Jump to content

Recommended Posts

யாழ். வல்வெட்டித்துறையின் முன்னாள் நகர சபைத் தலைவரும், எழுத்தாளருமான கலாபூஷணம் வல்வை ந.அனந்தராஜ் எழுதிய 'வல்வையின் முதுசொம்' தமிழர்களின் வரலாற்று ஆவண நூல் வெளியீட்டு விழா இன்று இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 03 மணி முதல் வடமராட்சி வடக்குப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் த. ஜெயசீலன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வை பண்டிதர் பொன்.சுகந்தன் முன்னிலைப்படுத்தினார்.

விழாவில் ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுந்தரம் டிவகலாலா, பருத்தித்துறைப் பிரதேசத்தின் கலாசார வட்டத்தின் தலைவர் கலாபூஷணம் யோ.இருதயராஜா, வடமாகாண சபை உறுப்பினர்களான க.தர்மலிங்கம், வே.சிவயோகன் ஆகியோர் நிகழ்த்தினர்.

நூல் வெளியீட்டுரையை வடமராட்சி வடக்குப் பிரதேச செயலகக் கலாசாரப் பேரவையின் செயலாளர் அ. சிவஞானசீலன் நிகழ்த்தியதைத் தொடர்ந்து நூலின் நயப்புரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் இ.இராஜேஷ்கண்ணாவும் ஆற்றினார்.

குறித்த நூலை பிரதேச செயலர் த.ஜெயசீலன் வெளியிட்டு வைக்க முதல் பிரதியை கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியின் ஓய்வு நிலை உப அதிபர் கலைப்பரிதி சிவா.கிருஷ்ணா மூர்த்தி பெற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன. ஏற்புரையை நூலாசிரியர் வாழ்வை ந. ஆனந்தராஜ் நிகழ்த்தினார். நூலாசிரியர் வடமராட்சி வடக்குக் கலாசாரப் பேரவையினரால் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார்.

குறித்த நூல் வெளியீட்டு விழாவில் மூத்த ஊடகவியலாளர் எஸ்.திருச்செல்வம், கவிஞர் வேல்நந்தன், எழுத்தாளர்கள், கலைஞர்கள், கல்வியலாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், வடமராட்சி வடக்குப் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

143 பக்கங்களைக் கொண்டு 21 கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்துள்ள 'வல்வையின் முதுசொம்' நூல் வடமராட்சி வடக்கு கலாசாரப் பேரவை வெளியீடாக வெளிவந்துள்ளது.

இந்த நூலில் ஈழத்தமிழர்களின் அரசியல் வாழ்வில் வல்வையின் பங்கு, வல்வெட்டித் துறையின் வரலாற்றுப் பாரம்பரியம், தனித்தன்மை, வாழ்வியல் முறைமைகள், வல்வையின் பாரம்பரியக் கலை, பண்பாட்டு வடிவங்கள், வல்வை எழுத்தாளர்களின் நூல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடங்கி வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/community/01/132546?ref=home

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.