Jump to content

ஊர் போய் வந்தவனின் அனுபவங்கள்.. 42.

Recommended Posts

6 hours ago, குமாரசாமி said:

எனக்கும் மற்றும் சிலருக்கும் எதுவும் நடக்கவில்லை என்பதால் உங்களுக்கும் நடந்திருக்காது......நடக்கவும் கூடாது என்பதுதான் லொஜிக் வாதம்.:cool:

இல்லையே, நெடுக்ஸ் ஒரு தவறும் செய்யாத போதும்  இலங்கை இமிகிரேசன் காரனுக்கு வெருண்டு லஞ்சம் கொடுக்கவில்லை என்று  யாருமே கூறவில்லை. அவர் ஒருவருக்கு மட்டும் தான் நான் அறிய இப்பிடி நடந்திருக்கு என்று சொல்லுறன்.

அண்மைய செய்தியில் பிராங்க் பேர்ட் விமான நிலையத்தில் இந்தியப் பெண்ணின் ஆடைகளை களையச் சொல்லிப் பிரச்சனை சுஸ்மா வரைக்கும் போட்டுது. ஒருநாளைக்கு எத்தனை இந்தியர் போய்வாற இடத்தில இன்னொரு இந்தியருக்கு இது நடப்பதற்கான நிகழ்தகவு என்ன? அல்லது உந்தச் சம்பவத்தையும் நிழலி அண்ணாவிற்கு ஏற்பட்ட அனுபவத்தையும் வச்சுக்கொண்டு  பிராங் போர்ட் விமான நிலையத்தினை கூடுமானவரை தவிருங்கோ என்று கூற முடியுமா?

Link to comment
Share on other sites

  • Replies 349
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நானும் மூணு தடவை போய் வந்தேன் . ஒரு பிரச்சனையும்  இல்ல ,கடைசியா  போன வருஷம் போனபோது  ஒரு போத்தல்  வாங்கி தா எண்டாங்க  சரின்னு ஒன்னு வாங்கி கொடுத்தேன்.ஆனா முதல் இரு முறையும் போனது 1999  ஆணி மாதம் ஒரு முறை ,மார்கழி  ஒருமுறை 

கூட இருந்து  மாவீரர்களான  நண்பர்கள்  வீடுகள் எல்லாம் போய் வந்தேன் .

Link to comment
Share on other sites

7 minutes ago, நந்தன் said:

1999 ஆ ரொம்ப பழைய கதை பாஸ் கிட்டடியில போனனீங்களோ?

போத்தல் கேட்டது கஸ்டம்ஸ் காரனோ? இமிகிரேசனோ? கஸ்டம்ஸ் காரன் முன்பொரு முறை எனது சிவாஸை ஆட்டையைப் போட வெளிக்கிட்ட கதை சொன்னனான் தானே. போற வாரவனிட்ட போத்தல் பிச்சை எடுக்கிறதே அவங்களிண்ட வேலை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

ஆராய் இருக்கும்...confused0006.gif

இப்ப ஏன் இந்த ஆராய்ச்சி  நீங்கள் வந்த நீங்களா என்ன??<_<:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, முனிவர் ஜீ said:

இப்ப ஏன் இந்த ஆராய்ச்சி  நீங்கள் வந்த நீங்களா என்ன??<_<:cool:

ஏன் நான் வரக்கூடாதோ? ஆனைப்பந்தி பிள்ளையார் கோவிலிலை இரண்டுவருசம் கந்தசஷ்டி உபவாசவிரதம் இருந்திருக்கிறன் ராசா :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ஏன் நான் வரக்கூடாதோ? ஆனைப்பந்தி பிள்ளையார் கோவிலிலை இரண்டுவருசம் கந்தசஷ்டி உபவாசவிரதம் இருந்திருக்கிறன் ராசா :)

அது பல வருடங்களுக்கு முன்பு :unsure:

Link to comment
Share on other sites

18 minutes ago, முனிவர் ஜீ said:

அது பல வருடங்களுக்கு முன்பு :unsure:

மேலதிகமாக இன்னுமொருவர் இங்கேயே பெரும்பாலும் சுத்தி திரிவது இப்பதான் ஞாபகத்துக்கு வந்தது.

குசா அண்ணை பாஞ்சை விட்டாலும் நாலுபேரைக் கண்டு பிடிக்கணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நந்தன் said:

நானும் மூணு தடவை போய் வந்தேன் . ஒரு பிரச்சனையும்  இல்ல ,கடைசியா  போன வருஷம் போனபோது  ஒரு போத்தல்  வாங்கி தா எண்டாங்க  சரின்னு ஒன்னு வாங்கி கொடுத்தேன்.ஆனா முதல் இரு முறையும் போனது 1999  ஆணி மாதம் ஒரு முறை ,மார்கழி  ஒருமுறை 

கூட இருந்து  மாவீரர்களான  நண்பர்கள்  வீடுகள் எல்லாம் போய் வந்தேன் .

நல்ல  செய்தி

Link to comment
Share on other sites

எனக்கு கிடைத்த அனுபவம் மற்றவர்களுக்கு கிடைக்கும் என்று நான் கூறவில்லை. இலங்கை போர் நடைபெற்ற பூமி, காயங்கள் முழுதாய் ஆற யுகங்கள் செல்லலாம். எனது ஒப்பீடு முன்பு நான் அங்கு வாழ்ந்தபோது பெற்ற அனுபவங்களுக்கும் தற்போதைய வருகையின்போது கிடைத்தனவற்றுக்குமான சிறிய அளவான ஒப்பீடு மட்டுமே.

தலை மீது தற்போது குண்டுவீச்சு விமானங்கள் பறந்து, பறந்து குண்டுமாரி பொழியவில்லை. அங்குமிங்குமாய் தற்போது ஷெல் குண்டுகள் வந்து வீழவில்லை. விட்டுவிட்டு துப்பாக்கிக்குண்டு சத்தங்கள் கேட்கவில்லை. ஒவ்வொரு செக்கனும் நான் சாகப்போகின்றேனா சாகப்போகின்றேனா என்ற மரணபீதியில் நடுங்கும் மனநிலை ஏற்படவில்லை. வவுனியா, கொழும்பில் நின்றபோது பொலிஸ் ரிப்போர்ட் எடுக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. பொலிசாரினால் எதேச்சையாக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் எனும் பயம் ஏற்படவில்லை.  யாராவது பலாத்காரமாக பிடித்து தமது குழுக்களில் சேர்த்துவிடுவார்களோ எனும் பயம் இருக்கவில்லை. ஆறுமாதங்கள் பாஸ் எடுத்து ஆளை பிணை வைத்து வெளியேறி மீண்டும் குறிப்பிட்ட காலத்தினுள் செல்லாதபடியால் விசாரணைகளுக்கு உள்ளாவேன் எனும் பயம் ஏற்படவில்லை.

முன்பு அங்கே வாழ்ந்த வாழ்க்கையை விட மிகவும் சுதந்திரமான வாழ்க்கையை வாழக்கூடிய வாய்ப்பை அங்கே காண முடிந்தது. இலங்கையில் பாலும், தேனும் ஓடுவதாய் நான் கூறவில்லை. ஆனால், முன்பு காணாத‌ ஓர் புதிய பூமியினுள் காலடி வைத்த அனுபவம் ஏற்பட்டுள்ளது. நான் எமது அயலினுள் சென்றபோது காலிற்கு நான் பாதணிகள் அணியவில்லை. கற்களும், முட்களும் நிறைந்த பற்றைக்காணிகளில் எமது ஊர் மண் என் கால்களில் படுவது மனத்திருப்தியை தந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் என்ற ரீதியில் இந்த நிமிட....இன்றைய சுகத்தைதான் மக்கள் விரும்புகின்றனர் என்பது தெட்டத்தெளிவாகின்றது. நாளையை தமிழ் சமுதாயத்தை பற்றி யாரும் சிந்திக்கவில்லை.
இதற்குத்தானா இவ்வளவுகால போராட்டமும் அழிவுகளும்???????
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கலைஞன் said:

ஆனால், முன்பு காணாத‌ ஓர் புதிய பூமியினுள் காலடி வைத்த அனுபவம் ஏற்பட்டுள்ளது. நான் எமது அயலினுள் சென்றபோது காலிற்கு நான் பாதணிகள் அணியவில்லை. கற்களும், முட்களும் நிறைந்த பற்றைக்காணிகளில் எமது ஊர் மண் என் கால்களில் படுவது மனத்திருப்தியை தந்தது.

இதுதானா விஷயம் நான் அந்த பாடசாலைக்கட்டிடப்பகுதியில் செருப்பை போட்டு நடங்கோ என்று சொல்லியும் அதை போடாமல் நடந்தது இதுக்குத்தானா  உங்களுக்கு ஒரு சல்யூட் கலைஞன்

7 hours ago, குமாரசாமி said:

தமிழர் என்ற ரீதியில் இந்த நிமிட....இன்றைய சுகத்தைதான் மக்கள் விரும்புகின்றனர் என்பது தெட்டத்தெளிவாகின்றது. நாளையை தமிழ் சமுதாயத்தை பற்றி யாரும் சிந்திக்கவில்லை.
இதற்குத்தானா இவ்வளவுகால போராட்டமும் அழிவுகளும்???????
 
ம்ம் கு.சாமி அண்ணை இதை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்  நடை முறை உன்மையது மக்கள் விரும்புகிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, முனிவர் ஜீ said:

ம்ம் கு.சாமி அண்ணை இதை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்  நடை முறை உன்மையது மக்கள் விரும்புகிறார்கள் 

விருப்பம் என்பதற்குள்  வருமா?

வேறு வழியில்லை என்பதற்குள் வருமா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

விருப்பம் என்பதற்குள்  வருமா?

வேறு வழியில்லை என்பதற்குள் வருமா??

இளைய சமுதாயம் விருப்பம் என்ற வகைக்குள்ளும் 

வாழ்ந்து கழிந்த சமுதாயம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் வேறு வழியில்லை என்ற பதத்திற்குள் அடக்கலாம் அண்ண

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, முனிவர் ஜீ said:

இளைய சமுதாயம் விருப்பம் என்ற வகைக்குள்ளும் 

வாழ்ந்து கழிந்த சமுதாயம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் வேறு வழியில்லை என்ற பதத்திற்குள் அடக்கலாம் அண்ண

இதில நீங்க எந்த வகைக்குள்??

இப்பொழுதெல்லாம்

ஆர்ப்பாட்டங்கள்

மற்றும் எழுக தமிழ் போன்றவற்றில்  இளையவர்கள் தானே அதிகம் பங்கெடுக்கிறார்கள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

இதில நீங்க எந்த வகைக்குள்??

இப்பொழுதெல்லாம்

ஆர்ப்பாட்டங்கள்

மற்றும் எழுக தமிழ் போன்றவற்றில்  இளையவர்கள் தானே அதிகம் பங்கெடுக்கிறார்கள்??

என்னை பொறுத்தவரைக்கும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் விருப்பமோ அல்லது விருப்பமில்லையோ 

அதே இளையவர்களால் ஒரு மணீ நேர கரண்ட் கட்டானால் குய்யோ மிய்யோ என கத்துகிறார்கள்   அதே ஒட்டு மொத்த இளையவர்களால் ஏன் இன்னும் வலு சேர்க்கும் வகையில் அங்கே உண்ணாவிரதம் , கோப்பிலவு ,காணாமல் போன மக்களுக்காக ஒட்டு மொத்தமாக பேரணி நடத்த முடியவில்லை அதற்குள் சில கொஞ்சம் பேர்த்தான் அடக்கம் அவர்களும் சில காலங்கள் கடந்த பின் மாறுவார்கள் ,மாறிவிடுவார்கள் இது ஒரு நிகழ் தகவே மாறலாம் அல்லது மாறாமல் போகலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முனிவர் ஜீ said:

நமது விருப்பங்களும் ஆசைகளும் எதிர்பார்ப்புக்களும்

இலங்கையில் எதையும் முடிவு செய்வதில்லை

அவ்வாறு செய்திருந்தால் நானும் அங்கு தான் இருந்திருக்கணும்

சிங்களத்தின் போக்கும் குணமும் 

அரசியலுக்கான துரும்புகளும் தான் தமிழர்களின் எதிர்காலத்தையும் போக்கையும் இதுவரை தீர்மானித்தன

தள்ளின

இனியும் அது தான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

மாறலாம் அல்லது  மாறாமல் போகலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, முனிவர் ஜீ said:

மாறலாம் அல்லது  மாறாமல் போகலாம் 

மாறணும் என்பது தமிழரின் எதிர்பார்ப்பு

மாறாமல் இருந்தாலே சிங்களத்துக்கு வாக்கு....

பார்க்கலாம்

நல்லதே நடக்கட்டும் 

நன்றி  சகோதரா..

Link to comment
Share on other sites

22 hours ago, குமாரசாமி said:

தமிழர் என்ற ரீதியில் இந்த நிமிட....இன்றைய சுகத்தைதான் மக்கள் விரும்புகின்றனர் என்பது தெட்டத்தெளிவாகின்றது. நாளையை தமிழ் சமுதாயத்தை பற்றி யாரும் சிந்திக்கவில்லை.
இதற்குத்தானா இவ்வளவுகால போராட்டமும் அழிவுகளும்???????
 
உங்கள் ஆதங்கம் புரிகின்றது. குமாரசாமி அண்ணா.

கீழுள்ள இந்த இணைப்பை பாருங்கள்.

இது நான் ஏழு வருடங்களின் முன் எழுதிய உண்மைக்கதை. இந்தக்கதையின் நாயகனே எனது மாங்கல்யத்தை (தாலிக்கொடி) கொண்டு மனைவி, பிள்ளைகளுடன் எனது திருமணத்துக்கு வந்து இருந்தான். அவனை நான் 22 வருடங்களின் பின் மீண்டும் சந்தித்தேன். நான் தாலிக்கொடியை இங்கிருந்து காசு அனுப்பி அங்கு செய்வித்தேன். அவனே நகைக்கடைக்கு சென்று என் சார்பில் பொன்னுருக்கு செய்து பின்னர் திருமண நாளன்று பத்திரமாய் தாலிக்கொடியை கொண்டு வந்து என்னிடம் சேர்ப்பித்தான். 

அவன் உடல் எல்லாம் காயங்கள். இடுப்பு பகுதியில் ஓர் துப்பாக்கிச்சன்னம் தங்கியுள்ளது. எடுக்க முடியவில்லை. மருத்துவத்துறையில் பொறுப்பான பகுதியில் இருந்தபோது அவன் இயக்கத்தை விலகவிருந்த காலத்தில் உடனடியாக சண்டைபிடிக்கும் பகுதிக்கு மாற்றப்பட்டான். அவன் தற்போது உயிர்வாழ்வதே ஓர் அதிசயம். ஓர் மாதிரியாக 2006 காலப்பகுதியில் இயக்கத்தைவிட்டு விலகி பொதுவாழ்வில் இணைந்தான். இப்போது எளிமையாக ஒரு குடும்பஸ்தனாக தனது வாழ்க்கையை ஓட்டுகின்றான். தான் பட்ட கஸ்டங்கள், சந்தித்த ஆபத்துக்கள், துயரங்கள் எல்லாவற்றையும் என்னுடன் பகிர்ந்துகொண்டான்.

அவன் ஓர் புனித ஆத்துமன். அவனுக்கு நான் கூறினேன் உனது கால்களில் விழுந்து நான் வணங்கவேண்டும் என்று. அவனது எதிர்பார்ப்பு எல்லாம் தனது பிள்ளைகளை நன்றாக வளர்க்கவேண்டும். தான் உழைத்து சம்பாதித்து கெளரவமாக சமூகத்தில் வாழவேண்டும் என்பதே. அவனது கதைகளை விரிவாய் எழுதினால் இரத்தக்கண்ணீர்தான் உங்களுக்கு வரும். 

இவ்வாறே முழுக்குடும்பமுமே போராட்டம் என்று இயக்கத்திற்கே வாழ்ந்து இறுதியில் இயக்கத்தினாலேயே விலத்தி வைக்கப்பட்டு பின்னர் சிறையில் மூன்று வருடங்கள் இருந்து புனர்வாழ்வு பெற்று எளிமையாக மனைவி, பிள்ளைகளுடன் சுயமாய் உழைத்து வாழ்கின்ற இன்னோர் நண்பனை 23 வருடங்களின் பின் சந்தித்தேன். அவனது எதிர்பார்ப்புக்கள் எல்லாம் தன் பிள்ளைகள் நன்றாகப்படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும், தன்போல கஸ்டப்படக்கூடாது, அவர்களுக்கு நல்லதோர் ஒளிமயமான எதிர்காலம் கிடைக்கவேண்டும் என்பதே. 

வெளிநாடுகளில் வாழும் நாங்கள் இங்கிருந்து என்னவும் கூறலாம். அங்கே நாட்டுக்காகவே வாழ்ந்து, நாட்டுக்காகவே தமது வாழ்க்கை, சுகங்களை தொலைத்து தற்போது மீண்டும் பொது சமூகத்தில் இணைந்து தாமும் மற்றவர்களைப்போல் நிம்மதியாய், மகிழ்ச்சியாய் வாழவேண்டும் எனும் முனைப்போடு முயற்சிக்கின்றவர்களின் எண்ணங்களையும் நாம் சீர்தூக்கி பார்க்கவேண்டும்.

என்னைப்பொறுத்தவரையில் நான் சுருக்கமாக கூறக்கூடியது நான் கனடாவில் பாதுகாப்பாய் இருந்துகொண்டு அங்கே வாழும் மக்களுக்கு உசுப்பேத்திவிடமுடியாது. நான் இங்கு எனக்கு கிடைக்கும் சுகங்கள், பாதுகாப்பு அங்கே அவர்களுக்கும் கிடைக்கவேண்டும் என்று விரும்புகின்றேன். இலங்கையில் தற்போது உள்ள நிலமைகளை பார்க்கும்போது நிச்சயம் எதிர்காலத்தில் இன்னும் சுமுகமான நிலமை ஏற்படும் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. இங்கே கனடாவில் நூற்றுக்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகள் கதைக்கும் பல்லின சமூகத்தில் நாங்கள் நிம்மதியாய் வாழமுடியும் என்றால் நிச்சயம் அங்கேயும் மூன்று நான்கு இனங்கள் ஒன்றாய் வாழக்கூடிய நிலமையை நிச்சயம் ஏற்படுத்தமுடியும்.

கனடாவில் நாளைய தமிழ் சமுதாயம் நிம்மதியாய் வாழமுடியும் என்றால் இலங்கையிலும் நிச்சயம் வாழமுடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கலைஞன் said:

கலைஞன் நீங்கள் கூறியவற்றை  எல்லாம் ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் கனடா பெரும்பான்மையினரின் மனநிலையும்,சிறிலங்கா பெரும்பான்மையினரின் மனநிலையும் வேறு வேறு....

சிறிலங்காவில் வாழுகின்ற எல்லா மக்களும் இனக்கத்துடன் வாழவிரும்பினாலும் .....அதன் அமைவிடம் அவர்களை வாழவிடாது.
ஒரு சின்ன உதாரணம் போர்ட் சிட்டி,இதை சீனாக்காரன் ஏன் அங்கு உருவாக்கின்றான் .....இந்தியா ஏன் எண்ணைகுதத்திற்கு அடிபடுது...

பெரிய நாடுகளுக்கு பக்கத்தில் ஒரு சிறிய நாடு அல்லது ஒரு தீவு அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப்படுகின்றது.

சிறிலங்கா பெரும்பான்மை அரசியல்வாதியினருக்கு அரசியல் செய்ய சிறுபன்மையினர் தேவை.

இன்று தமிழ் பகுதிகளில் அதிக அளவில் இந்துக்கள் அறியாத இந்து தெய்வங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது ஏன் என்று புரியவில்லை.இது தப்பில்லை ஆனால் ஏன் என்ற கேள்வி எழுகின்றது.

எல்லாத்தை முப்பது வருட போர் தான் காரணம் என்று மறந்து விட முடியாது.முப்பதுவருட‌ போர் உருவானதுக்கான காரணமே நீங்கள் தற்பொழுது கூறும் உங்களது நண்பர்கள் கூறியவைகள் தான்.
 
அவனது எதிர்பார்ப்புக்கள் எல்லாம் தன் பிள்ளைகள் நன்றாகப்படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும், தன்போல கஸ்டப்படக்கூடாது, அவர்களுக்கு நல்லதோர் ஒளிமயமான எதிர்காலம் கிடைக்கவேண்டும் என்பதே.

 அவனது எதிர்பார்ப்பு எல்லாம் தனது பிள்ளைகளை நன்றாக வளர்க்கவேண்டும்

எமது இனம் திறம் என்று சொல்ல வரவில்லை .....அரசாங்கங்கள் திறமாக இருக்க் வேண்டும் இருந்தால்தான் நாடு உருப்படும்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

எல்லாத்தை முப்பது வருட போர் தான் காரணம் என்று மறந்து விட முடியாது.முப்பதுவருட‌ போர் உருவானதுக்கான காரணமே நீங்கள் தற்பொழுது கூறும் உங்களது நண்பர்கள் கூறியவைகள் தான்.

tw_thumbsup: tw_thumbsup: tw_thumbsup: tw_thumbsup: tw_thumbsup:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

..கனடா பெரும்பான்மையினரின் மனநிலையும்,சிறிலங்கா பெரும்பான்மையினரின் மனநிலையும் வேறு வேறு....

சிறிலங்காவில் வாழுகின்ற எல்லா மக்களும் இனக்கத்துடன் வாழவிரும்பினாலும் .....அதன் அமைவிடம் அவர்களை வாழவிடாது.  ஒரு சின்ன உதாரணம் போர்ட் சிட்டி, இதை சீனாக்காரன் ஏன் அங்கு உருவாக்கின்றான் .....இந்தியா ஏன் எண்ணைகுதத்திற்கு அடிபடுது...

பெரிய நாடுகளுக்கு பக்கத்தில் ஒரு சிறிய நாடு அல்லது ஒரு தீவு அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப்படுகின்றது.

சிறிலங்கா பெரும்பான்மை அரசியல்வாதியினருக்கு அரசியல் செய்ய சிறுபன்மையினர் தேவை.

இன்று தமிழ் பகுதிகளில் அதிக அளவில் இந்துக்கள் அறியாத இந்து தெய்வங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது ஏன் என்று புரியவில்லை.இது தப்பில்லை ஆனால் ஏன் என்ற கேள்வி எழுகின்றது.

எல்லாத்தை முப்பது வருட போர் தான் காரணம் என்று மறந்து விட முடியாது.முப்பதுவருட‌ போர் உருவானதுக்கான காரணமே நீங்கள் தற்பொழுது கூறும் உங்களது நண்பர்கள் கூறியவைகள் தான்.

எமது இனம் திறம் என்று சொல்ல வரவில்லை .....அரசாங்கங்கள் திறமாக இருக்க் வேண்டும் இருந்தால்தான் நாடு உருப்படும்.....

நல்ல கருத்து..!  bjr2.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10 hours ago, கலைஞன் said:

ன்னைப்பொறுத்தவரையில் நான் சுருக்கமாக கூறக்கூடியது நான் கனடாவில் பாதுகாப்பாய் இருந்துகொண்டு அங்கே வாழும் மக்களுக்கு உசுப்பேத்திவிடமுடியாது. நான் இங்கு எனக்கு கிடைக்கும் சுகங்கள், பாதுகாப்பு அங்கே அவர்களுக்கும் கிடைக்கவேண்டும் என்று விரும்புகின்றேன். இலங்கையில் தற்போது உள்ள நிலமைகளை பார்க்கும்போது நிச்சயம் எதிர்காலத்தில் இன்னும் சுமுகமான நிலமை ஏற்படும் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. இங்கே கனடாவில் நூற்றுக்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகள் கதைக்கும் பல்லின சமூகத்தில் நாங்கள் நிம்மதியாய் வாழமுடியும் என்றால் நிச்சயம் அங்கேயும் மூன்று நான்கு இனங்கள் ஒன்றாய் வாழக்கூடிய நிலமையை நிச்சயம் ஏற்படுத்தமுடியும்.

கனடாவில் நாளைய தமிழ் சமுதாயம் நிம்மதியாய் வாழமுடியும் என்றால் இலங்கையிலும் நிச்சயம் வாழமுடியும். 

நாம் ஏன் கனடிய அமெரிக்க பூர்வீகக்குடிமக்களை மறைத்து பேசுகின்றோம்??

சிறீலங்காவில்  தமிழர்களும் அதே நிலைக்குத்தான் வருவார்கள் என்ற முன் நோக்குதலாலா????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, விசுகு said:

நாம் ஏன் கனடிய அமெரிக்க பூர்வீகக்குடிமக்களை மறைத்து பேசுகின்றோம்??

சிறீலங்காவில்  தமிழர்களும் அதே நிலைக்குத்தான் வருவார்கள் என்ற முன் நோக்குதலாலா????

விசுகர்! மாற்றுக்கருத்துக்களை மூட்டை மூட்டையாய் கட்டிக்கொண்டு திரியிறவையள்.... உதுக்கும் ஒரு காரணம்/கருத்து வைச்சிருப்பினம் கண்டியளோ.tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கலைஞன் said:

உங்கள் ஆதங்கம் புரிகின்றது. குமாரசாமி அண்ணா.

கீழுள்ள இந்த இணைப்பை பாருங்கள்.

இது நான் ஏழு வருடங்களின் முன் எழுதிய உண்மைக்கதை. இந்தக்கதையின் நாயகனே எனது மாங்கல்யத்தை (தாலிக்கொடி) கொண்டு மனைவி, பிள்ளைகளுடன் எனது திருமணத்துக்கு வந்து இருந்தான். அவனை நான் 22 வருடங்களின் பின் மீண்டும் சந்தித்தேன். நான் தாலிக்கொடியை இங்கிருந்து காசு அனுப்பி அங்கு செய்வித்தேன். அவனே நகைக்கடைக்கு சென்று என் சார்பில் பொன்னுருக்கு செய்து பின்னர் திருமண நாளன்று பத்திரமாய் தாலிக்கொடியை கொண்டு வந்து என்னிடம் சேர்ப்பித்தான். 

அவன் உடல் எல்லாம் காயங்கள். இடுப்பு பகுதியில் ஓர் துப்பாக்கிச்சன்னம் தங்கியுள்ளது. எடுக்க முடியவில்லை. மருத்துவத்துறையில் பொறுப்பான பகுதியில் இருந்தபோது அவன் இயக்கத்தை விலகவிருந்த காலத்தில் உடனடியாக சண்டைபிடிக்கும் பகுதிக்கு மாற்றப்பட்டான். அவன் தற்போது உயிர்வாழ்வதே ஓர் அதிசயம். ஓர் மாதிரியாக 2006 காலப்பகுதியில் இயக்கத்தைவிட்டு விலகி பொதுவாழ்வில் இணைந்தான். இப்போது எளிமையாக ஒரு குடும்பஸ்தனாக தனது வாழ்க்கையை ஓட்டுகின்றான். தான் பட்ட கஸ்டங்கள், சந்தித்த ஆபத்துக்கள், துயரங்கள் எல்லாவற்றையும் என்னுடன் பகிர்ந்துகொண்டான்.

அவன் ஓர் புனித ஆத்துமன். அவனுக்கு நான் கூறினேன் உனது கால்களில் விழுந்து நான் வணங்கவேண்டும் என்று. அவனது எதிர்பார்ப்பு எல்லாம் தனது பிள்ளைகளை நன்றாக வளர்க்கவேண்டும். தான் உழைத்து சம்பாதித்து கெளரவமாக சமூகத்தில் வாழவேண்டும் என்பதே. அவனது கதைகளை விரிவாய் எழுதினால் இரத்தக்கண்ணீர்தான் உங்களுக்கு வரும். 

இவ்வாறே முழுக்குடும்பமுமே போராட்டம் என்று இயக்கத்திற்கே வாழ்ந்து இறுதியில் இயக்கத்தினாலேயே விலத்தி வைக்கப்பட்டு பின்னர் சிறையில் மூன்று வருடங்கள் இருந்து புனர்வாழ்வு பெற்று எளிமையாக மனைவி, பிள்ளைகளுடன் சுயமாய் உழைத்து வாழ்கின்ற இன்னோர் நண்பனை 23 வருடங்களின் பின் சந்தித்தேன். அவனது எதிர்பார்ப்புக்கள் எல்லாம் தன் பிள்ளைகள் நன்றாகப்படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும், தன்போல கஸ்டப்படக்கூடாது, அவர்களுக்கு நல்லதோர் ஒளிமயமான எதிர்காலம் கிடைக்கவேண்டும் என்பதே. 

வெளிநாடுகளில் வாழும் நாங்கள் இங்கிருந்து என்னவும் கூறலாம். அங்கே நாட்டுக்காகவே வாழ்ந்து, நாட்டுக்காகவே தமது வாழ்க்கை, சுகங்களை தொலைத்து தற்போது மீண்டும் பொது சமூகத்தில் இணைந்து தாமும் மற்றவர்களைப்போல் நிம்மதியாய், மகிழ்ச்சியாய் வாழவேண்டும் எனும் முனைப்போடு முயற்சிக்கின்றவர்களின் எண்ணங்களையும் நாம் சீர்தூக்கி பார்க்கவேண்டும்.

என்னைப்பொறுத்தவரையில் நான் சுருக்கமாக கூறக்கூடியது நான் கனடாவில் பாதுகாப்பாய் இருந்துகொண்டு அங்கே வாழும் மக்களுக்கு உசுப்பேத்திவிடமுடியாது. நான் இங்கு எனக்கு கிடைக்கும் சுகங்கள், பாதுகாப்பு அங்கே அவர்களுக்கும் கிடைக்கவேண்டும் என்று விரும்புகின்றேன். இலங்கையில் தற்போது உள்ள நிலமைகளை பார்க்கும்போது நிச்சயம் எதிர்காலத்தில் இன்னும் சுமுகமான நிலமை ஏற்படும் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. இங்கே கனடாவில் நூற்றுக்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகள் கதைக்கும் பல்லின சமூகத்தில் நாங்கள் நிம்மதியாய் வாழமுடியும் என்றால் நிச்சயம் அங்கேயும் மூன்று நான்கு இனங்கள் ஒன்றாய் வாழக்கூடிய நிலமையை நிச்சயம் ஏற்படுத்தமுடியும்.

கனடாவில் நாளைய தமிழ் சமுதாயம் நிம்மதியாய் வாழமுடியும் என்றால் இலங்கையிலும் நிச்சயம் வாழமுடியும். 

1990களில் மீண்டும் யுத்தம் தொடங்கியபோது கொழும்பில் இருந்து 
மீண்டும் யாழ் சென்றுவிடேன் 
போராடத்தில் இணையும் எண்ணம்தான் முக்கிய காரணியாக இருந்தது 
நான் இணைந்தாலும் ... என் மீது ஒரு சந்தேக பார்வை அவர்களுக்கு இருக்கும் 
என்ற எண்ணமும் எனக்குள் இருந்தது.
ஊரில் போய் நிக்க பவுன் கேட்டு வந்தார்கள் ...
கொடுக்க உண்மையிலே எம்மிடம் பவுன் இல்லை .. பார்க்க அவர்களுக்கும் அது 
புரிந்தது ஓகே என்று விட்டு போனார்கள் ...
கூட கொஞ்ச வாலுகள் திரியும் ... அதுகள் போட்டு கொடுத்து இருந்தார்கள் 
இவர்கள் முன்பு வேறு இயக்கம் நீங்கள் இப்படி கேட்டால் தாரமாட்ட்டார்கள் என்று.
அப்போ பாரதிதான் எமது ஊரில் பவுன் சேர்த்தார் ... ஒருநாள் ரோட்டில் கண்டு முகாமுக்கு வர சொன்னார் 
சென்றேன் இப்போதே பவுன் வேண்டும் இல்லை என்றால் பிடித்து பங்கர் வெட்ட அனுப்புவேன் என்றார். 
தருவதற்கு உண்மையிலேயே பவுன் இல்லை என்றேன் ....அப்படியே கொண்டு சென்று 
பருத்தித்துறையில் ஒரு முகாமில் ஒரு ரூமில் பூட்டிவிட்டார்கள் ..பின்பு இரண்டு நாள் கழித்து 
ஒரு எல்ப் வாகனத்தில் ஏற்றி சென்று காங்கேசன்துறை சீமெந்து பக்டரியில் இறக்கி விடார்கள்  ....
பின்பு என்ன பங்கர் வெட்டுத்தான் .. அங்கே சென்றியில் நிக்கும் பெடியள் எல்லாம் சின்ன 
பெடியள் 15- 17 வயதுக்கு உள்ளேதான் அதிகம் .... எனக்கு அவர்களை பார்க்க பாவமாக இருக்கும்.
இரவு 10-11 மணிக்கு எல்லாம் ஆமியின் சென்றி அருகுகளுக்கு சென்றுவிடுவார்கள் சென்று மிதிவெடி வைப்பது .... நான் இருக்கும்போது இவர்களுக்கும் ஆமிக்கு இடையில் இருந்த இரண்டு வீடுகளை 
சக்கை வைத்து இறக்கினார்கள் அந்த இரண்டு வீடும் ஆமிக்கு அருகில்தான் இருந்தது.
அவன் செல்லடியில் இருந்து துப்பாக்கி எல்லாவற்றாலும் போட்டு சுடு சுடு என்று சுட்டான் 
இவர்களுக்கு ...அதை பற்றி எண்ணம் இல்லை வீடு மட்டமாக இறங்கியதா என்று பார்க்க மீண்டும் 
நான்கு பேர் திரும்பி போனார்கள். 1990 ஆண்டு தீவாளி அன்று பலாலியில்  இருந்து ஆமி கட்டுவன் வரை வந்துவிட்டான் அப்போ மாறி மாறி இங்கு பலரும் வந்தார்கள்.
அப்போ ஈழநாதம் பத்திரிகை பொறுப்பாக இருந்த அழகனும் வந்தார் எனக்கு அவரை தெரியும் 
அவரை இந்திய இராணுவம் கைது செய்து கே கே எஸ்சில் வைத்திருந்தார்கள் அப்போது அவர்களுக்கு சில 
உதவிகளை நான் செய்து இருந்தேன் .. என்ன இங்கே என்று கேட்டார் 
நான் நடந்ததை சொல்ல ...அவர்தான் என்னை போகும்படி கலைத்துவிடடார். 

அப்படியே யாழ் சென்று கொஞ்சம் உதவலாம் என்று யோசித்தேன் 
அப்போதான் யாழ்நகரம் வெளி நகரம் என்று எல்லா இடமும் திரிய நேர்ந்தது 
மக்களின் போக்கும் ....
எமது இனத்தின் சுயநல சிந்தனையும் அப்போதான் கொஞ்சம் கொஞ்சம் 
புரிய தொடங்கியது 
இந்த இனத்துக்கு போராடி நான் இறந்து போனாலும் பின்னாளில் 
போராட்டம் எமக்கு இடைஞ்சலாக இருந்தது என்று இந்த இனம் தூற்றினாலும் 
தூற்றும் ... என்று அப்போது எண்ணினேன்.
இறுதியில் அதுதான் நடந்து.
1990 இறுதியிலேயே முற்றான முடிவு ஒன்றை எடுத்துவிட்டேன் 
இந்த இனத்துக்கு உயிரை கொடுப்பதெல்லாம் ஒரு மொக்கு வேலை என்று.
போராளிகளை பார்த்தால் எனக்கு பாவமாக இருந்தது 
போயும் போயும் இந்த இனத்துக்கு இவர்கள் உயிரை கொடுக்க போகிறார்களே என்று.
பின்பு ஊர் திரும்பி ... மீண்டும் கொழும்பு செல்வது என்று முடிவு செய்துவிட்ட்டேன்.

அப்போ பாஸ் நடைமுறை வந்துவிட்டது .. ஊருக்கு போனால் 
வாலுகள் கொஞ்சம் இருக்கிறது எனக்கு கண்ணிலும் காட்ட முடியாது 
நான் பாஸுக்கு போனால் தரவே மாட்டார்கள் என்று தெரியும்.
நேராக வல்வெட்டித்துறை போனேன் ... அப்போ சூசையுடன் ஒரு 
கசப்பான அனுபவம் நேர்ந்துவிட்ட்து 
காற்றுக்கு என்ன வேலி ? என்றுவிட்டு பாஸ் இல்லாமலேயே வந்தேன் 
பாஸ் செக் பண்ணும் இடத்தில் எல்லோரும் வரிசையில் நிக்கும்போது 
நான் ரோட்டிலே நடந்து போனானேன் யாரும் ஒன்றும் கேட்கவில்லை.
அதன் பின்பு 2005இல் தான் சென்றேன். 

பின்பு அங்கு திரிந்து இங்கு திரிந்து 
நன்பர்கள் ஒரு சித்தப்பா உதவியுடன் ஒரு ஐரோப்பிய நாட்டை எட்டினேன்.
அங்கு இருக்கும்போதுதான் உணர்ந்தேன் எனக்கு என்று ஒரு நாடு மொழி தனித்துவம் 
இல்லாதவன் யாவரும் பரதேசிகள்தான் என்று.
அப்படியே அடுத்த கட்டமாக அமெரிக்கா வந்தேன்.
இங்கு பிரஜாவுரிமை பெற்று ஒரு அமெரிக்கன் போலவே வாழ்கிறேன் 
நான் அமெரிக்க ஜனாதிபதி ஆக முடியாது இங்கு பிறக்காத காரணத்தால் 
எனது பிள்ளை வேண்டுமானால் ஜனாதிபதியும் ஆகலாம்.
அந்நிய நாட்டில் எனக்கு கிடைத்த உரிமை கூட ..
சொந்த நாட்டில் என் சொந்தகளுக்கு இல்லை எனும்போது 
ஆயுதம் ஏந்திதான் போராடவேண்டும் என்று இல்லை ...
அடிமையாக எவ்வளவு காலம் கிடப்பது என்ற கேள்விதான் இருக்கிறது.
இதற்கு விடை காணுவது என்பது 
வெறும் தூண்டுதல் அல்ல ...... எதிரியின் நோக்கமே அடித்து பிழிந்து போட்டால் 
சோறுதந்தாலே போதும் என்று சொல்வார்கள் அப்படியே விட்டு விடலாம் என்பதுதான்.
எனக்கான உரிமைக்கு ... நான்தான் குரல் கொடுக்க முடியும். 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.