Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

உலகை மாற்றிய சூட் கேஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1940 ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் தீர்மானமான கட்டம்.பிரான்ஸ் நாஜிகளிடம் வீழ்ந்துவிட்டது,ஜேர்மனிய லுட்வாவ் படைகள் பிரித்தானிய நகரங்கள் மேல் அகோரமான விமானத் தாக்குதலை நிகழ்த்திக்கொண்டிருந்த நேரம்.பிரித்தானியா அய்ரோப்பாவில் இருந்து தனிமைப் படுத்தப்படுகிறது.அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட நிலையில் ,சுய பொருளாதாரத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய கட்டம்.

29 ஆம் திகதி,காலை, அன்றைய பிரித்தானியாவின் தலை சிறந்த விஞ்ஞானிகளும், தொழில் நுட்ப வியலாளர்களும் அடங்கிய ஒரு சிறு குழுவினர் ,சேர் கென்றி டிஸார்ட் தலமையில் ஒரு இரகசிய பயணத்தை அமெரிக்கா நோக்கி, ஒரு உருமறைப்புச் செய்யப்பட்ட கப்பலில் ஆரம்பிக்கிறார்கள்.

அவர்கள் தமது பயணத்தின் போது உலகத்தின் தலை விதியையே மாற்றப் போகின்ற இரண்டாம் உலகப்போரின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கக் கூடிய தொழில் நுட்ப ரகசியங்கள் அடங்கிய ஒரு கறுத்தப் பெட்டியிடன் பயணிக்கின்றனர்.

அவர்கள் அந்த தொழில் நுட்ப ரகசியங்களை அமெரிக்காவிடம் கொடுப்பதற்காக அந்த இரகசியப் பயணத்தை மேற்கொண்டனர்.அந்தக்குழுவில் இராணுவப் படையைச் சேர்ந்தவர்கள்,விமானப் படயைச் சேர்ந்த அதிகாரிகள்,கடற்படையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் போரியலின் புதிய தொழில்னுட்பங்களை அறிந்த தொழில் நுட்பவியளாளர் இருந்தனர்.

இவர்கள் கொண்டு சென்ற அந்த அதி முக்கிய பெட்டி பின்னாளில் 'டிசாடின் ப்ரீவ் கேஸ்' என அறியப்பட்டது.

போரின் முதலாம் ஆண்டு நிறைவுக்கு இன்னும் ஐந்து நாட்களே இருந்தன.லிவர்பூல் முதலிய பிரித்தானியாவின் பிரதான நகரங்கள் எங்கும் ஜேர்மனிய குண்டு வீச்சு விமானங்கள் அகோரமாக குண்டு வீசி அழித்துக் கொண்டிருந்தன. ஜேர்மனியப்படைகள் ஐரோப்பாவில் நோர்வேக் கரைமுதல் பிரான்ஸ் வரை நிலை கொண்டு பிரித்தானிய மீதான படையெடுப்புக்குத் தயாராக இருந்தன.பிரித்தானிய மீதான படையெடுப்புக்கு இன்னும் சில வாரங்களே இருந்தன.

அந்தக் கறுத்தப் பெட்டியைக் காவிச் சென்ற குழுவினர் அந்த பெட்டியில் இருந்த விடயங்கள் போரின் தலைவிதியையே மாற்றும் என அறிந்திருந்தனர்.

அந்தப் பெட்டிக்குள் அப்படி என்ன தான் இருந்தது? ராக்கெட்டுக்களுக்கும்,வெடி மருந்துக்களுக்கும், சப்மரீன்ங்களை கண்டுபிடிக்கும் கருவிகளுக்கும், ஆன வரை படங்களும், விமானக்களில் பாவிக்கப்படும் ஜெற் என்ஜின் மற்றும் அணுஆயுதம் முதலியவற்றிற்கான அடிப்படை ஆரச்சிகள் அடங்கிய ஆவணங்களும் இருந்தன.

இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானொரு கருவியும் அந்தப் பெட்டிக்குள் இருந்தது. 'கவிற்றி மக்னரோன்' என்னும் கருவி தான் அது.இது சில மாதங்களின் முன்னையே 'பேர்மிங்காமில்' இருந்த இரு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப் பட்டிருந்தது.

ஜோன் ரண்டால் மற்றும் கரி பூட் என்பவர்களாலையே இந்தக் கருவி தற்செயலாகவே கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.

இந்தக் கருவி தொடர்பாடல் மற்றும் ராடர் கருவிகளில் பாவிக்கப்படும் மக்ரோவேவ்களை 10 சிஎம் அளவில் உற்பத்தியாக்க கூடியதாக இருந்தது.இது போன்ற அதி குறுகிய அலைகளை உருவாகக்கூடிய கருவி அந்தக்காலத்தில் கேள்விப்படாத ஒன்றாக இருந்தது.

அந்தக் காலத்தில் பாவிக்கப்பட்ட ராடர்களில் பாவிக்கப்பட்ட அலை பிறப்பாக்கிகள் ஒன்றைரை மீட்டர் அலை நீளம் உடைய அலைகளையே உற்பத்தியாக்கக் கூடியனவாகவே இருந்தன.இந்தக் கவிற்றி மக்னரோன் கருவி மூலம் விமானங்களில் இலகுவாக எடுத்துச் செல்லக்கூடிய சிறிய உருவிலான ராடர்களை உருவாக்ககூடியதாக இருந்தது.

இது போரியற் தொழில் நுட்பத்தில் ஒரு மிக பெரிய கண்டு பிடிப்பாக இருந்தது.இது பிரித்தானியா அமெரிக்க நேசப்படைகள் போரில் வெற்றி ஈட்ட மட்டும் உதவவில்லை,இன்று நாம் பாவிக்கும் மைக்ரோ வேவ் அவன்,செலுலர் தொலை பேசிகள் முதல் கம்பியற்ற அனைத்து மைகிரோ வேவ் தகவல் தொடர்பு சாதனங்கள் முதல் ரேடியோ தொலை நோக்கி வரை இந்தக் கருவியின் அடியொற்றிய தொழில் நுட்பமே பாவிக்கப் படுகிறது.

அந்தக் காலகட்டத்தில் இந்தக்கருவியை உருவாக்கும் தொழில் நுட்ப வளமும்,பொருளாதாரமும் பிரித்தானியாவிடம் இல்லாது இருந்ததால் சேர்சில் இந்த தொழில் நுட்பத்தை இலவசமாகவே அமெரிக்கரிடம் வழங்கி இருந்தார்.

இந்த வாய்பை அமெரிக்கா நன்றாகவே பயன் படுத்தியது.அதே ஆண்டின் செப்பரம்பர் மாதம் எம் ஐ ரி எனப்படும் மசசுசாட் தொழில் நுட்பக் கழகம், தனது இரகசிய பரிசோதனைக் கூடங்களில் இந்த தொழில் நுட்பத்தை பிரதி செய்தது, நவம்பர் மாதம் அளவில் 'கவிரி மங்னரோன்' மிகப்பெரிய அளவில் தொழிச்சாலைகளில் உற்பத்தியாக்கப்பட்டது.1941 ஆம் ஆண்டளவில் சகல அமெரிக்க மற்றும் பிரித்தானியப் போர் விமானங்களில் இந்த ராடர் பொருத்தப்படுகிறது.

இரண்டாம் உலகப்போரின் வெற்றியை நோக்கி அமெரிக்கா தலமையினால் ஆன நேசப்படைகள் செல்கின்றன.இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பாக இந்த 'கவிற்றி மக்னரோன்' சிலாகிக்கப்படுகிறது.இது பற்றிக் கூறும் ஒரு அமெரிக்கச் சரித்திரவியலாளர் 'எக் காலத்திலும் அமெரிக்காவின் கரைகளுக்குக் கொண்டு வரப்பட்ட அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பண்டமாக இதனைக் கருதலாம்' என்கிறார்.

தொழில் நுட்ப வல்லமையும் ஆளுமையுமே பல போர்களின் தலைவிதியைத் தீர்மானித்திருக்கிறது.இன்று இவ்வாறான தொழில் நுப்பங்களைப் பாதுகாப்பதிலும் சுயமாக உருவாக்குவதிலும் பிறரிடம் இருந்து கவருவதுமாக உலக வல்லருசுகள் போட்டி போட்டுக் கொள்கின்றன.இந்தியா சீன முதல் பிறேசில் வரை இதனையே செய்கின்றன.

எமது போராட்டத்தின் தலைவிதியையே மாற்றக்கூடிய இவ்வாறான பெட்டிகளை ஈழத்தின் கரைகளுக்கும் கொண்டு வரக்கூடியவர்கள் புலத்தில் இருக்கும் நாமே.ஆனால் நாம் என்ன செய்கிறோம்?

தகவலுக்கு நன்றி;பிபிசி

பிபிசியின் ரேடியோ 4 ல் இந்த விவரணத்தைக் இணைய வழி கேட்க விரும்புபவர்கள் இந்த இணைப்பைப் பயன் படுத்தலாம்.

http://www.bbc.co.uk/radio4/factual/pip/aso66/

Posted by அற்புதன் at 12:29

http://aatputhan.blogspot.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.