Jump to content

எவராலும் மறக்க முடியாத கொக்கட்டிச்சோலைப் படுகொலை!


Recommended Posts

எவராலும் மறக்க முடியாத கொக்கட்டிச்சோலைப் படுகொலை! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

kokkaddisolai.jpg

 
ஈழத் தமிழர்களின் வாழ்வில் வரலாற்றில் மறக்க முடியாத படுகொலை நிகழ்வுகளில் கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் ஒன்று. கிழக்கு ஈழத்தை மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழத்தையும் உலுக்கிய அப் படுகொலை குறித்து உலகமே அதிர்ந்தது. ஈழத் தமிழ் இனத்தை இன அழிப்புச் செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட அந்தப் படுகொலை நிகழ்ந்து 29 வருடங்கள் ஆகிவிட்டன.
 
கொக்கட்டி மரங்கள் நிறைந்த கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பிரதேசம். ஈழத்தில் சுயம்புலிங்கம் கோயிலாக அமைந்துள்ள தான்தோன்றீச்சரத்தைக் கொண்ட இந்தப் பிரதேசம் அழகிய விவசாய கிராமங்களாகும்.
 
கொக்கட்டிப் பிரதேசமே குருதியில் நனைந்த கொக்கட்டிச்சோலைப் படுகொலையை மட்டக்களப்பு இறால்பண்ணை படுகொலை என்றும் நினைவுகூறப்படுகிறது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் திட்டமிட்ட அன அழிப்பு நடவடிக்கைளில் கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் ஒரு குரூரமாகும்.
 
1987ஆம் ஆண்டில் தை 28,29 மற்றும் 30 ஆகிய நாட்களில் இலங்கை அரசின் விசேட அதிரடிப்படைகள் நடத்திய கோர இனப்படுகொலை அதுவாகும். கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் உள்ள கிராமங்கே இரத்ததினால் உறைந்த அந்தப் படுகொலையில் 150க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 12பேருக்கு என்ன நடந்தது என்று தெரியாமலே காணாமல் போயினர். கொக்கட்டிச்சோலைக் கிராமங்களை இலங்கை அரசின் விசேட படைகள் சுற்றி வளைக்க வான் வழியாகவும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
 
மண்முனைத்துறைக்கும் மகிழடித் தீவுக்கும் இடையில் உள்ள இறால் பண்ணையில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்ளைதான் முதலில் படுகொலை செய்தனர் அதிரடிப்படையினர். அன்று இறால் பண்ணையே இரத்தப் பண்ணையாக மாறியது என்று எழுதுகிறார் மணலாறு விஜயன். அந்த மக்களை கைது செய்து தமது துப்பாக்கிளால் சுட்டு வெறிதீர்த்த பின் ரயரிட்டு எரித்து தமது இனவெறியை தீர்த்துக் கொண்டனர் அதிரடிப்படையினர்.
 
இறால் பண்ணையில் தொடங்கிய இரத்தவேடடை தலைக்குடா, மகிழடித்தீவு, முனைக்காடு, மகிழடித்தீவு, தாண்டியடி, கொக்கட்டிச்சோலை, அம்பிளாந்துறை என்று தொடர்ந்தது. பிரதேசத்தின் கிராமங்களை சுற்றி வளைத்த அதிரடிப்படையினர் எதரில் வந்தவர்கள் எல்லோரையும் வெட்டி வீசினர். கிராமம் அல்லோலகல்லோலமானது. படகுகளில் தப்பிச் சென்ற அப்பாவி மக்களை வான்வழியாக துரத்தித் துரத்தி சுட்டுக்கொன்றழித்தனர்.
 
வீட்டுக்கு வீடு மரணம். கொன்றழிக்கப்பட்டவர்கள் எல்லாம் உறவினர். ஒரு வீட்டில் பலர் கொலை. குடும்பம் குடும்பாக கொன்றொழிக்கப்பட்ட கொக்கட்டிச்சோலைப் படுகொலை எளிதில் மறக்கவோ எளிதில் ஆறவோ முடியாத பெரும் காயமாக நிகழ்ந்தது. ஒரு சிலரை தவிர அத்தனை பேரையும் அழித்தனர் இலங்கை அதிரடிப்படையினர்.
 
பலரை சிறைப்பிடித்த அதிரடிப்படையினர் அவர்களை மிகவும் மோசமாக சித்திரவதை செய்து துடிதுடிக்க கொன்று போட்ட கொடூரச் செயல்களை உயிர் தப்பிய சிலரது வாக்குமூலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் படுகொலை செய்யப்பட்டவர்களது சடலங்கள் அனைத்தையும் தடயம் தெரியாமல் அதிரடிப்படையினர் அழித்தனர்.
 
கொக்கட்டிச்சோலைப்படுகொலை நடந்தேறி இன்றைக்கு 29 வருடங்கள் கழிந்துவிட்டன என்று கூறுவதைவிடவும் அந்தக் கொடூரப் படுகொலைக்காய் நீதிக்கு காத்திருந்து 29 வருடங்கள் என்று கூறலாம். ஈழத்தில் தமிழ் இனத்திற்கு எதிராக நடந்த இன அழிப்புப் படுகொலைகள் பலவும் விசாரணை நடக்கிறது என்றும் விசாரணை இல்லை என்றும் இழுத்தபடிப்பதைப் போல இலங்கை அரசுகள் கொக்கட்டிச்சோலைப் படுகொலையையும் கடந்து 29 வருடங்கள்.
 
கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள் சர்வதேள அளவில் இலங்கை அரசின் இன அழிப்பு முகத்தை அம்பலம் செய்தது. யோசப் பரராச சிங்கம் இந்தப் படுகொலைக்கு உதிராக சர்வதேச அளவில் குரல் எழுப்பி கவனப்படுத்தினார். அவரது கடுமையான முயற்சியினால் இப்படுகொலை குறித்து சர்வதேச அரங்கில் அதிகம் பேசப்பட்டது. அதனாலேயே ஜே.ஆர். அரசு ஒரு கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியது.
 
படையினர் பொறுப்பின்றி நடந்து அப்பாவிகளை பலியாக காரணமாக இருந்துள்ளனர் என்றும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னபோதும் அந்த அறிக்கையுடன் கொக்கட்டிச்சோலைப் படுகொலை விவகாரத்தை அன்றைய இலங்கை அரசு மறைக்க முனைந்தது. படைகளைகளுக்கு தண்டனையை ஆணைக்குழு அறிக்கையில் பரிந்துரை செய்ய ஜே.ஆர். அரசு அவர்களுக்கு பதவி உயர்வை வழங்கி வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்து இனழிப்பு படுகொலைகளை ஊக்குவித்தது.
 
கொக்கட்டிச்சோலைப் படுகொலையை மட்டக்களப்பில் மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழமும் சர்வதேச அளவிலும் நினைவுகூரல் நிகழ்வுகள் ஆண்டுதோறும் இடம்பெற்று வருகின்றன. இன்றைய தினம் மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை மண்டபத்தில் நினைவு நிகழ்வு இடம்பெறுகின்றது. அத்துடன் பிரதேசத்தில் உள்ள ஆலயங்களில் உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனையும் இடம்பெறுகிறது.
 
மட்டக்களப்பு மண்ணிலிருந்து ஈழத் தமிழ் மக்களை துடைத்தெறிந்து அந்த மண்ணை அபகரிப்பதற்காகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. ஒரு அரசியல் நோக்கம் கருதிய இராணுவ நடவடிக்கையே கொக்கட்டிச்சோலைப் படுகொலை. மிகவும் நன்கு திட்டமிட்ட இன அழிப்பாக அன்றைய அரசால் தனது படை எந்திரத்தின் மூலம் நடாத்தப்பட்ட கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள் ஈழத் தமிழ் மக்களின் நெஞ்சில் ஆறாத காயமாக நிலைத்துவிட்டது.
 
மூலத் தகவல்கள்: விக்கிபீடியா, இணையங்கள்

http://globaltamilnews.net/archives/15469

Link to comment
Share on other sites


30ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு
 
28-01-2017 03:28 PM
Comments - 0       Views - 14

article_1485597704-bbbbb.jpg

-வடிவேல் சக்திவேல், துசா,பேரின்பராஜா சபேஷ்

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு, இன்று பிற்பகல் 2 மணியளவில் மகிழடித்தீவு சந்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள படுகொலை நினைவுத் தூபி அருகில் நடைபெற்றது.

1987ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் திகதி கொக்கட்டிச்சோலை இறால் பண்ணையில் பணியாற்றிய 100க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

article_1485597725-ccccccccccc.jpg

 

- See more at: http://www.tamilmirror.lk/190583/-ஆவத-ஆண-ட-ந-ன-வ-ந-கழ-வ-#sthash.23MgV1Ew.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுக தமிழ்  நடாத்த இருக்கும் குழு வந்த போது தடுக்கப்பட்டதாகவும் செய்தி சொல்லுகின்றன பிரிவினை மட்டுமே எஞ்சி நிற்கிறது 

மரணித்த மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் மறக்க முடியா கொலைக்களம் இந்த கொக்கட்டி சோலை படுகொலை நிகழ்வு

Link to comment
Share on other sites

காத்தான்குடி படுகொலையை நாங்கள் வசதியாக மறந்து விட்டு வருடாவருடம் கொக்கட்டிச்சோலை படுகொலையை மட்டும் கொண்டாடுவமா?

இது மோகனுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வசதியாக 87யும் மறந்துவிட்டு 2009யும் மறந்துவிட்டு இடைநடுவில் மட்டும் கொண்டாடுவமா?

இது எல்லாருக்கும்

ஆட்டுக்குள் மாட்டை விடுவதில் தமிழனுக்கு நிகர் யாருமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, முனிவர் ஜீ said:

எழுக தமிழ்  நடாத்த இருக்கும் குழு வந்த போது தடுக்கப்பட்டதாகவும் செய்தி சொல்லுகின்றன பிரிவினை மட்டுமே எஞ்சி நிற்கிறது 

மரணித்த மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் மறக்க முடியா கொலைக்களம் இந்த கொக்கட்டி சோலை படுகொலை நிகழ்வு

முகநூலில் இது தொடர்பான ஒளிப்பதிவை பார்த்தேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

நாங்கள் வசதியாக 87யும் மறந்துவிட்டு 2009யும் மறந்துவிட்டு இடைநடுவில் மட்டும் கொண்டாடுவமா?

இது எல்லாருக்கும்

ஆட்டுக்குள் மாட்டை விடுவதில் தமிழனுக்கு நிகர் யாருமில்லை.

சிலருக்கு அடுத்தவன் மனைவி மாதமாக இருந்தால்தான் ...........
தங்களின் சொந்த மனைவியுடன் படுக்கும் எண்ணம் தோன்றும் என்று எண்ணுகிறேன் !!

அத்துக்ககா டென்ஷன் ஆக கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஜீவன் சிவா said:

காத்தான்குடி படுகொலையை நாங்கள் வசதியாக மறந்து விட்டு வருடாவருடம் கொக்கட்டிச்சோலை படுகொலையை மட்டும் கொண்டாடுவமா?

இது மோகனுக்கு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் எமது இனமே கொடூரத்தின் பிடியில் இருந்தபோது ....
எங்களுக்கும் சேர்த்து அடியுங்கள் என்று ஏதாவதொரு நாய் என்றாலும் .. எங்கிருந்தாவது 
வந்ததா ?

செத்தவர்களுக்கு அழும்போது மட்டும் நாங்கள் 
சோழ காலத்தில் இருந்து தொடங்கவேணும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Maruthankerny said:

சிலருக்கு அடுத்தவன் மனைவி மாதமாக இருந்தால்தான் ...........
தங்களின் சொந்த மனைவியுடன் படுக்கும் எண்ணம் தோன்றும் என்று எண்ணுகிறேன் !!

அத்துக்ககா டென்ஷன் ஆக கூடாது.

ஆஹா..... நல்ல, பொருத்தமான  உதாரணம். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, MEERA said:

முகநூலில் இது தொடர்பான ஒளிப்பதிவை பார்த்தேன்

நானும் பார்த்தன்  என்னவோ தெரியலை  ஏதோ செய்யுறாங்க  பார்ப்போம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன்சிவா,முதலில் முஸ்லீம்களால் கிழக்கில் கொல்லப்பட்ட,சொந்த இடங்களை விட்டு துரத்தப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுத் தாருங்கள் பின்னர் காத்தான்குடி படுகொலைக்கு நீதி கேட்கலாம்...எந்த மனிதனும் முதலில் தனக்கான நீதியைப் பெற்றுக் கொண்ட பின்னே அடுத்தவன் நீதிக்காகப் போராடுவான்.

Link to comment
Share on other sites

On 1/30/2017 at 9:11 AM, Maruthankerny said:

சிலருக்கு அடுத்தவன் மனைவி மாதமாக இருந்தால்தான் ...........
தங்களின் சொந்த மனைவியுடன் படுக்கும் எண்ணம் தோன்றும் என்று எண்ணுகிறேன் !!

அத்துக்ககா டென்ஷன் ஆக கூடாது.

அட பாவி பக்கத்து வீட்டுக்காரனை பாத்தா பிள்ளை பெத்தீங்கள் - சொல்லவே இல்லை.:grin::grin::grin:

On 1/31/2017 at 1:16 AM, ரதி said:

ஜீவன்சிவா,முதலில் முஸ்லீம்களால் கிழக்கில் கொல்லப்பட்ட,சொந்த இடங்களை விட்டு துரத்தப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுத் தாருங்கள் பின்னர் காத்தான்குடி படுகொலைக்கு நீதி கேட்கலாம்...எந்த மனிதனும் முதலில் தனக்கான நீதியைப் பெற்றுக் கொண்ட பின்னே அடுத்தவன் நீதிக்காகப் போராடுவான்.

இன்று நடுத்தெருவில் கொட்டில்களில் வாழும் எனது மக்களுக்கு ஒரு வீடு வாங்கி தாருங்கள் அதுக்கு அப்புறம் இதை பற்றி பேசுவமா?

9 minutes ago, ஜீவன் சிவா said:

எந்த மனிதனும் முதலில் தனக்கான நீதியைப் பெற்றுக் கொண்ட பின்னே அடுத்தவன் நீதிக்காகப் போராடுவான்.

இதைத்தான் முஸ்லீம்களும் கேட்க்கிறார்கள் ரதி அக்கா 

Link to comment
Share on other sites

நீதி அமைச்சரே முஸ்லிம் தானே. ஆகவே அவர்களுக்கு நீதி கிடைக்கும் என நம்பலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி இப்ப இலங்கையிலை இருக்கிற முஸ்லீம்களுக்கு என்ன பிரச்சனை எண்டு ஆரெண்டாலும் நாலுவரியிலை இரத்தினச்சுருக்கமாய் சொல்லுவியளே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

 

இன்று நடுத்தெருவில் கொட்டில்களில் வாழும் எனது மக்களுக்கு ஒரு வீடு வாங்கி தாருங்கள் அதுக்கு அப்புறம் இதை பற்றி பேசுவமா?

 

ஜீவன்,நான் ஏன் வீரோ,குடிசையோ வாங்கிக் கொடுக்க வேண்டும்?...அந்த அப்பாவி தமிழ் மக்களது நிலத்தை,வீடுகளை அபகரித்தவர்கள் தான் அவற்றை திரும்பிக் கொடுக்க வேண்டும்.

2 hours ago, ஜீவன் சிவா said:

 

இதைத்தான் முஸ்லீம்களும் கேட்க்கிறார்கள் ரதி அக்கா 

அவர்கள் தாராளமாகப் போராடட்டும் யார் வேண்டாம் என்டது? ஆனால் தமிழருக்கு ஆப்பு வைக்கும் வேலையிலையோ அல்லது அவர்கள் போராடிப் பெற்ற பின் பங்கோ கேட்க வர வேண்டாம்.

நீங்கள் தான் இத் திரியில் வந்து காதான்குடி படுகொலைக்கு நினைவு நாள் கொண்டாடுங்கோ என சொன்னீர்கள்.இதே  அவர்களிடம் போய் அவர்கள்,தமிழர்கள் மீது செய்த படுகொலைக்காக மன்னிப்பு கேட்கவோ அல்லது அஞ்சலி செய்யவோ சொல்லுங்கள் பார்ப்பம்.

அனறு மட்டும் காத்தான்குடி படுகொலை நடந்திருக்கா விட்டால் சுத்தி இருக்கும் கிராமத்தை சேர்ந்த எத்தனை தமிழ்ச் சனம் செத்திருக்கும்?...அதைப் பற்றி எல்லாம் தெரியாமல் கதைக்க உங்களால் மட்டுமே முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி எங்களுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகள் தெரியாது, நாங்கள் அப்பவே ஐரோப்பா வந்தாச்சு.

எங்கள் சே(தே)வை புலி எதிர்ப்பே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.