கருத்துக்கணிப்பு - வடக்கில் பொருத்து வீடுகள் அமைப்பது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

By
யாழிணையம்,
in ஊர்ப் புதினம்
கருத்துக்கணிப்பு - வடக்கில் பொருத்து வீடுகள் அமைப்பது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?
51 members have voted
-
Tell a friend
-
Similar Content
-
By நியானி
வணக்கம்,
யாழ் இணையம் மீதான உங்களின் எதிர்பார்ப்பு என்ன? - ஓர் கருத்துக்கணிப்பு
இக்கருத்துக்கணிப்பின் மூலம் நீங்கள் குறிப்பிடும் விடயங்கள் கவனமாக ஆராயப்பட்டு யாழ் இணையத்தினை மேலும் மெருகேற்ற வழிசமைக்கும். அதேவேளை இங்கு பதியப்படும் விடயங்கள் அனைத்தும் அநாமதேயமாகவே பார்க்கப்படும் என்பதால் தனிப்பட்ட ஒருவர் இன்ன கருத்தினை வைத்தார் எனப் பார்க்கப்பட மாட்டாது.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கருத்துக்களத்திலும் முகப்பிலும் இக் கருத்துக்கணிப்பானது காண்பிக்கப்பட்டபோது பங்குபற்றத் தவறியவர்கள் கூடிய விரைவில் பங்குபற்றி உங்கள் எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள்.
கருத்துக்கணிப்பு முடிவடைந்துள்ளது.
நன்றி
-
By நவீனன்
வவுனியாவில் 10ஆயிரம் பொருத்து வீடுகளை அமைக்க விண்ணப்பபடிவம் விநியோகம் வவுனியா மாவட்டத்தில் 10 ஆயிரம் பொருத்து வீடுகளை வழங்குவதற்கு கிராமசேவையாளர்களூடாக விண்ணப்பப்படிவம் விநி யோகிக்கப்பட்டு வருகின்றது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சினால் இவ்விண்ண ப்பப்படிவங்களின் விநியோகம் அரசாங்க அதிபரின் சிபாரிசுக்கு அமைவாக இடம்பெற்று வருகின்றது. கிராமசேவையாளர்களுக்கு இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் கலந்துரையாடல் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் பிரதேச செயலாளர், கிராமசேவையாளர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது. இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட இணைப்பாளர்களினால் பொருத்து வீடு தொடர்பாக கிராமசேவையாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் 13ம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் வீடுகளில் செட்டிகுளம் பிரதேச செயலகம், வவுனியா வடக்கு பிரதேச செயலகம், வவுனியா தெற்கு, வவுனியா நகரம் போன்ற பகுதிகளிலுள்ள பொருத்து வீடு தேவையுடையவர்களுக்கு பொருத்துவீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரு வதாக வன்னி மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர் எம்.எம்.சிவலிங்கம் தெரிவித்துள்ளார். http://www.onlineuthayan.com/news/22587
-
By நவீனன்
'சுவாமிநாதன் பதவி துறக்கவேண்டும்' தன்னுடைய அமைச்சுப் பதவியை முறையாக செய்யமுடியாவிடின், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், தன்னுடைய அமைச்சுப் பதவியை துறக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் தெரிவித்தார்.
- See more at: http://www.tamilmirror.lk/187568/-ச-வ-ம-ந-தன-பதவ-த-றக-கவ-ண-ட-ம-#sthash.MAgADxh4.dpuf -
By நவீனன்
நாவற்குழியில் குடியேறிய சிங்கள குடும்பங்களுக்கு இவ்வாண்டு வீடமைப்புதிட்டம் நாவற்குழியில் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு வீடமை ப்புத்திட்டம் அமைத்து கொடுக்கப்படவுள்ளதாக தேசிய வீடமைப்பு அபி விருத்தி அதிகார சபையின் யாழ் மாவட்ட முகாமையாளர் எம்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவி க்கையில் 2016ம் ஆண்டு யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 989 பேருக்கான வீட்டுக் கடன்களை யாழ் மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை வழங்கியுள்ளது.இதன்படி ,ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 3,50000 ரூபா வீதம் வீட்டுத் திருத்த வேலைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது..இதற்காக 86.55 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது...மேலும் 3000 குடும்பங்களுக்கு குடும்பம் ஒன்றிற்கு 10 சீமெந்து பைகள் வீதம் வழங்கப்பட்டுள்ளது..இதற்காக 24.7 மில்லியன் ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளது. அத்துடன் 2017ம் ஆண்டிற்கான மிகப்பெரிய திட்டமாக நாவற்குழி பிரதேசத்தில் 250 வீடுகளைக் கொண்ட மாதிரிக் கிராமம் ஒன்று அமைக்கப்படவுள்ளது..நாவற்குழி பிரதேசத்தில் குடியேறியுள்ள 200 தமிழ் குடும்பங்கள்,50 சிங்களக் குடும்பங்களுக்கான வீடுகளை,வீடொன்றிற்கு 5 இலட்சம் ரூபா செலவில் குறித்த மாதிரிக் கிராமத்தில் அமைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். http://www.onlineuthayan.com/news/22300
-
By Athavan CH
வடக்கு கிழக்கு மாகாணத்தில் வசிக்கின்ற மக்களுக்கு கல் வீடே வேண்டும், பொருத்து இரும்புக் கூடு வேண்டாம் என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பொருத்து வீட்டு விண் ணப்பங்களை முழுமையாக நிரா கரிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கையில்,
பொருத்து இரும்பு வீட்டுத்திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதினாறு பாராளுமன்ற உறுப்பினர்களும், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களும், உயர்மட்ட அரசியல் தலைவர்களும் பொருத்தமற்ற வீட்டுத் திட்டம் என எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்,
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களிலும், மாகாணசபைகளிலும் இதை எதிர்த்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட விவாத காலத்தில் மீள்குடியேற்ற அமைச்சு விவாதத்தின் போது இவ் வீட்டுத்திட்டத்திற்கான ஒப்பந்த விதி முறைகள் மீறப்பட்டுள்ளமை, ஊழலுக்கு இட மளிக்கப்பட்டுள்ளமை மோசடிக்குள்ளானவர்களுடன் உள்ள ஒப்பந்தம் உடன்பாடுகளை பாராளுமன்றத்தில் வெளியிட்டு மீள்குடியேற்ற அமைச்சின் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
பாராளுமன்றத்தில் எனது தலைமையில் உள்ள மீள் குடியேற்ற அமைச்சு உள்ளிட்ட மேற்பார்வைக்குழுவில் இத் திட்டம் வேண்டாம் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த வருடம் டிசம்பர் 7 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையிட்டு இப் பிரச்சினைக்குத் தீர்வு காணுவதாகவும் வடக்கு கிழக்கின் அபிவிருத்தி பணிகளுக்கும் கூடுதலான நிதி ஒதுக்குவதாகவும் தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்குறுதியளித்திருந்தார்; என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் எட்டு இலட்சம் ரூபா வீட்டுத்திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஆனால் அமைச்சர் கல்லில்லை, மணலில்லை, நீரில்லை என்ற அற்ப காரணங்களைக் காட்டி மக்களை ஏமாற்றகின்றார்.
பிரதமர் பாராளுமன்றில் மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் வீட்டுப் பிரச்சினைகளைத் தலையிட்டுத் தீர்வுகாணும் வாக்குறுதியை வழங்கியுள்ள நிலையில் மீள்குடியேற்ற அமைச்சர் பொருத்துவீட்டுக்கு விளம்பரம் செய்வது தவறானதாகும்.
ஏன் இவ்வளவு அவசரம். அமைச்சர் சுவாமிநாதனின் விசுவாசிகளும், முகவர்களும், அரச அதிபர்களையும் பிரதேச செயலாளர்களையும், ஊழியர்களையும் மிரட்டி அச்சுறுத்தி பொருத்து வீடுகளை ஏற்கவேண்டு மெனப் பேசுகின்ற செய்திகளும் கசிந்து இருக்கின்றன. மீள்குடியேற்ற அமைச்சு, வீடு தேவைப்பட்டவர்களுக்கு கல்-சீமெந்து வீடுகளை பத்து இலட்சம் ரூபாயில் கட்டிக் கொடுப்பதற்கான நடவடிக்கையை முறையாக செயற்படுத்துவதே இன்றைய தேவை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்திப் பொருத்தமான தீர்மானங்களை எடுக்க வேண்டுமென வற்புறுத்துகின்றோம். அமைச்சர் சுவாமிநாதனின் மீள்குடியேற்ற அமைச்சில் ஓராண்டுக்குள் இரண்டு அமைச்சின் செயலாளர்கள் துரத்தப்பட்டுள்ளனர். அமைச்சுக்கு இன்னும் ஒரு செயலாளர் நியமிக்க முடியவில்லை. அரசு செயலாளர் தர முள்ளவர்கள் இந்த அமைச்சுக்கு வரமறுக்கின்றனர்.
இந்நிலையில் இப் பொருத்து வீட்டுத் திட்டத்தை இருபத்தொரு இலட்சத்திலிருந்து பதினாறு இலட்சமாக குறைத்து அமைச்சர் சுவாமி நாதன் விளம்பரம் பிரசுரித்து ஒப்பேற்ற எடுக்கும் நடவடிக்கையில் மறைந்திருக்கும் மர்மந்தான் என்ன? இத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்புகிறோம்.
அரசையும் தமிழ் மக்களையும் அமைச்சர் சுவாமிநாதன் தவறாக வழிநடத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றோம். போரினால் அழிந்து போயுள்ள வடக்கு கிழக்குப் பிரதேசங்களுக்கு கல் சீமெந்தினால் கட்டப்பட்ட ஒரு இலட்சத்து முப்பதினாயிரத்திற்கும் அதிகமான வீடு தேவை.
எனவே பொருத்து வீட்டு விண்ணப்பங்களை வீட்டுத் தேவையுள்ள மக்கள் நிராகரித்து கல்வீடுதான் வேண்டுமென அமைச்சுக்கு, அதிகாரிகளுக்கு எழுதிக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். மக்களின் வீட்டுத் தேவையை நிறைவு செய்ய அமைச்சரின் தவறான வழிநடத்தலுக்குப் பலியாகிப் பின் மன வருத்தப்பட வேண்டாமென வேண்டுகோள் விடுக்கின்றோம் என மாவை எம்.பி தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
http://www.valampurii.lk/valampurii/content.php?id=12916&ctype=news
-
-
Topics
-
Posts
-
By புங்கையூரன் · Posted
எனக்கென்னவோ....கதை முடிஞ்ச மாதிரிக் கிடந்தது..! சரி....சரி....இனிமேல் தொடரும் போட மறக்காதீர்கள்..! தொடந்தும் புகையுங்கள்.....மன்னிக்கவும் தொடர்ந்தும் எழுதுங்கள், அக்கினி...! -
By புங்கையூரன் · Posted
அருமையான ஒரு சமையல் பதிவு, நிகே! நானும் செய்து பார்க்க வேண்டும்..!நன்றி...! -
By அக்னியஷ்த்ரா · Posted
இன்னும் முடியவில்லை புங்கையண்ணை இப்போதான் கதை புகைய அரம்பித்திருக்கிறது, இனித்தான் கொழுந்துவிட்டு எரியப்போகிறது தொடரும் போட மறந்துவிட்டேன் -
By புங்கையூரன் · Posted
அருமையான ஒரு கதையை வாசித்த ஒரு திருப்தி..! ஆரம்பத்தில் யாழ் கள உறவான நாதமுனியின் எழுத்தின் சாயல் போன்று தொடங்கிய கதை....போகப் போக..அக்கினியின் தனித்துவத்தைப் பிரதி பலிகக ஆரம்பித்துக் கதையை முடித்த விதம், மிகவும் நன்றாக உள்ளது! இரண்டு வெவ்வேறு கால கட்டங்களில் நடந்த சம்பவங்களை....வாசகர்கள் ஆர்வமிழக்காத வகையில் கொண்டு செல்வதென்பது மிகவும் கடினமான காரியம்! அதை அக்கினி கையாண்ட விதம் மிகவும் இயல்பாக உள்ளது..! தொடர்ந்தும் கதையுங்கள் அக்கினி....ஐ மீன் தொடர்ந்தும் எழுதுங்கள்...! -
By புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது
புலிகளையும் – அரசாங்கத்தையும்ஒரே தராசில் சமப்படுத்த முனைகிறாரா அம்பிகா.? தமிழ் மக்களையும் – இலங்கை அரசையும் பொறுத்துவரை அடுத்து வரும் நாட்கள் ஒவ்வொன்றும் முக்கியமானவை. ஜெனிவாவில் நடந்துவரும் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் – தமக்கு இழைக்கப்பட்ட குற்றங்கள் – இன்னல்களுக்கு நீதி கிடைத்து விடாதா? என்ற எதிர்பார்ப்புடன் தமிழ் மக்களும் – தமிழர்களுக்கு இழைத்த குற்றங்களில் இருந்து தப்புவதற்கு தாம் நகர்த்திய இராஜதந்திர காய்கள் வெற்றியை தந்து விடதா? என்ற அங்கலாய்ப்புடன் இலங்கை அரசும் உள்ளன. இந்த வேளையில் தனது நிறைவேறாத அரசியல் கனவின் காழ்ப்புணர்வை 15 சுட்டுரை (twitter) பதிவுகள் மூலம் தீர்த்துள்ளார் திருமதி அம்பிகா சற்குணநாதன். திருமதி அம்பிகா சற்குணநாதனுக்கு அதிக அறிமுகம் தேவையில்லை. போர் காலத்தில் ஐ.நா. அறிக்கையாளர்களில் ஒருவர். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர். கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளராகக் களமிறக்க நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஆ. சுமந்திரனால் முயற்சிக்கப்பட்டவர். அவரின் இந்த முயற்சிக்கு கட்சிக்குள்ளும் – மக்கள் மத்தியில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் தோன்றவே அவரை வேட்பாளராக்கும் முயற்சி கைவிடப்பட்டது. ஆனால், சற்றும் தளராத விக்கிரமாதித்தனாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் மூலம் அம்பிகா சற்குணநாதனை நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்கு சுமந்திரன் பகீரதப் பிரயத்தனங்களை செய்தார். இதனால், கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் பட்டியலில் முதலிடத்தில் அவரின் பெயர் இடம்பெற்றது. தனது இந்த முயற்சிக்கெல்லாம், அம்பிகா சற்குணநாதன் மனித உரிமைகள் செயல்பாட்டாளராக இருந்து ஐ.நாவுக்கு சமர்ப்பித்த அறிக்கைகள் – தமிழ் மக்களின் துன்பியல்களை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டின. இதனால் அரசு அவருக்கு பலத்த நெருக்கடிகளை கொடுத்தது. ஆகையால் தமிழ் மக்களுக்காக செயற்பட்ட மனித உரிமைகள் செயற்பாட்டாளரை தங்கள் பிரதிநிதியாக்கி, அவர் தொடர்ந்தும் செயற்பட – நீதிக்கான உரிமை கோரலில் தொடர்ந்தும் முன்னோக்கி நடக்க தமிழ் மக்கள் வழி செய்ய வேண்டும் என்று விளக்கமளித்திருந்தார். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் இந்த வியாக்கியானங்கள் எல்லாம் வெறுமனே – தேர்தல் கால பசப்பு வார்த்தைகளே என்பதை திருமதி அம்பிகா சற்குணநாதன் தனது சுட்டுரை பதிவுகள் மூலம் இப்போது நிரூபித்திருக்கிறார். அவரின் 15 சுட்டுரை பதிவுகளில் இடம்பிடித்த முக்கிய அம்சங்கள் இவைதான். 1. ஐ.நா., மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற அமைப்புக்கள் விடுதலைப் புலிகளின் மனித உரிமைகளையும் பதிவு செய்துள்ளன. 2. 2009 பெப்ரவரி – போர் வலயத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற பொதுமக்கள் புலிகளால் குறிவைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். – இறுதிப் போரில் பொதுமக்கள் இறப்பு கணிசமாக அதிகரிக்க இதுவும் காரணம். 3. இரக்கமற்ற இராணுவ அமைப்பாக புலிகள் இருநு்தனர். சிங்கள – முஸ்லிம் மக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து விரட்டினர். 4. இராணுவ இலக்குகளை குறிவைத்த புலிகள், பொது மக்களையும் இலக்கு வைத்து தாக்கினர். 5. அரசியல் படுகொலைகளை நிகழ்த்தினர். 6. மட்டக்களப்பில் சரணடைந்த நூற்றுக்கணக்கான பொலிஸாரை சுட்டுக் கொன்றனர். 7. போர் நிறுத்த காலத்தில் புலிகள் 3,800 மீறல்களை செய்துள்ளனர். அரசாங்கம் 350 மீறல்களையே செய்தது. 8. மக்களை மிரட்டி கப்பம் பெற்றனர். 9. சிறுவர்களை படைக்கு சேர்த்தல், பலவந்தமான ஆட்சேர்ப்பில் புலிகள் புலிகள் ஈடுபட்டனர். 10. வலைஞர்மடத்தில் சென். மேரிஸ் தேவாலயத்தில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் – இளைஞர்கள் பலவந்தமாக ஆட்சேர்ப்பு சேர்க்கப்பட்டனர். 11. 2689 சிறுமிகளும், 6905 சிறுவர்களும் புலிகளால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர் என்று ஐ.நா. சிறுவர் நிதியமான யுனிசெவ் அறிக்கையிட்டுள்ளது. 12. 2002 போர் நிறுத்தத்தில் தமிழர்களுக்கு கிடைத்த ஒரே சிறுநன்மை சிறுவர்களை படைக்கு சேர்த்தல் தவிர்க்கப்பட்டதே. இந்த அம்சங்களையே அம்பிகா தனது சுட்டுரை பதிவில் சர்வதேசத்துக்கு புரியும் விதத்தில் பதிவிட்டுள்ளார். முன்னாள் ஐ.நா. அறிக்கையாளர், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் தமிழ் மக்களின் பேராதரவு பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்ட ஒருவர் இந்தக் கருத்துக்களை – அதுவும் ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடக்கும் நேரத்தில் பதிவிட்டிருப்பது சர்வதேசத்தின் கவனத்தை வெகுவாக ஈர்க்கும் வழி. இவ்வாறான ஒருவரின் கருத்து விடுதலைப் புலிகள் மீதும் தமிழ் மக்கள் நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்துகின்றனர் என்று கருதப்பட முடியும். ஆக, இங்கு புலிகள் தவறு செய்யவில்லையா? அவர்களின் குற்றங்களுக்கு தண்டனை இல்லையா என்று ஒரு சாரார் கிளர்ந்தெழக் கூடும். ஆனால், இங்குள்ள சிக்கல் அதுவல்ல. அப்படியே புலிகள் மீதான குற்றங்களுக்கு தண்டனை வழங்குவதாக இருந்தாலும் அழிக்கப்பட்ட இயக்கத்தை தண்டிப்பது எங்ஙனம் சாத்தியம். தவிர குற்றம் செய்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களாக இருந்த கருணா போன்றவர்கள் இன்றும் இலங்கை அரசின் தயவிலேயே உள்ளனர். இவை எல்லாவற்றையும் விட விடுதலைப் புலிகள் அமைப்பு ஐ. நாவின் மனித உரிமைகளை ஏற்று – அதை ஒழுகுவதற்கான கட்டமைக்கப்பட்ட ஓர் அரசாங்கம் அல்ல. மாறாக அது தனது கொள்கைகளில் தீவிரமாக செயற்பட்ட – அதை அடைவதற்காக செயற்பட்ட தீவிரவாத அமைப்பு மட்டுமே. ஆனால், அம்பிகா சற்குணநாதனின் பதிவின் நோக்கம் புலிகளை தண்டிப்பதோ அல்லது அரசின் தயவில் இருப்பவர்களை தண்டிக்கக் கோருவதாகவோ நிச்சயம் இல்லை. மாறாக புலிகள் குற்றவாளிகள் – அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றால் இலங்கை அரசின் மீது – அதாவது தற்போதைய ஆட்சியாளர்கள் – படைப் பிரதானிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது அல்லது இந்த முயற்சி தேவையற்றது என்ற விதமான வியாக்கியானத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இதேநேரத்தில், போராட்ட அமைப்பான – அம்பிகா போன்றவர்களின் வார்த்தையில் சொல்வதானால் தீவிரவாத – பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளும் – இலங்கை அரசாங்கத்தையும் ஒரே தராசில் நிறுத்தி சமப்படுத்தி, இலங்கை அரசாங்கத்தின் போர் குற்றம் – மனித குல விரோத செயல்பாடுகளிலிருந்து அதற்கு விலக்களிக்கும் செயலையே அம்பிகா சற்குணநாதன் தற்போது தூண்ட முயல்கிறார். ஆனால், அவர் ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ள மறந்துள்ளார். அது ஒரு போராட்ட அமைப்பையும் – பொறுப்புக் கூற வேண்டிய – கடப்பாடுகள் நிறைந்த அரசாங்கத்தையும் ஒரே தராசில் நிறுத்த முடியாது என்பதே. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்று மனித உரிமைகளை நிலைநிறுத்துவோம் என்று நாட்டு மக்களுக்கும் – சர்வதேசத்துக்கும் உறுதியளித்த ஓர் அரசும் அதன் படைகளும், ஒரு போராட்ட அமைப்பு போன்று நடக்க முடியாது என்பதே உண்மை. தவிர, போர் முடிந்து 11 ஆண்டுகள் கடக்கும் நிலையில், இங்கு நடந்தவற்றை மீள நிகழாமையை உறுதிப்படுத்த முடியாததாக – பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க முடியாத ஓர் அரசாக உள்ளது. சிறுபான்மை மக்களின் உரிமைகளை மதிக்காத அரசாகவே இன்னமும் உள்ளது. முக்கியமாக இந்த அரசின் காலத்தில் சிறுபான்மை இனங்கள் தாங்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே உணர்கிறார்கள். இவ்வாறான நிலையிலேயே இலங்கை அரசின் கடந்த கால குற்றச் செயல்களுக்கு விலக்களிப்பு கோரும் விதத்தில் பதிவுகள் அமைந்துள்ளன. மிகச் சொற்பமான மக்களே இறுதிப் போரில் கொல்லப்பட்டனர் என்று அரசாங்கம் வாதிட்டுவரும் சூழலில் கணிசமான உயிரிழப்புக்கு புலிகளே காரணம் என்று கூறி, அரசின் வாதத்துக்கு வலுச் சேர்க்கிறாரோ என்ற ஐயம் எழுந்துள்ளது. தவிர, தமிழ் மக்களின் நீதிக்கான கோரிக்கை வலுப்பெற்றுள்ள இந்தத் தருணத்தில், புலிகள் இழைத்தவை என்று கூறப்படும் குற்றங்களின் பட்டியலை வரிசைப்படுத்தியதன் மூலம், புலிகள் இயக்கத்தின் குற்றங்கள் மறக்கப்பட்டமை – மன்னிக்கப்பட்டமை போன்று, இலங்கை அரசின் மீதான குற்றங்களை மறக்கவும் – மன்னிக்கவும் – பொறுப்புக் கூறலில் இருந்து விடுவிக்கவும் வலியுறுத்த விரும்புகிறார் என்றே கருத முடியும் https://thamilkural.net/thesathinkural/views/126108/
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.