலும் இச்­சட்­டத்­தினை சில தமிழ், மற்றும் சிங்­கள இட­து­சாரி உறுப்­பி­னர்கள் கூட எதிர்த்­தனர்.

எஸ்.ஜே.வி.செல்­வ­நா­யகம் தலை­மையில் பல போராட்­டங்கள், முன்­னெ­டுப்­புகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. யாழ்ப்­பாணம், வவு­னியா, மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை உள்­ளிட்ட வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகு­தி­களில் அரசின் செயற்­பா­டுகள் இயங்க விடாது செய்­யப்­பட்­டன.

இவ்­வாறு தமி­ழர்­களின் எதிர்ப்பை அடுத்து பண்­டா­ர­நா­யக்க தலை­மை­யி­லான அர­சாங்கம் 1958 செப்­டெம்பர் 3ஆம் திகதி அரச மொழிகள் சட்­டத்தில் 1958(28) என்ற திருத்தச் சட்­டத்தைக் கொண்டு வந்­தது. இதன்­படி நியா­ய­மான தமிழ் மொழிப் பயன்­பாட்டை அங்­கீ­க­ரித்­தது.

குறித்த திருத்­தத்தின் பிர­காரம், தமிழ்ப் பாட­சா­லை­களில் போதனா மொழி­யாகத் தமிழ் காணப்­படும், தமி­ழர்கள் அரச சேவையில் சேர்­வ­தற்­கான போட்டிச் சோத­னைகள் தமிழில் நடத்­தப்­படும், அரச நிறு­வன தொடர்பு மொழியாக தமிழ் காணப்­படும், வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் அரச நட­வ­டிக்­கைகள் தமிழில் இடம்­பெறும் என்­ப­னவே அவ்­வி­தந்­து­ரைப்­புக்­க­ளாகும்.

இவ்­வாறு தமிழர் வாழ் பகு­தி­களில் தமிழும் பயன்­ப­டுத்­தப்­ப­டலாம் எனும் திருத்தம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டாலும் சுதந்­திர இலங்­கையில் இனங்­க­ளுக்­கி­டையே பகையை உரு­வாக்­கிய முத­லா­வது சட்­ட­மாக இதுவே காணப்­ப­டு­வ­தோடு மட்டுமன்றி அகிம்­சை­வ­ழியில் ஆரம்­பித்த போராட்டம் பின்னர் ஆயு­தப்­போ­ராட்­ட­மாக மாறு­வ­தற்கும் இச்­சட்­டமும் ஒரு கார­ண­மா­யிற்று.

இந்­நி­லையில் 1956ஆம் ஆண்டு முதல் சிங்­களம் அரச கரும மொழி­யாக இருந்­தாலும் கூட 1972ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட அர­சி­ய­ல­மைப்பில் தான் முதற்­த­ட­வை­யாக உள்­ளீர்க்­கப்­பட்டு சுதேச மொழி­யொன்­றுக்­கான கௌரவம் வழங்­கப்­பட்­டி­ருந்து. அத்­துடன் பெரும்­பான்மை சிங்­கள மக்­களின் தாய்­மொ­ழி­யான சிங்­க­ளத்­திற்கு அர­சியல் யாப்பு உத்­த­ரவாதம் கிடைக்­கப்­பெற்­றமை பெரும்­பான்மை இனத்­த­வர்­களின் பெரு­வ­ர­வேற்­புக்கும் கார­ண­மாக அமைந்­தது. இருப்­பினும் பல­மொழி பேசும் ஒரு நாட்டில் ஒரு மொழிக்கு யாப்பு அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டமை ஏனைய தேசிய இனங்­களை குறிப்­பாக தமிழ் தேசிய இனத்­தினை புறக்­க­ணிப்­ப­தா­கவே இருந்­தது. வட­கி­ழக்கில் வாழும் தமிழ் மக்­க­ளுக்கு அப்பால் அதற்கு வெளியில் வாழும் மக்கள் தமது கட­மை­களை தமிழில் நிறை­வேற்­ற­மு­டி­யாத நெருக்­க­டி­யான நிலை­மைகள் எழுந்­தன.

இந்­நி­லையில் 1978ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட இரண்டாவது குடியரசு யாப்பில் தன்னை நீண்டகாலத்திற்கு நிலைப்படுத்த தயாராகிவரும் ஜே.ஆர். தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமானது மொழி சார்ந்து ஒரு நியாயத்தினை வழங்குமா என தமிழ் பேசும் மக்கள் எதிர்பார்த்தனர்.

அந்த அர­சாங்­கமும் தமிழ் பேசும் மக்­களின் எதிர்­பார்ப்பில் மண் அள்­ளிப்­போடும் வகை­யி­லேயே அர­சி­ய­லப்பில் மொழி­சார்ந்த விட­யத்­தினை உள்­ளீர்த்­தது. ஆனாலும் மொழி­சார்ந்த விட­யத்தில் கடந்த காலத்தில் காணப்­பட்ட சிங்­கள மொழி திணிப்­பினை சற்றே குறைக்கும் வகையில் ஒரு சில விட­யங்கள் அமைந்­தி­ருந்­தன. ஆனாலும் அது நடை­மு­றையில் சாத்­தி­ய­மா­காத நிலைமை தற்­போது வரையில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

   தொடரும்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-09-16#page-4

Link to comment
Share on other sites

புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் 25

 

குறிப்­பாக 1978ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பில் "சிங்­கள மொழி" அரச கரும மொழி­யா­கவும் "சிங்­க­ளமும், தமிழும்" இலங்­கையின் "தேசிய மொழி­யாக" இருக்கும் எனவும் குறிப்­பிடப்பட்­டது. அத­னைத்­தொ­டர்ந்து 1987 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 29ஆம் திகதி கைச்­சாத்­தி­டப்­பட்ட இந்­திய–இலங்கை ஒப்­பந்­தத்தின் பிர­காரம் 1978ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பில் 16ஆவது திருத்­தச்­சட்டம் மேற்­கொள்­ளப்­பட்­டது.

இத்­தி­ருத்­தத்தின் பிர­காரம் சிங்­க­ளமும் - தமிழும் இலங்­கையின் அர­ச­க­ரும மொழி­யா­கவும் ஆங்­கிலம் இணைப்பு மொழி­யா­கவும் இருக்கும் என குறிப்­பி­டப்­பட்­டது. அத்­துடன் ஏதா­வது ஒரு மொழியில் கல்­வியைத் தொடர முடியும் எனவும் குறிப்­பி­டப்­பட்­டது. எனினும் தேசிய மொழிகள் அல்­லாத ஒரு­மொ­ழியை கல்வி மொழி­யாக கொண்­டி­ருக்­கின்ற ஓர் உயர்­கல்வி நிறு­வ­னத்­திற்கு இது ஏற்­பு­டை­ய­தா­காது எனவும் கூறப்­பட்­டது.

நிர்­வாக மொழியைப் பொறுத்­த­வ­ரையில் சிங்­க­ளமும் தமிழும் நாடு­மு­ழு­வதும் நிர்­வாக மொழி­யாக இருத்தல் வேண்டும். வட­கி­ழக்கு மாகா­ணங்கள் தவிர்ந்த ஏனைய இடங்­களில் சிங்­கள மொழி நிர்­வாக மொழி­யாக இருத்தல் வேண்டும். எனினும் பிர­ஜைகள் அங்­குள்ள அரச நிறு­வ­னங்­களில் தமி­ழிலோ அல்­லது ஆங்­கி­லத்­திலோ தொடர்பு கொள்­வ­தற்­கான வாய்ப்­புக்கள் இருத்தல் வேண்டும்.

விசே­ட­மாக வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் தமிழ் மொழி நிர்­வாக மொழி­யாக இருத்தல் வேண்டும். ஆனால் குறிப்­பிட்ட சில இடங்­களில் குறிப்­பாக ஒரு மொழி பேசுவோர் செறி­வாக உள்ள இடங்­களில் இரண்டு மொழி­க­ளையும் பேசு­வ­தற்­கான நிர்­வாகம் இருத்தல் வேண்டும்.

சட்­ட­வாக்க மொழியைப் பொறுத்­த­வ­ரையில் சிங்­க­ளமும், தமிழும் இலங்­கையின் சட்­ட­வாக்க மொழி­யாக இருத்தல் வேண்டும். அதே­வேளை உரு­வாக்­கப்­படும் ஒவ்­வொரு சட்­டத்­திற்கும் ஆங்­கில மொழிபெயர்ப்பு ஒன்று இருத்தல் வேண்டும். நீதி­மன்ற மொழியைப் பொறுத்­த­வரை சிங்­க­ளமும் தமிழும் நீதி­மன்ற மொழி­யாக இருத்தல் வேண்டும். தமிழ்மொழி இல்­லாத இடப்­ப­ரப்­புக்­களில் சிங்­கள மொழி இருத்தல் வேண்டும். அத்­துடன் நீதி­மன்ற பதி­வே­டுகள் அனைத்தும் சிங்­கள மொழியில் இருத்தல் வேண்டும் என்றும் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

இந்த ஏற்­பா­டுகள் மூலம் தமிழ்­மொ­ழியும் அரச கரு­ம­மொ­ழி­யாக மாற்­றப்­பட்­டதன் மூலம் தமிழ் பேசும் மக்­களின் நீண்­டநாள் கோரிக்கை நிறை­வேற்றி வைக்­கப்­பட்­டது எனலாம். வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள் மட்­டு­மல்ல வடக்கு, கிழக்­கிற்கு வெளியே வாழும் தமிழ் பேசும் மக்­களும் தமது சொந்த மொழியில் கரு­மங்­களை ஆற்­றக்­கூ­டிய சூழல் எழுந்­தது. அத்­துடன் உயர்­கல்­வியைப் பொறுத்­த­வ­ரையில் கூட தமிழ்மொழியில் கற்கைத் துறை­களை உரு­வாக்­கு­வ­தற்கு வழி­யேற்­ப­டுத்திக் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.

இவை முன்­னேற்­ற­க­ர­மான விட­யங்­க­ளாக பார்க்­கப்­ப­டு­கின்ற போதும் ஏதா­வது ஒரு தேசிய மொழியில் கல்வி கற்­கலாம் என்னும் ஏற்­பாடு தமிழ்மொழி பேசு­வோ­ருக்கு பாத­க­மா­ன­தா­கவே உள்­ளது. குறிப்­பாக வடக்கு, கிழக்கு மாகா­ணத்­திற்கு வெளியே வாழும் தமிழ் மக்­க­ளுக்கு தனித்­துவ அடை­யா­ளத்­தினை சிதைப்­ப­தா­கவே உள்­ளது.

தமிழ் மொழியின் பிர­யோகம் அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக கூறப்­பட்­டுள்ள போதும் அது நடை­மு­றையில் கடைப்­பி­டிக்­கப்­ப­டாத போக்கே நீடித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது. குறிப்­பாக கூறு­வ­தாயின் ஒரு உதவி அர­சாங்க அதிபர் பிரிவில் ஒரு தேசிய மொழியை பேசுவோர் அதி­க­ளவு இருக்­கும்­போது அத்­தே­சிய மொழி­யி­லேயே நிர்­வாகம் நடை­பெ­றுதல் வேண்டும். இரு தேசிய மொழி­களைப் பேசு­ப­வர்கள் கணி­ச­மாகக் காணப்­ப­டு­வார்­க­ளாயின் இரு தேசிய மொழி­க­ளிலும் நிர்­வாகம் நடத்­தப்­ப­ட­வேண்டும் என்று கூறப்­பட்­டி­ருந்­தாலும் கிழக்கு மாகா­ணத்தில் குடி­யேற்­றப்­பட்ட சிங்­கள மக்­களை காரணம் காட்டி கடைப்­பி­டிக்­கப்­படும் முறை­மையானது மலை­யகம் மற்று வடக்கு, கிழக்­கிற்கு வெளியில் உள்ள தமி­ழர்கள் வாழும் பகு­தி­களில் அவ்­வா­றான நிலை­மைகள் காணப்­ப­ட­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இவ்­வா­றான நிலை­மையில் அடிப்­படை உரி­மைகள் தொடர்­பான உப­கு­ழுவின் அறிக்­கையில், இலங்கை குடி­ய­ரசின் தேசிய மற்றும் அரச கரும மொழி­க­ளாக சிங்­க­ளமும் தமிழும் அங்­கீ­க­ரிக்­கப்­ப­ட­வேண்டும் என பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. தேசிய மொழி­களைப் பயன்­ப­டுத்தும் பிர­ஜைகள் அவர்­களின் மொழியைக் கற்­ப­திலும் பயன்­ப­டுத்­து­வ­திலும் மேம்­ப­டுத்­து­வ­திலும் சம­மான உரி­மை­களைக் கொண்­டுள்­ளனர். குடி­ய­ரசின் இணைப்பு மொழி­யாக ஆங்­கிலம் இருக்கும்

ஒவ்­வொரு பிர­ஜை­யும் தேசிய மொழி­களில் இரண்டில் எந்த மொழி­யி­லுமோ அல்­லது இணைப்பு மொழி­யிலோ இலாப நோக்­கற்ற நிறு­வ­னங்­களில் இருந்து பொது முக்­கி­யத்­துவம் வாய்ந்த தக­வல்­களைக் கோரு­வ­தற்கு உரி­மை­யினைக் கொண்­டி­ருக்­கின்­றார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர், மாகாண சபை உறுப்­பினர் அல்­லது உள்­ளூராட்சி அதி­கார சபை உறுப்­பினர் ஒருவர் தேசிய மொழி­களில் எவற்­றிலும் அல்­லது இணைப்பு மொழி­யிலும் தனது கட­மை­களை நிறை­வேற்­று­வ­தற்­கான மேலும் தனது செயற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்­கான உரித்­தினைக் கொண்­டி­ருக்­கின்­றார் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அதே­நேரம் நிர்­வாக மொழி­யாக குடி­ய­ரசு முழு­வ­திலும் தமிழும் சிங்­க­ளமும் இருக்கும் என்­ப­தோடு வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் தவிர்ந்த ஏனைய சகல மாகா­ணங்­க­ளி­லு­முள்ள தேசிய மற்றும் மாகாண அரச நிறு­வ­னங்கள் மற்றும் உள்­ளூ­ராட்சி அதி­கார சபை­களின் அரச பதி­வு­களைப் பேணு­வ­தற்கு சிங்­கள மொழி பயன்­ப­டுத்­தப்­படும். வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் தமிழ் மொழி பயன்­ப­டுத்­தப்­படும்.

எந்­த­வொரு பிர­தேச செய­லக பிரி­விலும் வாழும் சிங்­கள அல்­லது தமிழ்மொழிச் சிறு­பான்­மை­யினர் மொத்த சனத்­தொ­கையின் எட்டில் ஒன்­றினை மிகைத்து ஜனா­தி­ப­தி­யினால் அவ்­வா­றாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­ப­டு­கையில் அப்­பி­ர­தேச செய­ல­கப்­பி­ரிவின் அரச பதி­வு­க­ளினைப் பேணு­வ­தற்கு சிங்­க­ளமும் தமிழும் பயன்­ப­டுத்­தப்­படும்.

எந்­த­வொரு உத்­தி­யோ­கத்­த­ரு­டனும் சிங்­களம், தமிழ் அல்­லது ஆங்­கிலம் ஆகிய மொழி­களில் எவற்­றி­லா­வது ஒருவர் தொடர்­பாட அல்­லது அலு­வல்­களை நிறை­வேற்ற உரித்­தினை கொண்­டுள்ளார் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மாகாண சபை நிர்­வாகம் மற்றும் உள்­ளூ­ராட்சி அதி­கார சபை­களின் உரி­மைகள், அரச சேவைக்கு சேர்த்­துக்­கொள்­வ­தற்­கான பரீட்சை மொழி, சட்­ட­வாக்க மொழி, நீதி­மன்­றங்­களின் மொழி, போதனா மொழி, அங்­க­வீ­ன­முற்ற அல்­லது விசேட தேவை­களை உடைய ஆட்­க­ளுக்­கான தொடர்­பாடல், மொழி­யியல் சமூ­கங்­களின் மொழி­களைப் பாது­காத்தல் ஆகிய தலைப்­புக்­களின் கீழாக பரிந்­து­ரைகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக நீதி­மன்­றங்­களின் மொழி என்ற தலைப்பின் கீழ், குடி­ய­ரசு முழு­வதும் சிங்­க­ளமும் தமிழும் நீதி­மன்­றங்­களின் மொழி­யாக இருத்தல் வேண்டும். வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களைத் தவிர்ந்த குடி­ய­ரசின் ஏனைய அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் அமைந்­துள்ள நீதி­மன்­றங்­களில் பதி­வுக்­காகவும் வழக்கு நட­வ­டிக்­கை­க­ளுக்­கா­கவும் சிங்­கள மொழி பயன்­ப­டுத்­தப்­படல் வேண்டும். அவ்­வாறே வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் தமிழ் மொழியை பயன்­ப­டுத்தல் வேண்டும்.

குறித்த நீதி­மன்­ற­மொ­ழி­யல்­லாத தேசிய மொழி­யொன்­றிலும் ஏதேனும் நீதி­மன்­றத்தின் பதி­வே­டுகள் பேணப்­பட வேண்டும். சிங்­க­ளத்தில், தமிழில் அல்­லது ஆங்­கி­லத்தில் வழக்கு நட­வ­டிக்­கைகள் தொடுக்­கப்­ப­டலாம் என்­ப­துடன் சிங்­க­ளத்தில், தமிழில் அல்­லது ஆங்­கி­லத்தில் வழங்­கு­ரை­களும் ஏனைய ஆவ­ணங்­களும் சமர்ப்­பிக்­கப்­ப­டலாம் என்றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான நிலையில் அர­சி­ய­ல­மைப்பு பேர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்ட வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்­கையில் இந்த விட­யங்கள் உள்­ளீர்க்­கப்­பட்­டுள்­ளன. கடந்த கால அர­சி­ய­ல­மைப்­புக்­களில் இருந்து வேறு­பட்­ட­தா­கவும் முதல்­ த­ட­வை­யாக சிங்­க­ளமும் தமிழும் தேசிய மற்றும் அரச கரும மொழி என ஒரே வரியில் உள்ளடக்கியுள்ளமையை வரவேற்க முடியும்.

அதேநேரம் பிரயோக ரீதியாக, அல்லது நடைமுறைரீதியாக அதனை மேற்கொள்வதென்பதே மிகப்பாரிய இலக்காக இருக்கின்றது. நாட்டிலுள்ள பிரச்சினைகளில் 50 சதவீதமான பிரச்சினைகளுக்கான தீர்வினை மும்மொழி அமுலாக்கம் மூலமாக மேற்கொள்ள முடியுமென தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிடுகின்றார்.

மொழி அமுலாக்கம் சரியாக இடம்பெறாமையினால் ஏற்பட்ட விபரீதமான நிலைமைகளை நன்குணர்ந்தவர் என்ற வகையில் புதிய அரசியலமைப்பில் குறித்துரைக்கப்படும் மொழி அமுலாக்கத்தினை செவ்வனே செய்து முடிக்கும் பாரிய கடப்பாட்டினை அவர் கொண்டிருக்கின்றார். எவ்வாறாயினும் அடுத்து நடக்கப்போவதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

(தொடரும்....)

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-09-23#page-7

Link to comment
Share on other sites

22048033_504470363246932_606568485802307

புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் 27

 

ஆர் . ராம்

அந்­த­வ­கையில், 1978ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்­பி­லுள்ள அரச கொள்­கையின் வழி­காட்டிக் கோட்­பா­டு­களும் அடிப்­ப­டைக்­க­ட­மை­களும் எனும் தலைப்பின் கீழ் காணப்­படும் விதந்­து­ரைப்­புக்­களில் காணப்­படும் நன்­மை­களை பார்க்­கின்­ற­போது,

பிர­ஜை­களின் கட­மை­க­ளுக்கும் இங்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­பட்­டுள்­ளது. இதன் மூலம் மக்கள் அரசு தொடர்­பான தங்­க­ளு­டைய கட­மை­களை உண­ரக்­கூ­டிய நிலை ஏற்­ப­டு­கி­றது.

தனி­யார்­துறை பொரு­ளா­தா­ரத்­திற்கு இங்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­பட்­ட­மை­யினால் உள்ளூர், வெளியூர் தனி­யார்­களின் முத­லீ­டுகள் வளர்ச்சி அடை­வ­தற்கு வாய்ப்­புக்கள் உரு­வா­கின்­றது.

இலங்கைப் பிர­ஜை­க­ளுக்கு இனம், மொழி, மதம், சாதி, பால் அர­சியல் அபிப்­பி­ராயம் என்­ப­வற்றை கவ­னிக்­காது சம­வாய்ப்­புக்­களை வழங்­குதல் வேண்டும் எனக் கூறப்­பட்டு இருக்­கின்­ற­மை­யா­னது அது தொடர்­பான பார­பட்­சங்­களை தவிர்க்­கி­றது.

அர­சா­னது குடும்­பத்தை சமூ­கத்­தின் அடிப்­படைக் கூறாக ஏற்­றுக்­கொள்­ளு­தலும் பாது­காத்­தலும் வேண்டும் எனக் கூறப்­ப­டு­வதன் மூலம் குடும்­பங்கள் சிதை­வ­டை­யாமல் இருப்­ப­தற்கு வாய்ப்­புக்கள் உள்­ளன.

அத்­துடன் இயற்கை வளங்­களை பாது­காப்­ப­தற்கும் முக்­கி­யத்துவம் கொடுக்­கப்­பட்­டமை எதிர்­கா­லத்­தினை நோக்­கிய தூர­நோக்கு சிந்­தனை எனக் கூற முடியும். இத்­த­கைய நன்­மைகள் காணப்­ப­டு­கின்ற அதே­நேரம் சில குறை­பா­டு­களும் காணப்­ப­டு­கின்­றன.

குறிப்­பாக கூறு­வ­தானால் லங்கா சம­ச­மாஜக் கட்­சியின் தலை­வ­ரான டாக்டர் என்.எம்.பெரேரா அரச கொள்­கையின் தத்­து­வங்­கள் தொடர்­பாக, குறிப்­பி­டு­கையில், அரசின் கொள்­கை­களை அவ­தா­னிக்கும் போது ஒரு கலப்பு பொரு­ளா­தா­ரமே தொடர்ந்தும் நிலவும் நிலை உள்­ளது. ஆட்­சி­மாற்­றங்­களின் அடிப்­ப­டையில் கலப்­புப்­பொ­ரு­ளா­தா­ரத்தின் விக­ிதா­ச­ாரங்கள் மாற்­ற­ம­டையும்.

ஆனால் முத­லா­ளித்­துவக் கொள்­கையின் அடிப்­படைக் கட்­ட­மைப்பு தொடர்ந்தும் காணப்­படும் என்று குறிப்­பிட்­ட­தோடு முத­லா­ளித்­துவ கொள்­கையை வலிந்து நிற்கும் முத­லா­ளித்­துவ சமூ­கத்தின் சொத்து தொடர்­பான சட்­டங்­க­ளிலும் மாற்­றங்கள் இருக்க வாய்ப்பு ஏற்­ப­டப்­போ­வ­தில்லை என்று விமர்­சன ரீதி­யான சுட்­டிக்­காட்­டலைச் செய்­தி­ருந்தார்.

மேலும் தேசிய கொள்­கை­க­ளுக்கு சட்ட அந்­தஸ்­தில்லை. இதனால் அர­சாங்கம் அவற்றை அமுல்­ப­டுத்­தாத போது மக்கள் நீதி­மன்­றத்தின் முன் இவற்றைப் பற்றி முறை­யிட முடி­யாது என்­பது பிர­தான குற்­றச்­சாட்­டா­கவும் காணப்­பட்­டது.

அத்­துடன் அர­சா­னது இன, மத, மொழி, சாதி, பால், ரீதி­யான பாகு­பாடு காட்­டக்­கூ­டாது எனக்­கூ­றி­யுள்ள போதும் நடை­மு­றையில் அவ்­வா­றான பார­பட்­சங்கள் அர­சியல் பின்­ன­ணி­யுடன் திட்ட முறையில் இருந்­த­மைக்­கான பல உதா­ர­ணங்கள் உள்­ளன.

கலப்பு பொரு­ளா­தார கொள்கை காணப்­ப­டு­வ­தனால் சுதந்­திர வர்த்­தக வலயம் போன்­றன உரு­வா­கின்­ற­போது தனியார் துறையின் வளர்ச்­சியின் கார­ண­மாக தொழி­லா­ளர்கள் இது­வ­ரையில் அனு­ப­வித்து வந்த சலு­கைகள் உரி­மைகள் போன்­றவற்றில் பாதிப்­புக்­களே ஏற்­படும் நிலை­மை­களே அதி­க­முண்டு.

அத்­துடன் பிர­தான பிரச்­சி­னை­யாக காணப்­படும் இனங்­க­ளுக்­கி­டையில் ஏற்­பட்­டுள்ள விரி­சலை தீர்க்கக்கூடிய வகையில் வழி­காட்டிக் கோட்­பா­டுகள் எவையும் அமை­ய­வில்லை போன்ற குறை­பாட்டு விட­யங்கள் விமர்­சன ரீதி­யிலும் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

இவ்­வா­றி­ருக்­கையில் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான அடிப்­படை உரி­மைகள் தொடர்­பான உப­கு­ழுவின் அறிக்­கையில் அரச கொள்­கையின் பணிப்புத் தத்­து­வங்­களும் அடிப்­படை கட­மை­களும் எனும் தலைப்பில் முன்­மொ­ழி­வுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

அதில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள பணிப்புத் தத்­து­வங்­க­ளா­னவை நாட்டின் ஆட்­சியின் அடிப்­ப­டை­யாக உள்­ளன. அத்­துடன் நீதி­யா­னதும் ஜன­நா­ய­க­மா­ன­து­மான சமூ­கத்தை நிறு­வு­வ­தற்­காக அவை­களைப் பின்­பற்­று­வது அரசின் கட­மை­யாக இருக்கும்.

இந்­தப்­ப­ணிப்புத் தத்­து­வங்­க­ளா­னவை அர­சாங்­கத்தின் எல்லா அங்­கங்­க­ளையும் வழி­ந­டத்­து­வ­துடன் தேசிய, மாகாண, உள்­ளூராட்சி மட்­டங்­க­ளி­லுள்ள எல்லா உத்­தி­யோ­கத்­தர்­க­ளையும் அவர்­க­ளினால் யாதும் ஒருவர்

(அ) அர­சி­ய­ல­மைப்பை பிர­யோ­கிக்­கையில் அல்­லது பொருள்­கோ­டலில்

(ஆ) ஏதும் சட்­டத்தை செயற்­ப­டுத்­து­கையில் பிர­யோ­கிப்­பதில் அல்­லது பொருள்­கோ­டலில் அல்­லது

(இ) அரச கொள்கைத் தீர்­மா­னங்­களைச் செய்­கையில் அல்­லது அமுல்­ப­டுத்­து­கையில் எல்லா ஆட்­க­ளையும் வழி­ந­டத்தும் என்­றுள்­ளது.

அதே­நேரம், ஆட்­பு­லமும் இறை­மையும் எனும் தலைப்பில்,

(1) அர­சா­னது இலங்­கையின் சுயா­தீனம், இறைமை, ஐக்­கியம், ஆட்­புல ஒரு­மைப்­பாடு என்­ப­வற்றைப் பாது­காக்கும் என்­றுள்­ளது.

மேலும் அமை­தியும் ஜன­நா­ய­கமும் எனும் தலைப்பில்,

(1) இலங்­கையின் பன்­மைத்­தன்மை அம்­சத்தை பேணும் அதே­வே­ளையில் எல்லா, இன, மத, சமூக, குழுக்­க­ளி­டை­யேயும் அமை­தி­யான சக­வாழ்­வையும் ஒரு­மைப்­பாட்­டையும் உறு­திப்­ப­டுத்­து­வது அர­சி­னதும் எல்லா ஆட்­க­ளி­னதும் கட­மை­யாக இருக்கும்.

(2) அர­சா­னது அர­சாங்­கத்தின் ஜன­நாயக் கட்­ட­மைப்­பையும் மக்­களின் ஜன­நா­யக கட்­ட­மைப்­பையும் மக்­களின் உரி­மை­க­ளையும் பாது­காத்து பலப்­ப­டுத்­து­வ­துடன் அமை­தி­யான, நியா­ய­மான, அனைத்­தையும் உள்­ள­டக்­கிய சமூ­கத்தை ஊக்­கு­விக்கும்.

பொரு­ளா­தார விட­யங்­களும் சமூக ஒழுங்கும் எனும் தலைப்பில்

(1) ஒரு நீதி­யா­னதும் சமத்­து­வ­மா­னதும், அற­நெ­றி­யு­டை­ய­து­மான சமூக ஒழுங்கை உரு­வாக்கும் அரசின் இலக்­கு­களில் உள்­ள­டங்­கு­வ­ன­வா­வன.

(அ) எல்லா ஆட்­களின் அடிப்­படை உரி­மைகள் மற்றும் சுதந்­தி­ரத்தை முழ­ுமை­யாக அடையச் செய்தல்.

(ஆ) சமூகப் பொரு­ளா­தார மற்றும் அர­சியல் நீதி எல்லா நிறு­வ­னங்­க­ளையும் தேசிய வாழ்­வையும் வழி­ந­டத்தும் ஒரு சமூக ஒழுங்கில் வினைத்­தி­ற­னாக இருக்­கக்­கூ­டிய வகையில் பாது­காப்­பதன் மூல­மாக மக்­களின் நல­னோம்­பலை மேம்­ப­டுத்தல் ஆகிய விட­யங்கள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.

சுற்­றா­டலும் அபி­வி­ருத்­தியும் எனும் தலைப்பில் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள விட­யங்­க­ளா­வன,

(1) மக்கள் மயப்­ப­டுத்­தப்­பட்ட நீடித்து நிலைக்­கக்­கூ­டிய அபி­வி­ருத்­தியின் முக­வர்­க­ளா­கவும் பயன்­பெ­று­நர்­க­ளா­கவும் ஆண்­களின் பெண்­களின் முழு­மை­யா­னதும் சம அள­வி­ன­தா­ன­து­மான பங்கு பற்­று­தலை அரசு உறு­திப்­ப­டுத்தும். அதில் உள்­ள­டங்­கு­வ­ன­வா­வன,

(அ) உள்­ள­டக்­கிய மற்றும் நிலை­பே­றான பொரு­ளா­தார வளர்ச்­சியை மேம்­ப­டுத்தல், அனை­வ­ருக்கும் தொழில், கண்­ணி­ய­மான வேலை,

(ஆ )வறுமை, படிப்­ப­றி­வின்மை ஆகி­ய­வற்றை இல்­லா­தொ­ழித்தல், சமத்­த­வ­மின்­மை­களைக் குறைத்தல்

(இ) தாங்­கத்­த­குந்த, நம்­ப­க­மான, நிலை­பே­றான சக்­தியை அனை­வரும் அணு­கிப்­பெ­று­வதை உறுதி செயதல்

(ஈ) நிலை­பே­றான உணவு உற்­பத்தி முறையை உறு­தி­செய்தல் மற்றும் சிறிய விவ­சா­யி­க­ளுக்கு உத­வுதல்

(உ) பொது­நலன் தொடர்பில் சிறப்­பாகச் சேவை­யாற்றும் முக­மாக இயற்கை பொருள் சார்ந்த வளங்கள், சமூக உற்­பத்தி ஆகி­யன நியா­ய­மான முறையில் பகி­ரப்­பட்­டுள்­ளதை உறுதி செய்தல்.

(2) இலங்­கையின் இயற்கை மர­பு­டைமை அதன் செழிப்­பான உயிர்ப்­பல்­வ­கைமை ஆகி­ய­வற்றைப் பொது­நலன் தொடர்பில் பரி­சீ­லித்தல் மற்றும் இது பாது­காக்­கப்­பட்டு நிலை­பே­றான முறையில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வதை அரசு மற்றும் சகல பிர­ஜை­களும் உறுதி செய்தல்.

(3) கால­நிலை மாற்றத்தைத் தணிப்பதற்கான சகல சாத்தியப்பாடுள்ள நடவடிக்கைகளையும் அரசு மற்றும் அனைத்துப் பிரஜைகளும் மேற்கொள்ளல் மற்றும் மக்கள் சகல உயிரின முறைகள் ஆகியவற்றின் மீது இதன் பாதகமான தாக்கம் தொடர்பில் செயற்படல்

(4) தேவையற்ற வலி, துன்பங்கள், ஆகியவற்றிலிருந்து மனிதனல்லாத உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதை உறுதி செய்யும் முகமாக மனித சுகாதாரம், நலனோம்புகை, பாதுகாப்பு ஆகிய நலன்களைக் கருத்திற்கொண்டு சகலவிதமான மனிதனல்லாத உயிரினங்களையும் கருணையுடன் நடத்துவது, அரசு மற்றும் ஒவ்வொரு நபர் ஆகியோரின் கடமையாகும்.

(5) தற்போதைய எதிர்காலச் சந்ததியினருக்காக இலங்கையின் கலாசாரம் தொல்பொருளியல் மரபுடமை, ஆகியவற்றை அரசு ஒவ்வொரு நபர் ஆகியோர் பேணிப்பாதுகாத்தல் வேண்டும்.

(6) இலங்கையின் சுதேச அறிவைப் பேணிப்பாதுகாத்து, அது பிழையாகப் பயன்படுத்துவதை அரசு, ஒவ்வொரு நபர் ஆகியோர் தடுத்தல் வேண்டும்.

   தொடரும்....

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-09-30#page-7

Link to comment
Share on other sites