Jump to content

ஐபிஎல் 2017 சீசன்!


Recommended Posts

14 போட்டியில் 17 விக்கெட் வீழ்த்தி அசத்திய ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான்

 

ஐ.பி.எல். தொடரில் 14 போட்டிகளில் 17 விக்கெட்க்கள் வீழ்த்தி தனது திறமையை நிரூபித்து அசத்தியுள்ளார் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான்.

 
 
14 போட்டியில் 17 விக்கெட் வீழ்த்தி அசத்திய ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான்
 
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரஷித் கான். 18 வயதே ஆகும் இவர் ஆப்கானிஸ்தான் தேசிய அணிக்காக சிறந்த வகையில் பந்து வீசி வருகிறார். லெக் ஸ்பின்னராக இவர் கூக்ளி பந்து வீச்சில் வல்லவர். கூக்ளியால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறிடித்து விக்கெட்டுக்களை வீழ்த்தி வருகிறார்.

ஆப்கானிஸ்தானில் போருக்கிடையிலும் கிரிக்கெட் பயிற்சியை மேற்கொண்டு சிறந்த வீரராக வளம் வந்த ரஷித் கான், முதன்முறையாக 2017 ஐ.பி.எல். தொடருக்கான ஏலத்தில் இடம்பிடித்தார். இவரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 4 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது.

4 கோடி ரூபாய்க்கு ரஷித் கான் தகுதியானவரா? என்ற கேள்வி எழும்பியது. ஐ.பி.எல். தொடரில் ரஷிக் கான் சன்ரைசர்ஸ் அணியின் ஆடம் லெவனில் இடம்பிடிப்பாரா? என்ற கேள்வியும் எழும்பியது.

201705182142518894_rashidkhan3-s._L_styv

கடந்த ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடிய வங்காள தேச வேகப்பந்து வீச்சாளர் முஷ்டாபிஜூர் ரஹ்மான் இலங்கை தொடரில் விளையாடியதால் இந்த தொடரின் தொடக்கத்தில் பங்கேற்கவில்லை.

இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் இடம்பிடித்தார். ராயல் சேலஞ்சஸ் அணி 172 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இந்த போட்டியில் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் சேஸிங் செய்யும்போது, தொடக்க வீரர் மந்தீப் சிங்கை 24 ரன்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டாக்கி தனது முதல் விக்கெட்டை பதிவு செய்தார். அத்துடன் ட்ராவிஸ் ஹெட்டையும் வீழ்த்தி இந்த போட்டியில் நான்கு ஓவரில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

201705182142518894_Rashidkhan1-s._L_styv

2-வது போட்டியில் குஜராத் அணிக்கெதிராக மெக்கல்லம் (5), சுரேஷ் ரெய்னா (5), ஆரோன் பிஞ்ச் (3) ஆகிய விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார். 4 ஓவரில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார். அதன்பின் ஐதராபாத் அணியின் நம்பிக்கையை பெற்றார்.

தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் ரஷித் கான் இடம்பிடித்து நம்பிக்கை பந்து வீச்சாளராக உருவெடுத்தார். இவரது பந்தை எதிர்கொள்ள எதிரணி பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள். நேற்றைய போட்டியுடன் 14 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். 324 பந்தில் 358 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார் (ஒரு ஓவருக்கு சராசரியாக 6.62 ரன்கள்). இது மிகப்பெரிய பந்து வீச்சாகும்.

201705182142518894_rashidkhan2-s._L_styv

தற்போது சிறந்த பந்து வீச்சில் 5-வது இடத்தில் உள்ளார். இவருக்கு மேல் உள்ளவர்கள் அனைவரும் ஓவருக்கு சராசரியாக 7 ரன்களுக்கு மேல் கொடுத்துள்ளனர்.

இதன்மூலம் நான்கு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டதற்கு, தான் தகுதியானவர் என்பதை நிரூபித்துள்ளார் ரஷித் கான்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/18214249/1085955/Afghan-player-rashid-khan-proved-my-bowling-talent.vpf

Link to comment
Share on other sites

  • Replies 368
  • Created
  • Last Reply

பிளேஆஃப் சுற்று போட்டிகள் கைவிடப்பட்டால் ‘ரிசர்வ் டே’ தேவை: ஷாருக் கான் கருத்து

ஐ.பி.எல். தொடரில் பிளேஆஃப்ஸ் போட்டிகள் மழைக்காரணமாக கைவிடப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ‘ரிசர்வ் டே’ தேவை என ஷாருக் கான் கூறியுள்ளார்.

பிளேஆஃப் சுற்று போட்டிகள் கைவிடப்பட்டால் ‘ரிசர்வ் டே’ தேவை: ஷாருக் கான் கருத்து
 
ஐ.பி.எல். தொடரில் நாக்அவுட் போட்டியான எலிமினேட்டர் சுற்று நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 128 ரன்கள் சேர்த்தது.

முதல் இன்னிங்ஸ் முடிந்ததும் கனமழை பெய்தது. நாக்அவுட் போட்டி என்பதால் நீண்ட நேரம் காத்திருந்து போட்டியை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் கொல்கத்தா அணி 6 ஓவர்கள் விளையாடும்படி முடிவு செய்யப்பட்டது. அதன்படி 6 ஓவரில் 48 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று கொல்கத்தா அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கொல்கத்தா அணி இந்த ரன்னை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவிலிபையர் 2-க்கு முன்னேறியது.

201705182006339105_sharukhan2-s._L_styvp

பொதுவாக ஐ.பி.எல். தொடரில் 8 மணிக்கு தொடங்கும் போட்டி சுமார் 9.40 மணியளவில் முதல் பேட்டிங் முடிந்துவிடும். 2-வது பேட்டிங் 10 மணியளவில் ஆரம்பித்து 11.40-ற்கு முடிந்துவிடும். நேற்று 6 ஒவர்களை விளையாட கொல்கத்தா அணி நள்ளிரவு 1 மணியளவில் களம் இறங்கியது. 1.30 மணிக்குப் பிறகுதான் போட்டி முடிந்தது.

201705182006339105_sharukhan1-s._L_styvp

இதனால் பெரும்பாலான ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியேறிவிட்டனர். நள்ளிரவு முடிந்து ரசிகர்கள் வீடுகளுக்கு திரும்ப மிகவும் சிரமம் ஏற்பட்டது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிளேஆஃப்ஸ் சுற்று போட்டிகள் கைவிடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டால் ‘ரிசர்வ் டே’ என அழைக்கப்படும் அடுத்த நாள் போட்டியை நடத்த வேண்டும் என்று கொல்கத்தா அணியின் உரிமையாளரான ஷாருக் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

201705182006339105_sharukhan-s._L_styvpf

இதுகுறித்து ஷாருக்கான தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘கொல்கத்தா அணி வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், பிளேஆஃப்ஸ் சுற்று போட்டிகளின்போது போட்டி கைவிடக்கூடிய நிலை ஏற்பட்டால், ‘ரிசர்வ் டே’ தேவை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/18200631/1085948/IPL-playoffs-need-to-have-an-extra-day-in-case-of.vpf

Link to comment
Share on other sites

ஐ.பி.எல். கிரிக்கெட்: தகுதி சுற்றில் மும்பை-கொல்கத்தா இன்று மோதல்

 

 
 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்குள் நுழையும் 2-வது அணி எது என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்றில் மும்பை - கொல்கத்தா அணிகள் இன்று (வெள்ளிக் கிழமை) பலப்பரீட்சை நடத்துகின்றன.

 
 
 
 
ஐ.பி.எல். கிரிக்கெட்: தகுதி சுற்றில் மும்பை-கொல்கத்தா இன்று மோதல்
கொல்கத்தா கேப்டன் கம்பீர்- மும்பை கேப்டன் ரோகித் சர்மா.
பெங்களூரு :

10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்னும் 2 ஆட்டங்களே எஞ்சி உள்ளன. ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்ட நிலையில், மற்றொரு அணி எது என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்று போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறுகிறது. இதில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை இந்தியன்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் கோதாவில் இறங்குகின்றன.

இரண்டு முறை சாம்பியனான மும்பை அணி முதலாவது தகுதி சுற்றில் 20 ரன்கள் வித்தியாசத்தில் புனேயிடம் தோற்றது. இருப்பினும் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்ததால் இன்னொரு வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பலம் வாய்ந்த மும்பை அணி ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும்பட்சத்தில் அபாயகரமான அணியாக உருவெடுத்து விடும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. புனேவுக்கு எதிரான ஆட்டத்தின் போது செய்த தவறுகளை திருத்திக்கொண்டு பரிகாரம் தேட முயற்சிப்பார்கள்.

நடப்பு தொடரில் லீக் சுற்றில் கொல்கத்தாவை சந்தித்த இரண்டு ஆட்டங்களிலும் மும்பை அணியே (9 ரன் மற்றும் 4 விக்கெட் வித்தியாசங்களில்) வெற்றி பெற்றிருந்தது. இதில் கொல்கத்தாவுக்கு எதிராக வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் 24 பந்துகளில் 60 ரன்கள் தேவைப்பட்ட போது ஹர்திக் பாண்ட்யாவின் (11 பந்தில் 29 ரன்) மாயாஜால பேட்டிங்கால் மும்பை அணி ஒரு பந்து மீதம் வைத்து வாகை சூடியது ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. இத்தகைய வெற்றிகள் மும்பை அணிக்கு மனரீதியாக கூடுதல் நம்பிக்கையை அளிக்கும்.

201705190953467014_Gavaskar._L_styvpf.gi

கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி ஒரு கட்டத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிப்பது போல் சென்றது. ஆனால் கடைசி 5 லீக்கில் 4-ல் மண்ணை கவ்வியதால் ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டுவதே பெரும்பாடாகி விட்டது.

மழையால் பாதிக்கப்பட்ட வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்த கொல்கத்தா அணி, 3-வது முறையாக இறுதி சுற்றை எட்டும் முனைப்புடன் ஆயத்தமாகி வருகிறது.

கொல்கத்தா அணியில் பேட்டிங்கில் கேப்டன் கவுதம் கம்பீரும் (4 அரைசதத்துடன் 486 ரன்), பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர் நாதன் கவுல்டர்-நிலேவும் (7 ஆட்டத்தில் 14 விக்கெட்) முதுகெலும்பாக திகழ்கிறார்கள். இதில் கவுல்டர்-நிலே இந்த சீசனில் 4 ஆட்டத்தில் தலா 3 விக்கெட் வீதம் கைப்பற்றி உள்ளார். இந்த ஆண்டில் எந்த பவுலரும் செய்யாத ஒரு சாதனை இதுவாகும். யூசுப் பதான், கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, சுனில் நரின், சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் கலக்கும் பட்சத்தில் கொல்கத்தா அணியின் ‘வீறுநடை’யை எதிரணி தடுப்பது கடினமாகி விடும். விலா பகுதியில் காயமடைந்த கொல்கத்தா பேட்ஸ்மேன் மனிஷ் பாண்டே இந்த ஆட்டத்திலும் விளையாட வாய்ப்பில்லை.

ஐ.பி.எல். வரலாற்றில் கொல்கத்தா அணி, ஒரு அணிக்கு எதிராக அதிகமான தோல்விகளை சந்தித்து இருக்கிறது என்றால் அது மும்பைக்கு எதிராகத்தான். அந்த அணிக்கு எதிராக இதுவரை 20 ஆட்டங்களில் விளையாடி அதில் 5-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 15 ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ளது. இதில் இந்த ஆண்டில் இரண்டு ஆட்டங்களில் வீழ்ந்ததும் அடங்கும்.

201705190953467014_ipl-Mumbai-vs-Kolkata

முந்தைய தோல்விகளுக்கு பழிதீர்க்க கொல்கத்தா அணிக்கு சரியான சந்தர்ப்பம் கனிந்துள்ளது. அதை பயன்படுத்திக்கொள்வார்களா? அல்லது மும்பை அணியின் ‘ராஜ்ஜியம்’ தொடருமா? என்பதை பொறுத்திருந்து கவனிப்போம்.

பொதுவாக பெங்களூரு மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிவார்கள். ஆனால் இந்த சீசனில் ஆடுகளத்தன்மை மெதுவாக இருப்பதால் பந்து வீச்சாளர்களுக்கு கைகொடுக்கிறது. 161 ரன்களே இங்கு இந்த முறை எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். இன்றைய ஆட்டத்திலும் பந்து வீச்சின் தாக்கம் கணிசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வானிலையை பொறுத்தமட்டில் வானம் கொஞ்சம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்வதற்கு 20 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

மும்பை: லென்டில் சிமோன்ஸ், பார்த்தீவ் பட்டேல், ரோகித் சர்மா (கேப்டன்), அம்பத்தி ராயுடு அல்லது நிதிஷ் ராணா, பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, குணால் பாண்ட்யா, மெக்லெனஹான், ஹர்பஜன்சிங் அல்லது கரண் ஷர்மா, பும்ரா, மலிங்கா.

கொல்கத்தா: ராபின் உத்தப்பா, கிறிஸ் லின், யூசுப் பதான், கவுதம் கம்பீர் (கேப்டன்), இஷாங் ஜக்கி, சூர்யகுமார் யாதவ், சுனில் நரின், பியுஷ் சாவ்லா அல்லது குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், நாதன் கவுல்டர்-நிலே, டிரென்ட் பவுல்ட்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/19095343/1085993/ipl-Cricket-qualifying-round-clash-today-in-Mumbai.vpf

Link to comment
Share on other sites

#MIvKKR 107 ரன்களுக்கு சுருண்டது கொல்கத்தா! வெற்றிபெறுமா மும்பை?

 
 

ஐபிஎல் 10-வது சீசன், பரபரப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. கடந்த 16ஆம் தேதி நடந்த முதல் குவாலிஃபயர் போட்டியில், மும்பையை வீழ்த்தி, புனே அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இதையடுத்து, நேற்று முன்தினம் நடந்த எலிமினேட்டர் போட்டியில், ஹைதராபாத்தை விரட்டி, கொல்கத்தா அணி குவாலிஃபயர் இரண்டாவது போட்டிக்கு முன்னேறியது.

Mumbai

இந்நிலையில், இன்று நடக்கும் இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் மும்பை, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. பெங்களூரில் நடக்கும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி, பௌலிங்கை தேர்வுசெய்துள்ளது. கொல்கத்தா முதலில் பேட்டிங் செய்தது

கொல்கத்தா அணியில் இரு மாற்றங்களும், மும்பை அணியில் ஒரு மாற்றமும் செய்யப்பட்டது. 

முதலில் பேட் செய்த கொல்கத்தா, ஆரம்பம் முதலே சொதப்பியது. கம்பீருக்கு பதிலாக, க்ரிஷ் லின் ஓப்பனிங் இறங்கினார். ஆனால், அந்த முயற்சி கைகொடுக்கவில்லை.  இதனால், அந்த அணி 18.5 ஓவர்களில் 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக, சூர்யகுமார் யாதவ் 31 ரன்களும் ஜக்கி 28 ரன்களும் எடுத்தனர். மும்பை அணியில் கரண் சர்மா 4, பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் மும்பை அணி களமிறங்க உள்ளது.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

ஐ.பி.எல்: கொல்கத்தாவை வெளியேற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது மும்பை

ஐ.பி.எல் தொடரின் இரண்டாவது குவாலிபையர் போட்டியில் கொல்கத்தா அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது மும்பை அணி.

 
 
ஐ.பி.எல்: கொல்கத்தாவை வெளியேற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது மும்பை
 
பெங்களூரு:

ஐ.பி.எல். குவாலிபையர்-2 ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் குவாலிபையர் 1-ல் தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ் அணியும், எலிமினேட்டரில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணியின் சுனில் நரைன், கிறிஸ் லின் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். ஆடுகளம் பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைத்ததால், கொல்கத்தா வீரர்கள் கடுமையான திணறினார்கள்.

201705192339483056_iqq5ld5v._L_styvpf.gi

பும்ப்ரா, கரண் ஷர்மா அபாரமாக பந்து வீசினார்கள். ஆட்டத்தின் 2-வது ஓவரில் கிறிஸ் லின் 4 ரன்கள் எடுத்த நிலையில் பும்ப்ரா பந்தில் ஆட்டம் இழந்தார். சுனில் நரைன் 10 ரன்கள் எடுத்த நிலையில் கரண் ஷர்மா பந்தில் ஸ்டம்பிங் ஆனார்.

அதன்பின் வந்த உத்தப்பா 1 ரன்னிலும், காம்பீர் 12 ரன்னிலும், கிராண்ட்ஹோம் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டம் இழக்க, 31 ரன்னுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

6-வது விக்கெட்டுக்கு ஜக்கி உடன் சூர்யகுமார் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. அணியின் ஸ்கோர் 87 ரன்னாக இருக்கும்போது ஜக்கி 28 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

அதன்பின் வந்த சாவ்லா 2 ரன்னிலும், கவுல்டர்-நைல் 6 ரன்னிலும் வெளியேறினார்கள். சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 31 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டாக ராஜ்புத் மலிங்கா பந்தில் ஸ்டம்பை பறிகொடுக்க, கொல்கத்தா அணி 18.5 ஓவரில் 107 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் கரண் ஷர்மா 4 விக்கெட்டும், பும்ப்ரா 3 விக்கெட்டும், ஜான்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் சிம்சன் மற்றும் பார்திவ் படேல் தொடக்க வீரர்களாக ஆடினர். கொல்கத்தா பந்து வீச்சாளர்கள் தொடக்கத்தில் சிறப்பாக பந்து வீச சிம்சன் 3 ரன்களிலும், படேல் 14 ரன்களிலும் வெளியேறினர். இதையடுத்து களமிறங்கிய இளம் வீரர் ராயுடுவும் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

201705192339483056_wie070il._L_styvpf.gi

மும்பை அணி 34 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் களமிறங்கிய கேப்டன் ரோகித் ஷர்மா சற்று நேரம் நிலைத்து நின்று ஆடி சிறிது சிறிதாக ரன்களை சேர்த்தார். அவருடன் ஜோடி சேர்ந்த கருணல் பாண்டியா அதிரடியாக விளையாடி கொல்கத்தா பந்து வீச்சை சிதறடித்தார்.

14.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி வெற்றி இலக்கான 108 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, வரும் ஞாயிறன்று நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் புனே அணியை, மும்பை எதிர்கொள்கிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/19233944/1086147/Mumbai-Indians-won-by-6-wickets-against-kolkatta.vpf

Link to comment
Share on other sites

தொடரில் இருந்து வெளியேற்றம்: கொல்கத்தா ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த காம்பீர்

 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான குவாலிபையர் 2 சுற்றில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியதற்கு கொல்கத்தா ரசிகர்களிடம் காம்பீர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தொடரில் இருந்து வெளியேற்றம்: கொல்கத்தா ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த காம்பீர்
 
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று குவாலிபையர்-2 சுற்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 107 ரன்னில் சுருண்டது. பின்னர் விளையாடிய மும்பை அணி 33 பந்துகள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மிகவும் மோசமான ஆட்டத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து வெளியேறியதற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரசிகர்களிடம் காம்பீர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

201705201616318662_gambhir-s._L_styvpf.g

இதுகுறித்து காம்பீர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், உங்களுக்கு இந்தப் பயணம் மகிழ்ச்சியாக இருந்திருக்காது. நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்தோம். இருந்தாலும் அது அணியை வெற்றி பெற செய்வதற்கு போதுமானதாக இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/20161630/1086256/IPL-2017-Gambhir-Apologises-to-Fans-After-KKR-Journey.vpf

Link to comment
Share on other sites

விக்கெட்டுகளை சீக்கிரம் இழந்ததால் தோல்வி: காம்பீர்

 

2-வது தகுதி சுற்று போட்டியில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் விக்கெட்டுகளை சீக்கிரம் இழந்ததால் தோல்வியடைந்ததாக கொல்கத்தா கேப்டன் கவுதம் காம்பீர் கூறினார்.

 
விக்கெட்டுகளை சீக்கிரம் இழந்ததால் தோல்வி: காம்பீர்
 

2-வது தகுதி சுற்று போட்டியில் மும்பைக்கு எதிரான தோல்வி குறித்து கொல்கத்தா கேப்டன் கவுதம் காம்பீர் கூறியதாவது:-

கடந்த போட்டியில் விளையாடியபோது (ஐதராபாத்துக்கு எதிராக) இந்த ஆடுகளத்தில் 160 ரன் எடுக்க முடியாது என்ற விவாதித்தோம். 140 ரன் எடுக்க இலக்கை நிர்ணயித்து இருந்தோம். ஆனால் நிறைய விக்கெட்டுகளை விரைவிலேயே இழந்து விட்டோம். 107 ரன் என்பது நல்ல ஸ்கோர் கிடையாது. அதை வைத்து கொண்டு எதிரணியை ஆல்-அவுட் ஆக்குவது கடினம்.

எங்களால் எவ்வளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியுமோ அதை வெளிப்படுத்தினோம். அதற்காக பெருமைப்படுகிறோம். புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடத்துக்குள் வர எங்களுக்கு 2 வாய்ப்பு கிடைத்தது. அதை தவற விட்டுவிட்டோம் என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/20153533/1086243/Gambhir-blames-early-wickets-for-loss.vpf

Link to comment
Share on other sites

ஐ.பி.எல்.: மும்பையை 4-0 என ஒயிட்வாஷ் செய்து கோப்பையை கைப்பற்றுமா புனே?

 

பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை இறுதிப் போட்டியிலும் வீழ்த்தி 4-0 என ஒயிட்வாஷ் செய்து புனே அணி கோப்பையை கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

ஐ.பி.எல்.: மும்பையை 4-0 என ஒயிட்வாஷ் செய்து கோப்பையை கைப்பற்றுமா புனே?
 
ஐ.பி.எல். 2017 தொடர் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. நாளை ஐதராபாத் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

14 போட்டிகள் கொண்ட லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஆட்டத்தில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தது. ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி 9 வெற்றிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தது. முதல் குவாலிபையரில் மும்பையை வீழ்த்தி புனே அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிபையர் 2-ல் கொல்கத்தா அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

அசுர பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை புனே அணி எளிதாக வென்றுள்ளது. மும்பை அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியை எதிர்கொண்டது. பரபரப்பான ஆட்டத்தில் மும்பை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதன்பின் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 6 வெற்றிகள் பெற்றது.

201705201604014062_Mumbai-Indians-s._L_s

அடுத்த போட்டியில் புனே அணியை சந்தித்தது. இதில் நான்கு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை சந்தித்தது. பின்னர் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடம்பிடித்தது.

குவாலிபையர் 1-ல் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான மூன்று போட்டிகளிலும் ரைசிங் புனே வெற்றி பெற்றுள்ளது.

இதனால் நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் நான்காவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வெல்லும் நோக்கில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் உள்ளது. மும்பையை 4-0 என ஒயிட்வாஷ் செய்து ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி முதன்முறையாக கோப்பையை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/20160359/1086253/IPL-final-pune-whitewash-mumbai-india-and-to-capture.vpf

Link to comment
Share on other sites

டோனியின் வழிகாட்டுதலில் கற்றுக் கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது: ராகுல் திரிபாதி

 

டோனியின் வழிகாட்டுதலின் கீழ் கற்றுக்கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் தொடக்க ஆட்டக்காரர் திரிபாதி கூறியுள்ளார்.

 
 
டோனியின் வழிகாட்டுதலில் கற்றுக் கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது: ராகுல் திரிபாதி
 
ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணியில் இடம்பிடித்துள்ள இளம் அதிரடி ஆட்டக்காரர் ராகுல் திரிபாதி. புனே அணி தொடக்கத்தில் ரகானே, மயங் அகர்வால் ஆகிய தொடக்க வீரர்களுடன் களம் இறங்கியது. முதல் மூன்று போட்டிகளில் மயங் அகர்வால் சோபிக்காததால், திரிபாதி தொடக்க வீரராக களம் இறங்கினார். அவர் தனது அதிரடி ஆட்டம் மூலம் அணியில் நிரந்தர இடத்தை பிடித்துள்ளார்.

புனே அணிக்காக 388 ரன்கள் குவித்துள்ள திரிபாதி, சர்வதேச வீரர்களான டோனி, ரகானே, ஸ்மித், பென் ஸ்டோக்ஸ் போன்றோர்களுடன் விளையாடியது கனவு அனுபவம் போன்று உள்ளது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து திரிபாதி கூறுகையில் ‘‘புனே அணியில் இடம்பிடித்து விளையாடுவது, எனக்கு கனவு அனுபவம்போல் உள்ளது. உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடனும், எதிர்த்தும் விளையாடுவது த்ரில்லாக உள்ளது.

201705201804059933_Rahul-Tripathi1-s._L_

டோனி மற்றும் ஸ்டீவன் ஸ்மித் போன்ற நட்சத்திர வீரர்களின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி மேற்கொண்டு கற்றுக் கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது வரை புனே அணியில் என்னுடைய பயணம் மகிழ்ச்சியாக உள்ளது. இதே உணர்வோடு இறுதிப் போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

என்னுடைய மிகப்பெரிய உத்வேகம் என்னவென்றால், தோல்வியடைந்த போட்டியில் இருந்து கற்றுக் கொண்டு அதை அடுத்த போட்டியில் செயல்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்பதுதான். இதனால், சில சமயம் நம்முடைய தோல்விகள், வெற்றிக்கான படிக்கல்லாக இருக்கும் என்பதை ஆணித்தரமாக நம்புகிறேன்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/20180404/1086286/RPS-vs-MI-It-is-been-a-pleasure-to-learn-under-the.vpf

Link to comment
Share on other sites

10 ஐபில் தொடர்களில் 7-வது இறுதிப்போட்டியில் களம் காணும் தோனியின் சாதனை

 

தோனி. | படம்.| எம்.வேதன்.
தோனி. | படம்.| எம்.வேதன்.
 
 

10-வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நாளை (ஞாயிறு) நடைபெறும் நிலையில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக களமிறங்கும் புனே அணியின் நட்சத்திர வீரர் தோனி ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 7-வது இறுதிப் போட்டியில் களம் காண்கிறார்.

ஐபிஎல் வரலாற்றில் தோனி செய்துள்ள அடுத்த சாதனையாகும் இது. தோனி 2010, 2011 தொடர்களில் கோப்பையை வென்றார். இதற்கு முந்தைய 6 இறுதிப் போட்டிகளில் தோனி 168 ரன்களை 150 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார்.

ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையாக களம் காண்கிறது: 2010, 2013, 2015 ஆகிய ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மோதியது. இதில் 2013 மற்றும் 2015-ல் கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்.

இந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை 3 முறை எதிர்கொண்டு 3 முறையும் வென்றுள்ளது புனே, அணி, அதாவது 2 லீக் போட்டிகள் பிறகு பிளே ஆஃப் சுற்று வெற்றிகளாகும்.

முன்பும் கூட 2010 தொடரிலும் தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் 3 முறை மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெற்றுள்ளது.

17 வயது நிரம்பிய வாஷிங்டன் சுந்தர் ஐபிஎல் இறுதியில் ஆடும் இளம் வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார். இதற்கு முன்னார் ராஜஸ்தான் ராயல்ஸ் 2008-ல் கோப்பையை வென்ற போது இறுதி ஆடிய ரவீந்திர ஜடேஜாவின் வயது 19 என்பது குறிப்பிடத்தக்கது. மணீஷ் பாண்டே பெங்களூருவுக்கு ஆடிய 2009-ம் ஆண்டு இறுதியில் நுழைந்த போது இறுதி ஆடிய இளம் வீரராகத் திகழ்ந்தார்.

இந்த தொடரில் கடைசி 5 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் ஓவருக்கு 10.71 ஆகும். கடைசி 5 ஓவர்களில் 45 சிக்சர்களையும் 43 நான்கு ரன்களையும் அடித்துள்ளனர்.

கெய்ரன் பொலார்டின் இறுதிப்போட்டி ஸ்ட்ரைக் ரேட் 205 ஆகும். 2010-ல் 10 பந்துகளில் 27 ரன்களையும் 2013-ல் 32 பந்துகளில் 60 ரன்களையும் 2015-ல் 18 பந்துகளில் 36 ரன்களையும் விளாசியுள்ளார். 2013-ல் பொலார்ட் ஆட்ட நாயகன். ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் பொலார்ட் அதிக ரன்களையும் சிக்சர்களையும் அதிக ரன் ஸ்ட்ரைக் ரேட்டையும் வைத்துள்ள வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/10-ஐபில்-தொடர்களில்-7வது-இறுதிப்போட்டியில்-களம்-காணும்-தோனியின்-சாதனை/article9708813.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

ஐபிஎல் கோப்பை யாருக்கு?: இறுதிப் போட்டியில் மும்பை-புனே பலப்பரீட்சை

 

 
ஐபிஎல் கோப்பையுடன் ஸ்மித், ரோஹித் சர்மா. | படம்.| கே.ஆர்.தீபக்.
ஐபிஎல் கோப்பையுடன் ஸ்மித், ரோஹித் சர்மா. | படம்.| கே.ஆர்.தீபக்.
 
 

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஹைதராபாத் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மும்பை அணி 3-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது. 4-வது முறையாக இறுதிப் போட்டியை சந்திக்க உள்ள அந்த அணி கடந்த 2013 மற்றும் 2015-ல் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. இறுதிப் போட்டிகளில் விளையாடி உள்ள அனுபவம் உள்ளதால் இது மும்பை அணிக்கு சாதகமான விஷயமாக கருதப்படுகிறது.

பேட்டிங்கில் ரோஹித் சர்மா, பார்த்தீவ் படேல், சிம்மன்ஸ், பொலார்டு ஆகியோர் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். அம்பாட்டி ராயுடு கடந்த இரு ஆட்டங்களிலும் சிறந்த திறனை வெளிப்படுத்த தவறினார். இதனால் அவருக்கு பதிலாக நித்திஷ் ராணா இடம் பெற வாய்ப்புள்ளது. ராணா இந்த சீசனில் 333 ரன்கள் குவித்துள்ளார்.

அதிரடி வீரரான சிம்மன்ஸ் கடந்த இரு ஆட்டத்திலும் மந்தமாக விளையாடினார். இறுதிப் போட்டி என்பதால் அவர் மீண்டும் அதிரடிக்கு திரும்பக்கூடும். பொலார்டு இந்த சீசனில் பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் ஒரு சில ஆட்டங்களில் தனது அதிரடியால் வெற்றி தேடிக்கொடுத்தார்.

மேலும் பீல்டிங்கிலும் அவர் திறம்பட செயல்பட்டு வருகிறார். பாண்டியா சகோதரர்களான குருணால், ஹர்திக் ஆகியோர் தங்களது ஆல்ரவுண்டர் திறனால் அணியை சமநிலை அடையச் செய்கின்றனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.

காயம் குணமடைந்துள்ளதால் மெக்லெனகன் களமிறங்க வாய்ப்புள்ளது. அவர் இந்த சீசனில் 19 விக்கெட்கள் கைப்பற்றி உள்ளார். அனுபவ வீரரான ஹர்பஜன் சிங் இந்த சீசனில் எதிரணியின் ரன்குவிப்பை ஓரளவுக்கு கட்டுப்படுத்தினாலும் விக்கெட்களை அவ்வளவாக வீழ்த்தவில்லை.

மேலும் அணி நிர்வாகம் கரண் சர்மா மீதே அதிக நம்பிக்கை கொண்டுள்ளது. தகுதி சுற்றில் கொல்கத்தா அணிக்கு எதிராக அவர் 4 விக்கெட்கள் வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

இதனால் ஹர்பஜன்சிங் இன்றைய ஆட்டத்தில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான். கடைசி கட்ட பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, மலிங்கா ஆகியோர் தங்களது யார்க்கர்களால் எதிரணியை மிரட்ட தயாராக உள்ளனர்.

அறிமுகமான முதல் சீசனில் புனே அணி 7-வது இடத்தையே பிடித்திருந்தது. ஆனால் இந்த சீசனில் அனைவரும் வியக்கும் வகையில் முதல் அணியாக இறுதிப் போட்டியில் கால் பதித்தது. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆக இருந்தாலும் தோனியின் வழிகாட்டல் இன்றி புனே அணி இந்த அளவுக்கு முன்னேறி இருக்க சாத்தியமில்லை என்றே கருதப்படுகிறது.

தோனிக்கு இது 7-வது இறுதிப் போட்டியாகும். இதன் மூலம் அதிக இறுதிப் போட்டிகளில் விளையாடும் வீரர் என்ற சாதனையை தோனி படைக்க உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த தோனி 2008 முதல் 2015 வரையிலான காலக்கட்டத்தில் 6 முறை இறுதிப் போட்டியில் விளையாடி உள்ளார். இதில் சென்னை அணி 2010 மற்றும் 2011-ல் பட்டம் வென்றிருந்தது.

தோனியின் அனுபவம் இன்றைய ஆட்டத்தில் அணிக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அவரது அனுபவத்தை கொண்டு முதல் முறையாக கோப்பையை வெல்லும் கனவுடன் ஸ்மித் உள்ளார்.

இதற்கு முன்பு நடைபெற்றுள்ள 9 சீசன்களில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷேன் வார்ன், ஆடம் கில்கிறிஸ்ட், டேவிட் வார்னர் ஆகியோர் தங்களது அணிக்கு பட்டம் வென்று கொண்டு பெருமை சேர்த்துள்ளனர். இம்முறை இறுதிப் போட்டியில் புனே அணி சாதித்தால் இந்த பட்டியலில் ஸ்மித்தும் இடம் பெறுவார்.

தோனி இந்த சீசனில் பேட்டிங்கில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தா விட்டாலும் முக்கியமான இரு ஆட்டங்களில் தனது அதிரடியால் சிறந்த பங்களிப்பை வழங்கி அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்தார்.

லீக் ஆட்டம் ஒன்றில் ஹைதராபாத் அணிக்கு எதிராக 177 ரன்கள் இலக்கை துரத்திய போது தோனி 34 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் விளாசி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார்.

இதையடுத்து தகுதி சுற்று 1-ல் மும்பைக்கு எதிராக கடைசி கட்டத்தில் 5 சிக்ஸர்களுடன் 40 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இந்த ஆட்டத்தில் கடைசி இரு ஓவர்களில் தோனியின் அதிரடியால் புனே அணி 41 ரன்கள் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த சீசனில் தோனி எப்படியும் புனே அணியில் இடம் பெற வாய்ப்பு இல்லை. அவர் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பக்கூடும். இதனால் இந்த சீசனில் தன்னை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய புனே அணி நிர்வாகத்துக்கு தகுந்த பாடம் புகட்டும் வகையில் தோனி, பெரிய அளவிலான ஒரு இன்னிங்ஸை விளையாடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டிங்கில் 421 ரன்கள் குவித்துள்ள ஸ்மித், 388 ரன்கள் சேர்த்துள்ள வளர்ந்து வரும் வீரரான ராகுல் திரிபாதி, 317 ரன்கள் எடுத்துள்ள மனோஜ் திவாரி ஆகியோரிடம் இருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். பந்து வீச்சில் தமிழகத்தை சேர்ந்த சுழற் பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர், பவர்பிளேவில் பிரமாதமாக செயல்பட்டு வருகிறார்.

எதிரணியின் ரன்குவிப்பை கட்டுப்படுத்துவதுடன் விக்கெட்களையும் வீழ்த்துவது பலமாக உள்ளது. தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிராக 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு சிறந்த பங்களிப்பை வாஷிங்டன் சுந்தர் வழங்கினார்.

வேகப் பந்து வீச்சில் ஜெயதேவ் உனத்கட், ஷர்துல் தாக்குர் பலம் சேர்க்கின்றனர். இதில் உனத்கட் இந்த சீசனில் 22 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். இந்த பந்து வீச்சு கூட்டணி மும்பை அணியின் ரன்குவிப்பை கட்டுப்படுத்தும் பட்சத்தில் முதல்முறையாக கோப்பையை வெல்லலாம்.

இந்த சீசனில் லீக் ஆட்டத்தில் இருமுறையும், தகுதி சுற்றிலும் வலுவான மும்பை அணியை புனே வீழ்த்தியிருந்தது. இந்த தோல்விகளுக்கு மும்பை பதிலடி கொடுத்து 3-வது முறையாக கோப்பையை வெல்ல முயற்சிக்கக்கூடும் என கருதப்படுகிறது.

ரூ.15 கோடி பரிசு

இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் ரூ.15 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.10 கோடி கிடைக்கும். இதுதவிர அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள், அதிக ரன்கள் குவித்தவர், மதிப்பு மிகுந்த வீரர் உள்ளிட்ட பல பிரிவுகளிலும் வீரர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.

http://tamil.thehindu.com/sports/ஐபிஎல்-கோப்பை-யாருக்கு-இறுதிப்-போட்டியில்-மும்பைபுனே-பலப்பரீட்சை/article9708861.ece?homepage=true

Link to comment
Share on other sites

புனேவை வீழ்த்த முழுமையாக தயாராகி உள்ளோம்: கரண் ஷர்மா சொல்கிறார்

 

ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் புனே அணியை வீழ்த்துவதற்கு முழுமையாக தயாராகி உள்ளோம் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கரண் சர்மா கூறியுள்ளார்.

 
 
புனேவை வீழ்த்த முழுமையாக தயாராகி உள்ளோம்: கரண் ஷர்மா சொல்கிறார்
 
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 107 ரன்னில் சுருண்டது. இதற்கு முக்கிய காரணியாக இருந்தவர் மும்பை அணி சுழற்பந்து வீச்சாளர் கரண் ஷர்மா. அவர் நான்கு ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சுனில் நரைன், காம்பீர், ஜக்கி, கிராண்ட்ஹோம் ஆகியோரை வீழ்த்தினார். நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஷர்மா ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்னார்.

ஹர்பஜன் சிங்கிற்குப் பதிலாக களம் இறக்கப்பட்ட ஷர்மா தனது திறமையை நிரூபித்துள்ளார். லீக் போட்டியில் புனே அணிக்கெதிராக நாங்கள் பெற்ற தோல்வியானது, நாளை நடக்க இருக்கும் இறுதி ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கரண் ஷர்மா மேலும் கூறுகையில் ‘‘நாங்கள் முழுமையாக தயாராகியுள்ளோம். இறுதிப் போட்டியில் வெற்றி பெறுவோம். இது உறுதி. புனே அணிக்கு எதிராக நாங்கள் தோல்வியுற்றது கடந்த காலம்.

ஹர்பஜன் சிங்கை நீக்கிவிட்டு என்னை அணியில் சேர்த்தது எல்லாம், என் கையில் இல்லை. அணிக்கு நான் தேவைப்பட்டேன் என்றால், அந்த நேரத்தில் நான் சிறப்பாக பந்து வீசி, அணியை வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என் ஆசை.

நான் ஆடும் லெவனில் இடம்பிடிக்காத நேரத்தில் கூட கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். அணியில் இடம்பிடிக்கும்போது, அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெற்றிக்கு உதவ வேண்டும் என்பதுதான் என்னுடைய முதன்மையான நோக்கம்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/20192341/1086290/Mumbai-Indians-vs-Rising-Pune-Supergiant-League-defeats.vpf

Link to comment
Share on other sites

ஐ.பி.எல். கோப்பையை வெல்வது யார்? மும்பை- புனே இன்று பலப்பரீட்சை

 

ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி ஐதராபாத்தில் இன்று நடக்கிறது. இதில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

 
 
ஐ.பி.எல். கோப்பையை வெல்வது யார்? மும்பை- புனே இன்று பலப்பரீட்சை
 

10-வது ஐ.பி.எல். கிரிக் கெட் போட்டி கடந்த ஏப்ரல் 5-ந்தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடந்தது.

மும்பை இந்தியன்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ், குஜராத் லயன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய 8 அணிகள் பங்கேற்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் என்ற அடிப்படையில் தலா 2 முறை மோதின. மே 14-ந்தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன.

இதன் முடிவில் மும்பை (10 வெற்றி) 20 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது.

2-வது இடத்தை புனே (18 புள்ளி), 3-வது இடத்தை ஐதராபாத் (17 புள்ளி), 4-வது இடத்தை கொல்கத்தா (16 புள்ளி) ஆகிய அணிகள் பிடித்து பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறின.

 

201705211048177830_dhoni-sssss._L_styvpf

முதல் 2 இடங்களை பிடித்த மும்பை - புனே அணிகள் இறுதிப் போட்டிக்கான முதல் தகுதி சுற்றில் மோதின. இதில் புனே 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

வெளியேறுதல் சுற்று ஆட்டத்தில் 3-வது இடத்தை பிடித்த ஐதராபாத், 4-வது இடத்தை பிடித்த கொல்கத்தா அணிகள் மோதின. இதில் கொல்கத்தா 7 விக்கெட்டில் வென்றது.

இதையடுத்து நடந்த 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

2 முறை சாம்பியனான (2013, 2015) மும்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவது இது 4-வது முறையாகும்.

ஐ.பி.எல. கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் நடக்கிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - ஸ்டீவன் சுமித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

முன்னாள் சாம்பியனான மும்பை 3-வது முறையாக பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

தனது முதல் ஆட்டத்தில் தோற்ற (புனேவுக்கு எதிராக) அந்த அணி அதன்பின் வெற்றியை குவித்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. ஆனால் லீக் ஆட்டத்தில் புனேவிடம் 2 முறையும், முதல் தகுதி சுற்றிலும் மும்பை தோற்றது.

இதற்கு தக்க பதிலடி கொடுத்து கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

அந்த அணியில் பார்த்தீவ் பட்டேல், சிம்மனஸ், ரோகித் சர்மா, குணால் பாண்ட்யா, ஹர்த்திக் பாண்ட்யா, மிட்செல் ஜான்சன், கரண் சர்மா, பும்ப்ரா, மலிங்கா போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். பேட்டிங், பந்து வீச்சில் சம பலத்துடன் திகழ்கிறது.

 

201705211048177830_bumrah-s._L_styvpf.gi

கடந்த ஆண்டு அறிமுகமான புனே அணி அத்தொடரில் 7-வது இடத்தை பிடித்தது. இந்த ஆண்டு கேப்டன் பதவியில் இருந்து டோனி கழற்றி விடப்பட்டு ஸ்டீவன் சுமித் நியமிக்கப்பட்டார்.

அந்த அணி இந்த ஆண்டு சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டியை எட்டி இருக்கிறது.

இத்தொடரில் மும்பையுடன் மோதிய 3 ஆட்டத்திலும் புனேயே வெற்றிவாகை சூடி இருக்கிறது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.

பேட்டிங்கில் ஸ்டீவன் சுமித், ராகுல் திரிபாதி, ரகானே, மனோஜ் திவாரி, டோனி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச போட்டிக்கு சென்று விட்டதால் புனேக்கு பின்னடைவாக கருதப்பட்டாலும் அதை சமாளித்து விளையாடுகிறார்கள். டோனியின் அனுபவம் ஆலோசனை புனே அணிக்கு உதவிகரமாக இருக்கிறது.

தகுதி சுற்றில் அவர் மும்பைக்கு எதிராக அதிரடியாக விளையாடியதால் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. பந்து வீச்சில் ஜெய்தேவ் உனத்கட், வாஷிங்டன் சுந்தர், தாகூர், டேனியல் கிறிஸ்டியன், ஆடம் ஜம்பா ஆகியோர் உள்ளனர்.

புனே முதல் ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. இரு அணிகளும் சமபலம் வாய்ந்ததனால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/21104815/1086338/Who-win-ipl-champion-mumbai-indians-pune-clash-today.vpf

Link to comment
Share on other sites

நாங்கள் விழிப்பதற்கான அழைப்பு விடுத்ததே புனேதான்: மும்பை அணி பயிற்சியாளர் சொல்கிறார்

ஐ.பி.எல். தொடரில் நாங்கள் விழிப்பதற்கான அழைப்பு விடுத்ததே ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிதான் என்று மும்பை அணி பயிற்சியாளர் ஜெயவர்தனே சொல்கிறார்.

 
நாங்கள் விழிப்பதற்கான அழைப்பு விடுத்ததே புனேதான்: மும்பை அணி பயிற்சியாளர் சொல்கிறார்
 
ஐ.பி.எல். தொடர் சீசன் 10 இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று ஐதராபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்திற்காக மும்பை இந்தியன்ஸ் - ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

இந்த தொடரில் நாங்கள் விழிப்பதற்கான அழைப்பு விடுத்ததே புனே அணிதான் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜெயவர்தனே கூறியுள்ளார்.

இதுகுறித்து ஜெயவர்தனே கூறுகையில் ‘‘நாங்கள் முதலில் தொடரை தோல்வியுடன் தொடங்கினோம். எங்களுடைய தோல்வியில் இருந்து மீண்டு வெற்றியை பெற நாங்கள் விழிப்பதற்கான அழைப்பு விடுத்ததே புனே அணிதான்.

அந்த அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, எப்படி தோல்வியில் இருந்து மீள வேண்டும் என்று ஆராய்ந்தோம். அதன்பிறகு தொடர்ந்து முன்னேறினோம். சில போட்டிகளில் நெருங்கி வந்து வெற்றி பெற்றோம். மீண்டும் தொடரின் மத்தியில் புனே அணிதான் நாங்கள் விழிப்பதற்கான அழைப்பு விடுத்தது.

201705211218483285_jayawardene-s._L_styv

தற்போது நாக்அவுட் சுற்றிலும் புனே அணியிடம் தோல்வியடைந்தோம். அதுவும் எங்களுக்கு விழித்துக் கொள்ள கொடுத்த அழைப்புதான். பெங்களூருவில் கொல்கத்தா அணிக்கெதிராக நாங்கள் வெற்றி பெற அது முக்கிய காரணமாக இருந்தது. இன்று சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/21121845/1086351/Rising-Pune-Supegiant-gave-us-wake-up-calls-says-Mumbai.vpf

Link to comment
Share on other sites

புனேவுக்கு 130 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்

ஐதராபாத் நகரில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் புனே அணிக்கு 130 ரன்களை இலக்காக மும்பை இந்தியன்ஸ் நிர்ணயித்துள்ளது.

 
 
புனேவுக்கு 130 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்
 
ஐதராபாத்:

ஐ.பி.எல. கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி ஐதராபாத் நகரில் நடைபெற்று வருகின்றது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - ஸ்டீவன் சுமித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்நிலையில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 10 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. சிம்மன்ஸ்(3), பார்த்திவ் பட்டேல்(4) ரன்களில் ஆட்டமிழந்தனர்.
201705212206165855_Cricket2._L_styvpf.gi
இருப்பினும் ராயுடு 12 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோகித் சர்மாவும் 24 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் 56 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தடுமாறியது. வந்த வேகத்தில் சிக்ஸர் விளாசிய பொல்லார்டும் 7 ரன்களில் அதே ஓவரில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா(10), கேவி.சர்மா(1)ரன்களில் ஆட்டமிழக்க 79 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்தது மும்பை இந்தியன்ஸ். இதனால் 100 ரன்களை மும்பை இந்தியன்ஸ் அணி எட்டுமா என்ற சந்தேகம் எழுந்தது. இறுதியில் குணால் பாண்டியா இறுதி வரை நின்று விளையாடி 47 ரன்கள் குவித்து ஆட்டத்தில் இறுதி பந்தில் ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. புனே அணி தரப்பில் உனந்த்கண்ட், ஜம்பா, கிறிஸ்டியன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதில் உனந்த்கண்ட் 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
201705212206165855_Cricket3._L_styvpf.gi
இதனையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் புனே அணி விளையாடி வருகிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/21220613/1086426/IPL-MI-set-target-130-to-Pune.vpf

Link to comment
Share on other sites

ஐ.பி.எல்.லில் 3-வது முறையாக சாம்பியன்: மும்பை அணிக்கு ரூ.15 கோடி பரிசு

 

ஐ.பி.எல். கோப்பையை மும்பை அணி 3-வது முறையாக வென்று சாதனை படைத்தது. சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரூ.15 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது.

 
 
 
 
ஐ.பி.எல்.லில் 3-வது முறையாக சாம்பியன்: மும்பை அணிக்கு ரூ.15 கோடி பரிசு
 
ஐதராபாத்:

ஐதராபாத்தில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்னே எடுக்க முடிந்தது.

கர்ணல் பாண்ட்யா அதிகபட்சமாக 38 பந்தில் 47 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் ரோகித்சர்மா 22 பந்தில் 24 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர். ஜெய்தேவ் உனட்கட், ஆடம் ஜம்பா, கிறிஸ்டியன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

130 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடிய ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 128 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 1 ரன்னில் வென்று ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது.
 
201705221116066528_supdghlb._L_styvpf.gi


ஆட்டத்தின் கடைசி பந்தில் 4 ரன் தேவைப்பட்டபோது 2 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் புனே அணி 1 ரன்னில் தோற்று கோப்பையை இழந்தது.

கேப்டன் சுமித் 50 பந்தில் 51 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), ரகானே 38 பந்தில் 44 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர். ஜான்சன் 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

மும்பை இந்தியன்ஸ் அணி 3-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. இதற்கு 2013 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது.
 
201705221116066528_h1748h72._L_styvpf.gi


ஐ.பி.எல். கோப்பையை 3 முறை வென்ற முதல் அணி என்ற சாதனையை மும்பை பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தலா 2 தடவை வென்று இருந்தன.

சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரூ.15 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது.

மயிரிழையில் ஐ.பி.எல். கோப்பையை இழந்து 2-வது இடத்தை பிடித்த ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட் அணிக்கு ரூ.10 கோடி பரிசாக வழங்கப்பட்டது.
 
201705221116066528_z32ywn6h._L_styvpf.gi


அதிக ரன்கள் எடுத்த வார்னர் (641 ரன்) ஆரஞ்சு நிற தொப்பியையும், அதிக விக்கெட் எடுத்த புவனேஸ்வர்குமார் (26 விக்கெட்) ஊதா நிற தொப்பியையும் கைப்பற்றினார்கள். ஐதராபாத் அணியை சேர்ந்த இருவரும் தலா ரூ.10 லட்சும் பரிசு தொகையை பெற்றனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/22111602/1086505/3rd-time-champion-in-IPL-Rs-15-crore-prize-for-Mumbai.vpf

Link to comment
Share on other sites

ஐ.பி.எல். பரபரப்பான தருணம் : வெற்றி மகிழ்ச்சியில் டவலை கழற்றி நிர்வாணமாக ஆடிய ஜோஸ் பட்லர்   (Video)

 

 

 

ஐ.பி.எல். 2017 இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றிபெற்றதை அந்த அணி வீரர் ஜோஸ் பட்லர், நிர்வாண நடனம் போட்டு கொண்டாடியுள்ளார்.buttler-inset.jpg

ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் ஐ.பி.எல். 2017 இறுதிப்போட்டி நேற்று இரவு  நடைபெற்றது. 

இதில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் பந்தில் 1 ஓட்டம்  வித்தியாசத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ரைஸிங் புணே சூப்பர்ஜெயின்ட் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது.

 

இந்த ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் விளையாடி வந்தார். 

இந்நிலையில், ஜூன் மாதம் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கு பயிற்சி மேற்கொள்ள நாடு திரும்பினார். 

இதன்காரணமாக அவரால் இறுதிப்போட்டியில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. 

எனினும், மும்பை அணி விளையாடும் இறுதிப்போட்டியை நேரலையில் ஆவலுடன் பார்த்து, இரசித்துக் கொண்டிருந்தார். 

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் இறுதிப் பந்தில் மும்பை அணி ஒரு ஓட்ட வித்தியாசத்தில் புணே அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது. மேலும், 3-ஆவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.

இதனிடையே, ஆர்வமிகுதியால் தான் கட்டியிருந்த டவல் கழன்று விழுவது கூட தெரியாமல் வெற்றியை கொண்டாடினார். இதனை வீடியோவாக பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாக பரவி வருகிறது.

http://www.virakesari.lk/article/20235

Link to comment
Share on other sites

"மலிங்காவின் உரை வீரர்களுக்கு உற்சாகத்தை அளித்தது” - சச்சின் டெண்டுல்கர் பாராட்டு

ஐ.பி.எல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியின் பந்துவீச்சாளர் மலிங்காவின் உரை வீரர்களுக்கு உற்சாகத்தை அளித்தது, வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

 
 
"மலிங்காவின் உரை வீரர்களுக்கு உற்சாகத்தை அளித்தது” - சச்சின் டெண்டுல்கர் பாராட்டு
 
மும்பை:

ஐ.பி.எல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியின் பந்துவீச்சாளர் மலிங்காவின் உரை வீரர்களுக்கு உற்சாகத்தை அளித்தது, வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் மோதின. முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. 130 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடிய ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களே எடுத்தது.
201705230213567063_a40o9u0k._L_styvpf.gi
இதனால் மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் வென்று ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. அத்துடன் ஐ.பி.எல். கோப்பையை மூன்றாவது முறை வென்று சாதனை படைத்துள்ளது. அந்த அணிக்கு ஐ.பி.எல். கோப்பையுடன், 15 கோடி ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், வெற்றிக் களிப்பில் பேசிய சச்சின், 'ஆட்டத்தின் முதல் பாதி எங்களுக்கு சாதகமாக இல்லை. போட்டியின் இடைவெளியின் போது மலிங்கா அருமையான ஒரு உரையை வீரர்களிடம் நிகழ்த்தினார். அவர் பேசிய பிறகு ஆட்டத்தை வெற்றி பெற முடியும் என்ற நம்பினோம்' என மலிங்காவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/23021400/1086620/I-was-sure-Malinga-was-going-to-do-something-great.vpf

Link to comment
Share on other sites

ஐ.பி.எல். இறுதிப்போட்டி : முடிவுகளை மிகச்சரியாக எதிர்வுகூறிய டுவிட்டர் பதிவு : அதிர்ச்சியில் ரசிகர்கள்!

 

 

நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணி மற்றும்  ஓட்ட எண்ணிக்கைகளின் விபரங்கள் என்பவற்றை போட்டிக்கு முதலிலேயே எதிர்வுகூறிய டுவிட்டர் கணக்கு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த டுவிட்டர் கணக்கில் குறிப்பிடப்பட்ட அனைத்து விடயங்களும் ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் ஏறக்குறைய இடம்பெற்றுள்ளன.

அதாவது இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெறும் அணி எதுவாக இருந்தாலும், களத்தடுப்பில் முதலில் பூனே அணி ஈடுபடும். அதுமாத்திரமின்றி முதலில் துடுப்பெடுத்தாடும் மும்பை அணி 120 -130 இடையில் ஓட்டங்களை பெற்று கிண்ணத்தை கைப்பற்றும்.

1.JPG

2.JPG

போட்டியில் ஒரு “நோ போல்” பந்து கூட வீசப்படாதென்பதுடன், மும்பை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் பொல்லார்ட் ஒரு ஆறு ஓட்டத்தை மாத்திரம் பெற்றுக்கொடுப்பார். 

7.JPG

5.JPG

மும்பை அணியின் பார்த்திவ் பட்டேல் மற்றும் பூனே அணியின் ராஹுல் டிருபாதி ஆகியோர் 10 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழப்பர்.

4.JPG

3.JPG

பூனே அணியின் தலைவர் ஸ்மித்தின் ஓட்ட வேகம் 100 இற்கு குறைவாகவே இருப்பதுடன், போட்டியின் அதிக ஓட்டங்களையும் அவர் பதிவுசெய்வார்.

8.JPG

9.JPG

இதேவேளை போட்டியில் ஆட்டநிர்ணயம் இடம்பெறவில்லையெனவும், இது எனது தனிப்பட்ட எதிர்வுகூறல் எனவும் குறித்த டுவிட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

10.JPG

குறித்த டுவிட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டிருந்தவாறு மும்பை அணி இறுதிப்போட்டியில் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/20308

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.