Jump to content

திருமதி.நாகேந்திரர் செல்லம்மா அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட நிதி: மனிதநேயக்கரங்கள் நிறுவனம்:-


Recommended Posts

திருமதி.நாகேந்திரர் செல்லம்மா அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட நிதி: மனிதநேயக்கரங்கள் நிறுவனம்:-

Project.jpg

1
நிதி உதவி :
இலங்கையின் முதலாவது
கிராம சேவைத் தலைவி
திருமதி.நாகேந்திரர் செல்லம்மா அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட நிதி
திட்ட அமுலாக்கம் :
மனிதநேயக்கரங்கள் நிறுவனம்
2
01. அறிமுகம் :

அனர்த்தங்கள் வந்து சென்றாலும் அது தந்து விட்டுப்போன அழிவுகளின் வடுக்கள் இலகுவில் மறைந்து போவதில்லை. அத்தகைய நிலையே இன்று இலங்கையில் காணப்படுகின்றது. கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களை முழுமையாக மூழ்கடித்த கொடிய யுத்தத்தால் பல உயிர்களையும், உடமைகளையும், உடல் அங்கங்களையும் இழந்து அவற்றின் வலிகளில் இருந்து மீண்டு வர முடியாமல் குறிப்பாக வடக்கு கிழக்கு மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். நடந்து முடிந்த யுத்தத்தில் பாதிப்புக்கு உள்ளானவர்களில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்களே.

உரிமைகளுக்காக அடக்குமுறையை எதிர்த்து அதில் வெற்றி கண்டவர்களுக்கு உலக வரலாற்றில் என்றென்றும் நிரந்தர இடமுண்டு. ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த மனித குலத்தில் உரிமைகள் மறுக்கப்பட்ட சமுதாயத்துக்காகப் போராட்டத்தை முன்னெடுக்கும் போது, அந்தச் சமுதாயத்தின் பிரதிநிதியாக முன்னின்று போராடியவர்கள் விடுதலையின் விடியலாக உருவெடுக்கிறார்கள். அத்தகைய தமிழர்கள் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகவும், தம் இனம் சார்ந்தவர்களின் உரிமைகளுக்காகவும், சுதந்திரமான வாழ்க்கைக்காவும் போராடி உரிமையை வென்றெடுக்க தம்மையே அர்ப்பணிக்கிறார்கள். இப்போராட்டத்திற்காக பலர் தம் உயிரையே தியாகம் செய்கிறார்கள். அதில் சிலர் தம் உடல் அங்கங்களையும் இழந்து விடுகிறார்கள்.

முடிவில் இலங்கை இராணுவத்தால் பெருமளவில் கைது செய்யப்பட்ட இவர்களில் பெரிய சதவீதமானவர்கள் தடுப்பு முகாம்கள், மற்றும் புனர்வாழ்வு முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டனர். தற்போதும் பல தமிழர்கள் விடுதலை தேதியை எதிர்நோக்கி, புனர்வாழ்வு முகாம்களில் உள்ளனர். விடுவிக்கப்பட்டவர்கள் வட, கிழக்கு மாகாணங்களிலேயே அதிகமாக வசித்து வருகின்றார்கள்.

தற்போது விடுதலை செய்யப்பட்டு இலங்கையில் வாழும் தமிழ் மக்களில்; பலர் சமுதாயத்தில் கலந்து வாழ முடியாமல் தவிக்கிறார்கள் என்பது வருத்தத்துக்குரிய உண்மை.

3
02. ‘தகர் வளர் துயர் தகர்’ – செயல் திட்டம்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிரந்தரமான சுய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கோடு நெடுந்தீவைச் சேர்ந்த இலங்கையின் முதலாவது கிராம சேவைத் தலைவி திருமதி.நாகேந்திரர் செல்லம்மா அவர்களின் ஞாபகார்த்தமாக ‘தகர் வளர் துயர் தகர்’ எனும் பொருள் பதித்து வட மாகாண சபையூடாக நல்லின ஆடுகள் வழங்கப்பட்டு வந்தன. இதன் தொடர்ச்சியாக தேவையறிந்து மட்டக்களப்பில் 08 குடும்பங்களுக்கு நிரந்தர பொருளீட்டலுக்கான முயற்சிக்காக ‘தகர் வளர் துயர் தகர்’ எனும் செயல் திட்டமொன்றை அறிமுகம் செய்கின்றோம்.

அத்திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள பிரதான அம்சங்களாக:

ஐ. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் விரும்பும் அல்லது அவர்களால் இயலுமான சுய தொழிலைச் செய்ய உதவுதல்.

ஐஐ. அவர்கள் சுயமாக தனது தொழிலைக் கொண்டு நடத்தும் வரை தேவையான உதவிகளைச் செய்தல்.

ஐஐஐ. அவர்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவி செய்தல். பிள்ளைகளுக்கு இலவச தனியார் வகுப்புக்களையும் கருத்தரங்குகளையும் நடாத்துதல்.
ஐஏ. உயர் கல்வி செயற்பாடுகளுக்கு வழிகாட்டல்.

எனப்பல நல் நோக்கங்களைக் கொண்ட திட்டமாக இத்தகைய ‘தகர் வளர் துயர் தகர்’ எனும் செயல் திட்டம் அமைந்துள்ளது.
4

04. தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் விபரம்
இல.
பெயர்
இடம்
01
இராமலிங்கம் பத்மநாதன்
நெடியமடு, உன்னிச்சை

02
ராசா அன்னபாக்கியம்
விஸ்ணு ஆலய வீதி, கிரான்

03
கந்தசாமி பிரசாந்தன்
ஐயங்கேணி, செங்கலடி

04
வ.ரகுலேஸ்வரன்
ரமேஸ்புரம், செங்கலடி

05
பரமக்குட்டி சாமுவேல்
வாகனேரி, வாழைச்சேனை.

06
தம்பிராசா ஜெயலெட்சுமி
கித்துள்வௌ, கரடியனாறு.
07
சுப்பையா முத்துலெட்சுமி
பிரதான வீதி, செங்கலடி.

08
யோகநாதன் பரமேஸ்வரி
நாவற்குடா, மட்டக்களப்பு.

5
01. தம்பிராசா ஜெயலட்சுமி
முழுப்பெயர் : தம்பிராசா ஜெயலட்சுமி
விலாசம் : கித்துள்வௌ, கரடியனாறு
தேசிய அடையாள அட்டை இல : 731645275 ஏ
தொலைபேசி இல : 0766292122
வயது : 43
குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை : 07
பிள்ளை : 05
தற்போதைய தொழில் : கூலி
செய்ய விரும்பும் தொழில் : இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்கு வாழ்வாதார உதவியாக சிறிய கடையொன்றினை தேர்ந்தெடுத்தார். இதனூடாக தம் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

6
02.சுப்பையா முத்துலெட்சுமி
முழுப்பெயர் : சுப்பையா முத்துலெட்சுமி
விலாசம் : பிரதான வீதி, செங்கலடி
தேசிய அடையாள அட்டை இல : 526475654 ஏ
தொலைபேசி இல : 0776655608
வயது : 64
குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை : 04
பிள்ளை : 03
தற்போதைய தொழில் : கூலி
செய்ய விரும்பும் தொழில் : இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்கு வாழ்வாதார உதவியாக மரக்கறித்தோட்டம் சுயதொழிலாக தேர்ந்தெடுத்தார். இச் சிறிய கடை மூலம் தம் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

7
03. யோகநாதன் பரமேஸ்வரி
முழுப்பெயர் : யோகநாதன் பரமேஸ்வரி
விலாசம் : நாவற்குடா, மட்டக்களப்பு.
தேசிய அடையாள அட்டை இல : 566498653 ஏ
தொலைபேசி இல : 0766477755
வயது : 60
குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை : 04
பிள்ளை : 02
தற்போதைய தொழில் : கூலி
செய்ய விரும்பும் தொழில் : இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்கு வாழ்வாதார உதவியாக ஆடு வளர்ப்பினைத் தேர்ந்தெடுத்தார். ஆடு வளர்ப்பதினூடாக தம் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

8
04. இராமலிங்கம் பத்மநாதன்
முழுப்பெயர் : இராமலிங்கம் பத்மநாதன்
விலாசம் : நெடியமடு, உன்னிச்சை
தேசிய அடையாள அட்டை இல : 761092618 ஏ
தொலைபேசி இல : 077 6562688
வயது : 40
குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை : 04
பிள்ளை : 03
தற்போதைய தொழில் : கூலி
செய்ய விரும்பும் தொழில் : இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்கு வாழ்வாதார உதவியாக கோழி வளர்ப்பினைத் தேர்ந்தெடுத்தார். கோழி வளர்ப்பதினூடாக தம் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

9
05. ராசா அன்னபாக்கியம்
முழுப்பெயர் : ராசா அன்னபாக்கியம்
விலாசம் : விஸ்ணு ஆலய வீதி, கிரான்.
தேசிய அடையாள அட்டை இல : 637483978 ஏ
தொலைபேசி இல : 075 6039004
வயது : 53
குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை : 05
பிள்ளை : 04
தற்போதைய தொழில் : கூலி
செய்ய விரும்பும் தொழில் : இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்கு வாழ்வாதார உதவியாக கோழி வளர்ப்பினைத் தேர்ந்தெடுத்தார். கோழி வளர்ப்பதினூடாக தம் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

10
06. கந்தசாமி பிரசாந்தன்
முழுப்பெயர் : கந்தசாமி பிரசாந்தன்
விலாசம் : 9ம் குறுக்கு வீதி, பாரதி கிராமம், ஐயங்கேணி, செங்கலடி.
தேசிய அடையாள அட்டை இல : 920140084 ஏ
தொலைபேசி இல : 077 4199396
வயது : 24
குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை : 03
பிள்ளை : 01
தற்போதைய தொழில் : கூலி
செய்ய விரும்பும் தொழில் : இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்கு வாழ்வாதார உதவியாக கோழி வளர்ப்பினைத் தேர்ந்தெடுத்தார். கோழி வளர்ப்பதினூடாக தம் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

11
07. கி.கௌரி
முழுப்பெயர் : கிருஸ்ணகுமார் கௌரி
விலாசம் : காளிகோவில் தோட்டம் ஏறாவூர்.
தேசிய அடையாள அட்டை இல : 790542134 ஏ
தொலைபேசி இல : 0755525365
வயது : 52
குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை : 05
பிள்ளை : 03
தற்போதைய தொழில் : கூலி
செய்ய விரும்பும் தொழில் : இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்கு வாழ்வாதார உதவியாக மட்பாண்டம் செய்தல்; தேர்ந்தெடுத்தார். மட்பாண்டம் செய்வதனூடாக தம் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

12
08. பரமக்குட்டி சாமுவேல்;
முழுப்பெயர் : பரமக்குட்டி சாமுவேல்
விலாசம் : கூழாவடிச்சேனை,வாகனேரி வாழைச்சேனை
தேசிய அ.அட்டை இலக்கம் : 690442639ஏ
வயது : 46 வயது
தொலைபேசி இல. :
குடும்ப அங்கத்தவர் எண்ணிக்கை : 06
பிள்ளை : 04
தற்போதைய தொழில் : தோட்டத்தொழில்
செய்ய விரும்பும் தொழில் : இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்கு வாழ்வாதார உதவியாக தோட்டத் தொழிலினை தேர்ந்தெடுத்தார். இத் தோட்டத் தொழில் மூலம் தம் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

13
கணக்கறிக்கை
பெயர்
செய்ய விரும்பும் தொழில்
வழங்கப்பட்ட தொகை
தம்பிராசா ஜெயலட்சுமி
சிறிய கடை
ரூபா.50000
சுப்பையா முத்துலெட்சுமி
மரக்கறித்தோட்டம்
ரூபா.50000
யோகநாதன் பரமேஸ்வரி
ஆடு வளர்ப்பு
ரூபா.50000
இராமலிங்கம் பத்மநாதன்
கோழி வளர்ப்பு
ரூபா.50000
ராசா அன்னபாக்கியம்
கோழி வளர்ப்பு
ரூபா.50000
கந்தசாமி பிரசாந்தன்
கோழி வளர்ப்பு
ரூபா.50000
வ.ரகுலேஸ்வரன்
சீமெந்து தூண் அறுத்தல்
ரூபா.50000
பரமக்குட்டி சாமுவேல்
தோட்டம் செய்தல்
ரூபா.40000
யோகநாதன் பரமேஸ்வரி
ஆடு வளர்ப்பு
ரூபா.50000
மொத்தம்
ரூபா.390000

http://globaltamilnews.net/archives/11610

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துளித் துளியாய் பகுதி இப்படியான செய்திகளால் தான் உயிரோட்டமாக உள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, MEERA said:

துளித் துளியாய் பகுதி இப்படியான செய்திகளால் தான் உயிரோட்டமாக உள்ளது

நன்று

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.