Jump to content

ஐபிஎல் 2017 சீசன்!


Recommended Posts

பஞ்சாப் அணியில் முரளி விஜய்க்குப் பதிலாக இசாந்த் சர்மா சேர்ப்பு

கி்ங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் முரளி விஜய்க்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் இசாந்த் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.

 
பஞ்சாப் அணியில் முரளி விஜய்க்குப் பதிலாக இசாந்த் சர்மா சேர்ப்பு
 


ஐ.பி.எல். சீசன் 10 டி20 கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்குகிறது. இதில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தொடக்க வீரராக களம் இறங்கும் முரளி விஜய், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம்பிடித்திருந்தார். இவரது வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகினார்.

இதனால் அவருக்குப் பதிலாக மாற்று வீரராக பேட்ஸ்மேன் ஒருவர்தான் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளர் இசாந்த் சர்மா, முரளி விஜய்க்குப் பதிலாக பஞ்சாப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/04221647/1078099/Ishant-Sharma-replace-for-Murali-Vijay-in-Kings-XI.vpf

Link to comment
Share on other sites

  • Replies 368
  • Created
  • Last Reply

ஐ.பி.எல். சீசன் 10: வர்ணனையாளராக பணியாற்றும் கெவின் பீட்டர்சன், மைக்கேல் கிளார்க்

ஐ.பி.எல். சீசன் 10-ல் இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன், ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க் ஆகியோர் வர்ணனையாளராக பணிபுரிய இருக்கிறார்கள்.

 
ஐ.பி.எல். சீசன் 10: வர்ணனையாளராக பணியாற்றும் கெவின் பீட்டர்சன், மைக்கேல் கிளார்க்
 
உலகின் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் தொடராக ஐ.பி.எல். தொடர் விளங்குகிறது. இந்த தொடரின் 10-வது சீசன் நாளை தொடங்குகிறது. டி.வி. வர்ணனையாளராக ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் போன்றோர் செயல்பட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன், மைக்கேல் கிளார்க் ஆகியோர் வர்ணனையாளர் குழுவினர் இணைகிறார்கள்.
 
ஐ.பி.எல். தொடரில் வர்ணனையாளராக பணிபுரிய இருப்பவர்களின் விபரம்:-
 
1. சஞ்சய் மஞ்ரேக்கர், 2. ஸ்காட் ஸ்டைரிஸ், 3. ரவி சாஸ்திரி, 4. மொமி பங்க்வா, 5. சுனில் கவாஸ்கர், 6. சிமோன் டௌல், 7. எல். சிவா, 8. அஞ்சும் சோப்ரா, 9. டி. மோரிசன், 10. இசா குகா, 11. மைக்கேல் ஹசி, 12. லிசா ஸ்தாலேகர், 13. மேத்யூ ஹெய்டன், 14. மெலானி ஜோன்ஸ், 15. மைக்கேல் கிளார்க். 16. முரளி கார்த்திக், 17. பிரெட் லீ, 18. கெவின் பீட்டர்சன், 19. பிராண்டன் ஜூலியன், 20. டேரன் கங்கா.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/04184652/1078082/IPL-2017-Kevin-Pietersen-Michael-Clarke-join-commentary.vpf

Link to comment
Share on other sites

ஐபிஎல்: சாம்பியன்களும் கொண்டாட்டங்களும்!

 

 
ipl_2010_Chennai1

 

2008 

இறுதிச்சுற்றில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதின. 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் முதல் ஐபிஎல் போட்டியை ராஜஸ்தான் வென்றது.

ipl_2008_Rajasthan.jpg

2009 

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற இறுதிச்சுற்றில், 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரைத் தோற்கடித்து கோப்பையை வென்றது டெக்கான் சார்ஜர்ஸ். 

ipl_2009_Deccan1.jpg

2010

சென்னை சூப்பர் கிங்ஸ் முதல்முறையாகக் கோப்பையை வென்றது. மும்பையை 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

ipl_2010_Chennai3.jpg

2011

மீண்டும் கோப்பையை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ். 58 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரைத் தோற்கடித்தது.

ipl_2011_Chennai.jpg

2012

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹாட்ரிக் அடிப்பதைத் தடுத்து நிறுத்தியது கொல்கத்தா. 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

ipl_2012_Kolkatta.jpg

2013

மீண்டுமொரு இறுதிச்சுற்றில் தோல்வியைத் தழுவியது சிஎஸ்கே. மும்பை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

ipl_2013_Mumbai1.jpg

2014

3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாபைத் தோற்கடித்து கோப்பையை வென்றது கொல்கத்தா.

ipl_2014_kolkatta.jpg

2015

இந்தமுறையும் சிஎஸ்கே-வால் கோப்பையை வெல்லமுடியவில்லை. மும்பை 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

ipl_2015_mumbai1.jpg


 
2016 

இறுதிச்சுற்றில் பெங்களூர், ஹைதராபாத் அணிகள் மோதின. 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையைத் தட்டிச் சென்றது ஹைதராபாத்.

hydrabad_2016_100.jpg

 

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வழங்கப்படும் ஆரஞ்சு, ஊதா நிற தொப்பி

 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒவ்வொரு தொடரிலும் அதிக ரன்கள் குவிக்கும் வீரருக்கு ஆரஞ்சு நிற தொப்பியும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் வீரருக்கு ஊதா நிற தொப்பியும் வழங்கப்படுகிறது.

 
 
 
 
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வழங்கப்படும் ஆரஞ்சு, ஊதா நிற தொப்பி
 
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒவ்வொரு தொடரிலும் அதிக ரன்கள் குவிக்கும் வீரருக்கு ஆரஞ்சு நிற தொப்பியும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் வீரருக்கு ஊதா நிற தொப்பியும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் யார் முன்னணியில் இருக்கிறார்களோ? அவர்களின் தலையை இந்த தொப்பி அலங்கரித்துக் கொண்டே இருக்கும். அந்த தொப்பியுடன் தான் களத்தில் வலம் வருவார்கள். ஐ.பி.எல். நிறைவில் ரன் குவிப்பிலும், விக்கெட் வேட்டையிலும் முதலிடத்தில் இருக்கும் வீரர்களிடம் அது கடைசியாக சென்றடையும். இந்த தொப்பியை வசப்படுத்தும் வீரருக்கு ரூ.10 லட்சம் பரிசு அளிக்கப்படும்.

201704050941536795_orange-purple-hat._L_

கவுரவமிக்க ஆரஞ்சு நிற தொப்பியை ஷான் மார்ஷ், மேத்யூ ஹைடன், சச்சின் தெண்டுல்கர், கிறிஸ் கெய்ல் (2 முறை), மைக் ஹஸ்சி, ராபின் உத்தப்பா, டேவிட் வார்னர், விராட் கோலி ஆகியோரும், ஊதா நிற தொப்பியை சோகைல் தன்விர், ஆர்.பி.சிங், பிரக்யான் ஓஜா, மலிங்கா, மோர்னே மோர்கல், வெய்ன் பிராவோ (2 முறை) மொகித் ஷர்மா, புவனேஷ்வர்குமார் ஆகியோர் பெற்று இருக்கிறார்கள்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/05094153/1078139/IPL-Cricket-is-offered-in-orange-purple-hat.vpf

Link to comment
Share on other sites

ஐ.பி.எல். போட்டியில் மாறாத வீரர்கள்... அதிக பேரை கேப்டனாக்கிய அணி...

 

2008-ம் ஆண்டில் இருந்து இதுவரை நடந்துள்ள அனைத்து ஐ.பி.எல். தொடர்களிலும் அணியே மாறாமல் விளையாடிய வீரர்கள் யார் என்பதை பற்றியும், அதிகம் பேரை கேப்டன் பொறுப்பில் அமர்த்திய அணி எது என்பதையும் பற்றியும் விரிவாக பார்க்கலாம்.

 
 
 
 
ஐ.பி.எல். போட்டியில் மாறாத வீரர்கள்... அதிக பேரை கேப்டனாக்கிய அணி...
 
* இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மொத்தம் 60 ஆட்டங்கள் 47 நாட்கள் நடைபெறும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.21 கோடி வழங்கப்படும்.

* கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளில் ஒன்று கோப்பையை வென்றால் மூன்று முறை மகுடம் சூடிய முதல் அணி என்ற சாதனையை படைக்கும்.

* 2008-ம் ஆண்டில் இருந்து இதுவரை நடந்துள்ள அனைத்து ஐ.பி.எல். தொடர்களிலும் அணியே மாறாமல் விளையாடிய வீரர்கள் இருவர் மட்டுமே. ஒருவர் விராட் கோலி (பெங்களூரு), மற்றொருவர் ஹர்பஜன்சிங் (மும்பை இந்தியன்ஸ்). மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டுமே விளையாடி வந்தாலும் கடந்த ஆண்டு காயத்தால் வரவில்லை. இதே போல் 2008-ம் ஆண்டில் இருந்தே கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக மட்டும் ஆடும் ஷான் மார்ஷ் 2009-ம் ஆண்டு சீசனில் தசைப்பிடிப்பால் கால்பதிக்கவில்லை.

* கிங்ஸ் லெவன் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட மேக்ஸ்வெல் அந்த அணியின் 10-வது கேப்டன் ஆவார். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிகம் பேரை கேப்டன் பொறுப்பில் அமர்த்திய அணி என்ற பெருமையை பஞ்சாப் பெறுகிறது.

201704050919278004_Maxwell-ipl-dhoni._L_

* அணிக்கு வெற்றித் தேடி தந்ததில் மட்டுமல்லாமல், டாஸில் (71 முறை) அதிக முறை வெற்றி பெற்ற கேப்டன் என்ற சிறப்புக்குரிய டோனி (தற்போது புனே அணி) முதல் முறையாக கேப்டன் பதவி இல்லாமல் விளையாட உள்ளார்.

* ஐ.பி.எல்.-ல் ஒரே இன்னிங்சில் அரைசதத்துடன் 4 விக்கெட்டுகளை இரண்டு முறை எடுத்த ஒரே வீரர் யுவராஜ்சிங் (ஐதராபாத் அணி) ஆவார்.

* ஆயிரம் ரன்களுக்கு மேல் (1,262 ரன்) மற்றும் 100 விக்கெட்டுகளுக்கு மேல் (122 விக்கெட்) இரண்டும் ஒரு சேர எடுத்த ஒரே வீரர் வெய்ன் பிராவோ (குஜராத் லயன்ஸ்) தான்.

* பெங்களூரு அணி மட்டுமே 10 விக்கெட் வித்தியாசத்தில் இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கிறது.

* இன்னிங்சில் இரண்டு முறை 5 விக்கெட்டுகளை சாய்த்த முதல் பவுலர் ஜேம்ஸ் பவுல்க்னெர் (குஜராத் லயன்ஸ்) ஆவார். 
 
Link to comment
Share on other sites

கோலாகலத்துடன் இன்று தொடங்குகிறது ஐபிஎல்! முதல் நாளில் சன்ரைசர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் மோதல்

2017-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி, இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் தொடங்குகிறது. இரவு  எட்டு மணிக்கு தொடங்க உள்ள முதல் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன.

IPL

டெல்லி, மொஹாலி, மும்பை, புனே, ஹைதராபாத் உள்ளிட்ட 10 நகரங்களில் ஐபிஎல் தொடர் போட்டிகள் நடைபெற உள்ளன. மொத்தமாக 60 போட்டிகள் நடைபெற உள்ளன. சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு, தமிழ்நாட்டில் மிகுந்த வரவேற்பு இருந்துவந்தது. ஆனால், 2013-ம் ஆண்டில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது.

இதுகுறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் நியமிக்கப்பட்ட கமிட்டி, சூதாட்டம்குறித்து தீவிரமாக ஆராய்ந்து அறிக்கை அளித்தது. அறிக்கையின் அடிப்படையில், இரண்டு ஆண்டுகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. அதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களத்தில் இல்லாதது தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றமாக உள்ளது. ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இல்லாததன் காரணமாக, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் ஏதும் நடத்தப்படவில்லை. இன்று நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில், நடிகை எமி ஜாக்சன் நடனம் ஆடுகிறார்.

http://www.vikatan.com/news/sports/85449-ipl---2017-starts-today.html

Link to comment
Share on other sites

ஐ.பி.எல். 2017: எட்டு அணிகள் ஒரு பார்வை

பத்தாவது இந்தியன் பிரீமியர் "லீக்" இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் 8 அணிகள் பற்றிய விவரம்:-

 
 
ஐ.பி.எல். 2017: எட்டு அணிகள் ஒரு பார்வை
கோப்பு படம்
கொல்கத்தா நைட்ரைடர்ஸ்:

201704051243088512_q0n9s9w6._L_styvpf.gi


காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 3-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. அந்த அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. ஆந்த்ரே ரஸ்சல் இல்லாதது அந்த அணிக்கு பாதிப்பே.

கேப்டன் காம்பீர், உத்தப்பாவின் தொடக்கம் கொல்கத்தா அணிக்கு பலமாக கருதப்படுகிறது. டாரன் பிராவோ, யூசுப் பதான், மனிஷ் பாண்டே, சூர்ய குமார் யாதவ், வோக்ஸ், சுனில் நரீன், டிரென்ட் போல்ட், குலதீப் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். 2012, 2014-ம் ஆண்டு சாம்பியனான கொல்கத்தா அணி கடந்த முறை 4-வது இடத்தை பிடித்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

201704051243088512_fhrrdfxn._L_styvpf.gi


வீரர்களின் காயம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. நல்ல நிலையில் இருக்கும் ராகுல் விலகியுள்ளார். கேப்டன் விராட் கோலி தோள்பட்டை காயத்தால் சில ஆட்டங்களில் ஆடமாட்டார். அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் நிலை தெரியவில்லை.

பெங்களூர் அணியின் பலமே அதிரடியான பேட்டிங்தான். கிறிஸ் கெய்ல் முதுகெலும்பாக உள்ளார். தற்காலிக கேப்டன் வாட்சனும் சிறந்த ஆல்-ரவுண்டர் ஆவார். இங்கிலாந்தை சேர்ந்த டைமல் மில்சை ரூ.12 கோடிக்கு எடுத்துள்ளது. 20 ஓவர் போட்டியில் சிறந்த பவுலரான அவர் மீது அதிகமான எதிர்பார்ப்பு இருக்கிறது.

3 முறை இறுதிப்போட்டியில் (2009, 2011, 2016) தோற்ற அந்த அணி இந்த தடவையாவது முதல் முறையாக கோப்பையை வெல்லும் வேட்கையில் இருக்கிறது.

குஜராத் லயன்ஸ்:

201704051243088512_htyam7ve._L_styvpf.gi


ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் கடந்த ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக விளையாடி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது. ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் தோற்று 3-வது இடத்தை பிடித்தது.

கடந்த முறையை போலவே இந்த தடவையும் சிறப்பாக விளையாடும் ஆர்வத்தில் இருக்கிறது. பிரண்டன் மெக்குல்லம், வெய்ன் சுமித், பல்க்னெர் ஆரோன் பிஞ்ச், தினேஷ் கார்த்திக் மற்றும் புதிய வரவான ஜேசன் ராய் போன்ற சிறந்த வீரர்கள் லயன்ஸ் அணியில் இருக்கிறார்கள்.

ஆல்-ரவுண்டர்களான ஜடேஜா, பிராவோ ஆகியோர் காயத்தால் 2 வாரம் ஆடாமல் போவது அந்த அணிக்கு இழப்பே. பந்துவீச்சில் பலவீனமாக இருக்கும் குஜராத் அணிக்கு இருவரும் திரும்பும் போது பலம் பெற்று திகழும். சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்களை கொண்ட அந்த அணி தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்:

201704051243088512_ssdv4ac3._L_styvpf.gi


நடப்பு சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஐ.பி.எல். கோப்பையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளது.

கேப்டன் வார்னர், யுவராஜ்சிங், ஷிகார் தவான், தீபக் ஷீடா, ரஷீத் கான், ஆப்கானிஸ்தான் வீரர் முகமது, பிரவீன் தாம்பே போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். பந்து வீச்சில் அந்த அணி பலம் பொருந்தி காணப்படுகிறது. நெக்ரா, முஷ்டாபிசுர் காயம் சரியாகி திரும்பும் வரை அணிக்கு சற்று பாதிப்பாகவே இருக்கும்.

வார்னர், தவான் நல்ல நிலைக்கு திரும்புவதை பொறுத்தே ஐதராபாத் அணியின் பேட்டிங் இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ்:

201704051243088512_10jf7b66._L_styvpf.gi


ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 3-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறது. 2013 மற்றும் 2015-ம் ஆண்டு ஆதிக்கம் செலுத்திய அந்த அணி இந்த தடவையும் திறமையை வெளிப்படுத்தும் ஆவலில் உள்ளது. காயத்தில் இருந்து குணமடைந்த ரோகித் சர்மா, ஜோஸ் பட்லர், போல்லார்ட், ஹர்த்திக் பாண்டியா, லெண்டில் சிம்மன்ஸ், அம்பதி ராயுடு போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

பந்து வீசில் ஹர்பஜன், பும்ரா ஆகியோர் உள்ளனர். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் திகழும் அந்த அணி சொந்த மண்ணில் மட்டும் சிறப்பாக ஆடுவது பலவீனமே.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

201704051243088512_fjuab9l9._L_styvpf.gi


2014-ம் ஆண்டு போட்டியில் கோப்பையை இழந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதல் முறையாக கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது.

கேப்டன் பதவியில் மில்லர் கழற்றி விடப்பட்டு மேக்ஸ்வெல் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் சிறந்த அதிரடி வீரர் ஆவார். மார்கன், ஸ்டானிஸ், மில்லர், வோரா, விருத்திமான் சகா போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். முன்னாள் அதிரடி வீரரான ஷேவாக்கின் ஆலோசனை பஞ்சாப் அணிக்கு பலன் உள்ளதாக அமையும். முரளி விஜய் காயத்தால் விலகியது பஞ்சாப் அணிக்கு பாதிப்பே. கடந்த ஐ.பி.எல். போட்டியில் அந்த அணி கடைசி இடத்தை பிடித்து இருந்தது.

டெல்லி டேர்டெவில்ஸ்:

201704051243088512_egksqjvm._L_styvpf.gi


9 ஐ.பி.எல். போட்டியிலும் விளையாடி இறுதிப்போட்டிக்கு நுழையாத ஒரே அணி டெல்லி டேர்டெவில்ஸ் ஆகும்.

கடந்த ஆண்டு நடந்த போட்டியில் அந்த அணி 6-வது இடத்தை பிடித்தது. ஜாகீர்கான் தலைமையிலான அந்த அணி முதல் முறையாக ஐ.பி.எல். கோப்பைக்காக காத்திருக்கிறது.

டுமினி, குயின்டன் டிகாக ஆகியோர் காயத்தால் ஆடாதது டெல்லி அணிக்கு பாதிப்பே. பந்து வீச்சில் பலத்துடன் காணப்படுகிறது. கும்மினஸ், மோரிஸ், ரபடா, அமித் மிஸ்ரா உள்ளனர். கோரி ஆண்டர்சன், கருண் நாயர், மேத்யூஸ், ரிசப்பன்ட் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.

ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட்:

201704051243088512_pyljxzce._L_styvpf.gi


கடந்த போட்டியில் 7-வது இடத்தை பிடித்த ரைசிங் புனே அணி இந்த முறை ‘பிளே ஆப்’ சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

கேப்டன் பதவியில் இருந்து டோனி நீக்கப்பட்டு சுமித் நியமிக்கப்பட்டுள்ளார். ரூ.14½ கோடி ஏலத்தில் எடுக்கப்பட்ட பென் ஸ்டோகஸ் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது. ரகானே, பாப் டு பிளிஸ்சிஸ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். அஸ்வின் காயத்தால் விலகியது புனே அணிக்கு பாதிப்பே. கேப்டன் பதவியில் இல்லாமல் விளையாடும் டோனி மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/05124308/1078190/IPL-2017-A-view-of-eight-teams.vpf

Link to comment
Share on other sites

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியினால் அதிரடியாக டுவிட்டர் செய்த காரியம்

 

 

இம்முறை ஆரம்பமாகவுள்ள பத்தாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரினால் டுவிட்டர் நிறுவனம் சிறப்பு எமோஜிக்களை வெளியிட்டுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமா ஐபிஎல் கோலாகல திருவிழாவின் முதல் போட்டியில் பெங்களூர் –சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

kohli-emoji_0504twitter_875.jpg

இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டுக்காக டுவிட்டர் நிறுவனம் சிறப்பு எமோஜிக்களை வெளியிட்டுள்ளது. நெட்டிசன்கள் டுவிட்டரில் ஹேஷ்டேக்குடன் கிரிக்கெட் வீரர்களின் முழுப் பெயரையும் பதிவு செய்யும் போது வீரர்களின் புகைப்படம் எமோஜிக்களாக தோன்றுகிறது. அதேபோல #IPL என்று பதிவிட்டாலும் ஐபிஎல் எமோஜி தானாகவே தோன்றும்.

நெட்டிசன்களின் பயன்பாட்டில் முக்கிய இடம் பிடித்தவை எமோஜிக்கள். தற்போது ஐபிஎல் இலும் களைகட்டியுள்ளதால் கிரிக்கெட் ரசிகர்களுக்காக சிறப்பு எமோஜிக்களை டுவிட்டர் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/18760

Link to comment
Share on other sites

கோலாகலமாக தொடங்கியது ஐ.பி.எல். 10-வது சீசன் தொடக்க விழா: எமிஜாக்சன் உற்சாக நடனம்

10-வது இந்தியன் பிரிமீயர் ‘லீக்’ கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா ஐதராபாத் நகரில் கோலாகலமாக தொடங்கியது. நடிகை எமிஜாக்சன் நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின.

 
 
 
 
கோலாகலமாக தொடங்கியது ஐ.பி.எல். 10-வது சீசன் தொடக்க விழா: எமிஜாக்சன் உற்சாக நடனம்
 
ஐதராபாத்:

இந்தியன் பிரிமீயர் ‘லீக்’ என்று அழைக்கப்படும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. வீரர்கள் ஏலம் முறையில் எடுக்கப்பட்டது, பல நாட்டு வீரர்கள் ஒரு அணியில் இணைந்து ஆடியதன் காரணமாக இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது.

இந்நிலையில், 10-வது இந்தியன் பிரிமீயர் ‘லீக்’ கிரிக்கெட் போட்டி ஐதராபாத் நகரில் கோலாகலமாக தொடங்கியது. இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சச்சின், சேவாக், கங்குலி, லட்சுமணன் ஆகிய 4 பேரும் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.
201704051922525871_ipl._L_styvpf.gif
நடப்பு சாம்பியன் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கோப்பையுடன் மைதானத்தில் வலம் வந்தார். நடிகை எமிஜாக்சன உற்சாகமாக நடனமாடினார். அப்போது, புலியாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது.

இதனையடுத்து இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

இன்று தொடங்கும் ஐ.பி.எல். போட்டி மே மாதம் 21-ந்தேதி வரை 41 நாட்கள் நடக்கிறது. 8 அணிகள் விளையாடும் இந்தப்போட்டியில் ஒவ்வொரு  அணியும் லீக் சுற்றில் 14 ஆட்டங்களில் விளையாடும். ‘லீக்’ முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.
 

 

Link to comment
Share on other sites

ஐ.பி.எல்: யுவராஜ் சிங் அதிரடியால் ஐதராபாத் அணி 207 ரன்கள் குவிப்பு

 

ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிராக ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 207 ரன்கள் குவித்துள்ளது. யுவராஜ் சிங் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினார்.

 
 
ஐ.பி.எல்: யுவராஜ் சிங் அதிரடியால் ஐதராபாத் அணி 207 ரன்கள் குவிப்பு
 
ஐ.பி.எல் தொடரின் 10-வது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. ஐதராபாத் நகரில் நடைபெற்ற தொடக்கவிழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின.

இதனையடுத்து முதல் போட்டியாக நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இடையே இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் வாட்சன் பந்து வீச முடிவு செய்தார்.

இதனையடுத்து, ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் மற்றும் ஷிகார் தவான் இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அதிரடியாக விளையாட தொடங்கிய வார்னர் 8 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் ஷிகார் தவானுடன் ஹென்ரிகியூஸ் இணைந்து இருவரும் சீராக ரன்களை சேர்ந்தனர். ஷிகார் அதிரடியாக பவுண்டரிகளை விளாசினார். இருப்பினும் 40(31) ரன்கள் எடுத்திருந்த போது தவான் கேட்சாகி அவுட்டானார்.
201704052211375864_Circket2._L_styvpf.gi
பின்னர் களமிறங்கிய யுவராஜ் சிங் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினார். 27 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹென்ரிகியூஸ் 52(37) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 207 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணிக்கு 208 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/05221136/1078319/IPL-Yuvraj-Singh-clobbers-half-century-Sunrisers-Hyderabad.vpf

Sunrisers Hyderabad 207/4 (20/20 ov)
RCB 69/2 (7.4/20 ov)
Link to comment
Share on other sites

ஐ.பி.எல்., கிரிக்கெட்: முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணி தோல்வி

 

ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பத்தாவது ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடர் இன்று(ஏப்.,5) துவங்கியது. ஐதராபாத்தில் நடந்த முதல் லீக் போட்டியில் பெங்களூரு, ஐதராபாத் அணிகள் மோதின, காயத்தால் அவதிப்படும் கோஹ்லிக்கு பதில், பெங்களூரு கேப்டனாக களமிறங்கிய வாட்சன், 'டாஸ்' வென்று 'பவுலிங்' தேர்வு செய்தார்.
 

 

யுவராஜ் விளாசல்:

 

ஐதராபாத் அணிக்கு வார்னர் (14) ஏமாற்றினார். ஷிகர் தவான் 40 ரன்கள் எடுத்தார். ஹென்ரிக்ஸ், யுவராஜ் சிங் ஜோடி அதிரடியாக விளையாடியது. ஹென்ரிக்ஸ் (52) அரை சதம் கடந்தார். யுவராஜ் 27 பந்தில் 62 ரன்கள் விளாசினார். முடிவில், ஐதராபாத் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. தீபக் ஹூடா (16), பென் கட்டிங் (16) அவுட்டாகாமல் இருந்தனர்.
 

 

நெஹ்ரா அசத்தல்:


கடின இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு கெய்ல் (32) சிறப்பான துவக்கம் தந்தார். ரஷித் கான் 'சுழலில்' மன்தீப் சிங் (24), டிராவிஸ் ஹெட் (30) சிக்கினர். கேதர் ஜாதவ் 31 ரன்களில் அவுட்டானார். சச்சின் பேபி (1) ஏமாற்றினார். நெஹ்ரா 'வேகத்தில்' வாட்சன் (22), அரவிந்த் (0) ஆட்டமிழந்தனர். முடிவில், பெங்களூரு அணி 19.4 ஓவரில் 172 ரன்கள் ஆல்-அவுட்டாகி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1745667

ஐ.பி.எல் தொடக்க ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தியது சன் ரைசர்ஸ் ஐதராபாத்

 

ஐ.பி.எல் தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

 
ஐ.பி.எல் தொடக்க ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தியது சன் ரைசர்ஸ் ஐதராபாத்
 
ஐதராபாத்:

ஐ.பி.எல் தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் தொடரின் 10-வது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. ஐதராபாத் நகரில் நடைபெற்ற தொடக்கவிழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. இதனையடுத்து முதல் போட்டியாக நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இடையே இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் வாட்சன் பந்து வீச முடிவு செய்தார்.
201704060008535697_ipl3._L_styvpf.gif
இதனையடுத்து, ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் மற்றும் ஷிகார் தவான் இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அதிரடியாக விளையாட தொடங்கிய வார்னர் 8 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ஷிகார் தவானுடன் ஹென்ரிகியூஸ் இணைந்து இருவரும் சீராக ரன்களை சேர்ந்தனர். ஷிகார் அதிரடியாக பவுண்டரிகளை விளாசினார். இருப்பினும் 40(31) ரன்கள் எடுத்திருந்த போது தவான் கேட்சாகி அவுட்டானார்.

பின்னர் களமிறங்கிய யுவராஜ் சிங் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினார். 27 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹென்ரிகியூஸ் 52(37) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 207 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணிக்கு 208 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

கடினமான இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 21 பந்துகளில் 32 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். மந்தீப் சிங் மற்றும் ஹெட் ஆகியோர் நல்ல அடித்தளம் அமைத்த போதிலும் அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். பெங்களூர் அணியின் கேப்டன் வாட்சன் 22 ரன்களில் நெஹ்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.

பின்வரிசை வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறியதால் அந்த அணி 19.4 ஓவர்களில் 172 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. ஐதராபாத் அணியின் நெஹ்ரா, புவனேஷ்வர் குமார், ராஷித் கான் ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ள ஐதராபாத் அணி இரண்டு புள்ளிகளை பெற்று வெற்றிக் கணக்கை தொடங்கியுள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/06000852/1078328/sun-risers-hydrapath-won-against-royal-challengers.vpf

Link to comment
Share on other sites

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புனே - மும்பை அணிகள் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 2-வது நாளான இன்று (வியாழக்கிழமை) இரவு நடக்கும் லீக் ஆட்டத்தில் புனே-மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.

 
 
 
 
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புனே - மும்பை அணிகள் இன்று மோதல்
மராட்டிய பாரம்பரிய உடையுடன் புனே அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித். அருகில் சக வீரர் ரஹானே இருக்கிறார்.
புனே :

10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் லயன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

2-வது நாளான இன்று இரவு நடக்கும் லீக் ஆட்டத்தில் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

கடந்த ஆண்டு அறிமுகம் ஆன புனே சூப்பர் ஜெயன்ட்சுக்கு டோனி கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தார். 14 லீக் ஆட்டங்களில் 5 வெற்றி, 9 தோல்வி கண்ட புனே அணி 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அந்த சமயத்தில் ஸ்டீவன் சுமித், கெவின் பீட்டர்சன், மிட்செல் மார்ஷ், பிளிஸ்சிஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் காயத்தால் பாதியில் விலகியது பின்னடைவை ஏற்படுத்தியது. கடந்த சீசனில் மிகவும் பின்தங்கியதால் அதிருப்தி அடைந்த புனே அணி நிர்வாகம் டோனியை கேப்டன் பதவியில் இருந்து கழற்றி விட்டு, அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்டீவன் சுமித்தை கேப்டனாக நியமித்து இருக்கிறது.

உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஸ்டீவன் சுமித்தின் தலைமையில் புனே அணி நிச்சயம் எழுச்சி பெறும் என்று அந்த அணி நிர்வாகம் உறுதியாக நம்புகிறது.

201704060934597140_tio._L_styvpf.gif

காயப்பிரச்சினை எதுவும் இல்லாததால் புனே அணி இந்த தடவை வலுவாக காணப்படுகிறது. ரூ.14½ கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் அசத்தும் பட்சத்தில் அது புனே அணியை மேலும் வலுவடையச் செய்யும். டோனி, ரஹானே, பாப் டு பிளிஸ்சிஸ் ஆகியோரும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இல்லாதது புனே அணிக்கு கொஞ்சம் இழப்பு தான் என்றாலும், உலகின் ‘நம்பர் ஒன்’ சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர், ஆடம் ஜம்பா ஆகியோர் அவரது இடத்தை நிரப்ப காத்திருக்கிறார்கள்.

இரண்டு முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி எப்போதுமே மந்தமாகத்தான் தொடங்கும். கடந்த 3 ஆண்டுகளில் முதல் 5 ஆட்டங்களை எடுத்துக் கொண்டால், 2016-ம் ஆண்டில் 2-ல் வெற்றி, 3-ல் தோல்வி, 2015-ம் ஆண்டில் ஒன்றில் வெற்றி, 4-ல் தோல்வி, 2014-ம் ஆண்டில் 5-ல் தோல்வி என்று தடுமாற்றத்துடனே தொடங்கி இருக்கிறது. ஆரம்பத்தில் தடுகிதத்தம் போட்டாலும் அதன் பிறகு எப்படியோ மீண்டு வந்து விடுவார்கள்.

காயத்தில் இருந்து குணமடைந்து விட்ட கேப்டன் ரோகித் சர்மா, தனது திறமையை நிரூபிக்கும் வேட்கையில் இருக்கிறார். ஜோஸ் பட்லர், பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா அதிரடியில் மிரட்டக்கூடியவர்கள். மிட்செல் ஜான்சன், மலிங்கா, ஹர்பஜன்சிங், பும்ரா பந்து வீச்சில் கைகொடுப்பார்கள். ஆனால் ‘யார்க்கர் மன்னன்’ மலிங்கா தற்போது வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளதால், இன்றைய ஆட்டத்தில் விளையாடமாட்டார்.

201704060934597140_ro._L_styvpf.gif

மொத்தத்தில் பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம். இவ்விரு அணிகளும் இதுவரை சந்தித்த 2 ஆட்டங்களில் தலா ஒன்று வீதம் வெற்றி பெற்றுள்ளன.

இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

மும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா (கேப்டன்), பார்த்தீவ் பட்டேல், ஜோஸ் பட்லர், அம்பத்தி ராயுடு, பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, குணால் பாண்ட்யா, ஹர்பஜன்சிங், மிட்செல் ஜான்சன், பும்ரா, மிட்செல் மெக்லெனஹான் அல்லது வினய்குமார்.

புனே சூப்பர் ஜெயன்ட்ஸ்: ரஹானே, மயங்க் அகர்வால், பாப் டு பிளிஸ்சிஸ் அல்லது உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் சுமித் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், டோனி, ரஜத் பாட்டியா அல்லது மனோஜ் திவாரி, அசோக் திண்டா, அங்கித் ஷர்மா, ஷர்துல் தாகுர், இம்ரான் தாஹிர் அல்லது ஆடம் ஜம்பா.

இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி செட்மேக்ஸ், சோனி இ.எஸ்.பி.என். சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/06093458/1078362/ipl-Cricket-Pune-vs-Mumbai-teams-clash-today.vpf

Link to comment
Share on other sites

ஐ.பி.எல்.லில் 100 விக்கெட் வீழ்த்திய ஆசிஷ் நெக்ரா

 

10-வது ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வரும் 37 வயதான ஆசிஸ் நெக்ரா, பெங்களூர் அணிக்கு எதிராக 2 விக்கெட் எடுத்ததன் மூலம் ஐ.பி.எல்.லில் 100 விக்கெட்டை வீழ்த்தினார்.

 
 
ஐ.பி.எல்.லில் 100 விக்கெட் வீழ்த்திய ஆசிஷ் நெக்ரா
 
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஆசிஷ் நெக்ரா. ஐ.பி.எல். போட்டிகளில் அவர் மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளில் விளையாடி இருக்கிறார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக கடந்த ஆண்டில் இருந்து விளையாடி வருகிறார்.

37 வயதிலும் ஆசிஷ் நெக்ரா மிகவும் நேர்த்தியாக பந்துவீசி வருகிறார். பெங்களூர் அணிக்கு எதிராக அவர் நேற்று தொடர்ச்சியாக 2 விக்கெட்டை (வாட்சன், அரவிந்த்) கைப்பற்றினார். இதன்மூலம் ஆசிஷ் நெக்ரா ஐ.பி.எல்.லில் 100 விக்கெட்டை வீழ்த்தினார்.

83 இன்னிங்சில் 300.5 ஓவர்கள் வீசி 2340 ரன் கொடுத்து 100 விக்கெட்டை தொட்டார். சராசரி 23.40 ஆகும். 10 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியது அவரது சிறந்த பந்துவீச்சாகும். 100 விக்கெட் எடுத்த 8-வது வீரர் நெக்ரா ஆவார்.

ஐ.பி.எல்.லில் 100 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றிய பவுலர்கள் விவரம்:-

201704061209543550_Untitled-1._L_styvpf.
 
 

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/06120953/1078404/IPL-2017-Ashish-Nehra-takes-100-IPL-wickets.vpf

Link to comment
Share on other sites

தோனி இனி கேப்டன் இல்லை... மும்பையை எப்படிச் சமாளிக்கும் புனே? #MatchPreview #VikatanExclusive

இந்த ஐபிஎல் சீசனின் இரண்டாவது போட்டியில் மும்பை - புனே அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டியை பற்றி பார்ப்பதற்கு முன் நேற்று நடந்த பெங்களூரு - ஹைதராபாத் போட்டியின் முடிவு குறித்த சின்னதாக ஓர் அலசல்.

ஐபிஎல்லில் ரஷீத் கான்

காயங்களால் அவதிப்பட்ட பெங்களூரு, நேற்று ஹைதராபாத்திடம் பணிந்தது. எதிர்பார்த்தது போலவே ஹைதராபாத் வெற்றி பெற்றாலும், பெங்களூரூவின் பவுலிங் அதிர்ச்சியளிக்கும் வகையில் மோசமாக இருந்தது. ஃபீல்டிங்  மகா மோசம். சாஹலும், தைமல் மில்ஸும் மட்டுமே நல்ல பந்துகளை வீசினார்கள். ராஜிவ் காந்தி ஸ்டேடியமானது சின்னசாமி ஸ்டேடியத்தை போல சிறிய மைதானம் கிடையாது. இருந்தும் 207 ரன்களை விட்டுக்கொடுத்திருக்கிறது பெங்களூரு. ஷேன் வாட்சன், ஸ்ரீநாத் அர்விந்த் இருவரும் மிக மோசமான முறையில் பந்துவீசினார்கள். முதல் போட்டியே  மறக்கத்தக்க ஒன்றாக மாறிவிட்டது பந்துவீச்சாளர் அங்கீத் சவுதாரிக்கு.

ஹைதராபாத் அணியை நிச்சயம் 170 -180 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால் வாட்சனின் மோசமான வியூகங்களும், கேட்ச்களை கோட்டை விட்ட ஃபீல்டர்களும், நல்ல லென்த் பந்துகளை வீசாத பெங்களூரு பவுலர்களுமே பெங்களூரு அணியின் தோல்விக்கு முக்கிய காரணம். நேற்றைய தினம் டேவிட் வார்னர் அட்டகாசமான ஒரு பவுண்டரி அடித்து இன்னிங்ஸை ஆரம்பித்தாலும், பின் தேவையற்ற ஒரு ஷாட்டால் அவுட் ஆனார். ஷிகர் தவான், வாட்சன் ஓவரில் நான்கு பவுண்டரிகளை விரட்டியது அவருக்கு மனதளவில் கூடுதல் தெம்பளித்திருக்கும். ஷிகர் நல்ல டச்சில் இருந்தார். குறைந்தபட்சம் 70 ரன்கள் வரை அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போது, 40 ரன்னில் அசட்டையான  ஷாட்டால் அவுட்! 

நேற்றைய போட்டியில், நல்ல ஆங்கரிங் இன்னிங்ஸ் ஆடினார் ஹென்றிக்ஸ். எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக யுவராஜ், நேற்று பட்டையை கிளப்பினார். கடந்த இரண்டு ஆண்டுகளில் முதன்முறையாக நேற்று தான்  களத்தில் கேஷுவலாக நின்று பேட்டிங் பிடித்தார். பத்தாவது ஐபிஎல் சீசனில் தான், தனது வேகமான அரைசதத்தை பூர்த்தி செய்திருக்கிறார். யுவராஜ் இந்த ரேஞ்சில் இந்த சீசனை டீல் செய்தால், எதிரணி பவுலர்கள் பாடு திண்டாட்டமே.

சன் ரைஸர்ஸ் ஹைதரபாத் - யுவராஜ் சிங்

பெங்களூரு பேட்டிங் பிடித்தபோது கெயில் நல்ல டச்சில் ஆடினார். கேதர் ஜாதவ் அற்புதமாக ஆடினார். ஐபிஎல்லில் முதன்முறையாக ஆடும், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இளம் பவுலர் ரஷீத் கான் நேற்று புத்திசாலித்தனமான பந்துகளை வீசினார். மன்தீப் சிங், டிராவிஸ் ஹெட் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  ரஷீத்துக்கு பூங்கொத்துகள். புவனேஷ்வர் குமார் நேற்று டாப் கிளாஸ் பவுலராக திகழ்ந்தார். ஆஷிஷ் நெஹ்ரா பந்தை முதல் மூன்று ஓவர்களில் மானாவாரியாக உரி... உரி... என பெங்களூரு பேட்ஸ்மேன்கள் உரித்தாலும், தனது பாணியில் நான்காவது ஓவரில் கம்பேக் தந்து, வாட்சனையும், அரவிந்தையும் பெவிலியனுக்கு அனுப்பினார் ஆண்டவர் ஆஷிஷ்.  வாட்சனின் விக்கெட், நெஹ்ராவுக்கு நூறாவது விக்கெட். வாழ்த்துகள் நெஹ்ரா. கடந்த ஐபிஎல் தொடர்களில் பெற்ற தோல்விகளில் இருந்து பெங்களூரு இன்னமும் எதுவும் கற்றுக்கொண்டது போல தெரியவில்லை. கோலி, டிவில்லியர்ஸே வந்தாலும் கூட, ஃபீல்டிங் மற்றும் பவுலிங்கில் கவனம் செலுத்தாவிட்டால் இந்த முறையும் கோப்பையைத் தொட்டு பார்ப்பதை கனவில் மட்டும் செய்ய வேண்டியது தான். 

புனே VS மும்பை

சரி புனே - மும்பை மேட்ச்சுக்கு வருவோம். கடந்த பத்து ஆண்டுகளில் முதன்முறையாக இன்றுதான் கேப்டனாக இல்லாமல் பேட்ஸ்மேனாக மட்டும் ஆடப்போகிறார் தோனி. புனே அணி நிச்சயம் தோனியின் தலைமையை மிஸ் செய்யக்கூடும். புனே மண் குறித்து ஸ்மித்துக்கு நல்ல புரிதல் உண்டு. சமீபத்தில் நடந்த  இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இங்கே தான் கோலி அணியைப் போட்டுத் தாக்கியது ஸ்மித் & கோ. அந்த அனுபவம் அவருக்கு கைகொடுக்கும். புனே பிட்ச், டி-20 போட்டிகளைப் பொறுத்தவரை பேட்டிங் பவுலிங் இரண்டுக்கும் சம வாய்ப்பு அளிக்கும். முதல் இன்னிங்ஸ் ஆடும் அணி சராசரியாக 175 ரன்கள் அடிக்க முடியும். சராசரியை விட பத்து, இருபது  ரன்கள் யார் கூடுதலாகவோ, குறைவாக அடிக்கிறார்களோ அதைப்பொறுத்து வெற்றி வாய்ப்பு மாறலாம்.  

புனே

புனே அணிக்கு பேட்டிங்கில் பெரிய குறை இல்லை. அதட்டல் அதிரடி காட்டும் பேட்ஸ்மேன்கள் இல்லை என்றாலும், ஓவருக்கு சராசரியாக எட்டு ரன்களை அடிக்கும் பேட்ஸ்மேன்கள் நிறைந்திருக்கிறார்கள். நேற்று யுவராஜ் ஆடியதைப் போல, தோனியும்  8 -12 ஓவர்களுக்குள்ளாகவே இறங்கி அதிரடி காட்டினால் புனே 190 ரன்களுக்கு மேல் குவிக்கலாம். ஸ்டோக்ஸ் அபாரமான பார்மில் இருக்கிறார். அவர் மேட்ச்வின்னர் பிளேயர். பவுலிங் துறை சுணங்கி இருக்கிறது. இம்ரான் தாகீர், ஆடம் ஜாம்பா மட்டுமே  நம்பிக்கையளிக்கும் பந்துவீச்சாளர்கள். ஷர்துல் தாகூர் பெரிய போட்டிகளில் எப்படி விளையாடப்போகிறார் என்பதை பொறுத்திருந்து  தான் பார்க்க வேண்டும். அசோக் டிண்டாவைப் பற்றி கசப்பான நிகழ்வுகளே நினைவில் நிற்கின்றன. ஈஸ்வர் பாண்டே தன் ஆட்டத்தை இன்னமும் மெருகேற்ற வேண்டும். மும்பை அணியில், சரவெடி பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். ஏதாவது ஒரு பவுலர், மேட்ச் வின்னிங் ஆடினால் மட்டுமே புனே, மும்பையை கட்டுக்குள் வைக்க முடியும். 

மும்பை

மும்பை அணியை பொறுத்தவரை பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அத்தனை துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. நிதிஷ் ராணா, க்ரூனால் பாண்டியா, கிருஷ்ணப்பா கவுதம், கார்ன்ஷர்மா என நான்கு இளம் இந்திய வீரர்கள் மீதும் கவனம் இருக்கட்டும். மற்றபடி ரோஹித், பார்த்தீவ், பட்லர், சிம்மன்ஸ், பொல்லார்டு, அம்பதி ராயுடு என மிரட்டல் அடி ஆட்கள் மும்பை பக்கம் இருக்கிறார்கள். பவுலிங்கில் ஹர்பஜன், மிச்சேல் ஜான்சன், பும்ரா, வினய் குமார், மெக்லனகன், டிம் சவுதி என கெத்து வீரர்கள் நிறைந்திருக்கிறார்கள். 

மும்பை vs புனே

மேலோட்டமாக பார்த்தால் மும்பை அணி, புனேவை  விட பல மடங்கு வலுவான அணியாக இருந்தாலும் கூட, மும்பைக்கு எப்போதும் STARTING TROUBLE உண்டு. ரஜினிகாந்தைப் போல, நான்கு அடி வாங்கிவிட்டுத்தான் திருப்பி அடிக்கும். அந்த சென்டிமென்ட் இந்த சீசனிலும் நடக்குமா எனத் தெரியவில்லை. கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கே தகுதி பெறாமல் வெளியேறியது மும்பை. எனவே இந்த முறை முதல் போட்டியில் இருந்தே ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கலாம். மும்பை அணி இன்றைய போட்டியில் நிச்சயம் மலிங்காவை மிஸ் செய்யும். புனே அணி முழுக்க முழுக்க பேட்டிங்கை நம்பியிருக்கிறது. மும்பை பவுலிங்கில் கடைசி ஓவர்களில் ரன் குவிப்பது கடினம். எனவே ரஹானே போன்ற வீரர்கள் அடிக்கடி ஸ்ட்ரைக் மாற்றி, சீராக ரன்களைக் குவிக்க வேண்டும். அப்படிச் செய்தால் மும்பையை வெல்வது அவ்வளவு ஒன்றும் கடினமாக இருக்காது. 

http://www.vikatan.com/news/sports/85601-will-pune-taste-the-victory-against-mumbai.html

Link to comment
Share on other sites

புனே டாஸ் வென்று பீல்டிங் தேர்வு: டு பிளிசிஸ்-க்கு இடமில்லை

 

ஐ.பி.எல். தொடரின் இன்றைய மும்பைக்கு எதிரான போட்டியில் புனே அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது. டு பிளிசிஸ்க்கு இடமில்லை.

 
 
 
 
புனே டாஸ் வென்று பீல்டிங் தேர்வு:  டு பிளிசிஸ்-க்கு இடமில்லை
 
ஐ.பி.எல். தொடர் நேற்று தொடங்கியது. 2-வது நாளான இன்றைய ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் - மும்பை அணிகள் மோதுகின்றன.

புனே அணி கேப்டன் ஸ்மித் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார். புனே அணியில் ஆடம் சம்பா, இம்ரான் தாஹிர் என இரண்டு வெளிநாட்டு லெக்ஸ்பின்னர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் டு பிளிசிஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

டோனி கேப்டனாக இருந்தபோது டு பிளிசிஸ் தொடர்ந்து வாய்ப்பு பெற்று வந்தார். பீல்டிங் செய்வதில் வல்லவர். ஆனால் ஸ்மித் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட பிறகு டு பிளிசிஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

புனே அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ரகானே, 2. மயாங்க் அகர்வால், 3. ஸ்மித் (கேப்டன்), 4. மனோஜ் திவாரி, 5. டோனி (விக்கெட் கீப்பர்). 6. பென் ஸ்டோக்ஸ், 7. ராஜத் பாதியா, 8. தீபக் சாஹர், 9. ஆடம் சம்பா, 10. இம்ரான் தாஹிர், 11. அசோத் திண்டா.

மும்பை அணியில் இடம்பிடித்த வீரர்கள் விவரம்:-

1. ரோகிர் சர்மா (கேப்டன்), 2. பார்த்தீவ் பட்டேல் (விக்கெட் கீப்பர்), 3. அம்பதி ராயுடு, 4. பொல்லார்டு, 5. நிதிஷ் ராணா, 6. பட்லர், 7. ஹர்திக் பாண்டியா, 8. குருணால் பாண்டியா, 9. மிட்செல் மெக்கிளெனகன், 10. டிம் சவுத்தி, 11. பும்ப்ரா.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/06195614/1078529/IPL-Season-2017-pune-won-toss-select-fielding-du-felisis.vpf

Link to comment
Share on other sites

புனே அணியில் அஸ்வினுக்குப் பதிலாக 17 வயதான வாஷிங்டன் சுந்தர் தேர்வு

ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியில் அஸ்வினுக்குப் பதிலாக 17 வயதான தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 
புனே அணியில் அஸ்வினுக்குப் பதிலாக 17 வயதான வாஷிங்டன் சுந்தர் தேர்வு
 
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். இவர் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணியில் இடம்பிடித்திருந்தார். தனக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஐ.பி.எல். தொடரை புறக்கணித்துள்ளார்.

முக்கிய சுழற்பந்து வீச்சாளர் இல்லாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருந்தாலும் அஸ்வின் இடத்தை ஓரளவிற்கு நிரப்புவதற்கான மாற்று வீரரை அந்த அணி தேடி வந்தது.

புனே அணியின் கேப்டன் ஸ்மித், ஆஸ்திரேலியாவின் நாதன் லயனை எடுப்பதற்கு பரிந்துரை செய்தார். அணி நிர்வானம் தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர், ஜம்மு- காஷ்மீரின் பர்வேஸ் ரசூல் ஆகியோரை ஒத்திகைக்கு அழைத்தது.

இறுதியில் தமிகழத்தின் 17 வயதான வாஷிங்டன் சுந்தரை அஸ்வினுக்கு மாற்று வீரராக தேர்வு செய்துள்ளது.

201704061851004642_sundar01-s._L_styvpf.

அஸ்வினுக்குப் பதிலாக தேர்வானது குறித்து வாஷிங்டன் சுந்தர் கூறுகையில் ‘‘புதிய உலகமான ஐ.பி.எல். தொடரில் விளையாட இருப்பதை  உண்மையிலேயே உற்காகமாக உணர்கிறேன். அஸ்வின் ஒரு ஜாம்பவான், அவர் இல்லாததால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது பெரிய விஷயம். இந்த வாய்ப்பு என்னுடைய கடின உழைப்பிற்கு கிடைத்தது’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/06185059/1078518/IPL-2017-T20-Rising-Pune-Supergiants-rope-in-Washington.vpf

Link to comment
Share on other sites

தேதி சொல்ல முடியாது: 120 சதவீதம் உடற்தகுதியுடன் களம் இறங்குவேன்- வீராட் கோலி

 

காயத்தில் இருந்து மீண்டு விளையாடும் தேதியை கூற இயலாது என்றும் 120 சதவீத உடற்தகுதியுடன்தான் திரும்பி வருவேன் என்றும் விராட் கோலி கூறியுள்ளார்.

 
தேதி சொல்ல முடியாது: 120 சதவீதம் உடற்தகுதியுடன் களம் இறங்குவேன்- வீராட் கோலி
 
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் - ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியின்போது விராட் கோலியை டி.வி. வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ரேக்கர் பேட்டி கண்டார்.

அப்போது விராட் கோலி பேசியதாவது:-

இந்திய கிரிக்கெட்டிற்குதான் முன்னுரிமை கொடுக்கிறேன். வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை எதிர்நோக்கி இருக்கிறேன். இதனால் நான் எந்தவொரு கடின முடிவையும் எடுக்க விரும்பவில்லை. மீண்டும் அணிக்கு திரும்புவதற்கான எந்த தேதியையும் நான் முடிவு செய்யவில்லை. நான் 120 சதவீதம் உடற்தகுதியை பெற்ற பின்னர்தான் அணிக்கு திரும்புவேன்.  நான் முடிந்த வரை விரைவில் மைதானத்திற்கு திரும்ப விரும்புகிறேன்.

இவ்வாறு கோலி கூறினார்.

இதனால் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்கு விராட் கோலி அவசரம் காட்டமாட்டார் என்று தெரிகிறது. ஆகவே இன்னும் சில போட்டிகளில் கோலி களம் இறங்காமல், உடற்தகுதியை நிரூபிப்பதில் அக்கறை செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/06182907/1078514/Have-not-set-a-specific-date-will-return-when-120.vpf

Link to comment
Share on other sites

ஐ.பி.எல்.: புனே அணிக்கு 185 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்

 

புனேவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். லீக் போட்டியில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்கு 185 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்

 
ஐ.பி.எல்.: புனே அணிக்கு 185 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்
 
ஐ.பி.எல். தொடர் நேற்று தொடங்கியது. 2-வது நாளான இன்றைய ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் - மும்பை அணிகள் மோதுகின்றன.

புனே அணி கேப்டன் ஸ்மித் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார். புனே அணியில் ஆடம் சம்பா, இம்ரான் தாஹிர் என இரண்டு வெளிநாட்டு லெக்ஸ் பின்னர்கள் சேர்க்கப்பட்டனர். இதனால் டு பிளிசிஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

மும்பை அணியின் பார்த்தீவ் பட்டேல், பட்லர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடினார்கள். மும்பை அணி 4.2 ஓவரில் 45 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் விக்கெட்டை இழந்தது. பார்த்தீப் பட்டேல் 14 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவரது விக்கெட்டை இம்ரான் தாஹிர் வீழ்த்தினார். அடுத்து வந்த ரோகித் சர்மா (3), பட்லர் (19 பந்தில் 38 ரன்) ஆகிய விக்கெட்டையும் தாஹிர் வீழ்த்தினார்.

அதன்பின் வந்த ராணா (34), பொல்லார்டு (27) ஓரளவிற்கு ரன்கள் சேர்க்க மும்பை அணியின் ஸ்கோர் 150 ரன்களை தொடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 19-வது ஓவரின் கடைசி பந்தை சவுத்தி சிக்சருக்கு தூக்கினார். கடைசி ஓவரை திண்டா வீசினார். இந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார் ஹர்திக் பாண்டியா. அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அவர், 5-வது பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். இதனால் மும்பை அணி கடைசி ஓவரில் 30 ரன்கள் திரட்ட மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. இதனால் புனே அணிக்கு 185 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் புனே களம் இறங்கி விளையாடி வருகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/06215636/1078541/IPL-Season-7-185-runs-target-to-pune-win.vpf

Link to comment
Share on other sites

ஐ.பி.எல்: ரகானே, ஸ்மித் அதிரடியால் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் புனே வெற்றி

பதிவு: ஏப்ரல் 07, 2017 00:01

 
 

ஐ.பி.எல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ரகானே மற்றும் ஸ்மித் ஆகியோரின் அதிரடி பேட்டிங்கால் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை புனே வீழ்த்தியது

 
 
 
 
ஐ.பி.எல்: ரகானே, ஸ்மித் அதிரடியால் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் புனே வெற்றி
 
புனே:

ஐ.பி.எல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ரகானே மற்றும் ஸ்மித் ஆகியோரின் அதிரடி பேட்டிங்கால் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை புனே வீழ்த்தியது

ஐ.பி.எல். தொடரின் 2-வது நாளான இன்றைய ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் - மும்பை அணிகள் மோதின. புனே அணி கேப்டன் ஸ்மித் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார். புனே அணியில் ஆடம் சம்பா, இம்ரான் தாஹிர் என இரண்டு வெளிநாட்டு லெக்ஸ் பின்னர்கள் சேர்க்கப்பட்டனர். இதனால் டு பிளிசிஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
201704070001233705_ipl2._L_styvpf.gif
மும்பை அணியின் பார்த்தீவ் பட்டேல், பட்லர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடினார்கள். மும்பை அணி 4.2 ஓவரில் 45 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் விக்கெட்டை இழந்தது. பார்த்தீப் பட்டேல் 14 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவரது விக்கெட்டை இம்ரான் தாஹிர் வீழ்த்தினார். அடுத்து வந்த ரோகித் சர்மா (3), பட்லர் (19 பந்தில் 38 ரன்) ஆகிய விக்கெட்டையும் தாஹிர் வீழ்த்தினார்.

மும்பை அணியின் கடைசி கட்ட அதிரடியால் கடைசி ஓவரில் மட்டும் 30 ரன்கள் திரட்ட மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. இதனால் புனே அணிக்கு 185 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய புனே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹானே தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். 34 ரன்களில் 60 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஸ்மித் சிக்சரும், பவுண்டரிகளுமாக விளாச அணியின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. 19 ஓவரின் 5 வது பந்தில் 187 ரன்களை எடுத்து புனே அணி வெற்றியை எட்டியது. ஸ்மித் 54 பந்துகளுக்கு 84 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/07000122/1078551/pune-won-by-7-wickets-against-mumbai.vpf

Link to comment
Share on other sites

சிக்சர்கள் அடித்து வென்றது அற்புதமானது: ஸ்டீவன் சுமித்

10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நெருக்கடியில் சிக்சர்கள் அடித்து வெற்றி பெற்றது அற்புதமானது என்று புனே அணி கேப்டன் ஸ்டீவன் சுமித் தெரிவித்தார்.

 
 
 
 
சிக்சர்கள் அடித்து வென்றது அற்புதமானது: ஸ்டீவன் சுமித்
 
புனே:

10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று புனேவில் நடந்த 2-வது ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்டியா 15 பந்தில் 35 ரன் எடுத்தார். அசோக் தின்டா வீசிய கடைசி ஓவரில் பாண்டியா 4 சிக்சர் அடித்து அசத்தினார்.

185 ரன் இலக்கை நோக்கி விளையாடிய புனே அணியில் ரகானே- கேப்டன் ஸ்டீவன் சுமித் ஜோடி சிறப்பாக விளையாடியது. ரகானே 60 ரன்னில் அவுட் ஆனார். அதன் பின் ஸ்டீவன் சுமித் அதிரடியாக விளையாடினார். கடைசி ஓவரில் புனேவுக்கு 13 ரன் தேவைப்பட்டது. பொல்லார்ட் வீசிய அந்த ஓவரில் ஸ்டீவன் சுமித் 4, 5-வது பந்தில் சிக்சர்கள் அடித்து வெற்றி பெற வைத்தார். அவர் 54 பந்தில் 84 ரன் எடுத்து (7 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

வெற்றியுடன் புனே அணி கணக்கை தொடங்கி உள்ளது. வெற்றி குறித்து ஸ்டீவன் சுமித் கூறியதாவது:-

201704071055118776_PB1D5045._L_styvpf.gi

“இங்கு (புனே) பேட்டிங் செய்ய அருமையான இடமாக இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக கடைசி வரை களத்தில் நின்றேன். கடைசி ஓவரை சுழற்பந்து வீச்சாளர் அல்லது பொல்லார்ட்தான் வீசினார் என்பதை அறிந்து இருந்தோம். எனவே அவரை குறிவைத்து ஆடினோம். நெருக்கடியில் சிக்சர்கள் அடித்து வெற்றி பெற்றது அற்புதமானது.

இம்ரான் தாகீர் சிறப்பாக பந்து வீசினார். அவரை முன்கூட்டியே பந்து வீச விரும்புகிறேன். மிடில் ஓவரில் விக்கெட்டுகளை வீழ்த்தியது எங்களுக்கு உதவியாக இருந்தது. இந்த ஆடுகளத்தில் பவுன்ஸ் மற்றும் மெதுவான பந்துவீச்சு இருந்தாலும் 180 ரன் இலக்கை எடுக்க கூடியது தான்” என்றார்.

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மா கூறுகையில், ஸ்டீவன் சுமித் பேட்டிங் உண்மையில் அருமையாக இருந்தது. எங்களது பீல்டிங் நன்றாக இல்லை. இந்த ஆட்டத்தில் இருந்து நிறைய கற்று கொண்டுள்ளோம்” என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/07105510/1078601/Pune-captain-smith-fabulous-sixes-hit-match-won.vpf

Link to comment
Share on other sites

கடைசி ஓவரா?- அஷோக் டிண்டாவை சிதறடித்த ஹர்திக் பாண்டியா

 

 
அஷோக் டிண்டா | கோப்பு படம்
அஷோக் டிண்டா | கோப்பு படம்
 
 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் நேற்று புனே வேகப்பந்து வீச்சாளர் அசோக் டிண்டா ஐபிஎல் கிரிக்கெட்டின் கடைசி ஓவரில் அதிக ரன்களை வாரி வழங்கிய பவுலர் என்ற சாதனைக்குரியவரானார்.

மும்பை இந்தியன்ஸ் அணி 19-வது ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்திருந்தது. பும்ராவை முதலிலேயே முடித்து தவறு செய்தது மும்பை இந்தியன்ஸ்.

அசோக் டிண்டாவும் 3 ஓவர்களில் 28 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்த நிலையில் கடைசி ஓவரில் பந்து வீச அழைக்கப்பட்டார்.

ஆனால் ஹர்திக் பாண்டியா என்ன மூடில் இருந்தார் என்று தெரியவில்லை... டிண்டாவை கேட்டுக் கேட்டு அடித்தார்.

முதல் பந்து ஆஃப் திசையில் வாகான ஃபுல்டாஸ் கவரில் சிக்ஸ். அடுத்த பந்து லெந்த் பந்து லாங் ஆஃபில் சிக்ஸ். அடுத்த பந்து வைடு ஆஃப் த கிரீசிலிருந்து ஃபுல் லெந்தில் வீசினார் அப்போது பாண்டியா பின்னால் ஹெலிகாப்டர் ஷாட்டின் மாஸ்டர் தோனி பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவர் பாணியில் கீழ்க்கையை அழுத்தி லாங் ஆனுக்கு மேல் ஒரே தூக்கு சிக்ஸ். அடுத்த பந்து தோனியின் நீட்டிய கைகளுக்கு அகப்படாமல் ஒரு பவுண்டரி, பிறகு கடைசியில் ஷார்ட் ஆஃப் லெந்த் வீசினார் அதனை லாங் ஆனில் சிக்ஸ் விளாசினார் பாண்டியா.

4 சிக்சர் ஒரு பவுண்டரியுடன் கடைசி ஓவரில் 30 ரன்கள் விளாசப்பட மும்பை இண்டியன்ஸ் 154 ரன்களிலிருந்து 184 ரன்களுக்கு ஒரே தாவாகத் தாவியது. அசோக் டிண்டா 4 ஓவர்களில் 57 ரன்கள் என்று சிதைந்தார்.

2013-ல் ஒருமுறை டிவில்லியர்ஸிடம் கடைசி ஓவரில் சிக்கி 26 ரன்கள் விளாசப்பட்டார். 2011-ல் இதே போல் கடைசி ஒவரில் 26 ரன்களை கொடுத்தார்.

இது வரை 20 முறை 20-வது ஓவரை வீசியுள்ள அசோக் டிண்டா அதில் 272 ரன்களை ஓவருக்கு சராசரியாக 13.6 ரன்கள் என்ற விகிதத்தில் கொடுத்துள்ளார்.

அதே போல்தான் புனே அணி இலக்கைத் துரத்திய போது கடைசி ஓவரில் வெற்றிக்குத் தேவை 13 ரன்கள் என்ற நிலையில் பொலார்ட் முதல் 3 பந்துகளில் 3 ரன்களையே விட்டுக் கொடுத்தார், தோனி பந்தை சரியாக டைம் செய்ய முடியவில்லை.

ஆனால் எப்படியோ ஸ்ட்ரைக்கை ஸ்மித் கையில் கொடுக்க ஸ்மித், பொலார்டை இரண்டு அபாரமான சிக்சர்களை அடித்தார். வேகம் குறைந்த பந்து ஒன்றை ஸ்மித் உண்மையில் செம வாங்கு வாங்கினார். லாங் ஆனில் சிக்ஸ் ஆனது, அடுத்ததாக ஆஃப் ஸ்டம்புக்கு நகர்ந்து கொண்டு மிட்விக்கெட் மேல் தூக்கினார் சிக்சருக்கு ஆட்டம் முடிந்தது புனே வெற்றி, ஸ்மித் 54 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 84 நாட் அவுட்.

http://tamil.thehindu.com/sports/கடைசி-ஓவரா-அஷோக்-டிண்டாவை-சிதறடித்த-ஹர்திக்-பாண்டியா/article9621198.ece?homepage=true

Link to comment
Share on other sites

தோனியிடமிருந்து ஸ்மித் ஆலோசனைகளைப் பெற்றார்: ரஹானே

 

 
கோப்பு படம்
கோப்பு படம்
 
 

ஐபிஎல் கிரிக்கெட்டில் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் ஸ்மித், முந்தைய கேப்டன் எம்.எஸ்.தோனியிடமிருந்து ஆலோசனை பெற்றதாக அஜிங்கிய ரஹானே தெரிவித்தார்.

ஆட்டம் முடிந்த பிறகான செய்தியாளர்கள் சந்திப்பில் ரஹானே கூறியதாவது:

ஸ்மித் கேப்டன்சி குறித்து இப்போதைக்கு அறுதியிட முடியாது. அவர் தோனியிடமிருந்து நிறைய ஆலோசனைகள் பெற்று வருகிறார்.

இனி வரும் போட்டிகளிலும் அவர் தோனியின் ஆலோசனைகளைப் பெறுவார் என்றே நினைக்கிறேன், ஸ்மித் ஆஸ்திரேலியாவுக்காக அபாரமாக கேப்டன்சி செய்து வருபவர் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் என்னைப்பொறுத்தவரை தோனிதான் உலகத்தரம் வாய்ந்த ஒரு லீடர்.

எப்படியிருந்தாலும் தோனியின் உதவியுடன் ஸ்மித் இந்தத் தொடரில் சிறப்பாகச் செயல்படுவார் என்பது உறுதி.

இவ்வாறு கூறினார் ரஹானே.

http://tamil.thehindu.com/sports/தோனியிடமிருந்து-ஸ்மித்-ஆலோசனைகளைப்-பெற்றார்-ரஹானே/article9621442.ece?homepage=true

Link to comment
Share on other sites

வெற்றியுடன் தொடங்குமா குஜராத் லயன்ஸ்?: கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்

 

கடந்த சீசனை போன்று வெற்றியுடன் தொடங்கும் ஆவலில் உள்ள குஜராத் லயன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை இன்று சந்திக்கிறது.

 
வெற்றியுடன் தொடங்குமா குஜராத் லயன்ஸ்?: கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்
 
ராஜ்கோட் :

10-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜ்கோட்டில் நடக்கும் 3-வது லீக்கில் குஜராத் லயன்சும், முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சும் மோதுகின்றன. கடந்த ஆண்டு உதயமான குஜராத் லயன்ஸ் அணி தனது முதலாவது சீசனிலேயே புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து வியப்பூட்டியது. ஆனால் இறுதிப்போட்டிக்கான இரண்டு தகுதி சுற்றிலும் தோல்வி அடைந்ததால் 3-வது இடத்தையே பெற முடிந்தது.

குஜராத் கேப்டன் சுரேஷ் ரெய்னா, மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதற்கு அடித்தளமாக இந்த தொடரை பயன்படுத்திக்கொள்ளும் முனைப்புடன் உள்ளார். பிரன்டன் மெக்கல்லம், வெய்ன் சுமித், ஆரோன் பிஞ்ச், தினேஷ் கார்த்திக், பவுல்க்னெர் என்று அதிரடி வீரர்கள் குஜராத் அணியில் அணிவகுத்து நிற்கிறார்கள். கடந்த ஆண்டில் ‘பவர்-பிளே’யில் 70 ரன்களுக்கு மேல் 4 முறை குவித்த ஒரே அணி குஜராத் தான்.

இதுவே அந்த அணியின் பேட்டிங் பலத்துக்கு அத்தாட்சி. தியோதர் மற்றும் விஜய் ஹசாரே கோப்பை இறுதி ஆட்டங்களில் செஞ்சுரி போட்டு மிரட்டிய தினேஷ் கார்த்திக்கின் பார்ம் நிச்சயம் குஜராத் அணிக்கு கூடுதல் போனசாக இருக்கும்.

கிரிக்கெட் வாரியத்தின் அறிவுரைப்படி முதல் சில ஆட்டங்களில் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. அதனால் இன்றைய ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜா ஆடமாட்டார். இதே போல் காயத்தால் அவதிப்படும் ஆல்-ரவுண்டர் வெய்ன் பிராவோ 20-ந்தேதிக்குள் உடல்தகுதியை எட்டுவார் என்று குஜராத் அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் கொல்கத்தாவுக்கு எதிரான இரண்டு லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற குஜராத் அணி, அந்த அணிக்கு எதிராக ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்யும் ஆவலில் காத்திருக்கிறது.

201704070926352659_suresh._L_styvpf.gif

சரியான கலவையில் வீரர்களை கொண்டுள்ள அணிகளில் இரண்டு முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்சும் ஒன்று. ஆனால் ஊக்கமருந்து சர்ச்சையால் ஓராண்டு தடை நடவடிக்கைக்குள்ளான ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல் இந்த ஆண்டு விளையாட முடியாமல் போனது கொல்கத்தாவுக்கு பெரிய இழப்பு தான். இன்னொரு ஆல்-ரவுண்டர் வங்காளதேசத்தின் ஷகிப் அல்-ஹசனும் இன்றைய ஆட்டத்தில் களம் காண வாய்ப்பில்லை. இதே போல் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவுக்கு முதல் இரு ஆட்டங்களில் ஓய்வு அளிக்கப்படுகிறது. இவை எல்லாம் கொல்கத்தாவுக்கு பலவீனம் என்றாலும் அந்த அணியின் நம்பிக்கை குறையவில்லை. கேப்டன் கம்பீர், உத்தப்பா, மனிஷ் பாண்டே, யூசுப் பதான், சூர்யகுமார் உள்ளிட்டோர் இந்த சீசனை வெற்றிகரமாக தொடங்கும் உத்வேகத்துடன் ஆயத்தமாக உள்ளனர்.

குஜராத் அணியின் பயிற்சியாளர் பிராட் ஹாட்ஜ் கூறுகையில், ‘கொல்கத்தா அணி அபாயரமானது. அந்த அணியில் கம்பீர், உத்தப்பா போன்ற சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். பந்து வீச்சில் சுனில் நரின், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ் போன்ற திறமைசாலிகள் உள்ளனர். நிச்சயம் அந்த அணி சரிவில் இருந்து எழுச்சி பெறும் நோக்குடன் இருக்கும்’ என்றார்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

குஜராத் லயன்ஸ்: பிரன்டன் மெக்கல்லம், வெய்ன் சுமித், ஆரோன் பிஞ்ச், சுரேஷ் ரெய்னா (கேப்டன்), தினேஷ் கார்த்திக், இஷான் கிஷன், ஜேம்ஸ் பவுல்க்னெர், பிரவீன்குமார், ஜகாதி, தவால் குல்கர்னி, ஷிவில் கவுசிக்.

கொல்கத்தா: கவுதம் கம்பீர் (கேப்டன்), உத்தப்பா, மனிஷ் பாண்டே, யூசுப் பதான், சூர்யகுமார் யாதவ், இஷாங் ஜக்கி, கிறிஸ் வோக்ஸ், குல்தீப் யாதவ், சுனில் நரின், டிரென்ட் பவுல்ட், கிறிஸ் லின் அல்லது காலின் கிரான்ட்ஹோம்.
 
Link to comment
Share on other sites

ஐபிஎல் நடத்தை விதிமுறையை மீறியதாக தோனிக்கு எச்சரிக்கை

 
படம்.| ஏ.எஃப்.பி.
படம்.| ஏ.எஃப்.பி.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான புனே அணியின் நேற்றைய போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிமுறையை மீறியதான குற்றச்சாட்டில் தோனிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் ஆட்ட உணர்வுக்கு எதிராக நடந்து கொண்டதாக தோனி ஒப்புக் கொண்டதால் அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று ஐபிஎல் அறிக்கை தெரிவிக்கிறது.

இத்தைய விதிமீறலில் ஆட்ட நடுவரின் முடிவே இறுதியானது. நேற்றைய போட்டியில் கெய்ரன் பொலார்ட் சரியாக எல்.பி.யானார். ஆனால் நடுவர் நாட் அவுட் என்று தீர்ப்பளித்தார், தோனி டி.ஆர்.எஸ் மேல்முறையீடு கேட்டார். டி20 கிரிக்கெட்டில் டிஆர்எஸ். கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது, இதற்காகத்தான் தோனி எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

http://tamil.thehindu.com/sports/ஐபிஎல்-நடத்தை-விதிமுறையை-மீறியதாக-தோனிக்கு-எச்சரிக்கை/article9622780.ece?homepage=true

Link to comment
Share on other sites

நீங்கள்தான் என் முதல் டெஸ்ட் விக்கெட்: பீட்டர்சனிடம் தோனி ருசிகரம்

 

 
 
தோனியிடம் ஸ்டம்ப்டு ஆன பீட்டர்சன். 2013-ம் ஆண்டு கொச்சி. | கோப்புப் படம். | பிடிஐ.
தோனியிடம் ஸ்டம்ப்டு ஆன பீட்டர்சன். 2013-ம் ஆண்டு கொச்சி. | கோப்புப் படம். | பிடிஐ.
 
 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் புனே அணிக்கும் இடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது வர்ணனையாளரான கெவின் பீட்டர்சனுக்கும் மனோஜ் திவாரிக்கும் இடையே நடைபெற்ற உரையாடலின் போது ருசிகர சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

தீபக் சாஹர் இன்னிங்சின் 2-வது ஓவரை வீசிய போது முதல் ஸ்லிப்பில் இருந்த மனோஜ் திவாரி மைக்கில் வர்ணனையாளர் பீட்டர்சனுடன் உரையாடினார்.

அப்போது திடீரென கெவின் பீட்டர்சன், மனோஜ் திவாரியிடம் தோனியை விட தான் ஒரு சிறந்த கால்ஃப் வீரர் என்று கூறினார் இதனை எம்.எஸ்.தோனியிடம் தெரிவிக்குமாறு கூறினார்.

உரையாடல் விவரம்:

பீட்டர்சன்: எம்.எஸ். தோனியின் காதில் ‘நான் அவரை விட சிறந்த கால்ஃப் வீரர்’ என்று கூறுங்கள்

மனோஜ் திவாரி: இந்தப் பந்து முடிந்தவுடன் கூறுகிறேன்.

பீட்டர்சன்: நன்றி, இதோ இப்போது வாய்ப்பு வந்துள்ளது தோனியிடம் நான் கூறியதைக் கூறுங்கள்.

மனோஜ் திவாரி தோனியிடம்: கெவின் பீட்டர்சன் தான் உங்களை விட சிறந்த கால்ஃப் வீரர் என்கிறார்.

தோனி (மைக்கில்): அவர்தான் (பீட்டர்சன்) இன்னமும் என் முதல் டெஸ்ட் விக்கெட்

பீட்டர்சன் (சிரிப்பை அடக்க முடியாமல்): அது 3-வது நடுவரிடம் ரெஃபர் செய்தது, அது நாட் அவுட்.

இதன் பிறகு இருவரும் புன்னகையுடன் உரையாடலை முடித்தனர்.

http://tamil.thehindu.com/sports/நீங்கள்தான்-என்-முதல்-டெஸ்ட்-விக்கெட்-பீட்டர்சனிடம்-தோனி-ருசிகரம்/article9622562.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.