Jump to content

' காலம் உங்களை கவனித்துக் கொள்ளும் பொன்னார்!' -தி.மு.க மா.செவின் ஃபேஸ்புக் பதிவு


Recommended Posts

' காலம் உங்களை கவனித்துக் கொள்ளும் பொன்னார்!'  -தி.மு.க மா.செவின் ஃபேஸ்புக் பதிவு

மெரினா போராட்டம்

தி.மு.க நிர்வாகிகளில் அரியலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் சற்று வித்தியாசமானவர். நடப்பு அரசியலை நையாண்டி செய்து கட்டுரைகளாகப் பதிவு செய்வதில் வல்லவர். மெரினா போராட்டம் குறித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்தை விமர்சித்து, அவர் எழுதிய பதிவுகள் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. 

ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து மாணவர்கள் நடத்திய மெரினா புரட்சியின் விளைவால், அவசரச் சட்டம் கொண்டு வந்தார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அவர் டெல்லி சென்ற காட்சிகளை, 'மர்மப் புன்னகை ஓ.பி.எஸ்' என்ற தலைப்பில் நையாண்டி செய்திருந்தார். இறுதியாக, 'இடைவேளைக்குப் பிறகான ரஜினி படம் போல பல காட்சிகள் சூடுபிடித்தன. கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவதாக நினைத்து விளையாடிய மோடியும், ஓ.பி.எஸ்ஸும் மாட்டியிருப்பது ஜல்லிக்கட்டு திடலில்' என முடித்திருந்தார். குடியரசு தினத்துக்கும் ஒரு ஸ்டேட்டஸ் பதிவிட்டிருந்தார் சிவசங்கர். அதில், ' இப்போ கூட எந்த அரசியல் கட்சியும் தனி நாடு கோரிக்கையைப் பேசல, பேசவும் மாட்டாங்க. ஆனா இளைஞர்கள்கிட்ட இருந்து கேஷுவலா கிளம்பிடுச்சி. அனல் பறக்கும் ஸ்டேடஸ்கள் தெறிச்சிது. 'நீ அனுமதி தரலன்னா, எங்க நாட்டுல ஜல்லிக்கட்டு நடத்திக்கிறோம்'; 'கிரிக்கெட்டில் வென்ற அண்டை நாடான இந்தியாவுக்கு வாழ்த்துகள்'; 'அண்ணா அப்போவே தமிழ்'நாடு'ன்னு தொலைநோக்கோடு தான் பேர் வச்சிருக்காரு'.

தி.மு.க அரியலூர் மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர்இதெல்லாம் டிரெண்டிங்ல எழுதுனதுன்னு விட்டுட்டேன். ஒருத்தர் சீரியஸாவே எழுதி இருந்தாரு. 'வல்லரசா இருந்தது ரஷ்யா. கிட்ட நெருங்கவே முடியாது. கார்ப்பசேவ் வந்தாரு. பிரிச்சி உட்டுட்டாரு. இந்தியாவின் கார்ப்பசேவ் 'மோடி' வாழ்க !'. டி.வி விவாதத்துல அய்யநாதன் அழுத்திச் சொல்றாரு. " இந்திய ஒன்றியத்தின் அங்கமான தமிழ்நாடு"ன்னு. இன்னைக்கு ஃபேஸ்புக் வந்தா நிறைய கறுப்புக் கொடி ஃபுரொபைல் பிக்சர். இன்னொரு பக்கம் நாட்டுப்பற்ற வலியுறுத்தியும் நாடு ஒண்ணா இருக்கனும்னு வலியுறுத்தியும் வந்தேமாதரம், ஜெய்ஹிந்த் கோஷம் எல்லாம். இதை எல்லாம் அண்ணன் மான்கிபாத்துக்குத்தான் ரீ டைரக்ட் பண்ணனும். ஏன்னா அவர்தான் மனசு வைக்கணும். எல்லோரையும் மதிச்சி நடக்கனும். உரிமைய பறிக்கக்காம இருக்கணும். இத காங்கிரசுக்கும் CC போடணும். சரி, இந்தியா வாழ்க. அண்ணன் மோடிக்கு கொடியரசு தின வாழ்த்துக்கள். அடுத்த வருசமும் சொல்றது உங்க கைல தான் இருக்கு' என விளாசியிருந்தார் சிவங்கர். கடைசியாக, மாணவர்கள் போராட்டம் குறித்து பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அவர் கொடுத்த பதில் உச்சகட்டம். 

அவருடைய பதிவுகள் இங்கே அப்படியே! 

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்மன்னிக்கவும் இதை சொல்வதற்கு, தரம் தாழ்ந்துவிட்டீர்கள் பொன்னார். கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் நீங்கள் வெற்றி பெற்ற போது ஒரு மரியாதை உண்டானது. பல்வேறு இனம், சாதி மக்கள் நிறைந்த தொகுதி. 'எல்லோரையும் அரவணைப்பவர் போலும்' என நினைத்தோம். ஆனால் இன்று நீங்கள் கொடுத்த பேட்டி துளியும் உங்கள் அமைச்சர் தகுதிக்கு பொருந்தவில்லை. போராட்ட இடத்தில் எப்படி தொழுகை செய்யலாம் என்று கேட்டிருக்கிறீர்கள். தொழுகை செய்த அந்தப் புகைப்படத்தை பார்த்திருந்தால் இந்தக் கேள்வியை கேட்டிருக்க மாட்டீர்கள். இஸ்லாமியர்கள் தொழுகை செய்ய அந்த இடத்தை ஒழுங்கு செய்து கொடுத்தவர்கள் மற்ற மதத்தை சேர்ந்தவர்களாக இருக்க முடியும். அதில் யாருக்கும் சந்தேகமாக இருக்க இயலாது. ஏனென்றால் இஸ்லாமியர்களாக இருந்தால், அவர்களும் தொழப் போயிருப்பார்கள். அப்படி என்றால் அவர்கள் இந்துக்கள்தான். அதிலும் ஒருவர் கிறித்துவர் அடையாளத்தை கழுத்தில் அணிந்திருந்தார். இப்படிப்பட்ட எல்லோரும் அன்போடு மாணவர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை குறை சொல்கிறீர்கள். இன்னொரு படம். போராடியவர்களுக்கு ஒரு குட்டி யானையில் இருந்து உணவு வழங்குகின்ற காட்சி. வழங்கிக் கொண்டிருந்தவர் குல்லா அணிந்திருந்தார். அவர் கேமராவைப் பார்க்கவில்லை. ஒருபுறமிருந்து படம் எடுக்கப்பட்டிருந்தது. கர்மமே கண்ணாக உணவு வழங்கிக் கொண்டிருந்தார். விளம்பரமே இல்லை. உணவை எல்லோரும் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். மதம் தடுக்கவில்லை. அந்த மத நல்லிணக்கம் உங்களுக்கு பிடிக்கவில்லை. பர்தா அணிந்த ஒரு பெண்மணி, 'நான் தமிழச்சி. ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும்' என உணர்வோடு குரல் கொடுத்தார். 

ஹிப் ஹாப் ஆதிஇப்படி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தமிழர் என்ற உணர்வோடு கலந்து கொண்டார்கள். ஆனால் உங்கள் கோளாறு பார்வைக்கு அந்தத் தொழுகை மாத்திரமே பட்டிருக்கிறது. வடநாட்டு அரசியலை இங்கு புகுத்த நினைக்கிறீர்கள். அது நடக்காது. அதற்கான இடம் இதுவல்ல. இது காவி பூமியல்ல, கருப்பு பூமி. உங்கள் பேட்டிக்கு முன்னோட்டம் தான் ஹிப்ஹாப் ஆதியின் பேட்டி. அவரும், 'இஸ்லாமியர், கருப்பு சட்டை' என்று குறை கூறியிருந்தார். குட்டியை விட்டு ஆழம் பார்த்துவிட்டு இன்று களத்தில் இறங்கியிருக்கிறீர்கள். உங்கள் குரலைத்தான் ஒரு காவல்துறை அதிகாரியும் ஒலித்துப் பார்த்தார். உளவுத் துறையோடு சேர்ந்து ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்திக் கொண்டிருக்கிறீர்கள். பலிக்காது உங்கள் கனவு. இன்னும் சொல்லப் போனால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பேற்றிருக்கின்ற முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாயே திறக்கவில்லை. இதே குற்றச்சாட்டை அவரது வாயைத் திறந்து சொல்லச் சொல்லுங்கள், பார்ப்போம். டெல்லியில் டிராப்ட் போடுவதைத்தானே அவர் அறிக்கையாக வாசிக்கிறார். இதையும் அவரையே படிக்க சொல்லுங்கள். இளந்தமிழர்கள் மெரினாவில் காட்டிய மத நல்லிணக்கத்தை குலைக்க முயற்சி எடுக்காதீர்கள். மெரினா புரட்சியாளர்கள் மன்னிக்க மாட்டார்கள். திமுகவையும் குறை சொல்லி இருக்கிறீர்கள். அதெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஆனால் மததுவேஷப் பிரச்சாரத்தை நிறுத்துங்கள். தொடர்ந்து மத துவேஷத்தை கையில் எடுப்பதாக இருந்தால், தமிழர் அடையாளமான வேட்டியை தயவு செய்து துறந்து விடுங்கள். உங்கள் மனம் கவர்ந்த அடையாளத்தோடே வெளியில் வாருங்கள். வேட்டிக்குள் இருக்கும், 'காக்கி டிரவுசரோடு' மாத்திரம் வாருங்கள். எது வேண்டுமானாலும் பேசிக் கொள்ளுங்கள். 

உங்களை காலம் கவனித்துக் கொள்ளும்!

http://www.vikatan.com/news/tamilnadu/78952-time-will-take-care-of-you-pon-radhakrishnan-quotes-dmk-district-secretarys-fb-post.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசை கொடுத்து ஓட்டு பிச்சை எடுத்து வெல்ற‌து எல்லாம் வெற்றியா...................... கிருஷ்ண‌கிரில‌   வீஜேப்பியை முந்துவா வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் ஆனால் இதில் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளுக்கு 4வ‌து இட‌ம் என்று போட்டு இருக்கு   பெரிய‌ப்ப‌ர் ப‌ந்தைய‌ம் க‌ட்டுவோமா நான் சொல்லுறேன் வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் வீஜேப்பிய‌ முந்துவா என்று💪..............................   இது முற்றிலும் திமுக்காவுக்கு சாத‌க‌மான‌ ஊட‌க‌ம் அது அவ‌ர்க‌ளையும் அவ‌ர்க‌ள் சார்ந்த‌ கூட்ட‌னிக‌ளையும் முன் நிறுத்தின‌ம்..................... ஆனால் யூன் 4ம் திக‌தி இந்த‌ ஊட‌க‌த்தை காரி உமுந்து துப்புவ‌து உறுதி........................   ப‌ல‌ ச‌ர்வே வேற‌ மாதிரி சொல்லுகின‌ம் ஆனால் இதில் முற்றிலும் பொய்யான‌ ச‌ர்வே............................. இது முற்றிலும் திமுக்காவுக்கு ஓ போடு ஓ போடு ஊட‌க‌ம் தாத்தா க‌ள‌ நில‌வ‌ர‌ம் வேறு மாதிரி இருக்கு😁......................
    • இது உங்களுக்கு விளங்கும் என்பதால், உங்களுக்கும், உங்களை ஒத்தோருக்கும் மட்டும் எழுதுகிறேன். அண்மையில் ஒரு பிரபல தாராளவய, இடது சார் (இடது சாரி அல்ல) எழுதிய Conservatism: The Fight for a Tradition என்ற புத்தகத்தை, (அதாவது இடதுசாரிகள், வலதுசாரியத்தை புரிந்துகொள்ள என ஒரு இடது சார் சிந்தனையாளர் எழுதிய புத்தகத்தை) புரட்டும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இடது சார் சிந்தனையாளர் யாருமல்ல - வலதுசாரிகளின் தங்க தலைவன் பொரிஸ் ஜோன்சனுக்கு மாமன், Edmund Fawcett. 200 வருட அமெரிக்கா, யூகே வலது அரசியலை அலசுகிறது இந்த புத்தகம். இந்த காலகட்டத்தில் அநேக காலம் இரு நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது - வலதுசாரிகள். ஆனால் தாமே கெட்டிக்காரர், வல்லமையானோர், முற்போக்குவாதிகள் எனவும், வலதுசாரிகள் மோடயர், அடிமைபுத்தியினர், பணப்பேய்கள், பிற்போக்கினர் எனவும் சொல்லிகொள்வார்கள் இடதுசாரிகள். இரெண்டு நாட்டிலும். இந்த புத்தகத்தின் முகவுரையில், வலதுசாரிகளை நோக்கி இவர் ஒரு கேள்வியை கேட்கிறார்: 'if we're so smart, how come we're not in charge? நாம் அவ்வளவு கெட்டித்தனமானவர்கள் என்றால் நாம் ஏன் அதிகாரத்தில் இல்லை? —————— இதை படித்த போது என் மனதில் தோன்றிய எண்ணம், உங்கள் பதிவை வாசித்ததும் மீள உதித்தது: எல்லாளன் காலத்தில் இருந்து ஒவ்வொரு சிங்கள படை எடுப்பிலும், 1948க்கு பின் அத்தனை அரசியல் போராட்டதிலும் தோற்றுக்கொண்டே வருகிறோமே; If we are so smart, how come  we haven’t even won at least once? நாம் அவ்வளவு கெட்டிக்காரர், அவர்கள் அவ்வளவு மோடையர்கள் என்றால் - ஏன் நாம் ஒரு தடவை கூட ஒரு அரசியல் வெற்றியை அடையவில்லை? கட்டாயம் வாசிப்போர் பதில் எழுத வேண்டும் என்பதில்லை. சிந்தனையை தூண்டினால் போதும்.        
    • கந்தையர்!இஞ்சை பாருங்கோ. ஆர் வெண்டாலும். ஆர் தோத்தாலும் காசி,இராமேஸ்வரம் போய்வர பிரச்சனை இருக்காது. நோ ரெஞ்சன் 🤣
    • இதில் வீஜேப்பி அண்ணாம‌லை போட்டியிடும் தொகுதி கோவை  இதை காண‌ வில்லை ஹா ஹா................... 
    • இதை என்னை நக்கலடிப்பதற்காக சொன்னீர்களோ தெரியாது 😂 ஆனால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்றாக தெரிந்த விடயம் ரஷ்யா தங்களுக்கு எதிரியல்ல என்பது. உண்மையில் உலகிற்கே ஆப்பு வைக்கக்கூடிய நிலையில் ஒரு பொது எதிரியாக சீனாதான் இன்றுள்ளது ஈரானில் கூட 70 வீத வியாபார நிலையங்கள் சீனாவிற்குரியதாம்.அதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் மோசமான நிலையே. மேற்குலகை பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்கள் எங்கள் கண் முன்னே சீனாவின் பொருட்களை கண் முன்னே பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம்.   இன்று கூட சீன அதிபரை சர்வாதிகாரி என ஜேர்மன் பத்திரிகைகள் முழங்க..... ஜேர்மனிய ஆட்சியாளரும் அவர் அமைச்சரவையும் சீனாவில் குடிகொண்டு வர்த்தக் ஒப்பந்தகள் செய்துகொண்டிருக்கின்றனர்.🤣 யாருக்கு? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.