Jump to content

ஐபிஎல் 2017 சீசன்!


Recommended Posts

ஐ.பி.எல். சீசன் 10: டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இருந்து டுமினி விலகல்

ஐ.பி.எல் சீசன்-10 டி20 கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் இருந்து டுமினி விலகியுள்ளார்.

 
ஐ.பி.எல். சீசன் 10: டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இருந்து டுமினி விலகல்
 
இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழா ஐ.பி.எல். தொடர். கடந்த 9 வருடங்களாக வெற்றிகரமாக நடைபெற்று வரும் இந்த தொடரின் 10-வது சீசன் அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்குகிறது.

இந்த தொடருக்கான டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் தென்ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து ஆல்ரவுண்டரான டுமினி இடம்பிடித்திருந்தார். இவர் நியூசிலாந்து மண்ணில் நடைபெற்று வரும் இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் ஐ.பி.எல். சீசன் 10-ல் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். மேலும் தான் விலகுவதற்கு தனிப்பட்ட காரணங்கள் என்றும் கூறியுள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் டுமினி சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். 2016-ல் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர், தற்போது வரை அந்த அணியிலேயே நீடித்து வருகிறார். கடந்த சீசனில் 10 போட்டிகளில விளையாடி 191 ரன்கள் சேர்த்தார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/20193819/1074957/Delhi-Daredevils-Duminy-withdraws-from-the-upcoming.vpf

Link to comment
Share on other sites

  • Replies 368
  • Created
  • Last Reply

ஐ.பி.எல். போட்டி: புனே அணியில் இம்ரான் தாகீர்

 

ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஆல்-ரவுண்டர் மிச்செல் மார்ஷ் காயத்தால் விலகியதை அடுத்து தென்ஆப்பிரிக்காவின் இம்ரான் தாகீர் புனே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 
ஐ.பி.எல். போட்டி: புனே அணியில் இம்ரான் தாகீர்
 
10-வது ஐ.பி.எல். போட்டி வருகிற ஏப்ரல் 5-ந்தேதி தொடங்குகிறது. இதில் ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஆல்-ரவுண்டர் மிச்செல் மார்ஷ் (ஆஸ்திரேலியா) காயத்தால் விலகி உள்ளார். அவருக்கு பதில் தென்ஆப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாகீர் புனே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் நடந்த ஐ.பி.எல். ஏலத்தில் இம்ரான் தாகீரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/24124840/1075717/IPL-2017-Imran-Tahir-Replaces-Mitchell-Marsh-in-Rising.vpf

Link to comment
Share on other sites

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தமிழில் வர்ணனை

 

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தமிழ், பெங்கால், தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளில் வர்ணனையுடன் சோனி இ.எஸ்.பி.என். மற்றும் சோனி இ.எஸ்.பி.என். எச்.டி. சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

 
 
 
 
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தமிழில் வர்ணனை
 
சென்னை :

10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் ஏப்ரல் 5-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியை நேரடியாக ஒளிபரப்பும் உரிமையை சோனி டெலிவிஷன் குழுமம் பெற்றுள்ளது. போட்டிகள் ஆங்கிலம் மற்றும் இந்தி வர்ணனையுடன் ஒளிபரப்பப்படுவது வழக்கமாகும்.

பிராந்திய ரசிகர்களையும் அதிகம் கவரும் வகையில் மண்டல மொழிகளிலும் இந்த போட்டியை ஒளிபரப்ப சோனி குழுமம் முடிவு செய்துள்ளது. தமிழ், பெங்கால், தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளில் வர்ணனையுடன் சோனி இ.எஸ்.பி.என். மற்றும் சோனி இ.எஸ்.பி.என். எச்.டி. சேனல்களில் இந்த போட்டி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

E81E3A56-9AB2-4DEE-B3E9-5684FE7759CB_L_s

தமிழ் வர்ணனையாளர்கள் குழுவில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஹேமங் பதானி, வி.பி.சந்திரசேகர், பட்டாபிராமன், வி.சத்தியநாராயணன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இந்த தகவலை சோனி டெலிவிஷன் குழும அதிகாரி பிரசன்னா கிருஷ்ணன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/25091847/1075877/IPL-Cricket-commentary-in-Tamil.vpf

Link to comment
Share on other sites

காயம் காரணமாக ஐபிஎல் ஆரம்ப போட்டிகளில் விராட் கோலி ஆடுவது சந்தேகம்

 

தோள்பட்டை காயம் காரணமாக ஐபிஎல் ஆரம்ப போட்டிகளில் விராட் கோலி ஆடுவது சந்தேகம் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
காயம் காரணமாக ஐபிஎல் ஆரம்ப போட்டிகளில் விராட் கோலி ஆடுவது சந்தேகம்
 
தரம்சாலா:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில், இந்திய கேப்டன் விராட் கோலி முதல் நாள் ஆட்டத்தின் போது காயமடைந்தார். எல்லைக்கோட்டை நோக்கி ஓடிய பந்தை பாய்ந்து விழுந்து தடுத்த போது, தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. காயத்திற்கு சிகிச்சை எடுத்தாலும் 4-வது டெஸ்டில் அவர் ஆடவில்லை.

201703281931390318_virat-x1._L_styvpf.gi

இந்த நிலையில், காயம் காரணமாக ஐபிஎல் ஆரம்ப போட்டிகளில் விராட் கோலி ஆடுவது சந்தேகம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நூறு சதவீதம் உடற்தகுதியுடன் இருந்தால் மட்டுமே விளையாடுவேன் என சில வாரங்களுக்கு முன் கோலி தெரிவித்தார். இதனால் ஏப்ரல் 5-ம் தேதி நடைபெறும் ஐதாராபாத்- பெங்களூர் ஆரம்ப போட்டியில் கோலி விளையாட மாட்டார் என கூறப்படுகிறது.
 

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/28193138/1076639/Kohli-to-miss-initial-games-of-IPL.vpf

Link to comment
Share on other sites

டோனிக்கும், எனக்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை: ஸ்மித் சொல்கிறார்

டோனிக்கும் எனக்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை என்று ஐ.பி.எல். தொடரில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியின் கேப்டனாக பணியாற்ற இருக்கும் ஸ்மித் கூறியுள்ளார்.

 
 
டோனிக்கும், எனக்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை: ஸ்மித் சொல்கிறார்
 
ஐ.பி.எல். தொடரில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியின் கேப்டனாக ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கடந்த ஆண்டு தோன்றிய புதிய அணி ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட். இந்திய அணியின் சாதனை கேப்டனான டோனிதான் அந்த அணியின் கேப்டனாக இருந்தார். கடந்த வருடம் அந்த அணி சிறப்பாக செயல்படவில்லை. புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தை பிடித்தது.

இதனால் டோனியை கேப்டன் பதவியில் இருந்து தூக்கியது ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட். டோனிக்குப் பதிலாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஸ்மித்தை கேப்டனாக நியமித்துள்ளது. இதை இந்திய ரசிகர்கள் மட்டுமல்ல பெரும்பாலான வீரர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.

201703301844018760_6-smith-s._L_styvpf.g

மேலும் இருவருக்கும் இடையிலான தகவல் பரிமாற்றம் எப்படி இருக்கும். டோனியிடம் இருந்த ஸ்மித் ஆலோசனைகளை பெறுவாரா? என்ற கேள்வியெல்லாம் எழும்பியது.

இந்நிலையில் டோனிக்கும், எனக்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை என ஸ்மித் கூறியுள்ளார். மேலும், இதுகுறித்து ஸ்மித் கூறுகையில் ‘‘எனக்கும் டோனிக்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் சில தகவல்களை பரிமாற்றிக் கொண்டோம். டோனி மிகவும் ஆதரவாக இருக்கிறார். அவருடனான தொழில்முறையான நட்பில் கேப்டன் பதவி எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/30184400/1077094/No-Issues-Between-MS-Dhoni-And-Me-Says-Steve-Smith.vpf

Link to comment
Share on other sites

ஐ.பி.எல். தொடரை தவறவிடும் இந்திய அணியின் முக்கிய வீரர்!

 

இந்திய அணியின் சார்பில் தற்போது சிறந்த துடுப்பாட்ட திறமையை வெளிப்படுத்திவரும் கே.எல்.ராஹுல், இவ்வருட ஐ.பி.எல். தொடரில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

242379.jpg

இவருக்கு இந்தியாவில் நடைபெறும் கவாஸ்கர் கிண்ண தொடரின் போது தோற்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. எனினும் அதற்கு பிறகு ஆஸிக்கெதிரான தொடரில் விளையாடினார்.

இந்த தொடரில் இவர் விளையாடிய 7 இன்னிங்ஸ்களில் 6 இன்னிங்ஸ்களில் அரைச்சதம் கடந்தார்.

இந்நிலையில் இவர் இவ்வருட ஐ.பி.எல். தொடரில் விளையாட மாட்டார் எனவும், சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்காக லண்டன் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல்.தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடிய இவரின் உபாதை அந்த அணிக்கு மற்றுமொரு இழப்பாக அமைந்துள்ளது. இதற்கு முன்னர் பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோஹ்லி உபாதைக் காரணமாக ஐ.பி.எல். தொடரின் ஆரம்ப போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டதுடன், அணித் தலைவராக வில்லியர்ஸ் செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/18528

Link to comment
Share on other sites

கோலி உடல்தகுதி பெறாவிட்டால் கேப்டனாக டிவில்லியர்ஸ் செயல்படுவார்: பயிற்சியாளர் வெட்டோரி

தோள்பட்டையில் காயம் அடைந்த விராட் கோலி உடல்தகுதி பெறாவிட்டால் பெங்களூரு அணியின் கேப்டனாக டிவில்லியர்ஸ் செயல்படுவார் என்று பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.

 
 
 
 
கோலி உடல்தகுதி பெறாவிட்டால் கேப்டனாக டிவில்லியர்ஸ் செயல்படுவார்: பயிற்சியாளர் வெட்டோரி
 
பெங்களூரு :

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, சமீபத்தில் தோள்பட்டையில் காயம் அடைந்தார். அவரது காயத்தன்மை எந்த அளவிற்கு இருக்கிறது என்பது எங்களுக்கு தெளிவாக தெரியவில்லை. அவரது உடல்தகுதி குறித்து ஓரிரு நாட்களில் தெரிய வரும். 2-ந்தேதி அவர் அணியுடன் இணைகிறார்.

201703310932318027_RCB-Coach-Vettori._L_

விராட் கோலி விளையாட முடியாமல் போனால் அவருக்கு பதிலாக டிவில்லியர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை கவனிக்கக்கூடும். ஆனால் கோலியின் நிலைமை குறித்து உறுதியாக தெரிந்த பிறகே அது பற்றி கூற முடியும். டிவில்லியர்ஸ் 2-ந்தேதி பெங்களூரு வந்தடைகிறார். கோலி ஆட முடியாத பட்சத்தில் சர்ப்ராஸ்கான், மன்தீப்சிங் போன்ற இளம் வீரர்களுக்கு களம் இறங்க வாய்ப்பு கிடைக்கும்.

இவ்வாறு வெட்டோரி கூறினார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5-ந்தேதி நடக்கும் முதல் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோத உள்ளன.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/31093230/1077147/Virat-Kohli-is-not-fit-to-be-the-captain-of-RCB-villiers.vpf

Link to comment
Share on other sites

ஐ.பி.எல். தொடக்க விழாவில் தெண்டுல்கர், கங்குலி உள்பட 5 வீரர்களை கவுரவிக்க முடிவு

 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடக்க விழாவில் தெண்டுல்கர், கங்குலி, டிராவிட், வி.வி.எஸ்.லட்சுமண், ஷேவாக் ஆகியோரை கவுரவிக்க உள்ளதாக ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

 
 
 
 
ஐ.பி.எல். தொடக்க விழாவில் தெண்டுல்கர், கங்குலி உள்பட 5 வீரர்களை கவுரவிக்க முடிவு
 
புதுடெல்லி :

ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் ஐதராபாத்தில் வருகிற 5-ந்தேதி நடக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடக்க விழாவின் போது இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், வி.வி.எஸ்.லட்சுமண், ஷேவாக் ஆகியோரை கவுரவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த தகவலை ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

201703311002341726_VVS-Laxman._L_styvpf.

கூட்டத்தில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டியினர், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி ஐ.பி.எல். கிரிக்கெட்டை நடத்தும் சம்பந்தப்பட்ட மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு போட்டிக்கு முன்பாக நிதியை ஒதுக்கீடு செய்ய ஒப்புக் கொண்டனர். மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு ஒவ்வொரு ஐ.பி.எல். ஆட்டத்தையும் நடத்த செலவுத் தொகையாக ரூ.60 லட்சம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/31100233/1077157/IPL-opening-ceremony-Tendulkar-Ganguly-including-5.vpf

Link to comment
Share on other sites

குவிண்டன் டி காக், டுமினி இல்லாதது பின்னடைவே: டெல்லி பயிற்சியாளர் ராகுல் திராவிட் கருத்து

 

 
கோப்புப் படம். | வி.கணேசன்.
கோப்புப் படம். | வி.கணேசன்.
 
 

வரவிருக்கும் ஐபிஎல் தொடரிலிருந்து தென் ஆப்பிரிக்காவின் அதிரடி வீரர்கள் டி காக், டுமினி ஆகியோர் காயம் காரணமாக விலகியதையடுத்து டெல்லி அணிக்கு அது பின்னடைவே என்று பயிற்சியாளர் ராகுல் திராவிட் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

“டுமினி, டி காக் போன்ற திறமையுடைய வீரர்களை இழப்பது என்பது நிச்சயம் பின்னடைவே. ஏலத்துக்கு முன்னதாகவே இது தெரியும்பட்சத்தில் எளிதாக இருந்திருக்கும், ஏனெனில் நாம் அதற்குத் தக்கவாறு திட்டமிடலாம். ஆனால் இவை இப்படித்தான் போகும், இதற்கு நாம் ஒன்றும் செய்வதற்கில்லை.

ஆனால் சாம் பில்லிங்ஸ் போன்ற திறமையான வீரர்கள் உள்ளனர் அவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

கடந்த ஐபிஎல் தொடரில் டி காக் டேர் டெவில்ஸ் அணியில் அதிகபட்சமாக ரன்கள் குவித்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து கோரி ஆண்டர்சன், இலங்கையின் ஆஞ்செலோ மேத்யூஸ் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளது.

“ஸ்ரேயஸ் ஐயர், கருண் நாயர், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் ஆகியோர் இந்த ஐபிஎல் தொடரில் அரையிறுதிக்கு அணியை இட்டுச் செல்வர் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார் திராவிட்.

http://tamil.thehindu.com/sports/குவிண்டன்-டி-காக்-டுமினி-இல்லாதது-பின்னடைவே-டெல்லி-பயிற்சியாளர்-ராகுல்-திராவிட்-கருத்து/article9609472.ece

Link to comment
Share on other sites

நீண்டு கோண்டே செல்லும் மிஸ்சிங் பட்டியல்: அஸ்வின், முரளி விஜய்யும் அவுட்?

 

ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகும் வீரர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தற்போது அஸ்வின், முரளி விஜய் விலகுவதாக செய்திகள் வந்து வண்ணம் உள்ளன.

 
 
 
 
நீண்டு கோண்டே செல்லும் மிஸ்சிங் பட்டியல்: அஸ்வின், முரளி விஜய்யும் அவுட்?
 
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் மிகப் பிரமாண்ட கிரிக்கெட் திருவிழா ஐ.பி.எல்.. இந்த தொடரின் 10-வது சீசன் ஏப்ரல் 5-ந்தேதி (வருகிற புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில் முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகிக் கொண்டு வருவது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

டெல்லி அணியில் இடம்பிடித்திருந்த ஜே.பி. டுமினி (சொந்த காரணத்திற்காக), குயிண்டான் டி காக் (காயம் காரணமாக) ஆகியோர் முதலில் இந்த தொடரில் இருந்து விலகினார்கள். அதன்பின் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தோள்பட்டை காயம் காரணமாக பெங்களூர் அணியில் இடம்பெறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேவேளையில் அந்த அணியின் மற்றொரு முன்னணி வீரர் லோகேஷ் ராகுல் தோள்பட்டை காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார்.

வங்காள தேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முஷ்டாபிஜூர் ரஹ்மான் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இணைவது சந்தேகம் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியில் இடம்பிடித்துள்ள முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் காயம் காரணமாக அணியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். தனது காயத்திற்காக அவர் 6 முதல் 8 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும். அதன்பின் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார். காயத்திற்கான சிகிச்சையை விரைவில் மேற்கொள்ள இருக்கிறார்.

பஞ்சாப் அணியில் இடம்பிடித்துள்ள முரளி விஜய்யும் இந்த தொடரில் கலந்து கொள்வது சந்தேகம் எனத் தெரிகிறது. இவர் பெங்களூருவில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் தோள்பட்டை காயத்தால் பங்கேற்கவில்லை. இவர் வெளிநாடு சென்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் இந்திய அணி பிசியோவின் கருத்துக்குப்பின் மாற்று ஏற்பாடு செய்ய அணிகள் முடிவு செய்துள்ளன.
201703311914303028_7-vijay-s._L_styvpf.g
இதற்கிடையில் இந்திய அணிக்காக 13 டெஸ்டில் தொடர்ந்து விளையாடிய உமேஷ் யாதவ், ஜடேஜா ஆகியோர் சில போட்டிகளில் பங்கேற்கமாட்டார்கள் எனத் தெரிகிறது.

201703311914303028_7-jadeja-s._L_styvpf.

ஆகமொத்தம் இந்த தொடரில் முன்னணி வீரர்கள் பலர் பங்கேற்கமாட்டார்கள் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/31191428/1077280/After-KL-Rahul-Ravichandran-Ashwin-Murali-Vijay-likely.vpf

Link to comment
Share on other sites

கடந்த ஐ.பி.எல். தொடரில் கலக்கிய முஷ்டாபிஜூர் ரஹ்மான் இந்த ஆண்டு கலந்து கொள்வாரா?

 

கடந்த ஐ.பி.எல். தொடரில் கலக்கிய வங்காள தேச அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஷ்டாபிஜூர் ரஹ்மான் ஐ.பி.எல். தொடரில் கலந்து கொள்வது சந்தேகம் எனத் தெரிவித்துள்ளார்.

 
 
 
 
கடந்த ஐ.பி.எல். தொடரில் கலக்கிய முஷ்டாபிஜூர் ரஹ்மான் இந்த ஆண்டு கலந்து கொள்வாரா?
 
வங்காள தேசத்தின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முஷ்டாபிஜூர் ரஹ்மான். 21 வயதாகும் முஷ்டாபிஜூர் ரஹ்மான் தனது இடது கை வேகப்பந்து வீச்சின் மூலம் பிரபலம் அடைந்தார். இதனால் கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. கடந்த தொடரில் 16 போட்டிகளில் 17 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

ஐ.பி.எல். தொடருக்குப்பின் முஷ்டாபிஜூர் ரஹ்மான் தோள்பட்டை காயம் காரணமாக அவதிப்பட்டார். இதனால் லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதனால் சுமார் 6 மாத காலம் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியிருந்தார். தற்போது மீண்டும் சர்வதேச போட்டியில் விளையாடி வருகிறார்.

தற்போது இலங்கைக்கு எதிரான போட்டியில் விளையாடி வரும் முஷ்டாபிஜூர் ரஹ்மான், இந்த ஐ.பி.எல். தொடரில் விளையாடுவாரா? என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.

இதுகுறித்து முஷ்டாபிஜூர் ரஹ்மான் கூறுகையில் ‘‘ஐ.பி.எல். தொடரில் இருந்து ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்டேன். ஆனால், இந்த தொடரில் பங்கேற்பதை பற்றி நான் நினைக்கவில்லை. வங்காள தேச கிரிக்கெட் வாரியத்தின் அனுமதிக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

ஐ.பி.எல். தொடரில் ஏராளமான போட்டியில் விளையாடுவேன் என்பதை என்னால் உறுதியாக சொல்ல இயலாது. நான் இந்தியா வந்தாலும், மே முதல் வாரத்தில் வங்காள தேச அணிக்காக திரும்ப வேண்டும். என்னுடைய பழைய பந்து வீச்சை இன்னும் பெறவில்லை. அதனால், வங்காள தேச ஒருநாள் அணியின் கேப்டன் மோர்தசா, ஐ.பி.எல். தொடரை புறக்கணிக்கும்படி கூறியுள்ளார். அவரது ஆலோசனையை நான் முக்கியத்துவம் கொடுத்து பரிசீலனை செய்து வருகிறேன்.

201703311839352668_5-rahman1-s._L_styvpf

நான் நீண்ட செஷனை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். இதுதான் எனது உடற்தகுதியை மீண்டும் கொண்டு வருவதற்கு முக்கியமானது. நான் என்னுடைய துல்லியமான பந்து வீச்சை கொண்டு வர அதிக அளவில் முயற்சி செய்து வருகிறேன். ஆனால் இதுவரை எனது பந்து வீச்சு திருப்பதியை தரவில்லை’’ என்றார்.

கடந்த வருடம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 1.4 கோடி ரூபாய் கொடுத்து முஷ்டாபிஜூர் ரஹ்மானை ஏலம் எடுத்தது. இந்த வருடம் அவரை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
 

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/31183933/1077277/IPL-2017-Sunrisers-Hyderabad-likely-to-miss-services.vpf

Link to comment
Share on other sites

லோகேஷ் ராகுலுக்குப் பதிலாக தமிழக வீரர் நாராயணன் ஜெகதீசன் இடம்பெற வாய்ப்பு

 

காயம் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இருந்து விலகிய லோகேஷ் ராகுலுக்குப் பதிலாக தமிழகத்தின் நாராயணன் ஜெகதீசன் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 
 
 
 
லோகேஷ் ராகுலுக்குப் பதிலாக தமிழக வீரர் நாராயணன் ஜெகதீசன் இடம்பெற வாய்ப்பு
 
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக உருவெடுத்து வருபவர் லோகேஷ் ராகுல். ஐ.பி.எல். தொடரில் இவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வந்தார். பேட்ஸ்மேனுடன் விக்கெட் கீப்பர் பணியையும் சேர்த்து கவனித்தார். புனேவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் பந்தை சிக்சருக்கு தூக்கும்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்துடன் ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடி ஆறு அரைசதங்கள் விளாசினார்.

தற்போது காயத்திற்காக லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளார். இதை அவர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனால் விக்கெட் கீப்பருடன் பேட்டிங் செய்யும் மாற்று வீரரை பெங்களூர் அணி தேடுகிறது. இதில் தமிழகத்தின் நாராயணன் ஜெகதீசன் என்பவரை ராகுலுக்குப் பதிலாக தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நாரயணன் ஜெகதீசன் கூறுகையில் ‘‘ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருந்து அழைப்பு வந்தது. அப்போது ஏப்ரல் 2-ந்தேதி ஒத்திகையில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். எத்தனை வீரர்கள் இந்த ஒத்திகையில் கலந்து கொள்கிறார்கள் என்பது குறித்த தகவல் ஏதும் எனக்குத் தெரியாது.

201703311810323644_6-jagadeesan1-s._L_st

பெங்களூர் அணியில் இடம்பிடித்தால் மிகச் சிறந்ததாக இருக்கும். ஆனால், தற்போதைய நிலையில் அதிக எதிர்பார்ப்புடன் செல்லவில்லை’’ என்று கூறியுள்ளார்.

தற்போது முடிந்த தியோதர் கோப்பையில் 21 வயதான தமிழக பேட்ஸ்மேனான நாராயணன் ஜெகதீசன் 190 ரன்கள் குவித்தார். சராசரி 63.33 ஆகும். மேலும், 2016 தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் அதிக ரன்கள் குவித்து, தொடர் நாயகன் விருதை பெற்றவர். இதனால் பெங்களூரு அணி அவரை குறிவைத்துள்ளது.
 

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/31181031/1077272/Tamil-Nadu-Narayan-Jagadeesan-likely-to-replace-injured.vpf

Link to comment
Share on other sites

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மதிப்பை நிரூபிக்கும் ஆவலில் ரஷித்கான்

 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்காக எப்படி ஆடுகிறேனோ அதே போன்று ஐதராபாத் அணிக்காவும் விளையாட விரும்புகிறேன் என்று ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

 
 
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மதிப்பை நிரூபிக்கும் ஆவலில் ரஷித்கான்
 
ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், ஐ.பி.எல். ஏலத்தின் போது ஆச்சரியம் அளிக்கும் வகையில் ரூ.4 கோடிக்கு ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

18 வயதான ரஷித்கான் கூறுகையில், ‘ ‘ஆப்கானிஸ்தான் அணியில் உள்ள சக வீரர்கள் என்னை ‘மில்லியன் டாலர் பேபி’ என்று செல்லமாக அழைக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு என்னை சொல்லும் போதெல்லாம் சிரிப்பு தான் வரும். நான் ‘மில்லியன் டாலர் பேபி’ என்பதை களத்தில் நிரூபிக்க ஆர்வமாக இருக்கிறேன். இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போனதால் எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை.

201704011005049695_Rashid-Khan._L_styvpf

களம் இறங்கினால் 100 சதவீத திறமையை வெளிப்படுத்த வேண்டும். தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்காக எப்படி ஆடுகிறேனோ அதே போன்று ஐதராபாத் அணிக்காவும் விளையாட விரும்புகிறேன். ஐதராபாத் அணி இந்த சீசனிலும் மகுடம் சூடுவதை பார்க்க ஆசைப்படுகிறேன்.

யுவராஜ்சிங், வார்னர், வில்லியம்சன், ஷிகர் தவான் போன்ற பெரிய வீரர்களிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள எனக்கு இது அருமையான வாய்ப்பாகும். சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முரளிதரனின் (ஐதராபாத் அணி ஆலோசகர்) அறிவுரைகளை பெற்று செயல்படவும் ஆர்வமாக இருக்கிறேன்’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/01100505/1077346/ipl-cricket-Rashid-Khan-like-to-prove-value.vpf

Link to comment
Share on other sites

ஐ.பி.எல். கிரிக்கெட்: ரூட்டின் ஆசையை நிறைவேற்றுவாரா ஸ்டோக்ஸ்?

 

இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சுக்கு புதுமையான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அது என்னவென்று விரிவான பார்க்கலாம்.

 
ஐ.பி.எல். கிரிக்கெட்: ரூட்டின் ஆசையை நிறைவேற்றுவாரா ஸ்டோக்ஸ்?
 
புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித்துடன், ரூ.14½ கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சும் இடம் பெற்றுள்ளார்.

இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட், பென் ஸ்டோக்சுக்கு புதுமையான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். ஸ்டீவன் சுமித் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக விளங்குகிறார். அவரது தலைமையின் கீழ் புனே அணியில் விளையாட உள்ள நீங்கள் (பென் ஸ்டோக்ஸ்) சுமித்தின் பலவீனங்களை கொஞ்சமாக அறிந்து கொண்டு வர வேண்டும்.

இது ஆஷஸ் டெஸ்ட் தொடரில் (நவம்பரில் நடக்கிறது) அவரை கட்டுப்படுத்த உதவிகரமாக இருக்கும் என்று ஜோ ரூட் கூறியுள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/01090945/1077334/IPL-Cricket-Ben-Stokes-fulfill-desire-Joe-Root.vpf

Link to comment
Share on other sites

5 மாதத்திற்குப் பிறகு களம் இறங்குகிறார் ரோகித் சர்மா: மும்பையில் தீவிர பயிற்சி

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோகித் சர்மா கடந்த ஐந்து மாதங்களாக விளையாடவில்லை. தற்போது ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதற்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

 
 
5 மாதத்திற்குப் பிறகு களம் இறங்குகிறார் ரோகித் சர்மா: மும்பையில் தீவிர பயிற்சி
 
இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நியூசிலாந்திற்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் விளையாடும்போது அவருக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது.

இந்த காயத்திற்காக இங்கிலாந்து சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் சுமார் நான்கு மாதங்களுக்கு மேல் ஓய்வில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. காயம் குணமடைந்ததால் உள்ளூர் தொடரான தியோதர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக அணியில் சேர்க்கப்பட்டார். இந்திய ப்ளூ அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட அவர், காலில் ஏற்பட்ட காயத்தால் பின்னர் அந்த தொடரில் இருந்து விலகினார்.

தற்போது அவர் முழு உடற்தகுதி பெற்று விட்டார். வருகிற 5-ந்தேதி ஐ.பி.எல். தொடர் நடைபெற இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா இந்த தொடரில் தனது உடற்தகுதியை நிரூபித்து இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபியில் இடம்பிடிக்க திட்டமிட்டுள்ளார்.

201704011529549522_3-Rohit-sharma-s._L_s

ஐ.பி.எல். தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணி மும்பை வான்கடே மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த பயிற்சியில் ரோகித் சர்மா இணைந்துள்ளார்.

பயிற்சிக்கு தயாராகி விட்டதால் ஐ.பி.எல். தொடரில் ரோகித் சர்மாவின் அதிரடி வாணவேடிக்கையை காணலாம். ஐ.பி.எல். தொடரில் மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியை புனே மைதானத்தில் எதிர்கொள்கிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/01152955/1077437/Rohit-Sharma-back-in-action-joins-Mumbai-Indians-training.vpf

Link to comment
Share on other sites

டேரன் சமி, வருண் ஆரோன் வருகை புதிய யோசனைகளை கொடுக்கும்: சேவாக்

 

டேரன் சமி, வருண் ஆரோன் போன்ற சர்வதேச வீரர்கள் வருகை புதிய ஐடியாக்கள், திறமைகளை பஞ்சாப் அணிக்கு கொண்டு வரும் என்று அந்த அணியின் ஆலோசகர் சேவாக் கூறியுள்ளார்.

 
 
டேரன் சமி, வருண் ஆரோன் வருகை புதிய யோசனைகளை கொடுக்கும்: சேவாக்
 
ஐ.பி.எல். சீசன் 10 கிரிக்கெட் தொடர் வருகிற புதன்கிழமை (ஏப்ரல் 5-ந்தேதி) தொடங்குகிறது. இந்த தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற அனைத்து அணிகளும் விரும்புகின்றன. 9 ஆண்டுகளாக நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணி ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் வென்றது கிடையாது.

2014-ம் ஆண்டு சீசனில் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. 2008-ல் 3-வது இடத்தையும், 2009-ல் 5-வது இடத்தையும், 2010-ல் 8-வது இடத்தையும், 2011-ல் 5-வது இடத்தையும், 2012-ல் 6-வது இடத்தையும், 2013-ல் 6-வது இடத்தையம், 2015 மற்றும் 2016 சீசனில் கடைசி இடத்தையும் பிடித்தது.

இந்த சீசனில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று பஞ்சாப் அணி தீவிரமாக உள்ளது. சேவாக் அந்த அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். மேக்ஸ்வெல் புதிய கேப்டனாக பொறுப்பேற்க உள்ளார். டேரன் சமி, வருண் ஆரோன், தமிழ்நாட்டைச் சேர்ந்த டி. நடராஜன் போன்றோர் அந்த அணியில் புதிய வீரர்களாக சேர்ந்துள்ளனர்.

இந்த வீரர்கள் புதிய ஐடியாக்கள் மற்றும் திறமைகளை அணிக்கு கொண்டு வருவார்கள் என்று சேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘கூடுதலாக அணியில் இணைந்துள்ள டேரன் சமி, வருண் ஆரோன், டி.நடராஜன் போன்ற வீரர்கள் புதிய  யோசனைகள் மற்றும் திறமைகளை அணிக்கு கொண்டு வருவார்கள். இந்த அணி ஆக்ரோஷமான ஆட்டம், துணிச்சல், இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தும். நாங்கள் அதிக நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் இந்த சீசனில் விளையாட இருக்கிறோம். எங்கள் அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கான நோக்கத்தை நோக்கிச் செல்லும்.

இந்த தொடருக்கான பஞ்சாப் அணி எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. ஏராளமான வீரர்களை நாங்கள் தக்க வைத்துள்ளோம். இது அணிகளுக்கிடையே கெமிஸ்ட்ரியை வளர்க்க உதவும்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/01221638/1077513/Virender-Sehwag-feels-players-like-Darren-Sammy-Varun.vpf

Link to comment
Share on other sites

பொல்லார்டு, சிம்மன்ஸ் ஏப்ரல் 5-ந்தேதி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைகிறார்கள்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வீரர்களான பொல்லார்டு, லென்டில் சிம்மன்ஸ் ஆகியோர் ஏப்ரல் 5-ந்தேதி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைகிறார்கள்.

 
பொல்லார்டு, சிம்மன்ஸ் ஏப்ரல் 5-ந்தேதி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைகிறார்கள்
 
ஐ.பி.எல். சீசன்- 10 கிரிக்கெட் திருவிழா வரும் 5-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. இதற்கான அனைத்து அணிகளும் தங்களுடைய வீரர்களை ஒருங்கிணைத்து பயிற்சியை தொடங்கியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் மும்பை வான்கடே மைதானத்தில் தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளனர்.

அந்த அணியில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்த கீரன் பொல்லார்டு, லென்டில் சிம்மன்ஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். தற்போது பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இருவரும் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள். இந்த தொடரின் கடைசி போட்டி நாளை (ஏப்ரல் 2-ந்தேதி) நடக்கிறது. இந்த போட்டி முடிந்த கையோடு அவர்கள் இந்தியா புறப்படுகிறார்கள்.

இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் ‘‘பொல்லார்டு மற்றும் சிம்மன்ஸ் ஏப்ரல் 4-ந்தேதி மும்பை வந்தடைவார்கள். அதன்பின் 5-ந்தேதி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவார்கள்’’ என்று தெரிவித்தார்கள்.

201704011813136767_6-pollard1-s._L_styvp

2015-ம் ஆண்டு மும்பை அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல இருவரும் முக்கிய காரணமாக இருந்தார்கள். பொல்லார்டு 16 போட்டியில் 419 ரன்னும், சிம்மன்ஸ் 540 ரன்னும் குவித்தார்கள்.

மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே தொடக்க போட்டியில் மலிங்கா மற்றும் அசேலா குணரத்னேவை இழக்கிறது. ஏனென்றால், அதே நேரத்தில் இலங்கை - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி நடக்கிறது. அதன்பின் 7-ந்தேதி அவர்கள் மும்பை அணியுடன் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் புனே அணியை 6-ந்தேதி சந்திக்கிறது.
 

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/01181313/1077487/IPL-2017-Kieron-Pollard-Lendl-Simmons-to-reach-Pune.vpf

Link to comment
Share on other sites

10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் பெங்களூர் அணிக்கு வாட்சன் கேப்டன்?

 

10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 5-ந்தேதி தொடங்குகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி வாட்சன் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டனாக நியமிக்கப்படலாம் என தெரிகிறது.

 
 
 
 
10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் பெங்களூர் அணிக்கு வாட்சன் கேப்டன்?
 

பெங்களூர்:

10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 5-ந்தேதி தொடங்குகிறது. இதில் இந்திய அணி கேப்டன் வீராட்கோலி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டனாக உள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் கோலி தோள்பட்டையில் காயம் அடைந்ததால் ஐ.பி.எல்லில் சில ஆட்டங்களில் அவர் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் அந்த அணியின் தொடக்க வீரர் லோகேஷ் ராகுலும் தோள்பட்டை காயத்தால் விலகி உள்ளார்.

கோலி விளையாடாததால் தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் பெங்களூர் அணிக்கு கேப்டனாக செயல்படுவார் என்று எதிர் பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் தென் ஆப்பிரிக்காவில் நடந்த முதல்தர ஒருநாள் கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் முதுகுவலி காரணமாக விலகினார். இதனால் அவர் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

டிவில்லியர்சும் விலகினால் கேப்டனாக ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் நியமிக்கப்படலாம் என தெரிகிறது.

201704021100236781_virt._L_styvpf.gif

அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர் என்பதால் அவரை கேப்டனாக நியமிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் ஷேன் வாட்சன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

வீராட்கோலி, லோகேஷ் ராகுல் விலகலால் தொடக்க வீரராக களம் இறங்க தயாராக இருக்கிறேன். எந்த வரிசையிலும் விளையாட தயார்தான். வீராட்கோலி கேப்டன் பதவியில் இருக்கிறாரோ, இல்லையோ நான் எப்போதும் மற்ற வீரர்களுக்கு உதவியாக இருப்பேன். குறிப்பாக பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/02110023/1077549/10th-IPL-teams-Bangalore-cricket-team-captain-Watson.vpf

Link to comment
Share on other sites

அஸ்வினுக்குப் மாற்று யார்?: வாஷிங்டன் சுந்தர், பர்வேஸ் ரசூல், நாதன் லயன் இடையே கடும்போட்டி

ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணியில் அஸ்வின் இடத்தைப் பிடிக்க வாஷிங்டன் சுந்தர், பர்வேஸ் ரசூல், நாதன் லயன் இடையே கடும் போட்டி நிலவியுள்ளது.

 
 
 
 
அஸ்வினுக்குப் மாற்று யார்?: வாஷிங்டன் சுந்தர், பர்வேஸ் ரசூல், நாதன் லயன் இடையே கடும்போட்டி
 
ஐ.பி.எல். சீசன்-10 டி20 கிரிக்கெட் லீக் புதன்கிழமை (ஏப்ரல் 5) தொடங்குகிறது. இன்னும் இரண்டு நாட்கள்தான் உள்ளதால் கிரிக்கெட் ஜூரம் பற்றி கொண்டது. இந்திய அணி தொடர்ச்சியாக 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதால் பெரும்பாலான வீரர்கள் ஐ.பி.எல். தொடரின் தொடக்கத்தில் கலந்து கொள்வார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
 
அஸ்வின் காயம் காரணமாக ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியில் இருந்து விலகியுள்ளார். முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் விலகியது, அந்த அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
 
அஸ்வின் இடத்தை நிரப்ப முடியாது என்றாலும், அவரது இடத்திற்கு ஈடுகொடுக்கும் அளவில் சிறந்த சுழற்பந்து வீச்சாளரை தேடும் பணியில் அந்த அணி ஈடுபட்டுள்ளது.
 
புனே அணியின் கேப்டனாக இருக்கும் ஸ்மித், அணி உரிமையாளரிடம் சக நாட்டைச் சேர்ந்த நாதன் லயனை அணியில் எடுக்குமாறு கூறியதாக தெரிகிறது.
 
201704021732380012_parvezrasool-s._L_sty
 
ஆனால், அணி நிர்வானம் தமிழ்நாட்டின் இளம் வீரரான வாஷிங்டன் சுந்தர், ஜம்மு-காஷ்மீர் வீரரான பர்வேஸ் ரசூல் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளது. அவர்கள் நாளை காலை ஒத்திகைக்காக செல்ல இருக்கிறார்கள். ஒத்திகையில் அவர்கள் செயல்பாடு திருப்தியாக இருந்தால் இருவரில் ஒருவரை அணி தேர்வு செய்ய வாய்ப்பிருக்கிறது.
 
201704021732380012_nathan-s._L_styvpf.gi
 
இருவரில் வாஷிங்டன் சுந்தருக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில், தியோதர் மற்றும் விஜய் ஹசாரே தொடரில் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இருப்பினும் அஸ்வின் இடத்தை பிடிக்கப்போவது யார் என்பது (லயன், பர்வேஸ் ரசூல், வாஷிங்டன் சுந்தர்) அணி நிர்வாகம் கையில்தான் இருக்கிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/02173237/1077608/Parvez-Rasool-Washington-Sundar-get-call-up-as-possible.vpf

Link to comment
Share on other sites

கொல்கத்தா அணியில் ரஸ்சல் இடத்தை நிரப்ப அனைவரும் போராட வேண்டும்: காம்பீர்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஆந்த்ரே ரஸ்சல் இடத்தை நிரப்ப அனைவரும் போராடுவது அவசியமானது என்று அந்த அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் தெரிவித்தார்.

 
 
கொல்கத்தா அணியில் ரஸ்சல் இடத்தை நிரப்ப அனைவரும் போராட வேண்டும்: காம்பீர்
 
புதுடெல்லி:

10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 5-ந்தேதி முதல் மே 21-ந்தேதி வரை நடக்கிறது. கவுதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. அந்த அணி 2012 மற்றும் 2014-ல் கோப்பையை வென்று இருந்தது.

201704031228521443_yotj2ea5._L_styvpf.gi

வெஸ்ட்இண்டீஸ் ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்சல் விளையாட முடியாமல் போனது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும். ஊக்க மருந்து தொடர்பான விதிமுறையை மீறியதற்காக அவருக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஸ்சல் இந்த ஐ.பி.எல். போட்டியில் ஆடமாட்டார்.

இந்த நிலையில் ரஸ்சல் இடத்தை நிரப்ப அனைவரும் போராடுவது அவசியமானது என்று கொல்கத்தா அணியின் கேப்டன் காம்பீர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

201704031228521443_ix7ylef6._L_styvpf.gi

கொல்கத்தா அணியின் மிக சிறந்த வீரர்களில் ஒருவராக ரஸ்சல் திகழ்ந்தார். அவரது இழப்பை ஈடுகட்டுவது மிகவும் கடினமே. மனிஷ் பாண்டே பேட்டிங்கையும், அங்கீத் ராஜ்புத் பந்துவீச்சையும் இணைந்த கலவை ரஸ்சல் ஆவார்.

இதனால் ரஸ்சல் இடத்தை நிரப்ப அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் கடுமையாக போராட வேண்டும். வீரர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு காம்பீர் கூறினார்.

கடந்த ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணி பிளேஆப் சுற்று வரை வந்து எலிமினேட்டரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் தோற்று 4-வது இடத்தை பிடித்தது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/03122851/1077754/IPL-2017-Everyone-needs-to-fill-in-for-Russells-absence.vpf

Link to comment
Share on other sites

கொல்கத்தா அணியில் ஆந்த்ரே ரஸலுக்குப் பதிலாக நியூசி.யின் கொலின் டி கிராண்ட்ஹோம் சேர்ப்பு

ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணியில் ஆல் ரவுண்டர் ஆந்த்ரே ரஸலுக்குப் பதிலாக நியூசிலாந்தின் கொலின் டி கிராண்ட்ஹோம் சேர்க்கப்பட்டுள்ளார்.

 
கொல்கத்தா அணியில் ஆந்த்ரே ரஸலுக்குப் பதிலாக நியூசி.யின் கொலின் டி கிராண்ட்ஹோம் சேர்ப்பு
 
வெஸ்ட் இண்டீஸ் அணியின் டி20 கிரிக்கெட் ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரஸல். இவர் ஊக்கமருந்து வழக்கில் ஓராண்டு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஐ.பி.எல். தொடரில் ரஸல் கொல்கத்தா அணிக்காக விளையாட முடியாமல் போனது.
 
ரஸல் கொல்கத்தா அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்தார். இதனால் அவருக்கு தகுந்த சரியான மாற்று வீரரை கொல்கத்தா அணி தேடிவந்தது. இந்நிலையில் நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் கொலின் டி கிராண்ட்ஹோமை தேர்வு செய்துள்ளது.
 
கொலி டி கிராண்ட்ஹோம் நியூசிலாந்து அணிக்காக 6 டெஸ்ட், 9 ஒருநாள் மற்றும் 8 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
 
கொல்கத்தா அணி தனது முதல் போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியை வெள்ளிக்கிழமை சந்திக்கிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/03215500/1077880/Colin-de-Grandhomme-replaces-banned-Andre-Russell.vpf

Link to comment
Share on other sites

பெங்களூரு வந்தார் டி வில்லியர்ஸ்: ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதை உறுதி செய்தார்

 

360 டிகிரி என்று அழைக்கப்படும் தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டி வி்ல்லியர்ஸ் பெங்களூரு வந்தடைந்துள்ளார். அவர் ஐ.பி.எல். போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

 
 
 
 
பெங்களூரு வந்தார் டி வில்லியர்ஸ்: ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதை உறுதி செய்தார்
 
ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆக கருதப்படுபவர் தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ். மைதானத்தின் எந்த திசைக்கும் பந்தை விரட்டுவதில் வல்லமை படைத்தவர். இதனால் டி வில்லியர்ஸ் செல்லமாக 360 டிகிரி என்று அழைக்கப்படுகிறார்.
 
ஐ.பி.எல். சீசன்-10 நாளைமறுநாள் (புதன்கிழமை) தொடங்குகிறது. முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
 
இந்த தொடருக்காக வெளிநாட்டு வீரர்கள் அந்ததந்த அணியில் வந்து இணைந்து கொண்டிருக்கிறார்கள். பெங்களூரு அணியில் முன்னணி வீரரான லோகேஷ் ராகுல் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். விராட் கோலி ஒன்றிரண்டு போட்டிகளில் விளையாடமாட்டார் என்று தெரிகிறது.
 
இதற்கிடையே உள்ளூர் போட்டியில் டி வில்லியர்ஸ் முதுகு வலி காரணமாக களம் இறங்கவில்லை. இதனால் இவரும் அணியில் இடம்பெறுவாரா? இல்லையா? என்ற சந்தேகம் எழுந்தது. ஏனெனில் கோலி இல்லையென்றால் அணியை வழி நடத்திச் செல்லும் இடத்தில் டி வில்லியர்ஸ் இருந்தார்.
 
மூன்று முன்னணி வீரர்கள் களம் இறங்குவது சந்தேகம் எனக் கூறப்பட்டது, அந்த அணிக்கு கவலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த அணிக்கும், ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில், நான் பெங்களூரு வந்துவிட்டேன். மீண்டும் இங்கே வருவது சிறப்பானது என்று டுவிட்டர் பக்கத்தில் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
 
மேலும், இதுகுறித்து டி வில்லியர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘மீண்டும் பெங்களூரு வந்தது சிறப்பானது. ஐ.பி.எல். சீசன் 2017 தொடங்குவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன், come on @RCBTweets! #PlayBold’’ என்று பதிவு செய்துள்ளார்.
 
இதனால் டி வில்லியர்ஸ் பெங்களூரு அணிக்காக களம் இறங்குவது உறுதியாகியுள்ளது.
 
Link to comment
Share on other sites

ஐ.பி்.எல். தொடரில் டி வில்லியர்சை வீழ்த்த விரும்புகிறேன்: ஆப்கான் வீரர் சொல்கிறார்

ஐ.பி.எல். தொடரில் டி வில்லியர்ஸ் விக்கெட்டை வீழ்த்த விரும்புகிறேன் என்று ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் சொல்கிறார்.

 
ஐ.பி்.எல். தொடரில் டி வில்லியர்சை வீழ்த்த விரும்புகிறேன்: ஆப்கான் வீரர் சொல்கிறார்
 
ஐ.பி.எல். சீசன்-10 டி20 கிரிக்கெட் தொடர் நாளைமறுநாள் (புதன்கிழமை) தொடங்குகிறது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.
 
ஐதராபாத் அணியில் ஆப்கானிஸ்தானின் 18 வயது லெக்ஸ்பின்னர் ரஷித் கான் இடம்பிடித்துள்ளார். முதன்முறையாக ஐ.பி.எல். ஏலத்தில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 5 வீரர்கள் இடம்பிடித்தனர். இதில் ரஷித்கானை 4 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது ஐதராபாத் அணி.
 
புதன்கிழமை நடைபெறும் முதல் போட்டியில் களமிறங்க ரஷித் கான் ஆவலாக இருக்கிறார். அதுவும் அதிரடி வீரரான டி வில்லியர்ஸ் விக்கெட்டை வீழ்த்த விரும்புகிறார்.
 
இதுகுறித்து ரஷித் கான் கூறுகையில் ‘‘இந்த ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணிக்கெதிராக முதல் போட்டியில் விளையாடுவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்போது அதிரடி வீரரான டி வில்லியர்ஸ் விக்கெட்டை வீழ்த்த விரும்புகிறேன். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் ஒருவர் டி வில்லியர்ஸ் என்பது எல்லோருக்குத் தெரியும். அவருக்கு பந்து வீசுவது மிகவும் சவாலானதாக இருக்கும்.
 
ஐதராபாத் அணியின் டாம் மூடி, விவிஎஸ் லட்சுமண் மற்றும் முத்தையா முரளீதரன் ஆகியோரை சந்திப்பது மிகப்பெரிய வாய்ப்பாகும். முரளீதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுக்களை அள்ளியுள்ளார். அவரிடம் இருந்து சில ஆலோனைகளை பெற்று என்னுடைய பந்து வீச்சு திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/03214924/1077879/I-am-looking-forward-to-first-match-against-RCB-want.vpf

Link to comment
Share on other sites

ஐ.பி.எல் தொடரில் முன்னணி வீரர்கள் விலகல்... காயம்தான் காரணமா? #IPL2017

இந்திய டி-20 திருவிழாவாகக் கருதப்படும் (IPL) ஐ.பி.எல் போட்டிகளின் 10-வது சீஸன், ஏப்ரல் 5-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கி, மே 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 56 லீக் போட்டி, பிளே ஆப் சுற்றில் 3 ஆட்டங்கள், ஒரு ஃபைனல் என 60 ஆட்டங்கள் இந்த சீஸனில் நடக்கிறது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டேவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய 8 அணிகள் விளையாடும் இந்த சீஸனின் முதல் மற்றும் இறுதிப் போட்டி, ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. ஏப்ரல் 5-ம் தேதி, இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடுகிறது. பிசிசிஜ நடத்தும் இந்த மிகப்பெரிய டி20 கிரிக்கெட் திருவிழா, நாளை தொடங்கும் நிலையில், முன்னணி வீரர்கள் காயம் காரணமாக தொடர்ந்து விலகி வருகின்றனர். இதனால் அந்தந்த அணிகளின் உரிமையாளர்கள், கடும் குழப்பத்தில் சிக்கித் தவிக்கின்றனர். 

IPL

சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், பல இந்திய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. ஆனால் அவர்கள் அதனைப் பொருட்படுத்தாது விளையாடினர். ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராஃபி போட்டிகளை மனதில் வைத்து, அவர்களின் ஃபிட்னெஸ் அளவுகளை முன்னேற்றுவதில் தீவிரமாகக் களமிறங்கியிருக்கிறது பிசிசிஜ. எனவே காயமடைந்துள்ள இந்திய வீரர்கள், ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம். இது தொடர்பாக பிசிசிஜ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, ''அனைத்து விதப் போட்டிகளுக்கும் கேப்டன் விராட் கோலிக்கு, தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் விளையாடுவது குறித்து, இரண்டு வாரம் கழித்து முடிவு எடுக்கப்படும். லோகேஷ் ராகுலுக்கு இடது தோள்பட்டையில் ஏற்பட்டிருக்கும் காயத்துக்காக, லண்டனில் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு, அடிவயிறு மற்றும் தொடைப்பகுதியில் (குடலிறக்கம்) வலி ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை ஓய்வு தேவைப்படுகிறது.

முரளி விஜய்க்கு வலது கையில் (மணிக்கட்டு மற்றும் தோள்பட்டை) ஏற்பட்டுள்ள காயத்துக்கு சிகிச்சை தேவைப்படுகிறது. இவர்களைத் தவிர ரவீந்திர ஜடேஜா (கை விரல்) மற்றும் உமேஷ் யாதவ் (இடுப்பு & முதுகு வலி) ஆகியோர், சிறுகாயங்களுடன் தொடர்ச்சியாகப் போட்டிகளில் விளையாடி வருவதால், இரண்டு வார காலம் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இவர்கள் அனைவரும் இந்தத் தொடர் முழுக்க விளையாடுவது கேள்விக்குறியே. இவர்களில் ஒருசிலருக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மையைப் பொறுத்து, 10-வது சீஸன் ஐ.பி.எல் போட்டிகளின் பிற்பகுதியில் விளையாட ஆரம்பித்து விடுவதற்கான சாத்தியங்களும் இருக்கிறது. 

IPL

இவர்களைத் தவிர, சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பலரும், காயம் காரணமாக விலகியுள்ளனர். ஜாகீர் கான் தலைமையில் களமிறங்கும் டெல்லி டேர்டேவில்ஸ் அணியில் இருக்கும் தென் ஆப்ரிக்க வீரர்களான குவின்டன் டீ காக் மற்றும் டூமினி ஆகியோர் காயமடைந்துள்ளனர். கடந்த சீஸனில், டெல்லி டேர்டேவில்ஸ் அணி சார்பில் அதிக ரன்களைக் குவித்த டீ காக் விலகியிருப்பது, அந்த அணிக்குப் பின்னடைவாகவே கருதப்படுகிறது. இதுகுறித்து அந்த அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில்  ''டுமினி, டி காக் போன்ற திறமையுடைய வீரர்களை இழப்பது என்பது நிச்சயம் பின்னடைவே. ஏலத்துக்கு முன்பாகவே இது தெரிந்திருந்தால் எளிதாக இருந்திருக்கும், ஏனெனில் நாம் அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டிருக்கலாம். ஆனால் கிரிக்கெட்டில் இப்படித்தான் நடக்கும்; ஆனால் சாம் பில்லிங்ஸ், கோரே ஆண்டர்சன், ஏஞ்சலோ மேத்யூஸ் போன்ற திறமையான வீரர்கள் உள்ளனர். அவர்களுக்குக் கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளது. என்றாலும் ஸ்ரேயாஸ் ஐயர், கருண் நாயர், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் போன்ற இந்திய வீரர்கள், தங்களது முழுத்திறமையையும் வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார். இந்த அணியின் ஆரம்பப் போட்டிகளில், காயம் காரணமாக ஏஞ்சலோ மேத்யூஸ் பங்கேற்க முடியாத சூழல் நிலவுகிறது. 

IPL

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. கடந்த சீஸனில் அந்த அணிக்காக 973 ரன்களை குவித்த வீராட் கோலி மற்றும் உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் கே.எல்.ராகுல் ஆகியோர் ஏற்கெனவே விலகிவிட்டனர். 2008-ம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் அறிமுகமானதிலிருந்து, இதுவரை ஒரே ஒரு போட்டியைத்தான் கோலி மிஸ் செய்திருக்கிறார். இதுகுறித்து அந்த அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி கூறியதாவது, ''ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், தொடர்ச்சியாக 5 அரைச்சதங்களை அடித்து, சிறப்பான ஃபார்மில் இருந்த கே.எல்.ராகுல் விலகியது மைனஸ்தான். அதே போல மிட்செல் ஸ்டார்க்  காயமடைந்திருப்பதால், அவரது இடத்தை டைமல் மில்ஸ் அல்லது ஆடம் மில்னே ஆகியோர் நிரப்புவார்கள்'' என்றிருக்கிறார். கோலி விலகியதால், டிவில்லியர்ஸ் அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மார்ச் 30-ல், தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உள்ளூர் போட்டியில் டிவில்லியர்ஸ், முதுகுவலி காரணமாக களமிறங்கவில்லை. இந்த அணிக்கு அது மேலும் ஒரு சோதனையாகவே கருதப்படுகிறது. அதிரடி இளம் வீரரான சர்ப்ராஸ் கானும் காயத்தினால் தொடரிலிருந்து விலகியுள்ளார். முதல் போட்டியில் ஷேன் வாட்சன் தலைமையில் களமிறங்குகிறது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ். 

IPL

அதேபோல கடந்த சீஸனில் தோனி தலைமையில் அறிமுகமான ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணி, இந்தமுறை ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் களமிறங்குகிறது. ஏற்கெனவே அஸ்வின் விலகியுள்ள நிலையில், இந்தியா - ஆஸி டெஸ்ட் தொடரின் போதே காயத்தினால் வெளியேறிய ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ், இம்முறை ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க மாட்டார். எனவே இவருக்கு மாற்றாக, உலகின் நம்பர்-1 பந்துவீச்சாளரான இம்ரான் தாகீரை தேர்ந்தெடுத்துள்ளது புனே அணி நிர்வாகம். கடந்த சீஸனில் இதே அணிக்காக நான்கு போட்டிகளில் மட்டுமே ஆடிய கெவின் பீட்டர்சன், இடையிலேயே காயம் காரணமாக விலகினார். அவர் இந்த சீஸனிலும் பங்கேற்க இயலாது எனத் தெரிவித்துவிட்டார். 

IPL

கடந்த சீஸனில் முரளி விஜய் தலைமையில் ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, இம்முறை மேக்ஸ்வெல் தலைமையில் களம்காண உள்ளது. ஏற்கெனவே முரளி விஜய் விலகியுள்ள நிலையில், இந்த அணியால் 50 லட்ச ரூபாய்க்குப் பெறப்பட்ட மார்ட்டின் குப்திலும், காயம் காரணமாக இந்த அணியின் ஆரம்பப் போட்டிகளில் விளையாட மாட்டார் எனத் தகவல்கள் வருகின்றன. நடப்புச் சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த முஸ்டாபிஸூர் ரஹ்மான், அந்த அணியின் ஆரம்பப் போட்டிகளில் களமிறங்குவது சந்தேகம். வங்கதேச அணி, தற்போது இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருவதே இதற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது.

சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணியில், ஆல்ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் காயத்தினால் அவதிப்படுகின்றனர். கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற பிக் பாஷ் லீக்கின் போது காயமடைந்த பிராவோ, அத்தொடரின் பாதியிலேயே விலகினார். இது அந்த அணிக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது போகப் போகத்தான் தெரியும். 

IPL

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த ஆன்டிரே ரஸல், ஊக்கமருத்து சர்ச்சையால் ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார். எனவே இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் இவரும் ஆடமாட்டார். உமேஷ் யாதவும் காயத்தால் அவதிப்படும் நிலையில், இதைப் பற்றி அந்த அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் கூறியதாவது, '' கொல்கத்தா அணியின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக ரஸல் இருந்தார். அவரது இழப்பை ஈடுகட்டுவது மிகவும் கடினம். அதை ஈடுகட்ட வேண்டுமானால், அணியில் உள்ள மற்ற வீரர்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். என்னைத் தவிர, அணியில் உள்ள இந்திய பேட்ஸ்மேன்களான மணிஷ் பாண்டே, சூர்ய குமார் யாதவ், ராபின் உத்தப்பா, யூசுப் பதான் ஆகியோர் தங்களது பொறுப்பை உணர்ந்து, மேலும் சிறப்பாக ஆடுவதற்கு முயற்சிக்க வேண்டும். உமேஷ் யாதவ் விளையாடுவது சந்தேகமாக இருந்தாலும், அணியில் டிரெண்ட் போல்ட் இடம்பெற்றிருப்பது கூடுதல் பலம். ஜெய்தேவ் உனத்கட் அவருக்கு பக்கபலமாக இருப்பார். சுழற்பந்து வீச்சில் சுனில் நரைனுடன், பியுஸ் சாவ்லா மற்றும் ''சைனாமேன் பவுலர்'' குல்தீப் யாதவ் அணிக்கு வலுசேர்ப்பார்'' என்றார். தற்போது ரஸலுக்கு மாற்றாக, ஆல்ரவுண்டரான காலின் கிராண்ட்ஹோம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

IPL

ஒருபுறம் காயத்தால் பலர் அவதிப்படும் நிலையில், ஏற்கெனவே காயமடைந்த வீரர்கள் தற்போது முழு உடல்தகுதியுடன் விளையாடத் தயாராக இருக்கின்றனர். இந்தியாவைச் சேர்ந்த ரோஹித் சர்மா, முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் அந்தப் பட்டியலில் முதன்மையானவர்கள் ஆவர். இவர்களுடன் இந்த வருடம் ஐ.பி.எல் ஏலத்தின் போது ஆச்சரியத்தை ஏற்படுத்திய முகமது சிராஜ், முகமது நபி, நடராஜன் ஆகியோருடன், இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்கும் கனவுடன்  ஷிகர் தவான், யூசுப் பதான் போன்ற பலர் காத்திருக்கின்றனர். எனவே  நீண்ட இடைவெளிக்குப் பிறகு களமிறங்கும் இவர்கள், இந்த ஐ.பி.எல் தொடரில் அசத்தினால், சாம்பியன்ஸ் டிராஃபிக்காக இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது!

 

http://www.vikatan.com/news/sports/85364-this-years-ipl-is-going-to-miss-these-players.html

Link to comment
Share on other sites

ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம்: ஐதராபாத் - பெங்களூர் முதல் ஆட்டத்தில் மோதல்

 

10-வது இந்தியன் பிரிமீயர் ‘லீக்’ கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

 
 
 
 
ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம்: ஐதராபாத் - பெங்களூர் முதல் ஆட்டத்தில் மோதல்
 
சென்னை:

இந்தியன் பிரிமீயர் ‘லீக்’ என்று அழைக்கப்படும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. வீரர்கள் ஏலம் முறையில் எடுக்கப்பட்டது, பல நாட்டு வீரர்கள் ஒரு அணியில் இணைந்து ஆடியது ஆகியவற்றின் காரணமாக இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது. கோடிக்கணக்கில் பணம் புரண்டதால் இந்தப்போட்டி வர்த்தக ரீதியாக நடத்தப்பட்டது. அதே நேரத்தில் ரசிகர்களுக்கு நல்ல பொழுது போக்காகவும் அமைந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டன.

201704041410530628_zqlpmsgu._L_styvpf.gi

2008-ம் ஆண்டு நடந்த முதல் ஐ.பி.எல். போட்டியில் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

பாராளுமன்ற தேர்தல் காரணமாக 2009-ம் ஆண்டு போட்டி இந்தியாவில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது. இதில் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியும், 2010-ம் ஆண்டு டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும் சாம்பியன் பட்டம் பெற்றன.

4-வது போட்டியில் கூடுதலாக புனே வாரியர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் ஆகிய 2 புதுமுக அணிகள் பங்கேற்றன. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே சாம்பியன் பட்டம் பெற்று தொடர்ந்து 2-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்றது.

5-வது ஐ.பி.எல். போட்டியில் 9 அணிகள் விளையாடின. விதிமுறை மீறி செயல்பட்டதால் கொச்சி டஸ்கர்ஸ் அணி நீக்கப்பட்டது. இதில் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வென்றது.

2013-ல் நடந்த 6-வது போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி நீக்கப்பட்டதால் சன்ரைசர்ஸ் அணி விளையாடியது. இதில் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வென்றது. அந்த போட்டியோடு புனே வாரியர்ஸ் அணி கலைக்கப்பட்டது.

7-வது ஐ.பி.எல். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவில் போட்டி நடந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்தப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2-வது முறையாக கோப்பையை வென்றது.

2015-ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டம் பெற்றது. 2-வது முறையாக கோப்பையை வென்றது.

கடந்த ஆண்டு ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. அவற்றுக்கு பதிலாக ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய 2 அணிகள் 2 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டன. கடந்த ஆண்டு (2016) நடந்த போட்டியில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் கோப்பையை வென்றது.

201704041410530628_l0x5pn8c._L_styvpf.gi

10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. மே மாதம் 21-ந்தேதி வரை 41 நாட்கள் இந்தப்போட்டி நடக்கிறது.

8 அணிகள் விளையாடும் இந்தப்போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் 14 ஆட்டங்கள் இடம் பெறும். ‘லீக்’ முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

எந்த ஐ.பி.எல் போட்டியிலும் இல்லாத வகையில் இந்த ஐ.பி.எல். போட்டியில் வீரர்களின் காயம் அதிகரித்து உள்ளது. அஸ்வின், முரளி விஜய், ராகுல், டுமினி, குயின்டன் டிகாக், மிச்சேல் மார்ஷ், ஸ்டார்க் போன்ற வீரர்கள் காயம் காரணமாக முற்றிலும் விலகியுள்ளனர். விராட் கோலி, ஜடேஜா, உமேஷ் யாதவ் மற்றும் சில வெளிநாட்டு வீரர்கள் காயத்தால் சில போட்டிகளில் ஆடமாட்டார்கள். உலகின் சிறந்த அதிரடி பேட்ஸ்மேனான டிவில்லியர்சும் காயத்தில் உள்ளார். அவர் எப்போது அணியோடு இணைவார் என்று தெரியவில்லை.

உலகின் தலைசிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் விளையாடுவதால் எப்போதும் போல இந்த ஐ.பி.எல். போட்டியும் விறுவிறுப்பாக இருக்கும்.

ஏலத்தில் அதிக தொகைக்கு விலைபோன இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது. கிறிஸ் கெய்ல், டி வில்லியர்ஸ், வார்னர், சுமித், மார்கன், மேக்ஸ்வெல் போன்ற வெளிநாட்டு அதிரடி வீரர்களுடன் விராட் கோலி, ரகானே, ரெய்னா, யுவராஜ் சிங், காம்பீர், யூசுப் பதான், மனிஷ் பாண்டே, ஹர்த்திக் பாண்டியா போன்ற இந்திய வீரர்களும் உள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த புதுமுக வீரர்களான ஜெகதீசன் நடராஜன், முருகன் அஸ்வின் ஆகியோரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐதராபாத்தில் நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. முன்னதாக தொடக்க விழா நிகழ்ச்சி நடக்கிறது.

சிறந்த அதிரடி வீரர்களை கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் ஒரு முறை கூட ஐ.பி.எல். கோப்பையை வெல்ல முடியாமல் போனது பரிதாபமே. அந்த அணி 3 தடவை இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவி இருந்தது. இதனால் இந்த முறையாவது கோப்பையை வென்று விட வேண்டும் என்று ஆர்வத்தில் உள்ளது. அனைத்து ஐ.பி.எல்.லிலும் விளையாடிய டெல்லி டேர்டெவில்ஸ் இதுவரை இறுதிப்போட்டிக்கு நுழைந்தது இல்லை. இதனால் இந்த தடவையாவது முன்னேற்றம் காண போராடும்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் 3-வது முறையாகவும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2-வது தடவையாகவும் கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது. இதேபோல கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் புதிய அணிகளான ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகளும் முதல் முறையாக கோப்பைக்காக காத்திருக்கின்றன.

ஏற்கனவே வென்ற அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்லுமா? அல்லது புதிய அணி சாம்பியன் பட்டம் பெறுமா? என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/04141052/1078008/Hyderabad-vs-Bangalore-clash-in-IPL-2017-start-tomorrow.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.