Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

நாளை மறுநாள் சனி கிரகத்தை பார்க்கலாம்


Recommended Posts

நாளை மறுநாள் சனி கிரகத்தை பார்க்கலாம்

08 பெப்ரவரி 2007

Blog this story

கண்கவர் வளையங்கள் நிறைந்த சனி கிரகத்தை நாளை மறுநாள் சனிக்கிழமை (பிப்ரவரி 10ம் தேதி) இரவு முழுவதும் காணலாம்.

நாளை மறுநாள் மாலையில் கதிரவன் மறைந்தவுடன் சனி கிரகம் கண்ணுக்கு புலப்படும் இது பூமியில் இருந்து பார்க்கும் போது கதிரவனுக்கு நேர் எதிராக தெரியும்.

விஞ்ஞானிகள் இந்த நிலையை அப்போசிஷன் என்று குறிப்பிடுவார்கள் என்றும், சனி கிரகத்தை நேரில் காண இதுவே ஏற்ற தருணம் என்றும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குனர் பி.அய்யம்பெருமாள் கூறியுள்ளார்.

சனி கிரகம் அன்றைய தினம் கதிரவனிடம் இருந்து ஒளியைப் பெற்று பெரிதாகவும் பளிச்சென்றும் புலப்படும்.

சனிக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் 157 கோடி கிலோ மீட்டர் என்றும், நாளை மறுநாள் கதிரவனிடம் இருந்து 180 டிகிரி விலகிச் செல்லும் என்றும் அப்போது சனிக்கும் பூமிக்கும் இடையே உள்ள தொலைவு 122.7 கோடி கிலோ மீட்டராக குறையும் என்றும் அய்யம்பெருமாள் தெரிவித்தார்.

பூமியில் இருந்து தொலைநோக்கி வழியாக சனியை நோக்கும் போது வளையங்களுக்கு நடுவே தங்க நிறப் பந்து ஒளிர்வது போல் காட்சி அளிக்கும்.

சனி கிரகத்தை பார்க்க பிர்லா கோளரங்கத்தில் பிப்ரவரி 10ம் தேதி இரவு 7.30 மணி முதல் இரவு 10 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

http://content.msn.co.in/Tamil/News/Regional/0702-08-5.htm

Link to comment
Share on other sites

சனிகிழமை சனியை பார்க்கலாம் என்று சொல்லுறீங்கள்

:icon_idea: :P :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • றோ உளவுப்பிரிவு தனது நலனுக்காக எதையும் செய்யும். விடுதலைப்புலியாக மாறும் கரும்புலியாக மாறும். சிங்கள அரசியல்வாதிகளை தற்கொலை போராளி கொண்டு கொலை செய்யும். விடுதலைப்புலிகளுக்குள்ளும் வேறு இயக்கங்கள் பெயரில் படு கொலைகளை நடத்தும். இன்னும் பற்பல......
    • இது இன்னுமொரு ஈஸ்ரர் தாக்குதலாக இருக்கலாம் மும்பைத் துறைமுகத்தில் ஒரு கடற்படை நீர்மூழ்கி தாக்கி மூழ்கடிக்கப்பட்டது அப்போது விபத்து எனப் பூசி மொழுகிவிட்டார்கள் இல்லையேல் பங்குச்சந்தையில் தடாலடி மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். அதுபோல் இதையும் பூசி மெழுகிவிடுவார்கள். ஆனால் சுப்பிரமணியம் சுவாமி சீனாக்காரன் செய்தவேலை என அறிக்கை விட்டிருக்கிறார். துட்டகெமுனுவின் நிலை இந்தியாவுக்கு வந்துவிட்டது. ஆப்கானிஸ்தானில் சீனாவின் ஆதிக்கம் பாகிஸ்தான் சொல்லவே தேவை இல்லை காஸ்மீர் என்றும் புகையும் விடையம் இப்போ வங்காள விரிகுடாவின் இலங்கைத்தீவில் சீனாவின் ஆதிக்கம் அம்பாந்தோட்டயிலிருந்து அட்டை வளர்ப்புவரை அங்கெங்கிலாதபடி அவர்கள்பாடுதான். கெமுனுக்கு ஒருபக்கம் கடலாவது இருந்தது இவர்களுக்கு கடலுக்கு அப்பாலும் சீனாக்காரன் நிக்கிறான். சிலவேளை யாராவது அகதிமுகாமில் இருக்கும் இலங்கைத்தமிழன்மீது பாரத்தைப்போட்டு விடுதலைப்புலி எனக்கூறினாலும் கூறலாம். 
    • மாசிகருவாட்டுக் குழம்பும் சோறும் அருமையான காம்பினேஷன்.......!  👍
    • இது நடைபெறுவதைத் தடுப்பது எங்கணம்? ஒரே வழிதான். சிங்கள பெளத்த பேரினவாத அரசு தொடர்ந்தும் இயங்குவதை முடக்குவது. இன்றிருக்கும் அதன் அதிகார பலத்தினை உடைத்து, அது கம்பீரமாக நிற்கும் வெற்றிமமதையிலிருந்து கீழே வீழ்த்தி தமிழருடன் சமரசத்தில் ஈடுபடுவதன்மூலம், அவர்களின் கோரிக்கைக்கு உடன்படுவதே ஒரே வழியெனும் நிலையினை உருவாக்குவது.  நாட்டினை தொடர்ந்து கொண்டுநடாத்துவதற்குத் தேவையான வருவாய்களை பேரினவாதம் பெற்றுக்கொள்ளும் வழிகளைத் தடுப்பது. உல்லாசப் பயணத்துறை, கைத்தொழில்ப் பேட்டைகள் மூலம் கிடைக்கும் வருவாய்களை முற்றாக முடக்குவது. பொருளாதார ரீதியில் தோல்வியடைந்த நாடாக மாற்றுவது.  இதனைச் செய்ய தமிழர்கள் தமக்கு முன்னால் இருக்கும் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவது அவசியமானது. அந்த வழிகள் என்னவென்று கண்டுபிடிப்பது இப்போதைக்குத் தேவையானது.
    • அப்படியானால் தமிழர்களின் எதிர்காலம் என்ன? நிச்சயமாக நடக்கப்போவது இவைதான் 1. தமிழர்களின் தாயகம் இன்று வடக்கென்றும் கிழக்கென்றும் பிரிக்கட்டிருப்பதுபோல, இன்னும் சிறிதுகாலத்தில் கிழக்கிலும், வடக்கிலும் பகுதிகள் சிறிது சிறிதாக அரித்தெடுக்கப்பட்டு பெருத்துவரும் சிங்களப் பகுதிகளுடன் இணைக்கப்படும். 2. தமிழரின் அருகிவரும் தாயகத்தில் சிங்களத்தின் ராணுவமும், கடற்படையும், வான்படையும், காவல்த்துறையும், புலநாய்வு அமைப்புக்களும் தொடர்ச்சியாக நிலை நிறுத்தப்படுவதோடு, அவற்றின் பிரசன்னமும் விஸ்த்தரிக்கப்படும். 3. தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களத்தின் அதிகாரிகளும், அவர்களின்குடும்பங்களும் பெருமளவில் குடியமர்த்தப்படும். 4. தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகங்கள் சிங்களத்திற்குள் ஊல்வாங்கப்படும் (உடனடியாக இல்லாவிட்டாலும்கூட இன்னுமோர் 50 - 60 வருடங்களில் இது சாத்தியமே).  5. அருகிவரும் தமிழரின் மொழி, கலசார விழுமியங்கள், ச்மய அடையாளங்கள் சிறிது சிறிதாக தொல்பொருள் காத்தல் எனும் பெயரிலும், "முன்னைய சிங்கள பெளத்த சின்னங்கள் " எனும் பெயரிலும் அபகரிக்கப்படும். அப்படி அபகரிக்க முடியாத தமிழரின் தொல்லியல் சின்னங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுதலோ அல்லது வேண்டுமென்றே பராமரிப்பின்றி விடப்படும், இன்று வன்னியின் பல பகுதிகளிலும் அழிந்துவரும் தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட பல தொன்மைவாய்ந்த கட்டிடங்கள் இதற்கு உதாரணம். 6. தொடர்ச்சியான ராணுவ அடக்குமுறைக்கும், நில அபகரிப்பிற்கும் முகம் கொடுக்கும் தமிழினம் ஒன்றில் நாட்டைவிட்டு வெளியேறி சிங்கள் ஆக்கிரமிப்பினை இலகுவாக்கும், அல்லது தனது அடையாலம் துறந்து சிங்களுத்தினுள் உள்வாங்கப்படும்.  7. இன்னொரு நூற்றாண்டில் முழு நாடும் சிங்கள மயமாகும். 
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.