நந்தன்

வருங்கால துணையை வரவேற்க காத்திருக்கும் யாழ்கள நண்பர்களுக்கு

Recommended Posts

நந்தன் தற்சமயம் இது இங்கு இரண்டொருவருக்கு  பிரயோசனப் படும் என்று நினைக்கின்றேன்.....! என்ன அவர்களுக்கு தனிமடலில் அனுப்பியிருக்கலாம்....! இது நம்ம கம்பெனியையே நாறடிக்குது ....!  tw_blush:

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஏற்கனவே ஆரம்பிச்சிடுச்சு. வாயைப் பொத்திக்கிட்டு இருந்தாலும் பிரச்சனை.. திறந்தாலும் பிரச்சனையா இருக்கு. நம்மால முடியல்ல. இருந்தாலும்.. சூரியன் நாங்க சுழிப்பமில்ல. tw_blush:

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
51 minutes ago, nedukkalapoovan said:

ஏற்கனவே ஆரம்பிச்சிடுச்சு. வாயைப் பொத்திக்கிட்டு இருந்தாலும் பிரச்சனை.. திறந்தாலும் பிரச்சனையா இருக்கு. நம்மால முடியல்ல. இருந்தாலும்.. சூரியன் நாங்க சுழிப்பமில்ல. tw_blush:

என்ன?????????????
சிங்கம் இப்பவே ஒரு காலை நொண்ட வெளிக்கிட்டுது!!!!!!
நான் தான் அப்பவே சொன்னன் எல்லே...:(

  • Like 2

Share this post


Link to post
Share on other sites
14 minutes ago, குமாரசாமி said:

என்ன?????????????
சிங்கம் இப்பவே ஒரு காலை நொண்ட வெளிக்கிட்டுது!!!!!!
நான் தான் அப்பவே சொன்னன் எல்லே...:(

நொண்டின... சிங்கம்.  பசி  எடுத்தால்:101_point_up:,   பிச்சை எடுக்க வேண்டி வரும்.:104_point_left:
இது, காலத்தின்.... கட்டாயம்.   :100_pray: :grin:

 

Share this post


Link to post
Share on other sites
33 minutes ago, குமாரசாமி said:

என்ன?????????????
சிங்கம் இப்பவே ஒரு காலை நொண்ட வெளிக்கிட்டுது!!!!!!
நான் தான் அப்பவே சொன்னன் எல்லே...:(

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதில்லை.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 1/6/2017 at 0:09 AM, nedukkalapoovan said:

ஏற்கனவே ஆரம்பிச்சிடுச்சு. வாயைப் பொத்திக்கிட்டு இருந்தாலும் பிரச்சனை.. திறந்தாலும் பிரச்சனையா இருக்கு. நம்மால முடியல்ல. இருந்தாலும்.. சூரியன் நாங்க சுழிப்பமில்ல. tw_blush:

15622650_1248819305166078_23759675861312

Share this post


Link to post
Share on other sites

பிரச்சனைகளை தீர்க்க எவ்ளவோ வழியிருக்கு .......

சமையலைறை பிரச்சனையை சமையல் அறையில் வைத்து விவாதித்தால் 
முடிவு வராது ...........விவாதம்தான் அடுப்பு மாதிரி சூடேறும்.

குடுமபம் என்றால் பொருளாதார ஏற்ற தாழ்வு அப்ப ஆப் எட்டி பார்க்கும் 
அதையெல்லாம் அந்த அந்த நேரத்தில் விவாதிக்க கூடாது.

எல்லாத்தையும் விவாதிக்க வீட்டில் ஒரே ஒரு சிறந்த இடம்தான் இருக்கு.
படுக்கையறையை கொஞ்சம் அழகா வைத்திருந்து விவாதத்தை அங்கு 
வைத்திருக்க வேண்டும்.

வெள்ளம் வருமுன்பே அணையை கட்டிவிட வேண்டும். பிரச்சனைக்கான 
எண்ணம் வரும்போதே பேசிவிட வேண்டும்.

கட்டில்கால் உறுதியா இருந்த எந்த கலியாணமும் குலைவதில்லை.
கட்டில் என்றாலே பலருக்கும் ஒன்றே ஒன்றுதான் ஞாபகத்தில் வந்து தொலைக்கும்.
அதையும் தாண்டி ஆயிரம் இருக்கு ......
பெண்களின் மூளையும் .... ஆண்களின் மூளையும் செயட்படும் ..சிந்திக்கும் 
விதம் கொஞ்சம் வித்தியாசம் இந்த வேறுபாட்டில் நிறைய நன்மை உண்டு.
அந்த வேறுபாட்டிட்கு எப்படி செயல் வடிவம் கொடுப்பது என்ற திட்டமிடலுக்கு 
கட்டில்தான் உகந்த இடம்.
பெண்கள் என்ன பேசினாலும் .......அமைதியா இருந்து கேட்க வேண்டும். 
அந்த அமைதியா இருந்து கேட்க்கும் மன பக்குவத்தை கட்டில் வைத்திருக்கிறது.

சிறுவயதில் இருந்து பேசிக்கொண்டு இருப்பதில் பழகி போனவர்கள் பெண்கள் 
பள்ளிக்கூட காலத்தில் பாத்ரூம் போனாலும் இன்னொரு நண்பியுடன் பேசிக்கொண்டு 
சென்று பழக்க பட்டவர்கள். மணம் முடித்த பின்பு கணவன்-மனைவி என்ற வடத்திட்க்குள் வாழ்க்கை 
சிக்கி விடுகின்றது. இங்கு ஆண்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை ....... அதாவது 
ஒரு கடை வீதியில் போகும்போது ....... அங்கு பாருங்கள் அவளுடைய ப்ரவுன் கலர் சப்பாத்தை 
வடிவா இருக்கு இல்லையா ? என்பார்கள்.
எமக்கு எமது மூளைக்கு அதை பார்த்து பழக்கமில்லை ...... அது கருப்பாக இருந்தால் என்ன ?
பிரௌன் ஆக இருந்தால் என்ன ? என்றுதான் தோன்றும்.
சப்பாத்தில் எதாவது புதிய தொழில் நுட்பம் அல்லது ஏதாவது ஒரு புதிய விடயம் இருந்தால் மட்டுமே 
எமது மூளை அதை பார்க்க தீண்டும்.

""""""""""இங்குதான் பிரச்சனை தொடங்குகிறது"""""""""""""""""  அந்த கடைவீதிக்கு சென்ற பயணத்தில் 
பின்பு வர போகும் எல்லா மன கசப்பிட்கும் அத்திவாரம் போட்டது அந்த சப்பாத்து என்பது பலருக்கும் தெரியாது. அந்த சப்பாத்து அழகா அல்லது இல்லையா என்பது பெண்கள் மூளைக்கு கூட தெரியாது 
அவருக்கு அந்த இடத்தில் தேவை பட்டது எல்லாம் ....... தனது பேச்சுக்கு ஒரு துணை மட்டுமே. அந்த இடத்தில் 
நமது மூளை அதை சீரியஸாக எடுத்து ........ உண்மையிலேயே சப்பாத்தை உற்றுநோக்க தொடங்குகிறது. 
சப்பாத்தை பார்ப்பது போல் பாவனை செய்ய வேண்டுமே தவிர ........ அதை பார்க்க கூடாது. அதை பார்த்தால்தான்  எமது மூளை கேட்க தொடங்கும் ......... அதில் என்ன இருக்கு என்று ?
எப்படி பார்க்காமல் .......... பார்ப்பது என்ற விதையை கற்றுக்கொடுக்கும் இடம் என்பதால்தான் 
கட்டில்அறையையும் பள்ளிஅறை என்று சொல்லி கொள்ளலாம். 
அங்கு பள்ளி(தூக்கம்) மட்டும் கொண்டால் பிரச்சனைதான்! 

  • Like 2

Share this post


Link to post
Share on other sites
On 1/7/2017 at 7:39 PM, Maruthankerny said:

எல்லாத்தையும் விவாதிக்க வீட்டில் ஒரே ஒரு சிறந்த இடம்தான் இருக்கு.
படுக்கையறையை கொஞ்சம் அழகா வைத்திருந்து விவாதத்தை அங்கு 
வைத்திருக்க வேண்டும்.

கிழிஞ்சுது. கடைசியில  வந்த வேலையும் நடவாது 

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, நந்தன் said:

கிழிஞ்சுது. கடைசியில  வந்த வேலையும் நடவாது 

மந்திரமும் .... தந்திரமும் ஒன்று சேரும் இடம் அதுதான்.

பெண்கள் பேசுவதை காத்து கொடுத்து கேட்கவேண்டும் ..
அது ஒரு ஆழமான உறவை அவர்களுடன் உண்டுபண்ணுகிறது.

அப்படி காதுகொடுத்து கேட்க்கும் (ம் ..ம் என்று தலையாட்டும்) சக்தியை 
அல்லது அந்த ஞானத்தை ஆண்களுக்கு கொடுக்கும் ஒரே அரச மர அடிவாரம் 
அதுதான்.

அதுக்கு பிறகுதான் 
போன விஷயம் ... சேவல் கூவுமட்டும். (வேண்டாம் இங்கேயே நிப்பாட்டுறன்)  

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Maruthankerny said:

மந்திரமும் .... தந்திரமும் ஒன்று சேரும் இடம் அதுதான்.

பெண்கள் பேசுவதை காத்து கொடுத்து கேட்கவேண்டும் ..
அது ஒரு ஆழமான உறவை அவர்களுடன் உண்டுபண்ணுகிறது.

அப்படி காதுகொடுத்து கேட்க்கும் (ம் ..ம் என்று தலையாட்டும்) சக்தியை 
அல்லது அந்த ஞானத்தை ஆண்களுக்கு கொடுக்கும் ஒரே அரச மர அடிவாரம் 
அதுதான்.

அதுக்கு பிறகுதான் 
போன விஷயம் ... சேவல் கூவுமட்டும். (வேண்டாம் இங்கேயே நிப்பாட்டுறன்)  

IMG_4501.jpg

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய முக்கிய பருவங்களில் ஒன்று திருமணம் முடித்து குழந்தை பிறப்பதற்கு இடையிலுள்ள  கணவனும் மனைவியும் தனிமையில் வாழும் அந்த இனிய பருவம்......, 
இருவருக்குமிடையில் எந்த தொந்தரவு மில்லாமல் , அன்யோன்யமாக. , சில பல பயணங்களை எல்லாம் மேற்கொண்டு மிகவும் இனிமையாக இருக்க வேண்டிய அதி அற்புதமான பருவம் ,
பலருக்கு இது மிகவும் குறுகிய காலமாகவே இருக்கும் , ஏனெனில் குழந்தை பிறந்தவுடன் வாழ்க்கை மிகவும் இனிமையாக மாறும் , எனினும் கணவன்  மனைவிக்கிடையிலுள்ள அந்த தனிமைப் பருவம் முடிவுக்கு வந்து விடும்


எனவே திருமணம் முடித்து குழந்தை பிறப்பதற்கு இடையிலுள்ள அந்த காலப் பகுதியில் உங்கலால் முடிந்தளவு பயணங்கள் , மேற்கொள்ளுங்கள் , ஏனெனில் குழந்தைகளுடன் பயணங்கள் சற்று சிரமமானது, அவர்கள் சற்று வளர வேண்டும் , பின்னர் இரண்டாவது பிள்ளை...., அவர்கள் பாடசாலை செல்லத் தொடங்கினால், பாடசாலை  விடுமுறை நாட்களில் தான் பயணங்கள் சாத்தியப்படும்.., அந்த காலப்பகுதியில் விமான கட்ட்ணங்கள் உச்சம் தொடும், பிள்ளைகளின் பாடசாலை காலம் முடிய எமக்கும் சற்று வயது போய் விடும் எனவே , என்னைக் கேட்டால் வாழ்க்கையில் பயணங்களுக்கு ஏற்ற மிகச் சிறந்த காலப்பகுதி திருமணம் முடித்து குழந்தை பிறப்பதற்கு இடையிலுள்ள  அந்த இடைவெளி தான் என்பேன்..

என்னைப் பொறுத்த வரையில் குறைந்தது 2 பிள்ளைகள் என்றாலும் பெறவேண்டும் , இரண்டு பிள்ளைகளுக்குமிடையில் எவ்வளவு குறைந்த இடைவெளி விடமுடியுமோ விடுங்கள் , என்னைப் பொறுத்தவரையில் ஒன்று , ஒன்றரை வயது என்றாலும் ஓ.கே தான் , ஏனெனில் முதல் பிள்ளைக்கு பாவித்த பெரும்பாலான பொருட்களை அடுத்த பிள்ளைக்கும் பாவிப்பதன் மூலம் பெரும் பணத்தினை மீதப்படுத்தலாம், அத்துடன் அவர்கள் இருவரையும் நீச்சல்,கராட்டி, இசை, நடனம், தமிழ் வகுப்புக்களில் ஒரே வகுப்புகளில் சேர்த்துவிடலாம் , போக்குவரத்துச் சிக்கல்கள் இல்லை, அத்துடன் அவர்களும்  படிப்பு, விளையாட்டு போன்றவற்றில் ஒருதருக்கொருதர் உதவி செய்து கொள்ளுவார்கள்.... ( இது எனது அனுபவம் எந்து மூத்த மகள் 6 வயது, இரண்டாவது மகள் 6 மாதம் , மிகவும் கஸ்ட்டப் படுகிறேன்) (மனைவிக்கு முதல் பிள்ளை சிசேரியன் எனில் அடுத்த பிள்ளைக்கு வைத்தியர்கள் 2 வருடம் இடைவெளி விடச் சொல்வார்கள்)

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.