Jump to content

ஆனந்த விகடன் (15.2.17) இதழில் எனது "நகரத்தின் புதிய தந்தை" கவிதை


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனந்த விகடன் (15.2.17) தழில் வெளியான  எனது "நகரத்தின் புதிய தந்தை" கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி!

 

நகரத்தின் புதிய தந்தை

 

எல்லாவற்றையும் மாற்றப்போவதாக வாக்களித்து

நாற்காலியைக் கைப்பற்றிய

நகரத்தின் புதிய தந்தைக்கு

அவர் பராமரிக்கவேண்டிய

பிள்ளைகளின் கணக்கு கொடுக்கப்பட்டது.

சாதுவானவர்கள், அடங்காதவர்கள்,

ஊதாரிகள், அயோக்கியர்களென

அனைவரின் புள்ளிவிவரம் அவரிடமிருந்தது.

அடங்காதவர்களை அவர் கலாச்சாரக் காவலர்களாக்கினார்.

ஊதாரிகளுக்கு வெகுமதிகள் கொடுத்தார்.

சாதுவானவர்களுக்கு வேலைகளைப் பகிர்ந்தளித்தார்.

அயோக்கியர்களைத் துணைக்கு வைத்துக்கொண்டார்

நகரம் முன்பைவிட நரகமானதைப் பற்றி

ஒருவரும் வாய்திறக்கவில்லை

-சேயோன் யாழ்வேந்தன்

 

(ஆனந்த விகடன் 15.2.17)

 

 

 

 

 

(எனது பதிவுகளில் படங்களை இணைக்க முடியவில்லை.  யாழ் தளத்தின்நெறியாளர் அல்லது தோழர்கள் அதற்கான வழிமுறையைக் கூறவும்)

 

(அல்லது நான் இணைக்க முயன்ற படத்தை இப்பதிவில்இணைத்துவிடவும்)

 

 

 

Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் சேயோன்

 

அங்கு 2 படங்கள் உள்ளது, ஆனால் அந்த இரண்டும் உங்கள் கவிதையோடு சம்மந்தப்பட்ட மாதிரி தெரியவில்லை...:unsure:

எந்த படம் என்று தெளிவாக குறிப்பிடுங்கள், நான் இணைத்து விடுகிறேன்.

11 hours ago, seyon yazhvaendhan said:

 

 

 

(அல்லது நான் இணைக்க முயன்ற படத்தை இப்பதிவில்இணைத்துவிடவும்)

 

 

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் சேயோன். :)
தற்போதைய சூழலை,  அழகாக கூறியது.. உங்கள் கவிதை. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 2/17/2017 at 2:39 AM, நவீனன் said:

அங்கு 2 படங்கள் உள்ளது, ஆனால் அந்த இரண்டும் உங்கள் கவிதையோடு சம்மந்தப்பட்ட மாதிரி தெரியவில்லை...:unsure:

எந்த படம் என்று தெளிவாக குறிப்பிடுங்கள், நான் இணைத்து விடுகிறேன்.

தோழர், தவறுதலாகச் சொல்லிவிட்டேன். எனது முந்தைய பதிவில் (ஆனந்த விகடன் 18.1.17 இதழில் வெளியான கவிதைகள் குறித்த பதிவு) இருந்ததை அப்படியே copy paste செய்ததில் இந்தத் தவறு நிகழ்ந்து விட்டது.    

 

முடிந்தால் 18.1.17 ஆனந்த விகடன் குறித்த பதிவில் அந்த ஒளிப்படத்தை இணையுங்கள். நன்றி

 

On 2/17/2017 at 9:49 AM, தமிழ் சிறி said:

பாராட்டுக்கள் சேயோன். :)
தற்போதைய சூழலை,  அழகாக கூறியது.. உங்கள் கவிதை. 

நன்றி தோழர்

 

On 2/17/2017 at 3:03 AM, புங்கையூரன் said:

வாழ்த்துக்கள், சேயோன்!

 நன்றி தோழர்

Link to post
Share on other sites
4 minutes ago, seyon yazhvaendhan said:

தோழர், தவறுதலாகச் சொல்லிவிட்டேன். எனது முந்தைய பதிவில் (ஆனந்த விகடன் 18.1.17 இதழில் வெளியான கவிதைகள் குறித்த பதிவு) இருந்ததை அப்படியே copy paste செய்ததில் இந்தத் தவறு நிகழ்ந்து விட்டது.    

 

முடிந்தால் 18.1.17 ஆனந்த விகடன் குறித்த பதிவில் அந்த ஒளிப்படத்தை இணையுங்கள். நன்றி

 

 

15.1.17 தானே இருக்கு ஆனந்த விகடன்...:unsure: 18ம் திகதியில் இல்லையே சேயோன்.

Link to post
Share on other sites
 • 3 weeks later...
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 2/20/2017 at 6:33 PM, நவீனன் said:

15.1.17 தானே இருக்கு ஆனந்த விகடன்...:unsure: 18ம் திகதியில் இல்லையே சேயோன்.

தோழர்,  ஆனந்த விகடன் 18.1.17 தேதியிட்டது.   அதில் "நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு", "தலைமுறை இடைவேளை" என்ற எனது இரு கவிதைகள் படத்துடன் வெளியாகியுள்ளன.  அதை 18.1.17 அன்று நான் பதிவிட்டுள்ளேன். ஆனால் படத்தை நான் upload செய்யமுடியவில்லை.  ஏன் இதுபோல் நிகழ்கிறது?   எனது பதிவுகள் எதிலும் எந்தப் படத்தையும் இணைக்க இயலவில்லை.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By மல்லிகை வாசம்
   முத்தேவியரின் புகழ் பாடிடும் இனிய இரவு
   முத்தமிழ் இன்பத்தில் மூழ்கித்திளை மனது
   மெய் ஒன்று உளதென ஆன்மா உணரும்;
   மெய்யன்போடு வையத்தை வாழ்த்தி மகிழும்.
   *********
   வண்ண நறுமலர்கள் கண்கவர் அலங்காரம் 
   எண்ணெய்  தீபம்  காண் உள்ளமும்  பிரகாசம்.
   பண்ணுடன் இசை வாணி புகழ் கேள் மனம்
   மண்ணிலே ஓர் சொர்க்கத்தை உணரும்.
   *********
   சங்கீத சுரங்கள் செவி தனைச் சேர்ந்திட 
   சிந்தையில் உதித்திடும் அழகுக் கோலமும்,
   அசைவிலா வண்ணச் சித்திரம், சிற்பம் மனதை 
   அசைவுறும் வண்ணம் செய்திடும் விந்தையும்,
   அழகுறு மங்கையர் அபிநய நடனம் காண் 
   ஆன்மா செய் நடனத்தின் அற்புத உணர்வும் 
   கலைமகள் உந்தன் இருப்பினை உணர்த்திடும் ;
   கலைத்தாய் உன்னைப் போற்றிடும் என்னுள்ளம்!
   *********
   பொருள் தேடி அலை மனம் - வாழ்வின் 
   பொருள்  மறக்கும்  நிலை வரலாம் 
   அளவிலா நிதிநலம், நிலம், இல்லம் - இவை
   இழந்து  இழிநிலை  கொள் காலம் வரலாம் 
   அழியாத  செல்வமெனத் தெளிவான  சிந்தை,
   தளராத  மனம் தந்தருள்வாய்  அலைமகளே!
   *********
   வீணை இசை கேட்டு மனம் அசைந்தாடும் மாயம் என்ன!
   வெண் தாமரை கண்டு முகம் தாமரையாய்
   மலர்வதென்ன!
   ஆண்டு பல சென்றும் என்னில் உந்தன் ஆட்சி இன்னும்  என்ன!
   வாணியின் நினைவினிலே எண்ணம் பூண்ட வண்ணக்கோலம் என்ன!
   *********
   உனை உருகிப் பாடுகையில் குரலும் இனிதாகும்
   உன் நாமம் எழுதுகையில் எழுத்தும் அழகாகும் 
   உனை நினைவில்  பசித்திருக்க சிந்தை சீராகும்
   உன் அடியார் முகம் காண அடங்கிடும் ஆணவம்
   உன் நினைவுடன் இயற்றும் கலையும் நயமுறும்
   வாணியே! உன் மீது அன்பு கொண்ட மனம்
   வையத்தை வாழ்திடும்!
   (நவராத்திரிக் காலம், 2015)
    
  • By அருள்மொழிவர்மன்
   இயற்கையின் இனிமையைத் தொலைத்து‌
   மழலையின் சிரிப்பை மறந்து‌‌‌‌
   நண்பனின் நகைச்சுவையைப் பிரிந்து‌‌‌
   பெற்றோரின் பேணலைப் புறக்கணித்து‌‌
   இரவு பகலாய் நிம்மதியைத் தொலைத்து
   பணப்பேயின் பிடரியைத் தொடர்ந்து
   பின் பலிகடாவாகி‌
   சர்க்கரையை சகவாசம் செய்யும் நாமனைவரும்‌‌‌
   இயந்திரமாய் திரியும் இவ்வாழ்க்கையில்‌‌
   சுவரில்லா சித்திரமாய்‌‌
   நரக‌ வாசம் செய்யும் நகரவாசிகளே !!!‌‌‌‌‌‌
  • By அருள்மொழிவர்மன்
   இரவில் இன்பம் தரும் உன் விரல்கள்
   பகலில் விலகிப் போக
   வருத்தமொன்றே விருப்பப்பாடமாக எடுத்த எனக்கு
   மறுஇரவு முழுநிலவாகுமோ!
  • By புங்கையூரன்
   கண் தெரியும்  தூரம் வரை…..
   காலம் தின்று..துப்பிய ….,
   எச்சங்களின் மிச்சங்களாய்….,
   செத்துப் போன வீடுகளின்,
   எலும்புக் கூடுகள் !

    
   வெறுமைகளை மட்டுமே…,
   வெளியே காட்டிய படி…,
   உண்மைகளை ஆழப் புதைத்து..,
   கண் மூடித் துயில்கின்ற…..,
   வரலாறுகளின்  சுவடுகள் !
    
   அந்தத் திருக்கொன்றை மரத்தினுள்..,
   ஆளப் புதைந்திருக்கும் …..,
   வைரவ சூலம் மட்டும்….,
   எத்தனை வடை மாலைகளையும்,
   எத்தனை தேசிகாய்களையும்,….,
   தன் மீது சுமந்திருக்கும் ?
    
   அந்தக் கருக்குவாச்சி மரம்,
   எத்தனை காதலர்களின்,
   இரவு நேரச் சந்திப்புக்களை…,
   விரக தாபங்கள் சிந்தும்,
   கற்பூர சத்தியங்களை….,
   தன்னுள் புதைத்திருக்கும் ?
    
   காவோலைச் சேலை இழந்து….,
   கதியால் கரங்களால் …,
   தங்கள் மானம் காத்து..,
   காவிளாய்ச் செடிகளின் விரிப்பில்,
   மறைந்து கிடக்கிறதே நிலம் !
    
   ஒரு காலத்தில்,,
   கரும் பேட்டுக் குஞ்சுகளாய்…,
   வரம்புகளில் மரக்கறிகளும்,
   வளவு நிறைந்த மிளகாய் மரங்களுமாய்.,
   நான் செய்த தோட்டம் !
    
   நத்தை பொறுக்கும் செண்பகங்களும்….,
   மிளகாய் கடிக்கும் கிளிகளுமாய் …,
   கல கலத்த தோட்டம்….!
    
   எனது மகன் …,
   உழக்கிய துலா கூட….,
   இன்னும் நிமிர்ந்தே நிற்கிறது !
    
   மகன் கனடாவிலும்,,,.
   மகள் ஜெர்மனியிலும…..!
    
   பிள்ளைப்பெறு …..,
   பாக்கப் போன மனுசியும்,
   பிள்ளையள் பாவம் எண்டு….
   அங்கையே நிண்டுட்டுது !
    
   அக்கினி சாட்சியான.....,
   வசிட்டர் வடக்கிலும்,
   அருந்ததி தெற்கிலுமாய்....,
   ஆரிட்டைப் போய் அழுகிறது ?
    
   உனக்கென்னப்பா பிரச்சனை எண்டு....,
   ஊரே பொறாமைப்  படுகுது !
    
   எனக்கென்ன குறைச்சல் ?
   ஆஸ்பத்திரி மாதிரி..,
   எல்லா மருந்துகளும்...,
   அலுமாரிக்குள்ள அடுக்கி இருக்கு !
   ஆரோ ஒருத்தி வந்து..,
   அடிக்கடி  சமைப்பாள் !,
    
   பொறுங்கோ….வாறன் !
   வல்லுவத்துக்குள்ள போன் சிணுங்குது !
    
   ஒரு பேரனோட இங்கிலிசும்…,
   மற்றப் பேரனோட ஜெர்மனும்..,
   தமிழில கதைக்க வேணும் !
    
   எனக்கென்ன குறைச்சல் ?
    
 • Topics

 • Posts

  • இப்பொழுதுதான் பார்த்தேன், படித்தேன் .....ஒரு அருமையான நகைச்சுவையுடன் கூடிய துப்பறியும் கதை.....நீங்கள் தொடர்ந்து இங்கு எழுதுங்கள்....மேலும் இந்தக் கதையைக்கூட "யாழ் அகவை 23 க்கு" நகர்த்தும்படி நிர்வாகத்திடம் கோரலாம்.....நிறையபேர் வாசித்து கருத்து சொல்வார்கள்......!  🌹  👍 உங்கள் வரவு நல்வரவாகுக.......!
  • காலங்கள் கடந்திடினும், ஆழப் புதைந்த.நினைவுகளைக்..  கிழறிப் பார்க்கின்றது, கவிதை ! கற்றாளை இதயங்கள்..., சொரிந்திடும் கண்ணீர், வற்றாத.நதியாகி...,, குறைப் பிரசவக் காதல்களின், கல்லறைகளை.நனைக்கட்டும்!
  • 17)    ஏப்ரல் 23rd, 2021, வெள்ளி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - சென்னை     PBKS  vs  MI       4 பேர் பஞ்சாப் கிங்ஸ்  வெல்வதாகவும்   10 பேர் மும்பை இந்தியன்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.   பஞ்சாப் கிங்ஸ் ஈழப்பிரியன் கல்யாணி நந்தன் கிருபன்   மும்பை இந்தியன்ஸ் சுவி குமாரசாமி வாதவூரான் அஹஸ்தியன் சுவைப்பிரியன் எப்போதும் தமிழன் வாத்தியார் பையன்26 நுணாவிலான் கறுப்பி   இன்று நடக்கும் போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🤾‍♂️🤸‍♂️
  • அடிக்குற வெயிலுக்கு இளநீர் யூஸ்.👌  
  • தங்களது  பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி புங்கையூரான். நான் எழுதுவதை நிறுத்தி 7 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இவையெல்லாம் திருமணமான முன்னரான காலத்தில் முகநூலில் எழுதிய கதைகள். யாழ்களத்தின் கருத்துக்களை பெறுவதற்காக இங்கே பதிவிட்டிருக்கிறேன். தொடர்ந்து எழுதுவேன். வரவேற்பிற்க்கு நன்றி ஈழப்பிரியன். இனி வரும் நாட்களில் எழுதி குவிப்பதாக உத்தேசம். உங்கள் கருத்து உற்சாகம் அளிக்கிறது. யாழ் களத்தில் இந்த கதையை பகிர்ந்து நீண்ட நேரமாக கருத்துக்கள் ஏதும் வராததால் "வாசகர்களுடைய ரசனைக்கும் எனது எழுத்துக்களுக்கும் வெகுதூரம்" என எண்ணியிருந்தேன். வரவேற்பிற்க்கு நன்றி தமிழ்த்தேசியன். 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.