-
Tell a friend
-
Topics
-
Posts
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
அமரகீர்த்தி அத்துகோரலவின், கொலையுடன் தொடர்புடைய... பிரதான சந்தேக நபர் கைது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 29 வயதான பேருந்தின் சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தைத் தொடர்ந்து அமரகீர்த்தி அத்துகோரல கொலை செய்யப்பட்டிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1282960 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
உடன் அமுலுக்கு வரும் வகையில்.... கேன்கள், கொள்கலன்கள், போத்தல்களில்... பெற்றோல் வழங்கப் படாது! உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலுள்ள வாகனங்களின் எரிபொருள் தாங்கிகளுக்கு மாத்திரமே பெற்றோல் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லங்கா ஐஓசி நிறுவனத்தினால் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய லங்கா ஐஓசி நிரப்பு நிலையங்களில் கேன்கள், கொள்கலன்கள் அல்லது போத்தல்களில் பெற்றோல் வழங்கப்படாது எனவும் லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1282968 -
அம்மாவை உயிரோடு சந்தித்து அளவளாவி அவரது வீர வாழ்க்கை பற்றியும், போராட்ட வாழ்வுபற்றியும் நேரில் அறியும் பாக்கியம் பெற்ற பேற்றை எண்ணும்போது அவர் மறைவின் துன்பத்தையும் மீறி மனதில் ஒரு உத்வேகம் எழத்தான் செய்கிறது. மறைவு துன்பத்தைத் தந்தாலும் மறைந்த தினம் ஏதோ ஒன்றை உணர்த்தி நிற்கிறது. தமழீழம் வளர உரமாக்கப்பட்ட மக்களோடு என் ஆத்மாவும் இணையவேண்டும் என்று இந்த நாளைத் தேர்ந்தெடுத்து இணைந்தவர்போல் தெரிகிறார். பிள்ளைகளைப் பெற்று அவர்களைத் தமிழின விடுதலைக்காக மாவீரர்களாக்கிய அந்த அன்னையின் ஆன்மா சாந்திபெற வேண்டுகிறேன்.🙏 அன்னையைப்பற்றி அறியாதவர்கள் அறிவதற்கு அவரது பிள்ளைகள், மருமகனின் வெளியீடுகளான மனஓசை, சிவா தியாகராசாவின் பெருநினைவின் சிறுதுளிகள், மூனாவின் நெஞ்சில் நின்றவை போன்ற வெளியீடுகளிலிந்து படித்து அறியலாம்.
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.