Jump to content

சசி குற்றவாளியே !


Recommended Posts

  • Replies 67
  • Created
  • Last Reply

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு கடந்து வந்த பாதை! #Infography #DACase

இளவரசி - சசிகலா - ஜெயலலிதா - சுதாகரன் சொத்துக் குவிப்பு வழக்கு

ஜெயலலிதா, 1992-ம் ஆண்டு முதல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதிலிருந்து சசிகலா அவருடன் இருந்தார். ஜெயலலிதா செய்த ஒவ்வொரு செயலும் சசிகலாவுக்கு தெரிந்தேயிருந்தது. 1996-ம் ஆண்டு ஆட்சி மாறியபோது... ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது சுப்பிரமணியன் சுவாமி சொத்துக் குவிப்பு வழக்குத் தொடுத்தார். அப்போது, தி.மு.க ஆட்சி நடந்துவந்த சமயம் என்பதால், வழக்கை அந்தக் கட்சியே கையிலெடுத்தது. ஜெயலலிதா மீதும் சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவானது. அவர், வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. 1997-ம் ஆண்டு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். வழக்கு, பெங்களூரு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து வழக்கு நிலுவையில் இருந்துவந்த நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு தண்டனையை உறுதி செய்தது பெங்களூரு உயர் நீதிமன்றம். நால்வருக்கும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதத் தொகையும், மற்ற மூவருக்கு 10 கோடி ரூபாய் அபராதத் தொகையும் அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. 21 நாட்கள் சிறைவாசம் அனுபவித்து, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார் ஜெயலலிதா. இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன் தீர்ப்பு இன்று (14.02.17) வழங்கப்பட்டது. சசிகலா முதலமைச்சராகப் பதவியேற்க இருந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்குத் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ''ஜெயலலிதாவும் குற்றவாளிதான். ஆனால், அவர் இறந்துவிட்டதால் அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கிறோம்'' என நீதிபதிகள் கூறினர். மற்ற மூவருக்கும் 4 ஆண்டு சிறைத் தண்டனையும் 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 14 ஜூன் 1996 முதல் 14 பிப்ரவரி 2017 வரை சொத்துக் குவிப்பு வழக்கில் நடந்ததைப் பற்றித் தெரிந்துகொள்ள கீழேயிருக்கும் இன்ஃபோகிராஃபிக்கைப் பார்க்கவும்...

sasi_time_res_20484.jpg

 

சசிகலா Sasikala

 

 

http://www.vikatan.com/news/coverstory/80802-timeline-of-jayalalithaa-disproportionate-assets-case--infography-dacase.html

Link to comment
Share on other sites

 

 

 

 

 

 

 

 
Tamil_News_large_1710957_318_219.jpg
 

தகர்ந்தது சசிகலாவின் முதல்வர் பதவி கனவு தூள் தூள்!:சொத்து குவிப்பு வழக்கில்4 ஆண்டு சிறை:பதவிக்கு ஆசைப்பட்டவர் களி சாப்பிட போகிறார்:உடனடியாக பெங்களூரில் சரணடைய உத்தரவு:10ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது

 

 

 

சொத்து குவிப்பு வழக்கில்,சசிகலாவிற்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த, நான்கு
ஆண்டுகள் சிறை தண்டனையை, உச்ச நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது. இதனால்,
அவரது முதல்வர் பதவி கனவு துாள் துாளானது. அவர், உடனடியாக பெங்களூரு விசாரணை
நீதிமன்றத்தில் சரணடைந்து, சிறைக்கு செல்ல வேண்டும் என, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சிறையில் கழிக்க உள்ள நான்கு ஆண்டுகளுடன், அடுத்த ஆறு ஆண்டுகள் என, சசிகலா, 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

தமிழகத்தில், 1991 - 96ல், முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக, 66 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இவ் வழக்கில்,
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர்.

வழக்கை விசாரித்த, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, 2014 செப்., 27ல், நான்கு பேருக்கும், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன், அபராதமும் விதிக்கப்பட்டது.

தற்காலிக சுதந்திரம்

இதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. விசாரித்த தனி
நீதிபதி குமாரசாமி, அனைவரையும் விடுதலை செய்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை, நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமிதவ் ராய் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது.

இவ்வழக்கில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மறைந்த ஜெயலலிதா, வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்ட, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை, தலா, 10 கோடி ரூபாய் அபராதத்தை, உச்ச நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது.

தீர்ப்பின் விபரம்:
பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், சரியான முடிவுக்கு வந்துள்ளது என, நாங்கள் கருதுகிறோம். அந்த நீதிமன்றம் கூறியுள்ள காரணங்களை நாங்களும் ஏற்கிறோம். அதன்படி, கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு எதிராக, சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, முழுமையாக உறுதி செய்கிறோம்.இவ்வழக்கின் அம்சங்களையும், அதிலுள்ள சட்ட அம்சங்களையும்,ஜெயலலிதாவுக்கு, மற்ற மூவருடன் உள்ள பிரிக்க முடியாத தொடர்பையும், அவரது பங்கு மற்றும் அவர் தொடர்பான சாட்சியங்களையும் பரிசீலித்தோம்.

அமலுக்கு வருகிறது

இருந்தாலும், ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவர் தொடர்பான மேல்முறையீட்டு மனு விலக்கி வைக்கப்படுகிறது.எனவே, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர்களை குற்றவாளி என தீர்மானித்து, சிறப்பு
நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்கிறோம். அந்தத் தீர்ப்பு முழுமையாக அமலுக்கு வருகிறது.இவர்கள் மீதான தண்டனை அமலுக்கு வருவதால், மூவரும், பெங்களூரு
விசாரணை நீதிமன்றத்தில், நீதிபதி அஸ்வத் நாராயண் முன், உடனடியாக சரணடைய வேண்டும்.

மூவரும், தண்டனை காலத்தை அனுபவிப்பதை உறுதி செய்ய, விசாரணை நீதிமன்றம் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை நிறைவேற்றும் விதத்தில், சட்டப்படியான நடவடிக்கைகளை விசாரணை நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறுவடை ஆரம்பம்

ஜெ., மறைந்ததும், முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். சசிகலா, அ.தி.மு.க., பொதுச்செயலராக தன்னை நியமித்து கொண்டார். தீர்ப்பு வரும் முன், முதல்வராகி விட வேண்டுமென துடித்தார்.அதற்காக, முதல்வர் பன்னீர்செல்வத்தை, வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வைத்தார். பின், அ.தி.மு.க., சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஆயினும், அவர் மீதான வழக்கு காரணமாக அவரை, ஆட்சி அமைக்க அழைப்பதில் கவர்னர் தாமதப்படுத்தினார்.

இந்நிலையில் நேற்று, சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா மீதான தண்டனை உறுதியானது. இதன் மூலம் சசிகலாவின் முதல்வர் பதவி கனவு தகர்ந்துள்ளது. தண்டனை காலமான நான்கு ஆண்டுகள், அடுத்த ஆறு ஆண்டுகள் என, 10 ஆண்டுகளுக்கு, அவர் தேர்தலில் போட்டியிடவே முடியாது.

நீதிபதிகள் பயோ - டேட்டா

நீதிபதி பினாகி சந்திர கோஸ்

இவர், 1952 மே, 28ல் பிறந்தார். கோல்கட்டா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, ஷம்பு சந்திரகோஸ் என்பவரின் மகன். கோல்கட்டா சேவியர் கல்லுாரியில், பட்டப்படிப்பும், கோல்கட்டா பல்லையில் சட்டப்படிப்பும் முடித்தார்.

1976 நவ., 30ல், மேற்கு வங்க, 'பார் கவுன்சிலில்' பதிவு செய்தார். பின், 1997 ஜூலை,
17ல், கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியானார். 2012 டிச., 12ல், ஆந்திர
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார். 2013 மார்ச், 8ல், உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார்.

நீதிபதி அமிதவ் ராய்

இவர், 1953 மார்ச், 1ல், கோல்கட்டாவில் பிறந்தார். இவரும், சட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் தான். திப்ருஹார்க் பல்கலையில், இயற்பியல் பட்டம் பெற்று, எல்.எல்.பி., பட்டம் பெற்றார். 1976 பிப்., 20ல், அசாம், 'பார் கவுன்சிலில்' பதிவு செய்தார்.திப்ருஹார்க், தின்சுகியா மாவட்ட நீதிமன்றங்களில், 1976 - 81 வரை, வழக்கறிஞராக பயிற்சி பெற்றார். பின், கவுகாத்தி உயர் நீதிமன்ற வழக்கறிஞரானார். 1991 - 96 வரை, அருணாச்சல் அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார்.
பின், அசாம் சட்டக் கமிஷனில் உறுப்பினரானார்.

1999 ஜூன், 3ல், கவுகாத்தி உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞரானார். 2002 பிப்., 4ல், கவுகாத்தி நீதிமன்ற நீதிபதியானார். 2013 ஜன., 2ல், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். 2014 ஆக., 6ல், ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியானார். 2015 பிப்., 27ல், உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார்.

சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதி கிடைக்குமா?

* சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியானதும், கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள போலீசார், பாதுகாப்பை தீவிரப்படுத்தினர்
* சசிகலா, இளவரசி, சுதாகரன் சரணடைவது எங்கே என்பது குறித்து, பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட் பதிவாளர், கே.எம்.ராதாகிருஷ்ணனுடன், போலீஸ் உதவி கமிஷனர் திம்மய்யா, பரப்பன அக்ரஹாரா இன்ஸ்பெக்டர் கிஷோர் ஆகியோர், ஆலோசனை நடத்தினர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு நகல் கிடைத்த பின், போலீசாருடன் மீண்டும் ஒருமுறை ஆலோசனை நடத்தி, கோர்ட் முடிவெடுக்கும் என, தெரிகிறது
* 'சுப்ரீம் கோர்ட், குறிப்பிட்ட காலத்திற்குள், சசிகலா, இளவரசி, சுதாகரன் சரணடையா விட்டால், கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும் வாய்ப்புள்ளது' என, மூத்த வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்
* பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், சசிகலாவுக்கு, எந்தவித சிறப்பு வசதியும் அளிக்கப்படாது.
சாதாரண கைதி போன்றே நடத்தப்படுவார். பெண் கைதிகள் அடைக்கப்படும் சிறையில், சசிகலா மற்றும் இளவரசியும், ஆண்கள் சிறையில், சுதாகரனும் அடைக்கப்படுவர்
* சொத்து குவிப்பு வழக்குக்கு, கர்நாடக அரசு செலவழித்த தொகை, 5.36 கோடி ரூபாய். 'இந்த தொகையை, அபராதத் தொகையிலிருந்து பிடித்தம் செய்து, கர்நாடக அரசுக்கு வழங்கலாம்' என, வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1710957

Link to comment
Share on other sites

சொத்துக்குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றத் தீர்ப்பிலிருந்து சில துளிகள்

 
ஜெயலலிதாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

சொத்துக்குவிப்பு வழக்கில், விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனைத் தீர்ப்பை முழுவதுமாக இந்திய உச்சநீதிமன்றம் இன்று(14.2.2017) உறுதி செய்துள்ளது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

1.ஜெயலலிதாவின் வருமானத்துக்கு மீறிய சொத்துக்களின் மதிப்பு அவரது வருமானத்திற்கு மேல் 8.12 சதவீதம்தான் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கூறி அதனடிப்படையில் விடுதலை செய்தது தவறு.

2.ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நால்வரும் கிரிமினல் சதி செய்து அதன் பலனாக, அரசு பதவியில் இருந்த ஜெயலலிதா அவரது வருமானத்திற்கு மீறிய சொத்துக்களை குவித்தார் என்பது நிரூபணமாகிறது.

3. இந்தக் குற்றத்தை அரச பதவியில் இருக்கும் ஒருவர் செய்ய, மற்ற மூவரும் துணை நின்றனர்.

4.ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய அரச பதவியில் இருந்த நபர் இறந்து விட்டார் என்ற ஒரு காரணத்தால், அவர் மீதான மேல் முறையீடு நின்று போகலாமே தவிர, அவருக்கு இந்த குற்றத்தை செய்ய துணை நின்ற மற்றவர்கள் விசாரணை நீதிமன்றத்தில் தீர்ப்பளித்தபடி தண்டிக்கப்படவேண்டும்.

5.ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு தன் சார்பாகச் செயல்பட சசிகலாவுக்கு ஜெயலலிதா பவர் பத்திரம் எழுதித் தந்தது , அவர் தன்னை சட்டச்சிக்கல்களில் இருந்து விடுவித்துக் கொள்ளவே.

6.இந்த 91-96 காலகட்டத்தில் பல்வேறு நிறுவனங்கள் நிறுவப்பட்டது, குற்றம் சாட்டப்பட்டவர்களால் செய்யப்பட்ட ஒரு கிரிமினல் சதியாகவே பார்க்கப்படும். ஒரே நாளில் 10 கம்பெனிகளையெல்லாம் பதிவு செய்திருக்கிறார்கள். சொத்துக்களை வாங்கியதைத் தவிர இந்த கம்பெனிகள் ஒரு வியாபரத்தையும் செய்யவில்லை.

7.இந்த கம்பெனிகள் எல்லாம் ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து இயங்கின. எனவே, அந்த நிறுவனங்கள் இயங்கியது தனக்குத் தெரியாது என்று ஜெயலலிதா சொல்ல முடியாது.

8.சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் தங்களுக்கென்று தனியாக வருமானம் இருந்தது என்று கூறினாலும், அவர்கள் ஜெயலலிதாவால் தரப்பட்ட பணத்திலிருந்து ஏராளமான சொத்துக்கள் வாங்கியதும், கம்பெனிகளை நிறுவியதும் , அவர்கள் போயஸ் தோட்ட இல்லத்தில் வசித்தது, ஏதோ நட்பு ரீதியில் அல்ல , ஒரு கிரிமினல் சதியின் அங்கமாகவே கூடினர்.

9.அவர்கள் வைத்திருந்த பல்வேறு வங்கிக்கணக்குகளில் ஒன்றிலிருந்து மற்றவற்றிற்கு பணத்தை தாராளமாக புழங்கியது , ஜெயலலிதாவின் தவறாகச் சேர்த்த பணத்தை சட்டபூர்வமானதாக மாற்றி, இந்த நிறுவனங்கள் பெயரில் சொத்துக்களை வாங்குவதற்காகவே.

10.ஜெயலலிதாவின் பிரதிநிதி வருமான வரித்துறையின் முன் சமர்ப்பித்த மனுவில், ஜெயலலிதா, சசி எண்டர்பிரைஸஸ் நிறுவனத்துக்கு 1 கோடி ரூபாய் தனது பணத்தை பங்கு மூலதனமாக கடனாக வழங்கியதை ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்த முதலீட்டை ஈடாக வைத்து, ஜெயலலிதா கடன் வாங்கியிருக்கிறார். எனவே ஜெயலலிதா இந்த நிறுவனங்களில் சம்பந்தப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

சசிகலா உட்பட மூவருக்கு நான்காண்டுகள் சிறை

சசிகலாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிலிருந்து சில துளிகள்

விசாரணை நீதிமன்றத்தில் அரசு தரப்பு குற்றச்சாட்டுகள்:

1.1987 வரை ஜெயலலிதாவுக்கு இருந்த சொத்து மதிப்பு 7.5 லட்சம் ரூபாய்

2.1991 ஜுன் மாதம் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு இருந்த சொத்தின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய்.

3.1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் நடத்தியதாகக் கூறப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை - 32. இவை அனைத்தும் சசிகலா, இளவரசி, சுதாகரன் பெயர்களில் இருந்தன.

4.இந்த நிறுவனங்கள் எதுவும் உருப்படியாக எந்த ஒரு தொழிலையும் செய்யவில்லை. வரி ஏதும் கட்டவில்லை.

5.ஜெயலலிதாவும் 1987-88லிருந்து 1992 நவம்பர் வரை வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யவில்லை. நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்வி கேட்டவுடன் 1992 நவம்பரில் வரி கணக்கை தாக்கல் செய்தார்.

6.1.7.91லிருந்து ஜெயலலிதா பெயரில் மட்டுமல்லாமல், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெயர்களிலும் சொத்துக்கள் வாங்கிக் குவிக்கப்பட்டன. இவர்கள் வருமானத்துக்கோ அல்லது இந்த நிறுவனங்களின் வருமானத்துக்கோ பொருந்தாத வகையில் சொத்துக்கள் வாங்கப்பட்டன.

7.இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வாழ்ந்தார்கள் என்பதையும், முதல் குற்றம் சாட்டப்பட்ட நபரான, ஜெயலலிதா முதல் அமைச்சராகப் பதவி வகித்தார் என்பதையும் வைத்துப் பார்த்தால், இவை அனைத்தும் ஜெயலலிதா சேர்த்த சொத்துக்களே என்பது புலனாகிறது.

8.முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கும் அவரது கூட்டாளிகளான சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு இடையே ஏற்பட்ட கிரிமினல் சதியை அடுத்து அவர்கள் நால்வரும் சுமார் ரூ 66.65 கோடி மதிப்புள்ள சொத்துக்களை குவித்தனர். இது இந்த காலகட்டத்தில் (1.7.1991 to 30.4.1996) அவர்களுக்கிருந்த தெரிந்த வருமான ஆதாரங்களைக் காட்டிலும் மிகவும் அதிகமானது.

http://www.bbc.com/tamil/india-38966364

Link to comment
Share on other sites

கொடூரமான நோயாக ஊழல் பரவியுள்ளது
சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் வேதனை
 
 
 

புதுடில்லி:'ஊழல் என்பது அனைத்து துறைகளி லும் கரைபுரண்டோடி கொண்டிருக் கிறது; மிகக் கொடூரமான நோயாக இது பரவியுள்ளது. நாட்டின் சுதந்திரத்துக்காக போராடியது போல், ஊழலுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்தை நடத்த வேண்டும்' என, சொத்துக் குவிப்பு வழக்கில் அளித்துள்ள தீர்ப்பில், சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

 

Tamil_News_large_171096320170215000432_318_219.jpg

ஜெயலலிதா, சசிகலாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், நீதிபதிகள், பினாகி சந்திர கோஷ், அமிதவ ராய் அடங்கிய அமர்வு, நேற்று தீர்ப்பு அளித்தது.வழக்கின் தீர்ப்புடன், ஏழு பக்கங்கள் அடங்கிய இணைப்பு தீர்ப்பையும் அமர்வு அளித்துள்ளது. அதில், இந்த தீர்ப்பு அளிக்கும் முடிவை எடுத்ததற்கான காரணங்கள் கூறப்பட்டுள்ளது;
அமர்வின் சார்பில், நீதிபதி, அமிதவ ராய் கூறியுள்ளதாவது:

* இந்த வழக்கின் விசாரணையின்போது, எங்கள் மனதில் அமைதியுடன் அலைபாய்ந்து கொண்டிருந்த சில கருத்துக்களை இங்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதனால் தான், இந்த இணைப்பு தீர்ப்பு

* இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வாதங்கள், ஆதாரங்கள் உள்ளிட்டவை, எவ்வளவு ஆழமாக திட்டமிட்டு, மிகப் பெரிய அளவில் சொத்து குவித்ததுடன், அவற்றை

போலியான நிறுவனங்களின் பெயருக்கு மாற்றி யுள்ளனர் என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது; இது, நம் சட்டங்களை, நடைமுறைகளை நீர்த்து போகும் வகையிலான திட்டமிட்ட சதி

* இவ்வாறு பெரும் சொத்தைமோசடி வழியில் சம்பாதிக்க, இந்த வழக்கில் செய்யப்பட்டுள்ள பல நவீன, புதுமையான வழிமுறைகள், அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன

* ஒரு ஆக்டோபஸ் போல, தன்னுடைய பல கை களை விரித்து, இந்த ஊழல், அனைத்து துறைகளி லும், அனைத்து நிலைகளிலும் பரவியுள்ளதை, அமைதியாக நிராயுதபாணியாக வேடிக்கை பார்க்கும் நிலைக்கு இன்றைய சமூகம் தள்ளப்பட்டுள்ளது

* சரியான கண்காணிப்பு நடவடிக்கை இல்லாத நிர்வாகத்தால், எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லா மல் செய்யப்படும் ஊழல், நாட்டின் அடித்தளம் வரை அனைத்து தரப்பிலும், தேசத்தின் இழையாக மாறியுள்ளதை நாம் அன்றாட வாழ்வில் பார்த்து வருகிறோம்

* இந்த ஊழல்வாதிகளின் நடவடிக்கைகள், நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையை நடத்த முடி யாத அளவுக்கு மூச்சு திணறும் அளவுக்கு பரவியுள்ளது

* இந்த சூழ்நிலையில்தான், ஊழல் எதிர்ப்பு சட்டத் தின் அடிப்படையில்,குறிப்பிட்ட காலத்துக்குள் நல்ல நீதியை அளிக்க வேண்டிய கடமை, நீதித் துறைக்கு உள்ளது

* இந்நிலையில், ஊழலில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதி கள், அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் அளித்த உறுதி மொழியை மட்டும் மீறவில்லை; மக்களின் நம்பிக்கையையும் மீறுகின்றனர்

 


* இவர்களின் நடவடிக்கைகள், நீதி, சுதந்திரம், மற்ற வர்களை மதிப்பது, ஒற்றுமை, நேர்மை, நியாயம் போன்றவற்றை கொள்கையாக வைத்துள்ள பெரும்பாலான மக்களையும் அவமதிக்கிறது

* நல்ல கோட்பாடுகளுடன், நாட்டை மேம் படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் உள்ள வர்களைவிட, இதுபோன்ற ஊழல்வாதி கள் அதிக அதிகாரம், அந்தஸ்து, வெற்றி பெறுவது, நாட்டின் அஸ்தி வாரத்தையே ஆட்டிவிடும்

* ஊழல் எனும் பயங்கரவாத ஆதிக்கத்துடன் உள்ளவர்களால், பெரும்பான்மையாக உள்ள நல்ல சிந்தனையாளர்களுக்கு சிறுபான்மை யினராகி விடுவோமோ என, அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது

* மிகவும் ஸ்திரமான, சிறந்த சமூகத்தை உருவாக்க வேண்டுமானால், ஊழல் எனும் இந்த கொடூர அரக்கனுக்கு எதிராக அனைத்து மக்களும் இணைய வேண்டும்

* சுதந்திர இந்தியாவுக்காக போராடியது போல, இந்த ஊழலுக்கு எதிராகவும் மிகப் பெரிய போராட்டத்தில், தன்னலம் இல்லாமல் அனைவரும் ஈடுபடும்.இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1710963

Link to comment
Share on other sites

தூண்டுதல்!
ஜெ., குற்றம் புரிவதற்கு
சசிகலா தூண்டுதலாக இருந்தார் :
உச்ச நீதிமன்ற தீர்ப்பு முழு விபரம்
 
 
 

சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த சிறை தண்டனை மற்றும் அபராதத்தை ரத்து செய்து, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதை எதிர்த்து, கர்நாடக அரசும், தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகனும், உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

 

Tamil_News_large_171092520170215004142_318_219.jpg

மனுக்களை விசாரித்த, நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வ ராய் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:இந்த வழக்கில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் பின்பற்றிய நடைமுறையில் குற்றம் காண முடியாது. அவசர சட்டத்தின் மூலம் மாவட்ட நீதிபதிக்கு உள்ள அதிகாரங்கள், சிறப்பு நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டன.

முடக்கி வைத்துள்ள சொத்துக்களை பறிமுதல் செய்ய, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது மீண்டும் அமலுக்கு வருகிறது. சிறப்பு நீதி மன்றத்தின் உத்தரவை, இந்த நீதிமன்றத் தின் உத்தரவாகவும் கருத வேண்டும். இவ்வழக் கின் தன்மை, சூழ்நிலை, அனைத்து சாட்சியங்களை யும் பரிசீலித்த பின், கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஏற்கத்தக்கதல்ல என்ற முடிவுக்கு வருவதில் எங்களுக்கு எந்த தயக்க மும் இல்லை. அதனால், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்கிறோம்.
 

கணக்கில் தவறு


வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பின் சதவீதம், 8.12 என, கர்நாடக உயர் நீதிமன்றம் கணக்கிட்டுள்ளது. சாட்சியங்களை தவறாக புரிந்து கொண்டதன் அடிப்படையிலும், கூட்டல் மற்றும் கழித்தல் கணக்கில் தவறு செய்ததா லும், 8.12 சதவீதம் என கணக்கிடப்பட்டு
உள்ளது.

வழக்கின் சாட்சியங்கள், சொத்து குவிப்பை உறுதி செய்துள்ளதால் மீண்டும் சதவீத கணக்கை கணக்கிடுவது அவசியமற்றது. எப்படி இருந்தாலும், கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இந்த வழக்குக்கு பொருந்தாது. எனவே, அந்த தீர்ப்பின் பலன்களை, எதிர் தரப்பினர் பெற முடியாது.

இரண்டு நீதிமன்றங்களும், அனைத்து சொத்துக் களையும், வருமானம், செலவு விபரங்களையும் பரிசீலித்துள்ளது. வழக்கில் சம்பந்தப்பட்டவர் கள் அளித்த சாட்சியங்களை நாங்கள் ஆராய்ந்தோம்.

கூட்டு சதி அம்பலம்


ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கூட்டு சதி செய்து அதன் தொடர்ச்சி யாக, பொது ஊழியராக ஜெயலலிதா இருந்த கால கட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிக்கப்பட்டது என்ற முடிவுக்கு வருகிறோம்.முதல்வராக ஜெயலலிதா இருந்த கால கட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்து, அவர் சார்பாக சசிகலா, சுதாகரன், இளவரசி மற்றும் நிறுவனங்கள் பெயர்களில் வைத்து கொண்டு, தன்னை மறைத்து கொண்டுள்ளார்.

ஜெயலலிதா குற்றம் புரிவதற்கு, சசிகலா, சுதாகரன், இளவரசி துாண்டுதலாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தண்டனைக்கு உரியவர்கள்


பொது ஊழியரான ஜெயலலிதா மறைந்து விட்டார் என்பதால் அவருக்கு எதிரான மேல்முறையீடுகள் விலக்கப்பட்டுவிட்டன; ஆனாலும், சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தண்டனைக்கு உரியவர்கள் தான்.குற்றத்துக்கு உடந்தையாக இருந்தனர் என்பதற்காக, தனிப் பட்ட நபர்கள் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடியும் என, சிறப்பு நீதிமன்றம் சரியான முடிவுக்கு வந்துள்ளது.

குற்ற சதி, துாண்டுதல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்கில் உள்ள சாட்சியங்களை ஆராய்ந்த பின், சிறப்பு நீதிமன்றம், சரியான காரணங்களை கூறியுள்ளது. கீழ்கண்ட சூழ்நிலைகளை பார்க்கும் போது அது தெளிவாகும்.

* 'ஜெயா பப்ளிகேஷன்ஸ்' நிறுவனம் தொடர் பாக, சசிகலாவுக்கு, 'பவர் ஆப் அட்டர்னி'யை ஜெயலலிதா வழங்கி உள்ளார். இது, சட்ட நடவடிக்கைகளில் இருந்து தன்னை பாதுகாத்து கொள்வதற்காக தான் என்பதை உணர்த்துகிறது நன்கு தெரிந்தும், பொது அதிகாரத்தை சசிகலா வுக்கு ஜெயலலிதா வழங்கி உள்ளார். அந்த அதிகாரத்தின் படி, 'ஜெயா பப்ளிகேஷன்ஸ்' நிறுவனத்தின் கணக்கில் வரவு வைக்கப்படும் தன் நிதியை, சசிகலா கையாள்வார் என்பது நன்கு தெரிந்தும், பொது அதிகாரத்தை வழங்கி உள்ளார்

* முதல்வராக இருந்த கால கட்டத்தில், பல நிறுவனங்களை துவங்கியதன் மூலம் இவர் களுக்கு இடையேயான கூட்டு சதி உறுதியாகி றது. ஒரே நாளில், 10 நிறுவனங்கள் துவங்கப் பட்டுள்ளன. அதுதவிர, சசிகலாவும், சுதாகரனும், தனியாக நிறுவனங்களை துவங்கி உள்ளனர். இந்த நிறுவனங்கள், சொத்துக்கள்

வாங்கியது தவிர வேறு எந்த வணிக நடவடிக்கை யும் மேற்கொள்ளவில்லை.

இந்த நிறுவனங்கள் எல்லாம், 'நமது எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயா பப்ளிகேஷன்ஸ்' நிறுவனங் களின் விரிவாக்கம் என்பதும், ஜெயலலிதா, சசிகலா விருப்பப்படி இந்த நிறுவனங்கள் வந்தன என்பதும் சந்தேகத்துக்கு இடமின்றி, சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

* நிறுவனங்கள் எல்லாம் ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து தான் இயங்கி உள்ளன; இதெல்லாம் தனக்கு தெரியாது; சசிகலா, சுதாகரன், இளவரசியின் நட வடிக்கைகள் பற்றி தனக்கு தெரியாது என, பாசாங்கு செய்வதை ஏற்க முடியாது. மூவரும், ஜெயலலிதா வுடன் வசித்து வந்தனர். இவர்களுக்கு, ஜெயலலிதா வுடன் ரத்த சம்பந்தமான உறவும் இல்லை

* சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தனிப்பட்ட முறையில், வருவாய் ஆதாரம் இருப்பதாக கூறியுள்ளனர். ஆனால், நிறுவனங்கள் துவங்கப்பட்டு, ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட பணத்தில் ஏராளமான நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும், ஜெயலலிதாவின் வீட்டில் கூட்டாக இருந்துள்ளனர். மனிதாபிமான முறையில் இவர்களை அங்கு சுதந்திரமாக தங்க வைத்தார் எனக் கூற முடியாது. வழக்கின் தன்மை,சூழ்நிலையை பார்க்கும்போது, கூட்டு சதி செய்ததன் தொடர்ச்சியாக, ஜெயலலிதா வின் சொத்துக்களை வைத்து கொள்வதற்காக, அவரது வீட்டில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது

* வருமான வரி அதிகாரிகளிடம், ஜெயலலிதாவின் பிரதிநிதி ஆஜராகி, 'சசி என்டர்பிரைசஸ்' நிறுவனத் துக்கு, 1 கோடி ரூபாயை பங்கு மூலதனமாக, ஜெயலலிதா வழங்கினார் என்றும், பின் அந்தப் பணத்துக்கு உத்தரவாதமாக, ஜெயலலிதா கடன் பெற்றதாகவும் கூறியுள்ளார். எனவே, இந்த நிறுவனங்களுடன் தொடர்பில்லை என, ஜெயலலிதா கூற முடியாது.

* ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்குக்கு வந்த பணத்தை பார்க்கும் போது, தீய வழியில் ஜெயலலிதா சேர்த்த செல்வத்தை வைத்து, நிறு வனங்கள் பெயர்களில் சொத்துக்களை வாங்கு வதற்காக, தீவிர சதி நடந்து இருப்பது உறுதியாகிறது.

* நான்கு பேருக்கும் இடையில் நடந்த கூட்டு சதி, சென்னை வடக்கு கடற்கரை, சார் பதிவாளர் அளித்த சாட்சியம் மற்றும் தோட்டக்கலை அதிகாரி ராதாகிருஷ்ணன் அளித்த சாட்சியம் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, சிறப்பு நீதிமன்றம் முடிவுக்கு வந்த காரணங்கள் சரியானது; அதை நாங்களும் ஏற்கிறோம்.இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

பரபரப்பான 8 நிமிடங்கள்


சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு, பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், எட்டே நிமிடங்களில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.நீதிபதிகள், பினாகி சந்திர கோஷ், அமித்வராய் ஆகியோர், காலை 10:32க்கு, கோர்ட் எண், 6க்கு வந்தனர். வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் என, கோர்ட் நிரம்பி வழிந்தது.

மொத்தம், 507 பக்கங்கள் அடங்கிய பார்சலை, கோர்ட் ஊழியர்கள் பிரித்தனர். அதன்பின், சில வினாடிகள் நீதிபதிகள் தங்களுக்குள் பேசினர். அமர் வின் சார்பில், நீதிபதி கோஷ் தீர்ப்பை வாசித்தார். எட்டு நிமிடங்களுக்குள், சரியாக, 10:40க்கு தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதுவரை அமைதியாக இருந்த பத்திரிகையாளர்கள், உடனடியாக செய்தி அளிப் பதற்காக, கோர்ட் அறையில் இருந்து வேகமாக வெளியேறினர்.
 

ஜெ., சொத்தை பறிக்க திட்டம்


மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான், இந்த வழக் கின் முதல் குற்றவாளி. அவர் மரணம் அடைந்துள்ள தால், வழக்கில் அவருக்கு தீர்ப்பு அறிவிக்கப்பட வில்லை.இருப்பினும், பெங்களூரு சிறப்பு கோர்ட் அளித்த தீர்ப்பை உறுதி செய்வதாக, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளதால், இது, ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா குறித்து, தீர்ப்பின் பல இடங்களில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சசிகலா உள்ளிட்டோர் குறித்தும் கடும் விமர்சனம் இடம்பெற்றுள்ளது. அதில், ஜெயலலிதாவின் சொத்துக்களை பறிக்க வேண்டும் என்பதற்காகவே, அவரது வீட்டில் இவர்கள் வசித்து வந்தனர்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சசிகலா ஜெ.,வாக முடியாது


பா.ஜ., பொதுச்செயலரும், கட்சியின் தமிழக பொறுப்பாளருமான, முரளிதர ராவ் கூறியதாவது:
இந்த தீர்ப்பு, சசிகலாவின் முதல்வராகும் எண்ணத்தை தவிடுபொடியாக்கி உள்ளது. தனக்கு பதிலாக மற்றொருவரை, தன் சார்பில் ஆட்சி செய்ய வைக்க முயற்சிக்கிறார். கட்சியின் தலைவராக அவர் இருக்கலாம். ஆனால், எப்போதும், சசிகலா வால், ஜெயலலிதா ஆக முடியாது. ஜெயலலிதா வுக்கு மக்கள் ஆதரவு இருந்தது.

தற்போது அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பையும், கவர்னர் வித்யாசாகர் ராவ் கவனத்தில் கொள்ள வேண்டிய கட்டாயம்ஏற்பட்டுள்ளது. வெறும் எண்ணிக்கை மட்டுமே நல்ல அரசு அமைக்க உதவாது; நம்பகத் தன்மையும், மக்களின் ஆதரவும் தேவை. மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி, கவர்னர் செயல்படுவார் என, நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

சொத்துகள் வாங்குவதற்காகவே நிறுவனங்கள் துவக்கம்:தீர்ப்பு முழு விபரம்

ஜெயலலிதா, சசி, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான, குற்ற சதி என்கிற குற்றச்சாட்டை பொறுத்த வரை, இந்திய தண்டனை சட்டத்தில் கூறியுள்ள சாராம்சங்களை, சிறப்பு நீதிமன்றம் கவனித்துள்ளது.

 

அரசு தரப்பு சாட்சியங்களை முழுமையாக, சிறப்பு நீதிமன்றம் ஆராய்ந்துள்ளது.

ஜெ., முதல்வராக இருந்த கால கட்டத்தில், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கான வருவாய் ஆதாரம், வாங்கிய சொத்துகளின் மதிப்புக்கு இணையாக இல்லை என்பதை கண்டுபிடித்துள்ளது.அதற்கு ஆதாரமாக, சிலரது வாக்குமூலங்கள்மற்றும் ஆவண சாட்சியங் களை பரிசீலித்துள்ளது. அதில் இருந்து, இந்த அளவுக்கு அவர்கள் பெயர்களிலும், நிறுவனங் களின் பெயர்களிலும், சொத்துகள் வாங்கு வதற்கு, வருவாய் ஆதாரம் இல்லை என்பது தெரிகிறது.

சுதாகரன் வாங்கிய சொத்துகள், அவரது பெயரிலோ, அவர் தொடர்புடைய நிறுவனங்கள் பெயர்களிலோ உள்ளன. அவரது வருமானம், செலவை பார்க்கும் போது, கனரா வங்கி, மயிலாப்பூர் கிளை அதிகாரியின் சாட்சியத்தை, சிறப்பு நீதிமன்றம் பரிசீலித்துள்ளது.

சேமிப்பு கணக்கு துவங்க, போயஸ் கார்டன் முகவரியை, சுதாகரன் கொடுத்துள்ளார். 1996 ஏப்ரலில், அவரது கணக்கில், 61 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. அதுவே, 1992ல், ஐந்து லட்சம் ரூபாயை, கணக்கில் அவர் செலுத்தி உள்ளார். அதே போயஸ் கார்டன் முகவரியை வைத்து, நடப்பு கணக்கையும், சுதாகரன் துவங்கி உள்ளார்.

இந்த கணக்கு, 1993ல், 501 ரூபாய் செலுத்தி துவங்கப்பட்டது. சசிகலா, அறிமுகப்படுத்தி உள்ளார். 1994 செப்டம்பரில், 4.10 லட்சம் ரூபாய், இதே கணக்கில், 'டிபாசிட்' ஆக வந்துள்ளது.இதே கணக்கில், 26 ஆயிரம் ரூபாய் முதல், 11 லட்சம் ரூபாய் வரை, டிபாசிட் செய்யப்பட்டு உள்ளது. அந்த பணம், சசிகலா பெயரில் உள்ள கணக்கிலும், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்களில் இருந்தும் வந்துள்ளது.

முதல்வராக இருந்த கால கட்டத்தில், பல நிறுவனங்கள் துவங்கியது, இவர்களுக்கு இடையேயான சதி திட்டத்தை நிரூபிப்பதாக உள்ளது.

முதலில், 'ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி என்டர் பிரைசஸ்' நிறுவனங்களில், ஜெயலலிதா, சசிகலாவுக்கு தொடர்பு இருந்தது. அதன்பின், 21 நிறுவனங்கள் வரை துவங்கப்பட்டன. இந்த நிறுவனங்கள் எதுவும், வர்த்தக நடவடிக்கை களை மேற்கொள்ளவில்லை.ஒரே நாளில், ஒரே மாதிரியான அம்சங்கள் கொண்ட, 10 நிறுவனங்கள் துவங்கப்பட்டன. சசிகலாவும், சுதாகரனும் தனிப்பட்ட நிறுவனங்களை துவங் கியது மட்டுமல்லாமல், செயல்படாத நிறுவனங்களையும் வாங்கி உள்ளனர்.

இந்நிறுவனங்கள், சொத்துகளை வாங்கியதே தவிர, வேறு எந்த வர்த்தக நடவடிக்கைகளை யும் மேற்கொள்ளவில்லை.சிறப்பு நீதிமன்றம், சாட்சியங்களை விரிவாக ஆராய்ந்து, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததை உறுதி செய்துள்ளது. ஜெ., பெயரில், கணக்கில் காட்டப்படாத சொத்தின் மதிப்பு, 53.60 கோடி ரூபாய் என்பதை, சந்தேகத்துக்கு அப்பால், அரசு தரப்பு நிரூபித்துஉள்ளது. மிகவும் உன்னிப்பாக, கவனத்துடன், சிறப்பு நீதிமன்றம் ஆராய்ந்து, சொத்துகளின் மதிப்பை உறுதி செய்துள்ளது. சேலைகளின் மதிப்பு, 32 லட்சம் ரூபாயை, சிறப்பு நீதிமன்றம் சேர்க்கவில்லை.

மேலும், தங்கம் மற்றும் வைரத்தின் மதிப்பை யும், இரண்டு கோடி ரூபாய் அளவில் குறைத் துள்ளது. திருமண செலவை, 50 சதவீதத்துக்கும் மேல் குறைத்துள்ளது. 20 சதவீத தேய் மானத்தை அனுமதித்து, கட்டு மானங்களின் மதிப்பில் தள்ளுபடி செய்துள் ளது.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதா உள் ளிட்ட நான்கு பேரையும், கர்நாடக ஐகோர்ட் விடுதலை செய்தது. சட்ட நிபுணர்களின் அறிவுரைப்படி, மேல்முறையீடு செய்தோம். கர்நாடக தரப்பு வழக்கறிஞர்கள் சிறப்பாக வாதாடினர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற் கிறோம். தீர்ப்பை முழுமையாக படிக்க வில்லை. சட்டப்படி, அடுத்தகட்ட நடவடிக் கையை மேற்கொள்வோம்.

டி.பி.ஜெயச்சந்திரா,

கர்நாடக சட்ட அமைச்சர், காங்.,

திருப்திகரமான தீர்ப்பை வரவேற்கிறேன். பெங்களூரு கோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும், என் வாதத்தை எடுத்துரைத்தேன். கிடைத்த அவகாசத்தை பயன்படுத்தி, வழக்கில் நடந்த முறைகேடுகளை விளக்கினேன். பெங்களூரு கோர்ட்டில் ஆஜரான போது, சில சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இரு அமர்வு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியதால், சசிகலா தரப்பி னர், மேல்முறையீடு செய்ய வாய்ப்பில்லை.

-பி.வி.ஆச்சார்யா, சொத்து குவிப்பு வழக்கில் ஆஜரான, கர்நாடக அரசு வழக்கறிஞர்

-நமது நிருபர்-

http://www.dinamalar.com/news_detail.asp?id=1710925

Link to comment
Share on other sites

ஜெ. உயிருடன் இருந்திருந்தாலும் இதுதான் தீர்ப்பு!- ஆச்சார்யா

 

 
 
பி. வி. ஆச்சார்யா
பி. வி. ஆச்சார்யா
 
 

சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா பேட்டி

21 ஆண்டுகளாக நடந்துவந்த சொத்துக்குவிப்பு வழக்கின் போக்கை மாற்றியவர்களில் முக்கியமானவர் ஆச்சார்யா. ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என அறிவித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் அரசு வழக்கறிஞராக ஆஜரானவர். இவ்வழக்கில் இறுதிவரை உறுதியாக நின்று வெற்றி பெற்றிருக்கும் ஆச்சார்யாவை பெங்களூருவில் சந்தித்துப் பேசினேன்.

1. எப்படி உணர்கிறீர்கள்?

இந்த நிமிடம் எனது மனதில் இருக்கும் உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், விடுதலை கிடைத்ததைப் போல உணர்கிறேன். இவ்வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கி, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, கர்நாடக உயர் நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என கடந்த 21 ஆண்டுகளாகப் பயணித்திருக்கிறது. பிரபலமான அரசியல்வாதிகள், பெரிய வழக்கறிஞர்கள், நூற்றுக்கணக்கான சாட்சியங்கள், ஆயிரக்கணக்கான சான்றுகள், லட்சக்கணக்கான ஆவணங்கள் என இந்த வழக்கு மிகப் பெரிதாக உருவெடுத்திருந்தது. பல ஆண்டுகளாகத் தொடர்ந்த விசாரணை, குறுக்கு விசாரணை, இறுதிவாதம் என நீண்ட இவ்வழக்கில், இறுதியாக நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவ் வழக்கில் இடைவிடாமல் பணியாற்றினேன். உண்மையான உழைப்புக்குப் பலன் கிடைத் திருக்கிறது. இது இந்திய நீதித் துறைக்குக் கிடைத்த வெற்றி!

2. நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு நிராகரிக்கப்பட்டு, வயதிலும் அனுபவத்திலும் குறைந்தவரான நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறதே?

நான் இன்னும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பை முழுமையாகப் படிக்கவில்லை. வழக்கறிஞர் என்ற முறையில் ஒரு நீதிபதியின் தீர்ப்பை விமர்சிப்பதை விரும்பவில்லை. நீதியை நிலைநாட்டுவதற்கு வயதும், அனுபவமும், பெரிய பொறுப்பும் தேவைப்படாது.

3. சசிகலா தரப்பு இனிமேல் முறையீடோ, சீராய்வு மனுவோ தாக்கல் செய்ய முடியாதா? சசிகலாவின் முதல்வர் கனவு?

என்னைப் பொறுத்தவரை உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகளின் ஒருமித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது. தேவைப்பட்டால் தீர்ப்பைச் சீராய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்யலாம். அதில் எதிர்த் தரப்புக்கு எந்த வகையில் வெற்றிவாய்ப்பு இருக்கும் என்பதை உச்ச நீதிமன்றம்தான் முடிவுசெய்ய முடியும். இப்போதைய தீர்ப்பின்படி குறைந்தது 10 ஆண்டுகளுக்கு சசிகலா முதல்வராக முடியாது.

4. ஒருவேளை ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால், இந்த வழக்கின் தீர்ப்பு வேறு மாதிரியாக வந்திருக்கும் என்கிறார்களே?

அதெல்லாம் கற்பனை. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதுதான் நீதிபதி குன்ஹா அவருக்குத் தண்டனை வழங்கினார். சாட்சிகளும், ஆதாரங்களும்தான் தீர்ப்பைத் தீர்மானிக்கின்றன என நான் நம்புகிறேன்.

5. சொத்துக்குவிப்பு வழக்கு முடிந்துவிட்டது. “இவ்வழக்கில் ஆஜராகக் கூடாது'' என உங்களை மிரட்டியது யார் என இப்போதாவது சொல்லுங்கள்?

''ஹா..ஹா” (சத்தமாகச் சிரிக்கிறார்). என்னை வழக்கில் இருந்து விலகுமாறு அப்போதைய பாஜக மேலிடம் நிர்பந்தித்தது. ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் தொலைபேசி, கடிதம் மூலமாக மிரட்டினர். இதையெல்லாம் எனது நூலில் எழுதி இருக்கிறேன். ஆனால் யார் பெயரையும் வெளிப்படையாகச் சொல்ல மாட்டேன்!

http://tamil.thehindu.com/opinion/reporter-page/ஜெ-உயிருடன்-இருந்திருந்தாலும்-இதுதான்-தீர்ப்பு-ஆச்சார்யா/article9543643.ece

Link to comment
Share on other sites

தற்போது என்ன பேசினாலும் அது சரியாக இருக்காது! வைகோ

293542_15349.jpg


தமிழகத்தில் நிலவும் அசாதாரணமான அரசியல் சூழலில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து, எந்தக் கருத்தும் சொல்லாமல் மவுனம் காத்து, கருவேல மரங்கள் ஒழிப்புப் பணியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனைக் கிடைத்துள்ள நிலையில், இன்று சென்னை விமான நிலையம் வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் செய்தியாளர்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். அதற்குப் பதில் அளித்துப் பேசிய அவர், தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் குறித்து, தான் எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை. தற்போது என்ன பேசினாலும் அது சரியாக இருக்காது என்று தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

http://www.vikatan.com/news/tamilnadu/80909-vaiko-speaks-about-tn-political-situation.html

Link to comment
Share on other sites

 
 
Tamil_News_large_1711317_318_219.jpg
 

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

 

சிறப்பு தலையணை:

இன்று காலை கார் மூலம் சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூரு கிளம்பினர். ஜெ., சமாதியில் அஞ்சலி செலுத்திய பின்னர், ராமாவரத்தில் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கிருஷ்ணகிரி, ஒசூர் வழியாக அவர் பெங்களூரு சென்றார். சிட்டி கோர்ட்டில் சசிகலா சரணடைவதாக இருந்தது. ஆனால் போலீசார் கேட்டு கொண்டதை தொடர்ந்து இந்த வழக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹார கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது. அங்கு , நீதிபதி அஸ்வத் நாராயணன், பதிவாளர் தயார் நிலையில் இருந்தனர். மாலை 5.15 மணிக்கு கோர்ட் வந்த சசிகலா, இளவரசி ஆகியோர் சரணடைந்தனர். சசிகலா தன்னுடன் 3 சிறப்பு தலையணைகளையும் கொண்டு வந்தார்.

 

பாதுகாப்பு:

சசிகலா பார்க்க அங்கு, துணை சபாநாயகர் தம்பிதுரை, சசிகலா கணவர் நடராஜன் ஆகியோர் சிறை வளாகம் வந்தனர். சசிகலா சரணடைவதை முன்னிட்டு, தமிழக கர்நாடக எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பரப்பன அக்ரஹார கோர்ட் வளாகத்திலும் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கிருந்த கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. அங்கு அதிகளவு பத்திரிகையாளர்கள் குழுமியிருந்தனர்.

 

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1711317

Link to comment
Share on other sites

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் அடைப்பு

 
இளவரசி, சசிகலா | கோப்புப் படம்: கே.பாக்ய பிரகாஷ்.
இளவரசி, சசிகலா | கோப்புப் படம்: கே.பாக்ய பிரகாஷ்.
 
 

பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 கோடி அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை காலை தீர்ப்பு வழங்கியது.

உச்ச நீதிமன்றத்தின் தண்டனை தீர்ப்பினால் சசிகலாவின் தமிழக முதல்வர் கனவு தகர்ந்தது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத் தின்படி குற்றவாளியாக அறிவிக்கப் பட்ட ஒருவர் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. தற்போது சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப் பட்டுள்ளதால் அடுத்த 10 ஆண்டு களுக்கு அவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்க முடியாது.

இந்த நிலையில் தீர்ப்பு வரும் நேரத்தில் கூவத்தூரில் இருந்த சசிகலா அங்கு தங்கியிருந்த எம்.எல்.ஏக்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் 20 பேரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலா நீக்கி, அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் எடப்பாடி பழனிச்சாமி.

சசிகலாவும் பெங்களூரு செல்ல வேண்டியிருந்ததால், கூவத்தூரில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு, போயஸ்தோட்டத்துக்கு புறப்பட்டார். அதன் பின், நீதிமன்றத்தில் சரணடைய உச்ச நீதிமன்றத்தில் கால அவகாசம் கேட்டு மனு அளித்தார். ஆனால், உச்ச நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, பெங்களூரு செல்ல சசிகலா தயாரானார்.

மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு 11.50க்குச் சென்ற சசிகலா, வணங்கிவிட்டு, 3 முறை சமாதியில் அடித்து சபதம் செய்தார். 12 மணிக்கு மெரினாவில் இருந்து புறப்பட்ட சசிகலா, 12.25 மணிக்கு ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆர் நினைவில்லத்துக்கு சென்றார். அங்கு 10 நிமிடங்கள் தியானத்தில் ஈடுபட்ட அவர், அதன்பின் சாலை வழிப் பயணமாக காரில் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார்.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அறை எண் 43-ல் சசிகலா ஆஜராக வேண்டும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், அவர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள நீதிமன்ற அறையில் ஆஜராகலாம் என நீதிமன்றம் தெரிவித்தது. சரணடைய வேண்டிய நீதிமன்ற அறையை கர்நாடக உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து மாற்றம் செய்தது. பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து 2.5 கி.மீ தூரம் வரையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

சசிகலா சரணடையும் முன்பு, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை வளாகத்துக்கு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் ஆகியோர் வந்தடைந்தனர். சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்ற அறையில் நீதிபதி அஸ்வதா நாராயணா முன்பு சரணடைந்தனர். சுதாகரன் அப்போது சரணடையவில்லை. சிறை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேரில் ஆஜராக முடியவில்லை என்றும் சரணடைய கால அவகாசம் தேவை என்றும் சுதாகரன் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த கோரிக்கை மனுவை நீதிபதிகள் நிராகரித்ததால் சுதாகரன் சரணடைந்தார்.

நீதிபதி உத்தரவைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/பரப்பன-அக்ரஹார-சிறையில்-சசிகலா-இளவரசி-சுதாகரன்-அடைப்பு/article9545103.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

1jp18u.jpg

இதை வித்துத் தான் அபராத தொகை கட்ட வேணும்.:rolleyes:

Link to comment
Share on other sites

16640782_1870548326557739_29719282091626

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, இசைக்கலைஞன் said:

16640782_1870548326557739_29719282091626

soundsaro.jpg

Link to comment
Share on other sites

வரலாறு வாழ்த்தும் நீதியரசர்களே!

 

p42a.jpgரே வழக்குதான். ஒரே மாதிரி தீர்ப்புதான். ஆனால், கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி குன்ஹா தீர்ப்பு வழங்கியபோது, அ.தி.மு.க-வினர் பிரார்த்தனை மனநிலைக்கு வந்தார்கள். அதே தீர்ப்பை இப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமிதவா ராய் ஆகிய இருவரும் உறுதி செய்யும்போது, அ.தி.மு.க-வில் ஒரு தரப்பினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடுகிறார்கள். காலம் எவ்வளவு வேகமாக மாறுகிறது!

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ள பினாகி சந்திர கோஷ், அமிதவா ராய் ஆகியோர் பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கியவர்கள். ஒரே அமர்வில் இருக்கும் இவர்கள் இருவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இருவரின் குடும்பங்களும் வழக்கறிஞர்களால் நிறைந்தது. அமிதவா ராயின் மாமனார் சலில் குமார் தத்தா, கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். பினாகி சந்திர கோஷின் தந்தை சம்பு சந்திர கோஷ், கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தவர்.

p42.jpg

அசாம் மாநிலம் திப்ருகாரைச் சேர்ந்தவர், அமிதவா ராய். தற்போது 63 வயதாகும் ராய், ராஜஸ்தான் மற்றும் ஒடிசா உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாக இருந்தவர். இவரின் தந்தை அணடி பூஷன் ராய், மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றியவர்.  திப்ருகார் பல்கலைக்கழகத்தில் 1976-ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்த ராய், அதே ஆண்டில் அசாம், நாகாலாந்து, மேகாலயா, மணிப்பூர், திரிபுரா, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய பார் கவுன்சில்களில் வழக்கறிஞராகப் பதிவுசெய்துகொண்டார். 1981-ல் கவுஹாத்தி உயர் நீதிமன்றத்தில் பணியை ஆரம்பித்தார். பிறகு, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம், கவுஹாத்தி மற்றும் மாவட்ட சார்பு நீதிமன்றங்களில் பணியாற்றிய ராய் சிவில், கிரிமினல், அரசியல் சாசனம், தொழிலாளர், வருவாய் ஆகியவை தொடர்பான வழக்குகளில் ஆஜரானார். சிவில், கிரிமினல் விவகாரங்களில் நுணுக்கங்களை அறிந்தவர். 1991 முதல் 1996 வரை கவுஹாத்தி உயர் நீதிமன்றத்தில், அருணாச்சல பிரதேச மாநில அரசின் மூத்த அரசு வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1999-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி மூத்த வழக்கறிஞராக உயர் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டார். 2002 பிப்ரவரி 4-ம் தேதி கவுஹாத்தி உயர் நீதிமன்ற நீதிபதி ஆனார். 2013 ஜனவரி 2-ம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆனார். 2015 பிப்ரவரியில் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றார். நீதிபதிகள் அமிதவா ராய், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் ஒலிக்கப்பட வேண்டும், அப்போது பார்வையாளர்கள் எழுந்து நிற்க வேண்டும்’ என்ற உத்தரவை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

p42b.jpg

பினாகி சந்திர கோஷ், கொல்கத்தாவைச் சேர்ந்தவர். இவருக்கு 64 வயதாகிறது. இவரும், வழக்கறிஞர்கள் நிறைந்த பாரம்பர்யமான குடும்பம் ஒன்றில் பிறந்தவர். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்த ராய், 1976-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி வழக்கறிஞராகப் பதிவுசெய்துகொண்டார். கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிவந்த இவர், சிவில், வர்த்தகம், அரசியல் சாசனம், நிறுவனங்கள் ஆகியவை தொடர்பான வழக்குகளில் ஆஜராகிவந்தார். 1997 ஜூலை 17-ல் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆந்திரப்பிரதேச உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், பின்னர் அங்கு 2012-ல் தலைமை நீதிபதி ஆனார். 2013 மார்ச் 8-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். வரும் மே 27-ம் தேதி ஓய்வுபெற உள்ளார்.

நீதித்துறை வரலாற்றில் இவர்களின் பெயர்களும், இவர்கள் வழங்கிய தீர்ப்புகளும் நிலைத்து நிற்கும்.

- ஆ.பழனியப்பன்


‘குட்மேன்’ குன்ஹா!

பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி குன்ஹா சொன்ன தீர்ப்பு, இப்போது சுப்ரீம் கோர்ட்டில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. தி.மு.க-வால் 21 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட இந்த சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு, இந்திய அரசியல் களத்தையே புரட்டிப் போடும்விதமாக அமைந்திருக்கிறது.

இந்த வழக்கை நீதிபதி குன்ஹா கையாண்ட விதம் அபாரமானது. நீதிமன்றத்தில், ஒவ்வொரு நாள் வழக்கு விசாரணை தொடங்கும்போதும் வழக்கறிஞர்களைப் பார்த்து அவர் ஒரு வாசகம் சொல்வார்: ‘‘நீங்களும் நானும் நீதியை நிலைநாட்டவே இங்கே கூடியிருக்கிறோம்.’’

அங்கு ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு விசாரணை நடக்கும் ஒவ்வொரு நாளும் அ.தி.மு.க வழக்கறிஞர்கள் 30- 40 பேர் திமுதிமுவெனக் கூடுவர். சத்தம் போடுவர். வழக்கறிஞர்களின் நோக்கம், விவாதத்தை இழுக்கடித்து, வழக்கைத் தாமதப்படுத்துவதாக இருக்கும்... ஆனால், அதற்கான வாய்ப்பைத் தராமல் அமைதிகாப்பார் குன்ஹா. வழக்கின் விவரங்களை வழக்கறிஞர்களிடமே விளக்குமாறு கேட்டு நேரத்தை வீணடிக்காமல், முழுவிவரத்தையும் அவர் படித்து, அத்துப்படியாகத்தான் தன் இருக்கையில் வந்து அமர்வார். அதனால்தான், கீழமை நீதிமன்றத்தில் அந்த வழக்கு ஓர் ஆண்டுக்குள் முடிவுக்கு வந்தது.

மிகமிக எளிமையானவர் குன்ஹா. அவருடைய மகள் திருமணம் எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் அத்தனை எளிமையாக நடந்தது. இந்த வழக்கு மேல்முறையீட்டுக்குச் சென்றபோது சர்ச்சைக்குரிய தீர்ப்பு தந்த குமாரசாமியும் திருமணத்துக்கு வந்திருந்தார்.

குன்ஹா மாதிரி சிலபேர் இருப்பதால்தான் நாட்டில் மழை பெய்கிறது!

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

 
 
 
gallerye_001814611_1711380.jpg

பெங்களூரு:சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு தண்டனை பெற்ற, சசிகலாவும், இளவரசியும், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், நேற்று மாலை அடைக்கப் பட்டனர். சசிகலாவை, அவரின் கணவர் நடராஜன் கண்ணீர் மல்க, சிறைக்குள் அனுப்பி வைத்தார். சிறையில், சசிகலாவுக்கு, 3295 என்ற, கைதி எண் வழங்கப்பட்டுள்ளது.

 

Tamil_News_large_171138020170216001746_318_219.jpg

அ.தி.மு.க., தற்காலிக பொது செயலர் சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறப்பு கோர்ட் விதித்த, நான்கு ஆண்டு சிறை தண்டனையை, சுப்ரீம் கோர்ட், நேற்று முன் தினம் உறுதி செய்தது. 'அவர்கள், உடனே பெங்களூரு விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்' எனவும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சசிகலா உட்பட மூன்று பேரும், நேற்று முன் தினம் சரணடைவர் என, எதிர்பார்க்கப்பட்டது; இதற்காக, பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட், 48வது அறை தயார் செய்யப்பட்டது.

இந்நிலையில், பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைவதற்காக, நேற்று காலை, சென்னை யிலிருந்து சசிகலாவும், இளவரசியும் காரில் புறப்பட்டனர். முன்னதாக, நேற்று காலை, பெங்களூரு சிட்டி சிவில், 48வது கோர்ட் பதிவாளரிடம், சசிகலா உட்பட, மூன்று பேர் சார்பிலும் தாக்கல் செய்த மனுவில், 'சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, சரணடைய வருகிறோம்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக, பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டுக்கு பதிலாக, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு தற்காலிக நீதிமன்றத்தில், சரணடைய ஏற்பாடு செய்யப்பட்டது; இதற்காக, அந்த பகுதி துாய்மைப்படுத்தப்பட்டது.

நேற்று மதியம், 3:05க்கு, நீதிபதி அஸ்வத் நாராயண், தன் அறைக்கு வந்து, பணிகளை கவனித்தார். ஒரே காரில் வந்த சசிகலாவும், இளவரசியும், மாலை, 5:20க்கு, நீதிபதி முன் சரணடைந்தனர்; சுதாகரன் சரணடைய வில்லை. அவர் சரணடைய ஒரு நாள் அவகாசம் வேண்டும் என, அவரது வழக்கறிஞர் கேட்டார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, விரைவில் சரணடைய வேண்டும் என, உத்தரவிட்டார். பின், மருத்துவ பரிசோதனை உட்பட, சிறை நடைமுறைகள் முடிந்த பின், சசிகலாவும், இளவரசியும் சிறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். இருவரது முகமும் வியர்த்து கொட்டியது. சசிகலா, ஒருவித நடுக்கத்துடன் காணப்பட்டார். சசிகலாவை, அவரது கணவர்

நடராஜன், கண்ணீர் மல்க சிறைக்குள் அனுப்பி வைத்தார்; சசிகலாவும் கண்ணீர் சிந்தினார். சிறையில், சசிகலாவுக்கு, 3295 என்ற, கைதி எண் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த எண், மாறுவதற்கு வாய்ப்புள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று மாலை, 6:37க்கு சுதாகரனும் சரணடைந்தார். மருத்துவ பரிசோதனை முடிந்த பின், அவரும் சிறையில்அடைக்கப்பட்டார்.
 

சிறப்பு தலையணைகள்


* பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகம், நேற்று காலையில் இருந்தே பரபரப்பாக காணப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் வருவதும், செல்வதுமாக இருந்தனர்

* சிறை வளாகத்துக்குள் நுழையும் பகுதியில், தள்ளுவண்டி கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன

* முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கர்நாடகா - தமிழக எல்லையான அத்திப்பள்ளியில், கர்நாடக ரிசர்வ் போலீஸ், மத்திய ரிசர்வ் போலீசார் குவிக்கப்பட்டனர்

* மத்திய சிறை பிரதான நுழைவு வாயிலிலிருந்து, 500 மீட்டர் முன்னதாகவே தடுப்புகளை அமைத்து, யாரையும் அனுமதிக்காமல், போலீசார் தடுத்து நிறுத்தினர்

* சிறை வளாகத்திலுள்ள தற்காலிக சிறப்பு கோர்ட் அருகில், மணல் மூட்டைகள், தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன

* வட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் இருந்தும், ஏராளமான பத்திரிகையாளர்கள் குவிந்தனர். அவர்களும், 500 மீட்டருக்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டனர்

* சசிகலாவுக்கு ஜாமின் கொடுத்திருந்த, கர்நாடக மாநில, அ.தி.மு.க., செயலர், புகழேந்தி மற்றும் மாநில பொருளாளர் ராஜேந்திரனும் வந்திருந்தனர்

* சசிகலா வக்கீல்கள் நான்கு பேர், நேற்று மாலை கோர்ட்டுக்கு வந்தனர்

* சென்னையில் இருந்து, நேற்று காலை வந்த லோக்சபா துணை சபாநாயகர், தம்பிதுரை, மாலை, 4:28க்கு, கர்நாடக அரசு வாகனத்தில், சிறை வளாகத்துக்கு வந்தார்

* சசிகலா கணவர் நடராஜன், மாலை, 4:29க்கு பரப்பன அக்ரஹாரா வந்தார். அவருக்கு பின், 10 தமிழக போலீசார், தனியார் வேனில் வந்தனர்.

* சிறையில் கைதிகளுக்கு வழக்கமாக, பெட்ஷீட் மட்டுமே கொடுக்கப்படும். ஆனால், சசிகலா, இளவரசிபயன்படுத்துவதற்காக, மூன்று தலையணைகள், கர்நாடக பதிவெண் உடைய, விலை உயர்ந்த, 'பென்ஸ்' காரில் வந்தன

* சசிகலா காரில் வந்த போது, அங்கிருந்த ஜெயலலிதா ஆதரவாளர்கள், அவருக்கு

 

எதிராக கோஷம் எழுப்பினர்

* சரணடைந்த பின், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது; 'நலமாக உள்ளனர்' என, டாக்டர்கள் உறுதி செய்தனர்.
 

தமிழக கார்கள் மீது தாக்கு * போலீசார் தடியடி


பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்த இடத்தில், தமிழக பதிவெண்ணுடன், 'டாடா சுமோ' கார் ஒன்று வந்தது; அதில் சிவப்பு கலர் கொடி பறந்தது.

அங்கு நின்றிருந்த சிலர், 'அம்மா வாழ்க' என, கோஷம் எழுப்பினர். காரில் இருந்தவர், தன் கையை துாக்கி மிரட்டியதாக கூறப்படுகிறது; இதையடுத்து, இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வெளியே நின்றிருந்த சிலர், காரி-ன் இடது பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கினர். மேலும், சிலர் சேர்ந்து காரிலிருந்தவரை கடுமையாக தாக்கினர்.

இதைத் தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசிக்கு தேவையான துணிகள் உட்பட பல பொருட்களுடன், தமிழக பதிவெண் கார் வந்தது. அங்கிருந்த மர்ம கும்பல், காரை கடுமையாக தாக்கி, கண்ணாடிகளை உடைத்தது. இதுபோல், தமிழக பதிவெண்ணுடன் வந்த, மேலும் ஐந்து கார்களும் சேதப்படுத்தப்பட்டன. போலீசார் தடியடி நடத்தி, கலவர கும்பலை விரட்டி அடித்தனர்.
 

வீட்டு சாப்பாடு நீதிபதி நிராகரிப்பு


கோர்ட்டில் சரண் அடைந்த சசிகலா, இளவரசி தரப்பில், சில கோரிக்கைகள் வைக்கப்பட்டன. சிறை உணவுக்கு பதிலாக, வீட்டு உணவு மற்றும் தனி டாக்டர் வசதி செய்து தரும்படி கோரினர்; இதை, நீதிபதி நிராகரித்தார்.

அதேபோல், 'ஏ கிளாஸ்' அறை வேண்டுமென கேட்டபோது, இந்த விவகாரம், தன் எல்லைக் குள் வராது என்றும், சிறை அதிகாரிகளிடம் முறையிடும்படியும் நீதிபதி கூறினார். சிறையில், இருவரையும் ஒரே அறையில் தங்க அனுமதிக்கும்படி, சிறை அதிகாரியிடம் கோரினர். இதை, அவர் ஏற்றதாக கூறப்படுகிறது.
 

கேழ்வரகு களி


காலை, 7:00 மணி:இரண்டு சப்பாத்தி, 250 மி.லி., சாம்பார், 100 மி.லி., காபி,

பகல், 11:00:சாதம், 400 கிராம் அல்லது 400 கிராம் கேழ்வரகு களி, சாம்பார், 200 மி.லி., மோர்

மாலை, 5:00:கலவை சாதம்

இவை தவிர, மூன்று ஜோடி வெள்ளை சேலை, ஒரு தட்டு, ஒரு சொம்பு, ஒரு கிண்ணம் வழங்கப்பட்டுள்ளது

http://www.dinamalar.com/news_detail.asp?id=1711380

Link to comment
Share on other sites

சிறையில் சசிகலா: வைரலாகும் ‛வாட்ஸ் அப்' ஆடியோக்கள்

 

 

சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதற்கு சமூக வலைதளங்களில் ஏகோபித்த ஆதரவு பெருகி வருகிறது.

சசிகலா சிறை சென்றதை வரவேற்று ‛சசிகலா....எக்கா சீ.டி. வித்த சசிகலா உனக்கு சிறை தண்டன கொடுத்துடாங்களே .... என ஆரம்பிக்கும் சோக பாடல் ஆடியோ வடிவில் ‛வாட்ஸ் அப்பில்' வைரலாக பரவி வருகிறது.

அந்த பாடல் வரிகள்:

சசிகலா.........
எக்கா சீ.டி. வித்த சசிகலா உனக்கு சிறை தண்டன கொடுத்துடாங்களே
எக்கா சீ.டி. வித்த சசிகலா உனக்கு சிறை தண்டன கொடுத்துடாங்களே

இனி சின்னம்மாவும் இல்ல நொன்னம்மாவும் இல்ல
நீங்க சின்னா பின்னமாகி போவது உறுதியாகி போச்சே யக்கா

எக்கா நீங்க ஆடின ஆட்டமென்ன கூத்தாடுன கூவாங்கரையோர அழகென்ன
எங்கம்மா சின்னம்மா நீ போயிட்டேயே ஆத்தா

எக்கா நீங்க தலைவியோட காரிலிபோன அழகென்ன
இப்ப காரில்லாம கட்டாந்தாரையில கிடக்கபோரா நெலமய கண்டு
எனக்கு மனசெல்லாம் சந்தோசத்தில பூரிக்குதே பூரிக்குதே பூரிக்குதே

நீங்க ஆடின ஆட்டமலெ்லாம் அரை நொடியில் அசைஞ்சு போனதென்ன
எக்கா நீதி செத்துரும்முனு நான் நில கொலஞ்சு நின்னனே எக்கா

இந்த நீதி தோக்கலானு நீங்க நில நாட்டிவிட்டீங்களே
நாலு வருசத்துக்கு நீங்க ...... இல்ல .....
நீங்க வாழவே கூடாது இந்த தமிழகத்துல

நீங்க வாழ தகுதியத்தவங்கனு எனக்கு அப்பவே தெரியும்
ஆனாலும் மூச்சு காட்டாம இருந்ததுக்கு காரணம் உங்களுக்கு தீர்ப்பு வரட்டுனுதா அக்கா

யக்கா உங்கள நாடு விட்டு நாடில்ல ஊரு விட்டு ஊருல்ல
இந்த ... விட்டு அனுப்பனும்னு மனசுல தீராத ஆச இருந்துச்சு
ஆனா என்னால முடியல

இன்னக்கி டில்லியல சொல்லிட்டாங்களே
நீங்க போரியல போரியல

யக்கா தமிழ்நாடு எங்களுக்கு தலையெழுத்து உங்களுக்கு
தயாராம்மா தாயாரே தயாராம்மா தாயாரே

தமிழந்நாடு எங்களுக்கு
உங்களுக்கு தலையெழுத்து உங்களுக்கு
யக்கா நீதி ஒரு நாளும் சாகாது
எங்களுக்கு நிம்மதியான வாழ்வ கெடக்க போவுது கெடக்க போவுது
 

 

ஜால்ரா எம்.எல்.ஏக்களுக்கான பாடல்


முன்னதாக, சசிகலாவிற்கு ஆதரவாக கூவத்துார் சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக ‛எங்க போன எம்.எல்.ஏ., எங்க ஊரு எம்.எல்.ஏ., என்ற பாடல் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

அந்த பாடல் வரிகள்:

எங்க போன எம்.எல்.ஏ.,?
எங்க ஊரு எம்.எல்.ஏ.,
ஊருபக்கம் வாயான்னா...ஊரு ஊரா பிக்னிக்போற
அம்மா பேச்ச கேட்டு...போட்டோமய்யா ஓட்டு
எங்க பேச்ச கேக்கலன்னா வெச்சுருவோம் வேட்டு...
மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு
மன்னார்குடிய நம்பி வச்சுக்காத ஆப்பு...
மாட்டுக்கே கூடுன மானமுள்ள கூட்டம்
நாட்டுக்காக கூடுனா என்னவாகும் உங்க ஆட்டம்...?
ஓட்டு போட்ட உரிமையில்
ஒன்னெ ஒன்று கேக்குறோம்
உங்க பேஸ்ட்டில் உப்பிருந்தா ஊரு பேச்ச கேளுங்க...
எங்க போன எம்.எல்.ஏ.,...
எங்க ஊரு எம்.எல்.ஏ.,
ஊருப்பக்கம் வாயான்னா ஊருஊரா பிக்னிக் போற..."

http://www.dinamalar.com/news_detail.asp?id=1711384

Link to comment
Share on other sites

சசிகலா பக்கத்து அறையில் கொலையாளி ‘சயனைடு’ மல்லிகா

சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றுள்ள சசிகலா பக்கத்து அறையில் கொலையாளி ‘சயனைடு’ மல்லிகா இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘சயனைடு மல்லிகா‘ கர்நாடகாவில் உள்ள பெண் கிரிமினல்களில் முக்கியமானவர்.

 
சசிகலா பக்கத்து அறையில் கொலையாளி ‘சயனைடு’ மல்லிகா
 
சென்னை:

பெங்களூர் சிறைக்கு நேற்று மாலை 5.45 மணிக்கு சென்ற சசிகலாவிடம் கையெழுத்துப் பெறப்பட்டு ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டது. பிறகு அவர் ஒரு சிறிய அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 10 அடி அகலம், 12 அடி நீளம் கொண்டதாக அந்த அறை இருந்தது. அந்த அறையில் கழிவறை உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை. எனவே சசிகலா வேறு அறை கேட்டுள்ளார்.

சசிகலா பக்கத்து அறையில் ‘சயனைடு’ மல்லிகா என்ற கைதி உள்ளார். இந்த சயனைடு மல்லிகா கர்நாடகாவில் உள்ள பெண் கிரிமினல்களில் முக்கியமானவர்.

இவர் கொலை வழக்கில் சிக்கி நீண்ட நாட்களாக பெங்களூர் சிறையில் இருந்து வருகிறார். கடந்த தடவை சசிகலா ஜெயிலுக்கு சென்றபோதும் சயனைடு மல்லிகா அங்குதான் இருந்தார்.

அப்போது ஜெயலலிதாவை சந்தித்து பேசுவதற்கு சயனைடு மல்லிகா மிகவும் ஆசைப்பட்டார். சிறைத் துறை அதிகாரிகளிடம் இதற்காக அவர் அனுமதி கேட்டார். ஆனால் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/16113628/1068632/Killer-cyanide-Mallika-in-sasikala-next-room.vpf

Link to comment
Share on other sites

வேறு இரண்டு பெண் கைதிகளுடன் சசிகலா!

11_18526_05510.jpg

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளி என பிப்ரவரி காலை 14-ம் தேதி 10.32 மணிக்கு உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கியது. இத்தீர்ப்பினை தொடர்ந்து சசிகலா தனது ஆதரவாளர்களுடன் கூவத்தூர் விடுதியில் ஆலோசனை நடத்தினார். அதன்படி எடப்பாடி' பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைப்பதாக முடிவெடுக்கப்பட்டது. இதன்படி எடப்பாடி பழனிச்சாமியும் நேற்று பிப்ரவரி 14-ம் தேதி மாலை 5.30 மணிக்கு ஆளுநரைச் சந்தித்தார். அதன் பின்னர் இரவு 11 மணியளவில் சசிகலா சென்னை, போயஸ்கார்டனை வந்தடைந்தார். அதன்பின்னர் இரவில் நடந்த ஆலோசனையில் டி.டி.வி. தினகரனுக்கு அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுப்பதென முடிவெடுக்கப்பட்டது. அதன்படி காலையில் 9.35 மணிக்கு டிடி.வி தினகரன் அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் என அறிவிப்பு வருகிறது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடம் மற்றும் எம்.ஜி.ஆர் இல்லம் எனப் பயணம் செய்யும் சசிகலா இறுதியாக பெங்களூருக்கு காரில் செல்வதாக முடிவெடுத்து காரில் செல்கிறார். சிறை செல்லும் முன்னர் 'சில மணிநேரங்கள் வெளி உலகைப் பார்ப்போமே' என்ற காரணத்துக்காக கார் பயணத்தைத் தேர்வு செய்திருக்கலாம். சரியாக மாலை ஐந்தரை மணிக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் சசிகலாவும், இளவரசியும் சரணடைகிறார்கள். இதன் தொடர்ச்சியாக நடந்தவை இங்கே...

parabana_Agrakara_sasikala_1_17131_05098

சசிகலா, "உடல்நிலை சரியில்லாதக் காரணத்தால் எனக்கு இரண்டு வாரம் கால அவகாசம் தேவைப்படுகிறது. தனக்கு நீரிழிவு நோய் இருக்கும் காரணத்தால் தனி மருத்துவரை அமர்த்திக்கொள்ள அனுமதி தர வேண்டும். எனக்கும் இளவரசிக்கும் ஒரே அறை ஒதுக்க வேண்டும். எங்களுக்கு ஒதுக்கப்படும் அறையானது முதல் வகுப்பாக ஒதுக்க வேண்டும்" எனத் தனது சார்பில் கோரிக்கைகளை முன்வைக்கிறார். இதுபோக நீரிழிவு நோய் இருக்கும் காரணத்தால் வீட்டு உணவு வேண்டும், தனிகட்டில், டி.வி, மினரல் வாட்டர் ஆகியவையும் கேட்டுள்ளார். 

அதற்குப் பதிலளித்த நீதிபதி, "கால அவகாசம் வழங்க முடியாது. ஒரே அறையில் தங்க அனுமதி கிடையாது. இருவரும் தனித்தனி அறையில்தான் தங்க வேண்டும். சசிகலாவுடன் வேறு இரண்டு பெண்கைதிகளும் தங்குவர். சசிகலா இங்கு தினமும் பணி செய்ய வேண்டும். ஒரு கைதிக்கு ஒருநாளுக்கு 50 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும். வாரம் ஒருநாள் விடுமுறையும் அளிக்கப்படும். தனி மருத்துவரை அனுமதிக்க முடியாது. அதே போல முதல் வகுப்பு வசதியும் கொடுக்க முடியாது. முதல் வகுப்பு பற்றி நீங்கள் சிறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் கொண்டு வந்த துணிகள் உள்ளே அனுமதிக்கப்படாது. மாறாக இங்கு உங்களுக்கு மூன்று சேலைகள் வழங்கப்படும். அதனைத்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என உத்தரவிட்டார். அதன்படியே இருவருக்கும் தலா மூன்று சேலைகள் வழங்கப்பட்டன.

இதனையடுத்து நீதிபதி உறவினர்களிடம் பேசிக்கொள்ள அனுமதி வழங்கினார். சசிகலாவின் கணவர் நடராஜன், உறவினர்களான டாக்டர் வெங்கடேஷ், விவேக், இளவரசியின் மகள் மற்றும் தம்பிதுரை ஆகியோர் அங்குக் குழுமியிருந்தனர். அங்கு வந்த சசிகலா, நடராஜனின் கைகளைப் பிடித்துக் கொள்ள இருவரும் கண்ணீர் விட்டனர். அதனைப் பார்த்த மற்றவர்களும் அழத்தொடங்கினர். அதன்பிறகு சசிகலா அவர்களுக்குத் தைரியம் சொல்லி பதினைந்து நிமிடங்கள் பேசிவிட்டு சிறைக்குச் சென்றார்.  

அ.தி.மு.கஎம்.எல்.ஏ-களை தன் 'கட்டுப்பாட்டில்' வைத்திருந்த சசிகலா, தான் விரும்புவதை எப்போதும் மாற்றிக்கொள்ளும் மனநிலை மாறாத சசிகலா, மன்னார்குடி வகையறாக்களின் முதல் அடையாளம் 3295 என்ற அடையாள எண்ணுடன் புதிய அடையாளத்தையும் சுமந்து குற்றவாளியாகச் சிறைக்குள் சென்றிருக்கிறார். நீதிமன்றத்தில் சரணடைய சுதாகரன் தரப்பில் உடல் நிலை சரியில்லாததால் சரணடையக் கால அவகாசம் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதனை நீதிபதிகள் நிராகரித்ததைத் தொடர்ந்து அடுத்த அரை மணிநேரத்தில் பெங்களூரு நீதிமன்றத்தில் சுதாகரன் சரணடைந்தார். அதன் பின்னர் சுதாகரனும் சிறையில் அடைக்கப்பட்டார். நீதி நின்று கொல்லும் என்பது எவ்வளவு நிஜம்?

http://www.vikatan.com/news/politics/80970-sasikala-with-two-other-female-prisoners-in-parappana-agrahara.html

Link to comment
Share on other sites

'சொத்துக்குவிப்பு வழக்கில் இன்னும் விசாரணை தேவை!' விசாரணை அதிகாரி நல்லம நாயுடு

நல்லம நாயுடு

ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்தவர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் எஸ்.பி-யாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற என்.நல்லம நாயுடு. சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த என்.நல்லம நாயுடுவை சந்தித்துப் பேசினோம். வழக்கு விசாரணையின் 15 முக்கிய அம்சங்கள் பற்றி அவர் நம்மிடம் தெரிவித்தார்.

1) சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், டி.ஐ.ஜி லத்திகா சரண் விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். லத்திகா சரண், தமக்கு உதவியாக இருக்கும்படி என்னிடம் கேட்டார். அப்போதுதான் நான் விசாரணை அதிகாரியாக ஆனேன்.

2) 1996-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் சொத்துக்குவிப்பு வழக்கை கிரிமினல் வழக்காகப் பதிவு செய்தோம். 

3) ஜெயலலிதாவுக்கு எந்தெந்த இடங்களில் சொத்துக்கள் இருக்கின்றன என்று ஆய்வு செய்தோம். 78 இடங்களுக்கான ஆவணங்களை சேகரித்தோம். பத்திரப் பதிவு அலுவலகங்களில் இருந்து ஆவணங்களைப் பெற்றோம். ஜெயலலிதா பெயரில் இருந்த 32 வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்தோம்.

4) கலர் டி.வி வழக்கில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு முன்பு ஜெயலலிதாவை கமிஷனர் அலுவலகத்தில் வைத்திருந்தனர். அந்த சமயத்தில், சொத்துக்குவிப்பு வழக்குக்காக போயஸ்கார்டன் வீட்டை சோதனை நடத்துவது குறித்து ஜெயலலிதாவிடம் தகவல் தெரிவித்தோம்.

5) சோதனையின் அடிப்படையில் ஜெயலலிதாவிடம் விசாரணை நடைபெற்றது. கலர் டி.வி வழக்குக்காக சென்னை மத்திய சிறையில் இருந்த அவரிடம் 27 நாட்கள் விசாரணை செய்தோம். 1800 கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

6) மருத்துவமனையில் இருந்த சசிகலாவிடம் நீதிமன்றத்தின் அனுமதியுடன் விசாரணை நடைபெற்றது. மருத்துவர்கள் முன்னிலையில் 900 கேள்விகளுக்கு சசிகலா பதில் அளித்தார்.  

7) மன்னார்குடியில் இருந்த இளவரசியிடம் நேரில் சென்று விசாரணை செய்தோம். சுதாகரனை அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரித்தோம்.

நல்லம நாயுடு

8) சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தபோது பலர் பிறழ் சாட்சியாக மாறினர்.  

9) சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையில் ஈடுபட்டதால் அரசுப் பணிகளில் இருந்த மகன், மருமகன் இருவருக்கும், பதவி உயர்வு உள்ளிட்ட விஷயங்கள் பாதிக்கப்பட்டன.

10) பெங்களூருவுக்கு விசாரணை மாற்றப்பட்டபோது அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு வழக்கு தொடர்பாக ஆலோசனைகள் வழங்கினேன்.

11) நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதாவை விடுவித்துத் தீர்ப்பளித்தபோது வருத்தமாக இருந்தது.

12) ஜெயலலிதா மறைவு எனக்கு வருத்தமாக இருந்தது. மிகவும் புத்திசாலியானவர். ஆளுமை மிக்கவர்.

13)  ஜெயலலிதாவின் மன உளைச்சலுக்கு சொத்துக் குவிப்பு வழக்கு காரணம் அல்ல. இந்த வழக்கில் சட்டரீதியாக வெற்றி பெற்றுவிடலாம் என்றுதான் அவர் நினைத்தார்.

14) சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய அனைவரும், நாங்கள் விசாரணை செய்ததைத் தவிர மேலும் அதிக சொத்துக்களை வைத்திருந்தனர். விசாரிக்க அனுமதி கேட்டிருந்தேன். ஆனால், அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

15) நீதி வெல்லும் என்பதற்கு உதாரணமாகத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. நான் நினைத்தபடியே தீர்ப்பு வந்திருக்கிறது.

 

 

http://www.vikatan.com/news/coverstory/80999-have-to-conduct-comprehensive-inquiry-in-disproportionate-asset-case-again-says-investigative-officer-nallamma-naidu.html

Link to comment
Share on other sites

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு அடுத்த அறையில் ‘சயனைடு’ மல்லிகா!

பெங்களூரு சிறையில் சசிகலா பக்கத்து அறையில் 'சயனைடு ' மல்லிகா என்ற பெண் கைதி உள்ளார். ஆறு பெண்களை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக இவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

சசிகலா அறை அருகே சயனைடு மல்லிகா

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்றிருக்கும் சசிகலா நேற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.. நீதிபதி அஷ்வத் நாராயணா முன்பு ஆஜர் படுத்தப்பட்ட சசிகலாவிடம் நீதிபதி சில விஷயங்களை கேட்டார். ‘அபராதத் தொகை கட்டுகிறீர்களா’ எனக் கேள்வி எழுப்பினார்.' சொத்துக்கள் வழக்கில் இருப்பதால் இப்போது கட்டவில்லை' என அவரது வழக்கறிஞர்கள் பதில் அளித்தனர். சில ஆவணங்களில் கையொப்பமிட்ட பின்னர் சசிகலா பத்துக்கு பன்னிரெண்டு அளவுள்ள சிறிய அறையில் அடைக்கப்பட்டார். 

விமானத்தில் செல்லாமல் காரிலேயே பெங்களூரு வரை பயணித்ததால் சோர்வாக இருந்த சசிகலாவுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது. சோகமாகவும் காணப்பட்டுள்ளார். நேற்றிரவு சிறையில் சசிகலா உணவுக்குப் பின், கொஞ்சம் பழங்களையும் சாப்பிட்டுள்ளார். தொடர்ந்து மாத்திரைகள் மற்றும் சில ஆயுர்வேத மருந்துகளையும் எடுத்துக் கொண்டுள்ளார். 

சசிகலா இருக்கும் அறைக்கு அடுத்த அறையில்தான் 'சயனைடு' மல்லிகா என்ற பயங்கரமான பெண் கைதி உள்ளார். இவரது இயற்பெயர் கெம்பம்மா. கொலை செயல்களில் ஈடுபட்டு பல ஆண்டு காலமாக இவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சயனைடு கலந்து பெண்களை கொலை செய்திருக்கிறார். அதனால்தான் பெயருடன் அடைமொழியாக சயனைடு  சேர்ந்துள்ளது. கர்நாடகாவில் இவர் மீது பல கொலை வழக்குகள் உள்ளது.

சயனைடு மல்லிகா

கெம்பம்மா தொடக்கத்தில் சிட்பண்ட் பிசினசில் ஈடுபட்டார். அதில் நஷ்டம் ஏற்பட்டுவிட, அவரது கணவர் கெம்பம்மாவை விட்டு விட்டு ஓடி விட்டார். பணம் போட்டவர்களுக்கு கெம்பம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை. தொடர்ந்து 1999ம் ஆண்டு முதல், குற்றச் செயல்களில்  ஈடுபடத் தொடங்கினார். பெங்களூரு அருகேயுள்ள கோயில் ஒன்றின் பக்தை இவர். அந்தக் கோயிலுக்கு வரும் பக்தைகளின் கஷ்டத்தை அவர்களிடம் பேசி தெரிந்து கொள்வார்.

ஆறுதலளிக்கும் விதத்தில் அவர்களிடத்தில்  பேசுவார். நம்பும் அப்பாவி பெண்களிடம் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தினால் எல்லாம் சரியாகி விடும் எனக் கூறுவார். அதற்கு தனியாக வர வேண்டும் என்பார். அப்படி வரும் பெண்களுக்கு சயனைடு கலந்த தண்ணீரை கொடுத்து, கொலை செய்து, நகைகளைக் கொள்ளையடித்துச் சென்று விடுவார். ஆறு  பெண்களை மல்லிகா கொலை செய்துள்ளார். சயனைடு கலந்து கொலைசெய்ததால், இவர் ‘சயனைடு மல்லிகா’ என்று அழைக்கப்பட்டார். இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு  பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 

கடந்த முறை சசிகலா, ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட போதும் மல்லிகா சிறையில்தான் இருந்தார். அப்போது ஜெயலலிதாவைச் சந்திக்க சயனைடு மல்லிகா ஆசைப்பட்டார். ஆனால், சிறைத்துறை அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர். தற்போது சசிகலா அறைக்கு அருகே உள்ள அறையில் சயனைடு மல்லிகா இருக்கிறார். 

அதே வேளையில், சசிகலாவுக்கு அறை மாற்றம் நிகழவும் வாய்ப்புகள் உள்ளன. சசிகலா வருமான வரி கட்டுவதற்கான ஆவணங்களை காட்டினால் அவருக்கு முதல் வகுப்பு வழங்கப்படலாம். முதல் வகுப்பு அறையில் ஒரு மின்விசிறி, படுக்கை, தனிக்கழிவறை வசதி இருக்கும்.  தினமும் 2 செய்தித்தாள்கள் வழங்கப்படும். வாரந்தோறும் இரு முறை அசைவ உணவு வழங்கப்படும்.  காலை உணவாக சப்பாத்திக்கு அரை லிட்டர் சாம்பார், கால் லிட்டர் தயிர் கிடைக்கும். மதிய உணவாக சாதம், சப்பாத்தி , ராகி இவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து சாப்பிட்டுக் கொள்ளலாம். இரவு உணவாக சப்பாத்தி வழங்கப்படும்.

http://www.vikatan.com/news/tamilnadu/81019-sasikala-shares-her-prison-wall-with-a-serial-killer-named-cyanide-mallika.html

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

சிறை உணவு: சசிகலா அடம்
 
 
 

பெங்களூரு : சிறை உணவை சாப்பிட மறுத்து, சசிகலா அடம் பிடித்ததால், தனியார் ஓட்டலில் இருந்து உணவு எடுத்துச் செல்லப்படுகிறது.

 

Tamil_News_large_171213920170217001051_318_219.jpg

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வட்டாரங்கள் கூறியதாவது: சிறையில் அடைக் கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி ஆகியோர், ஒரே அறையில் தான் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு, நீண்ட நேரம், இரு வரும் துாங்காமல் பேசிக் கொண்டிருந்தனர். சசிகலா, சிறையில் கொடுத்த உணவை சாப்பிட மறுத்து, பழங்களை மட்டும்

சாப்பிட் டார். நேற்று காலை, 5:30 மணிக்கு, இருவரும் எழுந்தனர். தரையில் படுத்திருந்ததால், இருவரும் மன உளைச்சல் அடைந்தனர். இதனால், சிறப்பு படுக்கை வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

காலை, 6:30 மணிக்கு,பிஸ்கட், சர்க்கரை கலக்காத டீ கொடுக்கப்பட்டது; 8:00 மணிக்கு வழங்கப்பட்ட புளியோதரையை, இருவரும் சாப்பிட்டனர். காலை, 11:30 மணிக்கு, 'சாண்ட் விச்' வழங்கப்பட்டது. பிற்பகல், 1:30 மணிக்கு, அரிசி சாதம், சப்பாத்தி, பருப்பு சாம்பார், காய்கறி கூட்டு வழங்கப்பட்டது.

மாலை, 4:00 மணிக்கு, டீ, பிஸ்கட் வழங்கினர். சிறை உணவை சாப்பிட மறுத்ததால், இரவில் இருவருக்கும், தனியார் ஓட்டலிலிருந்து உணவு வாங்கி செல்லப்பட்டது.

இடைப்பாடிக்கு உத்தரவு :


நேற்று காலை, வழக்கறிஞர்கள், மூர்த்திராவ், செந்தில், அசோக் ஆகியோர், சுப்ரீம் கோர்ட்டில், மேல்முறையீடு செய்வது குறித்து, சசிகலாவுடன்

 

ஆலோசனை நடத்தினர். சசிகலாவை, பரப்பன அக்ரஹாரா சிறையி லிருந்து, தமிழக சிறைக்கு இடமாற்றம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தமிழகமுதல்வராக இடைப்பாடியும், அமைச்சர்களும் பதவி யேற்கவுள்ள தகவலை அறிந்த சசிகலா, லேசாக புன்னகைத்தார். முதல்வரும், அமைச் சர்களும், பெரும்பான்மையை நிரூபித்த பின், தன்னை சந்திக்க பெங்களூரு வந்தால் போது மென, அவர் உத்தரவிட்டு உள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1712139

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
    • வேடிக்கையை விட, இதில் யதார்தத்தை குறும்பாக சொல்வதுதான் தொனிக்கிறது. என்னதான் வெளி உலகில் கணவன் ஆண்டான் மனைவி அடிமை என அன்றைய சமூகம் கட்டமைத்து வைத்திருந்தாலும், நிஜ வாழ்வில், வீட்டுள், இந்த இறுக்கங்கள் இருப்பதில்லை என்ற முரண்நகையை கேலியாக சொல்கிறதென நான் நினைக்கிறேன். டெல்லிக்கு ராஜா, வீட்ல வேலைக்காரன் என்பதை போல.
    • சிறிய வயது பெட்டைகள் இந்தா பார் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுட்டுப் போயிருப்பார்கள். மூட்டை மூட்டையாக தூக்கிக் கொண்டு போறதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை மட்டும் மடக்கி பிடித்திருக்கிறார்கள். கட்டாருடன் கதைத்து 7 பேரை விடுதலை செய்த மாதிரி ஜெய்சங்கர் வந்து கதைத்து இவர்களையும் விடுவிக்க வேண்டும்.
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ந‌ண்பா🙏🥰............................................
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.