Jump to content

கொட்டேக்கை பிடிச்சன் எண்டா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
யாழ் இந்துக் கல்லூரிப் பெடியளுக்கு படிப்பிக்கிறதெண்டா அது ஒரு கலை பாருங்கோ. அதுதான் அந்தக் காலத்தில ஒருபொம்புள ரீச்சரும் அங்க படிப்பிக்க வாறேல்லை. நான் சொல்லுறது 1990- 1998 காலப்பகுதி. அப்ப எனக்குத் தெரிஞ்சு சங்கீதத் ரீச்சரும் அதுக்கு பிறகு 1991 அளவில வந்த பொட்னி ரீச்சரையும் தவிர வேறொருவரும் பொம்பிளை ரிச்சரில்லை. பிரின்சிபல் ஒபிசில இருந்த டைபிஸ்டை தவிர ஒபிசில கூட ஒரு பொம்பிளையளும் வேலை செய்யேல்லை.

சரி பொறுங்கோ

சொல்ல வந்த விசயத்தை விட்டிட்டு நான் வேற எங்கையோ சுத்திறன். ( படிக்கப்போறன் எண்டு சொல்லிப்போட்டு சுத்திப் பழகி இப்ப அந்தப் பழக்கம் விடுகுதில்லை)

படிப்பிக்கவே பயபபடும் இடத்தில உபஅதிபராக இருக்கிறதெண்டா சின்ன விசயமா?

இருந்து காட்டினவர் 

எலியர். 

என்னடா ஆசிரியரை அதுவும் ஒரு உப அதிபரை பட்டப்பெயர் சொல்லிக் கூப்பிடுறானே எண்டு கோவிக்காதையுங்கோ. மகேந்திரன் சேர் எண்டு சொன்னா கனபேருக்கு அவரைத் தெரியாது. அதுதான்.

எலியர் நாங்கள் ஆறாம் ஆண்டில 1990 இல போய்ச் சேர்ந்தபோது எங்களளவு உயரத்தில இருந்தவர். நாங்கள் வகுப்பு ஏற ஏற வளர்ந்து கொண்டு போனனாங்கள். பாவம் அவர் உயரத்தில வளரேல்லை.

ஆனாலும் எலியர் வாறார் எண்டா உந்தப் புரளிகாரனும் அடங்கிவிடுவான். காரணம் அவர் முதுகுப்புறமாய் மறைத்து (?!) வைச்சிருக்கிற வால்தான். மன்னிக்கவும் பிரம்புதான். சவல் அடி கிடைக்கிற பயத்திலை எல்லாம் அடங்கியிடும்.

உப்பிடித்தான் ஒருநாள் அதிபர் அலுவலகத்திற்கு அருகிலுள்ள வகுக்கறைகளுக்கு விஜயம்(திக்விஜயம்) செய்துகொண்டிருந்த எலியரின்ர கண்ணிலை பொறி பறந்தது. அது ஆண்டு 11 படிக்கிற அண்ணைமாரின் வகுப்பறை. அதிலை சாப்பிட்டிட்டு எறிய ஒரு குப்பைவாளி வைக்கப்பட்டிருந்தது. சாப்பிட்ட மிச்சங்களை அதுக்குள்ள போடச்சொல்லி பெரிய டிரம் வைச்சிருந்தவர்.

எங்கடை பொடியள் சாப்பிட்டு விட்டு வகுப்பிலிருந்தே எறிய (அதுவும் என்னை மாதிரி இலக்காய் எறிய முடியாத பலபேர் அந்த வகுப்பிலை படிச்சிருக்கும் எண்டு நினைக்கிறன்) அந்த குப்பையெல்லாம் வாளிக்கு வெளியே சிதறிக்கிடந்நதது.

யாரடா வெளியில கொட்டினது

வகுப்பே மௌனம்.

கொட்டேக்க பிடிச்சனெண்டா.... பிறகு தெரியுந்தானே.....

வகுப்பே கொல் எண்டு சிரிச்சது.

பிறகு என்ன நடந்தது எண்டே கேக்கிறியள்.


ஒண்டா இரண்டா எண்ணுறதிற்கு?

முதுகு பழுத்துபோச்சு முழு வகுப்பிற்கும்.

விளங்காம நீங்களும் முழுசிறியளே....

மிச்சத்தை வெளியிலை கொட்டேக்கை பிடிச்சனெண்டா அடிப்பன் எண்டு அவர் சொல்ல வந்தது டைமிங்கில வேறமாதிரி ஆகி....
சரி விடுங்கோ இன்னும் விளங்கேல்லை யெண்டா
 

orumathiri.blogspost

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

எலியரின் பகிர்விற்கு... நன்றி கொழும்பான். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

எலியரின் பகிர்விற்கு... நன்றி கொழும்பான். :)

எனக்கு  இன்னும் விளங்கேல்லை,  அண்ணை   ?? :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

எனக்கு  இன்னும் விளங்கேல்லை,  அண்ணை   ?? :grin: 

உண்மையாக.... விளங்கவில்லையா நாதமுனியர். :D:
எலியர் சொன்னது... சாப்பாட்டை  வெளியே.... "கொட்டேக்கை பிடிச்சன் எண்டா..."  அடி விழும் என்று.
குசும்பு பிடித்த பெடியள் நினைச்சது... கீழே உள்ள இணைப்பில், 
கிருபன் ஜீ....  10´வது பந்தியில் விரிவாக எழுதியுள்ளார்.  :grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பான்...அனுபவப் பகிர்வு நன்றாக வந்துள்ளது!

எனக்கு மகேந்திரா மாஸ்ரரை வெள்ளை ரவுசருடனும் .....வெள்ளை ரீ சேட்டுடனும் பார்க்கப் பிடிக்கும்!

எலியருடைய தம்பியார் எங்களுடன் படித்தவர் என்று நினைவு!

உங்கள் காலத்தில் எப்படியோ தெரியாது!

எங்கள் காலத்தில் ..அவர் ஒரு நல்ல மனுஷன்!:rolleyes:

தொடர்ந்து எழுதுங்கள்!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புங்கையூரன் said:

கொழும்பான்...அனுபவப் பகிர்வு நன்றாக வந்துள்ளது!

எனக்கு மகேந்திரா மாஸ்ரரை வெள்ளை ரவுசருடனும் .....வெள்ளை ரீ சேட்டுடனும் பார்க்கப் பிடிக்கும்!

எலியருடைய தம்பியார் எங்களுடன் படித்தவர் என்று நினைவு!

உங்கள் காலத்தில் எப்படியோ தெரியாது!

எங்கள் காலத்தில் ..அவர் ஒரு நல்ல மனுஷன்!:rolleyes:

தொடர்ந்து எழுதுங்கள்!

 

 

 
 

 

புங்கையர், 

உங்கண்ட கதையும் எலியரின் timing கதை போல கிடக்குதே.

இது கொழும்பானின் அனுபவம் இல்லை. கொழும்பான், முகப்புத்தகத்தில் இருந்த கிருஷ்ணபிள்ளை குருபரன்  என்பவரின் பதிவை இங்கு எங்களுடன் பகிர்ந்துள்ளார்.

நன்றி கொழும்பான். (கறுத்தக் கொழும்பான் மாம்பழம் போல இனிக்கும் பதிவு )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

 

புங்கையர், 

உங்கண்ட கதையும் எலியரின் timing கதை போல கிடக்குதே.

இது கொழும்பானின் அனுபவம் இல்லை. கொழும்பான், முகப்புத்தகத்தில் இருந்த கிருஷ்ணபிள்ளை குருபரன்  என்பவரின் பதிவை இங்கு எங்களுடன் பகிர்ந்துள்ளார்.

நன்றி கொழும்பான். (கறுத்தக் கொழும்பான் மாம்பழம் போல இனிக்கும் பதிவு )

ஊப்சி!!!

கவனிக்கவில்லை...நாதம்!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.