Jump to content

ஐபிஎல் 2017 சீசன்!


Recommended Posts

நான்தான் சிறந்தவர் என்று கூறிய கெவின் பீட்டர்சனை நக்கலடித்த டோனி

கோல்ப் போட்டியில் டோனியை விட நான்தான் சிறந்தவர் என்று கூறிய கெவின் பீட்டர்சனுக்கு டோனி சரியான வகையில் பதிலடி கொடுத்தார்.

 
நான்தான் சிறந்தவர் என்று கூறிய கெவின் பீட்டர்சனை நக்கலடித்த டோனி
 
ஐ.பி.எல். தொடரில் நேற்று புனே - மும்பை அணிகள் மோதின. முதலில் மும்பை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தது. டோனி விக்கெட் கீப்பராக செயல்பட்டு கொண்டிருந்தார். மனோஜ் திவாரி முதல் ஸ்லிப் திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார்.

வர்ணனையாளராக இருந்த கெவின் பீட்டர்சன் மனோஜ் திவாரியுடன் மைக்கில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது “டோனியிடம் சொல்லுங்கள், நான்தான் அவரைவிட கோல்ப் விளையாட்டில் சிறந்தவர்’’ என்று மனோஜ் திவாரியிடம் கூறினார்.

201704071853523150_manojtiwari-s._L_styv

கெவின் பீட்டர்சன் கூறியதை மனோஜ் திவாரி இந்தியில் டோனியிடம் விளக்கினார். உடனே, டோனி ‘‘என்னுடைய முதல் டெஸ்ட் விக்கெட் அவர்தான்’’ என்று மனோஜ் திவாரியுடம் கூறினார். டோனி கூறியது மைக்கில் கேட்கவே அனைவரும் சிரித்தனர்.

டோனியை வேடிக்கையாக சீண்ட நினைத்த பீட்டர்சனுக்கு டோனி தனது பாணியில் தக்க பதிலடி கொடுத்தார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/07185351/1078733/MS-Dhoni-trolls-Kevin-Pietersen-says-he-is-still-my.vpf

Link to comment
Share on other sites

  • Replies 368
  • Created
  • Last Reply
ஐ.பி.எல். கிரிக்கெட்: கோல்கட்டா அணிக்கு 184 ரன்கள் இலக்கு
 
Kolkata Knight Riders 20/0 (2/20 ov)
Link to comment
Share on other sites

ஐ.பி.எல்., டுவென்டி-20 கிரிக்கெட்:கோல்கட்டா அணி வெற்றி

ஐபிஎல்: லின், கம்பீர் மிரட்டல்: கொல்கத்தா கலக்கல் வெற்றி!

ராஜ்கோட்டில் இன்று நடந்த ஐபிஎல் 10-வது சீசனின் மூன்றாவது போட்டியில், ரெய்னா தலைமையிலான  குஜராத் லயன்ஸ், கொல்கத்தா நைட் ரைடஸின் புயல் வேக பேட்டிங்கில் விழுந்தது.

 

ஐபிஎல்: கொல்கத்தா வெற்றி

டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் கம்பீர், பீல்டிங் எடுத்தார்.  20 ஓவர்களில் குஜராத் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்களை எடுத்தது. தினேஷ் கார்த்திக் 47 ரன்களும், ரெய்னா ஆட்டம் இழக்காமல் 68 ரன்களும் எடுத்தனர். அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா அணியின் துவக்க வீரர்களான கவுதம் கம்பீர் மற்றும் கிறிஸ் லின் முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டினார்கள். குஜராத் அணி பந்துவீச்சாளர்களின் அத்தனை பந்துகளையும் அடித்து விளாசினார்கள். 14.5 ஓவரிலேயே  இலக்கை எட்டியது கொல்கத்தா. கிறிஸ் லின் 93 ரன்களும் கவுதம் கம்பீர்  76 ரன்களும் எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

Link to comment
Share on other sites

ஐ.பி.எல். 2017: குஜராத் லயன்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா

 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் பத்தாவது சீசனின் மூன்றாவது போட்டி இன்று நடைபெற்றது. குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய போட்டியில் கொல்கத்தா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

 
 
ஐ.பி.எல். 2017: குஜராத் லயன்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா
 
காந்தி நகர்:
 
இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் போட்டிகளின் 10-வது சீசன் சில தினங்களுக்கு முன் துவங்கியது. பல்வேறு அணிகள் மோதும் இந்த போட்டி தொடரின் மூன்றாவது ஆட்டம் இன்று நடைபெற்றது. 
 
குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் லயன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. போட்டியில் முதலில் ஆடிய குஜராத் லயன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களை குவித்தது. 
 
குஜராத் அணி சார்பில் மெக்கல்லம் 35 ரன்களும், சுரேஷ் ரெய்னா அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் 68 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பின் 20 ஓவர்களில் 184 என்ற இலக்கை துரத்திய கொல்கத்தா அணி சார்பில் கௌதம் காம்பீர் மற்றும் க்ரிஸ் லின் ஆகியோர் களமிறங்கினர். 
 
201704072348465838_ipl%20%202017._L_styv
 
கடின இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ன் கௌதம் காம்பீர் மற்றும் க்ரிஸ் லின் துவக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்தனர். கௌதம் காம்பீர் 48 பந்துகளில் 76 ரன்களையும், லின் 41 பந்துகளில் 93 ரன்களை குவித்து கொல்கத்தாவின் வெற்றியை உறுதி செய்தனர். 
 
இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த இந்த ஜோடி போட்டியை 14.5 ஓவர்களிலேயே 184 ரன்களை குவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிரடியாக விளையாடிய க்ரிஸ் லின் ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/07234845/1078756/Kolkatta-Knight-Riders-Beat-Gujarat-Lions-by-10-Wickets.vpf

Link to comment
Share on other sites

தொடக்க ஜோடி 184 ரன் குவிப்பு: காம்பீர் - லின் புதிய சாதனை

பதிவு: ஏப்ரல் 08, 2017 10:34

 
 

குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க ஜோடி காம்பீர் - லின் முதல் விக்கெட்க்கு184 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தது.

 
 
 
 
தொடக்க ஜோடி 184 ரன் குவிப்பு: காம்பீர் - லின் புதிய சாதனை
 

 

குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க ஜோடி அதிரடியாக விளையாடியது. கேப்டன் காம்பீர் - கிறிஸ் லின் (ஆஸ்திரேலியா) ஜோடி 184 ரன் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தது.
201704081034138783_4emwxyzt._L_styvpf.gi

ஐ.பி.எல். போட்டியின் தொடக்க விக்கெட்டின் சாதனை இதுவாகும். இதற்கு முன்பு 2013-ல் புனே வாரியர்சுக்கு எதிராக பெங்களூர் அணி முதல் விக்கெட் ஜோடி 167 ரன் குவித்ததே சாதனையாக இருந்தது. இதை காம்பீர் - லின் ஜோடி முறியடித்து புதிய சாதனை படைத்தது.

ஐ.பி.எல். போட்டிகளில் தொடக்க விக்கெட் ஜோடியின் ‘டாப்-5’ ரன் குவிப்பு வருமாறு:-
 

201704081034138783_ghqo3p1t._L_styvpf.gi

 

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/08103413/1078798/Gambhir-and-Lynn-blaze-away-in-record-chase.vpf

Link to comment
Share on other sites

புனே அணியை சமாளிக்குமா பஞ்சாப்: இந்தூரில் இன்று பலப்பரீட்சை- தமிழக வீரர் நடராஜன் மீது எதிர்பார்ப்பு

 

 
மேக்ஸ்வெல். | கோப்புப் படம்: கே.ஆர்.தீபக்.
மேக்ஸ்வெல். | கோப்புப் படம்: கே.ஆர்.தீபக்.
 
 

ஐபிஎல் தொடரில் இன்று இரு ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் மாலை 4 மணிக்கு இந் தூரில் நடைபெறும் ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் - ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிகள் மோதுகிறது.

புனே அணி முதல் ஆட் டத்தில் மும்பை அணியை வித்தியாசத்தில் வீழ்த்திய உற்சாகத்தில் களமிறங்குகிறது. இந்த ஆட்டத்தில் அஜிங்க்ய ரஹானே, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக விளையாடி னார்கள். அதிலும் ஸ்மித் கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன் கள் தேவைப்பட்ட நிலையில் 4 மற்றும் 5-வது பந்தில் சிக்ஸர் கள் விளாசி அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இம்ரன் தகிர் ரன்குவிப்பை கட்டுப்படுத்து வதுடன் விரைவாக விக் கெட்கள் வீழ்த்துவது அணிக்கு பலமாக உள்ளது. அவருக்கு உறுதுணையாக ஆடம் ஸம்பா, ரஜத் பாட்டியா ஆகியோரும் சிறப் பாக செயல்படுகின்றனர்.

வேகப்பந்து வீச்சு பலவீன மாகவே காணப்படுகிறது. கடந்த ஆட்டத்தில் அசோக் திண்டா 4 ஓவர்களில் 57 ரன்கள் தாரைவார்த்தார். மற்றொரு வீரரான தீபக் சாஹர் 2 ஓவர்கள் வீசி 21 ரன்கள் வழங் கினார். ரூ.14.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பென் ஸ்டோக் ஸூம் எதிர்பார்த்த அளவுக்கு பந்து வீச்சில் தாக்கம் ஏற்படுத்த வில்லை. இதனால் பந்து வீச்சில் மாற்றம் இருக்கக்கூடும்.

கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி இந்த சீசனில் ஆஸ்தி ரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் தலைமையில் களமிறங்குகிறது. கடந்த இரு சீசன்களிலும் கடைசி இடத்தை பிடித்த பஞ்சாப் அணி இம்முறை சேவக்கின் ஆலோசனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்தக்கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது. மிடில் ஆர்டரில் மேக்ஸ்வெலுடன் டேவிட் மில்லர், மோர்கன் ஆகி யோர் அதிரடி வீரர்களாக இடம் பெற்றுள்ளனர். ஸ்டோனிஸ் ஆல்ரவுண்டராக உள்ளார். ரூ.3 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த இளம் வேகப் பந்து வீச்சாளரான நடராஜன் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஆல்ரவுண்டரான டேரன் சமி நேற்று பிற்பகல் வரை அணியினருடன் இணைய வில்லை. இதனால் அவர் இன்றைய ஆட்டத்தில் கள மிறங்குவது சந்தேகமே. காயம் காரணமாக முரளி விஜய் விளையாடாததால் மார்ட்டின் கப்தில் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது. சுழற்பந்து வீச்சில் அக் ஷர் படேல் நெருக்கடி தரக்கூடும். வேகப்பந்து வீச்சில் இஷாந்த சர்மா, வருண் ஆரோன் வலுசேர்க்கக் கூடும்.

அணி விவரம்:

ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), தோனி, டுபிளெஸ்ஸிஸ், ஆடம் ஸம்பா, உஸ்மான் கவாஜா, அஜிங்க்ய ரஹானே, அசோக் திண்டா, அங்குஷ் பெய்ன்ஸ், ரஜாத் பாத்தியா, அங்கித் சர்மா, ஈஸ்வர் பாண்டே, ஜஸ்கரன் சிங், பாபா அபராஜித், தீபக் ஷகர், மயங்க் அகர்வால், பென் ஸ்டோக்ஸ், டேனியல் கிறிஸ்டியன், பெர்குசன், ஜெயதேவ் உனத்கட், ராகுல் ஷகர், சவுரப் குமார், மிலிந்த் தாண்டன், ராகுல் திரிபாதி, மனோஜ் திவாரி, ஷர்துல் தாக்குர், இம்ரன் தகிர்.

கிங்ஸ்லெவன் பஞ்சாப்: கிளென் மேக்ஸ்வெல், டேவிட் மில்லர், மனன் வோரா, அக் ஷர் படேல், குர்கீரத் சிங், அனுரீத் சிங், சந்தீப் சர்மா, ஷான் மார்ஷ், விருத்திமான் சாஹா, நிகில் நாயக், மோகித் சர்மா, மார்க்ஸ் ஸ்டோனிஸ், கே.சி.கரியப்பா, அர்மான் ஜாபர், பிரதீப் ஷாகு, ஸ்வப்னில் சிங், ஹசிம் ஆம்லா, மோர்கன், ராகுவல் டிவாட்டியா, நடராஜன், மேட் ஹென்றி, வருண் ஆரோன், மார்ட்டின் குப்தில், டேரன் சமி, ரிங்கு சிங்.

இடம்: இந்தூர்

நேரம்: மாலை 4

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

http://tamil.thehindu.com/sports/புனே-அணியை-சமாளிக்குமா-பஞ்சாப்-இந்தூரில்-இன்று-பலப்பரீட்சை-தமிழக-வீரர்-நடராஜன்-மீது-எதிர்பார்ப்பு/article9624160.ece

Link to comment
Share on other sites

ஜடேஜா, பிராவோ இல்லாதது பாதிப்பு: ரெய்னா கருத்து

 

ஜடேஜா, பிராவோ போன்ற அனுபவம் வாய்ந்தவ வீரர்கள் இல்லாதது அணிக்கு பின்னடைவு என குஜராத் லயன்ஸ் அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார்.

 
 
 
 
ஜடேஜா, பிராவோ இல்லாதது பாதிப்பு: ரெய்னா கருத்து
 
ராஜ்கோட்:

காம்பீர், கிறிஸ் லின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்சை வீழ்த்தியது.

முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன் குவித்தது. கேப்டன் ரெய்னா 51 பந்தில் 68 ரன்னும் (7 பவுண்டரி), தினேஷ் கார்த்திக் 25 பந்தில் 47 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், போல்ட், பியூஸ்சாவ்லா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய கொல்கத்தா காம்பீர்-கிறிஸ் லின்னின் அதிரடியால் எளிதில் வெற்றி பெற்றது. அந்த அணி 14.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 184 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

201704081136054754_Untitled-3._L_styvpf.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிறிஸ் லின் 41 பந்தில் 93 ரன்னும் (6 பவுண்டரி, 8 சிக்சர்), காம்பீர் 48 பந்தில் 76 ரன்னும் (12 பவுண்டரி), எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

வெற்றி குறித்து கொல்கத்தா அணி கேப்டன் காம்பீர் கூறியதாவது:-
201704081136054754_q15u41n7._L_styvpf.gi

எங்களது பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். சில கேட்சுகளை நழுவவிட்டோம். இதனால் பீல்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டும்.

கிறிஸ்லின்னின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் அபாரமாக இருந்தது. அவரது அதிரடியான ஆட்டத்தால் எனக்குத்தான் சிறப்பாக ஆட வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

தோல்வி குறித்து குஜராத் லயன்ஸ் அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா கூறியதாவது:-
201704081136054754_mmqca910._L_styvpf.gi

180 ரன் என்பதே நல்ல ஸ்கோர்தான் முதல் 6 ஓவர்களில் எங்களது பந்து வீச்சு மோசமாக இருந்தது. பந்து வீச்சில் அனுபவம் வாய்ந்தவர்கள் இல்லை. ஜடேஜா, பிராவோ போன்ற அனுபவம் வாய்ந்தவர்கள் இல்லாதது அணிக்கு பாதிப்பே. 20 ஓவர் போட்டியில் ஜடேஜா மிகவும் சிறப்பா செயல்படக் கூடியவர். மிடில் வரிசையில் பிராவோ நன்றாக செயல் படக் கூடியவர். பேட்டிங்கில் இன்னும் அதிகமான திறமை தேவை.

இந்தப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து வீரர்கள் பாடம் கற்று இருப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அடுத்த ஆடத்தில் 2 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்சை நாளை சந்திக்கிறது.

குஜராத் லயன்ஸ் அணி 2-வது போட்டியில் நடப்பு சாம்பியன் சன்ரைசஸ் ஐதராபாத்தை நாளை எதிர் கொள்கிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/08113605/1078813/We-missed-Jadeja-and-Bravo-bowling-experience-says.vpf

Link to comment
Share on other sites

டெல்லி அணியுடன் இன்று மோதல்: வெற்றி முனைப்பில் பெங்களூரு

 

 
 
 
 
sss_3152216f.jpg
 
 
 

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி டேர்டேவில்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

முன்னணி வீரர்களின் காயத்தால் பின்னடைவை சந்தித்துள்ள பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில், நடப்பு சாம் பியனான ஹைதராபாத்திடம் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது.

208 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூ அணி 19.4 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆட்ட மிழந்தது. ஐபிஎல் தொடரில் அந்த அணி 23 ஆட்டங்களுக்கு பிறகு அனைத்து விக்கெட்களையும் இழந்திருந்தது. இந்நிலையில் சொந்த மண்ணில் இன்று பெங்களூரு அணி முதல் வெற்றியை பதிவு செய்ய முயற்சிக்கும். டி வில்லி யர்ஸ் முகுதுவலி காரணமாக அவதிப் பட்டு வருவதால் இந்த ஆட்டத் திலும் களமிறங்குவது சந்தேகம் தான். இதனால் வாட்சனே அணியை வழிநடத்துவார்.

கடந்த ஆட்டத்தில் கெய்ல், மன்தீப் சிங் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்த போதிலும் இன்னிங்ஸை மேற்கொண்டு கட்டமைக்க தவறினர். இதனால் இந்த ஜோடி இன்று நேர்த்தியாக விளையாட முயற்சிக்கும். பெங்களூரு ஆடுகளம் பேட்டிங் குக்கு சாதகமாக இருக்கும் என்ப தால் வாட்சன், கேதார் ஜாதவ் மிரட்டக்கூடும்.

பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் கடந்த ஆட்டத்தில் பெங்களூரு வீரர்கள் மோச மாக செயல் பட்டனர். ரூ.12 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட டைமல் மில்ஸ் ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றினார். நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான யுவேந்திரா சாஹலும் எதிர் பார்த்த அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை.

இவர்களை தவிர அனிகெட் சவுத்ரி, நாத் அர்விந்த் ஆகியோர் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் தாரைவார்த்தனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் பந்து வீச்சில் மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது. ஆடம் மில்னே அல்லது சாமுவேல் பத்ரி ஆகியோரில் ஒருவர் இடம்பெறக்கூடும்.

ஜாகீர்கான் தலைமையில் களமிறங் கும் டெல்லி டேர்டேவில்ஸ் அணி கடந்த 9 தொடர்களிலும் சொல்லும்படியான வகையில் சிறப்பான இடத்தை பெற வில்லை. முதற்கட்ட ஆட்டங்களில் அந்த அணி வெற்றி பெறும் பட்சத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும்.

ஆனால் அது இம்முறை அவ்வளவு எளிதாக சாத்தியமாகுமா என்பது தெரியவில்லை. ஏனெனில் முன்னணி வீரர்களான குயிண்டன் டி காக், டுமினி ஆகியோர் ஏற்கெனவே தொடரில் இருந்து விலகி உள்ளனர். இளம் அதிரடி வீரரான ஸ்ரேயஸ் ஐயர், சின்னம்மை பாதிப்பால் ஒரு வார காலம் விளையாட முடியாத நிலையில் உள்ளார்.

இவர்களை தவிர இலங்கையின் மேத்யூஸ், இந்தியாவின் முகமது ஷமி ஆகியோரும் முழு உடல் தகுதியுடன் இல்லை. ஜாகீர்கான் இந்த சீசனில் உள்ளூர் தொடரில் எதிலும் கலந்துகொள்ள வில்லை. இதனால் அவரது பந்து வீச்சு திறன் எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை. இளம் வீரரான ரிஷப் பந்த், மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி வீரர் கார்லோஸ் பிராத் வெயிட், நியூஸிலாந்தின் கோரே ஆண்டர்சன் ஆகியோரை நம்பியே பேட்டிங் உள்ளது. பந்து வீச்சில் ஆஸ்தி ரேலியாவின் பாட் கம்மின்ஸ், தமிழகத்தின் முருகன் அஸ்வின் வலுசேர்க்கக்கூடும்.

அணிகள் விவரம்

பெங்களூரு: ஷான் வாட்சன் (கேப்டன்), விராட் கோலி, டிவில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல், நாத் அர்விந்த், அவேஷ் கான், சாமுவேல் பத்ரி, ஸ்டூவர்ட் பின்னி, யுவேந்திரா சாஹல், அனிகெட் சவுத்ரி, பிரவீன் துபே, டிரெவிஸ் ஹெட், இக்பால் அப்துல்லா, கேதார் ஜாதவ், சர்ப்ராஸ் கான், மன்தீப் சிங், டைமல் மில்ஸ், ஆடம் மில்னே, பவன் நெகி, ஹர்ஷால் படேல், சச்சின் பேபி, தப்ராசி ஷம்சி, பில்லி ஸ்டான்லேக்.

அணி: ஜாகீர்கான் (கேப்டன்), முகமது ஷமி, சபாஷ் நதீம், ஸ்ரேயஸ் ஐயர், ஜெயந்த் யாதவ், அமித் மிஸ்ரா, கார்லோஸ் பிராத் வெயிட், ஷமா மிலிந்த், கிறிஸ்மோரிஸ், கருண் நாயர், பிரதியுஸ் சிங், ரிஷப் பந்த், சேம் பில்லிங்ஸ், சஞ்சு சேம்சன், ஆதித்யா தாரே, சயத் ஹலீத் அகமது, கோரே ஆண்டர்சன், மேத்யூஸ், ரபாடா, முருகன் அஸ்வின், பாட் கம்மின்ஸ், நவ்தீப் ஷைனி, அங்கீத் பாவ்னே, ஷசாங்க் சிங்.

இடம் : பெங்களூரு

நேரம் : இரவு 8

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

http://tamil.thehindu.com/sports/டெல்லி-அணியுடன்-இன்று-மோதல்-வெற்றி-முனைப்பில்-பெங்களூரு/article9624201.ece

Link to comment
Share on other sites

பஞ்சாப்பா... புனேவா... களமிறங்கிய தமிழக வீரர் தங்கராசு நடராஜன் கலக்குவாரா...?

IPL

இந்தூரில் இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும் புனே அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில், பஞ்சாப் கேப்டன் மேக்ஸ்வெல் டாஸ் வென்று பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளார். இந்த ஐபிஎல் சீசனில், இதுதான் பஞ்சாபுக்கு முதல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இதில், பஞ்சாப் அணிக்காக சேலம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் தங்கராசு நடராஜன் விளையாடுகிறார்.

நடராஜன்

இவருக்கு ஐபிஎல் ஏலத்தின் போது, நடராஜனுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை 10 லட்சம் ரூபாய். ஆனால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அவரை 3 கோடி ரூபாய்க்கு எடுத்திருக்கிறது. நடராஜன் யார்க்கர்கள் போடுவதில் தேர்ந்தவர் என்பதால் அவரை பஞ்சாப் அணி தேர்வு செய்தது. சாதிக்குமா இந்த சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ்... !

http://www.vikatan.com/news/sports/85829-punjab-and-pune-go-head-to-head-in-indore.html

Link to comment
Share on other sites

2017 ஐ.பி.எல். சாம்பியன் யார்? வாசகர்கள் கணிப்பு!

மூன்று நாட்களுக்கு முன்பாக 2017 ஐபிஎல் சாம்பியன் யார் என விகடன்.காம் வாசகர்களிடம் ஒரு சர்வே நடத்தியிருந்தோம். நான்கு முக்கியமான கேள்விகளோடு இடம்பெற்ற அந்த சர்வேயில் பல வாசகர்கள் பங்கெடுத்தனர். ஒவ்வொரு கேள்விக்கும், ரசிகர்கள் தந்திருந்த பதிலை பார்க்கும்போது, ரசிகர்களின் மனநிலை வெகுவாக மாறியிருப்பதை உணர முடிகிறது. ஐபிஎல் சர்வே  முடிவுகள் இங்கே 

1. ஐபிஎல் 2017 கோப்பையை  எந்த அணி ஜெயிக்கும்? 

பொதுவாக சென்னை சூப்பர் கிங்ஸ் இருந்த சமயங்களில், சிஎஸ்கேவுக்கும் - மும்பைக்கும் இடையிலான மேட்சில் அனல் தெறிக்கும். இந்த இரண்டு அணிகளுக்கும் பெரும் ரசிக பட்டாளம் உண்டு. இந்த சீசனில்  சிஎஸ்கே இல்லை. இந்நிலையில், எந்த அணி கோப்பையை ஜெயிக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு அநேகம் பேர்  சொல்லியிருப்பது மும்பை இந்தியன்ஸ் தான். எட்டு அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் மட்டுமே 21% வாக்குகளை பெற்று தனித்துத் தெரிகிறது.

இரண்டாவது இடத்தில், குஜராத் லயன்ஸ் நிற்கிறது. மூன்றாவது இடத்தில் பெங்களூரு அணி உள்ளது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை விட ஒரு வாக்கு குறைவாக பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது புனே அணி. சன் ரைசர்ஸ் மற்றும் கொல்கத்தாவுக்கு சம  வாக்குகள் விழுந்துள்ளன. டெல்லி அணிக்கு மிகக்குறைவான வாக்குகளே கிடைத்துள்ளன. 

வாசகர்கள் சர்வே - ஐபிஎல்

வாசகர்கள் வாக்கு அடிப்படையில் கோப்பையை வெல்லும் அணி என கணிக்கப்பட்டவை இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 

1. மும்பை இந்தியன்ஸ் 

2. குஜராத் லயன்ஸ் 

3. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 

4. புனே சூப்பர் ஜெயன்ட் 

5. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 

6. சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் 

7. கிங்ஸ் லெவன் பஞ்சாப் 

8. டெல்லி டேர்டெவில்ஸ் 

2. எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்? 

ஐபிஎல்லில் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதே கவுரவம் சார்ந்த விஷயமாக கருதப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டுமே தான் இருந்த எட்டு சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே அணி. அந்த சாதனை இன்றளவும் பெருமைக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த சீசனில், எந்தெந்த அணிகள் பிளே ஆஃபுக்கு தகுதி பெறும் என  ஒரு கேள்வி கேட்டிருந்தோம். கோப்பையை ஜெயிக்கும் அணிக்கான கேள்விக்கு வந்த பதிலும், இந்த கேள்விக்கான பதிலும் நிறைய மாற்றங்களைக் கொண்டிருக்கிறது. 

18 % வாக்குகளோடு மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூரு அணியும் உள்ளன. சதவிகித அடிப்படையில் சமம் என்றாலும், மும்பையை விட பெங்களூரு இரண்டு வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளது. மூன்றாவதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.  13.6 % பெற்று அடுத்தபடியாக குஜராத் அணியும், ஹைதராபாத் அணியும் உள்ளன. எனினும் வாக்குகள் அடிப்படையில் குஜராத்தை விட ஒரு வாக்கு கூடுதலாக பெற்றுள்ளது ஹைதராபாத். இதிலும் கடைசி இடம் டெல்லிக்குத் தான். 

வாசகர்கள் சர்வே - ஐபிஎல்

வாசகர்கள்  வாக்குகள் அடிப்படையில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் என கருதப்படுபவை இவை தான் :-

1. மும்பை இந்தியன்ஸ் 

2. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 

3. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 

4. சன் ரைசர்ஸ் ஹைதராபாத்.

3. இந்த சீசனில் கடைசி இடம் பிடிக்கப்போகும் அணி எது? 

மிக அதிக வாக்குகளையோடு இதில் ஜெயித்திருப்பது (!) டெல்லி  டேர்டெவில்ஸ் தான். இதற்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளை வாங்கியிருப்பது (!) கிங்ஸ் லெவன் பஞ்சாப். இந்த இரண்டு அணிகளுக்கு மட்டும் 48% வாக்குகள்  கிடைத்துள்ளன. பெங்களூரு அணி மற்றும் கொல்கத்தா அணி நிச்சயம் கடைசி இடம் பிடிக்காது என வாசகர்கள் பெரும் நம்பிக்கை வைத்திருப்பது தெரிகிறது. 

ipo3_18425.JPG

4. எந்த கேப்டனுக்கு உங்கள் சப்போர்ட் ? 

வாசகர்களின் ஏகோபித்த ஆதரவு சுரேஷ் ரெய்னாவுக்கு இருக்கிறது. குஜராத் அணியில், ஐந்து பேர்  சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர்கள் இருப்பதால் ரெய்னாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருக்கலாம் எனத் தெரிகிறது. 

வாசகர்கள் சர்வே ஐபிஎல்

சுரேஷ் ரெய்னாவுக்கு  அடுத்தபடியாக விராட் கோலி எக்கச்சக்க வாக்குகள் பெற்றிருக்கிறார். இவர்கள் இருவருக்கு மட்டுமே 55.1% வாக்குகள் கிடைத்துவிட்டன. மீதி 44.9 % வாக்குகள் தான் மற்ற கேப்டன்களுக்கு கிடைத்தன. கோலிக்கு அடுத்தபடியாக, ரோஹித் ஷர்மாவுக்கு சப்போர்ட் கிடைத்திருக்கிறது. மேக்ஸ்வெல்லுக்கு வெகு சொற்பமான ஆதரவே கிடைத்திருக்கிறது. 

5  பத்தாவது ஐபிஎல் சீஸனில் யார் அதிக ரன்கள் குவிப்பார்? யார் அதிக விக்கெட்டுகளை அள்ளுவார்? சென்னை அணி இல்லாதது குறித்து உங்கள் கருத்து என்ன உள்ளிட்டவற்றை இந்த பெட்டியில் உள்ளிடவும்.  - இது கடைசி கேள்வி. 

ரெய்னா  தான் அதிக ரன்கள் குவிப்பார் என அதிகளவிலான ரசிகர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். அவருக்கு அடுத்தபடியாக டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோரை ரசிகர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். 

டுவைன் பிராவோ, ஆசிஷ் நெஹ்ரா, ஆடம் ஜாம்பா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் அதிக விக்கெட்டுகள் வீழ்த்துவார்கள் என ரசிகர்கள் கணித்துள்ளார்கள். இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், இன்னும் ஒரு போட்டி கூட ஆடாத,  தமிழகத்தை சேர்ந்த நடராஜன் இந்த ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுங்கள் வீழ்த்துவார் என எக்கச்சக்கம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். சிஎஸ்கே இல்லாதது குறித்து சிலர் ஃபீல் செய்தாலும், சூதாட்டம் போன்ற புகாரில் சிக்கிய அணியைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்தது மகிழ்ச்சி என நிறைய பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 

சர்வேயில் பங்கெடுத்த வாசகர்களுக்கு நன்றி .

http://www.vikatan.com/news/sports/85804-readers-predict-the-winner-of-ipl-2017.html

Link to comment
Share on other sites

ஐ.பி.எல்.: புனே அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப்

மத்திய பிரதேசம் இந்தூரில் நடைபெற்ற ஐ.பி.எல். லீக் போட்டியில் புனே அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது பஞ்சாப் அணி.

 
 
ஐ.பி.எல்.: புனே அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப்
 
ஐ.பி.எல். தொடரின் இன்றைய முதல் லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் மோதின. மத்திய பிரதேசம் இந்தூரில் நடைபெற்ற இந்த போட்டியில் புனே அணி முதலில் பேட்டிங் செய்தது.

பஞ்சாப் அணியின் நேர்த்தியான பந்து வீச்சால் புனே அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்தார்.

பின்னர் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் ஹசிம் அம்லா, வோரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வோரா 14 ரன்னிலும், அம்லா 28 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த சகா 13 ரன்னிலும், பட்டேல் 24 ரன்னிலும் வெளியேற பஞ்சாப் அணிக்கு சற்று நெருக்கடி ஏற்பட்டது.

ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல், மில்லர் ஆகியோர் அதிரடியாக விளையாடினார். இதனால், பஞ்சாப் அணி 19 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் 20 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 44 ரன்களுடனும், மில்லர் 27 பந்தில் 30 ரன்கள் எடுத்தும் அவுட்டாகாமல் இருந்தனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/08194042/1078918/IPL-Punjab-beats-pune-by-6-wickets-maxwell-44-runs.vpf

Link to comment
Share on other sites

ஐ.பி.எல்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி

பெங்களூருவில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதிய போட்டியில் பெங்களூரு அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 
ஐ.பி.எல்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி
 
பெங்களூரு:

ஐ.பி.எல். தொடரின் இன்றைய 2-வது ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் வாட்சன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி கிறிஸ் கெய்ல், வாட்சன் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கெய்ல் 6 ரன்கள் எடுத்த நிலையில் மோரிஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மந்தீப் சிங் 12 ரன்னில் வெளியேற, வாட்சன் 24 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

அதன்பின் வந்த கேதர் ஜாதவ் அதிரடியாக விளையாடி 37 பந்தில் தலா 5 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 69 ரன்கள் சேர்க்க பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி பேட்டிங் செய்தது.
201704090007390676_RCB2._L_styvpf.gif
டெல்லி அணி சார்பில் ரிஷப் பந்த் மட்டும் அரைசதம் கடந்த நிலையில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களை குவித்து தோல்வியை தழுவியது. ஆட்ட நாயகன் விருது கேதர் ஜாதவிற்கு வழங்கப்பட்டது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/09000739/1078938/Royal-Challengers-Bangalore-Beat-Delhi-Daredevils.vpf

Link to comment
Share on other sites

ஐ.பி.எல்.: கொல்கத்தா அதிரடியை மும்பை சமாளிக்குமா?

வான்கடே மைதானத்தில் இன்றிரவு நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

 
 
 
 
ஐ.பி.எல்.: கொல்கத்தா அதிரடியை மும்பை சமாளிக்குமா?
 
ஐதராபாத்:

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. ஐதராபாத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணிகள் மோதுகின்றன.

நடப்பு சாம்பியனான ஐதராபாத் அணி தொடக்க ஆட்டத்தில் 35 ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி இருந்தது. இதனால் அந்த அணி குஜராத்தையும் வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. சொந்த மண்ணில் விளையாடுவதால் ஐதராபாத் அணி கூடுதல் பலத்துடன் குஜராத்தை எதிர்கொள்கிறது.

அந்த அணியில் யுவராஜ்சிங், ஹென்ரிக்ஸ், கேப்டன் வார்னர், தவான் போன்ற வீரர்கள் உள்ளனர். ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் கடந்த போட்டியில் மிகவும் நேர்த்தியாக பந்துவீசி ஐதராபாத் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

குஜராத் அணி தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோற்றது. இதனால் அந்த அணி முதல் வெற்றியை பெற கடுமையாக போராட வேண்டும்.

இந்த அணியின் பேட்டிங் நன்றாக இருக்கிறது. ஜேசன்ராய், மெக்கல்லம், ஆரோன் பிஞ்ச், வெய்ன் சுமித், கேப்டன் ரெய்னா, தினேஷ் கார்த்திக் போன்ற சிறந்த அதிரடி வீரர்கள் இருக்கிறார்கள்.

183 ரன் குவித்தும் தோற்றதால் குஜராத் அணி பந்துவீச்சில் பலவீனப்பட்டு காணப்படுகிறது. காயம் காரணமாக ஆல்-ரவுண்டர்கள் ஜடேஜா, பிராவோ இல்லாததால் பந்துவீச்சு மோசமான நிலையில் இருக்கிறது.

இன்றைய ஆட்டத்தில் இதை சரிசெய்யும் வகையில் வீரர்களின் மாற்றம் இருக்கும். வெளிநாட்டு வீரர்களில் பல்க்னெருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது . இரு அணிகளும் 3 முறை மோதியுள்ளன. இந்த மூன்று ஆட்டத்திலும் ஐதராபாத் அணியே வெற்றி பெற்று இருந்தது.

201704091124041551_2e7pzxgi._L_styvpf.gi

இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்- காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் புனே அணியிடம் தோற்று இருந்தது. தற்போது சொந்த மண்ணில் ஆடுவதால் முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.

அந்த அணியில் பார்த்தீவ் பட்டேல், ரோஸ் பட்லர், அம்பதி ராயுடு, பொல்லார்ட், ஹார்த்திக் பாண்டியா, பும்ரா, டிம் சவுத்தி உள்ளனர். இலங்கையை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா மும்பை அணியில் இணைந்து உள்ளார்.

அந்த அணியின் பந்து வீச்சு கடந்த போட்டியில் சிறப்பாக இல்லை. அதை சரி செய்ய மாற்றங்கள் இருக்கும்.

கொல்கத்தா தனது முதல் ஆட்டத்தில் (குஜராத்துக்கு எதிராக) 183 ரன் இலக்கை விக்கெட் இழப்பின்றி எடுத்து அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் காம்பீர், கிறிஸ்லின், உத்தப்பா, மனிஷ் பாண்டே, யூசுப் பதான், சுனில் நரீன், போல்ட், கிறிஸ் வோக்ஸ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். அந்த அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/09112403/1078965/IPL-2017-MI-vs-KKR-clash-today.vpf

Link to comment
Share on other sites

குஜராத்துடன் இன்று பலப்பரீட்சை: 2-வது வெற்றியை நோக்கி சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

 

 
படம்.| ஏ.எஃப்.பி.
படம்.| ஏ.எஃப்.பி.
 
 

ஐபிஎல் தொடரில் இன்று மாலை 4 மணிக்கு ஹைதரா பாத்தில் நடைபெறும் ஆட் டத்தில் நடப்பு சாம்பிய னான சன் ரைசர்ஸ் ஹைத ராபாத், குஜராத் லயன்ஸ் அணி கள் மோதுகின்றன.

ஹைதராபாத் அணி முதல் ஆட்டத்தில் 35 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியிருந்தது. அதே வேளையில் குஜராத் அணி 10 விக்கெட்கள் வித்தி யாசத்தில் கொல்கத்தா அணி யிடம் அவமானகரமான வகையில் தோல் வியை சந்தித்திருந் தது.

ஹைதராபாத் அணிக்கு யுவராஜ் சிங், ஹென்ரிக்ஸ் ஆகியோரின் அதிரடி பேட்டிங்கும் பென் கட்டிங் கின் ஆல்ரவுண்டர் திறனும் பலம் சேர்க்கிறது. அறிமுக சுழற்பந்து வீச்சளாரான ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷித் கான் முதல் ஆட்டத்தில் 2 விக்கெட்கள் கைப்பற்றி அசத்தியிருந்தார்.

குஜராத் அணியில் அனுபவ பந்து வீச்சாளர்கள் இல்லாதது பெரிய பின்னடைவாக உள்ளது. கடந்த ஆட்டத்தில் பிரவீன் குமார் மட்டுமே சிறப்பாக செயல் பட்டார். ஷிவில் கவுசிக், தவல் குல்கர்னி, டுவைன் ஸ்மித் ஆகி யோர் அதிக ரன்களை வாரி வழங்கினர். இதனால் இன்றைய ஆட்டத்தில் அதிக மாற்றங்கள் இருக்கக்கூடும். டுவைன் ஸ்மித் நீக்கப்பட்டு ஆல்ரவுண்டரான ஜேம்ஸ் பாக்னர் இடம் பெற வாய்ப்புள்ளது.

பேட்டிங்கை பொறுத்த வரையில் குஜராத் அணி பல மாகவே உள்ளது. ஜேசன் ராய், மெக்கலம், ரெய்னா ஆகியோரு டன் தினேஷ் கார்த்திக்கும் அதிரடியாக விளையாடும் திறன் உடையவராக உள்ளார்.

ஹைதராபாத் அணியின் பந்து வீச்சு பலமாக உள்ளது. ஆசிஷ் நெஹ்ரா, புவனேஷ்வர் குமார், பென் கட்டிங் ஆகியோருடன் ரஷித் கானும் பலம் சேர்க்கிறார். கடந்த ஆட்டதில் சோபிக்க தவறிய கேப்டன் டேவிட் வார்னர் சிறப் பான ஆட்டத்தை வெளிப்படுத்த முற்சிக்கக்கூடும்.

இடம்: ஹைதராபாத்

நேரம்: மாலை 4

ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

http://tamil.thehindu.com/sports/குஜராத்துடன்-இன்று-பலப்பரீட்சை-2வது-வெற்றியை-நோக்கி-சன்-ரைசர்ஸ்-ஹைதராபாத்/article9625252.ece

Link to comment
Share on other sites

கொல்கத்தாவுடன் இன்று மோதல்: மலிங்கா வருகையால் பலம் பெறுமா மும்பை

 

 
மலிங்கா. | படம்.| விவேக் பெந்த்ரே.
மலிங்கா. | படம்.| விவேக் பெந்த்ரே.
 
 

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதா னத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோது கின்றன.

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி முதல் ஆட்டத்தில் புனே அணியிடம் தோல்வி கண்டிருந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் சற்று நெருக்கடியுடன் களமிறங்குகிறது. அதேவேளையில் கொல்கத்தா முதல் ஆட்டத்தில் அபார வெற்றி பெற்ற உற்சாகத்தில் உள்ளது. அந்த அணி குஜராத் அணிக்கு எதிரான 184 ரன்கள் இலக்கை விக்கெட் இழப்பின்றி சேஸ் செய்து வெற்றி பெற்றது.

புனே அணிக்கு எதி ரான ஆட்டத்தில் மும்பை அணி வீரர்களின் தேர்வு சர்ச்சையை ஏற்படுத்தியது. அனுபவ வீரரான ஹர்பஜன் சிங் களமிறக்கப்படாமல் கிருனல் பாண்டியாவுக்கு வாய்ப்பு கொடுக்கப் பட்டது. ஆனால் அவர் பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கடைசி கட்டத்தில் வேறுவழி இல்லாமல் பொலார்டு கடைசி ஓவரை வீசும் நிலை ஏற்பட்டது. ஆனால் ஸ்மித் இரு சிக்ஸர்கள் விளாசி வெற்றியை தட்டிச்சென்றார்.

இன்றைய ஆட்டத்தில் ஹர்பஜன் சிங் களமிறங்குவார் என எதிர்பார்க் கப்படுகிறது. தேசிய அணிக்கான போட்டிகள் முடிவடைந்துள்ளதால் இலங்கையின் மலிங்கா, மும்பை அணியுடன் இணைந்துள்ளார். இத னால் பந்து வீச்சில் அந்த அணி கூடுதல் பலம் பெறக்கூடும். மலிங்கா களமிறங்கும் பட்சத்தில் டிம்சவுத்தி நீக்கப்படுவார். இதேபோல் மெக்லி னகனுக்கு பதிலாக ஜான்சன் இடம் பெற வாய்ப்புள்ளது.

இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா தொடக்க வீரரான கிறிஸ் லின், மும்பை பந்து வீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடி தரக்கூடும். கிறிஸ் லின், குஜராத்துக்கு எதிரான ஆட் டத்தில் 41 பந்துகளில் 93 ரன்கள் விளாசினார். இதேபோல் அந்த ஆட் டத்தில் 76 ரன்கள் சேர்த்த காம்பீரும் தொல்லை தரக்கூடும். சுழற்பந்து வீச்சில் பியூஸ் சாவ்லா, குல்தீப் யாதவ், சுனில் நரேன் ஆகியோரை கொண்ட மூவர் கூட்டணி நெருக்கடி தரக்கூடும்.

அணிகள் விவரம்

மும்பை:

ரோஹித் சர்மா, ஜாஸ் பட்லர், பார்த்தீவ் படேல், நிக்கோலஸ் பூரன், கிருஷ்ணப்பா கவுதம், அம் பாட்டி ராயுடு, சிம்மன்ஸ், குல்வத் ஹெஜ்ரோலியா, கரண் சர்மா, சவுரப் திவாரி, அசெலா குணரத்னே, மிட்செல் ஜான்சன், ஹர்பஜன் சிங், மிட்செல் மெக்லீனஹன், ஸ்ரேயஸ் கோபால், சித்தேஷ் லாடு, வினய் குமார், கெய்ரோன் பொலார்டு, கிருனல் பாண்டியா, டிம் சவுத்தி, மலிங்கா, ஜகதீஷா சுஜித், நித்திஷ் ரானா, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, ஜித்தேஷ் சர்மா, தீபக் பூனியா.

கொல்கத்தா:

கவுதம் காம்பீர் (கேப்டன்), டிரென்ட் போல்ட், டேரன் பிராவோ, பியூஸ் சாவ்லா, நாதன் கவுல்டர் நைல், ரிஷி தவண், சயன் கோஷ், செஷல்டன் ஜேக்சன், இஷாங்க் ஜக்கி, குல்தீப் யாதவ், கிறிஸ் லைன், சுனில் நரேன், மணீஷ் பாண்டே, யூசுப் பதான், ரோவ்மான் பொவல், அங்கித் ராஜ்புத், சஞ்ஜெய் யாதவ், ஷாகிப் அல் ஹசன், ராபின் உத்தப்பா, கிறிஸ் வோக்ஸ், சூர்ய குமார் யாதவ், உமேஷ் யாதவ்.

இடம்: மும்பை நேரம்: இரவு 8 ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

http://tamil.thehindu.com/sports/கொல்கத்தாவுடன்-இன்று-மோதல்-மலிங்கா-வருகையால்-பலம்-பெறுமா-மும்பை/article9625250.ece

Link to comment
Share on other sites

வார்னரின் படையை எப்படி சமாளிக்கப் போகிறது ரெய்னா அணி? #MatchPreview #GLvsSRH

ஐபிஎல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் சம்மரை கூலாக்கும் எனர்ஜிடிக் உணவு. இன்று மாலை  நான்கு மணிக்கு நடக்கும் போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி, ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் நடக்கிறது. 

இரன்டு அணிகளும் தங்களது முதல் போட்டியை முடித்துவிட்டன. இதில் ஹைதராபாத்  பெங்களுருவை 35 ரன்கள் வீழ்த்தியது. குஜராத் பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது.  சன் ரைசர்ஸ் பொறுத்தவரை, சென்ற வருடம் இருந்த அதே துடிப்போடு இந்த சீசனிலும் விளையாடி வருகிறது. கடந்த சீஸனில் வலுவான பந்துவீச்சை வைத்தே பாதி போட்டிகளில் எதிரணியை காலி செய்தது ஹைதராபாத். இந்த சீசனில் வலுவான பேட்டிங்கும் அமைய தெம்புடன் களமிறங்குகிறது.

குஜராத் அணி vs ஹைதரபாத் அணி

தவான் உள்ளூர் போட்டிகளில் வெளுத்து வாங்கியதால் அவர் ஹைதராபாத்துக்கு நல்ல ஓபனராக இருப்பார் என நம்பலாம். கேன் வில்லையம்சன் கடந்த போட்டியில் விளையாடவில்லை. அவர் வந்தால் ஃபீல்டிங், பேட்டிங் என இரண்டிலும் ஜொலிப்பார் என்பது ரசிகர்களின் நம்பிக்கை. யுவராஜ் திடீரென்று விஸ்வரூபம் எடுத்தது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி. ஹென்ரிக்ஸும் நல்ல ஃபார்மில் உள்ளார். பென் கட்டிங் ஆல்ரவுண்டராக ஜொலிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், முதல் போட்டியில் பவுலிங்கில் சுமாராகவே வீசினார்.

ஹைதரபாத்தை  பொறுத்தவரையில் ஒருவர் சொதப்பினால், இன்னொருவர்  தோள் கொடுத்து வெற்றி பெற வழிவகுக்கின்றனர். எந்தவொரு குறிப்பிட்ட வீரரை மட்டுமே நம்பி அணி இல்லை. இது பாசிட்டிவான அம்சம். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சொதப்பிய வார்னர், இன்னமும் தனது பார்மை மீட்டெடுக்கவில்லை.  வார்னரின் அதிரடி போதவில்லை  என்பது சன் ரைசர்ஸ்  ரசிகர்களின் பெருத்த ஏக்கம். அவருடைய இடத்தை யுவி பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கையை அளித்திள்ளது யுவியின் அரை சதம். 

பந்துவீச்சை பொருத்தவரையில், முஸ்தஃபிகுர் இல்லாதது சற்று பின்னடைவு தான். ஆனால், அந்த இடத்தை நிரப்ப இரண்டு ஆப்கானிஸ்தான்  வீரர்களை களமிறக்கு அசத்தியுள்ளது சன் ரைசர்ஸ். பெங்களூருக்கு எதிரான முதல் போட்டியில், மற்ற பவுலர்கள் சராசரியாக 10 ரன்களுக்கு மேல் விட்டுத்தர, அபாரமான பந்துவீச்சால்  சற்றே குறைவான ரன்களை விட்டுத்தந்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் ரஷீத். குஜராத் அணியில் ரெய்னா, தினேஷ் கார்த்திக் தவிர மற்றவர்கள் சுழற்பந்து வீச்சில் சுமாராகவே ஆடுவார்கள். ஆனால் வலுவான பேட்டிங் வரிசையை கொண்டுள்ள குஜராத்  லயன்ஸை  ரஷீத் கட்டுப்படுத்தினால், அவருக்கு இந்த தொடரில் அணியில் உறுதியான இடம் கிடைக்க வாய்ப்புண்டு.

 தீபக் ஹூடா ஹைதராபாதுக்கு  செல்ல பிள்ளை. ஆல்ரவுண்டராக தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக முடிப்பார் என்ற எண்ணம் வார்னருக்கு எப்போதும் உண்டு. பௌலிங் ட்ரூப்பை நெஹ்ராவும் புவியும் வழி நடத்தி குஜாராத் பேட்டிங் ஆர்டரை குலைக்க  காத்திருக்கின்றனர். 

குஜராத்  கடந்த சீசனில் குவாலிபையர் சுற்று வரை சென்று சன் ரைசர்ஸ் அணியுடன் தோல்வியுற்றது. பேட்டிங் ஆர்டரில் குஜராத் அணி வலுவாக உள்ளது. இங்கிலாந்தின் அதிரடி ஜேசன் ராயும், நியூசிலாந்தின் மெக்கலமும் தொடக்க வீரர்களாக இறங்கி அசத்துவார்கள் என்பது குஜராத் ரசிகர்களின் நம்பிக்கை. காரணம், பாகிஸ்தான் பிரிமியர் லீக் தொடரில் ஒரே அணியில் ஓபனிங் ஆடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை தொடர்ந்து `சிக்ஸ்ர் நாயகன்` ரெய்னா கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் பொறுப்புடன் ஆடி அணிக்கு பக்கபலமாக இருப்பார் என நம்பலாம். அதற்கு சான்றாய் கொல்கத்தாவுடனான போட்டியில் அரை சதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

புவனேஷ்வர் குமார் - ஆரோன் பின்ச்

அடுத்ததாக, ஃபின்ச் பவர்ப்ளேவில் பவுண்டரிகள் விளாசும் கெட்டிக்காரர். அவர் சென்ற போட்டியில் 2 சிக்ஸர்கள் விளாசி நம்பிக்கை கொடுத்து பெவிலியன் திரும்பினார். தமிழக அணியின் கேப்டன் தினேஷ் செம ஃபார்மில் உள்ளார். 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உட்பட 47 ரன்கள் குவித்து ``நான் இருக்கிறேன் என் அணிக்கு`` என்று தைரியம் சொல்கிறார். 

ஸ்மித், ஃபால்கனர் என ஆல்ரவுண்டர்கள் இருப்பது பலம் தான்.  ப்ராவோ இல்லாதது சற்று ஏமாற்றம். ஹைதராபாத்துடன் ஒப்பிடுகையில் பௌலிங்கில் குஜராத் மைனஸ் தான். ஆக, பேட்டிங்கில் தொடக்க வீரர்கள் ரன்கள் எடுக்க வேண்டும். பந்து வீச்சில் இன்னும் நிறைய கவனம் தேவை குஜராத் அணி வீரர்களுக்கு. கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் குஜராத் அணி பௌலர்கள் அனைவர் ஓவரிலும் பாரபட்சம் பார்க்காமல் ஓவருக்கு 10 ரன்கள் எடுத்து கதிகலங்க வைத்துள்ளனர் கொல்கத்தாவின் கம்பீரும் லின்னும். 

இதுவரை, குஜராத் அணியும் ஹைதராபாத் அணியும் 3 முறை மோதியிருக்கின்றன. அதில் அனைத்து போட்டியிலும் குஜராத் அணியை ஹைதரபாத் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று முறையுமே சன் ரைசர்ஸ் அணி இரண்டாவதாக பேட் செய்துதான் வென்றுள்ளது. இந்த முறை, குஜராத் டாஸ் வென்றால் முதலில் பந்து வீச்சை தேர்வுசெய்து ஆடினால் குஜராத் அணிக்கு சாதகமாக இருக்கும் என நம்பலாம். போட்டி ஹைதராபாத்தில் நடப்பதால் சன் ரைசர்ஸ் அணிக்கு கூடுதல் பலம். குஜராத் அணியில் தொடக்க வீரர்கள் ஆட்டமிழக்காமல் ஆடி ரன் சேர்த்தால் அணியின் மொத்த ஸ்கோர் உயர பெரும் காரணமாக இருக்கும். 

குஜராத் ஹைதராபாத்திற்கு எதிராக தன் முதல் வெற்றியை பதிக்க வேன்டும் என்ற நோக்கத்துடன் விளையாடும். சன் ரைசர்ஸ் அணி தன் பந்து வீச்சை கொண்டு குஜராத்தை மிரட்டும். ஆக, இரண்டு அணிகளுமே வெற்றி பெற முனைப்புடன் போராடும் இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.

http://www.vikatan.com/news/sports/85888-will-raina-co-give-tough-competition-to-sun-risers-hyderabad.html

Link to comment
Share on other sites

குஜராத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது ஐதராபாத்

ஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அணி 2-வது வெற்றியை ருசித்துள்ளது.

 
குஜராத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது ஐதராபாத்
 
ஐ.பி.எல். தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின. ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் பீல்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய குஜாராத் அணி, ஐதராபாத் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கானின் சுழலில் முக்கிய விக்கெட்டுக்களை இழந்தது. மெக்கல்லம் (5), ரெய்னா (5), பிஞ்ச் (3) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

முக்கிய மூன்று வீரர்கள் வெளியேறியதால் குஜராத் அணியால் அதிக அளவு ரன்கள் குவிக்க முடியவில்லை. ராய் (31), கார்த்திக் (30), வெயின் ஸ்மித் (37) ஆகியோர் ஒரளவு ரன்கள் சேர்த்ததால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. ரஷித் கான் 4 ஓவரில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக வார்னரும், தவானும் களம் இறங்கினார்கள். தவான் 9 ரன்கள் எடுத்த நிலையில் பிரவீண் குமார் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வார்னர் உடன் ஹென்றிக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது.

வார்னர், ஹென்றிக்ஸின் அரைசதத்தால் சன்ரைசர்ஸ் அணி 15.3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வார்னர் 45 பந்தில் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 76 ரன்களுடனும், ஹென்றிக்ஸ் 39 பந்தில் 52 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது. குஜராத் அணி இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்துள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/09192226/1079026/IPL-2017-SunRisers-Hyderabad-beats-Gujarat-Lions.vpf

Link to comment
Share on other sites

வலுவான கொல்கத்தாவை வென்று வெற்றிக் கணக்கைத் தொடங்குமா மும்பை இந்தியன்ஸ்? #MatchPreview #MIvsKKR

ஐபிஎல் தொடரின்  அணிகளுள் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் முக்கியமானவை. ரோஹித் ஷர்மா, கவுதம் கம்பீர் இருவருமே அருமையான கேப்டன்கள். இருவருமே இரண்டு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற அணிக்குத் தலைமை ஏற்றவர்கள். இந்த  அணிகளின் பிள்ளையார்சுழி இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்கள் சச்சினும் கங்குலியும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆக, அவர்கள் இருந்த காலத்தில் இருந்தே இந்த கடும் போட்டியானது இருந்துகொண்டே தான் இருக்கிறது. மற்ற அணிகளுடன் இந்த இரண்டு அணிகள் மோதுவதைவிட இவ்விரண்டு அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி மிகுந்த சுவாரசியமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

மும்பை இந்தியன்ஸ் ரோஹித் ஷர்மா vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கம்பீர்

மும்பை அணியைப் பொறுத்தவரை, சென்ற வருடம் விளையாடிய மார்டின் கப்தில் இந்த முறை மும்பை அணியில் இல்லை. சிம்மன்ஸிற்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் விளையாடமாட்டார். கடந்த சில போட்டிகளில் பேட்டிங் ஆர்டரில் சில பேட்ஸ்மேன்கள் சற்று  சறுக்கி இருந்தாலும் கேப்டன் ரோஹித், இங்கிலாந்தின் பட்லர், பார்த்திவ் படேல், ராயுடு ஆல்ரவுண்டர் பொலார்ட் என பேட்டிங் பட்டியல் வலுவாகவே  வைத்திருக்கின்றது மும்பை இந்தியன்ஸ். ரோஹித் கடந்த 6 மாதங்களாக விளையாடாமல் இருப்பதினால் அவரது ஆட்டத்தை பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர். பொலார்ட் வழக்கம் போல் சிக்ஸர்களில் அசத்துவார் என்ற நம்பிக்கையும் மும்பை ரசிகர்கள் மத்தியில் உள்ள ஆழமான உண்மை. மிடில் ஆர்டரில் களமிறங்கும் மும்பையின் ஃபேவரைட் பாய் ஹார்டிக் பாண்டியா தன் பங்கிற்கு பேட்டிங்கிலும் பௌலிங்கிலும் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது.

 பந்து வீச்சில்,  மலிங்கா இல்லாத குறையை ஜான்சன் தீர்க்கலாம்.  ஏற்கனவே, மும்பையில் விளையாடிய இவர், இடையில் பஞ்சாப் அணிக்காக விளையாடி தற்போது மீண்டும் மும்பைக்கு திருப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. மலிங்கா சமீபத்தில் தான் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார். அவர் சோர்வாக இருப்பதால், இன்றைய போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம் தான்.  மேலும், `பூம் பூம்` பும்ரா, வினய் குமார், டிம் சவுத்தி, மெக்லனகன் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களையும், சுழற்பந்துவீச்சில் ஹர்பஜன்,  கார்ன்  ஷர்மா போன்றோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். பந்து வீச்சில்  மும்பை கவனம் செலுத்தினால் நல்லது. சென்ற போட்டியில் பட்லர், பார்திவ், ஹார்டிக், நிதிஷ் ராணா ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளது அணிக்கு ப்ளஸ். கடந்த போட்டியில் சரியான சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் திணறியது மும்பை இந்தியன்ஸ். இதையடுத்து இன்று நடக்கும் போட்டியில் மீண்டும் ஹர்பஜன் களமிறங்குவார் என எதிர்பார்க்கலாம்.

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை, க்ரிஸ் லின், கம்பீர், மணிஷ் பாண்டே, உத்தப்பா, யுசூப் பதான்,  என பேட்டிங் வரிசை தரமாக இருப்பதால் மும்பைக்கு கூடுதல் கவனம் தேவை. காரணம், கம்பீர், லின் சென்ற போட்டியில் அதிரடியாக விளையாடி நைட் ரைடர்ஸ் அணிக்கு உறுதுணையாக உள்ளனர். லின் பிக்பாஷ் தொடரில் குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.  அவரின் இந்த ஐபிஎல் சீஸனின் ட்ரேட் மார்க்கின் தொடக்கம் தான் 41 பந்துகளில் 93 ரன்கள். தியோதர் கோப்பையில் மணிஷ் பாண்டேவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. யுசூப் எப்போது விஸ்வரூபம் எடுப்பார் என்று நம்மால் சொல்ல முடியாது. இவர்களை தொடர்ந்து க்ரிஸ் வோக்ஸ் அணியில் ஆல்ரவுண்டராக அசத்துவார் என நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் மேலோங்கி நிற்கிறது. ஆனால் அவர் கடந்த போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தார். எனவே அவருக்கு பதிலாக ஷகிப் அல் ஹசனை கம்பீர் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகளும் இருக்கிறது. 

சூர்யகுமார் யாதவ், பியுஷ் சாவ்லா அகியோர் அணியில் வழக்கம்போல் இடம்பெற்றுள்ளனர். ஸ்பின் ட்ரூப்பை நரேன் வழி நடத்துகிறார். இவரைத் தொடர்ந்து `சைனாமேன்` குல்தீப் மீது அனைவரின் பார்வையும் எதிர்ப்பார்ப்பும் விழுந்துள்ளது.

2008 முதல் 2016 வரை நடந்த ஐபிஎல் சீசன்களில் 18 போட்டிகளில் மும்பை அணியும் கொல்கத்தா அணியும் நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. அவற்றுள், 13 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ்  அணி வென்று நல்ல முன்னிலையில் உள்ளது.  சொந்த ஊரில் மும்பை கில்லி. இதுவரை ஆறு முறை மும்பை மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியுள்ளன. இதில் ஐந்து முறை மும்பையே வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறது. வான்கடே மைதானத்தைப் பொறுத்தவரையில், அது பேட்டிங்குக்கு சொர்க்கபுரி. எந்தவொரு கேப்டனும் இங்கே சேஸிங் செய்யவே விரும்புவார்கள். 

180க்குட்பட்ட எந்த இலக்கையும் இங்கே எளிதாக சேஸ் செய்ய முடியும். எனவே முதலில் பேட்டிங் பிடிக்கும் அணி, 210  ரன்களுக்கு மேல் குவிப்பது அவசியம். ஆக, இன்று ரன் மழை மும்பையில் பொழியும் என எதிர்பார்க்கலாம்.. 

http://www.vikatan.com/news/sports/85887-will-mumbai-indians-bounce-back-today.html

Link to comment
Share on other sites

ஐ.பி.எல்.: மும்பை வெற்றிக்கு 179 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு 179 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா.

 
 
ஐ.பி.எல்.: மும்பை வெற்றிக்கு 179 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா
 
ஐ.பி.எல். தொடரின் இன்றைய 2-வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவிற்கு எதிரான இந்த போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி கொல்கத்தா அணியின் காம்பீர், கிறிஸ் லின் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அணியின் ஸ்கோர் 4.2 ஓவரில் 44 ரன்களாக இருக்கும்போது காம்பீர் 13 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த உத்தப்பா 4 ரன்னில் வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் லின் 32 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த மணீஷ் பாண்டே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, யூசுப் பதான் (6), சூர்யகுமார் யாதவ் (17) சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

பாண்டே இறுதிவரை அவுட்டாகாமல் 47 பந்தில் 81 ரன்கள் எடுக்க, கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் சேர்த்தது. பின்னர் 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி பேட்டிங் செய்து வருகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/09215801/1079036/IPL-2017-Kolkata-Knight-Riders-179-targets-to-Mumbai.vpf

Link to comment
Share on other sites

ஐ.பி.எல்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் இடையே நடந்த போட்டியில் மும்பை அணி வெற்றி

ஐ.பி.எல்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

 
ஐ.பி.எல்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் இடையே நடந்த போட்டியில் மும்பை அணி வெற்றி
 
மும்பை:

ஐ.பி.எல். தொடரின் இன்றைய 2-வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. கொல்கத்தாவிற்கு எதிரான இந்த போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் காம்பீர், கிறிஸ் லின் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

கொல்கத்தா அணியின் ஸ்கோர் 4.2 ஓவரில் 44 ரன்களாக இருக்கும்போது காம்பீர் 13 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த உத்தப்பா 4 ரன்னில் வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் லின் 32 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த மணீஷ் பாண்டே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, யூசுப் பதான் (6), சூர்யகுமார் யாதவ் (17) சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

பாண்டே இறுதிவரை அவுட்டாகாமல் 47 பந்தில் 81 ரன்கள் எடுக்க, கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் சேர்த்தது. பின்னர் 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி பேட்டிங் செய்தது.
201704100016293158_mumbai-Indians._L_sty
துவக்கம் முதல் சீராக ரன்களை குவித்து வந்த மும்பை அணியின் துவக்க ஆட்டக்காரர்களான படேல் 30 ரன்களையும், பட்லர் 28 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். பின் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் அரை சதம் கடந்து அவுட்டானார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஆர்.ஜி ஷர்மா, கே.எசத் பாண்டியா மற்றும் பொல்லார்டு சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் எச்.எச். பாண்டியா 29 ரன்களை குவித்து மும்பை அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இவருடன் ஹர்பஜன் சிங் ஆட்டமிழக்காமல் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தார்.

இறுதியில் மும்பை அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 180 ரன்களை சேர்த்து கொல்கத்தா அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/10001629/1079045/Mumbai-Indians-Beat-Kolkata-Knight-Riders-by-4-wickets.vpf

Link to comment
Share on other sites

ஐ.பி.எல். கிரிக்கெட்: ஆட்டநாயகன் ரஷித்கான்

தனது மதிப்பை நிரூபிக்கும் வகையில் ஆடும் ரஷித்கான் நேற்றைய குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் அபாயகரமான பந்து வீச்சால் குஜராத்தை கலங்கடித்த அவரே ஆட்டநாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.

 
 
 
 
ஐ.பி.எல். கிரிக்கெட்: ஆட்டநாயகன் ரஷித்கான்
 
ஐதராபாத்:

10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் லயன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.

இந்த நிலையில் ஐதராபாத்தில் நேற்று மாலை நடந்த 6-வது லீக் ஆட்டத்தில் குஜராத் லயன்சும், நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்சும் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.

201704100918371766_Rashid-Khan._L_styvpf

ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 18 வயதான சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான், லெக்ஸ்பின் வீசக்கூடியவர். ரூ.4 கோடிக்கு வாங்கப்பட்ட அவரை அந்த நாட்டு வீரர்கள் ‘மில்லியன் டாலர் பேபி’ என்று செல்லமாக அழைக்கிறார்கள்.

தனது மதிப்பை நிரூபிக்கும் வகையில் ஆடும் ரஷித்கான் நேற்றைய குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் அபாயகரமான பேட்ஸ்மேன்கள் பிரன்டன் மெக்கல்லம், சுரேஷ் ரெய்னா, ஆரோன் பிஞ்ச் மூன்று பேரையும் எல்.பி.டபிள்யூ. முறையில் வெளியேற்றினார்.

அதாவது அவரது பந்து வீச்சு எந்த மாதிரி வருகிறது என்பதை துல்லியமாக கணிக்க முடியாமல் மூன்று பேரும் எல்.பி.டபிள்யூ. ஆகிப்போனார்கள். குஜராத்தை கலங்கடித்த அவரே ஆட்டநாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/10091836/1079076/ipl-Cricket-Man-of-the-Match-Rashid-Khan.vpf

Link to comment
Share on other sites

தந்தை இறந்த சோகத்தை மறைத்து களத்தில் ரசிகர்களை குஷிப்படுத்திய ரிஷாப் பான்ட்

ரிஷாப் பான்ட் தந்தை இறந்த சோகத்தை மறைத்து அவரோ மனதை தேற்றிக்கொண்டு களம் இறங்கியதுடன் அதிரடியாக அரைசதமும் விளாசி ரசிகர்களை பரவசப்படுத்தினார்.

 
தந்தை இறந்த சோகத்தை மறைத்து களத்தில் ரசிகர்களை குஷிப்படுத்திய ரிஷாப் பான்ட்
 
பெங்களூரு :

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்சை வென்றது. இதில் கேதர் ஜாதவின் அரைசதத்தின் (5 பவுண்டரி, 5 சிக்சருடன் 69 ரன்) உதவியுடன் பெங்களூரு அணி நிர்ணயித்த 158 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 142 ரன்களே எடுக்க முடிந்தது.

விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் (57 ரன், 36 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) கடைசி வரை போராடியும் பலன் இல்லை. ஒட்டுமொத்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணியின் 76-வது தோல்வி இதுவாகும். ஐ.பி.எல்.-ல் அதிக தோல்விகளை தழுவிய அணி டெல்லி தான். அந்த அணியின் கேப்டன் ஜாகீர்கான் கூறுகையில், ‘10 ஆட்டங்களில் 8-ல் இத்தகைய இலக்கை நாங்கள் வெற்றிகரமாக கடந்திருக்கிறோம். இந்த ஆட்டத்தில் எங்களுக்கு சரியான பார்ட்னர்ஷிப் அமையாததே தோல்விக்கு காரணம்’ என்றார்.

19 வயதான டெல்லி வீரர் ரிஷாப் பான்டின் தந்தை ராஜேந்திர பான்ட் (வயது 53) கடந்த புதன்கிழமை இரவு மரணம் அடைந்தார். இதையடுத்து ஹரித்வார் சென்ற ரிஷாப் பான்ட், தந்தைக்கு இறுதிசடங்குகளை செய்து விட்டு, வெள்ளிக்கிழமை இரவு அணியுடன் இணைந்தார். மறுநாளே (அதாவது நேற்று முன்தினம்) டெல்லியின் முதல் ஆட்டம் என்பதால் அவர் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்தது.

201704101017493238_Rishabh-Pant._L_styvp

ஆனால் அவரோ மனதை தேற்றிக்கொண்டு களம் இறங்கியதுடன் அதிரடியாக அரைசதமும் விளாசி ரசிகர்களை பரவசப்படுத்தினார். டெல்லி அணி தோற்றாலும், சோகத்தை மறைத்து களத்தில் அவர் செயல்பட்ட விதத்தை சச்சின் தெண்டுல்கர், ஷேவாக், யுவராஜ்சிங் உள்ளிட்டோர் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

டெல்லி அணியின் பயிற்சியாளர் பட்டி அப்டன் கூறுகையில், ‘அடுத்த சில நாட்கள் மட்டுமல்ல, ஐ.பி.எல். போட்டி முழுவதும் ஒட்டுமொத்த அணியும் ரிஷாப் பான்ட்டை அரவணைத்து அவருக்கு எல்லா வகையிலும் ஆதரவாக இருப்போம்’ என்றார். சக வீரர் கிறிஸ் மோரிஸ் (தென்ஆப்பிரிக்க நாட்டவர்) கூறும் போது, ‘எனது தந்தை இறந்திருந்தால் இந்த நேரம் முதல் விமானத்தை பிடித்து தாயகம் திரும்பியிருப்பேன் என்று சக வீரர்களிடம் கூறினேன்.

எனக்காக எனது தந்தை எவ்வளவோ செய்திருக்கிறார். தந்தை மறைந்த ஓரிரு நாளில் ரிஷாப் பான்ட் விளையாடி இருக்கிறார். இது பற்றி அவரிடம் கேட்ட போது, ‘இந்த மாதிரி கஷ்டமான சூழ்நிலையில் நான் விளையாடுவதையே எனது தந்தை விரும்பியிருப்பார்’ என்று பதில் அளித்தார். இது அவரது மனஉறுதியை காட்டுகிறது. வருங்காலத்தில் இந்திய அணியில் மிகப்பெரிய வீரராக ரிஷாப் பான்ட் உருவெடுக்க போகிறார்’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/10101748/1079087/Rishabh-Pant-playing-after-father-Rajendra-Pant-died.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.