• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • அவனவன் இப்படியான இடங்களுக்கு போய் வந்து படங்களோடை பயணக்கட்டுரை/ஆவண கட்டுரை எண்டு புத்தங்கள் எல்லாம் அச்சடிச்சு விக்கிறாங்கள்/வெளியிடுறாங்கள். இஞ்சை என்னடாவெண்டால் அருமந்த படங்களை எந்தவொரு விளக்கங்களும் இல்லாமல் குப்பை மாதிரி ஒட்டி வைச்சிருக்கு. இப்பிடி வரலாற்று சிறப்பு மிக்க படங்கள் பலது கூகிள்ளை தேடினாலும் கிடைக்காது. இன்னும் பிந்தேல்லை.....ஒவ்வொரு படங்களுக்கும்  விளக்கமும் கருத்துக்களும் எழுதினால் சிறப்பும் பெருமதிப்பும் பெறும்.
    • நான் மீராவின் பார்வையில் சரியென்றாலும் என்ற அர்த்தத்தில் கூறினேன். மீராவின் கருத்துடன் நான் உடன்படுவதாக அல்லது எதிர்ப்பதாக கொள்ளவேண்டியதில்லை.  நாகரீகமாக கருத்திடலாம் என்பதுதான் என் கூற்றின் சாரம்.
    • மிருசுவிலில் 8 பொதுமக்களைப் படுகொலை செய்த  இராணுவ அதிகாரிக்கு உயர் நீதிமன்றால் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டநிலையில் அவர் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்கவேண்டும் எனக் கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களின் உறவுகள் இந்த முறைப்பாட்டை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் இன்று வழங்கினர். 2000ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 19ஆம் திகதி, மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்க்கச் சென்ற 8 பொதுமக்கள், இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு, கழிப்பறைக் குழிக்குள் போடப்பட்டனர். அவர்களுடன் சென்ற மற்றொருவர் தப்பிச் சென்று வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், சடலங்கள் மீட்கப்பட்டதுடன், ஐந்து படையினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. ட்ரயல் அட் பார் முறையில் நடந்த இந்த வழக்கில், 2015 ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் திகதி, ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க என்ற இராணுவ அதிகாரிக்கு தூக்குத் தண்டனை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. ஏனைய நான்கு படையினரும் போதிய சாட்சிகளில்லை என விடுவிக்கப்பட்டனர். இந்த தீர்ப்புக்கு எதிராக, ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார். இந்த மனு முன்னாள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, நீதியரசர்கள் புவனேக அலுவிகார, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜெயவர்த்தன, முர்து பெர்னான்டோ ஆகிய ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வினால் விசாரிக்கப்பட்டது. இதையடுத்து 2019 மே 20ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதே என்று உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்களும் ஏகமனதாக அறிவித்துள்ளனர். சம்பவத்தை நேரில் கண்ட மகேஸ்வரன் என்பவரின் தெளிவான சாட்சியங்களின் அடிப்படையில் இந்த தீர்ப்பை உறுதி செய்வதாக உயர் நீதிமன்றம் கோடிட்டுக் காட்டியிருந்தது. இந்த நிலையில் ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் இரகசியமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்று ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கடந்த வாரம் தகவல் வெளியிட்டிருந்தார். அதனையடுத்தே படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் தமக்கு அரசு இழப்பீடு வழங்கவேண்டும் என்று தமது உறவுகளுக்கு அரச வேலை தரவேண்டும் என்று கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். “எமது உறவுகளின் உயிரை மீண்டும் பெற்றுத் தர முடியாது. ஆனால் தற்போது  இறந்தவர்களின் குடும்பங்களில்  உள்ளவர்களுக்கு அரச வேலை வாய்ப்பினையும் இழப்பீட்டையும் பெற்று தருமாறு கோரி முறைப்பாடொன்றை பதிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/73623
    • ஆனா அதான் முள்ளிவாய்க்காலுக்கான யதார்த்தம் என்பதை விளங்காதது ஏனோ?
    • தவறென்றால்  மரியாதையும்  முன்னைய அர்ப்பணிப்புக்களும்  எவ்வாறு  கனம் செய்யப்படும்???