Jump to content

ஐபிஎல் 2017 சீசன்!


Recommended Posts

ஏப்ரல் 5-ல் துவங்குகிறது ஐபிஎல் 2017 சீசன்!

ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வருகின்ற ஏப்ரல் 5-ம் தேதி ஐபிஎல் 2017 சீசன் துவங்குகிறது. ஹைதராபாத்தில் நடக்கும் முதல் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன் ரைசஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

IPL 2017

மேலும், இறுதிப் போட்டி வருகின்ற மே 21-ம் தேதி ஹைதராபாத்தில் நடக்கிறது. மொத்தம் 9 அணிகள் இந்த சீசனில் களமிறங்குகின்றனர். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் 2 லீக் போட்டிகளில் விளையாடும். இதையடுத்து, லீக் சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களில் இருக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

http://www.vikatan.com/news/sports/80956-ipl-2017-season-schedule-to--begin-on-april-5th.html

Link to comment
Share on other sites

  • Replies 368
  • Created
  • Last Reply

ஐ.பி.எல். ஏலத்தில் 14 தமிழக வீரர்கள்

10-வது 'இந்தியன் பிரீமியர் லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தமிழக வீரர்கள் அபினவ் முகுந்த், ஆர்.சந்த் உள்பட 14 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

 
 
ஐ.பி.எல். ஏலத்தில் 14 தமிழக வீரர்கள்
 
பெங்களூர்:

10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 5-ந் தேதி முதல் மே 21-ந் தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 20-ந் தேதி பெங்களூரில் நடக்கிறது.

இந்த ஐ.பி.எல். ஏலத்தில் இடம் பெறப்போகும் வீரர்கள் இறுதிப் பட்டியலை ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழு வெளியிட்டது. 799 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இதை இறுதி செய்து 351 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதில் 122 பேர் இந்தியர்கள். 229 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

351 வீரர்களில் இருந்து 76 பேர் ஏலம் எடுக்கப்படுவார்கள். இதில் அதிகபட்சமாக 28 வெளிநாட்டு வீரர்கள் ஏலம் எடுக்கப்பட வேண்டும்.

இந்த ஏலத்தில் தமிழகத்தை சேர்ந்த அபினவ் முகுந்த், ஆர்.சந்த் உள்பட 14 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். தமிழக வீரர்களில் அபினவ் முகுந்துக்கு அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக ஆர்.சந்துக்கு ரூ. 20 லட்சம் அடிப்படை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மற்ற தமிழக வீரர்களின் பாபா இந்திரஜித், டி.நடராஜன், ஜெகதீசன், எம்.அஸ்வின், விக்னேஷ், சாய்கிஷோர், ரகில்ஷா, அஸ்வின் கிரைஸ்ட், எம்.முகமது, ஹஷிங்டன், சுந்தர், கவுசிக் காந்தி, சஞ்சய் யாதவ் ஆகியோருக்கு ரூ. 10 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/02/15104951/1068408/14-TN-players-in-IPL-Auction.vpf

Link to comment
Share on other sites

ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை வெளியீடு

 
ipl

சென்னை: ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை இன்று பிசிசிஐயால் வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் கிரிக்கெட்டில், ஒவ்வொரு அணியும் மற்ற 7 அணிகளுடன் இரு முறை மோதும். இந்த போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணி இறுதி தகுதிபோட்டியில் வெற்றி பெற்று இறுதிபோட்டியில் நுழையமுடியும்.      போட்டிகளில் பங்கேற்க உள்ள அணிகளின் விவரங்கள்: - 

April 5, 8 PM: Sunrisers Hyderabad v Royal Challengers Bangalore, Rajiv Gandhi Intl. Cricket Stadium, Hyderabad

April 6, 8 PM: Rising Pune Supergiants v Mumbai Indians, Maharashtra Cricket Association's International Stadium, Pune

April 7, 8 PM: Gujarat Lions v Kolkata Knight Riders, Saurashtra Cricket Association Stadium, Rajkot

April 8, 4 PM: Kings XI Punjab v RPSG, Holkar Cricket Stadium, Indore
8 PM: RCB v Delhi Daredevils, M. Chinnaswamy Stadium, Bengaluru

April 9, 4 PM: SRH v GL, Rajiv Gandhi Intl. Cricket Stadium, Hyderabad
8 PM: MI v KKR, Wankhede Stadium, Mumbai

April 10, 8 PM: KXIP v RCB, Holkar Cricket Stadium, Indore

April 11, 8 PM: RPSG v DD, Maharashtra Cricket Association's International Stadium, Pune

April 12, 8 PM: MI v SRH, Wankhede Stadium, Mumbai

April 13, 8 PM: KKR v KXIP, Eden Gardens, Kolkata

April 14, 4 PM: RCB v MI, M. Chinnaswamy Stadium, Bengaluru
8 PM: GL v RPSG, Saurashtra Cricket Association Stadium, Rajkot

April 15, 4 PM: KKR v SRH, Eden Gardens, Kolkata
8 PM: DD v KXIP, Feroz Shah Kotla Ground, Delhi

April 16, 4 PM: MI v GL, Wankhede Stadium, Mumbai
8 PM: RCB v RPSG, M. Chinnaswamy Stadium, Bengaluru

April 17, 4 PM: DD v KKR, Feroz Shah Kotla Ground, Delhi
8 PM: SRH v KXIP, Rajiv Gandhi Intl. Cricket Stadium, Hyderabad

April 18, 8 PM: GL v RCB, Saurashtra Cricket Association Stadium, Rajkot

April 19, 8 PM: SRH v DD, Rajiv Gandhi Intl. Cricket Stadium, Hyderabad

April 20, 8 PM: KXIP v MI, Holkar Cricket Stadium, Indore

April 21, 8 PM: KKR v GL, Eden Gardens, Kolkata

April 22, 4 PM: DD v MI, Feroz Shah Kotla Ground, Delhi
8 PM: RPSG v SRH, Maharashtra Cricket Association's International Stadium, Pune

April 23, 4 PM: GL v KXIP, Saurashtra Cricket Association Stadium, Rajkot
8 PM: KKR v RCB, Eden Gardens, Kolkata

April 24, 8 PM: MI v RPSG, Wankhede Stadium, Mumbai

April 25, 8 PM: RCB v SRH, M. Chinnaswamy Stadium, Bengaluru

April 26, 8 PM: RPSG v KKR, Maharashtra Cricket Association's International Stadium, Pune

April 27, 8 PM: RCB v GL, M. Chinnaswamy Stadium, Bengaluru

April 28, 4 PM: KKR v DD, Eden Gardens, Kolkata
8 PM: KXIP v SRH, IS Bindra Stadium, Mohali

April 29, 4 PM: RPSG v RCB, Maharashtra Cricket Association's International Stadium, Pune
8 PM: GL v MI, Saurashtra Cricket Association Stadium, Rajkot

April 30, 4 PM: KXIP v DD, IS Bindra Stadium, Mohali
8 PM: SRH v KKR, Rajiv Gandhi Intl. Cricket Stadium, Hyderabad

May 1, 4 PM: MI v RCB, Wankhede Stadium, Mumbai
8 PM: RPSG v GL, Maharashtra Cricket Association's International Stadium, Pune

May 2, 8 PM: DD v SRH, Feroz Shah Kotla Ground, Delhi

May 3, 8 PM: KKR v RPSG, Eden Gardens, Kolkata

May 4, 8 PM: DD v GL, Feroz Shah Kotla Ground, Delhi

May 5, 8 PM: RCB v KXIP, M. Chinnaswamy Stadium, Bengaluru

May 6, 4 PM: SRH v RPSG, Rajiv Gandhi Intl. Cricket Stadium, Hyderabad
8 PM: MI v DD, Wankhede Stadium, Mumbai

May 7, 4 PM: RCB v KKR, M. Chinnaswamy Stadium, Bengaluru
8 PM: KXIP v GL, IS Bindra Stadium, Mohali

May 8, 8 PM: SRH v MI, Rajiv Gandhi Intl. Cricket Stadium, Hyderabad

May 9, 8 PM: KXIP v KKR, IS Bindra Stadium, Mohali

May 10, 8 PM: GL v DD, Green Park, Kanpur

May 11, 8 PM: MI v KXIP, Wankhede Stadium, Mumbai

May 12, 8 PM: DD v RPSG, Feroz Shah Kotla Ground, Delhi

May 13, 4 PM: GL v SRH, Green Park, Kanpur
8 PM: KKR v MI, Eden Gardens, Kolkata

May 14, 4 PM: RPSG v KXIP, Maharashtra Cricket Association's International Stadium, Pune
8 PM: DD v RCB, Feroz Shah Kotla Ground, Delhi

May 16, 8 PM: Qualifier 1

May 17, 8 PM: Eliminator

May 19, 8 PM: Qualifier 2

May 21, 8 PM: Final, Rajiv Gandhi Intl. Cricket Stadium, Hyderabad

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

ஐ.பி.எல். ஏலத்தில் 351 வீரர்கள்: 8 அணிகளின் நிலை, எதிர்பார்ப்பு என்ன?

 

10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலப்பட்டியலில் 351 வீரர்கள் இடம் பெற்றுள்ள நிலையில் 8 அணிகளின் எதிர்பார்ப்பு என்ன? என்ற விவரங்கள் கசிந்துள்ளன.

 
ஐ.பி.எல். ஏலத்தில் 351 வீரர்கள்: 8 அணிகளின் நிலை, எதிர்பார்ப்பு என்ன?
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்கும் 8 அணிகளின் கேப்டன்கள்.
பெங்களூரு :

8 அணிகள் பங்கேற்கும் 10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. இந்த ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்களின் ஏலம் வருகிற 20-ந்தேதி பெங்களூருவில் நடக்கிறது. ஏலத்திற்கு 799 வீரர்கள் பதிவு செய்து இருந்தனர். இந்த எண்ணிக்கை குறைக்கப்பட்டு இறுதிப்பட்டியலில் 351 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய 122 பேரும் அடங்குவர்.

இந்த சீசனில் ஒவ்வொரு அணிகளும் வெளிநாட்டு ஆல்-ரவுண்டர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களை எடுக்கவே அதிக ஆர்வம் காட்டுகின்றன. சுழற்பந்து வீச்சாளர்கள் பெரிய தொகைக்கு விலை போக வாய்ப்பில்லை. மேலும் பெரும்பாலான அணிகளுக்கு பேட்ஸ்மேன்கள் தேவை இல்லை என்பதால், பேட்ஸ்மேன்களும் குறைந்த விலைக்கே ஏலம் போவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இனி ஒவ்வொரு அணிகளின் நிலைமையை பார்க்கலாம்.

புனே ரைசிங் சூப்பர் ஜெயன்ட்ஸ்: புனே அணி கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது. டோனி தலைமையில் களம் இறங்கிய இந்த அணி 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. தோல்வி எதிரொலியாக அணியில் இருந்து 6 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 11 பேர் அதிரடியாக கழற்றி விடப்பட்டனர். புனே அணி 10 வீரர்களை வாங்க முடியும். 4 வெளிநாட்டு வீரர்களுக்குரிய இடமும் காலியாக உள்ளது. வீரர்களை ஏலத்தில் எடுக்க ரூ.17½ கோடி செலவு செய்யலாம்.

குஜராத் லயன்ஸ்: கடந்த ஆண்டு அடியெடுத்து வைத்த சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணி லீக் சுற்றில் முதலிடத்தை பிடித்தாலும் பிளே-ஆப் சுற்றில் இரண்டு ஆட்டத்திலும் தோற்று இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது. இதைத் தொடர்ந்து அந்த அணி 8 வீரர்களை விடுவித்தது. இந்த சீசனுக்காக அந்த அணி 3 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 11 பேரை ஏலத்தில் வாங்கலாம். இதற்கு ரூ.14.35 கோடி செலவு செய்ய முடியும்.

மும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில் 20 வீரர்கள் இருக்கிறார்கள். ஏலத்தில் 7 வீரர்களை ரூ.11½ கோடிக்குள் செலவு செய்து எடுத்துக் கொள்ளலாம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: வெஸ்ட் இண்டீசை சேர்ந்த ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செலுக்கு, ஊக்கமருந்து விதிமுறையை மீறியதற்காக ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டிருப்பது கொல்கத்தா அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அவரது இடத்தை ஈடுகட்டுவதற்கு ஏற்ற ஒரு வீரரை அந்த அணி வாங்க வேண்டி உள்ளது. கொல்கத்தா அணி 6 அன்னிய வீரர்கள் உள்பட 14 பேரை இந்த ஏலத்தில் எடுக்க முடியும். ரூ.19¾ கோடி கையிருப்பு உள்ளது.

ஐதராபாத் சன்ரைசர்ஸ்: நடப்பு சாம்பியனான ஐதராபாத் அணி வெளியேற்றிய 6 வீரர்களில் இயான் மோர்கன், கரண் ஷர்மா, டிரென்ட் பவுல்ட் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். டேவிட் வார்னர் தலைமையிலான அந்த அணியில் யுவராஜ்சிங், ஷிகர் தவான், ஹென்ரிக்ஸ், நமன் ஓஜா, முஸ்தாபிஜூர் ரகுமான், புவனேஷ்வர்குமார், நெஹரா என்று தற்போது கூட சரியான கலவையில் வீரர்கள் இடம் பிடித்து இருக்கிறார்கள். எனவே அந்த அணி புதுவீரர்களின் வருகையை பெரிய அளவில் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அந்த அணியில் 3 வெளிநாட்டவர் உள்பட 10 வீரர்களின் இடங்கள் காலியாக இருக்கிறது. அதை நிரப்ப ஐதராபாத் நிர்வாகம் ரூ.20.9 கோடி வரை செலவு செய்யலாம்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மிகச்சிறந்த அணியாக வலம் வரும் பெங்களூரு அணி, இன்னும் ஒரு முறையும் கோப்பையை வென்றதில்லை. 10 வீரர்களை விடுவித்த அந்த அணியில் இன்னும் 20 வீரர்கள் அங்கம் வகிக்கிறார்கள். விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி நடப்பு தொடருக்கு 7 வீரர்களை மொத்தம் ரூ.12.82 கோடி செலவு செய்து வாங்க தயாராக உள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: பஞ்சாப் அணி கடந்த ஆண்டு கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட போதிலும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் 19 வீரர்களை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டது. குறைந்த எண்ணிக்கையாக வெறும் 4 வீரர்களை மட்டுமே விடுவித்தது. தற்போதைய ஏலத்தில் அதிகபட்சமாக 4 வெளிநாட்டவர் உள்பட 8 வீரர்களை எடுக்கலாம். ரூ.23.35 கோடி செலவு செய்யும் தகுதியுடன் இருக்கிறது.

டெல்லி டேர்டெவில்ஸ்: கடந்த ஆண்டு டெல்லி அணிக்காக விளையாடியவர்களில் பவான் நெகி, இம்ரான் தாஹிர் உள்பட 7 வீரர்கள் கழற்றி விடப்பட்டனர். டுமினி தலைமையில் களம் காணும் டெல்லி அணி இந்த ஏலத்திற்கு ரூ.23.1 கோடி பயன்படுத்தலாம். 4 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 10 வீரர்களை மேற்கொண்டு நிரப்ப முடியும்.

மேத்யூஸ் (இலங்கை), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), காலின் டி கிரான்ட்ஹோம் (நியூசிலாந்து), முகமது நபி (ஆப்கானிஸ்தான்), மைக்கேல் கிளைஞ்சர் (ஆஸ்திரேலியா), டேவிட் வைஸ் (தென்ஆப்பிரிக்கா), ரபடா (தென்ஆப்பிரிக்கா), பேட் கம்மின்ஸ்(ஆஸ்திரேலியா), இஷாந்த் ஷர்மா (இந்தியா), அபினவ் முகுந்த் (இந்தியா), பிரித்வி ஷா (இந்தியா), டைமல் மில்ஸ் (இங்கிலாந்து), கோரி ஆண்டர்சன் (நியூசிலாந்து), காலின் முன்ரோ (நியூசிலாந்து) உள்ளிட்டோருக்கு ஏலத்தில் அதிக கிராக்கி இருக்கக்கூடும். ஆனால் சர்வதேச போட்டிக்காக இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்க வீரர்கள் மே மாதம் முதல் வாரத்திலேயே ஐ.பி.எல்.-லை விட்டு கிளம்ப வாய்ப்பு இருப்பதால் அதையும் அணி நிர்வாகங்கள் கவனத்தில் வைத்திருக்கும்

http://www.maalaimalar.com/News/Sports/2017/02/16091857/1068595/IPL-351-players-auction-8-teams-position-expectation.vpf

Link to comment
Share on other sites

டி வில்லியர்ஸ், வார்னரை விட ஷிகர் தவானுக்கு அதிக சம்பளம்... அது எவ்வளவு? #IPL

2017 சீசன் ஐ.பி.எல் ஜுரம் பற்றவைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில நாள்களில் ஏலம் தொடங்க உள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு அணியிலும் எந்தெந்த வீரர்கள் தக்கவைக்கப்பட்டிருக்கின்றனர் என்ற பட்டியலை வெளியிட்டிருக்கிறது ஐ.பி.எல் நிர்வாகம். இதன்படி, இந்த ஆண்டு 140 கிரிக்கெட் வீரர்கள் எட்டு அணிகளில் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் 44 வெளிநாட்டு வீரர்களும் அடக்கம்.

எந்தெந்த அணிகள் எவ்வளவு சம்பளம் தந்து அணி வீரர்களைத் தக்கவைத்திருக்கின்றன என்பதை ஐ.பி.எல் இணையதளம் வெளியிட்டுள்ளது. தக்கவைக்கப்பட்ட வீரர்கள் யார் யார், கோடிகளில் சம்பளம் வாங்கும் வீரர்கள் யார் யார் என்பதன் விவரம்...

 ரைஸிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் :-

புனே சூப்பர் கிங்ஸ் அணி

எம்.எஸ். தோனி, அஜிங்கியா ரஹானே, அஷ்வின், ஸ்டீவன் ஸ்மித்., ஃபாப் டு பிளஸிஸ்,  மிட்சேல் மார்ஷ் ,உஸ்மான் கவாஜா , அசோக் டிண்டா, அங்குஷ் பெயின்ஸ், ரஜத் பாட்டியா, அங்கித் ஷர்மா, ஈஸ்வர் பாண்டே,  ஜஸ்கரன் சிங்,  பாபா அபராஜித், தீபக் சாகர், ஆடம் ஜாம்பா 

குஜராத் லயன்ஸ் :-

குஜராத் லயன்ஸ் அணி 

சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, ஜேம்ஸ் ஃபால்க்னர் ,பிரெண்டன் மெக்கல்லம், டுவைன் பிராவோ, ஆரோன் ஃபின்ச், டுவைன் ஸ்மித், தினேஷ் கார்த்திக், தவல் குல்கர்னி, பிரவீன் குமார், ஆன்ட்ரூ டை, இஷான் கிஷண், பிரதீப் சங்வான், சிவில் கௌஷிக்,  ஷதாப் ஜகாதி, ஜெயதேவ் ஷா.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் :- 

பஞ்சாப் அணி

டேவிட் மில்லர், மனன் வோஹ்ரா, கிளன் மேக்ஸ்வெல், குர்கீரத் மன் சிங், ஷான் மார்ஷ், ரித்திமான் சாகா, முரளி விஜய், மோஹித் ஷர்மா, ஹாசிம் ஆம்லா, அக்சர் படேல், அனுரீத் சிங், சந்தீப் ஷர்மா, ஷர்துல் தாக்கூர், நிகில் நாயக், மார்கஸ் ஸ்டாய்னிஸ், கே.சி.கரியப்பா, அர்மான் ஜாபர், பிரதீப் சாஹு, ஸ்வப்னில் சிங்.

கொல்கத்தா நைட்  ரைடர்ஸ் :- 

கொல்கத்தா அணி

கெளதம் கம்பீர், சுனில் நரேன், மனிஷ் பாண்டே, பியூஸ் சாவ்லா, ராபின் உத்தப்பா, ஷகிப் அல் ஹசன், கிறிஸ் லின், உமேஷ் யாதவ், யூசுஃப் பதான், அங்கித் சிங் ராஜ்புட், ஆண்ட்ரூ ரஸ்ஸல், குல்தீப் யாதவ், ஷெல்டன் ஜாக்சன், சூரியகுமார் யாதவ். 

மும்பை இந்தியன்ஸ் :-

மும்பை அணி

ரோஹித் ஷர்மா, பொல்லார்டு, மலிங்கா, ஹர்பஜன் சிங், அம்பதி ராயுடு, ஜாஸ்ப்ரித் பும்ரா, வினய் குமார், பார்த்தீவ் படேல், ஜாஸ் பட்லர், டிம் சவுதி, க்ரூனல் பாண்டியா, ஹர்டிக் பாண்ட்யா, ஷ்ரேயாஸ் கோபால், லேண்டில் சிம்மன்ஸ்,  மிட்செல் மெக்லானகன், நிதிஷ் ராணா, சித்தேஷ் லாட், சுசித், ஜிதேஷ் ஷர்மா, தீபக் புனியா. 

டெல்லி டேர்டெவில்ஸ் :-

டெல்லி அணி

டுமினி, முகமது ஷமி, டீ காக், மயங்க் அகர்வால், அமித் மிஷ்ரா, ஷ்ரேயாஸ் அய்யர், ஜாகீர் கான், சஞ்சு சாம்சன், கிறிஸ்டோபர் மோரிஸ், கார்லஸ் பிராத்வெயிட், கருண் நாயர், ரிஷப் பண்ட், ஷபாஸ் நதீம், ஜெயந்த் யாதவ், சாம் பில்லிங்ஸ், சி.வி.மிலிந்த், சையது கலீல் அகமது, ப்ரத்யுஷ் சிங். 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 

பெங்களூரு அணி - டி வில்லியர்ஸ்

விராட் கோஹ்லி ,ஏ.பி. டி வில்லியர்ஸ், கிறிஸ் கெயில், மிச்செல் ஸ்டார்க், கேதர் ஜாதவ், ஷேன் வாட்சன், ஸ்டூவர்ட் பின்னி, கே.எல்.ராகுல், யுஸ்வேந்திர சாஹல், ஹர்ஷல் படேல், மந்தீப் சிங், ஆடம் மில்னே, சர்ஃப்ராஸ் கான், ஸ்ரீநாத் அரவிந்த், சாமுவேல் பத்ரீ, டிராவிஸ் ஹெட், சச்சின் பேபி,  இக்பால் அப்துல்லா, அவேஷ் கான், தப்ராஸ் ஷம்சி.

சன்  ரைஸர்ஸ் ஹைதராபாத் 

சன்  ரைஸர்ஸ் ஹைதராபாத்

ஷிகர் தவான், புவனேஷ்வர் குமார், டேவிட் வார்னர், ஹென்றிக்குயிஸ், ஆசிஷ் நெஹ்ரா, யுவராஜ் சிங், முஸ்தாபிசூர் ரஹ்மான், பரிந்தர் சிங் சரண், தீபக் ஹூடா, நமன் ஓஜா, ரிக்கி புய், கேன் வில்லியம்சன், சித்தார்த் கவுல், பீபுல் ஷர்மா, பென் கட்டிங், அபிமன்யூ மிதுன், விஜய் ஷங்கர். 

சன் ரைசர்ஸ் அணியைச் சேர்ந்த ஷிகர் தவானுக்கு, டேவிட் வார்னர், டிவில்லியர்ஸ் போன்ற வீரர்களை விட அதிக சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/sports/81104-shikhar-dhawan-was-retained-for-huge-amount-in-ipl.html

Link to comment
Share on other sites

#IPL2017: கேப்டன் பதவியில் இருந்து தோனி நீக்கம்

Dhoni

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் புனே அணி கேப்டன் பதவியில் இருந்து தோனி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தோனிக்கு பதிலாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2016ல் நடந்த ஐபிஎல் தொடரில், தோனி தலைமையிலான புனே அணி ஐந்து போட்டிகளில் மட்டுமே வெற்றிப் பெற்றுள்ளது. இதனால் புனே அணி ஏழாவது இடத்துக்கு பின் தங்கிவிட்டது. தோனி நீக்கப்பட்டதற்கு இதுவே காரணம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

http://www.vikatan.com/news/sports/81326-dhoni-removed-as-rising-pune-supergiants-captain-steve-smith-to-take-over.html

Link to comment
Share on other sites

தோனியை நீக்கியது ஏன்?: புனே அணி உரிமையாளர் விளக்கம்

ஐ.பி.எல். தொடரில் புனே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி நீக்கம் செய்யப்பட்டது ஏன் என்று அந்த அணியின் உரிமையாளர் சஞ்சிவ் கோயின்கா விளக்கம் அளித்துள்ளார்.

 
தோனியை நீக்கியது ஏன்?: புனே அணி உரிமையாளர் விளக்கம்
 
பெங்களூர்:

ஐ.பி.எல் தொடரில் புனே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்தர சிங் தோனி அதிரடியாக நீக்கப்பட்டார். இருப்பினும் வருகின்ற தொடரில் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் அவர் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோனிக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் வருகின்ற ஐ.பி.எல். தொடரில் புனே அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   

தோனி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்து சில வாரங்களே ஆன நிலையில், தற்போது ஐ.பி.எல் தொடரில் புனே அணி கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், புனே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி நீக்கம் செய்யப்பட்டது ஏன் என்று அந்த அணியின் உரிமையாளர் சஞ்சிவ் கோயின்கா விளக்கம் அளித்துள்ளார்.

சஞ்சிவ் கோயின்கா கூறியதாவது:-

தோனி நீக்கம் செய்யப்படவில்லை. வருகின்ற தொடருக்கு ஸ்டீவ் சுமித்தை கேப்டனாக நாங்கள் நியமித்துள்ளோம். வெளிப்படையாக சொல்வதென்றால், கடந்த தொடரில் சிறப்பாக செயல்படவில்லை. அதனால் வருகின்ற 10-வது ஐ.பி.எல். தொடருக்கு புதிய இளம் வீரரை கேப்டனாக தேர்வு செய்ய விரும்பினோம்.

ஒரு தனி நபராகவும், அணித் தலைவராகவும் தோனி மீது அதிக மதிப்பு வைத்துள்ளேன். தோனி தொடர்ந்து அணி வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த ஐ.பி.எல் தொடரில் தோனி தலைமையிலான அணி 14 போட்டிகளில் விளையாடி 5-ல் மட்டுமே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/02/19201314/1069249/why-dhoni-axed-Pune-Owner-Sanjiv-Goenka.vpf

Link to comment
Share on other sites

ஐபிஎல் ஏலம் 2017 - நிகழ்நேரப் பதிவு

 
 
இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் (வலது)
இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் (வலது)
 
 

ஐபிஎல் 2017ஆம் ஆண்டுக்கான ஏலம் பெங்களூருவில் திங்கட்கிழமை காலை தொடங்கியது. முன்னதாக 4-ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த ஏலம், பிசிசிஐ நிர்வாகத்தில் நடந்த சில மாற்றங்களால் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஏறக்குறைய 350 வீரர்கள் இந்த ஏலத்தில் பட்டியலிடப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அணியிலும் 27 வீரர்கள் இருக்கலாம். அதில் 9 பேர் கண்டிப்பாக மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மொத்தம் 8 அணிகள் இந்த ஏலத்தில் பங்கேற்கின்றன.

அதிகபட்சமாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.23.35 கோடி செலவு செய்யலாம். குறைந்தபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணி 11.5 கோடி மட்டுமே செலவு செய்ய முடியும். 14 வீரர்களே இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த ஏலத்தில் அதிக வீரர்களை வாங்கும் எனத் தெரிகிறது.

பென் ஸ்டோக்ஸ் சாதனை

இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக ரூ. 14.5 கோடிக்கு புனே அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். ரூ. 2 கோடியில் ஆரம்பித்த இந்த ஏலத்தில் கடும் போட்டி நிலவியது. மும்பை, பெங்களூரு அணிகள் ஆரம்பத்தில் போட்டியிட்டன. பின் டெல்லி அணி ஏலம் கேட்க ஆரம்பித்தது. தொடர்ந்து பஞ்சாப், ஹைதராபாத் அணிகளும் ஏலம் கேட்க ஆரம்பித்தன. கடைசியில் புனே அணி ரூ. 14.5 கோடிக்கு அவரை ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் தனது பணத்தில் பெரும்பங்கை ஒரு வீரருக்காக புனே அணி செலவழித்தது. சர்வதேச வீரருக்கு ஐபிஎல் ஏலத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச தொகை இது. இதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் ரூ. 9.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.

24 மடங்கு அதிக விலைக்குப் போன இங்கிலாந்து வீரர்

இங்கிலாந்து கவுண்டி வீரர், வேகப்பந்து வீச்சாளர் டைமல் மில்ஸ் ரூ. 12 கோடிக்கு பெங்களூர் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இது அவரது அடிப்படி விலையான ரூ. 50 லட்சத்திலிருந்து 24 மடங்கு அதிக விலை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் ஏலம் 2017ன் முக்கியப் பதிவுகள்

 

இங்கிலாந்து வீரர் டைமல் மில்ஸ் - ரூ. 12 கோடிக்கு பெங்களூரு அணி வாங்கியது.

நியூஸிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் - ரூ. 5 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியுள்ளது.

தென் ஆப்பிரிக்க வீரர் ககிஸோ ரபாடா - டெல்லி அணி ரூ. 5 கோடிக்கு வாங்கியுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் வீரர் நிக்கோலஸ் பூரன் - ரூ. 30 லட்சம் - மும்பை அணி வாங்கியுள்ளது

மேற்கிந்திய தீவுகள் வீரர் ஆண்ட்ரே ஃப்ளெட்சர் - ரூ. 30 லட்சம் - யாரும் வாங்கவில்லை

இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ - ரூ 1.5 கோடி - யாரும் வாங்கவில்லை

நியூஸிலாந்து வீரர் கோரே ஆண்டர்சன் - ரூ. 1 கோடி - டெல்லி அணி வாங்கியுள்ளது

இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் - கடும் போட்டிக்கு இடையே ரூ. 14.5 கோடிக்கு புனே அணி வாங்கியுள்ளது.

இந்திய வீரர் இர்ஃபான் பதான் - ரூ. 50 லட்சம் - யாரும் வாங்கவில்லை

இலங்கை வீரர் ஏஞ்சலோ மாத்யூஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ. 2 கோடிக்கு வாங்கியது.

இந்திய வீரர் பவன் நெகி - கடும் போட்டிக்கு நடுவில் பெங்களூரு அணி ரூ. 1 கோடிக்கு வாங்கியுள்ளது

இந்திய வீரர் சவுரவ் திவாரி - ரூ. 30 லட்சம் - யாரும் வாங்கவில்லை

நியூஸிலாந்து வீரர் ராஸ் டெய்லர் - ரூ. 50 லட்சம் - யாரும் வாங்கவில்லை

இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் - ரூ. 1 கோடி - யாரும் வாங்கவில்லை

இங்கிலாந்து வீரர் ஜேஸன் ராய் - ரூ. 1 கோடி - யாரும் வாங்கவில்லை

இங்கிலாந்து வீரர் இயான் மார்கன் - ரூ.2 கோடி - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கியுள்ளது

முதல் வீரராக நியூஸிலாந்து வீரர் மார்டின் கப்டில் ஏலம் விடப்பட்டார். ஆனால் அவரை எந்த அணியும் வாங்கவில்லை - விலை ரூ. 50 லட்சம்

தொடர்புடையவை

http://tamil.thehindu.com/sports/ஐபிஎல்-ஏலம்-2017-நிகழ்நேரப்-பதிவு/article9551161.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஐ.பி.எல். வீரர்கள் ஏலம்: பென் ஸ்டோக்சை ரூ.14.5 கோடிக்கு வாங்கியது புனே அணி

 

பெங்களூரில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்தில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்சை 14.5 கோடி ரூபாய்க்கு புனே அணி ஏலம் எடுத்தது. ரபாடாவை டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ.5 கோடிக்கு ஏலம் எடுத்தது.

 
 
ஐ.பி.எல். வீரர்கள் ஏலம்: பென் ஸ்டோக்சை ரூ.14.5 கோடிக்கு வாங்கியது புனே அணி
 
பெங்களூர்:

10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 5–ந்தேதி முதல் மே 21–ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி 43 வெளிநாட்டினர் உள்பட 139 வீரர்கள் 8 அணிகளால் தக்க வைக்கப்பட்டனர். மற்றவர்கள் கழற்றி விடப்பட்டனர்.

அணிகளால் விடுவிக்கப்பட்டவர்கள், புதியவர்கள் என்று 130 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 357 வீரர்கள் இந்த முறை ஏலப்பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக ஐ.பி.எல். நிர்வாகம் நேற்று தெரிவித்தது. இதில் 227 பேர் எந்த சர்வதேச போட்டியிலும் ஆடாதவர்கள் ஆவர்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். வீரர்களின் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை தொடங்கியது.

இங்கிலாந்து வீரர் இயான் மோர்கனை அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி எடுத்தது. பவன் நெஹியை பெங்களூர் அணி 1 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. மேத்யூசை டெல்லி டேர்டெவில்ஸ் அணி 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

இங்கிலாந்து அணியின் துணை கேப்டனான பென் ஸ்டோக்சை ஏலம் எடுக்க மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணிகளுக்கிடையே கடும் போட்டி இருந்தது. இறுதியில் பென் ஸ்டோக்சை புனே அணி ரூ.14.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. மதியம் வரையில் இதுவே அதிகபட்ச ஏலத்தொகையாக இருந்தது.

நிகோலஸ் பூரனை மும்பை இண்டியன்ஸ் 30 லட்சம் ரூபாய்க்கும், தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடாவை டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ.5 கோடிக்கும் ஏலம் எடுத்தன. இதேபோல் கோரி ஆண்டர்சனையும், அடிப்படை விலையான 1 கோடி ரூபாய்க்கு டெல்லி அணி வாங்கியது. நியூசிலாந்து வீரர் டிரென்ட் போல்ட்டை 5 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/20110820/1069326/Pune-buy-ben-stokes-for-Rs145-crores-in-IPL-auction.vpf

Link to comment
Share on other sites

ஐபிஎல் ஏலம் 2017ன் முக்கியப் பதிவுகள்

 

இந்திய வீரர் அனிகேத் சவுத்ரி - ரூ.2 கோடி - பெங்களூரு அணி வாங்கியுள்ளது

இந்திய வீரர் ஏகலவ்யா த்விவேதி - ரூ.75 லட்சம் - ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது

இந்திய வீரர் ஆதித்யா தாரே - ரூ.25 லட்சம் - டெல்லி அணி வாங்கியுள்ளது

இந்திய வீரர் ராகுல் டெவாடியா - ரூ.25 லட்சம் - பஞ்சாப் அணி வாங்கியது

இந்திய வீரர் கே.கவுதம் - ரூ. 2 கோடிக்கு மும்பை அணி வாங்கியது.

ரூ. 10 லட்சத்தில் ஆரம்பிக்கப்பட்ட இவரது ஏலத்துக்கு கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத் அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது. கடைசியில் மும்பை அணி அவரை 2 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.

ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி - ரூ. 30 லட்சம் - ஹைதராபாத் அணி வாங்கியது

ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ள முதல் ஆப்கான் வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வீரர் தன்மய் அகர்வால் - ரூ.10 லட்சம் - ஹைதராபாத் அணி வாங்கியது

இந்திய வீரர் உன்முக்த் சந்த் - ரூ.30 லட்சம் - யாரும் வாங்கவில்லை.

இந்திய வீரர் அங்கீத் பவானே - ரூ. 10 லட்சம் - டெல்லி அணி வாங்கியது

டெல்லி டேர்டெவில்ஸ் 9 சர்வதேச வீரர்களை ஏலத்தில் வாங்கிவிட்டதால் இனி இந்திய வீரர்களை மட்டுமே வாங்க முடியும்.

தென்னாப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் - ரூ.50 லட்சம் - யாரும் வாங்கவில்லை.

இந்திய வீரர் ப்ரக்யான் ஓஜா - ரூ.30 லட்சம் - யாரும் வாங்கவில்லை.

ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் - ரூ. 50 லட்சம் - யாரும் வாங்கவில்லை.

இந்திய வீரர் இஷாந்த் சர்மா - ரூ. 2 கோடி - யாரும் வாங்கவில்லை

நியூஸிலாந்து வீரர் கைல் அபாட் - ரூ.1.5 கோடி - யாரும் வாங்கவில்லை

ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் ஜான்சன் - ரூ. 2 கோடி - மும்பை அணி வாங்கியது.

ஆஸ்திரேலிய வீரர் பாட் கமின்ஸ் - ரூ. 4.5 கோடி - டெல்லி அணி வாங்கியது.

http://tamil.thehindu.com/sports/ஐபிஎல்-ஏலம்-2017-நிகழ்நேரப்-பதிவு/article9551161.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஐபிஎல் ஏலம் 2017 - நிகழ்நேரப் பதிவு

 

அனிகேத் சவுத்ரி - கே கவுதம்
அனிகேத் சவுத்ரி - கே கவுதம்
 
 

ஐபிஎல் 2017ஆம் ஆண்டுக்கான ஏலம் பெங்களூருவில் திங்கட்கிழமை காலை தொடங்கியது. முன்னதாக 4-ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த ஏலம், பிசிசிஐ நிர்வாகத்தில் நடந்த சில மாற்றங்களால் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஏறக்குறைய 350 வீரர்கள் இந்த ஏலத்தில் பட்டியலிடப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அணியிலும் 27 வீரர்கள் இருக்கலாம். அதில் 9 பேர் கண்டிப்பாக மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மொத்தம் 8 அணிகள் இந்த ஏலத்தில் பங்கேற்கின்றன.

அதிகபட்சமாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.23.35 கோடி செலவு செய்யலாம். குறைந்தபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணி 11.5 கோடி மட்டுமே செலவு செய்ய முடியும். 14 வீரர்களே இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த ஏலத்தில் அதிக வீரர்களை வாங்கும் எனத் தெரிகிறது.

பென் ஸ்டோக்ஸ் சாதனை

இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக ரூ. 14.5 கோடிக்கு புனே அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். ரூ. 2 கோடியில் ஆரம்பித்த இந்த ஏலத்தில் கடும் போட்டி நிலவியது. மும்பை, பெங்களூரு அணிகள் ஆரம்பத்தில் போட்டியிட்டன. பின் டெல்லி அணி ஏலம் கேட்க ஆரம்பித்தது. தொடர்ந்து பஞ்சாப், ஹைதராபாத் அணிகளும் ஏலம் கேட்க ஆரம்பித்தன. கடைசியில் புனே அணி ரூ. 14.5 கோடிக்கு அவரை ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் தனது பணத்தில் பெரும்பங்கை ஒரு வீரருக்காக புனே அணி செலவழித்தது. சர்வதேச வீரருக்கு ஐபிஎல் ஏலத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச தொகை இது. இதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் ரூ. 9.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.

24 மடங்கு அதிக விலைக்குப் போன இங்கிலாந்து வீரர்

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டைமல் மில்ஸ் ரூ. 12 கோடிக்கு பெங்களூர் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இது அவரது அடிப்படை விலையான ரூ. 50 லட்சத்திலிருந்து 24 மடங்கு அதிக விலை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் ஏலம் 2017ன் முக்கியப் பதிவுகள்

 

காஷ்மீரைச் சேர்ந்த இந்திய லெக் ஸ்பின்னர் பர்வேஸ் ரசூல் - வாங்க ஆளில்லை

பிக்ஹிட்டிங் மே.இ.தீவுகள் வீரர் எவின் லூயிஸ், டேரன் பிராவோ ஆகியோரை எந்த அணியும் வாங்க முன் வரவில்லை

சமீபத்தில் பந்து வீச தடை நீக்கம் செய்யப்பட்ட மே.இ.தீவுகள் அதிரடி வீரர் மர்லன் சாமுவேல்ஸ் - யாரும் வாங்கவில்லை.

தமிழக ரஞ்சி வீர்ர் அபினவ் முகுந்த் மற்றும் முன்னாள் சிஎஸ்கே வீரர் பத்ரிநாத் ஆகியோரும் விற்கப்படவில்லை

இந்திய டெஸ்ட் வீரர் செடேஷ்வர் புஜாராவை வாங்க எந்த அணியும் முன் வரவில்லை.

45 வயது லெக்ஸ்பின் பவுலர் பிரவீண் தாம்பே - ரூ.10 லட்சம்- ஹைதராபாத் அணி வாங்கியது

ஆப்கான் வீரர் ரஷீத் கான் - ரூ.4 கோடி- சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது

புதிர் ஸ்பின்னர் என்று அறியப்படும் தேஜஸ் சிங் பரோகா - ரூ.10 லட்சம்- குஜராத் அணி வாங்கியது

தமிழக லெக் ஸ்பின்னர் முருகன் அஸ்வின் - ரூ. 1 கோடி - டெல்லி டேர் டெவில்ஸ் வாங்கியது

கேரளாவின் பாஸில் தம்பி - ரூ.85 லட்சம்- குஜராத் அணி வாங்கியது

நவ்தீப் சைனி, பவன் சுயால் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களை ஏலம் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. நவ்தீப் சைனி ஆஸி.க்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் டேவிட் வார்னரை பவுன்சரில் வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வீரர் நாது சிங் - ரூ. 50 லட்சம் - குஜராத் அணி வாங்கியுள்ளது

இந்திய வீரர் நடராஜன் - ரூ.3 கோடி - கடும் போட்டிக்கு இடையே பஞ்சாப் அணி வாங்கியுள்ளது.

இவர் தமிழக ரஞ்சி அணியின் வேகப்பந்துவீச்சாளர்.

Link to comment
Share on other sites

மூன்று கோடிக்கு ஏலம் போன தமிழக வீரர்

IPL auction

பத்தாவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம், பெங்களூருவில்  நடைபெற்று வருகிறது. தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனை மூன்று கோடி ரூபாய்க்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலம் எடுத்துள்ளது. மேலும் தமிழகத்தை சேர்ந்த  மற்றொரு வீரரான முருகன் அஷ்வினை டெல்லி டேர்டெவில்ஸ் அணி இரண்டு 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. 

Link to comment
Share on other sites

அசேல குணவர்தனவுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

 

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்திவரும் அதிரடி ஆட்டக்காரரும் சகலதுறை வீரருமான அசேல குணவர்தனவுக்கு இம் முறை ஐ.பி.எல்.இல் அதிர்ஷ்டம் கைகூடியுள்ளது.

fafvv.jpg

இலங்கை அணி வீரரான அசேல குணவர்தனவை 30 இலட்சம் இந்தியன் ரூபாவுக்கு மும்மை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் வாங்கியுள்ளது. இதன் இலங்கை பெறுமதி 6.72 மில்லியன் ரூபாவாகும்.

அசேல குணவர்தன அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று இடம்பெற்ற இருபதுக்கு-20 போட்டியில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி இலங்கை அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்ல முக்கிய வீரராக இருந்ததுடன் முன்னைய போட்டியிலும் இலங்கை அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/16871

Link to comment
Share on other sites

ஐபிஎல்-லில் விளையாடும் முதல் ஆப்கானிஸ்தான் வீரர்!

ஐபிஎல் 2017 சீசனுக்கான ஏலம், பெங்களூரில் நடந்துவருகிறது. இதில், ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபியை ரூ.30 லட்சத்துக்கு ஹைதராபாத் சன் ரைசஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. இதன்மூலம், ஐபிஎல் போட்டிகளில் விளையாடப்போகும் முதல் ஆப்கான் வீரர் என்ற பெருமையை நபி பெற்றுள்ளார்.

Mohemmad Nabi

10-வது ஐபிஎல் சீசன் ஏப்ரல் 5-ல் துவங்குகிறது. முதல் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - சன்ரைசஸ் ஹைதராபாத் அணியினர் மோதுகின்றனர். இந்த ஆண்டு மொத்தம் 9 அணிகள் களமிறங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/sports/81399-afgan-player-mohammad-nabi-sold-rs30-lakhs-for-sunrises-hyderabad.html

Link to comment
Share on other sites

ஐபிஎல் ஏலம் 2017: இந்திய பந்துவீச்சாளர்களுக்கு அதிக மவுசு

 

 
அனிகேத் சவுத்ரி - கே கவுதம்
அனிகேத் சவுத்ரி - கே கவுதம்
 
 

ஐபிஎல் 2017ஆம் ஆண்டுக்கான ஏலம் பெங்களூருவில் திங்கட்கிழமை காலை தொடங்கியது. முன்னதாக 4-ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த ஏலம், பிசிசிஐ நிர்வாகத்தில் நடந்த சில மாற்றங்களால் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஏறக்குறைய 350 வீரர்கள் இந்த ஏலத்தில் பட்டியலிடப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அணியிலும் 27 வீரர்கள் இருக்கலாம். அதில் 9 பேர் கண்டிப்பாக மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மொத்தம் 8 அணிகள் இந்த ஏலத்தில் பங்கேற்கின்றன.

அதிகபட்சமாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.23.35 கோடி செலவு செய்யலாம். குறைந்தபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணி 11.5 கோடி மட்டுமே செலவு செய்ய முடியும். 14 வீரர்களே இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த ஏலத்தில் அதிக வீரர்களை வாங்கும் எனத் தெரிகிறது.

பென் ஸ்டோக்ஸ் சாதனை

இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக ரூ. 14.5 கோடிக்கு புனே அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். ரூ. 2 கோடியில் ஆரம்பித்த இந்த ஏலத்தில் கடும் போட்டி நிலவியது. மும்பை, பெங்களூரு அணிகள் ஆரம்பத்தில் போட்டியிட்டன. பின் டெல்லி அணி ஏலம் கேட்க ஆரம்பித்தது. தொடர்ந்து பஞ்சாப், ஹைதராபாத் அணிகளும் ஏலம் கேட்க ஆரம்பித்தன. கடைசியில் புனே அணி ரூ. 14.5 கோடிக்கு அவரை ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் தனது பணத்தில் பெரும்பங்கை ஒரு வீரருக்காக புனே அணி செலவழித்தது. சர்வதேச வீரருக்கு ஐபிஎல் ஏலத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச தொகை இது. இதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் ரூ. 9.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.

24 மடங்கு அதிக விலைக்குப் போன இங்கிலாந்து வீரர்

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டைமல் மில்ஸ் ரூ. 12 கோடிக்கு பெங்களூர் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இது அவரது அடிப்படை விலையான ரூ. 50 லட்சத்திலிருந்து 24 மடங்கு அதிக விலை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் ஏலம் 2017ன் முக்கியப் பதிவுகள்

 

நியூஸிலாந்து வீரர் லாக்கி ஃபெர்கூசன் - ரூ.50 லட்சம் - புனே அணி வாங்கியது.

இந்திய வீரர் சயான் கோஷ் - ரூ.10 லட்சம் - கொல்கத்தா அணி வாங்கியது.

இந்திய வீரர் மனோஜ் திவாரி - ரூ.50 லட்சம் - புனே அணி வாங்கியது.

மேற்கிந்தியத் தீவுகள் வீரர் டேரன் பிராவோ - ரூ.50 லட்சம் - கொல்கத்தா அணி வாங்கியது.

முந்தைய சுற்றுகளில் இவரை யாரும் கேட்கவில்லை. கடைசி கட்டத்தில் கொல்கத்தா அணி டேரன் பிராவோவை கேட்டு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்திய வீரர் அக்‌ஷ்தீப் நாத் - ரூ.10 லட்சம் - குஜராத் அணி வாங்கியது.

இந்திய வீரர் பிரதாம் சிங் - ரூ.10 லட்சம் - குஜராத் அணி வாங்கியது.

இந்திய வீரர் ராகுல் திரிபாதி - ரூ.10 லட்சம் - புனே அணி வாங்கியது.

இந்திய வீரர் இஷாங்க் ஜக்கி - ரூ.10 லட்சம் - கொல்கத்தா அணி வாங்கியது.

இந்திய வீரர் சஞ்சய் யாதவ் - ரூ.10 லட்சம் - கொல்கத்தா அணி வாங்கியது.

இந்திய வீரர் சுபம் அகர்வால் - ரூ.10 லட்சம் - குஜராத் அணி வாங்கியது.

இந்திய வீரர் ஷெல்லே சவுர்யா - ரூ.10 லட்சம் - குஜராத் அணி வாங்கியது.

இந்திய வீரர் குல்வந்த் கெஜ்ரோலியா - ரூ.10 லட்சம் - மும்பை அணி வாங்கியது.

இந்திய வீரர் மிலிந்த் டாண்டன் - ரூ.10 லட்சம் - புனே அணி வாங்கியது

இந்திய வீரர் முனாஃப் படேல் - ரூ.30 லட்சம் - குஜராத் அணி வாங்கியது

மேற்கிந்திய தீவுகள் வீரர் டேரன் சாமி - ரூ.30 லட்சம் - பஞ்சாப் அணி வாங்கியது.

மேற்கிந்திய தீவுகள் வீரர் ரோவ்மென் பவெல் - ரூ.30 லட்சம் - கொல்கத்தா அணி வாங்கியது.

ஆஸ்திரேலிய வீரர் டேன் க்ரிஸ்டியன் - ரூ.1 கோடிக்கு புனே அணி வாங்கியது.

இலங்கை வீரர் அசேலா குணரத்னே - ரூ.30 லட்சம் - மும்பை அணி வாங்கியது

இந்திய வீரர் ராகுல் சாஹ்ர்- ரூ.10 லட்சம் - புனே அணி வாங்கியது

இந்திய வீரர் முகமது சிராஜ் - பல அணிகளின் போட்டிக்கு மத்தியில் ஹைதராபாத் அணி 2.6 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இவரது ஆரம்ப விலை ரூ.20 லட்சம் மட்டுமே

ஆஸ்திரேலிய வீரர் பில்லி ஸ்டான்லேக் - ரூ.30 லட்சம் - பெங்களூரு அணி வாங்கியது

ஆஸ்திரேலிய வீரர் பென் லாஃப்லின் - ரூ.30 லட்சம் - ஹைதராபாத் அணி வாங்கியது

இந்திய வீரர் நவ்தீப் சைனி - ரூ.10 லட்சம் - டெல்லி அணி வாங்கியது

இந்திய வீரர் பிரவீன் துபே - ரூ.10 லட்சம் - பெங்களூரு அணி வாங்கியது

ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் நேதன் கோர்ட்லர் நைல் - ரூ.3.5 கோடி- சன் ரைசர்ஸ் வாங்கியது

இந்திய ஆல் ரவுண்டர் இர்பான் பத்தான் - எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை.

கிறிஸ் ஜோர்டான் - ரூ.50 லட்சம் - சன் ரைசர்ஸ் வாங்கியது

சவுரவ் திவாரி - ரூ.30 லட்சம் - மும்பை இந்தியன்ஸ் வாங்கியது

இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் - ரூ.1 கோடி - குஜராத் அணி வாங்கியது, இதன் மூலம் ஏரோன் பிஞ்ச், ஜேசன் ராய் இந்த அணியின் தொடக்க வீரர்கள்

டிரெண்ட் போல்ட்டை ரூ.5 கோடிக்கு தன் அணிக்கு ஏலம் எடுத்தது குறித்து கொல்கத்தா கேப்டன் கம்பீர் மகிழ்ச்சி

ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் - ரூ. 1.5 கோடி - யாரும் வாங்கவில்லை

இந்திய வீரர் மன்ப்ரீத் கோனி - ரூ. 60 லட்சம் - குஜராத் அணி வாங்கியது

வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் - ரூ.2.8 கோடி - கிங்ஸ் லெவன் பஞ்சாப் வாங்கியது

இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் - ரூ.30 லட்சம் - புனே அணி வாங்கியது

ஆர்.பி.சிங், ஆஸி. முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின் ஆகியோர் வாங்கப்படவில்லை.

வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி - ரூ.50 லட்சம் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் வாங்கியது

ஆல்ரவுண்டர்கள் சுற்றில் கடைசியாக திசர பெரேரா, தென் ஆப்பிரிக்காவின் பெஹார்டீன் ஆகியோரை வாங்க யாரும் முன்வரவில்லை

ரிஷி தவண் - ரூ.55 லட்சம் - கொல்கத்தா அணி வாங்கியது

ஆல் ரவுண்டர் கரன் சர்மா (ரூ.30 லட்சம்) - ரூ.3.2 கோடி - மும்பை இந்தியன்ஸ் வாங்கியது

இங்கிலாந்து ஆல் ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் - ரூ.4.2 கோடி - கொல்கத்தா அணி வாங்கியது

http://tamil.thehindu.com/sports/ஐபிஎல்-ஏலம்-2017-இந்திய-பந்துவீச்சாளர்களுக்கு-அதிக-மவுசு/article9551161.ece

Link to comment
Share on other sites

இந்த ஐ.பி.எல் புதுமுகத்தின் ஆசை தெரியுமா?

முகமது சிராஜ்

ஐ.பி.எல் ஏலத்தில் ஹைத்ராபாத் அணிக்காக 2.6 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டுள்ளார் முகமது சிராஜ். வேகப்பந்து வீச்சாளரான இவரது அடிப்படை தொகை 20 லட்சம் மட்டுமே. இவ்வளவு பெரிய தொகையை எதிர்பார்க்கவில்லை என்றும். விராட் கோலியை வீழ்த்துவது கனவு என்றும் கூறியுள்ளார். இவரது தந்தை ஆட்டோ ட்ரைவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தனது மகன் சர்வதேச வீரர்களுடன் இணைந்து ஆடுவதை கானனைத்து ஊர்களுக்கும் செல்ல இருப்பதாக அவரது தந்தை கூறியுள்ளார். மேலும் தனது முழுத்திறனையும் வெளிப்படுத்த இருப்பதாகவும். உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனான விராட் கோலியின் விக்கேட்டை ஒரு முறையாவது இந்த தொடரில் வீழ்த்திவிட வேண்டும் என்பதே தனது கனவு என்றும் கூறியுள்ளார். 

http://www.vikatan.com/news/sports/81472-hyderabad-pacer-sirajs-dream-in-ipl.html

Link to comment
Share on other sites

ரூ.3 கோடிக்கு ஏலம்... சேலம் ‘சின்னப்பம்பட்டி' டூ ‘கிங்ஸ் லெவன் பஞ்சாப்'... யார் இந்த நடராஜன்? #VikatanExclusive #IPLAuction

இன்று  காலை 11 மணி வரை நடராஜன் (t.natarajan) என்ற பெயரை யாரும் கூகுளில் தேடவில்லை. ஆனால் 11.30 மணிக்கு இந்தியாவே தேடியது இந்த பெயரைத் தான். யார் இவர்? என்ன சாதித்திருக்கிறார்? இன்றைய தினம் ஐ.பி.எல் 2017 சீஸனுக்கான ஏலம் நடந்தது. இதில் அதிக தொகைக்கு ஏலம் போன இரண்டாவது இந்திய வீரர் சேலம் நடராஜன். 

யார் இந்த நடராஜன்

இர்பான் பதான், இஷாந்த் ஷர்மா போன்ற சீனியர் வீரர்களையே ஏலத்தில் எந்த அணியும் சீண்டவில்லை. ஆனால் டி.நடராஜன் என்ற பெயரை அறிவித்ததும் அத்தனை அணி உரிமையாளர்களும் பரபரப்பானார்கள். புனே, டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா, ஹைதராபாத் அணிகளின் உரிமையாளர்கள் போட்டிபோட்டு, இவரை எப்படியாவது அணிக்குள் கொண்டு வந்துவிட  வேண்டும் என முடிவு செய்தார்கள். பத்து லட்ச ரூபாய் என்பது இவருக்கான அடிப்படை விலை. 

புனே அணிதான் முதலில் இவரை ஏலத்தில் எடுக்க முயற்சித்தது. ஆனால் அதன் பின்னர் ஏலத்தொகை  அதிகரித்துக்கொண்டே செல்ல, அந்த அணி உரிமையாளர்கள் பின்வாங்கினார்கள். பஞ்சாப் அணி இவரை எப்படியாவது வாங்க வேண்டும் என துடித்தது. கொஞ்சம் கூட யோசிக்காமல் ஏலத்தொகையை அதிகரித்து கேட்டுக் கொண்டே இருந்தார் பஞ்சாப் அணி சார்பாக வந்திருந்த வீரேந்திர ஷேவாக். முடிவில் பஞ்சாப் அணி இவரை மூன்று கோடி ரூபாய்க்கு எடுத்திருக்கிறது. 

டி.நடராஜன்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும், தமிழ்நாடு பிரிமியர் லீக் (TNPL) முதல் சீசனை  நீங்கள் உன்னிப்பாக கவனித்திருந்தால், நடராஜன் பற்றி ‘இன்ட்ரோ’ தேவையில்லை. ஒல்லியான தேகம், அலட்சிய வேகம், துல்லியமான யார்க்கர். இது தான் அவரது அடையாளம். தமிழ்நாட்டில் பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாவது மிகவும் அரிது.  சுழற்பந்தின் சொர்க்கபுரியான தமிழகத்தில் இருந்து வேகப்பந்தை வாழ்க்கையாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் நடராஜன். அதிலும் அவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர்.  

சேலத்தைச் சேர்ந்த நடராஜன் இன்று இந்தியா முழுவதும் ஓர் எதிர்பார்ப்பை விதைத்திருக்கிறார். வாழ்த்துகள் சொல்லிப் பேசினேன். 

``சேலத்தில் இருக்கிற சின்னப்பம்பட்டி என்கிற கிராமம்தான் என்னோட சொந்த  ஊர், உயிர் எல்லாமே!  கிரிக்கெட் சின்ன வயசுல இருந்து பிடிக்கும். டிவியில் பார்க்கிறதை விட எனக்கு விளையாடத்தான் பிடிக்கும். பசங்க கூட சேர்ந்துக்கிட்டு டென்னிஸ் பால்லதான் விளையாடிகிட்டு திரிஞ்சேன். இப்போ ஐ.பி.எல் வரைக்கு வருவேன்னு நினைச்சதே இல்லை.  அப்பா கூலி வேலை பாக்கிறாங்க. அம்மா சாந்தா ரோட்டோரத்தில்  தள்ளுவண்டில சிக்கன் விக்கிறாங்க. எனக்கு மூணு தங்கச்சி, ஒரு  தம்பி. சின்ன வயசுல ‘இவன் என்னடா எப்பப் பார்த்தாலும் கிரிக்கெட்டு, கிரிக்கெட்டுன்னு சுத்துறான்’னு திட்டுனாங்க. ஆனா அதுக்கப்புறம் எனக்கு இதுதான் வருதுன்னு தெரிஞ்சவுடனே ‘நீயாச்சும் நல்லா இரு’ன்னு வாழ்த்தி அனுப்பினாங்க. 

    டி.நடராஜன்

 
சேலத்திலேயே ஒரு காலேஜ்ல டிகிரி வாங்கிட்டேன். ஆனா அதுக்கப்புறம் ஏதோ ஒரு வேலைக்கு போறதில விருப்பம் இல்ல . காலேஜ் டைம்ல படிச்சதை விட கிரிக்கெட் விளையாடின நேரம்தான் அதிகம். எங்க கிராமத்துல இருக்க எல்லாருக்கும் என்னை நல்லாவே தெரியும். டென்னிஸ் பால்ல வேகமா பந்துவீசுவேன். அப்படியே விளையாடிகிட்டு திரிஞ்சப்பதான் சென்னைல மேட்ச் எல்லாம் விளையாடலாம்லன்னு  நிறைய பேர் அட்வைஸ் பண்ணாங்க. அதுல ரொம்ப முக்கியமானவர் ஜெயபிரகாஷ் அண்ணா. அவருக்கும் எனக்கும் எந்த ரத்த சம்பந்தமும் கிடையாது. அவர் கூட ஊர்ல கிரிக்கெட் விளையாடிருக்கேன். அவ்ளோ தான் பழக்கம். என்னோட திறமையைப் பாத்து ஊக்குவிச்சதே அவர் தான். கிரிக்கெட் கிட்லாம் வாங்குறதுக்கு பெரிய வசதி எல்லாம் கிடையாது. ஆனா இதுவரைக்கும் எனக்கு எல்லா உதவியும் அவர்தான் பண்ணிருக்கார். 

நான் ஸ்கூல், காலேஜ்ல எந்த டீம்லயும் இருந்தது கிடையாது. முறையான கிரிக்கெட் கிரவுண்ட்ல விளையாடியதும் இல்ல. 20 வயசுக்கு  அப்புறம்தான் முதன்முறையாக கிரிக்கெட் கிரவுண்ட்லயே கால் வச்சேன். சென்னைல ‘விஜய் கிரிக்கெட் கிளப்’, ‘ஜாலி ரோவர்ஸ் கிளப்’ இரண்டுக்கும் ஆடியிருக்கேன். டிவிஷன் கிரிக்கெட் விளையாடியதுல இருந்தே மாநில அணிக்கு ‘செலெக்ட்’ ஆயிட்டேன். ரஞ்சிக்கு ‘செலெக்ட்’ ஆயிருக்கேன்னு தெரிஞ்சப்ப ரொம்ப சந்தோஷப்பட்டேன். நம்ம வாழ்க்கை நல்லாயிரும்னு தோணுச்சு. 2014 - 2015 சீஸன்ல ஒரே ஒரு மேட்ச் தான் ஆட முடிஞ்சது. அப்போ என்னோட பந்து வீசும் முறை விதிகளுக்கு மாறா இருக்கிறதா சொல்லி என்னை தடை பண்ணிட்டாங்க. ரொம்ப உடைஞ்சு போயிட்டேன். ஏன்னா அதுவரைக்கு யாரும் என்னோட பந்துவீச்சு முறையை விமர்சிச்சதேயில்ல. தமிழ்நாடு கிரிக்கெட் கவுன்சில் (TNCA)அகாடமி சுனில் சுப்பிரமணியம் சார் தான், அப்போ எனக்கு நம்பிக்கை கொடுத்தார். ரொம்ப பிரயத்தனப்பட்டு என் பவுலிங் ஸ்டைலையே மாத்தினேன்.
 

டி.நடராஜன்

வேகப்பந்து வீசுறதுல திடீர்ன்னு ஸ்டைலை மாத்தினா, ஆரம்பத்துல நாம் நினைக்கிற விதமான பந்துகளை வீச முடியாது. மீறி முயற்சி செஞ்சா கை, தோள்பட்டை வலிக்கும். கிரிக்கெட்தான் என் வாழ்க்கைனு முடிவு செஞ்சபிறகு இந்த சோதனைகளை எல்லாம் தாங்கிக்கனும்னு மனதை திடப்படுத்திக்கிட்டேன். டெக்னீக்கலா  நிறைய கத்துக்கிட்டு மாத்தினேன். தமிழ்நாட்டோட கோச் பாலாஜி அண்ணா  நிறைய உதவி பண்ணார்.  ஒரு ரஞ்சி சீஸன் மிஸ்ஸானாலும் அடுத்த சீஸனுக்குள்ள சரி பண்ணனும்னு முயற்சி செஞ்சு மாத்திட்டேன். கடந்த ரஞ்சி சீஸன், டி.என்.பி.எல் இது ரெண்டும் எனக்கு அடையாளம் தந்திருக்கு. இப்போ ஐ.பி.எல்-ல வாய்ப்பு கிடைச்சிருக்கு. நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிச்சிருக்கு. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு சார்"  என பெருமிதப் புன்னகையோடு சொன்னார்.

பொதுவாக, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படும். இவர் இருபது வயதுக்கு மேல் தான் முறையான கிரிக்கெட்டே ஆட ஆரம்பித்திருக்கிறார். 'எப்படி பாஸ்... காயங்களை சமாளிச்சீங்க?' எனக் கேட்ட போது  "எனக்கு இதுவரை பெரிய அளவில் காயங்களே ஏற்பட்டதில்லை, அப்பப்ப சின்ன  சின்ன காயங்கள் வரும், அது எல்லாம் இரண்டு மூணு நாள்லயோ ஒரு வாரத்துக்குள்ளயோ சரி ஆகிடும்"  என்கிறார்.

நடராஜனின் பெரும் பலமே ‘யார்க்கர்’ தான். துல்லியமாக இவர் வீசும் யார்க்கரில் பேட்ஸ்மேன்கள்  பெரிய ‘ஷாட்’ ஆடுவது கடினம். டி.என்.பி.எல் தொடரில் அஷ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணிக்கு இவர் ஆடினார். தூத்துக்குடிக்கு எதிரான ஒரு போட்டியில் சூப்பர் ஓவரில் இவர் அபாரமாக பந்து வீசினார். அந்த ஒரு ஓவர் தான் இன்று இவரை மூன்று கோடி வரை ஏலத்தில் எடுக்க முக்கியமான காரணம் என்றால் மிகையாகாது. சுமார் 135 கி.மீ வேகம் வரையில் வீசும் வேகப்பந்து வீச்சாளராக மிளிர்வதால் இவருக்கு இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
 

 

கிரிக்கெட்டில் யார் ரோல் மாடல் என்ற வழக்கமான கேள்வியை முன் வைத்தேன். "யாரும் ரோல் மாடல் எல்லாம் இல்ல சார். ஆஸ்திரேலியாவோட மிச்செல் ஜான்சன் ரொம்ப புடிக்கும். அவரைப் பார்த்தா டிப்ஸ் கேட்கலாம்னு இருக்கேன் " என்கிறார். 

வீட்ல என்ன சொன்னாங்க? 

"காலைல செலெக்ட் ஆனதுல இருந்து வரிசையாக போன் கால் வந்துட்டே இருக்கு. அப்பா வேலைக்கு போயிருக்கார். அம்மாகிட்ட இனிமேல்தான் சொல்லணும். சொன்னா எப்பிடி ரியாக்ட் பண்ணுவாங்கனு தெரில,  ஆனா மூணு தங்கச்சிங்க, தம்பி, அம்மா, அப்பா எல்லாரையும் இனிமேல் நல்லா பாத்துக்குற அளவுக்கு வளர்வேன்னு நம்பிக்கை இருக்கு"  எனச் சொன்னபோது அவரது குரலில் தன்னம்பிக்கை தெறிக்கிறது.

ஹாசிம் ஆம்லா, மார்ஷ், குப்தில், மாக்ஸ்வெல், மில்லர் , ஸ்டாய்னிஸ்,மோர்கன் என அதிரடி வீரர்கள்  நிறைந்த அணியில் இவரும் விளையாடப் போகிறார். கிரிக்கெட் உலகின் கவனமெல்லாம் இப்போது இவர் மீது திரும்பியிருக்கிறது. எப்படி பந்து வீசப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஐ.பி.எல் மட்டுமல்லாமல் வருங்காலத்தில் இந்திய அணியிலும் சேர்ந்து தேசத்துக்கு பெருமைச் சேர்க்க தமிழ்நாடு அன்போடு வாழ்த்துகிறது. 

http://www.vikatan.com/news/sports/81457-salem-to-kings-xi-punjab--who-is-tnatarajan-ipl.html

Link to comment
Share on other sites

கிரிக்கெட் வீரராக ஆகாவிட்டால் கூலி வேலைக்கு சென்று இருப்பேன்

கிரிக்கெட் வீரராக ஆகாவிட்டால் கூலி வேலைக்கு சென்று இருப்பேன்

 

 

கிரிக்கெட் வீரராக ஆகியிருக்காவிட்டால், தினக்கூலி வேலைக்கு சென்று கொண்டு இருந்திருப்பேன் என்று ஐ.பி.எல். ஏலத்தில் ரூ.3 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட தமிழக வீரர் டி.நடராஜன் பேட்டியளித்துள்ளார். 

கிரிக்கெட் வீரராக ஆகியிருக்காவிட்டால் கூலி வேலைக்கு சென்று இருப்பேன்: 

தமிழக வீரர் நடராஜன் நெகிழ்ச்சி 

ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான நேற்றைய ஏலத்தில் பரபரப்பாக பேசப்பட்டவர்களில் ஒருவர், தமிழக வீரர் டி.நடராஜன். 

25 வயதான இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் ரூ.3 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக வாங்கப்பட்டார். 

இவரது சொந்த ஊர் சேலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டி. உடன் பிறந்தவர்கள் 4 பேர். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். 

இவரது தந்தை சேலை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தினக்கூலி. தாயார் நடைபாதையில் தின்பண்டங்கள் வியாபாரம் செய்பவர். 

நடராஜன் தனது 20 வயது வரை டென்னிஸ் பந்தில் தான் கிரிக்கெட் விளையாடினார். அதன் பிறகே தீவிர கிரிக்கெட்டுக்கு மாறினார். 

சென்னைக்கு இடம் பெயர்ந்து டிவிசன் அளவிலான போட்டிகளில் விளையாடி முன்னேறினார். 

அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது, தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட் போட்டியாகும். 

கடந்த ஆண்டு டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தமிழகத்தில் நடைபெற்றது. 

இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக களம் இறங்கினார். 

அது தான் நடராஜனை வெகுவாக அடையாளம் காட்டியது. அவரது பந்து வீச்சு, வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் முஷ்தாபிஜூர் ரகுமானின் பந்து வீச்சு போன்று இருப்பதாக வர்ணிக்கப்பட்டது. 

அது மட்டுமின்றி தூத்துக்குடி பேட்ரியாட்சுக்கு எதிரான சூப்பர் ஓவரில் 6 பந்துகளையும் துல்லியமாக யோர்க்கராக போட்டு கலங்கடித்தார். 

இறுதிகட்டத்தில் நேர்த்தியாக பந்து வீசும் பாங்கு, ஐ.பி.எல். அணி நிர்வாகிகளை கவர்ந்தது. அதன் தாக்கம், இன்று அவரை கோடீசுவரர் ஆக்கி இருக்கிறது. 

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் 7 ஆட்டங்களில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். 

டி.நடராஜன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘நான் கிரிக்கெட் வீரராக ஆகியிருக்காவிட்டால், தினக்கூலி வேலைக்கு சென்று கொண்டு இருந்திருப்பேன். 

சொந்த ஊரில் டென்னிஸ் பந்தில் விளையாடி நிறைய கோப்பைகளை வென்று இருக்கிறேன். 

4-ம் டிவிசன் போட்டியில் ஆடிய போது எனது திறமையை கண்டுபிடித்து ஊக்குவித்தவர், பயிற்சியாளர் ஜெயபிரகாஷ். அவர் தான் எனது பெற்றோரிடம் பேசி என்னை சென்னையிலேயே தங்கியிருந்து விளையாட வைத்தார். 

நான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் எல்லா பெருமையும் அவரைத் தான் சாரும். ஏலத்தில் எடுக்கப்பட்ட தகவலை முதலில் அவரிடம் தான் பகிர்ந்து கொண்டேன். 

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்றார். 

மேலும் அவர், ‘எனது முன்மாதிரி அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சன் ஆவார். ஐ.பி.எல். தொடரின் போது அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் அது மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும்’ என்றார். 

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திண்டுக்கல் அணிக்காக ஆடிய முருகன் அஸ்வின், திருவள்ளூர் வீரன்சுக்காக ஆடிய சஞ்சய் யாதவ் முறையே ஐ.பி.எல். ஏலத்தில் டெல்லி, கொல்கத்தா அணிக்காக வாங்கப்பட்டுள்ளனர்.
Link to comment
Share on other sites

ஐபிஎல் டி20 தொடர் 10-வது சீசன்: இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ரூ.14.50 கோடிக்கு ஏலம்; டைமல் மில்ஸை ரூ.12 கோடிக்கு வளைத்து போட்டது பெங்களூரு

 

 
பென் ஸ்டோக்ஸ்
பென் ஸ்டோக்ஸ்
 
 

ஐபிஎல் டி20 தொடருக்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ரூ.14.50 கோடிக்கு ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. அவருக்கு அடுத்தப்படியாக வேகப்பந்து வீச்சாளரான டைமல் மில்ஸை, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரூ.12 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதுதவிர உள்ளூர் போட்டிகளில் விளையாடும் இந்திய வீரர்கள் பலரும் ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

ஐபிஎல் தொடரின் 10-வது சீசன் போட்டிகள் வரும் ஏப்ரல் 5-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் பல்வேறு அணிகளில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்களுக்கு மாற்று வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.

39 இந்திய வீரர்கள்

ஏலப்பட்டியலில் மொத்தம் 350-க்கும் மேற்பட்ட வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இதில் இருந்து 8 அணிகளின் உரிமையாளர்களும் மொத்தம் ரூ.91.15 கோடி செலவிட்டு 66 வீரர்களை ஏலம் எடுத்தனர். இந்த 66 வீரர்களில் 39 இந்திய வீரர்களும், 27 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர்.

ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் அர்மானை ரூ.4 கோடிக்கும், இதே நாட்டை சேர்ந்த ஆல்ரவுண்டரான முகமது நபியை ரூ.30 லட்சத்துக்கும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலம் எடுத்தது.

நடராஜன்

இதுவரை ஐபிஎல் தொடரில் விளையாடாத தமிழகத்தை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜனை ரூ.3 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. இவரது அடிப்படை தொகை ரூ.10 லட்சமாக இருந்த நிலையில் சுமார் 30 மடங்குக்கு கூடுதலாக ஏலம் எடுக்கப்பட்ட மற்ற முன்னணி வீரர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இதேபோல் ஹைதராபாத்தை சேர்ந்த முகமது சிராஜ் ரூ.2.6 கோடிக்கு சன் ரைசர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். ராஜஸ்தானை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் அனிகெட் சவுத்திரியை ரூ.2 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வளைத்து போட்டது.

கர்நாடகாவை சேர்ந்த இளம் சுழற்பந்து வீச்சாளரான கிருஷ்ணப்பா கவுதமை ரூ.2 கோடிக்கு மும்பை அணி ஏலம் எடுத்தது. இந்திய அணிக்காக ஒருசில ஆட்டங்களில் விளையாடி உள்ள வேகப்பந்து வீச்சாளரான வருண் ஆரோனை ரூ.2.8 கோடிக்கு பஞ்சாப் அணியும், சுழற்பந்து வீச்சாளரான கரண் சர்மாவை ரூ.3.2 கோடிக்கு மும்பை அணியும் ஏலம் எடுத்துள்ளன.

மவுசு குறைந்த நெகி

இடது கை சுழற்பந்து வீச்சாளரான பவன் நெகியை ரூ.1 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலம் எடுத்தது. இவரது அடிப்படை தொகை ரூ.30 லட்சமாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டில் பவன் நெகியை ரூ.8.5 கோடிக்கு டெல்லி அணி ஏலம் எடுத்திருந்தது. எதிர்பார்த்த அளவுக்கு அவரிடம் இருந்து சிறந்த திறன் வெளிப்படாததால் டெல்லி அணி அவரை கழற்றி விட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சீண்டப்படாத வீரர்கள்

இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான சேதேஷ்வர் புஜாரா, வேகப் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா ஆகியோர் எந்த அணியினராலும் ஏலம் எடுக்கப்படவில்லை. இஷாந்த் சர்மாவின் அடிப்படை விலை ரூ.2 கோடியாகவும், புஜாராவின் அடிப்படை விலை ரூ.50 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதேபோல் இர்பான் பதானையும் எந்த அணியும் கண்டுகொள்ளவில்லை.

சமீபத்தில் ஐசிசி-யின் தரவரிசை பட்டியலில் ஒருநாள் போட்டி மற்றும் டி20-ல் முன்னணி பந்து வீச்சாளரான தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரன் தகிரும் விற்பனையாகாத வீரர்களின் பட்டியலில் இடம் பெற்றார். இம்முறை நடைபெற்ற ஏலமானது இங்கிலாந்து அணி வீரர்களுக்கு ஜாக்பாட் ஆக அமைந்தது.

பென் ஸ்டோக்ஸ்

ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸை ரூ.14.50 கோடிக்கு ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணி ஏலம் எடுத்தது. ஸ்டோக்ஸை ஏலம் எடுப்பதில் 5 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. மும்பை, டெல்லி, பெங்களூரு அணிகள் ரூ.10.50 கோடி வரை ஸ்டோக்ஸை ஏலம் கேட்டன. இதன் பின்னர் மும்பை அணி ஒதுங்கிக் கொண்ட நிலையில் ஹைதராபாத் அணியும் சேர்ந்து மல்லுக்கட்டியது.

இதனால் ஸ்டோக்ஸின் மதிப்பு ரூ.12.5 கோடி வரை சென்றது. அந்த சமயத்தில் இறுதியாக ரூ.14.50 கோடிக்கு ஸ்டோக்ஸை தங்கள் பக்கம் இழுத்தது புனே அணி. 25 வயதான ஸ்டோக்ஸ் இதுவரை தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது இல்லை. தற்போதைய நிலையில் உலக கிரிக்கெட்டில் சிறந்த ஆல்ரவுண்டராக திகழும் ஸ்டோக்ஸின் பேட்டிங் ஸ்டிரைக் ரேட் 134-க்கும் அதிகமாக உள்ளது. அதேவேளையில் பந்து வீச்சு விகிதம் 8.60 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டைமல் மில்ஸ்

வேகப்பந்து வீச்சாளரான டைமல் மில்ஸை, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரூ.12 கோடிக்கு வளைத்து போட்டது. மில்ஸ் இதுவரை 55 டி20 போட்டிகளில் விளையாடி 63 விக்கெட்கள் கைப்பற்றி உள்ளார். பந்து வீச்சு விகிதம் 7.47 வைத்துள்ளார்.

இவர்கள் தவிர கிறிஸ் வோக்ஸ் ரூ.4.2 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியாலும், ஜேசன் ராய் ரூ.1 கோடிக்கு குஜராத் லயன்ஸ் அணியாலும் ஏலம் எடுக்கப்பட்டனர். சுவாரசியமாக இங்கிலாந்து அணியின் ஒருநாள் போட்டி கேப்டன் மோர்கன் அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

மற்ற வெளிநாட்டு வீரர்களில் இலங்கையின் மேத்யூவ்ஸ் ரூ.2 கோடிக்கும், நியூஸிலாந்தின் கோரே ஆண்டர்சனை ரூ.1 கோடிக்கும் டெல்லி அணி ஏலம் எடுத்துள்ளது. இவர்கள் இருவரும் அடிப்படை விலைக்கே வாங்கப்பட்டுள்ளனர்.

ரபாடாவுக்கு ரூ.5 கோடி

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தென் ஆப்பிரிக்க அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ரபாடாவை பலத்த போட்டிகளுக்கு இடையே டெல்லி அணி ரூ.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் ரூ.5 கோடிக்கு கொல்கத்தா அணியில் ஏலம் எடுக்கப்பட்டார்.

உரிமையாளர்கள் கருத்து

புனே அணியின் உரிமையாளர் சஞ்ஜீவ் கோயங்கா கூறும்போது, "ஏலத்தில் ஸ்டோக்ஸின் விலை அதிகமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். அவர் போன்ற ஒரு ஆல்ரவுண்டர் தான் அணிக்கு தேவை. கேப்டன் ஸ்மித், பயிற்சியாளர் பிளமிங் ஆகியோருடன் ஆலோசனை நடத்திதான் ஏலத்தில் ஸ்டோக்ஸை எடுத்துள்ளோம். 14 லீக் ஆட்டங்களில் அவர் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அணியை வலுவாக கட்டமைத்து சிறந்த இடத்தை பிடிக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்" என்றார்.

140 கிலோ மீட்டர் வரை பந்து வீசும் திறன் கொண்ட டைமல் மில்ஸை, மிட்செல் ஸ்டார்க்குக்கு பதிலாக தேர்வு செய்துள்ளது பெங்களூரு அணி. அந்த அணியின் உரிமையாளர் அம்ரித் தாமஸ் கூறும்போது, "பெங்களூரு மைதானம் மிகச்சிறியது. இது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருக்கும்.

இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் சராசரி 199 மற்றும் 2-வது பேட் செய்யும் அணியும் 190 ரன்களை கூட எட்டக்கூடிய அளவில்தான் உள்ளது. இதனால் தான் ஸ்டார்க் போன்ற பந்து வீச்சாளர்களை விரும்பினோம். கடைசி நேரத்தில் அவர் விலகியதால் டைமல் மில்ஸை ஏலம் எடுத்துள்ளோம். பெங்களூரு மைதான நிலைக்கு அவர் பொருத்தமாக இருப்பார்" என்றார்.

மும்பை அணியின் உரிமையாளரான நீடா அம்பானி கூறும்போது, பென் ஸ்டோக்ஸ், டைமல் மில்ஸ் ஆகியோரை ஏலம் எடுக்க முடியாமல் போனதில் எந்தவித ஏமாற்றமும் இல்லை. ஏலத்தில் பங்கேற்க நுழையும் போதே ஏமாற்றத்தை அறைக்கு வெளியே விட்டுவிட வேண்டும். சுழற்பந்து வீச்சாளர் அணிக்கு தேவை என்பதால் தான் கரண் சர்மாவை ரூ.3.2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளோம்" என்றார்.

http://tamil.thehindu.com/sports/ஐபிஎல்-டி20-தொடர்-10வது-சீசன்-இங்கிலாந்து-வீரர்-பென்-ஸ்டோக்ஸ்-ரூ1450-கோடிக்கு-ஏலம்-டைமல்-மில்ஸை-ரூ12-கோடிக்கு-வளைத்து-போட்டது-பெங்களூரு/article9553294.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஐபிஎல் டி20: எந்த அணியில் எந்த வீரர்கள்?

 

 
ipl_collage_1_3135_3135965f.jpg
 
 
 

டெல்லி டேர்டேவில்ஸ்: 9 வீரர்களை மொத்தம் ரூ.14.05 கோடிக்கு ஏலம் எடுத்தது. ரபாடா (ரூ.5 கோடி), பேட்ரிக் கம்மின்ஸ் (ரூ.4.5 கோடி), மேத்யூவ்ஸ் (ரூ.2 கோடி), கோரே ஆண்டர்சன் (ரூ.1 கோடி), முருகன் அஸ்வின் (ரூ.1 கோடி), ஆதித்யா தாரே (ரூ.25 லட்சம்), அங்கீத் பாவ்னி, நவ்தீப் ஷைனி, ஷசாங்க் சிங் (தலா ரூ.10 லட்சம்).

 

குஜராத் லயன்ஸ்: 11 வீரர்களை மொத்தம் ரூ.3.85 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஜேசன் ராய் (ரூ.1 கோடி), பாசில் தாம்பி (ரூ.85 லட்சம்), மன்பிரித் கோனி (ரூ.60 லட்சம்), நது சிங் (ரூ.50 லட்சம்), முனாப் படேல் (ரூ.30 லட்சம்), ஆகாஷ்தீப் நாத், சுபர் அகர்வால், தேஜாஸ் சிங் பரோகா, சிராக் சூரி, ஷெல்லே சவுர்யா, பிரதாம் சிங், ஷெல்லி சவுர்யா (தலா ரூ.10 லட்சம்).

 

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: 8 வீரர்களை மொத்தம் ரூ.9.45 கோடிக்கு ஏலம் எடுத்தது. நடராஜன் (ரூ.3 கோடி), வருண் ஆரோன் (ரூ.2.80 கோடி), மோர்கன் (ரூ.2 கோடி), மேட் ஹென்றி (ரூ.50 லட்சம்), மார்ட்டின் கப்தில் (ரூ.50 லட்சம்), டேரன் சமி (ரூ.30 லட்சம்), ராகுல் டிவாட்டியா (ரூ.25 லட்சம்), ரங்கு சிங் (ரூ.10 லட்சம்).

 

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்: 9 வீரர்களை மொத்தம் ரூ.14.35 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. டிரென் போல்ட் (ரூ.5 கோடி), கிறிஸ் வோக்ஸ் (ரூ.4.20 கோடி), நாதன் கவுல்ட்டர் (ரூ.3.50 கோடி), ரிஷி தவண் (ரூ.55 லட்சம்), டேரன் பிராவோ (ரூ.50 லட்சம்), ரோவ்மன் பொவல் (ரூ.30 லட்சம்), சயன் கோஷ், சஞ்ஜெய் யாதவ், இஷாங்க் ஜக்கி (தலா ரூ.10 லட்சம்).

 

மும்பை இந்தியன்ஸ்: 7 வீர்களை மொத்தம் ரூ.8.20 கோடிக்கு ஏலம் எடுத்தது. கரண் சர்மா (ரூ.3.20 கோடி), கிருஷ்ணப்பா கவுதம் (ரூ.2 கோடி), மிட்செல் ஜாண்சன் (ரூ.2 கோடி), அசேல குணரத்னே (ரூ.30 லட்சம்), சவுரப் திவாரி (ரூ.30 லட்சம்), நிக்கோலஸ் பூரன் (ரூ.30 லட்சம்), குல்வந்த் கேஜ்ரோலியா (ரூ.10 லட்சம்),

 

ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ்: 9 வீரர்களை மொத்தம் ரூ.17.20 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் (ரூ.14.50 கோடி), டேன் கிறிஸ்டியன் (ரூ.1 கோடி), மனோஜ் திவாரி (ரூ.50 லட்சம்), லூக்கி பெர்குசன் (ரூ.50 லட்சம்), ஜெயதேவ் உனத்கட் (ரூ.30 லட்சம்), ராகுல் ஷாகர், சவுரப் குமார், மிலிந்த் தாண்டன், ராகுல் அஜெய் திரிபாதி (தலா ரூ.10 லட்சம்).

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ரூ.15.40 கோடிக்கு மொத்தம் 5 வீரர்களை ஏலம் எடுத்துள்ளது. டைமால் மில்ஸ் (ரூ.12 கோடி), அனிகெட் சவுத்ரி (ரூ.2 கோடி), பவென் நெகி (ரூ.1 கோடி), பில்லி ஸ்டான்லேக் (ரூ.30 லட்சம்), பிரவீன் டூபே (ரூ.10 லட்சம்).

 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்: 8 வீரர்களை மொத்தம் ரூ.8.65 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. ரஷித் கான் அர்மான் (ரூ.4 கோடி), முகமது சிராஜ் (ரூ.2.60 கோடி), எக்லாவ்ய திவேதி (ரூ.75 லட்சம்), கிறிஸ் ஜோர்டான் (ரூ.50 லட்சம்), முகமது நபி (ரூ.30 லட்ச

http://tamil.thehindu.com/sports/ஐபிஎல்-டி20-எந்த-அணியில்-எந்த-வீரர்கள்/article9553301.ece

Link to comment
Share on other sites

2.6 கோடிக்கு விலைபோன வீரரின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? : உருக்கமான பேச்சு (காணொளி இணைப்பு)

 

ஐ.பி.எல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக 2.6 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள உள்ளுர் வீரர் மொஹமட் சிராஜின் உருக்கமான பேச்சு கிரிக்கெட் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

கடந்த 20 ஆம் திகதி 2017 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல்.  வீரர்கள் ஏலம் நடைபெற்றது.

இதன்போது இந்தியாவின் ஹைதராபாத்தில் வசிக்கும் 22 வயதான உள்ளுர் வீரர் மொஹமட் சிவாஜ் 2.6 கோடிக்கு ஹைதராபாத் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

 

இது தொடர்பில் அவர் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“எதாவது ஒரு அணிக்காக நான் வாங்கப்படுவேன் எனக்கு தெரியும், எனினும் நான் இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கப்படுவேன் என கனவிலும் நினைக்கவில்லை. நான் கிரிக்கெட் போட்டியொன்றில் முதன்முறையாக 500 ரூபா சம்பளமாக பெற்றேன். எனது மகிழ்ச்சியை எவ்வாறு வெளிப்படுத்துவேன் என தெரியவில்லை”.

எனது தந்தையொரு முச்சக்கரவண்டி சாரதி , எங்களுக்கு சொந்த வீடென்று ஒன்றுமில்லை, நாங்கள் வாடகை வீட்டில்தான் வசித்துவருகின்றோம், எனது பணத்தில் முதல் முதலாக நல்ல வீடொன்று வாங்க வேண்டும், எனது அப்பாவை இனி முச்சக்கரவண்டி செலுத்த வேண்டாம் என கூறியுள்ளேன் அவர் அதை கேட்பதாக இல்லை. எனினும் நான் அவருக்கு கூறி புரியவைத்துவிடுவேன், நான் விளையாடும் போது எனக்கு தேவையான அனைத்தையும் அவர் தயங்காமல் வாங்கித்தருவார்”. என உருக்கமாக கூறியுள்ளார்.

மொஹமட் சிவாஜ் உள்ளுர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/16933

Link to comment
Share on other sites

ஐ.பி.எல். 2017 சீசன்: பஞ்சாப் அணியிடம் இருந்து ஷர்துல் தாகூரை வாங்கியது புனே

ஐ.பி.எல். 2017 சீசனுக்காக பஞ்சாப் அணியில் இடம்பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூரை ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி வாங்கியுள்ளது.

 
ஐ.பி.எல். 2017 சீசன்: பஞ்சாப் அணியிடம் இருந்து ஷர்துல் தாகூரை வாங்கியது புனே
 
ஐ.பி.எல். சீசன் 10 டி20 கிரிக்கெட் திருவிழா ஏப்ரல் மாதம் 5-ந்தேதி முதல் மே 21-ந்தேதி வரை நடக்கிறது. இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இதில் பென் ஸ்டோக்ஸ், தைமல் மில்ஸ் ஆகியோர் 10 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போனார்கள்.

வீரர்கள் ஏலம் முடிந்த பின்னர் இரு அணிகள் விரும்பினால் வீரர்களை மாற்றிக்கொள்ளலாம். அதன்படி வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம்பிடித்திருந்தார்.

99190CC6-FEF2-4EC0-B36A-8013FD72746E_L_s


தற்போது அவரை ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி வாங்கியுள்ளது. ஏற்கனவே டெல்லி அணியில் இருந்து பேட்ஸ்மேன் மயங்க் அகர்வாலை புனே அணி வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியில் உள்ள வீரர்களின் விவரம்:-

1. ஆடம் சம்பா, 2. ரகானே. 3. அங்கித் ஷர்மா, 4. அங்குஷ் பெய்ன்ஸ், 5. அஷோக் திண்டா, 6. பாபா அபரஜித், 7. பென் ஸ்டோக்ஸ், 8. டேனியல் கிறிஸ்டியன், 9. தீபக் சாஹர், 10. டு பிளிசிஸ், 11. ஈஸ்வர் பாண்டே, 12. ஜாஸ்கரன் சிங், 13. ஜெய்தேவ் உனத்கட், 14. லுக்கி பெர்குசன், 15. மனோஜ் திவாரி, 16. மயங்க் அகர்வால், 17. மிலிந்த் தண்டன், 18. மிட்செல் மார்ஷ், 19. மகேந்திர சிங் டோனி, 20. ராகுல் அஜய் திரிபாதி, 21. ராஜட் பாதியா, 22. ரவிச்சந்திரன் அஸ்வின், 23. சவுரப் குமார், 24. ஷர்துல் தாகூர், 25. ஸ்டீவ் ஸ்மித், 26. உஸ்மான் கவாஜா.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/06155305/1072155/IPL-2017-Rising-Pune-Supergiants-Acquire-Shardul-Thakur.vpf

Link to comment
Share on other sites

ஐ.பி.எல். போட்டி: பஞ்சாப் அணிக்கு மேக்ஸ்வெல் கேப்டன்

ஐ.பி.எல். போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் கிளைன் மேக்ஸ்வெல் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

 
 
 
 
ஐ.பி.எல். போட்டி: பஞ்சாப் அணிக்கு மேக்ஸ்வெல் கேப்டன்
 

10-வது ஐ.பி.எல். போட்டி ஏப்ரல் 5-ந்தேதி தொடங்கி மே 21-ந்தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. இதில் விளையாடும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் கிளைன் மேக்ஸ்வெல் புதிய கேப்டனாக நியமிக்கப்01D2BA2E-1F95-4E3E-BEC0-6119DCEC00BA_L_sபட்டு உள்ளார். இதை அந்த அணி நிர்வாகம் உறுதி செய்து உள்ளது.
 

கடந்த ஐ.பி.எல். தொடரின் போது பஞ்சாப் அணிக்கு தென்ஆப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர் கேப்டனாக இருந்தார். போட்டி தொடரின் நடுவில் டேவிட் மில்லருக்கு பதில் முரளிவிஜய் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/10131302/1072928/IPL-Match-Punjab-team-captain-Maxwell.vpf

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஹெல்மெட் கேமரா அறிமுகம்?

அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்க உள்ள ஐ.பி.எல். போட்டியில் பேட்ஸ்மேன்கள் கேமராவுடன் கூடிய ஹெல்மெட் அணிந்து விளையாடும் முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
 
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஹெல்மெட் கேமரா அறிமுகம்?
கேமராவுடன் கூடிய ஹெல்மெட்
புதுடெல்லி :

10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் கேமராவுடன் கூடிய ஹெல்மெட் அணிந்து விளையாடும் முறையை அறிமுகப்படுத்த ஐ.பி.எல். நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் பந்தை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன், களத்தில் எந்த மாதிரி செயல்படுகிறார் என்பதை மிக துல்லியமாக காண முடியும்.

இது ரசிகர்களுக்கு நிச்சயம் புது அனுபவமாக அமையும். ஹெல்மெட்டில் பொருத்தப்படும் கேமராவும், பேட்டரியும் 100 கிராம் எடைக்கும் குறைவாகவே இருக்கும். ஆஸ்திரேலியாவில் நடந்த பிக்பாஷ் கிரிக்கெட்டில் இந்த நவீனமுறை ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு, மிகுந்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/18083808/1074439/IPL-cricket-introduction-helmet-camera.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.