Jump to content

[u]அப்பாவி சுந்தரேசன் அழகிய லாவண்யா...[/u]


Recommended Posts

அப்பாவி சுந்தரேசன் அழகிய லாவண்யா...

டாக்டர் சுந்தர்..அசைவம்

கலக்காத அப்பாவி..

வல்லினம் பேசாத நல்லவன்..

இனிமையின் இருப்பிடம்..

எளிமையின் வாழ்விடம்..

வயது திருமணத்தை செய்க என

கோவிலில. பெண் பார்ப்பு

ரம்யமான சூழல்..

தேவதையாய்.. லாவண்யா..

கூரை சரசரக்க..

கூந்தலெல்லாம் பூச்சூடி

வண்ணமையிட்டு

வட்டமெனப்பொட்டுவைத்து

முகம் பார்க்காமல் சிரித்தபோது

நாணமென எண்ணிக்கொண்டான்..

தேன்குரலில் எப்படி இருக்கிறீர்கள்

கேட்டபோதே முடிவு செய்தான்

இவள்தான் என் மனைவியென்று..

இவன் தலையாட்டலுக்காகவே

காத்திருந்த பெற்றோர் கட்டி

வைத்தார்..அக்

கன்னிப்பெண்ணை ?

முதலிரவே இவனுக்கு

நினைத்தமை போல்

அமையவில்லை..

பாலுடன் வருவாளெனப்

பார்த்திருந்தான்-அவள்

செல் போனுடன் வந்தாள்..

ப்ரெண்ட் என்றாள்..

2 மணிநேரம் பேசினாள்..

தோழமை நாடாமலே

பத்துமணிநேரம் தூங்கினாள்..

இவன் மனம் உடைந்தது..

இவன் ஆடைகளை முட்டை கட்டினாள்..

சற்றும் விரும்பாத ஆடைகளை

கிழிந்து தைத்த ஆடைகளை

அதுதான் ஸ்டைலாம்..

வாங்கி நிரப்பி போடென்றாள்..

கட்டிலில் ஒட்டாதவள்..

வைபவங்களில்அதிகமாக

ஒட்டினாள் உறவாடினாள்..

அசிங்கமாய் உடுத்திய

அழகிகளோடு கூடி..

வைன் குடித்தாள்..

ஆடவர்கள் மத்தியில் நின்று

தொட்டுத் தொட்டு

தொங்கியமை தோழமையாம்..

நாகரீகம் தெரியாத

ஆளென வீட்டில் திட்டினாள்..

இதைப்படித்தீர்களா...

பொய்யில்லை நிஜம்

முடிவு எண்ணவாயிருக்குமென நினைக்கிறீர்கள்..

விவாகரத்து...இல்லை

அவள் மாறியிருப்பாள்.. இல்லவே இல்லை..

அவன் மாறிவிட்டான்..

ஒவ்வாத வாழ்க்கைக்கு

ஒப்பனை செய்து

வாழ்ந்து கொண்டிருக்கும் அவன் என் நண்பன்..

தொலைந்த சந்தோசத்தை

எனக்கு சொல்லி வருந்துமவன்

இன்று திருத்த முடியாத நித்தக்குடிகாரன்

தவறு யார் செய்யவில்லை..

ஆடம்பரம்..ஆணவம்..ஆசை..

வெளியுலகுக்கு அழகு..

ஆன்மாவுக்கு பாரம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலையாட்டலின் முடிவு, தலையாட்டும் பொம்மையாய் ஆன கதையோடு கூடிய கவிதை அழகு.

Link to comment
Share on other sites

பாதிக்கப்பட்டவர் உங்கள் நண்பர் எனக் கூறியுள்ளீர்கள். பெண் யாரெனக் கூறவில்லையே? தெரிந்தால் தானே நாமும் அவதானமாக இருக்க முடியும்! <_<

Link to comment
Share on other sites

பாதிக்கப்பட்டவர் உங்கள் நண்பர் எனக் கூறியுள்ளீர்கள். பெண் யாரெனக் கூறவில்லையே? தெரிந்தால் தானே நாமும் அவதானமாக இருக்க முடியும்! <_<

<_<:mellow::D:D :P

Link to comment
Share on other sites

அப்பாவி சுந்தரேசன் பற்றி எழுதியமைக்கு வருந்துகிறேன்..

அவர் என் நண்பர் இதையறிந்தால் கவலையுறலாம்..

பெண்களிலும் பிழைகள் உள்ளன எனச்சொல்லவே எழுதினேன்..

ஆண்களிலும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.