Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

"தேன்கூடு" சாகரன் அகால மரணம்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தேன்கூடு வலைத்திரட்டிகளின் நிறுவனர் சாகரன் அகால மரணமடைந்திருக்கிறார். அவருக்கு வயது 28.

சமீபத்தில் சென்னை வந்திருந்தபோது அவருடன் நேரிடையான பழக்கம் ஏற்பட்டது. வெகுநாள் நண்பனைப் போல தோளில் கைபோட்டு பழகுவது அவரது சிறப்பு. வலைத்திரட்டிகளின் வளர்ச்சி மற்றும் பரிமாணங்கள் குறித்து ஒரு நாள் அரைமணி நேரம் தொலைபேசியில் பேசினோம். சமீபத்தில் மெயில் அனுப்பி உங்களிடம் ஒரு உதவி கோரப்போகிறேன் என்று சொல்லியிருந்தார்.

பெரும் சாதனைகள் படைக்க இருந்த ஒரு தமிழனை, இளைஞனை காலம் நம்மிடையே இருந்து பறித்துக் கொண்டது. அவருக்கு திருமணமாகி மூன்று வயதில் ஒரு குழைந்தையும் இருக்கிறதாம்.

அன்னாரின் குடும்பத்தாருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்!!!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் குடும்பத்தாருக்கு கண்ணீர் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இணைய உலக வளர்ச்சியில் பங்காற்றி மறைந்த அன்பரின் இழப்பால் துயருறும் அனைவரோடும் துயரைப் பகிர்ந்து கொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

தேன்கூடு சாகரனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்! அவர் ஆத்மா சாந்தியடைய யாழ் களத்தின் சார்பில் பிரார்த்திப்போம்! துயரில் தவிக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் குடும்பத்தாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்!!!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்னாரின் குடும்பத்தாருக்கு கண்ணீர் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் குடும்பத்தாருக்கு யாழ் கள உறவுகள் சார்பில் எனது கண்ணீர் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

கண்ணீர் அஞ்சலிகள்..

Link to comment
Share on other sites

 • 2 weeks later...

தேன்கூடு ஈழத்தமிழரின் வலைத்தளங்களைப் புறக்கணித்ததில், வருத்தமிருந்தாலும், தமிழ் உணர்வாளராக இருந்த சாகரனின் மரணம் வேதனையளிக்கின்றது. அவருக்கு எம் கண்ணீர் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சாகரனுக்கு என் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேன்கூடு நிறுவநர் முகம் தெரியாத எமது சாகரனின் இழப்பு இணைய தமிழ் நெஞ்சங்களுக்கு பேரிழப்பாகும்.

இவரை இழந்து நிற்கதியாக நிற்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் குடும்பத்தாருக்கு கண்ணீர் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எமது கண்ணீர் அஞ்சலிகள்!!!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேன்கூடு ஈழத்தமிழரின் வலைத்தளங்களைப் புறக்கணித்ததில், வருத்தமிருந்தாலும், தமிழ் உணர்வாளராக இருந்த சாகரனின் மரணம் வேதனையளிக்கின்றது. அவருக்கு எம் கண்ணீர் அஞ்சலிகள்

ஈழத் தமிழர்களின் இணைய வலைத் தளங்கள் தேன்கூட்டில் அங்கத்துவம் பெற்றிருந்தால் தானாகவே அது பதிவேற்றம் செய்யப்படும், இதில் ஈழவரின் வலைத்தளங்கள் புறக்கணிக்கப்பட்டதெனும் வாதம் வருத்தமளிக்கும் செய்தியாகும், தமிழ் இணைய வலைத் தளங்களைப் பதிவேற்றுவதற்கு தேன்கூடும் அதன் நிறுவநர் சாகரன் கல்யாண் செய்த பங்களிப்பு அளப்பரியது.

Link to comment
Share on other sites

சாகரன்

gse_multipart28681.jpg

http://blog.thamizmanam.com/archives/84

இருக்கும் போது இவரை நான் அறிந்ததில்லை.

தமிழுக்கு சேவை பல செய்துள்ளார் என்பதில் அவரில் மிக்க மதிப்புக் கொள்கிறேன்.

அன்னாருக்கு அஞ்சலிகள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • புலிகளுக்கு அனுப்பப்பட்ட ஆயுதக் கப்பல்களை தானே காட்டிக்கொடுத்த கே பி மூலம் " லங்கா கார்டியன்  காலம் : ஆடி 2, 2010 அண்மையில் புலம்பெயர் நாடுகளில் இயங்கிவந்த புலிகளுக்குச் சார்பான தமிழர்கள் சிலர் இலங்கைக்கு விஜயம் செய்து அரசு தரப்பினருடனும், கே பி யுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டது பலரதும் கவனத்தை ஈர்ந்திருந்தது.  மலேசியாவில் கே பி கைதுசெய்யப்பட்டதாகக் கூறப்படும் நாடகத்தினை கோத்தாபயவும், கேபியும் இணைந்தே திட்டமிட்டு ஆடியதாகவும், மலேசிய அரசாங்கம் இந்த நாடகத்திற்கு உடந்தையாக இருந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவரும் நிலையில், இந்த புலம்பெயர் புலிகள் அணியினரின் கோத்தாவுடனான சந்திப்பும் இடம்பெற்றிருக்கிறது. இந்த சர்ச்சைக்குரிய கோத்தாவுக்கு ஆதரவான "புலம்பெயர் புலிகள்" அணியில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான கலாநிதி அருணகுமார் தனது விஜயம் பற்றியும், அங்கு நடந்த சந்திப்புக்கள் பற்றியும் வெளியில் பேசியிருக்கிறார். அவரால் வெளியிடப்பட்டிருக்கும் பகிரங்க அறிக்கையில் தமது குழு இலங்கையில் நடத்திய சந்திப்புக்கள், சந்தித்த மகிந்த - கோத்தா அரசின் தலைவர்கள் பற்றிய விபரங்களை அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார். அவரது அறிக்கையின் ஒருபகுதியில் குறிப்பிடப்பட்ட விபரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது புலிகளை முற்றாக அழித்துமுடிக்கும் காரியத்தில் ஒருவருக்கு ஒருவர் உற்ற நண்பர்களாக இருந்து செய்துமுடித்தது யாரென்பது ஓரளவிற்குப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. உள்நாட்டு வெளிநாட்டு செய்தி ஊடகங்களைப் பொறுத்தவரை பாதுகாப்புச் செயலாளர் கோத்தாவுக்கும், ராணுவத்தளபதி சரத் பொன்சேக்காவுக்கும் இடையில் நிலவிய  நெருங்கிய ஒத்துழைப்பே புலிகளை அழிக்க உதவியதாகக் கூறப்படுகிறது. இது ஓரளவிற்கு உண்மையாக இருந்தாலும்கூட, புலிகளை முற்றாக அழித்த இன்னொரு நட்பு இருப்பதாகவே தெரிகிறது. கலாநிதி அருணகுமாரின் அறிக்கையின்படி இந்த ரகசிய நட்பு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. கலாநிதி அருணகுமார் தனது அறிக்கையில் கூறும்போது, தானும் தனது அரச ஆதரவு - புலம்பெயர் புலிகள் அணியும் புலிகளின் சர்வதேச ஆயுத முகவரும், அரசாங்கத்தின் விருந்தாளியுமான கே பி எனப்படும் குமரன் பத்மனாதனுடன் கலந்துரையாடிக்கொண்டிருக்கும்பொழுது, எதிர்பாராத விதமாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அக்கலந்துரையாடல் நடைபெற்ற அறையினுள் நுழைந்திருக்கிறார். கோத்தாவைக் கண்டதும் மிகுந்த மகிழ்வுடன் எழுந்த கே பி அவரை மிகுந்த மரியாதையுடனும் தோழமையுடனும் ஆரத்தழுவி அழைத்தார் என்று எழுதியிருக்கிறார். அவர்கள் இருவரும் நட்பாகப் பழகிய விதத்தினைப் பார்க்கும்போது அவர்களுக்கிடையில் நீண்டகாலமாகவே நட்பு இருப்பது அங்கிருந்த அனைவராலும் இலகுவாக உணர்ந்துகொள்ளமுடிந்தது என்று அவர் கூறுகிறார். இதில் ஆச்சரியப்படத்தக்க இன்னொரு விடயம் யாதெனில், தம்முடன் பேசிய கோத்தபாய கே பி இற்கும் தனக்கும் இடையிலான நட்புப் பற்றிக் கூறும்போது, "1996 இல் நாம் ஒருவரையொருவர் நேரடியாகச் சந்தித்தோம், அன்றிலிருந்து தொடர்பில் இருக்கிறோம் " என்று கூறியமைதான் என்று அருணகுமார் மேலும் தெரிவிக்கிறார். கோத்தா கூறுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் புலிகளின் மிகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகவும், தலைவர் பிரபாகரனின் நெருங்கிய தோழனாகக் கருதப்பட்டவருமான கே பி யின் உண்மையான நோக்கமும், அவரது செயற்பாடுகளும் நிச்சயம் கேள்விக்குள்ளாக்கப்படவேண்டியவையே. கலாநிதி அருணகுமாரின் அறிக்கையிலிருந்து நாம் அறிந்துகொள்ளக்கூடியவை என்னவென்றால், 1. மலேசியாவில் நடந்த கே பி யின் கைது, கே பி யினாலும், கோத்தாவினாலும் திட்டமிடப்பட்டு, மலேசிய அரசின் அனுசரனையுடன் நடத்தப்பட்ட ஒரு நாடகம் என்பது. 2. இந்த திட்டத்தின்படியே கே பி இற்கு கொழும்பின் பிரபல வாசஸ்த்தல இடமான கொழும்பு 7 இல் உல்லாச மாளிகையொன்று அரசால் வழம்க்கப்பட்டமை. 3. நாடு கடந்த அரசாங்கம் என்று ஒன்றினை உருவாக்கியதன் மூலம் புலம்பெயர் நாடுகளில் இயங்கிய புலிகளின் அமைப்புக்களைக் கூறுபோட்டு செயலிழக்கப் பண்ணியமை. 4. தானே புலிகளுக்கு அனுப்பிவைத்த ஆயுதக் கப்பல்கள் பற்றிய விபரங்களை தனது நண்பரான ராணுவப் புலநாய்வுத்துறைத் தளபதி கபில ஹெந்தவிதாரணவூடாக அரசுக்கு வழங்கி, அக்கப்பல்களை நடுக்கடலில் வைத்து அழித்து, புலிகள் ஆயுதப் பற்றாக்குறையால் அல்லற்பட்டு ஈற்றில் அழிக்கப்படுவதை உறுதிப்படுத்தியமை. http://www.srilankaguardian.org/2010/07/did-kp-help-sri-lanka-to-sink-ltte-arms.html
  • உண்மைதான் தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்பில் நாம் “இனம் பெருக்கிறம் பேர்வழி” எண்டு தலையிட முடியாது. இல்லாவிட்டால் தனது சாதி வெறியை மறைக்க “நாடக காதல்” என்று ஒன்றை கற்பித்து, அதன் வழி ஆணவ கொலைகளை ஊக்குவிக்கும் இராமதாஸ் போல நாமும் ஆகிவிடுவோம். நடந்ததை பார்க்க உண்மை காதல் போலவே தெரிகிறது.
  • நன்றி. பெட்டைக்கு 18 வயது இல்லையாம் எண்டு வேற எங்கையோ வாசிச்ச நிணைவு. சரி விடுங்க.... இந்தியாவி்ல் ஆணுக்கு 21 , பெண்ணுக்கு 18 எனக்கெண்டா, 18 முடியவேணுமா, 17 முடியவேணுமா எண்டதை ஒருக்கா விளக்கேலுமே. 😁 நான் பிழை விடப்படாது, கண்டியளே.... 😜
  • வலிந்து (கேட்டு) ஒன்றை பெறுவதை விட‌ ஒதுங்கி விடுதல் நன்று.,,
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.