இணையவன்

மண் வீடு

Recommended Posts

அமுக்கப்பட்ட மண்கற்கள் மழையில் இலகுவாகக் கரைந்து விடாது.  இவற்றின் மேற்பரப்பு இறுக்கமாகவும் நேர்த்தியாகவும் இருப்பதால் நீர் இலகுவாக உள்ளே நுளைய முடியாது. ஆபிரிக்காவில் இவற்றைக் கொண்டு வெளி மதில்கள் அமைக்கப்படுகின்றன. 

இவற்றின் திணிவு சீமெந்துக் கற்களை விட அதிகமாக இருப்பதுடன் கட்டப்படும் சுவர்கள் அதிகம் தடிப்பாகவும் இருப்பதால் சிறந்த ஒலித் தடுப்பாற்றலையும் வெப்பத் தடுப்பாற்றலையும் கொண்டுள்ளதுடன் உடைப்பதும் கடினமானதாக இருக்கும்.

சுவரை அமைக்கும்போது கீழுள்ள முறையில் கற்களை அடுக்கி தடிப்பான சுவரை அமைக்க வேண்டும். சிலர் இரண்டு கற்களாக அடுக்குவதற்குப் பதிலாக மூன்று கற்களாகவும் அடுக்குவார்கள். வெளிப்புறத்தில் வரும் மூன்றாவது அடுக்கினை இவ்வாறு அழகாக அடுக்கிக் கொள்ளலாம்.
mur5-boutisse.jpg

இக் கற்களை அரிந்து கொள்வதற்குக் கையால் இயக்கப்படும் இயந்திரத்தை ஐரோப்பிய நாடுகளில் சுமார் 800 முதல் 5000 யூரோக்களுக்கு வாங்க முடியும். விலைக்கேற்றவாறு இயந்திரங்களின் திறனும் மேறுபடும். கீழுள்ள இந்த இயந்திரத்தை 3 பேர் சேர்ந்து - ஒருவர் மண்ணை நிரப்பவும் இன்னொருவர் அமுக்கம் செய்யவும் மூன்றாமவர் கற்களை அடுக்கவும் ஒரு நாளில் 400 கற்களை உருவாக்கிக் கொள்ளலாம். 
https://www.youtube.com/watch?v=QtlFTwKnzdA
சிலர் மண்ணுடன் 5 வீதம் சீமெந்தையும் சேர்த்துக் கொள்கின்றனர்.

இந்தக் காணொலியில் மின்சார இயந்திரம் இலகுவாகவும் விரைவாகவும் கற்களை உருவாக்குவதைப் பார்க்கலாம். இவ்வகை இயந்திரம் ஒன்றின் விலை ஏறத்தாள 7000 முதல் 15000 யூரோக்கள் ஆகும்.
https://www.youtube.com/watch?v=mSWx21P6xZg

இக் கற்கள் வர்த்தக முறையில் தயாரிக்கப்பட்டு அதிக விலைக்கு ஐரோப்பாவில் விற்கப்படுகின்றன. 

எனது தெரிவு 100 வீதம் இயற்கையானதும் இலவசமானதுமான Adobe கற்களே. இன்று யாழ்ப்பாணத்தில் கட்டப்படும் மாடி அற்ற சாதாரணமான விசாலமான வீடொன்றைக் கட்டிக்கொள்ள Adobe கற்கள் பொருத்தமானவை. 

அடுத்ததாகச் சுவருக்கு அழகையும் பாதுகாப்பையும் தரும் பூச்சுக்களைப் பார்ப்போம்.

- தொடரும்

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
On 6 février 2017 at 6:21 PM, ஜீவன் சிவா said:

பதிலுக்கு நன்றி இணையவன் 

முயற்சியில் உள்ளேன் - தேவைப்படும்போது உங்களிடமும் தொழில்நுட்ப உதவி கோருவேன்.

வெற்றிபெற்றால் பகிருவேன்.

உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்.
எனக்குத் தெரிந்த அளவு நிச்சயமாக உதவுகிறேன்.

வெற்றியோ இல்லையோ உங்கள் அனுபவத்தைப் பகிருங்கள், யாருக்காவது பயனுள்ளதாக இருக்கும்.

Share this post


Link to post
Share on other sites

நீண்ட இடைவேளைக்குப் பின் எனது சிறு அனுபவத்துடன் மீண்டும் தொடர்கிறேன். :11_blush:

தொடர்வதற்கு முன் இது இன்னொரு உதாரணம். சீனாவில் அமைக்கப்பட்ட மண் வீடு. இதில் 5 வீதம் சீமெந்து பாவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
china-house.jpg

சில வருடங்களுக்கு முன்னர் மண் கட்டுமாண முறைகளைப் பற்றி அறிய முற்பட்டபோது நானும் அதனைச் செய்து பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருந்தது. புதிதான வீடு கட்டும் அளவுக்கு வசதியும் நேரமும் இல்லை. ஆகவே ஒரு சுவர் மட்டும் கட்டிப் பார்க்கலாம் என்று முடிவு செய்தேன்.:11_blush:

அறை ஒன்றில் ஏற்கனவே உள்ள சீமெந்துச் சுவருக்கு உட் பக்கமாக இன்னொரு சுவரை மண்ணால் கட்டுவதற்குத் தீர்மானித்தேன். ஒன்றுக்கும் பயனில்லாமல் அறைக்குள் இருக்கும் சுவருக்கு மேல் இன்னொரு சுவர் கட்டுவது பைத்தியக்காரத் தனம் என்று நீங்கள் கருதலாம். இதோ விளக்கம்.

மண்ணானது வெப்பத்தை உறிஞ்சி மெதுமெதுவாக வெளிவிடும் ஆற்றல் உள்ளதாகப் பார்த்தோம். inertie thermique என்று பிரெஞ்சு மொழியில் சொல்வார்கள். குளிர்காலத்தில் இந்த உட்சுவரை மெதுவாகச் சூடாக்கினால் அதன் வெப்பம் இந்த அறையை வெப்பமாக வைத்திருக்கும். வீட்டைச் சூடாக்கும் ரேடியேற்றர்கள் பிரதானமாக இரண்டு விதமாக இயங்கும். 

1 - Convection - றேடியேற்றர் சூடாகி அதன் அருகிலுள்ள வளியைச் சூடாக்க, சூடான காற்று மேல் எழ, குளிரான காற்று றேடியேற்றரை நோக்கி நகரும். இது சுழற்சியாக நடக்கும்.

2 - Radiation - றேடியேற்றரின் வெப்பமான மேற்பகுதியிலிருந்து வெப்பக் கதிர்வீச்சு தெறித்து அக் கதிர் தொடும் பொருளைச் சூடாக்கும். 

மேலதிகத் தகவல்களுக்கு நன்றி இசைக்கலைஞன் 

 

Convection மூலம் சூடாக்குவதற்கு ரேடியேற்றரை அதிக வெப்பமாகச் சூடாக்க வேண்டும். வெப்பத்தைக் குறைக்க வேண்டுமானால் றேடியேற்றரின் அளவைப் பெரிதாக்க வேண்டும். இப்படியே றேடியேற்றரின் அளவைப் பெரிதாக்கியபடி வெப்பத்தைக் குறைத்துக் கொண்டு சென்றால் ஒரு கட்டத்தில் றேடியேற்றர் காற்றை வெப்பமாக்கும் திறனை இழந்துவிடும். கதிர்வீச்சு மூலம் மட்டும்தான் வெப்பமாக்கும். அறையின் ஒரு சுவர் அளவில் ஒரு றேடியேற்றர் உள்ளதாகக் கற்பனை செய்து பாருங்கள். அதனை சுமார் 25 - 28 °C ற்குச் சூடாக்கினால் போதுமானது.

Convection மூலம் அறை ஒன்றின் வெப்பநிலையை ஏறத்தாள 19°C யில் வைத்துக் கொள்வோம். கதிர்வீச்சு மூலம் அதே அறையை 15 °C யில் வைத்திருந்தால் போதுமானது. ஏனென்றால் அறைக்குள் இருப்பவர் மீது வெப்பக் கதிர் படும்போது வெப்பத்தை உணர்ந்து கொள்வார்.

அடுத்து, செய்முறையைப் பார்ப்போம்.

- தொடரும்

 • Like 4

Share this post


Link to post
Share on other sites

இதுதான் திட்டம்.
ஏற்கனவே இருந்த வெப்பத் தடுப்பை மேலும் இன்னொரு வெப்பத் தடுப்பை அமைப்பதன் மூலம் வெப்பம் விரயமாதலைத் தடுத்தல். அதன்மேல் அலுமினியத் தாள்களால் ஆன தடுப்பொன்றை அமைத்தல். இந்தத் தாள்கள் பளபளப்பாக இருப்பதால் மண்சுவரிலிருந்து வெளியாகும் வெப்பக் கதிர்களைத் தெறிக்க வைத்து மீண்டும் அறைப் பக்கமே திருப்பிவிடும். அதன்மேல் நீர்க் குழாய் ஒன்றை வளைவுகளாகப் பதித்து மண்ணினால் மூடுவது.

 

mur-detail.png

அறை வீட்டின் கூரைப் பகுதியில் இருந்ததால் சுவரின் ஒரு பகுதி சரிவாக உள்ளது. அடுத்து சூடாக்கப்பட வேண்டிய சுவர், ஜன்னலைப் பார்க்கும் படி இருக்கக் கூடாது. ஜன்னல் கண்ணாடியூடாக வெப்பக் கதிர்வீச்சு வெளியேறும் என்பதால் ஜன்னல் இருக்கும் சுவரையே தேர்ந்தெடுக்க வேண்டி வந்தது. அத்துடன் மாடியில் அமைந்திருந்ததால் சுவரைத் தாங்கும் பலம் உள்ளதா என்றும் கவனிக்க வேண்டும். இந்த அறையின் தரைப்பகுதியானது இச் சுவருக்குக் குறுக்காக தீராந்திகள் அடுக்கப்பட்டு சீமெந்தினால் கட்டப்பட்டதால் பிரச்சனை இல்லை. சுவரின் நிறையான சுமார் 1400 kg இனைத் தாங்கும். தரையின் தீராந்திகள் சுவரின் நீளப்பாட்டுக்கு வத்துக் கட்டப்பட்டிருந்தான் தாங்குவது கடினம்.

chauffage_mur_01.jpg

இதோ துளைகள் போடப்பட்டிருக்கும் இந்தச் சுவர்தான், வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தொடரும்.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

நல்ல பயனுள்ள விடங்கள் இதுவைக்கும் இந்த திரியை நான் கவனிக்கவில்லை ....... நன்றிகள் இணையவன். 

Share this post


Link to post
Share on other sites

எமது ஊரில் உள்ள கணிமண் கால போக்கில் 
மழை நீரில் கரைவதுண்டு ...
எப்படி கரையாமல் தடுப்பது ? 

Share this post


Link to post
Share on other sites
On 16 décembre 2017 at 7:35 AM, Maruthankerny said:

எமது ஊரில் உள்ள கணிமண் கால போக்கில் 
மழை நீரில் கரைவதுண்டு ...
எப்படி கரையாமல் தடுப்பது ? 

சுவரில் நேரடியாக மழைநீர் படாமல் கூரையை வடிவமைக்க வேண்டும். அல்லது நீர் படும் இடங்களில் மட்டும் களிமண்ணுடன் நீமெந்தையும் சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம். சிலர் இயற்கையில் கிடைக்கும் கற்களையும் சேர்த்துக் கட்டுவார்கள்.

சீனப் பெருஞ்சுவரின் பெரும் பகுதி ஆரம்பத்தில் களிமண்ணால் அமைக்கப்பட்டது. சில வருடங்களின் பின்னர்தான் செங்கல் பாவிக்க ஆரம்பித்தார்கள்.

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

வெப்பத் தடுப்பைத் தாண்டி சீமெந்துச் சுவரில் துளையிட்டு புரியுள்ள நீளக் கம்பிகள் பொருத்தப்பட்டன. 

chauffage_mur_04.jpg

ஏற்கனவே என்னிடம் மேலதிகமான வெப்பத் தடுப்புகள் இருந்ததால் அவற்றைப் பாவித்துள்ளேன். 

chauffage_mur_06.jpg

அதன்மேல் அலுமினியத் தாள்களால் மூடப்பட்டது. மிகக் குறைந்த விலையுள்ள தாள்களைப் பயன்படுத்தலாம். 1 சதுர மீற்றர் 2.5 யூரோவிற்குக் கிடைக்கும். சுமார் 10 சதுர மீற்றர்கள் தேவைப்பட்டன.  

chauffage_mur_07.jpg

இதன்மேல் சுவரில் பொருத்திய கம்பிகளை இணைத்து உலோகப் பட்டைகள் பொருத்தப்பட்டன.  இது அவசியமற்றது. என்னிடம் இது இருந்ததால் பாவித்தேன். இல்லையேல் கட்டடங்களில் பாவிக்கப்படும் சாதாரண இரும்புக் கம்பி வலை அல்லது சிறிய பலகைகளைப் பொருத்தலாம். 

chauffage_mur_10.jpg

சுண்ணாம்புத் தகடுகளும் என்னிடம் இருந்தபடியால அவற்றை உலோகப் பட்டைகளில் வைத்துச் சிறிய ஆணிகளால் பொருத்தப்பட்டது. இதுவும் தேவையில்லாதது.

chauffage_mur_12.jpg

சுண்ணாம்புத் தகட்டின் மேல் சுடுநீர்க் குழாய் வளைவாகப் பொருத்தப்பட்டது. இக் குழாய்களின் உட்புறமும் வெளிப்புறமும் பிளாஸ்டிக்கால் ஆனது. இடையில் அனுமினியம் உள்ளது. ஆகவே குளாயை இலகுவாக வளைக்கலாம். வளைத்தபின் குழாய் நேராகாமல் அப்படியே வளைவுடன் இருக்கும். 16 மில்லிமீற்றர் விட்டமுள்ள 50 மீற்றர் நீளமான குழாய் 40 யூரோக்களுக்கு வாங்கலாம். இதனைச் சுவற்றுடன் இணைக்கும் சிறு தகடுகளும் ஆணியும் 4 யூரோக்கள். சுண்ணாம்புத் தகடு பதிக்காவிட்டால் நேரடியாகக் கம்பி வலையில் அல்லது பலகையில் வைத்துக் கம்பியால் அல்லது நூலினால் கட்டலாம்.

chauffage_mur_14.jpg

chauffage_mur_15.jpg

தொடரும்.

 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

மேலுக்கு சுண்ணாம்பு பூச்சு பூசினால் நீண்ட காலத்துக்கு பாதிப்பு வராது....!

Image associée

Share this post


Link to post
Share on other sites
On 1/10/2017 at 2:13 PM, இணையவன் said:

எனது மிகச் சிறிய அனுபவம் ஒன்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். என்றோ ஒரு நாள் 100 வீதம் இயற்கையான பொருட்களைக் கொண்டு நானே ஒரு வீடு கட்டிக்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையையும் ஆவலையும் இந்த அனுபவம் தந்துள்ளது.

சார் கட்டத்தொடங்கின வீடு கட்டி முடிஞ்சுதா?
பால் காய்ச்சியாச்சா? 😎

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • (இராஜதுரை ஹஷான்) பாடசாலை மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி தொடக்கம் தொலைக்காட்சி ஊடாக தமிழ் மற்றும் சிங்கள மொழியில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க இரண்டு பிரத்தியேக அலைவரிசைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். கொரோனா வைரஸ் தாக்க சவாலை பெற்றிக்கொள்ள முன்னெடுக்கும் திட்டங்களை பலவீனப்படுத்த வேண்டாம். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கேள்விக்குட்படுத்தி இபலவீனப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அரச தலைவர் தூர நோக்க கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு சுகாதார துறையினரது ஆலோசனைகளுக்கு அமையவே தீர்மானங்களை முன்னெடுக்கின்றார்.அரசாங்கம் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது அனைவரது பொறுப்பாகும். அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து புத்திசாலித்தனமாக தற்போதைய நெருக்கடியை வெற்றிக் கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பூகோள மட்டத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படும். இந்த சவாலையும் வெற்றிக் கொள்ள வேண்டும். தேசிய உற்பத்திகளை வலுப்படுத்த அரசாங்கம் பல திட்டங்களை வகுத்துள்ளது.இதற்கமைய ஏப்ரல் 9ஆம் திகதி தேசிய மட்டத்தில் நாடுத்தழுவிய ரீதியாக வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கையில் அனைவரும் ஈடுப்பட பயிர்ச்செய்கைக்கான கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/79329
  • நான்  இருக்கிற இடத்திலை  இண்டைக்கு  நல்ல வெய்யில்.🌞 வெய்யில் எறிச்சால் சனத்துக்கு பெரிய கொண்டாட்டம். இருந்தாலும் உந்த தோட்டக்காரருக்கு இன்னும் பெரிய கொண்டாட்டம். ஏனெண்டால் தங்கடை மாடுகள் குதிரை எல்லாத்தையும் வெளியிலை அவிட்டு விடுவினம். அதோடை அந்த மிருகங்களுக்கும் வலு சந்தோசம்.வெய்யில் எறிச்சால் ஒரு சோலி ஒண்டு இஞ்சை இருக்கிற தோட்டக்காரர்  தங்கடை மாடுகளின்ரை சாணக தண்ணியை பயிர் விளையிற நிலத்திலை மெசினாலை தெளிச்சு விடுவினம் அந்தமணத்தாலை உள்ள இடமெல்லாம் கொஞ்ச நாளைக்கு நாறும்.இது வழமையாய் நடக்கிறதுதான்.  இருந்தாலும் நான் என்ன யோசிக்கிறன் எண்டால் எங்கடை ஊரிலையும் முந்தியெல்லாம் வீடுகளுக்கு சாணக தண்ணி கிருமியள் போகட்டுமெண்டு  தெளிக்கிறவையெல்லோ.அது மாதிரி இப்ப உந்த கொரோனாவுக்கும் தோட்டக்காரர் சாணகத்தண்ணி தெளிச்சுவிட்டது நல்லதெண்டு நினைக்கிறன்🧐 ஊரிலையும் சில ஆக்கள் சாணகத்தாலை வீடு மெழுகிறது ஆருக்கும் தெரியுமோ?
  • கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 174 ஆக உயர்வு 2020 ஏப்ரல் 05 , பி.ப. 07:30 இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 174ஆக அதிகரித்துள்ளது. தற்போது 3 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/கொரோனா-தொற்றாளர்களின்-எண்ணிக்கை-174-ஆக-உயர்வு/175-248014
  • அனைத்து விதமான மருத்துவ உபகரணங்ளையும் இனி கனடாவே தயாரிக்கும் என்றும் அத்தியாவசியமான மருத்துவ உபகரணங்களுக்கு இன்னொரு நாட்டில் இனித் தங்கியிருக்க போவதில்லை என்றும் ருடோ அறிவித்துள்ளார். ஒன்ராரியோ முதலமைச்சரும் மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு பணமும் சலுகையும் அறிவித்துள்ளார். மிதமிஞ்சிய இயற்கை மற்றும் காடுகளின் வளமும்  நிலப்பரப்புடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த சனத்தொகையும் கொண்ட நாம் / கனடா நிச்சயம் அமெரிக்காவின் இந்த துரோகத்தில் இருந்து மீண்டும் சுய சார்பு கொண்ட நாடாக மிளிர்வோம்.
  • அவுஸ்ரேலியாவில் இலங்கையர் கொரோனாவால் உயிரிழப்பு! அவுஸ்ரேலிய குடியுரிமைகொண்ட இலங்கையர் ஒருவர் காெராேனா வைரஸுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் வசித்து வந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, லண்டனில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியிருந்தது. யாழ்ப்பாணம், மீசாலை மேற்கை பிறப்பிடமாகக் கொண்ட 42 வயதான குடும்பஸ்தர் ஒருவரே நேற்றிரவு உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/அவுஸ்ரேலியாவில்-இலங்கைய/