Jump to content

மகாசிவராத்திரி ஸ்பெஷல் 'விபூதி லிங்கேஸ்வரர்' தரிசனம்! #PhotoStory


Recommended Posts

மகாசிவராத்திரி ஸ்பெஷல் 'விபூதி லிங்கேஸ்வரர்' தரிசனம்! #PhotoStory

திருத்தணிக்கு 10 கி.மீ. தொலைவில், ஆந்திர மாநில எல்லையான நகரி அருகே உள்ள கீளப்பட்டு என்னும் கிராமத்தில், திரிபுரசுந்தரி சமேத சந்திரமௌளீஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரியை விசேஷமாகக் கொண்டாட இருக்கிறார்கள்.

சிவராத்திரி  

நூற்றாண்டு பழமையான இந்த ஆலயத்தில், மகா சிவராத்திரி வரை பக்தர்கள் அனைவருக்கும் பஸ்ம நாதர் திவ்ய தரிசனம் அளிக்க இருக்கின்றார்.  

விபூதி லிங்கம்

 

மகா சிவராத்திரியை முன்னிட்டு இங்கு 10 அடி உயரம் கொண்ட பீடத்தில், 500 கிலோ விபூதியினால் (பஸ்மத்தினால்)  20 அடி உயர, ஒய்யாரமான விபூதி லிங்கம் ஏற்படுத்தி உள்ளனர்.  

விபூதி லிங்கம்

அவை லிங்கத்தைச் சுற்றி அகோரிகள் தங்களுக்கே உரித்தான கம்பீரமான தோற்றத்தில், பஸ்மநாதரான ஈசனை வணங்குவது போல காட்சி அருமையாக அமைந்துள்ளது.

விபூதி லிங்கம்

கணேசன் என்பவரின்  தலைமையிலான குழு, 15 நாட்களில்  இரவு பகல் பாராமல்,  கோயிலிலேயே தங்கியிருந்து பஸ்மநாதரை உருவாக்கி இருக்கிறார்கள்.

வில்வ லிங்கம்


இதேபோல கடந்த ஆண்டு வில்வ லிங்கம் உருவாக்கியிருந்தார்கள்.

கரும்பு லிங்கம்


அதற்கு  முந்தைய ஆண்டு கரும்பு லிங்கம்  உருவாக்கியிருந்தார்கள்.

விபூதி லிங்கம்


இந்த முறை விபூதி லிங்கத்தினை உருவாக்கி பக்தி மணம் கமழச் செய்து இருக்கிறார்கள்.    

திரிபுரசுந்தரி சமேத சந்திரமௌளீஸ்வரர்


இத்திருத்தலம் தோஷங்களை போக்கும் தலம் என்று போற்றப்படுகிறது.

திரிபுரசுந்தரி சமேத சந்திரமௌளீஸ்வரர் சிவ லிங்கம்


பிரமாண்டமான விபூதி லிங்கத்தை மனம் குளிர தரிசியுங்கள். என்ன சிவனடியார்களே, மகா சிவராத்திரிக்கு விபூதி லிங்கேஸ்வரரை தரிசிக்க தயாராகிவிட்டீர்களா...

http://www.vikatan.com/news/spirituality/81708-vibhuti-lingeshwara-darsana-for-maha-shivaratri-festival.html

Link to comment
Share on other sites

சிவ பூஜை மகிமை: மகா சிவராத்திரி பிப்ரவரி 24

 

 
shiva_3136492f.jpg
 
 
 

மகா சிவராத்திரி என்பது மாசி மாதம் அமாவாசை முதல் நாள் சதுர்தசியில் சம்பவிக்கிறது.

சிவபுராணத்திலும், பவிஷ்ய புராணத்திலும் மகா சிவராத்திரியின் மகிமைகள் வெகு விமரிசையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. சிவ பூஜை செய்தால் உலகத்திற்கு நலமளிக்கும் என்பது நம்பிக்கை.

சிவபெருமானுக்கு ஒரே ஒரு நாள் மகா சிவராத்திரியென்று அழைக்கப்படுகிறது. நமஹம், சமஹம் என்ற மந்திரத்தினால் அன்றைய தினம் மஹண்யாசம், லருண்யாசம், ருத்ரம் ஆகிய வேத கோஷங்களினால் சிவபெருமானுக்கு மகா அபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகப்ரியோ சிவஹ, அலங்கார ப்ரியோ விஷ்ணுஹோ என்று புராணங்கள் கூறுகின்றன. மகா சிவராத்திரியன்று உப்பில்லாத ஆகாரம் சாப்பிட்டு, சிவ பூஜை செய்ய வேண்டும்.

மகா சிவராத்திரியன்று தூங்காமல் ஐந்தெழுத்து மந்திரத்தை (ஓம் நமச்சிவாய) உச்சரிக்க வேண்டும். ஆபத்தைப் போக்குவது ஐந்தெழுத்து மந்திரம். பாவத்தைப் போக்குவது பஞ்சாட்சர மந்திரம் என்று சொல்லப்படுகிறது.

சிவராத்திரி மகிமை

ஒரு வில்வ மரத்தடியில் சிவராத்திரியன்று சிவனும், பார்வதியும், அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது மரத்தின் மேலிருந்து குரங்கு ஒன்று வில்வ மரத்தின் இலைகளை பறித்து மேலேயிருந்து கீழே ஒவ்வொன்றாகப் போட்டுக்கொண்டிருந்தது. இரவு முழுவதும் தூங்காமல் வில்வ இலையைப் போட்டதால், சிவபெருமான் அருள் செய்தார். தெரியாமல் செய்த குரங்கிற்கே ஈசன் அருள் புரிந்தார் என்றால் பக்தர்கள் சிவராத்திரியன்று பூஜை செய்தால் எல்லா செல்வ வளங்களையும் சிவபெருமான் வழங்குவார்.

த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரம் சத்ரியாயுதம்

த்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம்.

மூன்று தளம் (இலைகள்) உடைய வில்வத்தால் அர்ச்சனை செய்தால் ரஜோ, தமோ, சாத்விக குணங்களையும் மூன்றாவது கண்ணாகிய ஞானக்கண்ணும் மூன்று ஜென்மங்களின் ஆயுளும் கிடைக்கும். மூன்று ஜன்மங்களின் பாவங்களையும் போக்கும். வில்வத்தால் பூஜை செய்தால் சகல பாவங்களும் நிவர்த்தியாகும் என்று நம்பப்படுகிறது.

தர்சனம் பில்வவ்ருஷாய ஸ்பர்சனம் பாதஸேவனம்

அகோர பாபஸம்ஹாரம் ஏகபில்வம் சிவார்ப்பணம்.

ஒரு வில்வ மரத்தைப் பார்த்தாலோ, தொட்டாலோ, பாவம் அழிந்துவிடும். செய்யத்தகாத பாவங்கள் செய்திருந்தாலும் உடனடியாக நிவர்த்தியாகும். இதனால் அவர் ஒருவருக்கே வேதங்கள் நமஸ்காரம் செய்கின்றன. ருத்ர மந்திரம் முழுவதும் நமஸ்கார ரூபமாகவே உள்ளன. ஆதலால் இவ்வளவு மகிமையுள்ள பார்வதி, பரமேஸ்வரரை மகா சிவராத்திரியன்று கண்விழித்துப் பூஜித்தால், சிவனின் அருள் பெறலாம்.

கயிலையே மயிலை, மயிலையே கயிலை என்று போற்றப்படும். மயிலாப்பூரில் ஏழு சிவாலயங்கள் உள்ளன. ஏழு கிழமைக்கும் ஏழு சிவாலயங்கள் என்று கொண்டால் அருள்மிகு கபாலீஸ்வரர், வள்ளீஸ்வரர், காரணீஸ்வரர், வாலீஸ்வரர், மல்லீஸ்வரர், விருபாதீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர் என்று மகா புண்ணிய தலங்கள் உள்ளன. இந்த ஏழு சிவாலயங்களுக்கும் மகா சிவராத்திரி அன்று ஒரே இரவில் சென்று வழிபாடு செய்தால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.

மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் சிவராத்திரி வைபவம் மிகச் சிறப்பாக நான்கு காலமும் ருத்ரம், சமகம் என வேத பாராயணத்துடன் நடைபெறும். முதல் ஜாமம் இரவு சுமார் 11.30 மணிக்குத் தொடங்கும். இக்கால பூஜை சிவப்பு சாத்துதல் என அழைக்கப்படுகிறது. மூலவர் அபிஷேகத்திற்குப் பிறகு, சிவனுக்கு சிகப்பு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு, சிவப்பு மலர்களால் அலங்கரிக்கப்படும். சுமார் ஒரு மணி நேர இடைவெளியில் நான்கு கால பூஜைகளில், தொடர்ந்து நடைபெறும் இரண்டாவது கால பூஜை மஞ்சள் சாத்துதல் எனப்படும். இதில் அபிஷேகத்திற்குப் பிறகு லிங்க ரூபமான கபாலீஸ்வரர் மஞ்சள் வஸ்திரத்தாலும், மஞ்சள் நிற மலர்களாலும் அலங்கரிக்கப்படுவார். மூன்றாம் ஜாமம் பச்சை சாத்துதல். பச்சை நிற வஸ்திரம், வில்வம், தாழம்பூ ஆகியவை சாற்றப்படும். நான்காம் காலம் மீண்டும் சிவப்பு சாத்துதல். சிவப்பு வஸ்திரம் சாற்றி, சிவப்பு மலர்களால் அலங்கரிப்பர். நான்காம் கால பூஜை, மறுநாள் விடியற்காலை நான்கரை மணியளவில் நிறைவுறும். அனைத்துக் கால பூஜைகளிலும் வில்வம் சாற்றுவது விசேஷம்.

http://tamil.thehindu.com/society/spirituality/சிவ-பூஜை-மகிமை-மகா-சிவராத்திரி-பிப்ரவரி-24/article9555305.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரு 80 வடை போல பாரிய களவு எண்டால் கூட பரவாயில்லை🤣
    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.