• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

Recommended Posts


  • Topics

  • Posts

    • யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா அச்சம்! 3 குடும்பங்கள் தனிமைப்படுத்தல் யாழ்ப்பாணத்தில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துக்கு சென்று வந்த மூவரின் குடும்பங்களே இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இரண்டு குடும்பங்களும் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரு குடும்பமும் இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இன்றுவரை 252 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உப்புக்குளம் பகுதியை சேர்ந்த மூன்று குடும்பங்களும் இன்றைய தினம் முதல் எதிர் வரும் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/146677?ref=home-imp-parsely
    • இன்றும் தமிழ்நாட்டுடன் இணைந்திருக்கும் மதுரையோடு சிங்கள மக்களுக்கும் தொப்புள் கொடி உறவு உண்டு. சுருக்கமாக கூறினால் ஒருவர் தமிழரோ அல்லது சிங்களவரோ எல்லோருக்கும் தமிழ் பெண்ணே தாயாக இருந்திருக்கின்றாள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார். நாம் மகாவம்சத்தை நம்பினால் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இந்த உண்மை வரலாற்றை பௌத்த குருமார் உட்பட எவராவது மறுப்பார்களா? என கேள்வியும் எழுப்பியுள்ளார். தற்போது ஆலயங்கள் பௌத்த விகாரை என பௌத்த தோர்கள் தெரிவித்து வருவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி கண்டனம் தெரிவித்து இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக இலங்கையின் எந்த பகுதி யாருக்கு சொந்தம்? யார் பூர்வீக குடிகள்? என்று சரித்திரம் தெரியாதவர்கள் மாறி மாறி அறிக்கைவிடுகின்றார்கள். ஆனால் 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் திகதியிடப்பட்ட மேன்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ (அப்போதைய ஜனாதிபதி) அவர்களுக்கு என்னால் அனுப்பி வைக்கப்பட்ட “நிரந்தர தீர்வு கோரும் ஒரு தேசாபிமானியின் துணிச்சல் மிக்க கோரிக்கை” என்ற தலைப்பைக் கொண்ட கடிதத்தின் ஒரு பகுதியினை கீழே குறிப்பிடுகின்றேன். சிங்கள மக்களின் பூர்வீக தொடர்பு ஜனாதிபதியே நாம் காலவரையறை இன்றி இவ்வாறு செல்லமுடியாது. மேலும் தாமதியாது இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும். இலங்கையில் வாழும் பல்வேறு சமூகத்தினரும் தம் மத்தியிலுள்ள சந்தேகங்களை களைந்து ஒன்று பட்டு ஒரே தளத்தில் நிரந்தரமான ஒரு தீர்வுக்கு ஒத்துக் கொள்ள வேண்டும். இலங்கையில் வாழும் இரு பெரும்பான்மை சமூகத்தினர் நீண்ட காலமாக ஒருவர் மீது ஒருவர் கொண்ட அவநம்பிக்கை வளர்ந்தமைக்கு முக்கிய காரணம் எமது நாட்டின் வரலாற்றில் நடந்தேறிய சில முக்கிய சம்பவங்கள் பற்றி அறிந்திருக்காமையே. தன்னுடைய விளைவு ஒரு குழுவினர் மற்றய குழுவினரை சந்தேக கண்கொண்டு பார்ப்பதே நீண்டகாலமாக நடந்து வருகின்றது. இந்த நாட்டில் சனத்தொகையில் எத்தனை வீதத்தினர் தமிழ், சிங்கள மக்களின் பூர்விக உறவு பற்றி தெரிந்து வைத்திருக்கின்றனர்? எம்மில் அனேகருக்கு தெரிந்தவகையில் விஜயன் என்ற இளவரசன் பாண்டிய நாட்டு இளவரசியை மணமுடித்ததும், அதே போன்று அவனது தோழர்கள் 700 பேருக்கு அவரவர் தகுதிக்கு பொருத்தமான பெண்களை பாண்டிய நாட்டு மன்னன் திருமணம் முடித்து அனுப்பிவைத்ததும் மட்டுமே. ஆனால் சிங்கள மக்களின் பூர்வீக வரலாற்றை எடுத்துக் கூறம் 'மகாவம்சம்' என்ற புத்தகத்தில் 7ம் அத்தியாயத்தின் ஒரு பகுதியை கீழே தருகின்றேன். 'பாண்டிய மன்னன் தனது மகளாகிய அரசகுமாரியையும், அவளுக்கு உரித்தான ஆபரணங்கள், அவர்களுக்கு தேவையான பல்வேறுபட்ட பொருட்கள், விஜயனின் தோழர்களின் தகுதிக்கேற்ப தெரிவு செய்யப்பட்டு அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நட்ட ஈட்டை கொடுத்து அழைக்கப்பட்ட பெண்கள், யானைகள், வாகனங்கள், அரசருக்குரிய தரமான பொருட்கள், பல்வேறு கைவினை கலைஞர்கள், 18 வகையான தொழில் புரியும் ,னக் குழுக்களைச் சேர்ந்த 1000 குடும்பத்துடன் ஒரு கடிதத்தையும் மன்னருக்கு அனுப்பியிருந்தார். இலங்கைத் தமிழர்கள் தமிழ் நாட்டை சேர்ந்தவர்களோடு தமக்குள்ள தொப்புள்கொடி உறவுபற்றி பிரமாதமாக பேசுவதனைப் போன்று, இன்றும் தமிழ்நாட்டுடன் இணைந்திருக்கும் மதுரையோடு சிங்கள மக்களுக்கும் தொப்புள் கொடி உறவு உண்டு. சுருக்கமாக கூறினால் ஒருவர் தமிழரோ அல்லது சிங்களவரோ எல்லோருக்கும் தமிழ் பெண்ணே தாயாக இருந்திருக்கின்றாள். நாம் மகாவம்சத்தை நம்பினால் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது https://www.ibctamil.com/srilanka/80/146662
    • இலங்கை ஒற்றையாட்சி அரசின் கீழான இலங்கைத் தேசியம் என்பதற்குள், ஈழத்தமிழர்களையும் இணைத்துவிட வேண்டுமென்ற நோக்கம் 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில், சிங்கள அரசியல் கட்சிகளிடையே மேலோங்கி வருகின்றது. இதன் உச்சத்தை 2015ஆம் ஆண்டு மைத்தரி- ரணில் அரசாங்கத்தில் காணமுடிந்தது. இலங்கைத் தேசியத்தை மையமாகக் கொண்டு தமிழ்த்தேசிய அரசியல் நீக்கத்துக்கான முதற்கட்ட ஏற்பாடாகவே ஜெனீவா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரனை வழங்கியிருந்தது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அதற்கு ஒத்துழைப்பும் கொடுத்திருந்தது. 2015ஆம் ஆண்டுக்கு முன்னரான மகிந்த ராஜபக்சவின் ஆட்சியிலும் அதற்கு முந்திய சந்திரிகா மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலும் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் காணி அபகரிப்புகள், சிங்களக் குடியேற்றங்கள் போன்றவற்றுக்கு இலங்கை இராணுவமே காரணமாக இருந்தது.   -கொழும்பு ஆலோசனை கொழும்பின் ஆலோசனையோடு இலங்கை இராணுவமே இவற்றைச் செய்துமிருந்தது. ஆனால் மைத்திரி- ரணில் அரசாங்கமே இந்த விகாரங்களை கொழும்பை மையப்படுத்திய இலங்கை அரச திணைக்களங்கள் மூலமாகப் பிரயோகிக்கும் முறைமையை அறிமுகப்படுத்தியிருந்தது. குறிப்பாகக் காணி அபகரிப்பு என்றால். கொழும்பை மையமாகக் கொண்ட காணிப் பதிவு ஆணையாளர் அலுவலகம், சிங்களக் குடியேற்றம் மற்றும் மண் அகழ்வென்றால் வீடமைப்பு அதிகார சபை, அல்லது நகர அபிவிருத்தி அதிகார சபை, புத்தர் சிலை வைத்தல், தாதுகோபுரம் கட்டுதல் என்றால் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களம் ஆகிய அரச திணைக்களங்கள் மூலம் பொலிஸாரின் உதவிகளைப் பெற்று தாயகப் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன. 2019ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரான நிலையிலும்கூட இவ்வாறு அரச திணைக்களங்களைப் பயன்படுத்தியே வடக்குக் கிழக்கில் தமிழர் மரபுரிமைகள் அழிக்கப்பட்டுச் சிங்கள மரபுரிமைகள் செயற்கையான முறையில் சேர்க்கப்படுகின்றன. சிங்கள அரசியல் தலைவர்கள் வெவ்வேறுபட்ட கட்சிகளாக இருந்தாலும், ஈழத்தமிழர் விவகாங்களில் அவர்களுடைய செயற்பாடுகள் நன்கு திட்டமிடப்பட்ட பொறிமுறை ஒன்றின் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை வரலாறு. ஜே.ஆர்.ஜவர்த்தானவின் ஆட்சியில் 1983ஆம் ஆண்டு திருகோணமலை அரச அதிபராகச் சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டது முதல், மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் வவுனியா, மன்னர் மாவட்டங்களில் சிங்களவர்கள் அரச அதிபார்களாக நியமிக்கப்பட்டமை உள்ளிட்ட பல உதாரணங்கள் உண்டு. அதேவேளை, கல்விச் செயற்பாடுகள் மூலமாகவும் இனவாதக் கருத்துகள், சிங்கள வரலாறுகள் தமிழ் மாணவர்கள் மத்தியில் திணிக்கப்பட்டுள்ளன. ஆண்டு ஆறில் இருந்து கல்விப் பொதுத்தராதரச் சாதாரண தரம் வரையான வரலாறுப் பாடநூல்களில் பௌத்த சமயத்துக்கான முக்கியத்துவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வரலாற்றுப் பாடநூலில் பௌத்த சமயநாகரீக வரலாறு எதற்கு என்ற கேள்விகள் தமிழ்க் கல்வியாளர்களினால் அவ்வப்போது எழுப்பப்பட்டுமிருக்கின்றன. -பௌத்த சமயக் கலைகள் ஆனாலும் சைவ சமயக் கலைகள் நாகரீகங்கள் அதுபற்றிய வரலாறுகள் மறைக்கப்பட்டு அல்லது பௌத்த சமயத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுப் பாடநூல்களில் சேர்க்கப்பட்டுள்ளன. ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் ஆட்சியில் இவ்வாறான இனவாதக் கல்வி முறை ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை தொடருகின்றது. இதற்கும் பல உதாரணங்கள் உண்டு. பொலன்னறுவை அனுராதபுரக்காலங்களில் நிர்மாணிக்கப்பட்ட திராவிடக் கட்டடக்கலை மரபுகளைச் சார்ந்த சைவ சமயம் கட்டடங்கள், (ஆலயங்கள்) வரலாற்றுப் பாடநூல்களில் பௌத்த சமயக் கட்டடங்களாகக் காண்பிக்கப்பட்டுள்ளன. உதாரணமாகத் தரம் எட்டு பாடநூலில் கண்டகச் சைத்தியம் எனக் காண்பிக்கப்பட்டிருக்கும் கட்டடம், திரவிடக் கட்டடக்லையைச் சார்ந்த கட்டடமாகும். வரலாற்றுப் பேராசிரியர் பத்மநாதன், இலங்கையின் இந்து சமயம் என்ற நூலில் இக் கட்டடம் திராவிடக் கட்டடக்கலையைச் சேர்ந்ததெனக் கூறியுள்ளார். ஆகவே சர்வதேச பாடநூல் நியமங்களின்படி, குறித்தவொரு மொழியில் எழுதப்படும் வரலாற்றுப் பாடநூல்கள் பிறிதொரு மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுக் கற்பிக்கப்படுதல் சர்வதேச நியமச் சட்டங்களுக்குப் பொருந்தாதது ஒன்று. இதற்கு எதிராக வழக்கும் தொடர முடியும். அவ்வாறு வழக்குத் தொடரப்பட்டால் ஈழத்தமிழ் மாணவர்கள் இந்த வரலாற்றுப் பாடநூல்களைப் படிக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் தமிழ்க் கல்வியார்கள் எவருமே சர்வதேச நியமங்களின் பிரகாரம் வழக்குத் தொடருவது பற்றிக் கவனம் செலுத்தவில்லை. அரசியல் விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காரணங்களில் தமிழ் மாணவர்கள் மீதான கல்வித்தரப்படுத்தலும் ஒன்று என்பது வெளிப்படை. ஆனால் இன்று வரலாற்றுப் பாடநூல் திரிபுபடுத்தல்களோடு, குறிப்பிட்ட சில தமிழ்க் கல்வியிலாளர்களும் ஓரம்கட்டப்படுகின்றனர். இராணுவத்துக்கு மரியாதை கொடுப்பதற்குரிய முறையிலும் இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்புச் சட்டங்கள் தேவைக்கு ஏற்றவாறு சட்டவியாக்கியாணம் செய்யப்படுகின்றன. அதற்குக் கல்வித்துறைச் சட்டங்கள் நிமயங்களும் விதிவிலக்கல்ல. யாழ் பல்கலைக்கழகச் சட்டத்துறை மூத்த விரிவுரையாளர் கலாநிதி குருபரன் குமாரவேல், நீதிமனற்ங்களில் வழக்கு விசாரணைகளுக்காக முன்னிலையாகக் கூடாதெனக் கொழும்பில் உள்ள பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை யாழ் பல்கலைக்கழகமும் ஏற்றுள்ளது. 1996ஆம் ஆண்டு யாழ் நாவற்குழியில் காணாமல்போன 24 இளைஞர்களில் மூன்று இளைஞர்களின் ஆட்கொணர்வு மனுத் தொடர்பான விசாரணையில் பாதிக்கப்பட்ட உறவினர்களின் சார்பில் கலாநிதி குருபரன் முன்னிலையாகின்றார். அதனைத் தடுக்கும் நோக்கிலேயே இவ்வாறன உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதென்ற குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லாமலில்லை. இந்த வழக்கில் பிரதான எதிரியாக இலங்கைக் இராணுவத்தின் உயர் அதிகாரியான துமிந்த கெப்பிடிவலான என்பவர் மீதே சந்தேகம் தெரிவிக்கப்பட்டுக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், 2015ஆம் ஆண்டு நல்லாட்சியெனக் கூறிக் கொண்டு பதவிக்கு வந்த மைத்திரி- ரணில் அரசாங்கமே துமிந்த கெப்பிடிவலானவுக்கு இலங்கை இராணுவத்தின் காலால்படையின் பணிப்பாளர் பதவி உயர்வை வழங்கியிருந்தது. இனரீதியான கொலை வழக்கு ஒன்றில் குற்றம் சுமத்தப்பட்டதாகத் தெரிந்தும் இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தது. பதவியுயர்வு வழங்கப்பட்டதொரு நிலையிலும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, கலாநிதி குருபரன் முன்னிலையாகியிருந்தார். இதனால் யாழ் பல்கலைக்கழகச் சட்டத்துறை விரிவுரையாளர் ஒருவர், எந்த அடிப்படையில் வழக்கு ஒன்றில் முன்னிலையாக முடியுமென இலங்கை இராணுவத் தரைப்படையின் சட்டப் பணிப்பாளர் ஈஎஸ்.ஜயசிங்கே கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி கொழும்பில் உள்ள பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு அனுப்பியிருந்த கடிதம் ஒன்றில் கேள்வி எழுப்பியிருந்தார்.   -மானிய ஆணை்க்குழுவின் கடிதம் அந்தக் கடிதத்தின் அடிப்படையிலேயே யாழ் பல்கலைக்கழக உப வேந்தரிடமும் விளக்கம் கோரப்பட்டுப் பின்னர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொகான் டி சில்வா கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். இந்தக் கடிதம் பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்கள், பல்கலைக்கழகப் பதிவாளர்கள், பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் உயர் கல்வி அமைச்சு உள்ளிட்ட தறைசார்ந்த 17அரச திணைக்கள், நிறுவனங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சட்டத்துறை விரிவுரையாளர்கள் நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் ஈடுபட அனுமதியில்லை என்பதே கடிதத்தின் உள்ளடக்கமாகும். நாவற்குழி வழக்கு விசாரணையின் பின்னணியிலேயே இவ்வாறான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டுமென்ற சந்தேகத்தை கலாநிதி குருபரன் ஏற்கனவே எழுப்பியிருந்தார். யுரொப்பியன் ஜேர்னல் ஒப் இன்ரர்நஷனல் லோ ( EuropeanJournal of International Law) என்ற கட்டுரை ஒன்றைத் தனது முகநூல் பதிவில் மேற்கோள்காட்டியுள்ள கலாநிதி குருபரன், சர்வதேச நீதிமன்றங்களில் முன்லையாகும் சட்டத்தரணிகளில் 60 வீதமானோர் சட்டத்துறைப் பேராசிரியர்கள் என்று அந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்-ஆனால் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவும் யாழ் பல்கலைக்கழகமும் மாத்திரமே அவ்வாறு முன்னிலையாக முடியாதெனக் கூறுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். துறைசார்ந்தவர்கள் தமது தொழில்சார்ந்து வெளியில் பணியாற்ற முடியுமெனப் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு கூறுகின்றது. ஆனால் சட்டத்துறையில் இருப்போருக்கு மாத்திரம் நீதிமன்றங்களில் முன்னிலையாக முடியாதெனக் கூறுவது நியாயமற்றது என்ற கருத்துக்கள் தற்போது எழுந்துள்ளன. பல்கலைக்கழக மருத்துவப் பேராசிரியர்கள் பலர் அரச வைத்தியசலைகளிலும் தனியார் வைத்தியசாலைகளிலும் பணயாற்றுகின்றனர். அதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. 1997ஆம் ஆண்டு சந்திரிகாவின் ஆட்சியில் சுகாதார அமைச்சராக இருந்த ஏ.எச்.எம்.பௌசி. அரச மருத்துவர்கள், மருத்துவபீடப் பேராசிரியர்கள் கடமை நேரங்களில் தனியார் வைத்தியசாலையில் கடமைபுரிய முடியாதென்ற உத்தரவொன்றைப் பிறப்பித்திருந்தார். ஆனால் இலங்கை மருத்துவர் சங்கம் அதற்குக் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. வேலை நிறுத்தப் போராட்டங்களும் நடத்தப்பட்டிருந்தன. சுமார் ஒரு மாதமாக நீடித்த இந்தப் பிரச்சினையில் அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா தலையிட்டார். மருத்துவர்கள், மருத்துவப் பேராசிரியர்கள் கடமை நேரங்களிலும் தனியார் வைத்தியசாலைகளுக்கும் கடமைக்குச் செல்ல முடியுமென உத்தரவிட்டிருந்தார். இதனால் அமைச்சர் பௌசியின் உத்தரவும் வாபஸ் பெறப்பட்டது. ஆகவே சட்டத்துறை விரிவுரையாளர்கள், பேராசிரியர்களுக்கு மாத்திரம் ஏன் இப்படியொரு தடையுத்தரவு என்றவொரு கேள்வி எழாமலில்லை. கலாநிதி குருபரனின் விவகாரத்தில் இலங்கைச் சட்டத்திரணிகள் சங்கம் மௌனம் காக்கிறது. தனிப்பட்ட மருத்துவப் பேராசிரியர் ஒருவருக்கான அரசியல் பழிவாங்கல் நோக்குடனேயே அன்று அமைச்சர் பௌசி மருத்துவர்களுக்கான மேற்படி உத்தரவைப் பிறப்பித்திருந்தாக அன்றைய ஊடகங்கள் விமர்சித்திருந்தன. ஆனால் இலங்கை மருத்துவர் சங்கம் அரசியல் வேறுபாடுகள் இன்றி மருத்துவர்கள் என்ற அடிப்படையில் ஒற்றுமையாக வேலை நிறுத்தம் செய்ததால், அந்த உத்தரவை ஜனாதிபதியே வாபஸ் பெறும் நிலை ஏற்பட்டிருந்தது. ஆனால் இங்கே கலாநிதி குருபரன் தமிழர் என்பதாலும் தமிழ்த்தேசிய அரசியல்நோக்கு நிலையில் அவர் கருத்துக்களை வெளியிட்டுவதாலும் பழிவாங்கப்படுகிறார் என்பது கண்கூடு.   -இராணுவ அதிகாரியின் கடிதம் ஏனெனில், இலங்கை இராணுவத் தரைப்படையின் சட்டப் பணிப்பாளரின் கேள்விக்குக் கொழும்பில் உள்ள பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு செவிசாய்த்திருக்கிறது. அதற்கு யாழ் பல்கலைக்கழக உப வேந்தரும் கட்டுப்பட்டேயாக வேண்டும் என்ற நிலையும் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் அந்தத் தீர்மானத்தை எதிர்த்து இதுவரை எந்தவொரு நடவடிக்கைகளையுமே எடுக்கவில்லை என்பதும் விமர்சனத்துக்குரியதே. 20 ஆண்டுகளுக்கு முன்னர் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த இராணுவ அதிகாரிக்கு 2015ஆம் ஆண்டு பதவியுயர்வு வழங்கப்பட்டிருக்கிறதென்றால், அந்த இராணுவ அதிகாரிக்கு எதிரான கொலை வழக்கில் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரைரையாளர் ஒருவர் எவ்வாறு முன்னிலையாக முடியுமென்ற கேள்வியும் சந்தேகமும், யாழ் பல்கலைக்கழகச் சட்டத்துறைக் கல்வியின் நன்மைக்கானதல்ல. மாறாக அந்தக் கேள்வியும் சந்தேகமும். பௌத்ததேசியச் சிந்தனையில் இருந்து உதித்ததே. இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கொதிராகத் தமிழ்ச் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகக் கூடாதென்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறதெனலாம். ஆகவே இலங்கை நீதித்துறை பௌத்ததேசிவாதச் சிந்தனையின் நோக்கில் செயற்படுகிறது. கல்வி உயர்கல்வி அமைச்சும் அவ்வாறுதான் செயற்படுகின்றதென ஏலவே நான் முன்னைய அரசியல் பத்தி எழுத்துக்களில் சுட்டிக்காட்டியிருக்கிறேன். இராணுவத்தின் தேவைக்கேற்ப பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவும் பல்வேறு சந்தர்ப்பங்களில் செயற்படுகின்றது. ஆனால் விரிவுரையாளர் ஒருவரைக் குறிப்பிட்ட பணியொன்றில் இருந்து நிறுத்த வேண்டுமென்ற தடையுத்தரவு, இது முதற்தடவையே. ஆனால் இது கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில் தீர்மானிக்கப்பட்டதல்ல. மைத்திரி- ரணில் அரசாங்கம் பதிவியில் இருந்தபோதே எடுக்கப்பட்ட முடிவு. -பேராசிரியர் விக்னேஸ்வரன் அதேபோன்று யாழ் பல்கலைக்கழக உபவேந்தராகப் பதவி வகித்திருந்த பேராசிரியர் ரட்னம் விக்னேஸ்வரன். கடந்த ஆண்டு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோது திடீரென விலக்கப்பட்டிருந்தார். செயல்திறன் போதியதாக இல்லையென்ற குற்றச்சாட்டிலேயே அவரை விலக்குவதாக ஜனாதிபதி செயலகம் அப்போது கூறியிருந்தது. ஆனால் உபவேந்தர் ஒருவரை ஜனாதிபதி பதவி நீக்குவதாக இருந்தால். பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு அறிவித்திருக்க வேண்டும். அல்லது அவர்களின் ஆலோசனை பெறப்பட்டிருக்க வேண்டும். ஆகவே உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாமலேயே சிலருடைய அழுத்தங்களினால் மைத்திரிபால சிறிசேன, பேராசிரியர் விக்னேஸ்வரனை விலக்கியிருக்கிறார். அன்று அவருக்கு இழைக்கப்பட்டது பெரும் அநீதியே. ஆகவே கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், இலங்கை அரச கட்டமைப்பு என்பது ஈழத்தமிழர்களுக்கெதிராக இப்படித்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறதென்பதை வரலாற்று ரீதியாகக் காணமுடியும்.   -அமெரிக்கச் சட்டக் கல்லுாரி சட்டத்துறைப் பேராசிரியர்கள் சட்டக் கல்வியையும் கற்பித்துக் கொண்டு நீதிமன்றங்களிலும் முன்னிலையாக முடியுமென அமெரிக்கச் சட்டத்துறைப் பேராசிரியர் அலிஸ் பேக்கர் (AliceBaker) கூறுகிறார். அமெரிக்கச் சட்டத்துறைக் கல்லூரிகளில் இந்த நடைமுறை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். சட்டத்துறைப் பேராசிரியர்கள் தமது கடமை நேரங்களில் சட்டத்தொழிலிலும் ஈடுபட முடியுமா என்ற என்ற தலைப்பில் அவர் தனது கட்டுரையில் விளக்கமளிக்கின்றார். 2001ஆம் ஆண்டில் இருந்து 2008ஆம் ஆண்டு வரை சட்டத்துறைப் பேராசிரியராகக் கடமையாற்றிய அலிஸ் பேக்கர், கற்பித்தலோடு சட்டத்தொழில்சார் நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டுமென வலியுறுத்துகின்றார். அப்போதுதான் தரமான நடைமுறைப் பயிற்சியுள்ள சட்டக் கல்வியை மாணவர்களுக்கு வழங்க முடியும் என்றும் அலிஸ் பேக்கர் தனது கட்டுரையில் கூறுகின்றார். வராமொன்றில் 168 மணித்தயாளங்கள் என்றும் அவற்றில் எவ்வாறு நேரத்தைப் பங்கிட்டுச் சட்ட விரிவுரைகளிலும் சட்டத் தொழிலிலும் ஈடுபட முடியும் என்ற தனது விளக்கத்தை அவர் பகுப்பாய்வு செய்கிறார். ஆகவே உலகத்தில் அதற்கு உதாரணங்கள் உண்டு. ஈழத்தமிழர்களுக்கு எதிரான கல்வித் தரப்படுத்தல் 1972இல் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியில் கொண்டுவரப்பட்டு இன்று வரை அந்தத் தரப்படுத்தல் பல்வேறு வடிவங்களில் தொடருகின்றன. உயர்கல்விக்கான பங்கடு இன விகிதாசாரத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதில்லை. மாறாக மாணவர்கள் பெறும் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே உயர்கல்விப் பங்கீட்டை இலங்கை அரசாங்கம் செய்கின்றது. ஆகவே குருபரன் விடயத்தில், ஏனைய சட்டத்துறைப் பேராசியர்கள், விரிவுரையாளர்கள்கூட அமைதிகாப்பது அல்லது அந்த விவகாரத்தை வெறுமனே கடந்து செல்வது என்பது இனரீதியான பார்வையே. இதுவே ஒரு சிங்களச் சட்டத்துறை விரிவுரையாளருக்கு நடந்திருந்தால், இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் வாய் திறந்திருக்கும். வேலைநிறுத்தப் போராட்டமே நடந்தருக்கும். நீதித்துறைச் செயற்பாடுகள் நின்றிருக்கும். அதேவேளை, இலங்கை இராணுவம் ஈழத்தமிழர்கள் தொடர்பான விடங்களில், இலங்கை அரச திணைக்களங்களில் எந்தவேளையிலும் தலையிடும் அல்லது இலங்கை இராணுவம் சொல்வதையே பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு உள்ளிட்ட அரச திணைக்களங்கள் கேட்க வேண்டும் என்ற செய்தியும் கலாநிதி குருபரன் விடயத்தின் மூலமாகக் உறுதிப்படுத்தப்படுகின்றது.   -இராணுவத்து்கு மரியாதை அதுவும் 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான ஒரு தசாப்பத காலம் சென்றுவிட்ட நிலையிலும், போர்க்குற்றம் மனித உரிமை மீறல் தொடர்பாகச் சர்வதேச நீதி விசாரணையே அவசியம் என்று கூறப்பட்டுவரும் சூழலிலும், இலங்கை இராணுவத்தின் முக்கியத்துவத்தையும் மரியாதையையும் இலங்கை அரசாங்கம் உயர் கல்வித்துறை ஊடாகப் பறைசாற்றியுள்ளதெனலாம். ஜெனீவா மனித உரிமைச் சபை ஆணையாளரின் தீர்மானத்தில் சர்வதேச நீதியரசர்களையும் உள்ளடக்கிய கலப்புமுறை விசாரணைக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை இராணுவத்துக்கு இவ்வாறு வழங்கப்பட்டுள்ள மரியாதை, ஜெனீவாத் தீர்மானத்துக்கும் சவாலாகவே அமைந்துள்ளதெனலாம். அல்லது அந்தத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டு விட்டதென்ற முடிவுக்கும் வரலாம். தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று கூறிப் பெருமைப்படுகின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்த விடயம் தொடர்பாக மெளனமாக இருப்பது தொடர்பாகவும் கேள்விகள் எழாமலில்லை. இதனைத் தனியொரு குருபரனுக்கு எதிரான தீர்மானமாகவோ அல்லது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் கல்வித்துறை மீதான அக்கறையில் எடுக்கப்பட்ட முடிவாகவுமோ கருதிவிடலாகாது.   -தவறவிட்ட விடயங்கள் ஆகவே பல்கலைக்கழகச் சமூகம் கருத்திலெடுக்க வேண்டிய பிரதான விடயங்களில் கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக வரலாற்றுப் பாடநூல்களில் உள்ள பிழையான தகவல்கள் சுட்டிக்காட்டப்பட்டுச் சா்வதேச நியமங்களுக்கு ஏற்ப அமைய வேண்டுமென்ற கோரிக்கைகள் துறைசார்ந்த பேராசிரியர்களினால் உரிய முறையில் முன்வைக்கப்படவில்லை. மொழியாக்கம் செய்யப்பட்ட பின்னர் தமிழ் மொழிமூலப் பேராசிரியர்களும் அதில் கையொப்பமிடுகின்றனர். ஆனால் வரலாற்று்க்கு மாறான திணிப்புகள் பற்றிச் சுட்டிக்காட்டினார்களா என்பது கேள்வியே. குருபரன் விடயத்திலும் உரியமுறையில் நியாயங்கள், சா்வதேச விதிமுறைகள் தொடர்பாகச் சுட்டிக்காட்டப்பட்டு அழுத்தங்கள் கொடுக்கப்படவில்லை. பேராசிரியர் விக்னேஸ்வரன் விலக்கப்பட்டபோது. பல்கலைக்கழகப் பீடாதிபதிகள். பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் எவருமே அதற்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை. பல்கலைக்கழகத் தொழிற்சங்கம் கூட போராட்டம் நடத்தவில்லை. அவ்வாறு போராட்டம் நடத்தப்பட்டு எதிர் நடவடிக்கைகள் அன்று எடுக்கப்பட்டிருந்தால் இன்று குருபரன் மீது இவ்வாறான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் பல்கலைக்கழச் சமூகம் அந்தப் பாரிய பொறுப்பில் இருந்து தவறிவிட்டதெனக் கூறினால், அங்கு மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை. அதேவேளை, போரின் பின்னரான சூழலில், தமிழ்ச் சமூகத்தின் அரசியல், பொருளாதார மற்றும் கல்விச் செயற்பாடுகளில் யாழ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகச் சமூகத்துக்குப் பாரிய பொறுப்பு இருந்தது. ஆனால் அது பற்றிய ஆய்வுகள் எதனையுமே பல்கலைக்கழகத் தமிழ்ச் சமூகம் மேற்கொள்ளவில்லை. அப்படி ஆயு்வுகளை மேற்கொள்ள முடியாதென்று எந்தவொரு தடையுமில்லை. ஆனால் பல்கலைக்கழகத் தமிழ்ச் சமூகம் வெறுமனே கலைத்திட்டத்திற்கு உள் நின்றவாறு கற்பித்தல் செயற்பாடுகளில் மாத்திரமே ஈடுபடுகின்றது. துனிஷியாவில் 2010ஆம் ஆண்டு புரட்சி ஏற்பட்டு ஆட்சிமாறியவுடன், அங்குள்ள பல்கலைக்கழகச் சமூகம் கடந்த 30 ஆண்டுகள் பின்னோக்கியிருந்த அரசியல், பொருளாதார மற்றும் கல்வித்துறைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு எதிர்காலத்துக்கான சீர்திருத்தங்களில் ஈடுபட்டிருந்தன. அவ்வாறே இந்தோனிஷியாவின் அச்சே மாநிலத்திலும் கல்விச் சமூகத்தினால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதனடிப்படையில், முன்னேற்றங்களுக்கான பொறிமுறைகள் வகுப்பட்டன. ஆனால் பல்கலைக்கழகத் தமிழ்ச் சமூகம் அந்தப் பொறுப்புகளை ஏற்கத் தயங்குகின்றது. அல்லது அரசியல் காரணங்களைக் கூறித் தப்பித்துக்கொள்கிறது என்றும் கூறலாம்.   -அ.நிக்ஸன் https://www.ibctamil.com/articles/80/145940
    • அபிவிருத்திக்காக நாங்கள் செயற்பட வேண்டு மென்பதற்கு முற்று முழுதாக நான் இணங்குகிறேன். அரசில் தீர்வொன்று எப்பொழுது வருமென சொல்ல முடியாது. ஜனநாயக சூழலில் காத்திருந்த பேச்சுவார்த்தை மூலம்தான் பெற முடியும். போர்ச்சூழல் என்றால் அடித்து பறிக்கலாம். இது அப்படியல்ல. அதற்கு எவ்வளவு காலம் எடுக்குமென சொல்ல முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், அரசாங்கத்துடன் இணைவதா இல்லையா என்ற தீர்மானம் பின்னர் எடுக்கப்படுவதாக இருந்தாலும், எற்கனவே சில தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்துகிறோம். வடக்கு கிழக்கிற்கான மாற்று பொருளாதார நிறுவனமொன்றை ஏற்படுத்தும் முன்னெடுப்புக்கள் செய்யப்பட்டுள்ளன. எப்படியான பாத்திரத்தை நாங்கள் வகிக்கப் போகிறோம் என்பது இப்பொழுது தெரியாவிட்டாலும், எங்களிற்கு தெரிந்த ஒன்று, நாங்கள் பலமான ஒரு அணியாக நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் அப்பொழுது அரசிடம் அமைச்சர்களை கூட எதிர்பார்க்கலாம் என குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த காலங்களில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா வேட்பாளர்களுக்கு, மக்கள் அதிருப்தி வெளியிடும் வகையில், எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான கருத்துக்களை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுத்திருந்தார். இந்த நிலையில் தற்போது சுமந்திரன் வெளியிட்டு வரும் இந்த கருத்துக்கள் மக்கள் மத்தியில் மாத்திரமின்றி கட்சிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய மக்கள் சந்திப்பில் அமைச்சுப் பதவி எதிர் காலத்தில் பெறுவது கட்டாயம் என்பதை மிகவும் லோஜிக்காக சுமந்திரன் கூறுவதற்கான காரணம் இவை தொடர்பில் ஏதாவது சர்ச்சைகள் ஏற்பட்டால் அதன் அர்த்தத்தை அப்படியே மற்றி கூறுவதற்கு ஏதுவாகவே தனது கருத்தை முன்வைத்துள்ளார். இது குறித்து கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில், வருகின்ற அரசுடன் பேச்சுவார்த்தைகள் மற்றும் தமிழர்களின் எதிர்கால நிரந்தரத்த தீர்வு குறித்த மாத்திரமே நாங்கள் பேச்சுவார்த்தைகளை கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்கள் மத்தியில் முரண்பாடை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுவது தொடர்பில் தாம் கண்காணிப்பதாகவும், மேலும் சுமந்திரன் தீர்வு வருவதற்கு இடையில் அபிவிருத்திக்காக அமைச்சுப் பதவிகளை பெறலாம் எனும் கருத்துப் பட கருத்துக்ககை வெளியிட்டுள்ளமைக்கு கண்டனங்களையும் தெரிவித்துள்ளார். https://www.tamilwin.com/srilanka/01/250691?ref=imp-news
    • வீரம் விளைந்த வல்வை பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் மேஜர் கிண்ணி.   எதுக்கும் பக்கத்து வீமன் முகாமில் போய் என்ன நடக்குது என்று கேட்டுக்கொண்டு வாறேன் ‘.! என்று சொன்னபடியே புறப்பட்டுப் போனான். எமது முகாம் கோட்டையில் இருந்து சற்றுத் தூரத்தில் ஒதுக்குப்புறமாக இருந்ததாலும் தொடர்புச் சாதனங்கள் இல்லாததாலும் என்ன நடைபெறுகின்றதென அறியமுடியாமல் இருந்தது.     பின்னேரமாகியும் கிண்ணி முகாம் திரும்பவில்லை. கோட்டையில் அதிகரித்தவண்ணம் உள்ள சத்தங்கள் எனக்குக் கிண்ணியின் இடத்தை உணர்த்தின. குளிக்கும் இடத்தைப் போய்ப் பார்த்தேன். கின்னி குப்பியை விட்டுவிட்டுப் போயிருந்தது தெரியவந்தது. குப்பியை எடுத்துக்கொண்டு கோட்டையை நோக்கிப் போனேன் போகும் வழியெல்லாம் மக்கள் தத்தமது மூட்டை முடிச்சுக்களுடன் குடும்பம் குடும்பமாக யாழ். நகரத்தைவிட்டு அகன்றுகொண்டிருந்தனர். ‘அவ்ரோ’வும் உலங்குவானூர்தியும் மேலே சுற்றிக்கொண்டிருந்தன “கோட்டைக்கு ஆமி வந்துவிட்டான். ரவுணுக்கும் வரப்போகின்றான்” என்றெல்லாம் சனங்கள் பரபரப்பாகக் கதைத்தபடியே, அகன்று சென்றுகொண்டிருந்தார்கள். கோட்டை இராணுவ நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் முகாமான நீகன் முகாமுக்குப் போய் “கிண்ணி வந்ததோ’ என்று கேட்டேன் அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை .     “முன்னுக்கு ஆள் நிற்குதோ இல்லையோ என்று கேட்டுச் சொல்லுங்கள்” என்று திரும்பவும் கேட்டேன். தொடர்பு எடுத்துக் கேட்டுவிட்டு “கிண்ணியண்ணை பொலிஸ் ஸ்ரேசடியில்  நிற்கிறார்” என்று “வோக்கி வைத்திருந்த போராளி கூறினான். குப்பியை எப்படிக் கொண்டு போவது என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, “இந்த நேட்டோ ரவுண்சுகளையும் இன்ரமீடியம் ரவுண்சுகளையும் பொலிஸ் ஸ்ரேசனடியில் கொண்டுபோய்க் கொடுத்துவிடு” என்று, பொறுப்பாளர் போராளி ஒருவருக்குக் கூறுவது தெரிந்தது. இரண்டு பெரிய பொதிகள். ஒன்றை மட்டுந்தான் தூக்கலாம்; மற்றதைக் தூக்குவதற்கு இன்னொரு ஆள் தேவை” என்றுஅந்தப் போராளி பதிலளித்தான்.   “நான் கொண்டுவாறன்’ என்று கூறியபடியே பையொன்றைத் தோள்மீது அடித்துக் கொண்டு, இருவரும் புறப்பட்டோம். அசோகா ஹொட்டேலுக்குப் போய், அதன்கீழுள் ள சாக்கடைவழியே பொலிஸ் ஸ்ரேசனடிக்குப் போனபோது, அங்கு முன் காவல்நிலையில் படு ‘பிசி’யாகக் கிண்ணி நிற்பதைக் கன்டேன் என்ன சொல்லாமற் கொள்ளாமல் வந்துவிட்டீர்கள்’ என்று கேட்டேன். ஆமி இறங்கிட்டான் என்னென்று இனி நிற்கிறது, அதுதான் வந்திட்டன்’ என்றான் கிண்ணி. இதேபோலத்தான் இன்னுமொரு முறை. அப்போது ஒரு தவறிற்கான தண்டனை காரணமாக முகாம் ஒன்றினுள் கிண்ணி முடங்கி இருந்தான். பலாலியில், ஆனையிறவில், தீவுப்பகுதியிற் சண்டை . என்ற செய்தி அடிபட்டது. போகமுடியவில்லையே எனத் துடிதுடித்துப் போனான். தச்சன்காட்டுச் சந்திக் காவலரண்களை அன்று இரவு எமது போராளிகள் தாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சண்டையின் போக்கைப்பற்றி வோக்கியிலே கேட்டுக்கொண்டிருந்த கிண்ணி, எமது தரப்பில் இழப்புக்கள் அதிகமாக இருந்ததை அறிந்ததால் உடனே எம்16 இனைக் கட்டிக் கொண்டு, போர்க்களத்திற்குப் புறப்பட்டுவிட்டான். இவன் அங்குப் போனபோது வீரச்சாவடைந்த போராளிகளை முன்னுக்கு இருந்து பின்னுக்கு எடுத்துக்கொண்டிருந்தார்கள். ஓரிடத்திற் காயப்பட்ட நிறையப்பேர் கிடந்தனர். அவர்களை வைத்தியசாலைக்கு அனுப்ப வழியில்லாமல் இருந்தது. அம்புலன்ஸ் எங்கே? அம்புலன்ஸ் எங்கே? என்று எல்லோரும் தேடிக்கொண்டிருந்தார்கள் அம்புலன்ஸ் சாரதி அம்புலன்சைச் செலுத்திக்கொண்டு வந்தார். அவர் வெளிச்சத்தைப் போட்டுக் கொண்டுவந்ததால் அதைநோக்கி இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம்செய்து, எறிகணைகளையும் போட்டனர். இதனால் அச்சாரதி அம்புலன்சை இடைநடுவில் விட்டுவிட்டு ஓடிவிட்டார். அவர் ஒரு குடிமகன் . வாகனமோட்டுவதற்காக அழைக் கப்பட்டிருந்தார். காயமடைந்தவர்கள் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார்கள். கிண்ணி பார்த்தான் அந்த நேரத்தில் அதுதான் முக்கியம் என்று பட்டது. துப்பாக்கிச் சூடுகளுக்கு மத்தியிலேயே மெதுமெதுவாக அம்புலன்சைக் கொண்டுவந்து 4, 5 பேராகப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டுபோய் இறக்கினான். இவ்வாறாகக் காயமடைந்த முழுப்போராளிகளையும் பின்னாலுள்ள முதலுதவி இடத்திற்கும் பின்பு மருத்துவமனைக்குமாக இரவு முழுவதும் ஓடித்திரிந்தான் மறுநாட் பின்னேரம் நான் கிண்ணியின் இடத்திற்குப் போனேன். “நேற்று நான் சண்டைக்குப் போனனான் தெரியுமா” என்று கிண்ணி சொன்னான் நான் திடுக்கிட்டேன் . ஏனெனில், அந்த முகாமைவிட்டு கிண்ணியை அனுமதி இல்லாமல் வெளியேற வேண்டாம் என்ற உத்தரவு இருந்தது. நான் பேசாமல் இருப்பதைக் கண்டகிண்ைணி, சண்டைக்குப் போனதற்காக யாரும் தண்டனை தந்தால், நான் சந்தோசமாக ஏற்றுக் கொள்வேன்” என்று கூறியவன் சிரித்தான். பின்பு, அங்கே நான் போகேக்கை சண்டை முடிஞ்சுபோயிட்டுது. பார்த்தாற் காயப்பட்ட பொடியள் நிறையப்பேர் இருந்தார்கள். பிறகென் னை, அம்புலன்ஸ் எடுத்து ட்ரைவர் வேலை பார்த்தேன்” என்றான் மனநிறைவுடன்.     இதுதான் கிண்ணி, எங்குச் சண்டை நடக்கிறதோ அங்குப் போகத் துடிப்பவன். “அடிக்கவேண்டும், ஆயுதங்கள் எடுக்கவேண்டும்’ இதுதான் அவனது வெறி. அவன் எத்தனை தரம் போரிற் காயப்பட்டான் என்று எண்ணிக்ச்சொல்வது கடினம். இடது பக்கம் உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால்வரைக்கும் இவன் காயப்படாத இடமில்லை. கிண்ணி ‘சேட்”டைக் கழற்றினால், அவனது வீரத்தழும்புகளை எண்ணிமுடிக்க அரைநாள் தேவை. முதன்முதல் கிண்ணியை நான் சந்தித்தது இன்னும் எனக்குப் பசுமையாக நினைவில் நிற்கின்றது. இந்திய இரணுவச் சிறையில் 17 மாதங்களைக் கழித்துவிட்டு அப்போதுதான் விடுதலை யாகியிருந்தேன்.     ஒருவருடனும் கதைக்காது, முகாமின் ஒதுக்குப்புறத் தோட்ட மூலையொன்றில் அமர்ந்து யோசித்துக்கொண்டிருந்தேன் அண்ணை சுகமாயிருக்கிறியளோ’ என்று கேட்டவண்ணம் வந்தவரைப் பார்த்தேன். மெல்லிய, கறுத்து நெடுத்த உருவம். வலது கையிற் சிறிய பையொன்று இருந்தது. கண்கள் துறுதுறுவென்று என்னை ஆழம் பார்த்தன. உதட்டில் நட்புணர்வுடன் ஒரு சிரிப்பு, மேல் இழுத்த தலை. சாரமும்சேட்டும் அணிந்திருந்தவர் தோழமையுடன் எனக்குப் பக்கத்தில் வந்தமர்ந்தார். “என்னைத் தெரியல்லையோ ?” என்று கேட்க, நான் திரும்யவும் பார்த்துவிட்டு, “எங்கோ பார்த்தமுகம் மாதிரி இருக்கிறது, சளியாகத் தெரியவில்லை .” என்று இழுத்தேன். நான் ஈசுவின் தம்பி கிண்ணி” என்றான்.     “ஈசுவின் தம்பியோ “? நானும் ஈசு என்கின்ற கிண்ணியின் மூன்றாவது தமையனும் ஒன்றாகப் படித்தவர்கள். கிண்ணியின் வீட்டுக்கு இயக்கத்திற்கு வருவதற்கு முன்பு எத்தனையோ தடவைகள் நான் போயிருக்கிறேன். அப்போது கிண்ணி சிறிய பையனாக இருந்தவன். நான் சரியாகக் கவனிக்க வில்லை . ஆறு வருடங்களின் பின்பு பார்க்கும்போது, நிறைய வித்தியாசங்கள். “என்ன செய்யிறியள்’ என்று கேட்டேன். சும்மாதான் இருக்கிறேன்’ என்றான் கிண்ணி. கிண்ணி இயக்கத்தில் இருப்பது எனக்குத் தெரியாது. முல்லைத்தீவு நகரில் நடந்த சண்டையில் இந்திய இராணுவத்தின் 60 எம்எம் எறிகணையினாற் காயப்பட்டு, சாகும் தறுவாயில் வல்வெட்டித்துறைக்கு வந்ததோ, பொக்ரர் அன் கிண்ணியைக் காட்பாற்றி இந்தியாவுக்கு அழைத்துச்சென்று அவனுக்கு மறு உயிர் கொடுத்ததோ எனக்குத் தெரியாது.(வேர்கள் இணையம் வெளியீடு )     “ஏதாவது படிச்சுக்கொண்டிருக்கிறியளோ அல்லது தொழில் பார்க்கிறியளே’ என்று நான் விடாது கேட்டேன். “இடைக்கிடை இந்தியா பிஸ்னஸ் செய்கிறனான்’ என , யாரும் நம்பும்படியாகவே கிண்ணி கூறினான். இந்தியாவிற் கிண்ணி அறுவைச் சிகிச்சை முடித்துக்கொண்டு அப்போதுதான் நாடு திரும்பியதும் எனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை . சில நாட்களின்பின் தீவகப் பகுதிக்கு அரசியல் வேலை செய்வதற்காக நான் அனுப்பப்பட்டேன். அப்போது ஜேம்ஸ் தீவகப் பொறுப்பாளராகப் பொறுப்பெடுப்பதற்காகச் சென்றார். அவருடன் நானும் வானில் போனபோது, அந்த வானை ஒட்டிக்கொண்டுபோனது கிண்ணிை. நான் கிண்ணியை ஆச்சரியமாகப் பார்த்தேன். கிண்ணி என்னைப் புரிந்துகொண்டவனாகச் சிரித்தான் .     “ஜேம்ஸ் அண்ணை ! கஸ்ரோ அண்ணைக்கு நான் இயக்கம் என்று தெரியாது .” என்றான். ஜேம்சும் சிரித்துவிட்டு.     கிண்ணிதான் தீவில் எனக்கடுத்த பொறுப்பாளர், அதாவது பிரதித் தளபதி” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார். அதற்குப் பிறகுதான் கிண்ணியின் வரலாற்றை அறிந்துகொண்டேன். சாதாரண போராளியாக ஆரம்பித்து, சண்டைகளில் தனது திறமையைக் காட்டி படிப்படியாக வளர்ந்தவன் இவன். இயல்பாகவே கிண்ணி ஓர் ஆவேசமான போராளி. மேஜர் பசிலனின் வளர்ப்பிற் சண்டையில் இவன் ஒரு பாயும் புலியாக மாறியதில் ஆச்சரியமில்லை . காட்டுக்குள் இருந்தபோது தலைவரின் பாசறையில் இவன் நிறையக் கற்றுக்கொண்டான். காடு இவனை அனுபவம் வாய்ந்த ஒரு போராளியாக்கியது. இவனது ஆரம்பச் செயற்பாடுகள் அரசியல் வேலையாகவே இருந்தன. மேஜர் ஜேம்ஸ் 83, 84 ஆண்டுக் காலப்பகுதிகளில் வடமராட்சிப் பகுதியில் அரசியல் வேலைத் திட்டங்களைச் செய்துகொண்டிருக்கின்றபோது அவனுக்குத் துணையாக நின்றவன் கிண்ணிை. கிண்ணியை இயக்க வேலைகளிற் படிட்டபடியாக ஈடுபடவைத்து, பின்பு முழுநேரப் போராளியாக்கிய பெருமை மேஜர் ஜேம்சுக்கே சேரும்.   வீரம் விளைந்த வல்வை மாநகர் பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் கிண்ணி. கந்தசாமித்துரைதம்பதிகளின் நான்காவது மகனாகப் பிறந்த இவன், சிறுவயதிலேயே கல்வியிற் கெட்டிக்காரனாக விளங்கினான். காட்லிக் கல்லூரியில் உயர் வகுப்பிற் கணிதம் படித்துத் தனது திறமையினை வெளிப்படுத்தினான். இவனது சிறுபிராயத்திலேயே தகப்பனார் இறந்த தால் வீட்டில் குடும்பநிலை கஸ்ரமாகியது. குடும்பநிலையை உணர்ந்து கிண்ணி செயற்பட்டான். தனது படிப்புக்கு மத்தியிலும் சிறுசிறு வேலைகள் செய்துவந்தான். கோழிகளை வளர்த்து அதன்மூலம் வீட்டைக் கவனிக்கும் பணியினையும் செய்தான்.     இவனது இரண்டாவது அண்ணன் 1983ம் ஆண்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்டதைத் தொடர்ந்து குடும்பப்பாரம் இவனை அழுத்தியதால், ஆரம்பத்தில் வீட்டிலிருந்தவண்ணமே இயக்கவேலைகளில் ஈடுபட்டான். மேஜர் ஜேம்ஸ் பயிற்சிக்காகப் போனதைத் தொடர்ந்து, கிண்ணி வடமராட்சியில் இயங்கி வந்த எமது இயக்கச் சவர்க்காரத் தொழிற்சாலை யிற் பணியாற்றினான். அங்குச் சிறப்பாக செயற்பட்டதால் வன்னிப்பகுதியில் சவர்க்காரத் தொழிற்சாலையினை ஆரம்பிப்பதற்காகச் சிறிது காலம் வன்னியில் நின்றான். அதன்பின்பு கொமாண்டோ பயிற்சியினை முடித்துக்கொண்டு,     சிறிதுகாலம் வல்வை இராணுவ முகாமினைச் சுற்றியுள்ள காவலரண்களில் காவல் புரிந்தான். இயக்க வேலைகளில் ஈடுபடும் இயந்திரப் படகுகளைக் கவனிப்பதற்காக வடமராட்சி கிழக்குப் பகுதியில் ஒப்பரேசன் லிபரேசன்’ வரையும் கடமையாற்றினான். தீவகத்திற்குக் கிண்ணி  தளபதி தீவகத்தின் தளபதியாகக் கிண்ணி பொறுப்பெடுத்தவேளை, நான் அளவெட்டியில் முகாமொன்றில் இருந்தேன். ஆனால், அடிக்கடி கிண்ணியைப் போய்ப்பார்த்துவிட்டு வருவேன். பொறுப்பெடுத்ததிலிருந்து, ஏதாவது தாக்குதல் செய்யவேண்டும் என்று கிண்ணி துடித்துக்கொண்டிருந்தான். கிண்ணி வேவுபார்க்க அனுப்பிய இரு போராளிகளை ஒருநாள் இராணுவம் சுட்டுக்கொன்றது. எப்படியும் இதற்குப் பதிலடி கொடுக்கவேண்டுமென்று கிண்ணி ஆவேசமாக அலைந்து திரிந்தான். நான் ஒருமுறை போனபோது, “ஊர்காவற்றுறை வரைபடத்தை ஒழுங்கை ஒழுங்கையாகக் கீறித்தாருங்கள்” என்று கேட்டான். உங்களுக்கில்லாததோ. நாளைக்குக் கொண்டுவாறன் ” எனப் பதிலளித்தேன். மறுநாளே தாக்குதல் திட்டம் தயாராகிவிட்டது. பானு அண்ணை தனது குழுவினரை அனுப்பியிருந்ததோடு, தானும் நேரே வந்திருந்தார். கிண்ணி நானும் வாறன்’ என்று கூறினேன். “ஜேம்ஸ் அண்ணையும் வீரமரணமடைஞ்சிட்டார். நானும் நீங்களுந்தான் மிஞ்சியிருக்கிறம். நான் இறங்குகிறன். நீங்கள் வெளியில் நின்றுகொள்ளுங்கோ ‘ என்றான்     “இப்படித்தான் முதலும் சொன்னீர்கள்” என்று சொல்லி ஒருமாதிரி கிண்ணியிடமும் பானு அண்ணையிடமும் அனுமதிபெற்றுச் சென்றேன், இராணுவத்தின் ரோந்துப் பிரிவொன்று முகாமை விட்டு முன்னுக்கு ஒரு கிலோ மீற்றர்வரையும் வந்து கிளியர் பண்னுவார்கள். இது தினமும் அதிகாலையில் நடப்பதால், இராணுவம் வரும் பாதைக்கு இரவே நாம் சென்று கிளைமோர்களை ஒழுங்குபடுத்தி வைத்து, இராணுவத்தை வரவேற்கத் தயாரானோம். ஒழுங்கையொன்று கடையொன்றிற்கு எதிராக இரண்டாகப் பிரிந்தது. அக்கடையினுட் கிண்ணியும் நானும் ஏனைய 6 போராளிகளும் இருந்தோம். கடைக்கு முன்பக்கத்தைத்தவிர வேறு வாசல்கள் எதுவுமில்லை. ஒழுங்கை கடைக்கு நேர் செங்குத்தாக வந்து, 3 அடி தூரத்தில் இரண்டாகப் பிரிந்து செல்கிறது. விடியப்போகின்றது. சகல தடயங்களையும் அழித்துவிட்டு, எட்டுப் பேரும் கடைக்குள் இருந்தோம், ஒழுங்கை பிரிந்த பின்னர் இருமருங்கிலும் வேறு குழுக்களும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தன. நாங்கள் இருந்த கடைக்குட் பெரும் இடநெருக்கடி. பழைய தட்டுமுட்டுச் சாமான்களை ஒருவாறு ஓரமாக ஒதுக்கிவிட்டு நெருங்கி இருந்தோம், மேலேநிமிர்ந்து பார்த்தால், பெரிய குளவிக்கூடு ஒன்று எப்போது விழும் என்று பயமுறுத்திக்கொண்டிருந்தது.     நூற்றுக்கணக்கான பெரிய குளவிகள் கொட்டுவோம் என்று பயமுறுத்தினை. “அண்ணை இதுகள் விஷக் குளவிகள், நான்கு ஐந்து ஒன்றாகக் கடித்ததென்றால் ஆளை முடித்துப்போடும்” என்று போராளியொருவன் எம்மைப் பயப்படுத்தினான். எல்லோரும் குளவிகளைப் பார்ப்பதும் விடியுதா எனப் பார்ப்பதுமாக இருந்தோம். “இப்படித்தான் நெடுங்கேணித் தாக்குதலையும் திட்டமிட்டு அடிச்சனான். இதுகும் சரிவரும் என்றான் கிண்ணி. எல்லோரும் ஆமியையும் குளவியையும் மாறிமாறிப் பார்த்து பதட்டத்துடன் இருந்ததைக்கண்ட கிண்ணி, நெடுங்கேணித் தாக்குதலைப்பற்றி விபரிக்கலானான் . “ஒரு கட்டத்தில் எமது போராளிகளில் ஒருவனை நோக்கி எல்.எம்.ஜி. க்காரன் சுட்டுக்கொண்டிருந்தான். அவனை உயிருடன்விட்டால் எல்லோரையும் முடித்துவிடுவான் என்று விளங்கிவிட்டது. இதனால் நான் பாய்ந்தேன்” என்று நிறுத்தினான் கிண்ணி, எல்லோரும் கதைகேட்கும் ஆவலில், “பிறகு என்ன நடந்தது சொல்லுங்கோ ‘ என்றார்கள். துப்பாக்கியைத் தோளிற் கொளுவிக்கொண்டு, குண்டின் கிளிப்பைக் கழட்டியபடியே கத்திக்கொண்டு எதிரியின் நிலைக்குட் பாய்ந்தேன். அடித்துக்கொண்டிருந்த எல்.எம்.ஜி. இன் பரலில்இறுக்கிப் பிடித்து அதனை என்பக்கம் திரும்பவிடாமல் தடுத்தேன்’ “கை சுட்டிருக்குமே” ஒரு போராளி இடையில் அவசரப்பட்டுப் புகுந்தான். “கை கொதிச்சுப்போச்சு. அப்படிச் செய்யாமல்விட்டால் என்னைச் சுட்டுப்போடுவான். அதனால் விடவேயில்லை. சண்டை முடிந்த பின்பு பார்த்தால் கையெல்லாம் கொப்பளம் போட்டிருந்தது’ என்றான் கின்னி . “பிறகு.?” ஆவலை அடக்கமுடியாமல் நான் கேட்டேன். “எல்லோரும் சீக்கியர். பெரிய தடியன்கள். காலுக்குள் இருந்த இரு சீக்கியர்களும் எல்.எம்.ஜி. வைத்திருந்த சீக்கியனும் நினைத்திருந்தால் என்னைச் சுலபமாக அடித்துவிழுத்தி யிருக்கலாம். ஆனால், கிளிப்பைக் கழற்றிய குண்டைக் கண்டும் நான் பலத்த குரலிற் கத்தி வெருட்டியதைக் கண்டும் பயந்துவிட்டார்கள்” என்ற கிண்ணி, “கொஞ்சம் பொறு’ என்றுசொல்லிக் கதவிடுக்கால் மெல்லப் பார்த்தான். “வாறாங்கள்’ எல்லோரும் அடங்கினோம். எனது நெஞ்சு துடிக்கிற சத்தம் பலமாகக் கேட்கின்றது . சில வினாடிகளின்பின் நான் மெதுவாக எட்டிப்பார்த்தபோது, நாங்கள் இருக்கின்ற இடத்தில் இருந்து 5 அடி தள்ளி, ஒழுங்கையால் ஒரு எல்.எம்.ஜி. க்காரன் திரும்பிச் சென்று கொண்டிருந்தான். 6 வீரன் எம்மைக் கடந்தவுடன் கிண்ணி கிளைமோரை வெடிக்கவைத்தான். வெடித்தவுடன் கிண்ணி பாய்ந்தான். குளவியின் பயத்தாலே நானும் கிண்ணியுடன் சேர்ந்து பாய்ந்தேன். நல்ல வேளை நாங்கள் இருவரும் முதலிற் பாய்ந்தது. வெடித்தவுடன் குளவிக் கூடு பிய்ந்து கொட்டுப்பட்டு எங்களுடன் இருந்த ஏனைய அறுவரையும் குளவிகள் கலைத்துக் கலைத்துக் கொட்டினை என்று பிறகுதான் எனக்குத் தெரியவந்தது. 5 நிமிடங்களிற் சண்டை முடிவடைந்துவிட்டது. கிண்ணி பாய்ந்துசென்று கொல்லப்பட்ட இரு இராணுவத்தினரை இழுத்துவந்தான். ஆயுதங்கள் எம்மாற் கைப்பற்றப்பட்டன. இராணுவத்தினர் நால்வர் கொல்லப்பட்டு 6பேர் காயமடைந்தனர். இரு ஆயுதங்களும் தொலைத்தொடர்புச் சாதனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டன.     கிண்ணி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி சில நாட்களாகக் கிண்ணிையை எனது முகாம் பக்கம் காணவில்லை. யாழ்ப்பாணத்திற் குள் நின்றால் சுற்றிச்சுற்றி எப்படியும் என்னிடம் வருவான். நிச்சயம் ஏதாவது ஓர் இராணுவ முகாமின் காவலரண்களை மேளப்பமிட்டவாறு இருப்பான் என்பது எனக்குத் தெரியும். வன்னியில் இருந்து வந்த போராளிகள் சில கிண்ணி அங்கு நிற்பதாகக் கூறினர். மிக விரைவில் தாக்குதல் ஒன்றைப் பத்திரிகையிற் பார்க்கலாம் என்று எதிர்பார்த்தேன் . அதேபோல . தட்டுவன்கொட்டியில் 35 காவலரண்கள் அழிப்பு, 15 இராணுவம் பலி ” என்று ‘புலிகளின் குரல் ‘ தெரிவித்தது . சில நாட்களின்பின் கிண்ணி எனது முகாமிற்கு வந்தபோது , “நல்ல அடியொன்று அடிச்சிருக்கிறியள்” என்றேன். மெல்ல மறுத்து, “நான் அங்குப் போகேல்லை” என்றான் ஒரு சிரிப்புடன் . பிறகு ஒரு மாதிரி     “நாங்கள் எதிர்பார்த்துப் போதுகூட, ஆனால், அவங்கள் ஓடிட்டாங்கள்’ என்றான். “போன வருசம் தட்டுவன்கொட்டியில் அடிபட்டனீங்கள் தானே! அந்த இடமோ இம்முறையும்” என்றுகேட்டேன் அதுக்குக் கிட்டத்தான் ” என்று பதிலளித்தான். சென்ற வருடமும் ஆனையிறவுச் சண்டைக்கு முன்பு தட்டுவன்கொட்டியில் அமைந்துள்ள எமது காவலரண்களைக் கைப்பற்றி பரந்தனுக்கு வர இராணுவம் முற்பட்டது. அது முக்கியத்துவம்வாய்ந்ததொருசண்டை. அந்த இடத்தில் தடுக்காதுவிட்டால் இராணுவம் பரந்தன் வரையும் வரும் ஆபத்து இருந்தது.     அந்தச் சண்டையிற் கிண்ணி தனது முத்திரையைப் பதித்தான். அதிகாலையிலிருந்து இரவுவரை வெட்டவெளியில் இராணுவத்துடன் சமர்புரிந்து, அவர்களுக்குப் பலத்த இழப்புக்களை ஏற்படுத்தி,முகாமிற்கு அடித்துக் கலைத்தவன் இவன். எண்டாலும் காரைநகர் அடி மாதிரி வராது” என்றான் கிண்ணி. உண்மையில் அது ஓர் அற்புதமான அடி. காரைநகர்ப் பாலத்தில் தங்களுக்கு அடிவரும் என்று இராணுவம் கனவுகூடக் காணவில்லை . கிண்ணி ‘சாள்ஸில் அன்ரனி சிறப்புப் படைப்பிரிவின்’ விசேட தளபதியாகப் பொறுப்பெடுத்த சில வாரங்களிற்குள், அதனைச் செய்துகாட்டினான். எந்தத் தாக்குதல் என்றாலும் வேவு நடவடிக்கையில் இறுதிவரை ஈடுபட்டு, தனக்குத் திருப்தி ஏற்பட்ட பின்னரே தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவான். காரைநகரில் நடந்த சுவையான சம்பவம் ஒன்றைக் கிண்ணி கூறினான். திடீர் அதிரடித் தாக்குதல்மூலம் இராணுவத்தை உடைத்தெறிந்துவிட்டு எதிரியின் காவலரண்களைக்கைப்பற்றி ஆயுதங்களை எடுத்தபின், தனது போராளிகளைத் திருப்பி அனுப்பிக்கொண்டிருந்தான். ஒரு மூலையிற் சாக்கொன்று குவியலாகக் கிடந்தது. போகும் அவசரத்தில் அதனைக் காலால் உதைத்துத் தள்ளியினான். உள்ளுக்குள்ளிருந்த ஏதோ பொருளொன்று காலிற்பட்டு காலை வலிக்கச்செய்தது. திறந்து பார்த்தால் அதற்குள் 60எம்.எம். மோட்டாரும் எறிகணைகளும் காணப்பட்டன (அந்தக் காலகட்டத்தில் 60எம்.எம். மோட்டார் எமக்கொரு வரப்பிரசாதமான ஆயுதமாக இருக்கக்கூடியளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது) ஜூலை மாதம் 10ஆம் திகதி. தோழன் ஒருவன் பதறியபடியே வந்தான். முகமெல்லாம் இருண்டு, கறுத்து, சோகம் அப்பிக் காணப்பட்டது. என்னிடம் வந்தவன் எதுவும் பேசாது தள்ளாடியபடியே கதிரையில் அமர்ந்துகொண்டான். ஏதாவது கேட்டால் அழுதுவிடுவான்போல இருந்தது . என்னை ஒரு மாதிரி இருக்கிறியள் ” என, நிலவிய மெளனத்தை உடைத்தவாறே கேட்டேன். கிண்ணியெல்லே.” மேலே கூறமுடியாது முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டான். உடனே எனக்கு விளங்கிவிட்டது. சில நிமிட நேரங்களிற்கு என்ன நடந்ததென்று ஜீரணிக்க முடியவில்லை . “மச்சான், மச்சான் என்று கூப்பிட்டு நெருக்கமாகவும் – அன்பாகவும் பழகிற தளபதி அவன் ‘ என்று சொல்லி, அந்தத் தோழன் கண்கலங்கினான் ஏன் டொக்டர் அன்ரியின் இடத்திற்குக் கொண்டுபோனால் அவனைக் காப்பாற்றியிருக்கலாமே? ஏதோ ஆற்றாமையினாற் கேட்டேன் இரண்டு நாளைக்கு முதல்தான் சிறுகாயப்பட்டு அன்ரியிடத்துக்குப் போனவன். அடுத்தமுறை உங்கட இடத்துக்கு வரமாட்டன் என்று அன்ரியிடம் சொன்னவனாம். சொன்னதுபோல. ” நான் காயப்பட்டு வீழ்ந்தபோது ஓடியோடி வந்து என்னைப் பார்த்தவன்; என்னைக் கவனிக்கத் தனது தாயையும் சகோதரனையும் அனுப்பியவன்; நான் யோசிக்கக்கூடாதென்று வீடியோ விளையாட்டுக் கருவியையும் றேடியோவையும் தந்தவன்; களச்செய்திகளை உடனுக்குடன் வந்து கலகலப்பாகச்செல்பவன் , இன்று இயக்கச்சிப் போர்முனையில். அவன் மெளனமாகிப் போனான் .மேஜர் ஜேம்சினைட்பற்றி நான் சிறு குறிப்பு ஒன்றை ‘ஈழநாதத்தில் எழுதியிருந்தேன். இதனைப்படித்த கிண்ணி எப்படியும் என்னைத் தேடிவருவான் என்பது எனக்குத் தெரியும். எதிர்பார்த்தபடியே அன்று இரவு கிண்ணி வந்தான். எனக்குத் தெரியும், நீங்கள்தான் இதை எழுதியிருப்பியவள்” என்றான். “உங்களை நம்பித்தான் நான் முன்னுக்குப் போறன் ‘ என்றான். “ஏன்” என்று விளங்காதவனாகக் கேட்டேன். “நான் செத்தால் நீங்கள்தான் என்னைப்பற்றி எழுதவேணும்’ என்றான் குழந்தைத்தனமாக போராட்ட வாழ்விற் சாவைப்பற்றி போராளிகள் சாதாரணமாகக் கதைப்பார்கள். சொனியும் கிண்ணியும் நானும் இறுதிக் காலகட்டத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். அப்போது மூவரும் இருந்து கதைக்கும்போது, சொனிதான் ஓரளவு காலம் உயிருடன் இருப்பான் என நாம் நம்பினோம். இதனால் எங்கள் புகைப்படங்கள் போன்றவற்றைச் சொனியிடம் கொடுத்து வைத்திருந்தோம். முதலில் கிண்ணியும்     இரண்டாவதாக நானும் மாவீரர் பட்டியலில் சேருவோம் என்று நம்பியிருந்தோம். ஆனால், நடந்ததோ வேறு. சென்ற வருட சண்டையிற் சொனி இந்தமுறை கிண்ணி; இடைநடுவில் நான். “உங்களுக்குத்தானே என்னைப்பற்றித் தெரியும்’ என்றான் கிண்ணிை. இவ்வளவு விரைவாகக் கிண்ணியைப்பற்றி நான் எழுதவேண்டிவரும் என்று நினைக்கவில்லை. இப்படி நாங்கள் கதைத்த சில நாட்களின் பின்பு, “நான் செத்தபிறகு இதை உடைத்துப் பாருங்கோ” என்று, என்னிடம் கடித உறையொன்றைக் கொண்டுவந்து தந்தான். அக்கடித உறை உடைக்காதவாறு ‘செலோ ரேப்பால் சுற்றப் பட்டிருந்தது: அதற்கு மேல் பொலித்தீனாற் சீல் பண்ணைப்பட்டிருந்தது. தரும்போது அதைப்பற்றிப் பெரிதாக நான் எதுவும் நினைக்கவில்லை . கிண்ணி வீரமரணமடைந்தபின் அதனை உடைத்தபோது, அதில் ஒரு வரலாறு இருந்தது – இந்திய இராணுவம் இந்த மண்ணைவிட்டு அவசரமாக ஓடியதன் பின்னணிகளுள் ஒன்று இருந்தது – நன்றி வேர்கள் இணையம் விடுதலைப் புலிகளின் ஓர்மமும் துணிச்சலும் திட்டமிடும் தந்திரோபாயமும் வெளிப்பட்டது நெடுங்கேணிப் பாடசாலையில் இந்திய இராணுவத்திற்குக் கொடுத்த அடியைப்பற்றி, கிண்ணி அதில் எழுதியிருந்தான்; அவன் ஒரு சிறந்த சண்டைக்காரன் மாத்திரமல்ல, சிறந்த போக்காரன் என்பதையும் நிரூபித்திருந்தான் கிண்ணியின் தமையன் முரளி வன்னியிலிருந்து வரும்போதெல்லாம், பல போராளிகளை அழைத்துத் தனது வீட்டிற்கு அறிமுகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். “நான் வராவிட்டாலும் எங்கட பெடியள் வீட்டுக்கு வருவாங்கள்; அவர்களையும் உன்ர பிள்ளைகளாய்ப் பார்” என்று முரளி தனது தாயாருக்கு அடிக்கடி கூறியிருந்தான். முரளி எப்படிக் கூறியிருந்தானோ அப்படியே கிண்ணியயும் தப்பாது கூறியிருந்தான். அந்தத் தாயும் போராளிகளில் தனது பிள்ளை, மாற்றான் பிள்ளை என்று வேறுபாடு பார்ப்பதில்லை. இந்திய இராணுவக் காலகட்டத்தின் போது, ஏராளமான போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துக் காப்பாற்றிய வீடு அது. உணவும் ஆதரவும் வழங்கிப் பராமரித்த வாசல் அது. இன்று அந்தத் தாயின் பிள்ளைகளிற் கிண்ணியும் முரளியும் திரும்பிவராத இடத்திற்குப் போய்விட்டார்கள்.மற்றப் பிள்ளைகள் வருமென்று அந்தத் தாய் காத்திருக்கிறாள்.   https://www.thaarakam.com/news/141260?fbclid=IwAR3H19-mte5EZ_Z4OdIbcLGEMlYIGVSHZ3zUtAov5jZmQK65bBc-TzSBS1E