Sign in to follow this  
Surveyor

என்னா வில்லத்தனம்...*??

Recommended Posts

மனைவி கணவனுக்கு எழுதி
வைத்துவிட்டு போன சிறு குறிப்பு:

*நான் எங்க அம்மா வீட்டுக்கு
குழந்தைகளோட போறேன்.*

திரும்பி வர
10 நாளாகும்.
-------------------
நண்பர்களை அழைத்து
கொட்டமடிக்க வேண்டாம்.
போனமுறை
சோஃபா பின்னாலிருந்து
நாலு பாட்டிலும் சிகரெட்
பாக்கெட்டும் எடுத்தேன்.
--------------------------
பாத்ரூம் சோப் கேசில
மொபைல மறந்து வச்சிராதீங்க.
போன முறை தேடி
அலைஞ்சப்ப
அங்க கண்டு எடுத்தேன்..
-------------
மூக்குக்கண்ணாடி
அதன் பாக்சில் வைக்கவும்.
போன முறை
ஃப்ரீட்ஜில் இருந்தது.
-----------------
வேலைக்காரிக்கு
சம்பளம் தந்தாச்சு.
உங்க தாராள
மனச காட்ட வேண்டாம்.
-----------------
காலைல
பக்கத்து வீட்டுக்கு
பேப்பர் போட்டாச்சான்னு daily
அவங்ககிட்ட வழிய வேண்டாம்.

நம்ம பேப்பர்காரன் வேற.
-------------------------
சமையல் கட்டு
பக்கம்
போக
வேணாம்

ஸிங்க்கு
காவி கலருக்கு
மாத்தினீங்கன்னா
சும்மா இருக்க
மாட்டேன்
---------------
சாமி படத்துக்கு
விளக்கேத்துங்க

ரெண்டு ஸ்லோகம்
சொன்னா நாக்கு
வெந்துடாது
------------------------
வாக்கிங் போறப்போ
டீ ஷர்ட்
போட்டுக்கோங்க
ஜிப்பா வேணாம்

ஜிப்பா கலர்ல
Free size சுடிதார்
டாப்ஸ் இருக்கு
அனிதா அன்னிக்கு
சிரிச்சா
---------------------
Food coupon
க்ரெடிட் கார்டு
எங்கிட்ட இருக்கு...

பீரோவ
உருட்ட வேணாம்
-------------------
ரெண்டு Securityக்கும்
நூறு நூறு ரூபா
கொடுத்திருக்கேன்

நீங்க லேட்டா வந்தா Gate தெறக்க
*வேண்டாம்னுட்டு*
--------------------
பால் ஒரு வாரத்துக்கு
வேண்டாம்னுட்டேன்

அங்க ஸீன் க்ரியேட்
பண்ணாம
வெளில போய்
சாப்பிடுங்க
----------------------
உங்க உள்ளாடைகள்
பீரோவில் வலது புறமும்
குழந்தைகளோடது
இடது புறமும் இருக்கு.

மாத்தி போட்டுட்டு
Uncomfortable லா
இருந்ததுனு ஆஃபீசுல இருந்து
புலம்பாதீங்க.
-----------------
அன்னன்னிக்கு
அவுத்து போடறத
தண்ணில நனச்சு
காயப்போடுங்க.

வளத்தவங்கள
சொல்லனும்
-----------------------
தூங்கி எழுந்த
உடனே பால்கனில
நின்னுகிட்டு
பல் தேய்காதீங்க..
A.M. மா... P.M. மா...
Confirm பண்ணிட்டு
பால்கனிக்கு வாங்க
-----------------------
உங்க
medical report
பர்ஃபெக்ட்டா இருக்கு.

அந்த
லேடி டாக்டரை
பாக்கவேண்டிய
அவசியமில்லை.
-----------------
என் தங்கையின்
பிறந்தநாள்
போன மாசமே
நாம அட்டண்ட்
பண்ணியாச்சு.
முடிஞ்சிடிச்சி.

நடு ராத்திரில
விஷ் பண்றேன்
பேர்வழின்னு
வழிய வேணாம்
---------------
பத்து நாள்
wi-fi cut. password மாத்திட்டேன். நிம்மதியா தூங்குங்க.
------------------
அப்றம்
என் தோழிகள்
எல்லாமே
Out of station. .
------------------
கட்டக் கடேசியா
ஒண்ணு.

ரொம்ப புத்திசாலித்தனமா
நடந்துக்கறதா நினச்சி
ஏதும் பண்ண வேண்டாம்.
நான் எப்ப வேணாலும்
திரும்பி வந்துருவேன்.
சொல்லாம. !!!
-----------------------
*இவள பொண்டாட்டியா கட்டுனதுக்கு ரெண்டு போண்டா டீ சாப்பிட்டு தூங்கியிருக்கலாம்*

*என்னா வில்லத்தனம்...*1f602.png?1f602.png?

Thanks: FB

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

அட மோசமான ஒரு புருசனுக்கு எவ்வளவு அக்கறையான பொண்டாட்டியா இருக்கிறாள். :10_wink:

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, கலைஞன் said:

அட மோசமான ஒரு புருசனுக்கு எவ்வளவு அக்கறையான பொண்டாட்டியா இருக்கிறாள். :10_wink:

நீங்கள் இதுக்காக ஒண்டும் கணக்க யோசிக்க வேண்டாம் குருஜி....! இம்மாதிரி பெண்டாட்டிகளை புத்தகங்களில்தான் பார்க்க முடியும். புக்ககங்களில் அவங்கள் ரெம்பவும் ஷார்ப். தாலி கட்டிய முதல் இரு மாதங்கள் கடவுள் கொடுத்த வரம். மூன்றாவது மாதம் பாடம் எடுக்க தொடங்கினாங்கள் என்றால் அடுத்து வரும் மூன்று மாதங்களுக்குள் இதென்ன இதைவிட கூடுன விடயங்களை உங்கள் மெமரிக்குள் புகுத்தி விடுவார்கள். ஹார்ட் டிஸ்க்கை ஹார்ட் பீட் நிற்கும்வரை கலட்டிப் போட முடியாது....!  :unsure:  tw_blush:

Share this post


Link to post
Share on other sites

மனைவி

Husband: " கூட்டுல உப்பு அதிகமா இருக்கு..."
Wife: "உப்பு சரியாதான் இருக்கு... காய் கொறஞ்சு போச்சு, காய் நெறய வாங்க சொன்னா எங்க கேக்றீங்க....."
Point: Wife is always right!
1f61c.png?1f61c.png?1f61c.png?1f61c.png?1f61c.png?1f61c.png?
Husband: "கோழி பிரியாணில கோழிய தேடிதான் பார்க்க வேண்டியிருக்கு," 1f627.png? 
Wife: "இருக்றத சாப்பிடுங்க!!
இனி மைசூர்பாக் ல மைசூரை தேடுவீங்களாக்கும்....???" 1f633.png?
Point: சொன்னேன்ல, wife is always right!!
1f61c.png?1f61c.png?1f61c.png?1f61c.png?1f61c.png?1f61c.png?1f61c.png?1f61c.png?
Husband: "3நாளா தொடர்ந்து பீன்ஸ் பொரியல் பண்ணுறீயே, இனி ஒரு மாசம் நான் பீன்ஸ் சாப்பிட மாட்டேன்!!!!"
Wife: "இதையே, தினம் பீர் குடிக்கும்போதும் நினைக்கலாமே..????"
Husband: "நாளைக்கும் பீன்ஸ் பொரியல் பண்ணும்மா" 1f601.png?
Point: Accept it, wife is always right!
1f61c.png?1f61c.png?1f61c.png?1f61c.png?1f61c.png?1f61c.png?1f61c.png?1f61c.png?1f61c.png?

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • இந்த வருடத்துடன் யாழ்ப்பாணம் அரசு, போர்த்துகேயரிடம் மண்டியிட்ட ஆண்டு 1520. போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தது 1505ம் ஆண்டு. அப்போது இலங்கையில் கோட்டை, சீதாவாக்கை, கண்டி, யாழ்ப்பாணம் ( நல்லூர்) ஆகிய  நான்கு ராஜிஜங்கள் இருந்தன. யாழ்ப்பாணம், கண்டி  தவிர்ந்த ஏனைய இரண்டையும் ஆண்ட வியாஜபாகு மன்னரை கொன்று மூன்றாக பிரித்து பதவிக்கு வர முனைந்த அவனது மூன்று மகன்மாரால் பெரும் கொதி நிலை நிலவியது. அதனை லாவமாக பயன்படுத்திக் கொண்டனர் போர்த்துக்கேயர்கள். தென்னிந்திய அரசர்களின் பாதுகாப்பில் தைரியமாக இருந்தது  பக்கத்தில் இருந்த யாழ்ப்பாணம் ராஜ்யம். அங்கிருந்து வந்த பொருள், ஆள், ஆயுத பலத்தினால் தென் இலங்கை குறித்து அசராமல் இருந்தது.  இடையே வடக்கே மக்கள் வாழாத அல்லது குறைவான மக்களைக் கொண்ட தீவுக்கூடங்களை பிடித்துக் கொண்டனர் போர்த்துக்கேயர். இதனூடாக, தென் இந்திய உதவி தடுக்கப்பட்டு, யாழ்ப்பாணம் ராஜ்யம் மடக்கப்பட, போர்த்துகேயர்களுக்கு இசைந்து போகவேண்டி வர, தமது பொம்மை அரசரை 1520 அளவில் பதவி ஏற வைத்தனர். அந்த அரசரின் பேரன் சங்கிலியன் அரசனாகி  முரண்டு பிடித்த போது, போரிட்டு அவனைக் கொன்று நேரடி ஆளுமைக்கு கொண்டு வந்தனர். சிதைந்த போர்த்துக்கேயர் கோட்டை, நெடுந்தீவு இதேபோலவே கோடடையின் அரசனான (கொல்லப்பட்ட விஜயபாகுவின் ஒரு மகன்) புவனேகபாகுவை மன்னர், அந்தப்புரத்தில் உப்பரிகையில் இருந்து விழுந்து இறந்து விட்டார் என்று அறிவித்து, (மேலிருந்து ஒரு போர்த்துகேயனால் தள்ளி விழுத்தி கொலை செய்யப்பட்ட) பின்னர் அவனது பேரனை, கிறிஸ்தவனாகி பதவியில் அமரத்தினார்கள் பொம்மையாக. இந்த 2020ம் ஆண்டு, இந்த யாழ்ப்பாணம் ராஜ்யம் தனது சுதந்திரத்தினை பறிகொடுத்த 500 வது வருட நிறைவு.
  • நான் எழுதியதை நன்றாக கூர்ந்து வாசித்து கிரகித்து கொள்ளுங்கள்.இருப்பவர்கள் உருட்டினால் என நான் எழுதவில்லை. மீண்டுமொரு முறை எழுதுகின்றேன். தாயக்கட்டையை உருட்டுபவர்கள் உருட்டினால்!!!!!!!!!   
  • தாயக்கட்டையும் பிழை (Loaded dice ) அதை உருட்டும் இடத்தில் இருப்பவர்களும் திருடர்கள் என்றால் அதில் பங்குபற்றுவதில் அர்த்தமில்லை. 😜
  • இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா வராமல் தடுக்கமுடியும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது. பதிவு: ஏப்ரல் 09,  2020 04:45 AM சென்னை,    சீனாவில் உருவெடுத்த ஆட்கொல்லியான கொரோனாவுக்கு உலகம் முழுவதும் 14 லட்சத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மலேரியா காய்ச்சல் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை, கொரோனா பாதிப்பு சிகிச்சைக்கு வழங்கினால் நல்ல பலனை கொடுக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். கொரோனா வைரஸ் பீதி காரணமாக ஹைட்ராக்சிகுளோரோகுயின் உள்பட சில மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்திருந்த   இந்தநிலையில் ஏற்கனவே ஆர்டர் கொடுத்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை இந்தியா அனுப்ப வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம், டிரம்ப் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. கொரோனா வைரசுக்கு முடிவு கட்டும் மருந்தாக ஹைட்ராக்சிகுளோரோகுயின் கருதப்படுவதால், தற்போது அதற்கு கடுமையான கிராக்கி ஏற்பட்டுள்ளது.   உலக அளவில் வினியோகம் செய்யப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தில், சுமார் 70 சதவீதம் இந்தியாதான் உற்பத்தி செய்கிறது. இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 40 டன் அளவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து தயாரிப்பதற்கான மூலக்கூறு உற்பத்தி செய்யப்படுகிறது. இது 200 மில்லி கிராம் அளவிலான 20 கோடி மாத்திரைகளை தயாரிக்க உதவுகிறது. குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக கூறப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின், மலேரியா, முடக்குவாதம், லூபஸ் உள்ளிட்ட சில நோய்களுக்கான எதிர்ப்பு வைரசாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.   கொரோனா தாக்குதலுக்குள்ளான அதிக ஆபத்து உள்ளவர்கள் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தினை தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார பணியாளர்கள், கொரோனா வைரஸ் சந்தேகத்துக்கு இடமான அல்லது உறுதிப்படுத்தப்பட்டவர்களின் பராமரிப்பில் ஈடுபடுபவர்கள், ஆய்வகங்கள் உறுதிப்படுத்தியவர்களுடன் வீட்டு தொடர்பில் உள்ளவர்கள் பயன்படுத்த பரிந்துரைத்துள்ளது.   இந்தியாவை பொறுத்தமட்டில் இப்கா ஆய்வகங்கள், சைடஸ் கேடிலா மற்றும் வால்லஸ் பார்மெட்டிக்கல்ஸ் ஆகிய 3 மருந்து கம்பெனிகள் தான் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தினை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன. கொரோனாவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தினை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ள நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இப்கா ஆய்வகங்கள் மற்றும் சைடஸ் கேடிலா ஆகிய மருந்து கம்பெனிகளிடம் 10 கோடி ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளுக்கு ஆர்டர் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.   ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து தயாரிப்பில் இப்கா ஆய்வகங்கள் நிறுவனம் சர்வதேச அளவில் முதல் இடத்தில் உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை முறைப்படி 14 மாத்திரைகளை சாப்பிட வேண்டும். அந்தவகையில் சுகாதாரத்துறை அமைச்சகம் ஆர்டர் செய்துள்ள மாத்திரைகளை வைத்து பார்த்தால் சுமார் 71 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.     https://www.dailythanthi.com/News/TopNews/2020/04/09025108/If-you-eat-hydroxychloroquine-tablet-Corona-can-be.vpf  
  • சரி உங்கடை ஆசையை ஏன் கெடுப்பான்...... எல்லா உயிரினங்களுக்கும் சுயநலம் இருக்கின்றது.  சுயநலம் இல்லாத உயிரினங்களே இந்த உலகில் இல்லை. இப்ப என்ன மாதிரி தலை குளிருதோ? 😎